இன்று மாலை நடைபெற்ற தேசிய அறிவியல் தினம் நிகழ்வு -உடுமலைப்பேட்டை
உயிரினத் தோற்றமும்,வளர்ச்சியும் டார்வின் தியரி ஸ்லைடு ஷோ மற்றும் கோவை சதாசிவம் அவர்களின் உரைவீச்சு அருமையான நிகழ்வாக அமைந்தது ..உடுமலை தண்டபாணி அவர்களின் இன்றைய அறிவியல் நிலைமை பற்றி வெகு அழகாக குழந்தைகளிடம் எடுத்துரைத்தார் ...ஆசிரியர் ஹென்னா ஷெரிலி ,மற்றும் ஆசிரியர்கள் ,செய்தியாளர்கள் ..தீக்கதிர் -மகாதேவன் அவர்கள் ,நியூஸ் 18 -பரணி ஷங்கர் அவர்கள் கலந்துகொண்டு அறிவியல் தினத்தை சிறப்பித்தினர் .
ராமன் விளைவு: தேசிய அறிவியல் தினம்: ஒரு பார்வை:
நீல நிறம், வானுக்கும் கடலுக்கும்
நீலநிறம் காரணம் ஏன் கண்ணா? என்று கவியரசரும் கேட்டு, பதில் சொல்லாமல் விட்டதை அறிவியல் ரீதியாக, நிரூபித்தவர் சர் சி.வி. ராமன் அவர்கள்.
நீலநிறம் காரணம் ஏன் கண்ணா? என்று கவியரசரும் கேட்டு, பதில் சொல்லாமல் விட்டதை அறிவியல் ரீதியாக, நிரூபித்தவர் சர் சி.வி. ராமன் அவர்கள்.
திடம், திரவம், மற்றும் வாயு இந்த 3 நிலைகளிலும் உள்ள மூலக்கூறுகள், தம்முள் ஊடுறுவும் ஒளியை சிதற அடிக்கின்றது. இப்படி சிதறிய மூலக்கூறுகள், ஒளியின் அலை நீளத்தை மாற்றுவது, ராமன் விளைவு (ராமன் எபெக்ட்) எனப்படும். இவ்வாறக சிதற அடிக்கப்படும் ஒளிக்கற்றைகளான "ராமன் ஸ்பெக்ட்ரம்" ( இது 2க் அல்ல.! வேற ஸ்பெக்ட்ரம்), மூலக்கூறுகளின் கட்டமைப்பை அறிய உதவுகிறது. இத்தகைய இயல்பியல் தத்துவம், விஞ்ஞான வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்து வருவது சரித்திரம்.
சர் சி.வி. ராமன் அவர்கள் பற்றி 2 நினைவு கூறல்களை, விரிவாக, ஏற்கனவே பார்த்தோம்.
1. ஆசியாவின் முதல் நோபல் விஞ்ஞானி.!
2. இந்தியாவிலும் & அறிவியலுக்காகவும், நோபல் விருது பெற்ற முதல் விஞ்ஞானி .
3. தமிழகத்தைச் சேர்ந்த 3 நோபல் விஞ்ஞானிகளில் முதன்மையானவர்.
4. "பாரத ரத்னா" & "நோபல் பரிசு" இரண்டையும் ஒன்றாக பெற்ர ஒரே இந்திய விஞ்ஞானி, சரித்திரத்தில் இவர் மட்டுமே.
ராமன் விளைவை, அவர் உலகிற்கு உணர்த்திய பிப்ரவரி 28ம் தேதி, இன்று "தேசிய அறிவியல் தினமாக" கடைபிடிக்கப் படுகிரது. சிறு குறிப்புடன்,
நன்றி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக