வியாழன், 15 பிப்ரவரி, 2018

ராஜ கம்பள குலதெய்வங்கள் -பெண்கல்வி


இன்றய கம்பள சமுதாய பெண்குழந்தை செல்வங்களின் கல்வி ,வேலைவாய்ப்பு ..அசுர வேகத்தில் முன்னேற்ற பாதைகளில்  வளர்ந்து வருகிறது மிக்க மகிழ்ச்சி கடந்த பதினைந்து வருடங்களில் கல்வியில் விழிப்புணர்வு பெற்ற சமுதாயமாக வளர்வதில் மற்றட்ட மகிழ்ச்சி ..இதற்கு காரணம் ..பெற்றோர்களின் முடிவு,சரியான வழிகாட்டியானா சொந்தங்கள் மூலம் பயன்படுத்தி  ...அதை பெண்குழந்தைச்செல்வங்கள் அதை சரியாக நல்ல வழியில் பயன்படுத்தி ..தங்களின் வாழ்க்கையும் ,தன் பெற்றோர்களின் கனவுகளை நிறைவேற்று வருகின்றனர் ..வீரம் மிக்க தளி எதுலப்பர் மண்ணில் பிறந்து ,விருப்பாச்சி கோபால்நாயக்கர் மண்ணின் பிறந்த விஜயகுமார் மைந்தனை கரம்பிடிக்கும்குஜ்ஜா பொம்மு குலத்தை சேர்ந்த  என் அருமை மகள் அனுசியாவிற்கும் திருமண வாழ்த்துக்கள் ..அனுசியாவும் ....பள்ளி படிப்பின்போதே ..விளையாட்டு துறையிலும் திறமையாக பல விருதுகளை வாங்கியுள்ளார் ...8 -ம் வகுப்பு முடிய காளாஞ்சி பட்டி கிராமத்து சூழல் படிப்பு ,ஒன்பதாம் ,பத்தாம் வகுப்பு கோவையில் சின்மயா வித்யாலயா பள்ளிப்படிப்பு ,மேல்நிலை பள்ளி கோவையில் செயின்ட் மாரிஸ் கிருஸ்துவ பள்ளியில் அறிவியல் துறையை தேர்ந்து எடுத்து நன்றாக படித்து மதிப்பெண்கள் பெற்று ...கோவையில் புகழ்பெற்ற நிர்மலா கல்லூரி யில் ..இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு முடித்து..இன்று சென்னையில் இந்திய ஆட்சி பணிக்கு ,பயிற்சி எடுத்துக்கொண்டுள்ளார் ... கல்லூரியில் படிக்கும் போது ஓவிய பயிற்சியில் தேர்வுபெற்று ..லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்கு முயற்சி செய்து முன்னர் சாதனையை முறியடிக்க முடியவில்லை .சாதனைக்கு முயற்சி செய்ய்வதே வெற்றி காண முதல் படி ...முதலில் மேல்நிலை பள்ளிப்படிப்பு படிக்கும் போதே ..மருத்துவர் ஆகும் கனவு ..அருமை மகளுக்கு இருந்தது ..அது முடியாமல் போனது கொஞ்சம் வருத்தம் ..அதையும் கடந்து .அதுவும் கம்பள பெண்சமுதாயத்தில் ..பெண்குழந்தைச்செல்வங்கள் இவ்வளவு ஆர்வம் கொண்டு முன்னேறி வந்து கொண்டிருப்பது பெருமையாகவும் ...சந்தோஷத்தையும் அளிக்கிறது ..

என் அருமை மாப்பிள்ளை .காளாஞ்சிபட்டி .திரு .விஜயகுமார் -பொறியாளர் ,சிறு தொழில் முனைவோர் மற்றும் விவசாயம் செய்துவருகிறார் ..இவரும் அரசு பணிக்கு முயற்சி செய்துகொண்டுள்ளார் ..வாழ்த்துக்கள்

இரண்டு செல்வங்களுக்கும் என் மனமார்ந்த கம்பள விருட்சம் அறக்கட்டளை  சார்பாக திருமண வாழ்த்துக்கள்...உங்களை போன்று நம் சமுதாய குழந்தை செல்வங்கள்  கல்வி ,வேலைவாய்ப்பு  உங்களை போன்று கனவுகளை..நனவாக்கி வாழ்க்கையில் முன்னேற உங்களை போன்று வளர்ந்து வரவேண்டும் ..என் ஆசையும் ,நம் கம்பள சமுதாய ஆசையும் கூட ..வாழ்த்துக்கள் ...


இன்னும் சில வாரங்களில் ...ராஜகம்பள சமுதாய பெண்செல்வம் ஒருவர் தன் பொறியாளர் துறை படித்து ...தன் சிறு வயது கனவான ..விமான ஓட்டியாக ..வளரும் சொந்தத்தை சொல்லுகிறேன் அடுத்த சில வாரங்களில் பகிர்கிறேன் ..உங்களின் சிவக்குமார் ஷ்யாமசுதிர் ...







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக