வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

காசும் செலவும் ஆகா கூடாது ...வாழ்க்கைக்கு தேவையான அறிவான தகவலும் வேண்டும் ,என்ன பண்ணலாம்...??????

நாளை சனிக்கிழமை ..வார கடைசி நாள் ...குடும்பத்தில் ,மனைவி ,குழந்தைகள்,நாளைக்கு எங்கு அழைத்து செல்லலாம் ..காசும் செலவும் ஆகா கூடாது ...வாழ்க்கைக்கு தேவையான அறிவான தகவலும் வேண்டும் ,என்ன பண்ணலாம் என்று ஆயிரம் கேள்விகள் மனதில் எழுகிறதா ..கவலை வேண்டாம் ..நாளை  ,உடுமலை முதற்கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் " மத்தியதர வருமான பிரிவினருக்கான சேமிப்பு " பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் உடுமலை தளி ரோடு முதற்கிளை நூலகத்தில் 17.02.2018 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது.
நிதி திட்டமிடல் என்பது வெறும் சிலருக்கு மட்டுமே தேவையான ஒன்றல்ல ,அது தற்போது இருக்கும் காலகட்டத்தில் அனைவர்க்கும் பொருந்தக்கூடிய ஒன்று ,வாழ்வில் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பல திறன்களுள் நிதி திட்டமிடல் என்பது மிக முக்கியமானது ,தற்பொழுது பொருளாதார சூழ்நிலையில் வாழ்க்கையை திறம்பட ,வாழ்வின் லட்சியங்களை அடைவதற்கான செய்முறையே நிதி திட்டமிடல் .நிதி திட்டம் என்றாலே வெறும் பணம் தொடர்பான ஒன்றுதான் என்று நம்மில் பலர் நினைப்பதுதான் .அது உண்மையல்ல,பணம் என்பது ஆரம்பம் மட்டுமே ...ஆயிரம் கேள்விகள் உங்கள் மனதில் எழலாம் ...இதற்கான விடை ..நாளை 
 மத்திய அரசின் SEBI அமைப்பின் நிதிக்கல்வி ஆலோசகர் முனைவர்.வனிதாமணி அவர்கள் கருத்துரை ஆற்றுகிறார்.
அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுவீர்.
: மறவாமல் வருக
: பயன் பெறுக
சந்தேகம் தெளிக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக