சனி, 12 அக்டோபர், 2019

தீபாவளி .....2019..கோயமுத்தூர் ...
தீபாவளி என்றவுடன் சிறிய வயதில் கொண்டாடிய நினைவுகள் இப்போது
சாரளாக பெய்து கொண்டிருக்கும் மழைபோல் வந்துசெல்வது இயல்புதானே ...
என்னதான் சிறுவயதில் உடுமலையில் கொண்டாடிய தீபாவளி எப்படி மறக்க இயலாதோ .அதுபோல் கோவையில் .பணியில் சேர்ந்த பின் தீபாவளியும் ...வாழ்க்கையில் பெரிய தாக்கத்தையோ நினைவுகளையோ திரும்பி பார்க்கவைப்பதில்லை ....வாழக்கையில் தனக்கு பிடித்த மனைவி வந்த பிறகும் ,வாழ்க்கைச்சக்கரத்தில் செல்ல மகனோ ,செல்ல மகளோ வந்தபிறகு வரும் தீபாவளி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச்செல்லும் தன்னம்பிக்கை ....
தீபாவளி வருவதற்கு ஒரு வாரம் முன்னோரே ..அந்த பரபரப்பு தொற்றிக்கொள்ளும் ..தீபாவளிக்கு முன்னர் வரும் வெள்ளி மாலை ,சனிக்கிழமை ,ஞாயிறு ..செல்ல ஷியாம் உடன் உட்சாகத்துடன் வடவள்ளி மருதமலை சாலையில் ..அந்தி மாலை நேர மலை மற்றும் மழை சாரலுடன் காரில் அழகாக செல்ல மகனுடன் நெரிசல் மிக்க பாப்பநாயக்கன்புதூர் தாண்டி தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் பூத்துக்குலுங்கும் மலர் செடி கொடி மரங்கள் ,பரந்து விரிந்த மரக்கிளைகள் கொண்ட பசுமையை பார்த்துக்கொண்டு பரவசத்துடன் ...எப்போதும் கலகலப்பாக இருக்கும் கலர்புல் லாலிரோட்டை கிராஸ் செய்து ...காரின் சுழலும் சக்கரத்தின் வேகம் ..புது மணப்பெண் எடுத்துவைக்கும் பாதங்கள் போல் திவான்பகதூர் சாலையில் சக்கரத்திற்கும் ரோட்டிற்கும் படாமல் மிதந்து செல்லும் அழகே அழகு... காந்திபார்க் ரவுண்டானா முதலே வாகன நெரிசல் ஆரம்பித்துவிடும் ...

மெதுவாக அடி மேல் அடிவைத்து மெல்ல ஊர்ந்து சென்று டவுன் ஹால் வாகன நிறுத்த இடம் இல்லாமல் காத்திருந்து வாகனத்தை பார்க் செய்வதற்கு முன்னரே வீட்டு நிதிநிர்வாகிமற்றும் உள்துறை அமைச்சர் காரிலிருந்து இறங்கி நல்லி சில்க்ஸ் கடையில் வரவேற்பு பெண்மணியிடம் பட்டு சரிகை இருக்கும் பகுதியை கேட்டுக் நடந்து செல்ல தயாராக இருப்பார் ...நானும் ஷ்யாமும் ...அப்படியே கடையின் எங்காவது உட்கார நாற்காலியோ ,ஷோபாவோ இருக்கிறதா என்று சுற்றி முற்றி பார்த்துக்கொண்டு செவ்வாய் கிரகத்தில் தண்ணீரை கண்டது போல் உற்சாகமே தனிதான் ..எப்படியும் வர குறைந்தது ஒரு ரெண்டு மணிநேரமாவது ஆகும் என்று தெரியும் .நாங்கள் உட்கார இடம் கிடைத்த சந்தோசம் படிக்கச் பெரிய பள்ளியில் கிடைத்த சந்தோசம் மாதிரி இருந்தது ..அதுமுடிய எங்களுக்கு என்ன வேலை ...பட்டு துணி வாங்கிக்கொண்டு போகும்போது ..துணிப்பைகள் எத்தனை புது டிசைன்களாக வந்தது ,ட்ராவல்ஸ் பை வாங்குகிறார்களா பார்த்துக்கொண்டு இருப்போம் ...அப்போது தானே நாங்கள் வாங்கும்போது ..அந்த மாதிரி கட்டை துணி பை இல்லையென்று சொன்னால் ..எங்களுக்கு முன்னேற வாங்கிச்சென்றர்களே என்று சொல்லி துணிக்கடைக்காரர் முகம் மலர எடுத்து தருவார் ...பழுத்த மாத சம்பளம் கார்டின் தேய்மானம் ஆரம்பித்துவிடும் ...

அப்படியே அடுத்த டார்கெட் ...கேரளாவின் ஜிமிக்கி கம்மல் ,வளையல் கடைகளின் நுழைந்து கல்யாணத்து கூட இவ்வளவு கொள்முதல் செய்து இருப்பார்களா என்று நினைவில்லை...உள்துறை அமைச்சர் கடைக்குள் இருக்கும் போதே ...நானும் ஷ்யாமும் அழகாக நழுவி சென்று சேட்டு கடையில் விற்கும் பாப்கார்ன் (நம்ம சோளப்பொரி )இருக்கும் ,கரும்பு பால் குடித்துவிட்டு ...கம்மல் கடை முன் முகத்தை சோகமாக ,சோர்வாக வைத்துக்கொள்வோம் ...உள்துறை அமைச்சர் எங்களின் முகத்தை பார்த்த உடனே ..உங்களுக்கு தான் சட்டை ,வேஷ்டி ,பாண்ட் எடுக்கவேண்டும் உட்சாகமாக சொல்லிக்கொண்டு ...வாங்க சூடா அன்னபூர்ணாவில் காபி குடிச்சுட்டு ...சென்னை சில்க்ஸ்ல் ஷியாம்க்கு விஜய் ஸ்டைலில் சும்மா மாஸா எடுத்துவிட்டு ,கடைசியில் நம்மளுக்கு போத்தீஸ்ல் கமல் மாதிரி சட்டை யும் பேண்ட்ம் ,அப்படிக்க சும்மா மாப்பிள மாதிரி ராம்ராஜ் வெள்ளை வேஷ்டி சட்டையும்,வாங்கி கொண்டு ,கார்டை தேய்க்கும் போதுதான் தெரியும் அந்த மாதத்துக்குக்கான மொத்தம் பணமும் கரைந்த இருக்கும் ..வருடம் ஒருமுறை முறைதான் செலவு செய்கிறோம் ..நம் சந்தோசத்திற்கு ,இந்திய பொருளாதாரத்துக்கு ,நாட்டின் செல்வச்செழிப்பிற்கு தீபாவளியின் மகிழ்ச்சி பொங்குவது தப்பில்லை ...பார்க் செய்த காரை எங்கு இருக்கிறது என்று தெரியாமல் ...கூட்டத்தில் நம் காரை (சுமந்து செல்லும் உயிர் ) கண்டவுடன் முகத்தில் தெரியும் சந்தோஷத்துக்கு அளவு இருக்காது ..நம்மை சுமந்து செல்லும் காருக்கு உயிர் இருக்கும் என்பதை அப்போது தெரிந்துகொள்ளலாம்...டவுன் ஹாலையே சுற்றி கொண்டிருந்தால் எப்படி ..
கோவையின் இதய பகுதி காந்திபுரம் கிராஸ் கட் ..இறங்கி காலரா ரோடில் நடந்து சென்று நடை பாதை கடை ,மற்றும் ஸ்ரீதேவி ,சென்னை சில்க்ஸ் ,ஈரோட்டின் PSR சில்க்ஸ் சென்று கடைக்குள் பராக் பார்த்துவிட்டு...இரவு ஒன்பது மணி க்கு மேல் ஆகிவிடும் .. கோவை மக்களின் உற்சாக முகங்களை பார்க்கும் போது எப்படி சோர்வு வரும் ..கடைசியாக லட்சுமி பிளாசா வில் நுழைந்து கீழ் மாடி ,மேல்மாடி சென்று ,பெல்ட்டும் ,தலை கிளிப்புகள் ,வாங்கிய பின் தான் தெரியும் முகத்தின் சோர்வு..அப்படியே லட்சுமி பிளாசா அன்னபூர்ணாவில் ...வெங்காய தோசையும் ,காபி குடித்தவுடன் மறுபடியும் உட்சாகம் தொற்றிக்கொள்ளும் ..அப்படியே வடகோவை சிந்தாமணியில் குறைந்த விலையில் பட்டாசுகளை வாங்கி கொண்டு ...மெதுவாக காரின் சக்கரங்கள் யாரையும் கேக்காமலே ...
கோவையின் தூங்கா மாநகர் என்று செல்லமாக மலர்களின் வாசம் கமழும் அங்காடிகள் பூமார்க்கெட் கடைகளுக்கு சென்று மலர்களை வாங்கி கொண்டு ...லாலி ரோட்டை தாண்டியதும் நம்மை சுமந்துசெல்லும் காரின் வேகம் கொஞ்சம் கூடும் ...அந்த மலர் மரங்கள் ,கொடிகள் ,அயர்ந்து தூங்கிக்கொண்டு மரக்கிளைகளில் பளீர் என்று தெரியும் ஆந்தையின் கண்கள் ...ஒளி உமிழ்ந்துகொண்டிருக்கும் ...அந்த மருதமலை வடவள்ளி சாலையின் அமைதி பெருத்தக்கடலின் அமைதி போல் இருக்கும் ...இந்த நினைவுகள் ,இந்த ஆரவாரம் மிக்க தீபாவளி கொண்டாட்டங்கள் ...இப்போது சூழ்ந்திருக்கும் பொருளாதார தளர்வுகள் எப்பொழுது மீண்டு எழும் ,இன்னும் எத்தனை மாதம் .?..எத்தனை வருடம் ஆகும் ?

என்று தெரியாது ...ஆனால் நம்பிக்கை மட்டும் இழக்காமல் ...இந்த மகிழ்ச்சி ,இந்த ஆரவாரம் ,மீண்டும் வர காத்திருப்போம் ...நம்பிக்கை தானே வாழ்க்கை ...தீபாவளியின் வாழ்த்துக்களோடு காத்திருப்போம் ...

வியாழன், 10 அக்டோபர், 2019

இன்று மாலை காபி வித் எழுத்தாளர் கீரனூர் ஜாகீர் ராஜா அவர்களுடன் -உடுமலையில்

இன்று எழுத்தாளர்  கீரனூர் ஜாகீர் ராஜா அவர்களுடன் இனிமையான சந்திப்பு ..
நேற்று முன்தினம் அவர்களின் பிறந்த நாள் ..வாழ்த்தையும் சொல்லிவிட்டு அருமையான கலந்துரையாடல் ..சந்திப்பின்போதுமூத்த பத்திரிகையாளர் கணியூர் பாரூக் அவர்கள் , உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் துணைத்தலைவர் வீ .கே .செல்வராஜ் அவர்கள் முனைவர் ராம் மகேந்திரன் ,பேராசிரியர் கண்டிமுத்து ...'இதயத்தில் வாழும் எழுத்தாளருடன், 'இலக்கிய வீதி அன்னம் விருதினை பெற்ற எழுத்தாளர் கீரனூர் ஜாகிர் ராஜா அவர்களுடன்  மாலை சந்திப்பு மிக்க மகிழ்ச்சி ..

புதன், 9 அக்டோபர், 2019

ஏன் தற்போது உங்கள் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்.?
என்று நிறைய நபர்கள் கேள்வி கேட்கின்றனர் .
.நான் அளித்த பதில்
1.பிடிக்காத பணியில் இல்லை
2.கடன் இல்லை
3.நோய் இல்லை
4.குடும்பத்தில் சண்டை இல்லை
5.நண்பர்களுடன் மனத்தாங்கல் இல்லை
6.தல, தளபதி என்று வாக்குவாதம் செய்வதில்லை
7.பசி இல்லை
8.பயமில்லை
9.பெரியதாய் பொறுப்புகள் இல்லை (No commitments )
10.மாத தவணை திட்டம் இல்லை (No EMI)
11.காதல் வயப்படவில்லை
12.எதிரிகள் இல்லை
13.எதிர்பார்ப்புகள் இல்லை
14.பதட்டம் இல்லை
15.கலக்கம் இல்லை
16.நாளைய தினம் குறித்த சிந்தனை இல்லை
17.சீரியல் பார்ப்பதில்லை
18.சட்டென்று கோபம் கொள்வதில்லை
19.பணம்,பதவி மீது நாட்டம் இல்லை
20.அழகின் மீது ஆசை இல்லை
21.உறவுகளில் விரிசல் இல்லை
22.யார் மீதும் கோபம் இல்லை
22.கோபம் கசப்பாக மாறியதில்லை
23.கசப்பை வெறுப்பாக்கியதில்லை
24.வெறுப்பு பகையாக மாறியதில்லை
25.எனவே பகைவனை சம்பாதித்ததில்லை
26.மன்னிப்பு கோர தவறியதில்லை
27.மன்னிக்க மறுத்ததில்லை
28.ஐபிஎல் அணியில் எந்த அணியையும் எதிராளியாக பார்ப்பதில்லை
29.அரசியல் பேசுவதில்லை
30.நினைத்தவுடன் மனதிற்கு பிடித்த சுற்றுலா பயணம்
இவையே நான் மகிழ்ச்சியாக இருக்க காரணம்
நன்றி,
ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தங்கள் வாழ்க்கை துணைகளை இழந்த பிறகு அல்லது பிரிந்த பிறகு மறுமணம் செய்து கொள்வது சரியா, தவறா?

" என்னது மறுமணமா ??? அதெல்லாம் பெரிய குற்றம் ! " என இன்றும் சிலர் கூறிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

மறுமணம் செய்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது ?


துணையின்றி இருக்கும் ஆணோ அல்லது பெண்ணோ விருப்பப்பட்டால் மறுமணம் செய்து கொள்ளலாம்.

" தனிமை கொடியது !" - இது தனிமையில் வாழ்பவர்களுக்கு மட்டுமே புரியும்.

உலகிலுள்ள பெரும்பாலானோர் ஒரு துணையுடன் வாழவே விரும்புகின்றனர். சிலர் துணையின்றி வாழவும் விரும்புகின்றனர்.

இக்காலகட்டத்தில் ஆண்களைப் போலவே பெண்களும் நம் நாட்டில் மறுமணம் செய்ய தொடங்கிவிட்டார்கள். இது பலரால் வரவேற்கப் பட்டாலும் சிலர் இதை எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இன்றும்கூட நம்நாட்டில் மறுமணம் செய்யும் பெண்களுக்கு அவ்வளவாக நல்ல வரவேற்பு கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை. மாறாக சில பழி சொற்கள் தான் கிடைக்கின்றன.

மறுமணம் செய்து கொள்வதோ அல்லது தனியாக வாழ்வதோ அவரவர் விருப்பம்தான்.

"மறுமணம் செய்து கொள்பவர் ஆணாக இருந்தாலும் சரி ! பெண்ணாக இருந்தாலும் சரி ! எந்த ஒரு தவறும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை".
ஒரு சிறிய குழந்தையை நீங்கள் எப்படி வளர்ப்பீர்கள்?
2008..செப்டம்பர்  மாதம் என் செல்ல மகன் பிறந்த தினம் … இப்போது 12 வயது பூர்த்தி ஆகிறது.

நாங்கள் கற்று கொடுத்த சில நல்ல பழக்க வழக்கங்கள்:

வாங்க, போங்க என்று மரியாதையாக பேசுவது.
எடுத்த பொருட்களை திரும்ப அதே இடத்தில் கொண்டு போய் வைப்பது.
தவறு செய்துவிட்டால் , “மன்னிப்பு” கேட்பது
உதவி கிடைத்தால் “நன்றி” தெரிவிப்பது.
மற்ற குழந்தைகளுடன் விளையாடிய பொருட்களை , நம் வீட்டிற்கு கொண்டு வரக்கூடாது என்பதை அவருக்கு தெளிவாக கூறி உள்ளோம்.
காபி குடித்த தம்பளர்களை ..சுற்றி பார்த்து..எடுத்து கொண்டுபோய் சமையல் அறையில் வைப்பது.
தாத்தா பாட்டிக்கு .மற்றும் நண்பர்களுக்கு .சின்ன சின்ன உதவிகளை செய்வது.
தன்னை விட பெரியவர்களை  பெயரிட்டு கூப்பிடாமல் “அண்ணா”..அக்கா  என்று கூப்பிடுவது.
தன்னுடைய பொருட்களை கவனத்தோடு , தொலைந்து போகாமல் ,பார்த்து கொள்வது.
தன்னுடைய செருப்புகளை கழற்றி விடும் போது அதை ஜோடியாக அடுக்கி வைப்பது. ( கூடவே மற்றவர்களுடைய செருப்புகளை கூட அவர்  அழகாக அடுக்கி வைத்து விடுவார் .)..இன்னும் விடுபட்டவை ஏராளம் ..
எனது நண்பரின் மகளின் உணர்வு ....

பெற்றோரின் அருமையை எந்த வயதில் புரிந்து கொள்ள முடிந்தது?

கல்லூரியில் படிக்கும் வரையில் தினமும் காலையில் தேநீர் கோப்பையுடன் தான் எழுப்புவாள் என் அம்மா.

தினசரி நாளிதழை படித்துக்கொண்டே தேநீர் அருந்திவிட்டு, கல்லூரிக்கு தயாராகி சென்றுவிடுவேன் நான்.

வீட்டிலிருந்த வரையிலும் ஒரு சிறு உதவியும் செய்ததில்லை என் பெற்றோருக்கு.

மாலை வீட்டுக்கு வந்ததும் மீண்டும் தேநீர் கையில் கொடுக்கப்படும். எனக்கு தெரிஞ்சி ஒரு துரும்பையும் வீட்டில் உள்ள போது எடுத்து போட்டதில்லை.

மிஞ்சி போனால் என்றாவது ஒரு நாள் டீ போடுவேன். அதுவும் என் பிள்ள என்னா டேஸ்ட்டா டீ போடும், அப்படினு அம்மா சொன்னால் தான். சான்ஸே இல்ல அந்த ரோஸ்மில்க் டீ போடுவியே? அது போட்டு தாயேன் என்று வீட்டில் இன்னொருவரும் புகழ்ந்தால் தான்.

எனக்கு தெரிஞ்சி நான் செய்த ஒரே வேலை என் துணியை அயர்ன் பண்ணுவது மட்டும். அப்புறம் பயங்கரமா அரசியல் பேசுவது.

வெங்காயம் கூட உரிச்சி குடுத்ததில்லை. தேங்காய் உடைக்கும் சத்தம் கேட்டால் மட்டும் ஒரு சொம்பை எடுத்துட்டு ஓடுவேன்.

வீட்டை விட்டு சென்ற பின் தானே தெரிந்தது அம்மா அப்பாவின் அருமை எல்லாம்.

கொஞ்சமா? நஞ்சமா? என் தெய்வமே.

அழாத நாள் இல்லை.

ம்மா என்னமா? சப்பாத்திக்கு சென்னா வச்சிருக்க? ஒரே போரு…அதுக்கு பதிலா சிக்கன் வச்சிருக்களாம்ல? … அப்படினு வக்கனையா கேட்டதெல்லாம் நினைச்சி ஒரு கண் வழியே அழுது கொண்டே வெங்காயம் வெட்டிய நாட்கள். ஆமா, நம்ம ஊத்துற தோச கூட ரவுண்டா வராது. உலக வரைபடத்தையே பார்க்கலாம் நாம போடுற சப்பாத்தியில. வட்டமாக வந்ததே இல்ல. அப்படியே அந்த சப்பாத்தி கட்டையாலயே என் மண்டையில போட்டுப்பேன். ஆமா, அம்மாவின் அருமை தெரிஞ்சிடுச்சில.

2 முட்டை வாங்கிட்டு வாம்மா.

அப்ப பத்து ரூவா கமிஷன் குடு. வீட்டுக்குள்ளயே கொள்ளையடித்த கும்பல் நானெல்லாம்.

வேலை தேடும் போது, எதுக்கு முட்டை எல்லாம் வாங்கி காச விரயம் பண்ணனும்னு இருந்த 20 ருபாயையும் பத்திரப்படுத்திய போது உண்மையிலே உரக்க உணர்ந்தேன்.

அப்பவெலலாம், காபியை கையில் கொடுத்தால் தான் கண்ணே திறப்பேன்.

அம்மா: பல்ல விளக்கிட்டு வந்து தான் குடியேன்..

நான்: நீ ஒரு நாள் பல்லு விளக்காம குடியேன்.

அம்மா: ச்சீ மனுஷன் குடிப்பானா?

நான்: அப்படி தான் எனக்கும்.

இந்த விதண்டாவாதம் பண்ணியதன் விளைவை எல்லாம் பேச்சுலர்ஸ் PG ரூம்ல ஒரு வாய் டீ, காபியே இல்லாமல் வாழ்ந்த போது தான் அறிந்தேன். சில நேரம் அழுகை கூட வரும்.

கல்லூரியில் இருந்து திரும்ப வர, அரை மணி நேரம் தாமதமானாலும் யாரேனும் ஒருவர் பேருந்து நிலையத்தில் காத்திருப்பார்.

இப்ப, எத்தனை கால தாமதமானாலும் என் வீட்டு கதவை நான் தான் போய் திறக்கிறேனே இப்பொழுது எல்லாம். எனக்கு காத்திருக்க ஒருவரும் இன்றில்லையே என்றெண்ணும் பொழுது எல்லாம் எப்படி வேதனையா இருக்கும் தெரியுமா?. அப்பா, அம்மா வேற லெவல் அக்கறைங்க நம்ம மேல.

நல்ல அடை மழை, ஊரில் பவர் கட். கல்லூரி பேருந்திலிருந்து இறங்குற இடத்தில குடையோட நிக்குறாங்க எங்க அம்மா. தனியா அந்த பேருந்து நிறுத்தத்தில். கண்ணுக்குள்ள நிக்குது அந்த தருணம்.

இப்ப, தொப்பு தொப்புனு நனஞ்சிட்டு சில நாட்கள் வேலைக்கு போயிருக்கேன். அம்மா மட்டும் தான் கண்ணுக்குள்ள நிப்பாங்க. அந்த அம்மாவை அன்னைக்கு நான் celebrate பண்ணல. நன்றி கூட சொல்லல. ச்சே என்ன ஒரு சுயநலவாதியா இருந்துருக்கேன். நன்றிம்மா.

கடைசி நாளில், குடும்பமா உட்கார்ந்து நமக்கு ரெக்கார்ட் நோட் எழுதி தருவாங்க. அம்மாவும் சூடா ஏதாச்சும் செஞ்சி தருவாங்க. நல்லா சாப்ட்டேன். இன்று ப்ராஜெக்ட் டெட் லைன் என்று தேநீர் இடைவேளை கூட எடுக்காமல் வேலை செய்கையில் கண்ணில் வழியும் நீரை, கண்ணாடியை தூக்கி விட்டு துடைத்து செல்கையில், என் சுமையை என்னோடு சேர்ந்து சுமந்த குடும்பத்தை மட்டும் தான் நினைக்க தோன்றும். அப்படியே Rest room - ல போய் ஓஓஓ… னு கத்தணும்னு தோணும். ஆனால் அதுக்கு நேரம் இருக்காது. குடும்பம் தி கிரேட். அவர்களின் அருமையோ அருமை.

மடிச்சி வச்ச துணியை கொஞ்சம் பீரோவுல எடுத்து வைம்மா.

ஏம்மா … எப்ப பார்த்தாலும் வேலை வாங்கிட்டே இருக்க?

என்று முணுமுணுத்துக் கொண்டே வீட்டில் வேலை செய்த நாங்கள் தான், மேலதிகாரிகளின் வேலையையும் சேர்த்து செய்கிறோம். வீட்ல தவிடு இடிக்காத நாங்கள் ஊருக்கு இரும்பு இடிக்கையில் தோணும் அப்பா அம்மாவின் அருமை.

நான் எங்கள் தெரு முனைக்குள் வரவும் எங்கள் வீட்டு ஜெர்மன் ஷெஃபர்ட் நாய் ஓடி வந்து ரெண்டு காலையும் உயர தூக்கி என் தோள் மேல் போடும். சரிமா சரிமானு தடவி விட்டு வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன். இப்ப நான் செத்து கிடந்தாலும் என் வீட்டு ஓனர் எட்டி பார்க்க மாட்டார்கள்.. நல்லாவே தெரிஞ்சிகிட்டேன் அம்மா அப்பா அருமை மட்டுமின்றி என் வீட்டு நாய் குட்டியின் அருமை வரைக்கும்.

என் புள்ள கண்ணுல கண்ணீரை இன்னொரு முறை பார்த்தேன், உங்க கல்லூரிக்கு வக்கீலோட தான் வருவேன் என்று என் பக்கமே நின்ற என் பெற்றோரின் அருமையை, என்ன கால் பேசிருக்க நீ ? எல்லா காலும் fatal என்று என் Quality Checker திட்டி அழவைத்து அனுப்பும் போதெல்லாம் உணர்ந்தேன்.

வெயிலின் அருமை நிழலில் தான் தெரியும்னு சொல்லுவாங்க. என் பெற்றோரின் அருமை வீட்டை விட்டு போன பிறகு தான் தெரிந்தது.

நியூட்டனின் மூன்றாம் விதி நம் வாழ்வில் செயல்படும் போது வலிகள் அதிகமாக இருக்கும்.

அனுபவத்தில் சொல்றேன். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது போல அம்மா அப்பாவின் அருகில் இருக்கும் போதே அவர்கள் அருமையை அறிந்து நடந்துகொள்ளுங்கள்.

கண் கெட்ட பிறகு சூரிய அஸ்தமனம் எதுக்கு?

நன்றி

அப்பாவுக்கும் அம்மாவுக்கும்
உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான காலகட்டம் எது?

ஆண்கள் பலர் சொல்லாத பதில் இது.

என் திருமணதிற்கு பிந்தைய காலகட்டமே எனக்கு மிகவும் சந்தோஷமானது.

என் மனைவியை போல் சிறந்த, நெருங்கிய நண்பர் எனக்கு இதுவரை வாய்த்ததில்லை. அவரிடம் நான் எதையும் மறைத்ததில்லை. அவர் வந்த பிறகான நாட்களே எனக்கு இனிமையானவை.

ஒவ்வொரு நாளும் என் பணி முடியும் நேரம் நெருங்கும்போது “ எப்படா வீட்டுக்கு போவோம், அவளிடம் வம்பு அளப்போம் ” என காத்திருப்பேன்.


நான் மாதம் ₹4500 (2004)சம்பாதித்த போது என்னை கை கோர்த்த என் மனைவி, இப்போது அதைவிட பல மடங்கு சம்பாதித்தாலும் துளியும் மாறாமல் அதே எளிமையுடன் இருப்பவர்.

நான் ஒரு சுதந்திர விரும்பி. எதிலும் மற்றவர் தலையீடு விரும்பாதவன். ஆனால் என் பெற்றோருடனான காலம், “சந்தோஷ் சுப்ரமணியம்” திரைப்படம் போலானது.

என் மனைவி வந்த பின்பு தான்

என் ஆணாதிக்க மனோபாவம் சிதைந்தது.
பெண்களின் புற அழகைக்காட்டிலும் அக அழகு மேன்மை எனப்புரிந்து கொள்ளக் கற்றுக்கொண்டேன்.
பெண்களின் முடிவுகள் பல எதிர்காலத்திற்கானது என தெரிந்தது.
என் தன்னம்பிக்கை,பொறுமையின் அளவு அதிகரித்துள்ளது.
இறந்த கலத்திற்காக கவலைப்படுவதை நிறுத்திக்கொண்டேன்.
புறம்பேசுவது நின்றது.
நேர் மறை எண்ணங்களே இப்போது பெரிதும் மனதில் நிரம்பியுள்ளன.
கடவுளை விட மனிதர்களே முக்கியம் என தெளிந்தேன்.
போதும் என்ற எண்ணம் எவ்வளவு தெளிவையும் நிம்மதியையும் கொடுக்கும் என புரிந்தேன்.
குறைந்த பட்ச பொருள்வாழ்க்கை (minimalism) என்றால் என்ன என்றே தெரியாமல் என் மனைவி அதை வாழ எனக்கு கற்று கொடுத்துள்ளார்.
100 சதம் நல்ல மனிதனாக இல்லாவிடினும் இந்த நல்ல மாற்றங்கள் என் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கின்றன.

செவ்வாய், 8 அக்டோபர், 2019

விஷ்வா விஸ்வநாத்

பண்டிகைகளும் பத்திரிகைக்காரரும்...
பத்திரிகைக்காரரா நீங்க, கருணாநிதிய நேர்ல பாப்பீங்கல்ல, ஜெயலலிதாவையும் பாப்பீங்களாமே..அன்னைக்கு டிவில உங்களைப்பார்த்தேன், தளபதி பக்கத்துலையே நின்னீங்க.
ரகுமான், இளையராஜா நிகழ்ச்சிக்கெல்லாம் டிக்கெட் ஈசியா கிடைக்குமாமே. எந்த அதிகாரிககிட்டக்கூட நீங்க சுலபமா பேசலாம். பஸ்சு, டிரெயின்ல வேற சலுகையெல்லாம் கிடைக்குமாமே.
காதில் இன்பத்தேன் வந்த பாயும் பத்திரிகையாளனின் ஒருபக்கம் இதுதான்.
ஆனால், மறுபக்கம் இத்தனைக்கும் 200 மடங்கு எதிரான தனிப்பட்ட வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நடமாடும் ஒரு எந்திரமயமான வாழ்க்கை இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை அந்தப் பத்திரிகையாளரின் குடும்பத்தினரே முதலில் நம்ப மாட்டார்கள்.
ஊரே தீபாவளி கொண்டாடும், குடும்பத்தினர் காத்திருக்க தெருத்தெருவாக அலைந்து பட்டாசு விற்பனை, துணி விற்பனையை செய்தி சேகரித்துக்கொண்டிருப்பார். தன் குடும்பத்திற்கு எடுககக்கூட நேரம் இருக்காது. சொந்தங்களைப் பார்க்க லட்சக்கணக்கானோர் பேருந்து, ரயில்களில் செல்வதைச் செய்தியாக்கிவிட்டு, ஆளே இல்லாத சென்னையில் காய்ந்துபோன பரோட்டாக்கடைகளைத் தேடிக்கொண்டிருப்பார். ஊரே விடுப்பில் இருக்க இவர் மட்டும் அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருப்பார்.
உலகம் விழிக்கும்போது உறங்கப்போவார். உலகம் உறங்கப்போகும்போது விழித்தெழுவார்.
உண்மையில் பரிதாபத்துக்குரிய ஒரு துறை பத்திரிகை மற்றும் ஊடகத் துறைதான்.
அனைவருக்கும் விடுமுறை தின வாழ்த்துக்கள்🌱🌱😔😔


உடுமலை வரலாறுக்காக .இன்று மாலை ..காந்தி கலா நிலையம் பள்ளி-1948 -கரட்டுமடம் (புங்கமுத்தூர் அஞ்சல் )..

காந்தி கலா நிலையம் பள்ளியின் தாளாளர் .திருமலைசாமி அவர்களுடன் கலந்துரையாடல் ..அவரின் தந்தை எஸ் .டி .சுப்பையா கவுண்டர் (கோர்ட்டார் )அவர்கள் ஆரம்பித்த காந்தி கலா நிலையம் பள்ளி 1948 லிருந்து ..இன்று வரை மலரும் நினைவுகளை பள்ளிஆரம்பித்த 1948 வருடம் சேர்ந்த முதல் மாணவர் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய குமாரராஜா (வயது 82) அருட்செல்வம் .மரியாதைக்குரிய நண்பர் உடுமலை தனுஷ் அவர்களுடன்  பகிர்ந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி ..

திங்கள், 7 அக்டோபர், 2019

சாதகம் பார்ப்பதில் எந்த அளவுக்கு உண்மைத்தன்மை இருக்கும்?

உங்களுக்கு நான் கண்ட இரண்டு நிகழ்வுகளை சொல்கிறேன்,
என் நண்பருடைய சாதகத்தை பார்த்த ஒரு ஜோதிடர் சொன்னார், இவருக்கு அமையும் பெண்னுக்கு சுருள் முடியாகவோ, முகத்தில் அம்மையால் ஏற்பட்ட தழும்பு இருக்கும் என்றார். மற்றொருவர் முகத்தில் பார்த்ததும் தெரியும் அளவு மச்சம் இருக்கும் என்றார். இன்னொருவர் அழகான பெண் தான் அமையும், நிலவு போல முகம் என்றார். இப்படி பெண்ணை பற்றி சொன்னார்கள் ஆனால் அவருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. இவர்கள் சொல்ல வரும் கருத்து ஒன்று தான் பெண்ணை கூட்டத்தில் எளிதில் அடையாளம் சொல்லும்படி இருப்பாள்.

அடுத்த நிகழ்வு என் இன்னொரு நண்பர் ஒரு பெண்ணை காதலித்தார். பெண் வீட்டாருக்கு முழு சம்மதம். ஆனால் அவரின் தந்தைக்கு துளியும் விருப்பம் இல்லை காரணம் இருவருடைய சாதகம் பொருந்தவில்லை. பொருத்தம் இல்லை என்பதை வீடே இவற்றை 'குப்பை சாதகம்' என்பார்களாம். பொருந்தவே பொருந்தாத சாதகங்களை அப்படி சொல்வார்கலாம். அவரும் தனிப்பட்ட முறையில் சில சோதிடரகளை சந்தித்த போதும் அதே பதில் தான். அவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு ஆண் பிள்ளை உள்ளது.

என்னை பொருத்த வரை மருத்துவம் பார்த்து இறந்தவனும் உண்டு பிழைத்தவனும் உண்டு.

மருத்துவம் ஒன்று தான் மாறுவது. மருத்துவரும், நோயாளியும் தான். சோதிடத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர் நல்ல முறையில் சொல்ல முடியும் சிலர் மேன்போக்காக கற்றுவிட்டு கதை அளப்பர். அடுத்த நொடி என்பது ரகசியம் அது தெரிந்துவிட்டால் வாழ்க்கையில் சுவாரசியம் போய்விடும். நல்லதோ கெட்டதோ நாம் எடுக்கும் முடிவுகளை பொறுத்தது நல்லதை நினையுங்கள் நல்லது நடக்கும்.

அவசரக்கால நிதி அனைவருக்கும் மிக அவசியம்… ஏன் தெரியுமா?

இன்றைய சூழலில், வேலையிழப்பு பிரச்னைதான் முதன்மையான பேச்சாக இருக்கிறது. ஏனெனில், நம் நாட்டின் பொருளாதார மந்த நிலையால் யாருக்கு எப்போது வேலை போகும் என்றே சொல்ல முடியாத
சூழ்நிலை. சம்பளத்தை மட்டுமே நம்பி பல லட்சம் குடும்பங்கள் இங்கே இயங்கிக்கொண்டிருக்கும்போது, திடீர் வேலையிழப்பு அந்தக் குடும்பங்களைத் திக்குமுக்காடச் செய்துவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை.
அதுமட்டுமில்லாமல், உடல்நலம் சரியில்லாமல் போவது, விபத்தில் சிக்கி சில மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டிய நிலை ஏற்படுவது போன்ற அவசரச் செலவுகள் எப்போது உருவாகும் என்றே கணிக்க முடியாது. ஆனால், திடீரென ஏற்படும் இந்த அவசர செலவுகளைச் சமாளிக்க நம் ஒவ்வொருவரிடமும் அவசர கால நிதி (Emergency Fund) கட்டாயம் இருக்க வேண்டும்.
ஏன் அவசியம்?
எதிர்பாராமல் ஏற்படக்கூடிய திடீர் செலவுகள் ஒருவரைக் கடனில் தள்ளாமல் இருக்கவும், நீண்ட நாள் முதலீட்டைப் பதம் பார்க்காமல் இருக்கவும் இது மிகவும் அவசியம். மேலும், பணிபுரியும் நிறுவனம் திடீரென மூடப்பட்டாலோ வேலை இழப்பு ஏற்பட்டாலோ, அடுத்த வேலையில் சேரும் வரை குடும்பச் செலவு பாதிக்காமல் இருக்கவும் இந்த அவசர கால நிதி (எமர்ஜென்ஸி ஃபண்டு) அனைவருக்கும் அவசியம்.
பாலிசிகள் மட்டுமே கைகொடுக்காது!
எதிர்பாராத திடீர் விபத்து மற்றும் உடல்நலப் பாதிப்பின்போது ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி கைகொடுக்கும் என்றாலும், அதை நம்பி மட்டுமே இருந்துவிட முடியாது. காரணம், ஒரு ஹெல்த் பாலிசியில் அனைத்து நோய் பாதிப்புகளுக்கும், அனைத்துச் செலவுகளுக்கும் இழப்பீடு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. பொதுவான ஹெல்த் பாலிசிகளில் பற்களில் ஏற்படும் பாதிப்புகள், பிரசவச் செலவுகள் போன்றவற்றுக்கு கவரேஜ் இருக்காது. அவசரகால நிதி வைத்திருக்கும் பட்சத்தில், இந்தத் தேவைகளை எளிதாகப் பூர்த்திசெய்துகொள்ளலாம்.
நிதிப் பராமரிப்பு!
அவசர கால நிதியிலிருந்து, இடையிடையே ஏதாவது பணத்தை எடுத்துச் செலவுசெய்தால், மீண்டும் அதே அளவில் பராமரிப்பது அவசியம். உதாரணத்துக்கு, ஒருவர் அவசர காலச் செலவுக்கென சேர்த்துவைத்திருந்த 1,00,000 ரூபாயில் 25,000 ரூபாயைத் திடீரென ஏற்பட்ட மருத்துவச் செலவுக்கு செலவிட்டிருந்தால், அடுத்துவரும் மாதங்களில் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து, அந்த 1,00,000 ரூபாயை உயர்த்திட வேண்டும். அப்போதுதான் மீண்டும் ஏதாவது நிதிப் பிரச்னை வந்தால், சிரமம் இல்லாமல் அதைச் சமாளிக்க முடியும்.
லிக்விட் ஃபண்டு திட்டங்கள்!
அவசர கால நிதிக்கான தொகை மொத்தமாகச் சேர்ந்தவுடன், அதில் சுமார் 20% தொகையை வங்கிச் சேமிப்புக் கணக்கு, மீதியை லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்வதுவைக்க வேண்டும். இதில், 5% முன்பின் இருக்கலாம். அப்போதுதான் இந்த அவசர கால நிதி மூலமும் சிறிய வருமானத்தை ஈட்ட முடியும்.
தற்போது, லிக்விட் ஃபண்டு திட்டங்களில் டெபிட் கார்டு வசதி வந்துவிட்டன. இதன்மூலம், முதலீட்டின் 50 சதவிகிதத் தொகையை ரொக்கமாக ஏ.டி.எம் கார்டு மூலம் எடுத்துக்கொள்ள முடியும். மொத்தத் தொகையையும் எடுக்கவேண்டுமெனில், காலையில் யூனிட்டுகளை விற்றால், மதியத்துக்கு மேல் வங்கிக் கணக்குக்குப் பணம் வந்துவிடும். அதாவது, ஒரே நாளில் பணத்தை எடுத்துவிட முடியும். எனவே, லிக்விட் ஃபண்டுகள் சிறந்தது. சேமிப்புக் கணக்கைவிட சற்று கூடுதலாக வருமானம் கிடைக்கும்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!
* இந்த அவசர கால நிதிக்கான முதலீட்டில் முதலீடு செய்யும்போது, மூலதனத்துக்கு இழப்பு வராமல் பார்த்து, முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வுசெய்வது அவசியம்.
* அவசர காலத் தேவைக்கான தொகையை முதலீடு செய்யும்போதோ அல்லது அவசரத் தேவைக்கு எடுக்கும்போதோ, கட்டணமில்லாமல் இருக்க வேண்டும். இந்த சேமிப்பு, லாப நோக்கத்திற்கானது மட்டும் அல்ல. அதேசமயம், லாபம் தரக்கூடிய இடங்களில் சேமிப்பதும், தேவைப்படும்போது எடுத்துக்கொள்ளும்படி அந்த சேமிப்பை அமைத்துக்கொள்வதும் ரொம்பவே முக்கியம்.
* குறுகிய காலத்தில் அதிக ரிஸ்க் கொண்ட ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் எமர்ஜென்சி ஃபண்டு முதலீட்டை மேற்கொள்ள வேண்டாம்.
* குடும்பத்தில் வயதானவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள் இருந்தால், சற்று கூடுதலாக இந்த எமர்ஜென்சி ஃபண்டு வைத்திருப்பது நல்லது.
* அவசர காலச் செலவுக்கான நிதியைக் கணவன்- மனைவி இணைந்து ஜாயின்ட் கணக்கில் வைத்திருப்பது நல்லது. அப்போதுதான் ஒருவருக்கு அசம்பாவிதம் ஏற்படும்போது மற்றவர் சிரமம் இல்லாமல் பணத்தை எடுத்து செலவு செய்ய முடியும்.
‘எமர்ஜன்ஸி ஃபண்டு’ அனைவருக்கும் ஏன் தேவை என்பது இப்போது புரிந்திருக்கும். அந்த நிதி இல்லாதவர்கள், தயவுசெய்து அதை உடனே உருவாக்குங்கள்!
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 
நிதி ஆலோசகர் -9944066681

உங்கள் செய்தி ..வீடியோ உடன் பகிரப்படும் ...ங்க 

வியாழன், 3 அக்டோபர், 2019


ஒரு தந்தையின் கடமை ....



செல்போனுக்கு எத்தனை எத்தனை பெயர்கள்? 

அலைபேசி, திறன்பேசி, கைபேசி என்று பல பெயர்களில் வழங்கப்பட்டாலும் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டு இருக்கும் மாணவ மாணவியர்களுக்கு பெற்றோர்கள் பரிசாக வழங்குவதை சமீப காலமாக அதிகம் பார்க்கிறேன்.  அவர்களின் அடுத்த மூன்று ஆண்டு கால பள்ளி வாழ்க்கையை தலைகீழாக மாற்றி விடுகின்றது.

என் மகள்களிடம் சொன்ன விசயங்கள் இது.  தேவையெனில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.........

()

கல்லூரி செல்லும் போது அலைபேசியை உங்களுக்கு வாங்கித் தருவேன். நீங்க விரும்பும் BRAND எதுவாக இருந்தாலும் வாங்கித் தருவேன். அத்துடன் நீங்க விரும்பும் சேர்க்க வேண்டிய சமாச்சாரங்களையும் வாங்கித் தருவேன். ஆனால் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

மகள்களும் சரி என்று சொல்லியிருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் தோழிகள் ஒன்பதாம் வகுப்பு முதல் பயன்படுத்தி வருகின்றார்கள்.

1. சாலையில் செல்லும் போது இது போலப் புலம்பிக் கொண்டு செல்லக்கூடாது.

2. ஆறாவது விரல் போல உங்கள் கைகளில் வைத்திருக்கக்கூடாது.

3. குறுகிய கால பயணங்களில் இயர் போன் மாட்டிக் கொண்டு சுற்றிலும் இருப்பவர்களைப் பார்க்காமல், பார்வையிடாமல் சங்கீதங்களை ரசிக்க வேண்டிய அவசியமில்லை.

4. செட்டிங் அமைப்பில் முதலில் நோட்டிபிகேசன் சமாச்சாரம் அனைத்தையும் நீக்கி விட வேண்டும். முடிந்தால் நிரந்தரமாகத் தூங்க வைத்து விடவும்.

5. குறைந்தபட்சம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆப் ல் இரண்டு மொழி அறிவை வளர்க்க, சோதிக்க உதவும் ஆப் களை வைத்திருங்கள்.

6. படம், பாட்டு, ஸ்டேட்டஸ், என்று எது வேண்டுமானாலும் பாருங்கள்.... கேளுங்கள். குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்.

7. கல்லூரிக்குள் செல்லும் போது நிரந்தரமாகத் தொட்டிலில் போட்டுத் தூங்க வைத்து விடுங்கள். விடுதியில் தங்கி இருந்தால் படிக்கத் துவங்கும் நேரத்தில் சைலன்ஸ் மோடில் போட்டு வைத்து விடுங்கள்.

8. ஃபார்வேர்டு செய்திகளை படிக்காதீர்கள். உங்கள் சொந்த விபரங்களைப் பதிவேற்றாதீர்கள். எந்த ஃபார்வேர்டு செய்திகளையும் எவ்வளவு முக்கியமாக இருந்தாலும் மற்றவர்களுக்கு அனுப்பாதீர்கள். சாட்டிங் செய்கிற நேரத்தில் ஒரு மணி நேரம் அரட்டை அடிக்க வேண்டும் என்றால் கூட பரவாயில்லை. சம்மந்தப்பட்டவரை அழைத்துப் பேசுங்கள். அத்துடன் அதனை விட்டு வெளியே வந்துடுங்க.

9. பெண் தோழியாக இருந்தாலும் கருமாந்திரங்களை தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தால் அவரை அழைத்து இலக்கிய செந்தமிழில் உள்ள வார்த்தைகளைப் பேசி உங்களை யார் என்று காட்டுங்கள். ஒரு முறை பார்க்கப் பழகி விட்டால் அந்த காட்சி உங்கள் மனதிலும் ஓடிக் கொண்டேயிருக்கும். அது குறித்த தேடலும் அதன் பிறகு உருவாகத் தொடங்கி விடும். அதுவே நிரந்தர பொழுது போக்காகவும் மாறிவிடும்.

மொத்தத்தில் தொழில் நுட்பம் உங்களுக்கு எதிர்கால தொழில் வாழ்க்கையை அடையாளம் காட்ட வேண்டும். உங்கள் செயல்பாடுகளால் அப்பா அம்மா பணிபுரியும் தொழிலைக் காவு வாங்கி விடக்கூடாது.

புதன், 2 அக்டோபர், 2019

அன்பு மனைவி கிட்ட நான் எப்படி இருக்கனும் கேட்ட ...இப்படி பட்டியல் நீளுது ...

வெள்ளாவில வச்சு வெளுத்தா போல இருக்க கூடாது..
கண்டிப்பாக ஸிக்ஸ் பேக்ஸ்லாம் செட் ஆகாது..
குள்ளமாவும் இருக்ககூடாது, உயரமாகவும் இருக்க கூடாது..

உதட்டின் சிரிப்பு கண்ணில் தெறிக்கனும்..கண்கள் பேசனும் எனக்கு புரியும் பாஷையில்.
சிகரெட் பிடித்து கருக்காத உதடுகள் சால இஷ்டம்..
வெறிக்கிறா மாதிரியும் பார்க்ககூடாது, முறைக்கிறா போலவும் பார்க்க கூடாது .. வழியுற பார்வை கண்டிப்பா ரிஜக்டட்..
பிள்ளையாருக்கு போட்டியா தொப்பை இருக்க கூடாது.. ஆனால் செல்ல தொப்பை (பிடிச்சு கிள்றாப்போல) கொஞ்சம் இருக்கனும்..
தேவதாஸ் போல காடு மாதிரி தாடி இருக்ககூடாது, மொழு மொழுன்னு மழிச்சும் இருக்க கூடாது ..
மற்றபடி புறஅழகு ஜஸ்ட் ஓ.கே போதும்..
அறிவா இருக்கனும். ஆனா என்னை பார் என் அறிவைப் பார்னு பெருமை பீத்த கூடாது.. ஓவர் தன்னடக்கமா ட்ராமா போடவும் கூடாது..
ஹாஸ்ய உணர்வு இருக்கனும். அதுக்காக ஆபாச ஜோக்கையும், காதுல ரத்தம் வர மொக்கை ஜோக்கையெல்லாம் சொல்லிட்டு சிரிக்கனும்னு எதிர்பார்க்க கூடாது..
Last but not least
அடிமையா இருக்ககூடாது.. ஆனால் அடிமை போல இருக்கனும்.. 
எப்படி என் ரசனை? ?
என்ன டிசைன் .....