வியாழன், 11 அக்டோபர், 2018

கம்பள விருட்சம் தொழில்சார்பு  குழுமம் .....

நம் கம்பளவிருட்சம் குழுமம் புதிதாக தொடங்கியுள்ள வியாபார குழு ஒருங்கிணைப்பு மூலம் நம் சொந்தங்களை ஒன்றிணைப்பது ..கடந்த இரண்டு மாதங்களாக செயல்பாட்டினை தொடங்கி சிறப்பாக செயல்படுத்திக்கொண்டுள்ளோம் ..தொழில் சார் பு குழுமத்தில் ..இன்றைய வளரும் இளம் தொழில் முனைவோர்களை கண்டருந்து..அவர்களுக்கு சரியான வழிகாட்டல்கள் ,ஆலோசானைகளை வழங்கி அவர்களின் பொருட்களுக்கு சந்தைப்படுத்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளும் கம்பளவிருட்சம் தொழில் சார் குழுமம் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தயாராக உள்ளது என்பதை  மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்
இங்ஙனம்
கம்பளவிருட்சம் தொழில்சார் குழுமம் .. 
புது வரவு ....செல்பேசி

எனக்கு என்று எந்த ஒரு பொருளும் வாங்குவதற்கு ஆர்வம் வருவதில்லை .ஆடைகள் ..வாகனம் .வாங்குவதற்கு ,பள்ளி ..கல்லூரி ..முடிய பெற்றோர் பார்த்து வாங்கி தருவதை ..பயன்படுத்துக்கொள்வேன் ..முதன் முதலில் வேலைக்கு சென்று ..பொருட்களை வாங்குவதற்கு என் நண்பர் உதவுவார் ...பிராண்டட் பொருட்கள் ..விலையும் குறைவாக இருக்கும் ...அதில் தனித்துவம் இருக்கும் ..திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையில் ஒரு கெத்து வருவதற்கு ஆடைகள் ..வாகனம் ..சொத்துக்கள் ..வாங்கவதற்கு அன்புடன் தோழி (மனைவி )உதவுவார் ..வாழக்கையில் ஒரு கட்டத்திற்கு பிறகு என் ஜூனியர் நண்பர்..அவர்களை அழைத்து செல்வேன் ...தற்பொழுது இருக்கும் புது வரவு ஆடைகள் .அருமையாக தேர்ந்து எடுத்து தருவார்கள் ..அருமையான தைலகம் பார்த்து ஆடைகைளை வடிவமைத்து தருவார்கள் .நாம் உடுத்தும் .ஆடையில் தானே நமது செயல்பாடுகளை  வெளிப்படுத்த முடியும் ..
இன்று நீண்ட வருடங்களுக்கு பிறகு எனக்கு என்று பார்த்து ..பார்த்து ..வாங்கிய   செல்பேசி..J 7..டியோ சாம்சங்  ...என் மாப்பிள்ளைகள் ,தம்பிகள் ..எனது பணிகளுக்கு தங்கு தடையின்றி சமுதாய பணி ..நான் தினம் தோறும் காதலிக்கும் எனது விற்பனை .பணி..தொய்வின்றி பணியாற்ற எனது செல்பேசி மிக உதவிகரமாக இருக்கும் என்பது ஐயமில்லை ...தொழிநுட்பம் வளர்ந்து வரும் சூழலில் செல்பேசி இன்றியமையாதது ..புது வரவு வந்துவிட்டது ..இத்தனை வருடம் உழைத்த செல்பேசி என்ன செய்ய முடியும் ...பாதுகாப்பாக (உயிர்மூச்சு )பெட்டகத்தில் வைத்து பாதுகாப்பது தான் ..புது வரவு வந்தவுடன் ...ஏற்றி விட்ட ஏணி படிகளை தூக்கி எறியாமல் ...வாழ்க்கையில் ..நண்பராக இருந்தாலும் .கட்டிய மனைவியாக இருந்தாலும் ...சொந்தங்களாக இருந்தாலும் ..நான் வளர்ந்த வந்த பாதையை மறவாமல் இருப்பது நலம் ... நன்றி
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681...

செவ்வாய், 9 அக்டோபர், 2018

கம்பள விருட்சம் அறக்கட்டளை
இரண்டாம் ஆண்டு பொதுக்குழு
அக்டோபர் ..7...2018..
வரவு மற்றும் செலவு கணக்குகள் :-


நம் சொந்தங்கள் அளித்த
நன்கொடைகள் வரவாக வைக்கப்பட்டு
அதன் மூலம் அன்றைய செலவுகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன


அதன் வகையில் அன்பளிப்பாளர்களாக

01. திரு. அசோகன் சீனிவாசன்
                                                      - 11600

02. திரு. ராஜேந்திரன்             - 500

03. திரு. தனசேகர்பொம்மையா -500

04.திரு. முருகராஜ்                   - 2000

05. திரு. காளிமுத்து               - 2000

06. திரு. சின்னச்சாமி            - 1000

07. திரு.  சின்னச்சாமி பல்லடம்-500

08. திரு.பொம்முசாமி               -1000

09. திரு. சாமிகுணம்                 -500

10. திரு. கார்த்திகேயன்           - 1000

11. திரு. இந்திரகுமார்                - 500

12. திரு. பொன்வேல்                 - 500

13. திரு. சிவக்குமார்                   - 3000

14. திரு. மாரிமுத்து                     - 1000

15. திரு. தினேஷ்பாபு                - 2000

16. திரு. செந்தில்குமார்            -1000


அன்பளிப்பு வகையில்

மொத்த வரவு ;- 28,600/=

செலவினங்கள் :-

மண்டபம் & கிளினிங்:-  3300

மளிகை & சமையல்   :- 4673

சேர் & டேபிள்& பாத்திரம்:- - 1000

வண்டி வாடகை   :- 350

கேமரா & ப்ரஜெக்டர் ;- 1000

மைக்செட்                   :- 2000

மேடை & ப்ளக்ஸ்       ;- 3000


மொத்த செலவு      :- 15,323


மீதி :- 13,277 \==


இத்தொகை

இனையதள கட்டமைப்பிற்காக செலவிடப்படும் என்பதையும்

பொதுக்குழுவிற்காக அறக்கட்டளை சந்தா மற்றும் சேமிப்பில் இருந்து
ஒரு ரூபாய் பணமும் செலவிடப்படவில்லை என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்


இங்ஙனம்
 பொருளாளர்
கம்பள விருட்சம்  குழுமம்
உடுமலைப்பேட்டை ..
www .kambala virucham .in


எத்தனை நகரங்கள் அசுர வளர்ச்சி அடைந்து மெட்ரோ சிட்டியாக மாறினாலும்

நமது உடுமலைப்பேட்டை மட்டும் இன்னும் டவுண் என்னும் அந்தஸ்து மாறாமல்.. கிராமங்களின் தலைநகரமாக விளங்குகிறது...

1.எங்கள் ஊர்ப் புறங்களில் மாட்டுச் சாணி வாசம் வீசும்.. சாக்கடை நாற்றம் வீசாது...

2. போக்குவரத்து இருக்கும்.. ஆனால் நெரிசல் இருக்காது..

3 சில நகரங்களில் இரவு விடிய விடிய பஸ் வசதி இருக்கும் போது எங்கள் டவுணில் எல்லா ஊருக்கும் கடைசி பஸ் ஒன்பது மணிக்கு மேல் இல்லை.. காரணம் தோட்டத்தில் மாடுகன்றுகளோடு விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாக வெளியூர் போக மாட்டாங்க.. அப்படியே போனாலும் கோயிலுக்குப் பழனி, வேலைக்குத் திருப்பூர், பெரிய வேலைனா கோயம்புத்தூரு அவ்வளவு தான்.. எதுக்கு விடிய விடிய பஸ்..

4..பாண்டிச்சேரி, கோவா, ஊட்டி னு போய் காசக் கரியாக்கி கூட்டத்துல நிம்மதி இல்லாமல் வர்றத விட குறைவான செலவில் திருமூர்த்தி அமராவதி னு அமைதியாக தனிமையில்  சொர்க்கத்திற்குப் போயிட்டு வந்திரலாம்..

5.சுத்தமான கடைவீதிகள். மக்கள் கூட்டம் நெரிசல் இல்லாத இடங்கள்.கனிவான பேச்சு.. அமைதியை உடைய நகரம்..

6.கரிசல் மண் சேறு, கரும்புச் சாறு வாசம், கன்னுக்குட்டியின் ஓட்டம், ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ், எப்போதாவது வரும் இரயில், பிராண்டட் மினிஷோரூம்ஸ், திருமூர்த்தி தண்ணீர், காற்றாலை அழகு, எல்லாவற்றிற்கும் மேலாக நாகரிகம் கலந்த எதார்த்தமான வஞ்சகம் இல்லாத வாங்.. போங்.. கொங்கு தமிழ்.

மற்ற பெரிய நகரங்களுக்குக் கிராமமாக
நமது ஊர் கிராமங்களுக்குத் தலைநகரமாக..

இதெல்லாம் பார்க்கையில் இன்னும் பல  நூற்றாண்டுகள் உடுமலைப்பேட்டை நகரம் இப்படியே இருக்க வேண்டும் என்ற ஆசை விரிகிறது...😀😍😊😊ஏன் என்றால்


உடுமலையில் சுற்றி நம் கிராம சொந்தங்கள் இருக்கும் மக்கள் ...மனதில் சூது ..வாது  தெரியாத ...வெள்ளந்தியான  மனம் கொண்ட நம் மக்கள் இருப்பதால் தான் ..மண் மனம் மாறாது ...இருப்பதால் ..அரசு துறை என்றாலும் ..தனியார் துறை என்றாலும் ...இங்கு வரும் மக்கள் ..உறவு முறை சொல்லி அழைப்பதால் ...வேற ஊருக்கு மனசு வரமாட்டேங்கதுங்க ....வாழ்க வளமுடன் .. .


திரு P .தனசேகர் .கனகவேணி ...ஓசூர் .....(சேகர் பொம்மய்யா )

என் அருமை தம்பி அறிமுகம் ஆனது 6 வருடங்களுக்கு முன்னர் முகநூலில் ..இவரின் நம் கம்பள சமுதாய வரலாறுகளை முகநூலில் பகிரும்பொழுதான் இவரின் நட்பு வட்டம் எனக்கு கிடைத்தது ..வாரம் ..வாரம் இவர் எழுதும் பதிவுகள் ..கம்பளத்தார் சொந்தங்களை ஒன்றிணைக்க ஒரு அழகான சொந்தம் கிடைத்தது மகிழ்ச்சி ...விருதுநகர் ..தூத்துக்குடி ..சென்னை ...சேலம் ..என்று நம் சொந்தங்கள் எங்கு எல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் பணியில் கிடைக்கும் விடுமுறை நாளை நம் சமுதாய முன்னேற்றத்திற்கு ..வளர்ச்சிக்கு தன்னால் ஆனா விழிப்புணர்வு கருத்துக்களை பகிர்ந்து ..வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளார் ...தம்பியின் திருமணத்திற்கு கூட நம் மாப்பிள்ளைகள ..தம்பிகளுடன் சேர்ந்து கலந்துகொண்டு வாழ்த்திவிட்டு வந்தோம் ..உடுமலையில் எந்த ஒரு கம்பளத்தார் விழா  என்றாலும் ..இனி தம்பியின் பங்கேற்பு இருக்கும் ..உடுமலையில் சுற்றி இருக்கும் மனதில் சூது ..வாது  தெரியாத ...வெள்ளந்தியான  மனம் கொண்ட நம் சொந்தங்கள் ..கல்வி ..வேலைவாய்ப்பு எல்லாத்துறைகளும் இருப்பதால் தம்பியுடன் நட்பு வட்டம் அதிகரித்துக்கொண்டே உள்ளது ..தம்பி தற்பொழுது சொந்தமாக பேக்கரி தொழில் வளரும் தொழிலதிபர் தற்பொழுது வளர்ந்து வருவது மிக்க மகிழ்ச்சி..தம்பி படித்தது பொறியியல் துறை ...படிப்பு என்பது வெறும் கல்வி மட்டும் தான் முன்னேறுவதற்கு தன்னம்பிக்கையுடன் சாப்ட்வேர் பணி ...இன்ஜினியரிங் துறை என்று தடம் பதிக்காமல் ..வியாபாரத்தில் நம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று ..பேக்கரி தொழில் இறங்கி பட்டையை கிளப்பிகொண்டுஇருக்கிறார் ...இதற்கு என் அன்பு தங்கையும் அதற்கு பக்கபலமாக இருப்பது தன்னம்பிகையின் சாட்சி ..இதை ஏன் சொல்கிறேன் என்றால் அவரின் நண்பர்கள் ..சாப்ட்வேர் .வெளிநாடு என்று பணியில் இருந்து ..கார் ..பங்களா என்று ..மாட மாளிகைளோடு இருப்பார்கள் ..வங்கி கொடுக்கும் கடன் தொகையில் ..தவணை கட்டிக்கொண்டு இருப்பார்கள் ..தற்பொழுது உள்ள சூழ்நிலையில் வேலை எப்பொழுது மெயில் வரும் என்று கவலை இல்லாமல்...எந்த சூழ்நிலையிலும் ..தொழில்கைவசம் உள்ளது ..எதுக்கும் கவலை படவேண்டியது இல்லை என்று தன்னம்பிக்கையுடன் வாழக்கையை அழகாக எடுத்து செல்லலாம் ..நமது கம்பளவிருட்சம் அறக்கட்டளையும் தம்பிக்கு தொழில் சார்பாக பக்கபலமாக இருக்கும் ..தம்பி நம் கம்பளவிருச்சம் அறக்கட்டளை முதலாண்டு  ஆண்டு கலந்துகொண்டு ..இரண்டாம் ஆண்டு குடும்பத்துடன் கலந்துகொண்டது மற்றட்ட மகிழ்ச்சி ..தம்பியும் நம் அறக்கட்டளையின் வளர்ச்சிக்கு  தகந்த ஆலோசானைகள் வழங்கி இரண்டு வருடங்களாக சொந்தங்களுக்கு தூரம் என்றும் தடையாக இல்லை என்று தனது பங்களிப்பை அளிப்பது அவரின் சமுதாய அக்கறையையும் நம் எதிர்கால குழந்தைச்செல்வங்களுக்கு விருச்சத்தின் விதைகளை தூவி வளர்ந்து  அதன் கனிகளை தருவதற்கு பங்களிப்பு என்றும் வரலாற்றில் செதுக்கி வைக்கும் என்பது ஐயமில்லை ...தம்பியின் பேச்சுக்கள் ..இணைய தளத்தில் நேரம் இருக்கும் பொழுது கேட்டு பாருங்கள் ...தன்னம்பிக்கையினை நமக்கு தருவார் ..நமது கம்பள விருச்சத்தின் இரண்டாம் ஆண்டு பொதுக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளராக ஏன் அழைத்தேன் என்று உங்களுக்கு இப்பொழுது தெரியும் .இரண்டாம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ..தம்பியிடம் அனல் தெறிக்கும் வளர்ச்சிக்கான சமுதாய கருத்துக்களை எதிர்பார்த்தேன் ..தம்பி என்னை போன்று மகிழ்ச்சியான சொந்தங்களை பார்த்தவுடன் ..திருமூர்த்தி மலையின் காற்று .இதமான சூழ்நிலையில் குறைவாக பேசி .மற்ற சொந்தங்களுக்கு நேரத்தை அளித்துவிட்டார் ...சேகர் பொம்மய்யா தம்பி போன்றவர்களால்தான் ..நம் வளரும் குழந்தைச்செல்வங்களுக்கு சமுதாயம் ..கல்வி ,பண்பாடு ..கலாச்சாரம் என்று சரியானா  திசையை நோக்கி கொண்டுசெல்ல முடியும் என்பது என் நம்பிக்கை ...விருச்சத்தின் விதைகளாக வளர்வோம் ..நன்றி

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..
9944066681....
கம்பள விருட்சம் அறக்கட்டளை
உடுமலைப்பேட்டை ..
visit ...us ....www .kambala virucham .in









ஞாயிறு, 7 அக்டோபர், 2018

Karthic KVT:
07/10/2018
ஒட்டுமொத்த தமிழகத்துக்கும்
ரெட் அலர்ட் கொடுத்து திரும்பப் பெற்ற நாளின்
அதிகாலை நேரம் ..

ஏகோபித்த எதிர்பார்ப்புக்கிடையில் ஆதவன் மெல்ல தன் புத்தொளிகற்றைய பூமியில் பாய்ச்சிய தருணத்தில் மெய்சிலிர்த்து
அடுத்தடுத்து நிகழ்த்தும் அட்டவனை பணிகளை அசைபோட்ட படி
எனது இருசக்கர வாகனத்தின் இயந்திரத்துக்கு உயிர்கொடுத்தேன்

பயணத்தை பகிர்ந்து கொள்ளும் தோழனாய் வந்துசேர்ந்தான் என் தமையன் திருப்பதி தேவராஜன் ...

திட்டமிட்ட நேரத்தை விட சில மணித்துளிகள் அதிகமாக செலவானதாலும்
உயிர்த்தோழன் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கும்
வாலிபனாய் எனது மைந்தன்
பொன். தமிழரசன் காத்திருந்தலும்
மேலும் ஓர் பரபரப்பு மனதில் தொற்றிக்கொள்ள
நேற்று அடாத மழையிலும் சஞ்சீவி மலையடிவார சந்தையில் தேடித்தேடி தரம்பிரித்து வாங்கிய காய்கறிகளை எடுத்துக்கொண்டு
எனது தமையன் செந்தில்குமாரையும்
சேர்த்துக்கொண்டு
மூவராக வந்துசேர்ந்தோம்
தளி கோட்டை மரியம்மன் கோவிலுக்கு ...

மாற்றத்தையும் முன்னேற்றத்தையும்
ஒருங்கே விதைக்கும் மற்றொரு அண்ணனான ஆசிரியர் மாரிமுத்து அண்ணாவையும் சேர்ந்து
பஞ்ச பாண்டவர்களாய்
பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தை அனுக

செல்பேசி உயிர்பெற்று செல்லமாய் சினிங்கியது மறுமுனையில் ஒலித்தது தலைவரின் குரல்

நமஸ்காரம் மாப்பிள்ளை
நா கெளம்பிட்டனுங்க !!
இன்னும் பதினைஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பமுங்க

அட்வகேட் சாரு அக்கா எல்லோரும் சேர்ந்தே வர்றோருமுங்க என்றபடிஇனைப்பை துண்டித்தார்

அடுத்தடுத்த தேவைகளை அட்டவனை படி தயார் செய்து முடிக்கவும்
சொந்தங்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர்

இத்தகைய பரபரப்புக்கிடையில்
உடலியக்கம் நடைபெற
உருபொருள் தேடி
உடல் தன் வேலையைச் செய்யவே
நால்வரும் இனைந்து
இட்லி மற்றும் தக்காளி தேங்காய் சட்னிகளுடன் முடித்தோம் எங்கள் காலைச்சிற்றுண்டியை ...

இத்தகு இடைவெளியில் இடம் கேட்டு தொடர்பு கொண்ட எனது அண்ணன் சண்முக சுந்தரம்

நேனு பொள்ளாட்சின உண்டி கெளம்பேனு கெடிமேடு வழியாத ஒத்து மனிசொந்தாலு எவரேசி உண்டிதே ராவச்சு என்று தொடர்புகொண்ட அசோகன் மாமா

மண்டபம் தளிய தாண்டி போகனுங்களா மாப்பிள்ளை  என்றபடி இடம் வந்த காளிமுத்துமாமா
தளில இருந்து பஸ் மாறனுமா?  என்றபடி வந்து சேர்ந்த செல்வராணி அக்கா

வரும்போதே வரவேற்பிற்கு மாதுளை திராட்சை ஆப்பிள் ஆரஞ்சு பழங்களுடன் வந்துசேர்ந்த கார்த்தி அண்ணா
செயலாளர் வந்ததும் செயல்வேகமெடுக்க
குறித்த நேரத்தில் வந்த கேப்டன் நித்தி மாமா மற்றும் மணிராஜ் சவுண்ட் சர்வீஸ் தினேஷ் மாமா
கேமரா & புரொஜெக்டருடன் நுழைந்த நண்பர் வெங்கடேஷ்
இன்னும் பல சொந்தங்கள் முன்னிலையில்
முருகராஜ் அண்ணனை தலைமேற்று வழிநடத்த முன் மொழிந்தேன்
அதை பொருளாளர் தமிழரசன் வழிமொழிய
இனிதே துவங்கியது இரண்டாமாண்டு கலந்தாய்வு

முன்னின்று வழிநடத்த மேகனந்தன் மாமா செந்தில் அண்ணா
சிறப்புரையாற்ற வருகைதந்த கல்வியாளர் சக்திவேல் மற்றும்
அனுபவ உரை வழங்க கொடிங்கியம் சீனிவாசன் மாமா
மக்கள் பாடகர் வேலுமணி ஆகியோரை மேடையேற்றி உரைபகற தொகுப்பாளர் மாரிமுத்து அண்ணன் அழைக்க

அடுத்து வந்து இணைந்து கொண்டனர் தனசேகர் மாமா
மனோகர் அண்ணா
ராஜபாண்டியன்அண்ணா

ஆகியோரை வரவேற்று வரவேற்புரை நான் முடிக்க

அடுத்து வந்து வாசித்தார் செயலாளர் ஆண்டறிக்கை அதைத்தொடர்ந்த
பொருளாளர் நிதி அறிக்கை

நா போடிபட்டி தாண்டிட்டேன் மாரியம்மன் கோவில் ஸ்டாப்புனு
முன்னாடியே மெசேஜ் போடமாட்டீங்களா என்று திட்டியபடி வந்து சேர்ந்த வழக்கறிஞர் சிவரஞ்சனி

அரசுத்தேர்வுகள் பற்றி எடுத்துரைத்த
சிறப்பு அழைப்பாளர் சக்திவேல்
அவருக்கு பொன்னாடை போர்த்தி
நினைவு பரிசை நல்கி மரியாதை செலுத்திய ஊரக வளர்ச்சித்துரை ஜெயப்பிரகாஷ்அண்ணா

அதைத்தொடர்ந்து
மக்கள் இசை பாடல் மூலம் வரலாற்றை முன்மொழிந்த மக்கள் பாடகர் வேலுமணி அண்ணா
அவருக்கு மரியாதை  செலுத்திய செந்தில்ராமன்அண்ணா

எதிர்கால திட்டங்கள் பற்றி எடுத்துரைத்த சிவக்குமார் மாமா

அனுபவ உரை கொடுத்த சீனிவாசன் மாமா

இனையதளம் அறிமுகம் செய்து கருத்தளித்த அசோகன் மாமா

என அடுத்தடுத்த வரிசைபடுத்தி
அடுக்குகடுக்கு மொழிபகன்று அழகுத்தமிழில் எடுத்துரைத்த மாரிமுத்து அண்ணா

இடையே உறவினர் அனைவருக்கும்
தேநீர் உபசாரம் செய்த
சண்முகவடிவேல்
காளிமுத்து
கேப்டன்
என விழா நிகழ்வுகள் சூடுபிடிக்க
சிறப்புறை ஆற்றிய
சுக்காம்பட்டி பாளையக்காரர்
ராஜேந்திர குமார பாண்டி அண்ணா
தனசேகர் மாமா
விரிவுரை கொடுத்த சாமிகுணம் சித்தப்பா
தன் கருத்தை தயக்கமின்றி எடுத்துரைத்த
அர்ஜுன் மாப்பிள்ளை

சிந்து கவி தந்தையின் சிறப்புரை வரிகளுடன் சமுகத்தை மேம்படுத்த நினைக்கும் காளிமுத்து

வீடுதோறும் ஓர் குடியுரிமை பணிபுரியும் அதிகாரியை உருவாக்க கனவு காணும் திருப்பதி தம்பி
தொழில் வளர்ச்சிக்கு வித்திடும் சின்னச்சாமி அண்ணா
சிறுசேமிப்பின் மகத்துவத்தை எடுத்துரைத்த ஜெகதீஸ்வரி அக்கா
சுய உதவிக்குழுக்கள் பற்றி உரையாடிய
செல்வராணி அக்கா

அரசுத்துறைகள் பற்றி எடுத்துரைத்து
RC வருமான வரி தொடர்பான சந்தேகங்களுக்கு தயங்காமல் தொடர்பு கொள்க என்ற சாமிகுணம் சித்தப்பா
என அரங்கம் நிறைந்த மக்கள் வெள்ளத்தில் ஆனந்தக் கூத்தாடி
அன்பளிப்புகளை அள்ளிவழங்கி விழா சிறக்க உதவி செய்த உள்ளங்களும்
ஒரு சொட்டு துளியின்றி விலக்களித்த வருணனுக்கும்
நன்றியுரை பகன்று நாட்டுப்பண் பாடி நிறைவு செய்தோம் இன்றைய கலந்தாய்வை


இனிவரும் காலம்
     இனிமேலும் தொடரும் ......

வெள்ளி, 5 அக்டோபர், 2018

தமிழ்நாட்டு மழைக்கு ரெட் அலர்ட் .... 

ஆனால் கம்பள விருட்சத்திற்கு மட்டும் கீரின் அலர்ட் இரண்டாம் ஆண்டு பொதுக்குழு இயற்கையை மிஞ்சுமா? அடாது மழைபெய்தாலும் . . . . .விடாது பொதுக்குழு நடைபெறும் வீரம் விளைந்த மண்ணில் வீறு கொண்டு எழுவோம் தளி பாளையப்பட்டில் சிலைகளாக இருக்கும் நம்முன்னோர்கள் நமக்கு வழிகாட்டுவார்கள், நல்லதை நினைப்போம், நல்லதை செய்வோம், வாருங்கள் அடலேறுகளே . .  
வரவேற்கிறது கம்பள விருட்ச அறக்கட்டளை உங்களுக்கான நேரம் துவங்குகிறது, இப்பொழுதே புறப்படத் தயாராகுங்கள் மகிழ்ச்சி மனதில் மட்டுமே எழுத்தில் மட்டுமல்ல, சொல்லில் மட்டுமல்ல செயலிலும் காட்டுவோம் என்று எதிர்காலத் தலைமுறைக்கு வித்திடுவோம், கம்பள விருட்ச அறக்கட்டளை இரண்டாம் ஆண்டு பொதுக்குழு ரெட் அலர்ட் நாளிலும் மிகச்சிறப்பாக நடைபெற்றது என்ற வரலாற்றில் பதிவு செய்வோம். மறைந்து போன வரலாற்றைக் கொண்டு வந்தது கம்பள விருட்சஅறக்கட்டளை மறைந்து போகாமல் இருக்கவே கம்பள விருட்ச அறக்கட்டளை முன்னெடுக்கிறது. வாருங்கள் வரவேற்கிறோம், வருகை தாருங்கள் கம்பள விருட்சத்தின் செயல்பாட்டு விதைகளாவோம். நமது எதிர்கால தலைமுறைக்கு பண்பாட்டையும் கல்வியையும் விழிப்புணர்வையும் வேலை வாய்ப்பையும் கொண்டு செல்வோம் வாருங்கள் சொந்தங்களே , வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறது கம்பள விருட்ச அறக்கட்டளை

கம்பளவிருட்சம் அறக்கட்டளை
ஒருங்கிணைப்பு குழு

வியாழன், 4 அக்டோபர், 2018

கனவுலகில் இல்லை  கண்முன்னே கனலாய்த் தெறிக்கும் கம்பள விருட்சம்

கம்பள விருட்சம் அறக்கட்டளை

இனிதாய் வளரும்  இரண்டாம்   ஆண்டு  பொதுக்குழு
வீரம் விளைந்த மண்ணில்
ஆம் தளியில் வாருங்கள் உறவுகளே,

தளி கோட்டை மாரியம்மன் சமுதாய நலக்கூடத்திற்கு

ஓய்வெடுக்கும் ஞாயிறில் ஒய்வில்லாமல் உங்களோடு  07.10.2018
காலை  முதலே மகிழ்வாய்  தொடங்குவோம்   (9.30 மணிமுதல்)

அறக்கட்டளையின் ஆணிவேராகவும், கௌரவம் பார்க்காமல்  நமது குலத்தின்  கௌரவத்திற்காகப் பாடாற்றும் கௌரவத் தலைவர்  வழக்குரைஞர் முருகராஜ்  தலைமையில்

நமக்காகவே உழைக்கும்  முன்னோடி சொந்தங்கள் திரு. வ.மேகானந்தன், திரு.கே.செந்தில்குமார் முன்னிலையில்

நமது குலத்தின் வீர ஜக்கதேவியே வந்திருந்தோரை வரவேற்பு முகத்தான் செல்வி கோ. மகாலட்சுமியின் வரவேற்புரையில்

முத்தான முதலாண்டு சாதனைகளை ஆண்டறிக்கையாக  செயலாளர் கார்த்திகேயன் வாசித்தளிக்க

வரவும் செலவும்  நமக்கல்ல நமது  சொந்தங்களுக்கே  என்று வந்ததை வரவில் வைத்து செய்ததை செலவில்  வைத்து கம்பள விருட்சத்தின் வெள்ளை அறிக்கையாக பொன் தமிழரசன் சமர்ப்pக்க

நம்மையும் நம் செயல்பாட்டையும் வாழ்த்துரைக்கும் விதத்தில் திரு. ஆ. ராஜபாண்டியன், திரு. த.சேகர் பொம்மையா, இவர்களுடன் நமது தாய்க்குலத்தின் பேராதரவை  தெரிவிக்கும் வகையில்  வழக்குரைஞர் ஆ. சிவரஞ்சனி, திருமதி. எஸ்.செல்வராணி.

இவை  மட்டுமா நிகழ்வை  சிறப்பு சேர்க்க  வருகை தரும் சிறப்பு விருந்தினர்களாக
தனி வட்டாட்சியர் மதிப்புமிகு  வே. முத்துராமன்,
வணிக வரித்துறையின் அலுவலர் மதிப்புமிகு எம்.சாமிகுணம்,
கருத்தாளர்களாகவும், கல்வியாளராகவும், மதிப்புமிகு என். குமரன்
கல்வியாளராகவும், ஆதரவாளராகவும். திரு. ஆர். சக்திவேல்

நம்மையும் நம் நேரத்தையும் வீணாக்காமல் இருக்க இடையில் கலை நிகழ்ச்சிகள்,
இவை மட்டுமல்ல,  இனத்தின் விடியலை வேகமாக முன்னெடுக்க  சமூக ஊடகத் தளத்தில் இனத்தின் இணைய தளத்தைத் துவக்கி வைப்பவர் திரு. அசோகன் சீனிவாசன்,

இதுவரை செய்ததும். வெள்ளோட்டமே இனி வருவதுதான் உண்மையான தேரோட்டம் என அறக்கட்டளையின்  எதிர்கால நோக்கங்களை எடுத்துரைக்க உடுமலை சிவக்குமார்,

இவையனைத்தும் இனிமேலும் தொடர நன்றி எனும் சொல்லால்  சொல்லாமல்  அதையும் முறைப்படுத்திட திரு. எஸ்.ஆர். கார்த்திக்குமார்.

இவையனைத்தும் நிகழ்ச்சித் தொகுப்பாக்கி தொய்வில்லாமல், தோய்வில்லாமல்  உங்களிடையே  கனிரசமும், நவரசமும் இயல், இசை , நாடகம் எனத் தொகுத்து வழங்கும்  ஆசிரியர் பி.மாரிமுத்து.
இவையனைத்தும் நமக்காகவும், நம் இனத்தின் சொந்தங்களுக்காகவும், திட்டமிட்டு செய்யப்படுகிறது.

வாருங்கள் கூடிடுவோம். தளியில்   இரண்டாம் ஆண்டு பொதுக்குழுவை

சிறப்பாக நடத்தி வெற்றி விழாவாகக் காண்பித்திடுவோம்.

விழுதுகளை மதிப்போம் !  சமூக ஆர்வலர்களை மதிப்போம் ! பொறுப்பாளர்களை போற்றுவோம் !

புதன், 3 அக்டோபர், 2018


கம்பளவிருட்சம் அறக்கட்டளை -இரண்டாம் ஆண்டு பொதுக்குழு

சிறப்பு விருந்தினர் ...

திரு என் .குமரன் ...கல்வியாளர்

உடுமலை நகருக்கு பெருமை சேர்த்த என்.குமரன் அவர்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கல்வி பணியில் உள்ளார் . தராசு பத்திரிகையானது உச்சகட்ட விற்பனையில் இருக்கும்போது இதழில் செய்தியாளராகவும். தராசு மக்கள் மன்றத்தில் மாநில அமைப்புச் செயலளாராகவும் பணியாற்றியுள்ளார். தராசு மக்கள் மன்றம் சார்பாக 1989 ஆம் ஆண்டு உடுமலை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். தற்போது திருப்பூரில் குமரன் பிரஸ் பதிப்பாளராக உள்ளார். தற்போது மாணாக்கர்களின் கல்வியில் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது இரண்டு நூல்கள் கல்வி தொடர்பாக வெளியிட்டுள்ளார். ஸ்காலர்சிப் (தமிழில்). How to Get Educational Loans to study in India and Abroad என்ற நூல்களை வெளியிட்டுள்ளார். இரண்டு புத்தகங்களும் மருத்துவம். பொறியியல், வேளாண்மை கல்விகள் பயிலுவதற்கு வங்கிக்கடன் பெறுவது எப்படி? தனியார் நிறுவனங்கள் கல்வி நிதி உதவி எவ்வாறு கொடுக்கின்றன என்பதைப் பற்றி மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.

இவர் எழுதி வரும் கல்வி கடன் விழிப்புணர்ச்சி பற்றி எழுதிவரும் இதழ்கள் நாணயவிகடன் ,தினமணி ,தினமலர் ,இந்தியன் எக்ஸ்பிரஸ் ,தமிழ் இந்து ,ஆகியவாகும் ..

நமது உயர் கல்வி கற்கும்  குழந்தைச்செல்வங்கள் இவரின் சிறப்புரையை கேட்டு பயனடைவதற்கு நமது கம்பள விருட்சம் அறக்கட்டளை இரண்டாம் ஆண்டு பொதுக்குழுவிற்கு வருகை தருவது மிக்க மகிழ்ச்சி ...

கம்பளவிருட்சம் அறக்கட்டளை
விழா ஒருங்கிணைப்பு குழு ..


வெள்ளி, 28 செப்டம்பர், 2018

தொழில்நுட்பத்தை விரல் நுனியில் வைத்திருக்கும் தந்தையாக மாறுவதற்கான டிப்ஸ்...

இன்றைய கால கட்டத்தில் நகரத்தில் வாழும் தந்தைமார்கள் தங்கள் குழந்தைகளுடன் பிணைப்பை அதிகரிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்.
இணையதளத்தில் ஃபார்ம்வில்லே விளையாட்டை உங்கள் மகனுடன் போட்டி போட்டு கொண்டு விளையாடும் தந்தையா நீங்கள்? இரவு உண்ணும் போது சந்தையில் புதிதாக வந்துள்ள ஸ்மார்ட்ஃபோன் பற்றி பேசி கொண்டிருக்கும் தந்தையா நீங்கள்? அப்படியானால் நீங்கள் ஒரு நவீன தந்தை என்ற பட்டத்தை பெறுவீர்கள். இவ்வகை தந்தைகள் தங்கள் குழந்தைகளுடன் மிகவும் உற்சாகத்துடனும், பிணைப்புடனும் திகழ்வார்கள்.
* புதிய காட்ஜெட்ஸ் மற்றும் கிஸ்மொஸ் பற்றிய விவரங்களை வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை இணையதளத்திற்கு சென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
* உங்களுக்கு ஏதாவது தொழில்நுட்ப வார்த்தை புரியவில்லை அல்லது அதில் சந்தேகம் ஏற்பட்டால் தயங்காமல் உங்கள் குழந்தையிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
* உங்கள் குழந்தை வீடியோ கேம்ஸ் அல்லது கைப்பேசி வாங்க கடைக்கு சென்றால் நீங்களும் அவர்களுடன் செல்லுங்கள்.
* உங்கள் குழந்தைகளுடன் உரையாட சமுதாய வலைதளங்களை பயன்படுத்துங்கள். இருப்பினும் உங்கள் குழந்தைகளின் இணையதள பயன்பாட்டில் நீங்கள் ஓரளவுக்கு மேல் தலையிடக் கூடாது.
*தங்கள் குழந்தைகளுடன் உரையாட, பத்தில் ஏழு பெற்றோர்கள் சமுதாய வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர்.
*இந்த எண்ணிக்கையை இந்தியாவில் எதிர்ப்பார்க்க முடியாவிட்டாலும் கூட, நம் நாட்டு நகரங்களிலும் பல பெற்றோர்கள் இன்று சமுதாய வலைத்தளங்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். சொல்லப் போனால் இன்றைய டீனேஜ் குழந்தைகள் சமுதாய வலைதளங்களில் தங்களுடைய பெற்றோரையும் நண்பர்கள் பட்டியலில் சேர்கின்றனர்.
*இருப்பினும் தங்கள் குழந்தைகளுடன் சமுதாய வலைதளங்களில் உரையாடும் பெற்றோர்கள் அவர்களுக்கான வரைமுறையை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
*தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குழந்தைகளுடன் பிணைப்பை ஏற்படுத்துவது எப்படி?
*குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை விட்டு விலகி பள்ளிக்கு சென்று அது சம்பந்தப்பட்ட செயல்களில் ஈடுபட்டு கொண்டிருப்பார்கள். இருப்பினும் பொது அறிவு மற்றும் விருப்புகள் ஒரு உறவை சிறப்பான முறையில் மேம்படும். அதனால் தொழில் நுட்பத்தை கொண்டு குழந்தைகளுடன் பிணைப்பை உண்டாக்க முற்படும் போது அது குழந்தைகளையும் ஊக்குவிக்கும்.
என்றும் அன்புடன் உடுமலை ஷியாம் சுதிர் சிவக்குமார் -9944066681......

புதன், 26 செப்டம்பர், 2018

கம்பள விருட்சம் அறக்கட்டளை -இரண்டாம் ஆண்டு ...பொதுகுழு அக்டோபர் 7..2018..

வளரும் விருச்சத்தின் விழுதுகள் ....1

திரு .பெ .செந்தில் ராமன் ...(இன்றைய அறிமுகம் உடுமலைப்பகுதியிலிருந்து )
அழைப்பு எண் :9789491415....

கோவை மாவட்டம் பத்திரிகை உலகில் செல்லமாக செந்தில் ராம் ... என்று அழைக்கப்படுபவர்.இவர் பிறந்தது உடுமலை அருகே உள்ள கம்பாளப்பட்டி கிராமம் . அப்பா பெயர் :திரு .பெரியசாமி ..தாயின் பெயர் .திருமதி .சரஸ்வதி அம்மாள்(late ) செந்தில் ராம் அவர்களுக்கு இரண்டு சகோதிரிகள் உள்ளனர் .அவரின் பெயர் .திருமதி .லீலாவதி ..ஆவின் செயலாளர் ..ஜெகதீஸ்வரி -lic ஏஜென்ட் ..சென்ட்ரல் வங்கியின் ரெப்ரெசென்டடிவ் வாக ..உடுமலை அருகே உள்ள ராஜாவூரில் வசித்து வருகிறார்கள் ...அப்பா .தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் பணியாளராக பணியாற்றி ஒய்வு பெற்று உள்ளார் .வேலை நிமித்தம் காரணமாக ,தன்குழந்தைகளுக்கு நல்ல கல்விக்கு ஆகவும் .அடிவள்ளி கிராமத்தில்..வசித்து வருகிறார்கள் .
செந்தில் ராம் .. படித்த பள்ளி கட்டுப்பாட்டிற்கு ,கல்விக்கும் பெயர் பெற்ற ஏ .நாகூர் மேல்நிலை பள்ளியில் 10-ம் வகுப்புமுடிய படித்து ..தொழில் கல்வி கற்கவேண்டும் என எண்ணி ..இப்பொழுதும் உலக புகழ்பெற்ற பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்-இல் . டிப்ளமோ ஜவுளி தொழில்நுட்பம்(DTT )படித்து முடித்துள்ளார் ..அவர் இத்துறையை எடுக்க காரணம் ..உடுமலை பஞ்சாலைகளுக்கு உலகபுகழ்பெற்று விளங்கியது.வேலைவாய்ப்பு அதிகம் இருந்ததால் .படித்து பஞ்சாலையில் இரண்டாண்டு காலம் .மேற்பார்வையாளராக பணிபுரிந்துவந்தார்....இருந்தாலும் ஒரு கட்டத்தில் நம் சமுதாயத்திற்கும் ,பொதுமக்கள் பணி சார்ந்த சேவை செய்யவேண்டும் என்ற ஆசை சிறு வயதிலேயே துளிவிற்று இருந்தகாரணத்தால் ..அதற்கு பத்திரிகை துறைதான் சரியான தேர்வு என்று முடிவெடுத்து,அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 

journalism..படித்து ..அவர் தந்தையின் வழிகாட்டுதலின் படி பத்திரிகை துறையில் ..முதன் முதலாக உடுமலைப்பகுதிக்கு நிருபராக சேர்ந்தார் ..2006 வருடம் முதல் ..இந்நாள் முடிய 11 வருடம் வெற்றிகரமாக பணியாற்றி கொண்டுஉள்ளர் ..இவருக்கு ..தமிழ் இந்து ,தினகரன் ,இன்னும் புகழ்பெற்ற பத்திரிகை வாய்ப்பு வந்தும் ..உடுமலையின் மேல் பற்று காரணமாக மறுத்து ..தினமலர் பத்திரிகையில் பணியாற்றி கொண்டுஇருக்கிறார் .கோவை ,பொள்ளாச்சி ,உடுமலை பகுதிக்கு சுட ,சுட, செய்திகளை அளித்து பெயர் பெற்று  உள்ளார் ..அதுவும் உடுமலை உள்ளூர் செய்தியை மண் மனம் மாறாமல் செய்திகளை,நடு நிலையோடு அளித்துக்கொண்டுள்ளார் ....தனக்கென்று தனித்துவம் பெற்று திகழ்கிறார் ...இவர் நம் சுற்றி இருக்கும் கோவில்கள் ,பழமைவாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க ,கண்டியம்மன் ,சிஞ்சுவாடி ,வல்லகொண்டம்மன் ,மலைக்கோவில் ,திருமூர்த்தி மலை ,மையவாடி மாரியம்மன் கோவில் ,உடுமலை மாரியம்மன் கோவில் ,அழகாகாக அதன் வரலாறுகளை எழுதி...நம் சமுதாயத்திற்கு பணியாற்றி உள்ளார் ...அதைவிட விடுதலைப்போருக்கு வித்திட்ட மாவீரர் தளி எதுலப்ப மன்னரின் சிலைகளை மற்றும் ஜல்லிபட்டி தெற்கு பகுதியின் மலைமேல் உள்ள போடி தாத்தா புலிக்கல் வீரர்களின் சிலைகளை கண்டுபிடித்து செய்தியாக வெளியிட்டு ,தொல்லியல் துறை கவனத்திற்கு கொண்டுசென்று சிலைகளை பாதுகாப்பாகவும் ,நம் சமுதாய மக்கள் வழிபடுவதற்கு வழிசெய்துள்ளார்..கம்பள சமுதாயத்திற்கு தான் பணிபுரியும் துறையை பயன்படுத்தி எல்லா மக்களுக்கும் அறியும்வகையில் பணிசெய்துகொண்டுள்ளார் .மக்கள் பணியில் நம் சமுதாயப்பணியையும் வெற்றிகரமாக செய்துள்ளார் ..பணிகள் இன்னும் தொடரும் ..

செந்தில் ராம் அவர்களுக்கு ...காயத்திரி என்ற மனைவியும் இரண்டு பெண் செல்வங்கள் கீர்த்தனா ,மதுமிதா உள்ளார்கள் 

காயத்திரி அவர்களை பற்றி சிறு தகவல் ..ராஜாவூர் என்ற ஊரில் பெரிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்..அவரது கல்வி ..Msc ,B E d படித்து ,தன் குழந்தைச்செல்வங்களையும் ,பணியிலிருந்து ஒய்வு பெற்ற தன் மாமனாரையும்  பொக்கிஷமாக பாதுகாத்து கொண்டுள்ளார் ..

காயத்திரி அவர்கள் Msc ,B E d படித்துவிட்டு ..புகுந்த வீட்டின் விவசாய நிலத்தில் தென்னைகளை நற்று முழுநேர விவசாயத்தியும் செய்துவருகிறார் ..இன்றைய பெண்கள் படித்துவிட்டு ,விவசாயத்தை மறந்து ,அலுவுலகம் தான் செல்வேன் என்று அடம்பி டிக்கும் இக் காலகட்டத்தில் விவசாயத்தை வெற்றிகரமாக செய்துவருவதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன் ..மனமார்ந்த வாழ்த்துக்களும் கூட ...,,பத்திரிகை துறை என்பது 24 மணிநேரமாக கண்ணும் கருத்துமாக ,விழுப்புடன் இருக்கவேண்டிய பணி..செந்தில் ராம் அவர்களுக்கு பணியில் முழுசுதந்திரம் கொடுத்து (இப்ப எங்க இருக்கீங்க ,எப்ப வருவீங்க ,அங்க போகணும்,இங்கேபோகணும் என்று ஒரு தொந்தரவும் இல்லாமல் )இந்த சுதந்திரம் இருந்ததினால் தான் ஒரு வெற்றிகரமான பத்திரிகை உலகில் பெயர்பெற்று உள்ளார் ..அதற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...இவர் எனக்கு அறிமுகமானதே முகநூலில் தான் ..நம் சொந்தம் என்று தெரியாது ..எனக்கு ஒரு நண்பராகவும் ,மாப்பிளையை என்று செல்லமாக அழைப்பது எனக்கும் பெருமையும்  கூட

மாப்பிளை அழகான ..அறிவான ..துடிப்பு மிக்க 5 இளைய சொந்தங்களை நான் பணிபுரியும்  நிறுவனத்திற்கு அளித்தது பெரும் மகிழ்ச்சி ..பொள்ளச்சி ,கோவையில் பேர் சொல்லும் பிள்ளைகளாக வளர்ந்து வருவது கூடுதல் சிறப்பு ..செந்தில் ராமன் ..கம்பள விருட்சத்தின் செயல்குழு உறுப்பினர் ..வளரும் இளைய சொந்தங்களுக்கு வழிகாட்டி ...

நன்றியுடன் ...

சிவக்குமார் ..9944066681

கம்பள விருட்சம் அறக்கட்டளை 

உடுமலைப்பேட்டை ...

திங்கள், 24 செப்டம்பர், 2018

உடுமலை நாராயண கவி
-முனைவர் க இந்திரசித்து
உடுமலை நாராயணகவி !
நீ
பேருக்கு வாழந்தவன் அல்லன் :
ஊருக்குப் பேர்தந்தவன்
உலகத்தின் உச்சியில்
உடுமலையின் பெயரை
உச்சரிக்க வைத்தவன்
இமயத்தின் உயரத்தில்
உடுமலையின் இதயத்தை
உயர்த்தி வைத்தவன்
நாத்திக மருந்து ஏந்திவந்த
மருத்துவன் நீ !
ஆனால் அந்த ஆத்திக
நஞ்சு அருந்தி வந்த
அயலவர்கள் உன்னை
அவமதித்தார்கள் .
பகுத்தறிவுச் சோலையில்
பாட்டியசைத்து
அறிவியல் கடலில் துடிப்பசைத்து
திரை வானத்தில்
தீந்தமிழால் நீந்தி வந்தவன் நீ !
காசிக்கும் ஊசிக்கும்
இணைப்பு ஏற்படுத்திய
இலக்கிய நயம்
இன்னும் கூட இதயத்தில்
சிலிர்ப்பேறபடுத்துகிறது.
குரங்கிலிருந்து பிறந்த குரங்கை
மறுபடியும் மனிதனாக்கிய
உன்
பாட்டுப்பாடி மலர்ச்சிக கொள்கையை
பாராட்டி மகிழ்கின்றேன்
****************
நாளை...
பகுத்தறிவுப் பாவலர்...
உடுமலை நாராயணகவி
120 ஆம் பிறந்த நாள் விழா..
25.09.2018 செவ்வாய் 
உடுமலை நாராயணகவி நினைவு மணிமண்டகம்,
உடுமலைப்பேட்டை.....

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

இன்றைய  ஞாயிறு கம்பளவிருட்சம் அறக்கட்டளை கூட்டம் ....லிங்கம்மவூர்

கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் மாதாந்திர செயற்குழு கூட்டம் ஊரைச்சுற்றி தென்னை மரங்களும் ,அழகிய துள்ளித்திரியும் நமது குலதெய்வ கால்நடைகளும் ,கோழிகொஞ்சுகளும் ,,காற்றாலைகள் தவழும் லிங்கம்மவூர் ஊரில் பசுமை மாற ஊடுபயிர்களும் ,நம் ஊரைச்சுற்றி இருக்கும் கால்நடைகளை காக்கும் நம் முன்னோர்வாழந்த  வழிபட்ட தாத்தையன் தெய்வங்கள் அமைந்திருப்பது அருமை ...லிங்கம்மவூர் இருக்கும் மாப்பிள்ளை திரு .பாப்புசாமி (கோவை -LMW )அவர்கள் ..இந்த ஊரின் நமது சொந்தங்களுக்கு சரியான கல்வி ,வேலைவாய்ப்புகளில் இருபது வருடங்களுக்கு முன்னேற வழிகாட்டியாக இருந்துள்ளது இந்த ஊரின் சிறப்பு ..தற்பொழுது நமது தலைமுறைகள் திறமை வாய்ந்த பணிகளில் ,கல்விகற்று  வளரும் இளம் சொந்தங்களுக்கு வழிகாட்டிக்கொண்டுள்ளார்கள் நம் மாப்பிளை .கேப்டன் நித்தியானந்தம் ..தனியார் நிறுவனத்தில் பணிசெய்துகொண்டும் ,பணிநேரம் போக விவசாய தொழில் பெற்றோருக்குஉதவியாக உள்ளது பெரும் மகிழ்ச்சி ..விவசாயத்தை மறக்கும் காலத்தில் இருப்பதால் இதை சொல்கிறேன் வாழ்த்துக்கள் மாப்பிள ..இன்று சந்திக்க முடியாத புகைப்பட கலைஞர் திரு .கிருஷ்ணன் அவர்கள்  வசிக்கும் ஊர் .இந்த மாப்பிள ..தினத்தந்தி விநியோகதஸ்தர் ,செய்தி நிருபராகவும் தன்னால் முடிந்த அளவு நம் சமுதாய சொந்தங்களுக்கு உதவி செய்வது மிக்க மகிழ்ச்சி ..வாழ்த்துக்கள் மாப்பிள ..அருமை மாப்பிள ..திரு .ஜெகதீஷ் அவர்கள் ,நெடுஞ்சாலை துறையில் பணிசெய்துகொண்டுவருகிறார் ..மாப்பிள சமுதாய சொந்தத்தில் பொது தளத்தில் -அரசு தொழில் அமைப்பில் பொருளாளராக வீறுகொண்டு பணியாற்றி கொண்டிருப்பது மகிழ்ச்சி ..எந்த ஒரு சூழ்நிலையிலும் கோபப்படாமல் ..பெருந்தன்மையுடன் சமுதாய நிகழ்வுகள் ஆனாலும் ,அவர் சார்ந்த அமைப்பானாலும் அழகா அடுத்த கட்டத்திற்கு  எடுத்து செல்பவர் வாழ்த்துக்கள் மாப்பிள ..இன்று செயற்குழு கூட்டத்திற்கு பொள்ளாச்சியில் இருந்து வந்திருந்த மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு .அசோகன் அவர்கள் ..நன்றிகள் ..செயல்குழு கூட்டத்தில் நடந்த விவாதங்களை கேட்டறிந்தார் ..பொதுக்குழுவிற்கு சில ஆலோசனைகளை தந்து உதவினார் ..நாங்கள் கேக்காமலேயே வருட சந்தாவையும் ,பொதுக்குழுவிற்கு செலவு குண்டான பொறுப்பை ஏற்றுக்கொண்டது அவரின் பெருந்தன்மையை காட்டி எங்களுக்கு வழிகாட்டியது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி ..வாழ்த்துக்கள் சார் ..இன்று வந்திருந்த திரு .தினேஷ் மாப்பிள்ளை (ஒளி ,ஓலி அமைப்பாளர் )கரப்பாடியில் இருந்து தம்பிக்கும் ,பொன்னேரியில் இருந்து வந்திருந்த மாப்பிள்ளைக்கும் ,நன்றி ...வரும் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் பொதுக்குழுவிற்கு 07.10.2018...இடம் ..தளி யில் நடைபெறும்  நிகழ்ச்சிகள் குறித்து பேசி முடிவெடுத்தது இன்றய செயல்குழு கூட்டம் நமது அன்பு மாப்பிள்ளையின் விருந்தோம்பலால் கொஞ்சம் திக்குமுக்காடி போனோம் ..செயற்குழு அருமையாக அமைந்தது மிக்க மகிழ்ச்சி ..என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681..