ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

கோபுர தரிசனம் ......கோவை -மருதமலை


நீதி அரசர் ...வீ .தங்கராஜ் .M .A .,M .L .,வட வீரநாயக்கன் பட்டி ..தேனீ ..அய்யாவை பார்க்க செல்லும்போது ,அய்யா அவர்கள் திருமண நிகழ்வுகள் ,கோவில் திருவிழாக்கள் ,நம் சமுதாய கூட்டங்கள் நடக்கும் வரும்போது ..சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைக்கும் போது ..நம் கம்பள சமுதாயத்திற்கு தற்பொழுது தேவையான முன்னேற்ற கருத்துக்கள் ,இன்னும் நம் சமுதாயம் எதிர்கொண்டு சாதிக்க வேண்டிய பணிகள் ..கலந்து உரையாடுவது வழக்கம் ..இப்பொழுது தான் பணிஓய்வு பெற்று ,நம் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக ..பொதுச்செயலாளராக தன் பணியை துவக்கி கடந்த இரண்டு வருடங்களுக்கு மேல் ,ஓய்வின்றி பணியாற்றி வருகிறார் ..மாவட்ட தலைவர்கள் ,அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து முறைப்படி தக்க ஆலோசனைகளை வழங்கி நல்ல முறையில் பணியாற்றி வருவது மகிழ்ச்சி .கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ,நமது மாநில செயல் தலைவரின் ,கோவை -திருப்பூர் மாவட்டம் தட்டச்சு தலைவர் பொறுப்பிற்கு பதவியேற்பு விழாவிற்கு கோவை வந்தபொழுது ..அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது ..இன்றய இளைஞர்களுக்கு கல்வி ,வேலைவாய்ப்பு , பெற்று தருவது பற்றி ,போகும் இடங்களில் ,சந்திக்கும் முக்கிய தொழிலதிபர்கள் ,அரசு துறை சார்ந்த பதிவுகளில் இருப்பவர்களிடம் கேட்டு ..தன்னாலான அனைத்து முயற்சிகளையும் பெற்று பணியாற்றி வருகிறார் ..இந்த தலைமுறையை பெற்றோர்கள்  குழந்தைகளை  படிக்க வைத்துவிட்டார்கள் ..கோவை ,திருப்பூர் ,சென்னை என்றால் எப்படியோ வேலைவாய்ப்பை பெற்றுவிடுகின்றனர் ..இன்னும் கிராமத்தில் படித்த இளைஞர்கள் ,இளைஞிகள் ,,வேலை வாய்ப்பு பெற தடுமாறுகின்றனர் ..சந்திக்கும் பெற்றோர்கள் படிக்கவைத்துவிட்டார்கள் ..வேலைவாய்ப்பை எப்படி பெறுவது திணறுவதை பற்றி ,அவருக்கும் கொஞ்சம் வருத்தம் ..நம் சமுதாயத்தினர் தொழில் துறையில் மிக குறைவாகவே உள்ளனர் ..அதற்கான திட்டங்கள் திட்டமிட்டு தகந்த வழிமுறைகளை செயல்படுத்துவதற்கு வழி ஏற்படுத்தி கொண்டு உள்ளார் .
தற்பொழுது நம் சமுதாய கூட்டங்களில் ,இளைஞர்கள் மத்தியில் நல்ல நண்பனாக இயல்பாக இருந்து உரையாடுவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது .அவரும் இளைஞர்கள் கேட்பதை தெளிவாக ,நுணுக்கமாக கேட்டு ,தகந்த ஆலோசனை வழங்குகிறார் .,இனி வரும் காலங்களில் நம் சமுதாயத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் ,முன்னேற்ற நிகழ்வுகளையும் செயல்படுத்தி,முன்னேற்ற பாதையில் வழிநடத்தி அழைத்துச்செல்வார்,தன் பணிக்காலங்களில் நடந்த நிகழ்வுகள் ,எப்படி நல்லவிதமாக கையாண்டது ,நல்வழிப்படுத்தியது பற்றி அழகாக எடுத்துரைத்தார் . ..எனக்கும் சிறந்த  ஆலோசனைகளை வழங்கி ,எப்படி பணியாற்றுவது ,குறித்து வழிகாட்டியுள்ளார் ...நீதி அரசர் அவர்களுக்கு..என் மதிப்புமிக்க நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் ...












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக