ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

கேள்வி : இளைஞர்கள் ஏன் அரசியல் பேச வேண்டும்?


என் பதில் :..


அரசியலுக்குச் சொந்தக் காரர்களே அரசியல் ஏன் பேச வேண்டுமென்றால் என்று கேட்டால் என் செய்வது அன்பரே?


சித்தாந்ததின் படிப் பார்த்தால் அரசியல் செய்ய வேண்டியது இளைஞர்கள் மட்டுமே! அவர்கட்கு வழி காட்டவேண்டியது மூத்தோர்களே! ஆனால் இங்கே அப்படியா? எல்லாம் தலைகீழ் தான். இளைஞர்கள், பணத்தைத் தேடுவதிலும், அந்தப் பணத்தினைப் பதுக்கும் வேலையில் அரசியல்வாதிகளும் ஈடுபட்டுள்ளனரே!

எனக்கு இந்தக் கொரோனாவின் விடயத்திலும் நம்பிக்கையில்லை. இதன் பின்புலம் மிகவும் வலுவான (உலக) அரசியலாக இருக்கும் என்பது என் துணிபு!


சரி! இருப்பதெல்லாம் இருக்கட்டும். நாம் உங்கள் கேள்விக்கு வருவோம். உலக அரசியலே அந்தந்தக் காலகட்டத்தில் இருக்கும் புதிய தொழில்நுட்பத்தின் நுகர்வோரினைச் சார்ந்தே கட்டமைக்கப்படும். இதுவே உலக அரசியலின் எழுதப்படாத விதி! நீங்கள் வரலாற்றின் வழிநெடுகிலும் இதனை உணரலாம். துவக்கமே முடிவோ எந்தவொரு கண்டுபிடிப்பும் அன்றைய முதல்நிலை நுகர்வோரினைச் சார்ந்தே இருக்கும்.


அவ்வகையினில் நோக்கினால், இன்றைய இளைஞர்களே அரசியலை தீர்மானிக்கின்றனர். அவர்களைச் சார்ந்தே அனைத்து தொழில்நுட்பங்களும் உருவாக்கப்படுகிறது. அந்த தொழிநுட்பங்களைக் கட்டமைப்பதில் ஒரு நாட்டின் அரசும் அதைச் செய்யும் அரசியல்வாதிகளும் முக்கியப்பங்கு ஆற்றுகின்றனர். அதனால் இளைஞர்கள் அவர்களைச் சுற்றி நடக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க வேண்டும். அவற்றில் உள்ள அரசியலைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்வதனாலேயே தூய்மையான அரசியலை இங்கே காலூன்றச் செய்ய முடியும்!


இளைய சமூதாயத்தின் எழுச்சியே உலக வரலாற்றில் பலநாடுகளில் நிலையான மற்றும் அழுத்தமான தாக்கங்களை நிகழ்த்தியுள்ளது. அதனால் இளைஞர்களே மிக மிக அவசியமாக அரசியல் பேச வேண்டும். அவர்களுக்குள் ஒரு தெளிவு வேண்டும். ஆரோக்கியமான சிந்தனைகள் வேண்டும்.


நானும் என் நண்பனும் பெரும்பாலான விடயங்களை விவாதிப்போம். ஆனால் ஒருவருக்கொருவர் அவ்வளவு இலகுவாக தங்கள் பக்கங்களை விட்டுக்கொடுக்காமல் தத்தமது பேச்சுக்களே சரியெனப் பேசுவோம். நாங்கள் கூறுவதே சரியென நிரூபிக்க நிறைய மெனக்கெடுவோம் (பொய்யால் அல்ல). ஒரு முறை அவனே கேட்டுவிட்டான். 'நான் தான் நீ எதைச் சொன்னாலும், உடனடியாக ஏற்காமல் எதிர்விவாதம் செய்வேனே. ஆனால் எளிதில் ஏற்றுக்கொள்ளும் இடத்தில் தான் பெரும்பாலானோர் பேசுவர். நீ என்ன இப்படி?' என்றான்.


நான் கூறினேன், 'இதுவே ஆரோக்கியமான விவாதம். எளிதில் ஏற்றுக்கொள்ளாதவரையே தான் முதலில் நாம் நம்பவைக்க வேண்டும். எதிர்வினை இருக்கும் இடத்தில் திறனைக் காட்டுவதாலேயே நமது திறன் நமக்கே புலப்படும். எதைச் சொன்னாலும் ஏற்கும் கூட்டத்தில் பேசுவதால் பொய்களே பெருகும். ஆனால் ஏற்காத கூட்டத்தில் விவாதிக்கையில் தான், நாம் கூறுவதில் இருக்கும் நல்லவை கெட்டவை என அனைத்தும் விளங்கும். அதனால் முதலில் நம்முடைய தவறுகளை நாமே எளிதில் கண்டறிந்து திருத்திக்கொள்ள நல்வாய்ப்பாக அமையும். ஏற்காதவரை ஏற்கவைப்பதே சரியான விவாதம். விவாதத்தின் முடிவு எப்போதும் அறிவின் சுடராக இருத்தல் நலம். அது எதிர்வாதம் செய்பவருடன் எளிதில் கிட்டும். எதிர் தரப்பையே ஏற்கும் அளவிற்கு தெளிவாகவும் உண்மைகளுடனும் நான் பேசும் திறனையும் வளர்த்துக்கொள்வோம் அல்லவா?


அதுவே பல உண்மைகளை நமக்கும் எதிர் தரப்பிற்கும் புரியவைக்கும். ஆகையினால் அரசியலை இளைஞர்கள் அதிகம் விவாதிக்க வேண்டும். பலவித கண்ணோட்டங்கள் இருக்கும் விவாதமே தலைசிறந்த விவாதம் (அதாவது பலர்). அத்தகைய இடத்தில் அரசியல் பேசுங்கள். எத்தகு சூழலிலும் அவ்விடத்தினை புகார் தெரிவிக்கும் களமாக மடைமாற்றாதீர். விவாதம் மட்டுமே செய்யுங்கள்.


ஒருவர் சார்ந்துள்ள கட்சியின் தவறுகளை அடுத்தவர் சுட்டிக்காட்டும் போது, பதிலுக்கு அடுத்தவர் சுட்டியவரின் கட்சியின் தவறுகளைக் கூறுதல் மிகப் பெரும் தவறு. பதிலாக, குறிப்பிட்ட தவறுகளை தவறல்ல என்று நிரூபியுங்கள். உங்களுக்கான சுட்டிக்காட்டும் நேரம் வரும் வரையில் உங்கள் தரப்பினை நிரூபிக்கும் வேலையினை மட்டும் செய்யுங்கள். அப்படியில்லையெனில் உங்கள் கட்சியின் தவறுகளை உளமாற ஏற்றுக்கொள்ளுங்கள்.


ஒரு கட்சியின் சிறு தவறுகளால் அவர்களின் அரிய சீரிய திட்டங்களை தவறு என் நிரூபிக்கத் தலைப்படாதீர். அதே போல், எதிர்கட்சி என்பதால் எதிரிக்கட்சியாக மாறிவிடவும் கூடாது.


குறிப்பாக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் விவாதம் செய்யாதீர். அது அரசியலுக்கே கேடாகும். 


இப்படிப் பல விடயங்களில் நேர்மையுடன் விவாதம் மட்டும் இளைஞர்கள் செய்தால் அரசியல் தென்றல் தவழும் மனங்களுடன் வாழும் பலரது சேவைக்களமாக மாறுதல் திண்ணம்!


நன்றி ..


சனி, 22 ஆகஸ்ட், 2020

 



திருமணவாழ்த்து மடல் 


உள்ளம் இணைந்த இல்லம் என்றும் இனிக்கும் வெல்லம்

உள்ளம் இணைந்த இல்லம்
என்றும் இனிக்கும் வெல்லம்!

வானும் நிலவும் போல!
இணைந்து வாழ வேண்டும்!
காலச்சுழற்சி கொள்ளும் நிலவு
வானுள் கரைந்தும் வளரும்!

இன்பம் மட்டும் கூட்டி!
இதய இராகம் மீட்டி! எந்த
நிலையின் போதும் மாறா
அன்பை மட்டும் ஊட்டி!

வாழ வேண்டும் நீங்கள்
வாழ்த்துகின்றோம் நாங்கள்!
தமிழும் சுவையும் போல!
கவியும் இசையும் போல!குழந்தை செல்வத்துடன்
குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்!
எத்தனை இன்பம்
இந்த நிமிடத்திலே!
கொட்டும் மழையும்
பூவாய் பொழிய
அத்தனை தேவர்களும்
ஒருங்கே வாழ்த்த
உங்கள் திருமண வாழ்க்கை
மகிழ்வாய் அமைய
வாழ்த்துகிறோம்!

திருமண விழா ...!

ஊரடங்கு காலத்திலும்

ஓர் உற்சாகம் தரும் சங்ஙமம்

மணகன் :- கார்த்திக்குமார் ( கொங்குக் கொற்றவன்)

மணமகள் :- செல்வரம்யா

நிகழிடம் :-

உச்சி மாகளியம்மன் கோவில்

கொ. வல்லக்குண்டாபுரம்

நேரம் :- ( 23/08/2020

ஞாயிறு அதிகாலை 4.30 to 6.00 மணி)

புது மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்

கம்பள விருட்சம் அறக்கட்டளை குழுமம்

உடுமலைப்பேட்டை ..📚📚✍️✍️✍️👍🥰🥰🥰


வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

 


கொங்கு கொற்றவன் ...🥰🥰📚📚✍️✍️


T .கார்த்திக்குமார் ..செல்வரம்யா .🌱🎂.பன்முகத்தன்மை (கார்த்தி SR - 6383245466)

படித்தது மின்னணுவியல் ...SM HIGH TECH SOLUTION அவர் நடத்தும் மின்னணுவியல் தொழில் துறையில் கடுமையான உழைப்பாளி ...வருங்கால வளரும் பன்முக எழுத்தாளர் ,கவிதையாளன் ...



எந்த சூழ்நிலையிலும் விவசாயத்தை மறவாத மண்ணின் மைந்தன் ..

இந்த சிறு வயதில் வரலாற்று தகவல்களை தேடி ...தேடி ...படிக்கும் ஆர்வம்....

எந்த ஒரு சிறு செய்தியை சொன்னவுடன் ஆழந்த சிந்தனையுடன் அதை அப்படியே கண்முன்னே நிறுத்தும் திறமை ..கம்பளவிருட்சத்தின் அறக்கட்டளையின் களப்பணியாளனாக,தன் திறமைகளை எந்தஒரு செயலிலும் தனித்தன்மையுடன் வெளிகொண்டுவருபவர் .பொதுத்தளத்தில் நல்ல சமூக சேவையாளனாக ,


தன் பெற்றோர்களின் செல்ல பிள்ளையாக ....

கம்பளத்து சொந்தங்களுக்கு  "அன்பு" செல்லப்பிள்ளையாக

நம் சமுதாயசொந்தங்களின் முகம் அறிந்த நண்பனாக இருப்பவர் ...நண்பர்களின் வட்டத்தில் எப்போதும் கலகலப்பாக சுற்றியிருக்கும் இடம் எல்லாம் புன்னகை சிதறும் முத்துக்களாக ..




கொங்கு மண்ணில்;  கம்பளத்தில் பிறந்திட்டாலும், காட்டையும் மேட்டையும், கழனிகளாக்கத் துடிக்கும்  வளரும் கட்டிளங்காளை, கார்த்திக் குமார் 


சமூகத்திற்காகவும், சமூகத்தின் அகழ்வாய்வுப் பணிகளுக்காகவும் அர்ப்பணிப்போடு பாடாற்றும்,துடிப்பான வீரன்


எப்பொழுதும், எந்த  நேரமும் எல்லாப் பணிகளுக்கு  எத்தலப்பரின் மண்ணில் எத்தனாக  வளர்ந்து வரும்   எத்தன்


இவர் இனிது துவங்கும் திருமண வாழ்க்கைப் பயணத்தில்  சமூகப்பற்றோடு கொஞ்சம்  குடும்பப் பற்றும் கலந்து வரும் இந்நாளில்



இவரது வாழ்க்கைத்துணையில் வந்திட்ட செல்வரம்யாவோடு இவரின் திருமண வாழ்கைப் பயணம் இனிதே  துவங்கிட கம்பளத்து சொந்தங்களின் சார்பிலும் ,கம்பள விருட்சம் அறக்கட்டளையின் துணை செயலாளர்க்கு  


திருமண விழா ...! 


ஊரடங்கு காலத்திலும் 


ஓர் உற்சாகம் தரும் சங்ஙமம்


மணகன் :- கார்த்திக்குமார் ( கொங்குக் கொற்றவன்)  


மணமகள் :- செல்வரம்யா 


நிகழிடம் :- 


உச்சி மாகளியம்மன் கோவில் 


கொ. வல்லக்குண்டாபுரம் 


நேரம் :- ( 23/08/2020 







ஞாயிறு அதிகாலை 4.30 to 6.00 மணி)


புது மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள் 



கம்பள விருட்சம் அறக்கட்டளை குழுமம் 


உடுமலைப்பேட்டை ..📚📚✍️✍️✍️👍🥰🥰🥰

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

 என் இனிய அருமை தினேஷ் மாப்பிளைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...


மணிராஜ் சவுண்டு அண்ட் லைட்டிங்ஸ்

Maniraj Sounds and Lightings....
பொட்டையம்பாளையம் -உடுமலைப்பேட்டை

தினேஷ் மாப்பிளை தந்தை கூலி வேலைக்கு சென்று தன் உழைப்பின் மூலம் சிறு அளவில் இந்த ஒளி ஒலி அமைப்பு ஏற்படுத்தி நடத்திவந்தார் ..அதன் பின் நம் மாப்பிள்ளைகள் தினேஷ் கோவையில் தொழில் துறை பயிற்சி படித்துவிட்டு
தன் தந்தைக்கு உதவுவதற்கு பொறுப்பேற்றுக்கொண்டு தற்பொழுது நல்ல முறையில் வளர்ந்து வருவது மகிழ்ச்சி .தற்பொழுது மணிராஜ் தம்பியும் பி.காம் படித்துவிட்டு அண்ணனுக்கு உதவியாக உள்ளது மகிழ்ச்சி ..

நமது சமுதாய சொந்தங்களின் எந்த ஒரு திருவிழா என்றாலும் பொட்டையம்பாளையம் "மணிராஜ் சவுண்ட் சர்வீஃச்"தான். கல்யாணம், கோவில் திருவிழா, சடங்கு , வாலிபர்களின் கைப்பந்து விளையாட்டு என்று எதுவாக இருந்தாலும், மணிராஜ் சவுண்ட் சர்வீஃச் தான் ஒலி&ஒளி அமைப்பு செய்வார்கள். முதன் முதலில் ஊரில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்லும்போது இரண்டு சக்கர மோட்டார் பைக்கில் குழாய் ஃச்பீக்கரை பக்கவாட்டில் கட்டிக்கொண்டு ஒரு வண்டியும், ஆம்பிளிபைய‌ர் மற்றும் ரிக்கார்டுகளை கேரியரில் வைத்துக்கொண்டு ஒரு வண்டியும், ட்யூப் லைட் மற்றும் சீரியல்செட் லைட்டுகளை இன்னொரு வண்டியிலும் வைத்துக்கொண்டு மதியம் வாக்கில் கெள‌ம்பிவிடுவார்கள். தற்பொழுது மாப்பிள்ளைகள் நான்கு சக்கர ஜீப் புதுவரவு ....

ஒரே நேரத்தில் பல விழாக்களுக்கு ஒலி & ஒளி அமைப்பு செய்யும்போது, நம் மாப்பிள்ளைகள் போன்ற‌ பல இளவட்டங்களுக்கு தனி ஆவர்த்தனம் செய்யும் வாய்ப்பு கிடைத்துவிடும். மைக் செட் ஓனர் தினேஷ் , யார் யார் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிச் செல்வார். இரவு முழுக்க விழித்து , இடைவிடாமல் பாட்டுப் போடும் பணி தம்பி மணிராஜ்க்கு கிடைக்கும். அதில் இடை இடையே மைக்கில் பேச வாய்ப்பு கிடைக்கும். பதின்ம வயதில் ஊரில் இப்படி குரல் ஒலிப்பது பெரிய கெத்தாக எடுத்துக்கொள்ளப்படும். "பழைய மற்றும் புத்தம் புதிய பாடல்களுக்கு, மணிராஜ் சவுண்ட் சர்வீஃச். உங்களின் திருமணம் மற்றும் அனைத்து இல்ல விழாக்களுக்கும் சிறந்த முறையில் ஒலி ஒளி அமைத்துக்கொடுக்கப்படும்" என்று நட்ட நடு ராத்திரியில் விளம்பரம் செய்துவிட்டு அதை இமாலய வெற்றியாக அடுத்த நாள் டீக்கடையில் கொண்டாடப்படும். அதுவும் பகல் நேரத்தில் ஊர் குமரிகள் ரோட்டில் நடமாடும்பொது, தங்கள் வெளம்பரக் குரலை ஒலிக்க விட பெரும் போட்டி இருக்கும் விடலைகளிடம்.

கல்யாண வீடுகள் அல்லது பொதுவான குடும்ப விழாக்களில் ஒலி&ஒளி அமைப்பது பெரிய விசயமாக இருக்காது. வீட்டில் போடப்பட்டுள்ள கொட்டகையில் இரண்டு குழாய் ஃச்பீக்கர் , அந்த வீடு இருக்கும் தெரு முக்கில் ஒன்று அல்லது இரண்டு குழாய் ஃச்பீக்கர் என்று கட்டிவிட்டால் ஒலி அமைப்பு முடிந்துவிடும். கொடுக்கும் காசுக்கு ஏற்ப குழாய் ஃச்பீக்கர் எண்ணிக்கை மாறும். ஃச்பீக்கர் கட்டி முடிந்தவுடன் மூங்கில் கம்புகளை தெருவில் நட்டு அதில் ட்யூப் லைட்டுகளை கட்டி , சீரியல் பல்புகளையும் போட்டுவிட்டால் ஒளி & ஒலி அமைப்பு வேலை முடிந்துவிடும். அதற்குப்பிறகு விடிய விடிய ஏதாவது பாடல்களைப் போட்டுக்கொண்டு இருந்தால் போதும். சில‌ நேரங்களில் விழாநடக்கும் வீட்டில் இருந்து யாராவது பொடுசுகள் வந்து "எங்க மாமா இந்தப் பாட்டு போடச் சொன்னாக" , "எங்க அக்கா இந்தப்பாட்டு போடச் சொன்னாக" என்று நேயர் விருப்ப பட்டியல் கொடுத்துவிட்டுப்போவார்கள். தெரிந்த குமரிப் பொண்ணுகள் இருந்தால் அவர்களுக்கான ஃச்பெசல் பாட்டுக்கள் கேட்காமலேயே ஒலிபரப்பு செய்யப்படும்.தினேஷ் அண்ட் மணிராஜ் மாப்பிள்ளைகள் விழாக்களில் கலக்குவார்கள் ...இப்படித்தான் நம் ஊரு விழாக்களில் மக்கள் மனதில் இடம்பிடித்து ..மணிராஜ் சவுண்டு சர்வீஸ் வளர்ந்து கொண்டு உள்ளார்கள் ..தற்பொழுது புதிய தொழிநுட்ப வசதிகளுடன் ஒளி பெருக்கிகள் வந்துள்ளதால் ..விழாக்களுக்கு தேடி வந்து பணிகளை தந்துகொண்டுள்ளார்கள் ..இனி வரும் காலம் அரசியல் ,கோவில் திருவிழா .எந்த ஒருவிழா என்றாலும் தினேஷ் அண்ட் மணிராஜ் மாப்பிள்ளைகளை காணலாம் ..முத்து மஹால் ,GK மஹால் ,ST ரத்தினவேல் மண்டபம் ,.என்று கல்யாண மண்டபத்திலும் காணலாம் ..கடந்த வாரத்தில் நமது கம்பளவிருட்சம் அறக்கட்டளை இரண்டாம் ஆண்டு பொதுக்குழுவிற்கு விழாவிற்கு ஒலி அமைப்பு செய்த மாப்பிளைகளின் திறமைகளுக்கு கிடைத்த வரவேற்பு அவர்களின் சுய தொழில் காட்டும் ஆர்வம் ..பொது தளத்தில் எப்படி பெயரை நிலைநாட்டவேண்டும் என்பதை கடந்த இரண்டு வருடங்களாக பார்த்து வருகிறேன் ....இரண்டு மாப்பிள்ளைகள் பணிகள் இப்படி என்றால் ..தினேஷ் மாப்பிள்ளையின் இளையவர் ஒருவர் திரு .கார்த்திகேயன் -சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணிபுரிந்துகொண்டுள்ளார் ..இவர் இரண்டு சகோதர்களுக்கு தக்க வழிகாட்டியாக உள்ளதை அறிந்து நம் சமுதாயத்தில் இப்படி இளைய சொந்தங்கள் இருப்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன் ..இனி நம் கம்பள சமுதாய விருச்சத்தின் விதைகளாக ,கிளைகளாக வளர வாழ்த்துக்கள் ..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
கம்பள விருட்சம் தொழில்சார்பு குழுமம்
www .kambalavirucham .in
எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு (KVE )
உடுமலைப்பேட்டை


என் இனிய அருமை தினேஷ் மாப்பிளைக்கு(மணிராஜ் சௌண்ட்ஸ் சர்வீஸ் ) பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...

திங்கள், 17 ஆகஸ்ட், 2020


கேள்வி : தனிக்குடித்தனம் மகிழ்ச்சி தருவதாக இன்றைய பெண்கள் நினைக்கிறார்கள், ஆனால் தனிக்குடித்தனம் தான் இன்றைய கள்ளக்காதல், விவாகரத்து பிரச்சினைகளுக்கு காரணம் எனவும் கூறுகிறார்கள். எது சரி?


என் பதில் :உங்கள் கேள்வியின் ஒரு பகுதிக்கு என்னால் விடையளிக்க முடியும்.

என் வெளிநாடுவாழ் நண்பர் மஹேந்திரன் அவர்களின் மனைவி  ராஜேஸ்வரி  ·லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் தற்பொழுது வசிக்கிறார் ..கூட்டு குடும்பத்தில் இருந்து வந்தவர் ..அவரின் பகிர்வு ..உங்களுக்காக 


தனிக்குடித்தனம் தான் மகிழ்ச்சி என இன்றைய பெண்கள் நினைக்கிறார்கள். இதற்கு


இந்த காலத்தில் மாமனார், மாமியாரோடு இருப்பதே கூட்டுக் குடும்பம் என்கிறார்கள். நான் என் சிறுமிப்பருவத்திற்கு flashback செய்து பார்க்கிறேன்.


என் தாத்தா வீட்டில் 6 மகன்கள், 2 மகள்கள். இவர்கள் எல்லாரும் ஒரே வீட்டில் வாழ்ந்த காலங்கள் உண்டு.


ஒவ்வொரு மகனும், வேலைக்கு வந்தபின், சம்பளத்தை தாத்தாவிடம் தான் கொடுக்க வேண்டும், ஒரு 3–4 வருடம் கழித்து கல்யாணம் முடிப்பார்கள். மருமகள் தன் கொழுந்தன், நாத்தனார் என சேர்ந்துதான் இருக்க வேண்டும்.


ஆண்கள் எல்லாம் hall இல் உறங்க, பெண்கள் உட்புற அறைகளில் ஒன்றாக உறங்குவார்கள். மருமகளின் நகை, சீதன சாமான்களை அத்தைகள் உபயோகப்படுத்தலாம். என் சிறுவயது photo வில் அத்தை, எங்கம்மாவின் அட்டிகையில், புடவையில் இருப்பார்.


என் அம்மா, டிகிரி முடிக்காத போதே திருமணம் முடிந்ததால், அப்பப்ப தாத்தா, பாட்டி அவரை கேலி செய்வார், அத்தை நகைப்பார்கள் (அவர்கள் இருவரும் Msc),


என் அம்மா பெரும்பாலும் அடுப்படியில் தான் இருப்பார். என் அ்அப்பா, தன் சம்பளத்தில் ஒருமுறை எங்கம்மாவுக்கு புடவை வாங்கி, தாத்தாக்கு தெரியாமல் கொடுக்க, வீட்டில் கண்டுபிடித்து ரகளையானது, ‘பெண்டாட்டி பேச்ச கேட்கிறயா’ என.


என் அம்மா தன் degree ஐ முடிக்க நினைத்தாலும், அனைவருக்கும் சமையல், வீட்டு வேலை என உழன்றார், விறகடுப்பில் சில நேரம் கரியில் சூடுபட்டு அழுவார் (gas cylinder இத்தனை பேருக்கு கட்டுப்படியாகாது, மேலும் அவர் மிகவும் வசதியாக வளர்ந்தவர், அந்த காலத்தில் கட்டிக் கொடுத்தால் தலையிட மாட்டார்கள்)


என் அம்மாவிடம் கடுமையாக இருந்த தாத்தா, பாட்டி அத்தைகள் என்னிடம் மிக அன்பாக இருப்பார்கள், என் அப்பாவிற்கு அடுத்த மகன், என் சித்தப்பாக்கு ஒரு school teacher ஐ மணமுடித்தார்கள். என் சித்தி வீட்டில், ‘மூத்த மருமகள எப்படி நடத்தறாங்க பாரு, நீ பேசாம எங்க கூட இரு’ என தூபம் போட, என் சித்தப்பா-சித்தி வேறு வீடு சென்றனர்.


என் இரு அத்தைகள் திருமணம் வரை என் அப்பாவின் சம்பளம் முழுக்க தாத்தா கையில்தான், கூட்டுக்குடும்பம்தான்.


அம்மா அடிக்கடி அழுவார். 30 வயதிலேயே, ஆர்த்ரடிஸ் வந்தது, வலது கை 60% மட்டுமே நகரும். நான் 4 ஆம் வகுப்பு வரும் வரை அதாவது ஒரு 10 வருடம் என் அம்மா-அப்பா-நான் தனியாக எங்குமே சென்றதில்லை. என் தந்தை நன்றாக சம்பாதித்தும், எனக்கோ, அம்மாவுக்கோ, எதுவும் வாங்கிக் கொடுத்ததில்லை. பிறகு transfer வர, சுதந்திர காற்றை சுவாசித்தோம்.


எல்லா மகன்களும் என் அம்மாவின் நிலை தன் மனைவியருக்கு வராமல் இருக்க, வேறு ஊர், மாநிலம் என மாறி சென்றனர்.


தாத்தா தான் இறக்கும் வரை, அப்படியேதான் அதிகாரம் செய்பவராக, மருமகள்களை ஏளனம் செய்பவராக, தன் மகன்களின் சம்பளத்தில் தனக்குதான் உரிமை என்பவராக இருந்து, மடிந்தார்.


அவர் இறந்தபின், என் பாட்டியை எல்லாரும் அரவணைத்து பார்த்துக்கொண்டோம், நல்ல கதியில் என் மகள் பிறந்தபின், இறைவனடி சேர்ந்தார்.


கடைசி காலத்தில் என் அம்மா கைபிடித்து அழுதார், நான் உன்னை கொடுமைப்படுத்தியதற்கு மன்னித்துக்கோ என்று. காலம் கடந்த மன்னிப்பு, போன இளமையும், அந்நியோன்மையான வாழ்க்கையும் என் பெற்றோருக்கு திரும்பி வருமா?


எனக்கு மாப்பிள்ளை பார்த்த போது என் அம்மாவின் ஒரே நிபந்தனை, சிறிய குடும்பமாக இருக்கும் பையன்தான் வேண்டும் என.


சொல்லுங்கள் என் தாய் சொன்னது தவறா? அவர் பட்டது நான் படக்கூடாது என்ற பாதுகாப்பு உணர்வுதான் காரணம்.


கூட்டுக் குடும்பங்கள் மருமகள்களை கடுமையான சூழ்நிலையில் தள்ளுகின்றன். தன் படிப்பு, தன் வேலை என இருக்கும் பெண்கள் அதை விரும்புவதில்லை.


இது சரியா தவறா என்று சொல்ல முடியவில்லை. ஆனால் இதுதான் யதார்த்தம். Just stating what is happening, not passing any judgement.


மற்றபடி இந்த கள்ளக்காதல் செய்யும் கோணல் புத்திக்காரர்கள், மீது எனக்கு எந்த அனுதாபமும் இல்லை. அவர்கள் கூட்டுக்குடும்பத்தில் இருந்து பிய்த்துக் கொண்டோ, பெரியோர் அறியாமலோ, வேறு உறவை நாடமாட்டார்களா என்ன?


Edit- பதிலில் என் தாத்தாவை மோசமாக சித்தரித்தது போல இருந்தது. என் தாத்தா இன்னொரு dimension உண்டு, அவர் ஒரு நேர்மையான customs officer, எல்லா மகன், மகளையும் நல்ல நிலையடைய வைத்தார். ஓய்வுக்கு பிறகு நம்ம traffic ராமசாமி போல பொதுநல வழக்கு தொடர்வார். ஆக்கிரமிப்பு அகற்றுதல், அங்க இருந்த ஏழைகளுக்கு பட்டா வாங்கிக் கொடுத்தல் என. பல local leaders தொடர்பில், எதிரிகளையும் சம்பாதித்தார். இன்று நாங்கள் வளமாக இருக்க, ஆணிவேர் அவரே! ஆனால் வீட்ல சர்வாதிகாரம் தான். என் அத்தைகள் இப்போது பாந்தமாக இருப்பார்கள், என் பிரசவத்தில், திருமணத்தில் அவர்களும் உதவினார்கள். வயது அனைவரையும் மாற்றியது. என் அம்மா நலம்,

 நன்றி...வாழ்த்துக்கள் 

சனி, 15 ஆகஸ்ட், 2020

 எது தலைமைப் பண்பு?


(ராஜகம்பள உறவுகள் ..-தேனீ ..)


என் வகுப்புத் தோழனான பிரகாஷுக்கு இணையான பேச்சாளர்கள் ஏழு, எட்டுப் பேர் எங்கள் கல்லூரியில் இருந்தார்கள். ஆனால் அவன்தான் மாணவர் சங்கத் தலைவன். எங்கு, யாருக்கு, என்ன சிக்கல் என்றாலும் அவனைத்தான் அழைப்பார்கள். உடனடியாக அந்த இடத்துக்குச் சென்று எல்லோரோடும் பேச்சு வார்த்தை நடத்துவான். அனைவரும் சமாதானம் அடையும்படி எப்படியாவது ஒரு சுமூகத் தீர்வைக் கண்டுபிடித்திடுவான். “வாய் உள்ள பிள்ளை அதனால் பிழைக்குது!” என்று அவனைப்பற்றிப் பலர் பேசுவதுண்டு.


“எங்களுக்கும் தலைவர் பதவி கிடைத்தால் நாங்கள் கூடத்தான் நாட்டாமை மாதிரித் தீர்ப்பு கொடுத்து அசத்துவோம்!’’ என அவன் மேல் பொறாமை கொண்டு பேசுபவர்களும் உண்டு. இது போன்ற பேச்சுகளுக்குச் சவால்விடும் ஒரு நாள் வந்தது.


எங்களாலும் முடியும்!


பொதுவாகவே எங்கள் கல்லூரியில் கலைத்துறை மாணவர்களுக்கும் அறிவியல் துறை மாணவர்களுக்கும் இடையில் பனிப் போர் நிலவும்.


அன்று கல்லூரிக்குப் பின்னால் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் வழக்கமான வாய்ச்சவடால் அடி தடி சண்டையாக மூண்டது. பிரச்சினையைத் தீர்க்கப் பிரகாஷை தேடி ஓடி வந்தான் ஒரு மாணவன். ஆனால் அன்று பிரகாஷ் கல்லூரிக்கு வரவில்லை. உடனடியாக என் வகுப்பில் இருந்த ராஜாவும், கார்த்திக்கும் “நாங்க ஒரு கை பார்த்துட்டு வருகிறோம்!” எனப் புறப்பட்டார்கள்.


அவர்கள் இருவரும் வகுப்பை விட்டுச் சென்ற அடுத்த நிமிடம் பேராசிரியர் வகுப்புக்குள் நுழைந்துவிட்டார். என்ன நடக்கிறது என்ற ஆவலோடும், பதற்றத்தோடும் நாங்கள் எல்லோரும் வகுப்பிலேயே அமைதியாக அமர்ந்திருந்தோம்.


அரை மணி நேரம்வரை என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. “சார், உங்களை தலைமை ஆசிரியர் உடனடியாக அவர் அலுவலகத்துக்குக் கூப்பிட்டார்!” எனக் கல்லூரி அலுவலக உதவியாளர் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியரிடம் கூறினார். பின்புதான் நடந்த கூத்து தெரிய வந்தது. சண்டையை நிறுத்த வீறு நடை போட்ட ராஜாவும், கார்த்திக்கும் மத்தியஸ்தம் பண்ணத் தொடங்கியிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இவர்களின் தீர்ப்பை ஒப்புக்கொள்ள மறுத்த மாணவர்களையெல்லாம் அடித்துப் பெரிய கலவரம் பண்ணிவிட்டார்கள். அன்று நடந்த சம்பவத்தை நினைத்தால் இன்றும் சிரிப்பு வருகிறது.

சிறந்த பேச்சாளர்

என்னுடன் வகுப்பில் படித்த பிரகாஷ், ராஜா, கார்த்திக் மூவருமே பல பேச்சுப் போட்டிகளில் பலமுறை ‘சிறந்த பேச்சாளர்’ பட்டம் வென்றவர்கள்தான். மூவருமே பேசத் தொடங்கினால் வார்த்தைகள் தங்கு தடையின்றி மடை திறந்த வெள்ளம் போலப் பாயும். நினைத்த விஷயத்தைத் தயக்கம் இல்லாமல் வெளிப்படையாகப் பேசுவார்கள்.


எல்லோரிடமும் கலகலவெனப் பேசுவார்கள். அனைவரும் ரசிக்கும்படி பேசுவார்கள். அவர்களைச் சுற்றிலும் ஒரு நண்பர் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இது போன்ற குணாதிசயங்கள் கொண்டவரை எக்ஸ்ட்ரோவர்ட் (extrovert) என ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.


ஆனால் ராஜாவிடமும் கார்த்திக்கிடமும் இல்லாத ஏதோ ஒரு நுட்பம் பிரகாஷிடம் இருந்திருக்கிறது. அதுதான் அவனை மாணவர் சங்கத் தலைவனாக உயர்ந்தெழச் செய்திருக்கிறது. ஆகவே அவன் எக்ஸ்ட்ரோவர்டாக இருப்பதையும் தாண்டி வேறு ஏதோ ஒரு தனித்திறனுடன் இருந்திருக்கிறான். கார்டனர் குறிப்பிடுகிற மனிதத் தொடர்பு அறிவுத்திறன் (Interpersonal Intelligence) என்பதோடு இந்தத் திறனை நாம் ஒப்பிடலாம்.


எது தலைமைப் பண்பு?


எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசி, சிறந்த பேச்சாற்றலோடு இருப்பவர்களெல்லாம் மனிதத் தொடர்பு அறிவுத்திறன் கொண்டவர்கள் அல்ல. மேலோட்டமாகப் பார்க்கும்போது இவர்களுடைய பலம் பேச்சுத் திறன் எனத் தோன்றும். ஆனால் இவர்களுடைய உண்மையான பலம் பேசுவதில் அல்ல கேட்பதில் இருக்கிறது. பிறர் சொல்வதைக் கவனித்து, அவர்களுடைய குரலுக்குச் செவிமடுத்து பின்பு எதிர்வினை ஆற்றுவதே இவர்களுடைய தனிச் சிறப்பு. இவர்களால் மற்றவர்களுடைய உணர்வை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.


அடுத்தவருடைய பிரச்சினைக்கு வெறுமனே அனுதாபப்படாமல் அவர்களுடைய நிலையில் தன்னைப் பொருத்திப் பார்த்து பிரச்சினையை அணுகுவார்கள். தன்னுடைய ஈகோவை விட்டுக்கொடுத்துக்கூட உறவில் பிணைப்பை ஏற்படுத்த கடும் பிரயத்தனம் செய்வார்கள். அதிகாரத்தின் மூலம் பிறரைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயலமாட்டார்கள். அனைவருக்கும் ஒத்துழைப்பு நல்குவார்கள். புதிய சூழலில், பலவிதமான மனிதர்களோடு உற்சாகமாக இணைந்து செயல்படுவார்கள். கூட்டு முயற்சியில் ஈடுபட விரும்புவார்கள். இவர்களுடைய அணுகுமுறை நல்ல தலைமைப்பண்பை வெளிப்படுத்தும்.


“நீ போகலாம் என்பவன் எஜமான். வா! போகலாம் என்பவன் தலைவன். நீ எஜமானா? தலைவனா?” எனும் வைரமுத்து வரிகளை மனிதத் தொடர்பு அறிவுத்திறனுக்கான கவித்துவமான ஒரு வரி விளக்கமாக எடுத்துக் கொள்ளலாம். இது அறிமுகம்தான். மனிதத் தொடர்பு அறிவுத்திறன் தொடர்பாகத் தெரிந்துகொள்ள இன்னும் எவ்வளவோ உள்ளன!


நன்றி ..


புதன், 12 ஆகஸ்ட், 2020

 கேள்வி :  மிகவும் நம்பியது கையை விட்டுப் போய்விடுகிறது. இப்படியே நடப்பதால் சலிப்பு ஏற்படுகிறது. இந்த மனநிலையில் இருந்து எவ்வாறு வெளிவருவது?


என் பதில் :..

எப்பொழுது நாம் நம்பும் ஒன்று நம்மை விட்டு விலகுகிறதோ, அப்பொழுது அதன் மீது ஒரு தவறான பிம்பம் நமக்கு ஏற்பட்டு விடுகிறது. ஏனென்றால்மனிதர்கள் தாங்கள் விரும்பும் ஒன்று எப்போதும் தங்களுடனேயே இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். அதன் காரணமாகவே நாம் அதனை இழக்கும் பொழுது நமக்குள் சலிப்பு என்ற மனப்பாங்கு ஒட்டிக்கொள்கிறது.


அதனால், எதிர்காலத்தில் வரும் மற்ற விடயங்கள் மீதும் நமக்கு சரியான நாட்டம் ஏற்படுவதில்லை. இதுவும் அதே போன்ற மனநிலையை நமக்கு தந்து விடுமோ என்ற பயத்தை நமக்குள் நாம் வளர்த்துக் கொள்கிறோம். இவை அனைத்துமே நமது எண்ணங்கள் சார்ந்த ஒன்று. இந்த அழகான எண்ணங்கள் சலிப்பாக மாறும் பொழுது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது.


இதிலிருந்து வெளிவர, நீங்கள் யார் மனதிலும்/ எதற்காகவும் தவறான எண்ணமாக மாறாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்..


நீங்கள் இதுவரையில் எத்தனை பேரைக் காயப்படுத்தி இருப்பீர்கள்?


எத்தனை பேரை மதிக்காமல் சென்றிருப்பீர்கள்?


எத்தனை பேர் மீது வெறுப்புணர்ச்சி கொண்டிருப்பீர்கள்?


எத்தனை பேர் மீது அதி பயங்கர கோபத்தில் இருந்திருப்பீர்கள்?


நிச்சயமாக நாம் அனைவருமே ஏதோ ஒரு தருணத்தில், யார்மீதேனும் தவறான கருத்துக்களை வைத்துக்கொண்டு, அவர்களைப் பற்றிய எண்ணங்களை தவறாக நமக்குள் சித்தரித்துக்கொண்டு, வாழ்ந்து கொண்டிருப்போம். உண்மையிலேயே அவர்கள் தான் நாம் அன்பு செலுத்த வேண்டியவர்கள்.


ஒரு காலத்தில் அவர்களுடன் நல்ல உறவில் சிறப்பான நினைவுகளுடன் இருந்திருப்போம். ஆனால் ஏதோ ஒரு காரணமாக அது தவறான நினைவுகளாக மாறி இருக்கும் அல்லது மாற்றி இருப்பீர்கள். தற்பொழுது கிடைத்த அந்த தவறான எண்ணங்களைக் கொண்டு, இதற்கு முன்னர் அவர்களால் நீங்கள் பெற்று மகிழ்ச்சியான நினைவுகளை முடக்க முயற்சிக்காதீர்கள்.


அந்தப் பழைய அன்பான நினைவுகளை மனதில் கொண்டு, தற்போதுள்ள கசப்பான நினைவுகளை மூழ்கடிக்கச் செய்யலாமே.


இங்கு நாம் யாரும் யாருடைய வாழ்விலும் அதிபயங்கர மாற்றங்களை கொண்டு வரப் போவதில்லை. நமக்கான ஒன்றை நிச்சயமாக நாம் தான் செய்து கொள்ளப் போகிறோம். எனவே தேவையில்லாமல் பிறரின் மீது எதிர்பார்ப்புகளை வைத்து, ஏமாற்ற உணர்வினை மனதிற்கொண்டு காயப்படுவதை விட்டுவிடுவோம்.


உங்களுக்கு சலிப்பு ஏற்படுத்திய அந்த கசப்பான நினைவுகளை, இனிமையாக மாற்ற நிச்சயமாக ஏதேனும் வாய்ப்பு கிடைக்கும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


இதை நான் அந்த சலிப்பு ஏற்படுத்திய விடயத்தின் நன்மைக்காக கூறுகிறேன் என்பதை விட, நீங்கள் உங்களுடைய நினைவுகளை இனிமையாக மாற்றிக் கொள்ளும் பொருட்டு, அது உங்களுக்கான சிறப்பான பாதைகளை கண்டு கொள்ள உதவி புரியும்…


யார் என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டும், நான் எனக்கு நல்லவனாக இருக்கிறேன் என்பதற்கும், நான் யார் மனதிலும் கசப்பான நினைவுகளாக இல்லை என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.


நான் யாருடைய வாழ்விலும் கசப்பான நினைவுகளாக இருக்க விரும்பவில்ல.


I don't want to become your bad memory 😊😊.


(எதுவும் நிரந்தரமற்றது என்பதை கருத்தில் கொண்டு, எதிர்பார்ப்புகளை சற்று குறைத்துக் கொண்டு செயல்படுங்கள். நீங்களும் பிறருடைய மனதில் இனிமையான எண்ணங்களாக மாறலாம்)


நன்றி ..



கேள்வி : படிக்கும் பிள்ளைகளின் 2020 வருடத்தின் நிலை என்ன?

என் பதில் :..

படிக்கும் மாணவர்களுக்கு இந்த வருடம் ஒரு வித்தியாசமான உணர்வை கொடுத்துள்ளது..

தனக்கு யார் வகுப்பாசிரியர் என தெரியாமல் வாட்ஸ் ஆப் குட்மார்னிங் தினம் போடும் தனியார் பள்ளி மாணவர்கள்

.தான் எப்படி தேர்ச்சி பெற்றேன் என்ற குழப்பத்தில் பல அரசு பள்ளி மாணவர்கள்.

பத்தாம் வகுப்பு தேர்வில் பரிச்சை இல்லாததால் மாணவிகளை விட முதன்முறையாக மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி!.

தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு மற்றும் தேர்வு வைத்து ,முதல் காலாண்டை முடித்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி பெட்டிகள் வழியாக கல்வி அரசு பள்ளிகளில் பாடம் என தொடங்கி உள்ளது.இதில் எத்தனை மாணாக்கர்கள் பார்த்தனர் என்பது தெரியாது.

தினம் புத்தகப்பை, சாப்பாடு டப்பா, தண்ணீர் குடுவையென நொந்த குழந்தைகள், தற்போது எப்படா பள்ளிக்கு செல்ல முடியும் என ஏக்கத்துடன் தெருவை வெறித்து பார்த்து கொண்டுள்ளார்கள், காரணம் அம்மாக்களின் தொல்லை அதிகம் என போராடும் நிலையில் குழந்தைகள்.

Pre KG,LKG,UKG குழந்தைகள் நேரடியாக ஒன்றாம் வகுப்பில் கையை வளைத்து மற்றோரு காதை தொட்டால் சேர்க்கை என்ற நிலை.

இவ்வளவு விடுமுறை இருந்தும் வெளியே சென்று விளையாட முடியாமல் தவிக்கும் குழந்தைகள்.

நீட் தேவையா, இல்லையா என்பது மாறி இந்தாண்டு அது நடக்குமா,நடக்காதா என்ற குழப்பம்.

தனிக்குடித்தனம் நடத்தும் வேலைக்கு போகும் பெற்றோரில் யார் விடுப்பெடுத்து குழந்தைகளை கவனிப்பது என தினம் சண்டை.
இறுக்கமான மனநிலையில் பதின்ம வயது பள்ளி மாணவர்கள்.

வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்க நினைத்த மாணவர்கள் இந்த வருடம் போகலாமா,வேண்டாமா என்ற குழப்பம்.

அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பணியேதும் இன்றி இருந்தாலும், சம்பளம் கிடைத்தாலும் இந்த விடுப்பு பயணற்றதாகி விட்டதே என வருத்தம்.மேலும் இந்த கல்வி ஆண்டு 2021 ஜுன் வரை தொடர வாய்ப்பு அதிகம்.ஆசியர்களுக்கு ஐயோ வடை (ஆண்டு விடுமுறை )போச்சே என்ற நிலை.

கைபேசியை பார்த்து பார்த்து கண்கள் பூத்துப்போச்சு என மாணவர்கள் புலம்ப தொடங்கி விட்டனர்.

கல்லூரி , பள்ளி பஸ்கள் ஓடாமலே பாதி கல்வி ஆண்டு சென்ற நிலையில் பள்ளி,கல்லூரி வாழ்க்கை கைபேசியில் ஒருசாராருக்கும், ஒரு வேலை சாப்பாடு பள்ளியில் உறுதி என்பது மாறி கிராமத்தில் சரியான உணவின்றி சுற்றும் மாணவர்கள்.


கலைக்கல்லூரியில் அடிக்கடி நடைபெறும் தேதி குறிப்பிடாமல் மூடுவது IDC (Indefinitely Closed) பள்ளி மாணவர்கள் மத்தியிலும் பிரபலமாகி போச்சு.


விடியலை நோக்கி மாணவர்கள்!.


செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

 ஆவலப்பன் பட்டி ஜமீன்..

முல்லை ஆதவன் நாட்குறிப்பு : 2020-08-10

================================

1976 ஆம் ஆண்டு முதன் முதலில் ஆவலப்பன் பட்டி ஜமீன் பற்றி நான் கேள்விப்பட்டேன்

அந்த ஜமீனின் அரசியாக இருந்த தமயந்தி அம்மா வாழ்ந்த வீடு அது – அங்கே நான் சென்றிருந்த போது தான் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டேன் – அங்கே செல்லும் போது அது அப்படியான ஒரு வீடு என்பதை நாம் அறிந்திருக்கவில்லை

.

அது ஆறு தொட்டிக்கட்டு கொண்டிருந்த பெரிய வீடு -பெரிய பெரிய கலை வேலைப்பாடு கொண்ட தூண்கள் – பெரிய சுற்றுச் சுவர்கள் என்றெல்லாம் இருந்தன ஆனால் சில ஆண்டுகளிலேயே வாரிசுகளின் பாகப் பிரிவினைகளால் சுருங்கிப்போய் விட்டது- சில பகுதிகள் வேறு கைகள் மாறி அழிக்கப்பட்டும் போய் விட்டன . அவ்வப்போது தமயந்தி இராணி பற்றிய சில வழக்காற்றுச் செய்திகள் – சில பாடல்கள் – சில நிகழ்ச்சிகள் என்று கேள்விப்பட்டதை அவ்வப்போது தொகுத்து வைத்திருக்கிறேன். வரலாற்று ஆதாரங்களாக பெரிய அளவில் ஏதுமில்லை

ஆனாலும் ஆவலப்பன் பட்டி ஜமீன் பற்றிய வரலாறு தெரிந்துகொள்ள தேடிக்கொண்டிருந்தேன் சில ஆண்டுகளுக்குப் பிறகு 1982 வாக்கில் மெக்கன்சி ஆவணங்களில் சில செய்திகள் இருப்பதைக் கண்டறிய முடிந்தது. தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியீடு செய்த ஆவணத்தொகுப்பில் இருந்து வம்சாவளி செய்திகள் அறிய முடிந்தது. அவற்றின் வழியான வரலாற்று உண்மைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் ஒரு பின்னணி நிழலை வடிவமைத்துக் கொள்ளலாம்

==========================

மெக்கன்சி ஆவணப்படுத்திய கைபியத்துகளின் அடைப்படையில் ஆவலப்பம்பட்டி ஜமீன் அரசர்கள் 1318 ஆம் ஆண்டு தொடங்கி 1745 ஆம் ஆண்டுவரை ஏறத்தாழ 15 அரசர்கள் 397 ஆண்டுகள் பட்டத்தில் இருந்திருக்கிறார்கள் -

=============================================

என்னுடைய தொடர் ஆய்வின் செல்வழியில் 1745 முதல் 1835 வரை ஏறத்தாழ நான்கு அரசர்கள் பட்டம் தரித்திருக்கிறார்கள் , பெரிய வல்லகொண்டம நாயக்கர், சொதேய வல்லகொண்டமநாயக்கர், சின்ன வல்லகொண்டம நாயக்கர், என்பவை அவர்கள் பெயர்கள் என்று தெரிகிறது -1835 ஆம் ஆண்டில் முத்துவல்லமகொண்டநாய்க்கர் பட்டம் ஏற்கிறார் அவருடைய மனைவி வெள்ளையம்மா - முத்துவல்லமகொண்டம நாய்க்கர் இளமையில் இறந்துபோகிறார்- அதனால் வெள்ளையம்மாவே தன் மகன் வல்லகொண்டம நாய்க்கர் வயதுக்கு வரும் வரை அதிகாரத்தில் இருக்கிறார் - பிறகு வல்லமகொண்டமநாயக்கர் ஆட்சிக்கு வருகிறார் - அவருடைய மனைவி இராஜம்மா - இவர்களுக்கு ஆண் வாரிசு இல்லை - ஒரே மகள் அவர் பெயர் தமயந்தி

அவரை மரிகந்தை ஊரைச் சேர்ந்த நாராயணசாமி என்பவ்ருக்குத் திருமணம் செய்துகொடுக்கிறார்கள் - வல்லகொண்டாபுரம் என்னும் ஊரையும் உருவாக்கித் தருகிறார் வல்லகொண்டம நாயக்கர் = அந்த ஊரில் இருந்தகொண்டு ( தன் தந்தையின் மறைவுக்குப் பிறகு ஆவலப்பம்பட்டி ஜமீனை நிர்வாகம் செய்கிறார் தமயந்தி-

தமயந்தியின் தொடர் வாரிசுகள் பற்றிய தகவல்களும் ஓரளவு சேகரித்திருக்கிறேன் -----------------

...................................

தமயந்தி இராணி பற்றிய செய்திகளைப் பிறிதொரு பதிவில் எழுதுகிறேன்

ஆவலப்பன் பட்டி ஜமீன் வம்சாவளி


01 சொதேய நாய்க்கர்

= 49 -ஆண்டுகள் ஆட்சி

02 மேற்படியார் மகன் -குமார சொதேய நாயக்கர்

= 38 - ஆண்டுகள் ஆட்சி

03 மேற்படியார் மகன் – பெரிய சோதேய நாயக்கர்

= 36 - ஆண்டுகள் ஆட்சி

04 மேற்படியார் மகன் – ஆவல சோதேய நாயக்கர்

= 29 - ஆண்டுகள் ஆட்சி

05 மேற்படியார் மகன் – பங்காரு சோதேய நாயக்கர்

= 24 - ஆண்டுகள் ஆட்சி

06 மேற்படியார் மகன் – ஆவலப்ப நாயக்கர்

= 30 - ஆண்டுகள் ஆட்சி

07 மேற்படியார் மகன் – சோதேய நாயக்கர்

= 19 - ஆண்டுகள் ஆட்சி

08 மேற்படியார் தம்பி – குமார சோதேய நாயக்கர்

= 23 - ஆண்டுகள் ஆட்சி

09 மேற்படியார் மகன் – ராம சோதேய நாயக்கர்

= 35 - ஆண்டுகள் ஆட்சி

10 மேற்படியார் மகன் – நாகைய சோதேய நாயக்கர்

= 32 - ஆண்டுகள் ஆட்சி

11 மேற்படியார் மகன் – சின்ன சோதேய நாயக்கர்

= 27- ஆண்டுகள் ஆட்சி

12 மேற்படியார் மகன் – வேலாயுத சோதேய

நாயக்கர் = 18 - ஆண்டுகள் ஆட்சி

13 மேற்படியார் மகன் – குமாரபட்ட சோதேய

நாயக்கர் = 15 - ஆண்டுகள் ஆட்சி

14 மேற்படியார் மகன் – ராம சோதேய நாயக்கர்

= 22 - ஆண்டுகள் ஆட்சி

15 .மேற்படியார் தம்பி – ஆவலப்ப நாயக்கர்

மெகன்சி ஆவணங்கள் கைபியத்து மற்றும் அடைப்படையில் தமிழ்நாடு தொல்பொருளியல் ஆய்வுத்துறை வெளியிட்ட தகவல்கள் இருந்து பெறப்பட்ட விவரம்

=======================================


ஆவலம்பட்டி ஜமீன்தாரருக்கு அளிக்கப்பட்ட விருதுகள்

======================================

பல்லக்கு உபசாமரம் சுறுட்டி, சூரியபாண அனுமந்த டால், மகர டால், கெருட டால், பஞ்சவர்ண டால், சிவசங்கர டால், சந்திரகாவி டால், பச்சகுடை, ரணமகணம், ரணபாஷிக்கம், நிகளம், சாமதுரோகர வெண்டையம், வீரகட்டாமணி, வீர வெண்டையம், கொத்து சறப்பணி, முத்தொட்டி, பச்சோசொட்டி, கலிகுதுறாயி, ஆனைமேலம்பாரி, ஒட்டகை மேல் பேரிகை, குதிரைமேல் டப்பா, யெருதுமேல் தம்மட்டம் இவை முதலான விருதுகள் ( பிரிதுகள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது )

================================

மெக்கன்சி பற்றிய ஒரு குறிப்பு

காலின் மெக்கன்சி ( 1754-1821 ) ஸ்காட்லாந்திய இராணுவ அதிகாரி. ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியாற்றியவர் = இந்தியாவிற்கு வந்து 1777 முதல் பதினைந்து ஆண்டுகள் இராணுவப் பணியில் இருந்தார். கோயமுத்தூர், திண்டுக்கல் பகுதிகளில் திப்பு சுல்தானுக்கு எதிரான போர்களில் ஈடுபட்டிருந்தார் அந்தக் காலகட்டத்தில் இந்த நிலபப்குதிகளின் வரைபடங்களையும் மக்கள் வாழ்வுச்சுழல்களையும் பதிவு செய்ய முயன்றார் பின்னர் அதுவே அவருடைய தனி ஆர்வமிக்க செயற்பணியாக அமைந்துவிட்டது 1815 ஆம் ஆண்டு அவர் இந்தியாவின் முதல் தலைமை மதிப்பீட்டாளர் ஆனார்.

தொடக்கத்தில் தனிப்பட்ட ஆர்வத்தாலும் பின்னர் மதிப்பீட்டாளர் பணியின் பொருட்டும் தென்னிந்தியாவின் சமயங்கள், நம்பிக்கைகள் செவிவழி வரலாறு, கல்வெட்டுகள் முதலியவற்றை ஆயிரக்கணக்கான தகவலாளிகளின் செவி வழிச் செய்திகள் மூலமும் உள்ளூர்களில் கிடைக்கும் ஆவணங்கள் மூலமும் தொகுத்தார் அந்தக் கால கட்டத்தில் உணரப்பட்டதை விடவும் அவருடைய பணியின் சிறப்பு பிற்காலத்தில் வெகுவாக உணரப்பட்டது

அவர் தொகுத்த பல்லாயிரக்கணக்கான் ஆவணங்கள். செவிவழிக் குறிப்புகள், கல்வெட்டுக்கள் . சுவடிகள் ஆகியவை அவர் மறைவுக்குப் பிறகு அரசாஙகத்தால் கையகப்படுத்தப்பட்டன

------------------------------------------------------------------

மெக்கன்சி ஆவணங்கள் சென்னை கீழ்த்திசைச்சுவடிகள் நிலையத்தில் பாதுகாக்கப்படுகின்றன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் டி வி மகாலிங்கம் அவற்றின் சில பகுதிகளை ஆய்வு செய்து வெளியிட்டார் – தொல்பொருளியல் துறை சார்பில் அறிஞர் நாகசாமி சில நூல்களை வெளியிட்டார் தொடர்ந்து பல ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர்

அவருடைய ஆவணங்களுள் பாளையப்பட்டு நிர்வாக அமைப்பு வரலாறு பற்றிய பல செய்திகள் மிக முக்கியமானவை

பாளையங்களின் வரலாறு பற்றி போதுமான எழுத்துவடிவ ஆவணங்கள் இல்லாத நிலையில் பாளையக்காரரகளின் குடும்ப வரலாறு என்று அந்தந்தப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள், பாளையக்காரர்களிடம் வாய்வழித் தகவல்களை அவர் பதிவு செய்திருந்தார் 

 கேள்வி : வாழ்க்கையில் நல்லவர்கள் போல் நடித்து ஏமாற்றுபவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

என் பதில் :.


இது என்னுடைய தனிப்பட்ட கணிப்பு…இதை பொது படுத்துவதை நான் விரும்பவில்லை.


நியாமாகவும் நேர்மையாக இருப்பவர்கள் விளம்பர படுத்தி கொள்வதில்லை, எவன் ஒருத்தன் அதை அடிக்கடி நான் அப்படி பட்டவன் என்று சொல்கிறானோ அவன் அவ்வாறு நடந்து கொள்வதில்லை.

பொதுவாக திருட்டுத்தனம், ஏமாற்று தனம் செய்பவன், நம்மிடம் அவ்வாறு செய்ய மாட்டான் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

உங்களிடம் மற்றவர்களை பற்றி புறணி பேசுறவன் உங்களை பற்றியும் பேசுவான்.

நண்பர்களுக்கு உதவி செய்யும் போது, அதை நட்புக்காக மட்டும் செய்ய வேண்டும். அதில் லாபம் வைத்தால் அவ்வளவு தான். அவன் தான் உங்கள் அடுத்த எதிரி.

உங்களுக்காக மட்டும் உதவி செய்பவன், வெளியில் சொல்ல மாட்டான், அப்படி சொல்பவன் பொய் சொல்கிறான்.

எவ்வளவு இயல்பாக நடித்தாலும், எதோ ஒரு இடத்தில் போலி தனம் வெளிப்படும், அதை கண்டுபிடித்த பிறகு விலகி இருப்பது நமக்கு நல்லது.

யாரையும் நம்பாமல் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

கூடி இருந்தாலும் கொஞ்சம் விலகி இருக்க கற்று கொள்ள வேண்டும்….

காட்டில் மான் கூட்டமாக இருந்தாலும் எப்பொழுதும் ஒரு எச்சரிக்கை உணர்வோடு இருக்கும், ஒரு அசைவிற்கும் கூட ஓட தயாரா இருக்கும்.

ஒரு ரௌடி யாரையும் நம்ப மாட்டான், எப்போது யாரால் உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரியாது.

ஆனால், நாம் கொஞ்சம் அசட்டையாக இருப்போம்…நம் நண்பன் தானே, நம் சொந்தக்காரன் தானே, நம் தம்பி தானே என்று…

எப்போதும் Survival Instinct அவசியம்…

Detached attachment is perhaps the highest form of diplomacy...

பாசமாக இருப்பதையும், அன்பாக இருப்பதையும் போட்டு குழப்பி கொள்ளாதீர்கள். பாசத்தில் ஒரு பயமும், சார்ந்து இருக்கும் மன நிலையும் ஏற்படும். அன்பில் அப்படி எதுவமே இல்லை.

நன்றி ...
தளி எத்தலப்ப மன்னர்  1750 முதல்  1800 வரை இந்தப் பகுதியில் வாழ்ந்த  பாளையக்காரர். ஆங்கிலேயரை எதிர்த்தவர். வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை போன்று இவரும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியவர். 1801 ஏப்ரல் 23 இல் ஆண்ட்ரே கேதீசு எனும் ஆங்கிலேயரைத் தூக்கிலிட்ட  இந்த பாளையத்துக்காரப் போர் வீரனின் நினைவு கூறும் வகையில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில்  கடந்த 2017 ல் மே 19 அன்று உடுமலையில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் நமது மண்ணின் மைந்தரும் கால்நடை துறை அமைச்சரும் கலந்து கொண்ட நிகழ்வில்  தளி எத்தலப்ப மன்னர் குறித்து விரிவான விளக்கமான  சமூகப்போராட்ட நூல்  வெளியிடப்பெற்றது.  அன்று   அமைச்சர் பெருமக்களும், பாராளுமன்ற உறுப்பினரும்  தளி எத்தலப்ப மன்னருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்று  ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் வாக்குறுதியும் வழங்கினர். ஆனால் இன்றுவரை எந்தவிதமான செயல்பாடுகளும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. ஆகவே விடுதலைப்போராட்ட வீரர்களை நினைவு கூறும் இந்நன்நாளில்  அவருக்காக  உத்தரவிட்ட மணி மண்டப அறிவிப்பை வெறும் அறிவிப்பாக இல்லாமல் இந்த பகுதி நடைமுறைப்படுத்த ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

 

சற்றென்று மாறுது வானிலை ....

மழை ......

எதைப் பேச வேண்டுமோ? அதைப் பற்றி மட்டும் நாம் என்றைக்கும் பேசவே மாட்டோம். எளிய தமிழ்ப் பிள்ளைகளின் தலைவராகத் தமிழக முதல்வராக தமிழர்களின் அண்ணன் விவசாயி பதவியேற்று சீரும் சிறப்புமும் ஆக ஆட்சி நடத்தத் தொடங்கினாரோ அன்று முதல் "நீர் ராசி" தமிழகத்தை சூழ்ந்து திக்குமுக்காட வைத்துக் கொண்டே இருக்கிறது. அதாவது தமிழ்நாட்டில் மழை இருக்காது.

அப்படியே பெய்தாலும் தூவானம் போலப் பெய்து வீட்டில் வடையும் காரச் சட்னியும் செய்து சாப்பிட வைக்கும். அதே சமயத்தில் பக்கத்து மாநிலத்தில் அணைகள் கொள்ளளவு நிரம்பி உபரி நீர் திறக்கப்படும். அப்படியே இங்கு வந்து சேர மனசெல்லாம் மத்தாப்பு. வயலெல்லாம் பூந்தோப்பு என்று கவிதை பாடத் தோன்றும். நமது மானமிகு அமைச்சர்கள் அணைக்கட்டில் மேலேறி நின்று பூத்தூவி வரவேற்ற போஸ்களை தமிழ்ப் பத்திரிக்கைகள் அழகாக நமக்கு கொண்டு வந்து சேர்க்கும்.


கடந்த இரண்டு நாட்களில் பெய்த மழையின் காரணமாக ஒரு பக்கம் ஆந்திரா மறுபக்கம் கர்நாடகா என்று இரட்டை போனஸ் எளிய தமிழ்ப் பிள்ளைகளுக்குக் கிடைத்துள்ளது. காரணம் நம் விவசாயி ஆட்சியில் இருப்பதால் தானே?

கர்நாடகா பக்கம் இருந்து இதே போல அடிக்கடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் தமிழகப் பொதுப்பணித்துறை சுட்ட பணமெல்லாம் பெரிதாக வெளியே தெரியவில்லை.

காரணம் வரும் தண்ணீரே பாதையை அமைத்துக் கொண்டு பயணித்து தமிழகத்திற்கு வந்து சேர்ந்து விடுகின்றது. ஆனால் இப்போது ஆந்திராவிலிருந்து வந்து கொண்டிருக்கும் தண்ணீர் அளவுக்கு அதிகமாக இருப்பதால் தட்டுத்தடுமாறி புல் பூண்டு செடி கொடி மரம் தடுப்பு மணல் பள்ளம் மேடு என்று தூர்வாரப்படாமல் அதாவது பல பத்து வருடங்கள் கண்டு கொள்ளாமல் இருந்த காரணத்தால் "ஏன்டா எங்களைப் போட்டு இப்படி இம்சிக்கிறீர்கள்?" என்று சொல்லாமல் தண்ணீர் அரசி பயணித்து வர இரண்டு நாட்கள் ஆகியுள்ளது.

அதாவது எட்டு மணி நேரத்தில் வந்து சேர வேண்டிய நீர் பாடுபட்டு கண்ணீர் விட்டு வருவதை எளிய தமிழ்ப்பிள்ளைகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

https://youtu.be/WYussZgQjGg

சனி, 8 ஆகஸ்ட், 2020

 கோவை ...திருப்பூர் மாவட்டம் இராஜகம்பள சொந்தங்கள்...

நமது அருமைச் சொந்தங்கள் வசிக்கும் ஊர்களின் விவரங்கள்:

1.உடுமலைபேட்டை 

2.பெரிய கோட்டை

3.ராஜாவூர்

4.ஆவல் குட்டை

5.மடத்துக்குளம்

6.கோழிக்கோடு அம்மாபட்டி

7.கண்ணாடிப் புத்தூர்

8.துங்காவி

9.ராமேகவுண்டன்புதூர்

10.பொன்னேரி

11.காங்கேயம் பாளையம்

12.வெனசபட்டி

13.பொட்டையம்பாளையம்

14.லிங்கம்மாவூர்

15.S.அம்மாபட்டி

16.பெதப்பம்பட்டி

17.சனுப்பட்டி

18.ஆலாமரத்தூர்

19.கொங்கல்நகரம்

20.அடிவள்ளி

21.வல்லக்குண்டாபுரம்

22.மரிக்கந்தை

23.ஏ.நாகூர்

24.கரப்பாடி

25.ஜோத்தம்பட்டி

26.மெட்ராத்திசி. 

27.நாகூர்,

28.தீபாலபட்டி, 

29.ஜிலேப்பநாய்க்கன் பாளையம்,

 30.கணியூர், 

31.துங்காவி மலையாண்டிபட்டிணம்

32.சின்னபாப்பனூத்து

33.பெரியபாப்பனூத்து

34.சாளையூர்

35.கொடிங்கியம்

36.எரிசனம்பட்டி

37.பில்லவா நாயக்கன் சாலையூர்

38.புங்கமுத்தூர்

39.வல்லக்குண்டாபுரம்

40.பொன்னாலம்மன்சோலை

41.தளி

42.ஜல்லிபட்டி

43.போடிபட்டி

44.சிஞ்சுவாடி

45.குண்டலபட்டி

46.கூழநாயக்கன்பட்டி

47.திருமூர்த்தி நகர்

48.உடுக்கம்பாளையம்

49.சின்னபொம்மன்சாளை

50.விளாமரத்துப்பட்டி

51.மூலனூர்

52பூவலபருத்தி,

53.கோட்டூர்

54.கம்பாலபட்டி

55.மஞ்சநாமக்கனூர்

56.கரியாஞ்செட்டிபாளையம்

57.ஆனைமலை

58.தென்சங்கம்பாளையம்

59.கோவில் பாளையம்

60.ஒத்தக்கால் மண்டபம்

61.கள்ளப்பாளையம்

62.கலங்கல்

63.பள்ளபாளையம்

64.நரசிம்ம நாயக்கன்பாளையம்

65.தாமரைக் குளம்

66.ஈச்சனாரி

67.வெள்ளலூர்

68.சூலூர்

69.கலங்கல்

70.வங்கபாளையம்

71.அம்பராம்பாளையம்(சுங்கம்)

72.ஆவல் குட்டை,

73.வெஞ்சமடை, 

74.S.V.புரம், 

75.போடிபட்டி, 

76.விருகல்பட்டி. 

77.சோமவாரபட்டி, 

78.பாப்பா குளம், 

79.பாப்பம்பட்டி, 

80.கொழுமம், 

81.மைவாடி, 

82.பாலப்பம்பட்டி,

 83.மடத்துக்குளம்,

84. S. மூலப்பட்டி 

85.சுண்டக்காம்பாளையம்,

86.நரிச்சனம்பட்டி,

87.கள்ளமடை (வெள்ளகோவில் அருகில் )

ஊரின் பெயர்கள் இரண்டு முறை வந்தால் பின்னர் சரிபார்த்து எடுத்துக்கொள்ளலாம் ...\