ஞாயிறு, 8 அக்டோபர், 2017

இன்றய புத்தக திருவிழா .....

நிறைவு நாள் என்று சொல்வதைவிட ..2018 வரும் ஆரம்ப நாள் என்று சொல்லலாம் ...ஆரம்பித்த நாள் முதல் ...நிறைவு நாள் வரை ..காலில் சக்கரத்தை சுற்றிக்கொண்டு விழா கருத்துரை வழங்கிய தலைவர்கள் ,அறிஞர்கள் ,முனைவர்கள் ,படித்த புத்தக அறிவு ,நடைமுறை அனுபவ கருத்துக்களை உடுமலை மக்களுக்கு  ..சிந்தனை ,அறிவுபூர்வமான கருத்துக்கள் பகிர்ந்தது...வாழ்க்கையில் உயர்வதற்கான எண்ணங்களை செதுக்கியது புத்தக திருவிழாவின் உடுமலை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும் ...

இன்று வரவேட்புரை திரு .லால் அவர்களின் குரலோசையோடு ஆரம்பமானது ...

முன்னிலை ...
முனைவர் .சு .சுப்பிரமணியம் அவர்களின் ஆலோசகர் ,வித்யாசாகர் கலைஅறிவியல் கல்லூரி ,உடுமலை மக்களின் மனதில் இடம் பெற்ற இந்திய விடுதலை வேட்கை பாடல்கள் எழுதிய கவிராயர் நாராயணகவி ,இந்திய விடுதலைக்கு வித்திட்ட எத்தலப்ப மன்னரின் வரலாறுகளோடு ...பேச்சை ஆரம்பித்தது உடுமலை மக்களின் மனதை பெருமையடைய வைத்தது ..

எதிர்காலத்தில் குழந்தைகளின் வாசிப்பு ,நேசிப்பு புத்தகத்தினால்தான் கொண்டு வரமுடியும்..பேசி நிறைவு செய்தது அருமை ..

திரு .விவேகாநதந்தன் அவர்கள் ,காவல் துணை கண்காணிப்பாளர்  ,பேசும் பொழுது ..தான் சாதாரண அரசு பள்ளியில் படித்து ,கல்லூரி படித்து காவல்துறை பணிக்கு வந்ததை தன கல்வியின் அருமையை அழகாக கூறியது இன்றைய மாணவ செல்வங்களுக்கு ஊக்கம் அளித்ததாக இருந்தது ..அவர் சிறு வயதில் ..பொது நூல்களை தினம்தோறும் வாசிப்பு பழக்கத்தால் படித்து இந்த பதவிக்கு வந்ததை சுட்டிக்காட்டியது இந்த புத்தக திருவிழாவிற்கு பெருமைசேர்த்ததாக இருந்தது ..

உடுமலை வாட்டாச்சியர் திரு .அசோக் ..அவர்கள் பேசும்பொழுது ..இன்றய தொழில்நுட்ப்ப கருவிகள் ..பொழுது போக்கிற்கு அதிகம் பயன்படுத்தாமல் ..நூல்களை கற்று தெரிந்து கொள்ளவேண்டும் என்று கூறியது மகிழ்ச்சி ....உடுமலை ,டாக்டர் .M .அசோக் அவர்கள் ,திரு .சிவசக்தி ராமசாமி அய்யா அவர்கள் , புத்தக திருவிழாவின் அருமைகளை ..வாசிப்பு ..நேசிப்பு பலன்களை உடுமலை குழந்தைச்செல்வங்களுக்கு கொண்டு வந்ததை பாராட்டி பேசியது

இந்த புத்தக திருவிழாவிற்கு அனைத்து ஊடகவியலாளர் ,தினகரன் திரு .கண்ணன் அவர்கள் ,தினத்தந்தி திரு .ஸ்டீபன் அவர்கள் ,தினமலர் செந்தில்ராமன் ..அவர்கள் நியூஸ் 18..திரு .பரணிசங்கர் அவர்கள் ,தமிழ் இந்து .திரு .நாகராஜன் அவர்கள் ,தினம்தோறும் புத்தக திருவிழாவிற்கு கருத்துரை வழங்கிய தலைவர்களை அனைவரையும் வரவேற்று உபசரித்த தீக்கதிர் .மகாதேவன் அவர்களுக்கு விழாக்குழுவின் சார்பாக நன்றிகள் ...

நன்றியுரை ..என் அன்புக்கினிய வகுப்பு தோழர் திரு .பாலதண்டபாணி அவர்கள் விழாவை சிறப்பித்த விழா தலைவர்கள் ,புத்தக உரிமையாளர் ,விழா ஒலிபெருக்கி அமைத்த குமரன் சவுண்ட் சர்வீஸ் ,விழாமேடை அமைத்த பந்தல் பாய்ஸ் உரிமையாளரை அவர்களின் பணிகளை செம்மைப்பட வைத்ததற்கு நன்றிகள் தெரிவித்தார் ...

உடுமலை மண்ணின் மைந்தர்கள் ...பொதுசேவை என்றவுடன் நினைவுக்கு வருபவர்கள் ...திரு .நாகராஜன் அவர்கள் ,SM Travels ..உரிமையாளர் ..உடுமலைப்பேட்டை ,திரு .சத்தியம் பாபு அவர்கள் ,சத்தியம் பிரின்டர்ஸ் .உரிமையாளர் ..இவர்கள் தான் நம் கண்முன்னே தெரிகிறார்கள் ..கடுமையான பணிசூழ்நிலைகளுக்கு இடையில் ..விழாவிற்கு வந்த அனைவரையும் அன்போடு ,ஆதரவோடும் ..கூடவே இருந்து தன் சகா நண்பர்களாக விழாவில் வலம் வந்து உபசரித்தனர் ...புத்தக திருவிழாவிற்கு நகராட்சி தேஜஸ் மஹாலை  இலவசமாக அளித்து ..எதிர்கால தலைமுறைகளுக்கு ..இன்றைய இளைய தலைமுறையினர் வழிகாட்டிகளாக உள்ளது உடுமலை மக்களுக்கு பெருமையும் கூட ...இவர்களுக்கு விழாக்குழுவினர் தங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர் ...





































 

சனி, 7 அக்டோபர், 2017

இன்றைய உடுமலை புத்தக திருவிழா .....

தலைமை ....திரு .Rtn .வெற்றி R .முருகநாதன் அவர்களின் முத்தாய்ப்பான பேச்சுடன் ஆரம்பமானது ...

மூன்று முத்துக்கள் ....
கடலில் கண்டுஎடுத்த  முத்துக்களை போன்று பேச்சு ...

திரு .கே .சுவாமிநாதன் -துணைசெயலார் -தென்மண்டல lic ஊழியர் கூட்டமைப்பு.....நாளெல்லாம் எங்கள் செல்வம் ...என்ற கருத்துரையில் பேசும்போது ..இந்திய வரலாற்றையும் .,பொருளாதாரத்தையும் பற்றி பேசியது அருமை ..

திரு .செந்தமிழ்செல்வன் -கூடுதல் பதிவாளர் -கூட்டுறவுத்துறை -சென்னை

அய்யா அவர்கள் ...பேசும்போது ...மறைந்த உடுமலையின் மண்ணின் மைந்தர் ..திரு .S .J .சாதிக் பாஷா -சட்டத்துறை அமைச்சராக இருந்தபோது அவருக்கு உதவியாளராக இருந்ததை பெருமையடைவதாக இருக்கிறது என்றார் ..
தமிழின் மீது அளவுகடந்த பாசத்தை வெளிப்படுத்தினர் ..அய்யா அவர்கள் படித்தது உடுமலை அமராவதி இராணுவப்பள்ளியில்  ...இவ்வளவு அருமையாக தமிழ் மீது பற்று இருப்பது உடுமலைக்கு கிடைத்த பெருமை .அய்யா அவர்கள் உலகம் முழுவதும் தமிழ் மனம் பரப்பிக்கொண்டு இருக்கிறார் ..பெரியாரை கொண்டாடவேண்டும் ..அவரின் புத்தகங்ளை படிக்கவேண்டும் ..புத்தக வாசிப்பும் ,நேசிப்பும் இன்றைய குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கவேண்டும் என்பதை அழகாக எடுத்துரைத்தார் ..உடுமலை பழம்பெரும் எழுத்தாளர் ..திரு .சிவசக்தி ராமசாமி அவர்களை ..விவசாய கவிதை ஒன்றை வாசித்து கேட்டு அவரை பெருமை படுத்தினர் ..இதுதான் உடுமலை மண்ணின் மகிமை இருக்கும்போதே அவரை கொண்டாடவேண்டும் என்பதை திரு .செந்தமிழ்செல்வன் அய்யா அவர்கள் உணர்த்தினார் ..

எழுத்தாளர் திரு .பாமரன் அவர்கள் ,அக்கம் பக்கம் பாரடா ...என்ற கருத்துரையில் பேசும் போது ..தமிழ் மக்கள் தேவையான வரலாற்றையும் ஆவணப்படுத்த வில்லை என்றுக்கூறியதை தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர் ..பெரியாரை வைத்து ஒரு டாக்குமெண்ட்ரி படம் கூட வெளியிடவில்லை ,கேரளாவில் விழாக்களில் பேசும்போது திராவிடத்தை பற்றி பேசும்போது ..அதற்ககான குறும்படம் வெளியிட்டு ..அதன்பின் பேச்சை தொடங்கவது கேரளா மக்களின் வாடிக்கை .அதற்கு பெரியாரை பேசலாம் என்றால் ஒரு டாக்குமெண்ட்ரி கூட கிடைக்கவில்லை கூறி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர் ..

வந்திருந்த விழாவின் மூன்று முத்துக்கள் ...திரு .கே .சுவாமிநாதன் அவர்களுக்கு ,,பாரதியார் பெண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியர் .திருமதி .V .விஜயலக்ஷ்மி அவர்கள் நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார் ...திரு .மு செந்தமிழ்செல்வன் அவர்களுக்கு ..உடுமலை மின்சாரவாரியம் திரு .உடுமலை தண்டபாணி அவர்கள் பரிசு வழங்கி சிறப்பித்தார் ...எழுத்தாளர் .திரு .பாமரன் அவர்களுக்கு ..தொலைத்தொடர்பு துறை ..திரு .ரங்கசாமி அவர்கள் நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார் ..

திரு .N .பாண்டியன் அவர்கள் விழாவிற்கு வந்து கலந்துகொண்ட உடுமலை மக்களுக்கு நன்றி தெரிவித்தார் ...

இன்றைய கலை நிகழ்ச்சிகளை ...அனுகிரஹா இன்டர்நேஷனல் பள்ளி மாணவ செல்வங்களும் ,ராகல்பாவி அரசு நடு நிலை பள்ளி மாணவச்செல்வங்கள் நடத்திய ..பாடல்களும் ,நாடகங்களும் புத்தக திருவிழாவிற்கு பெருமைசேர்த்தினர் ....













வெள்ளி, 6 அக்டோபர், 2017

என்  அன்புக்கும் ,பாசத்திற்கும் ஈரோடு கதிர் சார் ....,ஒரு தகவல் தொடர்பை எப்படி பயன்படுத்த வேண்டும் ..பிளாக்கரில் ,முகநூலில் ,எப்படி கட்டுரைகள் ,கதைகள் எழுதுவது என்று ஏழு வருடங்களுக்கு முன் இவரிடம் கற்று கொண்டவை .இவரின் அறிமுகம் ஜெயா டிவி யில் இவரின் நேர்காணல் நிகழ்வை பார்த்து தான் இவரின் நட்பு கிடைத்தது ..உடுமலையில் ஷாஜகான் அவர்களின் மகள் திருமணத்தில் முதன் முதலாக நேரில் பார்த்து நட்புடன் சுழன்று கொண்டுஇருக்கிறது ....திரு .கதிர்வேலு அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள் ..

...
 இன்றைய புத்தக திருவிழா ...

வரவேட்புரை ..திரு .சுதா சுப்பிரமணியம் அவர்களின் அருமையான பேச்சுடன் ஆரம்பமானது ...

.கருத்துரை ..சூழலியலாளர்  கோவை சதாசிவம் அவர்களின் .."நீராதிபத்தியம் ..மேற்கு தொடர்ச்சியுடன் ...அமராவதி ஆறு ,பாலாறு ,நொய்யல் ஆறு களோடு உடுமலையின் ஆற்று வரலாறுகளோடு ...அதன் பெருமையுடன் பேசியது ..வெகுஅருமை ..இந்தியாவில் ஓடும் ஆறுகள் மலைகள் சுரண்டிப்படுவதையும் மாசுபடிந்து கிடைப்பதையும் ,எப்படி அதை காக்கவேண்டும் என்று என்று ஓநாய் கதைமூலம்..பேசியது  ..வந்திருந்த பள்ளிக்குழந்தைகளுக்கும் ..புத்தக வாசிப்பாளர்களுக்கும் ,பேச்சை கேட்டுக்கொண்டிருந்த உடுமலை மக்களுக்கும்  கிடைத்த வரப்பிரசாதமாகும் ..

கங்கையும் ,கூவமும் ஓடிய ஆறுகள் எல்லாம் மாசுபடிந்து ..அதை தூய்மை படித்த திட்டங்கள் எல்லாம் தோல்வியில் முடிவது ..எதிர்கால குழந்தைகளுக்கு உலகில் எதைவிட்டு செல்கிறோம் என்று வினா எழுப்பியது சிந்திக்க வைத்தது ...

உலகில் தண்ணீர்க்காகாகத்தான் ...மூன்றாம் உலகப்போர் இருக்கும் என்பதை பேசியது ..மீண்டும் மீண்டும் சிந்திக்க வைத்தது ..இன்று நியூசாலாந்து நாடு ..ஆறுகளை மிக தூயமையாக வைத்திருப்பது பற்றி சொன்னது வெகு அருமை ..ஆறுகளில் இறங்கவோ ..குளிக்கவோ கூடாது ..அதை மாசு படவிடுவதில்லை ..அந்த நாட்டு  அரசாங்கம் ..

ஒரு காலத்தில் மாசு படிந்த தேம்ஸ் நதிக்கரையை மக்கள் ஒன்றிணைந்து ..தூயமை படித்திஇன்று நல்ல முறையில் தேம்ஸ் நதிக்கரை ஓடுகிறது .. இங்கிலாந்து மக்கள் ஒரு பழக்கம் இருந்தது ...திருமணம் முடிந்து புது தம்பதியினர் ..தேம்ஸ் நதிக்கரையில் உட்கார்ந்து மீன்களின் ஓட்டங்களை பார்த்து அமீன்கள் வாழும் வாழ்க்கையை போன்று வாழவேண்டும் என்று சதாசிவம் அய்யா அவர்கள் எடுத்துக்காட்டாக கூறியது வெகு அருமை ..

அமராவதி அணையில் யானைகள் வந்து தினம் தோறும் ...150 லிட்டர் தண்ணீர்பருகுவதை சொன்ன போது ...நாம் குடிக்கும் தண்ணீர் 10 ரூபாய்க்கு வாங்கி பருகிக்கொண்டு இருக்கிறோம் ...நாளை இந்த யானைகள் எல்லாம் உடுமலை பேருந்து நிலையத்தில் வாங்கி கொடுக்கும் நிலை வரலாம் ...இந்த நிலைக்கு யார் காரணம் ..வினா எழுப்பியது எதிர்காலத்தில் இப்படித்தான் நாம் ஆறுகளை பாதுகாகக விட்டால் இந்தநிலைக்கு தான் வருவோம் என்று கூறியது வேதனையானது ..இனிமேலாவது ஆறுகளை ,குளங்களை ,காடுகளை பாதுகாப்போம் ....

அமராவதி அருகே உள்ள மானுப்பட்டி அரசு உயர்நடு நிலை பள்ளி மாணவ செல்வங்கள் நடத்தி காட்டிய இயற்கையை ,,காடுகளை காப்போம் என்ற நாடகம் மூலம் மேற்கோள் காட்டி கோவை சதாசிவம் அய்யா பேசியது அந்த பள்ளிக்கு கிடைத்த பாராட்டு ....
 எப்படி ஆறு குளங்களுக்கு பாகுபாடு இல்லாமல் அனைத்து மக்களுக்கும் பயனளிப்பதை ...இந்த மேடையில் அமர்ந்திருக்கும் ..முன்னிலையாளர்கள் ..திரு .ஹென்றி டேனியல் அவர்கள் ,வழக்கறிஞர் திரு .சாதிக் பாஷா அவர்கள் ,திரு .பாலசுப்ரமணியம் அவர்கள் .திரு .சுதா சுப்ரமணியம் அவர்களை ,மத நல்லிணக்கத்தை சுட்டிக்காட்டியது உடுமலை மக்களுக்கு கிடைத்த பெருமை

கருத்துரை வழங்கிய கோவை சதாசிவம் ..அவர்களுக்கு ..பேராசிரியர் திரு .கண்டிமுத்து நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார் ...திருப்பூர் பின்னலாடை புக் டிரஸ்ட் .திரு ஈஸ்வரன் அவர்களுக்கு ..தலைமையாசிரியர் திரு .கிருஷ்ணன் அவர்கள் நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார் .. முன்னிலை வகித்த வழக்கறிஞர் திரு .சாதிக் பாஷா அவர்களுக்கு உடுமலை சிவக்குமார் அவர்கள் வழங்கி சிறப்பித்தார் ..திரு .பாலசுப்ரமணியம் அவர்களுக்கு பேராசிரியர் .லெனின் பாரதி அவர்கள் நினைவு பரிசு வழங்கினார் ..

திரு .இளையபாரதி அவர்கள் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றியுரை கூறி விழாவை சிறப்பித்தார் ..





...

வியாழன், 5 அக்டோபர், 2017

எதிர்கால குழந்தைகளுக்கு மிக மிக முக்கியம் ...இன்று ஒரு நாள் மட்டும் ..உடுமலையின் குழந்தை செல்வங்களை ..புத்தக திருவிழாவிற்கு அழைத்து வாருங்கள் ...ஒரு நாளை ..ஒரு மணித்துளியை ..எதுஎதற்கோ செலவிடுகிறீர்கள் ...மாலை நிகழும் நிகழ்வுக்கு குழந்தை செல்வங்களை அழைத்து வாருங்கள் ... இயற்கையை பாதுகாப்போம் ..


சூழவியலாளர்  கோவை சதாசிவம் அவர்கள் ...கருத்துரை .."நீராதிபத்தியம் ..." ...பேசுகிறார்கள்..

அவர்பற்றி ஒரு சிறு அறிமுகம்....


மாநகரங்கள் கம்பீரமாய் கண்முன் காட்சி அளிக்கின்றன. நகரங்கள் விரிவடைந்து கொண்டே இருக்கின்றன. கிராமங்கள் மெல்ல மெல்ல அருகி வருகின்றன. மூன்றும் முன்னொரு காலத்தில் காடுகளாக இருந்தன. தற்போது காடுகளின் பரப்பளவு குறைந்து வருகின்றன.காடுகளின் அளவு குறைவு கேடுகளின் அளவை அதிகரிக்கிறது. காட்டை மட்டுமல்ல இயற்கையின் அனைத்து செல்வங்களையும் மனிதன் அழித்து வருகிறான். அசுத்தப் படுத்துகிறான். அழுக்கு ஆக்குகிறான். இயற்கைக்கு எதிராக மனிதர் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதிர்வினையாக மனிதருக்கு எதிராக அமைகின்றன. இயற்கையை அழிக்கும் முயற்சியில் மனிதன் தன்னையே அழித்துக் கொள்கிறான். காட்டைக் காக்க வேண்டும் என்னும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் செயலில் இறங்கியுள்ளனர். சிலர் எழுத்தில் இயங்குகின்றனர். இரண்டிலுமே தன்னை அர்ப்பணித்து முன்னுதாரணமாய் இருப்பவர் கோவை சதாசிவம். மண், மயிலு, சிட்டு என்னும் ஆவணப்படங்களின் மூலம் தன்னுணர்வை வெளிப்படுத்தியவர் 'உயிர்ப் புதையல்' என்னும் தொகுப்பை அளித்துள்ளார்.
"காடும்
காடு சார்ந்த உலகமும்
பரந்து கிடக்கின்றன
வாருங்கள்
பயணிப்போம் " என வாசிப்பவரையும் 'காட்டுக்குள்' அழைத்துச் செல்கிறார். காடு குறித்த ஒவ்வொரு கட்டுரையும் காடாகவே விரிகிறது.
'மேற்குமலைத் தொடர்களைப் பார்க்கிற போதெல்லாம் அம்மாவின் அடிவயிற்றுச் சுருக்கங்கள் நினைவிற்கு வருகிறது' என 'அம்மாவின் அம்மா' வில் குறிப்பிட்டுள்ளார். மலைக்குச் செல்ல அமைத்த சாலைகளே 'மழையழிவின் முதல் தொடக்கப்புள்ளி' என்கிறார். இம்மலைத் தொடரே மருத நிலங்களைச் செழிப்பாக்குகிறது என்று அறியச் செய்துள்ளார். மலையை சுற்றுலாவிற்காக பயன்படுத்திக் கொள்வோரைச் சாடியுள்ளார்.
தாய் வழிச் சமூகத்தின் கூட்டு வாழக்கையை இன்றளவும் தொடரும் காட்டு விலங்குதான் யானை என யானையை அறியச் செய்யும் பகுதி 'யானைகள் என்பது காட்டின் ஆதார உயிர்'. யானைகளின் செயல்களைக் கூறியதுடன் அவைகள் காட்டுக்கு எவ்வாறு பயனுள்ளதாக விளங்குகின்றன என கூறியுள்ளார்.
 இன்றைய புத்தக திருவிழா ....தொலைக்காட்சிகளுக்கு முன்னால் தவம் கிடக்கும் சூழ்நிலையில் ...எங்கள் இளைய தலைமுறைகள்அப்படியெல்லாம் இல்லை ...பெரியவர்கள் மறந்தாலும் நாங்கள் இன்னும் இந்திய சுதந்தர விடுதலை வேர்களை ,மறக்கவில்லை  என்று கலை நிகழ்ச்சிகள் நடித்து ,நடத்தி காட்டிய .. சின்ன வீரம்பட்டி குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் ...ஜான்சிராணி வரலாற்று நாடகம் ,கிராமிய பாடல்கள் ..சாம்ராட் நாடகம் ..அருமை ..உடுமலை மக்களுக்கு பெருமையும் கூட ..

வரவேட்புரை திரு .கணபதி அவர்கள் புத்தகத்திருவிழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார் ...

 இன்று கருத்துரை வழங்கிய தவத்திரு.பாலபிரஜாபதிஅடிகளார்.(அய்யாவழி சமயத் தலைவர்.)அவர்கள் ..மானுடம் வெல்லும் ....பற்றி .பேசியது அருமை ..பாலா பிரஜாபதி அடிகளார் பேசும்போது ..இடதுசாரிகள் பற்றி பேசியது உடுமலை மக்களை வியப்பில் ஆழ்த்தியது ...மனிதனுக்கு இடப்பக்கம் இதயம்...அந்த இதயத்தை தாங்கும் சக்தி இடது.என்று சிந்தனை தூண்டியது அருமை ...உடுமலையின் பெரியார் ..நம் பழம் பெரும் எழுத்தாளர் ..பேச்சாளர் ..சிவசக்தி ராமசாமி அய்யாவை பார்த்து ..உடுமலையில் ஒரு பெரியரைகண்டேன் ..என்னுடைய நிகழ்வுகளுக்கு அழைத்த செல்லவேண்டும் என்று கூறியது ..உடுமலை மக்களுக்கு கிடைத்த பெருமையும் கூட .. ..உடுமலையின் நூலகங்களில்  புத்தகங்களும் ,நூலகங்களும் ,நூலக வாசிப்பாளர்கள் அதிகம் உள்ளதையும் ...நூலகங்களின் பராமரிப்பு ,அதன் அழகையும் பாராட்டி பேசியது மிக்க மகிழ்ச்சி ..


உடுமலை புத்தக திருவிழாவிற்கு வருகை தந்து முன்னிலை வகித்த ..பட்டய கணக்காளர் .திரு .R .கந்தசாமி அவர்கள் ,திரு .S .கண்ணன் அவர்கள் ,திரு .S ஜோசப் அவர்கள் ,திரு .S சிக்கந்தர் அவர்கள்விழாவை சிறப்பு செய்தனர் ..

கருத்துரை வழங்கிய தவத்திரு.பாலபிரஜாபதிஅடிகளார்.விழாவின் நினைவு பரிசு திரு .கந்தசாமி அவர்கள் வழங்கினார் ..உடுமலை சிவசக்தி ராமசாமி அவர்களுக்கு ..கருத்துரை வழங்கிய தவத்திரு .பாலபிரஜாபதி அவர்கள் நினைவு பரிசு கொடுத்து சிறப்புச்செய்தது மகிழ்ச்சி ...S .கண்ணன் அவர்களுக்கு உடுமலை சிவகுமார் ,நினைவு பரிசு வழங்கினார் ..ஆடிட்டர் திரு R .கந்தசாமி அவர்களுக்கு ..நூலகர் திரு .கணேசன் அவர்கள் நினைவு பரிசு வழங்கினார் ..

நன்றியுரை ...திரு .லால் அவர்கள் வழங்கியதும் .விழா முடியும்வரை காத்திருந்த மழைக்கு நன்றி ....மழை சாரல் ..தூறலுடன் ஆரம்பமானது ...புத்தக திருவிழாவிற்கு கிடைத்த பாராட்டு மழை ....!!!!



















புதன், 4 அக்டோபர், 2017

உடுமலை புத்தக திருவிழா ......!!!!!!
பாரதியாரின் பாடல்கள் வீண்போகவில்லை ...
காலை எழுந்தவுடன் படிப்பு ..
மாலை முழுவதும் விளையாட்டு ...
ஓ ..அதுதானோ இந்த செல்ல தம்பி மாலையில் விளையாடிவிட்டு ...
இரவில் புத்தக தேடல்களுக்கு வந்துவிட்டோரோ ..
.இன்றய இளைய வளரும் தலைமுறை வழி மாறிப்போகிறார்கள் என்று ..
யார் சொன்னது ...!!!!!
இன்றைய புத்தக திருவிழா ..உடுமலையில் தமிழால் முன்னிலை படுத்தப்பட்டது ...ஆம் ..தமிழ்த்துறை தலைவர் ..அரசு  கலைக்கல்லூரி திரு.வா .கிருஷ்ணன் அவர்களால் ...முன்னிலைப்படுத்தப்பட்டது ..உடுமலை மக்களுக்கு வாசிப்பும் ..நேசிப்பும் ..பற்றி அழகாக பேசியது அருமை ..
கருத்துரை  தஞ்சை பெரியார் செல்வம் அவர்கள் ..இன்றய கல்வி குழந்தைகளுக்கு புத்தகத்தின் வாசிப்பு பற்றியம் ..நூலகத்தின் அருமையை பற்றியும் எடுத்துரைத்தார் ...ஒரு முறை நம் ஈரோடு E V K சம்பத் அவர்களும் ,தந்தை பெரியாரும் ..ரஷியா சென்றபொழுது .அங்குள்ள பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளை பார்க்கவேண்டும் ..எப்படி கல்வி கற்கிறார்கள் என்று தெரிந்துகொள்வதற்காக சென்றனர்..அங்குள்ள சிறு வயதிலேயே நூலகம் சென்று பொது அறிவுகளை தெரிந்துகொள்கின்றனர் ..தங்களின் அனுபவங்களை அழகாகா  பெரியார் செல்வம் அவர்கள் விவரித்தார் ...

திரு .K .தங்கவேல் Ex ,MLA ..அவர்கள் ,உன்னேயே நீ அறிவாய் ..என்ற தலைப்பில் ..இன்றய வளரும் இளைய சமுதாயம் ..தொழில்நுட்பங்கள் வளரும் வளர்ச்சிக்கு ...புத்தக வாசிப்பும் ,நேசிப்பும் ...எப்படி கொண்டுவருவது அழகாக எடுத்துரைத்தார் ...கல்வி வளர்ச்சி இன்றய பெற்றோர்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்பிக்கொண்டிருப்பது வேதனையானது ...புத்தகம் வாசிப்பின் மூலம் ...வளர்த்த தாய் தந்தையை போற்றி பாதுகாக்கவேண்டும் ...புத்தகம் நல்ல மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்று நயம்பட உதாரணங்களோடு பேசியது அருமை ....

அரிமா .A நீலகண்டன் அவர்கள் ,...பாலதண்டாயுதம் அவர்கள் ,அரிமா பிரகாஷ் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்ட சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தனர் ..

கருத்துரை வழங்கிய திரு .தஞ்சை பெரியசெல்வம் அவர்களுக்கு ..வழக்கறிஞர் தம்பி பிரபாகரன் அவர்களும் ,திரு .தங்கவேல் அவர்களுக்கு .உடுமலை சிவகுமார் அவர்களும் ...திருவள்ளுவர் படம் நினைவு பரிசாக வழங்கினர்

பள்ளிக்குழந்தை செல்வங்கள் வழங்கிய கலைநிகழ்ச்சிகள் அருமையாக இருந்தது ....
உடுமலை காற்றலைக்கு சக்தி அதிகம் போலும் ...இன்றைய உடுமலை புத்தக திருவிழா ...புது சொந்தம் நட்பாக கிடைத்தது ...தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து ...திரு .தனசேகர் அவர்கள் அறிமுகம் ...இந்த வாய்ப்பு ..வசந்தம் குழுவிலிருந்து கிடைத்த சொந்தம் ...திரு தங்கவேலுசாமி ..மாமா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் ...நடந்த கொண்டிருந்த புத்தக திருவிழா நிகழ்ச்சியில் சரியாக அவரிடம் பேசமுடியவில்லை ...கொஞ்சம் வருத்தம் ..திரு .தனசேகர் அவர்கள் ,உடுமலை குடிமங்கலம் கமேஷா காற்றாலை மின் உற்பத்தி நிறுவனத்தில் ப்ரொஜெக்ட்டில் பணிபுரிபபவர் என்று தெரிவித்தார் ..என்னையும் அறிமுகம் செய்துகொண்டேன் ..சொந்தங்கள் இனி தொடரும் ....வாழ்த்துக்கள் .. 

தங்கவேல்சாமி  மாமா இனி கவலை கொள்ளத்தேவையில்லை ...250 ஆண்டுகளுக்கு முன் இருந்த பாளையங்களை ..இன்றைய இளைய சமுதாயம் முகநூல் ,வாட்ஸாப்ப் மூலம்  நம் சொந்தங்களை ஒருங்கிணைத்து கொண்டு வந்துவிடலாம் ..நம் எதிர்கால கம்பள குழந்தைச்செல்வங்களுக்காக .....

செவ்வாய், 3 அக்டோபர், 2017

இன்று உடுமலை புத்தக திருவிழாவா!!!! ..உடுமலை தேர் திருவிழாவா!!!! என்று பார்க்கும் அளவுக்கு ..இன்று நடந்த புத்தக திருவிழா நடைபெற்றது

புத்தக திருவிழாவிற்கு ஹென்றி டேனியல் அவர்கள் வரவேட்புரை நிகழ்த்தி அனைவரையும் வரவேற்றார்

இயற்கை மருத்துவர் ..வேளாண்மை செம்மல் திரு.கோ .சித்தர் அவர்களின் இன்றைய குழந்தைச்செல்வங்களுக்கு ,உடுமலை மக்களுக்கு இயற்கை உணவின் மகிமையை பற்றி நல்ல எடுத்து கா ட்டுகளுடன் ..உணவு பழக்கவழக்கங்கள் பாரம்பரிய மிக்க உணவுகளை மறந்து ..மருந்து உணவுகளை உண்டுகொண்டிருக்கிறோம் ...சித்தர் அவர்களின் பேசிய அருமையான பேச்சை ..வந்திருந்த பெண்களின் கூட்டம் ,குழந்தைகளின் கூட்டம் ...ஊடகவியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தது வெகு அருமை ..

உடுமலை மாணவர் ஒருவர் ..சறுக்கு விளையாட்டை வாட்ஸாப்ப் மூலம் ...ஆந்திராவில் இருக்கும் ஒரு விளையாட்டு வீரருடன் தொடர்புகொண்டு ..அதில் பயிற்சியும் பெற்று கற்று கொண்டு ..சறுக்கு விளையாட்டு குருநாதருக்கு உடுமலை மாணவர் சிறப்பு செய்ய்துள்ளார் ...அவர்களை பாராட்டி ..நம் உடுமலை மண்ணின் மைந்தர்கள்  ,உடுமலையின் நல்ல வளர்ச்சிக்கு பாடுபட்டு கொண்டிருக்கும் S M ..TRAVELS உரிமையாளர் .திரு .நாகராஜ் அவர்களுக்கும் ,திரு .சதயம் பாபு அவர்களுக்கும்,இந்த நிகழ்வை சரியான நேரத்தில் ஊக்க படுத்தி ,சுட்டிக்காட்டி பெருமை படுத்திய ..தமிழ் இந்து பத்திரிகை திரு .நாகராஜ் அவர்களுக்கு உடுமலை மக்களின் சார்பாக ,புத்தக திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர் சார்பாக நன்றிகள் ...

இன்னெரு சிறப்பு வருகை தந்த ஊடகவியாளர்கள் ...தினமலர் பத்திரிகை ..செந்தில் ராம் ...நியூஸ் 18 பரணி ஷங்கர் ,தமிழ் இந்து ..நாகராஜ்  அவர்கள் .,தினமும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் ..தீக்கதிர் மகாதேவன் ..நன்றிகள் ..

புதுக்கோட்டை யில் இருந்து வந்துகருத்துரை வழங்கிய திரு M சின்னதுரை அவர்கள் ...பாரதியின் வரிகளுக்கு ஏற்ப ...உடுமலை மக்களின் வாசிப்பு ..நேசிப்பு ..பற்றியும் ...பள்ளி குழந்தைச்செல்வங்களின் ..கலை நிகழ்ச்சிகளை பற்றியும் உடுமலை மக்களின் மேன்மைகள் பற்றி ..புத்தர் ,இயேசு நாதர் ,இஸ்லாம் ..வரலாறுகளில் வரும் நிகழ்வுகளை சுட்டிக்காட்டி எளிய நடையில் ..பாமர மக்களுக்கு புரியும் வகையில் பேசியது,அவர் பேசும்போது ...மேடையை சுற்றி இருக்கும் மரங்களில் உட்கார்ந்து கொண்டிருந்த வவுவால்கள் பறவையின் சிறிது நேரம் ஆரவாரம் செய்தது அருமையான நிகழ்வுகளாக அமைந்தது ...

திரு .அந்தோணிராஜ் அவர்கள் ,திருமதி .விஜயலக்ஷ்மி ,அவர்கள் ,திரு .திருமாவளவன் அவர்கள் ,திரு .திருநாவுக்கரசு அவர்கள் ,சத்யம் பாபு அவர்கள் கலந்து கொண்டு நினைவு பரிசுகளை அளித்தனர் ..

நன்றியுரை திரு .ஓம் பிரகாஷ் அவர்கள் நன்றி தெரிவித்து இன்றய நிகழ்வு ஆத்ம திருப்தியாக ,வாழ்க்கையைக்கு பயனுள்ளதாக அமைந்த புத்தக திருவிழாவாக நிறைவடைந்தது ...

உடுமலை புத்தகத்திருவிழா செய்தித்தொடர்பாளர் ...சிவக்குமார்











 

திங்கள், 2 அக்டோபர், 2017

இன்று : 03-10-2017 செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணி

6-ம் ஆண்டு உடுமலை புத்தகத் திருவிழா 2017

செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 8 முடிய ...

தினசரி காலை 11 மணி முதல் இரவு 9.00 மணிவரை


தலைமை :திரு .S .அந்தோணிராஜ் அவர்கள் ,முதன்மை நிர்வாகி ,விண்ட் கேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் ,குடிமங்கலம் உடுமலை


முன்னிலை : C .விஜயலட்சுமி அவர்கள் ,தலைமையாசிரியர் பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ,உடுமலை

பேராசிரியர் .P .திருமாவளவன் அவர்கள் ,அரசு கலைக்கல்லூரி ,உடுமலை

திரு .K .திருநாவுக்கரசு ,அவர்கள் ,ஆயுள் காப்பீட்டு கழகம் உடுமலை

திரு .சத்யம் P .பாபு அவர்கள் அவர்கள் ,சத்யம் சோசியல் சர்வீஸ், உடுமலை



வரவேற்புரை :திரு .ஹென்றி டேனியல் , அவர்கள் .



கருத்துரை ....வேளாண்மைச்செம்மல் திரு .கோ .சித்தர் அவர்கள் ,இயற்கை மருத்துவர் மற்றும் இயற்கை வேளாண்மை வல்லுநர் ,
"நலமும் வளமும் உணர்வாலே.... "


திரு .M .சின்னத்துரை அவர்கள் ,புதுக்கோட்டை ..
"அக்னி குஞ்சொன்று .."


நன்றியுரை : திரு .R .ஓம் .பிரகாஷ் அவர்கள்

புத்தக திருவிழா செய்தி தொடர்பாளர் :சிவக்குமார் ...









ஞாயிறு, 1 அக்டோபர், 2017

இன்றைய உடுமலை புத்தகத்திருவிழாவில் ..கருத்துரை வழங்கிய ..திரு .ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் ...இன்றைய குழந்தைகளையும் .படித்த பெருமக்களுக்கு சிந்தனையை தூண்டும் வண்ணம் பேசியது அருமை ..


இன்று : 02-10-2017 திங்கள்கிழமை மாலை 6.00 மணி


6-ம் ஆண்டு உடுமலை புத்தகத் திருவிழா 2017

செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 8 முடிய ...

தினசரி காலை 11 மணி முதல் இரவு 9.00 மணிவரை

தலைமை :Rtn.Dr. S .சுந்தர்ராஜன் அவர்கள் ,தேஜஸ் ரோட்டரி சங்கம் ,உடுமலை

முன்னிலை : Rtn PHF P .K ஸ்ரீ குமார் அவர்கள் தேஜஸ் ரோட்டரி சங்கம் ,உடுமலை
Rtn MPHF .R ஆனந்த் அவர்கள் ,தேஜஸ் ரோட்டரி சங்கம் ,உடுமலை
Rtn .S சக்கரபாணி அவர்கள் ,தேஜஸ் ரோட்டரி சங்கம் ,உடுமலை
திரு .வே .சின்னராசு அவர்கள் ,தமிழாசிரியர் ,பாரதியார் நூற்றாண்டு நினைவு பெண்கள் அரசு மேல்நிலை பள்ளி .உடுமலை
திருமதி .V .விஜயலட்சுமி அவர்கள் ,பட்டதாரி ஆசிரியர் பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ,உடுமலை

வரவேற்புரை :திரு .த .லோகேஸ்வரன் அவர்கள் .


கருத்துரை ....திரு .ஆதவன் தீட்சண்யா அவர்கள் ,மாநில துணை பொது செயலாளர் ,த மு எ க ச .

"கற்பிக்கப்படும் கசடுகள் "



நன்றியுரை : தீக்கதிர் .திரு .மகாதேவன் அவர்கள் ...

புத்தக விழா செய்தி தொடர்பாளர் :சிவக்குமார் ...