சனி, 17 ஜூலை, 2021

இன்றைய ...சந்திப்பு ....மகிழ்ச்சி ...17.07.2021.


 இன்றைய ...சந்திப்பு ....மகிழ்ச்சி ...17.07.2021.


கொரோன காலம் ...சொந்தங்களை சந்திக்க இயலாதா இந்த வருடங்களில் 

இன்று காலையில் இருந்தே ..உடுமலையில் அருமை சொந்தங்களை சந்தித்து பேசியது ..

முதலில் சந்தித்தது ..அக்ரி மல்லிகை மாப்பிள மல்லசீலன் -அருள் பாப்பா (புங்கமுத்தூர் )

வரலாற்று தகவல்களும் ,விவசாயம் சம்பந்தப்பட்ட தகவல்களை கலந்துரையாடல் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது .


கலந்துரையாடல் முடித்துவிட்டு கிளம்பும் பொழுதே அருமை மாப்பிள்ளை கேரளாவில் பணிபுரியும் கெமிஸ்டரி செந்தில்குமார் -கொடிங்கியம் ...

நண்பர்களுடன் வந்தபொழுது சிறு மணித்துளிகள் பேசிவிட்டு நகர்ந்தது கொஞ்சம் மனதிற்கு ஏமாற்றமே ...அரைமணித்துளி இருந்திருந்தால் ..வேலைவாய்ப்பு நம் சொந்தங்களுக்கு தகவல்களை பெற்று இருக்கலாம் ..


அலுவலகத்தில் கொஞ்சம் சந்தோஷத்தில் இருந்தபோதே ..கொடிங்கியம் சாலையூர் செங்கல் சூளை அதிபர் அண்ணன் அம்போதி அண்ணன் வந்துவிட்டார் ..அவரிடம் சில மணித்துளிகள் பேசியது மற்றட்ட மகிழ்ச்சி ..


மதியம் ஆகிவிட்டது மத்திய உணவிற்கு செல்லலாம் கிளம்பியபோது தனியார் துறையில் பொள்ளாச்சி  காப்பீடு அதிகாரியாக  பணியாற்றும் என் அருமை மாப்பிளை உப்பிலியனூர் பிரபாகர் ...காப்பீட்டு துறையில் தற்பொழுது என்னென்ன மாற்றங்கள் வந்துள்ளது என்று தகவல்களை அழகாக எடுத்துரைத்தார் ...


விடைபெறலாம் என்று கிளம்பும் பொழுது  காப்பீட்டு துறை மாப்பிள்ளையை அழைத்துக்கொண்டு ..வக்கீல் நாகராஜன்  வீதியில் இருக்கும் ஜெய்வந்த் HP காஸ் உரிமையாளர் நம் சொந்தம் விஜயக்குமார் அவரிடம் அறிமுகப்படுத்திவிட்டு வியாபாரம் ,நிறுவனங்களுக்கு  தற்பொழுது உள்ள காப்பீட்டு பயன்கள் என்னனென்று விரிவாக தகவல்களை பரிமாறினார் ..

பேசிகொண்டுருக்கும் பொழுதே சென்னையில் மென்பொறி பன்னாட்டு கம்பனியில் பணியாற்றிக்கொண்டு இருக்கும் அருமை மாப்பிள்ளை ஸ்ரீனிவாசன் (வெனசப்பட்டி ) அவர்களிடம் அறிமுகப்படுத்திவிட்டு கலந்துரையாடியது மிக்க மகிழ்ச்சி ..

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று சந்தித்து சொந்தகளுடன்  சந்தித்து பேசியது அருமை ..இன்றய நாள் இனிய நாள் ...

என்றும் அன்புடன் 

உடுமலை சிவக்குமார்..VK 

Sivakumar.V.K

Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com



 


வெள்ளி, 16 ஜூலை, 2021

 கேள்வி : ஒரு நண்பரினால் கொடுக்க பட்ட சிறந்த அறிவுரை என்ன?


என் பதில் :


தனியார் நிறுவனத்தில் வேலைக்காக interview இற்கு 23 வருடங்களுக்கு முன் சென்று இருந்தேன். என்னை போல வந்திருந்த பல நூறு நபர்களை வரிசையில் நிற்க வைத்து இருந்தார்கள்! பின் உள்ளே சென்று எழுத்து தேர்வு முடிய பின் result காக wait pannum போது கிடைத்த ஒரு நபரின் அறிமுகம். சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். 


பின்னர் அவரவர் தனியாக அழைத்து செல்லப்பட்டு interview முடிந்து பிரிந்து சென்று விட்டோம்! இருவரும் சம வயதுடையவர்கள்! பின்னர் முதல் நாள் பணியில் சேர்ந்த பின் அவரும் எனது குழுவில் இருந்தார்.


அவர் எனக்கு அறிவுரை ஏதும் சொல்லவில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசயத்தை பற்றி பேசுவோம். பணம், தொழில்நுட்பம், சுய முன்னேற்றம், மனிதர்களின் குணம், தொழில், உறவுகள், ஆடை என்று பேசாத topic இல்லை. 


இன்று என் வாழ்வில் பின்பற்றும் பல விசயங்களில் அந்த உரையாடல்களின் தாக்கம் இருக்கிறது. அந்த உரையாடல்கள் மட்டுமே வாழ்வில் எனக்கு தீங்கிழைத்தவர்களை இனங்கண்டு மற்றும் ஒதுக்க கற்று கொடுத்தது. அதுவே எனக்கு தேவையான ஊதியத்தை நான் பெற்றுக்கொள்ள வழி அமைத்து கொடுத்தது! பல பிரச்னைகளை எளிதில் தீர்க்கும் அறிவை கொடுத்தது. அநேக விஷயங்களில் நான் கொண்டிருந்த கண்ணோட்டத்தை மாற்றியது! பொறாமை அற்ற நல்ல உள்ளம் நண்பனாய் கிடைப்பது அரிது!


எங்கள் கேரக்டரில் பெரிய வித்தியாசம் உண்டு! இருவரின் மதமும் வெவ்வேறு, அவர் கமல்  ரசிகர். நான் ரஜினி  ரசிகன். இருவரின் பழக்கங்களும் வேறு. நாங்கள் பேசிய விசயங்களில் எனக்கு தேவையானவற்றை நான் எடுத்துகொண்டு எனது வழியில் பயணித்தேன். அவர் அவரது வழியில் பயணிக்கிறார்! இருந்தும் அந்த உரையாடல்கள் இன்றும் தொடர்கிறது. 


நான் செய்ய நினைக்கும் விசயங்களில் உள்ள தவறுகள் அறிவுரைகளால் அல்லாது கருத்துகளால் திருத்தப்படுகிறது! ஒரு நல்ல நண்பன் அறிவுரை சொல்லி திருத்துபவன் அல்ல என்பதை உணர்த்தியவன். அது போல என் குணத்தையும் மாற்றியவன்! மரணம் வரை தொடரும் எங்கள் நட்பு!

இனி வரும் காலம் கொரோன காலம் ..எத்தைகைய  நட்புகளையும் தூக்கி வீசும் ...

வாழ்க வளமுடன் ....

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

9944066681



அச்சுத்தொழில்துறையில் பெண்கள் ....


அச்சுத்தொழில்துறையில் பெண்கள் ....

நமது இந்தியாவை பாளையப்பட்டு மன்னர்கள் ஆட்சி செய்து வந்த கால கட்டத்தில் செய்திகளும் கடிதங்களும் இலைமற்றும் ஓலைகளில் எழுதி அனுப்பப்ட்டு வந்தது.
அல்லது வரலாற்று நிகழ்வுகளை கல்வெட்டுகளில் செதுக்கி வைத்தனர் அந்த காலகட்டத்தில் அச்சு தொழில்நுட்பத்தின் (Printing Technology) அதிகபட்ச வளர்ச்சியாக அது தான் இருந்து வந்தது.
பின்பு சற்று முன்னேரி தட்டச்சு(Type Writer) மூலமாக செய்திகளும் வரலாறுகளும் பதிவு செய்யப்பட்டுபாதுகாக்கப்பட்டது.
இன்று அனைத்து துறையும் கணிணி மயமாக்கப்பட்டதால் அனைத்து செய்திகளும் பிரிண்டர்கள் மூலம்அச்சு பிரதியாக எடுத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
காலப் போக்கில் இந்த அச்சு தொழில் நுட்பம் அனைத்து நிறுவனங்களிலும் இன்றியமையாத ஒன்றாகமாறிவிட்டது.
ஒரு காலத்தில் தட்டச்சு மூலம் மட்டும் உருவாக்கப்பட்டு வந்த அச்சு பிரதிகள் இந்த வளர்ச்சியின் காரணமாக பல விதமான பிரிண்டர்கள் மூலமாக பல விதமான தரத்தில் வெளிவந்து கொண்டு இருகின்றது.
முன்பு ஒரு காலத்தில் விளம்பரங்கள் ஒரு காகிதத்தில் எழுதப்பட்டு சுவற்றில் ஒட்டப்பட்டு மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு வந்தன அல்லது சுவற்றில் எழுதப்பட்டுவந்தன..
அனால் இன்று இந்த விளம்பரங்கள் அச்சு தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் பரிணாம வளர்ச்சி பெற்று திரும்பும் இடமெல்லாம் பேனர்களாக காட்சி அளிக்கின்றது.
இப்படி நாளுக்கு நாள் அச்சிடுவது என்பது இன்றியமையாத ஒரு விஷயமாக மாறியதன் காரணமாக அச்சிட உபயோகப்படும் பிரிண்டர்களின் எண்ணிக்கையும் அதனை கையாள மனித வளமும் அந்த தொழில் நுட்பத்தை பற்றி அராய்ச்சி செய்ய ஆராய்ச்சியாளர்களும் அதிகம் அதிகம் தேவைபடுகின்றனர்.இந்த அச்சு பணியில் தற்பொழுது பெண்களும் பணியாற்ற அடியெடுத்து வைத்து சத்தமில்லாமல் பணியாற்றி கொண்டு இருக்கிறார் ..பொள்ளச்சியில் சசி பிரின்டிங்  சசி வர்மா அவர்களின் தந்தை காலத்தில் ஆரம்பித்து அதன் பின் அவரின் புதல்வர்  சசி வர்மா அவர்களுக்கு உதவியாக அவரின் மனைவி மணிமேகலை சசி வர்மா அவர்களும் தற்பொழுது உறுதுணையாக இருந்து வரும் காலங்களில் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு தகந்த மாதிரி புதுமையான தொழில் நுட்பங்களின் மூலம் வெற்றிகரமாக பணியாற்றி வருவது மிக்க மகிழ்ச்சி ...வாழ்த்துக்கள் பணி சிறக்க ...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...

புதன், 14 ஜூலை, 2021

 கேள்வி : நம் மக்களிடம் உள்ள தவறான சிந்தனைகள் எவை  என்று கூறமுடியுமா சார் ..? 


 பதில் : 


இது உளவியல் ரீதியான மனோதத்துவ பதில்! கண்டிப்பாக இதில் அரசியல் கலக்க மாட்டேன். ஒரு பதில், Emotional Intelligence பற்றி எழுத ஆரம்பித்து, ஆரியம் திராவிடம் என்றெல்லாம் எழுதிவிட்டேன்.


ஒரு சகோதரி, என்னை திருத்தினார். நான் ஜாதி மதம் பற்றி எழுதுவது வெறுப்புக்கு அது காரணம், என்பதால்தான். ஆனால் இனி சகோதரி சொன்னது போல், இதுபோன்று பதில்களில் அரசியல் எழுதுவது என்பது, பாயசத்தில் கொத்தமல்லி கருவேப்பிலை போடுவது மாதிரி!


இனி ரசத்தில் மட்டும்தான் கொத்தமல்லி கருவேப்பிலை. இது பாயசம் ( பாய்சன் என்று படிக்காதீர்கள் ) போன்ற பதில்!


என் நண்பன் ஒருவனுக்கு வேலைவாய்ப்புக்கான அழைப்பு 2 இடங்களில் இருந்து வந்தது!


இன்று மிகப்பெரிய பணக்காரர் நடத்தும் கம்பெனி. பல கோடிகளுக்கு அதிபர்! இன்னொரு offer சாதாரண கம்பெனி, கொஞ்சம் கஷ்டப்பட்டு கடன் வாங்கி கம்பெனி நடத்தும் Mediacore மனிதர்!


நண்பனிடம் கேட்டேன், எங்கு சேரப் போகிறாய்?


நான் பணக்காரர் கம்பெனியில் சேரப் போகிறேன். அவரிடம் பணம் நிறைய இருப்பதால், எனக்கு பிற்காலத்தில் நிறைய கொடுப்பார்! உழைப்புக்கேற்ற ஊதியம், நானும் பணக்காரனாக முடியும்!


நான் நினைத்தேன், அவன் தவறாக முடிவு எடுக்கிறான் என்று! ஆனால் சொல்லவில்லை.


இது நடந்தது இரண்டு வருடங்கள் முன்பு.


இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் அவனை சந்தித்தபோது, என்னப்பா நல்ல சம்பளம் வாங்கி ஜாம் ஜாம்னு இருக்கியா?


நீ வேற!! கஞ்ச பிசினாரி, கருமி, அவனிடம் வேலை செய்தால், ஒரு வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் நிலைமை வந்துரும்! ஒரு வருடம் அவரிடம் வேலை பார்த்து, அடிப்பட்டு நான் இன்று சாதாரண கம்பெனியில் சேர்ந்துவிட்டேன்! இப்போது கொஞ்சம் பரவாயில்லை!


இது தான் நான் சொல்ல வருவது. ஒருவர் நமக்கு எவ்வளவு கொடுப்பார் என்று, நாம் அவர்களின் செல்வத்தைக் கொண்டு, அந்தஸ்தைக் கொண்டு மதிப்பிடுகிறோம்.


ஒரு மனிதன் கொடுப்பதும், வாழ வைப்பது அவனுடைய குணம் மற்றும் மனதைப் பொருத்தது. அவனிடம் இருக்கும் செல்வத்தை பொறுத்தில்லை!


எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும், கொடுக்க மனம் இல்லாதவன், பத்து பைசா கூட கொடுக்க மாட்டான்.


நல்ல மனம் கொண்டவன், ஒரு ஏழை தான் சம்பாதிக்கும் 10 ரூபாயில், 1,2 ரூபாய் கொடுப்பான். ஆனால், பணக்காரர்கள், ஒரு கோடி ரூபாய் சம்பாதித்தாலும், ஒரு ரூபாய் கொடுப்பதற்கு யோசிப்பார்கள்.

நண்பன் அந்த பணக்காரன் இடம் கேட்டு விட்டான்!

எனக்கு கொடுக்க வேண்டிய ரூபாய மிச்சப்படுத்தி யா நீங்க, கோட்டை கட்டுவீங்க?

அந்தப் பணக்காரன் பதில் சொல்லியிருக்கிறான், இப்படிப் பத்துப் பத்து பைசாவை சேர்த்துதான், நான் இன்று கோடீஸ்வரனாகி இருக்கிறேன்!

அதாவது பலபேர் வயிற்றில் அடித்து, நான் பணம் சேர்த்திருக்கிறேன்.

அதற்காக நான் எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை.

ஒரு Deal என்பது Mutually Beneficial, இரண்டு பக்கமும் லாபம் அடைவது போல் இருக்க வேண்டும்!

நம் நாட்டில், பணக்காரர்கள் ஏழைகள் வயிற்றில் அடித்து பணம் சேர்க்கிறார்கள்!

கடைசியில் மொத்தமாக, மருத்துவமனைகள், சீட்டு கம்பெனி அல்லது பெண்கள் என்று செலவு செய்து நட்டம் அடைகிறார்கள்!

சிறுக சிறுக சேர்த்து, மொத்தமாக வேறொரு இடத்தில் கோட்டை விடுவது!

பெண் கொடுக்கும் போதும் இதனை பார்த்திருக்கிறேன்.

மாப்பிள்ளை பெரிய இடம், மகாராணி மாதிரி வைத்துக் கொள்வார்!

மணமகன் பெரிய இடம் தான், அவர்தான் அதிகமாக வரதட்சிணைக் கேட்பார்கள்!

மாப்பிள்ளை பணக்காரன் என்றால், கட்டிய மனைவிக்கு நகையும் புடவையும் வாங்கிக் கொடுப்பான் என்று நிச்சயமில்லை!

கொடுக்க மனம் இல்லாதவன் கையில், எவ்வளவு பணம் இருந்தாலும், அது நாயிடம் இருக்கும் தேங்காய் மாதிரி!

பணத்தை யாருக்கும் கொடுக்க மாட்டார்கள். தன் மனைவியை விட, தன்னை சுற்றியுள்ள மனிதர்களை விட பணத்தை மிகவும் நேசிப்பார்கள்.

கடைசியில் பணத்தை எல்லாம் விட்டுவிட்டு செத்துப் போவார்கள்!

கடைசியாக ஒரு துணுக்குச் செய்தி : நீங்கள் நினைப்பது போல், சினிமாக்காரர்கள் யாருக்கும் வாரி வாரி கொடுத்தது இல்லை. ஆனால் கொடுப்பதுபோல் விளம்பரப் படுத்துவார்கள். ரசிகர்களும் அதை நம்பி ஏமாந்து போவார்கள்!

நான் பணியாற்றிய நிறுவனத்தில் வேலை செய்ய ஒரு கிரேன் ஆபரேட்டர் வந்தார்! இது நடந்து 15 வருடங்களுக்கும் மேலிருக்கும்.

முன்னாடி எங்க வேலை செஞ்சிட்டு இருந்தீங்க?

சார் நான்ஸி  வீட்டில், கார் டிரைவராக வேலை செஞ்சேன்!

அப்பாடி! நல்ல சம்பாத்தியம், அள்ளி அள்ளிக் கொடுத்து இருப்பார்கள்.

நீங்க வேற, தீபாவளிக்கு போனஸ் கொடுங்கம்மா என்று கேட்டேன்!

எவ்வளவு கொடுத்தாங்க?

50 ரூபாய்! சினிமா நடிகர்களிடம் இனி வேலை செய்வதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்!

வேறு யாராவது வேலைக்கு கூப்பிட்டார்களா?

மணி  வீட்டில் கார் டிரைவர் வேலை கிடைத்தது! ஆனால் நான் போகவில்லை.

ஏன்?

அரசியல்வாதிக்கு கார் டிரைவர்ராக இருப்பது கொடுமை!

ஏன் பணம் சரியாக கொடுக்க மாட்டார்களா?

இல்லை சார், போட்டு அடித்து விடுவார்கள்! மணி பற்றி எனக்கு தெரியும். சின்ன தப்பு செய்தாலும் அடிதான்!

இந்த உரையாடல் நடந்து பல வருடங்கள் கழித்து, பிச்சைக்காரன் என்ற ஒரு திரைப்படத்தில் நான் கேள்விப்பட்ட காட்சியை கண்கூடாக பார்த்தேன் !


நன்றி .....


செவ்வாய், 13 ஜூலை, 2021

 கேள்வி : ஒரு மிகப்பெரிய நிதி மேலாண்மை அறிவுரையை மிக எளிமையாக பத்து வரிகளில் சொல்ல முடியுமா?


என் பதில் : 


தாராளமாக சொல்லிவிடலாம்..


"இறைச்சியை உண்ணாதீர்கள்‌. முட்டையை மட்டும் உண்ணுங்கள்."


உடல் நலம் சார்ந்து பார்த்தால் அடர்த்தியான புரதச்சத்து உள்ளது இறைச்சிதான். ஆனால் இந்த அறிவுரை நிதி மேலாண்மை சார்ந்தது என்பதால் இறைச்சி அதாவது கோழியை முதலீடாகவும் முட்டையை முதலீட்டில் இருந்து பெறப்படும் இலாபமாகவும் எடுத்துக்கொள்ளலாம்.


இறைச்சி என்னும் முதலீட்டின் மீது ஆசைப்பட்டு மொத்தமாக செலவழித்து விடக்கூடாது. முதலீடு இருக்கும்வரை தான் உங்களுக்கு லாபம்.


உங்களுக்கு கூடுதலான புரதச்சத்து வேண்டுமென்றாலும் இறைச்சியின் மீது ஆசைப்பட்டாலும் நீங்கள் அதிக கோழிகளை வளர்க்க வேண்டும். பரந்துபட்ட அளவில் முதலீடு செய்யும் பொழுது உங்கள் இறைச்சியின் தேவையையும் நிறைவு செய்ய முடியும். அதை விட்டுவிட்டு இருக்கிற ஒரு கோழியையும் சாப்பிட்டுவிட்டால் முட்டைக்கும் வழியில்லாமல் போய்விடும்.


நன்றி : 2019 இல் ஒரு நீண்ட பேருந்து பயணத்தின் போது பின்னிருக்கையில் உள்ள முகம் தெரியாத ஒரு தந்தை தனது கல்லூரி செல்லும் மகனுக்கு சொன்ன அறிவுரை. கருத்துரிமை முழுவதும் அவருக்கே.


சிவக்குமார்....VK  
வீட்டு கடன் பிரிவு -
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர் 
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681

ஞாயிறு, 11 ஜூலை, 2021

 கேள்வி : குழந்தைகளை வளர்ப்பதில் இன்றைய பெற்றோர்கள் செய்கின்ற தவறுகள் என்னென்ன என்று கூறமுடியுமா ?


என் பதில் : ஒண்ணே ஒண்ணு ..கண்ணே கண்ணு ...


இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான குடும்பங்களில் ஒற்றைக் குழந்தை மட்டுமே உள்ளனர். இப்படி தம்பி, தங்கை, அக்கா, அண்ணன் இல்லாமல் வளரும் குழந்தைகளுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை எளிதில் வருவதில்லை. அண்ணன் தான் ஓட்டிய சைக்கிளை தனது தம்பிக்கு விட்டுக் கொடுத்தல். அக்கா தான் ஆசையாக வாங்கிய ஒரு அணிகலனை தன் தங்கைக்கு விட்டுக் கொடுத்தல் போன்ற அனுபவங்கள் இல்லாத காரணத்தால் ஒற்றைக் குழந்தைகளுக்கு விட்டுக் கொடுத்து வாழ்வதன் அவசியம் தெரிவதில்லை. விட்டுக் கொடுத்தல், தன் பொருளை கூடப் பிறந்தோருக்கு பகிர்தல் போன்ற குணங்கள் இல்லாமலேயே ஒற்றைக் குழந்தைகள் வளர்கின்றனர். இன்றைய பெற்றோரும் குழந்தைகளிடம் "பிறருடன் உன் பொருளைப் பகிராதே" என்று கூறி வளர்த்து வருகின்றனர். இது சிறிய வயதிலேயே குழந்தைகளின் மனதில் "இது எனது பொருள், இது எனக்கு மட்டுமே சொந்தம்" எனும் ஆதிக்க மனப்பான்மையை ஆழ விதைத்து விடுகிறது.

இன்றைய பெற்றோருக்கு பெரும்பாலும் ஒற்றைக் குழந்தையாக இருப்பதால், அவர்கள் விரும்புவதையெல்லாம் தனது சக்திக்கு மீறி இருந்தாலும் அதை வாங்கிக் கொடுத்து விடுகின்றனர். அப்படி வாங்கப் பட்ட பொருட்களின் மதிப்பையும், அதை வாங்குவதற்கு பெற்றோர் போட்ட உழைப்பையும் அந்த குழந்தைகள் உணர்வதேயில்லை.

வெற்று கவுரவத்திற்காகவும், பக்கத்து வீட்டு குழந்தை அந்த பெரிய தனியார் பள்ளியில் படிக்கிறது என்பதற்காகவும் தனது குழந்தையையும், தனக்கு வசதி இல்லாவிட்டாலும் தனியார் பள்ளியில் பல லட்சம் செலவு செய்து சேர்ப்பது. இன்றைய அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி கிடைக்கப்பெறுகிறது. அரசுப் பள்ளிகளில் படிப்பது தனது குழந்தைக்கு கவுரவக் குறைவு என்று கருதாமல் அங்கே படிக்க வைக்கலாம். வாழ்க்கையையும் சமூகத்தையும் படிக்க அரசுப் பள்ளியை விட சிறந்த பல்கலைக்கழகம் அந்த குழந்தைக்கு வேறு எங்கும் கிடைக்கப் போவது இல்லை.

பாட்டு, யோகா, கராத்தே போன்ற வகுப்புகளில் தனது குழந்தைக்கு ஆர்வமோ, விருப்பமோ இல்லாவிட்டாலும் வெற்று கவுரவத்திற்காக சேர்த்து விடுவது.

பள்ளியில் எடுக்கும் மதிப்பெண், வாழ்க்கையில் மிகவும் முக்கியம் என்று குழந்தைகளை நம்ப வைப்பது. இது குழந்தைகளை கடும் மன நெருக்கடிக்கு உள்ளாக்கி விடும். உண்மையில் நமது வாழ்க்கையில் அந்த மதிப்பெண்கள் பயன்படப் போவதேயில்லை.

தனது குழந்தை வெளியே சென்று வெயில் உடலில் படுமாறு விளையாட அனுமதிக்காதது.

செல்லிடப் பேசி பயன்பாட்டை குழந்தைகளிடம் ஊக்குவிப்பது.

குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடாதது.

அதீத கண்டிப்பு எனும் பெயரில் அடித்து வளர்த்தல். அல்லது, அடிக்காமலேயே அதீத செல்லம் கொடுத்து வளர்த்தல். இந்த இரண்டுமே பெரும் தவறுதான். கண்டிக்க வேண்டியவற்றிற்கு கண்டிக்க வேண்டிய அளவில் கண்டித்து வளர்க்க வேண்டும்.

குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் குழந்தைகள் ஒட்டாத அளவிற்கு வளர்த்தல் தான் அவர்கள் செய்யும் மிகப் பெரும் பிழை. இதனால் குழந்தைகள் அவர்களது குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் நெருக்கம் ஏற்படாமல் போகிறது.

எனது சுற்றத்தில் மற்றும் நண்பர்கள் வட்டத்தில் உள்ள பெற்றோரின் வளர்ப்பில் எனக்கு தவறு எனப் பட்டவற்றை மட்டுமே இங்கேக் குறிப்பிட்டுள்ளேன். இதைவிடவும் அதிகமான தவறுகள் இருக்கலாம்.


நன்றி!

பழனி .... கரிக்காரன்புதூரிலிருந்து ஒரு ஐஏஎஸ்!

by herstories on July 7, 2021.....தமிழ் ஓவியா ஐஏஎஸ்

கரிக்காரன்புதூர். பழனியிலிருந்து 7 கிலோமீட்டர் தூரத்திலுள்ள சிறிய கிராமம். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், கொல்கத்தாவின் துணை ஆட்சியராகப் பதவி ஏற்க இருக்கிறார்! அவர் ’தமிழ் ஓவியா’. 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்திய ஆட்சிப்பணிக்கான பட்டியலில் 345வது இடத்தில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.


“தாராபுரத்திலிருந்து பேருந்தில் பழநிக்கு வந்துகொண்டிருந்தேன். அப்போதுதான் தேர்வு முடிவு வெளிவந்தது. என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. உடனே அப்பாவை அழைத்து நான் வெற்றி பெற்ற விஷயத்தைச் சொன்னேன். ஒரு வாரம் வரை அப்பாவின் ஆச்சரியம் குறையவேயில்லை. அம்மாவும் ஊர்க்காரர்களும் என்னைக் கொண்டாடித்தீர்த்துவிட்டார்கள்!” என்று அந்த நாளை நினைவுகூர்கிறார் ஓவியா.

 

விவசாயக் குடும்பம். அப்பா செளந்தரபாண்டியன் முற்போக்குச் சிந்தனை கொண்டவர். அம்மா முருகேஸ்வரிக்குக் குழந்தைகளின் கல்வி மீது அதீத ஆர்வம். அண்ணன் தமிழ் வசந்தன் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர். தங்கை தமிழ் இலக்கியா. இந்தக் கிராமத்துக்குப் பேருந்து வசதிகூட அடிக்கடி கிடையாது. அருகிலுள்ள நெய்க்காரப்பட்டியில் அரசு உதவிபெறும் ரேணுகாதேவி உயர்நிலைப் பள்ளியில் தமிழ்வழியில் படித்தார் ஓவியா. பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.


”பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் வாங்கியதற்காகத் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் கையால் லேப்டாப் பரிசு பெற்றேன். ஒரு டாக்டராக வேண்டும் என்பதே என் ஆசையாக அப்போது இருந்தது. ஒரு டிகிரி முடித்துவிட்டு, யுபிஎஸ்சி தேர்வு எழுதி ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி ஆகலாமே என்றார் என் ஆசிரியர். அட, இது நல்ல யோசனையாக இருக்கிறதே என்று தோன்றியது. உடனே களத்தில் இறங்கினேன். கடினமாக உழைத்தேன். மனம் தளறாமல் தொடர்ந்து முயற்சி செய்தேன். 7 ஆண்டுகளுக்குப் பிறகு என் கனவு, லட்சியம் நிறைவேறியது. இரண்டு ஆண்டுகள் கொல்கத்தாவில் பயிற்சி பெற்று வந்தேன். ஜூலை முதல் வாரத்திலில் சார் ஆட்சியராகப் பணியில் சேரப் போகிறேன்” என்று ஓவியா சொல்லும்போது மிகவும் பிரமிப்பாக இருந்தது.

 

சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த ஓவியாவை ஐஏஎஸ் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் அவர் பெற்றோருக்கு இல்லை. நன்கு படித்த குடும்பங்களில் இருப்பவர்களால்தான் ஐஏஎஸ் ஆக முடியும் என்ற திடமான நம்பிக்கை அவர்களுக்கு. தன்னுடைய கடின உழைப்பால் அந்த எண்ணத்தைத் தவிடுபொடியாக்கியிருப்பதோடு, கிராமத்திலிருந்து வருபவர்களுக்கு நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறார் ஓவியா.


ஐஏஎஸ் படிப்புக்காகப் பெரிதாக செலவு செய்யவில்லை. கட்டணம் இல்லா பயிற்சி மையத்தில்தான் படித்தார். நான்காவது முறை வெற்றியை ருசித்துவிட்டார்.


கல்லூரிப் படிப்புக்குப் பின், கனரா வங்கியின் விவசாயத்துறை விரிவாக்க அதிகாரியாகப் பணிபுரிந்தார் ஓவியா. நல்ல சம்பளம். ஆனால், வங்கியில் பணிபுரிந்துகொண்டே ஐஏஎஸ்க்குப் படிப்பது சிரமமாக இருந்தது. எனவே வங்கி வேலையை விட்டுவிட்டு, தாராபுரத்தில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையில் உதவியாளராகப் பணியாற்றினார். இதில் அவர் அம்மாவுக்கு வருத்தம். ஆனால், அப்பா ஓவியாவின் விருப்பத்தில் தலையிடவில்லை.


வெள்ளிக் கிழமை மாலை கோவை செல்வார். இரு நாட்கள் தங்கிப் படித்துவிட்டு, ஞாயிற்றுக் கிழமை இரவு வீடு திரும்புவார். ஓய்வில்லாத காலக்கட்டம். சென்னையில் அரசு நடத்தும் அண்ணா சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்திலும் கட்டணம் இன்றிப் படித்தார். தேர்வில் வெற்றி பெற்ற பிறகு, இந்தியாவின் தெற்கு மண்டலமான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் பணி கிடைக்கவில்லை. கிழக்கு மண்டலமான மேற்கு வங்கத்தில்தான் பணி கிடைத்தது. பயிற்சியின்போது உத்தரகான்ட், அந்தமான், டார்ஜிலிங் போன்ற இடங்களுக்கெல்லாம் சென்றுவந்த அனுபவம் நிறைவாக இருந்ததாகச் சொல்கிறார்.


”சின்ன வயசிலிருந்தே படிப்பதில் ஆர்வம் அதிகம். எங்கள் ஊரில் சிறிய நூலகம் இருந்தது. மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே, பள்ளிக்கூடம் விட்டதும் அந்த நூலகத்துக்குப் போய்விடுவேன். செய்தித்தாள், கதைத் புத்தகங்கள் படிப்பேன். என் குழந்தைப் பருவத்தில் பெரும்பாலான நேரத்தை நூலகத்தில்தான் கழித்திருக்கிறேன். பெண் குழந்தைகள் மேல் பெற்றோருக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். படிக்கும்போதும் பயிற்சியின்போதும் தனியாகவே எங்கும் செல்வேன். எங்கள் வீட்டில் இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் எல்லாம் கிடையாது. எங்கே போகிறாய், எப்பொழுது வருவாய் என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள். தகவல் சொல்லிவிட்டுக் கிளம்பிவிடுவேன். ஐஏஎஸ் ஆவதற்குப் பணம் தேவையில்லை, மனம் இருந்தால் போதும். யார் வேண்டுமானாலும் ஐஏஎஸ் ஆகலாம். இந்த வெற்றியைத் தனிப்பட்ட என்னுடைய வெற்றியாக நான் நினைக்கவில்லை. என் கிராமமே என் வெற்றியில் மகிழ்ந்து, பாராட்டு விழா எல்லாம் நடத்தியது. அதனால் வசதி, வாய்ப்புகள் கிடைக்காத கிராம மக்களுக்கு என்னால் இயன்றதைச் செய்வேன்” என்கிறார் தமிழ் ஓவியா.


 இன்று கம்பள சமுதாயத்தின் மூத்த பத்திரிக்கையாளர் பாஞ்சை கோபாலசாமி அய்யா அவர்களுடன் உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி ...இன்னும் சிறுது நேரம் உரையாடி இருக்கலாம் ...இன்று உடுமலை திருப்பதி கோவிலின் இரண்டாம் ஆண்டு பூஜை விழா ...உடுமலை ஆளுமைகளுடன் கோவில் நிகழ்ச்சியில் இருந்ததால் ..அய்யாவுடன் சரியாக உரையாட முடியவில்லை ...வரும் நாட்களில் அவரின் பத்திரிகை அனுபவம் ..கம்பள சமுதாய வரலாறுகளை தெரிந்துகொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு ..நன்றி ..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

கேள்வி : தற்பொழுது கொரோன காலம் ...ஒரு அறிவுரை என் வாழ்க்கையையே மாற்றி விட வேண்டும். அப்படி இருந்தால் ஏதேனும் ஒன்று கூறுங்கள்?


என் பதில் : 


நான் நிறைய படிச்சிருக்கேன். என்கிட்ட இத்தனை டிகிரி இருக்கு. எனக்கு தெரியாதது ஒன்னுமில்லைன்னு கர்வம் இருக்கா உங்களுக்கு அப்படின்னா அதை தூக்கி ஓரமா வைச்சிடுங்க.


நம்ம வாழ்க்கையில் கத்துக்குற முக்கால்வாசி விஷயங்கள் நம்ம பாட புத்தகத்தில் இருந்து வரதில்லை.


ஒரு சிங்கத்தை நேருக்கு நேரா பாக்கும் போது என்ன பண்ணணும்னு எந்த பாட புத்தகத்தில் சொல்லி குடுத்துருக்காங்க. பித்தோகரஸ் தியரியை வைச்சி இதை சரி பண்ண முடியுமா?


ஓடிடுன்னு மனசு சொல்லும். ஆனால் ஓடினால் கதை முடிஞ்சிடும். வைச்ச கண் வாங்காமல் சிங்கத்தையே பாக்கணும். நிக்குற இடத்தை விட்டு நகரக் கூடாது. முடிஞ்ச வரை உங்களை பெரிய உருவமா காட்டிக்கணும். இதுக்கு அப்பறம் சிங்கம் என்ன முடிவு பண்ணுதோ அது தான் உங்கள் வாழ்கையை தீர்மானிக்கும்(ஹிஹி).


வாழ்க்கையிலே நான் எல்லாமே கத்து முடிச்சிட்டேன்னு ஒரு தருணமே கிடையாது. எப்போ டிவிஸ்ட் அண்ட் டேர்ன்ஸ் வருமுனே தெரியாது.


உலகத்திலேயே மிக நீளமான ஆண்டீஸ் மலையிலே ஒரு விமானம் விபத்துக்குள்ளாகுது. மைனஸ் முப்பது டிகிரி குளிரில் காப்பாத்த யாராவது வருவாங்கன்னு காத்து கிடக்குறாங்க அந்த விபத்தில் உயிர் தப்பியவர்கள். ஆனால் அரசாங்கம் அந்த விபத்தில் எல்லோரும் இறந்துட்டாங்கன்னு நினைச்சு தேடுதல் பணியை கை விட்டுடறாங்க. பசியோட பல நாட்கள் காத்திருந்தவர்கள் வேற வழியே இல்லை உயிர் தப்பிக்கணும்னு இறந்தவர்களின் உடலை சாப்பிட ஆரம்பிக்குறாங்க. இருபதாம் நூற்றாண்டின் மிக பெரிய சர்வைவல் ஸ்டோரி தான் இது.


கம்ப்பர்ட் ஸோனைவிட்டு ஏன் வெளியே வரணும்னு கேட்ப்பவருக்கான பதில் இது. கஷ்டங்களை பார்த்தவர்களால் சில கஷ்டமான நேரங்களில் தப்பித்துக்கொள்ள முடியும். கம்ப்பர்டாக இருந்தவர்களுக்கு அது கடினம்.


நான் ஒரு ஆண். நான் ஏன் சமைக்க கத்துக்கணும்னு சில பேர் கேட்க்கும் போது எனக்கு தோணும். அடுத்த வேளை உங்களுக்கு பசிக்குமா அப்ப நீங்களும் சமைக்க கத்துக்கணும். அது அத்தியாவசியமான ஒன்னுன்னு நான் நினைக்குறேன்.


நான் மெரைன் இஞ்சினியரிங் படிச்சிருக்கேன்னு சொல்லுபவரிடம் முதலில் கேட்ப்பது உங்களுக்கு நீச்சல் தெரியுமான்னு தான். பெரிய பெரிய விஷயங்களை கத்துக்கிட்டோம்னு நினைக்குற நமக்கு பேசிக்கான வாழ்க்கைக்கு தேவையானது தெரியாமல் இருக்க கூடும். அந்த சின்ன விஷயம் வாழ்க்கையில் ஆபத்தான காலத்தில் கை கொடுப்பதாக இருக்கும்.


நான் சொல்ல வர அறிவுரை, வாழ்க்கையிலே ஒவ்வொரு நிமிஷமுமே நாம ஏதாவது கத்துக்கிட்டே தான் இருக்கோம். ஏதாவது ஒரு சர்வைவல் ஸ்டோரியை கேட்க்கும் போது இந்த இடத்துல நான் இருந்துருந்தா என்ன பண்ணியிருப்பேன்னு தான் யோசிப்பேன். அந்த மாதிரி நேரங்களில் நாம வைச்சிருக்க டிகிரி, பணம் எல்லாம் ஒன்னுமில்லாமல் போயிடும். எல்லாமே எனக்கு தெரியும்ங்குற மன நிலையில் இருந்து வெளியே வந்து வாழ்க்கையிலே சின்ன சின்ன விஷயங்களை கூட கத்துக்கங்க. நீங்க எதிர்ப்பாக்காத நேரங்களில் கண்டிப்பாக உதவும்.


வெள்ளி, 9 ஜூலை, 2021


கேள்வி : தற்பொழுது உள்ள தலைமுறைக்குழந்தைகள் சூழ்நிலையில் வளருகிறார்கள் ? அதை பற்றி விரிவாக கூறமுடியுமா ?


என் பதில் :


### Happy  Parenting💫🌹


கடந்த தலைமுறை வரைக்கும் குடும்பம் என்பது கூட்டுக்குடும்பமாக இருந்தது. எனவே ஒரு வீட்டில் அத்தை, மாமா, பெரியம்மா, பெரியப்பா, தாத்தா, பாட்டி எனப் பல உறவுகளோடு சேர்ந்து வளரும்வாய்ப்பு குழந்தைகளுக்கு கிடைத்தது. இது, அந்தத் தலைமுறை பெற்றோர்களுக்கும் வரமாக அமைந்தது. காரணம், மொத்த குடும்பமும்சேர்ந்து பிள்ளைகளின்மீது கவனம் கொள்வர். ஆனால், இப்போது அந்த உறவுகள் தள்ளிப்போய், குடும்பங்கள் சிறிதாகிவிட்டன. ஒரே வீட்டில் மூன்று நான்கு பிள்ளைகள் இருந்தநிலையும்கூட மாறி, இப்போது ஒரு வீட்டிற்கு ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகள் என்ற நிலைக்கு வந்துவிட்டோம். இதனால் பல பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தையைச் சரியாகத்தான் வளர்க்கிறோமா என்பதே தெரிவதில்லை. அதனால்தான் குழந்தைகள் வளரும்காலத்தில் நிறைய தவறுகள் நடக்கின்றன. அவை என்னவென்று ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.


இன்றைய பெற்றோர்களிடம் பரவலாக இருக்கும் தவறான ஒரு பிம்பம் இது. அதாவது, 'நம்முடைய பெற்றோர்கள் நமக்கு சரியாக சுதந்திரம் அளிக்கவில்லை. எனவே நம் பிள்ளைகளுக்கு நாம் அந்தச் சுதந்திரத்தை நிச்சயமாக வழங்கவேண்டும். நம்மைப் போலவே நம் பிள்ளையும் எதிர்காலத்தில் வருந்தக்கூடாது. போதுமான சுதந்திரம் கொடுக்காவிட்டால் எதிர்காலத்தில் நம்மை மதிக்கமாட்டார்கள்.' என்ற எண்ணம் இளம்பெற்றோர்கள் பலரிடமும் இருக்கிறது. ஆனால், இந்தச் சுதந்திரத்தைச் சரியாகப் புரிந்துகொண்ட பெற்றோர்கள் எத்தனைபேர் என்றால், அவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்போதைய சுதந்திரம் என்பது பிள்ளைகள் கொஞ்சம் வளர்ந்தவுடன் அவர்களே சுயமாக முடிவெடுக்க அனுமதிப்பதாக இருந்தது. ஆனால், இப்போது கதையே வேறு.


பிள்ளைகளுக்குத் தேவையான விஷயங்களைச் செய்துகொடுப்பதோடு சரி; அவர்களை அதற்குப் பிறகு எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது. அவர்கள் எங்கே போகிறார்கள், என்ன செய்கிறார்கள், எவ்வளவு செலவு செய்கிறார்கள் என அத்தனையும் அவர்கள் இஷ்டம் என்றுதான் இன்று பலரும் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறு. இளம்வயதில் நீங்கள் கடிவாளம் போடாவிட்டால், எதிர்காலத்தில் நீங்கள் வருந்துவதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை. எனவே சின்ன வயதிலிருந்தே எந்த விஷயத்திலெல்லாம் சுதந்திரம் கொடுக்கவேண்டும், எதிலெல்லாம் கொடுக்கத் தேவையில்லை என்பதில் தெளிவாக இருங்கள்.


10 வயது பையன் இட்லி சாப்பிடமாட்டேன் என அடம்பிடித்தால் கடந்த தலைமுறை பெற்றோர்கள், 'இப்போ சாப்பிடுறதுனா சாப்பிடு. இல்ல, அப்புறம்னாலும் நீதான் சாப்பிடணும்!' எனக் கறாராகச் சொல்லிவிடுவார்கள். ஆனால், இன்றைய அம்மாக்களிடம் விநோதமான ஒரு பழக்கம் ஒன்று உருவாகியிருக்கிறது. பையன் இட்லி சாப்பிட லேசாக அடம்பிடித்தாலும் சரி, 'அப்போ நூடுல்ஸ் செஞ்சு தரட்டா?' என மனம்மாறிவிடுவார்கள். அப்பாக்கள் இன்னும் ஒருபடி மேலே போய், 'பீட்ஸா ஆர்டர் பண்ணட்டா? வேணும்னா பீச்சுக்கு கூப்ட்டு போகட்டா?' என்கிற அளவுக்கு இறங்கிவிடுகிறார்கள். நூடுல்ஸ், பீட்ஸா வேண்டுமானால் வீட்டிற்கு வீடு மாறலாமே தவிர, செல்லம் கொடுப்பது பலரது வீடுகளிலும் ஒரே கதைதான். இது மிகவும் தவறான ஒரு பழக்கம்.


இப்படி அவர்கள் கேட்பதற்கெல்லாம் தலையாட்டினால் எதிர்காலத்தில், 'நாம் செய்வதுதான் சரி; யாரும் அதற்கு மறுப்பு தெரிவிக்கக்கூடாது, நாம் என்ன கேட்டாலும் கிடைக்கவேண்டும்' என்ற பிடிவாத குணத்தைப் பிள்ளைகளிடம் கொண்டுவந்துவிடும். எனவே, அவர்களுக்குத் தேவையற்ற ஒரு விஷயத்திற்காக, ஆரோக்கியத்திற்கு எதிராக அடம்பிடிக்கிறார்கள் என்றால் அதை எக்காரணம் கொண்டும் ஊக்கப்படுத்தாதீர்கள். அப்போதுதான் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளப் பழகுவர். எனவே, பிள்ளைகளிடம் தேவையற்ற விஷயங்களுக்கு 'நோ' சொல்ல கட்டாயம் பெற்றோர்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும்.


ஒருபக்கம் அதிக சுதந்திரம் கொடுக்கும் பெற்றோர் என்றால், இன்னொருபக்கம் எதற்குமே சுதந்திரம் கொடுக்காத பெற்றோர். உதாரணமாக, 2 வயதுக் குழந்தைக்கே தானாக காலில் சாக்ஸ் மாட்டி, ஷூ போட்டுக்கொள்ள தெரியும் என்கிறது ஓர் ஆய்வு. முதலில் இடதுகால் ஷூவை வலதுகாலில் போட்டுப்பார்க்கும். ஏதோ, சரியில்லை என உணர்ந்தால் அடுத்து, அதை மாற்றிப்பார்க்கும். இப்படித்தான் ஷூ போடுவதைத் தானாகக் கற்றுக்கொள்ளும். ஆனால், நம் பெற்றோர்கள் இப்படி இயல்பாகக் குழந்தைகள் கற்றுக்கொள்ள விடாமல், சின்னச் சின்ன விஷயங்களையும் அவர்களே செய்துவிடுவர். உதாரணமாக, பள்ளிக்கு மதிய உணவைச் சமைத்து எடுத்துச்செல்ல பிள்ளைகளால் முடியாது. எனவே அதைப் பெற்றோர்கள் செய்வதில் தவறில்லை. ஆனால், அந்த உணவை டிபனில் எடுத்துவைக்க அவர்களால் முடியும். சாப்பிட்ட தட்டைக் கழுவ அவர்களால் முடியும். இதையெல்லாம் அவர்களே செய்யக் கற்றுக்கொடுக்கலாம்


இதற்காக அந்தப் பெற்றோர்கள் சொல்லும் காரணம், 'குழந்தைக்கு என்னங்க தெரியும்?' இது மிகவும் ஆபத்தான பதில். இதனால், எதிர்காலத்தில் எல்லா விஷயங


்களுக்கும் யாரையோ சார்ந்திருக்கும்படி ஆகிவிடுவார்கள். சுய பொறுப்புஉணர்ச்சி மிகவும் குறைவாக இருக்கும். மேலும், பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு எதுவுமே தெரியாதது என நினைத்துக்கொண்டிருப்பது, அந்தப் பிள்ளைகளுக்கு தாழ்வு மனப்பான்மையையும் உருவாக்கும். எனவே, சில விஷயங்களை அவர்களையே செய்யவிடுங்கள். எல்லா விஷயங்களும் அவர்களால் முடியும் என உறுதியாக நம்புங்கள். அதுவே அவர்களுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.


எல்லாப் பெற்றோர்களுக்கும் தங்கள் பிள்ளைகள் குறித்த ஆசைகளில் முக்கியமானது, பிள்ளை அதிபுத்திசாலியாக இருக்கவேண்டும் என நினைப்பது. இதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், பிரச்னை எங்கே தொடங்குகிறது என்றால், இதற்காகவென்றே கண்ணில்பட்ட கிளாஸ்களிலெல்லாம் பிள்ளைகளைக் கொண்டுபோய் சேர்ப்பதுதான் சிக்கலே! அதுவும் பாட்டு கிளாஸ், கராத்தே கிளாஸ் என மட்டுமல்ல. அவர்கள் குறுகிய காலத்திலேயே ஐன்ஸ்டீனாக வேண்டுமென வித்தியாசமான விதவிதமான கோர்ஸ்களிளெல்லாம் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள். ஆனால், அவர்களின் சிந்தனைத் திறன் வளர்வதற்கு இவை எல்லாவற்றையும்விட மிக முக்கியம், அவர்களை விளையாட விடுவது. இதையுமேகூட செய்கிறார்கள். ஆனால் என்ன, வெறும் மொபைலிலும், பிளே ஸ்டேஷனிலும்தான். மண்ணில் ஓடியாடி விளையாடிய காலமெல்லாம் மாறி நீண்டநாளாகிவிட்டது


உண்மையில் விளையாட்டு உடலுக்கும், மனதுக்கும் மட்டும் ஆரோக்கியமல்ல; அதோடு சேர்த்து எண்ணற்ற நல்ல பண்புகளையும் அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். உதாரணமாக, பல பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடும்போது வெற்றியையும் தோல்வியையும் மாறிமாறிப் பார்க்கிறார்கள்; நண்பர்களுக்கு விட்டுக்கொடுக்கிறார்கள்; அவர்களுக்காக உதவுகிறார்கள். இப்படி எத்தனையோ சமூகப் பண்புகளை இளம்வயதில் விளையாட்டுகள்தாம் கற்றுக்கொடுக்கின்றன. அதைவிட்டுவிட்டு வீடியோகேம்களை கையில் கொடுப்பது சரியா? ஆனால், பிள்ளைகள் கையில் மொபைலையும், டேப்லட்டையும் தவழவிடுவதைப் பலரும் பெருமையாகவே பார்க்கிறார்கள். அவையும் இருக்கலாம், ஆனால், அளவோடுதான்.


'சந்தோஷ் சுப்ரமண்யம்' படத்தில் வரும் பிரகாஷ் ராஜ் கதாபாத்திரம் எல்லோருக்கும் நினைவிருக்கும். அதுபோல பிள்ளைகளின் எல்லா விஷயங்களிலும் பெற்றோர்களே மூக்கை நுழைக்கக்கூடாது. முக்கியமான சில விஷயங்கள் தவிர்த்து, மற்றவற்றில் அவர்களையே முடிவெடுக்கவிடவேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் பெற்றோர்களைச் சார்ந்துவாழாத சமயங்களில் கூட அவர்களால் சர்வைவ் ஆகமுடியும்.


குறிப்பாக சில பெற்றோர், பிள்ளைகள் ஓடி விளையாடும்போதுகூட கீழே விழுந்துவிடக் கூடாது என்ற அளவுக்கு அக்கறையாக இருப்பார்கள். உண்மையில் அவர்கள் சில முறையாவது கீழே விழுந்தால்தானே, எங்கே விழுந்தோம், ஏன் விழுந்தோம் எனக் கற்றுக்கொள்ளவே செய்வார்கள். எனவே அவர்கள் கீழே விழக்கூடாது என ஆசைப்படாமல், விழுந்ததும் உடனே எழுந்து ஓட கற்றுக்கொள்ளவேண்டும் என ஆசைப்படுங்கள். அதுதான் சரியான அக்கறை.


சில சமயம் குழந்தைகளுக்கு அளவான சுதந்திரமே கொடுத்திருந்தாலும்கூட , அவர்கள் அதைத் தவறாகப் பயன்படுத்திவிட வாய்ப்புண்டு. இது 5 வயது குழந்தையிலிருந்து டீனேஜ் இளைஞர்கள் வரை பொருந்தும். உதாரணமாக நண்பர்களுடன் விளையாடுவதற்கு வெளியே அனுப்பினால், நீண்டநேரம் வீட்டிற்கே திரும்பாமல் போகலாம். நல்ல விஷயங்களுக்குச் செலவு செய்யப் பணம் கொடுத்தால், அதை வெட்டியாக செலவு செய்யலாம். இதற்கெல்லாம் ஒரே வழி, அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தின் அருமையை அவர்களுக்கே உணர்த்துவதுதான். எனவே அவர்களிடம் இப்படி சொல்லிப்பார்க்கலாம்.


"உன்னுடைய விருப்பப்படி வெளியே செல்ல அனுமதிக்கிறேன்; ஆனால், நான் சொன்னபடிச் சரியாக 6 மணிக்குள் வீட்டிற்கு வந்துவிடவேண்டும். உன்னுடைய விருப்பப்படி படத்திற்குச் செல்ல அனுமதிக்கிறேன். ஆனால், கட்டாயம் வீட்டிற்கு வந்ததும் படிக்கவேண்டும்." - இப்படியெல்லாம் சின்னச் சின்ன அக்ரிமென்ட் போட்டுக்கொள்ளலாம். இவையெல்லாம் மிகப்பெரிய கட்டுப்பாடுகள் இல்லையென்றாலும், அவர்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நல்லெண்ணத்தை அவர்கள் உணர்ந்துகொள்ள உதவும். எனவே சுதந்திரம் கொடுப்பது மட்டுமல்ல; அதைச் சரியாக வரையறுத்தும் விடுங்கள்.


பெற்றோர்களிடையே சண்டை வருவது இயல்புதான். ஆனால், அதை, எவ்வாறு குழந்தைகளிடம் பாதிப்பை ஏற்படுத்தாமல் கையாள்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது சாமர்த்தியம். பல வீடுகளில் குழந்தைக்குத் தெரியக்கூடாது என்பதற்காக மறைவாக சண்டை போடுவார்கள், குழந்தைகள் இல்லாத நேரத்தில் சண்டை போடுவார்கள்... ஆனால், இன்றைய குழந்தைகள்தான் செம ஸ்மார்ட்டாயிற்றே? எனவே, அம்மா - அப்பாவின் நடவடிக்கையில் ஏதேனும் மாற்றம் தெரிந்தாலே ஏதோ பிரச்னை என யூகித்துவிடுவார்கள். இன்னும் சிலர் கோபத்தின் உச்சிக்கு சென்று, பிள்ளைகளின் முன்னரே சண்டைபோடுவார்கள். அடுத்த சில மணி நேரங்களில் சமாதானமும் ஆகிவிடுவார்கள். இதெல்லாம் சரிதான். ஆனால், பிள்ளைகள் இதை எப்படி எடுத்துக்கொள்வர்? பெற்றோர் சண்டை போட்டது


மட்டும்தானே அவர்களுக்குத் தெரியும்? அப்படியெனில் என்ன செய்யவேண்டும் என்கிறீர்களா?


குழந்தைகள் முன்னாடியே சமாதானமும் ஆகுங்கள். குழந்தைகளிடமே அது சின்ன சண்டைதான், இப்போது சமாதானமாகிவிட்டோம் எனச் சொல்லிப் புரியவையுங்கள். அவர்களுக்கு இதெல்லாம் தேவையில்லாத விஷயம் என நீங்கள் நினைத்து சும்மா இருந்தால், நிச்சயம் அவர்களின் மனதளவில் பாதிப்பு ஏற்படும். இதைப் பெற்றோர்கள் எப்போதும் மறக்கக்கூடாது"


நன்றிகளும்,பிரியங்களும்....வாழ்த்துக்கள் ...

கேள்வி : தற்பொழுது உள்ள சூழ்நிலையில் (கொரோனகாலம் ) வீட்டுக் கடனுக்கான ஈஎம்ஐ கட்ட முடியவில்லை.? என்ன வழிமுறைகள் என்று கூறமுடியுமா சிவா சார் ?

கேள்வி : தற்பொழுது உள்ள சூழ்நிலையில் (கொரோனகாலம் ) வீட்டுக் கடனுக்கான ஈஎம்ஐ கட்ட முடியவில்லை.? என்ன வழிமுறைகள் என்று கூறமுடியுமா சிவா சார் ?


என் பதில் :


கவலைப்படாதீங்க இதை ஃபாலோ பண்ணுங்க..கவலைப்படவேண்டாம் ..
நம் அனைவரின் வாழ்க்கை முடிவுகளும் எதிர்காலத்தைப் பற்றிய சாதாரண ஊகங்களை அடிப்படையாகக் கொண்டவை. இருப்பினும், நமது எதிர்காலம் எப்படி இருக்கப் போகின்றதென்பதை நாம் வெகு குறைவாகவே அறிந்து வைத்திருக்கின்றோம். விஷயங்கள் கட்டுப்பாடின்றிப் போகும் போது நாம் சிக்கல்களில் இருப்பதை உணர்கின்றோம்.
பிரச்சனை பணவியல் சார்ந்தாக இருந்தால் இன்னும் பெரியதாகத் தெரிகிறது. தனிப்பட்ட சோகமாக இருந்தால், நமது தனிப்பட்ட இடத்தில் அந்தரங்கமாக வருந்தலாம். இருப்பினும், உங்கள் பிரச்சனைகளில் அடுத்தவர்கள் ஈடுபட்டு, அதிலும் அவர்களது ஈடுபாடு நிதி தொடர்பானதாக இருந்தால், தவிர்க்க முடியாமல் அந்தப் பிரச்சனை பொது வெளிக்குப் போகும். உயர்மட்டத்துத் தொழிலதிபர்களான விஜய் மல்லையா மற்றும் சுப்ரதா ராய் சஹாரா போன்றோரின் பொதுவெளிக்கு வந்த வழக்குகள் இதைப் பற்றி உங்களுக்குச் சொல்லும்.
வீட்டுக் கடன்
இந்தச் சூழ்நிலையில் சில தனிப்பட்ட காரணங்களால் உங்களால் வீட்டுக் கடனுக்கான சமன்படுத்தப்பட்ட மாதாந்திரத் தவணைகளை (EMI) செலுத்த முடியாமல் போனால் உங்கள் தேர்வுகளில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது
பணச் சிக்கல்களின் விளிம்பில் இருக்கும்போது வீட்டுக்கடனுக்கான ஈஎம்ஐ செலுத்த வேண்டிய நேரம் வரும்போது செலுத்த முடியாமல் போனால் என்னவெல்லாம் செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதைப் பற்றியே பார்க்கப்போகிறோம்.
அழைப்புகளைத் தவிர்க்காதீர்கள்..
அந்த வழக்கமான தொலைப்பேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் தொல்லைத் தருவதாக இருக்கும் மேலும் வங்கி உங்களை மதிப்பிற்குரிய வாடிக்கையாளராக நினைத்திருந்த காலங்களை உங்களுக்கு ஞாபகப்படுத்தும். இந்த எண்ணங்களால் தன்னிலை இழக்காதீர்கள். உண்மை என்னவென்றால், கடன்கள் என்பது ஒரு பொறுப்பாகும்.
அனைத்து நேரங்களில் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஒரே வழி உரையாடல் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள்.
உண்மைகளை மறைக்காதீர்கள்...
பாதி உண்மைகளை மட்டுமே சொல்வது நல்ல ஆலோசனை அல்ல. ஒருவேளை நீங்கள் வேலையை இழந்ததன் காரணமாக மாதாந்திரத் தவணைகளைக் கட்ட முடியாமல் இருக்கலாம் மற்றும் உங்களால் சந்தையில் உள்ள மோசமான நிலவரம் காரணமாக விரைவாக வேறு ஒரு வேலையைக் கண்டறிய முடியாமல் இருக்கலாம். காரணம் ஏதுவாக இருந்தாலும் வங்கியிடம் இது தான் விஷயமென்று சொல்லி விடுங்கள்.
வங்கியிடம் மூன்று மாதங்களுக்குப் பிறகு மாதாந்திர தவணைகளை ஒழுங்காகச் செலுத்தத் தொடங்குகிறேன் என்பது போன்ற வாக்குறுதிகளை அளிப்பது நல்ல ஆலோசனை அல்ல. வங்கியிடம் எந்த அளவுக்கு வெளிப்படையாக இருக்கிறீர்களோ அந்த அளவுக்குச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
வங்கியைத் தொடர்பில் வைத்திருங்கள்...
உங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க ஏதேனும் தெய்வீக தலையீடு நடக்கும் என்று கடைசி நிமிடம் வரை காத்திருக்காதீர்கள். உங்களிடம் இருக்கும் சில சேமிப்புகள் சிக்கலான நேரங்களில் கை கொடுக்கலாம். ஆனால் அவையும் சில மாதங்களுக்கு மட்டுமே நீடிக்கும். அதனால் தான் ஒரு பிரச்சனையின் தொடக்கத்திலிருந்தே வங்கியுடன் தொடர்பில் இருக்குமாறு வலியுறுத்தப்படுகிறது.
அப்படி இருப்பதால், உங்களுக்கு உண்மையிலே பிரச்சனை இருக்கிறது மற்றும் நீங்கள் வேண்டுமென்றே தவணை கட்டுவதிலிருந்து தவறவில்லை என்பதற்கு ஆதாரமாகச் செயல்படும். மேற்கொண்டு உண்மையை நிரூபிக்க உங்கள் அனைத்துக் கோரிக்கைகளையும் ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவும்.
உங்கள் தேர்வுகள் என்ன?
ஒரு பணப் பிரச்சனை ஏற்பட்டவுடன் உங்கள் மனதில் தோன்றும் முதல் எண்ணம், வங்கியானது உங்கள் சொத்துக்களைக் கையகப்படுத்திக் கொண்டு, அவற்றைச் சந்தையில் ஏலத்திற்கு விட்டு பின்னர் அவர்களது தவணைப் பணத்தை மீட்டுக்கொள்வார்கள் என்பதாக இருக்கும்.
இருப்பினும் அது மிக மோசமான சூழ்நிலைகளில் எடுக்கப்படும் கடைசிக் கட்ட நடவடிக்கையாக இருக்கும். நீங்கள் கவனமாகச் சூழ்நிலையைக் கையாண்டால் அது போன்ற சூழ்நிலை ஒருபோதும் ஏற்படாது.
அவகாசம்...
நீங்கள் வங்கியிடம் பேசி ஈஎம்ஐ கட்டுவதற்குச் சில நாட்கள் விடுமுறையைப் பெறலாம். இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு, உங்கள் கடன் பொறுப்பைச் செலுத்த நீங்கள் அதிகரிக்கப்பட்ட மாதாந்திர தவணைத் தொகையைச் செலுத்த வேண்டி வரலாம்.
உங்களுக்கு உண்மையாகவே பிரச்சனை இருந்தால் மேலும் நீங்கள் இதுவரையிலும் கடன் செலுத்தி வந்த பதிவுகள் குறை கூற முடியாதபடி சீராக இருந்தால், வங்கிகள் இந்த வசதியை உங்களுக்கு உடனடியாக வழங்க ஒப்புக்கொள்ளத் தயாராக இருக்கும்.
மறுசீரமைப்பு...
நீங்கள் உங்கள் வீட்டையும் மறுசீரமைப்புச் செய்து கொள்ளலாம். இதனால் உங்கள் மாதாந்திர தவணையைச் சிறிதளவு அதிகமாகச் செலுத்த வேண்டி இருக்கும் மற்றும் கடன் செலுத்தும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டியிருக்கும்.
இது தற்போது உங்களுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் நிதிப் பிரச்சனையைச் சமாளிக்கச் சிறந்த வழியாகும்.
நிதி நெருக்கடி...
ஒருவேளை உங்கள் நிதி நெருக்கடி மிக ஆழமானதாக இருந்து உங்களால் வருங்காலத்தில் நிதி நிலைமையில் உங்களால் எந்த விதமான முன்னேற்றத்தையும் காண முடியாத சூழ்நிலையில் இருந்தால், நீங்கள் ஒரே முறையில் மொத்தப் பணத்தையும் செலுத்தி விடலாம்.
இந்தச் செயல்முறையில் வங்கி கடனாளியிடம் ஒரு பெரிய மொத்த தொகையைப் பெற்றுக் கொண்டு வழக்கிற்குத் தீர்வு காணும். ஆனால் இது நடக்க வேண்டுமென்றால் நீங்கள் வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை இதற்குச் சமாதானப்படுத்த வேண்டும்.
இரண்டாவதாக, நீங்கள் வங்கியைச் சமாதானப்படுத்துவதில் வெற்றியடைந்து விட்டால், கடனை மொத்தமாக அடைத்து விடுங்கள். ஆனால் இதனால் நீங்கள் வருங்காலத்தில் மற்றொரு கடன் வாங்குவது கடினமாகிவிடும்.

நன்றி ..
Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs)
சிவக்குமார்........
வீட்டு கடன் பிரிவு
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர்
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681
Email:siva19732001@gmail.com....நன்றி .....கனவு இல்லம் நிறைவேற ..வாழ்த்துக்கள் ..

வியாழன், 8 ஜூலை, 2021

 கரிசல் மண்ணிலிருந்து ....பருத்தி ஆடை நகரத்து வாழ்வு ...


என்னடா சுயசரிதயான்னு நினைப்பீங்க.....
But this is a message ....
1991 ல அப்பா குடுத்த 125/- ரூபாயோட திருப்பூர் வந்தேன். Bsc degree படிச்சிருந்தாலும்..Office boy cumclerk கா, அப்பாவினுடைய நன்பர் ராதாகிருஷ்ணண் மூலியமா நூல் Depot வில , எங்க வாடகை வீட்டு Owner மூலியமா வேலைக்கு சேர்ந்தேன். பல வேலையில் பயனித்தேன்.
அப்பா கஷ்டம் எனக்கு மட்டும் தெரிஞ்சது ..நபர் 6 பேர வச்சு குடும்பம் நடத்திரது எவ்வவளவு கஷ்டம்னு!
வேலைக்கு வந்துட்டேன். அப்பாவுக்கு எப்படியாவது பணம் அனுப்பனும்...மீதமிருக்கிற சகோதரங்ள வளர்கிறதுக்கு, படிக்கிறதுக்கு நம்மளால முடிஞ்ச உதவிய பண்ணணும்னு ஆத்திரம்!
அனுப்புனேன் மாதம் Dd 200 , 250 , 300 இப்படி அப்போ! எப்படீன்னு கேட்கலாம்...நூல் மூட்டை 50 , 60 கிலோ மூட்டை தூக்கினேன்! என் சக நன்பர்களுக்கு தெரியும்! பார்ப்பாங்க! அதனாலதான் முடி என் மூன்று சகோதரர்களுக்கு இருந்தாலும், எனக்கில்லை!
அப்பாவே பாராட்டிய கடிதம் ஒரு தடவை 2000/- அனுப்பும்போது நெகிழ்ந்துபோனேன்! அப்பவே ஜெயிச்சதா உணர்ந்தேன்!
எனக்கு பெருசா ஆசபட தெரிஞ்சமாதிரி எங்கப்பா வளர்க்கல. இது கிடைச்சா போதும்னுதான் வளர்ந்தேன்! கடன் இல்லாம, வாழ்ந்தாள் போதும் என்ற என் அப்பாவின் வாழ்க்கைதான்....என்னை பெரியளவிற்கு, இல்லை என்றாலும், நிம்மதியான வாழ்க்கையை தேடவைத்தது!
பெரிய சம்பாத்தியம் என்றுமே 100%.... முறையான சம்பாத்தியத்தில் வராது!
நிம்மதியான வாழ்க்கை... அளவான தேவைக்கு போதும் என்ற மனப்பாங்கு வரும்போது கிடைத்துவிடும்! உடல் ஆரோக்கியமும் துனை நிற்க்கும்!

ஜெகவீரபாண்டியன் ......

புதன், 7 ஜூலை, 2021

 கேள்வி : தற்போது உள்ள நிலையில் முதலீடு பற்றிய சிறந்த 10 யோசனைகள் என்னென்ன என்று கூற முடியுமா  சிவா சார் ...?


என் பதில் : 


முதலீடுகளை இரண்டாக பிரிக்கலாம். ரிஸ்க் மற்றும் டீ-ரிஸ்க் என்று அவைகளை வைத்துக்கொள்ளலாம். அதாவது நிச்சயம் பணம் திரும்ப கிடைத்துவிடும் முதலீடுகள் மற்றும் சந்தை நிலவரம் பொறுத்து பணம் கிடைப்பது போன்ற முதலீடு.

1. பிக்சட் டெபாசிட் தான் இருப்பதிலேயே சிறந்த பாதுகாப்பான முதலீடு. நீங்கள் உங்கள் போனிலேயே இதனை செய்துகொள்ளலாம். ஆனால் வட்டி விகிதம் குறைவு. அதிலும் இந்த கொரோனா காலத்தில் மிகவும் குறைவு. 3 - 5% வரை மட்டுமே கிடைக்கிறது. வேண்டியபோது இதனை முடித்துக்கொள்ளலாம், நமது வசதிக்கு ஏற்ப

2. தங்கம் வாங்குதல். தங்கத்தை போன்று சிறந்த முதலீடு இல்லை. எப்போதும் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டே உள்ளது. 5 வருடங்களுக்கு முன்னர் 1 கிராம் தங்கத்தின் விலை என்ன என்று யோசித்து பாருங்கள். விளங்கும். குன்றிய கால முதலீட்டை விட, நெடுங்கால முதலீட்டிற்கு தங்கம் சிறந்த முதலீடு.

3. நிலம். மனைகள் தான் என்றும் எப்போதும் சிறந்த முதலீடு. நமது முதலீடு நம் கண் முன்னேயே இருக்கும். பத்திரங்களை பத்திரமாக வைத்திருப்பது அவசியம். மனைகளும் காலத்திற்கு ஏற்ப, நகரமயக்களுக்கு ஏற்ப நல்ல விலை ஏற்றம் காணும்.

4. க்ரிப்டோ நாணயங்கள் - இவை இன்னும் இந்தியாவில் அந்த அளவுக்கு மக்களிடம் சென்று சேரவில்லை என்றாலும், அதிக முதிர்வு தொகை கிடைக்கும். அதே அளவுக்கு ரிஸ்க் அதிகம்.

5. காப்பீடு திட்டங்கள். பல வங்கிகள்,காப்பீடு நிறுவனங்கள் நல்ல திட்டங்கள் வைத்துள்ளன. அவை நல்ல முதிர்வு தொகை கொடுக்கின்றன. ஆனால் இவை நெடுங்கால முதலீட்டுக்கு தன ஏற்றது.

6. SIP எனப்படும் முதலீடு. சிறு சிறு தொகையை மாத மாதம் கட்ட, அவை சில பல வருடங்களில் நல்லதொரு முதிர்வு தொகை தரும். இது சந்தை நிலவரத்தை பொறுத்தது. ஆனாலும் mutual முதலீடு போல ஆபத்து குறைவு.

7. Mutual Fund - நேரடியாக நாம் இதில் முதலீடு செய்யும் போது நல்ல விகிதங்கள் திரும்ப கிடைக்கின்றது. ஆனால் சந்தை மதிப்பை பொறுத்தது. நல்லதொரு நிறுவனத்தில் முதலீடு செய்யும்போது, நல்லதை செய்யும்.

8. வர்த்தக முதலீடு - உங்களுக்கு வர்த்தகம் புரிந்தால் இதில் முதலீடு செய்து, நல்லதொரு சம்பாத்தியத்தை பெறலாம். ரிஸ்க் அதிகம் என்றாலும், சந்தையை பற்றி புரிந்து வைத்திருந்தால் நன்றாக சம்பாதிக்கலாம். ஷேர், கம்மோடிட்டி கரன்சி என்று எதிலும் சம்பாதிக்கலாம். இதை மட்டுமே தொழிலாக இருப்பவர்களும் உண்டு.

9. வாகனங்கள். இது முழுக்க முழுக்க சேவை வகையில் செய்யப்படும் முதலீடு. வாடகைக்கு ஓட்டி சம்பாதிக்க வேண்டும். மூன்று ஆண்டுகளில் உங்களால் போட்ட பணத்தை எடுக்க முடிந்தால், வாகனத்தின் அன்றைய மதிப்பு உங்களது லாபம். ஆனால் நிச்சயம் தேர்ந்த அறிவும் உழைப்பும் வேண்டும்.

10. தமிழ்நாடு மின்சார முதலீடு. இந்த முதலீட்டில் 8% வரை சம்பாதிக்க இயலும். வங்கியில் போடும் பிக்சட் டெபாசிட் போன்றதே இது. Tamilnadu Power finance என்று தேடிப்பாருங்கள்.

எனக்கு தெரிந்த சிலவற்றை கூறி உள்ளேன். இதற்கு மேலும் சிறந்த முதலீடுகள் இருக்கலாம். அவற்றை ஆராய்ந்து செயல்படுங்கள்.


நன்றி ..

சிவக்குமார்  VK 
Sivakumar.V.K

Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,
Car Loans,Construction,Property Buy and Sell) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com.....நன்றி ...