ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

என் கேள்வி :....உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட மிக முக்கியமான வாழ்க்கைப் பாடம் என்ன?

மனைவியின் பதில் :...


என் வாழ்க்கை துணையே பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்…. அவ்வளவு இருக்கிறது, நான் அவரிடம் கற்றுக்கொண்டது…. ✌️😍

கணவன் மனைவிக்கு இடையில் முதலில் புரிதல் என்பது மிக முக்கியமான ஒன்று.!எங்கள் இருவருக்கும் இடையில் முதலில் அது கொஞ்சம் கடினமாக இருந்தது….எங்களுக்கு சண்டை தான் அதிகமாக வரும் அதற்க்கு நான் மட்டும் தான் காரணம்….. நாட்கள் மெல்ல மெல்ல கடந்தது…எங்கள் இருவருக்கும் இடையில் புரிதல், அன்பு மலர்ந்தது…

நாங்கள் இருவரும் தொலைபேசியில் அவ்வளவாக பேசியது இல்லை. ((திருமணம் முடிவு செய்த பின் திருமணத்திற்கு இடையில் 3மாதம் இருந்தும் என் கணவர் வாரம் ஒரு முறைதான் என்னை அழைப்பார்))

யாருடனும் போன் செய்து பேசும் பழக்கம் இல்லை. மிகவும் முக்கியமான வேலை, வேறு ஏதேனும் இருந்தால் மட்டும் தான் அழைப்பார். அவரின் வீட்டிற்கு கூட போன் செய்து பேசுவது குறைவுதான்…. ஒரு நாள் நான் கேட்டேன்!

ஏங்க இப்படி இருக்கீங்க…. உங்கள் வீட்டிற்கு கூட போன் செஞ்சு சரியா பேசாமற்றிங்க? அப்படினு கேட்டேன் அவர் அதற்க்கு சொன்னது…. நான் எப்பவும் இப்படி தான் பேசுவேன் அப்படினு சொன்னார்.

பிறகு ஒரு நாள் கேட்டேன்… என்னங்க நான் ஒரு நாள் எங்க அம்மா வீட்டுல இருந்தா அப்போ எனக்கு போன் செஞ்சு பேசமாட்டீங்களா அப்டினு கேட்டேன்…..அதுக்கு அவங்க பதில்.. !😊

என் கணவர் : போன் பண்ணுவேன், அதுக்கு ஒரு நாளைக்கு 9தடவையா பண்ணிட்டு இருப்பாங்க… எப்பாவது பண்ணுவேன் அப்படினு சொன்னாங்க..

நான் : என் மேல பாசமே இல்லை உங்களுக்கு அதான் இப்படி சொல்றிங்க. போன் செஞ்சு, நான் என்ன பண்றேன்… சாப்டியா அப்டினு ஒரு வார்த்தை கேட்க மாட்டிங்களா? (எல்லாம் பெண்களுக்கும் இந்த ஆசை இருக்க தான் செய்கிறது )

என் கணவர் :போன் செஞ்சு பேசினா தான் உன்மேல பாசம் இருக்கு அப்டினு அர்த்தமா? நான் என் வீட்டிற்கு போன் செஞ்சு நீ சொன்ன மாதிரி எல்லாம் என் அம்மா கிட்ட பேசல அப்டினா என் அம்மாமேல எனக்கு பாசம் அன்பு,…இது எல்லாம் இல்லை அப்டினு ஆகிடுமா.. !

அதே போல தான் நீயும்…. உன்கிட்ட போன் செஞ்சு பேசல அப்டினா உன் மேல அன்பு இல்லை அப்படினு ஆகிடாது…நான் யாருக்கு அதிகமா போன் செஞ்சு பேசுவது எனக்கு பிடிக்காதுன்னு தெரியும்ல உனக்கு….,

போன் செஞ்சு பேசித்தான்….. உன்மேல அன்பு இருக்கிற மாதிரி உன்கிட்ட பேசி நடிக்கணும் அப்டினு ஒன்னும் இல்ல. அன்பு அப்படின்றது மனசுல இருந்த போதும்…..

மத்தவங்க என்ன சொல்லுவாங்க அப்படி நினைச்சுட்டு நம்ம எதுக்கு நம்மல மாத்திக்கணும்?

நமக்கு இருக்குறது ஒரு வாழ்க்கை…… அதுல நமக்கு பிடுச்ச மாதிரி நாம வாழனும்…. யாருக்காகவும் நம்மல மாத்திக்க வேண்டாம்…. அப்படி மாத்திக்கிட்டா வாழ்க்கை எல்லாமே நடிக்க வேண்டியது ஆகிடும்…என்று என்னிடம் சொன்னார்….


என் கணவரிடம் இதைத்தான் நான் கற்றுக்கொண்டேன்…. யாருக்காகவும் என்னை மாற்றிக்கொள்ள நான் விரும்பவில்லை…

மலரும் நினைவுகள் ......

சனி, 25 ஏப்ரல், 2020

கேள்வி :...20 பக்கத்துக்கு மேல் யோசிக்கிறேன், ஆனால் எழுதுவதோ 2 பக்கம் மட்டுமே. இதற்கு என்ன தீர்வு?

என் பதில் :...

தோன்றுவதையெல்லாம் எழுதிவிட்டால் எழுத்தில் சுவை இருக்காது, நீர்த்துவிடும், வடிகட்ட வேண்டும்!)

நான் இன்னொரு கோணத்தில் இக்கேள்விக்கு விடை தர விழைகிறேன்:

சாதாரணமாக யோசிக்கும்போது நமக்குள் நிறைய தோன்றும், அதிலும் ’எண்ணவோட்டம்’ () என்பது காட்டில் மரத்துக்கு மரம் தாவும் குரங்கைப் போல வேகமாக தாவிச் செல்லும்…

அதை அப்படியே எழுதுவது மிகக் கடினம்!

ஆனால், நமக்குத் தோன்றுவதில் எது எழுத்தில் மிளிரும் எது மிளிராது, அது சுவாரசியமானது என்று எழுதி வைத்துப் படித்துப் பார்த்தால்தானே தெரியும்?

எண்ணவோட்டத்திற்கு ஈடுகொடுத்து எழுத / தட்டச்சு செய்ய இயலாது என்ற நிலையில், நாம் குரல் பதிவு செய்து கொள்ளலாம்…

இன்று ஏறத்தாழ அனைவருமே திறன்பேசிகள் (smart phones) வைத்திருக்கிறோம், எல்லா திறன்பேசியிலும் அடிப்படையாகவே ஒரு குரல் பதிவு செயலில் இருக்கும்.

நாம் அதைப் பயன்படுத்த வேண்டும்.

எண்ணங்கள் தோன்றும் போது உடனுக்குடன் அதைக் குரல்பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

எந்த வடிகட்டலும், மட்டுறுத்தலும் இன்றி எல்லாவற்றையும் குரல் பதிவு செய்துகொள்க.

பின், நேரம் கிடைக்கும்போது அக்குரல் பதிவை நிதானமாகக் கேட்டு, அதில் தேவையானதை எழுத்தில் பதித்துக் கொள்ளலாம்.

அந்நிலையில் தேவையான மாற்றங்களையும் செய்து கருத்தை மெருகேற்றலாம்.


குரல் பதிவு செய்து அதைச் சேமிக்கையில் சரியான ஒரு பெயரைக் கொடுத்து சேமித்து வைக்கவும், இல்லையென்றால் பின்னர் எது எது என்று தேடி எடுப்பதில் சிக்கல் ஏற்படும்.


கேள்வி :...அதிக புத்தகங்களை படிக்க ஏதாவது ரகசிய யுக்தி உள்ளதா?

என் பதில் :.....

என் நண்பர்கள் என்னை கேட்பதுண்டு வேகமாக வாசிப்பதற்கு என்ன ரகசியம் வைத்திருக்கிறாய் என்று. அதாவது அதிக புத்தகங்களை படிப்பதனால் நான் வேகமாக வாசிப்பவன் என்று அவர்களாக கருதிக்கொண்டதன் விளைவு தான் இந்தக் கேள்வி.

உண்மையில் அதிக புத்தகங்களை வாசிக்க ரகசியம் எதுவும் தேவையில்லை. மாதம் நான்கைந்து புத்தகங்களை வாசித்தாலும், அவை அனைத்தையும் நான் மிகவும் பொறுமையாகவே வாசிப்பேன்.

ஒரு புத்தகத்தை வாசிக்கும் பொழுது எனக்கு பிடித்த வரிகளை அடிக்கோடிடும் வழக்கம் கொண்டவன். அந்த புத்தகத்தை படித்த பின்னர் அடிக்கோடிட்டதை வேறொரு நோட்டுப்புத்தகத்தில் எழுதும் பழக்கமும் உள்ளது என்னிடம். இது அனைத்தையும் செய்ய அதிக நேரம் பிடிக்கும்.

எனது வேலையை முடித்து விட்டு இது அனைத்தையும் செய்ய என்னால் நேரம் எப்படி ஒதுக்க முடிகிறது?

ஒரு நாளைக்கு மூன்று வேலை உணவு உன்ன எங்கிருந்து நேரம் கிடைக்கிறது? 7 மணி நேரம் உறங்க எங்கிருந்து நேரம் கிடைக்கிறது? திரைப்படங்கள் அல்லது தொடர்கள் பார்க்க எங்கிருந்து நேரம் கிடைக்கிறது?

எங்கிருந்தும் நேரம் கிடைப்பதில்லை. அதற்கு நாம் நேரம் ஒதுக்குகிறோம் ஏனென்றால் அதை முக்கியமென்று நாம் கருதுவதால். அதேபோல் தான் புத்தகத்தின் அருமையை உணர்ந்த நபர் ஒருவர் வாசித்தலுக்கும் நேரம் ஒதுக்குவது பெரிய விடயமாக இராது.

வாசிப்பை தொடங்குவதற்கு முன்பு ஒரு நபருக்கு மூன்று தடைகள் இருப்பதாக நான் கருதுகிறேன். அந்த தடைகளையும் அதற்கு தீர்வுகளையும் முன் வைக்கிறேன். இந்த தீர்வுகளை பயன்படுத்தி நீங்களும் வாசித்தல் எனும் மிக உயரிய பழக்கத்தை தொடங்குங்கள்.

நேரம்

புத்தகம் வாசித்தலை ஒரு செயலாக எண்ணுவதற்கு பதில் சாப்பிடுவதைப் போல், மூச்சு விடுவதைப் போல் ஒரு இயற்கையாக நடக்கும் நிகழ்வைப் போல் கருதுங்கள். வாசித்தல் என்பது ஒரு நிர்பந்தமான இயல்பு நிலையாக இருக்க வேண்டும்.

எப்பொழுதும் ஒரு புத்தகத்தை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசியுங்கள். உங்கள் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல உதவாத தொலைக்காட்சி தொடர்கள், வாக்குவாதங்கள் போன்றவற்றிற்கு பதில் வாசிக்கும் பழக்கத்தை கொண்டுவாருங்கள்.

பணம்

கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே

கற்பதற்காக பிச்சை எடுத்தாலும் தவறில்லை என்று ஒளவைப்பாட்டி பல காலங்களுக்கு முன்பே பாடி வைத்துள்ளாள். இன்றைய டிஜிட்டல் உலகில் நமக்கு தேவைப்படும் புத்தகம் எங்கிருந்தாலும் அதை நம் வீட்டு வாசலிற்கே கொண்டு வந்து தருமளவிற்கு தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது. அதுவும் மிக குறைந்த பணத்தில்.

புத்தகம் என்று வந்துவிட்டால் பணத்தைப் பற்றி மறந்து விடுங்கள். உங்களுக்கு ஒரு புத்தகம் பிடித்துள்ளது என்றால் சிறிதும் யோசிக்காமல் அதை வாங்கிவிடுங்கள். ஏனென்றல் புத்தகம் வாசிப்பது என்பது ஒரு தேவை.

16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர் எராஸ்மஸ், என்னிடம் சிறிது பணமிருந்தால், நான் அதில் புத்தகங்களை வாங்குவேன். அது போக மீதி ஏதாவது இருந்தால் அதில் உணவு மற்றும் துணிகளை வாங்குவேன் என்று கூறியுள்ளார்.

புத்தகம் வாங்குவது ஒரு செலவல்ல, அது நாம் செய்யும் ஒரு சிறந்த முதலீடு. ஒரு புத்தகம் உங்களுக்கு உதவுமென்று நீங்கள் கருதினால் பணமோ, நேரமோ அல்லது நம் சோம்பேறித்தனமோ எதுவும் நம்மை தடுத்த நிறுத்த அனுமதிக்கக்கூடாது. நீங்கள் வாங்க நினைக்கும் புத்தகத்தை வாங்க தள்ளுபடி வரும் வரை காத்திருக்காதீர்கள். ஒரு 20 - 30 ரூபாயில் நாம் கோட்டை கட்ட போவதில்லை.

நோக்கம்

வாசிக்கும் பழக்கம் இல்லாமல் போனதிற்கு மிக பெரிய காரணம் அதன் நோக்கத்தை நாம் மறந்ததால் தான். புத்தகத்தின் பயன் பள்ளியோடோ அல்லது கல்லூரியோடோ முடிந்து விடுகிறது என்று நாம் கருதுகிறோம். புத்தகம் என்பது மதிப்பெண்களை பெறுவதற்கு மட்டுமே என்று எண்ணுகிறோம். புத்தகம் என்பது படிப்பதற்காக மட்டுமல்ல கற்பதற்காகவும். படித்தல், கற்றல் இரண்டிற்கும் வித்தியாசமுண்டு.

மனித இனம் 5000-ம் வருடங்களுக்கு மேலாக தனது ஞானத்தை புத்தக வடிவில் பதிவு செய்து வந்துள்ளது. அதாவது இப்பொழுது நீங்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு உங்களை விட புத்திசாலியான நபர், பல வருடங்களுக்கு முன்பே அதை ஒரு புத்தகத்தில் எழுதி வைத்திருப்பார். தோல்வியை சந்தித்து கற்பதற்கு பதில் புத்தகத்தைப் படித்துக் கற்றுக்கொள்வது நம் நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தும்.

புத்தகம் வாசிப்பதன் மூலம் பலர் செல்வந்தர்களாக உள்ளனர். வாசித்தலின் மூலம் அடிமை சங்கிலியிலிருந்து பலர் வெளிவந்துள்ளனர். மிகவும் ஏழ்மையான நிலையிலிருந்த பலரை புத்தகம் தான் நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது.

எனவே அதிக புத்தகங்களை வாசிக்க ரகசியமென்று ஒன்றில்லை. உங்கள் முன்னுரிமைகள் தான் அந்த ரகசியம் என்று கூட சொல்லலாம். உங்கள் முன்னுரிமை கற்றலுக்கா? அல்லது நேர விரயத்துக்கா? என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

வெள்ளி, 24 ஏப்ரல், 2020




நன்றிகள் ....🙏🙏🙏🌱🌱🌱🌷🌷
இன்று எனது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த எனது அருமை நண்பர்களுக்கும் .என் அருமை சொந்தங்களுக்கும் ,எனது சொத்துக்களுக்கும் (வாடிக்கையாளர்கள் ),என்னுடன் நிழல் போன்று என்னுடன் பயணிக்கும் எனது தம்பிகள் ,மாப்பிள்ளைகளுக்கும் எனது பணிவான நன்றிகள் ..வயது ஆகா ஆகா ...இளமையுடன் பொறுப்புகள் ..கூடுகொண்டேபோகிறது ..வருட வருடம் ..நட்புவட்டங்கள் ,சொந்தங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது .🌷🌷பொருளாதாரம் 🌷🌷,வாழ்வியல்🌱🌱.சமுதாயம் 🌱🌱வரலாறு🤺🤺🏹🏹🐎 நிதியியல் ...,சார்ந்த பணிகள் இன்னும் பொறுப்புடன் எனது தேடல்களை மேலும் கூட்டுகிறது ..
🙏என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681🌷

தனித்திரு ..விழித்திரு .படித்திரு ...சமூகத்தை காத்திடு ...





வாழ்த்துகளுக்கு அன்புகலந்த நன்றி ...மாப்பிள ..சார்

நன்றி ..தம்பி ...பொதுவெளியில்..பொது தளத்தில்  எப்பொழுதும்  மரியாதை ..மதிப்பு தருவது என் இயல்பு

நன்றி டாக்டர் ...உங்கள் அன்பும் வாழ்த்தும் ..

அன்புகலந்த நன்றி சத்தி



வாழ்த்துகளுக்கு அன்புகலந்த நன்றி மாம்ஸ் ..

சாரி எல்லாம் எதுக்கு பாப்பு ...இந்த தனிமை வெறுமை ..எல்லாம் ..8 வருடங்களாக என் மனதில் இருப்பது தான் ...பழகிவிட்டேன் ..சந்தோசம் ..தூக்கம் எல்லாம் ..சமநிலை படித்தே கொண்டே பழகிவிட்டேன் ..\



Karthic KVT:
உடுமலை சிவக்குமார்
எளிதான தோற்றம்
மெளிதான பார்வை
எப்போதும் முன்புறுவல் சிரிப்பு
2002 ஹீரோஹோண்டா சிடி டான்
ஒரு ஆபிஸ் பேக் .. !!
சார் ..!!
நமஸ்காரம் சார்..!!
சிவா பார் ஹோம்லோன்ஷ்
சுந்தரம் பினான்ஷ் .....
உடுமலை பொள்ளாட்சி என காலில்
சக்கரத்தை கட்டிக்கொண்டு
காற்றாடி போல் வலம் வரும் மனிதர்
பண்பாளர் ..!
பற்றாளர் ....!
கல்வியாளர்..!
ஆய்வியல் ஆர்வலர்..!
சமுக சேவகர் ...!!
என எண்ணற்ற முகங்களை ஒருங்கே பெற்ற மனிதர் ..!!
மனிதருள் மாணிக்கம் ...!!
ஆம் ..!!
எனக்கு மட்டுமல்ல எங்களின் விருட்சக் குழுமத்திற்கே
கிடைத்த விலைமதிப்பிலா சொத்து..!!
கம்பள தலைவன் ..!
காவியத் தலைவன் ..!
என எண்ணற்ற எழுத்துகளால்
பாமாலை சூட்டினும்
அனைத்திற்கும் அணிசேர்க்கும்
அவரது பண்பு ..!!!
தான் கொண்ட கடமையிலும்
கொள்கையிலும் நின்று தடம்வழுவா
சூரியனாய் வலம் வந்து ..!!
உடுமலையின் உயிர்நாடியாய்
விளங்கும்
ஒப்பாரும் மிக்காரும் இலா
குளிர்நிலவாய்
உறவாடி உரையாடும் எங்கள் தலைவர்..!!
முகநூலில் கண்டெடுத்த முத்தான முத்து
திரு. சிவக்குமார் மாமா
அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை
காணிக்கையாக்கிகக்கொள்கிறேன் ...!!
இவன்
கம்பள விருட்சக் குழுமம்

வியாழன், 23 ஏப்ரல், 2020

கேள்வி :...போன தலைமுறைப் பெண்களிலிருந்து இந்தத் தலைமுறையினர் எப்படி மாறியுள்ளனர்?

பதில் :...


நகரம் மாறியுள்ளது..

பெண்களின் மாற்றம் நகரத்தில் இருந்தே தொடங்குகிறது அதை பற்றி முதலில் பார்ப்போம்…பிறகு கிராமத்தில் உள்ள பெண்களின் நிலை ஏன் அதிகம் மாறாமல் உள்ளது என கடைசியில் பார்ப்போம்..

கொஞ்சம் நீண்ட பதிவு, நேரம் இருந்தால் படியுங்கள்!

நகரத்தில் இருக்கும் எல்லா பெண்களையும், இப்படி இருக்கிறார்கள் அப்படி இருக்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை, மாற்றதை உருவாக்கும் மகா பெண்களை பற்றி மட்டும் பேசுகிறேன்.

அணியும் ஆடையும் அளவு கொஞ்சம் குறைந்துள்ளது, எதுக்கு பாவம் விவசாயிகள் கஷ்டபட்டு அதிகம் பஞ்சு உற்பத்தி பண்ணிகிட்டுனு கொஞ்சம் சிக்கனமா இருக்காங்க பெண்கள்.

ஜன்னல் வைத்த ஜாகெட்டு என்று சரத்குமார் பாடியதெல்லாம், பஞ்சா பறந்து போச்சி , இப்பொழுது ஜாக்கெட்டே இல்லை, உள்ளாடையுடன் உலாவருகிறார்கள், என் சென்னை மாடர்ன் பெண்கள்…

பெண் என்ற தைரியம் கொஞ்சம் கூடியுள்ளது.சட்டங்கள் கொஞ்சம் பெண்களுக்கு சாதகமாக உள்ளது.

பெண்கள் கல்வி கற்கும் விகிதம், ஆண்களை விட அதிகம் ஆயிற்று.
ஆண்,அவனுக்கு நான் கீழானவளா? நன்கு சம்பளம் வாங்குகிறேன், அவன் தயவு எனக்கு தேவை இல்லை, என்ற திமிரும் கொஞ்சம் கூடியுள்ளது.
பல இடங்களில் பெண்கள் ஆண்களை வேலை வாங்கும் உயர் பதவியில் உள்ளார்கள்,

வீட்டிற்கு உள்ளேயே அடைந்து கிடக்காமல் ஆசிரியர், டாக்டர், லாயர், கலெக்டர் என பல துறைகளில் கால்பதித்துவிட்டார்கள்.
வேலை வாய்ப்பு என்று பார்க்கையில் நகரத்து பெண்களின் நிலை, கிராமத்து பெண்களை விட மேலோங்கி காணப்படுகிறது.
இப்படி இருக்க சிலர் வீட்டோடு மனைவி என்று சீரியல் பார்த்து கொண்டு தான் உள்ளார்கள்.

கி்ராமத்தில் உள்ள பெண்களும் முன்னேருகிறார்கள் குடிசை தொழில் மற்றும் சுய உதவி குழுக்களை கொண்டு தங்கள் பொருளாதார தேவையை அவர்களே நிறைவேற்றி கொள்கிறார்கள்.

வருத்தப்பட வேண்டிய விஷயம் என்றால் கிராமத்திலும் கல்வி கற்கிறார்கள், கல்லூரி படிப்பை முடித்து வேலை வாய்ப்பு இல்லாமல் , பல சூழ்நிலைகளால் ஆடு மாடு மேய்த்து கொண்டு, வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருக்கும் பல பட்டதாரி பெண்களை இன்றளவும் காணமுடிகிறது.
கலாச்சாரம் என்று பார்க்கையில், கிராமத்து பெண்களின் நிலை மேலோங்கி காணப்படுகிறது.

பக்கத்து வீட்டில் கொலை, கொள்ளை, எவன் வந்து போகிறான் என்று எதையும் கண்டு கொள்ளாத நாகரீக சமூகம். கேட்டால் சிசிடிவி கேமரா இருக்காம்.

ஆனால், இன்றளவும் கிராமத்து பெண்களுக்கு ஒரு விஷயம் தெரிந்தால் அது ஊருக்கே தெரிந்தமாதிரி😅. புதிதாக ஊரில் ஒருவர் நுழைந்தால் போதும் யார் என்று நாயம் பேசி அலாசிவிடுவார்கள். அவ்வளவு பாதுகாப்பு கிராமங்களில். பெண்களே காவல் தெய்வம்.

அடுப்பு ஊதி சாப்பிட்ட காலம் போய், ஆர்டர் பண்ணி சாப்பிடுகிறார்கள் பெண்கள். ஆம் இன்று, நகரத்துக்கு கிராமத்தில் இருந்து போனால் ,முன்பெல்லாம் சமைத்து கொட்டுவார்கள், இப்பொழுதோ அப்பா உங்களுக்கு பிரியாணி ஓகே வா…அம்மா உங்களுக்கு தோசை, இட்லி ஓக்கேவா என்று கேட்கிறார்கள்.

நகரத்தில் கற்பு என்பது ஒரு காண்ரேக்ட் ஆக மாறிவிட்டது. மன்னிக்கனும் அப்படி இருக்கும் சிலரை மட்டும் குறிப்பிடுகிறேன், எல்லா பெண்களையும் அல்ல.

இன்று ஒருவர், நாளை வேறு ஒருவர் என்று ஒப்பந்தங்கள் கையெழுத்து இடபடுகின்றன.

இங்கு எல்லாமே செகண்ட் ஹேண்ட் தான் மற்றும் யூஸ் அண்ட் த்ரோ ஆகிவிட்டது.

நகரத்தில் ஒருவர் திருமணம் செய்கிறார் என்றால் அவர் நிச்சயம் , மற்றொருவரின் காதலியாக தான் இருக்கும். அப்படியென்றால்..
உங்களின் மனைவி , மற்றொருவரின் காதலி, மற்றொருவரின் காதலனாக நீங்கள் வேறொருவன் கணவன்…இப்படி ஒருவர் மற்றொருவன் X ஆக தான் இருப்பார்கள்.


சரி கிராமம் என்ன அவ்வளவு ஒழுங்கா என்றால் ?

ஆம் ஒழுங்கு தான்…


காதலிக்கும் வாய்ப்பு அங்கு பெண்களுக்கு எளிதாக கிடைப்பதில்லை, ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்கிறான் என்றால், அந்த காதல் அப்பெண்ணுக்கு தெரிகிறதோ இல்லையோ, ஊருல இருக்குற குழந்தைக்கு கூட தெரியும். ஹே மாமா நீ அந்த அக்கவா சைட் அடிகுற தான அப்படினு பொடுசுகலாம் கேப்பாங்க..அதுது ஊருக்கே தெரிஞ்சு அவங்களை கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க…இல்ல வாழ்கைல அந்த பையன் நல்லா இருக்கட்டுமேனு பிரிச்சுவச்சிடுவாங்க.


நகரத்தில் அப்படி நடக்க என்ன காரணம் என்கிறீர்களா, ஒன்றும் இல்லை. மேலை நாட்டு கலாச்சார ஊடுருவல்.


அவன் வாயில் முத்தம் கொடுத்து corona வந்து செத்து மடிகிறான்…இவங்களும் நான் கண்ணத்தில் காதலை வெளிப்படுத்த மாட்டேன் வாயில் தான் என்றால் …கடைசியல் வாயில் தான் அரிசி போடுவார்கள்…ஆம் அவ்வளவு நோய் தொற்றும் வாயில் முத்தம் இடுவதால் அவர்கள் வாய் கழுவி கொள்வார்கள், நம் ஆட்கள் சாப்பிடவே வாய கழுவ மாட்டார்கள் பிறகு வியாதி தான் வரும், காதல் வராது…


மற்றொன்று…கிராமங்களில் ஒதுக்கு புறமாக சிறுநீர் கழித்தால் அது பெரிய பிரச்சினை இல்லை, முத்தம் கொடுத்தால் அது மகா தப்பு, ஆனால் நகரத்தில் ஒதுக்கு புறமாக முத்தம் கொடுத்தால் அது சாதாரணம், சகஜம், ஆனால் சிறுநீர் கழித்தால் அதை photo பிடித்து பொது ஊடகத்தில் பதிவிட்டுவிடுவார்கள்….இன்றளவும் கிராமத்து வாசிகள் சென்னை நகரத்திற்கு வந்து , எங்கு உச்சா போவது என்று அறியாமல் …ஒத்துகுப்புறமகவே போகிறார்கள்…


நகரத்தில் பல ஆண்களுடன் பெண்கள் உல்லாசமாக இருக்கிறார்கள், தெருக்களில் புகைபிடிக்கிறார்கள்,கேட்டாள் இது என் வாழ்க்கை ,என் உரிமை என்று குரல் கொடுத்துக்கொண்டு,அவர்கள் அப்படி இருக்க மற்றொரு முக்கிய காரணம்உள்ளது, கிராமத்தில் பக்கத்து ஊருல ஒரு பயன் கிட்ட பேசினாலே, யாராவது சித்தப்பா பெரியப்பா, ஒன்னு விட்ட மாமானு யாராவது பார்த்து வீட்ல போட்டு கொடுதுடுவங்க…நமக்கு யாரு சொந்தகரங்கனு தெரியாது , ஆனா நமல எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் நீ இன்னாரு வீடு பொண்ணுன்னு…பார்த்ததும் சொல்லிடுவாங்க..


ஆனால் நகரத்தில் ஒரு சொந்தகாரனையும் பார்க்க முடியாது, நீங்க வேணும்னா நகரத்துல நேராக சொந்தகாரங்க இருக்குற இடதுல இருந்து பாருங்க….நீங்க ஒரு பெண்ணுக்கு ரோட்டில் வழி சொன்னால் கூட, உடனே போனை போட்டு ஏலே உன் புள்ள ஒரு பிள்ளைக்கு கைகாட்டிகிட்டு இருக்கான் அப்படினு வீட்ல சொல்லிடுவாங்க…


சமூகமானது பெண்களை பொறுத்தே அமைகிறது, பெண்ணில் மாற்றம் என்றால் குடும்பத்தில் மாற்றம், குடும்பத்தில் மாற்றம் என்றால் சமூகமே மாற்றம் அடையும்.


அதனால், கிராமத்தில் பெண்கள் செய்யும் தவறுகள் குறைவு என்றால் கிராமத்தின் கட்டுப்பாடுகளும், சொந்தம் பந்தம் என்று உறவு முறைகளும் அதனை பின்னிப் பிணைத்து வைத்து கொண்டு இருக்கிறது, அதை மீறி பல தவறுகள் நடப்பதில்லை, அதிலிருந்து யாராவது வெளியே செல்ல முயன்றாள் அது தண்டிக்கிறது(Punishment), அதனுடன் ஒன்றி வாழ்ந்தால் அது பாதுகாப்பு மற்றும் பரிசளிக்கிறது(Reward)

இத தவிர சொல்லறதற்கு வேற எதுவும் இல்லைங்க . ..நன்றி…நமக்கம்
புவி தினம்....சிவக்கனி


புவி ஆளப்பிறந்தாயடா என்று கூறிவளர்த்ததாலோ என்னவோ புவியை மட்டுமே ஆண்டு கொண்டுள்ளோம்......
மாண்டவர் மீண்டெழுவது கதைகளில் மட்டுமே சாத்தியம்.‌.....
ஆலகால விஷத்தை விழுங்கிய ஆண்டவனைக் கொண்டாடும் நாம்...ஆழமறியா நஞ்சை விழுங்கிய நம் பூமித்தாயை எண்ணுவதில்லை.....   
நம் நாவிற்கு இனிய சுவை பானத்தைக் கொண்டாடிய நாம்....
பாமர மக்களின் தாகம் தணிக்கும் நிலத்தடி நீரை எண்ணவும் மறந்து விட்டோம்.....
ஆகாய வானில் கோட்டை கட்ட தெரிந்த நாம்
காற்று வெளியின் தூய்மை
காக்க மறந்து விட்டோம்......
நாம் மறந்ததை நமக்கு
நினைவூட்டவே ...
கொரானாவின்  கோர தாண்டவம்......
வல்லரசு என்று
வெற்றியில் புரண்டாலும்....
 வளர்கிறோம் என்று மிதப்பில்  இருந்தாலும்...
தன்னைத்தான் காக்கின்
என்னும் வள்ளுவரின் வாக்கிற்கினங்க...
இயற்கையே இமயமாய்
வெகுண்டெழுந்ததோ.....
விபத்தில்லை...‌.....
மாசில்லை........
கொலையில்லை....
கொள்ளையில்லை.......
ஊரோடு ஒன்று பட்டால்
கூத்தாடிக்குக் கொண்டாட்டமாம் - பழமொழி....
உலகை உலுக்கும் உயிரினை உலுக்கி எடுக்க
ஒன்றினைவோம்.....
மகத்துவம் நிறைந்த மருத்துவத்தால் மனிதம் காக்க ஒன்றினைவோம்......
விழித்திருப்போம்....
விலகியிருப்போம்......
வீட்டிலிருப்போம்........
விவேகமாய் முடிவெடுப்போம்.....
இருண்ட உலகினை மீட்டெடுக்க
இயற்கையை மீட்பதே
முதல் கடமை...
23.04.2020...கிளை எண் 2 நூலகம் -உடுமலை


கட்டுரை : என்னை செதுக்கிய நூலகம்

1.கவுசல்யா - ஜீ வீ ஜீ கல்லூரி - 2nd இயர்  BSc.-குரல்குட்டை
   மொபைல் .7449156057.

2.கஸ்தூரி ...

மொபைல் .9003490013..

3.கீர்த்தனா ..ஜீ வீ ஜீ கல்லூரி - PG  2nd இயர்  எகனாமிக்ஸ்

மொபைல் .9789568614

4.கரிஷ்மா ....7 இம் வகுப்பு .. ஆதர்ஷ் பள்ளி பள்ளபாளையம்

மொபைல் .9952305075


ஓவியம் ....covid 19

1,தீபா ... பி.காம்     2ம் வருடம் ..ஜீ வீ ஜீ  கல்லூரி -படம் இந்திய மேப்

மொபைல் .85081 83950

2.ஸ்ரீவதனி  7 ம் வகுப்பு ..SVHS ..ஸ்கூல் .கணியூர் இந்தியா மேப்
3.சத்திவேல்  9 ம் வகுப்பு SVHS ..ஸ்கூல் .கணியூர் covid 19

4.எஸ் .கீர்த்திகா ...4 ம் வகுப்பு  ஸ்ரீனிவாச ஸ்கூல் -உடுமலை -covid 19

5.எஸ் .ஸ்ருத்திகா  2 ம் வகுப்பு ஸ்ரீனிவாச ஸ்கூல் -உடுமலை -covid 19

6.வர்ணேஷ் .. 4 ம்  வகுப்பு ...கே .வீ எஸ் ஸ்கூல் உடுமலை ..covid 19.colourful drawing -9...மொபைல் ...9385360639

7.Name: R.Priyadharshene --------covid 19..ஸ்டே ஹோம் ஸ்டே safe
College Name: Karpagam Nursing college
Level: 3rd year B .sc nursing
Address: 4/100 Gandhipuram
Thaandagoundanthottam
Udumalpet.
மொபைல் .94897 15113

1. என்னை கவர்ந்த புத்தகம் ...கட்டுரை

J.kaviya second mathematics .....6369 410 940
Sri gvg college for women
Udumalpet...





புதன், 22 ஏப்ரல், 2020

கேள்வி :...எளிமையாக இருப்பவர்கள் ஏமாளிகள் அல்லது அறிவில்லாதவர் அனுபவம் இல்லாதவர் என்று எண்ணப்படுகின்றனரா?

என் பதில் :....


என்ன கேட்டீர்கள், எளிமையாக இருப்பவர்கள் ஏமாளிகளாக, அறிவில்லாதவராக, அனுபவம் இல்லாதவராக இருப்பது போல் எண்ணப்படுகிறார்களா?

ஆம், நிச்சயமாக! இந்திய நாட்டில் ஒரு ஐாம்பவான் அப்படி தான் எண்ணப்படுகிறார்.

ஒரு எளிமையான மனிதரின் அறிவுத்திறனையும் அனுபவத்தையும் பகிர ஆசை கொள்கிறேன்.

பொருளாதார அறிவு கொண்டவர், இன்று மத்திய அரசில் ஆளும் கட்சி அறிமுகப்படுத்தும் பெரும்பாலான திட்டங்கள் அவர் காலத்தில் வகுக்கப்பட்டதே, இன்றைய அரசு திட்டத்தின் பெயரை மட்டும் மாற்றி வைத்து கொள்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு திட்டம் தீட்ட தெரியாது!

ஒரு அரசாங்கமானது மற்றொரு அரசின் செயல்முறைகளை திருடி கொண்டால், அதுவும் ஒரு காலத்திற்கு தான் நீடிக்கும் , அதற்கு பிறகு பாதாளக் குழியில் விழ வேண்டியதுதான்.

அப்படிதான் விழுந்தது தற்போதைய மத்திய அரசு. பல்வேறு காரணங்களை காட்டி அரசின் செலவுக்காக இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து பணம் பெற்றுக்கொள்ளப்பட்டது முதல் இன்றைக்கு நாம் சந்திக்கும் பொருளாதார இடர்பாடுகள் வரை அனைத்திற்கும் அரசு தனது சுய அறிவை பயன்படுத்தாதது தான் காரணம் என்று நான் நினைக்கிறேன்.

சரி, அவரை பற்றி கூற வேண்டுமென்றால் அடுக்கி கொண்டே போகலாம்.அவரின் அனுபவத்தைப் பற்றி கூற வேண்டுமா?

பொருளாதாரவியல் வல்லுநரான அவர், இந்தியாவின் பொருளாத தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும்பங்கு வகித்தார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில், ஃபர்ஸ்ட் கிளாஸ் ஹானர்ஸ் பட்டம் பெற்றவர்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டிபில் பட்டம் பெற்றவர்.
இந்திய வெளிநாட்டு வர்த்தக அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவர்.
இந்திய நிதி அமைச்சகத்தில் முதன்மை பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவர்.
இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் இயக்குனராக பணியாற்றினார்.
இந்திய ரிசர்வ் வங்கியில் இயக்குனராக பணியாற்றினார்.
பிறகு இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பணியாற்றினார்.
இந்திய நிதி அமைச்சராக இருந்தார்.
அவர் நிதியமைச்சராகும் முன் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், இவரின் கொள்கைகளால் முன்னேறத் துவங்கியது எனக் கருதப்படுகிறது.
இறுதியில் இந்தியாவின் பிரதம மந்திரியாக 2004 இல் இருந்து 2014 வரை பணியாற்றினார்.


இந்த எளிமையானவரை அறிவில்லாதவர், அனுபவம் இல்லாதவர் என்பது போலவே கருதுகிறது தற்போதைய மத்திய அரசு.

ஏனென்றால், மத்திய அரசைச் சாடுவதற்கு முக்கிய காரணம் உள்ளது, மத்திய அரசானது பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் நிலை வந்தாலும் ஒரு பொருளாதார நிபுணர் என்று அவரின் அறிவுரை கேட்க கூச்சப்படுகிறார்கள்.

காரணம் அவர் காங்கிரஸ் கட்சியின் கையாட்டி பொம்மை என்று எண்ணிக்கொள்கிறார்கள். ஏனென்றால் உதவி என்று எதிர்கட்சியிடம் கேட்டுவிட்டால் ஆளும் கட்சிக்கு மீசையில் மண் ஒட்டிவிடும் பாருங்கள் அதான்!

"தங்க முட்டை இடும் வாத்தை, தகர டப்பா என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்"

காங்கிரஸில் அவரின் செயல்பாட்டை குறித்து பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லை, ஆனால் ஒரு பொருளாதார முனைவராக, வல்லுனரான அவரின் அத்தனை பங்களிப்பும் நாட்டின் மேம்பாட்டிற்கு உதவியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அந்த வகையில் அவர் நாட்டிற்கு ஆற்றிய முக்கிய பங்களிப்பை எண்ணிப் பெருமை கொள்கிறேன்.

நன்றி…!
கேள்வி :...WhatsApp-இல் ஸ்டேட்டஸ் போடுபவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இது ஒரு சிறந்த செயலா?

என் பதில் :...

சாதாரணமானவர்கள் - தேவையென்றால் மட்டும் ஒரே ஒரு ஸ்டேட்டஸ் வைப்பவர்கள்.

கால் பைத்தியம் - அவருடைய தினசரி நடவடிக்கைகளை அப்படியே போடுபவர்கள்.

அரை பைத்தியம் - ஏதாவது விழாக்கள், வித்தியாசமான மனநிலையில் இருந்தால் அன்றைக்கு மட்டும் ட்ரெயின் விடுவார்கள். மற்ற நாட்களில் தினமும் ஸ்டேட்டஸ்.

முழு பைத்தியம் - எப்போதும் ட்ரெயின் விடுவார்கள்

இப்படி நான்கு வகையான மக்கள் இருக்கிறார்கள்.

சிலர் Always Sad - நேர்ல பார்த்தால் சிரிச்சுட்டு சுத்தும்

Always Motivated - சோம்பேறியா இருக்கும் ஆனால் வேற லெவல்ல ஸ்டேட்டஸ் வைக்கும்

Always Happy - சிலநேரம் சந்தோஷம், சிலநேரம் கவலை. ஆனால் பாக்குற நம்மள சந்தோஷமா வச்சுக்கிற மனசு இருக்கே அதான் சார் கடவுள்

Always Love/Mom/ Dad கால் பண்ணி பேசுனா எரிஞ்சு விழுவான் ஆனால் ஸ்டேட்டஸ் வேற மாதிரி இருக்கும்

Always Devotional மூன்று மதங்களும் இதே தான். இந்து முஸ்லிம் பரவாயில்லை. கிறிஸ்தவ நண்பர்கள் தான் Ultimate🤣🤣. இப்போ முஸ்லிம் நண்பர்கள் 45 பேருக்கு மேல் Azadi CAA NRC Status Than.

Always News Updates - இந்த மாதிரியான ஆட்கள் ரொம்ப ரேர். ஆனால் என்னோட வாட்ஸ்அப் லிஸ்ட்ல ஒருத்தன் இருக்கான் ‌ Tech Update கம்பெனிகளில் இருந்து ரிலீஸ் ஆகுதோ இல்லையோ அவன் அப்டேட் போட்ருவான்.

Always Hero/Heroin/ movies இந்த ஆளுங்கள திருத்தவே முடியாது

Always Against BJP எப்ப பார்த்தாலும் அதே வேலை தான் வச்சிருப்பான்‌. அப்போ சீமான் கட்சியான்னு கேட்டா கழுவி ஊத்துவான். அப்போ ஸ்டாலினான்னு கேட்டா கெட்ட வார்த்தை தான்.

WhatsApp Status வைக்கிறது நல்லது தான். ஆனால் உருப்படியாக வைக்க வேண்டும். ட்ரெயின் விட்டால் மியூட்டில் போட்டு விடுவோம் நல்ல ஸ்டேட்டஸ் வைத்தால் கூட பார்க்க முடியாது 🤣.

அப்பாவின் நினைவுதினம் ..மலரும் நினைவுகளுடன் (23.04.2019)


அப்பாவின் நினைவுதினம் ..மலரும் நினைவுகளுடன் (23.04.2019)

கிருஷ்ணசாமி என்கிற வேலுச்சாமி 

தன் சிறு வயதிலே நடந்தே சென்று பள்ளிப் படிப்பை முடித்து
பின்பு ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து மேலும் படிப்பை தொடர்ந்து
நல்ல வேலையில் தன்னை உயர்த்திக்கொண்டு....தன் வாழ்நாளில்
முதல் சன்மானத்தை அவர் அப்பாவிடம் கொடுத்த போது "வேண்டாம் உனக்கே
செலவு இருக்கும் உனக்கு வேண்டியதை வாங்கி கொள் என்பாராம்"

பின்பு தனக்கென ஒரு வாழ்க்கை அமைத்து தர.....
அப்பா செலவு செய்ய தொடங்குகிறார்....

கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து தனக்கு தேவையான பொருளை வாங்கி வைக்கிறார்.
தனக்கு ஒரு மகளோ/மகனோ பிறந்த பிறகு
ஒளி வீசத்தொடங்கியதாக ஓர் உணர்வு...

மகிழ்ச்சியோடு அப்பா பிள்ளையின் மீது அலாதியான பாசம் வைக்க தொடங்கிறார்.
அவர்கள் படிப்பதற்கு செலவு செய்கிறார்
பின்பு பார்த்து பார்த்து தன் குழந்தைகளுக்கு செய்யும் அப்பா தனக்காக ஒரு செலவையும்
செய்வதில்லை..ஏனோ!!!

வளர்ந்தவுடன் மேற்படிப்புக்கு செலவு செய்யும் அப்பா.. (வெளிக்காட்டாத கஷ்டம் தன்னுள் பூட்டி வைத்துக்கொள்ளும் ரகசியம்)

மகனோ /மகளோ வேலைக்கு செல்வது /கல்யாணம் செய்து வைப்பது என மீண்டும் செலவு
செய்யும் அப்பா......
பின்பு அவர்களின் குழந்தை , பெயர் வைப்பது என....எல்லாச் செலவையும் தனியாளாக
சமாளித்து கொண்டும் சந்தோஷமாக சிரித்து கொண்டும் வாழும் அப்பா...

பேரனோ.... பேத்தியோ.....
வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு பிடித்ததை வாங்கி வைத்துக்கொண்டு
இன்னும் வரவில்லை என்று காத்து கொண்டிருக்கும் அப்பா.... தாத்தாவாக,,,
(அம்மாவிடம் போய் கேட்பார் பால் இருக்கிறதா? வாங்கி கொண்டு வரவா?
பேரன் பேத்தி எதாச்சம் செய்து வைத்து இருக்கிறாயா....)

இது தான் எல்லார் வாழ்க்கையிலும் நடக்கிறதே...என்று நினைக்கிறீர்களா.....

அப்பாவின் செலவுக்கு எல்லையில்லை போல.....
இப்படியே பார்த்து பார்த்து செய்யும் அப்பாவின் அருமை அவரின் வெளிக்காட்டாத கஷ்டம்...
அவருடைய கோபத்தை வெளிக்காட்டுவது அம்மாவிடம் மட்டுமே... (ஏனென்றால் அவரின் பாதி)
சமாளிக்கும் திறமை...
தனக்கென வாழாதவர்....
இப்படி பலவற்றில் அப்பா என்றுமே உயர்ந்து தான் நிற்கிறார்...
மகன் கொடுக்கும் போதும்.. அவர் அப்பா சொல்வதை போல் "வேண்டாம் உனக்கே
செலவு இருக்கும் உனக்கு வேண்டியதை வாங்கி கொள் என்பாராம்"

அப்பா ஓர் அனுபவத்தின் பொக்கிஷம்...
அக்கறை காட்டுவதில் அப்பாவிற்கு நிகர் எவருமில்லை....

அப்பா வேலையிலிருந்து ஓய்வு பெற்றாலும்
இறைமையில் தன் பணி செய்து என்றுமே சுறுசுறுப்பாய் அப்பா....தாத்தாவாக பரிணமிக்கும் போதும்
மாறாத அந்த தேடல்....நடந்தே...இன்றும் நடைப்பயிற்சி என்று .....அனைவரையும் புரிந்து தான் வைத்திருப்பார் அப்பா....அப்பா மறைந்து ..வருடங்கள் இரண்டு ஆனாலும் ...அவரின்நினைவுகளுடன் ..அவர் கூடவே இருப்பது போன்றே இருக்கிறது ...

அப்பாவின் அருமை அன்பிலே...
அதை நாம் புரிதலே....
இத்திரியிலே.....
அப்பாவின் பாதம் வணங்குவோம்
என்றும் அவரை போற்றுவோம்.


அப்பாவின் ..பொறுமை ..சகிப்புத்தன்மை ..எந்த பிரதிபலன் பாராது பணிகள் 

உதவி என்று கேட்டால் தன்னாலான பணிகளை செய்துகொடுக்கும் பாங்கு ..இவரிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் ..உலக புத்தக தினம் ...என் அப்பாவின் நினைவு தினமும் இதே நாளில் தான் ...நான் பிறந்தது முதல் பள்ளிப்படிப்பு ...வாழ்க்கை கல்வி ...என்று தினம் தோறும் ..45 வருடங்களாக சொல்லித்தந்த நடமாடிய புத்தகம் ...அவர் கற்றுக்கொடுத்த வாழ்க்கை கல்வியுடன் என்றும் மறவாது இருப்பது ..
உடுமலையில் இருக்கும் கச்சேரி வீதி பள்ளியில் படிக்கும் போதே ..நூலகத்தை காட்டி ...விடுமுறை நாட்கள் ..பள்ளியின் மதிய உணவு நேரம் கொஞ்சம் கிடைத்தாலும் ...படிக்க வழிகாட்டிய தந்தை ...எந்த சூழ்நிலையிலும் ...மனம் கோணாமல் புன்னைகையுடன் ..பணியாற்ற வேண்டிய கற்றுக்கொடுத்த புத்தகம் ...உலகம் முழுவதும் ஏப்ரல் 23ம் நாள் உலகப் புத்தக தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. 1995ம் ஆண்டு முதல் இது தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வாக இருந்து வருகிறது. உலகளாவிய அளவில் பல இலக்கியவாதிகள் இந்த நாளில் பிறந்தோ அல்லது இறந்தோ இருக்கிறார்கள். ஐரோப்பாவில் வாழ்ந்த தலை சிறந்த இலக்கியவாதியும், நாடக மேதையாகக் கருதப்படுகிறவருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும் இறந்ததும் இந்நாளில் தான் என்பதும்,...
உலக புத்தக தினம் ..என் தந்தையின் நினைவுதினம் ...வாழ்வில் மறவாது ..என்றும் உணர்வுடன் கூடவே இருக்கும் தந்தையின் நினைவுகள் ..

என்றும் நீங்கா  நினைவுகளுடன் ..வணங்குகின்றேன் 

அன்புடன் உடுமலை சிவக்குமார் 
9944066681....