டேபிள் மேனர்ஸ்...
இன்று நாம் பார்க்க போகும் சப்ஜெக்ட் டேபிள் மேனர்ஸ். இது மிகவும் முக்கியமான ஒன்றூ. சாதாரண ரெஸ்டாரன்டுக்கு போனாலும் நம் டேபிள் மேனர்ஸை கண்டிப்பாக பின்பற்றினால் மிகவும் நல்லது. முதலில் நம்மை டேபிளுக்கு அழைத்து சென்று அமர வைத்த உடன் நாம் டேபிளில் கானும் விஷயம் நேப்கின், ஃபோர்க், ஸ்பூன், கத்தி. முதலில் நாப்கினை மடியில் போட்டு கொள்ளவும். சிறியவர்களுக்கு கழுத்தில் சொருகிவிட்டு ஹாங்கிங் நாப்கின் போல் கட்டவும். டேபிளில் இருக்கு கத்தி,ஃபோர்க், ஸ்பூன் இடம் மாற்றாதீர்கள். முதலில் புஃபே சாப்பாடு பற்றி பார்ப்போம். முதலில் டேபிளில் ஒரு குவார்ட்டர் பிளேட் இருக்கும் இது பிரட், நான் போன்றவை வைக்கவேண்டும். முனியான்டி விலாஸ் மாதிரி எலும்பு, மீன் முள்ளை அதில் வைக்க வேண்டாம். இது மிக முக்கியம். நிறைய ஹோட்டல்களில் சாப்பிட்ட பிளேட்டை ரீஃபில் மற்றும் அடுத்த சர்விங்குக்கு அனுமதிக்க மாட்டார்கள். அதனால் சாப்பிட்ட
பிளேட்டை டேபிளில் வைத்து ஸ்பூன் ஃபோர்க் கத்தி மட்டும் டேபிளில் எடுத்து தனியே வைத்து செல்லவும். புது பிளேட்டை எடுத்து திரும்பவும் லைனில் வரவு. கொஞ்சம் சாம்பார் மட்டும் தானே என்று லைனில் நிற்காமல் ஜம்ப் செய்யாதீர்கள். முதல் சூப் அல்ல்து சாலட் தனியே எடுத்து வந்து சாப்பிடுங்கள். புஃபே வைத்த காரணமே உணவை வேஸ்ட் பண்ணக்கூடது என்று தான். அதனால் சாலட், தந்தூரி, ஸ்டார்ட்டர்ஸ், நான், ரைஸ் எல்லாம் பரங்கிமலை போல் குவித்து எடுத்து வருவதை தவிர்க்கவும். முதலில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து டேஸ்ட் பார்த்து பிறகு பிடித்த உணவை மட்டும் நிறைய எடுத்து சாப்பிடவும். நான் ரொட்டியை சின்ன பிளேட்டில் எடுத்து வரவும். கடைசியில் டெஸர்ட்ஸ் அல்ல்து ஐஸ்கிரிமை அங்குள்ள சின்ன போல் அல்ல்து கப் அல்ல்து சிறிய தட்டுகளில் எடுத்து வந்து சாப்பிடுங்கள். சாப்பாடு தட்டில் எடுக்காதீர்கள், சிலர் குடுமபத்திற்க்கும் மொத்தமாக எடுத்து வந்து பிரித்து சாப்பிடுவார்கள் அது தவறூ. ஒவ்வொரு முறையும் பிளேட் மாற்றூம் விஷயம் நீங்கள் புஃபேக்கு சென்றால் மட்டுமே. ஒரு பார்ட்டி மற்றூம் கல்யான வீடுகள் ஹோட்டலில் நட்ந்தால் ஒரே பிளேட் தான் எடுக்க வேண்டும் இல்லயென்றால் நீங்கள் மூன்று பிளேட் மாற்றீனால் மூன்ற் ஆட்களுக்குகான சார்ஜ் அவர்களுக்கு போட்டு விடுவார்கள்.
ஃபோர்க் ஸ்பூன் கீழே விழுந்தால் எடுத்து வைத்துவிட்டு வேறு ஒன்றை கேட்கவும். தயவு செய்து காலியாக இருக்கு டேபிளில் இருந்து எடுக்கக்கூடாது. அது போக கம்ஃபோர்ட் இல்லயெனில் தயவு செய்து கையில் எடுத்து சாப்பிட தயங்காதீர்கள். அதே சமயம் ஒவ்வொரு சர்விங்குக்கு செல்லும் போது இடது கையில் எடுத்து பொடுங்கள் எச்சில் கையில் கரண்டிகளை எடுக்காதீர்கள். உணவு எடுத்தவுடன் தயவு செய்து மூடியை மூடவும். சுரன்டி, வழித்து எந்த பதார்த்தையும் எடுக்காதீர்கள். கேளுங்கள் ரிபிளனிஷ் செய்வார்கள்.சாப்ஸ்டிக் மூலம் சாப்பிட தெரிந்தவர்கள் மட்டும் வாங்கி சாப்பிடுங்கள் நிறைய பேர் அதை வைத்து சாப்பாடுடன் கொலைவெறியோடு சன்டை போட வேண்டாம்.
நேப்கின்னில் கை துடைத்துகொண்டு ஃபிங்கர் போல் கேளுங்கள். இல்லெயனில் வாஷ் ரூம் சென்று கை கழுவுங்கள். முடிந்த வரை 1 மணீ நேரம் மினிமம் இல்லயெனில் புஃபே வேஸ்ட் தான். பிரேக்ஃபாஸ்ட் புஃபே போது தோசை, ஆம்லெட் சொல்லிவிட்டு வந்து அமர்ந்தால் போதும் அங்கேயே நிற்க வேண்டாம். மினரல் வாட்டர், காஃபி, டீ, குளிர்பானங்கள், ஜூஸ் வைகைகள் எக்ஸ்ட்ரா..............
கடைசி டிப்ஸ் - நான் மதுபானம் அருந்தவதில்லை. ஒவ்வொரு சமயம் நண்பர்களூடன் பாருக்கோ சென்றால் அவர்கள் ஒரு இரண்டு ஸ்மால் அடிப்பதற்க்கு முன் நான் ஒரு அரை கிலோ சைடு டிஷ் சாப்பிட்டுவிடுவேன். ஒரு சமயம் அவிநாசி ரோட்டில் இருக்கும் ரெசிடென்ஸ் ஹோட்டலில் 6 பேர் போனோம். நான் வழக்கம் போல் குடிக்கமாட்டேன் என்பதால் எனக்கு பிடித்த மாக்டெயில் ஆர்டர் செய்ய சொன்னார்கள் நான் இடது மெனுவை பார்க்காமல் வலது சைடில் காஸ்ட்லியான் ஒரு ஜுஸை அர்ட்டர் செய்தேன் சுமார் 1300 ரூபாய். மொத்த பில் 2900. ஐந்து பேர் ஃபாரின் ஸ்காட்ச் மொத்தமும் சேர்த்து 1400 நான் குடித்த மாக்டெயில் 1300 டாக்ஸ் சேர்த்து 2900 வந்தவுடன் ஷாக் ஆன பிரன்ட்ஸ் அதில் இருந்து என்னை அவகள் உற்சாகபானம் அருந்தும் போது கூட்டி போவதில்லை........1300 டிரிங் மகா கேவலமாக கழுவி ஊத்தினமாதிரி இருந்தது இன்னொரு வேதனை...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக