ஞாயிறு, 23 மே, 2021

 கேள்வி : திராவிட கட்சிகளின் அங்கிள்கள் ஆட்சிக்கு வந்தால் 90-ஸ் கிட்ஸூக்கு இலவசமாக பெண் பார்த்து திருமணம் செய்து வைப்பார்களா? அப்படி எதாவது தேர்தல் அறிக்கையில் இருக்கிறதா?..தற்பொழுது ஆட்சிக்கு வந்துவிட்டார்கள் ..


என் பதில் : 


அடா-அடாடா, இதுவல்லவோ கேள்வி!! சான்றமை வினா கோருநர் ஆக வரவேண்டியவர் நீங்க, இப்படி அனானியா கேட்டுட்டீங்களே ப்ரோ!!


கிராமத்துல சொல்லுவாங்க ‘கிடக்கறது கிடக்கட்டும் கிழவிய தூக்கி மனையில வையி’ அதுமாதிரி, ‘(தேர்தல்) நடக்கறது நடக்கட்டும், எனக்கு கல்யாணத்த நடத்தி வை’ என்கிற 90ஸ் குழந்தையின் உள்ளக்குமுறல் இது. கேட்குது ப்ரோ!


இப்போ, ரமணா போல புள்ளிவிவரங்கள்-


2001 இல் எடுத்த சென்சஸ் (மக்கள்தொகை) கணக்கு இது. இதன்படி 90களில் தமிழ்நாட்டில் 1000 ஆண்களுக்கு 974 பெண்கள் பிறந்து இருக்காங்க. பற்றாக்குறை 26 (முதல் வரிசை 1991, இரண்டாவது 2001)

பாண்டிச்சேரியிலும்/கேரளாவிலும் உபரியாக பெண்கள் உள்ளனர், என்பதை ஜிமிக்கி கம்மல் ஃபேன்களுக்கு கோடிட்டு காண்பித்துக் கொள்கிறேன். ரோடு போட வேண்டியது உங்கள் வேலை ஆமா! 


சரி 90களில் தான் பெண்கள் குறைவோ, என தேடினால், இல்லை 70,80 களிலும் பாலின விகிதம் குறைவாதான் இருந்து இருக்கு (1970–928 பெண்கள், 1980- 977)

இதனால் தெரிய வருவது என்னவெனில், பெண் சிசுக்கொலையால் தான் பெண்கள் சதம் குறைந்து, ஆண்களுக்கு பெண் கிடைக்கவில்லை என்ற வாதம் உண்மையானது அல்ல, அல்ல அல்ல…

சரி அப்போ, என்னதான் பிரச்சினை? இது உலக அளவில் நடந்து வரும் சமூகமாற்றம். உலகமயமாக்கப்பட்ட இந்தியாவிலும் எதிர் ஒலிக்குது, அவ்வளவுதான்.


Early millieanials என்றால் 30களில் உள்ளவர்கள், late millieanials என்றால் 20கள். இந்த மில்லினியல்களை சர்வே எடுத்ததுல, தெரிய வந்தது இது.


அதிகமா படிச்ச மில்லினியல்கள் இந்திய முறைப்படி நிச்சயம் செய்த திருமணம் செய்வதை வெறுக்கிறாங்க.

நகர்வாழ் பெண்களில் 41% பேர் காதல் திருமணம்தான் சிறந்தது என்று கருத்து வைத்து இருக்கிறார்கள்.


வேறு எந்த தலைமுறையை விட, தற்போது dating செய்வது, live in உறவுகளும் வெளிப்படையாக நடக்கிறதாம்.

நகர்வாழ் மக்களிடம் ‘premarital Sex’ அதாவது திருமணத்திற்கு முன்னான உறவு பற்றிய கருத்து மாறிவிட்டதாம். சகஜமாக நடக்கிறது என்கிறார்கள், அதனால் திருமணம் செய்வது இரண்டாம்பட்சம் என்கிறார்கள். (கிராமத்தில் சர்வே எடுக்கப்படவில்லை, அதனால் நிலவரம் தெரியவில்லை)

60000 க்கு மேல் சம்பாதிக்கும் மில்லினியல்கள் மட்டுமே திருமணத்திற்கு தயார் என்கிறார்களாம். 10000 க்கும் குறைவாக சம்பாதிப்போர், திருமணம் வேண்டாம் என்கிறார்களாம்.


வசதியான மேல்தட்டு வர்க்கத்தினர் இடையே ஜாதி இரண்டாம்பட்சம், அந்தஸ்தே திருமணத்தை முடிவு செய்கிறது. வசதி குறைந்தவர்கள் இடையே ‘ஜாதி’க்கான முக்கியத்துவம் அப்படியே இருக்கிறது.


ரொம்ப நாள் வரன் தேடிய 35% பேர், திருமணம் கசக்கும் என்று வெளியேறிவிட்டார்களாம்.

அதேபோல, பெண்கல்வி சதவீதம் அதிகரிக்க அதிகரிக்க, பெண்கள் திருமணத்தை சார்ந்து இயங்குவது குறைந்து உள்ளதாம் (1960 களில் 20% பெண்கள் 25 வயது வரை திருமணம் ஆகாது இருந்துள்ளனர், இப்போதோ, 43% பேர்)

எனவே, அதிகரிக்கும் ‘பணத்தேவை’, பெண் கல்வியால் ஏற்பட்ட விழிப்புணர்வு, picky ஆன பெற்றோர்கள், பாலின உறவுக்கு திருமணம் தான் செய்ய வேண்டும் என்ற நிலைமை குறைந்தது, டேடிங் கலாசாரம் அனைத்தும் சேர்ந்துதான் இந்த 90s kids திருமணத் தடைகளுக்கு காரணம். இது 2000,2010 gen இல் இன்னும்தான் அதிகரிக்கும். எனவே, இன்றைய பெற்றோர் better get used to it!


சரி திராவிட அங்கிள்ஸ் கல்யாணம் பண்ணிவைப்பாங்களா?


திராவிட அங்கிள்ஸ் பலத்த கைராசி உள்ளவர்கள், பல ‘வீடுகளை’ பார்த்தவர்கள்தான்,திருமண நிகழ்ச்சியிலேயே கூட்டணி பேசுபவர்கள்தாம், but நிலைமை இப்போ changed பிரதர்.


எனவே,90s kids எல்லாம் RSS இல் சேர்ந்து பிரம்மசாரியாகி. தேசநலனுக்கு பாடுபட்டு…


சரிசரி வெந்த புண்ணில் உப்பை தடவாது இதோட எஸ்ஸாகிக் கொள்கிறேன் 😜


நன்றி ....


 

உடுமலை வரலாறு is feeling in love with Lion Raja Sundaram and 

 in Udumalaippettai.



உடுமலை நாராயணகவி பிறந்த  நாளையும்  அரசு விழாவாக அறிவிக்க. உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கோரிக்கை📚📚✍️✍️🙏🙏🙏


உடுமலை தந்த கவிமலை பகுத்தறிவுக் கவிராயர் உடுமலை நராயணகவி 40 ஆண்டு நினைவு நாளை நினைவு கூர்வோம்🙏🙏🙏


தெரிஞ்சாப் பேசணும்

தெரியாட்டிக் கேக்கோணும்

அறிஞ்சாலும் அஞ்சுபேத்த கேட்டாகோணும்

அதம்படி நடக்க வேணும்

எனும் பகுத்தறிவுக் கவிராயரின் வரிகளையும்

மானமெல்லாம் போன பின்னே

வாழ்வது தானொரு வாழ்வா?

வணிகர் குல மரபினுக்கோ

வகைதர ஏன் பிறந்தேனோ?

குஞ்சரமீதும் பஞ்சணை மேலும்

குலவிய காலம் ஓர் காலம்

நஞ்சணையாளின் வஞ்சனையாலே

நடைப்பிண மானதோர் காலம்

கரையடுத்த நீரிருக்க

கானலை நாடிடும் மானினம் போல்

கனிகொடுத்தான் தனை விடுத்தே

கணிகையின் பால் அலைந்தேனே

கற்பகமேவும் கனியருந்தாமல்

காஞ்சிரங்காயை உண்டேனே

காமுகன் யான் கண்ணகியான்

மாமுகம் காணவுமாமோ

தப்பிதம் பலவும் யானே புரிந்தும்

தாசியை நோவதும் வீணே

என உடுமலை நராயணகவியின் சமூகம் சார்ந்த சிந்தனைகளை அவது நினைவு நாளில் நினைவுகூர்வோம்.

உடுமலை நாராயண கவி இயற்கை அன்னையைப் போற்றும் வகையில் மரம் வளர்க்க வேண்டும் என்று அவர் எழுதிய பாடல்

உலகம் வாழ மழை

பொழிந்திட வேண்டும் - காலம்

பொழிந்திட நாம் வனமரங்கள்

வளர்த்திட வேண்டும் 0 இந்த (உலகம்)

புலங்கள் தோறும் பூண்டு புல்லும்

வுளம்பெற வேண்டும் - கதிர்

விளைந்திட வேண்டும் - உயிர்

இனங்கள் யாவும் அருந்தி நாளும்

சுகம் பெற வேண்டும் - நாம்

துணை செய்ய வேண்டும் இந்த

வுhனம் வழங்காதெனிலோ

ஊனுடையேது? – உயர்

தூனம் தருமம் தவமெய்ஞ்

ஞாணமும் ஏது? – நலம்

காணும் கடவுள் பணிகள்

காட்சியுமேது? – முதல்

காரணம் மாமழை இலையேல்

தோற்றமும் ஏது – எழுவகைத்

தோற்றமும் ஏது – அதனால்

அனைவரும் மரம் வளர்க்க வேண்டும்

எனும ;உடுமலை நாராயணகவியின் சமூக அக்கறையை நாம் நினைவில் ஏந்துவோம்

உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் உடுமலை நாராயணகவியின் 40 ஆம் ஆண்டு நினைவேந்தலில் நெஞ்சில் நிறுத்துவோம்.

அவர் சொன்ன சமூக அறிவியல் பகுத்தறிவுக் கருத்துக்களை பரப்புவோம்.

கடந்த 2017 ஆம்.ஆண்டு உடுமலை முற்போக்கு அமைப்பு களோடு. உடுமலை நாராயண.கவி.நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் எனும் கோரிக்கை ஏற்கப்பட்டு கடந்தமூன்றாண்டுகளாக சிறப்பு செய்யப்படுகிறது,உடுமலை நாராயணகவி பிறநத நாளையும்  அரசு விழாவாக அறிவிக்க. உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கோரிக்கை.

மேலும் நாராயணகவி பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்தமைக்கு 

உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் கடந்த 19,05,2018 இல் இரு பெரும் வரலாற்று த்திருவிழா வை நடத்தி நன்றி தெரிவிக்கப்பட்டது

உடுமலை வரலாறு 23.05.2021📚📚✍️✍️✍️🙏🙏🙏

புதன், 19 மே, 2021

 உடுமலைப்பேட்டை ,கரட்டுமடம் காந்தி கலாநிலையம் முன்னாள் மாணவர் கார்மேகம் சேலம் மாவட்ட ஆட்சியரகாப் பொறுப்பேற்றுள்ளார்.📚📚✍️✍️🥰🥰👍👍⛱️🙏



தமிழ்நாடு மாநில சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை இணைச் செயலராக உள்ள கார்மேகம், சேலம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். 

சேலம் மாவட்டத்திற்குப் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள கார்மேகம், கடந்த 2003 - 2004ஆம் ஆண்டில் சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றிவர். 

பள்ளிக்கல்வித்துறையில் இருந்து ஐஏஎஸ் ஆக பதவி உயர்வுபெற்ற வெகுசிலரில் கார்மேகமும் ஒருவர். பள்ளிக்கல்வித்துறையில் நேர்மையான அதிகாரி என பெயர்பெற்றவர்.🙏

 கேள்வி : திருமண பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்த தம்பதிகள் யாரேனும் தெரியுமா? அவர்கள் வாழ்க்கை தற்போது எப்படி உள்ளது?


என் பதில் : 


எனது உறவினர் பெண். அவருக்கு வரன் பார்க்கும் போது மாப்பிள்ளை புகைப்படம் பார்த்து இருவருக்கும பிடித்து விட்டது.. ஆனால் ஜாதகத்தில் பொருத்தம் இல்லை…இருவரும் பிடிவாதமாக இருந்தனர்.. திருமண மாகி நன்றாக உள்ளனர்..


எனது அண்ணன் மற்றும் பெரியம்மா மகள் எல்லாம் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்து நன்றாக உள்ளனர்


ஆஹா ..ஏகப்பட்ட பார்வையாளர்கள்…


ஜோதிடக்கலை வேதத்திற்கு ஒப்பானது…


நான் சொல்ல வருவது கல்யாண விஷயத்துல வெற்றி என்பது இருவர் கையில உள்ளது..

நன்றி ....

 கேள்வி : ஒரு மனிதன் வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஐந்து விஷயங்கள் யாவை?


என் பதில் : 


தொடர்ந்து 20 வருடங்களுக்கு மேலாக ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வது சாத்தியமே இல்லை. இந்திய கலாச்சாரத்தில் வாழ்க்கைத் துணையோடு மட்டுமே சாத்தியம் :))

ஆணோ/பெண்ணோ எவ்வயதில் வேண்டுமானாலும் பெற்றோரை/உடன்பிறப்பை, கல்வி/வேலை/திருமணம் முன்னிட்டு பிரிந்து விடுவோம்.

வாழ்க்கை துணையுடன் மட்டுமே குறைந்தபட்சம் 40-50+ வருடங்கள் வாழ்கிறோம்.

வாழ்நாள் இறுதியில் ஒருவருக்கு மிகவும் விருப்பமான நபர் என்றால் அவருடைய வாழ்க்கை துணையே. ஆதலினால் காதல் செய்வீர் :))

மனிதர்கள் அன்பு, கோபம் இரண்டு குணங்களையும் ஒருங்கே கொண்டவர்கள்.

நம்மிடம் தொடர்ந்து ஏதோவொரு குணத்தை மட்டுமே ஒருவர் வெளிப்படுத்துகிறார் என்றால், தவறு நம்மிடமா அல்லது அவரிடமா என்று யோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

உறவு மற்றும் நட்பு வட்டத்தை கழித்துவிட்டு பார்த்தால் வாழ்க்கையில் எதுவுமே இல்லை.

அவர்களால் சிலநேரங்களில் தொல்லையே என்றாலும், சிறந்த, உறுதியான வாழ்க்கைக்கான உந்துதலை அளிக்கிறார்கள்.

இன்னும் 10 வருடங்கள் கழித்து, இன்றய தேதியில் நடந்ததில் 1% கூட நமக்கு ஞாபகத்தில் இருக்காது.

யாரோ உடனான மனவருத்தத்தை இன்றே மறந்து விடலாமே.

இன்று தீய்ந்து போன உப்புமா/ பிரியாணி வைத்துக்கொண்டு கவலைப்பட்டு என்ன பிரயோஜனம்?அப்புறப்படுத்திவிட்டு புதிதாக சமைத்து சாப்பிட்டால் போச்சு.

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி யாருடனும் நட்பு கூட பாராட்ட இயலாது. எங்கேயும் நிரந்தர நட்பு/பகை இல்லை. Whatsapp,facebook,instagram..-விலும் கூட.

சில நொடி மகிழ்ச்சிக்காக…இன்றைய என்னுடைய பதிவுகள் பிடிக்கலாம். இன்னும் சில மாதங்களில் நிதி/தத்துவம்/ஆன்மீகம் சார்ந்த பதிவுகளுக்கு நகரலாம்.

தொடர்ந்து ஒரு வருடத்திற்கும் மேலாக சிலர் என் பதிவுகளை படித்ததில் எனக்கே ஆச்சரியம் தான்:)) 


நன்றி!!!


செவ்வாய், 18 மே, 2021

கேள்வி : கணவர் மனைவியிடம் அன்பாக இல்லை என்றால், மனைவி இன்னொருவரிடம் அன்பைப் பெற நினைப்பது சரியா இல்லை அது துரோகமா?


என் பதில் : 


பெரும்பாலான தம்பதியர் திருமணமாகி இரண்டு மூன்று வருடங்கள் கழித்து மன ஒற்றுமை குறைந்து வாழ்கின்றனர். இதற்கு காரணம் என்னவென்று ஆராய்ச்சி செய்தால்


இந்த பிரச்சனையிலிருந்து வெளிவரலாம்.


கணவர் மனைவியிடம் அன்பாக இல்லை என்றால் ஆரம்ப கட்டத்தில் ஒரு குழந்தைக்காக மட்டுமல்லாமல் குடும்பத்தின் நிலைமை உணர்ந்து பெண் அனுசரித்து வாழ்கிறாள்.


இந்த அன்பு இல்லாமைக்கு காரணம் என்ன என்று முதலில் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.


திருமணத்தின் போது அந்த பெண்ணை இந்த ஆணுக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம்.

வேறு பெண்ணை இந்த ஆணுக்கு பிடித்திருக்கலாம்.

பெற்றோர் வற்புறுத்தி திருமணம் நடந்திருக்கலாம்.

திருமணத்திற்குப் பின்னர் ஆணுக்கும் பெண்ணுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம்.

இருவருடைய உண்மையான குணாதிசயம் திருமணத்திற்குப்பின் வெளிப்பட்டு அது மற்றவருக்கு பிடிக்காமல் போயிருக்கலாம்.

உடலுறவில் இருவருக்கும் வேறு வேறு உணர்வுகள் ஆசைகள் திருப்பி நிலைகள் இருக்கலாம்.

ச***** படங்களையும் புத்தகங்களையும் சினிமாக்களையும பார்த்து பழக்கமாகி ஆணுக்கு அதில் வரும் பெண்ணை போல் தன் மனைவி இல்லையே என்பது வருத்தத்தை தரலாம். அதை வெளிப்படுத்தி தன்னுடைய மனைவியை காயப்படுத்தியும் இருக்கலாம்.

இத்தனை பிரச்சினைகளில் எது ஒன்று இருந்தாலும் அந்தப் பெண்ணுக்கு தன்னுடைய கணவன் தன்னை வெறுக்கிறான் என்ற உண்மை தெரிந்தால் அதற்குப்பின் யோகி போல வாழ அதிகபட்சமான பெண்களுக்கு விருப்பம் இருக்காது.

பல ஆண்களுக்கு தன்னுடைய மனதில் இருக்கும் ஆசையை அன்பை வார்த்தைகளோ செயலாலோ வெளிப்படுத்த இயலாதவர்களாக இருக்கலாம். இது மற்றவர்களுக்கு அன்பு இல்லாத நிலைமையாக தெரியலாம்.

பெண்கள் எப்போதுமே தன்னுடைய உணர்வுக்கும் அழகுக்கும் திறமைக்கு மதிப்பு அளிக்க கூடிய ஆண்களில் விரும்புகிறார்கள். ஆண்கள் கூட அப்படித்தான்.

சிக்கன் பிரியாணி வாய்க்கு ருசியாக செய்து போட்ட பின்னும் அதை ராகி கஞ்சி போல உண்டுவிட்டு போகும் கணவனை அந்தப் பெண் எப்படி உணர்வாள்?

பல மக்களுக்கு எப்பொழுதும் பிறருடைய குறைகள் மட்டுமே கண்ணுக்குத் தெரியும. அவற்றை அருமையாக வெளிப்படுத்தவும் தெரியும். நிறைகளை சொல்ல வாழ்த்த பெருமைப்படுத்த வார்த்தைகள் தெரியாது.

இப்படிப்பட்ட ஏதோ ஒரு பிரச்சனையால் கணவனுக்கு மனைவியை பிடிக்கவில்லை அல்லது அன்பு காண்பிக்க முடியவில்லை. இந்த நிலையில் இருக்கும் பெண் என்ன செய்ய வேண்டும் என்று நான் ஒரு கேள்வி கேட்க வேண்டும்.

பல பெண்களுக்கு குழந்தை ஆன பின்பு தான் தெரிகிறது இந்த உண்மை. குழந்தை இருப்பதால் அவர்கள் சகித்துக் கொண்டு இந்த வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து வாழ்கிறார்கள். இது ஆணுக்கும் பொருந்தும். இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்பவர்களே நாம் தொந்தரவு செய்யக்கூடாது.

எல்லோர் வாழ்விலும் ஏதோ ஒரு கசப்பு வருத்தம் இருக்கலாம்.அவரவர் எதிர்பார்ப்புக்கு வாழ்க்கை அமையாமல் இருக்கலாம். தன்னைப்பலவே குணாதிசயம் உள்ள வாழ்க்கைத் துணை கிடைப்பது அரிது.

அதனால் நண்பர்களே இதற்கு ஒரு தீர்வு கண்டு பிடிப்போம். பிரச்சனை முற்றுவதற்கு முன், அடுத்த தெரு ஆண் நம் பிள்ளைகளை மயக்கும் முன் நாம் ஒரு விதி செய்வோம்.ஒருவருக்கு ஒருவர் வீட்டில் இருக்கும் பெரியவர் இல்லை உறவினரை கலந்து ஆலோசித்து அந்த பாதிக்கும் நபரை திருத்த முயற்சிக்க வேண்டும். இதையெல்லாம் எப்படி வெளியே சொல்லுவது என்று பொறுத்திருந்து வெந்து சாவதைவிட வாழ்க்கையை நெறிப்படுத்தி ஆனந்தமாக வாழ்வது நல்லது.

இதற்கு மேல் பல கருத்துக்கள் மற்ற பதில்களில் உள்ளன.

ஆணுக்குப் பெண் பிடிக்கவில்லையா இல்லை பெண்ணுக்கு ஆணை பிடிக்கவில்லையா? இரண்டுமே இருக்கிறது.

உறவுகளை சரி செய்ய உறவினர் நண்பர்கள் ஆலோசகர்கள் இருக்கிறார்கள். எதையும் முத்தவிட்டு வெடிக்க வைக்க வேண்டாம்.

நல்லதையே எதிர்பார்ப்போம்.

திங்கள், 17 மே, 2021

 கேள்வி : நெப்ட், ஆர்டிஜிஎஸ், என்றால் என்ன ?  


என் பதில் : 


ஒரே வங்கியின் இரு வேறு கிளைகளில் இருந்து பணம் அனுப்பவது எளிதான விஷயம், ஆனால், ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணம் அனுப்பச் சென்றால், ஆர்டிஜிஎஸ் (RTGS) நம்பர் எழுதுங்க, என்இஎப்டி நம்பர் (NEFT) என்ன என்று கேட்டு குடைவார்கள்.

அது தெரியாவிட்டால் பணம் அனுப்பவே முடியாத நிலை ஏற்படும். அது என்ன ஆர்டிஜிஎஸ், என்இஎப்டி நம்பர்?


ஆர்டிஜிஎஸ் என்பது Real Time Gross Settlement. என்இஎப்டி என்றால் National Electronic Funds Transfer.


ஆர்டிஜிஎஸ் என்பது நீங்கள் பணத்தை அடுத்தவரின் கணக்குக்கு அனுப்பியவுடனே அது அவரது கணக்குக்கு உடனடியாகப் போய்விடும். என்இஎப்டியில் பணப் பரிமாற்றம் நடக்க 1 மணி நேரத்துக்கு மேலாகும்.


குறைந்தபட்சம் ரூ. 2 லட்சத்தைத் தான் ஆர்டிஜிஎஸ் மூலம் பணம் அனுப்ப முடியும். ஆனால், என்இஎப்டி மூலம் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் அனுப்பலாம்.


ஆனால், என்இஎப்டி மூலம் அனுப்பினால் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரையும், சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையும் தான் பணம் அனுப்ப முடியும். திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஒரு நாளைக்கு 9 கட்டங்களாக பணப் பரிவர்த்தனை நடக்கும். 

சனிக்கிழமைகளில் 5 கட்டங்களாக பணப் பரிவர்த்தனை நடக்கும். நீங்கள் 9 மணிக்கு பணத்தை போட்டால் அது 10 மணிக்குத் தான் அடுத்தவர் கணக்குக்குப் போகும். 10 மணிக்குப் போட்டால் 11 மணிக்குத் தான் போகும். அதாவது 1 மணிக்கு ஒருமுறை தான் பண டிரான்ஸ்பர் நடக்கும்.


ஆர்டிஜிஎஸ் மூலம் அனுப்பினால் உடனடியாக பணம் போய்ச் சேர்ந்துவிடும்.


கட்டணம் எவ்வளவு?:


என்இஎப்டி மூலம் ரூ. 1 லட்சம் வரை அனுப்ப கட்டணம் ரூ. 5 பிளஸ் சேவை வரி.

ரூ. 1 முதல் ரூ. 2 லட்சம் வரை அனுப்ப கட்டணம் ரூ. 15 பிளஸ் சேவை வரி.

ரூ. 2 லட்சத்துக்கு மேல் அனுப்ப கட்டணம் ரூ. 25 பிளஸ் சேவை வரி


ஆர்டிஜிஎஸ் மூலம் அனுப்ப ரூ. 2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை ரூ. 30 கட்டணம்

ரூ. 5 லட்சத்துக்கு மேல் அனுப்ப கட்டணம் ரூ. 55 ஆகும்.


நன்றி ..


சிவக்குமார் .V.K 

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

ஞாயிறு, 16 மே, 2021

இன்று என் நண்பரிடம்  பேசிக்கொண்டு இருந்தேன்  கோவை விவசாய பல்கழகத்தில் படித்தவர் ..என் மதிப்பு மிக்க வாடிக்கையாளர் ..குடும்ப நண்பர் ..
அதிகம் இந்த பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் அதிகம் ..IAS ,IPS ..தேர்வு எழுதி ..இந்தியாவில் ,தமிழ்நாட்டில் ..பொறுப்புமிக்க பதவியில் உள்ளார்கள் ..காரணம் கேட்டேன் ..விடைசொல்கிறேன் என்று கூறிருக்கிறார்கள் ...வந்தவுடன் பதிவிடுகிறேன் ..எனக்கு தெரிந்து ..சில ஆளுமைகளை மட்டும் புகைப்படங்களை பகிர்கிறேன் ..

சனி, 15 மே, 2021

 ஆசிரியர் விஜயலட்சுமி-சதீஷ்குமார்  அவர்களின் அன்பு மகளின் திருமணம்  காலை மதுரையில் நடைபெற உள்ளது

 மதுரை சென்று மணமுடித்து  மணமகனோடு திரும்பும்  ஆசிரியர் சதீஷ்குமார் விஜயலட்சுமி ஆகியோரையும்

புதுமணத்தம்பதிகள்  மினு சூர்யா ஆகியோரையும்  வாழ்த்தி,மணவிழா ஏற்கும் மணமக்களுக்கு


உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் 🌈


சார்பில்  திருமண வாழ்த்துக்களைப் பதிவு செய்வோம்🥰🥰🥰📚📚✍️✍️🙏🙏🙏🙏🌴🌷🌹🌧️🌦️🌱🌳⛱️http://zerogravityphotography.live/suriya_minu/


கேள்வி : ரத்த சொந்தத்திற்குள் திருமணம் செய்யகூடாது என்பது ஏன்?


என் பதில் : 


இந்தக் கேள்வியும் இதற்கான பதிலும் பல சந்ததிகளைக் காப்பாற்றும் சங்கதிகள் கொண்டது.


இந்த கேள்விக்கு வெகுகாலமாக பதில் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது.


அக்காள் மகளை திருமணம் செய்து கொள்வது, தாய்மாமனுக்கு திருமணம் செய்து வைப்பது என இன்றைக்கும் தமிழ்நாட்டில் அதிக அளவில் உறவுகளுக்கு இடையே திருமணம் நடைபெறுகிறது.


இந்து மதத்தினர் அதிக அளவில் உறவுகளுக்குள் திருமணம் செய்வதை விரும்புகின்றனர். இவ்வாறு உறவுகளுக்குள் திருமணம் செய்வதன் மூலம் பரம்பரையாக வியாதிகள் சந்ததிகளுக்குள் கடத்தப்படுவதோடு புதிது புதிதாக நோய்கள் ஏற்படுகின்றன.


ரத்த சொந்தத்தில் திருமணம் செய்து கொள்வதால் அவர்களின் சந்ததியினர் குறைபாடுடைய மரபணுக்களோடு பிறக்க வாய்ப்புண்டு என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.



வெண்குஷ்டம்


பொதுவாக வெண்குஷ்டத்தைப் பொறுத்தவரை 20,000 நபர்களில் ஒருவருக்குத் தோன்றலாம். ரத்த சொந்த சந்ததியினருக்கு இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.



சிறுநீர் குறைபாடு


ஃபினைல்கீடோன்யூரியா (Phenylketonuria) என்னும் சிறுநீரகக் குறைபாடு சாதாரணமாக 25,000 நபர்களில் 1 நபருக்குத்தான் ஏற்படும்.ஆனால் உறவுத் திருமண சந்ததியினைரப் பொறுத்தவரை 25,000 நபர்களில் 13 நபர்களுக்கு இக்குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.



ஜப்பானில் ஆய்வு


ஜப்பானில் மேற்கண்ட ஒரு ஆய்வில் உறவினரல்லாமல் திருமணம் செய்த நபர்களில், மேற்கண்ட குறைபாடுகளால் 1000 பேருக்கு 55 பேர் இறந்துள்ளனர். ஆனால் உறவுத் திருமணத்தால் 116 பேர் இறந்துள்ளதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, ரத்த உறவுகளில் திருமணம் தவிர்க்கப்பட வேண்டும் என்று மருத்துவ அறிவியல் அறிவுறுத்துகிறது.



ரத்த அழிவு சோகை


தெரிந்தே நாம் செய்யும் தவறுகளால் நம் சந்ததிகளை பாதிக்கக் கூடிய வியாதி தான் ‘இரத்த அழிவு சோகை'. பெரும்பாலூம் இரத்த சோகையைப் பற்றி நாம் அறிந்திருக்க வாய்ப்புகள் உள்ளது ஆனால் ரத்த அழிவுச் சோகையைப் பற்றி அதிகம் அறிந்திருக்க மாட்டோம்.



தலசீமியா


‘ரத்த அழிவுச் சோகை' என்பது மரபு வழிக்கோளாறால் வரக்கூடிய நோய், இந்நோய்க்கு ‘தலசீமியா' என்று பெயர். நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் முடிப்பவர்களின் வாரிசுகளையே இது அதிகம் தாக்குகிறது.


ஆப்பிரிக்க - ஆசிய வம்சாவழியில் வரக்கூடிய குழந்தைகள்தான் ‘தலசீமியா' பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். சிவப்பு ரத்த அணுக்களில் ஹீமோகுளோபின் என்று சொல்லப்படுகிற ஒரு புரதம். இது தான் ஆக்சிஜனை உடலுக்குள் எல்லா இடங்களுக்கும் எடுத்துச் செல்லும்.


ஹீமோகுளோபின் அமைப்பு


ஒட்டு மொத்த ஹீமோகுளோபின் அமைப்புகளில் கோளாறு ஏற்படுகிற போது ரத்த சிவப்பு அணுக்கள் அழிக்கப்படும். அதன் விளைவாக ஒவ்வொரு செல்லுக்கும் போக வேண்டிய ஆக்சிஜன் தடைபடும். வயிற்றில் உள்ள கரு, பிறந்த குழந்தை, வளர்ந்த பிள்ளைகள் என்று எந்த வயதிலும் இந்த நோய் பாதிக்கலாம்.


வளர்ச்சிக்குறைபாடு


நோய்க்குக் காரணமான குறைபாடுள்ள மரபணு அக்குழந்தையின் தாய் அல்லது தந்தை அல்லது இரண்டு பேரிடமிருந்தும் போகலாம். பிறந்த குழந்தையாக இருந்தால் வயிறு ஊதிப்போவது, கல்லீரலும் எலும்பு மஜ்ஜையும் வீங்குவது, தலை வீங்குவது, இதயம், சிறுநீரகத்தோட செயல் குறைவது, களைப்பு ஏற்படுவது போன்ற பலவித அறிகுறிகள் இருக்கும். அம்மாவோட வயிற்றில் இருக்கும்போதே இந்தப் பிரச்சனை தீவிரமாகி குழந்தையைப் பாதிக்கும் பட்சத்தில், குழந்தை இறந்தே பிறக்கலாம் அல்லது வளர்ச்சிக் குறைபாடுகளோடு பிறக்கலாம்.


ரத்தம் ஏற்றுதல்


பிறக்கும் போதே மஞ்சள் காமாலை அதிகமாக இருக்கும். வேகமான மூச்சிறைப்பையும் பார்க்கலாம். இதற்கான ஒரே தீர்வு மாதம் தவறாமல் அக்குழந்தைக்கு ரத்தம் ஏற்ற வேண்டும். அப்படி ரத்தம் ஏற்றும்போது இரும்பு சத்து அதிகமாகி அதன் விளைவாக வேற பிரச்சனைகள் வராமல் இருக்க மாத்திரைகள் கொடுக்க வேண்டியிருக்கும்.


கருவை கலைக்கலாம்


முதல் குழந்தைக்கு இந்த நோய் இருக்கும் பட்சத்தில் பெற்றோர் மரபணு கவுன்சலிங்கும் பரிசோதனையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்தக் குழந்தைக்கும் நோய் தாக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.


நோய் தாக்கக்கூடிய ஆபத்து இருந்தால் அடுத்த கர்ப்பத்தைக் கலைப்பதுதான் ஒரே வழி. ஒரு வேளை இரண்டாவது குழந்தைக்கு நோய் ஆபத்து இல்லை என்று தெரிந்தால் அந்த குழந்தையோட ரத்தத்தை முதல் குழந்தைக்கு ஏற்றலாம்.


நெருங்கிய சொந்தம் வேண்டாமே


இரண்டாவது குழந்தையின் எலும்பு மஜ்ஜையை முதல் குழந்தைக்கு செலுத்தியும் குணமாக்கலாம். ஆனால் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையில் அதிக நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதைத் தவிர்க்க முடியாது என்கின்றனர் மருத்துவர்கள். நெருங்கிய உறவுக்குள் மணம் முடிப்பதைத் தவிர்க்கச் சொல்லி அழுத்தமாக அறிவுறுத்துகிறார்கள்.


சந்ததிகளுக்கு சமாதி


நெருங்கிய உறவுகளுக்குள் மணம் முடிப்பதால் குழந்தைகள் பிறப்பதில் இத்தனை பிரச்சனைகள் ஏற்படும் என்பதை அறிந்த பின்பும் உறவுகளுக்குள் திருமணம் முடிப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.


எனவே அக்காள் மகளை கட்டுகிறேன்... தாய்மாமனை திருமணம் செய்து வைக்கப் போகிறேன் என்று சந்ததியினருக்கு பெற்றோர்களே சமாதி கட்டாதீர்கள்...இது ஒரு விழிப்புணர்வு பதிவு  மட்டுமே ..திருமணம் உங்களின் விருப்பம் ..நன்றி ..


வெள்ளி, 14 மே, 2021

கேள்வி : Hoovering கோட்பாடு என்றால் என்ன ..?

பதில்:....நியண்டர்செல்வன் ....

சைக்காலஜியில் Hoovering என ஒரு கோட்பாடு உண்டு
ஒருவரை நன்றாக ஏமாற்றி, அனைத்தையும் பிடுங்கிக்கொண்டு தெருவில் விடவேண்டும்.
அதன்பின் அவர் நம்மை கண்டபடி திட்டிவிட்டு எங்கோ போய் நல்லபடி வாழ்க்கையை ஆரம்பிப்பார்.
ஆனால் அவர் இளிச்சவாய் என நமக்கு நல்லா தெரியும்.
இந்த சூழலில் சைக்கோக்கள் அந்த இளிச்சவாயை மீண்டும் வலையில் விழ வைத்து ஏமாற்றுவார்கள்.
இதன் பெயர்தான் hoovering
முன்னாள் கணவர்/மனைவி, காதலன்/காதலி, நண்பர், பிசினஸ் பார்ட்னர், வாடிக்கையாளர்..இப்படி
ஏமாந்தவரும் "சரி ஏதோ போனமுறை நம்மை ஏமாற்றினாலும், இப்போது திருந்திவிட்டான்...மீண்டும் ஏமாற்றமாட்டான்" என நினைத்து மீண்டும் ஏமாறுவார்கள்.
ஹூவரிங் செய்ய பல உத்திகள் உண்டு
-> திருந்துவது போல் நடிப்பது
-> முதுகில் குத்திவிட்டு அதன்பின் எதுவுமே நடக்காதது போல இருப்பது, பழகுவது
-> கூடுதல் பாசம் காட்டுவது
-> பழைய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை சுட்டிகாட்டுவது
நிறைய பேர் இதில் இரண்டாம் முறையும் ஏமாந்துவிடுகிறார்கள்.

வியாழன், 13 மே, 2021

 

கேள்வி : பணத்தை சேமிக்க உதவும் சிறந்த தந்திரங்கள் எவை?


என் பதில் : 


உங்களுக்கு பணத்தின் மீது அதிக விருப்பம் என்றால்…


பணத்தை சேமிக்க சிறந்த வழி..எந்த ஒரு பொருளை வாக்கும்போதும்…பணத்தை ஒரு கையில் வைத்துக்கொள்ளுங்கள்…இன்னொரு கையில் பொருளை வைத்துக்கொள்ளுங்கள்.


சில பொருட்கள் பணத்தை விட மதிப்பு குறைந்ததாக இருக்கும்.


சில பொருட்கள் பணத்தை விட மதிப்பு மிக்கதாக இருக்கும்.


எது வேணும் என்று யோசியுங்கள்…


பணத்தை சம்பாதிக்கும் பல பேர் அதை செலவு செய்கிறார்களே தவிர, பணத்தை வைத்து பணத்தை உருவாக்க முயல்வதில்லை. சேமிக்கத்தான் முயல்கிறார்கள்.


இன்று வங்கிக்கு செல்கிறீர்கள், நீங்கள் 2015 ல் ஒரு வங்கிக்கணக்கில் 50,000 பணத்தை போடுகிறீர்கள்.


ஐந்து வருடங்கள் கழித்து அந்த பணத்தை நீங்கள் மீண்டும் எடுத்தால் ஒரு குறிப்பிட்ட அளவு வட்டியோடு தருவார்கள். ஆனால் பணத்தின் மதிப்போ அதே 50,000 இல்லை..நிச்சயம் அதை விட குறைவு தான்.


அதாவது, பணத்தின் மதிப்பு எப்படி குறைவு என்றால், நீங்கள் ஐந்து வருடத்திற்கு முன்பு வாங்கிய ஒரு பொருளின் விலை, ஐந்து வருடத்திற்கு பிறகு உயர்ந்து இருக்குமே தவிர, குறைந்து இருக்காது. ஆனால், உங்கள் பணத்தின் மதிப்பு நிச்சயம் குறைந்து இருக்கும்.


இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால், 2015 ல் ஒரு புத்தகத்தை 50 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறீர்கள் என்றால், 2020 ல் அந்த புத்தகம் விலை 60 ஆக இருக்குமானால். நீங்கள் 2015 ல் வாங்கிய அதே புத்தகத்தை 2020 ல் அதே ஐம்பது ரூபாய்க்கு வாங்க இயலாது.


ஏன் வாங்க இயலவில்லை, நீங்கள் 2015 வரும், 50 ரூபாய் தான் வைத்திருக்கிறீர்கள்..2020 வரும் அதே 50 ரூபாய் தான் வைத்திருக்கிறீர்கள். ஆனால் பொருளின் விலையோ மாறியுள்ளது. இதைதான் விலைவாசி உயர்வு(Inflation ) என்பார்கள்.


விலைவாசி உயர்வால் தான், உங்கள் பணத்தின் மதிப்பு குறைகிறது. அதே பொருளை 10 ரூபாய் அதிக விலைகொடுத்து வாங்க நேரிடுகிறது. இதை தான் Purchasing Power குறைவது என்று சொல்வார்கள்.


வருடம் ஆக, ஆக நம் சேமிப்பு பணத்தின் மதிப்பு வட்டியோடு சிறிதளவு உயர்ந்தாலும்( அந்த பணத்தின் உண்மை மதிப்பு, ஒரு பொருளை வாங்கும் போது குறைந்துகொண்டே தான் போகிறது)


மிக எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், 2015 ல் ஒரு லிட்டர் பெட்ரோலில் விலை 50 ரூபாய், 2020 ல் அதே ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை, 100 ரூபாய். இப்பொழுது சொல்லுங்கள்…நமக்கு நஷ்டமா? லாபமா? நிச்சயம் நஷ்டம் தான். இதே போல தான் வங்கியில் பணத்தை சேமிப்பதிலும் நமக்கு நஷ்டம் தான்.


பெட்ரோல் விலை எவ்வளவு உயர்ந்தால் என்ன? நான் எப்போதும் ஐம்பது ரூபாய்க்கு தானே பா.. பெட்ரோல் போட போறேன் என்று புத்திசாலி தனமாக போசுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.😂


அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் அவசர தேவைக்கு சேமிப்பு வைத்துக்கொள்கிறார்களே தவிர, பொது சேமிப்பு கணக்குகள் குறைவு தான். அவர்கள் பணத்தை சேமித்து பணத்தின் மதிப்பை இழப்பதில்லை.


அதே பணத்தை உதவிகரமாக, எதிலாவது பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீடு செய்கிறார்கள். அந்த முதலீடு அவர்களுக்கு பணத்தை வண்டியை விட அதிகமாக ஈட்டி தருகிறது


நம் நாட்டில் தான், பணத்தை எல்லாம், Jan Dhan account ல் சேமியுங்கள். நாட்டின் வளர்ச்சிக்கு செலவு நான் செய்கிறேன் என்று அரசாங்கம் சேமிப்பு கணக்குகளை தொடங்க ஊக்குவிக்கிறது.


நம்நாட்டில் இதெல்லாம் சாத்தியம் இல்லையப்பா என்றால், நீங்கள் உங்கள் சேமிப்பு கணக்கில் போடும் பணத்தை எதே ஒரு பணக்காரன் வங்கியில் இருந்து உங்கள் பணத்தை கடனாக வாங்கி, அதை முதலீடு செய்து, அதில் வரும் லாபத்தின் ஒரு சிறு பகுதியை தான், வங்கிக்கு வட்டியாக கட்டுகிறான். அதில் வங்கியானது பணக்காரனுக்கு கொடுத்த கடனுக்கு வரும் வட்டிப் பணத்தில் ஒரு சிறு பகுதியை தான், வங்கி..நம் சேமிப்பு கணக்கிற்கு நமக்கு வட்டி தருகிறது.


பணக்காரத்தந்தை மற்றும் ஏழைத்தந்தை என்ற புத்தகத்தில், ராபர்ட் கியோசகி அழகாக ஒரு வாக்கியத்தை சொல்லியிருப்பார்.


ஏழை பணத்திற்காக வேலை செய்கிறான்…


பணம் பணக்காரர்களுக்காக வேலை செய்கிறது…


ஆக, பணத்தை சேமிக்க மிகச்சிறந்த தந்திரம்…பணத்தை சேமிப்பது அல்ல…பணத்தை முதலீடு செய்வதும்...பணத்தை வைத்து பணத்தை பெருக்குவதேயாகும். அதாவது (money multiply) செய்வதேயாகும்.


நன்றி.


சிவக்குமார் . V ,K 

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com