புதன், 28 பிப்ரவரி, 2018

இன்று மாலை நடைபெற்ற தேசிய அறிவியல் தினம் நிகழ்வு -உடுமலைப்பேட்டை 
உயிரினத் தோற்றமும்,வளர்ச்சியும் டார்வின் தியரி ஸ்லைடு ஷோ மற்றும் கோவை சதாசிவம் அவர்களின் உரைவீச்சு அருமையான நிகழ்வாக அமைந்தது ..உடுமலை தண்டபாணி அவர்களின் இன்றைய அறிவியல் நிலைமை பற்றி வெகு அழகாக குழந்தைகளிடம் எடுத்துரைத்தார் ...ஆசிரியர் ஹென்னா ஷெரிலி ,மற்றும் ஆசிரியர்கள் ,செய்தியாளர்கள் ..தீக்கதிர் -மகாதேவன் அவர்கள் ,நியூஸ் 18 -பரணி ஷங்கர் அவர்கள் கலந்துகொண்டு  அறிவியல் தினத்தை சிறப்பித்தினர் . 
ராமன் விளைவு: தேசிய அறிவியல் தினம்: ஒரு பார்வை:
நீல நிறம், வானுக்கும் கடலுக்கும்
நீலநிறம் காரணம் ஏன் கண்ணா? என்று கவியரசரும் கேட்டு, பதில் சொல்லாமல் விட்டதை அறிவியல் ரீதியாக, நிரூபித்தவர் சர் சி.வி. ராமன் அவர்கள்.
திடம், திரவம், மற்றும் வாயு இந்த 3 நிலைகளிலும் உள்ள மூலக்கூறுகள், தம்முள் ஊடுறுவும் ஒளியை சிதற அடிக்கின்றது. இப்படி சிதறிய மூலக்கூறுகள், ஒளியின் அலை நீளத்தை மாற்றுவது, ராமன் விளைவு (ராமன் எபெக்ட்) எனப்படும். இவ்வாறக சிதற அடிக்கப்படும் ஒளிக்கற்றைகளான "ராமன் ஸ்பெக்ட்ரம்" ( இது 2க் அல்ல.! வேற ஸ்பெக்ட்ரம்), மூலக்கூறுகளின் கட்டமைப்பை அறிய உதவுகிறது. இத்தகைய இயல்பியல் தத்துவம், விஞ்ஞான வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்து வருவது சரித்திரம்.
சர் சி.வி. ராமன் அவர்கள் பற்றி 2 நினைவு கூறல்களை, விரிவாக, ஏற்கனவே பார்த்தோம்.
1. ஆசியாவின் முதல் நோபல் விஞ்ஞானி.!
2. இந்தியாவிலும் & அறிவியலுக்காகவும், நோபல் விருது பெற்ற‌ முதல் விஞ்ஞானி .
3. தமிழகத்தைச் சேர்ந்த 3 நோபல் விஞ்ஞானிகளில் முதன்மையானவர்.
4. "பாரத ரத்னா" & "நோபல் பரிசு" இரண்டையும் ஒன்றாக பெற்ர ஒரே இந்திய விஞ்ஞானி, சரித்திரத்தில் இவர் மட்டுமே.
ராமன் விளைவை, அவர் உலகிற்கு உணர்த்திய பிப்ரவரி 28ம் தேதி, இன்று "தேசிய அறிவியல் தினமாக" கடைபிடிக்கப் படுகிரது. சிறு குறிப்புடன்,

நன்றி ...
Sivakumar Kumar is celebrating a birthday with வசந்தன் தேவராஜ் . South Korea.
February 28
·
என் இனிய நம் சமுதாய சொந்தம் ..தம்பி  வசந்தன் தேவராஜ் -உடுமலைப்பேட்டை -பொன்னலம்மன் சோலை -சவுத் கொரியா ...என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தம்பியுடன் பேசும்போது ..தம்பி கொஞ்சம் நம் சமுதாயம் என்றாலே கொஞ்சம் பய உணர்வு வருகிறது ..இன்று நல்ல உயர்ந்த பணியில் ..வெளிநாட்டில் பணிபுரிவது மிகுந்த மகிழ்ச்சியும் ..கம்பள சமுதாயத்தில் கல்வி ,வேலைவாய்ப்பு என்று நல்ல நிலையில் இருப்பது சந்தோசம் அளிக்கிறது ..அவ்வப்பொழுது ..என் inbox இல் ..மெயிலில் ..உரையாடி கொள்வோம் ..வாட்ஸாப்ப் இல் ..ஏதாவது நம் குழுவில் சேர்க்கலாம் என்று அவரிடம் கேட்டேன் ...வேண்டாம் அண்ணா ..என்கிறார் ..கல்வியாகட்டும் ,பணியாகட்டும் ..எல்லாம் வெளி நண்பர்கள் ,மற்ற சமுதாயினர் உதவியுடனும் ,தன் கடின உழைப்பின் மூலம் ..வாழ்க்கையில் உயர்நது வளர்ந்து கொண்டு இருக்கிறார் ...நானும் முக்கியமான செய்தி என்றால் மட்டும் அவரிடம் பகிர்ந்துகொண்டு உள்ளேன் ...வாழ்த்துக்கள் தம்பி ...உங்களின் பணி யின் மூலம் நம் கம்பள விருட்சம் அறக்கட்டளைக்கு ,கல்வி ,வேலைவாய்ப்பு ..இருந்தால் உதவுகிறேன் என்று சொல்லியிருக்கிறார் ...கம்பளவிருட்சம் அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் ...


வசந்தன் தேவராஜ் -பயோ-க்ராப்

Post doctoral researcher at Pusan National University
November 2016 to present

Studied at
Nanoscience and Technology Bharathiar University and Goverment College of Science and Arts, Udumalpet

Lives in Busan, South Korea
From Udumalaippettai · Lived in Coimbatore, Tamil Nadu

Married to Oviyya KR Vasanthan
Married since February 23, 2015

Kid ..one cute பேபி

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

Sivakumar Kumar added 39 new photos  feeling happy with Muthu Pandiyan T and 27 others in Srivilliputtur.
Just now
நம்ம கம்பளத்தார் வீட்டு கல்யாணம் 🌷🌷🌷...ஸ்ரீவில்லிபுத்தூர் -துலுக்கப்பட்டி 💐💐💐💐
சேகர் பொம்மையா ...என்று செல்லமாக அழைக்கும் ..நம்ம தம்பி தனசேகர் கல்யாணம் என்று சொல்லும்போதே ..மனதில் மகிழ்ச்சி தொற்றிக்கொண்டது ...நம்ம தம்பி ...காதல் திருமணம் ...அதுவும் நம் சமுதாயத்தில் ..தன் மாமன் மகளேயே சுமார் 10 வருடங்களாக காதலித்து ..அவர்களின் பெற்றோர் ,தன் பெற்றோர் சம்மதத்துடன் ...பேசி கைப்பிடித்த வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் எங்கள்வீட்டு மஹாலக்ஷ்மி ..திருமதி கனகவேணி தனசேகர் அவர்களுக்கு ..எங்களின் கம்பளவிருட்சம் அறக்கட்டளை, சார்பாக வாழ்த்துக்கள்...
தம்பி சேகர் பொம்மையா திருமண நிகழ்வு க்குஉடுமலையிருந்து நேற்று மாலை கார்த்தி SR ,வழக்கறிஞர் முருகராஜ் அவர்களுடன் ,பயணத்தை ஆரம்பித்தோம் ...போகும் வழியெல்லாம் தம்பியின் 6 வருடங்களுக்கு முன் முகநூலில் நட்பாகி ..நம் கம்பளசமுதாயத்தின் வரலாறுகளை தம்பியிடம் முகநூலில் கற்று ..படித்து ,தெரிந்து ..அதுவும் ராஜா இளங்கோ தம்பியோடு ஒரு விழுப்புணர்ச்சியை ஏற்படுத்திய மலரும் நினைவுகளை மனதில் ரீங்காரமிட்டு பயணத்தை வாழ்க்கையில் மறக்க இயலாது ..
தம்பி ...தன் கல்யாணநிகழ்வில் ..கலந்துகொள்வதற்கு முன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் ,திருமாலை வணங்கிவிட்டு திருமண மணமக்களுக்கு அர்ச்சனை செய்துவிட்டு ..துலுக்கப்பட்டி கிராமத்தை நோக்கி பயணமானோம் .தம்பி தன் திருமண நிகழ்வில் ஒரு ஒற்றுமையை கொண்டு வந்தது வெகு சிறப்பு ...வளரும் இளைஞர்களால் தான் முடியும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார் ...பிரிந்து இருக்கும் நம் சமுதாய சொந்தங்களை ,இணைத்து ...தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம் ,விடுதலைக்களம் ,கம்பளசமுதாயம் ஒன்றே என்ற நேர்கோட்டில் வரவழைத்து அழகா தன திருமணநிகழ்வை நடத்தி காட்டியிருக்கார்
அண்ணன் திருப்பூர் ராமகிருஷ்ணன் -கௌரவ ஆலோசகர் ,நாகராஜ் -விடுதலைக்களம் -நிறுவனர் ,திரு .வழக்கறிஞர் திரு .முருகராஜ் -கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் -கௌரவ ஆலோசகர் .அண்ணன் .திரு .ராமராஜ் -வருமானவரித்துறை -சென்னை ,மாமா .திரு.ராஜபாண்டியன் -ரஜினி கட்சியின் தொழிலநுட்பப்பிரிவு ஆலோசாகர் ,பொறியாளர் .தம்பி .இளங்கோ ராஜா -சென்னை ,மாப்பிள திரு .ராஜ்குமார் -விவசாய துறை ,திரு .சுப்புராஜ் -தொழிலதிபர் -சென்னை ,வளரும் தொழிலதிபர்கள் ...கார்த்தி ஸ்மார்ட் ,கார்த்தி SR ...வேலையே கண்ணாக இருக்கும் திருப்பூர் -கரப்பாடி .கார்த்திகேயன் ,மைக்ரோ கார்த்தி ,வைகை சாரல் ,என் வழி தனிவழி என்று வீரநடை போடும் மாமா ..திருப்பூர் ஜெகவீரபாண்டியன் ..,பேரையூர் ஈஸ்வரன் ,மற்றும் தமிழ்நாட்டையே கலக்கி கொண்டு இருக்கும் நம் கம்பள சமுதாயத்தின் விடிவெள்ளி அண்ணன் செல்வம் என்கிற தாதா நாயக்கர் திருமண நிகழ்வில் கலந்துகொண்டது மிக்க மகிழ்ச்சி ...
தம்பியின் நேற்று சந்தித்த பொழுது ...புதுமாப்பிள்ளை போன்று இல்லாமல் ..பரபரப்புடன் அங்கும் ..இங்கும் ..சக்கரத்தை காலில் பனிச்சறுக்கு விளையாடும் சிறுவனைப்போல் வரும் சொந்தங்களை வரவேற்று கொண்டுஇருக்கிறார் ..சொந்தங்கள் தான் வரவேற்பார்கள் மனதில் நினைத்துக்கொண்டேன்...வரும் சொந்தங்களை ஒரு இம்மி அளவும் கூட சங்கடப்படத்தக்கூடாது என்ற பரபரப்பு எங்களை வியப்பில் ஆழ்த்தியது ..இளையராஜா ,ரகுமான் படத்தில் வரும் இயற்கை சூழலால் பின்னப்பட்ட கிராமம் துலக்கப்பட்டி ...காலையில் நம் கம்பளத்தார் முறைப்படி நம் அருள்செல்வர் .திரு .கே .சென்றாயல் பெருமாள் என்கிற பாரதி செல்வம் அவர்களின் திருமண சடங்குகள் வெகு அற்புதமாக நடத்தி எங்களுக்கு வேகா சென்றுகொண்டிருக்கும் வாழக்கை சுழச்சியை ,மறைந்துகொண்டிருக்கும் திருமண முறைகளை எங்களுக்கு கற்பித்தது அருமை ..வாழ்க்கையில் கற்றுக்கொண்டது இன்றய நாள் வெகு சிறப்பு ..
கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் மதிப்பு மிக்க உறுப்பினர் ,தொழில் நகரம் ஓசூர் -இல் சிறந்த வளரும் தொழிலதிபர் தம்பி திருமண நிகழ்வில் ..வாழ்க்கையில் இனிப்புடன் துவங்கவது எங்களின் அறக்கட்டளையின் விதிகளில் ஒன்று ..அதன்பிரகாரம் கேக் வரவழைத்து ..திருமண மணமக்களின் கைகளால் கேக்கு வெட்டி அவர்களுக்கு கொடுத்து ..வந்து இருக்கும் குழந்தை செல்வங்களுக்கும் ,சொந்தங்களுக்கும் ..அளித்து திருமண நிகழ்ச்சியை நடத்தியது அருமை .
திருமண நிகழ்வில் தேவராட்டம் இல்லாமல் நடக்குமா ...அதுவும் இந்திய அளவில் கலக்கி கொண்டுஇருக்கும் நம் தேவராட்ட கலைஞர்கள் ஜெய் ஸ்ரீ சக்தி -தேவராட்ட குழு ,அனுபங்ககுளம் -சிவகாசி ,கலைஞர்களின் தேவராட்டம் அருமையிலும் அருமை ..
மணமக்கள் -திரு .தனசேகர் -கனகவேணி அவர்களின் திருமண வாழ்க்கையில் அடியெடுத்துவைக்கும் அவர்களுக்கு அவர்களின் வாழ்வில் அனைத்து சிறப்புகளையும் பெற வாழ்த்தும் கம்பள விருட்சம் அறக்கட்டளை ,வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் ,விடுதலைக்கழகம் -நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பாக திருமணவாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது ...💐👍👍🌷🌷🌷🌸🌸💪💪💪🙏🙏🙏


என் அருமை ...பிவிபி நந்தா ...என்று செல்லமாக அழைக்கும் .நம்ம பாலமன்னா மாப்பிள்ளைக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...
சிறு வயது வாழ்க்கையில் படிப்புடன்...கடின உழைப்புடன் ...தன் குடும்ப பொறுப்புகளை சுமந்து திறமையாக வாழ்க்கையில் வளர்ந்து வரும் தேனிக்கார பாசமிகு மண்ணிலிருந்து ..கொங்கு மண்ணில் பணிபுரிந்துகொண்டிருக்கும் நந்தகோபால் மாப்பிளைக்கு என் சார்பாகவும் ..நம் கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..

சிறுகுறிப்பு :..என் செல்ல மகன் ஷ்யாமின் தீவிர ரசிகர் ...நம்ம மாப்பிள்ளை நந்தா ... 

வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

என் அம்மா ...கொண்டம்மாள் குமாரசாமி  ...-மூக்குத்தி 

இன்று திடீரென்று ஒரு சம்பவம் நிகழ்ந்து மனநிலையை கொஞ்சம் புரட்டிப் போட்டது.. காலையில் பிரட் வாங்க கடைக்குச் சென்றேன்.. உள்ளேநுழைய வழி விடாமல்பதின் வயது சிறுமிகள் ஐந்தாறு பேர் நடுவில் நின்று எதோ ஒரு பரிசினை தங்கள் தோழிக்கு எப்படி பார்சல் செய்வது என்பது பற்றி பேசியபடி நின்றார்கள். கடைக்குள் இருந்த கடைக்காரர் என் முகம் பார்த்ததும் எட்டி, என்ன வேண்டும் என்றார்.. நான் வீட் பிரட் என்றதும் அவர் வீட்பிரட்டை எடுத்து என் பக்கம் நீட்டினார் என்றாலும் அதை அவர் எட்டிக் கொடுக்கும் படியானதூரத்திலோ அல்லது நான் எக்கி வாங்கும்படியான தூரத்திலோ இருவரும் இல்லை.. நடுவில் நின்ற குழந்தைகள் தடையாக நின்றார்கள். அந்த குழந்தைகளின் உற்சாகத்தை கலைக்கும் மன திடம் எனக்கும் இல்லாதிருந்தது..
திடுமென என் பின்னால் இருந்து ஏம்மா கடைக்கு வந்தவங்களை வழிமறிச்சுக்கிட்டு நிக்கிறீங்களே.. கொஞ்சம் வழி விடுங்கம்மா என்ற குரல் கேட்டது. திடுக்கிட்ட அந்த குழந்தைகள் எனக்கு வழி விட நான் திரும்பிப் பார்த்ததும் மூக்குத்திதான் முதலில் கண்ணில் பட்டது. சாத்வீகமான புன்னகையுடன் மூக்குத்தி அணிந்த பெண் ஒருவர் அங்கே நின்றிருந்தார். கடைககாரர் பிரட்டை கொடுக்கவும் நான் பணத்தைக் கொடுக்கவுமான பரிமாற்றம் முடிந்தபின் அவரை ஒரு புன்னகையோடு நான் பார்த்தேன்.

சாதாரணமாக இப்படி கடையில்எதிர்ப்படும் பெண்கள் எல்லாம் நமக்கு உதவியே செய்தாலும் நாம் அளிக்கும் புன்னகைக்கு பதில் புன்னகைகள் தர மாட்டார்கள். அப்புன்னகைகள் தப்பர்த்தம் கொள்ளப்பட்டுவிடும் என்ற பாதுகாப்பு உணர்வு காரணமாகக்கூட இருக்கலாம்.. ஆயினும் எனது விடைபெறும் புன்னகைக்கு அவர் அதிசயமாக பதில் புன்னகையையும் கொடுத்தார்.
வீடு வரும் வரை அந்த மூக்குத்தி என்கூடவே வந்தது..
உலகில் சிறந்த புன்னகை மூக்குத்திதான் என்று எனக்குத் தோன்றிது.. எப்படி நிகழ்ந்ததென்று தெரியாது..மூக்குத்திகள் மீது எனக்கு பெரிதான பிரேமை உண்டு.. அதற்குக் காரணம் என் அம்மா மூக்குத்தி அணிந்ததாக இருக்கலாம்.. எப்போது என் அம்மாவைப் பார்த்தாலும் முதலில் மூக்குத்திதான் தெரியும். ஒரு பெரிய கல் மேலாக இருக்க அதிலிருந்து நீர்த்துளி போல நான்கு கற்கள் தொங்கும் மூக்குத்தியைத்தான் என் அம்மா இது வரை அணிந்திருக்கிறாள்.
ஒரு வேளை நான் பிறந்து கண் விழித்ததும் முதன் முதலில் கண்டது அவளது மூக்குத்தியாகக் கூட இருக்கலாம்.. நான் வீட்டில் பிரசவிக்கப்பட்ட மகவு. எனக்கு பெரிசா வலியே குடுக்காம பொறந்த புள்ள நீதான் என்று அம்மா சொல்வாள்.. அப்படிப் பிறந்து அம்மாவிடம் கொடுக்கப் பட்டிருந்தால் முதன் முதலாக அவள் முகத்தைப் பார்த்ததை விட மூக்குத்தியைத்தான் நான் பார்த்திருக்கக் கூடும்.. அப்போதே அந்த மூக்குத்தி அம்மாவின் அடையாளமாக என் மனதில் பதிந்திருக்கக் கூடும்.. எல்லாமே அவதானிப்புதான்.. எதுவும் நிச்சயம் கிடையாது.. ஆனால் மூக்குத்திகள் எப்போதும் என்னை வசீகரித்தபடியே இருந்தன என்பது மட்டும் உண்மை..
பார்த்தபடிஇருக்கும்போதே உடன் படித்த சிறுமிகளும், அக்காக்களும் தங்கைகளும், திடும் திடுமென மூக்கு குத்திக் கொண்டுவந்து நிற்பார்கள். முந்தைய நாள் வரை சிறுமிகளாக நம்முடன் ஆடித் திரிந்தவர்கள் மூக்கு குத்தி கொண்டதும் ஒரு அம்மாவின் அடையாளத்தோடு திடீரென பெண்ணாகிவிடும் அதிசயம் எல்லாம் அப்போது நான் கண்டதுதான்..
கம்பளவிருட்சம் அறக்கட்டளை ....
நம்ம கம்பளத்தார் வீட்டு கல்யாணம் .......

ஆலம் விழுதுகளாக தென் தமிழகத்தில் ஒரு அருமையான திருமணவைபவத்தில் ...தன் விழுதுகளை விருட்சமாக வளர்வதற்கு ...நம் தம்பி சேகர் பொம்மையா என்று செல்லமாக அழைக்கும் தம்பி தனசேகரன் அவர்களின் இயந்தறிவியல் படித்த கம்பள இனப்பற்றின்  பங்கு அளப்பரியது ...அதுவும் இளைய தலைமுறையின்  ஆக்க பூர்வமான படித்த மேன்மக்கள்  ,படிக்காத மேன்மக்கள் அனுபவ அறிவின் வழிகாட்டலோடு ..அறக்கட்டளையின் நிகழ்வுகளில் கலந்து ,நம் இளையசமுதாய மக்களின் வளர்ச்சிக்கு ஒட்டுமொத்த வருங்கால இளைய தலைமுறையின் வளர்ச்சிக்கு பாடுபடும் ...உறுப்பினர்கள் ,நிர்வாகிகளின் சார்பாக ..திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் ...திரு .தனசேகர் -கனகவேணி ...மணமக்களுக்கு ...கம்பளவிருட்சம் அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது ...






வியாழன், 22 பிப்ரவரி, 2018

டேபிள் மேனர்ஸ்...
 இன்று நாம் பார்க்க போகும் சப்ஜெக்ட் டேபிள் மேனர்ஸ். இது மிகவும் முக்கியமான ஒன்றூ. சாதாரண ரெஸ்டாரன்டுக்கு போனாலும் நம் டேபிள் மேனர்ஸை கண்டிப்பாக பின்பற்றினால் மிகவும் நல்லது. முதலில் நம்மை டேபிளுக்கு அழைத்து சென்று அமர வைத்த உடன் நாம் டேபிளில் கானும் விஷயம் நேப்கின், ஃபோர்க், ஸ்பூன், கத்தி. முதலில் நாப்கினை மடியில் போட்டு கொள்ளவும். சிறியவர்களுக்கு கழுத்தில் சொருகிவிட்டு ஹாங்கிங் நாப்கின் போல் கட்டவும். டேபிளில் இருக்கு கத்தி,ஃபோர்க், ஸ்பூன் இடம் மாற்றாதீர்கள். முதலில் புஃபே சாப்பாடு பற்றி பார்ப்போம். முதலில் டேபிளில் ஒரு குவார்ட்டர் பிளேட் இருக்கும் இது பிரட், நான் போன்றவை வைக்கவேண்டும். முனியான்டி விலாஸ் மாதிரி எலும்பு, மீன் முள்ளை அதில் வைக்க வேண்டாம். இது மிக முக்கியம். நிறைய ஹோட்டல்களில் சாப்பிட்ட பிளேட்டை ரீஃபில் மற்றும் அடுத்த சர்விங்குக்கு அனுமதிக்க மாட்டார்கள். அதனால் சாப்பிட்ட
பிளேட்டை டேபிளில் வைத்து ஸ்பூன் ஃபோர்க் கத்தி மட்டும் டேபிளில் எடுத்து தனியே வைத்து செல்லவும். புது பிளேட்டை எடுத்து திரும்பவும் லைனில் வரவு. கொஞ்சம் சாம்பார் மட்டும் தானே என்று லைனில் நிற்காமல் ஜம்ப் செய்யாதீர்கள். முதல் சூப் அல்ல்து சாலட் தனியே எடுத்து வந்து சாப்பிடுங்கள். புஃபே வைத்த காரணமே உணவை வேஸ்ட் பண்ணக்கூடது என்று தான். அதனால் சாலட், தந்தூரி, ஸ்டார்ட்டர்ஸ், நான், ரைஸ் எல்லாம் பரங்கிமலை போல் குவித்து எடுத்து வருவதை தவிர்க்கவும். முதலில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து டேஸ்ட் பார்த்து பிறகு பிடித்த உணவை மட்டும் நிறைய எடுத்து சாப்பிடவும். நான் ரொட்டியை சின்ன பிளேட்டில் எடுத்து வரவும். கடைசியில் டெஸர்ட்ஸ் அல்ல்து ஐஸ்கிரிமை அங்குள்ள சின்ன போல் அல்ல்து கப் அல்ல்து சிறிய தட்டுகளில் எடுத்து வந்து சாப்பிடுங்கள். சாப்பாடு தட்டில் எடுக்காதீர்கள், சிலர் குடுமபத்திற்க்கும் மொத்தமாக எடுத்து வந்து பிரித்து சாப்பிடுவார்கள் அது தவறூ. ஒவ்வொரு முறையும் பிளேட் மாற்றூம் விஷயம் நீங்கள் புஃபேக்கு சென்றால் மட்டுமே. ஒரு பார்ட்டி மற்றூம் கல்யான வீடுகள் ஹோட்டலில் நட்ந்தால் ஒரே பிளேட் தான் எடுக்க வேண்டும் இல்லயென்றால் நீங்கள் மூன்று பிளேட் மாற்றீனால் மூன்ற் ஆட்களுக்குகான சார்ஜ் அவர்களுக்கு போட்டு விடுவார்கள்.

ஃபோர்க் ஸ்பூன் கீழே விழுந்தால் எடுத்து வைத்துவிட்டு வேறு ஒன்றை கேட்கவும். தயவு செய்து காலியாக இருக்கு டேபிளில் இருந்து எடுக்கக்கூடாது. அது போக கம்ஃபோர்ட் இல்லயெனில் தயவு செய்து கையில் எடுத்து சாப்பிட தயங்காதீர்கள். அதே சமயம் ஒவ்வொரு சர்விங்குக்கு செல்லும் போது இடது கையில் எடுத்து பொடுங்கள் எச்சில் கையில் கரண்டிகளை எடுக்காதீர்கள். உணவு எடுத்தவுடன் தயவு செய்து மூடியை மூடவும். சுரன்டி, வழித்து எந்த பதார்த்தையும் எடுக்காதீர்கள். கேளுங்கள் ரிபிளனிஷ் செய்வார்கள்.சாப்ஸ்டிக் மூலம் சாப்பிட தெரிந்தவர்கள் மட்டும் வாங்கி சாப்பிடுங்கள் நிறைய பேர் அதை வைத்து சாப்பாடுடன் கொலைவெறியோடு சன்டை போட வேண்டாம்.
நேப்கின்னில் கை துடைத்துகொண்டு ஃபிங்கர் போல் கேளுங்கள். இல்லெயனில் வாஷ் ரூம் சென்று கை கழுவுங்கள். முடிந்த வரை 1 மணீ நேரம் மினிமம் இல்லயெனில் புஃபே வேஸ்ட் தான். பிரேக்ஃபாஸ்ட் புஃபே போது தோசை, ஆம்லெட் சொல்லிவிட்டு வந்து அமர்ந்தால் போதும் அங்கேயே நிற்க வேண்டாம். மினரல் வாட்டர், காஃபி, டீ, குளிர்பானங்கள், ஜூஸ் வைகைகள் எக்ஸ்ட்ரா..............
கடைசி டிப்ஸ் - நான் மதுபானம் அருந்தவதில்லை. ஒவ்வொரு சமயம் நண்பர்களூடன் பாருக்கோ சென்றால் அவர்கள் ஒரு இரண்டு ஸ்மால் அடிப்பதற்க்கு முன் நான் ஒரு அரை கிலோ சைடு டிஷ் சாப்பிட்டுவிடுவேன். ஒரு சமயம் அவிநாசி ரோட்டில் இருக்கும் ரெசிடென்ஸ்  ஹோட்டலில் 6 பேர் போனோம். நான் வழக்கம் போல் குடிக்கமாட்டேன் என்பதால் எனக்கு பிடித்த மாக்டெயில் ஆர்டர் செய்ய சொன்னார்கள் நான் இடது மெனுவை பார்க்காமல் வலது சைடில் காஸ்ட்லியான் ஒரு ஜுஸை அர்ட்டர் செய்தேன் சுமார் 1300 ரூபாய். மொத்த பில் 2900. ஐந்து பேர் ஃபாரின் ஸ்காட்ச் மொத்தமும் சேர்த்து 1400 நான் குடித்த மாக்டெயில் 1300 டாக்ஸ் சேர்த்து 2900 வந்தவுடன் ஷாக் ஆன பிரன்ட்ஸ் அதில் இருந்து என்னை அவகள் உற்சாகபானம் அருந்தும் போது கூட்டி போவதில்லை........1300 டிரிங் மகா கேவலமாக கழுவி ஊத்தினமாதிரி இருந்தது இன்னொரு வேதனை...

புதன், 21 பிப்ரவரி, 2018

20 வருடங்களுக்கு மேல் ..என்  வாழ்க்கையை உயர்த்திய எனது உயிரினும் மேலான ஏர்செல் எண் மறைந்தாலும் கட்டிய மனைவி ,நிறுவனம் ,கைவிட்டாலும் ...தன்னம்பிக்கை மட்டும் கைவிடக்கூடாது ...இத்தனை வருடங்கள் ...உலகில் அனைத்து வெளிநாட்டு என் தமிழ் மக்களின் மனதில் பதிந்த ஏர்செல் எண்  வாழ்க்கையில் மறக்க கூடாது ..தன்னம்பிக்கையுடன் எனது பயணம் ... தொடர்கிறது ....அன்புடன் சிவக்குமார் ... Airtel எண் ..9944066681.....

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com


வீட்டு கடன் பிரிவு 
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர் 
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

இன்று உடுமலைப்பேட்டை  நமது கம்பள விருட்சம் அறக்கட்டளையின் உறுப்பினருமான நமது தம்பி ..சதீஷ்குமார் -கீதா அவர்களின் திருமணவரவேற்பு நிகழ்வு வெகு சிறப்பாக ...கேக் வெட்டி அதை பகிர்ந்து அளித்து சந்தோசமான ஆரவாரம் மிக்க நிகழ்வாக கொண்டாடியது மகிழ்ச்சி ..செயல் குழு உறுப்பினர்கள் ,அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பு செய்தது மிக்க மகிழ்ச்சி .இன்று புது சொந்தங்கள் இந்த நிகழ்வுமூலம் கிடைத்தது வெகு சிறப்பு...அதுவும் புது சொந்தம் பெங்களூரில் பணிபுரிந்து கொண்டிருக்கும் கட்டிட பொறியாளர் நம்ம பாலமன்ன குலத்தை சேர்ந்த பழனிச்சாமி சந்தித்தது வெகு சிறப்பு ...அதுவும் நம்ம இனப்பற்று உள்ள மாப்பிளை சந்தித்தில் நம் கம்பளவிருட்சம் அறக்கட்டளைக்கு சிறப்பான பங்கு உள்ளது ...அதுவும் ..இந்த இரண்டு வருடகாலமாக கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் செயல்பாடுகள் ..பார்த்து ,உணர்ந்து ,நம் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் செயல்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு தன் கருத்துக்களையும் ,முன்னேற்ற கருத்துக்களையும் பகிர்ந்தது இன்றைய நாள் வெகு அருமையாக ..பொன் நாளாக அமைந்தது .. நமது தம்பி ..சதீஷ்குமார் -கீதா அவர்களின் திருமண வாழ்க்கையை அடியெடுத்து வைக்கும் இந்த புதுமண தம்பதிகளுக்கு ..கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்கள் ...

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

காசும் செலவும் ஆகா கூடாது ...வாழ்க்கைக்கு தேவையான அறிவான தகவலும் வேண்டும் ,என்ன பண்ணலாம்...??????

நாளை சனிக்கிழமை ..வார கடைசி நாள் ...குடும்பத்தில் ,மனைவி ,குழந்தைகள்,நாளைக்கு எங்கு அழைத்து செல்லலாம் ..காசும் செலவும் ஆகா கூடாது ...வாழ்க்கைக்கு தேவையான அறிவான தகவலும் வேண்டும் ,என்ன பண்ணலாம் என்று ஆயிரம் கேள்விகள் மனதில் எழுகிறதா ..கவலை வேண்டாம் ..நாளை  ,உடுமலை முதற்கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் " மத்தியதர வருமான பிரிவினருக்கான சேமிப்பு " பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் உடுமலை தளி ரோடு முதற்கிளை நூலகத்தில் 17.02.2018 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது.
நிதி திட்டமிடல் என்பது வெறும் சிலருக்கு மட்டுமே தேவையான ஒன்றல்ல ,அது தற்போது இருக்கும் காலகட்டத்தில் அனைவர்க்கும் பொருந்தக்கூடிய ஒன்று ,வாழ்வில் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பல திறன்களுள் நிதி திட்டமிடல் என்பது மிக முக்கியமானது ,தற்பொழுது பொருளாதார சூழ்நிலையில் வாழ்க்கையை திறம்பட ,வாழ்வின் லட்சியங்களை அடைவதற்கான செய்முறையே நிதி திட்டமிடல் .நிதி திட்டம் என்றாலே வெறும் பணம் தொடர்பான ஒன்றுதான் என்று நம்மில் பலர் நினைப்பதுதான் .அது உண்மையல்ல,பணம் என்பது ஆரம்பம் மட்டுமே ...ஆயிரம் கேள்விகள் உங்கள் மனதில் எழலாம் ...இதற்கான விடை ..நாளை 
 மத்திய அரசின் SEBI அமைப்பின் நிதிக்கல்வி ஆலோசகர் முனைவர்.வனிதாமணி அவர்கள் கருத்துரை ஆற்றுகிறார்.
அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுவீர்.
: மறவாமல் வருக
: பயன் பெறுக
சந்தேகம் தெளிக

வியாழன், 15 பிப்ரவரி, 2018

ராஜ கம்பள குலதெய்வங்கள் -பெண்கல்வி


இன்றய கம்பள சமுதாய பெண்குழந்தை செல்வங்களின் கல்வி ,வேலைவாய்ப்பு ..அசுர வேகத்தில் முன்னேற்ற பாதைகளில்  வளர்ந்து வருகிறது மிக்க மகிழ்ச்சி கடந்த பதினைந்து வருடங்களில் கல்வியில் விழிப்புணர்வு பெற்ற சமுதாயமாக வளர்வதில் மற்றட்ட மகிழ்ச்சி ..இதற்கு காரணம் ..பெற்றோர்களின் முடிவு,சரியான வழிகாட்டியானா சொந்தங்கள் மூலம் பயன்படுத்தி  ...அதை பெண்குழந்தைச்செல்வங்கள் அதை சரியாக நல்ல வழியில் பயன்படுத்தி ..தங்களின் வாழ்க்கையும் ,தன் பெற்றோர்களின் கனவுகளை நிறைவேற்று வருகின்றனர் ..வீரம் மிக்க தளி எதுலப்பர் மண்ணில் பிறந்து ,விருப்பாச்சி கோபால்நாயக்கர் மண்ணின் பிறந்த விஜயகுமார் மைந்தனை கரம்பிடிக்கும்குஜ்ஜா பொம்மு குலத்தை சேர்ந்த  என் அருமை மகள் அனுசியாவிற்கும் திருமண வாழ்த்துக்கள் ..அனுசியாவும் ....பள்ளி படிப்பின்போதே ..விளையாட்டு துறையிலும் திறமையாக பல விருதுகளை வாங்கியுள்ளார் ...8 -ம் வகுப்பு முடிய காளாஞ்சி பட்டி கிராமத்து சூழல் படிப்பு ,ஒன்பதாம் ,பத்தாம் வகுப்பு கோவையில் சின்மயா வித்யாலயா பள்ளிப்படிப்பு ,மேல்நிலை பள்ளி கோவையில் செயின்ட் மாரிஸ் கிருஸ்துவ பள்ளியில் அறிவியல் துறையை தேர்ந்து எடுத்து நன்றாக படித்து மதிப்பெண்கள் பெற்று ...கோவையில் புகழ்பெற்ற நிர்மலா கல்லூரி யில் ..இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு முடித்து..இன்று சென்னையில் இந்திய ஆட்சி பணிக்கு ,பயிற்சி எடுத்துக்கொண்டுள்ளார் ... கல்லூரியில் படிக்கும் போது ஓவிய பயிற்சியில் தேர்வுபெற்று ..லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்கு முயற்சி செய்து முன்னர் சாதனையை முறியடிக்க முடியவில்லை .சாதனைக்கு முயற்சி செய்ய்வதே வெற்றி காண முதல் படி ...முதலில் மேல்நிலை பள்ளிப்படிப்பு படிக்கும் போதே ..மருத்துவர் ஆகும் கனவு ..அருமை மகளுக்கு இருந்தது ..அது முடியாமல் போனது கொஞ்சம் வருத்தம் ..அதையும் கடந்து .அதுவும் கம்பள பெண்சமுதாயத்தில் ..பெண்குழந்தைச்செல்வங்கள் இவ்வளவு ஆர்வம் கொண்டு முன்னேறி வந்து கொண்டிருப்பது பெருமையாகவும் ...சந்தோஷத்தையும் அளிக்கிறது ..

என் அருமை மாப்பிள்ளை .காளாஞ்சிபட்டி .திரு .விஜயகுமார் -பொறியாளர் ,சிறு தொழில் முனைவோர் மற்றும் விவசாயம் செய்துவருகிறார் ..இவரும் அரசு பணிக்கு முயற்சி செய்துகொண்டுள்ளார் ..வாழ்த்துக்கள்

இரண்டு செல்வங்களுக்கும் என் மனமார்ந்த கம்பள விருட்சம் அறக்கட்டளை  சார்பாக திருமண வாழ்த்துக்கள்...உங்களை போன்று நம் சமுதாய குழந்தை செல்வங்கள்  கல்வி ,வேலைவாய்ப்பு  உங்களை போன்று கனவுகளை..நனவாக்கி வாழ்க்கையில் முன்னேற உங்களை போன்று வளர்ந்து வரவேண்டும் ..என் ஆசையும் ,நம் கம்பள சமுதாய ஆசையும் கூட ..வாழ்த்துக்கள் ...


இன்னும் சில வாரங்களில் ...ராஜகம்பள சமுதாய பெண்செல்வம் ஒருவர் தன் பொறியாளர் துறை படித்து ...தன் சிறு வயது கனவான ..விமான ஓட்டியாக ..வளரும் சொந்தத்தை சொல்லுகிறேன் அடுத்த சில வாரங்களில் பகிர்கிறேன் ..உங்களின் சிவக்குமார் ஷ்யாமசுதிர் ...







திங்கள், 12 பிப்ரவரி, 2018

கடுமையான சினத்துடன் .....இன்று வழிபாடு ...
இன பற்று ....
கடந்த மூன்று வருடங்களாக ...வீர மண்ணில் விடுதலைக்கு போராடிய எதுலப்ப மன்னரின் பிறந்த நாள் ..கொண்டாடிய இந்நாளை ..இன்று ஏன் சிறப்பாக கொண்டாடவில்லை ...எதுலப்பர் இன்று பிறந்த நாள் என்று .எத்தனை பேருக்கு தெரியும் ...ஏன் இன்று வரவில்லை ...திருப்பூர் ராமகிருஷ்ணன் அண்ணன் ...வை.கோபாலசாமி ..தாதா நாயக்கர் ,ராமு ,பூபதி ...மற்றும் சில பண்பாட்டு கழக நிர்வாகிகள் மற்றும சொற்ப அளவில் ..பெயர்க்கு கலந்துகொண்டு வழிபட்டு இருக்கிறார்கள் ...நம் சமுதாய மாமன்னர்க்கு பிறந்த நாள் அன்று செலுத்தும் நன்றி கடனா ...எப்படி நம் சமுதாயம் எப்படி வளரும் ...எப்படி முன்னேறும் ..நம் இளைய தலைமுறைக்கு எப்படி தெரியப்படுத்த போகிறோம் ...நம் சமுதாய தலைவர்கள் ,செயலாளர்கள் ,பொருளாளர் ,ஒன்றிய கழக உறுப்பினர்களுக்கு எதுலப்ப மன்னரின் பிறந்த நாள் என்று தகவல் தெரியுமா ...தெரிந்தும் ...இன்று வரவில்லையா ...ஆயிரம் கேள்விகளுடன் ..சிந்தனையில் உள்ளேன் ...

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

நம்ம ...மணிஅண்ணணின் ..நிதர்சனமான பதிவு ...

நம்ம ஆளு

முன்னாள் அமைச்சர் ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அந்தக் காலத்து மனிதர். இப்பொழுது தீவிர அரசியலில் ஈடுபடுவதில்லை. மாலை ஐந்து மணிக்கு வருவதாகச் சொல்லிவிட்டு ஏழு மணிக்குச் சென்று சேர்ந்தேன். திருமணம் ஒன்றுக்கு கிளம்புவதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தார். சட்டையை மடித்துவிட்டபடி அவர் வந்த போது எழுந்து வணக்கம் சொன்னேன். அவருக்கு அபாரமான ஞாபக சக்தி. கடந்த முறை சந்தித்த போது பேசியதையெல்லாம் நினைவுபடுத்தினார். எனக்கு இத்தகைய முன்னாள் முக்கியமான ஆட்களைச் சந்திக்கும் போது அந்தக் காலத்து ரகசியத் தகவல்களைக் கேட்கத் தோன்றும். அப்படி யாரும் அப்படியே சொல்லிவிட மாட்டார்கள். இன்றைக்கு பெருந்தலையாக உள்ளவரைச் சுட்டிக்காட்டி ‘அவரெல்லாம் நீங்க வளர்த்த ஆள்தானே?’ என்றுதான் ஆரம்பித்தால் கொசுவர்த்தி சுருள ஃப்ளாஷ்பேக் ஓடும். இத்தகைய ரகசியங்களை உடனடியாக எழுதப் போவதில்லை ஆனால் அவை எந்தக் காலத்திலும் யாருக்குமே சிக்காத ரகசியங்களாக இருக்கும்.

கல்லூரி ஆரம்பித்த அல்லக்கைகளின் கதையிலிருந்து எம்.ஜி.ஆர் விட்டு விளாசிய எம்.எல்.ஏ வரைக்கும் நிறையக் கிடைக்கும். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவருக்கு நேரமாகிக் கொண்டிருந்தது. 

‘அண்ணா நீங்க கிளம்புங்க..இன்னொரு நாளைக்கு வர்றேன்’ என்றேன். ‘டிபன் சாப்பிட்டுட்டு போங்க’ என்றார். இரவு உணவுக்கு இன்னொருவர் வீட்டுக்கு வருவதாகச் சொல்லிவிட்டு வந்திருந்தேன். எழுவதற்கு முன்பாக ‘நீங்க எடப்பாடி பக்கமா? டிடிவி பக்கமா?’ என்றேன். அவர் யோசிக்கவே இல்லை.

‘சுப்பராயனுக்கு அப்புறம் இப்போத்தான் ஒரு கவுண்டர் சி.எம் ஆகியிருக்காரு..எண்பத்தஞ்சு வருஷத்துக்கு அப்புறம்..இனி எந்தக் காலத்துல இதெல்லாம் சாத்தியம்ன்னு தெரியல...அதனால ஈபிஎஸ் பக்கம்தான்’ என்றார். குபீரென்றானது. ஊரில் சுற்றிக் கொண்டிருக்கும் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு மூன்று பேர்களாவது இதைச் சொல்லிவிட்டார்கள்.

இதற்கு முன்பாக இதே வசனத்தை உதிர்த்தவர் ஒரு விவசாயி. ‘இந்த ஆட்சியில் விவசாயிக்குன்னு என்னங்க செஞ்சிருக்காங்க? அவிநாசி அத்திக்கடவு திட்டம் கூட கெடப்புலதான் கெடக்குது’ என்றேன். 

‘அவரு ஆட்சியைக் காப்பாத்தறதே பெரும்பாடு...இத்தனை கசகசப்புல இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?’ என்று இயல்பாகச் சொன்னார். ஒன்றுமே செய்யாவிட்டாலும் பரவாயில்லை. என் சாதிக்காரன் ஆட்சி. இதுதான் அவரது மனநிலை. அவன் நல்லவனோ கெட்டவனோ- கவுண்டன். அவ்வளவுதான். 

படித்தவர்கள், ஓரளவு விஷயம் தெரிந்தவர்கள் என்று நாம் நம்புகிறவர்களே இப்படித்தான் இருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் ‘இருநூற்றைம்பது ரூபா வாங்கிட்டு ஓட்டுப் போட்ட உங்களுக்கு ஒபாமாவா முதலமைச்சர் ஆவாரு?’ என்று கலாய்ப்பதெல்லாம் டூ மச். சாதியும் பணமும் விரவிக் கிடக்கும் நம் மண்ணில் இந்த இரண்டுமில்லாமல் மாற்று ஆட்சியைக் கொண்டு வந்துவிடுவோம் என்று பேசுவதெல்லாம் எவ்வளவு தூரம் சாத்தியம் என்றே புரியவில்லை. 

எல்லாச் சாதியிலும் இப்படியான ஆட்கள்தான் இருக்கிறார்கள். விஜயேந்திரன் பார்ப்பனன் என்பதற்காகவே முட்டுக் கொடுக்கும் பிராமணர்கள், குற்றவாளி இசுலாமியன் என்பதற்காகவே ‘அதனால் என்ன’ என்று கேட்கும் இசுலாமியர்கள், ‘சசிகலா எங்காளு’ என்னும் தேவர்கள் என சகல சாதியிலும், சகல மதத்திலும் ‘இது நம்ம ஆளு’ என்கிறவர்கள் நிறைந்து கிடக்கிறார்கள்.

முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைதான முகம்மது அலி பற்றி ஒரு பேராசிரியர் சொன்ன விவகாரம் இது. நிகழ்ந்து முப்பத்தைந்து வருடங்கள் ஆகியிருக்கக் கூடும். டி.எஸ்.பி தேர்வினை தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்துகிறது. உத்தேசப் பட்டியலில் பேராசிரியரியரின் பெயர் இடம் பெற்றிருக்கிறது. தேர்வாணையத்தில் இருந்தவர்கள் மூலமாக இந்தத் தகவலைப் பேராசிரியர் தெரிந்து கொள்கிறார். பட்டியலில் முகம்மது அலியின் பெயர் இல்லை. ஆனால் பட்டியல் வெளியாகும் போது முகம்மது அலியின் பெயர் உள்ளே நுழைக்கப்பட்டு பேராசிரியரின் பெயர் கீழே தள்ளப்பட்டிருகிறது. பேராசிரியர் தேர்வாணையக் குழுவில் இருந்த தமது சாதிக்கார உறுப்பினரை அணுகிக் கேட்கிறார். ஆனால் பலனில்லை. ஓர் இசுலாமியப் பெரியவரின் அழுத்தமான பரிந்துரையினால் முகம்மது அலி டி.எஸ்.பி ஆகி, கருணாநிதியைக் கைது செய்து, டி.ஐ.ஜி ஆகி கடைசியில் முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைதானது வரைக்கும் வேறு கதை. 

நம் மண்ணில் சாதிப்பாசமும், மதப்பற்றும் நீரு பூத்த நெருப்பாக உள்ளே கனன்று கொண்டேயிருக்கிறது. அவ்வப்பொழுது அப்பட்டமாக எட்டிப் பார்த்தும் விடுகிறது. ‘நம்ம சாதி அதிகாரி’ ‘நம்ம சாதிப் பணக்காரன்’ என்று வாழ்த்துகிற, குலாவுகிற, சாதியால் ஒன்றிணைந்தவர்கள் இருக்கும் நிலத்தில் ‘இது சாதியில்லாத பூமி’ என்று யாராவது முழங்கிக் கொண்டிருக்கும் போது இதையெல்லாம்தான் சுட்டிக்காட்ட வேண்டும். நாய்க்கன் நாய்க்கனுக்கும் நாடார் நாடாருக்கும் கவுண்டன் கவுண்டனுக்குமாக ஆதரவு தெரிவிக்கும் பூமி இது. அவன் எவ்வளவு மோசமானவனாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டுமே-  என் சாதிக்காரன் என்ற ஓர் அடையாளம் போதாதா என்று நினைக்கிறவர்கள்தான் நிரம்பிக் கிடக்கிறார்கள். 

தேவனுக்கு எதிராக பள்ளன், பள்ளனுக்கு எதிராக பறையன், வேட்டுவனுக்கு எதிராக வெள்ளாளன், நாடாருக்கு எதிராக தேவன் என்று சாதிய ரீதியில் பிளவுற்றுக் கிடக்கும் சமூகம்தானே நாம்? அமைச்சர்கள் தொடங்கி அதிகாரிகள் வரையிலும், சாமானிய மனிதர்களில் தொடங்கி சாதியத் தலைவர்கள் வரையிலும் இப்படித்தான் பிளவுற்றுக் கிடக்கிறார்கள்.

பெங்களூரிலும் சென்னையிலும் இருந்தபடியே ‘இந்த முறை கொங்கு மண்டலத்தில் அதிமுக அடி வாங்கும்’ என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்தால் பெப்பரப்பே என்றுதான் ஆகும் போலிருக்கிறது. செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, கருப்பணன் என்று ஏகப்பட்ட கவுண்டர்கள் அமைச்சர்களாகக் கோலோச்சுகிறார்கள். ஆளுக்கு மூன்று அல்லது நான்கு தொகுதிகளுக்கு பொறுப்பேற்று தொகுதிக்கு பத்துக் கோடி என்று செலவு செய்தால் கூட கணிசமான தொகுதிகளை அள்ளியெடுத்துவிடுவார்கள். இதேதான் தென் தமிழகத்திலும் நிகழும். வட தமிழகத்திலும் நிகழும்.

விஜயகாந்த் தொடங்கி ரஜினி, கமல் வரைக்கும் இந்தப் புள்ளியில்தான் அடி வாங்குவார்கள். கட்சி ரீதியிலான கட்டமைப்பு மட்டுமே ஓட்டு வாங்கித் தருவதில்லை. ‘பணத்தால ஜெயிச்சுடுவாங்க’ என்பதைத் தாண்டியும் சாதி என்றொரு அம்சம் இருக்கிறது. இங்கே ஒவ்வொரு கட்சிக்கும் சாதிய ரீதியிலான கட்டமைப்பு மிக அவசியம். கேவலம்தான். ஆனால் இதுதான் நிதர்சனம்.

புதன், 7 பிப்ரவரி, 2018

வாழ்க்கை கனவு ...

Mr.Nanda Manikandan...
Intro
Trainee in manida neyam IAS academy
Studied B.com finance at NGM College
Went to NGNG Hr Sec School
Lives in Pollachi
From Coimbatore, Tamil Nadu
Joined December 2016

தம்பி ..திரு .நந்தகோபால் மணிகண்டன்  ...சிறு அறிமுகம் ..

நம் சமுதாய சொந்தங்களில் இந்த தம்பியை -நந்தகோபால்-IPS SERVICE .. என்னால் மறக்க இயலாது ...நம் சமுதாய தீப்பொறி கலந்த வெற்றி படிகள்....கண்முன்னே இனி கவலைப்பட ஒன்றுமில்லை நம் சமுதாயம் கல்வி ..பொருளாதாரம் ..முன்னேற்றப்பாதையில் பயணிக்கும் என்ற நம்பிக்கையுடன் ..... வாழ்த்துக்கள் தம்பி — in Udumalaippettai.

தம்பி பள்ளிக்காலங்களில் நல்ல பேச்சாளராகவும் ..திடமான மன நம்பிக்கையின் ..வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்ற குறிக்கோளோடு ..படித்து ..கல்லுரியில் படித்து முடிக்கும் போது ..நிறைவு விழாவில் ..எல்லா மாணவர்களிடம் கேட்கும் கேள்வி ..படித்து முடித்தவுடன் ..நாட்டிற்காக என்ன செய்யபோகிறீர்கள் என்று தம்பியிடமும் கேட்கப்பட்டது ..தம்பி சொல்லிய பதில் ...கல்லுரியின் தாளாளரை திரும்பி பார்க்கவைத்தது ..நான் கம்பள சமுதாயத்தில் பிறந்தவன் .....நாட்டில் நீதிக்கும் நேர்மைக்கும் போராடுவார்கள் ..எங்கள் முப்பாட்டன்கள் ..இந்திய விடுதலைக்காக போராடியவர்கள் ...அந்த சமுதாயத்தில் பிறந்த நாங்கள் ..தற்பொழுதுதான் கல்வியில் வளர்ச்சிபெற்று வளர்க்கிறோம்..இருந்த நிலங்களையெல்லாம் இழந்து ..வெறும் திடமான போராட்ட குணங்களை கொண்டு ..விடுதலைக்காக பாடுபட்ட எங்கள் பாளையக்காரர்கள் தியாகம் வீண்போகாது ... முதலில் என் சமுதாய வளர்ச்சிக்கும் ,என் வளர்ச்சிக்கும் பாடுபடப்போகிறேன் என்று பேசியது அருமை ..

தம்பி .தற்பொழுது ..குரூப் தேர்வில் வெற்றிபெற்று ..தற்பொழுது அரசு வனத்துறை சேரப்போகிறார் ..தற்பொழுது ...பயிற்சியில் உள்ளார் ..நமது ஆனைமலை வன  காப்பகம் பகுதியில் பணியிடம் இருக்கும் ...வாழ்த்துக்கள்  
இன்று காலை வழக்கமாக எனது மொபைலில் வரும் அழைப்பு பார்த்தவுடன் கொஞ்சம் யோசனை ,அலுவுலகம் கிளம்பும்போது ,தொலைபேசி அழைப்பு வந்தால் .கொஞ்சம் அவர்களுடன் பேசுவது கொஞ்சம் கவனம் கொண்டு சரியாக பேச இயலாது . எனக்கு பிடித்த 98421..தொடங்கும் எண் வர ..எடுத்து பேசிய போது நல்ல இருக்கீங்களா .என்று கேட்டவுடன் ,நல்ல இருக்கேங்க ..பதில் அளித்துவிட்டு ..நீங்க சார் ..என்று வினவ ,எனக்கு இன்ப அதிர்ச்சி ..நம்ம சென்னை RK எலைட் சொந்தம் P .ராமராஜ் சார் அவர்கள் .வருமானவரித்துறை ,
இயக்குநர் ..மாவட்ட மதிப்பீட்டு அதிகாரி..சென்னையில் பணிபுரியும் நம் சொந்தம் . தன் பணிபுரியும் துறைப்பற்றி தெரிவித்து அறிமுகப்படுத்திக்கொண்டார் ..மிக்க மகிழ்ச்சி ,உங்கள் பதிவுகள் அனைத்தயும் படிக்கிறேன் .அருமை ..குறிப்பாக உங்கள் மகனுடன் நெருங்கிய பாசத்துடன் இருப்பது தெரிகிறது என்றார் ..நன்றி தெரிவித்துவிட்டு ..எப்பொழுதும் அலுவுலகம் சென்றவுடன் முதலில் இறைவனை தரிசித்துவிட்டு ..நெற்றியில் விபூதி இட்டு என் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களை சென்று சந்திப்பது கடந்த 20 வருடங்களுக்கு மேல் கடைபிடிக்கும் நடைமுறை ..ராமராஜ் சார் அவர்களும் தன் குடும்ப உறுப்பினர்கள் ,அவருடைய சொந்த ஊர் போடி என்றும்,கூறி அறிமுகப்படுத்திக்கொண்டார் .என்னைப்பற்றியும் ,நான் பணிபுரியும் ,நிறுவனம் ,குடும்ப  தகவல்களை பரிமாறிக்கொண்டோம்..இன்று மதிப்புமிக்க சொந்தத்தை சந்தித்தது மகிழ்ச்சி ..அதிகம் பேசமுடியவில்லை ..15 நிமிடங்கள் பேசினோம் ..நம் சொந்தங்கள் ,பெருமாள்சாமி .மின்பொறியாளர்-கோவை  ,சீனிவாசன் அசோகன் -பொள்ளாச்சி,நம்ம பெரிய கோட்டை நம்ம மாம்ஸ் ..நாகராஜ் ,  நம் ராஜாவூர் சௌந்தராஜ் அண்ணண் .குறிப்பாக கரப்பாடி சொந்தங்கள் ,திருப்பூர் ராமகிருஷ்ணன் அண்ணண் அவர்களையும் ,பெரியகோட்டை தங்கவேல் அவர்களையும் நலம் விசாரித்தது என் மனதுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது ...அவருடைய அரசுத்துறை பணி காரணமாக கோவையிலிருந்து ...பொள்ளச்சி வழியாக  வால்பாறை வந்ததால் ..என்னால் பேசும் மதிப்புமிக்க நேரத்தைகணக்கில் கொண்டு .நன்றி தெரிவித்து வழியனுப்பிவைத்தது பெரும் மகிழ்ச்சி ..அடுத்தமுறை வரும்போது முன்னரே தெரிந்துகொண்டு ..இன்னமும் நம் சொந்தங்களின் நட்புகளை அதிகப்படுத்திக்கொள்ளலாம் ..நன்றி ..தொடரும் புதுச்சொந்தங்கள் ..அதுவும் நம் RK எலைட் சென்னை சொந்தங்களுக்கும் ,செந்தில் அப்பையன் அவர்களுக்கும் என் மனமார்ந்த  நன்றிகள்  


ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

கோபுர தரிசனம் ......கோவை -மருதமலை


நீதி அரசர் ...வீ .தங்கராஜ் .M .A .,M .L .,வட வீரநாயக்கன் பட்டி ..தேனீ ..அய்யாவை பார்க்க செல்லும்போது ,அய்யா அவர்கள் திருமண நிகழ்வுகள் ,கோவில் திருவிழாக்கள் ,நம் சமுதாய கூட்டங்கள் நடக்கும் வரும்போது ..சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைக்கும் போது ..நம் கம்பள சமுதாயத்திற்கு தற்பொழுது தேவையான முன்னேற்ற கருத்துக்கள் ,இன்னும் நம் சமுதாயம் எதிர்கொண்டு சாதிக்க வேண்டிய பணிகள் ..கலந்து உரையாடுவது வழக்கம் ..இப்பொழுது தான் பணிஓய்வு பெற்று ,நம் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக ..பொதுச்செயலாளராக தன் பணியை துவக்கி கடந்த இரண்டு வருடங்களுக்கு மேல் ,ஓய்வின்றி பணியாற்றி வருகிறார் ..மாவட்ட தலைவர்கள் ,அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து முறைப்படி தக்க ஆலோசனைகளை வழங்கி நல்ல முறையில் பணியாற்றி வருவது மகிழ்ச்சி .கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ,நமது மாநில செயல் தலைவரின் ,கோவை -திருப்பூர் மாவட்டம் தட்டச்சு தலைவர் பொறுப்பிற்கு பதவியேற்பு விழாவிற்கு கோவை வந்தபொழுது ..அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது ..இன்றய இளைஞர்களுக்கு கல்வி ,வேலைவாய்ப்பு , பெற்று தருவது பற்றி ,போகும் இடங்களில் ,சந்திக்கும் முக்கிய தொழிலதிபர்கள் ,அரசு துறை சார்ந்த பதிவுகளில் இருப்பவர்களிடம் கேட்டு ..தன்னாலான அனைத்து முயற்சிகளையும் பெற்று பணியாற்றி வருகிறார் ..இந்த தலைமுறையை பெற்றோர்கள்  குழந்தைகளை  படிக்க வைத்துவிட்டார்கள் ..கோவை ,திருப்பூர் ,சென்னை என்றால் எப்படியோ வேலைவாய்ப்பை பெற்றுவிடுகின்றனர் ..இன்னும் கிராமத்தில் படித்த இளைஞர்கள் ,இளைஞிகள் ,,வேலை வாய்ப்பு பெற தடுமாறுகின்றனர் ..சந்திக்கும் பெற்றோர்கள் படிக்கவைத்துவிட்டார்கள் ..வேலைவாய்ப்பை எப்படி பெறுவது திணறுவதை பற்றி ,அவருக்கும் கொஞ்சம் வருத்தம் ..நம் சமுதாயத்தினர் தொழில் துறையில் மிக குறைவாகவே உள்ளனர் ..அதற்கான திட்டங்கள் திட்டமிட்டு தகந்த வழிமுறைகளை செயல்படுத்துவதற்கு வழி ஏற்படுத்தி கொண்டு உள்ளார் .
தற்பொழுது நம் சமுதாய கூட்டங்களில் ,இளைஞர்கள் மத்தியில் நல்ல நண்பனாக இயல்பாக இருந்து உரையாடுவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது .அவரும் இளைஞர்கள் கேட்பதை தெளிவாக ,நுணுக்கமாக கேட்டு ,தகந்த ஆலோசனை வழங்குகிறார் .,இனி வரும் காலங்களில் நம் சமுதாயத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் ,முன்னேற்ற நிகழ்வுகளையும் செயல்படுத்தி,முன்னேற்ற பாதையில் வழிநடத்தி அழைத்துச்செல்வார்,தன் பணிக்காலங்களில் நடந்த நிகழ்வுகள் ,எப்படி நல்லவிதமாக கையாண்டது ,நல்வழிப்படுத்தியது பற்றி அழகாக எடுத்துரைத்தார் . ..எனக்கும் சிறந்த  ஆலோசனைகளை வழங்கி ,எப்படி பணியாற்றுவது ,குறித்து வழிகாட்டியுள்ளார் ...நீதி அரசர் அவர்களுக்கு..என் மதிப்புமிக்க நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் ...












வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

உடுமலைப்பேட்டை என்றாலே வீரத்திற்கும்,விவேகத்திற்கும் ,பண்பாட்டுக்கும் பெயர் பெற்ற மண்  .. ..உடுமலைப்பேட்டையில் பிறந்தவர்கள் என்றும் வரலாறு படைத்தவர்கள் ...எந்த துறையாக இருந்தாலும் அதில் தன் அறிவாற்றலால் ,உழைக்கும் திறமை ,சேவை மனப்பான்மை ,கொண்டவர்களே அதிகம் ..உடுமலையில் வளர்ச்சிக்கு என்றும் பங்காற்றுவது செய்தித்தாள்கள் ..அதுவும் மண்ணின் மனம் மாறாமல் ..வரலாறுகள் ,சிறப்புமிக்க கோவில்கள் .அரசுத்துறை ,தனியார் துறை ,விவசாயம் ,தொழில் துறை ,அரசியல் ,சமூக அக்கறை ,எந்த பாகுபாடும் இல்லாமல் ..நடுநிலையோடு செய்திகளை வெளியிடும் தினமலர் ...அதுவும் உடுமலைப்பேட்டை இணைப்பு பகுதியில் வரும் செய்திகள்,மற்ற செய்திகள் என்றாலும்  உடுமலை மக்களுக்கு சுவாரிஸ்யம் குறையாமல் அழகா செய்திகளை தொகுத்து வழங்கும் இனிய நண்பர் ....செந்தில்ராம் அவர்களுக்கு ..என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....