என் மதிப்புக்குரிய நண்பர் கோவை வழக்கறிஞர் திரு.கண்ணன் ,கலைமாமணி திரு.வீரமணி ராஜு அவர்களின் இல்லத் திருமண விழா..இது நம்ம வீட்டு கல்யாணம் ,மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்கள் ....கோவை ராஜஸ்தானி திருமணமண்டபம் ..R .S புறம் ..
வெள்ளி, 5 ஜூன், 2020
பள்ளியின் முதல் நாள் ..மலரும் நினைவுகள் ..
ஒரு தந்தையின் பரிதவிப்பு ...
பள்ளியின் முதல் நாள்...
ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.....

ஒவ்வொரு தகப்பனுக்கும் .. பள்ளியின் முதல் நாள் மறக்க முடியாது நாட்கள் ....எனக்கு என் ஷியாம் சுதிர்யை ... முதன் முறையாக பள்ளிக்கு(பாரதி வித்யா பவன் -வேடப்பட்டி -கோவை ) LKG வகுப்புக்கு அழைத்து செல்லும் போது நான்கு வருடம் என் கழுத்தை பிடித்து கங்காரு மாதிரி ஒட்டிக்கொண்டு இருந்தவன்.....
யானை சவாரி செய்ய நெனச்சா நாம யானையா மாறணும்!
குதிரை சவாரி செய்ய நினைச்சா நாம குதிரையா மாறணும்!
நாய் கதை சொன்னா நாய் மாதிரி நடிச்சி குறைக்கணும்!
கரடி கதை சொன்னா கரடியா மாறி கத்தணும்! இதையெல்லாம் மறந்து பள்ளிக்கு செல்லும் நாள் வரும்போது ..ஏதோ மனம் கனத்து விடுகிறது .

பள்ளியின் முதல் நாள் 4 மணி நேர பிரிவு ...எனக்குதான் தொண்டைக்குழயில் பேச்சே வரமுடியாமல் தவித்தது .(அழுகையை வெளிக்காட்ட முடியவில்லை ) ....அவன் சாகுவாசமாக சொல்லி சிரித்து கொண்டே சொன்ன வார்த்தைகள் இன்னும் பசுமையாக இருக்கிறது ...நீங்க பயப்படாம ஆபீஸ் போங்க அப்பா.....போயுட்டு மதியம் சீக்கரம் வாங்க என்று சொல்லி வழிஅனுப்பிவைத்தவன் ..பள்ளியின் முதல் நாள் 4 மணிநேரம் என் அலுவலக வேலையே ஓடவில்லை மனதில் ஆயிரம் ஓட்டங்கள் .... மதியம் 12.30 மணி ...நான் 12.00 மணியளவிலேயே சென்று பள்ளியின் முன்புற கேட்டில் ..அவருடைய வகுப்பு வாயிற்கதவுகள் என் கண்ணிமை மூடாமல் விழிவைத்து காத்துக்கொண்டுருந்தேன் ...ஷியாம் முகம் தெரிந்தவுடன் ஏதோ சொல்லமுடியாத உணர்வுகள் ...அவன் சிரித்துக்கொண்டே ...எனக்கு நாலு ப்ரிண்ட்ஸ் பெயரையும் ...அவங்க கிளாஸ் மிஸ் பெயரையும் சொன்னவுடன்தான் என் மனதில் அப்படியொரு சந்தோசம் .... என்னிடம் பொறுமை ,சகிப்புதன்மையை,புது புது நுணுக்கங்களை கற்று கொண்டவன் ...தைரியம் மட்டும் ஷியாம் தன் அம்மாவிடம் கற்றுகொண்டவன் ...எனக்கு வாழ்க்கையை தினம் தினம் கற்று கொடுப்பவன் ...
கேள்வி :..ஓரிரு நாட்களுக்குப் பிறகு மக்கள் மறக்கும் போதிலும் மக்கள் ஏன் நிறைய புத்தகங்களைப் படிக்கிறார்கள்?
என் பதில் :...
உங்கள் கேள்வியை பார்த்தவுடன் நான் எப்போதோ படித்தது ஞாபகத்துக்கு வந்தது. ஒருவர் தினசரி கதாகாலட்சேபதிர்க்கு மாலை ஆனால் போய்் விடுவார்.
மனைவிக்கு கோபமான கோபம். தினசரி இப்படி போகிறாரே இவருக்கு என்ன புரியப்போகிறது என்று நினைத்து ஒரு பத்து நாள் போனபிறகு கேட்டே விட்டார்.
"ஏங்க இன்னைக்கு கதாகாலட்சேபத்திலே என்ன கதை சொன்னாங்க?/
' எனக்கு அந்த கதை சரியா புரியலே.'
அப்ப, நேத்திக்கு சொன்னது?'
'அதுவும் தான்.'
'இதுவரைக்கும் போய் கேட்டதிலேயே உங்களுக்கு புரிஞ்ச கதை எது?
'எதுவும் புரியலை'
அப்புறம் எதுக்கு தினமும் போய் வாரீங்க?' கேட்டுகொண்டே, மனைவி ராத்திரி சாப்பாட்டிற்கு பிறகு பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தார். அவர் கழுவிக் கொண்டிருந்த சல்லடையைக் காட்டி கணவர் இப்படி சொன்னார்:
அந்த வடிகட்டியில் நீ ஊத்தின தண்ணி எதுவும் நிக்கலை. ஆனால் சல்லடை சுத்தமாச்சு பாரு. அது போலதான் கதை புரியலைனாலும் கேட்கும்போது மனசு சுத்தமாகுது'
அது போலதான் புத்தகங்கள் படிக்க படிக்க , அது 2,3, நாளில் மறந்தாலும் சரி மனசில் ஏற்படும் எண்ணத்தில் சிறிது சிறிதாக மாற்றம் கொண்டு வருவதை பார்க்கலாம்.
அப்புறம் சொல்ல மறந்துட்டேனே. இதோ இப்ப நீங்க கேட்ட கேள்விக்குகூட என்னைக்கோ நான் படித்தது ஞாபகத்துக்கு வருது பாருங்க. படிக்க படிக்க அப்படி நமக்கு தேவையான சமயத்தில் வந்து, உதவிக்கரம் நீட்டும்.
புத்தகம் வாசிப்பது என்பது சுவாசிப்பது போலாகும்.
வாசிப்பை ...நேசிப்போம் ...நன்றி ....

கேள்வி :..ஒரு மனிதனை சீரழிக்கும் பழக்கங்கள் என்னென்ன?
என் பதில் :...
அட நிறைய பழக்கம் இருக்குங்க. ஆனா மனுஷன சீரழிக்கிற மிக முக்கியமான பழக்கம் என்னன்னா.
தன்னிலை மறைத்து பிறரிடம் தன்னை வேற்று ஆளாக காட்டிக்கெள்வது.
இதுதான் எனக்குத் தெரிந்து மனிதனை சீரழிக்கும் மிகப்பெரிய தீய பழக்கம்… இதன் காரணமாகவே நாம் எதுவாக இல்லையோ அதுவாக இருக்க முயற்சிக்கிறோம். பிறரிடம் நன்மதிப்பைப் பெற நம் உண்மை வெளிப்பாடுகளை மறைக்கின்றோம்.
இதன் காரணமாகத் தான் நாம் ஒருவரை காதலிக்கும் போது வராத பிரச்சனை, அவரை மணமுடித்த பிறகு வருகிறது. காதலிக்கும் போது நம் துணைக்கு பிடித்த வாறு நம்மை எப்படியெல்லாம் காண்பிக்க முடியுமோ அப்படி எல்லாம் காட்டி கொள்கிறோம். ஆனால் திருமணத்திற்கு பிறகு நம்முடைய உண்மை முகம் வெளிவரும் பொழுது, பிறரால் அதனை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
அதுவே பல பிரச்சினைகளுக்கு தொடக்கமாக இருக்கிறது. முதலிலிருந்தே நாம் நாமாகவே இருத்தல் தான், நமக்கான உண்மையான இன்ப துன்பங்களை உணரச் செய்யும். பிறரிடம் உங்களை எப்போதும் நல்லவர்களாகவே காட்டிக் கொண்டிருந்தால், எப்போதாவது சிறு தவறு செய்தால் கூட "உன்னை எப்படியல்லாமோ நினைத்திருந்தேன். நீ இப்படி செய்வாய் என்று நினைக்கவில்லை" என்று பிறர் எளிதாக கூறிவிடுவார்கள்.
எனவே உங்களுடைய இருள் பகுதியையும் பிறரிடம் அவ்வப்போது காட்டிக்கொள்ளுங்கள். அது உங்களை தேவையில்லாத பிரச்சினைகளிலிருந்து விலக்கி வைக்கும்.
உண்மையைச் சொல்லப்போனால் நாம் யாருமே நல்லவர்களே கிடையாது. நமக்கு தேவையாக இருப்பது தீமையாகவே இருந்தாலும், அதற்கான நற்காரணங்களை மேற்கோள்காட்டி, அவற்றை தொடர்ந்து செய்துகொண்டே இருப்போம்.
எடுத்துக்காட்டாக இரண்டு நாட்கள் முன்பு நடந்த அந்த யானை சம்பவத்தை எடுத்துக் கொள்வோம். மனிதன் கர்ப்பமாக இருந்த யானையை வெடி வைத்து கொன்றுவிட்டான். உடனே மனிதாபிமானம் கொண்டவனைப் போல் நடித்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு ஒரு கண்டெண்ட் கிடைத்துவிட்டது.
அவர்கள் அரக்க குணம் கொண்டவர்கள்
யானைக்கு இப்படி செய்ய எப்படி மனது வந்தது.
அதற்கு எவ்வளவு வலித்திருக்கும்.
கர்ப்பமாக இருக்கும் யானையை இப்படி செய்யலாமா.
தன்னை நம்பிய யானைக்கு இப்படி துரோகம் இழைத்து விட்டார்களே என்று பல குரல்கள் ஒலித்தன, வாயில் சிக்கனையும், மட்டனையும் மீனையும், திணித்துக் கொண்டே…
கர்ப்பமாக இருக்கும் யானை பாவம் என்றால், கர்ப்பமாக இருக்கும் மீன் ஆடு மாடு, பொதுவாக பிற உயிரைக் கொல்வது என்றாலே பாவம் தானே. நம் தேவை என்பதற்காக பாவபுண்ணியம் பார்ப்பதில் இவற்றிற்கு மட்டும் விதிவிலக்கு கொடுத்து விடுவதா. நாம் வளர்த்த ஆட்டையும், மாட்டையும், கோழியையுமே அடித்து சாப்பிடுகிறோம். இதிலிருந்து எங்கு காட்டில் வாழும் யானை மீது நமக்கு உண்மையான இரக்க குணம் வரப்போகிறது.
நம் வாழ்வில் நாம் பார்க்கும் அனைத்துமே ஒரு கண்டெண்ட்.
சென்ற வாரம் வெட்டுக்கிளி.
அதற்கு முன்னர் கொரோனா.
இன்று யானை.
நாளை நிச்சயம் மனிதர்களாகத்தான் இருப்போம்.
(தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ள முற்படுவது தான், மனிதனை சீரழிக்கும் கொடிய பழக்கம்)
நன்றி .....
கேள்வி :..வாழ்க்கையில் யாரையும் புண்படுத்தாமல் அனைவரையும் திருப்திபடுத்தி ஒரு செயலை நம்மால் செய்ய முடியுமா?
என் பதில் :..என் பாடாக நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது நடந்த உரையாடல் ...
அப்படித்தானே எல்லோரும் வேலை பார்க்கிறோம்…
யார் புண்படுவார் யார் திருப்தி அடைவார் என்று மனதைக்கேட்டால் சொல்லிவிடும்.
பக்தி யாரையும் புண்படுத்தாது. அதற்காக ஒலிப்பெருக்கி வைத்து காலங்காலையில் ஐந்து மணிக்கு கூவினால் எதிர்வீட்டில் பரிட்சைக்குப் படித்துவிட்டு மூன்று மணிக்கு தூங்கப்போனவன் புண்படுவான். அதே உங்கள் அறையில் மட்டும் விளக்கேற்றி வழிபட்டால் உங்களுக்கும் திருப்தி அடுத்தவர்களுக்கு பிரச்சினை இல்லை.
ஒரு பாடகர் ஒரு நிகழ்ச்சியில் அருமையாக பாடுகிறார். தேனினும் இனிய குரல். பாடிமுடித்து பசியோடு வீடு திரும்புகிறார். நிகழ்ச்சிக்கு வர இயலாதவர் ஏ நீ ரொம்ப நல்லா பாடினியாமே என்ன பாடினாய் எங்கே பாடேன் ப்ளீஸ் ப்ளீஸ் என்று போட்டுத்தள்ளினால் என்றால் பாடகர் மனம் புகழையும் மீறி புண்படும். பசிக்கு சாப்பிடக்கூட விடாமல் நொச்சி எடுத்தால்..?
உங்களுக்கு நேர்மையாகவும் உண்மையாகவும் உங்களை திருப்தி படுத்தும் செயல்கள் செய்தால் அடுத்தவர்களை அது எல்லோரையும் திருப்திப் படுத்த இயலாவிட்டாலும் பரவாயில்லை. யாருக்கு எதில் திருப்தி என எண்ணிக்கொண்டிருப்பது சாத்தியம் இல்லை...
இந்தப்பாடல் ...கேளுங்களேன் ...
https://youtu.be/sac2kEhQoNg

பாடும் நிலா பாலு அவர்கள்
இடைக்லத்தில் பாடிய படம் பெயர் கூட தெரியாத.! எண்ணற்ற பாடல்களிலிருந்து இன்னும் சில அரிய பாடல்
〰️ 🌺 ☘️ 🌈 ☘️ 🌺 〰️
பொதுவாக இடைக்காலத்தில் வந்த எஸ்.பி.பி'யின் பாடல்கள் என்றாலே ஆரம்ப காலத்தில் இளையராஜாவின் இசையிலும் அதற்கு முன் வந்ததென்றால் எம்.எஸ்.வி, கே.வி.எம் ஆகியோரது இன்னிசையில் வந்த பாடல்கள் பலவற்றை நாம் வானொலிகள் முலம் அதிகம் அறிந்து பிறகு தற்காலத்தில் இணையம் வாயிலாகவும் அறிந்து வைத்திருக்கிறோம்.!
ஆனால் இதே காலகட்டங்களில் சுமார் எழுநூறு படங்களுக்கு இசையமைத்திருந்த சங்கர் - கணேஷ், நூறு படங்களுக்கு மேல் இசையமைத்திருந்த வி.குமார், சத்யம், ஜி.கே.வெங்கடேஷ், விஜய பாஸ்கர், மற்றும் பல தென்னிந்திய இசையமைப்பாளர்கள் தமிழிலும் இசையமைத்த படங்களிலும் பல இனிமையான பாடல்களை பாடியுள்ளார் எஸ்பிபி.!
அவற்றுள் சில அத்தி பூத்தாற் போல் அவ்வப்போது 70 - 80'களில் வானொலிகளில் ஒலிக்கக்கேட்டதுண்டு.!
90'களின் ஆரம்பத்தில் திருச்சி வானொலி நிலையம் ஒரு அறிவிப்பை வானொலிகளிலும் பத்திரிக்கைகளிலும் கொடுத்திருந்தனர்.!
அவர்களிடமுள்ள பாடல்கள் தொகுப்பின் இசைநாடா பிரதிகளாக விற்பனை செய்யப்படும்.! என்று.... அதைக் கேள்விப்பட்ட நான் அப்போது வெளிமாநிலத்தில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தால் இசைப்பதிவு கூடம் வைத்திருந்த என் நண்பர் மூலம் எனக்காகவும் சில கேசட்டுகள் வாங்ம் படி கடிதம் மூலம் தெரியப்படுத்தி (சுமார் ஐம்பது) வாங்கினேன்.!
அவற்றில் இருந்து (கடந்த பத்தாண்டுகளுக்கு முன் அவை பாழானது வரையில்.!) அவ்வப்போது கேட்டு ரசித்த பாடல்களில் சட்டென ஞாபகம் வந்த பல பாடல்களில் இப்போது இணையத்தில் தேடி கண்டு பிடித்த. சில பாடல்களை.! (பாடல்களை விட அவை இடம் பெற்ற படங்களை கண்டுபிடிக்கவே மிகுந்த சிரமப்பட்டு.! 😊) உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.!
பல பாடல்களும், என்னைப்போலவே அவை இடம் பெற்ற படத்தின் பெயர்களும் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு புதிதாய் தோன்றலாம்.! 😊🙏
ஆனால் ஒரு முறைக்கு இருமுறை கேட்டால் உங்களுக்கும் பிடித்துவிடும்.! 👌👍
இன்னொறு விஷயத்தையும் தெரிவிக்க வேண்டும்.? இவற்றில் ஜோடிப்பாடல்களில் பெரும்பான்மையானவை வாணி ஜெயராமும், ஒரு சில ஸ்வர்ணா(வி.குமார் அவர்களின் மனைவி) மற்றும் பி.சுசீலாவே பாடியீள்ளனர். இளயராஜாவின் வருகைக்கு பிறகே ஜானகிக்கு வாய்ப்புகள் அதிகம் வந்தது இதன் மூலம் தெளிவாகிறது.!
"கல்யாண திருக்கோலம் தெய்வீகமே" பாடலை எஸ்.பி.பியுடன் சேர்ந்து பாடியிருப்பது உமாரமணனின் கணவர் ஏ.வி.ரமணன்.!

வியாழன், 4 ஜூன், 2020
வல்லகொண்டம்மன் வரலாறு வழிபாடும் ..
வரலாறு என்பது நம் முன்னோர்களின் வாழ்வியலை பற்றியும் ,அவர்தம் வாழ்க்கை முறைகள் பற்றியும் ,அவர்கள் தம் கடைபிடித்த பண்பாடு ,பாரம்பரியம் ஆகியவற்றை படம் பிடித்துக் காட்டும் காலக் கண்ணாடிகளாக திகழ்கின்றன .
தொன்று தொட்டு இன்று வரை வாழந்து வரும் பல்வேறு இனக்குழுக்கும் .தன் குடி பெருமைகளை அடுத்துவரும் சந்ததியினருக்கு தெரியப்படுத்தும் பொருட்டு ஏதேனும் ஓர் வகையில் வரலாறு வாயிலாகவோ ,அல்லது தனது பூர்விக பெருமைகளை பறைசாற்றும் கதைப்பாடல்கள் வாயிலாகவோ ,அல்லது படிக்கவழக்கம் ,பண்பாடு நடைமுறைகள் இவற்றில் கோலோச்சும் குலா தெய்வ வழிபாடுகள் மூலமாகவோ வெளிப்படுத்த விரும்புகின்றன .ஆக தனது பெருமைகளை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்லும் காரணிகளில் ஒன்றக குலதெய்வ வழிபாடும் உள்ளது .
இன்று வரை இந்துமதம் சிறப்புற்று விளங்கவும் இந்திய தேசம் அந்நிய சக்திகளிடமிருந்து ,சுதேச காற்றை சுவாசிக்கவும் ,ஆணிவேராகவும் ,ஆலமரமாகவும் விளங்கிய வரலாற்றில் தனக்கென தவிர்க்கமுடிய இடம் பெற்ற இனக்குழு ஒன்றின் வழிவந்த ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுக்கு காலத்துக்கும் மேற்பட்ட ,பத்து ஜமீன்களாக ,பாளையக்காரர்களும் ,பத்துப் ஜமீன்தாரர்களும் வழிபட்டு வந்து தற்போது காலத்தின் செதில்களால் செல்லரிக்கப்பட்டு மாசு படிந்த மாணிக்கமாக காட்சியளிக்கும் .நம் கம்பள ஆதிகுல தெய்வமாகிய "வல்லகொண்டம்மாள் " கோவில் பற்றியும் அதன் பூர்விக வரலாறு மற்றும் வழிபாட்டு முறைகளை உலகுக்கு அடிதோறும் எண்ணத்தில் சிறு முயற்சியாக தொகுக்கப்பட்டதே வல்லக் கொண்டம்மன் வரலாறும் வழிபாடும் எனும் நூல் ...

இத்தகைய குலதெயவ வழிபாடுகள் (அ )வழிபாட்டு முறைகள் அது சார்ந்த இனக்குழுவை நெறிப்படுத்துவ தோடில்லாமல் அவர்களின் ஒற்றுமைக்கு வழிகாட்டும் காரணிகளில் ஒன்றகவும் அமைகிறது .
மேலும் நம் இந்திய தேசம் மட்டுமில்லாது பல அந்நிய தேசங்களிலும் இத்தகைய குல தெய்வ வழிபாட்டு முறைகள் நடைமுறையில் உள்ளது .
பெரும்பாலும் மறைந்த முன்னோர்கள் அல்லது வீரத்தோடு வாழ்ந்து வீரமரணம் அடைந்தவர்கள் ஆகியோரின் வழிபாடே குலதெய்வ வழியாக மாறியதாக சங்க இலக்கிய குறிப்புகளும் தெரியப்படுகின்றன .
தற்பொழுது நாம் கொண்டிருக்கும் வரலாறுகளில் பெரும்பான்மை யானவை பல அந்நிய தேசத்தவரால் தொகுக்கப்பட்ட குறிப்புகளாக மட்டுமே கிடைக்கின்றன அதன் காரணமாகவே அவர்கள் பதிவுசெய்யத் தவறிய பல வரலாறுகளும் அச்சூலில் உண்மைத்தன்மைகளும் தற்பொழுது கல்வெட்டுகள் வழியாகவும் அவர்கள் இனம் சார்ந்த (அ )இடம் சார்ந்த கதைப்பாடல்கள் மூலமாகவும் அறியமுடிகிறது ,அந்நியன் போற்றவில்லை என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே நாம் எந்தவொரு விஷயத்தையும் ஒதுக்கிவைப்பது அறிவுடைமையாகாது .
ஸ்ரீ மஹாகணமும் மேன்மையும் பொருந்திய ஒன்பது கம்பளத்துக்கும் கட்டுப்பட்ட சத்தியந் தவிரதவர்களான ,சன்ன மாடு ,சலியெருது ஆயர்குழல் ,இரத்தினகம்பளி ,பிடிசெம்புக்கும் உடையவரும் ,புலிமீசையில் ஊசலாடுகின்ற பெரியோர்களும் ,பாலவார் குலா பன்னிரெண்டு தண்டிக்காரருமான
1.மல்ல பாலம்
2.கெங்கிசி பாலம்
3.குரி பாலம்
4.மூட பாலம்
5.உண்டாடி பாலம்
6.தூணிக்கால் பாலம்
7.சாகல பாலம்
8.சல்லூறு பாலம்
9.அலம பாலம் .
10.நலகானி பாலம்
11.எகநாகி பாலம்
12.திகநாகி பாலம்
1.மல்ல பாலம்
2.கெங்கிசி பாலம்
3.குரி பாலம்
4.மூட பாலம்
5.உண்டாடி பாலம்
6.தூணிக்கால் பாலம்
7.சாகல பாலம்
8.சல்லூறு பாலம்
9.அலம பாலம் .
10.நலகானி பாலம்
11.எகநாகி பாலம்
12.திகநாகி பாலம்
ஆகிய 12 குல தண்டிகை காரர்கருக்கும் அவர்களுக்கு முரசாக விளங்கிய
1.மெட்ராத்தி ஜமீன்
2.துங்காவி ஜமீன்
3.நெகமம் ஜமீன்
4.பெரியப்பட்டி ஜமீன்
1.மெட்ராத்தி ஜமீன்
2.துங்காவி ஜமீன்
3.நெகமம் ஜமீன்
4.பெரியப்பட்டி ஜமீன்
அகியோர்களுக்கும் ,அவர்களின் உறவின் முறையாக விளங்கிய
5.தளி ஜமீன்
6.ஆவில்பட்டி ஜமீன்
7.தொண்டாமுத்தூர் ஜமீன்
8.சிஞ்சுவாடி ஜமீன்
9.தாளக்கரை ஜமீன்
5.தளி ஜமீன்
6.ஆவில்பட்டி ஜமீன்
7.தொண்டாமுத்தூர் ஜமீன்
8.சிஞ்சுவாடி ஜமீன்
9.தாளக்கரை ஜமீன்
ஆகியோர்களுக்கு தாய் கோவிலாக விளங்கிய முந்தைய கோயம்பத்தூர் ஜில்லா ,உடுமலைப்பேட்டை தாலுகா ,கோட்டமங்கலத்தில் ஆதியில் குடிகொண்டு அருள்பாலிக்கும் தெய்வம் .வல்லகொண்டம்மன் என்றும் அழைக்கபடும் கோவிலைப்பற்றிய சிறு தொகுப்பே இந்நூல் பாளையக்காரர்களாலும் ,மேற்கண்ட ஜமீன்தார்களாகும் ,சீரோடும் ,சிறப்போடும் வழிவழியாகவும் ,வாழையடி வாழையாகவும் ,வம்ச தவறாமாலும் வழிபட்டு வந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த இக்கோவில் ,இன்று இந்து அறநிலையைத்துறையின் கீழ் இருந்தும் ,பராமரிப்பின்றி சிதிலங்களாய் சிதைந்து எச்சங்களாய் மிஞ்சும் கடைநிலைக்கு இலக்காகி மீள முடியா ,சுற்றிஅறிக்கையாகவும் ,மீட்டுயெடுக்கவும் ,புனரமைக்கவும் ,ஆளில்லா சுற்றிக்கையாகவும் காட்சியளிக்கிறது .
கோவில் தோன்றிய வாரலாறு ...:📚📚✍️✍️
புதன், 3 ஜூன், 2020
கேள்வி : கணவன் மனைவி பிரிவினைக்கு (எல்லா வயதிலும்) அடிப்படையில் எது காரணம்?
என் பதில் :
சுயநலம்தான் காரணம்! குழந்தைகள் இருந்தால் நாம் பிரிந்தால் அது நம் குழந்தைகளால் தாங்கிக்கொள்ள முடியுமா என்று சிந்திக்கத் தெரியாதவர்கள் தங்களுடைய சுய நலம் மட்டும் கருத்தில் கொண்டு எடுக்கும் ஒரு சுயநல முடிவு என்றுதான் சொல்வேன்!
குழந்தைகள் இல்லாவிட்டால் கூட அக்னிசாட்சியாக திருமணம் செய்யும்போது " நான் இவளை எந்தக்காலத்திலும் எந்தத் துன்பத்திலும் கைவிடமாட்டேன்!" என்று சொல்லி தான் கை பிடிக்கிறோம். அப்படி செய்தபின் தவறு நடந்தாலும் ஆண் மகன் அந்தப் பெண்ணை கைவிடுதல் ஸ்மிருதி சாஸ்திரம் இரண்டுக்கும் எதிரானது மட்டுமல்ல அது ஒரு நம்பிக்கை துரோகம்!
குழந்தைகள் மேம்போக்காக முடிவை ஏற்று கொண்டாலும் உண்மையான தாய் தந்தை பயாலஜிகல் மதர் அல்லது பயாலஜிகல் பாதர் என்பது மாற்றவே முடியாது.
நாம் தியாகம் செய்ய தயாராக வேண்டும். அப்போதுதான் நம் நாட்டில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அந்தப் பெண்ணிடம் முதலிலேயே சொல்லிவிட வேண்டும் எனக்கு என் சுகம்தான் முக்கியம் என்று!
நம்மால் ஒரு பொறுப்பு எடுத்து செய்ய முடியவில்லை என்றால் அந்த செயலில் இறங்க கூடாது. இன்றைக்கு மோசமான வளாக தெரியும் ஆண் அல்லது பெண் திருமணத்தின் போது மட்டும் எப்படி நல்லவனாக தெரிந்தாள் என்பதை யோசிக்க வேண்டும்! ஒருவேளை நான்தான் அவளை இப்படி மாற்றி விட்டேனா என்று ஒரு நிமிடம் உட்கார்ந்து யோசித்தால் பிரிவு ஏற்படாது!
நன்றி ...

கேள்வி :இந்த சமூகத்தில் நீங்கள் மாற்ற நினைக்கும் ஒரு விடயம் எது?
பெண் பார்க்கும் சடங்கு.
என் பதில் :..
ஒரு பொண்ணை நல்லா அலங்கரிச்சி யாருன்னே முன்ன பின்ன தெரியாதவங்க முன்னே நிறுத்தி அவங்களை பரிசோதிக்க விட வேண்டியது.
பெண்ணு என்ன படிச்சிருக்கா? நீ பேசு மா. அவள் குரல்வளத்தை பரிசோதிக்க.
எல்லாருக்கும் காபி குடுமா. எல்லாரையும் நல்லா வணங்கிக்கோ.
மாப்பிள்ளை இவர் தான் பார்த்துக்கோ. மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்தவங்களாம் பெண்ணை வச்ச கண் வாங்காம பார்ப்பது.
ஏதோ ஸூல இருக்க மிருக்கத்தை பார்ப்பது போல ஒரு உணர்வு.
இதுல என்ன வேடிக்கைன்னா, அப்ப தான் பொண்ணும் பையனும் பார்த்துருப்பாங்க. அதுக்குள்ள எல்லாரும் கேப்பாங்க. உனக்கு பொண்ணை பிடிச்சிருக்கா, உனக்கு பையன பிடிச்சிருக்கானு? அந்த ஐஞ்சி நிமிஷத்துல அவங்களோட வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவை எடுக்கணும். பிடிச்சிருக்கானும் தெரியாது பிடிக்கலையானும் தெரியாது. ஆனா எல்லோரோட வர்ப்புறுத்தலால பிடிச்சிருக்குன்னு சொல்லியாகனும்.
சில சமயம் பையன் வீட்டுக்காரங்க வீட்டுக்கு போய் பதில் சொல்றேன்னு சொல்லிட்டு ஏதாவது சப்ப காரணம் சொல்லி வேண்டாம்னு பெண்ணை நிராகரிச்சிடுவாங்க.
இதனால ஒரு பெண்ணுக்கு ஏற்ப்படுற மன உளைச்சலை பற்றி யாரும் கவலை படுறதில்லை.
பையன் வீட்டுல பெண் புகைப்படத்தை பார்த்திருப்பாங்க. அந்த பெண்ணை பற்றிய தகவல் எல்லாம் தெரிஞ்சிருக்கும். அப்ப பெண்ணை பிடிக்கலைன்னா அப்படியே விட்டுடணும். பிடிச்சிருந்தா மட்டும் பெண் பார்த்து நிச்சயம் பண்ணணும்.
பெண் வீட்டாருக்கும் பெண்ணுக்கும் மன உளைச்சல் கம்மியாகும். அந்த பெண்ணுக்கு ஏதோ குறையிருக்கு போல அதான் அவளை நிராகரிச்சிட்டாங்கங்குற வீண் பேச்சுகளையும் தவிர்க்கலாம்.
இந்த முறையை கண்டிப்பா மாத்தணும். அவள் எத்தனை முறைதான் யாருனே தெரியாதவங்களுக்கு காபி குடுத்துக்கிட்டு சிரிச்ச முகத்தோட நிற்ப்பாள். சொல்லுங்க?
நன்றி ....

கேள்வி :தனி நபர் கடன் இன்றி வாழ நீங்கள் கொடுக்கும் சிறந்த அறிவுரை என்ன?
என் பதில் :..
எனது அம்மா தான் வீட்டின் நிதி அமைச்சர். எப்பொழுதும் முக்கிய முடிவுகளை அவர்கள் தான் எடுப்பார்கள்.
அவர்களிடம் இருந்து நிதி மேலாண்மை பற்றி நிறைய கற்று கொண்டேன். அத்தனையும் அனுபவ படிப்பு தான்.
அவர்களிடம் மிகவும் பிடித்தது கடன் வாங்காமல் வாழ்க்கை வாழ்வது.
இது வரையில் தேவை இல்லாமல் எதற்காகவும் செலவு செய்தது கிடையாது. படிப்பிற்கு கூட கடன் வாங்கியது கிடையாது.
சிறுக சிறுக சேமித்து சரியான திட்டமிடல் மூலம் கடன் வாங்காமல் எங்களை வழி நடத்தி சென்றார்கள்.
அனைத்து வீட்டு உபயோக பொருட்களும் சேமிப்பின் மூலம் தான் வாங்கினோம்.
அதோடு எனது அப்பாவும் டீ மட்டும் நண்பர்களுடன் சாப்பிடுவார் சம்பாதிக்கும் அனைத்தையும் என் அம்மாவிடம் கொண்டு வந்து கொடுத்து விடுவார். அப்படி சிக்கனமாக இருப்போம் நாங்கள்.
நாம் வாழ்வதற்கு நாம் சம்பாதிக்கும் பணம் போதும். அடுத்தவர்கள் போல வாழ்வதற்கு மட்டுமே பணம் அதிகம் தேவைப்படுகிறது.
அப்படி வாழ ஆசைப்பட்டு கடனாளி ஆனவர்கள் அதிகம். இன்னும் நான் டெபிட் கார்டு மட்டும் தான் .
வரும் வருமானத்தை கொண்டு சேர்த்து வைக்கும் பணத்தில் தேவையானவற்றை வாங்கலாம்.
இது தனி நபர் மற்றும் குடும்பம் என எல்லோருக்கும் பொருந்தும். வீண் செலவு குறைத்து கொண்டாலே கடனின்றி வாழலாம்.
அவசிய தேவைக்காக கடன் வாங்கலாம் ஆனால் கடன் வாங்க வேண்டும் என்பதற்காக தேவைகளை ஏற்படுத்தி கொள்வது வீண்.
ஆசைபட்டதை வாங்க காசு இல்லை என்று வருத்தப்படுவதை விட இருக்கும் காசிற்கு எதை வாங்கலாம் என்று யோசிக்கலாம்.

திங்கள், 1 ஜூன், 2020
ஆச்சரியமாக இருக்கிறது !
இளையராஜா இசையமைத்து வெளிவந்த முதல் இசைத்தட்டு
“அன்னக்கிளி” என்றுதானே நீங்களும் , நானும் இதுநாள்வரை நினைத்துக் கொண்டிருந்தோம் ?

இல்லவே இல்லை !
இளையராஜா இசையமைத்து வெளிவந்த முதல் பாடல் இசைத்தட்டு ,
இதுதான் !

“தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு!
கொஞ்சம் நில்லு! – எங்கள்
திருநபியிடம் போய்ச் சொல்லு
சலாம் சொல்லு .”
கொஞ்சம் நில்லு! – எங்கள்
திருநபியிடம் போய்ச் சொல்லு
சலாம் சொல்லு .”
இதோ , அது பற்றி சொல்பவர் ,
நாகூர் ஹனீபாவின் மகன் ஹனீபா நெளஷாத் அலி :

“அப்பா [ நாகூர் ஹனீபா ] மேல்சபை உறுப்பினராக இருந்த நேரம் . சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கியிருந்த அப்பாவைத் தேடி ஒரு நாள் இளைஞர் ஒருவர் வந்தார்.
வந்தவர் , " ஐயா ... நான் நல்லா மெட்டுப் போடுவேன். உங்கள் பாடலுக்கு மெட்டுப்போட விரும்புகிறேன்” என்றார் பவ்யமாக.
அப்பாவோ, "அப்படியென்றால் நீங்கள் என் பாடல்களை வெளியிடும் இசை நிறுவனத்தைத்தான் அணுகவேண்டும்'’ என்றார்.

வந்தவரோ, "முதலில் நான் அங்குதான் சென்றேன். அவர்கள்தான் உங்களைச் சந்தித்துவிட்டு வரச்சொன்னார்கள்” என்றார்.
இரண்டொரு பாடல்களையும் அவர் அப்பா முன் பாடிக் காட்டினார். அப்பாவின் முகத்தில் பிரகாசம்.

’"சரி , ஏற்கனவே ஒரு பாடல் எழுதி , அது பதிவாக வேண்டியதுதான் பாக்கி. அதற்கு நீங்கள் இசை அமையுங்களேன் , பார்க்கலாம்” என்றார்.
அப்படி அந்த இளைஞரால் இசை அமைக்கப்பட்டு பதிவான பாடல்தான் ,
"தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு..
எங்கள் திரு நபியிடம் போய்ச் சொல்லு ,
சலாம் சொல்லு '’ என்ற பாடல்.
"தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு..
எங்கள் திரு நபியிடம் போய்ச் சொல்லு ,
சலாம் சொல்லு '’ என்ற பாடல்.
இதைக்கேட்டு மகிழ்ந்த அப்பா, "தென்றல் காற்றே ஒரு கணம் நிற்பதுபோல் பண்ணிவிட்டீர்களே , அபாரமான ஆற்றல் உங்களுக்கு இருக்கிறது. எங்கேயோ போகப்போகிறீர்கள் " என மனதாரப் பாராட்டினார்.
அதற்குப் பின் அப்பா , சிங்கப்பூர், மலேசியாவெல்லாம் போய் தொடர் இசை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு , தமிழகம் வந்தபோது , எங்கு பார்த்தாலும், "மச்சானைப் பார்த்தீங்களா , மலைவாழத் தோப்புக்குள்ளே'’ பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது . ஆம் . அப்பாவின் கணிப்புப்படியே அந்த இளைஞர் எங்கேயோ போய் விட்டிருந்தார்” என்று சொல்லி மகிழ்கிறார் நாகூர் ஹனீபாவின் மகன் ஹனீபா நெளஷாத் அலி.
அந்த இளைஞர்தான் - இளையராஜா !
இந்தத் தகவலைப் படித்து விட்டு "தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு.. " பாடலை யூடியூபில் கேட்டுப் பார்த்தேன்..!
இன்னமும் கொஞ்சம் இனிமை கூடி இருந்தது !
இன்னமும் கொஞ்சம் இனிமை கூடி இருந்தது !
கேட்டுத்தான் பாருங்களேன்...!
இளையராஜா ..இசைஞானியின் பிறந்தநாள் ஜூன் 2....1943.....
https://youtu.be/AV64WD7MRk0
கேள்வி : Google ஊழியர்களில் சிலர் ஏன் தங்கள் வேலையிலிருந்து ராஜினாமா செய்து முழுநேர YouTuber வேலையைச் செய்கிறார்கள்?
என் பதில் :..
ஐடி துறைக்கும் எனக்கும் காத தூரம்!
நான் புரிந்து கொண்டது.
தனியார் நிறுவனங்களில், குறிப்பாக ஐடி துறையில், உள்ளவர்களுக்கு வேலை நிரந்தரம் கிடையாது. இதில் நேற்றைய கண்டுபிடிப்பு நாளை பழசாகிவிடலாம். எனவே அவர்கள் எப்போதும் இரண்டு வேலைகளை செய்வர். ஒன்று தன்னை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்வது, மற்றொன்று வேலை வாய்ப்பு பற்றி கண்களை திறந்து வைத்துக் கொள்வது. இந்த இரண்டையும் செய்யாமல் இந்த துறையில் முன்னேறுவது முடியாது.
மேலும் தனியார் துறையில் உள்ளவர்கள் ஒரு கிளையை பற்றி மட்டும் தொங்க மாட்டார்கள், கூடவும் கூடாது. இரண்டாவது கிளை ஒன்றை பற்றிக் கொள்வது அவசியம். ஆனால் அது பல திறமைகளைப் பொறுத்து தான் அமைக்க முடியும். பலர் அதுபோல ஒரு இரண்டாவது வருமானத்திற்கு பிரயத்தனம் செய்வர்.
யூட்யூப் மூலம் சம்பாதிப்பது என்பது அந்த இரண்டாவது வருமானத்திற்கு வழிவகுப்பது போலத்தான். அது வழியாக பணம் ஈட்ட பொறுமை தேவை.
இதன்மூலம் நல்ல வருமானத்தை ஏற்படுத்திக் கொண்டோர் பலர். அவர்கள் ஒரு நேரத்தில் அந்த ஒரு வருமானத்தை வைத்தே முன்னேறி விடுவார்கள். ஒருவரிடம் கைகட்டி சேவகம் செய்ய அவசியம் இருக்காது.
கூகுளில் பணிபுரிபவர்கள் என்றால் ஐடி துறையை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும். அந்த திறமையை யூட்யூப் நன்கு பயன்படுத்தி வெற்றி பெறும் திறன் படைத்தவர்கள் யூட்யூபில் வெற்றி கண்டால், பின் கூகுள் எதற்கு? தனக்கு தானே யஜமானன் ஆகிவிடுவர்!

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)