வியாழன், 24 அக்டோபர், 2024

கோவை சிவக்குமார் 🌈🥰🙏 அவர்களின் பதிவும் ..அவர்களை தொடர்ந்து .K N .நாகராஜ் கரூர் அவர்களின் பதிவும் ..அன்புத் தம்பி ராஜேஷ் கண்ணன் (வழக்கறிஞர்-நாமக்கல் ) அவர்களின் பதிவும் ...திருமண பதிவுகள் சிந்திக்க வேண்டிய நம் சமுதாய சொந்தங்கள் ..

கோவை சிவக்குமார் 🌈🥰🙏 அவர்களின் பதிவும் ..அவர்களை தொடர்ந்து .K N .நாகராஜ் கரூர் அவர்களின் பதிவும் ..அன்புத் தம்பி ராஜேஷ் கண்ணன் (வழக்கறிஞர்-நாமக்கல்  ) அவர்களின் பதிவும் ...திருமண பதிவுகள் சிந்திக்க வேண்டிய நம் சமுதாய சொந்தங்கள் ....


 அன்பார்ந்த நமது சொந்தங்களுக்கு வணக்கம் அனைத்து சொந்தங்களுக்கும் ஒரு வேண்டுகோள் நான் பார்த்த வகையில் எல்லா ஊர்களிலும் 25க்கு மேல் முப்பது வயதுக்கு மேல் மணப்பெண்கள் நிறைய உள்ளனர் இன்னும் திருமணம் ஆகாமல் காரணம் நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை எதார்த்தமான நிலையில் எல்லோரும் ஐடி பணியில் ஒரு லட்சம் ஒன்றரை சுமார் 70 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் இருந்தால் தான் நாங்கள் எதிர்பார்க்கின்றனர் அவர்கள் எதிர்பார்ப்பை நான் குறை சொல்லவில்லை ஐடி வேலையில் நமது மாணவர்களுக்கு தற்போது தான் படித்து வருகின்றனர் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் ஐடி பணியில் உள்ளனர் மற்ற இளைஞர்கள் எல்லாம் நல்ல வேலையில் மாற்றுப் பணிகள் உள்ளனர் அவர்களுக்கு மணப்பெண்கள் கிடைப்பதில்லை அதனால் நிறைய இளைஞர்கள் ஊருக்கு 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் 30 வயது 35 வயது என்று நிறைய பேர் உள்ளனர் திருமணமாகாமல் இதே போல் 80களில் 90களில் நினைத்திருந்தால் ஒரு தலைமுறையை இருக்காது அதனால் மணப்பெண்களின் பெற்றோர்கள் நல்ல மாப்பிள்ளை நல்ல வேலை இருந்தால் அவர்களுக்கு நீங்கள் பெண் தர வேண்டும் மேலும் ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடுகிறார்கள் சொந்த வீடு தோட்டம் என்று சில பேர் கூறுகிறார்கள் விவசாயம் செய்யும் மாப்பிள்ளைக்கு மணப்பெண்ணே கிடையாது என்கிறார்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் டிரைவர் என்று எல்லோரும் இருக்கிறார்கள் அவர்களெல்லாம் எங்கே போவது இப்படியே விட்டால் கண்டிப்பாக நிறைய பேர் திருமணம் ஆகாமல் பெண்களும் உள்ளனர் ஆண்களும் உள்ளனர் எதார்த்தமான நிலையை உணர்ந்து எல்லோரும் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம் யாரையும் குற்றம் சொல்லவில்லை இப்படியே போனால் நமது கம்பனத்தை இனமான இளைஞர்கள் நிறைய பேர் திருமணமாக முன் தன் வாழ்க்கை இழந்து விடுவார்கள் பெண்களும் நிறைய முதிர் கனிகளாக உள்ளனர் எதிர்பார்ப்புகளோடு திருமணமாகாமல் உள்ளார் அவர்களும் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்📗✒️✒️🎙️📡📡கோவை சிவக்குமார் 🌈🥰🙏

K .N .நாகராஜ் கரூர் அவர்களின் பதிவு ....

ஜாதகத்தை தூக்கிக்கொண்டு திரியும்வரை இந்த மாதிரி பிரச்சனைகள் தலை விரித்தாடத்தான் செய்யும்...


எனக்கு கல்யாண பொருத்தம் பார்க்கலே.

2 பொம்பளபுள்ளே 1 பையன்னு ஜாம் ஜாம் னு வாழத்தான் செய்யறேன்...


பெரிய பொண்ணு B.sc Gold medal, MBA Anna University Top 50 Rank Holder...

Poly Technic முடிச்ச பையனுக்குதா கொடுத்தேன் 

லட்டு மாதிரி 2 ஆம்பள பசங்க இப்போ...

S.R Fibers , S.R.smal scale industries nu    தேங்காய் நார் மட்டை கம்பெனி, கயிறு திரிக்கிற மெஷின்கள் னு வாழ்க்கையை அழகழகா நடத்துறாங்க... 

படிப்பென்னங்க படிப்பு...

 Understanding தா முக்கியம்.

நாங்களும் சம்மந்தகாரங்களும் ஒன்னா உட்கார்ந்து ஜாதகம் பார்த்தது கிடையாது. இரண்டு சம்மந்திகளுக்கும் பிடிச்சிபோச்சு கல்யாணம் முடிச்சுட்டோம்...

மனங்கொண்டதே மாங்கல்யம்...


இரண்டாவது பொண்ணு B.E (ECE)  first class 8.9  percentage

மாப்பிள்ளை வீட்டுக்காரர் திருப்திக்கு ஜாதகம் கேட்டாங்க னு 23 வயசுல குறிப்பை வெச்சு ஜாதகம் எழுதி வாங்கி தந்தேன் அவ்வளவுதான்

அவங்களும் சரின்னாங்க 

17.09.23 ல கல்யாணம் ஜாம் ஜாம் னு முடிச்சு 28.09.24 மஹாலட்சுமியே பேத்தியா பொறந்திருக்கா

2வது மாப்ளே B.Sc (Jio fiber le Dindigul and Theni Districtக்கு fiber Engineering incharge MNC Co.)  


நான் சொல்ல வர்றது என்னன்னா ஜாதகம் தேவையில்லை... சாதகமான முடிவுகளை எடுக்கற பெற்றோரா இருந்து பிள்ளைகளுக்கு காலாகாலத்துலே கல்யாணம் செஞ்சு வைங்க... இப்போ இருக்கிற கால கட்டத்துக்கு டெஸ்ட் டூப் பேபி னு கையை பிசைய வெச்சுடாதீங்க 

அப்புறம் முதலுக்கே மோசமாகி அடுத்த ஜாதிலே ஓடிப்போயிடுச்சு னு நடைபிணமா வாழ்க்கையை வாழ வேண்டி இருக்கும். 

அப்புறம் நாமும் தலைநிமிர்ந்து நடக்க முடியாம, நம்ம பிள்ளைகளையும் அடுத்த ஜாதிலே போயிடுச்சே னு கௌரவத்தை வாரி கொடுத்திட்டு... அவங்களப்பார்த்தும் நாம சந்தோசப்பட முடியாம, வம்ச விருத்தி இல்லாம நாசமா போறதுக்கு பதிலா.... 10, 12வது பையன் படிச்சிருந்தா போதும்... நம்ம பிள்ளை அவ குடும்பத்தை வாழ வெச்சுடுவா னு நம்பிக்கைகளை அனைத்து பெற்றோரும் பெற்றிடுவதே ஆகச் சிறந்த தீர்வுகளாக இருக்குமென என்னளவுக்கு நம்புகிறேன்


இந்த 54 வயசுலயும் தட்டு தடுமாறி தமிழில் டைப் பன்றேன்னா எனது சமுதாயம் நான் பெற்ற நம்பிக்கைகளை அவர்களும் பெற்று தனது சந்ததியினருக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க...

 மேலும் மேலும் கால தாமதப்படுத்தாதீர்கள் என கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்


பொம்பள பிள்ளைகளை எவ்வளவு படிக்க வைக்க பிரயத்தனப்பட்டீர்களோ அதே அளவு கல்யாணம் செய்து கொடுப்பதில் மூன்று மடங்கு மும்முரம் காட்டுங்கள்...


யார் குடும்பத்தையோ தழைக்க செய்வதற்குதான்  உங்களுக்கு கடவுள் பெண் பிள்ளைகளை பரிசளித்தார் என்பதை மனதில் நிறுத்தி...

எது எதுக்கு செல்லம் கொடுக்கனுமோ அது அதுக்கு கொடுங்கள்...

எல்லாத்துக்கும் ஆமாம் சாமி போட்டீங்கனா  நீங்களே அந்த பிள்ளையின் இளமை வாழ்க்கையை சீர் செய்ய தவறிவிட்டீர் என்பதை எதிர்காலம் உங்களுக்கு எடுத்துரைக்கும் என சங்கடத்தோடு பதிவை விதைக்கிறேன்...


முளைப்பதும்  அழுகுவதும் அழுவதும் அவரவர் வினைப்பயனே...


🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼


" மனம் கொண்டதே மாங்கல்யம் " 


நித்தியத்துவம் பெற்ற வார்த்தைகள் .. 


தனக்கு நிகராக அல்லது தன்னை விட ஒருபடி மேலே வரன்களை எதிர்பார்க்கும் சூழலே இங்கு 30 வயதை கடந்தும் பலர் மணமாகமல் இருப்பதற்கு முதற் காரணம் 

பாலின விகிதம் நேரேதிராக குறைந்து வரும் காலத்தில் இனி திருமணம் என்பதே பலரது வாழ்வில் எட்டாக்கனி என்பதுதான் எதார்த்தம்...

நம் சமுதாயதிற்கு ஜாதகம் தேவையில்லை ஏனெனில்  நாம் செய்வது காந்தர்வ மனம், தாலி எடுத்து கொடுப்பது மட்டுமே பழங்கால வழக்கம், ஆகையால் சமுதாய பெண்கள் எப்படி விக்ரம் காலத்தில் வாழ்ந்து வந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே காந்தர்வமனம் போல் நமது சமுதாய திருமணத்திற்கு எதுவும் அவசியம் இல்லை எக்காலத்திலும், ஆனால் ஜாதகமும்  பொய்யல்ல ஜாதககாரர் சொல்லும் கணிப்பு பொய்யான இருக்கலாம் (90 நாள் ஜாதகம் கற்று நானும் ஜாதககாரர் என்றால் எப்படி விளங்கும்) ஜாதகம் முழுக்க முழுக்க அறிவியல் (கதிர் வீச்சு) (blackhole, waves, eclipse, luner eclipse etc...)என பல சம்பந்தப்பட்ட விசியம் , எனவே ஜாதகம் பார்க்க வேண்டிய இடத்தில் பார்த்தால் போதுமானது...

திண்டுக்கல் கரூர் திருச்சி மாவட்ட கம்பளத்தார்களிடையே பெரும்பாலும் ஜாதகம் இல்லாமலே அங்கங்கே சொந்தத்திலயே மணம் முடித்து கொள்கிறார்கள்...

5,6வருடங்களில் சிறு மாற்றம் நிகழ்ந்து வருகிறது...குறிப்பாக 

பால்ய விவாகங்கள் குறைந்து விட்டன என்றே சொல்லலாம் 


ஆக இத்தனை வருட கால திருமணங்கள் எதுவுமே ஜாதகத்தை பார்த்து நடைபெறவில்லை என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும்தானே...


அதனால்தான் ஜாதகத்தை காரணம்காட்டி திருமணங்களை தள்ளி வைக்காதீர்கள் என்பதை அனுபவ எதார்த்தங்களோடு உடன்படுகிறேன் ...


ராசி பொருத்தம் பார்க்கப்பட்டு செய்து கொண்ட திருமணங்கள் எத்தனையோ முன்னுக்குப்பின் முரணாக முட்டிக்கொண்டு முழிபிதுங்கி நிற்பதை கண்ணார பார்க்க முடிகிறதல்லவா 


கணவன் மனைவி விசயங்களுக்குள் மூன்றாம் நபர் மூக்கை நுழைத்தாலே பிட்டுக்கொண்டு போய்விடுமென்பதுதான் உண்மையிலும் உண்மை...

பெற்றவர்களாயினும் இவர்களின் விசயங்களுக்குள் தலையிடக்கூடாது என்பதே என் நிலைப்பாடும்கூட...


இயற்கையின் நியதிப்படி அதிகப்படி ஒரு பத்து நாளில் சரியாகி விடும் அல்லது சரியாக்கி கொள்வார்கள்...


கணவன் மனைவி கருத்து வேறுபாடுகளுக்குள் பெற்றோர்களோ மற்றவர்களோ தலையிடும்பொழுது பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்து வேதனைப்படுத்தி விடுகிறது 


சில நேரங்களில் நியாயம் பேசியவர்கள் குற்றவாளிகள் ஆக்கப்பட்டு கணவன் மனைவி ராசியாகிப் போய்விடுவார்கள்...


துரதிர்ஷ்டவசமாக வசமாக மற்றவர்களே இவர்களின் பிரிவுகளுக்கு காரணகர்த்தா ஆகிவிடுகிறார்கள்...


ஆக இவர்கள் தங்களை தாங்கலே நிரபராதி ஆக்கிக்கொள்வதற்காக ஜாதகத்தை கையிலெடுத்து சாதகமாக பிரச்சனைகளை தீர்ப்பதற்கு விருப்பமின்றி அதன்மேல் பழிபோட்டு விலகிக்கொள்ள விருப்பம் கொள்கிறார்கள்


ஜாதகம் பார்த்தோம் பையன் ராசி நேரம் சரியில்லை பிள்ளை பிறந்த நேரம் சரியில்லே னு வேக்கானம் பேசுறாங்க


நான் தெரியாமத்தேன் கேட்கிறேன்

மத்ததெல்லாம் முன்கூட்டியே சொல்லத் திறமை இருக்கிற 

எந்த ஜாதகக்காரனாவது உங்க பிள்ளைக்கு இந்த புள்ளதான் பிறக்கும்  இந்த நாளில்தா பிறக்கும் இந்த நட்சத்திரத்தில்தான் பிறக்கும் னு சொல்ல சொல்லுங்க பார்ப்போம்

சொல்லிட்டார்னா அவரு ஜாதகக்காரரு 


அந்த ஆளு பொழப்பே அல்லோலங்கடி  போடுதாம் 

ஜாதகக்காரன் சொன்னான் ஜோசியக்காரன் சொன்னானு பய பிள்ளைகளை பயமுறுத்தாதீங்க 


அவங்கவங்க வசதி வாய்ப்புக்கு ஏற்றவாறு ரெண்டு குடும்பமும் ஒத்துப்போனா... பையனுக்கும் பொண்ணுக்கும் பிடிச்சுப்போனா காலா காலத்திலே கல்யாணத்தை பண்ணி வெச்சு பேரப் பிள்ளைகளை கொஞ்சறதுக்கு பாருங்க



நான் கேட்டு தாய் தந்தை படைத்தாரா  (இல்லை)

என் பிள்ளை எனைக் கேட்டு பிறந்தானா...?


உண்மையான சத்தியவாக்கு எனில்


உங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வும் கடவுள் கையில்தானே ... ஆம் நம்புங்கள் கடவுளை அல்லது பித்ருக்களை அல்லது குல தெய்வங்களை...


ஜாதகம்  என்பது நமக்கு சாதகமா இருந்தாதான் ஜாதகம்...  இல்லாட்டி பாதகம் நமக்குத்தா.... நம்ம பிள்ளைகளுக்குதான்...


🙏🏼🙏🏼🙏🏼

நான் கேட்டு தாய் தந்தை படைத்தாரா  (இல்லை)

என் பிள்ளை எனைக் கேட்டு பிறந்தானா...?


உண்மையான சத்தியவாக்கு எனில்


உங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வும் கடவுள் கையில்தானே ... ஆம் நம்புங்கள் கடவுளை அல்லது பித்ருக்களை அல்லது குல தெய்வங்களை...


ஜாதகம்  என்பது நமக்கு சாதகமா இருந்தாதான் ஜாதகம்...  இல்லாட்டி பாதகம் நமக்குத்தா.... நம்ம பிள்ளைகளுக்குதான்...


🙏🏼🙏🏼🙏🏼


அன்புத் தம்பி ராஜேஷ் கண்ணன் (வழக்கறிஞர் ) அவர்களின் கருத்துப்பதிவை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்...


நாம  கோவில்லே போய் தாலி கட்டினாலே குத்தம் வாங்குறவங்க ...

அது எப்பேர்பட்ட கோவில் சாமியா இருந்தாலும் ...


இங்கென்னடான்னா 

ஜாதகம் ஜாதகம் னு

சாக்குபோக்கு காமிச்சுகிட்டு அரை கிளவிக ஆகாம கல்யாணம் செஞ்சு தரமாட்டேன் னு போஸ்டர் போட்டுட்டு இருக்காங்க னு கவலைப்படறேன் தம்பி...


🤝🤝🤝🙏🏼🙏🏼🙏🏼

இதுலே மாப்பிள்ளை வீட்டு கூத்து அதுக்கு மேல...


பையன் படிச்சிருக்கானாம் 

பைனான்ஸ் கம்பெனில வேலை பார்க்காராம் 

பெங்களூர் ஆந்திர பம்பாய் னு லைன் போட்டிருக்கானாம் 

I T field லே லட்சத்தில் சம்பளம் வாங்கறாராம் 


படிச்ச பொண்ணா, கொஞ்சம் வசதியா, அண்ணன் தம்பி இருந்தா பரவால்லயாம்,  அக்கா தங்கச்சி இல்லாம இருக்கனுமாம் ஒத்த பொம்பள புள்ளையா வேணூமாம்  வேணுமாம் னு தேடி தேடி பொண்ணு பார்க்க இவரு பார்த்த பொண்ணுக எல்லாம் கல்யாணமாகி ... புள்ள குட்டியோடு வர ...

(இவருக்கு எங்கெல்லாம் போய் பொண்ணு கேட்டாகளோ...அந்தந்த பொண்ணுகளுக்கு அடுத்தடுத்து கல்யாணம்)

 இவருக்கு இன்னும் பொண்ணு தேடிட்டே இருக்காகளாம்பா 

வருசம் ஏழாகுது 

(திருநள்ளாறு திருமணஞ்சேரி, திரு நாகேஸ்வரம், கீழப் பெரும்பள்ளம் னு சுத்தி சுத்தி காலெல்லாம் வலிக்க)

இவக ஜாதகக்காரருக்கே இன்னும் என்னென்ன கோவிலிருக்கு னு இன் ஸ்டா வாட் சப்பு பேசு புக்கு னு பஞ்சாங்கத்தை தாண்டி தேடுறாராம்)

உருப்படியா தேடினபாட்டைக் காணோம்...

அடிக்கடி சேவ் பண்ண வேண்டி இருக்கு

வெள்ளை முடிக்கும்

கல்யாணத்துக்கும்.....


இந்த பாவ கணக்கு எங்கே தொடங்குச்சு தெரியுமா...? பொண்ணு வீட்டுக்காரன் பெருசா செய்ய மாட்டான்,  அவங்க நமக்கு ஈக்கிவளா இல்லே, நிறம் கம்மியா இருக்கு, அப்பன்காரன் ஆயிரத்தெட்டு ரூல்ஸ் பேசுறான், அம்மாக்காரிக்கு இஷ்டம் இல்லபோல தெரியுது னு நீங்களா கற்பனை பண்ணிட்டு வேண்டாம் பார்த்துக்கலாம் னு வந்தீங்கல்லே அங்கன தொடங்குச்சு...


கூட்டி கழிச்சு பாருங்க

கணக்கு சரியா வரும்


நல்ல பதிலை சொல்லி விடுறோம்னு வந்தீங்கல்லே 


அதுதா தொரத்துது னு சொல்லத்தோனுது


உங்கிரகம் சரியில்லே இல்லே


உஞ்சாதகக்காரன் சரியில்லே தெரிஞ்சுக்கோ

உனக்கு சுய புத்தியில்லே 


சொல்றவன் 2000 சொல்வான்

செலவழிச்சிட்டே இரு


கட்டம் சரியில்லே

விட்டம் சரியில்லேனுட்டு


😁😁😁

தாங்கள் கருத்து 100 % உண்மையே.....

காந்தவர்வ திருமணம் செய்தால் எவ்வளவு பெரிய தோஷமும் போகும்.....

மேலே உருமி முழங்க பச்சை பந்தலில் ஆண் தாலி எடுத்து கொடுத்து பெண்கள் மணமகளுக்கு தாலி கட்டினாலும் அந்த திருமணம் சிறப்பாக வாழும் என்பதே உண்மை.....

இதற்கு ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்யலாம் என்பதே உண்மை..


திருமண பதிவுகள் கலந்துரையாடல் அருமை ..வாழ்த்துக்கள் ..வாழ்க வளமுடன் ..நன்றிகள் ..





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக