செவ்வாய், 16 ஜூலை, 2024

கும்மல் நாயக்கர்......

கும்மல் நாயக்கர்......

கும்மல் நாயக்கர் என்பது அந்தக்காலத்தில் நமது சமுதாய மக்கள் தொட்டாவுலு,கும்ப்பலாவுலு என்று குறிப்பிடும் கூட்டமாக இருக்கும் நிலையினைத்தெரியப்படுத்தியிருக்கிறார்கள் என்று ஆன்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

கும்ப்பல் என்பதே காலப்போக்கில் மருவி கும்மல் என்று வழக்கமொழியாகிவிட்டது.

இனி இதன் வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.


மார்கழி 15ம் ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் நமது சமுதாய பாரம்பரிய கலையான தேவராட்டம், மரித்தல் போன்ற சிறப்புமிகு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுள் ஆரம்பமாகும் காலம் இது.

இந்த தினத்தில் நமது மக்களால் பாரம்பரியமாக நிகழ்த்தப்படும் சலகெருது மரித்தலுக்காக அவரவர் ஊர்களில் வளர்க்கப்படும்/மலைகளில் வளர்க்கப்படும் கிருஷ்ணபரமாத்வுக்கு நேர்ந்துவிட்ட சலகெருது மாடுகளை மரித்தல் என்பது நமது சமுதாய மக்கள் முன்னிலையில் நமது சமுதாய மக்களால் பாரம்பரியமாக நிகழ்த்தப்படும் நிகழ்வு.

இது மார்கழி மாதம் 15ம்தேதிமுதல் ஆரம்பமாகும்.

சலகெருது மரித்தல் ஆரம்ப தினம் கும்மல்நாயக்கர்,பூசாரி நாயக்கர்,கம்பிளி நாயக்கர்,குங்க்கால் பெத்தா மற்றும் பல பட்டையக்காரர்களின் முன்னிலையில்  சலகெருது மாடுகளை மன்னத்தில் நிறுத்தி சலகெருது மரிக்கும் தடிகள்,பூஜை பொருட்கள்,அண்டை,கருங்கம்பளி,சலங்கைகள் வைத்து தேவதுந்துமி வாத்திய இசையுடன் பூசாரி நாயக்கர் அவர்களால் பூஜைகள் செய்து விபூதியிட்டபின் ஆரம்பமாகிறதுசலகெருது மரித்தல்.

இது அடுத்து வரும் தைப்பொங்கல் அன்று வரை நிகழ்த்தப்படுகிறது.

காணும்பொங்கலன்று சலகெருதுமாடுகளைக்குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, அலங்காரம் செய்து விநாயகர் கோயில் அல்லது குலதெய்வகோயிலில் கொண்டு வந்து நிறுத்தப்படுகிறது.பின்னர் கும்மல்நாயக்கர் அவர்கள் கருங்கம்பளிகொண்டுமுகத்தை மூடிக்கொண்டு,தடி ,அண்டையுடன் அவருக்கு கொடுத்த "மந்திரவாக்கு"  ஓதப்பட்டு அண்டையில் நீருடன் ரகசிய மூலிகைகள் கலந்து மந்திரம் ஜெபித்து பூஜை செய்து கோயிலுக்கு தேவதுந்துமி வாத்தியங்களுடன் அழைத்துவந்து மூன்றுமுறை கோயிலை வலம்வந்து கோயிலில் பூஜைகள் செய்து (சலகெருது மாடுகளுக்கும் பொதுமக்களுக்கும் சேர்த்து) பின்னர் மந்திரிக்கப்பட்ட அண்டையுடன் (மூங்கில் குழாய்) வந்து ரகசிய மந்திரங்கள் ஓத (கட்டுமந்திரித்தல்) தடிகளை நேராக நிறுத்தி மக்கள் அனைவரையும் ஒருமுகப்படுத்தி தேவதுந்துமிவாத்திய இசையுடன் மந்திரிக்கப்பட்ட நீரினை சலகெருது மாடுகள் மற்றும் பொதுமக்களின்மீது தெளித்து பின்னர் சாமி கும்பிட்டபின்னர் சலகெருதுமாடுகள் ஆல்கொண்டமால் திருக்கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கும் சலகெருது மாடுகளுக்கு பூஜைகள் செய்து தீர்த்தம்விட்டு விபூதியிடப்படுகிறது.

மீண்டும் ஊருக்குள் அழைத்து வந்து கட்டுமுறித்தல் நிகழ்த்தப்பட்டு பின்  கும்மல்பொங்கல் எனும் பொதுப்பொங்கலிட்டு படையல் செய்து சலகெருது சாலிபாடல்கள்பாடி சலகெருது மாடுகள் பால் பழம் பொங்கல் எடுக்கும் நிகழ்வு நடைபெறும்.பின்னர் பூஜைகள் செய்து விபூதியிட்டபின் பொங்கல் வழங்கும் நிகழ்வு நடைபெறும்.

இதனுடன் நிகழ்வுகள் முற்றுப் பெறுகிறது.

இதுவே காலம்காலமாக ஆன்றோர்கள் காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளது.


இது எனது (தாத்தா,அப்பா, நான்) மூன்றாவது தலைமுறை தொடர்கிறது.


நன்றி வணக்கம்

ம.ப.ராஜேந்திரன்

கும்மல்நாயக்கர்

பொட்டையம்பாளையம்.

உடுமலை வட்டம்.🥰🥰📚📚✍️✍️✍️✍️

குறிப்பு : மிகுந்த கட்டுப்பாடுகளை கொண்ட பட்டையதாரர் கொண்டது.

மது அருந்துதல் கூடாது.பெண்கள் விசயத்தில் தேவையில்லாத செயல்கள் புரிதல்கூடாது.தீட்டு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் உணவு, நீர் பருககூடாது.

அடுத்தவருக்கு தீங்குநினைத்தல்கூடாது.கும்மல்நாயக்கர் சலகெருது மாடுகளுக்கு கட்டு மந்திரிக்காமல் சலகெருது மாடு கோயிலுக்கு அழைத்துச் செல்லமாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக