திங்கள், 24 பிப்ரவரி, 2020

கணவனை பிரிந்த பெண்
அல்லது மனைவியை பிரிந்த ஆண்..
இவர்களின் தரா தரத்தை..
இவர்கள் அடுத்த குடும்பத்தில் நுழைந்து..
நல்லா இருக்கும் குடும்பத்தை பிரிக்கிறார்களா...?
இல்லை சிறு சிறு உரசல்களுடன்
உள்ள குடும்பத்தை சேர்க்கிறார்களா ?
என்பதை பொறுத்து தெரிந்து கொள்ளலாம்..
இவர்கள் தம் துணையை..
விதி வசத்தாலோ..இல்லை சந்தர்ப்ப வசத்தாலோ
பிரிந்து இருப்பதால்..
அதன் விளைவை நன்கு தெரிந்து கொண்டிருக்கும் பட்சத்தில்..
இவர்களின் போக்கே அவர்களின் தரத்தை நமக்கு உணர்த்தி விடும்..
--
#TIPPUUU

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

வாழ்க்கையில் இனியும் எந்த ஊக்குவிப்பும் இல்லை என உணரும்போது, நீங்கள் என்ன செய்வீர்கள்?

சிவக்குமார் குமார் ...

நான் ஒரு விற்பனை துறையில் இருக்கிறேன்  தினமும் வாடிக்கையாளரை சந்திக்க வேண்டும்

எனக்கு வேலை நாட்கள், விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்கள் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கும்.

உணவு, பயணங்கள் ,புது வாடிக்கையாளர் (அனைத்து துறைகளை சார்ந்தவர்கள் ), மற்றும் சிறு தூக்கம் இது மட்டுமே என் வாழ்க்கை.

வாரத்தில் 7 நாட்கள் மற்றும் 24 மணி நேரமும் வேலை செய்வது போல் இருக்கும்.

இப்படி நேரம் செலவதித்து மூளையை துருவி வேலை பார்த்தாலும் கடைசியில் பயன் இல்லாமல் போகும்.

இது அனைத்து விற்பனை துறையில் இருப்பவர்களுக்கு எல்லோருக்கும்  பொருந்தும்.


மனமுடைந்து சோர்வடைந்து போகும்போது எல்லாம் . அப்போது இந்த கடிதத்தை படிப்பேன்....அடுத்த பயணம் தொடங்கிவிடும் ...வாழ்க்கை வாழ்வதற்கு தானே ...

இனிமேல் தான் இளமை திரும்புதே ......

60 வயதுக்கு மேல் தவறாமல் செய்ய வேண்டிய அவசியமான விஷயங்கள்:

இப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்...

60 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான, வளமான மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கிறோம்...

பல விஷயங்களில் அனுபவப்பட்டு, தெளிந்து, வாழ்க்கையை புரிதலோடு பார்க்கிற பருவம் இந்த இரண்டாவது இன்னிங்ஸ் தான்...!!!

வாழ்க்கையில் 60-ல் ஓரளவு உந்துசக்தி குறைந்து போகும். இனி என்ன என்ற சோம்பேறி சாய்தளம் நம்மை ஆள, அதனால் பல நோய்களும் நம்மை சூழ முற்படும்...

*60 வயதுக்கு மேல் தவறாமல் செய்ய வேண்டிய அவசியமான விஷயங்கள்:*

புதிய உந்துசக்தியை உருவாக்க புதிதான, உங்களுக்கும் தேவையான சவால் ஒன்றைக் கையிலெடுங்கள்...

உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள கடினமான இலக்கை முன்னிலைப்படுத்தி அதனை நோக்கி நிதானமாக, ஆனால் உறுதியோடு செல்லுங்கள்...

எப்போதுமே புதிய விஷயங்களைத் தேடுங்கள், புதிய மனிதர்களிடம் பேசுங்கள்...

70 வயதுக்கு மேற்பட்ட ஆட்களோடு உட்கார்ந்து முதியோர் அரங்கம் உருவாக்காதீர்கள்...

இளைஞர்களோடு பழகுங்கள். 25 வயதில் இருந்த உத்வேகம் அவர்களிடமிருந்து உங்களுக்கு மீளக் கிடைக்கும்...

அழகான உடைகளை ரசனையுடன் தேர்வு செய்து, மிடுக்காக உடுத்துங்கள். 60 வயதில் நரையும், திரையும், வழுக்கையும் அழகுதான்...

உலகின் மிகப்பெரிய சாதனைகளைச் செய்தவர்கள், நிறைய பேரை ஈர்க்கின்றவர்களில் 60+ காரர்கள் தான் அதிகம்..!!!

பெரும்பாலான இளைஞர்களுடன், ஒத்த கருத்து நண்பர்களுடன் புதிய இடங்களுக்கு, புதிய அனுபவங்களைத் தேடி பயணம் செல்லுங்கள்...

வேறுபட்ட மனிதரோடு உரையாடுங்கள்..... திசையறியா ஆர்வமூட்டும் பயணங்கள் நம்மை பள்ளிப் பருவத்திற்கு இட்டுச் சென்று துள்ளிக் குதிக்க வைக்கும்...

புதிய நவீன சிந்தனையாளர்களின் புத்தகங்களைத் தேடி நிறைய படியுங்கள். உங்கள் மூளைக்கு தீனிபோட நிறைய, நிறைய புதிய விஷயங்களைத் தேடிப்படியுங்கள்...

நகைச்சுவைக் கதைகளை, நிகழ்வுகளை, ஒளிமங்களை விரும்பி காணுங்கள்...

சிரித்துப் பேசுங்கள், பிறர் சிரிக்கப் பேசுங்கள், உங்களைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் நிலையாகும்...

விரோதிகளை விலக்குங்கள், பெருமைக் காரர்களை, பொறாமைக் காரர்களை காலவிரயம் கருதி ஒதுக்குங்கள்...

மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் பேணுங்கள், நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி,
சிறு சிறு ஆசனங்கள் தவறாது செய்யுங்கள்...

வாரம் ஒரு முறையாவது உங்கள் இணை மனதினருடன் சிரித்து, மகிழ்ந்து, உண்டு, உறவாடுங்கள்...

மறந்தும் சாய்வு நாற்காலிவாசிகள் பக்கம் ஒதுங்கி விடாதீர்கள், உங்களை அவர்கள் பக்கத்திலேயே படுக்க வைத்து விடுவார்கள்...

பொதுச் சேவையில் நாட்டம் கொள்ளுங்கள். ஏரி, குளம், தூய்மை, சுற்றுச்சூழல், பசுமை, சமூக நேர்மை காத்தலில் ஆர்வம் கொள்ளுங்கள்...

முதலில் நம்மைச் சார்ந்தவர்களுக்கு, பின்னர் அடுத்தவர்களுக்கு, உதவி தேவைப் படுபவர்களுக்கு, உங்களால் இயன்ற வகையில் உதவுங்கள். அவர்கள் நன்றியில் உங்களை நீங்களே புதிதாக ரசித்து மகிழ்வீர்கள்...

எப்போதுமே முதல் இன்னிங்சை விட இரண்டாம் இன்னிங்கஸ்தான் நாம் வாழ்ந்த வாழ்வின் அர்த்தங்களை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது...

மேற்சொன்ன விஷயங்களை சரியாகச் செய்தால் 60+ ஆரோக்கியம் பற்றிக் கவலைப்படத் தேவையே இல்லை தோழர்களே...

மூளையும், மனசும், உடலும் சரியாக இயங்க ஏற்பாடு செய்துவிட்ட பிறகு ஆரோக்கியத்தில் என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது...???


இது உங்களுக்கான ஆட்டம், அறுபதின்மரே இப்போதே துவங்குங்கள்...!!!

சனி, 22 பிப்ரவரி, 2020

என் வாழ்க்கையில் இதை பண்ணியிருக்கணும், ஆனால் பண்ண இயலாமல் போய்விட்டதென்று ஏதாவது உங்களை உறுத்துகிறதா ?

1996..கல்லூரி படிப்பு முடித்தவுடன் ..நல்ல நிறுவனத்தில் ..ஆபீஸ் ஒர்க் செய்துகொண்டு ..(குமாஸ்தா வேலை ) செட்டில் ஆகவேண்டும் என்று நினைத்தேன் ...பிடிக்காத வேலை மார்க்கெட்டிங் ..முதலில் பேசுவதற்கு கொஞ்சம் கூச்ச சுபாவம் ...எப்படி பேசுவது என்று ...ஆனால் வாழக்கையில் நடந்ததோ ...மார்க்கெட்டிங் வேலை ...அழகாக ..ஈடுபாட்டுடன் ...புது புது சிந்தனைகளோடு ..தினம் தோறும் புது புது வடிக்கையாளருடன் ..சந்திக்கும் வாய்ப்பு ...வாழக்கை யே ...15 ஆண்டுகளில் வாழக்கையில் வளர்ச்சி...புது உத்வேகம் ..இன்று ..ஒரு நிமிடம் கூட பேசாமல் இருக்கமுடியாது ..வாழ்க்கை வாழ்வதற்கே ..என்று தினம்தோறும் சுழலும் உலகம் ..

நிச்சயமாக! ஒரு கட்டத்தில் சொந்த தொழில் செய்ய வேண்டும் என ஆர்வத்துடன் அதைப் பற்றிய நுட்பங்களைக் கற்றும் அதை செய்ய இயலவில்லை.

பத்திரிக்கைத் துறையில் ஈடுபட்டு எழுத்தாளனாக ஆக நினைத்து அதற்கான சிறிய சிறிய வாய்ப்புக்கள் கிடைத்தும் அதைப் பிடித்துக் கொண்டு மேலே வராமல் திறுத்தி விட்டேன்.

இப்போதுஒரு புத்தகம் எழுதி முடித்து வெளியீடு செய்வதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன். ஆனால் அதிலும் ஒரு மனக்குறை உண்டு. அதைப் பார்த்து பெருமைப் பட தந்தை இல்லை...
வாசிப்பை நேசிப்போம் ..2020
உடுமலை கிளை நூலகம் 2.

நம்மை ஏமாற்றாத, ஒரு சிறந்த நண்பன் புத்தகம் தான். நல்ல புத்தகங்களைப் படிப்பதால் அறிவு வளரும்; உயர்ந்த சிந்தனைகள் பிறக்கும்; எண்ணங்கள் நேர் பெறும்; நமது ஆற்றல் பெருகும்; திறமைகள் மிளிரும்; உற்சாகம் ஊற்றெடுக்கும்; சோர்வு அகலும்; மனம் நிறைவு பெறும்; முடிவுகள் எடுக்க புத்தகம் துணைபுரியும்! வாழ்க்கை மேம்படும்! முன்னேற வழி துலங்கும்!

நூலகங்களுக்குச் சென்று, புத்தகங்களை எடுத்து வந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகளையும் நூலகங்களுக்கு அழைத்துச் சென்று, புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை அவர்களுக்கும் ஊட்ட வேண்டும்.

 ஒவ்வொருவரும், புத்தகங்களை விலை கொடுத்து வாங்கி தங்கள் வீட்டில் சிறு நூலகம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலம் நமது, குடும்பமே, வாசித்து அறிவை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

 புத்தகங்கள் நிறைந்த சூழலில் வளரும் குழந்தைகள், அறிவு உள்ளவர்களாகவும், தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும், இனிய பண்புள்ளவர்களாகவும் வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்களாகவும் விளங்குவார்கள்...

இன்று கோவையிலிருந்து உடுமலை வந்த எங்கள் வீட்டு சாய் நந்தகிஷோர் தலைவருடன் ..உடுமலை கிளை நூலகம் 2...இக்கு வந்திருந்து நூலக வருகைப்பதிவேடு கையெழுத்து இட்டு ..அய்யா நல் நூலகர் கணேசன் அவர்களுடன் அறிமுக படித்திக்கொண்டார் .அவர் கோவையில் இருக்கும்பொழுது ..(கிளைநூலகம் 2 இல் ..நூலக செய்திகள் ..சிலம்பாட்டம் ..ஓவியப்போட்டி ..பேச்சு போட்டி ..ஆகிய நிகழ்வுகள் ..வாட்ஸாப்ப் ..முகநூலில் பார்த்து உள்ளார் ..மாலை நான் நூலகம் செல்லும்பொழுது நானும் வருகிறேன் பெரியப்பா என்று எனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டார் )...அவருக்கு பிடித்த குழந்தைகள் கதைகள் புத்தகத்தை வாசிப்பை படித்து நேசித்தார் ...மிக்க மகிழ்ச்சி ..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681..
உடுமலையில் GVG கல்லூரியில் இன்று நடந்த பள்ளிக்குழந்தைகளுக்கான கலிலியோ அறிவியல் கழகம் நடத்திய அறிவியல் திருவிழா இல் --

இந்தியா கல்வியறிவு திட்டத்தால் கல்வியாளர்களுக்கான ஃபோல்ட்ஸ்கோப் பட்டறை


 இந்தியாவில் கல்வியறிவை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட தன்னார்வ அடிப்படையிலான இலாப நோக்கற்ற அமைப்பான இந்தியா எழுத்தறிவு திட்டம் (ஐ.எல்.பி), கலிலியோ அறிவியல் கழகம்  இணைந்து  உள்ள பல்வேறு அரசு பள்ளிகளைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியர்கள் மற்றும்  உந்துசக்திகளுக்கான பட்டறை ஒன்றை நடத்தியது. ஐ.எல்.பியின் மல்டி-டைமென்ஷனல் கற்றல் இடம் (எம்.டி.எல்.எஸ்) இலிருந்து.  இந்த பட்டறை  GVG கல்லூரியில் நடைபெற்றது. அரை நாள் பயிற்சித் திட்டத்தின் முக்கிய நோக்கம், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு மடிப்புகளை அறிமுகப்படுத்துவதும், மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் முயற்சியாக அவர்களை வகுப்பறை நடவடிக்கைகளில் சேர்க்கும் வாய்ப்பை வழங்குவதும் ஆகும்.

முன்னர் தயாரிக்கப்பட்ட ஸ்லைடுகளின் மடிப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை உருவாக்குவதற்கான ஒரு சுருக்கமான அமர்வுக்குப் பிறகு, பங்கேற்பாளர்கள் மடிப்புகளின் கீழ் கண்காணிக்க சுற்றுப்புறங்களிலிருந்து வெவ்வேறு மாதிரிகளை சேகரித்து கொண்டு வரப்பட்டனர். வழக்கமான நுண்ணோக்கியில் மாணவர்களுக்கு அவர்களின் பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக பொதுவாகக் காட்டப்படும் மாதிரிகளைப் பயன்படுத்த முயற்சிக்க அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.

மடிப்புகளின் கீழ் அனைத்து வகையான மாதிரிகள் காணப்பட்டன- நேரடி எறும்புகள், வெவ்வேறு பூக்களிலிருந்து மகரந்தம், தாவர பாகங்கள்,

ஒரு நேரடி எறும்பின் தலை அதன் கலவை கண்களைக் காட்டும் மடிப்பின் கீழ் காணப்படுகிறது மடிப்பு ஒரு மடிப்புகளைப் பயன்படுத்தி பெரிதாக்கப்பட்டது

மகரந்தம்
ஐ.எல்.பியில் உள்ள தன்னார்வலர்கள் பல ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பதன் மூலம், அவர்கள் பல பள்ளிகளை அடைவதற்கான திறனைக் கொண்டுள்ளனர் 

பட்டறையில் பங்கேற்பாளர்கள் தங்கள்ஃபோல்ட்ஸ்கோப்  மடிப்புகளுடன்..

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020



டேபிள் மேனர்ஸ்...
ஆம் போன வாரம் நாம் ஸ்டார்ட்டர்ஸ் பற்றி பார்த்தோம். இன்று நாம் பார்க்க போகும் சப்ஜெக்ட் டேபிள் மேனர்ஸ். இது மிகவும் முக்கியமான ஒன்றூ. சாதாரண ரெஸ்டாரன்டுக்கு போனாலும் நம் டேபிள் மேனர்ஸை கண்டிப்பாக பின்பற்றினால் மிகவும் நல்லது. முதலில் நம்மை டேபிளுக்கு அழைத்து சென்று அமர வைத்த உடன் நாம் டேபிளில் கானும் விஷயம் நேப்கின், ஃபோர்க், ஸ்பூன், கத்தி. முதலில் நாப்கினை மடியில் போட்டு கொள்ளவும். சிறியவர்களுக்கு கழுத்தில் சொருகிவிட்டு ஹாங்கிங் நாப்கின் போல் கட்டவும். டேபிளில் இருக்கு கத்தி,ஃபோர்க், ஸ்பூன் இடம் மாற்றாதீர்கள். முதலில் புஃபே சாப்பாடு பற்றி பார்ப்போம். முதலில் டேபிளில் ஒரு குவார்ட்டர் பிளேட் இருக்கும் இது பிரட், நான் போன்றவை வைக்கவேண்டும். முனியான்டி விலாஸ் மாதிரி எலும்பு, மீன் முள்ளை அதில் வைக்க வேண்டாம். இது மிக முக்கியம். நிறைய ஹோட்டல்களில் சாப்பிட்ட பிளேட்டை ரீஃபில் மற்றும் அடுத்த சர்விங்குக்கு அனுமதிக்க மாட்டார்கள். அதனால் சாப்பிட்ட பிளேட்டை டேபிளில் வைத்து ஸ்பூன் ஃபோர்க் கத்தி மட்டும் டேபிளில் எடுத்து தனியே வைத்து செல்லவும். புது பிளேட்டை எடுத்து திரும்பவும் லைனில் வரவு. கொஞ்சம் சாம்பார் மட்டும் தானே என்று லைனில் நிற்காமல் ஜம்ப் செய்யாதீர்கள். முதல் சூப் அல்ல்து சாலட் தனியே எடுத்து வந்து சாப்பிடுங்கள். புஃபே வைத்த காரணமே உணவை வேஸ்ட் பண்ணக்கூடது என்று தான். அதனால் சாலட், தந்தூரி, ஸ்டார்ட்டர்ஸ், நான், ரைஸ் எல்லாம் பரங்கிமலை போல் குவித்து எடுத்து வருவதை தவிர்க்கவும். முதலில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து டேஸ்ட் பார்த்து பிறகு பிடித்த உணவை மட்டும் நிறைய எடுத்து சாப்பிடவும். நான் ரொட்டியை சின்ன பிளேட்டில் எடுத்து வரவும். கடைசியில் டெஸர்ட்ஸ் அல்ல்து ஐஸ்கிரிமை அங்குள்ள சின்ன போல் அல்ல்து கப் அல்ல்து சிறிய தட்டுகளில் எடுத்து வந்து சாப்பிடுங்கள். சாப்பாடு தட்டில் எடுக்காதீர்கள், சிலர் குடுமபத்திற்க்கும் மொத்தமாக எடுத்து வந்து பிரித்து சாப்பிடுவார்கள் அது தவறூ. ஒவ்வொரு முறையும் பிளேட் மாற்றூம் விஷயம் நீங்கள் புஃபேக்கு சென்றால் மட்டுமே. ஒரு பார்ட்டி மற்றூம் கல்யான வீடுகள் ஹோட்டலில் நட்ந்தால் ஒரே பிளேட் தான் எடுக்க வேண்டும் இல்லயென்றால் நீங்கள் மூன்று பிளேட் மாற்றீனால் மூன்ற் ஆட்களுக்குகான சார்ஜ் அவர்களுக்கு போட்டு விடுவார்கள்.
ஃபோர்க் ஸ்பூன் கீழே விழுந்தால் எடுத்து வைத்துவிட்டு வேறு ஒன்றை கேட்கவும். தயவு செய்து காலியாக இருக்கு டேபிளில் இருந்து எடுக்கக்கூடாது. அது போக கம்ஃபோர்ட் இல்லயெனில் தயவு செய்து கையில் எடுத்து சாப்பிட தயங்காதீர்கள். அதே சமயம் ஒவ்வொரு சர்விங்குக்கு செல்லும் போது இடது கையில் எடுத்து பொடுங்கள் எச்சில் கையில் கரண்டிகளை எடுக்காதீர்கள். உணவு எடுத்தவுடன் தயவு செய்து மூடியை மூடவும். சுரன்டி, வழித்து எந்த பதார்த்தையும் எடுக்காதீர்கள். கேளுங்கள் ரிபிளனிஷ் செய்வார்கள்.சாப்ஸ்டிக் மூலம் சாப்பிட தெரிந்தவர்கள் மட்டும் வாங்கி சாப்பிடுங்கள் நிறைய பேர் அதை வைத்து சாப்பாடுடன் கொலைவெறியோடு சன்டை போட வேண்டாம்.
நேப்கின்னில் கை துடைத்துகொண்டு ஃபிங்கர் போல் கேளுங்கள். இல்லெயனில் வாஷ் ரூம் சென்று கை கழுவுங்கள். முடிந்த வரை 1 மணீ நேரம் மினிமம் இல்லயெனில் புஃபே வேஸ்ட் தான். பிரேக்ஃபாஸ்ட் புஃபே போது தோசை, ஆம்லெட் சொல்லிவிட்டு வந்து அமர்ந்தால் போதும் அங்கேயே நிற்க வேண்டாம். மினரல் வாட்டர், காஃபி, டீ, குளிர்பானங்கள், ஜூஸ் வைகைகள் எக்ஸ்ட்ரா..............
கடைசி டிப்ஸ் - நான் மதுபானம் அருந்தவதில்லை. ஒவ்வொரு சமயம் நண்பர்களூடன் பாருக்கோ சென்றால் அவர்கள் ஒரு இரண்டு ஸ்மால் அடிப்பதற்க்கு முன் நான் ஒரு அரை கிலோ சைடு டிஷ் சாப்பிட்டுவிடுவேன். ஒரு சமயம் தாஜ் ஹோட்டலில் 6 பேர் போனோம். நான் வழக்கம் போல் குடிக்கமாட்டேன் என்பதால் எனக்கு பிடித்த மாக்டெயில் ஆர்டர் செய்ய சொன்னார்கள் நான் இடது மெனுவை பார்க்காமல் வலது சைடில் காஸ்ட்லியான் ஒரு ஜுஸை அர்ட்டர் செய்தேன் சுமார் 1300 ரூபாய். மொத்த பில் 2900. ஐந்து பேர் ஃபாரின் ஸ்காட்ச் மொத்தமும் சேர்த்து 1400 நான் குடித்த மாக்டெயில் 1300 டாக்ஸ் சேர்த்து 2900 வந்தவுடன் ஷாக் ஆன பிரன்ட்ஸ் அதில் இருந்து என்னை அவகள் உற்சாகபானம் அருந்தும் போது கூட்டி போவதில்லை........1300 டிரிங் மகா கேவலமாக கழுவி ஊத்தினமாதிரி இருந்தது இன்னொரு வேதனை...
கட்டபொம்மன் வரலாற்று ஆவணங்கள்

தமிழ்நாடு அரசு ஆவணக்காப்பகத்தில் 1670 ல் இருந்து 1907 வரை பல்வேறு வகையான ரெக்கார்டுகள் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

மூன்று மாதங்களுக்கு முன்னர், கட்டபொம்மனின் வரலாற்று ஆவணங்களை நேரடியாக பார்வையிட வேண்டும் என்ற சிறப்பு அனுமதியைப் பெற்று, அதன் பின்னர் தொடர்ச்சியாக
15  வேலை நாட்களில் காலை 11 மணியில் இருந்து மாலை 5.45 மணி வரை ஆவணக்காப்பக அறைக்குள் ஒரு கல்லூரி மாணவனை போல சென்று பல்வேறு பருமன்களை தேடி பார்வையிட்டதன் விளைவாக சுமார் 1353 பக்கங்களை தேடி கண்டுபிடித்தேன்.

1) Military consultation
2 )Revenue consultation
3 )Secret consultation
4 )Board of revenue
5 )Political consultation
6 )Secret sundries
7 )Revenue sundries
8 )Military Despatches to england
9 )Legal
10 )Tirunelvelli collectorate record
11 )Secret despatches to england

இது போன்ற பருமன்களில் (volume) மொத்தம் 40 பருமன்களுக்குள் வீரபாண்டியக் கட்டபொம்மன், பாஞ்சாலங்குறிச்சி முதல் பாளையப்போர், இரண்டாம் பாளையப்போர் என ஒவ்வொரு நாள் போர் நிகழ்வுகளையும், செய்தியையும், அவர்களின் கருத்துக்களையும், ரகசிய பரிவர்த்தனைகளையும், பிரிட்டிஷார் பதிவு செய்து வைத்து இருக்கிறார்கள்.

சுமார் 26 பருமன்களில் 1353 பக்கம் முதல் கட்டமாக காப்பி ஆப் டாக்குமெண்ட் கேட்டிருந்தேன். நான் தான் ஆவணக்காப்பக வரலாற்றில் முதன் முறையாக  இவ்வளவு ஆவணங்களை மொத்தமாக கேட்டிருக்கிறேன். இதற்காக அரசு நிர்ணயித்த கட்டணமாக 5095 ரூபாய் கட்டிவிட்டேன்.

இன்னும் 15 பருமண்கள் பார்வையிடாமல் இருக்கிறது, நிச்சயமாக 90% சதவீதம் ஆங்கிலேயர்கள் எழுதிய ஆவணங்களை ஓரளவு எடுத்து விட்டேன், என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். இன்னும் மிஞ்சிப் போனால் 200 பக்கங்களுக்குள்தான் தேட வேண்டியது இருக்கும்.

கட்டபொம்மன் சம்மந்தப்பட்ட வால்யூம்கள் ஸ்கேன் செய்யப்படாமல்தான் இருந்தன. சில வால்யூம்கள் நன்றாக இருக்கிறது, சில வால்யூம்களின் பேப்பர்கள் நொறுங்க ஆரம்பித்து விட்டது. கட்டபொம்மன் தூக்கில் போடப்பட்ட செய்திகள் இருக்கும் ஒரு வால்யூமை மட்டும் தனியாக கண்ணாடி பெட்டிக்குள் வைத்து முக்கியத்துவம் குடுத்து மதித்து வைத்திருக்கிறார்கள்.

ஒரு தனியார் நிறுவனம் ஸ்கேன் செய்கிற பணியை அங்கேயே இருந்து செய்து வருகிறார்கள், அவர்கள் அரசு வகுத்து கொடுத்த நெறிமுறையின் படி  ஸ்கேன் செய்து வருகிறார்கள், இந்த வகையில் political consultation மட்டும் அனைத்து வருட பருமன்களும் ஸ்கேன் செய்து முடித்திருக்கிறார்கள். இன்னொரு நிறுவனம் micro film முறையில் ஆவணப்படுத்துகிற பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். Micro film ஆயுட்காலம் சுமார் 100 வருடங்கள் ஆகும்.

இப்போது புதிய கோரிக்கையாக நான் எழுதிக் குடுத்த 26 பருமன்களையும் மொத்தமாக ஸ்கேன் செய்ய வேண்டும் என்று மனு கொடுத்து இருந்தேன், இதற்கான செலவுத் தொகையை நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறி இருந்தேன். பலகட்ட கடுமையான முயற்சிக்கு பிறகு அதிகாரிகளின் முழு ஒத்துழைப்போடு நமது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு நான் குறித்துக் கொடுத்த 1353 பக்கங்களும் ஸ்கேன் செய்தாகி விட்டது என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன்.

ஆவணங்கள் இரண்டு தளங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது, மேல்தளத்தில் உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது, அங்கு தான் பிரிட்டிஷார் கைப்பட எழுதிய உண்மையான பருமன்கள் இருக்கிறது, இவை நொறுங்கிய நிலையில் இருப்பதாக அங்கிருக்கும் அதிகாரிகள் தெரிவித்தனர், நீதிமன்ற வழக்குகளுக்காக மட்டுமே அந்த ஆவணங்களை பார்வையிட முடியும் மற்றபடி பார்வையிட முடியாது என்று சொல்லி விட்டார்கள்.

கீழ்தளத்தில் உள்ள பருமன்களை வைத்து தான் நமக்கு ஜெராக்ஸ் போட்டு தருகிறார்கள், இவை ஏற்கனவே உள்ள ஓரிஜினல் பருமன்களின் நகல்கள்தான், இந்த பருமன்களில் ரேபான் என்ற துணி ஒவ்வொரு பக்கங்களிலும் ஒட்டப்பட்டிருக்கிறது, இந்த துணி அந்தப் பருமன்களை நன்றாக பாதுகாக்கிறது, ஒரு பருமனின் ஆயுள்காலம் சுமார் 30 ஆண்டுகள் ஆகும், 30 ஆண்டுகளுக்கு பிறகு இதே போல் ஜெராக்ஸ் தயார் செய்து மீண்டும்  புதிய பருமனை உருவாக்குகிறார்கள். ஜெராக்ஸ் போடும் போது அதிகமாக கருப்பு அடிக்கிறது, இனிமேல் அந்தக் கவலை நமக்கு இல்லை.

இந்த ஆண்டு 70 ஸ்காலர்கள் ஆய்வுக்காக அங்கே சென்று கொண்டிருக்கிறார்கள். ஸ்காலர்களுக்கான அறையில் காத்திருந்து பருமன்களை பார்வையிடுவதுதான் நடைமுறை மரபு, ஆனால் நமக்கு ஒரு சிறப்புச் சலுகையாக நேரடியாக ஆவண அறைக்குள்ளே என்னை அனுமதித்தார்கள்,     அதனால்தான் என்னால் விரைந்து தேட முடிந்தது, இதில் முக்கியமாக ஸ்கேன் செய்வதற்கு சிறப்பு அனுமதி வழங்கிய கண்காணிப்பாளர் திருமதி.அபூர்வா ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

கட்டபொம்மனுக்கு எங்குமே முதலிடம்தான், ஆவணக் காப்பகத்தில் முழுமையாக  ஸ்கேன் செய்யப்பட்டது கட்டபொம்மன் வரலாற்று ஆவணங்கள் மட்டும் தான், என்ற பெருமையும் நமக்கு மகிழ்ச்சியை தருகிறது.

நன்றி

பெ.செந்தில்குமார்
7299940159

பாஞ்சை போர்முழக்கம்
நிதிநிலை அறிக்கை 2020

வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம். பெருக்குவோம் என்பது வெறும் கோஷமா? தேர்தல் அறிக்கையில் இட்டு நிரப்ப வேண்டிய வார்த்தைகளா? இனி இங்கே வாய்ப்பு உள்ளதா? என்ன பிரச்சனை?

மூன்று துறைகளின் வாயிலாக மட்டுமே இங்கே வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்.

1. சுரங்கத்துறை.

(வட மாநிலங்களில் தனியார் கையில் இருந்தாலும் இது இன்று வரையிலும் மாஃபியா பிடியில் தான் உள்ளது) காமதேனு பசு போலக் கிடைக்கும் வருமானம் அரசாங்கத்திற்கு வருவதில்லை. அதிகாரிகள், இடைத்தரகர்கள், அந்தந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்களைக்கடந்து முதலீடு செய்த நிறுவனம் காசு பார்க்க வேண்டும். வேலை செய்பவர்களும் வாழ்நாள் முழுக்க தங்களது பசியின் ரொட்டிக்காக உழைத்து மடிய வேண்டியது தான்.

இன்று வரையிலும் மாற்றமில்லை. எந்த அரசாங்கமும் இதில் கை வைப்பதே இல்லை. லிக்னைட் தொழிலில் என்எல்சி மட்டுமே ஏகபோகமாக உள்ளது. சீனாதானா இதில் கை வைக்க முயன்றார். பின்வாங்கி விட்டார்.

இந்தத் தொழில் இந்தியா முழுக்க பரவலாக்கம் ஆகாமல் இருப்பதற்குக் காரணம் சுற்றுச்சூழல் என்ற பெரிய ஆயுதம் கொண்டு அவவ்வபோது சொருகப்படுகின்றது. குற்றுயிரும் குலையிருமாகவே இந்தத் துறை உள்ளது.

இந்தத் துறையில் இருக்கும் அமைச்சர் மட்டும் ஏழெழு ஜென்மங்களுக்குத் தேவைப்படும் வசதிகளை அடைந்து விடுகின்றார்கள்.

2. கட்டுமானத்துறை.

கடந்த ஆறு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட 60 சதவிகித வீடுகள் விற்கப்படாமல் அப்படியே உள்ளது. பல ஆயிரம் கோடிகள் தூங்கிக் கொண்டிருக்கின்றது. கள்ளப் பொருளாதாரம் பெருக்கெடுத்து ஓடிய போது மொத்த முதலும் இந்தத்துறையில் கொண்டு போய் கொட்டப்பட்டு பூம் ஆக்கப்பட்டு வளர்ச்சி என்கிற ரீதியில் ஊதிப் பெருக்கப்பட்டுக் காட்டப்பட்டது.

வரியில்லா சொர்க்கத்திலிருந்து வந்து கொண்டிருந்த பணத்தையும் நிறுத்தியாகி விட்டது. எதற்காக வருகின்றது? யாருக்கு வருகின்றது? என்ற கேள்வி மூலம் இப்போது நான்கு பக்கமும் கம்பி வேலி போடப்பட்டுள்ளதால் இந்தத்துறை மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றது.

வசூலாக வேண்டிய வங்கிகளின் பணமும் பயம் கொள்ள வைத்துள்ளது.

3. உற்பத்தித்துறை.

உருவாக்கப்பட்ட ஜிஎஸ்டி இன்னமும் மாறுதலாகிக் கொண்டேயிருக்கிறது. முடிவாக இன்னமும் இது தான் சரி. இது தான் வழிமுறை என்று சொல்லும் அளவிற்கு உருவாகவில்லை. அவசர கதியாக அள்ளித் தெளித்த கோலம் போல இருப்பதால் அலங்கோலமாகவே இன்னமும் உள்ளது. 90 நாட்களில் கட்டிய பணம் திரும்பி வரும் என்றார்கள்.

மாயமான் போலவே கண்ணாமூச்சி காட்டிக் கொண்டேயிருக்கிறது. கள்ளப் பொருளாதாரத்தின் ஒவ்வொரு ஓட்டைகளை அடைத்து விட்டார்கள். வரிசையில் நின்று வரவும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி இறந்து கொண்டிருப்பவர்களைப் பற்றிக் கவலைப்பட யாருமே இல்லை. எவன் செத்தால் எங்களுக்கென்ன? என்று ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேயிருக்கின்றார்கள்.

எவரும் புதிய முதலீடு செய்யத் தயாராக இல்லை. செய்த முதலீடுகளையும் வரி என்ற குழப்பமான நடைமுறைகள் (இணையச் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளை இன்று வரையிலும் களையப்படவே இல்லை) இன்னமும் மாறவில்லை.

வெளிப்படையாகத் தேசிய நெடுஞ்சாலைகள் மூலமாக நடக்கும் ஊழல் குறித்து மொத்த ஊடகமும் அலறிய போதும் கூட எவரும் இன்னமும் அசைந்து கூடக் கொடுக்கவில்லை என்பதிலிருந்து நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

சரஸ்வதி முக்கியமா? சங்கப்பட்டுக் கொண்டிருப்பவர்களின் வாழ்க்கை முக்கியமா? என்பது கூடத் தெரியாமல் எங்கக்கா 150 நிமிடங்கள் கடந்த போது தடுமாறிவிட்டார்.

எப்படிடா பட்ஜெட்? என்று மகனிடம் டம் கேட்டேன்.
அவர் கட்டியிருந்த சேலை நிறத்தில் கோட் சூட் வாங்க வேண்டும் அப்பா?" என்றார்.

மனைவியிடம் கேட்டேன்.

"அந்தப் புடவை ஆன்லைனில் கிடைக்கிறதா? என்று பாருங்கள்" என்றார்.

அம்புட்டுத்தான் பட்ஜெட் தாக்கம்.


#Budget2020
யாருமே கூட இருக்கும்போது அவங்க மதிப்பு தெரியாது! - ஓ மை கடவுளே 
படம் பார்த்து இரண்டு நாள்கள் கழித்து எழுதுகிறேன். தியேட்டரில் உட்கார்ந்து பார்த்தபோது எவ்வளவு ஜாலியாக இருந்தேனோ அதே அளவுக்கு வீட்டுக்குப் போனதும் தேம்பித் தேம்பி அழ வைக்கவும் செய்தது படம்.
வாழ்க்கையில் எல்லோருக்கும் கிடைப்பது ஒரு சான்ஸ் தான். அதை நம்முடைய அலட்சியத்தாலும் தேவையற்ற பயத்தாலும் சந்தேகத்தாலும் இன்னபிற காரணங்களாலும் இழந்துவிடுகிறோம்.
ஒருவேளை முன்பே அந்தத் தவறைச் செய்யாதிருந்தால்..ஒருவேளை முன்பே கொஞ்சம் தைரியமாகப் பேசியிருந்தால் என நாம் எடுத்த முடிவுகள் குறித்து மறுபரிசீலனை செய்யலாமே தவிர இழந்த வாழ்வை மீண்டும் மீட்டெடுத்து முதலில் இருந்து தொடங்குவது கஷ்டம் தான் ... எதையும் டீப்பா யோசிங்க. அதுக்கப்புறம் தப்பு நடந்தா பொறுப்பெடுத்துக்கலாம். ஆனா அவசரப்பட்டு எந்தவொரு முடிவும் எடுக்க வேண்டாம் என கடவுளாக அவதாரம் எடுத்து அருள்புரிந்துவிட்டுப் போகிறார் விஜய் சேதுபதி.
அதென்னவோ இந்த விசே, இந்த படத்தில் மட்டும் லைட்டாக சைட் அடிக்கும் அளவுக்கு பலம்பொருந்தியிருக்கிறார்.
மற்றபடி, அதுல ஒரு வசனம் ரொம்ப எதார்த்தமாக இருந்தது.
அடச்சீ...போடா...போய் பொண்டாட்டி கால்ல விழுடா!
நூடுல்ஸ்மண்டை
https://youtu.be/rOw8fKZ2rps

வியாழன், 20 பிப்ரவரி, 2020

எனக்கு இந்த பாடல் கேட்டாலே ஏதோ மனசுக்குள் ஒரே சந்தோஷம்


தாள சந்தத்திற்கான பாடல் வரிகள் ...
இந்த பாடலின் சரணத்தை இழுத்து செல்வது அது தான்...
 முல்லைச்சரம் சூடிய வள்ளியை தேடிவந்த வடிவேலன் ...

 அதற்கு தங்கள் குரல் நயத்தில் புள்ளி கோலம் போட்ட இளையராஜா.. ஜானகி அருமை.. சரணங்கள் முடிந்தவுடன் தொடரும் அந்த சுருதி சேர்ப்பது போன்ற குழலோசை .. ஆஹா ... அற்புதமான இனிமை ....
 
 நெற்றியில் குங்கும பொட்டு .. மூக்குத்தி என்ற தோற்றத்தில் மகிழ்வுடன் நாணம் காட்டி திரும்பும் கன்னி தேவதையாக  ரேவதி அழகு...     வேஷ்டி சட்டை என்ற எளிய தோற்றத்தில் கார்த்திக் .
 
தாளத்தை தொட்ட ராகம் அதனால் இனிமை அதிகம் போலும் ... இசை அனுபவம் ஆவது இசைஞானியின் இசைக்கற்பனையில் தான் ...

https://youtu.be/3HZwdtpYaAQ
கட்டுச்சொல்லிகளின் கதை
---------------
எழுதப்பட்ட எழுத்துகள் சரியாகத் தெரிவதற்காக ஒவ்வொரு ஓலையின் இருபுறமும் மஞ்சளை நன்றாக அரைத்து குழம்பாக்கி அதோடு வேப்பெண்ணெயையும் கலந்து பூசி காயவைக்க வேண்டும்.. பின்னர் வசம்பு, மணித்தக்காளி இலை, கோவை இலை, ஊமத்தை இலை சாறுகள் தடவி, மாவிலை, அறுகம்புல் ஆகியவற்றை எரித்த கரியை மையாகத் தடவுவர். இதனால் சுவடியில் உள்ள எழுத்துக்கள் தெளிவாக தெரியும். இதற்கு ‘மையாடல்’ என்று பெயர்.
‘மஞ்சற் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
மிஞ்சப் புகட்ட மிக வளர்ந்தாய - என்கிறது தமிழ் விடுதூது.
இதனால் ஓலையில் உள்ள எழுத்து தெளிவாகத் தெரிவதோடு கண்ணிற்குக் குளிர்ச்சியை உண்டாக்கி, ஓலைகளைப் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும். ஓகே ! வெறும் சுவடி ஓலைசுவடியான பிறகு, மக்கள் கூடும் இடங்களான கோவில்கள், அரண்மனைகள், அருங்காட்சியகங்கள், மடங்கள் ஆகியவற்றில் பார்வைக்கு வைத்து பாதுகாக்கப்படும்.
நல்ல நிலையில் பராமரிக்கப்படும் ஓலைச்சுவடியின் வாழ்நாள் சுமார் 200 முதல் 300 ஆண்டுகள். நன்றாகப் புழக்கத்தில் ஓலைச்சுவடிகள் 100 அல்லது 150 ஆண்டுகள்தான் நீடிக்கும். ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் ஆடி மாதத்தில் புதிய பனை ஓலைகளை சேகரித்து சுவடிகள் தயாரித்து பழைய சுவடிகளில் இடம் பெற்ற நூல்களை புதிய சுவடிகளில் பிரதி எடுப்பார்.
அது படி எடுத்தல் எனப்படும்.
இன்று ஒரு நூல் பல பிரதிகளாக அச்சடிப்பது போல அன்று மூல ஓலைகளில் இருந்து அதை பிரதி எடுத்து எழுதுவதற்கென்றே தனியாக கட்டுச்சொல்லிகள் – ஓலை நாயகங்கள் இருந்தார்கள். அவர்கள் வாழ்ந்த வீட்டிற்கு பாடி வீடு என்று பெயர். ஒருவர் மூல ஓலையை படிக்க சீடர்கள் அதைக் கேட்டு எழுதிப் படியெடுப்பர். இவ்வாறு பாடும் போதும் எழுதும்போதும் சிற்சில பிழைகள் ஏற்படும் வாய்ப்புண்டு.பாட பேதம்’ எனும் இதையொட்டி தான்
‘எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் ; படித்தவன் பாட்டைக் கெடுத்தான். - என்ற பழமொழியும் வழக்குக்கு வந்தது.
அப்புறம் படி எடுத்தவன் யார்? எந்த ஊர்? என்பதை அறிந்துக்கொள்ள சுவடியின் கடைசிவரியின் கீழ் கையெழுத்திட்டு, இப்படிக்கு.. என்றெழுதி தனது பெயரையும், ஊரையும் தெரிவிப்பார். இவர்களால் தான் ஒரு மூல ஓலை பல படிகளாக / சுவடிகளாக உருவானது.
கண்ணகி மதுரையை எரித்த கலவரத்தின் போது மதுரை முழுக்க இருந்த கட்டுச்சொல்லிகள் / ஓலை நாயகங்கள் அத்துனை பேரும் திட்டமிட்டு வெட்டிக்கொல்லப்பட்டனர். அவரது பாடி வீடுகள் எரித்து சாம்பலாக்கப்பட்டன என்பதெல்லாம் தமிழ் ஓலைச்சுவடிகளை குறிவைத்து அழிக்கப்பட்ட சோக வரலாறு.
இதற்காக தான் மதுரை எரிந்ததா..?
எத்தனை தமிழ் இலக்கிய பொக்கிஷங்கள் அழிக்கப்பட்டிருக்கும்
கேட்கவே நெஞ்சு கனக்கிறதே.
இருங்க குறையும் சொல்லிடுறேன்.
இதுப்போல பிரதி எடுக்கப்பட்ட பின் பழைய சுவடிகளை மரியாதையுடன், சப்பரம் எனும் அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் வைத்து எடுத்துச் சென்று , ஆடி 18 அன்று ஆற்றில் ஓடும் நீரில் இடுவர் .
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வரையினானே " என்றது இதைத்தான்.
அச்சுக்கலை வந்த பிறகு பிரிண்டிங் புத்தகங்கள் வாசக சாலைகளில் இடம்பெற ஆரம்பித்தன. அயலானை வியக்கும் தமிழன் பிரிண்டிங் பின்னால் போனான். ஓலைச் சுவடி படிப்பவர்களும் அதை எழுதும் ஆட்களும் அருகிப்போயினர்.
எனவே ஓலைச்சுவடி படி எடுக்காமலேயே , அதை அப்படியே சப்பரத்தில் வைத்து ஊர்வலமாக இழுத்து சென்று ஆற்றில் இட்டனர் . அதன்பின் பழைய சுவடிகள் இல்லாமல் போனதால்
வெறும் சப்பரத்தை மட்டும் ஆடி 18 அன்று ஆற்றில் இறக்குகின்ற சடங்கு உருவானது.
இப்படி வெறும் சப்பரத்தை மட்டும் இழுத்து செல்கிறீர்களே..! என்னவொரு பைத்தியக்கார தனம்? சப்பரத்தில் ஒரு சாமியை வையுங்கடா முட்டாள் பசங்களா.. என்று யாரோ அறிவாளி புத்தி சொல்ல, தமிழன் வரலாறு மதச்சடங்காக மடைமாற்றப் பட்டன.
அச்சு இயந்திரம் கண்டுபிடித்து இப்போது சுமார் 200 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே படி எடுத்து ஏறத்தாழ 200 ஆண்டுகள் ஆகிவிட்டன. எழுத்தப்பட்ட பனை ஓலைகளின் வயதும் இப்போது 150-200 ஆண்டுகள் ஆகிவிட்டன .
அவையெல்லாம் பொடிப் பொடியாக பயனற்றுப் போக இன்னமும் அதிகப்படியான ஆண்டுகள் இல்லை. தேடுவாரற்று பரண்களில் தூங்கிக்கிடக்கின்ற /ஒளிந்துக்கிடகின்ற தமிழர்களின் அத்தனை ஞானமும் அறிவும் கொண்ட சுவடிகள் வெகு விரைவில் மொத்தமாக அழிந்து போகும் அபாயம் உள்ளது.
படிஎடுப்பது என்பது ஏதோ வெறும் ஓலைச்சுவடிகளை பாதுகாப்பது என்பதாகாது. நமது பரம்பரியத்தை பண்பாட்டை பாதுகாக்க வாழ்வியல் முறைகளை மெய்யியல் கோட்பாடுகளை தமிழ் சிந்தனை மரபை படியெடுக்கின்ற பெரும் வேலைத்திட்டம் என்பதை உணர்தல் வேண்டும்.
சரி பனையோலைக்கு ஏன் சுவடி என்று பெயர் வந்தது ?
ஓலைகளில் பதியுமாறு ஆணிகளைக் கொண்டு எழுதப்பெற்ற ஏடுகளின் தொகுப்பு சுவடியாகின்றது.
தமிழன் தன் கருத்துச் சுவடு / எழுத்துச் சுவடு பதித்த பொருளை முதலில் ‘சுவடி’ என்றே அழைத்திருக்கவேண்டும்.
பாட்டுப்புறம் எழுதிய கட்டமைச் சுவடி’’
என்கிறது பெருங்கதை.
பனை குடும்பத்தில் மொத்தம் 21 வகையான மரங்கள் உள்ளன. இவற்றில், தாழிப் பனை, கூந்தல் பனை, லாந்தர் பனை போன்றவை மிகவும் அரிதான வகைகள். இப்பனைகளின் ஓலைகளையே சுவடிகள் செய்ய பயன்படுத்தினார்கள், என்றாலும் கூட கொஞ்சம் அகல நீளம் அதிகமாக இருக்கும் என்பதால் கூந்தல் பனைக்கு கூடுதல் மவுசு.

ஆடி தான் ஓலைகள் சேகரிக்கப்பிற்கு உகந்த மாதம்.

குருத்தோலைகளை ஒரே அளவில் சீராக நறுக்கி அவற்றின் நரம்புகளை நீக்கி நிழலில் உலர்த்திய பிறகு அதனை இளஞ்சூட்டு வெந்நீரிலோ பாலிலோ வெதுப்புவர். அதன்பின் மஞ்சள் நீரிலோ, அரிசிக் கஞ்சியிலோ அல்லது நல்லெண்ணெய் பூசியோ ஊற வைக்கப்படும்.

இதற்கு ஓலை வாருதல் என்று பெயர்.

இவ்வாறு பாடம் செய்யப்பட்ட ஓலைகளை ஒரு மாதம் நிழலில் காய வைத்து வேண்டும். பின்னர், பதப்படுத்திய ஓலைகளை ஓன்று சேர்த்து வளைந்து விடாமல் இருக்க புத்தகங்ககளுக்கு பைண்டிங் பண்ணுவது போன்று ஓலைகளுக்கு தேக்கு மரத்தால் ஆன பலகையை சேர்த்து கட்டுவார்கள்.

சில வாரங்கள் கழித்து அவற்றை எடுத்து சங்கு அல்லது கல்லைக்கொண்டு ஒருமுறைக்கு பலமுறை ஓலையை அழுத்தி தேய்த்து அழகுற செய்தால் அவை பளபளப்பாக தகடு போல் நேராகி விடும். பின் இடதுபக்கம் கயிறு கட்டுவதற்காக துளை போடுவார்கள். அதில் மஞ்சள் தடவிய கயிறாய் கோர்த்து முனையில் துளையிட்ட செப்புக்காசு அல்லது சொலி வைத்து முடிப்பார். இவ்வாறு துளையிட்டு கயிறு கோத்துகட்டுவதற்கு பொத்தகம் என்று பெயர். ஓலைச்சுவடியின் நீளம் அதிகமாக இருந்தால், வலது பக்கமும் ஒரு துளையிட்டு அந்த துளையில் இரும்பினால் ஆனா கம்பியால் சேர்த்துக் கட்டுவார்கள். இதற்கு பெயர் ‘நாராசம்’.

சரி ஓலைச்சுவடி ரெடியாகிடுச்சு..!

பிறகு..

குண்டெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத்தாணி, கிளிமூக்கு எழுத்தாணி என பல வகையான எழுத்தாணிகள் பயன் படுத்தப்படும். அரசர்களாகவோ வசதி படைத்தவர்களாகவோ இருந்தால் அவர்களது மதிப்பிற்கு ஏற்ப தந்தம், தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, இரும்புகளில் எழுத்தாணிகள் இருக்கும்.

எல்லோரும் ஓலை எழுதிட முடியாது,. அதை எழுதுவதற்கென்றே அரசவைகளில், அரண்மனைகளில் வாசக சாலைகளில் ‘ஓலை நாயகம்’ என்று ஒருவர் இருப்பார். அவர்தாம் அத்தனையும் எழுதுவார்.

அதான் எல்லாம் முடிந்ததே, எழுத ஆரம்பிக்கலாமா..? -
என்றால், அதுதான் இல்ல..

எழுதுவதற்கு முன் ஓலையின் நெற்றியில் ஒரு வட்டமும் அதன் கீழ் சின்னதா ஒரு கோடும் போட்டு ஓலை எழுதுவதற்கு ஏற்றதாக இருக்கானு ஒரு முறை செக் பண்ணிக்குவாங்க. இதுதான் பின்னாளில் பிள்ளையார் சுழி என்றானது.

எழுத்தாணி கொண்டுபனையோலையில் எழுதும்போது, ஓலையில் ஓட்டை விழுந்து கிழிந்து விடும் என்பதால், மெய் எழுத்துக்கு புள்ளி வைக்க மாட்டார்கள். புள்ளிக்குப் பதிலாக சிறிய வட்டமிடுவார்கள்.

ஓலைய திலக்கணம் உரைக்குங் காலை
நாலாறு விரலாம் நான்மறை யோர்க்கே
பாருடை யோர்க்கும் பதிற்றிரண் டாகும்
வணிகர்க் கீரெண் விரலாகும்மே –

அதாகப்பட்டது,
ஒவ்வொருவருக்கும் பாட்டெழுதும் போது யார் யாருக்கு என்னென்ன சைஸ்ல ஓலை இருக்கணும்ற விவரத்தை விலாவரியா சொல்லி வச்சிருக்கான் நம்ம முப்பாட்டன்.

நான்மறைகளை படித்தவர்களுக்கு 24 விரற்கட்டை
அரசருக்கு 20 விரற்கட்டை, வணிகருக்கு 18 விரற்கட்டை, வேளாளர்க்கு 12 விரற்கட்டையும் ஓலை அளவு இருக்க
வேண்டுமாம்.

ஓலைகளில் பல வெரைட்டிகள் உண்டு.

அரசாணை தாங்கியது ‘கோனோலை’
ஆணைகள் எழுதப்பட்ட ‘திருமந்திர ஓலை’.
திருமணம் செய்திகளுக்கு ‘நீட்டோலை’
இறப்புகள் ஏந்தி சென்ற ‘சாவோல’
குடும்ப சுப நிகழ்வுகளுக்கு மனைவினவோலை
கோவில் நிகழ்வுகள் சொல்லும் ‘நாளோலை’

என எழுத்தோலைகளில் உள்ள செய்திகளைக் கொண்டு அவை பல தனிப் பெயர்களில் அழைக்கப்பட்டன.

எழுதிக் கையொப்பமிடுவதை இன்றும் நாம் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். படிப்பறிவற்றவர்களோ கையொப்பத்திற்கு பதிலாக கைநாட்டு வைப்பதும் இன்றைய நடைமுறை. படிப்பறிவு இல்லாத ஒருத்தருக்கு எழுதணும்னா என்ன செய்வது, ஓலைகளில் கைநாட்டு வைக்க முடியாதே?

அது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல.. பெயரெழுதிக் கையொப்பமிடுவதற்குப் பதிலாக, ஒரு கீற்றலை தனது அடையாளமாகக் குறியிடலாம். இவர்களுக்கு பெயர்தான் - 'தற்குறி'.✒📚📚👍