வெள்ளி, 13 ஏப்ரல், 2018

எனது நண்பர் ...நீண்ட வருடம் அமெரிக்காவில் வசித்துவரும் திருமதி .கீதா சந்திரா அக்காவின்  சிறு கிறுக்கல்கள் ...உங்களுக்கும் பிடிக்கும் ....

சந்திப்போம் பிரிவோம்
=========================
சற்றே நீளமான கதை . பாத்ரூமில் உட்கார்ந்து போனில் facebook பார்ப்பவரென்றால் piles வரும் அபாயம் உண்டு. அதனால் சாயங்காலம் படித்துக் கொள்ளுங்கள்.
எனது #Trainல்கிறுக்கியது#7 உப்பா சர்க்கரையா கதையில் சண்டை போட்டு தொலைத்த ரவியை சல்லடை போட்டு தேடிக் கண்டுபிடித்தேன். 27 வருடங்கள் கழித்துக் கண்டுபிடித்த அவனை , இந்த கதையின் முடிவில் கட்டையால் நாலு சாத்து சாத்த முற்பட்டதும் உண்மையே…
இத்தனை நாள் நைஜிரியாவில் வேலை பார்த்து இந்தியா திரும்பி மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக சொன்னான். நான் வேலை விஷயமாக இந்தியா வரும்போது மும்பையில் ஒரு நாள் இறங்கி தன்னைப் பார்த்துவிட்டு போகுமாறு சொன்னான்
Flight இல் கண்ணை மூடியதும் நான் , ரவி , நாய்க்கடி ஜனா மூவரும் அடித்த கூத்துக்கள் நினைவுக்கு வந்து தூக்கத்தில் முறுவலிக்க வைத்தது….ரவி அப்போதே பிரம்மாண்டமாக இருப்பான் அதற்கு மேல் வளர வாய்ப்பில்லை தான்…
எந்த கவலையுமின்றி நான் ,அவன் ,ஜனா , மூவரும் ரசீதுகளில் இருந்து தடிமனான லெட்ஜர்களுக்கு vouching பார்த்தபடி , ,ஒன் பை த்ரீ டீ குடித்துக் கொண்டு , ஆடிட்டர் அமாவாசை தர்ப்பணம் முடிந்து full மீல்ஸ் சாப்பிட்டு நேரே ஆபிஸ் வருவாரா ? இல்லை குட்டி தூக்கம் போட்டு வருவாரா போன்ற மாபெரும் விஷயங்களுக்கு பெட் கட்டி பொழுதை ஓட்டிய பொற்காலம் அது.
எங்களுடைய பெரிய பொழுதுபோக்கே ரவி எந்த பெண்ணை மடக்க நினைக்கிறான், அதற்கான SWOT analysis பற்றி அவனது அரிய கருத்துக்களை கேட்பது தான். முதலில் என்னுள் இருந்த பெண்ணியம் கொதித்துப் போய் “அதெப்படி மடக்கறதுங்கற வார்த்தையை யூஸ் பண்ணுவ….நாங்க என்ன புடவையா?” என்று குதித்தேன். பின்னர் இவன் வெறும் வெத்து வாய் சவடால்….பொண்ண மடக்கறதாவது பொண்ணு போட்டோவை கூட மடக்க முடியாது என்று தெரிந்து சிரித்தபடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்
ஆபீஸ் எதிர்த்தாற்போல் ஒரு டைப் இன்ஸ்டிடியூட் உண்டு. ஒவ்வொரு கிளாஸ் முடியும் போதும் இவனும் ஜனாவும் வாசலில் நின்று அத்தனை அம்மணிகளையும் நோட்டம் விடுவார்கள். நான் அவனிடம்..” பாவம் ஒண்ணு கூட உன்னை திரும்பி பாக்க மாட்டேங்குதே “ என்பேன். “இப்ப பாரு இப்ப பாரு தெரு முனைக்கு போனதும் ஒரு square drive அடிப்பா பாரு “ என்பான்… அப்படி அவனை திரும்பி பார்த்தவள் தான் கிருஷ்ணன் குட்டி , “கி குட்டி” என்பது ரவி அவளுக்கு வைத்த பெயர். அப்போது அவள் இயற் பெயர் தெரியாது.
ரவி “கி குட்டி”யை விடாமல் பஸ் ஸ்டாப் , அவள் வீடு , காலேஜ் என்று துரத்திக் கொண்டிருந்தான். அவள் சேர்ந்த டைப்பிங் கிளாசில் இவனும் சேர்ந்து டைப் அடிக்கயில் , மொத்த ASDFGF கீக்களும் கொத்தாய் பேப்பரை கவ்வ ……வாங்கி பார்த்த மாஸ்டர் , ரவியின் விரலைப் பரிசோதித்து “அடேய் இந்த விரலை வெச்சுகிட்டு நீ தவில் தான் வாசிக்கணும் டைபிங்க்லாம் வரக்கூடாது “ என்று கண்டித்து விரட்டியதாய் ஜனா சொன்னான்.
அவள் வருகிறாள் என்று , என்னையும் ஜனாவையும் வேறு அவ்வப்போது துணைக்குக் கூட்டிக்கொண்டு போய் கோவிலைச் சுற்றுவான். இப்போது யோசித்தால் நாங்கள் இருவரும் எதற்காக இவனோடு எடுபிடி மாதிரி சுற்றினோம் என்று புரியவில்லை. அவளுக்கு லெட்டர் குடுக்க என்னை கோவிலுக்குள் இருக்கும் அகோர வீரபத்திரர் சிலைக்கருகில் காக்க வைத்ததில் ஒரு முறை என் மேல் நாலு பேர் வெண்ணெய் பந்தை சாத்தும்ஆபத்து இருந்தது.
.
அவ ளிடம் கொடுப்பதற்க்காக என்னிடம் கவிதைகள் வேறு கடன் வாங்கிப் போவான்…நானும் உருகி….”மண்ணாய் மாற வேண்டுமென்று மானிடன் நான் விரும்புகின்றேன்……மருதோன்றி சிவப்பொளிரும் உன் மாசறு பாதத்தை முத்தமிட” என்றெல்லாம் தாறுமாறாக எழுதிக் கொடுப்பேன். அவனும் கிறுகிறுத்துப் போய்…”ஏய் நீயேவா எழுதின? இல்ல வைரமுத்துட்ட சுட்டியா?” என்று கேட்டு வாங்கிப் போவான். அவள் அதைப் படித்துப் பார்த்துவிட்டு ….”மருதோன்றின்னா என்ன?” என்று கேட்டு விட மறுமுறை மறக்காமல் பொழிப்புரை வாங்கிப் போனான்
“பேங்க் ல போட்டா அந்த செக் தாவுதாம்…ஏன்னா அது பௌண்ஸ் ஆன செக்காம்” போன்ற அந்துருண்டை ஜோக்குகளையெல்லாம் சொல்லி கடைசியில் “கி குட்டி” (இப்போது இவள் பெயர் வினோதா என்று தெரிந்து கொண்டேன்) இவனிடம் மயங்கித்தான் போனது….ஒரு மாதிரி அவள் அம்மாவிற்கு ரேஷன் வாங்கிக்கொடுத்து , அப்பாவிற்கு சைக்கிள் துடைத்துக் கொடுத்து , குடும்ப நண்பன் ஆகி விட்டான்.
நான் கூட “அடடா இந்த யானையும் பால் குடிக்குமா ங்கிற மாதிரி இருந்து இப்படி சாதிச்சிட்டயே” என்று அந்த ஆன்மீக காதலை சிலாகித்தேன்.
சுமுகமாய் போய்க்கொண்டிருந்த அந்த மரோசரித்ராவில் திருப்பம் , வினோதாவின் அப்பா வீடியோவில் ஆங்கிலதிரில்லர் படம் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதுதான். ரவியிடம் வீடியோ VCR இருந்தது. அதை அவன் வீட்டில் இருந்து வினோதா வீட்டுக்கு எடுத்துக் போய் சுபயோக சுபதினத்தில்…..படம் பெயர் சரிவர நினைவில்லை “Day of the Jackal” என்று நினைக்கிறேன் ….படம் பார்க்க ஏற்பாடாயிற்று….ஆங்கிலப் படங்களை முழுதும் நம்ப முடியாதாகையால் ..ஜனா முன்னாடி டிவி அருகில் தயார் நிலையில் உட்கார்ந்து இருந்தான். பின்னால் சேரில் வினோதா, நான், அவள் அம்மா, பாட்டி, தாத்தா, அப்பா, கொள்ளுத்தாத்தா மற்றும் ரவி.. படம் விறுவிறுப்பாகவே போனது…திடீரென்று சற்றும் எதிர்பாராமல் ஹீரோ குளித்து விட்டு பப்பி ஷேமாய் வெளியே வந்தான். ரவி திகைத்து….”ஜனா” என்று பதற, தயாராய் இல்லாத ஜனா பதட்டத்தில் “Pause” பட்டனை அழுத்தினான். திரையில் பிம்பம் உறைந்து திகம்பர சாமியாராக ஹீரோ நிற்க, .ரவி மேலும் அலற ஜனா இன்னும் பதட்டத்தில் volume ஐ குறைக்க,,, கொள்ளுத்தாத்தா ஒன்றும் புரியாமல் கண்ணாடியைத் துடைத்து மாட்ட…அந்த களேபரத்தில் நான் எஸ்கேப்…..
அதன் பின்னர் எனக்கும் ரவிக்கும் ஏதோ அற்ப புத்தக விவகாரத்தில் சண்டை வந்து, பிரிந்து , பேச்சு வார்த்தை இல்லாமல் , இதோ இப்போது தான் ஏர்போர்ட்டில் சந்தித்து உருகி அவனுடன் வீட்டிற்கு போகிறேன்
அவன் மனைவி…..நீங்கள் நினைத்தது சரி தான்…வினோதா சிரித்தபடி வரவேற்றாள்
“ உங்கள பத்தி நாங்க நினைக்காத நாள் இல்ல” என்றாள். இது ஒரு வரம் ,...மனைவியின் நட்புக்களை கணவனும் கணவனின் நட்புக்களை மனைவியும் அன்புடன் அங்கீகரிப்பது நெகிழ்ச்சி.
மனம் நெகிழ்ந்து சிரித்தபோது ரவியின் பெண் உள்ளே வந்தாள்…..அசர வைக்கும் அழகு அம்மாவைப்போல்,
அறிமுகம் முடிந்ததும் ரவி அவளிடம் சிடுசிடுப்புடன் குரல் தாழ்த்தி….”யார் கொண்டு வந்து drop பண்ணினான்” என்று ஏதேதோ அதட்டியபடி உள்ளே போனான்--------
சிறிது நிமிடத்தில் வெளியே வந்து என்னிடம்….”இந்த காலத்து பசங்கள நம்ப முடியாது,,, வயசுப் பொண்ண வளக்கறதுக்குள்ள போதும் போதும்னு இருக்கு கண்டவனும் பின்னாடி சுத்தறான்” என்று சலித்துக் கொண்டான்
நான் வியப்போடு அவனைப் பார்த்தேன்…
சுற்றுமுற்றும் தேடினேன்
அவன்..” என்ன தேடறே ?” என்றான்
“உன் மண்டைல அடிக்க ஒரு கட்டைய” என்றேன்
வினோதா சிரித்தபடி என்கிட்டே குடு என்றாள்..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681....

வடம் பிடித்த தேர்
என்றும் தடம் மாறாது ...



சித்திரை வருட வாழ்த்துக்கள் 
*******************************
புதிய ஊர் ..
புதிய முகங்கள் ...
புதிய வாழ்கை ...
புதிய சித்திரை பூக்கள் ...
புதிய சித்திரை திருநாள் ...

பூத்த பூக்கள் எல்லாம் புது வாசம் 
வீசி வர !!
புள்ளினங்கள் மெல்லிசையில் புது ராகம் 
பாடி வர !!!
புதுப் புனலும் புவி எல்லாம் புது வேகமுடன் 
மேவி வர !!!
தெள்ளு தமிழ் பாவலரும் தீந் தமிழில் 
பா மொழிய !!!
செங்கதிரோன் கிரணமது திக்கெட்டும் 
பரவி வர !!!
சித்திரை மகளாரை இத்தினத்தில் எதிர் 
பார்த்து ..
இத்தரணி தமிழர் எல்லாம் 
மஞ்சளொடு குங்குமமும் ,
மாவிலை தோரணமும் 
நெல்மணியின் பொங்கலுடன் 
விஜய வருடத்தினை வருக!! வருக !!!
என்றே வரவேற்க காத்து நிற்கும் 
எம் அனைத்து சொந்தங்களுக்கும் 
அன்பு கனிந்த புது வருட வாழ்த்துக்கள் !!
அனைவருக்கும் கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக இனிய தமிழ் புத்தாண்டு 

வாழ்த்துக்கள் 

ஷ்யாம் சுதிர் சிவக்குமார் ..

பகிரளி எண் ...9944066681....

சித்திரை அடை மழையால் கோடைகாலத்தில் பூக்கும் மரங்களின் பூக்கள் வெகுவாக அழிந்துவிட்டது . வேம்பு,புங்கண் மற்றும் இலுப்பை மரங்கள் ... சித்திரை மழை சிவன் சொத்து நாசம் என்பார்கள்.. நமக்கு வியர்க்கவில்லை ஆனால் இந்த அடைமழை இயற்கைக்கு இடைச்சல் தான்..மேற்குத்தொடர்ச்சி மலையில் முன்பு கிடைத்த தேனின் அளவு ஆண்டுக்கு எட்டு டன் ஆனால் இப்போது மூன்றரை டன்னாக குறைந்ததிருக்கிறது. இதற்கு காரணம் பருவம்தவறிப் பெய்யும் மழையால் பூக்கள் பூக்கும் காலம் மாறுவது தான் .தேனீக்கள் மறைந்து விட்டால் மனிதர்க்களுக்கு மிச்சம் இருப்பது நான்காண்டு வாழ்க்கை தான் என்ற ஐன்ஸ்டீனின் கருத்தை கவனத்தில் கொள்ளவேண்டும்...


நம் கம்பள சொந்தங்கள் அதிகம் இருக்கும் ஊர் ..நம் கம்பள குழந்தைச்செல்வங்கள் படிக்கும் பள்ளி ...ஏதோ உரையை கேட்டு ...ஒரு ips ..ஒரு ias ..ஆகா வாய்ப்பு உள்ளது ...சிறு நம்பிக்கை ..தான் 

வியாழன், 12 ஏப்ரல், 2018

என் இனிய நண்பர் ...உடுமலை Rtn.முருகநாதன் ராஜரத்தினம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...👍💐💐💐💐🌹🌹🌹🌿🌿🌿🌷🌷🌷 — celebrating a birthday with R Muruganathan Rajarathnam in Udumalaippettai.


104 டிகிரி வெயில் ....யம்மாடியோ அடிக்கற வெயிலுக்கு இப்படிதான் இருக்கணும்போல ...ஷ்யாமுடன் திருமூர்த்தி அணை நீச்சல் குளத்தில் — at Thirumoorthy Hills.

திங்கள், 9 ஏப்ரல், 2018

ஏப்ரல் 29...2018...உடுமலையில் தேவராட்டம்
குட்டைத்திடலில் கூடிடுவோம்
ஆயிரம் பேர் அற்புதமாக ஆடக்கூடிய
அற்புதப் பெருவிழா
அனைவரும் வாருங்கள்
பகுத்தறிவுக் கவிராயரையும்
தளி எதுலப்ப மன்னரையும்
நினைவு கூர்வோம் .
வாருங்கள் ஏப்ரல் 29 உடுமலை குட்டைதிடலுக்கு ...
மதியம் ...3.30 மணி அளவில் ...
தொடர்பு எண்கள் ..
கார்த்தி ..SR ..9698082028
அருட்செல்வம் ....9842091244
சிவக்குமார் ...9944066681


அருமை ..மாம்ஸ் ..நீங்கள் சொல்லவில்லையென்றாலும் ...நான் கேட்டு இருக்கிறேன் ...உங்களின் அளப்பறியா சமுதாய சேவையை ...முன்னுதாரணமாக கொண்டு தான் ...நாங்கள் இயங்கி கொண்டு இருக்கிறோம் ...யாருக்கும் சொல்வதில்லை என்று நிறைய பேர் வருத்தப்படுகிறார்கள் ...அவர்களாகவே தன்னிச்சையாக முடிவு செய்கிறார்கள் ...புளிதி வாரி தூற்றி வார்கள் ...அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் எங்களின் பணிகளை இளைய சொந்தங்கள் மூலம் நிறைவேற்றிக்கொண்டுள்ளோம் .....உங்களின் ஆலோசனைகள் ..வழிகாட்டல்கள் ...கடந்த 5 வருடங்களுக்கு மேல் ..உங்களை சந்திக்காமல் ..ஓரிருமுறை தொலைபேசியில் பேசி இருக்கிறேன் உங்களுடன் ....என்றும் உங்கள் ஆசியுடன் தொடர்கிறோம் ...

கண்டிப்பாக தெரிவிக்கலாம் ...தெரிவிப்பது நம் கடமை ...

இந்த வருடம் நம் சொந்தம்..தாய் தந்தை இழந்த மாணவருக்கு கல்வி தொகை ஒரு வருட செமஸ்டர் தொகை ஏற்பாடு செய்துள்ளளோம் ...கல்வி திட்டங்கள் இந்த மாத கம்பள விருட்சம் அறக்கட்டளை தீர்மானத்தில் நிறைவேற்றி செயல்படுத்த உள்ளோம் ..

நம் தம்பிகள் ..அருமை ...திறமையான மாப்பிள்ளைகளை  வைத்துக்கொண்டு ..ஆண்ட்ராயிடு மொபைல் வைத்துக்கொண்டு ...ஜாலியாக ஊர் சுற்றமால் ...வேலைவாய்ப்பை ஏற்படுத்துக்கொண்டு தங்களையும் பாதுகாத்துக்கொண்டு ...நம் வரலாற்றை யம் ,,அரசு துறைகளை தொடர்பு கொண்டு ..ஆவணங்களையும் அள்ளிக்கொண்டு நம்ம வீரத்தின் விளைநிலை பாளையக்காரர் வரலாறுகளை ...நம் சமுதாய தலைவர்களின் வழிகாட்டல்களின்படி ..முன்னேறி கொண்டு உள்ளோம் ...இதில் புதிய தொழில் தொடங்க ஆர்வம் ,அதற்கான திட்டங்களை வகுத்துக்கொண்டும் ..நல்ல நிறுவனங்களில் சில வருடம் பயிற்சி எடுத்துக்கொண்டு ..அதை மூலதனமாக கொண்டு செயல்பாடுகள் மூலம் செய்துகொண்டு உள்ளோம் ..அதற்கு முழு ஒத்துழைப்பும் ..வழிகாட்டல்கள் கம்பள விருட்சம் அறக்கட்டளை மூலம் செய்துகொண்டுள்ளோம் ...விளம்பரம் இல்லாமல் ...


வேலை யில் இருக்கும் தம்பிகள் ...மாப்பிள்ளைகள் ...தயவு செய்து சொல்லவேண்டாம் என்று என்னிடம் வாக்கு வாங்கி இருக்கிறார்கள் ...ஏன் என்று கேட்டேன் ...உடனே கல்யாண பேச்சு எடுவிடுவார்கள் ..நம் சொந்தங்களின் தூண்டுதல் மூலம் ...ரெண்டு மூணு வருடம் சம்பாதித்து விட்டு ..சொல்கிறோம் ..அது முடிய சொல்லவேண்டாம் என்கிறார்கள் ..நான் என்ன செய்வது மாப்பிள்ளைகள் ,தம்பிகள் வயது 21 டு 24 வயது தான் ஆகிறது ...


கண்டிப்பாக பதிவிடுகிறேன் ...இது என் சமுதாய கடமையும் கூட ...

ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

நேற்றும் இன்றும் ...கடுமையான சமுதாய பணிகள்..

இன்று காலை தேவராட்ட திருவிழா அழைப்பிதழ் கொடுத்து வரவேண்டிய வேலை (கடமை )..கொடுங்கியதிலிருந்து  இருந்து நானும் ..நம்ம மாப்பிள்ளைகள் ..கார்த்தி SR ..கொடுங்கியம் செந்தில் ..நம்ம jms travels சேகர் அண்ணனுடன்  ,சேர்ந்து பயணத்தை ஆரம்பித்தோம் ...முதலில் நம்ம அருமையா தம்பி கொடுங்கியம் மேகானந்தன் வீட்டுக்கு சென்றோம் ..தம்பி ஆன்மீக பயணம் சென்றுள்ளார்கள் என்றனர் ..அதை தொடர்ந்து தளி ஜல்லிபட்டியில் நூலகர் லக்ஷ்மணசாமி அவர்களை சந்தித்து அழைப்பிதழ் தந்துவிட்டு வந்தது மிக்க மகிழ்ச்சி ..இவர் நம் சமுதாய மக்கள் மீது பற்றுகொண்டவர் ..அடுத்தது நம் வைகோ என்று செல்லமாக அழைக்கும் ..கோபால் மாமாவை சந்தித்து அழைப்பிதழ் அளித்து ...அவர்களிடம் விழாவிற்கு  தகந்த ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு விடைபெற்றோம் ..
தளிவழியாக பொன்னலம்மன் சோலையில் உள்ள நமது பண்பாட்டுக்களாக பொருளாளர் வீட்டுக்கு சென்று அழைப்பிதழ் அளித்தோம் ..அவரும் வெளியே சென்றுவிட்டார் ..வல்லகொண்டபுரம் ...JN பாளையம் ..கோபால் அவர்களிடம் அளித்துவிட்டு ..நம்ம மாப்பிள JN பாளையத்தில் உள்ள தோட்டத்தில் இருக்கும் ஷண்முகம் மாப்பிளையை அழைத்தால் ..மாப்பிளையும்  ஆன்மீக பயணம் சென்றுவிட்டார் ..நம்ம வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர் சபரி முத்துவேல் அவர்களை சந்தித்துவிட்டு அழைப்பிதழ் அளித்தது மிக்க மகிழ்ச்சி ..பூவலபருத்தியில் இருக்கும் நம் சொந்தங்கள் ..மோகன் ,விஜய் அவர்களை சந்திக்கலாம் என்றால் அவர்களும் பக்கத்தில் நடக்கும் ரேக்ளா ரேஸுக்கு சென்றுவிட்டார்கள் என்றார்கள் ..கம்பாலப்பட்டி இருக்கும் சொந்தக்களிடம் அழைப்பிதழ் அளித்திவிட்டு ...உப்பிலியனூர் சென்று நம் சொந்தம் வைத்திருக்கும் தேநீர் அருந்திவிட்டு ..அழைப்பிதழ் அளித்து வந்தோம் ..மாமரத்துப்பட்டி ,சின்ன பாப்பனூத்து ,பெரிய பாப்பனூத்து ,விளாமரத்துப்பட்டி ,கொடிங்கியம் வந்துஅடைந்தோம் ...அதற்குள் நம்ம வரலாற்று நடுவம் திடீர் அழைப்பு ..மந்திரி அழைக்கிறார் என்று ...உடனே ..நம் பண்பாட்டு மாநிலசெயல் தலைவர் அய்யா அவர்களையும் அழைத்துக்கொண்டு ...ராமு அவர்களையும் ,பெரியகோட்டை ப்ரெசிடெண்ட் முருகேசன் ,தம்பி தமிழரசன் ,தமிழ் பேராசிரியர் கண்டிமுத்து அவர்களையும் அழைத்துக்கொண்டு உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்த பொழுது இந்த நிகழ்வு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு கண்டிப்பாக கலந்துகொள்ளவேண்டும் ..தேதி மாற்றமுடியுமா என்று கேட்டு அவரின் ஒப்புதலுடன் வருகிற 29 ஞாயிறு மாலை குட்டை திடலில் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொண்டார் ...ஒப்புதல் கிடைத்த உடன் காவல் துறை அதிகாரிகளுடன் சென்று அனுமதி கடிதம் கொடுத்துவிட்டு வந்தவுடன் தான் ஒரு மனநிறைவு எங்களுக்கு ஏற்பட்டது ...இது ஒரு கூட்டு முயற்சி ...பல நெருக்கடிகளை சந்தித்து ..சவால்களையும் மீட்டுஎடுத்து விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு உள்ளது ...மிக்க மகிழ்ச்சி ...


உடுமலைவாழ் மக்களுக்கும் மற்றுமுள்ள சொந்தங்கள் மற்றும் தமிழக தேவராட்ட கலைஞர்கள் அனைவருக்கும் ஓர் முக்கிய அறிவிப்பு

 எதிர்வரும் ஏப்ரல் 22 ல் நடைபெறவிருந்த தேவராட்டப் பெருவிழா
தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு  வாரம் தள்ளிவைக்கப்பட்டு ஏப்ரல் 29 ல்

தமிழ்நாடு கால்நடைத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.  உடுமலை இராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையிலும்

தமிழக செய்தி மற்றும் விளம்பரங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. கடம்பூர் இராஜீ முன்னிலையிலும் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் ...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..பகிரளி எண் ..9944066681...

சனி, 7 ஏப்ரல், 2018

காலத்தால் கரையாத கீதம் ....மக்கள் மனதில் மாமன்னர் ..

நேற்று அய்யா ..கடவூர் மாமன்னர் K K G .முத்தையா அவர்களின் இறப்பு செய்த கேட்டபின் ...கால்கள் நிலையில் இல்ல ...மனதில் ஒரு பாரம் ..கண்களில் கொஞ்சம் நீர்கோர்த்துக்கொண்டது ...நானும் ,பண்பாட்டு கழக மாநில செயல் தலைவர் .அய்யா .முருகவேல் ..உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் .அருட்செல்வம் ..காலையில் கடவூரை நோக்கி பயணித்தோம் ....

கடவூர் மக்கள் மனதில் ,மாசற்ற பொன்னே ,
அள்ளிக்கொடுத்த வள்ளலே ,
எங்கு காண்போம் ...உந்தன் திருமுகத்தை
எப்படி ஆற்றுப்படுத்துவோம் ..
கண்ணீரால் நனைகின்றோம் ..
காமராஜரின் அருமை நண்பரே ..
காமராசரால் கடவூரின் முத்தே என்றைழைக்கப்பட்ட எங்கள் சொத்தே
கக்கனின் உற்ற தோழரே ..சமூகத்திற்காக  உழைத்திட்ட பெரியாரால்
உச்சரிப்பில் மகனே என்றழைக்கப்பட்ட மாந்தரே
எத்தனையோ பணிகள்
எங்கள் நெஞ்சக் கண்ணில் சொல்லி அழுகிறது ..
கடவூர் சட்டமன்றத்தின் நாயகராகவும்
மருங்காபுரி மாசற்ற மனிதப் புனிதராகவும்
ஐந்து முறை இருந்தீர்கள் ..ஐயமாக இருக்கிறது ...
ஈடில்லாப் பணிகள் ...
இலங்கையிலும் உந்தன் கால்கள் பதித்துவிட்டாய்
ஆரம்பபள்ளிக்காக ஐந்து ஏக்கர் நிலம் கொடுத்தாய்
அது மட்டுமல்ல
உயர்நிலைப்பள்ளிக்காக ஏழு ஏக்கர் நிலம் கொடுத்தாய்
உங்களது உயரிய குணத்தால்
பொன்னணி நீர்தேக்கத்திற்காக
270 ஏக்கர் நிலம் அள்ளிக்கொடுத்தாய்
நாங்கள் தண்ணீரை குடிக்கிறோம் ..
அப்பொழுதும் உந்தன் மனம் அடங்கவில்லை
360 ஏக்கரை முழுசாக கொடுத்திட்ட
ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராகவும்
முத்தே ..எங்கள் கடவூரின் சொத்தோ
தண்ணீரை கொடுத்து கண்ணீரை வரவழைத்த
இருபத்தைந்தாண்டு நாயகரே ..
இன்னும் ஒரு முறை வாராதோ ...
எங்களது நெஞ்சில் ஈரம் ..இன்னும் மறையவில்லை ..
எத்தனையோ நேரங்கள் எத்தனையோ காலங்கள் ..
இறப்பே ..உனக்கு இறப்பு வராதோ ..மரணமே ..
எங்களது மண்ணின் மைந்தனை கொண்டு செல்ல மரணமே ..
எப்படி துணிவு வந்தது ..கே கே ஜி ..தனிமனிதரல்ல ..
எங்களது மனதில் குடிகொண்டுள்ள கடவுள் ..
எங்களது மக்களின் நெஞ்சத்தில் மறையா உருவம் ..மறைந்த விட்டது  உருவம் ..மறையாது அவரின் நினைவு கீதம் ..கடவூர் நெஞ்சங்களின் சோகம் ..கடந்துவிட்டது கடவூர் ..
மக்களின் மனதில் கரைந்து விட்டது ......




ஐந்து முறை எம்.எல்.ஏ-வாக இருந்த கடவூர் கே.கே.ஜி.முத்தையா காலமானார்..!
Saturday, 07 Apr, 8.39 am
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து முறை எம்.எல்.ஏ-வாக இருந்த கடவூர் ஜமீன் கே.கே.ஜி.முத்தையா இயற்கை எய்தினார். ஏராளமானோர் அவரது பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
1957-ம் ஆண்டு பஞ்சப்பட்டி தொகுதியில் காமராஜரால் தேர்தலில் நிற்க வைக்கப்பட்டு முதன்முறையாக எம்.எல்.ஏ-வானார் முத்தையா. கடவூர் ஜமீனான அவர், அதன்பிறகு 1962-ம் பீரியடிலும் அதே பஞ்சப்பட்டி தொகுதியில் காமராஜரால் நிற்க வைக்கப்பட்டு வெற்றிவாகை சூடினார். அதன்பிறகு,1967-ம் சட்டமன்றத் தேர்தலில் கடவூர் தொகுதியில் நின்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து அப்போது தி.மு.க சார்பில் போட்டியிட்டவர் தி.மு.க கட்சி ஆரம்பகால தலைவர்களில் ஒருவரும், கலைஞரின் நெருங்கிய நண்பருமான அன்பில் தர்மலிங்கம்.
அதன்பிறகு,1971-ம் ஆண்டில் அதே கடவூர் தொகுதியில் நான்காவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல்,1977-ம் ஆண்டில் கடவூரில் இவரைத் தோற்கடிக்க, அப்போதைய ஆளுங்கட்சியினரால் கடவூர் தொகுதி தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இருந்தாலும், அருகாமை தொகுதியான மருங்காபுரி தொகுதியில் காங்கிரஸ் சார்பாக களம் கண்டு ஐந்தாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினரானார்.
அதன்பிறகு, பல்வேறு உள்ளாட்சி மன்ற பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். மூப்பனார் காங்கிரஸிலிருந்து பிரிந்து த.மா.கா கட்சியை ஆரம்பித்தபோது, கருப்பையா அந்தக் கட்சியில் ஐக்கியமானார்.
இவர் தந்தை பெரியார், காமராஜர், ராஜாஜி, பேரறிஞர் அண்ணா, முத்துராமலிங்க தேவர், எம்.ஜி.ஆர், கலைஞர், மூப்பனார், மா.பொ.சி, சிவாஜி கணேசன், நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோரோடு நெருங்கிப் பழகியர். இவர் கரூர் மாவட்டத்தில் அசைக்க முடியாத தனி செல்வாக்கு உடையவராக இருந்து வந்தார். இவர் ஒரு தொகுதியில் போட்டியிட்டால், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த அந்தத் தொகுதிவாசிகள் யாரும் இவரை எதிர்த்துப் போட்டியிட அஞ்சுவார்கள்.
அதனால், அவரை எதிர்த்து வேட்பாளர்களை வெளி மாவட்டங்களிலிருந்துதான் மாற்றுக்கட்சியினர் தேடிப் பிடித்து நிறுத்துவார்கள். அந்த அளவுக்குச் செல்வாக்கானவர். கடவூர் ஜமீன் என்றாலும், எல்லோரிடமும் இறங்கிப் பழகுவார். அதனாலேயே, அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார்" என்கிறார்கள் கடவூர்வாசிகள். வயோதிகம் காரணமாக அவர் இயற்கை எய்தினார். இவருக்கு கார்த்திக், தொண்டைமான் உள்ளிட்ட ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினர்.


நன்றி ...தகவல் ..திருப்பதி தேவராஜன் ...மாவத்தூர் ..கடவூர் ...



மன்னரின் அரசியல் வாழ்க்கை பற்றி கேட்டவர்களுக்காக இதை பதிவு செய்கிறோம்.

#கடவூர்  ஜமின்தார் ஐயாகே.கே.ஜி முத்தையா அவர்களின் அரசியிலில் அனுபவம் பல வற்றில் இன்று உங்களுக்காக ஒன்று

ஜமின் ஐயா.அவரகள் #நான்காம்முறையாக சட்சபை தேர்தலில் திரு #அன்பில்தர்மலிங்கம் (அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாட்டனார்)அவர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெறுகிறார்..

யராலும் வெல்லமுடியாத காரணத்தினால் கிருஷ்ணராயபுரம் தொகுதி தனித்தொகுதியாக அறிவிக்கப்படுகிறது சில காரணங்களைக் காட்டி...

நான் எந்த தொகுதியில் நின்றாலும் ஜெயிப்பேன் என்பதைக் காட்ட மக்கள் மன்னர் மருங்காபுரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

அப்போது #மதுரைக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற அப்போதைய முதல்வர #எம்.ஜி.ஆர் அவர்கள் மருங்காபுரி தொகுதி எல்லைஆரம்பிக்குமிடத்திலிருந்து தொகுதியின் எல்லை முடியும் வரை தன் காரிலிருக்கும் கட்சி கொடியை கழட்டிவிட சொன்னாராம்.

மருங்காபுரியில் கடவூராருக்கு எதிராக நான் பிரச்சாரம் பண்ணியதாக இருக்ககூடாது
அதனால் கொடியை கழட்டிவிடுங்கள் என்று சொல்லி மருங்காபுரி தொகுதியைத்தாண்டி செனறுவிட்டாராம்.

அந்த தேர்தலில் ஐயா.முத்தையா  அவர்கள் ஜெயித்துவிட்டார்கள்.

அதன்பிறகு தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி விட்டார்கள்.

மாற்றுக் கட்சிகாரர்கள் மதிக்கும்அளவிற்கு அரசியலில் இடம் பெற்றவர் தான் நம் மன்னர்..

நன்றி ...தகவல் ..செல்வம் திண்டுக்கல் ...





















வெள்ளி, 6 ஏப்ரல், 2018

Thiruppathi  devarajan
கம்பள விருட்ச குழுமம் :

இன்று கடவூர் சமஸ்தானத்தின் இமயம் சரிந்தது இதயம் இடிந்தது
இமைகள் இருண்டது
உள்ளம் உருகியது
கண்ணீர் துளியும்
உதிர்ந்தது

ஆழந்த அனுதாபங்களுடன்
 ஐயாவை பற்றிய  மறக்க முடிய  செய்திகள்

நாயக்கர் கால வரலாற்றில் முக்கிய இடம் பெற்றவை பாளையபட்டுக்களும் குறுநில மன்னர்களாட்சிகளும் அவர்களால் நிறுவ பட்ட கோவில்களுமே தான் இவை ...

பிரிசித்தி பெற்ற பாளைங்கள் மட்டுமே அனைவரும் அறிந்ததாகா உள்ளன  மித  மிஞ்சிய பாளையங்களின் வரலாற்று உண்மைகள் தெரியாமலே போய் விட்டது நெடுநாட்களாக தேடி திரிந்து கிடைத்த சில வற்றை இங்கு பகிர்ந்துகொள்ள கடமை பட்டு உள்ளேன்

பழமை வாய்ந்த மன்னர்களாக வாழ்ந்த இடம் பல்லேரி தேசமது நகர்ந்த காலத்தில் (தற்போது உள்ள கடவூர் ஜமீன் )
அங்கு அங்கு இருப்பிடம் கண்டு ஒரு தலைமுறை காலம் வாழ்ந்து பின்பு தென்னகம் நோக்கியா பயணங்களில் முதலில் கோட்டை அமைத்து ஆண்டு வந்த புலி குத்தி குறி கண்ட முத்தா நாயக்கராவார் ...


இவர் மழசை எனும் இடத்தில் முதன் முதலாக தன் பாளையத்தினை நிலை நாட்டி குறு நில மன்னராக ஆண்டு வந்தவர்
அங்கு வாழ்ந்த காலத்தில் அவ்வழியாக வந்த ரிஷிமார் ஒருவர் ஒரு பெட்டியை குடுத்து இந்த பெட்டியுடன் நீர் செல்லாலாயின் இந்த பெட்டி எங்கு நிலை கொள்கிறதோ அங்கு நீர் கோட்டை கட்டி ஆளலாம் என்று கூறி அந்த பெட்டியை புலி குத்தி முத்தநாயக்கரிடம் குடுக்க அதை வாங்கி கையில் வைத்து கொண்டு அங்கு வறட்சி அதிகமாகவே கம்பளத்துடன் அங்கு இருந்து தென்னோக்கி நகர்ந்து உள்ளார்கள்


 இரவு பகல் என பல ஆனது நகர்ந்த வண்ணம் இருந்து இறுதியில் ஒரு இடத்தில் இரவு தங்கி உள்ளார்கள் மக்களுடன் மன்னரும் அன்று காலை பெட்டியை திறந்து பார்த்த போது ஒரு அழகிய கற்சிலை இருந்துள்ளது இது தான் நமக்கு சிறந்த இடம் என்று எண்ணி அங்கு கோட்டை கட்டளானார் புலி குத்தி முத்தாநாய்க்கர் அங்கு கம்பளத்து மக்களும் மன்னரும் சேர்ந்து கோட்டை மதில் சுவர்களை எழுப்பி நிலை நாட்டிய இடம் தான் தேவர்மலை...


தேவர் மூவர் முப்பத்தி முக்கோடி தேவர்கள் சங்கமித்த முக்கூடல் நடந்தது நகர்ந்த இடமாம் தேவர் மலை இங்கு தான் இரண்டாவது கோட்டையயை கட்டி ஆண்டு வந்து உள்ளார்கள் அப்பொழுது அங்கு இருந்து கிழக்கே வடக்கே மேற்கு தெற்கில் என்று பகுதிகள் பல ஆயிற்று மன்னரின் கட்டு பாட்டில் இருந்தாயிற்று
 அப்பொழுது வடக்கே காவேரி ஆற்றங்கரை வரை எல்லைகளை கொண்டு உள்ளது என்பதற்கு தற்போது உள்ள குளித்தலை கடம்பனேஸ்வரர் ஆலயம் ஒரு சிறந்த எடுத்து காட்டு.


 இன்றும் அங்கு கல் தூண்களில் ஜமீன் மன்னரின் திருஉருவ சிலை உள்ளது சிறப்பே. அங்கும் ஐயர்மலை ரத்தினாகிரீஸ்வரர் கோவில் மலை இடுக்குகளில் உள்ள ஒரு சிறப்பிடம் இவையும் இந்த மன்னரின் கட்டு பாட்டில் இருந்த ஒன்றாகும் இந்த மலை மேல் காக்கைகள் பறப்பதில்லை என்பது இதன் சிறப்பாகிறது
அப்பொழுது முதல் தற்போது வரை கம்பளத்தார்கள் முன்னுரிமை கொண்டாடும் ஒரு இடமானது

இன்றளவும் வருடத்தில் ஒரு முறை தேர் திருவிழா நடக்கும் இதில் ஒரு பகுதி நம்மவர்கள் இழுக்கும் உரிமையை பெற்று உள்ளார்கள் என்பது


தேவகிரி தேவர்மலை பகுதியில் வாழ்ந்த காலத்தில் புலி குத்தி குறி கண்ட முத்தநாயக்கர் அவர்கள் தன் மகன் கருணைராகவ முத்தையா நாயக்கருக்கு தலைமலையை ஆண்ட ராமச்சந்திரா நாயக்கரின் மகள்களை மனம் முடித்து வைத்து உள்ளார் அவர்க்கு நான்கு மகன்கள்...
கருணை கிரி முத்தையா நாயக்கர் (முள்ளிபாடி )
சாமாநாயக்கர்(ராமகிரி ஜமீன்)
கண்டமநாயக்கர்( கண்டமனூர் ஜமீன்)
தொட்டப்ப நாயக்கர் ... (உசலம்பட்டி தோட்டப்பநாயக்கனூர் ஜமீன்)
தற்போது நான்கு ஜாமின்களாயாற்று ..

 தேவர்மலையில் இருந்த போது அங்கு கோவில் அமைக்கப்பட்டு வணங்கி வந்துஉள்ளனர் அந்த கோவில் தான் கதிர் நரசிங்க பெருமாள் கோயிலாகும்.இங்கு பலமை வாய்ந்த கல் வெட்டுக்களில் இவற்றை பற்றி தெளிவாக குறிப்பிட பட்டு உள்ளது.
இங்கு தீர தொட்டி அமைத்து அதில் ராமர் லட்சமரும் சீதை அனுமன் ஆவர்கள் வானவசம் சென்ற போது இங்கு இருந்தமையால் தண்ணீர் தானாக ஊற்று எடுத்து ஓடியமையால் இங்கு ஒரு தீர தொட்டி அமைத்து அதனுள் புலி குத்தி குறி கண்ட முத்தாநாயக்கர் சிலையும் அமைத்து உள்ளனர்


 தொட்டியினுள் அங்கு இருந்து சுற்று புற கோவில்களையும் நிறுவி உள்ளார்கள் அப்படி நிறுவ பட்ட ஒன்று மேட்டுபட்டி துர்கை அம்மன் கோயிலாகும் இங்கு ஏழு வருடங்களிற்கு ஒரு முறை விலங்கினம் எருமைகள் வெட்ட பட்டு சுத்து பதினெட்டு பட்டு கிராமங்கள் சேர்ந்து ஒரு வார காலம் கொண்டாடும் ஒரு திருவிழாவாகும் . இவை ஜமீன் காலத்தில் கட்டப்பட்டது.
பின்பு அங்கு இருந்து நகர்ந்து முள்ளிபாடி என்ற இடத்துக்கு வரவே அங்கு கருணைராகவ முத்தையா அவர்கள் கோட்டை அமைத்து அங்கு வாழ்ந்து உள்ளாராகள் மீதம் உள்ளவர்கள் தெற்கில் நோக்கி பயணத்தில் சென்று ஜமின்களில் கோட்டைகள் நிறுவி ஆண்டுள்ளார்கள்...

 முள்ளிப்பாடியில் இருந்து கடவூர் மலைக்கு வேட்டை செல்வது வழக்கமாக கொண்ட முத்த நாயாக்கர் மலையினுள் ஒரு கோவிலை கண்டு வணங்கி விட்டு சென்றுள்ளார்
அன்று வேட்டை சிறப்பாக அமையவே அன்றுலிருந்து வணங்கி விட்டு செல்வது வழக்கமாகவே...

 நாளடைவில் அங்கு கோவிலை எழுப்ப வேண்டும் என்று கனவில் கூறவே அந்த மலையில் கருணை கிரி பெருமாள் கோவிலை எழுப்பினாராம் பின்பு அதன் அருகிலே கோட்டையும் அமைக்க வேண்டும் என்று கனவில் கூறியதால் அந்த இடத்திற்கு பசு மாட்டினால் உனக்கு இடம் தேர்வாகும் என்று கூறியதை போல் அங்கு கோட்டையும் ஆனது கோவிலை சுற்றி மலையாக இருந்த காலம் போய் தற்போது மக்களாக ஜமினும் வாழ்ந்து வருகிறார்கள் ..


 இன்றளவும் கடவுர் ஜமீன் என்றாலே அப்பகுதி மக்கள் வணங்கி செல்லும் அளவிற்கு மதிப்பு மிக்க ஜமீனானவர் ஐயா கருணை கிரி முத்தையா நாயக்கர் ...

இவர் வாழ்க்கையில் அரசியல் துறையிலும் ஓங்கிய நிலையில் காமராஜர் காலத்தில் சட்ட மன்ற உறுப்பினர் ஆனா முதல் கம்பளத்து நாயக்கர் ஆவர்...

அய்யா அவர்களின் இழப்பு ...கம்பள சமுதாய மக்களுக்கு ஈடு செய்யமுடியாத

இழப்பு ...கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் ....

வியாழன், 5 ஏப்ரல், 2018

நம்ம ஊர்ப் பண்டிகை ....(உடுமலை மாரியம்மன் -2018)
---------------------------------------------------
கடந்த ஒரு வாரமாகவே வெளியூர் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும்    உடுமலைச் சார்ந்த நட்புகளில் ஒருவரேனும் தினமும் உடுமலை   மாரியம்மன் குறித்து விசாரித்து விடுகிறார்கள். ”பண்டிகை எப்படிப் போகுது” எனக் கேட்கும்போது நல்லாப்போகுதுங்க என பொதுவாகச் சொல்லிவிட வேண்டியதாகிறது.

ஊரைவிட்டு எவ்வளது தூரம் விலகியிருந்தாலும் உள்ளுர் பண்டிகைமீது அவரவருக்கு ஒரு பிரியம் ஒட்டிக்கொண்டேதான் இருக்கின்றது. உள்ளூர் பண்டிகைமேல் கொண்டிருக்கும் பிரியம் சற்று சோபையான அழகுகொண்டது. ஒவ்வொரு ஆண்டு பண்டிகையும் ஒவ்வொருவித நினைவுகளை மீட்டித்தரும் சாத்தியங்களுண்டு

கல்லூரி காலத்தில் NSS-ல் இருந்ததால் மூன்று வருடங்கள் உடுமலை   மாரியம்மன் கோவிலில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடும் வாய்ப்புக் கிடைத்தது. அப்பொழுதெல்லாம் கோவில் வளாகத்திற்குள் ஆண் காவலர்கள் வருவதில்லை. கூட்டத்தைக் கட்டுப்படுத்த பெண் காவலர்களும், NSS மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதனாலோ என்னவோ வரும் கூட்டத்திடம் எங்களுக்கு கொஞ்சம் கூடுதல் மரியாதை கிடைக்கும். மூங்கில் தடுப்புகள் வைத்து நிறுத்தி நிறுத்தி விட்டாலும் கட்டுக்கடங்காமல் பொங்கிப்பொங்கி கம்பத்தில் தண்ணீர் ஊற்ற வரும் கூட்டத்தின் வேகத்தைப் பார்க்கையில் மிரட்சியாக இருக்கும். இத்தனை பேர் ஊரில் இருக்கிறார்களா என அப்பொழுதெல்லாம் தோன்றும். தலையில் தீர்த்தக்குடம் வைத்து மணிக்கணக்கில் கால் கடுக்க நின்று பக்தியை வெளிப்படுத்த நினைக்கையில் ஆச்சரியமாக இருக்கும். இருபது வருடங்கள் கழித்து இப்பொழுதும் அப்படியே இரவு பகல் காத்திருந்து தங்கள் பக்தியை வெளிப்படுத்திட கூட்டம் அம்முகிறதா எனத் தெரியவில்லை.

ஆளரவமற்ற திருப்பூர்  சாலையில் மூன்று மணியளவில் மின்வாரிய அலுவலக வாயிலருகில் காலை இருவர் நெருப்பிட்டு ஏதோ செய்து கொண்டிருந்தார்கள். மார்கழி, தை மாதமாக இருந்திருந்தால் குளிர் காய்கிறார்களோ என நினைத்துக்கொள்ளலாம். இந்தக் கோடையில் என்ன செய்வார்களாக இருக்கும் என யோசிக்கும்போதே, மின்வாரிய அலுவலக கேட் முன்பக்கத்தில் கும்பலாக கெடாக்கறி அரிந்து கொண்டிருந்தார்கள். பழனி  ரோட்டில்  சூப்பர் மார்கெட் தாண்டுகையில் ஒரு ஆட்டை வெட்டி ரத்தத்தை ரோட்டில் சிந்தவிட்டுக்கொண்டிருந்தார்கள். எல்லாம் மாரியம்மன் பண்டிகை மகிமை எனத் தோன்றியது.

      உடுமலை .... நகரைப் பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கும், பிழைப்பின் பொருட்டு இங்கு நகர்ந்து குடியேறியவர்களுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசமுண்டு. எவர் வீட்டின் முன்பு வாகனங்கள் நிற்கிறதோ, வீடுகளுக்குள் உறவுகள் இருக்கிறதோ, எங்கே கறிக்குழம்பு வாசனை வருகிறதோ அவர்களுக்கெல்லாம் இது பண்டிகை தினம். அப்படிப்பட்ட வீடுகளிலிருந்து அழைப்பும் வராமல், பெரும்பான்மையான கடைகள் மூடப்பட்ட ஒரு தினத்தை வீடுகளுக்குள் முடங்கி டிவியோடு மல்லுக்கட்டுபவர்களுக்கு போர் அடிக்கும் அதிகாரப்பூர்வமில்லா ஒரு விடுமுறை தினம்.

ஆனாலும் இங்கு குடியேறியிருக்கும் வெளியூர் சனம் பெண்டு பிள்ளைகளோடு கோவில் கடைகளை வலம் வந்து,குட்டை திடலில் ... டெல்லி அப்பளம் சாப்பிட்டு ஓரளவு திருப்தியடைந்து விடுகிறார்கள். முன்பெல்லாம் பெரும்பான்மையான வீதி முனைகளில் ஏதாவது ஒரு கலை நிகழ்ச்சியிருக்கும். இப்பொழுதெல்லாம் அவை குறைந்துவிட்டதாகவே தோன்றுகிறது. அதுவும் தேர்தல் நேரம் என்பதால் கெடுபிடிகளும் அதிகமாக இருக்கும்.

இன்றைக்கு நான் ஆச்சரியமாக உணர்ந்தது, திருவிழா தினமான இன்று  பழனி சாலையின் ஒரு வழியில் பேருந்தை அனுமதித்திருந்ததுதான். அந்தளவுக்கு கூட்டம் குறைந்துவிட்டதா அல்லது போக்குவரத்தை சீராக பராமறிக்கும் அளவிற்கு திறனடைந்துவிட்டார்களா எனத் தெரியவில்லை.

  மாதக்கணக்கில் கோலாகலாமாய் கொண்டாடப்பட்டாலும், விதவிதமான கடைகள் என சாலையோரம் நிரம்பியிருந்தாலும் கூட, இதைவிட ஒரே ஒரு நாள் நடக்கும் சொந்த ஊரின் மாரியம்மன் பண்டிகைமேல் சற்று கூடுதல் பிரியமும் உரிமையும் இருக்கின்றது. என்னைப்போல் ஊரைவிட்டு  குடியேறியவர்களின் நிலை இருதலைக்கொள்ளி எறும்புதான். இங்கிருக்கும் திருவிழாவிலும் ஆத்மார்த்தமாய் ஒன்ற முடியாது. ஊரில் நடக்கும் திருவிழாவிலும் அந்த ஒரே ஒரு நாளுக்கு மட்டும் போய் முழுமையாக ஒட்டமுடியாது. காலம் எல்லாவற்றையும் மாற்றியமைக்கிறது. மாற்றியமைக்கப்படுவதில் சில சிதைந்தும் போவதை மறுக்க முடியாது.

போன வருடம் என் மகன் உடன் குட்டை திடலில்  ராடினும் சுத்தியும் ,சர்கஸ் பார்த்து இருந்த மகிளுச்சி ....இந்த வருடம் எதையோ இளுந்தவிட்ட உண்ர்வூ .....இனிமேல திரும்ப கெடைக்காத இந்த ஜென்ம மகிளுச்சிகள். இருந்தாலும் உடுமலை   மர்ரியம்மன் கைவிடாது என்ற நம்பிகையுடன் ......

வங்கிப் பரிமாற்றங்கள், கட்டணங்கள் செலுத்துதல், எழுதுதல், வரைதல், பயணச்சீட்டு பதிதல் இப்படி எல்லாவற்றையும் கனிணியில், இணையத்தில் செய்து முடித்துக்கொள்ள நினைக்கும் இந்த தலைமுறைக்கு கடவுளின் அருளும் எதாவது ஒரு இணையப்பக்கத்தில் கிடைத்துவிட்டால் போதுமே என்ற மனோபாவத்திற்கு ஆட்படப்போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை......

தேரை தள்ள கேரளா மாநிலம் செர்புலசெரி சேகரன் யானையை கண்டு  என் ஷியாம் சுதிருடன்  பார்த்து மகிழந்தது மிக்க மகிழ்ச்சி ..ஷியமுடன் தேரை பார்ப்பதற்கு ஒரு வருடம் காத்துஇருக்கவேண்டும் ...மாரியம்மன் தேர் திருவிழா முடிந்தது ..இனி தேவராட்ட பெருவிழா ஏப்ரல் 22 ஞாயிறு ..குட்டை திடலில் அடுத்த வரும் பெருவிழாவில் சந்திப்போம் ...என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..வாட்ஸாப்ப் எண் 994466681....

புதன், 4 ஏப்ரல், 2018






Sivakumar Kumar is feeling happy in Udumalaippettai.
6 mins
உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோவில் ..
மாவிளக்கு வழிபாடு
மாவிளக்கு வழிபாடு என்பது தமிழ்நாட்டில் உள்ள இந்து சமயத்தில் அம்மன் வழிபாடு முறைகளில் ஒன்று.பண்டிகை காலத்தில் மாக்கோலம் இடுதல்,மாவிளக்கு ஏற்றுதல் போன்ற வழக்கங்கள் வழிபாட்டில் இருந்து வந்ததுள்ளது..ஆனால் தற்பொழுது மாக்கோலம் இடும் பழக்கம் குறைந்து கொண்டு வருவது வருந்தத்தக்க விஷயமாகும்.இன்றும் அம்மன் கோவில்களில் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி தங்கள் கோரிக்கைகளை அம்பாளிடம் முறையிடுகின்றன.அம்பாளும் தன்னை நாடி வரும் பக்தர் களுக்கு சகல செல்வங்களையும் தந்து அருள்பாவிக்கிறாள்.
நோய்கள் தீர மாரியம்மன்,காளி போன்ற தெய்வங்களுக்கு மாவிளக்கு ஏற்றி நோத்திக் கடன் செய்வர்.ஆறு,குளம் உள்ள ஊர்களில் இருக்கும் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது இரட்டிப்பு பலனைத் தரும்.
இடித்தெடுத்த பச்சரிசி,வெல்லம்,ஏலக்காய் போன்ற கலவையை விளக்கு வடிவில் செய்து தீபம் ஏற்றுவதே மாவிளக்கு ஆகும்.
மாவிளக்கு தத்துவம்
காணும் இடங்களெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பேரொளி வடிவான இறைத்துவத்தையே மாவிளக்கு உணர்த்துகிறது.
அரிசி[அன்னம்] பிராணமயம்.அன்னம் பிரம்ம ஸ்வரூபமேயாகும்.உலகிலுள்ள உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்குவது அன்னமே.
வெல்லத்தின் குணம் மதுரம்.அதாவது இனிமை.மதுரமான அம்பிகை மதுரமானவள்.ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் மதுரமான அம்பிகையே உறைகிறாள்.
அக்னி பகவான் நெய்யில் வாசம் செய்கிறார் என்பது ஐதீகம்.நெய்யை வார்தே ஹோமங்கள் வளர்க்கிறோம்.ஹோமங்கள் மூலம் நாம் சமர்ப்பிக்கும் பொருட்களை அக்னியே உரிய தேவதைகளிடம் சேர்க்கிறார்.
அக்னி பகவானின் சக்தி நெய்யில் அடங்கியுள்ளது.மாவிளக்கில் ஜோதியாக நின்று ஒளிரும் ஜோதி ஸ்வரூபமாக அம்பிகை நம் இல்லங்கள் தோறும் அருள்புரிவதற்காகவே மாவிளக்கு ஏற்றுகிறோம்.
நம்மையே விளக்காகவும்,மனதை நெய்யாகவும்,அன்பை தீபமாகவும் அர்ப்பணிக்கும் ஒரு அபூர்வவழிபாடு இது.அம்மன் கோவிலில் மட்டுமல்லாமல் அவரவர் குலதெய்வத்திற்கு ஆண்டுக்கு 1முறையாவது செய்ய வேண்டும்.என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...பகிரளி எண் ..9944066681🌸
























செவ்வாய், 3 ஏப்ரல், 2018

உடுமலைப்பேட்டை மக்களின் மனம் கவரும் திருவிழா
ஆண்டாண்டு காலமாக நடக்கும்
ஆண்டுக்கொரு  நாள் திருவிழா
ஆண்டு முழுவதும் மழலைகள் ஆர்ப்பரித்து
ஆரவாரிக்கும் மாரியம்மன் தேர்த் திருவிழா
தேர் திருவிழா ...
லட்சக் கணக்கில் மனித மனங்கள் ஒன்று கூடும்
இதில் சாதியில்லை ,பேதமில்லை ,மதமில்லை
கள்ளமில்லா உள்ளங்கள் கொண்டாடும் திருவிழா
இது மாரியம்மன் திருவிழா
திருவிழா நாட்கள் முழுவதும் ஒவ்வொரு திருவிழா
முளைப்பாரி திருவிழா ,தேவராட்ட பெருவிழா
கரகாட்டத திருவிழா ,காவடியாட்டப் பெருவிழா
பறவைக்கு காவடி ,பால் காவடி ,
புலியாட்டம் ,சிலம்பாட்டம் ,
எத்தனையோ ஆட்டங்கள்
அத்தனையும் காணக்
கண் கோடி வேண்டும்
இவை அனைத்தையும்  குழந்தைகளோடும் ,
உற்றார் உறவினர்களோடும் ,
துள்ளும் மனங்களோடு
கடைக்கண் பார்வையிலே
காணாமல் போன காதலிகளை
கண் முன் நிறுத்தும் குடை ராட்டினங்கள்
கர்ச்சீப் வைத்தெடுத்த கட்டை ராட்டினங்கள்
மனங்கள் நினைக்காமல் இருக்குமோ
நாற்பது வயதுக்குமேல் இருக்கும்
அனைவருக்கும் மனம் ஆர்ப்பரிக்கும்
இப்பொழுதோ கையிலே ..விரல் நுனியிலே
ஆண்டராயிடு போனிலும் ,ஆப்பிள் போனிலும் "சைகையிலே சரிசெய்வதை "
என்னென்று சொல்வது ....
தேர் த் திருவிழாவை  மகிழ்வுடன்
வரவேற்போம் ...வாருங்கள் ..
தேரை நகர்த்துவோம்
ஓடுவது தேரல்ல ....
அனைத்து சமூக மக்களின் வாழ்நிலையும் தான் ......

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...பகிரளி எண் 9944066681......





திங்கள், 2 ஏப்ரல், 2018


நீங்கள் வீட்டுக் கடன் வாங்க வங்கியை அணுகும் போது . . .
நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பலரும் வீட்டை தங்களது ஐம்பதாவது வயதில்தான் கட்டினார்கள். ஆனால், இன்றோ இருபது வயதிலேயே வீடு வாங்குவது சகஜ மாகிவிட்டது. அன்று பணத்தைச் சேர் த்து வைத்து வீடு கட்டினார்கள். இன் று வீட்டை கடனில் வாங்கி விட்டு, கடைசிக் காலம் வரை இ.எம்.ஐ-ஆக திரும்பச் செலுத்துகிறார் கள்!
எதற்கெடுத்தாலும் ஈஸியாக கடன் கிடைப்பது நல்லதுதான். அப்படி கிடைக்கும்போது அதை நாம் பொறு ப்புடன் பயன் படுத்த வேண்டாமா?
தனிநபர் ஒருவர் வாங்கும் பெரிய கடன் என்றால், அது வீட்டுக் கடன் தான். ஆகவே, வீட்டுக் கடனை வாங்குவதில் மட்டும் ஒருவர் பெரிய தவறேதும் செய்யவில்லை எனில், மற்ற கடன்களை எல் லாம் ஊதித் தள்ளி விடலாம்.
வீட்டுக் கடன் வாங்க ஒரு வங்கி யை நீங்கள் அணுகும் போது, அந்த வங்கியின் மேலாளர் உங்கள் கடன் விண்ணப்பப் படிவத்தை எந்தக் கோணத்தில் பார்ப்பார் என்பதை முதலில் புரிந்து கொள்வோம்.
வங்கி மேலாளர் முதலில் உங்களின் மாத / ஆண்டு வருமானம், கடந்த இரண்டு, மூன்று வருடங்களில் உங்களின் வருமானம், வீட்டிற்கு எடுத்துவரும் சம்பளம் எவ்வளவு என்கிற விஷயங்களை அலசி ஆராய்வார். நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் எந்தத் தொழிலில் உள்ளது என்றும் பார்ப்பார்.
சினிமா, அரசியல் துறைகளில் இருப் பவர்களுக்கு வருமானம் நிலையாக இருக்காது என்பதால் வீட்டுக்கடன் தர யோசிப்பார்கள். சுய தொழிலில் ஈடுபட்டு, வரு மான வரித் தாக்கல் செய்யாமல் இருப்பவர்களுக்கும் கடன் கிடைப்பது கடினமே. வேறு ஏதும் லோன் வாங்கி அதற்காக இ.எம்.ஐ. கட்டி வருகிறீர் களா என்றும் பார்ப்பார்கள்.
கடன் வாங்குபவரைப் பற்றிய அலசல்தான் ஆரம்பத்தில் பெரிதாக இருக்கும். இதற்காக உங் களிடமிருந்து பல டாக்குமென்டுகளைக் கேட்பார்கள். இதனால் நீங்கள் பொறுமை இழந்து, கோபம்கூட அடையலாம். நான் வீட் டை அடமானமாக வாங்கித்தானே கடன் தரப்போகிறீர்கள்? பிறகு ஏன் இத்தனை விசாரிப் பு? என்றுகூட நீங்கள் கேட்பீர்கள்.
ஆனால், வங்கிகள் உங்கள் வீட்டை விற்று தங்கள் கடனை செட்டில் செய்துகொள்ள விரும்புவதே இல் லை. அதனால் அவர்களுக்கு நஷ் டம்தான். எனவேதான், கடன் தரும் முன்பே உங்களைப் பற்றி முழுவது மாக அலசி ஆராய்கிறார்கள். வங்கி மேனேஜர் அடுத்து பார்க்கும் முக்கிய விஷயம், உங்கள் வயதைத் தான்! 55 வயதிற்கு மேல் உள்ளவர் களுக்கு பொதுவாக கடன் தரமாட்டார்கள் – அரசு பென்ஷன் வாங் குபவராக இருந்தால் தவிர!
இதற்குப் பிறகு உங்களது சிபில் ஸ்கோரை நிச்சயம் பார்ப்பார்கள்! நீங்கள் கடந்த காலத்தில் வங்கிக ளிடம் கடன் வாங்கி ஒழுங்காகச் செலுத்தாமல் இருந்திருந்தால், உங்க ளின் சிபில் ஸ்கோர் குறைவாக இருக்கும். அது போன் ற சமயத்தில் வங்கிகள் உங்களு க்கு வீட்டுக் கடன் தராது.
மாதச்சம்பளத்தில் கழிவுகள்போக மீதி எவ்வளவு உங்களுக்கு கிடைக்கிறது என்று அலசுவார்கள். உதாரணமாக, உங்கள் மாதச் சம்பளம் ரூ.45,000 என்று வைத்துக் கொள் வோம். கழிவுபோக, உங்களுக்கு கையில் கிடைக்கும் தொகை ரூ.40,000 எனில், இன் றைய வட்டி நிலவரத்தில் 30, 40 வயதிற்குள் இருக்கும் நபருக்கு, முறையே 16-18 லட்சம் வீட்டுக் கடன் கிடைக்கும் (20-30 வருடங் கள் கடன் காலம் என்று எடுத்துக் கொள்ளும் பட்சத்தில்!). அதாவது, உங்கள் வயது மற்றும் கடன் காலத்தைப் பொறுத்து உங்களது வீட்டி ற்கு எடுத்துச் செல்லும் மாதச் சம்பளத்தைப்போல் 40 – 45 மடங்கு கடன் கிடைக்கும்.
இன்னொரு கோணத்தில் பார்த்தால், நீங்கள் வீட்டிற்கு எடுத்து வரும் பணத்தில் அதிகபட்சமாக 40 சதவிகிதம் தொகையை இ.எம் .ஐ-ஆக கட்டுமளவிற்கு வங்கிகள் வீட்டுக் கடன் தரும். மீதி 60 சத விகித சம்பளம் உங்கள து அன்றாட வாழ்க்கைக்குத் தேவை யாக இருக்கும். எனவே, கணவன் – மனைவி என இருவரும் சம்பாதிக்கும் போது அதிக கடன் கிடைக்க வாய்ப்புண் டு.
இதுபற்றி எல்லாம் இவ்வளவு விரிவாக எடுத்துச்சொல்லக் காரணம், வங்கிகளின் பொதுவான வரை யறைக்கு உட்பட்டு நாம் கடன் வாங்கினால், நம் வாழ்க்கை யில் பெரிய சிரமங்கள் ஏற்படாது. நமது திருப்பிச் செலுத்தும் திறனை மீறி கடன் வாங்கும் போதுதான், பெரும் பாலானோர் பிரச்னையில் மாட்டிக் கொள்கிறார்கள்.
இளம் வயதில் கடன் வாங்கி வீடு வாங்கு வதில் தவறே இல்லை! ஆனால், வீட்டுக் கடன் வாங்கியபிறகு, நம் சம்பாத்தியத் தில் ஏதேனும் தடை ஏற்பட்டால் என்ன செய்வோம் என்பதை தீர்க்க மாக யோசித்துவிட்டு, கடன் தொகையை நிர்ணயம் செய்வது நல் லது.
இன்றைக்கு கைநிறைய சம்பளம் வருகிறது என்று கடன் வாங்கி விட்டு, நாளைக்கு திடீரென அந்த வேலையை இழக்க நேர்ந்தால், இ.எம்.ஐ. கட்டுவது பாதிப் படையும். இதனால் வாங்கிய வீட்டை குறை ந்த விலைக்கு விற்கவேண்டிய கட்டாயம்கூட ஏற்படலாம். இதனைத் தவிர்க்க ஒரே வழி, ஆறு மாதத்திற்கு தேவையான இ.எம்.ஐ. மற் றும் வீட்டுச் செலவுக்கான பணத்தை எப்போதும் வங்கியில் வைத் திருப்பதே.
வீட்டுக்கடன் வாங்கும்போது அதிகமான பணத்தை வட்டியாகச் செலுத்த விரும்பாதவர்கள், வழக்கமாகச் செலுத்தும் டவுன் பேம ன்ட் தொகையைவிட அதிகமாகச் செலுத்துவது நல்லது. உதாரணமா க, ரூ.30 லட்சத்திற்கு ஒரு வீட்டை நீங்கள் வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
வங்கி விதிகளின்படி, குறைந்தது ரூ.6 லட்சம் (20%) நீங்கள் டவுன் பேமன்டாகச் செலுத்தவேண்டும். மீதி 80சதவிகிதத்தை (ரூ.24 லட்ச ம்) வங்கிக் கடனாக தரும். 20 வருட கடன் மற்றும் 10% வட்டி என்கிற பட்சத்தில், மாத இ.எம்.ஐ. ரூ.23,161-ஆக இருக்கும்.
உங்கள் கையில் ரூ.6 லட்சம் இரு க்கும் பட்சத்தில், உங்களுக்கு இர ண்டு சாய்ஸ் இருக்கிறது. ஒன்று, நீங்கள் உடனே வீட்டை வாங்கி விட்டு இ.எம்.ஐ-யைத் துவக்கி விட லாம்; அல்லது வீடு வாங்குவ தை சற்று ஒத்திப் போடலாம். உதார ணத்திற்கு, நீங்கள் 3 ஆண்டு காலம் ஒத்திப்போடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
அந்த 3 ஆண்டுகாலத்தில்,கையில் இருக்கும் 6 லட்சத்தை ஒரு ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டுவிடுங்கள். அதேபோல், நீங்கள் லோன் எடுத்திருந்தால் மாதத்திற்கு கட்ட வேண்டிய ரூ.23,161-ஐ ஒரு ஆர்.டி-யில் அல்லது லிக்விட் ஃபண்டில் போட்டு விடு ங்கள். மூன்று வருடம் கழித்துப் பார்க்கும் போது, ஆண்டிற்கு 8.5% வட்டி கிடைக்கும் என்ற பட்சத்தில், உங்கள் கையில் 17 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும்.
அதே 30 லட்சம் ரூபாய் வீட்டிற்கு நீங்கள் இப்போது வெறும் 13 லட்சம் கடன் வாங்கினால் போதும். இதனால் நீங்கள் செலுத்த வேண்டிய இ.எம்.ஐ. வெறும் ரூ.12,545-ஆக மட்டுமே இருக்கும்!
ஆனால், இந்த மூன்றாண்டு காலத்துக்குள் வீட்டின் மதிப்பு உயர்ந்தி ருக்குமே! என நீங்கள் கேட்கலாம்! இனிவரும் காலத்தில் வீட்டு விலை அவ்வளவு வேகமாக உயரா து. அப்படியே உயரும் என்றாலும் உங்கள் வட்டி வருமானம் ஓரளவுக்கு அதை ஈடுகட்டிவிடும். இப்படி செய் வதால், உங்கள் ரிஸ்க் வெகுவாக குறைவதுடன், உங்களுக்கு நீங் களே ஒரு வெள்ளோட்டம் பார்த்துக்கொண்டதுபோல் இருக்கும்.
என்னங்க ..கனவு இல்லத்தை ..நிறைவேற்றி விடலாமா .....என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681 வாட்ஸாப்ப் எண் 

சிவக்குமார் V .K
(வீட்டுகடன் )
உடுமலை சிவக்குமார் ...9944066681 வாட்ஸாப்ப் எண் 
உடுமலைப்பேட்டை ..பொள்ளாச்சி ...கோவை ....

ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

கீர்த்தி வீரர் எதுலப்ப மன்னரின் நூல் வெளியீடு மற்றும் தேவராட்ட பெருவிழா ...

அருமையான சந்திப்பு நீதிஅரசரிடம் ..

நேற்று காலையில் ..மாநில செயல் தலைவர் முருகவேல் அய்யா அவர்களுடன் ...உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் வரலாற்று பேராசிரியர் .மதியழகன் ,தமிழ் பேராசிரியர் கண்டிமுத்து அவர்கள் ..ஆய்வாளர் அருட்செல்வம் ..ஆகியோர் தேனீ யில் நமது நீதி அரசர் தங்கராஜ் அய்யா அவர்களிடம் அணிந்துரை ...தேவராட்ட நிகழ்வுக்கு அழைப்பிதழ் அளித்து விட்டு ..வரலாற்று நூலை பற்றி கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது ..அவர்களின் வழிகாட்டுதலோடு வீறு நடை தொடர்கிறது ...என்றும் அன்புடன் உடுமலை சிவகுமார் ..பகிரளி எண் ..9944066681...
சமுதாய பணிக்கு ஏது ஓய்வு ....

ஓராயிரம் கலைஞர்கள் ஓரணியாய் ஒருங்கினைந்து எத்திசையும் புகழ்மணக்கும் எத்தலப்பர் புகழ்பரப்பும்  போர்ப்பரணி  நாளான ஏப்ரல் 22 ல் 2018....தேவராட்ட திருவிழாவுக்கு கலந்துகொள்ள அழைக்கும் விதமாக நமது தேவராட்ட கலைஞர்களுக்கு அழைப்பிதழ் ,,,

நமது மாப்பிள்ளைகள் ..தம்பிகளுடன் ...வலசை கார்த்தி SR ...கொடுங்கியம் செந்தில் ...ராஜாவூர் தமிழரசன் ...ராஜாவூர் பாலமுருகன்..கொடிங்கியம்  jms ட்ராவல்ஸ் ..சேகர் என்கின்ற அயோத்தி ராமன் .. அவர்களுடன் ...பெரியகோட்டை .கருணாநிதி அண்ணனை முதலில் சந்தித்து முதல் அழைப்பு ...ஆரம்பம் ..ராஜாவூர் ஊர் நாயக்கரிடம் ...நமது பொன்னேரி ராயல் புல்லட் க்ரிஷ் மாப்பிளைக்கு ...அம்மாபட்டி  நமது மாப்பிளை ராமு அவர்களுக்கும் ,எரியோடு பாளையக்காரர் திரு TS ராமசாமி அய்யா அவர்களுக்கும் ,நினைத்தவுடன் மனதை அள்ளும் கரப்பாடி திரு .குருசாமி அவர்களுக்கும்,கொண்டேகவுண்டம்பாளையம் அண்ணன் வாசுதேவன் அவர்களுக்கு  ,ரமேஷ்  அவர்களுக்கும் ...லிங்கம்மாவூர்  மாப்பிள நித்தியானந்தம் ,அம்மாபட்டி தம்பிக்கும் ..பொட்டையம்பாளையம் தினேஷ் அவர்களுக்கும் ,வென்சப்பட்டி விஜயகுமார் அவர்களுக்கும் ...

.விழாவிற்கு வருகை தருமாறு பணிவுன்புடன் கேட்டுக்கொண்டபோது ....

அழைப்பிதழ் வழங்கும் பணி தொடரும் .....

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...பகிரளி எண் 9944066681


போட்டி இல்லை .....கீரதிவீரர் எதுலப்பர் மன்னரின் வீரச்செயலுக்கு தரும் மரியாதை ...ஒட்டு மொத தமிழகம் திரும்பி பார்க்கும்  ஊடக செய்தி ...தேவராட்டம்  மூலம் ஒரு கவன ஈர்ப்பு அவளுவுதான் ..நமது நோக்கம் ..வரலாற்று நூல் வெளியிடு ..காவல்துறை அதிகாரிகள் ..மாவட்ட ஆட்சியர் ..மூன்று அமைச்சர்கள் ...பொதுமக்கள் ..கலந்துகொள்ளும் நிகழ்வு ..