வியாழன், 24 அக்டோபர், 2024

கோவை சிவக்குமார் 🌈🥰🙏 அவர்களின் பதிவும் ..அவர்களை தொடர்ந்து .K N .நாகராஜ் கரூர் அவர்களின் பதிவும் ..அன்புத் தம்பி ராஜேஷ் கண்ணன் (வழக்கறிஞர்-நாமக்கல் ) அவர்களின் பதிவும் ...திருமண பதிவுகள் சிந்திக்க வேண்டிய நம் சமுதாய சொந்தங்கள் ..

கோவை சிவக்குமார் 🌈🥰🙏 அவர்களின் பதிவும் ..அவர்களை தொடர்ந்து .K N .நாகராஜ் கரூர் அவர்களின் பதிவும் ..அன்புத் தம்பி ராஜேஷ் கண்ணன் (வழக்கறிஞர்-நாமக்கல்  ) அவர்களின் பதிவும் ...திருமண பதிவுகள் சிந்திக்க வேண்டிய நம் சமுதாய சொந்தங்கள் ....


 அன்பார்ந்த நமது சொந்தங்களுக்கு வணக்கம் அனைத்து சொந்தங்களுக்கும் ஒரு வேண்டுகோள் நான் பார்த்த வகையில் எல்லா ஊர்களிலும் 25க்கு மேல் முப்பது வயதுக்கு மேல் மணப்பெண்கள் நிறைய உள்ளனர் இன்னும் திருமணம் ஆகாமல் காரணம் நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை எதார்த்தமான நிலையில் எல்லோரும் ஐடி பணியில் ஒரு லட்சம் ஒன்றரை சுமார் 70 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் இருந்தால் தான் நாங்கள் எதிர்பார்க்கின்றனர் அவர்கள் எதிர்பார்ப்பை நான் குறை சொல்லவில்லை ஐடி வேலையில் நமது மாணவர்களுக்கு தற்போது தான் படித்து வருகின்றனர் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் ஐடி பணியில் உள்ளனர் மற்ற இளைஞர்கள் எல்லாம் நல்ல வேலையில் மாற்றுப் பணிகள் உள்ளனர் அவர்களுக்கு மணப்பெண்கள் கிடைப்பதில்லை அதனால் நிறைய இளைஞர்கள் ஊருக்கு 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் 30 வயது 35 வயது என்று நிறைய பேர் உள்ளனர் திருமணமாகாமல் இதே போல் 80களில் 90களில் நினைத்திருந்தால் ஒரு தலைமுறையை இருக்காது அதனால் மணப்பெண்களின் பெற்றோர்கள் நல்ல மாப்பிள்ளை நல்ல வேலை இருந்தால் அவர்களுக்கு நீங்கள் பெண் தர வேண்டும் மேலும் ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடுகிறார்கள் சொந்த வீடு தோட்டம் என்று சில பேர் கூறுகிறார்கள் விவசாயம் செய்யும் மாப்பிள்ளைக்கு மணப்பெண்ணே கிடையாது என்கிறார்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் டிரைவர் என்று எல்லோரும் இருக்கிறார்கள் அவர்களெல்லாம் எங்கே போவது இப்படியே விட்டால் கண்டிப்பாக நிறைய பேர் திருமணம் ஆகாமல் பெண்களும் உள்ளனர் ஆண்களும் உள்ளனர் எதார்த்தமான நிலையை உணர்ந்து எல்லோரும் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம் யாரையும் குற்றம் சொல்லவில்லை இப்படியே போனால் நமது கம்பனத்தை இனமான இளைஞர்கள் நிறைய பேர் திருமணமாக முன் தன் வாழ்க்கை இழந்து விடுவார்கள் பெண்களும் நிறைய முதிர் கனிகளாக உள்ளனர் எதிர்பார்ப்புகளோடு திருமணமாகாமல் உள்ளார் அவர்களும் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்📗✒️✒️🎙️📡📡கோவை சிவக்குமார் 🌈🥰🙏

K .N .நாகராஜ் கரூர் அவர்களின் பதிவு ....

ஜாதகத்தை தூக்கிக்கொண்டு திரியும்வரை இந்த மாதிரி பிரச்சனைகள் தலை விரித்தாடத்தான் செய்யும்...


எனக்கு கல்யாண பொருத்தம் பார்க்கலே.

2 பொம்பளபுள்ளே 1 பையன்னு ஜாம் ஜாம் னு வாழத்தான் செய்யறேன்...


பெரிய பொண்ணு B.sc Gold medal, MBA Anna University Top 50 Rank Holder...

Poly Technic முடிச்ச பையனுக்குதா கொடுத்தேன் 

லட்டு மாதிரி 2 ஆம்பள பசங்க இப்போ...

S.R Fibers , S.R.smal scale industries nu    தேங்காய் நார் மட்டை கம்பெனி, கயிறு திரிக்கிற மெஷின்கள் னு வாழ்க்கையை அழகழகா நடத்துறாங்க... 

படிப்பென்னங்க படிப்பு...

 Understanding தா முக்கியம்.

நாங்களும் சம்மந்தகாரங்களும் ஒன்னா உட்கார்ந்து ஜாதகம் பார்த்தது கிடையாது. இரண்டு சம்மந்திகளுக்கும் பிடிச்சிபோச்சு கல்யாணம் முடிச்சுட்டோம்...

மனங்கொண்டதே மாங்கல்யம்...


இரண்டாவது பொண்ணு B.E (ECE)  first class 8.9  percentage

மாப்பிள்ளை வீட்டுக்காரர் திருப்திக்கு ஜாதகம் கேட்டாங்க னு 23 வயசுல குறிப்பை வெச்சு ஜாதகம் எழுதி வாங்கி தந்தேன் அவ்வளவுதான்

அவங்களும் சரின்னாங்க 

17.09.23 ல கல்யாணம் ஜாம் ஜாம் னு முடிச்சு 28.09.24 மஹாலட்சுமியே பேத்தியா பொறந்திருக்கா

2வது மாப்ளே B.Sc (Jio fiber le Dindigul and Theni Districtக்கு fiber Engineering incharge MNC Co.)  


நான் சொல்ல வர்றது என்னன்னா ஜாதகம் தேவையில்லை... சாதகமான முடிவுகளை எடுக்கற பெற்றோரா இருந்து பிள்ளைகளுக்கு காலாகாலத்துலே கல்யாணம் செஞ்சு வைங்க... இப்போ இருக்கிற கால கட்டத்துக்கு டெஸ்ட் டூப் பேபி னு கையை பிசைய வெச்சுடாதீங்க 

அப்புறம் முதலுக்கே மோசமாகி அடுத்த ஜாதிலே ஓடிப்போயிடுச்சு னு நடைபிணமா வாழ்க்கையை வாழ வேண்டி இருக்கும். 

அப்புறம் நாமும் தலைநிமிர்ந்து நடக்க முடியாம, நம்ம பிள்ளைகளையும் அடுத்த ஜாதிலே போயிடுச்சே னு கௌரவத்தை வாரி கொடுத்திட்டு... அவங்களப்பார்த்தும் நாம சந்தோசப்பட முடியாம, வம்ச விருத்தி இல்லாம நாசமா போறதுக்கு பதிலா.... 10, 12வது பையன் படிச்சிருந்தா போதும்... நம்ம பிள்ளை அவ குடும்பத்தை வாழ வெச்சுடுவா னு நம்பிக்கைகளை அனைத்து பெற்றோரும் பெற்றிடுவதே ஆகச் சிறந்த தீர்வுகளாக இருக்குமென என்னளவுக்கு நம்புகிறேன்


இந்த 54 வயசுலயும் தட்டு தடுமாறி தமிழில் டைப் பன்றேன்னா எனது சமுதாயம் நான் பெற்ற நம்பிக்கைகளை அவர்களும் பெற்று தனது சந்ததியினருக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க...

 மேலும் மேலும் கால தாமதப்படுத்தாதீர்கள் என கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்


பொம்பள பிள்ளைகளை எவ்வளவு படிக்க வைக்க பிரயத்தனப்பட்டீர்களோ அதே அளவு கல்யாணம் செய்து கொடுப்பதில் மூன்று மடங்கு மும்முரம் காட்டுங்கள்...


யார் குடும்பத்தையோ தழைக்க செய்வதற்குதான்  உங்களுக்கு கடவுள் பெண் பிள்ளைகளை பரிசளித்தார் என்பதை மனதில் நிறுத்தி...

எது எதுக்கு செல்லம் கொடுக்கனுமோ அது அதுக்கு கொடுங்கள்...

எல்லாத்துக்கும் ஆமாம் சாமி போட்டீங்கனா  நீங்களே அந்த பிள்ளையின் இளமை வாழ்க்கையை சீர் செய்ய தவறிவிட்டீர் என்பதை எதிர்காலம் உங்களுக்கு எடுத்துரைக்கும் என சங்கடத்தோடு பதிவை விதைக்கிறேன்...


முளைப்பதும்  அழுகுவதும் அழுவதும் அவரவர் வினைப்பயனே...


🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼


" மனம் கொண்டதே மாங்கல்யம் " 


நித்தியத்துவம் பெற்ற வார்த்தைகள் .. 


தனக்கு நிகராக அல்லது தன்னை விட ஒருபடி மேலே வரன்களை எதிர்பார்க்கும் சூழலே இங்கு 30 வயதை கடந்தும் பலர் மணமாகமல் இருப்பதற்கு முதற் காரணம் 

பாலின விகிதம் நேரேதிராக குறைந்து வரும் காலத்தில் இனி திருமணம் என்பதே பலரது வாழ்வில் எட்டாக்கனி என்பதுதான் எதார்த்தம்...

நம் சமுதாயதிற்கு ஜாதகம் தேவையில்லை ஏனெனில்  நாம் செய்வது காந்தர்வ மனம், தாலி எடுத்து கொடுப்பது மட்டுமே பழங்கால வழக்கம், ஆகையால் சமுதாய பெண்கள் எப்படி விக்ரம் காலத்தில் வாழ்ந்து வந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே காந்தர்வமனம் போல் நமது சமுதாய திருமணத்திற்கு எதுவும் அவசியம் இல்லை எக்காலத்திலும், ஆனால் ஜாதகமும்  பொய்யல்ல ஜாதககாரர் சொல்லும் கணிப்பு பொய்யான இருக்கலாம் (90 நாள் ஜாதகம் கற்று நானும் ஜாதககாரர் என்றால் எப்படி விளங்கும்) ஜாதகம் முழுக்க முழுக்க அறிவியல் (கதிர் வீச்சு) (blackhole, waves, eclipse, luner eclipse etc...)என பல சம்பந்தப்பட்ட விசியம் , எனவே ஜாதகம் பார்க்க வேண்டிய இடத்தில் பார்த்தால் போதுமானது...

திண்டுக்கல் கரூர் திருச்சி மாவட்ட கம்பளத்தார்களிடையே பெரும்பாலும் ஜாதகம் இல்லாமலே அங்கங்கே சொந்தத்திலயே மணம் முடித்து கொள்கிறார்கள்...

5,6வருடங்களில் சிறு மாற்றம் நிகழ்ந்து வருகிறது...குறிப்பாக 

பால்ய விவாகங்கள் குறைந்து விட்டன என்றே சொல்லலாம் 


ஆக இத்தனை வருட கால திருமணங்கள் எதுவுமே ஜாதகத்தை பார்த்து நடைபெறவில்லை என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும்தானே...


அதனால்தான் ஜாதகத்தை காரணம்காட்டி திருமணங்களை தள்ளி வைக்காதீர்கள் என்பதை அனுபவ எதார்த்தங்களோடு உடன்படுகிறேன் ...


ராசி பொருத்தம் பார்க்கப்பட்டு செய்து கொண்ட திருமணங்கள் எத்தனையோ முன்னுக்குப்பின் முரணாக முட்டிக்கொண்டு முழிபிதுங்கி நிற்பதை கண்ணார பார்க்க முடிகிறதல்லவா 


கணவன் மனைவி விசயங்களுக்குள் மூன்றாம் நபர் மூக்கை நுழைத்தாலே பிட்டுக்கொண்டு போய்விடுமென்பதுதான் உண்மையிலும் உண்மை...

பெற்றவர்களாயினும் இவர்களின் விசயங்களுக்குள் தலையிடக்கூடாது என்பதே என் நிலைப்பாடும்கூட...


இயற்கையின் நியதிப்படி அதிகப்படி ஒரு பத்து நாளில் சரியாகி விடும் அல்லது சரியாக்கி கொள்வார்கள்...


கணவன் மனைவி கருத்து வேறுபாடுகளுக்குள் பெற்றோர்களோ மற்றவர்களோ தலையிடும்பொழுது பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்து வேதனைப்படுத்தி விடுகிறது 


சில நேரங்களில் நியாயம் பேசியவர்கள் குற்றவாளிகள் ஆக்கப்பட்டு கணவன் மனைவி ராசியாகிப் போய்விடுவார்கள்...


துரதிர்ஷ்டவசமாக வசமாக மற்றவர்களே இவர்களின் பிரிவுகளுக்கு காரணகர்த்தா ஆகிவிடுகிறார்கள்...


ஆக இவர்கள் தங்களை தாங்கலே நிரபராதி ஆக்கிக்கொள்வதற்காக ஜாதகத்தை கையிலெடுத்து சாதகமாக பிரச்சனைகளை தீர்ப்பதற்கு விருப்பமின்றி அதன்மேல் பழிபோட்டு விலகிக்கொள்ள விருப்பம் கொள்கிறார்கள்


ஜாதகம் பார்த்தோம் பையன் ராசி நேரம் சரியில்லை பிள்ளை பிறந்த நேரம் சரியில்லே னு வேக்கானம் பேசுறாங்க


நான் தெரியாமத்தேன் கேட்கிறேன்

மத்ததெல்லாம் முன்கூட்டியே சொல்லத் திறமை இருக்கிற 

எந்த ஜாதகக்காரனாவது உங்க பிள்ளைக்கு இந்த புள்ளதான் பிறக்கும்  இந்த நாளில்தா பிறக்கும் இந்த நட்சத்திரத்தில்தான் பிறக்கும் னு சொல்ல சொல்லுங்க பார்ப்போம்

சொல்லிட்டார்னா அவரு ஜாதகக்காரரு 


அந்த ஆளு பொழப்பே அல்லோலங்கடி  போடுதாம் 

ஜாதகக்காரன் சொன்னான் ஜோசியக்காரன் சொன்னானு பய பிள்ளைகளை பயமுறுத்தாதீங்க 


அவங்கவங்க வசதி வாய்ப்புக்கு ஏற்றவாறு ரெண்டு குடும்பமும் ஒத்துப்போனா... பையனுக்கும் பொண்ணுக்கும் பிடிச்சுப்போனா காலா காலத்திலே கல்யாணத்தை பண்ணி வெச்சு பேரப் பிள்ளைகளை கொஞ்சறதுக்கு பாருங்க



நான் கேட்டு தாய் தந்தை படைத்தாரா  (இல்லை)

என் பிள்ளை எனைக் கேட்டு பிறந்தானா...?


உண்மையான சத்தியவாக்கு எனில்


உங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வும் கடவுள் கையில்தானே ... ஆம் நம்புங்கள் கடவுளை அல்லது பித்ருக்களை அல்லது குல தெய்வங்களை...


ஜாதகம்  என்பது நமக்கு சாதகமா இருந்தாதான் ஜாதகம்...  இல்லாட்டி பாதகம் நமக்குத்தா.... நம்ம பிள்ளைகளுக்குதான்...


🙏🏼🙏🏼🙏🏼

நான் கேட்டு தாய் தந்தை படைத்தாரா  (இல்லை)

என் பிள்ளை எனைக் கேட்டு பிறந்தானா...?


உண்மையான சத்தியவாக்கு எனில்


உங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வும் கடவுள் கையில்தானே ... ஆம் நம்புங்கள் கடவுளை அல்லது பித்ருக்களை அல்லது குல தெய்வங்களை...


ஜாதகம்  என்பது நமக்கு சாதகமா இருந்தாதான் ஜாதகம்...  இல்லாட்டி பாதகம் நமக்குத்தா.... நம்ம பிள்ளைகளுக்குதான்...


🙏🏼🙏🏼🙏🏼


அன்புத் தம்பி ராஜேஷ் கண்ணன் (வழக்கறிஞர் ) அவர்களின் கருத்துப்பதிவை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்...


நாம  கோவில்லே போய் தாலி கட்டினாலே குத்தம் வாங்குறவங்க ...

அது எப்பேர்பட்ட கோவில் சாமியா இருந்தாலும் ...


இங்கென்னடான்னா 

ஜாதகம் ஜாதகம் னு

சாக்குபோக்கு காமிச்சுகிட்டு அரை கிளவிக ஆகாம கல்யாணம் செஞ்சு தரமாட்டேன் னு போஸ்டர் போட்டுட்டு இருக்காங்க னு கவலைப்படறேன் தம்பி...


🤝🤝🤝🙏🏼🙏🏼🙏🏼

இதுலே மாப்பிள்ளை வீட்டு கூத்து அதுக்கு மேல...


பையன் படிச்சிருக்கானாம் 

பைனான்ஸ் கம்பெனில வேலை பார்க்காராம் 

பெங்களூர் ஆந்திர பம்பாய் னு லைன் போட்டிருக்கானாம் 

I T field லே லட்சத்தில் சம்பளம் வாங்கறாராம் 


படிச்ச பொண்ணா, கொஞ்சம் வசதியா, அண்ணன் தம்பி இருந்தா பரவால்லயாம்,  அக்கா தங்கச்சி இல்லாம இருக்கனுமாம் ஒத்த பொம்பள புள்ளையா வேணூமாம்  வேணுமாம் னு தேடி தேடி பொண்ணு பார்க்க இவரு பார்த்த பொண்ணுக எல்லாம் கல்யாணமாகி ... புள்ள குட்டியோடு வர ...

(இவருக்கு எங்கெல்லாம் போய் பொண்ணு கேட்டாகளோ...அந்தந்த பொண்ணுகளுக்கு அடுத்தடுத்து கல்யாணம்)

 இவருக்கு இன்னும் பொண்ணு தேடிட்டே இருக்காகளாம்பா 

வருசம் ஏழாகுது 

(திருநள்ளாறு திருமணஞ்சேரி, திரு நாகேஸ்வரம், கீழப் பெரும்பள்ளம் னு சுத்தி சுத்தி காலெல்லாம் வலிக்க)

இவக ஜாதகக்காரருக்கே இன்னும் என்னென்ன கோவிலிருக்கு னு இன் ஸ்டா வாட் சப்பு பேசு புக்கு னு பஞ்சாங்கத்தை தாண்டி தேடுறாராம்)

உருப்படியா தேடினபாட்டைக் காணோம்...

அடிக்கடி சேவ் பண்ண வேண்டி இருக்கு

வெள்ளை முடிக்கும்

கல்யாணத்துக்கும்.....


இந்த பாவ கணக்கு எங்கே தொடங்குச்சு தெரியுமா...? பொண்ணு வீட்டுக்காரன் பெருசா செய்ய மாட்டான்,  அவங்க நமக்கு ஈக்கிவளா இல்லே, நிறம் கம்மியா இருக்கு, அப்பன்காரன் ஆயிரத்தெட்டு ரூல்ஸ் பேசுறான், அம்மாக்காரிக்கு இஷ்டம் இல்லபோல தெரியுது னு நீங்களா கற்பனை பண்ணிட்டு வேண்டாம் பார்த்துக்கலாம் னு வந்தீங்கல்லே அங்கன தொடங்குச்சு...


கூட்டி கழிச்சு பாருங்க

கணக்கு சரியா வரும்


நல்ல பதிலை சொல்லி விடுறோம்னு வந்தீங்கல்லே 


அதுதா தொரத்துது னு சொல்லத்தோனுது


உங்கிரகம் சரியில்லே இல்லே


உஞ்சாதகக்காரன் சரியில்லே தெரிஞ்சுக்கோ

உனக்கு சுய புத்தியில்லே 


சொல்றவன் 2000 சொல்வான்

செலவழிச்சிட்டே இரு


கட்டம் சரியில்லே

விட்டம் சரியில்லேனுட்டு


😁😁😁

தாங்கள் கருத்து 100 % உண்மையே.....

காந்தவர்வ திருமணம் செய்தால் எவ்வளவு பெரிய தோஷமும் போகும்.....

மேலே உருமி முழங்க பச்சை பந்தலில் ஆண் தாலி எடுத்து கொடுத்து பெண்கள் மணமகளுக்கு தாலி கட்டினாலும் அந்த திருமணம் சிறப்பாக வாழும் என்பதே உண்மை.....

இதற்கு ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்யலாம் என்பதே உண்மை..


திருமண பதிவுகள் கலந்துரையாடல் அருமை ..வாழ்த்துக்கள் ..வாழ்க வளமுடன் ..நன்றிகள் ..





KVE வாட்சப் குழுவின் பயன்கள்...

 KVE வாட்சப் குழுவின் பயன்கள்...


முகமறியா எத்தனையோ சொந்தங்களோடு 

எனை இணைத்து விட்டிருக்கிறது.

இதனுள் பயணிப்பவர்

அனைவரும் ரத்த உறவுகள்


அவர் என்னை அறியார் 

நான் அவரை அறியேன்

ஆனாலும் அவருக்காக 

நான் துடிக்கிறேன் 

எனக்காக அவர் துடிக்கிறார்

எப்படி வந்தது இந்த

ரத்த சொந்தம்

எவர் சொல்லி தந்தது

இந்த உணர்வு பந்தம்


இவர்களோடு நானும்

கருத்து 

போரிட்டிருக்கிறேன்

பூஜை அறைக்குள்

நுழைந்த குழந்தையை

செல்லமாய் தூக்கி

வெளியில் விடுகிற

பாவனையாய்

கடந்து செல்கிறார்களே 

எப்படி

சொல்லித்தர

நேரமில்லாமல் இல்லை;

சொல்லி ஒன்னும்

ஆகப்போறதில்லை

என்கிற

அனுபவ காயங்கள் போலும்...!


பக்குவங்கள் என்பது

இதுவென காட்டி

அமைதி காக்கிறார்களே

எவ்விதம்...?


இந்த காதுலே வாங்கி

அந்த காதுலே விடாம

தனக்குரிய புரிதல்களை

மெனக்கெட்டு எழுதுகிறார்களே 

எவ்வளவு பெரிய மனது

வேண்டும் அவர்களுக்கு...

மதித்தல் எவ்வளவு

மகத்துவம் வாய்ந்தது


இந்த குழுவிற்குள்

இழுத்து வரப்பட்டு

இணைக்கப்பட்ட

எண்ணற்ற கம்பளப் பற்றாளர்கள் அனைவருமே

முகநூல் பக்கங்களிலும்

வாட்சப் தளங்களிலும்

கம்பள சமுதாயத்தின் 

வளர்ச்சியைப்பற்றிய 

சிந்தனைகளை பகிர்ந்து கொண்டவர்கள் என்பதை

தெரிந்து கொள்ள முடிந்தது




இந்த குழுவில்

உள்ளவர்களில்

சென்னையில்

என்ன உதவி 

வேண்டுமானாலும்

செய்வதற்கு சிலர்

காத்துக் கொண்டிருக்கிறார்கள் 

தங்க வேல்களும்

செந்தில் வேல்களுமாக

சொந்தங்களே



கம்பளத்தானுக்கே உரிய

கர்ண கவசங்களோடு

உறவு வட்டம்

இதிலிருந்து ஒரு பங்கு 

துவங்கப்பட்டதுதான்

எனில் மிகையாகாது


பெரியாரு bearerகளுக்கும்

War Roomகாரங்களுக்கும்

யாரும் பிரச்சினை 

தீர்க்க முடியாத 

குழுவும் இதுதா....

குழு வரைமுறையும் 

அதே அதே அதே...


கம்பளத்து பெரியோர்கள்

அதாவது

அமைப்பு தலைவர்கள்

அனைத்து சங்கத்தினரும்

இணைந்திருப்பதும்

இங்கேதான்

இதுவும் மௌசுதான் போங்க 


உடுமலையை

மையப்படுத்தியே

உடும்புபிடியா 

இடுகிற பதிவுகள்

இங்கேதான்

அதிகம்


இந்த குழுவின் கேப்டன் சிவா பாவா

இரை தேடும் 

பறவை போல

பல்வேறு வகையான விசயங்களின்

பதிவுகள்...

பசியுள்ள பறவைகள்

பகிர்ந்து கொள்ளலாம்

வகை வகையாக

வரலாற்று ஆய்வுகள்,தரவுகள், களப்பணிகள் , கம்பள வரலாற்று கல்வெட்டு சான்றுகள் னு சொல்லிக் கொண்டே போகலாம்


நூலக வட்ட பதிவுகள்

மறந்து போயின போலும்


திருமதி Airtel  வரலட்சுமி அவர்களும் Entreprenuer பவித்ரா வேலுமணி அவர்களும் கம்பளத்து பெண்மணிகள் கண்மணிகள் என கலந்திருப்பதும் இந்த குழுதான்...


ஆகவே சொந்தங்களே

அரசியலுக்கு அப்பாற்பட்டு....


உறவுகளை மேம்படுத்தும் விதமான பதிவுகளை பதிந்து ஒற்றுமைக்கு வழிகாட்டியாக செயல்பட்டிட இக்குழுவை வேண்டிக் கொண்டு பாராட்டுதலை நிறைவு செய்கிறேன்.


🤝🤝🤝🙏🏼🙏🏼🙏🏼K N நாகராஜ் கரூர் 🤝🥰📡🎙️🤝🌈🍫💦

கார்த்தி SR என்று செல்லமாக அழைக்கும் கார்த்திக்குமார் .

 கார்த்தி SR என்று செல்லமாக அழைக்கும் கார்த்திக்குமார் .. (கார்த்தி SR - 9787923028)⛱👍..க்கு  என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...(உடுமலைப்பேட்டை )

வரலாறு .தொழில் .அரசியல் ..கவிஞர் .பேச்சாளர் ...எந்த துறையாக இருந்தாலும் பன்முக தன்மை கொண்டவர் ..❤T .கார்த்திக்குமார் ...🌱🎂.பன்முகத்தன்மை (கார்த்தி SR - 9787923028)⛱👍
















படித்தது மின்னணுவியல் ...SM HIGH TECH SOLUTION அவர் நடத்தும் மின்னணுவியல் தொழில் துறையில் கடுமையான உழைப்பாளி ...வருங்கால வளரும் பன்முக எழுத்தாளர் ,கவிதையாளன் ...தமிழ்நாடு முழுவதும் இருக்கும் கம்பள தொழில்முனைவோர்களை ஒன்றிணைத்து செயல்படுபவர் .

எந்த சூழ்நிலையிலும் விவசாயத்தை மறவாத மண்ணின் மைந்தன் ..

இந்த சிறு வயதில் வரலாற்று தகவல்களை தேடி ...தேடி ...படிக்கும் ஆர்வம்....

எந்த ஒரு சிறு செய்தியை சொன்னவுடன் ஆழந்த சிந்தனையுடன் அதை அப்படியே கண்முன்னே நிறுத்தும் திறமை ..

 எந்த ஒரு பணியாக இருந்தாலும் வேகம் ..வேகம் ..கொஞ்சம் அதிகம் ...ஏன் என்றால் இப்போது இருக்கும் காலகட்டம் அப்படி ...இந்த வளர்ச்சி கூட வேகத்தால் வந்தததாக கூட இருக்கலாம் ...கம்பள சமுதாயம் என்பதால் ..பாளையக்காரர்கள் அரசாண்ட பூமி இது ...ஆட்சி முறை முறையும் கூட ..சமுதாய நலன் சாராமல் ...பொதுநலம் சார்ந்து பணிபுரிவதால் இந்த வேகம் வேண்டும் என்பது சரியான திசை என்று சொல்லுவேன் ...மாப்பிள்ளை ஒரு பணியை எடுத்தால் அதை திறம்பட நிறைவேற்றி கொண்டுவருவது மிக சிறப்பு .. சமுதாய பற்று அதிகம் ...கம்பள விருட்சம் அறக்கட்டளையின் பொறுப்புமிக்க ஒருங்கிணைப்பாளர் (விருட்சம் )..அறக்கட்டளைக்கு தேவையான அனைத்து ஆதாரத்தை பெருக்குவது எப்படி என்று மாப்பிள்ளையிடம் தெரிந்து கொண்டேன் ..மாப்பிளை இந்த பணி செவ்வனே நிதிப்பற்றாக்குறை காலத்தில் நிதி ஆதாரத்தை பெருக்கி ..மாத ,வருட சந்தாவை ,நிறைவேற்று கொண்டு வருவதற்கும் குழுவிற்கு தேவையான புதிய தொழில் முனைவோர் ,தற்பொழுது யார் யார் வியாபாரம் ,எந்ததெந்த துறையில் நம் பணியில் இருப்பவர்களை சொந்தங்களை கண்டறிந்து ஒருங்கிணைப்பு செய்து அறக்கட்டளையை நிர்வகிப்பவர்

கம்பளவிருட்சத்தின் அறக்கட்டளையின் களப்பணியாளனாக,ஒருங்கிணைப்பாளராக உடுமலைப்பேட்டை K .வல்லகொண்டாபுரம் தன் திறமைகளை எந்தஒரு செயலிலும் தனித்தன்மையுடன் வெளிகொண்டுவருபவர் ... பொதுத்தளத்தில் நல்ல சமூக சேவையாளனாக , தன் பெற்றோர்களின் செல்ல பிள்ளையாக .... கம்பளத்து சொந்தங்களின் "அன்பு" செல்லப்பிள்ளையாக நம் சமுதாயசொந்தங்களின் முகம் அறிந்த நண்பனாக இருப்பவர் ...நண்பர்களின் வட்டத்தில் எப்போதும் கலகலப்பாக சுற்றியிருக்கும் இடம் எல்லாம் புன்னகை சிதறும் முத்துக்களாக .. என் அருமை மாப்பிளைக்கு கம்பள விருட்சக் குழுமம் சார்பாக 🌷🌷🎂🎂என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎂🎂🌾🌾... என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681👍⛱⛱

செவ்வாய், 16 ஜூலை, 2024

கும்மல் நாயக்கர்......

கும்மல் நாயக்கர்......

கும்மல் நாயக்கர் என்பது அந்தக்காலத்தில் நமது சமுதாய மக்கள் தொட்டாவுலு,கும்ப்பலாவுலு என்று குறிப்பிடும் கூட்டமாக இருக்கும் நிலையினைத்தெரியப்படுத்தியிருக்கிறார்கள் என்று ஆன்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

கும்ப்பல் என்பதே காலப்போக்கில் மருவி கும்மல் என்று வழக்கமொழியாகிவிட்டது.

இனி இதன் வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.


மார்கழி 15ம் ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் நமது சமுதாய பாரம்பரிய கலையான தேவராட்டம், மரித்தல் போன்ற சிறப்புமிகு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுள் ஆரம்பமாகும் காலம் இது.

இந்த தினத்தில் நமது மக்களால் பாரம்பரியமாக நிகழ்த்தப்படும் சலகெருது மரித்தலுக்காக அவரவர் ஊர்களில் வளர்க்கப்படும்/மலைகளில் வளர்க்கப்படும் கிருஷ்ணபரமாத்வுக்கு நேர்ந்துவிட்ட சலகெருது மாடுகளை மரித்தல் என்பது நமது சமுதாய மக்கள் முன்னிலையில் நமது சமுதாய மக்களால் பாரம்பரியமாக நிகழ்த்தப்படும் நிகழ்வு.

இது மார்கழி மாதம் 15ம்தேதிமுதல் ஆரம்பமாகும்.

சலகெருது மரித்தல் ஆரம்ப தினம் கும்மல்நாயக்கர்,பூசாரி நாயக்கர்,கம்பிளி நாயக்கர்,குங்க்கால் பெத்தா மற்றும் பல பட்டையக்காரர்களின் முன்னிலையில்  சலகெருது மாடுகளை மன்னத்தில் நிறுத்தி சலகெருது மரிக்கும் தடிகள்,பூஜை பொருட்கள்,அண்டை,கருங்கம்பளி,சலங்கைகள் வைத்து தேவதுந்துமி வாத்திய இசையுடன் பூசாரி நாயக்கர் அவர்களால் பூஜைகள் செய்து விபூதியிட்டபின் ஆரம்பமாகிறதுசலகெருது மரித்தல்.

இது அடுத்து வரும் தைப்பொங்கல் அன்று வரை நிகழ்த்தப்படுகிறது.

காணும்பொங்கலன்று சலகெருதுமாடுகளைக்குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, அலங்காரம் செய்து விநாயகர் கோயில் அல்லது குலதெய்வகோயிலில் கொண்டு வந்து நிறுத்தப்படுகிறது.பின்னர் கும்மல்நாயக்கர் அவர்கள் கருங்கம்பளிகொண்டுமுகத்தை மூடிக்கொண்டு,தடி ,அண்டையுடன் அவருக்கு கொடுத்த "மந்திரவாக்கு"  ஓதப்பட்டு அண்டையில் நீருடன் ரகசிய மூலிகைகள் கலந்து மந்திரம் ஜெபித்து பூஜை செய்து கோயிலுக்கு தேவதுந்துமி வாத்தியங்களுடன் அழைத்துவந்து மூன்றுமுறை கோயிலை வலம்வந்து கோயிலில் பூஜைகள் செய்து (சலகெருது மாடுகளுக்கும் பொதுமக்களுக்கும் சேர்த்து) பின்னர் மந்திரிக்கப்பட்ட அண்டையுடன் (மூங்கில் குழாய்) வந்து ரகசிய மந்திரங்கள் ஓத (கட்டுமந்திரித்தல்) தடிகளை நேராக நிறுத்தி மக்கள் அனைவரையும் ஒருமுகப்படுத்தி தேவதுந்துமிவாத்திய இசையுடன் மந்திரிக்கப்பட்ட நீரினை சலகெருது மாடுகள் மற்றும் பொதுமக்களின்மீது தெளித்து பின்னர் சாமி கும்பிட்டபின்னர் சலகெருதுமாடுகள் ஆல்கொண்டமால் திருக்கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கும் சலகெருது மாடுகளுக்கு பூஜைகள் செய்து தீர்த்தம்விட்டு விபூதியிடப்படுகிறது.

மீண்டும் ஊருக்குள் அழைத்து வந்து கட்டுமுறித்தல் நிகழ்த்தப்பட்டு பின்  கும்மல்பொங்கல் எனும் பொதுப்பொங்கலிட்டு படையல் செய்து சலகெருது சாலிபாடல்கள்பாடி சலகெருது மாடுகள் பால் பழம் பொங்கல் எடுக்கும் நிகழ்வு நடைபெறும்.பின்னர் பூஜைகள் செய்து விபூதியிட்டபின் பொங்கல் வழங்கும் நிகழ்வு நடைபெறும்.

இதனுடன் நிகழ்வுகள் முற்றுப் பெறுகிறது.

இதுவே காலம்காலமாக ஆன்றோர்கள் காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளது.


இது எனது (தாத்தா,அப்பா, நான்) மூன்றாவது தலைமுறை தொடர்கிறது.


நன்றி வணக்கம்

ம.ப.ராஜேந்திரன்

கும்மல்நாயக்கர்

பொட்டையம்பாளையம்.

உடுமலை வட்டம்.🥰🥰📚📚✍️✍️✍️✍️

குறிப்பு : மிகுந்த கட்டுப்பாடுகளை கொண்ட பட்டையதாரர் கொண்டது.

மது அருந்துதல் கூடாது.பெண்கள் விசயத்தில் தேவையில்லாத செயல்கள் புரிதல்கூடாது.தீட்டு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் உணவு, நீர் பருககூடாது.

அடுத்தவருக்கு தீங்குநினைத்தல்கூடாது.கும்மல்நாயக்கர் சலகெருது மாடுகளுக்கு கட்டு மந்திரிக்காமல் சலகெருது மாடு கோயிலுக்கு அழைத்துச் செல்லமாட்டார்கள்.

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

 கேள்வி :  பயிர்க் காப்பீடு என்றால் என்ன? பயிர்க் காப்பீடு எங்கு எப்படிச் செய்வது?



என் பதில் : 


பயிர்க் காப்பீடு


நெல், கடலை போன்ற ஆண்டு பயிர்களை (Annual Crops) திடீர் மழை, வெள்ளம் அல்லது வறட்சியினால் சாகுபடி செய்ய முடியாமல் போகலாம். அப்படி பருவநிலை மாற்றம் அல்லது இயற்கை சீற்றத்தால் மகசூல் இழக்க நேரிடும்போது அல்லது முதலீட்டில் நஷ்டம் ஏற்படும் போது அதை ஈடுகட்ட அரசு உதவியுடன் வழங்கப்படுவது தான் பயிர்க் காப்பீடு தொகை.


தனி ஒரு விவசாயியின் இழப்புக்குப் பயிர்க் காப்பீடு வழங்கப்படுவதில்லை. ஒரு பகுதியில் பருவநிலை மாற்றம் அல்லது இயற்கை சீற்றத்தால் இழப்பு ஏற்பட்டு, அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி பயிர்க் காப்பீடு திட்டத்தில் இணைந்திருந்தால் மட்டுமே அவருக்குக் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

 

பயிர்க் காப்பீட்டிற்கென திட்டங்கள் பல உள்ளன. எந்தெந்த திட்டங்கள் எந்தெந்த பயிர்களுக்குக் காப்பீடு வழங்குகிறது என்பன போன்ற திட்டம் சார்ந்த விபரங்களை அந்தந்த பகுதியைச் சேர்ந்த விவசாயத் துறை அலுவலகத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அங்குக் கொடுக்கப்படும் காப்பீடு திட்டத்திற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து இதற்கென்று அங்கீகரிக்கப்பட்ட கூட்டுறவு வங்கி அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும். கூடவே அதற்கான பிரீமியம் தொகையையும் கட்ட வேண்டும். காப்பீடு திட்டத்தில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களையும் ஒப்படைக்க வேண்டும். 


பிரீமியம் தொகையானது, நிலத்தின் பரப்பளவு மற்றும் அங்கு விதைக்கப்பட்டிருக்கும் பயிர் வகையைக் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. காப்பீட்டுத் திட்டத்தைப் பொருத்து பிரீமியம் தொகையும் மாறுபடும். மத்திய மாநில அரசுகள் பிரீமியம் தொகைக்கு மானியமும் வழங்கும். காப்பீட்டுத் திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் அந்தத் திட்டத்தில் எப்போது இணைய வேண்டும் என்ற விபரங்களை அறிந்துகொண்டு, கொடுக்கப்பட்ட தேதிக்குள் தவறாமல் விண்ணப்பிக்க வேண்டும்.

 

பயிர்க் காப்பீடு குறித்த மேலும் தகவல்களுக்கு அதற்குரிய தமிழக அரசின் இணையதளத்தை அணுகலாம்.


பாதிப்பு ஏற்பட்ட பகுதிக்கு வேளான் துறை, வருவாய்த் துறை மற்றும் புள்ளியியல் துறை அதிகாரிகள் சென்று அறுவடை செய்து மகசூல் இழப்பைக் கணக்கெடுப்பார்கள். இழப்பைப் பொருத்து காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். மகசூலே இல்லாத நிலைக்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்குத் தகுந்த அளவு காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.


 நடவு செய்து இயற்கை பேரிடர்களால் பயிர் செய்ய முடியாமல் போனாலோ அல்லது அறுவடை செய்த தானியங்கள், பயறு போன்றவற்றை உலர்த்த வைத்திருக்கும் பொழுது மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலோ அதற்கும் தக்க காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இவை காப்பீடு திட்டங்களைப் பொருத்து மாறுபடும்.

 

ஒரு விவசாயி பயிர்க் காப்பீடு திட்டத்தில் இணைந்திருந்து, அவர் இருக்கும் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் மட்டுமே அவருக்குக் காப்பீடு தொகை கிடைக்கும். மொத்த பகுதியில் பாதிப்பு ஏற்படாமல், ஒரு தனி விவசாயிக்கு மட்டும் மகசூலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அவர் காப்பீடு திட்டத்தில் இணைந்திருந்தாலும் காப்பீட்டுத் தொகையைப் பெற முடியாது. பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் விவசாயி இருந்து, காப்பீடு திட்டத்தில் இணையாமல் இருந்தாலும் காப்பீட்டுத் தொகை கிடைக்காது.”



உடுமலைப்பேட்டை -பில்லவநாயக்கன் சாலையூர் சொந்தம் குடும்ப விழா







 உடுமலைப்பேட்டை -பில்லவநாயக்கன் சாலையூர் சொந்தம் குடும்ப விழா 


இன்று காலை சதாசிவம் -கவிதா அவர்களின் புதல்வி SK  தனிஷ்கா பூப்பு நன்னீராட்டு விழா ..கரட்டுமடத்தில் மிக எளிமையாக குடும்ப சொந்தங்கள் சூழ நடைபெற்றது ..


இன்று விழாவிற்கு சென்றவுடன் முதலில் நம்ம கம்பள வரலாறு கார்த்தி SR யை தேடினேன் 

மாப்பிளை வந்தவுடன் ..அடுத்து எட்டயபுரம் ஜமீன் உசிலம்பட்டி அருமை தம்பி

கார்த்தி ஸ்மார்ட் தம்பியை தொலைபேசி வலைபோட்டு  வரவழைத்தேன் .ரெண்டு பேரும் சிங்கிளாக இருந்த பொழுது வீரம் ..குடும்ப பொறுப்புகள் வந்தவுடன் அவர்களின் நடை ..உடை ..பாவனை எல்லாம் மாறிவிட்டது ...குணம் மட்டும் மாறாமல் பேசிப்பின்பு மனா நிறைவாக இருந்தது ..


அருமை மாமா சாமிகுணம் அவர்களை சந்தித்து கடந்தவாரம் தின்னப்பட்டி குலதெய்வ கோவில் வரலாறை பதிவிட்டு இருந்தார் .மேற்படிப்பு படித்து அரசு பணியில் இருப்பவர்கள் யாரும் .படித்து ,வேலைவாய்ப்பு பெற்றவுடன் ..வளர்ந்தவுடன்  தங்களின் வளர்ந்த வரலாறுகளை மறந்துவிடும் தற்காலங்களில் மறந்து விடுகின்றனர் ..எந்த உயர்ந்த நிலைக்கு சென்றாலும் ..சாமிகுணம் மாமா அவர்கள் பாரம்பரியம் .பண்பாடு மாறாமல் குலதெய்வகோவிலின் வரலாறை மறக்காமல் பதிவிட்டதற்கு அதற்கு அவருக்கு நன்றி தெரிவித்தேன் .


காலைநேர உணவு அருமையான சேமியா,பொங்கல் ,கோதுமை ரவை தயிருடன் உடலுக்கு ஏற்ற சத்தான உணவை முடித்துவிட்டு வந்து அமர்ந்த போது ..அருமை தம்பி பொள்ளாச்சி -கொல்லப்பட்டி  தனியார் வங்கியில் பணிபுரியும் அருள் மற்றும் என் கொழுந்திய சாந்தி செந்தில்குமார் -ம் சந்தித்து பேசியது மிகுந்த மகிழ்ச்சி . அருள் தம்பியிடம் தற்பொழுது இருக்கும் சிறு -பெரு கனரக வாகனங்கள் வியாபாரம் நிலவரம் எப்படி உள்ளது கேட்டு அறிந்துகொண்டேன் .


முக்கியமாக வரலாறு புகைப்படம் எடுக்கவில்லைஎன்றால் எப்படி ..மகளுக்கு ஆசிர்வாதத்தை வழங்கிவிட்டு புகைப்படம் எடுத்து கொண்டது மிக்க மகிழ்ச்சி .


உடுமலைப்பேட்டையை தலைமையிடமாக பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் தம்பி எரிசனம்பட்டி முருகவேல் (நாமக்கல் ) தம்பியை சந்தித்து தற்பொழுது நாமக்கல் அருகில் கோழித்தீவனம் ஆராய்ச்சி மையம் பணி அங்கு நடைபெற்று வருவது ,அதற்கான பணிகளில் நடைபெற்று கொண்டுவருவது தகவலை அறிந்துகொண்டேன் .தற்பொழுது நடைபெற்ற கீர்த்திவீரர் எத்தலப்பர்  கடந்த எட்டு ஆண்டுகள் அதற்கான பணிகள் தற்பொழுது முடிய எப்படி நடந்தது என்று விலாவாரியாக நடந்ததை கூறும்பொழுது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது .காலங்கள் மாறினானாலும் வரலாறுகள் மாறுவதில்லை என்பதை தெரிந்துகொண்டேன் .


தமிழ்நாட்டு ஹாக்கி ஜூனியர் பிரிவில் விளையாடும் சுபாஷ் தம்பியுடன் தற்பொழுது கடைசியாக கலந்துகொண்ட ஹாக்கி விளையாட்டு போட்டியை கேட்டு அறிந்துகொண்டேன் .தம்பி உடுமலையில் முதலாம் ஆண்டு கல்லூரியில் படித்து கொண்டு தமிழ்நாட்டுக்காக விளையாடி கொண்டுள்ளார் .


நாடாகும் நிகழ்வுகளை சுற்றி பார்த்துக்கொண்டு இருந்தேன் ..பில்லவநாயக்கன் சாலையூரில் என் அப்பாவுடன் செல்லும் போது குடும்ப விழாக்கள் நடைபெறும் போது குறைந்தளவு சொந்தங்களே வருவார்கள்  எனக்கு சிறு வயது நினைவு ..தற்பொழுது ஒரு தலைமுறை வளர்ந்தவுடன் மேடையில் குழு புகைப்படம் எடுக்கும் பொழுது மிக பிரமிப்புஆக  இருந்தது குடும்ப உறவுகள் சிறு கிளைகளாக இருந்த என்று ஆலமரம் போன்று தங்களின் விழுதுகளை பரப்பி இருந்தது எனக்கு மனநிறைவு .

இன்று பொதுவேலைமுடக்கம் இருந்தாலும் குறைந்த அளவு சொந்தங்கள் மனா நிறைவாக வந்து பேசி குடும்ப உறவைகளை வளர்த்துக்கொண்டது தற்பொழுது இருக்கும் கடினமான வேலை பளு ,மன இறுக்கம் சற்று குறைந்து சொந்தங்களுடன் விடைபெற்று வந்தது அருமை.


நன்றி என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

9944066681.












புதன், 19 ஜனவரி, 2022

 

கேள்வி :  பங்குச் சந்தையில் ,பரஸ்பர நிதியில் ,முதலீடு செய்வது உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றியது?



என் பதில் :



7 வருடமாக முதலீடு செய்கிறேன். முன்பு என் சேமிப்பு்நிலம் வீடு இவற்றில் இருந்த போது என் தேவைக்கு பணம் வேண்டியிருக்கும் போது வங்கியில்/தனியாரிடம் கடன் வாங்கி சமாளிப்பேன். 



இப்போது அந்நிலை இல்லை. மற்றும் என் பணம் பன் மடங்கு வளர்ந்ததால் என் ஓய்வு காலம் பற்றிய கவலை இல்லை.


நன்றி ..


சிவக்குமார்  V .K 

Sivakumar.V.K
Home Loan Consultant
(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

CAR LOANS,MUTUAL FUND,FIXED DEPOSIT,HOME LOANS,INSURENCE


ஞாயிறு, 16 ஜனவரி, 2022

பைண்டிங் பிரஸ் அனுபவம் (1972 பள்ளி விடுமுறை)


கும்பகோணம் நினைவுகளில் முக்கியமான இடத்தைப் பெறுவது பள்ளிவிடுமுறையின்போது நான் பார்த்த பைண்டிங் பிரஸ் வேலை. அந்த அனுபவத்தைக் காண 50 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வோம்.


1972. கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று விடுமுறையில் இருந்தபோது என் தாத்தா (திரு ரெத்தினசாமி) என்னை பெரிய கடை வீதியின் அருகில் உள்ள பாபுநாயக்கன் தெருவில் உள்ள, அவருடைய நண்பரின் கடையான கணேஷ் பைண்டிங் பிரஸுக்கு வேலைக்கு அனுப்பிவைத்தார். விடுமுறையை வீணாக்காமல் இருப்பதற்காகவும், நண்பர்களுடன் வெளியே சுற்றாமலிருக்கவும் இவ்வாறு செய்தார். காலை 10.00 மணி முதல் இரவு சுமார் 8.00 மணி வரை வேலை. மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்துவிடுவேன்.  


அங்கு தாள் வெட்டும் பொறி (கட்டிங் மெஷின்), கோடிடும் பொறி (ரூலிங் மெஷின்) உள்ளிட்டவை இருந்தன. அலுவலகங்களுக்கான கணக்குப்பதிவேடுகள் (அக்கவுண்ட் லெட்ஜர்ஸ்), கல்வி நிறுவனங்களுக்கான மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய நோட்டுகள் (பெரும்பாலும் சிறிய அளவிலான ஒரு குயர் நோட்டுகள்) போன்றவை தயாரிக்கப்பட்டு, நூற்கட்டு செய்யப்படும்.


தாத்தா சொல்லி நான் பிரஸில் வேலைக்குச் சேர்ந்தேன்.  அவர்களுக்கு தாத்தாமீது அளவு கடந்த மரியாதை. அதனடிப்படையில் எனக்கு வேலை இலகுவாக இருக்கும் என நான் நினைத்தேன். சேர்ந்து சில நாட்கள் எளிதான பணிகளே இருந்தன. 


பின்னர் ஒரு நாள் "தாத்தாவின் பெயரைக் காப்பாற்ற வேண்டும். கவனமாக வேலை பார்க்கவேண்டும்" என்று கூறி சிறு சிறு வேலைகளைக் கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால் அவை எனக்கு பெரிய வேலைகளாகத் தெரிந்தன.  வேலை பார்க்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுதல், தேநீர் வாங்குதல், பேப்பர் கடைக்குச் சென்று பேப்பரை வாங்கி வரல் போன்ற வேலைகள்.  தேநீர்க்கடையில் ஐந்து அல்லது ஆறு 'கிளாஸ்' தேநீரை  இரும்புக்கம்பியாலான 'ஸ்டான்ட்'டில் தருவார்கள். பிடியைப் பிடித்து அதனைத்  தூக்கிக்கொண்டு வரும்போது என்னவோ போல் இருக்கும். அனைவருக்கும் அதனைக் கொடுத்துவிட்டு, நானும் குடிப்பேன். அவர்கள் குடிக்கும்வரை நின்று, கிளாஸ்களை கடையில் திருப்பிக்கொடுப்பேன். என்னுடைய தினசரி வேலைகளில் ஒன்று. 


அடுத்த வேலை தாள் வெட்டல். தாள் வாங்க கரிக்காரத்தெருவில் (ஆஞ்சநேயர் கோயில் அருகில்) இருந்த ஒரு பேப்பர் கடைக்குச் செல்வேன்.பெரும்பாலும் ஒரு தடவைக்கு ஒரு ரீம் என்ற அளவில் வாங்கி அங்கிருந்து தலையில் பேப்பரைத் தூக்கிவைத்துக் கொண்டு வரவேண்டும். அவ்வாறு வரும்போது (எங்கள் ஆத்தாவின் தம்பி திரு பெரியசாமி அவர்களின்) ஷண்முக விலாஸ் மளிகைக்கடை, ஷண்முக விலாஸ் காப்பித்தூள் கடைகளைக் கடந்துவரும் சூழல் ஏற்படும். அக்கடைகளைக் கடக்கும்போது யாரும் பார்க்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக வேகமாக விடுவிடுவென நடப்பேன். இவ்வகையான வேலைகளைச் செய்யும்போது நான் ஒரு வேலைக்காரனைப் போல உணர்ந்தேன். அவ்வப்போது அவமான உணர்வு மேலிடும்.


நாளடைவில் தாள் வெட்ட உதவுதல், வெட்டும்போது வருகின்ற ஜல்லி எனப்படுகின்ற உதிரித்தாள்களை ஒதுக்கி ஓரிடத்தில் கொட்டுதல், ரூலீங் மிஷினில் மை போடல், தாள் சரியாக வெளியே வருகிறதா எனப் பார்த்தல், தவறாகவோ முழுமையான பதிவின்றியோ வரும் தாளைத் தனியாக எடுத்துவிடல், ரூல் போட்ட தாளை மடித்தல், (நம்பர் மெஷினை வைத்து) எண்ணிடல், தைத்தல், பதிவேட்டின் அட்டைக்கு வண்ணத்தாள் ஒட்டுதல்,  மூலைக் காலிகோ அல்லது முழு காலிகோ அட்டைகளுக்கு உரிய அளவில் பசை தடவித் தரல், நூற்கட்டு வேலைகள், நோட்டின் முதுகிலும் பிற பக்கங்களிலும் வண்ணத்தில் தோய்த்த நூலைக்கொண்டு டிசைன் போடுதல் என பட்டியல் நீளும்.    


அடுத்து, பைண்டிங் தொடர்பான வேலைகளில்  உதவுதல் என்ற நிலையில் அமைந்தது.   கட்டிங் மிஷினில் பெரிய அளவு தாளினை அடுக்கிவைத்து, தேவையான அளவிற்கு வெட்டுவர். ஒருவர் கீழே நின்று தாளை அளவு பார்த்து வைத்து, கைப்பிடியைச் சுற்றுவார். மற்றொருவர் தாளின் அழுத்தம் உறுதியாக இருக்க மேலே நின்றுகொண்டு ஒருவர் உருண்டையாக இருக்கின்ற அழுத்தம் தருகின்ற பகுதி மூலமாக மேலே நின்று அழுத்துவார். அதனைச் சுற்றச்சுற்ற தாள் இறுக ஆரம்பிக்கும்.  பின்னர் வலதுபுறத்தில் இருக்கின்ற கைப்பிடியோடு கூடிய உருண்டை வடிவப் பகுதியைச் சுற்றினால் பிளேடு கீழே இறங்கி தாளை வெட்டும். அவ்வாறு சுற்றும்போது மிகவும் வேகமாகவும் கவனமாகவும் சுற்றவேண்டும். அப்போதுதான் பிளேடு இறங்கி  தாளை வெட்டிவிட்டு திரும்பி ஏற வசதியாக இருக்கும்.  மேலே நின்று சுற்றும் வேலையையும், சில சமயங்களில் கீழே நின்று சுற்றும் வேலையையும் நான் செய்துள்ளேன்.  பிளேடு நம் பக்கம் வந்து காலை வெட்டிவிடுமோ என்று ஏறி நிற்க பயந்தேன். கவனக்குறைவால் திட்டு வாங்கியுள்ளேன். கீழிருந்து கைப்பிடியைச் சுற்றும்போதும், மேலிருந்து அழுத்தும்போதும் சில சமயங்களில் நெஞ்சு வலிக்கும். பின்னர் பழகிப்போனது.  


ரூலிங் மிஷின் சற்றே வித்தியாசமானது. அது சற்றொப்ப தறிபோடுவதைப் போலக் காணப்படும். இப்போது இது அருகிவிட்டது. சிறிய வடிவிலான பெட்டி போன்ற அமைப்பில் வண்ண மையை ஊற்றுவர். அதனை அடுத்துள்ள வளைவு போன்ற அமைப்பின் மூலமாக மை வெளிவந்து தாளில் கோடாக விழும். ஒரே சமயத்தில் பல வண்ணங்களில் கோடிட முடியும். அவ்வாறு செய்யும்போது ஒரு முறை வட்ட வடிவ, மை வரும் இடத்தில் கையைவிட்டு விரலில் ரத்தம் வந்துவிட்டது. பின்னர் என்னை எச்சரித்து கவனமாக இருக்கும்படி கூறினர். அதனையும் கற்றுக்கொண்டேன். பள்ளி மாணவர்களுக்கான ஒரு குயர் கணக்கு நோட்டு, வியாச (கட்டுரை) நோட்டு, இரண்டு கோடு மற்றும் நான்கு கோடு காப்பி நோட்டு அனைத்தும் அங்கு கோடிடப்பட்டு நூற்கட்டு (பைண்டிங்)  செய்யப்படுவதைப் பார்த்துள்ளேன்.  


அங்கு வேலை பார்த்த காலத்தில்தான் முதன்முதலாக தாளை வீணாக்கக்கூடாது என்பதை உணர்ந்தேன். தாளைத் தட்டி அடுக்குதல், எண்ணுதல், குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்கங்களை ஒன்று சேர்த்தல்,  மடித்தல், தலைப்பு மாற்றி அடுக்குதல், மேலட்டை மற்றும் காலிகோவிற்காக (பசை தடவி) ஊறப்போடுதல் உள்ளிட்ட பல வேலைகளைக் கற்றுக்கொண்டேன். டீ வாங்கப்போவது, தாளைத் தலையில் தூக்கிகொண்டுவருவது, ஜல்லிகளை (வெட்டப்பட்ட தாள்களின் துண்டுகள்) விளக்குமாற்றால் கூட்டி ஒதுக்குவது போன்ற வேலைகளைச் செய்தேன். ஆரம்பத்தில் இவ்வேலைகளைச் செய்ய கௌரவம் பார்த்த நான் நாளடைவில் பார்க்கும் வேலையில்  கௌரவக்குறைவு இல்லை, நேர்மையும் ஈடுபாடும் முக்கியம் என்பதை உணர்ந்தேன். 


கிட்டத்தட்ட ஒரு மாதம் அங்கு பணியாற்றினேன். எவ்வித ஊதியமும் பெறவில்லை. ஆனால் பல வேலைகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றேன். 


திம்மி 1க்கு 8 அளவினைவிட சற்றுச் சிறிய அளவில் (கிட்டத்தட்ட சுருக்கெழுத்து நோட்டைப் போன்ற) ஒரு சிறிய நோட்டை நானே நூற்கட்டு செய்யும் அனுபவத்தைப் பெற்றேன். அதனைத் தயாரிக்க எனக்கு மூன்று நாள்களாயின. ஒவ்வொரு நாளும் மதியத்தில் அனைவரும் சாப்பிடச் சென்றபின் நானே யாருடைய துணையுமின்றி தாளை எடுத்து கட்டிங் மிஷினில் வெட்டி, அட்டையையும் உரிய அளவு வெட்டி வடிவமாக்கி பின்னர் தைத்து, முதுகுப்பகுதியில் காலிகோ ஒட்டி முன் அட்டையிலும், பின் அட்டையிலும் வண்ணத்தாளையும் ஒட்டி உருவாக்கினேன். என் பெருமையைக் கூறுவதாக நினைத்து ஒருவரிடம் அதனைக் காண்பிக்க, அவர் அதனை எடுத்து அனைவரிடமும் காட்டிவிட்டார். பின்னர் நான் "யாரும் இல்லாதபோது இவ்வாறாக தனியாகச் செய்யக்கூடாது" என்று எச்சரித்தனர். அதே சமயம் அவ்வாறாக நான் செய்ததை எண்ணி என்னைப் பாராட்டினர்.


அறிஞர் அண்ணா அரசினர் பள்ளியில் சேர்வதற்காக அனைவரிடமும் நன்றிகூறிக் கிளம்பியபோது அனைவரும் என் பணியைப் பாராட்டினர். நன்றாகப் படிக்கவேண்டும் என்று வாழ்த்தி அனுப்பினர். இவ்வகையில் என்னுடைய எட்டாம் வகுப்பின் விடுமுறை நாட்கள் கழிந்தன.


இப்போது பைண்டிங் பிரஸ், தாள் வாங்கச் சென்ற கடை, சண்முக விலாஸ் கடை, தேநீர்க்கடை எதுவுமே இல்லை....ஆனால் நினைவுகள் மட்டும் தொடர்கின்றன.


முனைவர் ஜம்புலிங்கம் ..


புகைப்படம் நன்றி: ஜான் செபஸ்டியன்...

வியாழன், 13 ஜனவரி, 2022



அம்மாவின் காலை நேர கோலங்கள் ...


பொங்கலோ பொங்கல்!!!!


மார்கழி பூ பறிப்பதிலும், கோல மாவு பொடிப்பதிலும் , விரைவாக சென்றது. பொங்கல் கொண்டாடும் , அழகையும், ஆர்வத்தையும் , கிராமங்களில் தான் , . முழுமையாகக் காண முடிந்தது!( இப்போது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. முழு நாளும் டிவி முன்னால்  தானா?)


 

வீட்டில், அம்மா இதற்கான , வெண்கலப் பானையை பரணிலிருந்து எடுப்பார்கள்.  பொங்கல் முடிந்ததும், அது மேலே போய் விடும். அம்மா எப்போதும் 2 வகைப் பொங்கல் செய்வார்கள். சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண் பொங்கல். பெரும்பாலான  வீடுகளில் , சர்க்கரைப் பொங்கல்  மட்டுமே செய்வர். அம்மாவிற்கு வெண்பொங்கல் பிடிக்கும். அதனால் செய்வார்கள் போலும். இரண்டு பொங்கலுமே , ருசியில் போட்டி போடும். நெய்யும், முந்திரியும் தாரளமாக இருக்கும். 3 வேளையும் , சாப்பிட்டு, பானை காலி ஆகும்! தமிழ் பாரம்பரியம் .....பொங்கலுக்கு முன் நம் வீட்டு பரணியில் இருந்து இறங்கும் பித்தளை பாத்திரங்கள் .....நம் தலைமுறை அம்மாக்கள் இருக்கும் வரை..எத்தனை கோடி சொத்து இருந்தாலும் ...பித்தளை பாத்திரங்களுக்கு ஈடாககாது ...பொங்கலை வரவேற்போம் ..


இந்த ஊரில் தான் , முதன் முறையாக , வீட்டு வாசலில், கோலம் போட்டு, அடுப்பு வைத்து, புதுப் பானையில்,கோலமிட்டு,(சுண்ணாம்பும், காவியும் தான் )


சூரியன் வெளிவரும் , சரியான சமயத்தில், பொங்கலில் பால், பொங்க வைத்ததைக் கண்டேன்.( சென்னையில்,  மண்  பானைகளில்,  கலர் கலராக பெயிண்ட் பண்ணி , விற்கிறார்கள். ) குண்டு குண்டாய் சிவப்பு கரும்புகள் , தோட்டங்களில் இருந்து, கட்டு கட்டாய் , வந்திறங்கும். ஒரு முழு கரும்பை, முழு மூச்சாய் , சாப்பிடுவோம்! பற்களினால் கடித்து, தோலை நீக்கி, பின் கரும்பை சுவைப்போம்!! அதுதானே,  பழக்கம்?


ஒரு வீட்டில், (வேறு ஒரு ஊரில்) கரும்பின் தோலைக் கத்தியால் சீவி, பின் துண்டு துண்டாக வெட்டி, தட்டில் போட்டு சாப்பிட்டதைப் பார்த்து சிரிப்பு தான் வந்தது. 


 4,5 பேராக , வாசலில் உட்கார்ந்து கொண்டு,  கதை பேசிய படியே , கரும்பைக் கடித்தால்,  சுவை  பல மடங்காக இருக்குமே? அந்த அனுபவத்தை இழந்தவர்க்கு என் அனுதாபங்கள்!!!!!



காணும் பொங்கல், அங்கு இன்னும் கலகலப்பாய் இருக்கும். புதுத் துணி உடுத்திக் கொண்டு, வித விதமான சித்திரான்னங்களை , வீட்டில் செய்து , தூக்கு சட்டியில்  எடுத்துக் கொண்டு, கோலத்தில் வைத்த ,பூவை வரட்டியாக செய்து சேமித்து  வைத்து இருந்ததையெல்லாம் , ஒரு மூட்டை கட்டிக் கொண்டு, ஊரின் எல்லையில், உடுமலைப்பேட்டை அமராவதிக் கரையில் உள்ள கோவிலுக்குக் கூட்டி சென்றனர். ஊரே காலி!  




திருவிழா தான் ! ஆற்றுப் படுகையிலேயே , சிலர் கூட்டான் சோறு ஆக்கிக் கொண்டு இருந்தார்கள்!  எல்லா வித பயறுகளையும், காய்கறிகளையும்  போட்டு, ஒரு கலவையான சோறு! அன்றைய ஸ்பெஷலாம் !!! கண்டதுமில்லை, கேட்டதுமில்லை அது நாள் வரை ! பலூனிலிருந்து, ஜவ்வு மிட்டாய், தின் பண்டங்கள் , வளையல், ரிப்பன் கடை எல்லாம் , முளைத்திருந்தன! செமையான வியாபாரம்! எல்லோரிடமும் காசு விளையாடிக்கொண்டு இருந்தது. பின், சாமி கும்பிட்டார்கள், குலவை  போட்டார்கள்! 

அனைவர்க்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ..

புதன், 12 ஜனவரி, 2022

 “மார்கழிதான் ஓடிப்போச்சு”🌈🌧️🌱🌳🥰🙏


போகி என்றதும் நம் நினைவுக்கு வரும் பாடல் இதுவாகத்தான் இருக்கும்.


மகிழ்ச்சி, துக்கம், கேளிக்கை, கொண்டாட்டம்  என்று எல்லாம் கலந்த படைப்பு.


இந்த பாடல் முழுக்க முழுக்க தாளவாத்திய பாடல். போகியின்போது தெருவில் சிறுவர்கள் மெல்லிய ஈர்கிள் குச்சியால் அடிக்கும் மேள சத்தத்தை ஸநேர் ட்ரம்ஸ் என்று சொல்லப்படும் தாள கருவியில் எப்படி கொண்டு வர முடிந்தது என்று வியப்பிலாழ்த்தும் இசை.


முதலில் ஒற்றையாக ஒலித்து போக போக கூட்டு தாளமாக மாற 20 முதல் 29 நொடிகள் வரை குழல் நாட்டியமாடும். அதை தொடர்ந்து ‘ரிம் ஷாட்’ போல ஒரு ‘ஸ்டிக் ப்ளே’ வரும்.


குழலின் ஒலி பாடலின் கடைசியிலும் எட்டி பார்க்கும்.🥰🥰🥰🥰🥰🌈🌈🎙️🎙️🎙️


https://youtu.be/R0n1wDYxIxg

திங்கள், 10 ஜனவரி, 2022

 கேள்வி : 800 சதுர அடிகளில் ஒரு அழகிய வீட்டிற்கான திட்டத்தை யாரேனும் கூற முடியுமா? மனையின் நீளம் 52 அடி, அகலம் 17 அடி.


என் பதில் :


800 சதுர அடி இடம் என்பது வீடு கட்ட போதுமான அளவு இடமே. ஆனால் அந்த இடம் எப்படிப்பட்ட சாலை வசதிகளுடன் இருக்கிறது என்பதைப் பொருத்து வசதியான அழகான வீட்டைக் கட்ட இயலும்.


உதாரணமாக கீழ்க்கண்ட வகையில் கட்டலாம்.


கிழக்கு மேற்காக சாலை மனையின் வலது புறமாக இருந்தால் கிழக்கு நோக்கிய வாயில் அல்லது தெற்கு நோக்கிய வாயில் வைத்து கட்டலாம்.


வடக்கு தெற்காக சாலை மனையின் கிழக்குப்பக்கமாக இருந்தால் கிழக்கு நோக்கிய வாயிலுடன் அழகிய வசதியான வீட்டைக் கட்டலாம்.


கிழக்கு மேற்கான சாலை மனையின் இடதுபுறம் இருந்தால் வடக்கு நோக்கிய வாயிலுடன் அழகான வீட்டைக் கட்டலாம்.


தெற்கு வடக்கான சாலை மனையின் மேற்கு புறமாக இருந்தால் வடக்கு அல்லது மேற்கு நோக்கிய வாயிலுடன் அழகிய வீட்டினைக் கட்டலாம்.


வீடு அழகாக கட்டுவது எந்த திசையில் இருந்தாலும் கட்டலாம். அது நமக்கு இடையூறு இல்லாத வண்ணம் வசதியாகக் கட்ட மேற்கண்டவற்றைக் கணக்கில் கொண்டே வீட்டிற்கான திட்டம் கூற இயலும்


Sivakumar.V.K

Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 

Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms

siva19732001@gmail.com


சனி, 8 ஜனவரி, 2022

கேள்வி :  மணலுக்கு பதில் எம்சாண்ட் உபயோகித்தால் கட்டிடம் உறுதியாக இருக்குமா ? விஞ்ஞானப்பூர்வ பதில் என்ன?


என் பதில் :


Msand அதாவது கற்களை உடைத்து அதில் இருந்து எடுக்கும் பொருளை நாம் Manufacture Sand (Msand)என்கிறோம்.


மேலை நாடுகளில் இவை பயன்பாட்டில் உள்ளன. நமது நாட்டில் இன்று கட்டபடும் கட்டிடங்கள் அனைத்தும் இவை கொண்டு தான் கட்டப்படுகின்றன. ஆகவே நீங்கள் தாராளமாக Msand பயன்படுத்தலாம்.


கான்கிரீட் என்பது மண், ஜல்லி, சிமெண்ட், நீர், ஆகியவை சேர்ந்த ஒரு கலவை ஆகும்.


இதில் சிமெண்ட் ஒரு பசை போல செயல்பட்டு மண் மற்றும் ஜல்லி கற்களை பிடித்து கொள்கிறது.

நீர் புகாத முறையில் இவை அனைத்தும் சேர்ந்து ஒரு வேதி வினையை நிகழ்த்துகிறது.


இந்த வேதி வினை நிகழும் பொழுது அதிக படியான வெப்பத்தை வெளியிடுகின்றன.

இவற்றின் வெப்பத்தை தனிக்கவே கான்கிரீட் இட்டு சில மணி நேரம் கழித்து நீராற்றபடுகின்றன.

கான்கிரீட் தன்னுடைய முழு வலுவை அடைய 28 நாட்கள் ஆகும்.


இதில் மணல் என்பது ஜல்லி கற்களுடன் ஒட்டி பிடிக்க பயன்படுத்தும் பொருள் தான்.

ஆகவே நீங்கள் தாராளமாக Msand பயன்படுத்தலாம். ஆனால் இவற்றை வாங்கும் முன் அதன் தரத்தை உறுதி செய்து கொள்ளவும். சந்தையில் தரமற்ற Msand வலம்வருகின்றன.


மேலும் நீங்கள் பயன்படுத்தும் சிமெண்ட், மண், ஜல்லி,நீர், இவைகள் மட்டுமே உங்களுடைய கான்கிரீட்டை வலுப்பெற செய்யாது.


மாறாக நீங்கள் எந்த தரத்தில் concere தயாரிக்கிறார்கள் என்பது தான் கான்கிரீடை வலுப்படுத்தும். M20,M25,M30 என பல வகை உள்ளன வீடுகளுக்கு M20 போதுமானது.


நீங்கள் Msand பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தால் அதனுடன் Dr.Fixit LW+ என்ற வேதியல் பொருளை 1 சிமெண்ட் மூடைக்கு 200 ml என்ற விகித்தில் கான்கிரீட் கலைவயில் சேர்த்து கொள்ளுங்கள்.

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் .


சிவக்குமார்  V. K 

Sivakumar.V.K

Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 

Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms

siva19732001@gmail.com

புதன், 5 ஜனவரி, 2022

கேள்வி : லிங்க்ட் இன் என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி? பயன்கள் என்ன?


என் பதில் : 


முதலில் அந்தக் காலத்தில் நடைமுறையில் இருந்த சில ருசிகரமான விஷயங்களைப் பார்க்கலாம்:


நீங்கள் புது ஊருக்குப் போகிறீர்கள். வீட்டு வேலை செய்ய ஒருவர் வேண்டும். என்ன செய்வீர்கள்? அக்கம் பக்கத்தில் விசாரிப்பீர்கள். பின்னர் பரிந்துரைகளை ஏற்று, ஒருவரை வேலைக்கு சேர்ப்பீர்கள். இந்த முறையைத்தான் மளிகைக் கடை, பால் / பேப்பர் போடும் பையன், தண்ணீர் கேன் என்று அனைத்துக்கும் பின்பற்றுவீர்கள்.


கோவில், மற்றும் பொது இடங்களில் கீழ்க்கண்ட உரையாடல்களைக் கேட்டிருக்கலாம்:


பெண்மணி 1: நேத்திக்கி எங்க வீட்டில பட்சணம் செஞ்சோம். காமாட்சி அம்மா  செஞ்ச ஐட்டங்களெல்லாம் அவ்வளவு சூப்பர். உங்க வீட்டில ட்ரை பண்ணிப் பார்க்கலாம்.


பெண்மணி 2: போன வாரம் எங்க வீட்டில இறப்பு நிகழ்வுக்கு  சமைக்க வந்திருந்த அகல்யா காரியம் அவ்வளவு நேர்த்தியாக்கும்.


ஆண் 1: போன வாரம் வண்டி சர்வீஸுக்கு பாலன் கிட்ட விட்டேன். சொதப்பிட்டான். அவன் பண்ணின கோளாறுகளை சரி செய்ய தனியா செலவு செய்ய வேண்டியிருந்தது.


ஆண் 2: சார், என் கம்பெனியை கூடிய சீக்கிரம் மூடப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். உங்களுக்கு நிறைய பேரைத் தெரியுமே. எனக்கு எங்காவது ஒரு வேலை வாங்கித் தாங்களேன்.


ஆண் 3: என் காரை விக்காலம்னு இருக்கேன்.


ஆண் 4: நம்ம ஆரிய  பவன் நெய் தோசை கட்டாயம் சாப்பிட்டே ஆக வேண்டும்.


லிங்க்ட்இன் கிட்டத்தட்ட இந்த மாதிரி ஒரு பெரிய தகவல் பரிமாற்று முறை என்று வைத்துக் கொள்ளலாம்.


மேலே குறிப்பிட்ட உதாரணங்கள் ஒரு “வாய்வழி லிங்க்ட்இன்” என்று சும்மனாக்காச்சியும் வைத்துக் கொள்ளலாம்.


லிங்க்ட்இன் இணையத்தில் உலகின் மிகப்பெரிய தொழில்முறை நெட்வொர்க் ஆகும். சரியான வேலை அல்லது இன்டர்ன்ஷிப் கண்டுபிடிக்க, தொழில்முறை உறவுகளை இணைக்கவும் மற்றும் வலுப்படுத்தவும், உங்கள் வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவையான திறன்களைக் கற்றுக்கொள்ளவும் நீங்கள் லிங்க்ட்இன் ஐப் பயன்படுத்தலாம். டெஸ்க்டாப், லிங்க்ட்இன் மொபைல் ஆப், மொபைல் இணைய அனுபவம் அல்லது லிங்க்ட்இன் லைட் ஆண்ட்ராய்டு மொபைல் செயலியில் இருந்து நீங்கள் லிங்க்ட்இன் ஐ அணுகலாம்.


அனுபவம், திறன்கள் மற்றும் கல்வி மூலம் உங்கள் தனிப்பட்ட தொழில்முறை “கதை”யை காண்பிப்பதன் மூலம் ஒரு முழுமையான லிங்க்ட்இன் சுயவிவரம் வாய்ப்புகளுடன் இணைக்க உதவும்.


ஆஃப்லைன் நிகழ்வுகளை ஒழுங்கமைக்கவும், குழுக்களில் சேரவும், கட்டுரைகள் எழுதவும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இடுகையிடவும் மேலும் பலவற்றிற்கும் நீங்கள் லிங்க்ட்இன் ஐப் பயன்படுத்தலாம்.


நிறைய பேர் லிங்க்ட்இன் என்பது சாஃப்ட்வேர் (IT) இல் மட்டும் வேலை பார்ப்பவர்களுக்கானது என்றும், அது ஒரு வேலை வாய்ப்பு தளம் என்றும் (தவறாக) நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


லிங்க்ட்இன் ஐ எவ்வாறு பயன் படுத்த வேண்டும்?


1. உங்கள் தொழில்முறை விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதனைப் படிப்பவர்களுக்கு உங்கள் திறன் என்னென்ன என்று தெளிவாக விளங்க வேண்டும்.


2. உங்கள் தொழில்முறையில் சம்பந்தப்பட்ட (கிட்டத்தட்ட உங்கள் ஸ்கில்செட்) கொண்டவர்களை உங்கள் “குழு” வில் லிங்க்ட்இன் சேர்த்து விடும்.


3. இதனால், உங்கள் தொழில்முறை ஞானம் வேண்டும் என்று யாராவது தேடினால் உங்கள் பெயரும் தேடியவருக்கு காணக்கிடைக்கும்.


4. உங்களைப் பற்றி நீங்களே ஒசத்தியாகக் கூறிக் கொள்வதை விட ஒரு மூன்றாம் மனிதர் உங்களைப் புகழ்ந்து அறிமுகம் செய்தால் உபயோகமாயிருக்குமல்லவா - கரகாட்டக்காரன் படத்தில் செந்தில் ரூ10 கொடுத்து அவரை “தில்லானா மோகனாம்பாள் சிவாஜி மாதிரி வாசிக்கிறார்” என்று விளம்பரம் செய்வதைப்போல? உங்கள் மேலாளர் வகையறாக்களை “வேண்டி”, உங்களைப் பற்றி recommendation எழுதி வாங்கி லிங்க்ட்இன் தளத்தில் வைத்துக் கொள்ளலாம்.


கடைசியாக ஒரு வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால் – லிங்க்ட்இன் ஒரு நபரின் தொழில் முறை திறமைகளயும், தொழில்முறை சாதனைகளையும் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட உதவும் சுய விளம்பரத் தளம்.


நன்றி ..