சனி, 7 மார்ச், 2020

சிகரங்கள் தொட்டதில்லை....
பள்ளிக்கூடம் போனதில்லை....
வருடங்கள் பல கடந்தும்
மனதின் வைராக்கியம்
தொலைத்ததில்லை.......
அரசியல் அறிந்ததில்லை...
அறிவிலக்கியம் மொழிந்ததில்லை....
போர்முனை போனதில்லை
விண்வெளி அளந்ததில்லை....
வித்தைகளேதும் புரிந்ததே இல்லை....
கள்ளிப் பாலுக்கு நடுவே
முட்டி மோதி முளைத்து
வயல்வெளிகளில் வசந்தம் தேடி
வான் வெளியில் நிலவு தேடி
இன்னும் வாழ்ந்து வரும்
கிராமப்புற இந்தியாவின்
கீர்த்திமிகு சிற்பிகள் நாங்கள்......
வாழ்வதைச் சரித்திரமாக்குவர்களிடையே
வாழ்வையே சரித்திரமாக்குபவர்கள் நாங்கள்....
என்ன
எங்கள் சரித்திரம் எழுதப்படாதது
அவ்வளவே......
அனைவருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்............
மகளிர் தின வாழ்த்துக்கள் ....

‘என் மனைவியைப் புரிஞ்சுக்கவே முடியல…’ என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அவர்களை புரிந்துகொள் முடியும். எப்படி? இன்றைய ‘நவீன யுக மனைவி’யின் அன்பைப் பெற 10 விதிகள்…
1. மதியுங்கள்
வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள் முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குவியுங்கள்.
2. கனவுகளைப் பின்பற்றட்டும், உங்களை அல்ல
இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள்.
3. எல்லை தாண்டிச் சிந்தியுங்கள்
மனைவியை சமாதானப்படுத்துவதற்கான பழைய விதிகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. புதிய யோசனைகளில், சோதனை முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள். மனைவிக்குத் திடீர் ஆச்சரியம் கொடுக்கும் வழக்கத்தைக் கைவிடாதீர்கள்.
4. உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்
‘ஆண்கள் அழ மாட்டார்கள்’ என்பது சரிதான். உணர்வுகளை வெளிப்படுத்தும் உணர்வுப்பூர்வமான ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள் என்பதே உண்மை. ஆனால் எதற்கெடுத்தாலும் கண்ணைக் கசக்காதீர்கள். அழுமூஞ்சி ஆண்களை பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.
5. ஆலோசனை கேளுங்கள்
நீங்கள் ஒரு முடிவெடுக்கும்போது உங்கள் மனைவியின் ஆலோசனையையும் கேளுங்கள். அது பணத்தைப் பற்றியதாக இருக்கலாம், வேலை, தொழிலைப் பற்றியதாக இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள், அதற்கு மதிப்புக் கொடுங்கள்.
6. சமைக்கத் தெரிந்து கொள்ளுங்கள்
நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக்காரராக இருக்கும் கணவரை மனைவிக்குப் பிடிக்கும். அப்படிப்பட்ட கணவர்தான் அவர்களைப் பொறுத்தவரை ‘முழுமையானவர்’.
7. பேசுங்கள்
பேசுவது பெண்களுக்குப் பிடிக்கும் என்று தெரியும். மனைவியுடன் வழக்கமான விஷயங்களை மட்டுமல்லாமல், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று பல விஷயங்களைப் பற்றியும் பேசுங்கள். உங்களின் எதிர்காலத் திட்டங்கள், கனவுகள், பயங்கள் என்று எல்லாவற்றைப் பற்றியுமே பகிர்ந்துகொள்ளுங்கள்.
8. மனைவியின் குடும்பத்தில் ‘பங்கு கொள்ளுங்கள்’
வீட்டுக்கு வருகிற மனைவி உங்கள் குடும்பத்தோடு ஒன்றிப்போய்விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி நீங்களும் ஒரு அன்பான மருமகனாக மனைவியின் வீட்டில் அக்கறை காட்டுவது அவசியம்.
9. அழகில் கவனம் செலுத்துங்கள்
அழகு, பெண்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் என்று யார் சொன்னது? வெளியிடங்களுக்குப் போகும்போது உங்கள் மனைவியை வியப்பாக நான்கு பேர் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அப்படி அவரும் எதிர்பார்ப்பது நியாயம்தானே?
10. அவ்வப்போது ‘வழக்கம்போல்’ இருங்கள்
எல்லாவற்றிலும் புதுமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவ்வப்போது, ‘நீதான் எனக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம்’ என்று ‘பழைய டயலாக்’ பேசுவதில் தவறில்லை.
பிறகு பாருங்களேன் உங்கள் மனைவியின் அன்பையும் உபசரிப்பையும்..
சர்வதேச பெண்கள் தினம்:
“மாதர் தம்மை
இழிவு செய்யும்
மடமையைக்
கொளுத்துவோம்”.!
...என்று பாடி பெண்மையைக் கொண்டாடினான் யகபுருடன் பாரதி.!
சங்க காலம் முதல் இன்று வரை, பெண்களின் அண்மை இல்லாமல் ஆண்கள் இல்லை.
அன்னையாக ஒரு மழலையை வளர்ப்பதில் தொடங்கி, ஒரு மழலையை பெற்றுத் தந்து, அவனை சான்றோனாக்கும் வரை எல்லாவற்றுக்கும் பெண் துணையின்றி இயலாது.
பெண் என்ற எண் இல்லையென்றால் ஆண் பூஜ்யம் தான். சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்று கடவுளே ஒப்புக் கொண்டதாக திருவிளையாடல் புராணம் சொல்கிறது.
அன்பு,நிதானம், சகிப்புத் தன்மை, மன உறுதி, சம்யோஜித புத்தி ஆகிய 5 முக்கிய‌ குணங்களைக் கொண்டிருக்கும் பெண்ணிடமும், ஆண்மை தேவையான சம்யங்களில் வெளிப்படும்.
நல்ல பெண், கெட்ட பெண் என்ற டி.வி. சீரியல் பிரச்சினை எல்லாம் ஒரு புறம் இருக்க, பெண்மை உயர்வானது, பெண்களும் உயர்ந்தவர்கள் என்று சொல்வது தான் இந்தப் பகிர்வின் நோக்கம்.
கோபன்ஹேகனில், 1910ம் ஆண்டு நடந்த, சர்வதேச மாநாட்டில், பெண்கள் தினம் கொண்டாடுவது பற்றி பேசப்பட்டு, பின்னர் 1911ல் மீண்டும் விவாதிக்கப்பட்டு, ஆரம்பத்தில், மார்ச் 19ம் தேதி, முதன் முறையாகவும், அதன் அய்ரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு, 1913ம் ஆண்டு முதல், அய்க்கிய நாடுகள் சபை ஒப்புதலுடன், மார்ச் 8ம் தேதியை, சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்தனர்.
மேரி க்யூரி,அன்னை தெரசாவில் துவங்கி எத்தனை எத்தனையோ பெண்கள் பல துறைகளில் சாதித்து பெண் இனத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள். என்றாலும் எனக்கு பெண்கள் தினம் என்றாலே...
"எட்டும் அறிவினில்
ஆணுக்கு இங்கே பெண்
இளைப்பில்லை காண்
என்று கும்மியடி''...
என்ற மகாகவியின் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. மிகச் சரியாக கணித்தால்,
இந்த வருடம் 108 ம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினம் என்றும் சொல்லலாம்.
அனைத்து மதிப்பிற்குறிய
தோழிகளுக்கும் ,
சகோதரிகளுக்கும் சர்வதேச பெண்கள் தின வாழ்த்துக்கள்.
மாநகர பேருந்துகளில், ஷேர் ஆட்டோக்களில் காலை வெயிலில் பதட்டத்துடன் வியர்த்த படி செல்லும் ஒரு பெண்ணை சென்னை,கோவை ,வாசிகள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள்..

அவள் தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் பிறந்திருப்பாள். பொறியியல் படித்துவிட்டு கனவுகள் பல கண்டு சென்னைக்கு வந்திருப்பாள்..

அவள் முதல் தலைமுறை பட்டதாரி. உறவுகளில் உதவ ஆள் இருக்காது.. முதல் ஒரு வருடம் பெரிய நிறுவங்களில் வேலை தேடி அலைந்து பின் கிடைத்த சிறிய நிறுவனத்தில் வேலைக்கு செல்ல துவங்கியிருப்பாள்..

காலை அவசரமாய் உணவு, பேருந்து உரசல்கள், மேனேஜர் திட்டு, மாதாந்திர வலி என எல்லாம் பழகியிருக்கும். நிச்சயம் ஒரு காதல் தோல்வியும் பின் இருக்கும்..இரவு சில சமயங்களில் ஹாஸ்டலில் உணவும் இருக்காது.

"வேலை வேண்டாம் வீட்டிற்கு வா" என சொல்லுமளவு குடும்ப நிலை இருக்காது..அவள் மாத சம்பளத்தில் தான் ஊரிலுள்ள அவள் குடும்பம் இயங்கும்..

அவள் பேஸ்புக்கில்,வாட்ஸாப்பில் , பெண்ணியம் பேசுபவள் அல்ல,  தான் ஆணுக்கு நிகர் என்று சொல்லிக்கொள்பவளும் அல்ல. ஆனால் உண்மையில் அவள் 10 ஆண்களுக்கு நிகர்..

பெண்கள் தின வாழ்த்துக்கள்
பெண்கள் தின வாழ்த்துகள்....

. பெரும்பாலும் அவை பெண்களை ‘’மாதா நீயே சக்தி’’ டைப்பில் தூக்கி நிறுத்தி வழிபடுகின்றன. இது மிக வசதி. திருவிழாவன்று பிரசாதம் படைத்து விட்டு, திரும்பிப் பார்க்காமல் போய்விடலாம். அடுத்த வருடம் மீண்டும் பார்த்துக் கொள்ளலாம்...

இன்னமும் மீதி டைப் வாழ்த்துகள்... அம்மாவாய், தங்கையாய், மனைவியாய், மகளாய் சேவை செய்யும் பெண்களே, நீங்கள் இன்னமும் நூறாண்டு வாழ்ந்து சேவையைத் தொடருங்கள் என்கிற ரீதியில் இருந்தன... இவையெல்லாம் உங்களை சார்ந்திருக்கும் பெண்களை மகிழ்ச்சிப்படுத்தி விடும் என நினைக்கிறீர்களா நண்பர்களே!

இங்கே நம் குடும்ப அமைப்பில், பெரும்பாலும் ஆண் பெண்ணை அடக்கி ஆளுகிறான். விதிவிலக்காக சில குடும்பங்களில் பெண்கள் இந்த அடக்குமுறையை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். மாற்றாக, ஆண், பெண் சமத்துவத்தின் தேவையை இந்த நாட்களிலாவது புரிந்து கொள்ள முற்படுவோம்.

ஒரு பெண் எப்போது தன்னை மகிழ்ச்சியாக உணரத் தொடங்குகிறாள்? அவள் தனக்கென எதையாவது செய்யத் தொடங்கும்போது தான். சுய பொருளாதாரத்திற்காக எதோ தேர்வெழுதி வேலைக்குப் போவது மட்டுமல்ல, அவளுக்கான வாழ்வு. அவள் கனவுகளை அவள் பின் தொடரும் வாய்ப்புள்ள ஒரு வாழ்வு. ஒரு பயணம், இசை, தன் நண்பர்கள் என தனக்காக அவள் செலவழிக்க ஒரு வாரத்தில் சில மணி நேரங்களேனும் வாய்க்கக் கிடைக்கும் ஒரு வாழ்வு. அடுக்களையில், குழந்தை வளர்ப்பில் அவள் வெந்து சாகாமல் அதை பகிர்ந்து கொள்ளும் மனதுள்ள குடும்பம் அமைகின்ற வாழ்வு..

திருமணத்திற்கு பிறகு தவறாமல்... ‘’24 மணி நேரமும் நொச்சு நொச்சுன்னு என்னைப் போட்டு படுத்துறாடா ‘’ என முணுமுணுக்கு கணவன்கள் ஒன்றை யோசித்திருக்கிறீர்களா? உங்கள் லைசன்ஸை அவள் போட்டுக் கொள்ளும் முன் அவளுக்கென ஒரு வாழ்விருந்தது. அதில் உங்களைத் தவிரவும் நபர்கள் இருந்தார்கள். சந்தோஷங்கள் இருந்தன. நீங்கள் தான் அதில் இருந்து முற்றாக அவளைத் துண்டித்தீர்கள். நீங்கள் ஒருவரே அவள் உலகமாக இருக்க வேண்டும் என நிர்ப்பந்தித்தீர்கள். தனக்கான உலகின் மீது தொடர் கவனம் இருப்பது இயல்பு தான் இல்லையா? இந்த உறவு உங்களுக்கே இவ்வளவு சலிப்பைத் தந்தால், அவளது சலிப்பின் கனத்தை யோசித்திருக்கிறீர்களா?

அன்பு, காதல் என்பதெல்லாம் நீ எனக்கு மட்டுமேயானவள் என்பதில் அல்ல. நீ எப்படியாக இருந்தாலும் என்னால் உன்னை நேசிக்க முடியும் என்பதில் தான். என் கனவுகளை நான் பின் தொடர்கிறேன், உன் கனவுகளை நோக்கி நீ ஓடு.. ஆசுவாசப்படுத்த நேரம் கிடைக்கும்போது நாம் இணைந்து மகிழலாம் என்பதில் தான் சமத்துவம் இருக்கிறது. இதையெல்லாம் பேசுவதற்கு ஒரு பெண் எந்த வயதிலும் பொருளாதாரத்தில் யாரையும் சாராமல், தனித்திருத்தல் மிக மிக அவசியம் ஆகிறது. பொருளாதாரம் மட்டுமே ஒரு பெண்ணுக்கு தன்னைப் பற்றி யோசிக்கும் வலுவைத் தரும்...

தாய்மை, பெண்மை, கண்மை என்கிற வார்த்தைகளை எல்லாம் தூக்கிக் கிடாசி விட்டு, பெண்களை அவர்களாக இருக்க அனுமதியுங்கள் தந்தைகளே, கணவர்களே, அண்ணன்களே...

’’நான் காலேஜ்ல இருந்து, ஸ்கூல்ல இருந்து வீட்டுக்குப் போகும்போது காஃபி கொடுக்க அம்மா இருக்கணும், என் ஆஃபீஸ் லஞ்ச் பாக்ஸ்ல அம்மாவோட சாம்பார் சோறு இருந்தாத்தான் செத்தா மோட்சம் கிடைக்கும்’’ என்றெல்லாம் ரொமாண்டிஸைஸ் செய்யாமல் அம்மாவிற்கு உங்களைத் தாண்டிய ஒரு வாழ்க்கை இருக்கிறது என அறிய முற்படுங்கள்...

அலுவலக வேலையாக வெளியூர் சென்றிருக்கும் உங்கள் மனைவிஅன்றைய இரவில் பத்திரமாக இருப்பாளா என்கிற பயத்தில் தூங்காமல் விழித்திருக்கும் உங்கள் செக்யூரிட்டித் தனத்தின் பெயர் காதல் அல்ல. நம்பிக்கையின்மை என்பதை உணர முற்படுங்கள்.

’’எங்கம்மா கிட்ட நான் அஞ்சு வயசு வரை பால் குடிச்சேன், நீ குழந்தைக்காக ஒருவருஷம் வேலையை விட மாட்டேன்னு சொல்றதெல்லாம் ஓவர்’’ என வெடிக்கும் முன் அவளது இந்த வேலைக்காக அவளது இருபத்தைந்து, முப்பது வருடங்களை செலவழித்திருக்கிறாள், உங்களைப் போலவே இதே வேலைக்காகத் தான் ஒரு மாநகர் நோக்கி அவள் நம்பிக்கையுடன் பயணித்தவள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எல்லா காலங்களிலும் மகள்களை தோள்களில் சுமக்க இயலாது என்பதை புரிந்து கொள்ளுங்கள் அப்பாக்களே. உங்கள் முதுகுக்குப் பின்னே அவள் மறைந்து கொள்வதில் பெருமிதம் கொள்ளாதீர்கள். சுயமரியாதையுள்ள, தைரியமான பெண்ணாக அவளை வளர்த்தெடுங்கள்.

மிக சுருக்கமாக உங்களோடு உள்ள பெண்களை நம்புங்கள். நேசியுங்கள். சமமாக நடத்துங்கள். பெண் என்பதால் அவளுக்கு அதிகப்படியான மரியாதையோ, உதவியோ தேவையில்லை என்பதை உணருங்கள். ‘’அய்யோ பாவம் அவள் பெண்”’ என்கிற கரிசனமும், இரக்கமும் கூட தேவையில்லை.. சமத்துவம் அதுவே இன்றைய தேவை. வாட்ஸஅப்ப் , ஃபேஸ்புக்கிலேயே இத்தனை நல்லவர்கள் இருக்கும் உலகில் பெண்ணுக்கு என்ன அநீதி நடந்து விடப் போகிறது?

பெண்கள் தின வாழ்த்துகள்!

வெள்ளி, 6 மார்ச், 2020

திருமதி .சுதா சின்னச்சாமி -பல்லடம் ...
சாதனா ஆடை வடிவமைப்பாளர்
Sathana Fashion Designer-Palladam
ஆள் பாதி, ஆடை பாதி என்பதெல்லாம் அந்தக் காலம். ஆடைதான் இன்று ஒருவரின் அடையாளமாகக் கருதப்படுகிறது. பெண்களின் ஆடைகள் என்றால் சொல்லத் தேவையில்லை. இழைகளே தெரியாத அளவுக்குக் கண்ணைக் கவரும் வேலைப்பாடுகள் கோலோச்சுகின்றன. திருமணம், திருவிழா, பிறந்தநாள் விழா போன்ற கொண்டாட்டங்களுக்கு ஏற்ற பிரத்யேகமான உடைகள் கிடைக்காதா என்று ஆதங்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். அவர்களின் அந்த ஆதங்கத்தையே தன் அடையாளத்துக்கான கருவியாகப் பயன்படுத்திக்கொண்டார் திருமதி .சுதா சின்னச்சாமி . இவரின் கைவண்ணத்தில் சாதாரணத் துணியும் பளபளக்கும் தோற்றத்தைப் பெற்றுவிடுகிறது.
பல்லடம் ..பா வடுகபாளையத்தை சேர்ந்த நமது சொந்தம் திருமதி சுதா சின்னசாமி , அந்தப் பகுதியின் பெயர் சொல்லும் டிசைனர். கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகள் என அனைத்து தரப்புப் பெண்களும் இவருடைய வாடிக்கையாளர்கள். இவரிடம் வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் உடையின் அளவை மட்டும் கொடுக்கின்றனர். மற்றபடி எந்த மாடல், என்ன டிசைன் என்பதையெல்லாம் திருமதி சுதா சின்னசாமி விருப்பத்துக்கே விட்டுவிடுகின்றனர். இதற்குக் காரணம், வாடிக்கையாளரின் உடல் வாகு மற்றும் அவரவர் முகத்தோற்றத்திற்கேற்ற வகையில் புதுப் புது டிசைன்களை சுதா சின்னச்சாமி அறிமுகம் செய்துவிடுவார்.திருமதி சுதா சின்னச்சாமி அவர்கள் கடந்த 15 வருடங்களாக பெண்கள் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார் ..பொள்ளாச்சி ,பல்லடம் ,பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர் ..இவர் வடிவைமைத்த பெண்கள் ஆடைகள் தமிழ்நாட்டையும் தாண்டி பிரபல துணிக்கடைகளில் விற்பனையாகி உள்ளது என்பதை அறிந்து பெரும் மகிழ்ச்சி கொள்கிறது கம்பளவிருட்சம் தொழில் குழுமம் ..
பெண் குழந்தைகளுக்கு வண்ணமயமான விதவிதமான ஆடைகள் அவ்வப்போது புதிய புதிய வடிவமைப்பில் புதிய வரவாக வந்துள்ளன.
சிறுமியருக்கு மிடுக்கான தோற்றத்தை தரும் மஸ்தானி
பண்டிகை என்றதும் குழந்தைகளுக்கு நினைவுக்கு வருவது புத்தாடைதான். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு வண்ணமயமான விதவிதமான ஆடைகள் அவ்வப்போது புதிய புதிய வடிவமைப்பில் புதிய வரவாக வந்துள்ளன. ஏராளமான புதிய மாற்றங்களும், வண்ண கலவையும் கொண்ட இந்த ஆடைகள் தீபாவளி பண்டிகைக்கு ஏற்றவாறு அதிக வேலைப்பாடும், செட்டுகள் நிறைந்தவாறு உருவாக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகைக்கு என பெண் குழந்தைகள் அணியும் ஆடை சற்று பிரம்மாண்ட தோற்றத்தை அளித்திட வேண்டும். அது மட்டுமின்றி அழகிய வடிவமைப்பு, பிரகாசமான வண்ண சேர்க்கை, லேஸ் மற்றும் எம்பிராய்டரி வேலைப்பாடு என அனைத்திலும் தனி கவனத்துடன் நேர்த்தியான நுணுக்க வேலைப்பாட்டுடன் ஆடைகள் உருவாகின்றன.
பெண் குழந்தைகளுக்கு என லெஹன்கா, அனார்கலி, சுடிதார், பிராக், பாவாடை - சட்டை, மாடர்ன் டிரஸ்ஸிங், ஜீன்ஸ் டி-ஷர்ட் என பலவிதமான ஆடைகள் உள்ளன. இவையனைத்திலும் ஆண்டுக்கு ஆண்டு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு மெருகேற்றப்பட்ட ஆடைகளாய் புதிய வடிவமைப்புகள் தரப்படும். அத்துடன் தீபாவளி ஸ்பெஷல் என்றவாறு சில ரகமும் வெளிவரும்.
தீபாவளிக்கு உகந்த பாரம்பரிய ஆடைகள் :
ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு விதமான ஆடைகள் அணிவது உண்டு. தீபாவளி என்பதில் பெரும்பாலும் பாரம்பரிய ஆடைகள்தான் அணிவது உண்டு. அதாவது முன்பு பாவாடை சட்டை. பிறகு சுடிதார், பைஜாமா, அனார்கலி போன்றவை பாரம்பரிய ஆடைகளின் வரிசையில் இணைந்தன. சுடிதார் மற்றும் சல்வார் போன்றவைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு அனார்கலி போன்றவை வந்தன. தற்போது மஸ்தானி, சல்வார் நீட்ஸ், லெஹன்கா சோளி, பாட்டியாலா சூட்ஸ், ரிவர்சுபின் ஜாக்கெட் போன்றவை வந்துள்ளன.
புதிய நெட் லெஹன்கா சோளி ஆடைகள் :
பெண்களின் ஆடைகள் அதிக பளபளப்பும், பிரகாசமான வண்ணத்திலும் இருக்கும். லெஹன்கா ஆடைகளின் பாவாடை மற்றும் மேல் சோளி சட்டையும் அதற்கேற்ற துப்பட்டாவும் உள்ளன. இதில் பாவாடை அமைப்பு அதிக பிரகாசமான வண்ணத்துடன் நெட் துணிவகையில் தங்க சரிகை வேலைப்பாடு முழுமையாகவும், கீழ்புறம் அகலமான லேஸ் பார்டர் (அ) சரிகை பார்டர் கொண்டவாறு உள்ளது. இதற்கேற்ற மேல் சட்டை அமைப்பு இடுப்பு பகுதி வரை நீண்டவாறு கீழ்பகுதியில் பார்டர் உள்ளவாறு உள்ளது.
லெஹன்கா சோளி செட்டில் கூடுதலாக நெட் துணியிலான மெல்லிய கோட் அமைப்பு கொண்ட மாடல்களும் வருகின்றன. இதிலேயே சில வகைகள் இரட்டை பாவாடை அமைப்பு கொண்ட முழு ஆடை அமைப்பாய் உள்ளது. இதில் கீழ் வரை பெரிய பாவாடை மற்றும் மேல் சற்று உயர்ந்த குட்டை பாவாடை மேல்புறமாய் உள்ளவாறு உள்ளது. மேல் சட்டை முழுவதும் எம்பிராய்டரி செய்யப்பட்டு அழகுடன் விளங்குகிறது.
புதிய வரவான மஸ்தானி :
திரைக்கு வந்த ஒரு பாலிவுட் படத்தில் தீபிகா படுகோன் அணிந்திருந்த ஆடைதான் தற்போது மஸ்தானி என்றவாறு தீபாவளி புதிய வரவாக வந்துள்ளது. இது லெஹன்கா போன்றதும் அல்ல, சோளி அமைப்பும் அல்ல. இரண்டிலும் சற்று மாறுப்பட்ட ஆடை அமைப்பு. அதாவது மேல் சட்டை அமைப்பு கால் பகுதி வரை நீண்டவாறு உள்ளது. இதன் நடுவே ஸ்ட்ரெயிட் கட் உள்ளது. இதற்கு இணையாக கீழ் பகுதி பாவாடை அமைப்பு உள்ளது. அழகிய வேலைப்பாடு மற்றும் எம்பிராய்டரி செய்ய கோட் அமைப்பும், ஸ்லீவ்லெஸ்-யும் கச்சிதமான தோற்றத்துடன் உள்ளன. மஸ்தானி ஆடை பெண் குழந்தைகளுக்கு மிடுக்கான தோற்றத்தையும், பிரம்மாண்ட அமைப்பையும் தரவல்லதாக உள்ளது.
நமது சொந்தம் திருமதி சுதா சின்னச்சாமி அவர்கள் ,சின்னச்சாமி அவர்களுக்கு தன் குடும்பத்தின் சுமைகளை பெரும் பொறுப்புகளை பொறுப்புடன் இரண்டு குழந்தைச்செல்வங்களையும் பேணிக்காத்து ..தங்களின் வளரச்சி யே சமுதாயவளர்ச்சி என்று கம்பள பெண் தொழில் முனைவோர் முதன்மையாகயாகவும் நம் கம்பள பெண்குழந்தைச்செல்வங்கங்ளுக்கு வழிகாட்டியாக உள்ளது மிக்க மகிழ்ச்சி ..நமது கம்பள விருட்சம் தொழில்சார்பு குழுமம் ..அவர்களுக்கு வியாபார வளர்ச்சிக்கு தகந்த வங்கி கடன் உதவி ஆலோசானைகள் வழங்கும் .நமது கம்பள விருட்சம் தொழில் குழுமத்தில் அவரின் பங்களுப்பும் உள்ளது ..அவரின் ஆலோசேனைகள் கம்பளவிருட்சம் தொழில்சார்பு குழுமத்திற்கு நமது பெரும் உதவியாக உள்ளது நன்றி..விருச்சத்தின் விதைகள் ..இனி ஆலமரமாக தன் விழுதுகளை கிளைபரப்பும் ..
இங்ஙனம்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
கம்பள விருட்சம் தொழில்சார் குழுமம்
உடுமலைப்பேட்டை .
www.kambalavirucham.in
கீர்த்திவீரர் எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு
🥰🥰மகளிர் தினம்....மார்ச் 8...2020...🥰🥰

நம் கம்பள சமுதாயத்தில் பெண்கள் ...🌷🌷🌷🌷🌷

மகளிர் தினம்🌱🌱🌳🌳🥰
அதிகாலை எழுந்து
வீட்டு வேலைகளை முடித்து
பிள்ளைகளையும் கணவரையும்
கவனித்து அனுப்பி
மாமியாருக்கும் மாமனாருக்கும்
சமைத்து வைத்து
அலுவலகம் சென்று
நாள் முழுவதும்
உழைத்து களைத்து
வீடு திரும்பியதும்
மாமியாரின் குத்தல் பேச்சுகளுக்கு
மறுமொழி கூறாமல் மௌனித்து
மாமனாரின் அதிகாரங்களுக்கு
அடிபணிந்து அடங்கி
கணவரிடம் வேண்டி கெஞ்சி
அனுமதி பெற்று
சமைத்து முடித்து கிளம்பி போகிறாள்
மகளிர் தின பட்டிமன்றத்தில்
மேடை ஏறி பெண் விடுதலை
பற்றி முழக்கமிட .........

நம் கம்பள சமுதாயத்தில் பெண்கள் ...

திருமதி  .சிவரஞ்சனி சரவணகுமார் -வழக்கறிஞர் -கோவை

கல்வியில் முதுகலை மற்றும் வழக்கறிஞர் படிப்பு ..நம் சமுதாயத்தின் வளரும் வழக்கறிஞர் ..இவரிடம் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி வளர்ந்து வருபவர் ..தன் தந்தையின் கனவை நிறைவேற்றியவர் ..கனவு நிறைவேறும்போது ..அருகில் தந்தை இல்லை ..அவரின் ஆத்ம ,ஆசியும் எப்பொழுதும் உண்டு ..கம்பள விருட்சத்தின் முதல் உறுப்பினர் ...செயல் துணைத்தலைவர் ..பொறுப்பாக தன பணியை செவ்வனே செய்து வருபவர் .இவரின் அரசியல் குரு ..வைகோ அவர்கள் ..ம தி மு கா ..கோவை வழக்கறிஞர் பெண்கள் அணியில் முக்கிய பொறுப்பில் உள்ளது எங்களுக்கு பெருமையே..

திருமதி .சுமதி மோகன் குமார் -கடவூர் இளவரசி
கல்வியில் ..முதுகலை பட்டம் பெற்றவர் ..நமது சமுதாயத்தின் கலாச்சாரம் ,பண்பாடு ,கல்வி ,தொழில் முன்னேற்ற கருத்துக்கள் ..வாழக்கையில் வளர்வதற்கான சிந்தனைகள் ,ஆலோசனைகள் ,வழங்கி நம் சமுதாய மக்களுக்கு வழிகாட்டியாக உள்ளார் ...கம்பள விருட்சம் அறக்கட்டளையில் உறுப்பினர் ,கௌரவ ஆலோசகராக உள்ளார் . ..இவரின் இன்னும் வரலாற்று சிறப்பு மிக்க தகவல்களுடன் சில தினங்களில் பகிர்கிறேன் .

திருமதி .நீலவேணி ரமேஷ் -பேராசிரியர் -உடுமலை
கல்வியில் முதுகலை பட்டம் பெற்றவர் ..இவர் GVG பெண்கள் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார் ..இவர் கம்பள சமுதாய தளத்தில் அதிகம் வருவதில்லை..கல்லூரி சேருவதற்கு செல்லும்பொழுது அங்கு சேருவதற்கான தன்னாலான உதவிகள் செய்து தருவார் ..கல்வி சம்பந்தமான மேற்படிப்பு தகவல்களை தந்து நம் சமுதாய மக்களுக்கு உதவிகள் செய்து தருவார் ..

திருமதி .சத்யா ஷியாம் சுதிர் ...-தனியார் துறை -கோவை
கல்வியில் ..முதுகலை பட்டம் பெற்றவர் ..நல்ல திறமைசாலியான ,தைரியம் மிக்க பெண்மணி ...கடந்தகாலங்களில் திருமணத்திற்கு பின் ...பெண் தொழில்முனைவோராக இருந்தவர் ..இமயமலை அளவுக்கு வாழ்க்கையில் உயர்நதவர் .. தனியார் நிறுவனத்தில் தற்பொழுது பணிபுரிந்து வருகிறார் ..இவரிடம் தையரியத்தையும் ,விடாமுயற்சியும் கற்று கொள்ளலாம் .

திருமதி .காயத்திரி செந்தில்குமார் -விவசாயம் -அடிவள்ளி

கல்வியில் முதுகலை பட்டம் பெற்றவர் ..பட்டப்படிப்பு பெற்றதும் பணிக்கு செல்லாமல் ..விவசாயம் என் உயிர் மூச்சு ..என்று தற்பொழுது புது புது விவசாய தொழில்நுணுக்கங்களை கற்று ..விவசாயத்தில் பசுமை புரட்சியை செய்துகொண்டுள்ளார் ...தற்காலத்தில் விவசாயத்தை மறக்கும் சூழ்நிலையில் தன் கடுமையான உழைப்பின் மூலம் வளர்ந்து வருவது எங்களுக்கு பெருமை ..இவரும் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் புது உறுப்பினர் ..

திருமதி .செல்வி விஜயகுமார் -தொழிலதிபர் (ஜெய்வந்த் ஏஜென்சிஸ் )-உடுமலை

கல்வியில் இளநிலை பட்டம் பெற்றவர் ..இவர் சமையல் எரிவாயு நிறுவன முகவர் உடுமலைப் பகுதியில் சமையல் எரிவாயு வினியாகஸ்தர் ..தன் கடுமையான உழைப்பின் மூலம் தன் கணவருடன் சேர்ந்து வளர்ந்து வரும் பெண்தொழில்முனைவோர் ..இவரிடம் சுறுசுறுப்பும் ,விடாமுயற்சியையும் கற்று கொள்ளலாம் ..

தங்கபெண்மணி திருமதி .செல்வராணி செந்தில்குமார் -Cluster facilitater (தொகுப்பு வழி நடத்துனர் )-உடுமலை ஜிலேபி நாயக்கன் பாளையம் ..
தேனீ என்றவுடன் நம் நினைவுக்கு வருவது சுறுசுறுப்பு ...வீரம் விளைந்த மண் ...வீரம் மிகுந்து ஊரின் அருகில் இருக்கும் தம்மநாயக்கன்பட்டி யில் இருந்து ..ஜில்லேப்பா நாயக்கன்பாளையம் ஊருக்கு மருமகளாக வந்து நம் கம்பளசமுதாயத்தில் எரிசனம்பட்டியில் சொந்தமாக தையல் கூடம் அமைத்து ..பயற்சி அளித்துக்கொண்டு சிறந்த சிறு பெண் தொழில் முனைவோராகம் ,அரசு ஊரக வளர்ச்சி துரையின் கீழ் இயங்கும்குழுவில் நம் ராஜகம்பள சமுதாயத்தில் ஒரு தங்கபெண்மணி திருமதி .செல்வராணி செந்தில்குமார் - Cluster facilitater (தொகுப்பு வழி நடத்துனர் ) அவர்களை சந்தித்தேன் ..நம்ம மாப்பிளை கார்த்தி SR அறிமுகம் செய்துவைத்தார் ..நம் சமுதாயத்தில் ஆரவாரம் இன்றி அமைதியாக .இத்துறையில் எரிசனம்பட்டியில் சுற்றி இருக்கும் பொது மக்களுக்கு இத்துறையை கொண்டு சேவை செய்து வருகிறார்..கம்பள விருட்சத்தின் உறுப்பினர் ..நம் சமுதாய சொந்தங்களுக்கு தொழில் முனைவு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார் ..

திருமதி .கார்த்திகேயனி முருகராஜ் -தொழில்முனைவோர் -பொம்மு xerox .வழக்கறிஞர் அலுவுலகம் -திருப்பூர்

தன் குழந்தைகளுக்கு ஒரு முன்னேற ஒரு முன்னோடியாக வழிகாட்டியாக இருப்பது ..இப்போது இருக்கும் காலகட்டத்தில் ...சமுதாயத்தில் ..பெரியவர்களை மதிப்பதும் ..நண்பர்களின் சிறந்த நட்புகளை பெறுவதும் ..வாழ்வியலுக்கு சரியான புரிதல்கள் இருக்கும் ..அதனால் தான் ..தன் குழந்தைச்செல்வங்கள் ..கார்த்திகேயனி முருகராஜ் அவர்கள் ,தன் ..அலுவுலகம் ..வீட்டுப்பொறுப்புகள் கவனித்து கொள்கிறார் ,ஒரு மகள் பல் மருத்துவர் ,இரண்டாவது மகள் பள்ளிப்படிப்பு முடித்து தன் தொழில் வாரிசாக வழக்கறிஞர் தொழில் படிப்பு ,தன தங்கையின் மகள் .என்ஜினீயர் ..கல்வி தகுதியின் மூலம் ..நம் கம்பள சமுதாயத்தில் ஒரு முன்னோடியாக வலம் வரமுடிகிறது ...நம் பெற்றோர்கள் ,முப்பாட்டன்கள் எல்லோரும் கூலி வேலை செய்து ..கல்வி என்ற சொத்தை கற்றுக்கொடுத்து ,தான் சேர்க்கும் சொத்து கூட ஒரு கட்டத்தில் அழிந்து போகலாம் ..கல்வி எந்த சூழ்நிலையிலும் தான் இருக்கும் வரை அழிக்க முடியாது .. ..வாழ்க்கையை கற்றுக்கொடுக்கிறார்கள் .. இந்த புகைப்படத்தை பார்க்கும் போது ..நம் சமுதாயத்தில் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது ..கம்பள விருட்சத்தின் புது உறுப்பினர் ..

ஜெகதீஸ்வரி ஜோதிமுத்து அவர்கள் சிறு அறிமுகம்
Lic Agent & Central Bank Villege Service Centre Incharge at மைவாடி(Myvaadi )

நம் கம்பள சமுதாயத்தில் ஜெகதீஸ்வரி அவர்கள் 1993 ஆண்டின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 446/500 மதிப்பெண் பெற்ற மாணவி... அதிகபட்சமானது அப்பொழுது. இவர் கல்வியினால் இப்பொழுதும் ...தன் சுற்றியிருக்கும் கிராம மக்களுக்கு பொதுநலப்பணிகளையும் ...நம் சொந்தங்களுக்கும் ...தற்பொழுது கம்பள விருட்சத்தின் ஆலோசனை குழுவில் வழிகாட்டியாக உள்ளார் என்பது கூடுதல் செய்தி ...

திருமதி கோமதி மணி -முன்னாள் கிராம பஞ்சாயத்து ஆலோசகர்-உடுமலைப்பேட்டை -பெரியகோட்டை
இவர் பள்ளி படிப்பு ..பெரியகோட்டை கிராம பஞ்சாயத்து வார்டு ஆலசோகராக பணிபுரிந்து உள்ளார் ..இவரின் பணிகள் நல்ல திட்டங்கள் மூலம் அந்த கிராமங்களுக்கு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளார் .

திருமதி ஆண்டாள் சந்திரன் -பஞ்சாயத்து போர்டு தலைவர் -ஜிலேபி நாயக்கன்பாளையம் -

கல்வி பள்ளிப்படிப்பு ...இவரின் பணிகள் நம் சமுதாயம் அதிகம் உள்ள மக்கள் கொண்ட jn பாளையத்தில் ..வளர்ச்சிக்கு உறுதுணையாக பணியாற்றி உள்ளார் ..
திருமதி .சுசிலா -முன்னாள் கிராம பஞ்சாயத்து ஆலோசகர்-உடுமலைப்பேட்டை -பெரியகோட்டை
கல்வி பள்ளிப்படிப்பு ..இவர் பெரியகோட்டை கிராம மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளார் ..இவர் தனியார் பஞ்சாலை நிறுவனத்தில் பணி செய்துகொண்டு ..தங்கள் ஊரில் இருக்கும் பொது மக்களுக்கும் ,நம் சொந்தங்களுக்கும் தனியார் வங்கிகளில் சுய உதவி குழுக்கள் நிதியை பெற்று இன்றைய காலகட்டத்துக்கு பொருளாதார நிதி உதவி செய்துகொண்டுள்ளார்.இவர் கம்பள சமுதாயத்தில் வரன் தேடுபவர்களுக்கு .வர பிரசாதமாக நல்ல படித்த ,படிக்காத இளைய சொந்தங்களுக்கு திருமண ஜாதகம் பெற்று பரிமாறி கொண்டு இன்று முடிய நல்ல நிலையில் வாழ்க்கையை அமைத்து கொடுத்துள்ளார். இவரின் கம்பள சமுதாய பணி ஈடுஇல்லாதது ....

திருமதி  .பிரேமலதா செல்வகுமார்  -தனியார் துறை -உடுமலை பாப்பனுத்து

கல்வியில் இளநிலை பட்டம் பெற்றவர் ..இவர் நமது கீர்த்திவீரர் வீரர் எதுலப்பர் வாட்ஸாப்ப் குழு ஆரம்பித்து நம் சமுதாய சொந்தங்களை ஒருங்கிணைக்க மதிப்பு மிக்க பகிரளி மூலம் உலகம் முழுவதும் உள்ள கம்பள சொந்தங்களை இணைத்து இன்று பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கும் குழுவிற்கு இவரின் சரியான படைப்பாற்றல் ,யோசனை வெகு அருமை ..யாரும் சிந்திக்காத சிந்தனையை உருவாக்கி கம்பள செய்திகளை பரிமாறி கொண்டிருப்பதற்கு இவரின் மதிப்புமிக்க யோசனை என்றும் மறவாது ..
திருமதி  .மகாலக்ஷ்மி -தனியார் துறை -உடுமலைப்பேட்டை -கரப்பாடி
கல்வியில் இளநிலை பட்டம் பெற்றவர் ..தற்பொழுது தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் ..நம் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் முதல் உறுப்பினர் ஆரம்பித்தது முதல் இன்று வரை நம் அறக்கட்டளையின் செயல்களுக்கு பக்க பலமாக இருந்து பணிபுரிந்து வருகிறார்

நம் கம்பள சமுதாய பெண் தெய்வங்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்

நாளையும் தொடரும் ...உங்களின் சிவக்குமார் ...உடுமலைப்பேட்டையிலிருந்து ....9944066681...வாட்ஸாப்ப் எண் ...👍🌷🌷🌷🌷🌷

வியாழன், 5 மார்ச், 2020

செல்வராகவனின் யாமினி!
செல்வராகவன் உருவாக்கிய கதாநாயகிகளில் 'யாமினி' தனித்துவமானவள். "அடிடா அவளை! வெட்றா அவளை! தேவையே இல்லை !"என்கிற பெண் வெறுப்பு மட்டுமே செல்வராகவன் இல்லை. மயக்கம் என்ன ? யாமினியை கூர்ந்து கவனித்தால், கார்த்திக்கையும் அவன் மீதான காதலையும் தவிர வேறு எதுவும் தெரியாது பராபரமேயென்று தீக்குள் விரல் வைப்பவள்.
எனக்கு வேற எதுவுமே தெரியாது என்று தன்னைச் சரணடைபவனை அவன் இயல்புகள் சீர்குலையாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் யாமினி ஒரு ஆழ்ந்த காதலின் அடையாளம். தான் நேசித்தவன் வாழ்வின் விரக்தியான சூழலுக்கு தள்ளப்பட்டு, போதைக்கும் மனபிறழ்விற்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கும் போது அவனைத் தாங்கிக்கொள்வதற்கு காதலை தாண்டிய ஒரு தாயுள்ளம் தேவை.மெளனங்களால் வெளிப்படுத்தப்படும் கோவங்கள் காதலிப்பவன் மீதிருக்கும் இன்னொரு நேசமென்று யாமினி உணர்த்தும் காதல் 'அக்மார்க்' செல்வராகவத்தனம்.

கார்த்திக் போன்ற இளைஞர்கள் லட்சியத்தில் தோல்வியுற்று தெருவிற்கு நாலுபேர் குப்புற கவிழ்ந்து கிடக்கிறார்கள். சமூகத்தில் கார்த்திக் போன்றவர்களுக்கு பஞ்சமே இல்லை. ஆனால், அவர்களை தொட்டு தூக்கி தலையை தடவிக்கொடுத்து மடியில் போட்டு மருத்துவம் பார்க்கும் யாமினி போன்றோர் அத்தி பூத்தாற் போல் அபூர்வமாகத்தான் தென்படுகிறார்கள். ஒரு தோல்விக்கே துவண்டு, காதலித்தவள் மீது ப்ரியத்தை காட்டுவதற்கு கூட மனமில்லாமல், காதலிக்கு யாருமற்ற தனிமை உலகத்தை உருவாக்கும் கார்த்திக் மன்னிக்க முடியாதவன். அவனை எத்தருணத்திலும் கைவிடாத யாமினி தான் சிறப்புமிக்கவளாக உருவாகிறாள்! இறுதியாக ஒரு ஆண் வாழ்க்கையில் முதலாவதாக நுழைந்து முதலாவதாக வெளியேறுபவள் எவளும் யாமினி இல்லை. இறுதியாக நுழைந்து இறுதிவரையில் இருப்பவளே செல்வராகவனின் யாமினி.
என் யாமினியும் கூட..!

https://youtu.be/dX3G18CYibc

சேவையாட்டம்


சேவையாட்டம் - கம்பளத்துநாயக்கரால் ஆடப்படும் ஆட்டம் சேவையாட்டம் ஆகும்.சேவை என்றால் சேவித்தல், வணங்குதல் என்று பொருள்படும்.இறைவனை ஆட்டத்தின் மூலமாக வணங்குவதால் இது சேவையாட்டம்எனப்பட்டது. இராமாயணக் கதையைப் பாடலாகப் பாடிக்கொண்டுவிடியவிடிய இவ்ஆட்டம் ஆடப்படும். தேவதுந்தமி, சேவைப் பலகை,சேமக்கலம் ஆகிய இசைக்கருவிகள் ஆட்டத்தின் போதுபயன்படுத்தப் படும். சேவையாட்டக் கோமாளி பாடலைப்பாடி ஆட்டத்தைத் தொடங்க, ஏனைய ஆட்டக்காரர்கள் பின்பாட்டுப்பாடிவட்டமாக ஆடி வருவர். திருமால், பெருமாள், ரெங்கநாதர்ஆகிய தெய்வங்களின் வழிபாட்டில் சேவையாட்டம் தவறாது இடம்பெறுகிறது.
பெருமாள் கோவில்
தென் தமிழகம் மற்றும் கொங்கு நாடு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் இவ்வாட்டம் நடைபெறும் . சங்ககால நூல்களில் குறிப்பிடும் பிந்தேறு குருவை எனப்படும் ஆட்டதுக்கு சமமானதாக கருதபடுகிறது . தேவராட்டம் ஆடும் மக்கள் கடைசியாக இந்த சேவையாட்டம் ஆடுவார்கள் .இந்த ஆட்டத்தை ஆடுவதன் மூலம் தேவராட்டம் முழுமை பெறுகிறது என்பதை அறியலாம் .
வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயில்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இக்கோவிலில் உள்ள இக்கோவிலில் நடைபெறும் சேவையாட்டம் புகழ் பெற்றது . தெலுங்கு மொழியில் , தமிழ் மொழியில் பாட்டுகளை பாடி கொண்டு ஒருவர் இருப்பார் , உறுமி மேளம் இசைக்கும் , ராகத்தோடு பாடல் பாடும் பொழுது நையாண்டி வேஷம் போட்ட ஒருவர் சுற்றி சுற்றி வந்து ஆடுவார் . ராஜகம்பளம் மக்கள் நடத்தும் சடங்கு , திருவிழா , திருமணம் போன்ற நிகழ்சிகளில் தவறாமல் இவ்வாட்டம் நடைபெறும் . வீரபாண்டிய கட்டபொம்மன் குரு பூஜையில் சேவையாட்டம், தேவராட்டம் முக்கிய நிகழ்வாக ஆடபடுகிறது


திண்டுக்கல் பகுதியில் கம்பளத்து நாயக்கர்களின் பழமை மாறாத நாட்டுப்புற கலையாக "சேவையாட்டம்' உள்ளது. மண்ணின் மரபையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்துவது நாட்டுப்புற கலைகள். இவை பொழுதுபோக்கு, சடங்கியல் நிகழ்வாக ஆடப்படுகின்றன. இவற்றை சிலர் தொழில்முறை ஆட்டமாக ஆடி வருகின்றனர். இந்த வகை ஆட்டங்களுக்கு குறிப்பிட்ட களமோ, அரங்கமோ தேவையில்லை. எந்த இடத்திலும், சூழ்நிலையிலும் சுதந்திரமாக ஆட முடியும். இதில் கம்பளத்து நாயக்கர்கள் தங்களது இனத்திற்கே உரிய "சேவையாட்டம்' ஆடுகின்றனர். இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் கோலார்பட்டி, விருதலைப்பட்டி, கொம்பேரிபட்டி, கெஜ்ஜிலியம்பட்டி, புது எட்டமநாயக்கன்பட்டி, விராலிப்பட்டி, புதுப்பட்டி, பாபிநாயக்கன்பட்டி பகுதிகளில் வசிக்கின்றனர். சேவையாட்டத்தை கோயில் திருவிழாக்களில் ஆடுகின்றனர். இந்த ஆட்டத்திற்காக அவர்கள் விரதமிருக்கின்றனர். கோமாளி போல் வேடமணிந்த ஒருவரும், அவருடன் 7 பேரும் சேர்ந்து ஆடுவர். ஏழு பேரும் இடுப்புக்கு கீழே வண்ணப் பாவாடையும், மேல்பகுதியில் சட்டையும் அணிவர். தலையில் ஜரிகைபோட்ட "உருமா' கட்டுகின்றனர். புல்லாங்குழல், சேவைத்தப்பு, ஜெயகண்டி ஆகிய இசைக்கருவிகளை பயன்படுத்துகின்றனர். இந்த இசைக்கருவிகள் இசைத்து கொண்டே கலைஞர்கள் வட்டமாகவும், சுழன்றும் ஆடுகின்றனர். துவக்கத்தில் சிறிது நேரம் உருமி "தேவதுந்துமி' இசைக்கு ஏற்ப ஆட்டம் ஆடுகின்றனர். இசைக்கருவிகளின் இசைப்பும், அதற்கேற்ற ஆட்டங்களும் காண்போரை தன்வயப்படுத்துகிறது. இந்த சேவையாட்டம் பழமைமாறாத நாட்டுப்புற கலையாக இன்றும் திகழ்கிறது.வேடசந்தூர் பாபிநாயக்கன்பட்டி பொம்மணசாமி கூறியதாவது: சேவையாட்டம் ஆடும்போது முதலில் நேர் கோட்டில் நிற்போம். சிறிது நேரத்தில் வட்ட வடிவத்திற்கு மாறி ஆடுவோம். கோமாளி வேடமிட்டு ஆடுபவரை கிருஷ்ணராக மதித்து மக்கள் வழிபடுவர். அவரே பாடல்களை பாடி ஒவ்வொரு ஆட்டத்தையும் துவங்கி வைப்பார். ஏனைய ஆட்டக்காரர்கள் அதனையே பின்பாட்டாக பாடுவர். ராமாயண பாடல்களை அதிகளவில் பாடுவோம். வழிபாட்டின்போது இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வோம், என்றார்.

புதன், 4 மார்ச், 2020

வேலை தேடும்போது வாழ்க்கையினைப் பற்றி நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்கள் எவை?


மலரும் நினைவுகள் ...1996.....கோவை ....

கற்றுக் கொண்ட விஷயமுனு சொல்ல முடியாது. அவமானம் பட்டதுனு சொல்லாம் நானும் என் நண்பனும் வேலை தேடி கோயம்புத்தூர் சென்றோம் ஒரு நான்கு ஐந்து கம்பெனிகள் சென்று வேலையில்லாம சோர்ந்து போய் மதிய உணவை பணம் குறைவா இருந்த காரணத்தால் ஒரு தள்ளுவண்டி கடையில் சாப்பிட்டு விட்டு ஊர்க்கு செல்வோம் என்று காந்தி புரம் பஸ்டேண்டுக்கு சென்றோம் செல்லும் வழியில் சில பேர் நோட்டீஸ் கொடுத்து கொண்டு இருந்தார்கள் அதை வாங்கி படித்த போது வேலைவாய்ப்பு என்று போடப்பட்டு இருந்தது அதில் இருந்த நம்பர் க்கு கால் செய்தோம் அதில் பேசிய நபர் எங்களை கிராஸ் கட் ரோடு 3 வது வீதிக்கு வர சொன்னார் நாங்கள் இருவரும் சென்றோம்

அந்த ஆபீஸ் ஒரு மாடியில் இருந்தது உள்ளே சென்ற போது ஏரளாமன பெண்கள் இருந்தனர் . அங்கே இருந்த பெண் ஒருவர் எங்க ளை அமர வைத்து பேச தொடங்கினார் . அப்போது தான் என்ன வேலை என்று கேட்டேன் அதற்கு அந்த பெண் டெலி காலிங் என்று சொன்னார் .இதில் எப்படி பேசுவது என்பதற்கு உங்களுக்கு பயிற்சி தருவோம் அதற்கு நீங்கள் கட்டணமாக 2000ரூ கட்ட வேண்டும் வேண்டும் என்று அந்த பெண் சொன்னார் உடனே நாங்கள் சுதாரித்து கொண்டோம் இது ஒரு பிராடு கம்பெனி என்று .

எங்க கிட்ட அந்த அளவுக்கு பணம் இல்லைனு சொன்னோம் அதற்கு அந்த பெண் பரவாயில்லை 500 ரூ இருந்தா கூட கட்டி முன்பதிவு செய்ங்க அந்த பெண் சொன்னார் . எங்க கிட்ட பஸ்க்கு மட்டுமே பணம் இருக்குனு சொன்னோம். கடைசிக்கு ஒரு 100ரூ குடுங்கன்னு சொன்னார்.எங்க கிட்ட பஸ் காச தவிர வேறு எதுவும் இல்லைனு சொன்னதும் நீங்களாம் எதுக்கு டா 100 ரூ கூட இல்லாம வெளிய வரிங்கனு அந்த பொண்ணு எல்லாரும் முன்னாடியும் மரியாதை இல்லாம பேச ஆரம்பிச்சிடுச்சு உங்க கிட்ட இவ்வளோ நேரம் பேசினதே வேஸ்ட் வெளிய போங்கடனு சொல்லி வெளிய அனுப்பிருச்சு. எங்களுக்கு ஒரே அசிங்கமா இருந்துச்சு வெளியே வந்துட்டோம்


அப்போதுதான் புரிஞ்சுது பணம் சம்பாதிக்கவும் பணம் தேவை னு....


2020.......இன்று ...கோவை ..திருப்பூர் ...மாவட்ட ..பல நண்பர்களுக்கே ....வேலை வாய்ப்பு  வழங்கி வழிகாட்டியாக  .. உள்ளோம் ...

திங்கள், 2 மார்ச், 2020

இளையராஜாவும் அல்லாமல் ரகுமானும் அல்லாமல் இருவருக்குமிடையே எவரது சாயலுமின்றி இடைமீட்டரில் ஒரு குட்டி இசை சாம்ராஜ்யாத்தை நிகழ்த்தியவர் வித்யாசாகர்.
இவரது இசையால் மட்டுமே எனக்கு அர்ஜூன் நடித்த படங்களின் மீது அட்டென்ஷன் திரும்பிற்று. கிட்டத்தட்ட அர்ஜூன் தயாரித்த இயக்கிய நடித்த அனைத்துப்படங்களுக்கும் வித்யாசாகர்தான் இசையென்று நினைக்கிறேன்.
தொன்னூறுகளில் விஜய் அஜீத்தில் ஆரம்பித்து நடிக்கவந்த பல விடலை ஹீரோக்கள் வித்யாசாகருக்கு அவர்களது வளர்ச்சிக்கு அவர் இயம்பிய இசைக்கு இப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள். மறந்துபோய் இருக்கலாம்.
ஒரு கட்டத்தில் தன் படத்திற்கு ராஜா ரகுமான் தேவா தவிர யாருக்கும் அசங்காத ரஜினி சந்திரமுகியில் வித்யாசாகருக்காக அசங்கினார்.
ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்...
பனிக்காற்றே பனிக்காற்றே...
பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது..
நீ காற்று நான் மரம்..
பூங்காற்று வீசும்.. பொன்மாலை நேரம்..
ஒரே மணம் ஒரே குணம்..
பூவாசம் புறப்படும் பெண்ணே..
காற்றின் மொழி..
கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரம்..
ஆராரோ ஆரிரரோ.. அம்புலிக்கு நேர் இவரோ..
and of course.. மலரே மௌனமா..
இதெல்லாம் 'யாரு சாமி இவரு..!! என் மனசுக்கு புடிச்சமாறியே ட்யூன் போடறார்' என்று வியந்து கேட்ட பாடல்கள். இன்ஃபேக்ட்... இவர் பாடல்களில் சிலவற்றுக்கு ட்யூன்களை ஏதோ நானோ மனதில் போட்டமாதிரியும் அவற்றை இவர் எனக்கே தெரியாமல் எடுத்தாண்டது மாதிரியும் எனக்குத் தோன்றும். ஒவ்வொரு பாடலிலும் ஏதாவதொரு wow factorஐ வைத்திருப்பார்.
மற்றதையெல்லாம் கூட விடுங்கள். 'யார் யார் சிவம்.. நீ நான் சிவம்' ஒன்றே ஒன்று போதும் வித்யாசாகரை ஜென்மத்திற்கும் நினைவில் கொள்ள. அந்தப்பாட்டில் அவர் ஏதோ உயிரின் ஓசையையே கேப்ச்சர் செய்து கம்போஸ் செய்ததைப்போல தோன்றுமெனக்கு. உலக அமைதி நிறுவனம் என்று ஏதாவது இருக்குமானால் அதற்கு இந்தப்பாடலை Anthemஆகவே வைக்கலாம்
மேற்சொன்ன பாடல்கள் சாம்பிள்கள்தான். ஏகப்பட்ட பாடல்கள், தீம் ம்யூஸிக், பின்னனி இசையென்று ஒரு ரவுண்டு வந்த வித்யாசாகர் என்னைப் பொருத்தவரையில் ஒரு பெரிய மெலடி டாக்டர்.
தமிழ் சினிமாவில் வித்யாசாகரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இருக்குமிடம் தெரியாமல் இருந்துகொண்டு பொலைட்டாக இசைப்புரட்சி செய்தவருக்கு வாழ்த்தும் அன்பும்
. 'யார் யார் சிவம்.. நீ நான் சிவம்' ஒன்றே ஒன்று போதும் வித்யாசாகரை ஜென்மத்திற்கும் நினைவில் கொள்ள. அந்தப்பாட்டில் அவர் ஏதோ உயிரின் ஓசையையே கேப்ச்சர் செய்து கம்போஸ் செய்ததைப்போல தோன்றுமெனக்கு. உலக அமைதி நிறுவனம் என்று ஏதாவது இருக்குமானால் அதற்கு இந்தப்பாடலை Anthemஆகவே வைக்கலாம்
https://youtu.be/v5UoMnhowMM





ஞாயிறு, 1 மார்ச், 2020

நாளை பிளஸ் 2 தேர்வு துவக்கம்; ஜெயித்து காட்டுங்கள் மாணவர்களே..


💐தமிழகம் முழுவதும், நாளை (மார்ச், 2), பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு துவங்குகிறது.

 💐தமிழகத்தில் மொத்தம் 8 லட்சத்து, ஆயிரத்து 401 மாணவர்கள் பொதுத்தேர்வினை எழுதுகின்றனர்.


💐மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பிளஸ் 2 தேர்வுகளை இந்த ஆண்டு மாணவர்கள் எழுதுகின்றனர்.

 💐அதன்படி, மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது.

 தேர்வுகள் காலை 10 மணிக்கு துவங்கி பிற்பகல் 1.15 வரை நடைபெறும்.


💐வினாத்தாளை வாசிக்க கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

 💐நாளை துவங்கி, மார்ச் 24ம் தேதி தேர்வுகள் முடிவடையும். ஏப்ரல் 24-ம் தேதி ரிசல்ட் வெளியாகும்.

💐இதில் அதிக மதிப்பெண் பெறுபவர்கள் உயர்படிப்புக்கு செல்ல முடியும்.



👍🏻தேர்வு எழுதும் மாணவர்களுக்கு...


💐தேர்வுக்கு முதல் நாள் நள்ளிரவு வரை படிக்க வேண்டாம்.

 💐அதிகாலையில் எழுந்து படியுங்கள். அப்போது தான் பாடம் மனதில் பதியும்.


💐இதுவரை படிக்காத பாடங்களை படித்து, நேரத்தை வீணாக்க வேண்டாம்.


💐உடல்நிலையை நன்றாகக் கவனித்து கொள்ளுங்கள். தேவையற்ற பிரச்னைகளை சிந்திக்க வேண்டாம்.


💐அரைமணி நேரத்திற்கு முன் தேர்வு மையத்திற்கு சென்றுவிடுங்கள்.


💐தேர்வுக்கு தேவையான பொருட்கள், ஹால் டிக்கெட்டை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.


 💐ஏற்கனவே பயன்படுத்திய பேனாவை எடுத்து செல்லுங்கள்.


💐நன்கு தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடை எழுதுங்கள்.


💐ஆசிரியர், பெற்றோர் கூறிய அறிவுரைகளை மனதில் நினைத்து தேர்வு எழுதுங்கள்.


💐தேர்வு எழுதும் போது பதட்டம் வேண்டாம்


💐எழுதி முடிந்த பின் பிழை உள்ளதா, கேள்வி எண்ணை சரியாக எழுதி உள்ளீர்களா என பாருங்கள்.


வெற்றி உங்கள் வசமாகும்.💐 ...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681



உடுமலைப்பேட்டை ..வெனசபட்டி ஆரம்பப்பள்ளி சுவேதா ராஜேந்திரன்  -விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை ..

5 -வகுப்பு குழந்தை செல்வம்  சுவேதா விஞ்ஞானியிடம் கேட்ட கேள்வி ...

முன்னேறிய நாடுகளில் இந்திய உலக அளவில் 6 வது இடத்தில் இருக்கிறது  என்று பேசினீர்கள் ..நமது நாட்டில் ஏழைகள் இன்னும் இருக்கிறார்களே என்று கேட்டார் ..

-விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை  பதில் ...

ஏழைகள் இந்தியாவில் மட்டும் இல்லை அமெரிக்கா வாசிங்டன் லும் இருக்கிறார்கள் ..வளர்ந்த நாடுகளிலும் இருக்கிறார்கள் ..அங்கு ஏழைகள் இருப்பது தெரியாது ..நமது நாட்டில் வெளிப்படையாக தெரிகிறது பதில் அளித்தார்

கேள்வி 2...

5 -வகுப்பு குழந்தை செல்வம்  சுவேதா ..நமது நாட்டில் பிளாஸ்டிக் கலாச்சாரத்தை எப்படி மட்டுப்படுத்தவது ..அதற்கு ஏதாவது திட்டம் இருக்கிறதா ?


-விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை  பதில் ...

அறிவியல் திட்டங்கள் இருக்கிறது ..இங்கே  என் மேடை முன்னே வாட்டர் பாட்டில் இருக்கிறது ..தவறுதான் ..நம் வசிக்கும் இடங்கள் ..பள்ளி ..கல்லூரி ..ஆகிய இடங்களில் விழிப்புணர்வு நாம் ஏற்படுத்தவேண்டும் ..உங்களை போன்ற கேள்விகள் ...நடைமுறை படத்த ஆவணசெய்வோம் என்றார் ..கேள்வி கேட்ட சுவேதா என் பாராட்டுக்கள் என்றார் ..

அறிவியலிலும் ..சுற்றுப்புற சூழலிலும் நல்வழி காட்டும் வென்சபட்டி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்க்கு நன்றிகள் ..கலிலேயோ அறிவியல் கழகத்திற்கும் நன்றிகள் ..



குறிப்பு : கம்பள விருட்சம் அறக்கட்டளை என்ன செய்கிறது என்று கேள்வி  கேட்ட மேன்மக்களுக்கு ...கம்பள சமுதாயம் தாண்டி பொருளாதாரத்திலும் ..கல்வியிலும் ..பொது தளத்தில் பயணிக்கிறது தற்பொழுது ...நம் கோவை திருப்பூர் மாவட்ட கம்பள சமுதாய மக்களை இப்படி பயணிக்க வைக்கிறது ...

குஜ்ஜ பொம்மு ராக்ஸ் சுவேதா ..............