வியாழன், 9 ஜூலை, 2020

கேள்வி : ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் நட்பு ஏற்படும் நிலையில் எந்நேரம் வேண்டுமானாலும் உறவாக மாறக்கூடும் என்பது உளவியல் உண்மை - அவ்வாறு இருக்கையில் முதலில் இருந்து கடைசி வரை எதிர்பாலின நட்பிடம் நட்பாக மட்டும் பழக என்னென்ன விதத்தில் முனைகிறீர்கள் ?

என் பதில் :..

நட்பில் ஆண் பெண் பேதமில்லை. ஆனால் எதிர்பாலின நட்புக்கு என்று சில வரைமுறைகள் வகுத்து விடுவோம். உண்மையா சொல்லணும் என்றால் "அப்படி பேச கூடாது…இதை பேச கூடாது" என்று மனதளவில் கட்டுப்பாடு ஒன்று இருக்கும்.

உண்மையில் ஆண்களுக்கு கட்டுப்பாடு எல்லாம் கட்டுப்படுத்த முடியாது. சில நேரங்களில் "அவள் என்னை விரும்புவாளோ" என்ற எண்ணம் தானாகவே பிறக்கும். ஏன் என்றால் எதிர்பாலரின் செயல்கள் அவ்வாறு இருக்கும்போது அந்த எண்ணம் எழும். அதுதான் இயற்கை. அப்ப மட்டும் கொஞ்சம் தெளிவான முடிவு எடுத்து அந்த நட்பு தப்பிச்சா தப்பிச்சபடி . இல்லை என்றால் நட்புக்கு "அரோகரா" தான்.

பெண்கள் இதில் கில்லாடிகள். "தோசையை ஊத்தி எண்ணெயை தெளிச்ச மாதிரியும் இருக்கணும்.எண்ணையை ஊத்தின மாதிரியும் இருக்கணும்". பட்டும் படாமல் விருப்பம் என்று சொல்ற மாதிரியே பேசுவார்கள். "எதுக்குப்பா தேவையில்லாமல் இப்ப இந்த நேரத்தில் இந்த டயலாக்?" என்று அழுத்தி கேட்டால் தோசையை திருப்பி போட்டு விடுவார்கள். "புஸ்ஸ்ஸ்ஸ்".

கடினமான நட்பா, இல்லை அதுக்கும் மேலயா என்று முடிவு எடுக்க வேண்டிய சூழலில் ஒன்றை மட்டும் மனதில் வைத்து கொள்ள வேண்டும். " நம்ம ஒரு உதவாக்கரை. நம்மளோட சேர்ந்த இவ ஒரு உதவாக்கரை.. இதெல்லாம் வாழ்க்கைக்கு செட் ஆகாது " என்ற எண்ணத்தை மட்டும் வளர்த்து கொண்டால் அந்த நட்பு நீடிக்கும்.

இதையெல்லாம் மீறி ஒன்று நடப்பது இயற்கையான ஈர்ப்பு.. plus*minus=always Minus தான்.

எதிர்பாலின நட்பில் திருமண முன்,திருமண பின் என்று கொஞ்சம் கடினமான நட்பு சூழல் இருக்கும். அதுவும் இயற்கை.

நட்பூக்கள் அதிசயம்.

புதன், 8 ஜூலை, 2020

கேள்வி : பெரும்பாலான மக்களுக்குத் தெரியாத ஏதேனும் பெண்களின் வெற்றிக் கதைகள் உங்களுக்குத் தெரியுமா?

பதில் :...

மருத்துவர் சாரதா மேனன் அவர்கள் !

பைத்தியம் என்று கட்டி போட்டு , அடித்து உதைத்து , பேய் பிசாசு என்று கட்டிப்போட்டு, உடுக்கை அடித்து, மாந்திரிக வேலைகள் செய்து கொண்டிருந்தார்கள் !

அந்த காலகட்டத்தில் சைக்யாற்றி (Psychiatry) என்கிற மனோ தத்துவ நிபுணர்கள் மிக குறைவு . அப்போதில் இருந்து இவர்கள் உழைப்பால் , இவர்கள் கொடுத்த மருந்து இவற்றை சாப்பிட்டு பல பேர் வாழ்வு பெற்றனர்

சென்னை schizophrenia ரிசர்ச் சென்டரை துவக்க காரணமாக இருந்தவர் இந்த அம்மையார் ! தமிழ் நாட்டின் உயரிய விருதான அவ்வை அவார்ட் பெற்றவர் ! அப்பொழுது முதல்வராக இருந்த ஜெயலலிதா அம்மா

இந்த சென்டர் துவங்கவும் உதவி செஞ்சாங்க !

பத்ம பூஷன் விருதும் பெற்றவர்

சச்சீஸ்ஒபிரேனிய ( schizophrenia) போன்ற கொடிய மனோ வியாதி பைபோலார் (bipolar) மற்றும் மேனிக் டிப்ரெஸ்ஸின் ( manic depression) மற்றும் சில கொடிய வகையான OCD இதெல்லாம் சாவை விட கொடுமையா இருக்கும் !

ஆண் பெண் வித்தியாசம் பார்க்காமல் இப்படி பட்ட கஷ்டமான துறையில் டாக்டர் சாரதா மேனனின் பங்கு மிகவும் அதிகம்

அந்த நோயாளிகள் கேள்வி கேட்டா கூட முகத்தில் துப்பலாம் , மருத்துவரை அடிக்கலாம் , இன்னும் என்னென்னமோ வகையில் புரியாமல் படுத்தலாம் !

சங்கிலில் கட்டி வைத்து அடித்து துவைத்த காலங்களில் மன நோயும் ஒரு வகை கெமிக்கல் நோய் தான் ! அவர்கள் பாவிகள் இல்லை என்று இந்தம்மா அவர்களுக்கு உய்வை கொடுத்தார்கள் !

வெள்ளை புடவையிலும் நகை அணியாமலும் ஆயிரக்கணக்கான மன நோயாளிகக்கு வாழ்வு , ஒரு இடம் மற்றும் பாதை அமைத்து கொடுத்தவர் டாக்டர் சாரதா மேனன்

இப்படிப்பட்ட அதே பாணி நகை இல்லை , ஆடம்பரம் இல்லை சேவையே வாழ்க்கையாக வாழ்ந்தவர் கேன்சர் மருத்துவர் சாந்தா ! இவர்கள் யாவரும் தன் தொழிலுக்கு அர்ப்பணித்து கொண்டு திருமணம் செய்யாதவர்கள் என்பது குறிப்பிட தக்கது
பலரின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தவர் Dr Sharada Menon ! அம்மா.
கேள்வி : சுமார் 40 வருடங்களுக்கு முன் இருந்த ஆசிரியர்-மாணவர்களுக்கும், தற்போதைய ஆசிரியர்-மாணவர்களுக்கும் இடையேயான வேறுபாடுகள் என்ன?

பதில் :..நான் சொல்வதை விட ..ஆசிரியர் தோழி எபனேசர் எலிசபெத் அவர்கள்   பதில் பதிந்தால் அருமையாக இருக்கும் ..


//எங்க டீச்சர் மாதிரி கொண்டை பின்ன வேண்டும் என்பதற்காகவே , அம்மா அப்பா விளையாட்டில் எங்க பாட்டி ஜவுரி முடியை எடுத்து கொண்டை போட்டுட்டு டீச்சரா நடிச்சேன்.//

இப்பவும் எனக்கு முதல் வகுப்பு எடுத்த ஆசிரியையை ஊரில் பார்க்கும் போதெல்லாம் வணக்கம் சொல்றேன். எதையேனும் அவர்கள் துக்கி செல்ல கண்டால் ஓடி போய் வாங்கிக் கொள்கிறேன். ஆனால் என் மாணவர்களில் பெரும்பாலானோர் பள்ளியிலும் வணக்கம் தெரிவிப்பது இல்லை. வெளி இடத்தில் எங்கேனும் கண்டால் நீயாரோ நான் யாரோ என்பது போன்றே கடந்து செல்வார்கள். (முக்கியமா டீன் ஏஜ் மாணவர்கள்).

அப்படியே எந்த குழந்தையாவது வணக்கம் சொன்னாலும், எதுக்குடா பொது இடத்தில் எல்லாம்? நம்ம டீல் எல்லாம் ஸ்கூல் காம்பவுண்ட்டுக்கு உள்ளேயே வச்சிப்போம்ப்பானு ஒரு ஜெண்ட்டில் அக்ரிமென்ட் போட்டுக்குறோம். ஆனால் நாம படிக்கும் போது ஆசிரியர்களை வெளி இடத்தில் பார்த்து வந்தனம் செய்யாவிட்டால் அடுத்த நாள் டார்கெட் நாம தான்.பிரம்பாலையே அடி வெளுத்துடுவாங்க.

ஆசிரியர் என்றாலே பயம் தான். நாம் சென்றிருக்கும் கல்யாண வீட்டிற்கு நம் ஆசிரியர் வந்திருந்தால் ஓடி போய் ஒளிந்த நாட்கள் உண்டு . இப்ப நேர் எதிர். நீங்க ரெண்டு கோட்டிங் லிப்ஸ்டிக் போட்டுட்டு வந்தால் நாம் நான்கு கோட்டிங் போட்டுட்டு சும்மா கெத்தா வந்து நிற்பேன் என்று நம் முன்னே வந்து நிற்பார்கள்.

எனக்கு நல்லா நியாபகம் இருக்கு எங்க இரண்டாம் வகுப்பு சுதா டீச்சரோட அந்த ஆறடி கூந்தல், தினம் மேட் மேட்சா ரப்பர் பேண்ட் மாத்திட்டு வருவாங்க. அப்புறம் அந்த கிளி கூண்டு கம்மல். அதுக்கு அப்புறம் யாரையும் அந்த அளவுக்கு ரசிச்சதே இல்லை. டீச்சரை பார்க்கவே பள்ளிகூடத்துக்கு போன பலபேரில் நானும் ஒருத்தி.

ஆனால் இன்றைய நாகரீக வளர்ச்சியில் குழந்தைகளின் அம்மாக்களே அவ்வளவு ஸ்டைலா இருக்காங்க. அந்த குழந்தைகள் எங்க நம்மள ரசிக்க?
எலிசபெத் மிஸ் உங்களுக்கு இந்த ஹேர் ஸ்டைல் நல்லாவே இல்லனு தலைக்கு பின்னிட்டு போற அன்னைக்கு எல்லாம் என் நான்காம் வகுப்பு மாணவர்களில் நான்கு பேரேனும் சொல்லிவிடுவார்கள். ஆனால் நான்? எங்க டீச்சர் மாதிரி கொண்டை போடனும் என்பதற்காகவே அம்மா அப்பா விளையாட்டில் எங்க பாட்டி ஜவுரி முடியை எடுத்து கொண்டை போட்டுட்டு டீச்சரா நடிச்சேன்.

எங்கள் ஆசிரியர்கள் எங்களைப் பார்த்து ஒரு நாளும் பொறாமைப்பட்டதே இல்லை. ஆனால் மாணவர்களை பார்த்து ஆசிரியர்கள் பொறாமைப்படும் அளவிற்கு மாணவர்களின் வாழ்க்கைத்தரம் இருக்கிறது என்பது உண்மை.
மிஸ் இந்தா வந்துட்டு போறான்ல இந்த பையனோட அப்பா தான் அந்த படத்தோட இயக்குனர். இதை கண்டுபிடிச்சது அதோ அந்த பொண்ணோட அப்பா, பெரிய சயிண்ட்டிஸ்ட்.இந்த மாதிரி பின்புலம் கொண்ட மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுப்பதே பெரிய சவாலா இருக்கு. எங்கடா நாம ஒரு ஸ்பெல்லிங் தப்பா எழுதிடுவோமோ? அவங்க பெற்றோர் பார்த்துவிட்டு பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பில் கூறிவிட்டால் அசிங்கமா போயிடுமேனு பயந்து பயந்து வேலை செய்யனும். ஆனால் நான் படிக்கையில் எங்களை வாசிக்க சொல்லிவிட்டு குரட்டைவிட்டு தூங்கிய ஆசிரியர் பெருமக்கள் அநேகர் உண்டு.

இந்த இமேஜ் தண்ணீரில் பார்க்கையில் கீழ்கண்ட எந்த இமேஜை பிரதிபலிக்கும்? என்ற விதத்தில் நான் கேள்விதாள் எடுக்க வேண்டும். ஆனால் அன்று, 42வது பக்கம் திருப்புங்க, ஆன் அதுல மூணாவது பத்தியில் நான்காவது வரியிலிருந்து 43வது பக்கம் ஆகும் என்பது வரைக்கும் குறித்துக் கொள்ளுங்கள். இது மிக முக்கியமான கேள்வி படிச்சிக்கோங்க என்று பாடம் நடத்திய ஆசிரியர்கள் உண்டு.

எங்கள் வகுப்பறைக்கு சனிக்கிழமைகளில் வருகை தரும் ஆசிரியைகளின் குழந்தைகள் தான் உலகிலே அழகான குழந்தைகளாய் என் கண்ணுக்கு தெரிஞ்சாங்க. இன்று இன்ஸ்டாவிற்கு சென்றால், நயன்தாரா என்ன பெரிய நயந்தாரா? எங்க ஸ்கூல் பிள்ளைங்க அவங்களுக்கே டஃப் குடுப்பாங்க. டீச்சர் குழந்தைகளை பார்த்து வியந்த நாங்க இன்று எங்கள் மாணவர்களை பார்த்து விழி பிதுங்கி போய் நிற்கிறோம்.நான் இதுவரையில் வேலைபார்த்த பள்ளிகள் எல்லாமே புகழ்பெற்ற பள்ளிகள் தான்.திடீரென்று நடிகர்கள், இயக்குனர்கள், கலெக்ட்டர்ஸ் எல்லாம் வருவாங்க பள்ளியை பார்வையிட. அவர்கள் குழந்தைகள் அங்கே படிக்கிறார்கள் என்பதால் சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய. ஆசியர்கள் எல்லாம் ஓடி ஓடி வேலை செய்யனும்.

நான் படிக்கும் போது, சரி டீச்சர் சரி டீச்சர் என் புள்ள நல்லா படிக்கிறாளா டீச்சர்னு அவ்வளவு பவ்வியமா பேசுவாங்க பெற்றோர் ஆசிரியர்களிடம்.
அன்று, 50 பைசாவையும் எடுத்துட்டு சஞ்சயிகாவில் சேர்க்க ஆசிரியரை நோக்கி ஒவ்வொரு இடவேளையிலும் ஓடுவோம். இன்று? ஆமா கூகுள் பே பாஸ்வர்ட் என்ன? என்ன மிஸ் நீங்க? ஸ்விகில உங்களுக்கு ஆஃபரே இல்லனு கேட்பாங்க.அன்று ஆசிரியரை ஆசிரியராக மட்டும் பார்த்தோம். மதிப்பு என்னும் வார்த்தையினால் ஒரு பெரிய இடைவெளி இருந்தது. ஆனால் இன்று அந்த இடைவெளி கொஞ்சம் கூட இல்லை. ஆசிரியர் - மாணவர் உறவு ஒரு நட்புறவாக இருக்கிறது தனியார் பள்ளிகளில்.

நான் படிக்கையில் ஆசிரியரின் பிள்ளைகளுக்கு மட்டுமே அனைத்து வாய்ப்புகளும் தாரைவார்க்கப்படும். அதனால் மாணவர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை அதிகம் இருந்ததும் இன்று கண்டிப்பாக அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்புகள் அளித்தே ஆக வேண்டும் என்பதால் அது வேரருக்கப்பட்டதாக உணர்கிறேன் (இது தனியார் பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தும்).

முதல் வகுப்பு ஆசிரியை கொண்டு வந்த ப்ளாஸ்க்கை வியப்புடன் பார்த்தேன். ஏய் இது சூடாவே இருக்குமாம்லனு டீச்சர் பயன்படுத்திய அந்த ப்ளாஸ்க்கையே 'பனு' பார்த்தேன்.ஆனால் இன்றைக்கு?என்ன மிஸ் நீங்க? அதான் நல்லா சம்பாதிக்கிறீங்கள்ல ஐபோன் எக்ஸ் தான் ஒன்னு வாங்க வேண்டியது தான? அப்டேட் ஆகாமலே இருக்கீங்க. அப்படினு நம்மளையே திட்டுவாங்க.



டீச்சர் டீச்சர், வெளியே பாட்டி கடையில் விக்குற நெல்லிக்காயை இவன் வாங்கி தின்னான் டீச்சர், நான் பார்த்தேன் டீச்சர்னு கம்ப்ளெயிண்ட் பண்ணிட்டு இருந்தோம். ஆனால் இன்று? சரி என்ன ஆர்டர் பண்ண? உங்களுக்கு ஒரு ஷவர்மா போடவா? எனக்கு ஒரு பீட்சா, மச்சி உனக்கு என்னடா? பிரியாணியானு நம்ம மொபைலிலே ஆர்டர் போடுவாங்க. அட, ச்சே நெல்லிக்கா வாங்கி தின்னது ஒரு குத்தம்னு அந்த சரவணன் பையன டீச்சர்கிட்ட போட்டு குடுத்து அடி எல்லாம் வாங்கி குடுத்துட்டோமேனு இப்ப ஃபீல் பண்ணுறேன். மன்னிச்சிடு சரவணா.

நன்றி ...
கேள்வி : எந்த முதலீட்டுத் திட்டம் சிறந்தது? யாருக்கு எது சிறந்த முதலீடு?
எந்த ஒரு முதலீட்டிற்கும் மூன்று கூறுகள் உண்டு. அவையாவன;

என் பதில் :


பணம் வளரும் விகிதம் (Rate of return)
பணத்தினை இழக்கும் அபாயம்(Risk)
நீர்ப்புத் தன்மை(Liquidity)
இவை முதலீட்டிற்கு முதலீடு மாறுபடும். எந்த ஒரு முதலீடும் ஏதாவது, இரண்டை மட்டும் நிறைவு செய்யும். உதாரணமாக,
பங்கு சந்தை முதலீடு ; நீர்ப்பு தன்மை அதிகம். அபாயம் அதிகம். வளரும் விகிதம் அதிகம்.
கடன் பத்திர முதலீடு; நீர்ப்பு தன்மை அதிகம். அபாயம் நடுத்தரம். வளரும் விகிதம் நடுத்தரம்.
நிலத்தில் செய்யப்பட்ட முதலீடு; நீர்ப்புத்தன்மை மிக குறைவு. அபாயம் நடுத்தரம். வளரும் விகிதம் நடுத்தரம்.
தங்கத்தில் முதலீடு; நீர்ப்புத்தன்மை அதிகம். அபாயம் நடுத்தரம். வளரும் விகிதம் நடுத்தரம்.
வங்கி வைப்பு நிதி முதலீடு; நீர்ப்புத்தன்மை அதிகம். அபாயம் குறைவு. வளரும் விகிதம் குறைவு.
இவற்றைத் தவிர பின்வரும் பல்வேறு வகை முதலீடுகளும் உள்ளன.

சரக்குகள் சார்ந்த முதலீடுகள் (commodities)
தொன்மையான நாணயங்கள்
தொன்மையான ஓவியங்கள்
தொழிலில் பண முதலீட்டுப் பங்கு
வெள்ளி போன்ற உலோகங்கள்
பணத்தின் வெளிநாட்டு சந்தை பரிமாற்றம்(Forex) சார்ந்த முதலீடுகள்
இன்னும் பல
எனவே, எந்த முதலீடு ஒருவருக்கு சிறந்தது என்பது பல்வேறு காரணிகளால் மாறுபடும்.

வயது;
இளம் வயதில், பணத்தை குறுகிய காலத்தில் இழக்கும் முதலீடுகளில் தைரியமாக முதலீடு செய்யலாம். நீண்ட காலத்தில், கண்டிப்பாக பணமானது பெருகிவிடும்.

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

CAR LOANS,MUTUAL FUND,FIXED DEPOSIT,HOME LOANS,INSURENCE
Please be free to communicate at any time and it is our pleasure to serve you always.

திங்கள், 6 ஜூலை, 2020

கேள்வி : இணையத்திலும் ,முக நூலிலும் .வாட்ஸாப்பிலும்  உங்கள் உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டு விடைகள் எழுதுவது எதற்காக? இதனால் உங்களுக்குக் கிடைக்கும் பலன்கள் என்ன?

என் பதில் :

கொரோனா வைரஸால் முடங்கிக் கிடக்காமல் நல்ல பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்வதோடு, உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்தில் என் மனதில் தேங்கியிருந்த எண்ணங்கள் எல்லாம் ஒரு வடிகாலாக இந்த தளங்களை  பயன்படுத்திக் கொள்கிறேன்.

சமீபத்தில் தான் செய்த பதிவுகளை ஒவ்வொன்றுக்கும் தொடர்பில்லாத, வெவ்வேறு தலைப்பில் மனதில் தேக்கி வைத்த கருத்துக்களை / எண்ணங்களை, என் வாழ்வில் செயல்படுத்திய நினைவுகளையும், உங்களோடு பகிர்ந்து கொண்டேன்.

உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். இதற்காக நீங்கள் காட்டி ஆதரவும் அரவணைப்பும் உற்சாகமும் என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டியது.

மற்ற சமூக வலைத்தளங்களில் உள்ள குறுகிய நட்பு வட்டத்துக்குள் எனது எண்ணத்தை தெரிவிக்க தற்போது மனம் ஏற்கவில்லை.

வாட்ஸ் ஆப் & முக நூல்,இணையதளத்திலும் எனது எழுத்துப் பயணம் இணையதளத்தில் அதிக அளவு பார்வையாளர்கள் கொண்ட தளத்தில் மேற்கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் கேள்விக்கு பதில் எழுதியும், கேள்வி கேட்டு பதிலை எதிர்பார்த்தும் இருக்கிறேன்.

நன்றி
கேள்வி : வயதாக வயதாக திருமணத்தை பற்றி அதிகம் யோசிப்பது மற்றும் பயம் கொள்வது ஆண்களா /பெண்களா?

என் பதில் :

இருபாலருமே.

20 - 25 = மனதில் ஆசை. ஆனால் தயக்கம். இன்னும் சில காலம் சுதந்திரத்தை அனுபவிப்போமே என்ற எண்ணம். பெற்றோரும் அதிக கவலைப்படுவது இல்லை.

25- 30 = சரியான நேரம் என்ற உணர்வு. பெரும்பாலும் அமைந்துவிடும். எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும். இருந்தும் பெற்றோரும் தீவிரமாக முயன்று நடத்திவிடுவார்கள். சரியான வயது என்பதால் எல்லாம் நலம்.

30–35 = மனதில் ஒரு ஏமாற்றம் ஆனால் நம்பிக்கை இழக்க மாட்டார்கள். அமைவது சிறிது கடினம். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு வித்தியாசங்களை சற்று சமாதானமாக கையாள்வார்கள். ஹும் கொஞ்சம் காலம் கடந்துவிட்டது என்ற ஆதங்கம். இருந்தும் அப்பாடா என்ற நிம்மதி. பெற்றோர் முயற்சி குறையாது.

35–40 = இதுவரை அமையவில்லையே என்ற மன வருத்தம். இனி அமையுமா என்ற கவலை. பயமாகவும் உருவெடுக்கும். ஆனால் வயதின் முதிர்ச்சி கடைசி சுற்றுக்கு காத்திருக்க வைக்கும். பெற்றோர் நம்பிக்கை இழப்பர். நடப்பது நடக்கட்டும் என விட்டு விடுவர்.

40க்கு மேல்.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று சிலர். இனி எங்கே என்று சிலர். பயம் போய்விடும். சுதந்திரம் பழக்கமாகிவிடும். சிலர் ஞானிகள் ஆகிவிடுவார்கள்.

பெற்றோர்கள் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று அமைதி அடைந்து விடுவார்கள்.
கேள்வி : குடும்பத்தில் ஏற்படும் சிறு பிரச்சனை முதல் பெரும் பிரச்சனை வரை சமாளித்து அனைவருக்கும் குடும்ப ஒற்றுமை உணர்வை எப்படி மேம்படுத்துவது? அதற்கான ஆலோசனைகள் என்ன?

என் பதில் :

குடும்பம் என்றால் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும் . வீட்டுக்கு வீடு வாசல் படி என்பார்களே அதே போல். பொதுவாக குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை நடக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள் அது கணவன் மனைவி இருவர் இடையே ஆன பிரச்சினை ஆக இருக்கலாம். அதை எப்படி கை ஆளுவது என்றால் ஒருவர் கோபமாக இருக்கும் போது மற்றவர்கள் அமைதியாக இருந்து விடுவது நலம். ஆனால் நம்மில் பல பேர் அதை போல் இருப்பது இல்லை . உடனே நம் கோவத்தை காட்டி விடுகிறோம் . அந்த காலத்தில் எல்லாம் குடும்பத்தில் சண்டை வந்தது என்றால் கணவன் வெளியில் சென்று விடுவார்.

அப்போது ஸ்மார்ட் போன்கள் கிடையாது . வீட்டுக்கு வந்து உடனே சமாதானம் ஆகி விடுவார். போன் இருப்பதால் நம்ம என்ன செய்கிறோம் உடனே நம் கோவத்தை வார்த்தைகள் மூலமாக கொட்டி விடுகிறோம். தவறு என்ன என்று அவர் உணர்வதற்கு வழியே இல்லாமல் போய் விடுகிறது . தற்போது கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போகின்றனர் . ஒருவரை நம்பி ஒருவர் இல்லை என்று வரும் போது அங்கே நான் என்ற கர்வம் தலைக்கு ஏறி நாம் செய்வது தான் சரி என்று ஆகி விடுகிறது.என்னவாக இருந்தாலும் குடும்பம் என்ற வண்டி ஓடுவதற்கு ரெண்டு மாடுகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒன்று கட்டுக்கு அடங்காமல் போனால் மற்ற ஒன்று என்னவாகும்??.


இது நம்முடன் முடிய கூடிய விஷயம் இல்லை. நம் குழந்தைகள் பற்றி அவர்கள் எதிர் காலம் பற்றி நாம் யோசிக்க வேண்டும்.அவசர பட்டு நாம் எடுக்கின்ற சின்ன முடிவுகள் அந்த பிள்ளைகளின் வாழ்கையை தொலைத்து விடும் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். இது என் சொந்த அனுபவத்தில் நான் கண்ட உண்மை.
கேள்வி : நான் ஒவ்வொரு மாதமும் வங்கியில் ரூபாய் 1500 சேமிக்கிறேன், வங்கி எனக்கு 7% வட்டியை வழங்குகிறது, 50 ஆண்டுகளுக்குப் பிறகு எனது சேமிப்பு எவ்வளவாக இருக்கும்? இந்த பதிலைக் கண்டுபிடிக்க என்ன சூத்திரம் எனக்கு உதவும்? வரையறையைக் கூறுங்கள்.

என் பதில் :..


ஐம்பது ஆண்டு (= 600 மாத) முடிவில் தோராயமாக கிடைக்கும் தொகை ₹82,19,492.

Assumptions:

(1) மாத ஆரம்பத்தில் (மாத முடிவில் அல்ல) ₹1,500 என மாதந்தோறும் சேமிக்கிறீர்கள்;

(2) கூட்டுவட்டி முறையில் மாதந்தோறும் (Monthly compounding frequency) வட்டி கணக்கிடப்படுகிறது.

சூத்திரம்: மைக்ரோஸாஃப்ட் எக்ஸெல் சூத்திரத்தைப் பயன்படுத்தி "எதிர்கால மதிப்பை" [Future value (FV)] கண்டுபிடிக்கவேண்டும்.

= FV(rate,nper,pmt,[pv],[type])

= FV (0.5833%, 599, -1500, -1500, 1)

= ₹82,19,492.

வழிமுறை

rate = 7% ஆண்டு வட்டியை மாத வட்டியாய் மாற்ற வேண்டும் = 7%/12 = 0.5833% (மாத வட்டி)

nper = Number of periods = மொத்த சேமிப்பு மாதங்கள் = 599 (குறிப்பு: 600 மாதங்களில், முதல் மாத ஆரம்ப சேமிப்பை Present value (pv) எனக் கொண்டால் மீதம் இருக்கும் 599 மாதங்களுக்கு தலா ₹1,500 சேமிக்க வேண்டும். "nper"-இன் மதிப்பை 599 என்று இட வேண்டுமேயன்றி 600 என இடுவது தவறு.)

pmt = மாதந்தோறும் சேமிப்புத் தொகை : -1500. (பணம் வெளியே போவதால் தொகைக்கு முன்னால் Negative sign இட வேண்டும்.)

pv (Present value) = -1500 (அதாவது, முதல் மாத ஆரம்பத்தில் போடும் பணம். பணம் வெளியே போவதால் தொகைக்கு முன்னால் Negative sign இட வேண்டும். இந்த Present value புரிவதற்கு சிறிது கடினமாக இருக்கலாம். அதை எளிதாக்க உங்கள் கேள்வியை மாற்றி அமைக்கிறேன்: இன்றைய தேதி 1 ஜனவரி 2020 என்றால், இன்று ₹1,500 கட்டி, இனி வரப்போகும் 599 மாதங்களின் முதல் தேதியில் தலா ₹1,500 கட்டப்போகிறேன். எதிர்காலத்தில் 599 மாதத் தவணைகளில் கட்டப்போகும் தொகைகளை 0.5833% மாத வட்டியில் (= (ஆண்டு வட்டி 7%) / 12) discounting செய்தால் கிடைக்கும் இன்றைய மதிப்பு (Present value) = ஜனவரி 1, 2020 தேதியில் கட்டிய ₹1,500. எனவே ஜனவரி 1, 2020 தேதியில் கட்டிய தொகையை Negative sign சேர்த்து (-1500) என "pv"-க்கு இடுகிறோம்.]

type = 1 (மாதா மாதம் ஆரம்ப தேதியில் சேமிப்பு என்பதால் "1" என இட்டிருக்கிறேன். மாத இறுதித் தேதியில் சேமிப்பு என்றால் "0" என இட வேண்டும்.)

****************
Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

CAR LOANS,MUTUAL FUND,FIXED DEPOSIT,HOME LOANS,INSURENCE
Please be free to communicate at any time and it is our pleasure to serve you always.

ஞாயிறு, 5 ஜூலை, 2020

நமது இராஜகம்பளம் திருமணங்களில் செய்யக்கூடிய 32 சீர் வகைகள் 🌹🌹🌹🌹🌹

1சவர கோல்
2 பொப்பு கூடு
3 குண்டல தீசேதி
4 பாஜ்ஜியம் தீசேதி
5 பேராட்டு நீல்லகு போயேதி
6 கம்புளு தப்பேதி
7 தலபாலு அட்டேதி
8 தலபட்ட கட்டேதி
9 தள்ளி மிஞ்சுலு வேசேதி
10 திசெ மொக்குலு மொக்கேதி
11 பொக்கு கீறிசேதி
12 திப்பிடி மொக்கேதி
13 கண்ணபூ தெப்பேதி
14 தோரன கொதம கொத்தேதி
15 பொட்டு கட்டேதி
16 விடிதன விடிசேதி
17 குற்ரானிகி சேய் மோவேதி
18 வேட்டைகி போயேதி
19 சேய் கோர்வை சத்தியம்
 20 பூஜ்ஜல் நீலு
21 பத்தி கீஜ்ஜீலு வித்தேதி
 22 திப்பிடி கூடு எத்தேதி
 23 பிட்ட அப்பேதி
24 அத்தகோரி அட்டுலு
25 சீர்லு அழைச்சேதி
26 அட்டுலு மொக்கேதி
 27 ஊர் உள்ளுகு பொயேதி
28 ஆலாத்தி எத்தேதி
29 தொட்டிகி போயேதி
30 பாவி நரிகேதி ஒன்ட வேசாலு
31 வீடாலு பிலுபு
32 பாஜ்ஜியம் கட்டேதி   


 ரா.பழனிவேல்முருகன்  ஜமின்தாா்  குல்லலக்குண்டு 🌷🌷🌷🌷🌷🌷

அருமையன தகவல் அளித்த ரா .பழனிவேல்முருகன் -ஜமீன்தார் -குல்லலக்குண்டு ..நன்றி வாழ்த்துக்கள்

சனி, 4 ஜூலை, 2020

கேள்வி : அதிக அளவில் பேசப்படாத அப்பா மகன் உறவு எவ்வளவு ஆழமானது?

என் பதில் :.....அப்பா...!!!


சக்திவேல் எழுபது வயதைக் கடந்த தாத்தா. ஒருநாள் அவர் ஒரு பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிருந்தார்.

பக்கத்தில் குழந்தைகள் விளையாடும் சத்தம்.

மரத்தில் பறவைகள் கத்தும் சத்தம்.

இந்த சூழலை ரசித்துக் கொண்டிருந்தார் சக்திவேல்.

வாழ்க்கையில் இனி ஓடி ஒளிய முடியாமல், பழைய நினைவுகளை உயர்த்திப் பிடித்து அசைபோடும் நிலை அது.

அதே பெஞ்சில் அவருடன் அமர்ந்திருந்த நண்பர்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை.

அந்த சமயத்தில் ஒருவர் சக்திவேலின் பக்கத்தில் வந்து அமர்ந்தார்.

"மிஸ்டர் சக்திவேல்!

நான் தான் கடவுள். உங்களுக்கு ஆசை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன" என்றார் அவர் (கடவுள்).

ஆச்சரியப்பட்டார் சக்திவேல்.

யோசித்தார்.

பிறகு பேசினார்.

""கடவுளே! என் அப்பாவை நான் பார்க்க வேண்டும். அவரை என் கண் முன் கொண்டு வந்து நிறுத்திவீர்களா?"" என்று கேட்டார் சக்திவேல்..

""மிஸ்டர் சக்திவேல்! நீங்களே தாத்தாவாகி பல வருஷங்கள் ஆயிடுச்சு. இன்னமும் உங்கள் அப்பாவை பார்க்கும் ஆசை இருக்கிறதா?' என்று கேட்டார் கடவுள்.

''கடவுளே! ஆம். ... அவருக்கு நிகர் யாருமில்லை'' என்றார் சக்திவேல்..

‘அப்படியா!' என்றார் கடவுள்.

''அப்பா பலமுறை என்னிடம் கோபப்பட்டுள்ளார். தண்டித்திருக்கிறார். அப்போதெல்லாம் எனக்கும் கோபம் வரும். மனத்திற்குள் திட்டித் தீர்த்திருக்கிறேன். ஆனால், நானும் ஒரு அப்பாவாக மாறிய பிறகு அப்படிப்பட்ட கோபத்தில் இருக்கும் நியாயம் எனக்கு புரிந்தது. அதனால் இந்த நிலையில் அவர் என்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்றார் சக்திவேல்.

''அதெல்லாம் சரி!

உன் அம்மாவை பார்க்க வேண்டும் என்று ஏன் உனக்கு தோன்றவில்லை?''' என்று கேட்டார் கடவுள்.

‘அப்பாவா? அம்மாவா?இதில் யார் தவிர்க்க முடியதவர் என்ற போட்டி தற்போது நடக்கவில்லை. திருமணமான பிறகு மனைவி அம்மாவின் இடத்தில் பாதியை நிரப்பிவிட்டார். ஆனால், அப்பாவின் இழப்பை இதுவரை யாரும் நிரப்பவில்லை. அதனால்தான் அப்பாவை பார்க்க விரும்பினேன்''', என்றார் சக்திவேல்..

''சரி! உன் அப்பா என்னை விட சிறந்தவரா? என்று கேட்டார் கடவுள்

''என் அப்பாவிடம் எதை கேட்டாலும் வாங்கிக் கொடுத்து விடுவார். ஆனால், என் அப்பாவையே கேட்டால், அது உங்களால் மட்டுமே கொடுக்க முடியும்.

அந்த வகையில் நீங்கள்தான் சிறந்தவர். ஆனால், அப்பா, என்னை ஒரு நல்ல தகப்பனாக உருவாக்கியிருக்கிறார்.

நான் என் மகனை அவனது பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக உருவாக்குவேன்.

ஆனால், நீங்கள் ஒரு நல்ல கடவுளை உருவாக்கியிருக்கிறீர்களா? உங்களால் முடியாததை செய்த என் அப்பாதான் சிறந்தவர்தானே?'' என்று கேட்டார் சக்திவேல்.

அமைதியானார் கடவுள்.

மீண்டும் சக்திவேல் பேசினார்.

''‘ராமன் காட்டுக்குப் போனான் என்றவுடன் உயிரை விட்டார் தசரதன்,

இந்திரஜித் இறந்தவுடனே பிணமாய் வாழ்ந்து உயிரை விட்டான் இராவணன்,

பிள்ளைக்கு சாகாவரம் பெற்றுத் தந்தார் துரோணர்.

இப்படி பிள்ளைகளுக்காக வாழ்ந்த அப்பாக்கள் ஏராளம். அந்த அப்பாக்கள் தவிர்க்க விரும்பிய விஷயம் ‘புத்திர சோகம்'.

ராமனை பிரிந்தவுடன் உயிரைவிட்டார் தசரதன். ஆனால், தசரதன் இறந்த பின் ராமன் இறக்கவில்லை. அதுதான் மகன் மீதான அப்பாவின் பாசத்திற்கும், அப்பாவின் மீதான மகனின் பாசத்திற்கும் உள்ள வித்தியாசம்', என்றார் சக்திவேல்.

ஆச்சர்யமாக பார்த்தார் கடவுள்.

'''‘ம்..... மேலே சொல்'' என்றார் கடவுள்.

''ஒருமுறை ஆபிஸுக்கு பஸ்ஸில் போய்க்கொண்டி ருந்தேன். பக்கத்தில் ஒரு பெண். என் முன்னால் இருந்த கம்பியை பிடித்துக்கொண்டிருந்தார்.

அடிக்கடி அவளுடைய முகத்தை பார்த்தேன். ஒவ்வொரு முறையும் ஒரு புன்சிரிப்பு தென்பட்டது.

அவளின் விரல்களில் ஒரு சிகப்புக் கல் வைத்த மோதிரம் இருந்தது. என்னை அறியாமல் அந்த சிகப்புக் கல்லை தொட்டுப் பார்த்தேன். வெடுக்கென்று கையை எடுத்துக் கொண்டார். அப்போதுதான் அது தவறு என்று புரிந்தது.

அடுத்த ஸ்டாப்பில் அந்தப் பெண் இறங்கத் தயாரானார். கிளம்பிய பெண் சட்டென்று திரும்பி அந்த மோதிரத்தை என் கைகளில் திணித்துவிட்டு கிளம்பினார். அது ஒரு இன்ப அதிர்ச்சி. பஸ் கிளம்பியது. அந்தப் பெண் தூரத்தில் சென்று மறைந்தாள்.

அன்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். எதிரில் அப்பா வந்து கொண்டிருந்தார். அவரிடம் சென்று பஸ்ஸில் நடந்ததை அப்படியே ஒரு வரி மாறாமல் சொன்னேன். மோதிரத்தை அவரிடம் காட்டினேன். அவர் முகத்தில் எந்த சலனமும் இல்லை. ''நாளைக்கு அந்த மோதிரத்தை அவளிடம் திருப்பி கொடுத்துடு''என்று சொல்லிவிட்டு வாக்கிங்கை தொடர்ந்தார்.

வீட்டில் யாரிடமும் அவர் இதைப் பற்றி பேசவில்லை', என்று சொல்லிவிட்டு அமைதியானார் சக்திவேல்..

''அந்த மோதிரத்தை அடுத்த நாள் திரும்ப அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டீர்களா?'' என்று கேட்டார் கடவுள்.

சிரித்தார் சக்திவேல்.

‘இந்தக் கேள்வியை அப்பா என்னிடம் கேட்கவில்லை. ஆனால் நீங்கள் கேட்கிறீர்கள்.

அடுத்த நாள் அந்த மோதிரத்தை திரும்ப கொடுத்துவிட்டேன். ஆனால், அதைக்கூட அப்பாவிடம் சொல்லவில்லை.

அவரும் அந்த பதிலுக்காக காத்திருக்கவில்லை.

எங்களுக்குள் அப்படி ஒரு புரிதல் இருந்தது. அதனால்தான் சொல்கிறேன் என் அப்பா உங்களை விட சிறந்தவர்', என்றார் சக்திவேல்..

கடவுள் சிரித்தார்.

‘கடவுளே! அப்பா என்பது உன்னதமான உறவு. நம்மைச் சுற்றி நடக்கும் உண்மை நிலையை புரிந்துகொள்ளும் அற்புதமான நடைமுறை உலகத்து உறவு.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால்

அப்பா என்பவர் நம்மைப் பற்றி முழுமையாகத் தெரிந்த முதிர்ந்த நண்பர்', என்றார் சக்திவேல்.

':அதெல்லாம் சரி! அப்பாவிடம் எதையாவது மறைத்திருக்கிறீர்களா?' என்று கேட்டார் கடவுள்.

‘ஒரு விஷயத்தை மறைத்திருக்கிறேன். நான் ஒரு பெண்ணை ஐந்து வருஷமாய் காதலித்து வந்தேன். பிறகுதான் தெரிந்தது அவளுடைய அப்பாவிற்கும் என் அப்பாவிற்கும் ஆகாது என்று. அதனால் காதலை அத்தோடு நிறுத்திக் கொண்டோம். அது வலி நிரம்பிய பிரிவு', என்று சொல்லும் போது சக்திவேலுவின் கண்களில் கண்ணீர் சேர்ந்தது.

‘மிஸ்டர் சக்திவேல்! நீங்க இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்ததை உங்க அப்பா கேட்டுக் கொண்டுதான் இருந்தார்.

இதோ அப்பா நிற்கிறார். இன்னும் சில நிமிடங்கள் அவர் உங்களோடு இருப்பார். பேசிக்கொள்ளுங்கள்', என்று சொன்னார் கடவுள்.

சக்திவேல் ஓடிச் சென்று அப்பாவை கட்டிப் பிடித்துக் கொண்டார். இருவர் கண்களிலும் கண்ணீர்.

''மகனே! என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா?

என் வரட்டு பிடிவாதத்தை விட்டுக் கொடுத்திட்டு அந்த பெண்ணையே திருமணம் செய்து வைச்சிருப்பேனே!', என்றார் அப்பா.

மெளனம் மட்டுமே பதிலாய் தந்தார் சக்திவேல்.

அப்பா பேசினார்.

''ஒரு அப்பாவிற்கு கிடைத்த பெரிய வரம் என்ன தெரியுமா?

அவர் மற்றவர்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வதுதான்.

அந்த விஷயத்தில் நீங்கள் எல்லோரும் என்னை நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள். இதைவிட சிறந்த வரம் ஒரு அப்பாவிற்க்கு இருக்க முடியாது', என்றார் அப்பா.

‘அப்பா! நீங்க என் கூடவே தங்கிடுங்கப்பா!' என்று கெஞ்சினார் சக்திவேல்.

‘அது முடியாதுப்பா! என்னோட கதை முடிந்த கதை. வாழ்க்கையில ஒரு அப்பாவின் பங்கு என்ன என்பதை நீ நன்றாக புரிந்து வைத்திருக்கிறாய். அதை உன் மகனுக்கும் புரிய வைத்திருக்கிறாய். அவன், அவனுடைய மகனுக்கும் புரியவைப்பான். இதன் விளைவாக உலகம் நல்ல தகப்பன்களை உருவாக்கும். அது நல்ல குழந்தைகளை உருவாக்கும். இதை விட பெருமை எந்த தகப்பனுக்கும் கிடைக்காது. நான் பாக்கியசாலி. நான் கிளம்பறேன்', என்று சொல்லிவிட்டு சற்று தூரம் நடந்து மறைந்து போனார்.

சக்திவேல் அழத்தொடங்கினார்.

‘என்ன மிஸ்டர் சக்திவேல்! போதுமா? நான் கிளம்பட்டுமா?' என்று கடவுள் கேட்டார்.

‘கடவுளே! நான் பள்ளிக்குச் சென்ற முதல் நாளை என்றுமே மறக்க முடியாது. கையில் ஒரு சாக்லேட்டை கொடுத்து மரத்தடி பள்ளிக்கூட வகுப்பறையில் இறக்கிவிட்டு டாட்டா காண்பித்துவிட்டு கிளம்பினார் அப்பா.

நான் அழத் தொடங்கினேன். யார்யாரெல்லாம் சமாதானம் சொல்லியும் விம்மலும், அழுகையும் நிற்கவில்லை.

அப்பா சென்ற வழியை பார்த்து அழுதுகொண்டே யிருந்தேன், அப்பா அந்த வழியே வருவார் என்ற நம்பிக்கையோடு....

அதே நேரத்தில் அப்பா சற்று தொலைவில் ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு நான் என்ன செய்கிறேன் என்பதை பார்த்துக் கொண்டிருந்தார்.

நிச்சயமாக அவரும் அழுதிருப்பார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அப்பா வந்தார்.என்னை தூக்கிகொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார். அவர் தோளில் சாய்ந்த நான் அப்படியே தூங்கிப்போனேன். இது என் முதல் நாள் பள்ளி ஞாபகம்'.

சக்திவேல் மீண்டும் பேசினார்.

‘கடவுளே! இன்றும் கிட்டத்தட்ட அதே நிலையில்தான் இருக்கிறேன். என்னை விட்டுச் சென்ற அப்பா மீண்டும் வரமாட்டாரா? என்று அவர் சென்ற வழியிலேயே காத்துக் கொண்டிருக்கிறேன்.

இப்போது அப்பா எந்த மரத்தடியில் ஒளிந்து என்னை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் தோளில் தூங்கினால் என்னுடைய எல்லாக் கவலைகளும் பறந்துபோகும். அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா?' என்று கேட்டுவிட்டு அழுதார் சக்திவேல்..

(சக்திவேலுக்கு மட்டுமல்ல.. நம் அனைவருக்கும் மனச்சுமையை நீக்கும் அப்பாவின் தோள் கிடைக்குமானால், நம்மைவிட அதிர்ஷ்டசாலி யாரும் இருக்க முடியாது. அப்பா, நம்மில் விதைக்கப்பட்ட கற்பக விருட்சம்)
கேள்வி : பெண்கள் ஆண்களிடம் எதனை எதிர்பார்க்கிறார்கள்?

என் பதில் :.

எல்லா பெண்களும் ஆண்களிடம் வீடு, கார், ஆறு டிஜிட்ல சம்பளம், அழகு எதிர்ப்பார்ப்பதில்லை.

நல்ல பக்குவமான பெண்களுக்கு தெரியும் வாழ்க்கையின் அர்த்தமும் அதன் தேவையும். அப்படிப்பட்டவர்கள் ஆண்களிடம் எதிர்ப்பார்ப்பது,

தனக்காக ஒருவன். பெண் எப்பவுமே மற்றவர்களுக்காக வாழக்கூடிய ஜீவன். அதனாலயே அவள் தனக்கான ஒருவன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவாள். சாப்பிட்டியா, எப்படி இருக்கன்னு தன்னைப்பற்றி சிந்திக்கும் ஒருவன் வேண்டும்னு நினைப்பாங்க. அப்படி ஒரு ஆண் கிடைத்தால், கண்டிப்பா அந்த பெண் அவனை பொக்கிஷம் போல பார்த்துப்பாள்.
பெண்கள் அதிகமா காதல் வைச்சிட்டா அவங்களுக்கு பொஸஸிவ்வும் அதிகமா இருக்கும். தன்னுடையவன் மற்ற பெண்களிடம் சிரிச்சி பேசுறது கூட சின்ன கோபத்தை உண்டுப்பண்ணும். அதை புரிந்து ஆண்கள் நடந்துக்கிட்டா நல்லாயிருக்கும்.
சோகமாக இருக்கும் பொழுது தோள் குடுக்கும் ஒரு தோழனாய். கண்ணீரை துடைத்துவிடும் ஒரு காதலனாய். அரவனைப்பு தருவதில் ஒரு தாயாக இருக்கும் ஆண்மகன் வேண்டும்.
நிறைய மேடை பேச்சுகளில் ஜோதிகா கூறுவது, சூர்யா மாதிரி ஒரு கணவன் கிடைக்க நான் குடுத்து வைச்சிருக்கணும்னு. ஒரு பெண் திருமணமான பின் கணவன், குழந்தைன்னு அவள் வாழ்க்கையை அடக்காமல், அவளுக்கான இடத்தை தருவது. அப்படிப்பட்ட ஆண்மகன் கிடைத்தால் கண்டிப்பா அந்த பெண் குடுத்து வைச்சவங்க தான்.
பெண் எல்லாரையும் நினைத்து அழ மாட்டாள், எல்லாரையும் பார்த்து சிரிக்கவும் மாட்டாள். இதையெல்லாம் உங்களுக்காக பண்ணுனா நீங்க எவ்வளவு ஸ்பெஷல்ன்னு தெரிஞ்சிக்கோங்க. அதை விட்டுட்டு ஏன் எப்பவும் அழுமூஞ்சா இருக்கன்னு கேட்காதீங்க.
நீங்க எங்க இருக்கீங்க, எப்படி இருக்கீங்ஙன்னு அடிக்கடி கால் பண்ணிக்கேட்பதற்க்கு காரணம் நீங்க பத்திரமா இருக்கீங்களானு பார்க்க தான். அதுதெரியாமல் ஏன் அடிக்கடி கால் பண்ணி நச்சரிக்கிரன்னு திட்டாதீங்க.
24 மணி நேரமும் வேலையிலேயே பிஸியாக இருக்கும் ஆண்களே! உங்கள் கடைக்கண் பார்வைக்காக ஏங்கும் பெண்ணை பார்க்க கூடாதா?
தன்னை பெருமையாக பார்க்கும், தனக்கு சரிசமமான உரிமை தரும், தன் சுயமரியாதையை மதிப்பளிக்கும் ஒரு ஆணே ஒரு பெண்ணின் எதிர்ப்பார்ப்பு.
மொத்தத்தில் ஒரு பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது, கொட்டிக்குடுக்கும் அன்பு, கொட்டு கொடுக்காமல் சொல்லும் அறிவுரை, தன்னை குழந்தையை போல பாவிக்கும் மனப்பக்குவம், கோவப்படும் போது கொஞ்சி சமாதான படுத்துவது. இது போல சின்ன சின்ன விஷயங்களை தெரிஞ்சி வைச்சிக்காம பொண்ணுங்களை புரிஞ்சிக்க முடியலைன்னு டையலாக் பேசாதீங்க.
கேள்வி : பல அம்மாக்களுக்கு தன் மகனிடமிருந்து வாங்கி மகள்களுக்கு செய்தே ஆகவேண்டும் என நினைப்பர். இதையெல்லாம் எப்படி சரி செய்வது?

என் பதில் :


உறவுகள் தொடர்வதற்கு சில இழப்புப்புக்களை சந்தித்தே தீர வேண்டும். அதில் இதுவும் ஒன்று.. அம்மாவின் மகிழ்ச்சி முக்கியம் என்று நினைக்கும் எந்த மகனுக்கும் இது பெரிய இழப்பு இல்லை.. நமது ஆதரவில் வாழும் அம்மாவுக்கு உடல்நலம் சரி இல்லை என்றால் மருத்துவத்திற்கு செலவு செய்ய மாட்டோமா? அது போலவும் நினைத்துக் கொள்ளலாம்.. அம்மாவுக்கென்று நாம் கொடுப்பதை அவர்களின் சந்தோஷத்திற்காக யாருக்குக் கொடுத்தாலும் நாம் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். மகளோ, வழிப்போக்கனோ அது அவர்களுக்கு புண்ணியமாக இருக்கட்டும் என்றும் நாம் நினைத்துக் கொள்ளலாம். இதை சரி செய்யப் போனால் அம்மாவின் அன்பையும், உடன்பிறந்தவர்களின் உறவையும் இழக்க நேரிடலாம். எது சிறந்தது என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமை அவரவர் பொறுப்பு.
படித்ததில் பிடித்தது .......
உன் மறு ஜென்மத்திற்காக காத்திருக்கிறேன்............
யாரும் இல்லாத என் இராத்திரிகள்
மறு நிமிடம் களைந்து போகும் என் கனவுகளில்
உன்னுடன் நான்.
உனக்காக காத்திருப்பதை விட என்
மரணத்திக்காக காத்திருக்கலாம்
என் மரணம் எனக்கு சுமையானதல்ல
நீ இல்லாத போது.
உனது பரிசம், காதல், முத்தம், அரவணைப்பு
அனைத்திற்காகவும் ஏங்கும் அனாதை குழந்தை தான் என் உள்ளம்.
என் இதயம் மட்டும் தினம் தினம் இரத்தக் கண்ணீர்
சிந்துகிறது... "நீ இல்லை"
கண் இமைக்கும் அந்த வினாடிகளில் மட்டும் உன் பிம்பம்
அதுவும் நிரந்தரம் இல்லை.
நான் உன்னை பிரியவில்லை
நீ என் அருகும் இல்லை. - ஆனால்
உன்னை யாசிக்கிறேன் - அதை விட
உன்னை நேசிக்கிறேன் - ஆனால்
என் முச்சு காத்தோடு மட்டும் தான் உன் உரசல்கள்..
நீ காத்தோடு தானே கலந்து விட்டாய்
என் உயிரில் கலந்தது போல...
என் உயிர் நீ இல்லை,
அர்த்தம் இல்லாதது தான் என் பயணம்
ஆனாலும் தொடர்கிறேன் உனக்காக,
உன் மறு ஜென்மத்துக்காக...
நம் குழந்தையாகவாவது நீ பிறப்பாய்
என்ற நம்பிக்கையில் உன்னை சுமக்கிறேன்
இனி உனக்கு மரணமே இல்லாத என் கருவறையில்.......
இனி வாழ்க்கையில் மறுபடியும் திரும்ப வரப்போவதில்லை ..ஜூலை ..5..2004............