செவ்வாய், 8 ஜூன், 2021

கேள்வி : 25 லட்சத்தில் 2 பெட் ரூம் உடன் கூடிய வீடு கட்ட முடியுமா?

கேள்வி : 25 லட்சத்தில் 2 பெட் ரூம் உடன் கூடிய வீடு கட்ட முடியுமா?


என் பதில் : 


உங்களிடம் நல்ல குடி தண்ணீர் - மின் இணைப்பு வசதியுடன் உள்ள சமன் செய்த பூமியில் approved காலி மனை இருக்கும் பட்சத்தில், தாராளமாக 1600 + சதுரடியில் தரை மற்றும் முதல் தளத்துடன் பிரமாதமான 2 பெட்ரூம் வீடு 6 மாதத்திற்குள் கட்ட முடியும் ..


பெரிய ஹால், ஒரு master பெட்ரூம், ஒரு guest பெட்ரூம், ஒரு study ரூம் (அ) ஒரு self - isolation ரூம், கார் park,, வீட்டிற்குள் 2 attached washrooms, வீட்டிற்கு வெளியே ஒரு wash room, washing machine / dishwasher / Wash sink service area, UPVC ஜன்னல்கள், தரமான Metro plumbing fittings, Autoclaved Aerated Concrete AAC Recon block bricks, M sand, P sand, 3000 லிட்டர் overhead tank, Underground drainage எல்லாம் உள்பட …தற்போதுள்ள கட்டிட பொருள் விலை நிலவரப்படி 25 லட்சத்தில் முடிக்க முடியும்.


உங்கள் குடும்ப தேவைக்கு 1100 சதுரடியில் 2 பெட்ரூம் வீடு போதும் என இருக்கும் பட்சத்தில், மீதியிருக்கும் இடத்தில் / பணத்தில் ஒரு 750 sft - ல் சிறு 2 BHK portion வீட்டை தரைதளத்திலோ முதல் தளத்திலோ rapidwall முறையில் plan செய்து இணைத்து கட்டி மாத வாடகைக்கு விட்டால் , இது போன்ற பெரும்தொற்று காலத்தில் வீட்டு செலவுகளுக்கு உதவியாக கூடுதல் வருமானம் பெறலாம்.


கேள்வியில் காலியிடத்தின் அளவு, எந்த ஊரில் காலியிடம் உள்ளது, அது urban / semi-urban / rural - ஆ போன்ற தகவல்கள் கொடுத்தால் உங்களுக்கு இன்னும் சிறப்பான பதில்கள் கிடைக்கும், 

விரைவில் வீடு கட்டி புது மனை புகு விழா நடத்திட வாழ்த்துக்கள் !


சிவக்குமார் V.K 

வீட்டுக்கடன் நிதி ஆலோசகர் 

Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs) 
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

CAR LOANS,MUTUAL FUND,FIXED DEPOSIT,HOME LOANS,INSURENCE

ஞாயிறு, 6 ஜூன், 2021

ஒரு வரம்..! "

 படைப்பாற்றால் பட்டினியாய் பல வருடம் இருந்ததால் 

இந்த பாலகனுக்கு பலநாள் தவம் ஒரு நொடி ஞானத்தில் பிறக்க ஆசை வைத்தது..!  


இவன் இயற்கையின் எதிரி 

எப்போது பார்த்தாலும் அதன் உள்ள கூற்றை ஊராருக்கு உரத்து ஊதி உள்ள பூரிப்படையும் சாதி..! 


எழுத்தாணி ஒன்று துண்டு காகிதங்கள் எப்போதும் அவன் கையில் கைதுயாவோமோ..!

என்ற பயத்திலே அவன்மேல் சட்டை பையில் பக்தி பதியம் பாடியபடி இருக்கும்..! 


சரியாக எழுத்து வராது,

எழுதினாலும் ஏகப்பட்ட சந்தி பிழை முந்தி வரும் முரண்..!


எதுகை மோணை இவனுக்கு 

மருத்திற்க்கு  கூட 

சுத்தமாக வராது..! 


எழுதி பார்த்து அறைகுறையாய் வாசிக்க தெரிந்தவர்களிடம் இவண் புலமை ஏகோபித்த வரவேற்ப்பில் புதுவரவில்

அலையாடும் ,வாசிக்க ஆசை ஆனால் அவ்வளவாய் கலைநயத்துடன் 

தனிதிரனில் ஓரளவும் சேர வாராது..! 


ஆனால் அவனின் கவிதை தன்னை,தானே ஆசிவாசகம் 

செய்ய இருக்கிறது..! 

 வைகையின் வலது புற கரையில் அ.வாடிப்பட்டி

 எனும் கிராமமது 


இயற்கை அன்னை அமுதுண்டு அறவாழ்வை 

நிலைபெற இப்படியான கிராம ங்களே அதற்க்கு சாட்சியாய் இன்றும் இருக்கிறது. 


முனியசாமி பெரிய சம்சாரி மனுசன் பச்சதுண்டு போட்ட பச்சகுழந்தயா அவரு..! 

முகவரிகளை முகத்திலே வைத்த மூத்த பெருசு,

சட்ட போட்டத்தில்ல மல்லுவேட்டியிலே கோவணம்

அசிங்கமா நினைச்சதில்ல..!

அவருக்கு பிள்ள முருகன் 

கல்யாணம் ஆகாத இளங்காளை கிழனாருக்கு வருடங்கடந்த திருமணபரிசு இந்த வாசுரிய்யா ஒத்தபிள்ளை தவத்துல குதிச்ச செல்லகுட்டி..! 


மழை விழாது போல வைச்ச வெள்ளாமைய, எடுக்க ஏது வலினு பலமா யோசனையா இருந்தாரு முனியசாமி..! 


"ஏலே ஐய்யா கிணத்து மோட்டர் ஓடி இருக்கு  கீழ பல மட போறதூரபோல பாலி வைச்சுருக்கேன் படக்குனு போடா" என்றார் முனியசாமி.


வேண்டா வெறுப்பாய் "சரி" என்றான் முருகன்,

எழுத ஆசை  ஆனால் உழவுக்கு பழக்க வேண்டிய கட்டாயகாளை அவன்;

பகுத்தறிவு சிந்தனை உடைய எருதிது..! 


காட்டில் வெங்காயத்திற்க்கு நீர் பாய்ந்து கொண்டிருந்து

மடைகளை சரிசெய்து ஒவ்வொரு பாத்தியாக பாய்ச்ச ஆரம்பித்தான்,

ராமக்கரை பாத்தி சுற்றிவ

ர பொழுதாகும் என்பதால் 

அவன் ஏழாமறிவு ஏகோபமாய்

எழும்பியது,


"கால்வாயில் வரும் தண்ணீர் வழியில்

 வரும்போதே என்ன பேசிக்கொள்ளுமோ" என யோசிக்க ஆரம்பித்தான்


வரும்போதே மரவேர்களில் ஏறி அதன் கால் நனைக்க புருபுருவென சிலிர்பூட்டுவதால் தென்னம் கிளைகள் சிரிக்கிறதோ..! 


முலைக்க ஆரம்பிக்கும் வெங்காயத்தாள்  பார்த்து 

"பச்சை நிற மான்கொம்புகள்

மான் எல்லாம் மண்ணுக்குள் புதைந்து மேய்கிறதோ..!


என குறித்துகொண்டான் .

கைதிகளின் மேணியில்..! 


கருப்பசாமி முன்

மழைவேண்டி வரம் கேட்டுகொண்டிருந்தனர் ஊர்மக்கள் சிலர் 


பாலியை வைத்துவிட்டு 

பலி பீடத்திற்க்கருகே போய் நின்றான்.


அவன் கண்ணீல் பட்ட நிகழ்விது.


தாம்பூல  தட்டில்

 காவியணிந்த முனிவனாய்

நெடியதாடி வைத்து நெற்றியில் சந்தன,குங்குமம் வைத்த தேங்காய்,


பச்சை காம்பில் நான்றிக்கு மேற்பட்ட மஞ்சள் பசுகாம்புபோல வாழைப்பழம்

,

ஒற்றைக்கையில் விரலுண்டி

சாய்ந்து படுத்த சுருங்கிய விழிகளில் பார்க்கும் வெற்றிலை,சுருள்பாக்குகள்.


மாட்டுசாணத்தில் ஒற்றை காலில் ஏறிநின்று புகைத்து கொண்டிருந்த நாத்திக ஊதுபக்திகள்,


சாம்பூராணி கரண்டியில் 

நெருப்புதுண்டுகள் சில கருப்பு,சிவப்பு சட்டையை மாறி மாறி போட்டுகொண்டு சம்பவித்துகொண்டிருந்தது,


எதற்க்கென தெரியவில்லை கற்பூரம் தீக்குளித்து கொண்டிருந்தது..? 


குரல்வரை தண்ணீர் குடித்து பேசாமல் அமைதியாய் அமர்ந்திருந்தது

செப்பு செம்பு நீர்..! 


கதம்ப பந்து அலம்பிக்கொண்டு

ஆங்காங்கே சூடியசிலையில் இருந்து..! 


பாய்ந்துகொண்ட தண்ணீர் இடைவெளியில் மழைச்சாரல் 

நிற்க்க இடமில்லாமல் மோட்டாரை நிறுத்திவிட்டு வீட்டுக்கு ஓட்டம் பிடித்தான். முருகன் 

வெளியே இருந்த பச்சை துண்டை எடுத்து துவட்டி கொண்டிருந்தான் .


கனபொழுதில் அவனின் சிந்தனையில் ஒரு கவிதை 

உயிர் பிடித்தது"

"நானும் என் பேனாவும், மழையில் நனைந்தோம்.

என் பேனாவிற்க்கு தலைதுவட்ட காகித தாவணியில் இடம்..!

எனக்கில்லை அப்படி 

ஒரு வரம்..! "

என குறித்து குதுகளித்தான் 


கேள்வி :  பிறந்த வீட்டில் அம்மா எவ்வளவு கத்தினாலும் காலை ஆட்டிகொண்டு ஒரு வேலையும் செய்யாமல் பொழுதை போக்கிய பெண்கள் திருமணம் ஆனதும் கணவன் வீட்டில் அனைத்தையும் சமாளிக்கும் திறமை பெறுவது என்ன மாயம்?


என் பதில் : 


நீங்கள் தமிழ் சினிமா நீறைய பார்த்து விட்டு இந்த கேள்வி கேட்கிறீர்கள் என்று நினைக்கிறன். இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி, கற்பனையான கேள்விகளை கேட்டுக்கொண்டிருக்க போகிறோம்? நீங்கள் எத்தனை வீடுகளில் இப்படி நடந்து பார்த்திருக்கிறீர்கள்?


உண்மையில், திருமணமான பின் அவர்கள் இன்னும் Relaxed ஆக வாழ்க்கை நடத்துகிறார்கள். கணவன் ஒரு டிரைவர் போல் நடந்து கொள்ளுகிறான்!


திருமணத்துக்கு முன் அம்மாவுடன் நடந்துசென்று காய்கறி வாங்கும் பெண், திருமணத்திற்கு பிறகு கணவன் வண்டி ஓட்ட,, கூடைகள் சுமக்க, க்யூவில் நின்று பொருட்களை வாங்கி, மீண்டும் அவளை பத்திரமாக (நன்றாக Dress Makeup கலையாமல் ) வீட்டில் விடும் காலம்!


கணவன் பத்தாது என்று, மாமியார் மருமகளுக்கு வேலை செய்யும் காலமிது! மனிதர்கள் பத்தாது என்று வாஷிங் machine அது பத்தாது என்று Coffee குடித்து Serial பார்க்கும் வேலைக்காரி! சொல்ல போனால் மாமியார், மருமகள் ஏன் வேலைக்காரி உட்பட அத்தனை பெண்களும் சீரியல் பார்க்கும் காலம்! வீட்டு வேலை செய்வது ஆண்கள்! அதுதான் பல இடங்களில் நடக்கிறது!


சுமார் 40 வருடங்கள் முன்பு ஹோட்டலில் பெண்களையே பார்க்க முடியாது! ஆண்களையும் ஹோட்டலில் சாப்பிட விடாமல் அவர்களே சமைத்துப் போடுவார்கள், இன்று பெண்கள் கூட்டம் தான் ஹோட்டலில் அலைமோதுகிறது


பெண்கள் அம்மி மிதித்து திருமணம் செய்து கொள்வதில்லை, அம்மி அரைத்து சட்னி செய்வதில்லை! இட்லி மாவு பாக்கெட்டில் விற்பனை செய்கிறார்கள்! ஆட்டுக்கல் அம்மி போன்றவை இக்காலத்தவர் யாரும் வாழ்க்கையிலே பார்த்து கூட இல்லை!


கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள கணவன் டிரைவர் வேலை பார்க்கிறான். மனைவி நல்ல dress, கணவன் Shorts, Tshirt அணித்து அருமையாக வேலை செய்கிறான்!


உண்மையில் ஆண்களை பார்த்து, நீ ஒரு நாள் கூட உன் அம்மாவை கோவிலுக்கு கூப்பிட்டுக் கொண்டு போனது இல்லையே, தினமும் உன் பொண்டாட்டி யை எப்படி ஆபீஸில் விடுகிறாய்? என்று கேளுங்கள்!


திருமணத்துக்கு முன் சமையல்கட்டில் நுழைந்தது கூட இல்லையே? இன்று உன் மனைவிக்கு எப்படி அவ்வளவு அழகாக காய்கறி நறுக்குகிறாய்? என்று கேளுங்கள்!


ஒரு நாளாவது உன் நண்பனுக்கு, உன் சகோதரனுக்கு, உன் அப்பாவுக்கு, உன் அம்மாவுக்கு ஏதாவது வேலை செய்திருக்கிறாயா? நேற்று உன்னை காய்கறி கடையில் பார்த்தேன்! நீ பொண்டாட்டிக்கு தாசனாக இருப்பது தப்பில்லை, ஆனால் 20 வருடம் வீட்டில் மட்டும் ஏன் சோம்பேறியாக இருந்தாய்? என்று கேளுங்கள்!


நீங்கள் சொல்லுவது போல் நான் எங்கும் நடந்து பார்த்ததில்லை! ஒரே ஒரு இடத்தில் பார்த்தேன்! ஆம் சூரியவம்சம் என்ற சரத்குமார் தேவயானி நடித்த தமிழ் திரைபடத்தில், காதநாயகியாக வரும் தேவயானிதான் நீங்கள் சொல்லும் அந்த கனவுலக, அதர்ச மருமகள்!


பணக்கார பெண், வீட்டில் செல்லமாக வளர்ந்தவள்! ஆனால் கல்யாணமான அடுத்த நாள், பழைய சாதத்தை உருட்டி புதுமையான டிபன் செய்கிறாள்!


வீட்டுக்கு வந்த தேவயாணியின் அப்பா, என் பொண்ணு எப்படி மாறிட்டா என்று தன் பணக்கார மனைவியிடம் சொல்லி வியப்படைகிறார்!


நான் நினைக்கிறேன், நீங்கள் அந்த சினிமாவை பார்த்துவிட்டு அப்படியே தூங்கி விட்டீர்கள்! கனவில் வந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து, எல்லா மனைவிகளும் தேவயானிகள் என்ற அடிப்படையில் கேட்கிறீர்கள்!


மீண்டும் தூங்குங்கள்! கனவு வரும்!


திருமணத்துக்குமுன், படிப்பே வராத பெண் கல்யாணம் ஆனதும் எப்படி கலெக்டர் ஆகிறார்? என்று கேள்வி கேட்கலாம்!


திருமணத்துக்குமுன் புடவை கட்டாத பெண், திருமணம் ஆனதும் எப்படி அழகாக புடவை கட்டுகிறார்? என்று பல கேள்விகளை நாம் கேட்கலாம்


முதல் கேள்விக்கு பதில், நீங்கள் பெரிய தொழிலதிபர் ஆகவேண்டும், உங்கள் மனைவி கலெக்டர் ஆக வேண்டும் என்றால், நட்சத்திர ஜன்னல் என்ற பாடலை ஒலிக்க விட வேண்டும்! பாட்டு முடிந்ததும், நீங்கள் நினைத்த எல்லா மாற்றங்களும் நடக்கும்! ஆனால் தேவயானி கலெக்டராக, ஒரு கண்ணாடி போட்டுக் கொண்டால் போதும்! கண்ணாடி போட்டுக் கொண்டால் நாம் எளிதாக கலெக்டர் ஆகிவிடலாம்!


ஒரு பாட்டு, ஒரே ஒரு பாட்டு போதும், அத்தனை பேரும் மாறிவிடுவார்கள்!


மீண்டும் சொல்கிறேன் அந்த பாடலை, குறித்து வைத்துக்கொண்டு வீட்டில் பாடினால் எல்லாம் மாறிவிடும்!


நட்சத்திர ஜன்னல்கள், என்று தொடங்கும்!! பெண் என்பவள் குடும்பப்பாங்கான மருமகள் கலெக்டர் மட்டுமல்ல, படிக்காத ஆண் கூட தொழிலதிபராக மாறிவிடலாம்! நீங்கள் கேட்ட மாற்றங்கள் சுலபமாக நடக்கும்! யாருக்கும் தெரியாமல் நைசாக, மாமனார் காலில் விழுந்து வணங்குவார், மருமகள்!


நன்றி ...வணக்கமோ ..வணக்கம் ...


கொரோன காலம் ..படித்திவிட்டு ..டெலிட் செய்து விடுங்கள் ..எதிர் கேள்வி கேட்டால் ..நிர்வாகம் பொறுப்பல்ல ...



சனி, 5 ஜூன், 2021

கேள்வி : பிட்காயின் என்றால் என்ன? ஒரு குழந்தைக்குச் சொல்வது போல் எப்படி சொல்வீர்கள்?


என் பதில் : 


பணம், துட்டு, டப்பு, தங்கம், வெள்ளி இவற்றுக்கு எப்போதுமே மதிப்பு தான். இதை தான் வள்ளுவனும்"பொருள்இலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு" என்று கூறி சென்றுள்ளார்.


பணத்தை பற்றி அறிந்துகொள்ள யாருக்கு தான் ஆர்வம் இல்லை? சரி இந்த வாரம் கொஞ்சம் வேறுபட்ட பணத்தை பற்றி பார்ப்போம், அது என்ன பணத்தில் வெறுப்படட பணம் என்று யோசிக்கிறீர்களா?


இந்த வாரம் நாம் கொஞ்சம் டிஜிட்டல் பணம் என்று கூறப்படும் பிட் காயினை பற்றி பார்ப்போம்.


என்னால் முடித்த வரை மிக எளிமையாக விளக்க முற்படுகிறேன்.


நானும் நீங்களும் உடுமலைபேட்டையில்  இருந்து சென்னைக்கு இரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம் உங்களுக்கு பசிக்கிறது உண்ண உங்களிடம் ஒன்றும் இல்லை அப்போது என்னிடம் இருக்கும் ஒரே ஒரு வாழைப்பழத்தை உங்களிடம் கொடுக்கிறேன் . இப்போது உங்களிடம் ஒரு பழம் உள்ளது என்னிடம் ஒரு பழமும் இல்லை. இந்த கணக்கு மிகவும் எளிமையாக இருக்கிறது இல்லையா?


இதை சற்று விவரமாய் பார்ப்போமா?


என்னிடம் இருந்த ஒரு பழத்தை உங்களிடம் கொடுத்தபோது, அந்த பழத்தை உங்கள் கையில் பெற்றுக்கொண்டபோது அதை நீங்கள் உணர்ந்தீர்கள், அதாவது என் கையில் இருந்த பலம் உங்கள் கைக்கு மாறியதை நீங்கள் பார்த்தீர்கள், மூன்றாம் நபரின் சாட்சியம் அல்லது மத்தியஸ்தம் தேவை படவில்லை.


என்னிடம் இருந்த ஒரே ஒரு பழம் இப்போது உங்களுடையது. இந்த பழத்தை நீங்கள் சாப்பிடலாம் அல்லது உங்களோடு வரும் உங்கள் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ நீங்கள் கொடுக்கலாம்.


எனவே ஒரு பரிமாற்றம் என்பது இப்படி தான் இருக்கும், அது ஒரு வாழைப்பழமோ, ஒரு புத்தகமோ, அல்லது ரூபாயோ.


மீண்டும் வாழைப்பழ கதைக்கு வருவோம்!


இப்போது, என்னிடம் ஒரு டிஜிட்டல் வாழைப்பழம் உள்ளது என்று வைத்துக்கொள்வோம். இங்கே, எனது டிஜிட்டல் வாழைப்பழத்தை உங்களுக்கு தருகிறேன். என்ன இப்போது சுவாரஸ்யம் கூடுகிறதா? அல்லது தலை சுற்றுகிறதா?


என்னுடையதாக இருந்த டிஜிட்டல் வாழைப்பழம் இப்போது உங்களுடையது, உங்களுடையது மட்டுமே என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? ஒரு நொடி யோசித்துப் பாருங்கள். இது மிகவும் சிக்கலானது என்று தோண்றுகிறதா? நான் முதலில் அந்த வாழைப்பழத்தை என் காதலிக்கோ அல்லது என்ன நண்பனுக்கோ ஒரு மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பவில்லை என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?


அந்த டிஜிட்டல் வாழைப்பழத்தின் ஓரிரு நகல்களை எனது கணினியில் செய்திருக்கலாம். இப்படி செய்ததை ஒருவேளை இணையத்தில் ஒரு கோடி மக்கள் பதிவிறக்கம் செய்திருக்கலாம்.


இந்த டிஜிட்டல் பரிமாற்றம் இப்போது ஒரு சிக்கலாக தோன்றுகிறதா? இதை கணினி விஞ்ஞானிகள் இரட்டை செலவு சிக்கல் என்று அழைப்பர். இதனால் தான் டிஜிட்டல் பரிவரித்தனைகள் சிக்கல் நிறைந்ததாக கருத படுகிறது.


தீர்வு இல்லாத பிரச்னை ஏது? இதற்கான தீர்வு என்னவாக இருந்தால் நன்றாக இருக்கும்?


இந்த டிஜிட்டல் வாழைப்பழத்தை கண்காணித்து பதிவு செய்ய ஒரு பேரேடு இருந்தால்?


அந்த பேரேடு மின்னணுவாக இருக்கும் போது, அது துரைச்சார்ந்த யாரவது ஒருவரின் கண்காணிப்பில் இருந்தால்?


அந்த பேரேடு சந்தையில் உள்ள அனைத்து டிஜிடல் வாழைப்பழங்களின் பதிவிடமாக இருந்தால்?


மேலே குறிப்பிட்ட அத்தனை இருந்தாளுக்கும், விடை இருந்தாலும் இன்னொரு பிரச்சனை உள்ளது.


இந்த டிஜிட்டல் பேரேடு கண்காணிக்கும் ஒருவர், சில வாழைப்பழங்களை தனது கணக்கில் சேர்த்து கொண்டால்?


இந்த சிக்கல்களை பார்க்கும் போது மூன்றாவது ஒருவரை ஒவ்வொருமுறை இம்மாதிரியான பரிவர்த்தனை செய்யும் போது மேற்பார்வைக்கு அழைக்கத் தோண்றுகிறதா?


இரயிலில் நாம் செய்து கொண்ட வாழைப்பழ பரிவர்த்தனை போன்று சுமுகமாக இதை எப்படி மாற்றலாம்?


பேரேடு ஒருவரிடம் மட்டும் இல்லாமல், சந்தையில் இருக்கும் எல்லோரிடமும் இருந்தால்? அதுவும் உங்கள் கணினியிலேயே! சந்தையில் நடந்த அத்தனை வாழைப்பழ பரிவர்த்தனைகளும் அதில் பதிவானால் எப்படி இருக்கும்?


இந்த அமைப்பை ஏமாற்றுவது சிரமம் ஏனென்றால் இங்கு யாரும் அதிகப்படியான வாழைப்பழத்தை சந்தையில் இறக்க முடியாது ஏன் என்றால் உங்கள் தகவேடு இந்த பிழையை வெளிச்சம் போட்டு காட்டிவிடும்.


இந்த தகவேடு ஒருவரால் மட்டும் நிர்வகிக்க படுவதில்லை என்பதால் நினைத்த மாதிரி கள்ள நோட்டு அடிக்க முடியாது.


இப்போது இந்த அமைப்பை பரந்து விரிந்து வலைப்பின்னல் போல கற்பனை செய்து பாருங்கள். இந்த அமைப்பு மிகப்பெரியது. கீழே குறிப்பிட்டுள்ள படத்தை போன்றது.


இதற்கான சட்டதிட்டங்கள் மற்றும் குறியீடுகள் ஒரு ஓபன் சௌர்ஸ்(Open Source), எடுத்துக்காட்டாக; ஒரு ஆண்டிராய்டு மென்பொருள் ஓபன் சௌர்ஸ்(Open Source) இது உங்கள் கைபேசியை உயிப்பிக்க உலகெங்கிலும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் உபயோகின்றன. இதை போன்று இந்த ஓபன் சோர்ஸில் நீங்களோ, நானோ, உங்கள் பக்கத்து வீட்டுக்காரரோ சேர்ந்து நம் பங்களிப்பை கொடுக்கலாம்.


நாம் அந்த பேரேட்டை கண்காணிக்கலாம், சரிபார்க்கலாம், அதில் மாறன்களை கொண்டு வர உதவலாம். உங்கள் பங்களிப்புக்கு சில வாழைப்பழங்கள் அளிக்கப்படும். இதுவே புதிய வாழைப்பழங்களை உருவாக்க ஒரே வழி.


இப்போது இங்கு விளக்கியது தான் பிட்காய்ன் நெறிமுறைகள், அந்த வாழைப்பழங்கள் தான் பிட்காயின்கள்.


இந்த டிஜிட்டல் வாழைப்பழம் அதான் நம்ம பிட்காயின் மிகப் பிரபலம் உலகின் தலைச்சிறந்த பல்கலைக்கழகங்களில் இருந்து நம்மூர் வட்ட செயலாளர் வண்டுமுருகன் வரை இது குறித்து வாதிடுகிறார்கள்.


இதை பணம் என்கிறர்கள் சிலர் ஏமாற்று வேலை என்கிரார்கள்.


நான் என்ன நினைக்கிறேன் என்று கேட்குறீர்களா?


பிட்கய்னோ அல்லது பங்குச்சந்தை பரிவர்த்தனைகலோ வலைவீசும் வாட்ஸ்அப் குரூப்கள், நிதி ஆலோசகர்கள், டெலிகிராம் சேனல்கள் என்று பெருகிக்கொண்டிருக்கின்றன. வேடிக்கை பார்க்கக்கூட அந்தப்பக்கம் போய்விடவேண்டாம். முழுக்க சதுரங்கவேட்டையர்கள்... உஷார்.


சிவக்குமார் .V.K 

நிதி ஆலோசகர் ..

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

கேள்வி : இந்திய மக்கள் தற்போது அனுபவிக்கும் இந்த இக்கட்டான சூழல் எப்போது மாறும்?


என் பதில் : 


எனது 5 பாயிண்ட் போர்முலா

முழுமையாக முக கவசம் அணிவது, கையை அடிக்கடி கழுவுவது - சமூக இடைவெளி மேற்கொள்வது அவசியம். நமக்கும் குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் நாட்டுக்கும் நாம் செய்ய வேண்டிய மிக பெரிய கடமை இது

நம் தேர்தல், கூட்டங்கள், மாநில அரசு மத்திய அரசு இவற்றை சொல்லி ஒன்னும் பண்ண முடியாது. உயிர் உடம்பு மனதுக்கு அவர்கள் மட்டும் பொறுப்பு அல்ல. கூட்டங்கள் தேர்தல் ஆரவாரம் - தேவை இல்லாத சண்டை தாக்குதல்கள் ஏதாவது கொரோனா காலத்தில் கூட நிற்கிறதா? ஆகையால் தேவை இல்லாமல் இவர்கள் போடும் மீடியா சர்ச்சகளை குறைத்து விட்டு நாமே நம் மனதுக்கு இளைப்பாறுதலை தர வேண்டும். இல்லை என்றால் மன நோய் வருவதற்கான மிக பெரிய சூழல் தான் கடந்த 14 மாதத்துக்கு மேல

வேலை இல்லா திண்டாட்டங்கள், வேலை பிரச்சனை, பண புழக்க பிரச்சனை, திடீர் மாற்றங்கள் - இன்னும் குறைந்த பட்சம் ஒரு வருடமாவது சந்திக்க நேரிடும். நீங்க drone வைத்து சாப்பாடு ஆர்டர் செய்யும் தேசத்தில் இருந்தாலும் இன்னும் வருமானம் கம்மி உள்ள தேசத்தில் இருந்தாலும் இந்த எகனாமிக் depression சந்தித்து ஆக வேண்டிய சூழல். ஆகையால் இயன்ற வரை இனைய வழியில் ஏதாவது புது தொழில் முறை அல்லது சம்பாதிக்கும் முறையை பயில ஏற்ற நேரம்

அடிப்படை வசதிகள் நல்ல காற்று நல்ல குடிநீர் நல்ல சூரிய ஒளி நல்ல மண் வளம் சுகாதாரம் பற்றி தெரிந்து கொள்ள அதனால் திருப்தி கொள்ள - மனதில் தெளிவு ஏற்பட பேராசைகள் விலக இயற்கை கற்று கொடுத்த இந்த மாதங்களை எண்ணி இவை எல்லாவற்றுக்கும் நாம் எல்லோரும் நம் அடுத்த தலைமுறைக்கு கொடுக்க ஒருங்கே பாடுபடுவோம் என்னும் குறிக்கோளை ஒருங்கேற செயலாற்றுவோம்

அனைத்துக்கும் மேல இந்த உயிர் சேதங்கள் பொருள் சேதங்கள் உள்ள உலக இக்கட்டான சூழலில் நியூஸ் சேனல் போல நாமும் சண்டை இட்டுக்கொள்ளாமல் முகநூல் ,வாட்ஸாப்ப் ,இன்ஸ்டாகிராம் , (இந்த மீடியா ) மட்டும் அல்ல பிறர் வம்பு இழுத்தாலும் திட்டினாலும் வசவு சொன்னாலும் சண்டை இல்லமல் - சமாதானமாக சென்று விடுவோம். இது நம் மன இதய உணர்வு நல்வாழ்வுக்கு மிக மிக அத்தியாவசியம்

மேற்கூறிய அனைத்தையும் பின்பற்றினாலே கண்டிப்பாக மாறும் - சில மாதங்களில்

 நன்றி

வெள்ளி, 4 ஜூன், 2021

 Question : Deloitte is giving me 11.5 CTC (consultant) and Infosys (Tech analyst) is giving 11.75 CTC. Which one to go?


My Ans :



I would suggest you to go for Deloitte in this scenario. Yes, the joining salary is a little less at Deloitte but there are two reasons why you should consider the offer from Deloitte over Infosys in my opinion.


Firstly, look at the designation that they are offering you. The designation of a Consultant is senior compared to a Tech Analyst. So you will be at a senior position in the project that you will be joining in. By the time you will get promoted from Tech Analyst to a Consultant at Infosys, you will be eyeing your next promotion at Deloitte.


Secondly, salary hikes at Deloitte is comparatively more than Infosys. So even though you will be joining at 0.25 LPA lesser package, in one year only that difference will be made up for as Deloitte offers higher annual increments than Infosys.


Plus, the fact that work culture at Deloitte is a lot better than most other service based companies in India makes it the best option to go for in my opinion.


Thanks ..All the Best ...

 

🌧️🌧️🌧️ இரங்கல் செய்தி😭..🙏🙏🙏




திரு .கே .குப்புசாமி -தமிழ்நாடு மின்சாரவாரியம் -ஓய்வு-பெரியகோட்டை -சுந்தர் கவுண்டர் லே -அவுட் , உடுமலைபேட்டை ..வயதுமூப்பின்காரணமாக இன்று மாலை  காலமானார் .(04-06-2021)எங்கள் குடும்பத்தின் சார்பாக ஆழந்த இரங்கல்கள் .



மறைந்த என் தந்தையின் உற்ற நண்பர் ..சிறு வயதிலேயே மிகவும் வாழ்க்கையில் போராடி ..நல்ல நிலைமைக்கு வந்து இன்று அருமையான மகன் ,மகள்களுடன் ,பேரக்குழந்தைகளுடன் கூட்டு குடும்பமாக எடுத்துக்காட்டாக விளங்கி மறைந்தார்  ...என் சிறுவயதில் என் அப்பாவுடன் அவர் வீட்டுக்கு செல்லும்பொழுது எல்லாம் ..அந்த புன்னகை மாறாத சிரித்த முகம் தான்  என் நினைவுக்கு வரும் . ..எந்த ஒரு சூழ்நிலையிலும் அவரின் கோபத்தை பார்த்து இல்லை ..என் தந்தையும் அவரும் சிறுவயதில் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டார்கள் என்பதை அவ்வுப்பொழுது என்னிடம் கூறுவார் ..




என் தந்தையும் பெரியப்பாவும் பேசும்பொழுது சிறு வயதில்  நடந்து நிகழ்வுகளை கூறி மகிழ்ச்சிகடலில் ஆழ்த்துவர் ..கல்வி ஒன்று தான் வாழ்க்கையில் முக்கியம் அடிக்கடி  கூறிக்கொண்டே இருப்பார்கள் ..நாங்கள் கஷ்டப்பட்டு வந்த மாதிரி நீங்களும் படக்கூடாது தக்க அறிவுரைகளை கூறுவார்...எங்கள் வீட்டின் அருகில் தான்  என் சிறுவயதில் மின்சாரவாரிய குடியிருப்பு வளாகத்தில் ..குடியிருந்தார் ..வீட்டுக்கு செல்லும் பொழுது எல்லாம் ..அவர்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை ..பாசம் மாறாமல்  வீட்டுக்கு போகும்பொழுது வழியனுப்பிவைப்பார்  ..




பெரியப்பா அவர்கள் மின்சார வாரியத்தில் பணிபுரிந்ததால் நேர கட்டுப்பாடுகளை நன்கு உணர்ந்தவர் ..அவரை பார்த்து  தான் நேரத்தை எப்படி செலவழிப்பது தெரிந்து கொண்டேன் ...பள்ளி ,கல்லூரி காலம் முடிந்து நான் பணிகாரணமாக கோவை சென்று விட்டதால் ..அவரின் நட்புவட்டம் காலசூழ்நிலை காரணமாக குறைந்தது ..




நான்  உடுமலை வரும்பொழுது எல்லாம்  அப்பாவை அழைத்துக்கொண்டு அவரின் இல்லம் சென்று ..பேசிவருவோம் ....வயது மூப்பின் காரணமாக எனது தந்தையும் மூன்று வருடங்களுக்கு முன் காலமானார் ..என் அப்பாவின் இறப்பு வந்தபொழுது கூட .அதிகம் வருந்தினார் .என்னிடம் ..அருமையான என் நண்பர் இனிமேலும் கிடைக்கமாட்டார் என்று ..




இன்று அவர் மறைந்தாலும் அவரின் என் சிறுவயது நினைவுகள் நீங்க நினைவுகளாக இருக்கும் ..வாழ்க்கையில் சில இழப்புகளை தாங்கி கொள்ளமுடிவதில்லை ..அவருக்கான இறுதி மரியாதையை .எனது தந்தைக்கு செலுத்தியது போன்று என் வாழ்வின் மறக்கமுடியாதவை ...


எனது தந்தை மறைந்த அன்றும்🌧️🌧️ வான் மேகங்கள்  சிறு மழைத்துளிகளுடன் கண்ணீர் சிந்தியது 🌧️🌧️..இன்றும் அவருக்கும் மேகங்கள்  சிறு மழைத்துளிகளுடன் அதன் அஞ்சலையை செலுத்தியது ..🌧️🌧️🌈🌈.



என்றும் பெரியப்பா நினைவுகளுடன் 🙏🙏🙏🙏🙏


உடுமலை சிவக்குமார் ..9944066681🥰🙏

 


 


வியாழன், 3 ஜூன், 2021

 #தமிழ் வழியில் படித்த 

தமிழ் வீரமங்கை 

#மாவட்ட_உதவி ஆட்சியர். (சப் -கலெக்டர் )


பழனி அருகில் கரிக்காரன் புதூர் கிராமத்தில் பிறந்த திருமிகு 

#தமிழ்_ஓவியா கிராமத்தில் பள்ளி படிப்பு, பெரியகுளத்தில் தோட்டக்கல்லூரியில் இளங்கலை, 2016 பழனி கனரா வங்கி ஊழியர், அதன் பிறகு Group 2ல் தேர்ச்சி பெற்று தாராபுரத்தில் மாவட்ட கல்வி உதவி அலுவலர்.


மீண்டும் விடா முயற்சி 4 வது முறை IAS தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று தற்சமயம் மேற்கு வங்க மாநிலத்தில் உதவி ஆட்சியராக ,பணி நிமித்தம். வளர்ந்து வரும் நமது குழந்தைகளுக்கு இப்படிபட்டவர்களை அடையாளப்படுத்தி ஊக்கம் அளிப்போம். 


தமிழை அதிகம் நேசித்ததால் அவர் தமிழ் ஓவியா என்று பெயர் மாற்றம் செய்துள்ளதாக IAS தேர்வு நேர்முகத்தேர்வில் தெரிவித்துள்ளார். 


வாழ்த்துகள்.

🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

 கேள்வி : பீட்டர் கோட்பாடு. என்றால் என்ன ?  சேல்ஸ்மேன் வேலையில் எப்படி பார்க்கப்படுகிறது ..


பதில் : நியாண்டர் செல்வன் அவர்களின் பதிவு ....


நீங்கள் நல்ல சிறப்பான சேல்ஸ்மேன் என வைத்துக்கொள்வோம். விற்பனையில் பின்னி எடுக்கிறீர்கள். இன்க்ரிமெண்ட் எல்லாம் கொடுத்து பாராட்டுகிறார்கள். சில ஆண்டுகள் கழிகின்றன. அடுத்து புரமோசன் கொடுத்தே ஆகவேண்டும். கொடுக்கவில்லை என்றால் வேலையை விட்டுவிட்டு போய்விடுவீர்கள்.

அதனால் உங்களை சேல்ஸ் மேனேஜர் ஆக பதவிஉயர்வு கொடுக்கிறார்கள். இப்போது உங்களுக்கு கீழே நாலு சேல்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். உங்கள் பழைய ஏரியா ஒரு புதிய சேல்ஸ்மேனிடம் கொடுக்கபடுகிறது.

உங்கள் பழைய ஏரியாவை புதிய சேல்ஸ்மேனால் உங்களைபோல கையாளமுடியவில்லை. விற்பனை அங்கே தள்ளாடுகிறது. அதே சமயம் சேல்ஸ் மேனேஜராகவும் உங்களால் சரியாக செயல்படமுடியவில்லை. காரணம் அது புதிய தொழில், அதில் ஜெயிக்க வேறுவிதமான திறமைகள் அவாசியம். சேல்ஸ்மேனாக இருந்தபோது கற்றுக்கொண்ட திறமைகள் இதற்கு உதவாது.

கம்பனி இப்போது என்ன செய்யும்?

உங்களை முக்கியம் இல்லாத வேறு ஏரியாவுக்கு சேல்ஸ்மேனேஜராக மாற்றும். நீங்கள் அங்கே திறமையின்மையாக செயல்பட்டாலும் அதனால் பெரிய சிக்கல் எதுவும் இல்லை என்றால் அதன்பின் உங்களை கண்டுகொள்ளாமல் கழட்டிவிட்டுவிடுவார்கள். ஆயுள் முழுக்க பெஞ்சை தேய்த்துக்கொண்டு சம்பளம் வாங்கிக்கொண்டு ஓய்வுபெறவேண்டியதுதான்

நிர்வாகவியலில் இதை பீட்டர் கோட்பாடு (Peter principle) என அழைக்கிறார்கள்.

ஒரு வேலையில் நன்றாக செயல்பட்டு, பதவி உயர்வு பெற்று, செயல்திறனை இழக்கும் தொழிலாளிகள் அதன்பின் அதே வேலையில் தன் கெரியர் முழுக்க நீடிக்கும் நிலைதான் பீட்டர் கோட்பாடு.

பலகம்பனிகளில் ஆண்டுக்கணக்கில் ஒரே வேலையில் தேங்கிநிற்கும் பல பீட்டர்களை காணமுடியும்

~ நியாண்டர் செல்வன்

 ஷியாம் ...சைக்கிள் ..உலக சைக்கிள் தினம் .....


சைக்கிள் என்பது எனக்கு நினைவு தெரிந்து 13 வயதுக்கு மேல்தான் சைக்கிள் பற்றியே நினைவு வரும் ..அந்தவயதில் பெரியவர்கள் ..அண்ணன்கள் ஓட்டும் சைக்கிள் பார்த்து வேடிக்கை மற்றும் பார்ப்போம் .,.எனக்கு விவரம் தெரிந்தவுடன் ஆறாவது வகுப்பு மேல் ஓட்டவும் கற்றுக்கொண்டோம் ..ஷ்யாமுக்கு நான்கு வயதில் சைக்கிள் வாங்கவதற்கு போவதற்கு ..ஆடி கார் வாங்க சொல்லுவது போவதுபோல் போனது இன்னும் நினைவில் உள்ளது .ஒரு வாரத்துக்கு முன்னரே ..நண்பர் வீட்டுக்கு   சென்று இருக்கும் பொழுது  ஷியாம் அவர்கள் வீட்டில் இருந்த சிறிய சைக்கிளை பார்த்து ..அதன் மேல் ஏறி உட்கார்ந்து பாலன்ஸ்சுடன் விழுக்காமல் ஒரு ரவுண்டு சுற்றும்போது ...அடடா ..பயம் இல்லை ..தாராளமாக வாங்கி கொடுக்கலாம் என்று தோன்றியது  ..மாலை காரில் சென்று ...கோவை ராஜவீதியில் தடிக்கி விழுந்தால் சைக்கிள் கடையில் விழவேண்டும் சுற்றி 15 கடைகள் ...விதவிதமான வண்ணங்களில் ..விளையும் அதேமாதிரிதான் ..ஷ்யாமுக்கு பார்த்தவுடன் மகிழ்ச்சி ஆர்வம் ..அப்பவே எடுத்தவுடன் ராஜவீதில் பெரியாவாகனங்களின் நெரிசல் பகுதியில் ஓட்டவேண்டும் என்று கொஞ்சம் அவர்கள் அம்மா மாதிரி வேகம் ...பொறுமையாக ..அன்பாக சொல்லி ...காரில் பின்சீட்டில் வைத்து ...சைக்கிளின் மேல் உட்கார்ந்து வடவள்ளி வீடு முடிய கெட்டியாக பிடித்து உட்கார்ந்து வந்தார் ..பற்றை என்னவென்று சொல்லுவது ...வீட்டில் வந்தவுடன் வீட்டிற்குள் உட்கார்ந்து முன் பின் நகருத்துவது ..பயிற்சி ...அப்பா நாளை காலை நேரமே எழுந்து தார் ரோட்டில் ..தனியாக ஓட்டவேண்டும் என்று கட்டளை வேறு ..காலை விரைவாக எழுந்துவிட்டார் ஷியாம் ..அப்பா சைக்கிள் பழகலாம் என்று ..பின்னாளில் ஸீட் ஹாண்ட் பிடித்துக்கொண்டு வடவள்ளி இடையார்பாளையம் ரோடு .....காலப்பநாயக்கன் பாளையம் ரோடு ....வானப்ரஸாத முதியோர் இல்லம் வழியாக வந்து ..எப்படியும் 5 கிலோமீட்டர் தூரம் ..பயற்சி ..அவருக்கும் பயற்சி ..எனக்கும் நல்ல மூச்சு பயிற்சி ..அதைவிட சின்ன சின்ன ஆசை ..எனக்கு இந்த சிறுவயதில் கிடைக்காத ஆசைகள் எல்லாம் ஷ்யாமின் மூலம் கிடைத்தது ...வருடங்கள் 10  ஆனாலும் நினைவுகள் என்றும் மறப்பதில்லை ...

புதன், 2 ஜூன், 2021

கேள்வி : நம்பிக்கையை கைவிட்டு விடக்கூடாது என்பதற்கு ஒரு சிறந்த சம்பவத்தை சொல்ல முடியுமா?


என் பதில் : 


தாய்லாந்தில் நடந்த கதை. ஒரு ஜூனியர் புட்பால் டீம் தன்னோட பயிர்ச்சி முடிஞ்ச பிறகு அங்க உள்ள ஒரு குகைக்கு போயிருக்காங்க. கேவ் எக்ஸ்ப்ளோர் பண்ணுவதற்காக. இதை அவங்க வழக்கமாக பண்ணுவது தான். 12 பேர் இருக்காங்க எல்லோருமே 12 முதல் 16 வயசு உள்ள சின்ன பசங்க தான். அவங்க 25 வயதுடைய கோச்சுடன் போயிருக்காங்க. அன்னைக்கு வழக்கத்துக்கு மாறாக மழை பெய்து வெள்ளம் அவர்கள் சென்ற குகையுடைய பாதையையே மூடிடுச்சு.


கொஞ்ச நேரத்தில் இந்த விஷயம் எல்லோருக்கும் தெரிய வருது. அவங்களை காப்பாற்ற முயற்சிகள் நடக்குது.


கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகியும் எதுவுமே தெளிவா கண்டுப்பிடிக்க முடியலை. ஏன்னா, தண்ணீர் ரொம்ப அதிகமாகவும் குகை ரொம்ப குறுகலாகவும் இருந்ததால் அதற்குள்ளே போயி வருவது ரொம்ப சிரமமான விஷயமாயிருந்தது.


எல்லோரும் என்ன நினைச்சாங்கன்னா, குழந்தைகள்லாம் அங்கே சிக்கி ஒரு வாரம் ஆகிடுச்சு. இனியும் அந்த குகைக்குள்ள சாப்பாடு, தண்ணீர் இல்லாமல், மூச்சி விட முடியாமல் இருக்க முடியாது. உயிரோட இருக்க சாத்தியமில்லைன்னு நினைச்சாங்க. குறைந்தது அவங்களோட உடலையாவது மீட்டெடுக்கணும்ங்குற மனநிலைக்கு வந்துட்டாங்க.


அப்போ தான் எல்லோருக்கும் பெரிய ஆச்சர்யம் காத்துக்கிட்டிருந்தது. குகை வாயிலில் இருந்து நாலு கிலோமீட்டர் தள்ளி அந்த பசங்க எல்லோரும் உயிரோடு இருப்பதை கண்டுபிடிக்கிறாங்க.


இவங்களை காப்பாற்றவே கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகுதுன்னா பாருங்க. அந்த பசங்களை மயக்க நிலைக்கு கொண்டு வந்து தான் காப்பாத்தியாகணும். ஏன்னா வர வழியிலே பயந்துட்டா பிரச்சனையாயிடும். அவ்வளவு போராடி காப்பாத்துறாங்க.


துரதிஷ்டவசமாக ஒரு டைவர் அவர்களை காப்பாற்ற சென்ற இடத்தில் இறந்துடுறார்.


இதில் ஆச்சர்யம் என்னன்னா, எப்படி அவங்க தாக்குப்பிடிச்சாங்க. எப்படி அவ்வளவு நாள், அவ்வளவு இருட்டுல அந்த சின்ன பசங்களால தைரியமா, நம்பிக்கையோடும் இருக்க முடிஞ்சது.


சின்ன குழந்தைகளாலேயே இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இவ்வளவு நம்பிக்கையோடு நம்ம காப்பாத்திடுவாங்கன்னு மன தைரியத்தோடு இருக்க முடியும்னா நம்மளால வாழ்க்கையில சாதிக்க முடியும்ங்குற அளவுக்கு கூடவா நம்பிக்கை இல்லாமல் போயிடும்.


வாழ்க்கை எவ்வளவு மோசமாக ஆனாலும் நம்ம தைரியமாயிருக்கணும். ஏன்னா, எப்ப அது மாறும், யார்க்கிட்டேருந்து உதவி வரும், எப்போ மிராக்கில்ஸ் நடக்கும்னு யாருக்குமே தெரியாது.


நம்பிக்கை ..தன்னம்பிக்கை ...

 கேள்வி : தெலுங்கு மக்கள் இன்னோரு தெலுங்கு மக்களுக்கு உதவி செய்வது போல தமிழ் மக்கள் ஏன் உதவி செய்வதில்லை? முக்கியமாக இந்த தகவல் தொழில்நுட்ப துறையில்.


என் பதில் : ..என் பதிலைவிட துபாயில் பணிபுரியும் என் மதிப்புமிக்க வாடிக்கையாளர் ,ராஜேஷ்  -கணிணிப்பொறியாளர் ..அளித்த பதில் ...கொஞ்சம் யோசிக்கவைத்தது ...



தெலுங்கு என்பதை, மலையாளம் என்று மாற்றி, தகவல் தொழில்நுட்பத் துறை என்பதை நான் வேலை பார்க்கும் கட்டிடத் துறை என்று மாற்றி நான் இதற்கு பதில் சொல்கிறேன். ஏனென்றால் எனக்கு அது தான் தெரியும்.


துபாயில் ஒரு நல்ல கட்டுமான கம்பெனியில், ஜூனியர் இன்ஜினியர் வேலை காலியாகிறது.


இரண்டு சீனியர் இன்ஜினியர் வேலை செய்கிறார்கள். ஒருவர் சுரேஷ், என்கூட படித்த நண்பன்! இன்னொன்று ஜோஸ் என்ற மலையாளி!


தன் கம்பெனியில் ஒரு இடம் காலியாக போகிறது என்று தெரிந்த உடனேயே, ஒரு மாதத்திற்கு முன்பே ஜோஸ் கேரளாவிலுள்ள தனக்கு தெரிந்த ஒருவருக்கு போன் போட்டு, " இங்கு ஒரு வேலை காலி ஆகப்போகிறது, உடனே பாஸ்போர்ட் எடுத்து வா நான் பார்த்துக்கொள்கிறேன், அருமையான சம்பளம் நல்ல வேலை!!! " என்று கேரளாவில் உள்ள தனது நண்பனை இவரே கூப்பிடுவார்!


நம்மாள் சுரேஷ், வேறு மாதிரி சிந்திப்பார்!


ராஜேஷ் என்ற ஒருவன் வேலைக்கு வந்துவிட்டால் நாளை அவன் நம் வேலைக்கு வேட்டு வைத்து விடுவான். அதனால் இந்த வேக்கன்சி பற்றியே வாய் திறக்க மாட்டார்!


நான் யார் மூலமாகவோ தெரிந்துகொண்டு, சுரேஷ்க்கு போன் போட்டு பேசினேன்!


சுரேஷ் உன் கம்பெனில ஒரு வேலை காலி அப்படின்னு சொன்னாங்க, நான் வந்து விடவா?


யார் சொன்னா?


இல்லை நான் கேள்விப்பட்டேன்!


நான் வேலை பார்ப்பது ஒரு டுபாக்கூர் கம்பெனி! இங்கே சம்பளம் ஒழுங்காக தர மாட்டார்கள்! இங்கே உனக்கு தங்குவதற்கும் இடம் கிடைப்பது கஷ்டம்!


நான் ஏண்டா இந்த வேலைக்கு வந்தோம் , திரும்ப எப்ப தமிழ்நாட்டுக்கு போவோம் என்று ஏங்கிகிட்டு இருக்கேன்! தயவு செய்து இந்த வேலையை நம்பி வந்துவிடாதே! துபாய் முன்னே மாதிரி கிடையாது, அவ்வளவு பணம் இங்கே இல்லை ராஜேஷ்! அதனால் நீ என்னை நம்பி தயவுசெய்து வந்துவிடாதே! என்று கூறி போனை வைத்துவிடுவார் சுரேஷ் என்ற நம் தமிழ் நண்பர்!


கேரளாவில் இருந்து செல்லும் உறவுக்காரர்கள் நண்பருக்கு ஜோஸ் அந்த கம்பெனியில் உள்ள எல்லா வேலையும் வாங்கி கொடுத்து, Mini கேரளா ஒன்றை தான் சென்ற இடத்தில் உருவாக்குவார்!


ரஜினிகாந்த் சென்னை வந்த பிறகு, மோகன் அர்ஜுன் முரளி பிரகாஷ்ராஜ் பிரபு தேவா என்று தமிழ் திரையுலகமே கன்னட ஹீரோக்கள் வசம் சென்று விட்டது!


பெங்களூர் சென்ற ரவிச்சந்திரன் ரமேஷ் அரவிந்த் போன்றவர்கள், நாங்கள் தமிழர்கள் அல்ல, கன்னட காரர்கள் என்று சொல்லி ஒரு தமிழனும் பெங்களூர் பக்கம் வரவிடாமல் பார்த்துக் கொண்டார்கள்!



தமிழ் தவளை இன்னொரு தவளை காலை பிடித்து இழுத்து விடும்! மற்ற இந்தியத் தவளைகள், அது மலையாள தவளை, தெலுங்கு தவளை கன்னட தவளை, ஹிந்தி தவளை எதுவாயிருந்தாலும் மேலே தூக்கி விடும்! நான் சொல்வதின் அர்த்தம் புரிந்ததா?


நன்றி ...

செவ்வாய், 1 ஜூன், 2021

 கேள்வி : 25 லட்சத்தில் 2 பெட் ரூம் உடன் கூடிய வீடு கட்ட முடியுமா?


என் பதில் : 


தாராளமாக கட்டலாம். உங்களிடம் பெரிய இடமிருந்தால், நான் 3 பெட்ரூம் கூட கட்டி தருவேன் ஆனால் 1000 சதுர அடியில் ஒரு வீடு, உங்கள் பட்ஜெட்டுக்கு பொருந்தும்!


உங்கள் தேவைக்கு, 2 Bedroom போதும் என்றால்,. ஒரு டைனிங்,. பூஜை ரூம் covered Car Park.16 அடி அகலம்,. மற்றும் மூடிய Staicase வைத்து கட்டி தருகிறேன்.


வீட்டின் Plinth Area (சுவருடன் சேர்த்து அளந்தால் வரும் அளவு ) - 900 Sft முதல் 1000 சதுர அடி வரை. இதில் Carpet Area என்னும் உபயோகப்படுத்தும் தரை அளவு 700 to 800 Sft.


Hall 230, Bedroom 120, 110 Kitchen 100, இரண்டு பாத்ரூம் 70 Pooja 30 Verandah 40 Car Park Staircase - 100 ஆக மொத்தம் 800 சதுர அடி தரைவிரிப்பு ஏரியா!


அடுத்து, 2 பெட்ரூம் வீட்டில் என்ன என்ன என்னால் செய்து தரமுடியும் என்று பட்டியல் தருகிறேன்!


Foundation, அஸ்திவாரம் : RCC Footing Structural Design செய்தது.


Basement - 3 அடி உயரம்


ஒரு மாடி உயரம் - 10 அடி, கைப்பிடி சுவர் - 3அடி, சில் ஜன்னல் உயரம் 2.5 அடி, லின்டெல் கதவு உயரம் 7 அடி


Wall (சுவர்கள் ) - வெளி சுவர் 9", உள சுவர் 4.5 " கணம்,. செங்கல் அல்லது AAC பிளாக்


கதவுகள் - Wood,. ஜன்னல்கள் - UPVC Windows


பூச்சு வேலை பெயிண்டிங் தரமான பெயிண்ட் கொண்டு, Wall Putty உடன்


Bathroom Plumbing - Parryware


Electrical, Ceramic டTiles தரமான பிராண்ட்


கிணறு, மதில் சுவர் கேட், வீட்டைச்சுற்றி மழைநீர் சேகரிப்பு, எல்லா பாதுகாப்பு அம்சங்கள் உடன்!


இதுவரை ஆகும் செலவு 20 லட்சம்!


சதுர அடி கணக்கில் 2000 ரூபாய் வரும்! இது 2021 ஆம் வருட மார்க்கெட் விலை!


இதனுடன், பிளான்கள் போட,. Approval வாங்க ஆகும் செலவு 2 லட்சம், அரசாங்க கட்டணம் (தண்ணீர்,. மின்சாரம் போன்றவை ) 2 லட்சம், மீதி 1 லட்சம் மேற்பார்வை இடும் என்ஜினீயர் சம்பளம்!


The typical detailed cost split-up for building a 1000 sq.ft house is:


Steel at Rs 65000 / ton – Rs 380000

Sand Cost at Rs 1800 / ton – Rs 185000

Gravel / Metal at Rs 450 / ton – Rs 22000

Cement at Rs 380 / bag – Rs 266000

Bricks at Rs 8 / piece – Rs 115000

Electricity Wiring – Rs 145000

Plumbing (Material and Labor) – Rs 130000

Teak Door (Main Door and Rear Door) – Rs 42000

Glass and Mirrors – Rs 28000

Grills, Fencing and Gate – Rs 135000

Door Sets – Rs 43000

Granite Stone at Rs 150 / sq.ft – 70000

Tiles Cost (All Flooring)Vitrified Tiles, Ceramic Tiles, Parking Tiles – Rs 265000

Painting Charges including Putty (Interior and Exterior / Labor and Material) – Rs 190000

Windows & Ventilators UPVC Sliding Glass with Mosquito Screen – Rs 135000

மேலே நான் சொல்லிய கணக்கு 1000 Sft


கூட்டினால் 380000 + 185000 + 22000 + 266000 + 115000 + 135000 + 130000 + 42000 + 28000 + 13500 + 43000+ 70000 + 265000 + 190000 + 13500 = 18 லட்சம் 98 ஆயிரம்!


இத்துடன் 1 லட்சம் விலை வாசி ஏற்ற தாழ்வு, மற்றும் Interior போன்றவை சேர்த்து 20 லட்சம் என்று கணக்கு போட்டேன்! இது கட்டி கொடுக்கும் லாபம், என்ஜினீயர் வருமானம் அனைத்தும் அடங்கும்.


இந்த பட்ஜெட் குறைத்தால், ஒன்று வீடு சிறியது ஆகும், இல்லை காட்டுமான பொருள் தரம் குறையும்! இதற்கு மேல் செலவு செய்தால், நீங்கள் ஏமாற்ற படுகிறீர்கள் என்று அர்த்தம்!


நான் எழுதிய இந்த பதில், ஒரு சராசரி,. மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு! ஆனாலும், முடிந்த மட்டும் நான் சரியான தகவல்கள் தந்து இருக்கிறேன் என்று நம்புகிறேன். நீங்கள் இதை ஒரு கையேடு, Ready Reckoner போல் பயன் படுத்தலாம்!

நன்றி 

சிவக்குமார் .V .K 

நிதி ஆலோசகர் 

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms

siva19732001@gmail.com