ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

வரமா? சாபமா? இந்த 21 நாட்கள்

படுத்ததும் விடிந்து விட்ட நாட்களை எண்ணி எத்துணை நாள் வருந்தி இருப்போம். விடிந்தும், விடியாமலும் எழுந்து வந்து அடுப்பங்கரையில்  சமைத்துக் கொண்டு இருந்திருப்போம். காலை உணவைக் கூட கால நேரம் தெரியாமல் சாப்பிட்டு தொலைத்திருப்போம். அவதியாகவே கார், ஃ பைக், பேருந்து என ஏதாவது ஒன்றில் விடிந்தும் விடியாத கனவுகளோடு பயணப்பட்டுக் கொண்டு இருந்திருப்போம். கூட்ட நெரிசல் , டிராபிக் ஜாம் என அனுதினமும் ஏதாவது ஒன்றிற்காய் காத்துக்கிடந்திருப்போம். எதிர்பாராத விபத்து, திடீர் மரணம் என எதாவது ஒன்றில் மனம் உடைந்து போய் இருப்போம். வேலை முடிந்ததும் வீட்டை நோக்கி ஓடி கொண்டிருப்போம் .


குழந்தை,  குடும்பம் , பெற்றோர் என கால்கள் ஓய்வு கொள்ளும். இரவு உணவு , மீண்டும் வேலை என ஓடிக் கொண்டே இருந்திருக்கும். நீங்களே நினைத்தாலும் கூட கனவிலும் கிடைக்காத வாய்ப்பை காலம் கொடுத்து இருக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

அலாரம் வைத்து எழுந்து கொள்ளத் தேவையில்லை,
காலை சூரியன் வந்த பின்பும் அவதி இன்றி அமர்ந்து இருக்கிறோம். சாலைகளில் புகை கக்கும் வாகனம் இல்லை. பகல் வேளையில் நிசப்தம் நிறைந்த சாலைகளை கண்களால் பார்க்க முடிகிறது. அடிதடி வெட்டு குத்து குறைந்து இருக்கிறது. மதுக்கடை மூடிக் கிடைக்கிறது. நகைக் கடைகள் பூட்டியே இருக்கிறது. ஜவுளிக்கடை விளம்பரங்களே செய்வதில்லை. நிரம்பி வடியும் மாநகரப் பேருந்துகள் இல்லை. படியில் தொங்கிப் பயணம் செய்ய யாரும் இல்லை. தெருவெல்லாம் சுத்தமாய் கிடக்கிறது. சாக்கடைகள் தூர்வாரப் பட்டுக்கொண்டே இருக்கிறது. அரசியல்வாதிகள் நல்லது செய்ய நினைக்கிறார்கள் . அடுத்தவன் பொருள் மேல் ஆசை வருவதில்லை.  எது வேண்டும் என்றாலும் வீட்டிலேயே சமைத்து உண்கிறோம். தேவை இல்லாமல் எதையும் வீணடிப்பது இல்லை. காவல் துறையை மதிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறோம். மருத்துவரை தெய்வமாய் பார்க்க முடிந்திருக்கிறது. செவிலியரை சகோதரியாய் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம். சுற்றி இருப்பவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருக்கிறோம் (????).


சுத்தமாக இருக்கப் பழகி இருக்கிறோம்.


*சிட்டு்குருவி சுதந்திரமாய் சுற்றித் திரிகின்றன. பறவைகள் சப்தம் பலமாய் கேட்க முடிகிறது. பொழுது சாயும் போது எந்த இரைச்சலும் இல்லை. நீ எப்படி வருவயோ என்ற பயம் உன் குடும்பத்திற்கு இல்லை. போதை தேடி யாரும் செல்வதே இல்லை. சிகரெட் தீர்ந்தும் தேடி அலைய மனமில்லை.
தெருவில் எட்சில் துப்ப யோசிக்கிறோம். வெளிநாட்டில் இருந்து வந்ததை வெளியில் சொல்ல யோசிக்கிறோம். அகந்தை அழிந்து போய் இருக்கிறது. தான் என்ற கர்வம் தளர்ந்து போய் விட்டது. சிறுவயது நியாபகங்களை அசை போட துவங்கி இருக்கிறோம். தொட்டதிற்கு எல்லாம் மருத்துவமனை போவதை நிறுத்தி இருக்கிறோம். சிரிக்க கற்றுக் கொண்டு இருக்கிறோம். சிந்திக்க பழகி இருக்கிறோம். மற்றவர்கள் வழி புரிந்து இருக்கிறது. மனது நோகாமல் பேச பழகி இருக்கிறோம்.

இது மட்டும் போதாது, அப்பாவோடு மனம் விட்டுப் பேசுங்கள். அம்மாவின் மடியில் தலை சாய்ந்து உறங்குங்கள். பிள்ளைகளின் தேவை அறிந்து சொல்லிக் கொடுங்கள். மனைவியின் மனதிற்கு நெருக்கமாக இருங்கள்.கணவரின் கைகளை பிடித்து நம்பிக்கை கொடுங்கள். பிரிந்த நண்பர்களின் நம்பர்களை தேடி எடுங்கள். மன்னிப்பு கேட்க நினைத்தவர்களிடம் கேட்டு விடுங்கள். யாரையாவது மன்னிக்க நினைத்தால் மன்னித்தும் விடுங்கள்.

ஒருவேளை இந்த 21 நாட்களோடு உலகம் அழிந்து போவதாய் இருந்தால் உறவுகளை எப்படி நேசித்து இருப்பீர்களோஅப்படி நேசித்து பாருங்கள். பக்கத்து வீட்டுக்காரரிடம் பகை தெரியாது.எதிர் வீட்டுகாரரின் ஏமாற்றம் புலப்படாது. எல்லோரும் நிம்மதியாக இருக்கட்டும் என்று மனம் நினைக்கும். வஞ்சம் தோன்றாது. வாழ வேண்டும் என்ற ஆசை நீண்டு இருக்கும் .

வாழ்ந்து காட்ட வாய்ப்பு கிடைத்தது என்று மனம் சொல்லும். மீண்டும் தொடங்குங்கள் எங்கு எந்த தவறை செய்தீர்களோ, அதை திருத்திக் கொள்ளுங்கள். வீட்டில் இருப்பதற்கு வெறுப்பாக உள்ளதென்று புலம்பாதிருங்கள், வீடே இல்லாதவர்களை நினைத்து பெருமை கொள்ளுங்கள் .


நீங்கள் யாரென்பதை உங்களுக்கே உணர்த்துவதற்காக ஒரு வைரஸ் தேவைப்பட்டு இருக்கிறது. உங்களை யாரும் தனித்து நிற்கச் சொல்லவில்லை. தற்காத்துக் கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறார்கள். வாழ நினைத்தால் வாழ்ந்து காட்டுங்கள். வாழ்க்கை எல்லோருக்கும்
ரி ஸ்டார்ட் ஆப்ஷன் யை கொடுப்பதில்லை. இப்போ சொல்லுங்க இது வரமா? சாபமா? 

நிச்சயமாக வரம் தான் *
வாழ்ந்து தான்
பார்ப்போமே* .....*
தன்னம்பிக்கை மனிதர்கள் ..

தன்னம்பிக்கையாக பேசுபவர்கள் ஓர் காலத்தில் தன்னம்பிக்கையற்று 
வாழ்வினை தொலைத்து 
அடுத்த கட்டத்திற்கு நகர முடியாதவர்களே..
வாழ்வினை வெறுக்க தெரிந்தவருக்கே அதிகம் வாழ்க்கையை நேசிக்க தெரியும்.
அவர்களுக்கே எப்படி வாழ்க்கையை வாழக்கூடாது என்ற சூட்சுமம் புரியும்.
தான் பட்ட அனுபவங்களை 
வலிகளை
வேதனைகளை 
அடுத்தவர்கள் தொடவேண்டாம் என நினைப்பவர்கள்..
அப்படிப்பட்ட
Positive vibration உள்ள மனிதர்களை 
கூடவே வைத்திருங்கள்.
சந்தியுங்கள்.
உரையாடுங்கள்..

வாழ்க்கை இன்னும் முடிந்து விடவில்லை,
Life is not over..
தினமும் ஒரு புது விடியல் விடிந்து கொண்டுதான் இருக்கிறது.
எல்லோரும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்.
வலி நிறைந்த வாழ்க்கை அல்லாத ஒரு மனிதன் பூமியில் உண்டா?
பிறப்பு இறப்பு போல
வலி துரோகம் வேதனை தொடாத மனிதர்கள் உண்டா ?
எல்லோருக்கும் அழுகை வந்துகொண்டு தான் இருக்கின்றது.
அதனை மீறி ஏதாவதொன்றின் மீது புன்னகையை திணித்து வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு காலக்கட்டத்தில் ஒவ்வொரு புதுப்பித்தல் நடைபெறும்.
புது அனுபவம் கிடைக்கும் ,
சிலருக்கு இன்பமாய்
சிலருக்கு துன்பமாய்.. 
இன்பமாயிருந்தால் ஏற்றுக்கொள்
துன்பமாயிருந்தால் தள்ளிவை
அவ்வளவு தான்.
இத்தோடு அனைத்தும் முடிந்துவிட்டதென புலம்பாதே..
புலம்பல்கள் நேரத்தை கடத்தும்
வாழ்வினை கடத்தாது.
அதே இடத்தில் நிறுத்தி 
கொன்றுவிடும்..
எதுவாயினும் வெளியில் வந்து 
புது உலகை ரசி..
இங்கு எதுவும் முடிந்துவிட வில்லை.

Life is not over.
புறந்தள்ளுங்கள்
## filtering system
 
Lot of problems in the world would disappear if we talk to each other instead of about each other
         – Ronald Reagan

ஒருவரைப் பற்றி பேசுவதற்கு பதிலாக ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டால் இந்த உலகில் பெரும்பாலான பிரச்னைகள் மறைந்து விடும் – ரொனால்ட் ரீகன்

ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கோ மீட்டிங்கிற்கோ செல்லும்போது நீங்கள் அங்கிருப்பவர்களிடம் சகஜமாக சந்தோசமாக பழகிக் கொண்டிருக்க அதில் சில பேர் உங்களை அவாய்ட் பண்ணுவதுபோல பட்டும் படாமலும் பழகிய அனுபவம் உங்களுக்கு என்றேனும் நிகழ்ந்துள்ளதா?

திடீரென என்ன ஆயிற்று இவர்களுக்கு, நன்றாகத்தானே பழகிக் கொண்டிருந்தார்கள் என்று பலவாறு உங்களை நீங்களே கேள்வி கேட்டு அவர்களுடன் அன்று வரை நடந்த நிகழ்வுகளையெல்லாம் திரும்பத் திரும்ப மனதில் ஓட விட்டு ஏதேனும் தவறுதலாக நடந்ததா என்றெல்லாம் ஆராய்ந்து, ஒன்றும் புரியாமல் குழம்பிய மனதுடன், சென்றிருந்த நிகழ்ச்சியை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியாமல் தவித்திருப்பீர்கள்.

உங்களைப் பற்றி ஏற்கனவே யாரோ ஏதோ சொல்லி அங்கிருந்தவர்களிடம் உங்களைப் பற்றிய ஒரு தவறான புரிதலை ஏற்படுத்தி இருந்து பின்பு அதனை அறிய வரும்போது உங்களுக்குள் ஏற்படும் இயலாமையும் வருத்தமும் உங்களை சோர்வடையச் செய்யும். உங்களைப் பற்றிய தவறான எண்ணங்களை எப்படிச் சரி செய்வது என்று உங்கள் மனம் பதறும்.

இது உங்களுக்கு மட்டும் ஏற்படும் அனுபவம் அல்ல. பல குடும்பங்களில் மட்டும் நடக்கும் விஷயமும் அல்ல. வளரும் நாடுகளிலும், வளர்ந்த நாடுகளிலும், மிகவும் நாகரிகமானவர்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடியவர்கள் மத்தியிலும் prevail ஆகிக் கொண்டிருக்கும் பழக்கம்தான் இது என்கிறது வாழ்வியல்

உலக அளவில் 60 சதவீதம் மக்கள் ஒருவரைப் பற்றி மற்றவர் ஏதேனும் பேசுகிறார்கள் என்கிறது மேலை நாட்டு ஆய்வு ஒன்று. மேலும், சிலர் மற்றவர்களைப் பற்றி தாழ்வாக பேசுவது தங்களை உயர்வாக நினைக்கச் செய்யும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். மற்றவர்களுக்குத் தெரியாத ஒரு விசயத்தை தாங்கள் சொல்வது அவர்களுக்கு இன்ட்ரெஸ்டிங்காக இருக்கிறது. ஆனால் உண்மையில் புறம் பேசுபவர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்ளவே செய்கிறார்கள். இவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல என்ற எண்ணத்தைத்தான் பிறர் மனதில் விதைக்கிறார்கள் என்கிறது அந்த ஆய்வின் முடிவு.

புறம் பேசுதல் என்பது ஒருவரைப் பற்றி தவறாக நெகடிவாக அவர் இல்லாத போது மற்றவர்களிடம் பேசுவது எனபதை நீங்கள் அறிவீர்கள். ஒருவர் இன்னொருவரைப் பற்றி அவர் இல்லாத போது பேசுகிறார் என்னும்போதே அதன் உண்மைத்துவம் கேள்விக்குறியதாகி விடுறது. அத்துடன் சொல்பவரின் நம்பகத் தன்மையும் இடறுகிறது.

மனரீதியாக தன்னம்பிக்கை இல்லாதவர்களும் பிறருடைய கவனத்தை தாங்கள் கவர வேண்டும் என நினைப்பவர்களுமே பெரும்பாலும் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவார்கள். புறம் பேசப் படுபவர்களை மட்டுமல்ல பேசுபவர்களையும் கேட்பவர்களையுமே அது மனரீதியாகப் பாதிக்கும் என்கிறது மனஇயல்.

பொதுவாக புறம் பேசுபவர்கள் தங்களை நியாயப் படுத்திக் கொள்ள சொல்லக் கூடிய வார்த்தைகள் 'நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்ஸ வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பி விடக் கூடாது என்பதற்காகத்தான்...' என்பது போன்றே இருக்கும். இப்படி நல்லது கெட்டதை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அவர்களுக்கு விழிப்புணர்ச்சி கொடுப்பதற்காகவும் தான் சொல்கிறோம் என்பார்கள். ஆனால் அதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஒரு கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சில நாட்கள் ஒரு குழுவாகப் பழக வைத்தார்கள். பின் அவர்களை இரண்டு பிரிவாகப் பிரித்து அவர்களுக்குள் பலருக்கும் பிடித்த இரண்டு பேரைத் தேர்ந்தெடுத்து ஒரு பிரிவினரிடம் அந்த இரண்டு பேரைப் பற்றிய நல்ல விஷயங்களைச் சொல்லச் சொன்னார்கள். அத்தனை பேரும் அவர்களைப் பற்றிய நல்லவற்றைச் சொன்னர்கள்.

பின் அதே இரண்டு பேரைப் பற்றி அடுத்த குருப்பிடம் அவர்களிடம் இருக்கும் தவறான விஷயங்களைப் பற்றிச் சொல்லச் சொன்னார்கள் அத்தனை பேருக்கும் சொல்லுவதற்கு விஷயம் இருந்தது.

ஆக அந்த இரண்டு பேரும் நல்லவரா.. தீயவராஸ? இப்போது என்ன முடிவுக்கு வர முடியும். உண்மையில் எதை நீங்கள் தேடினாலும் அந்தந்த கோணத்தில் அது உங்களுக்குக் கிடைக்கும் என்பதே அந்த ஆய்வின் முடிவு.

குறைகள் இல்லாத மனிதன் உலகில் இல்லை எனும்போது யார் ஒருவரிடமும் என்ன தவறு இருக்கிறது என்று பார்க்க முனையும் போது நிச்சயமாக ஏதாவது ஒரு தவறுதான் தெரிய வரும். அல்லது ஏதாவது ஒன்றைத் தவறாக எடுக்கத் தோன்றும்.

ஏனென்றால் ஆழ்மனதின் filtering system, தன் தேவைக்கு ஏற்ப ஒன்றை அனுமானித்துக் கொள்ளும். நீங்கள் என்ன தேடுகிறீர்களோ அதைத் தான் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும். உங்கள் ஆழ்மனதிற்கு நீங்கள் நல்லவற்றைப் பார்க்க பழகிக் கொடுக்கிறிர்களா அல்லது தீயவற்றைப் பார்க்கப் பழகிக் கொடுக்கிறீர்களா என்பதே பிரச்னைக்கும் தீர்வுக்குமான வேறுபாடாக இருக்கிறது.

உங்கள் ஆழ்மனதால் மனிதர்களையும் பொருட்களையும் கூட பிரித்துப் பார்க்க முடியாது. நீங்கள் யாரேனும் ஒருவருடைய தவறுகளை உற்றுப் பார்க்கிறீர்கள் என்றால், அது எல்லாவற்றிலும், அதாவது பிற மனிதர்களாகட்டும், அல்லது அன்றாட வாழ்வின் நிகழ்வுகளாகட்டும், அல்லது உயிரற்ற பொருட்களாகட்டும், நீங்கள் சந்திக்கும் அனைத்து விஷயங்களிலுமே நெகடிவான செய்திகளையே உங்கள் கண்ணில் படச் செய்யும். அது போல் பிறரிடம் சென்று செய்திகளை பேசக் கூடியவர்களுக்கு எதைப் பார்த்தாலும் அதை மற்றவர்களிடம் எப்படி சொல்வது என்ற கோணத்திலேயே தான் அவர்கள் மனம் பார்க்குமே தவிர உண்மையில் ஒரிஜினலான விஷயத்தை தனக்குள் பதிய வைத்துக் கொள்ளாது.

பொதுவாக நெருப்பு என்று சொன்னால் சுட்டு விடவா போகிறது. வார்த்தைகள் வலிக்கக் கூடாது என்பார்கள். வார்த்தைகள் வலிக்கும் காலமிது என்று sociology சொல்வது ஒரு புறம் இருக்க, வார்த்தைகளுக்கு மட்டுமல்ல எண்ணங்களுக்கும் நம்முடைய நரம்பு மண்டலத்திற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது என்கிறது நியூராலஜி. அதனால் தான் இன்று பாஸிடிவ் சைக்காலஜி பல பிரச்னைகளுக்கும் நேர்மறையான வார்த்தைகளால் தீர்வைத் தருகிறது.

புறம் பேசுவது என்பது கேட்பவருக்கும் பேசுபவருக்கும், ஏதோ அந்தக் காதில் வாங்கி இந்தக் காதில் விடும் சங்கதி அல்ல. ஒரு குதிரையின் வாயில் பூட்டப் படும் லகான் எப்படி அதன் முழு இயக்கத்தையும் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வருமோ அது போல் அது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் கொடுக்கப்படும் சமிக்கை. எதிர்மறையான சிந்தனைகள் ஒருவரின் எண்ணங்களைத் தன்னையே சுற்றிச் சுற்றி வரச் செய்து மன அழுத்ததை ஏற்படுத்தி விடும்.

தவிர, பேசப்படும் செய்தி உண்மையாகவே இருந்தாலும், ஒருவரைப் பற்றிய நெகடிவான விஷயங்களை உற்று நோக்குவது, பேசுபவர், பேசப் பட்டவர், அதை கேட்டுக் கொண்டிருந்தவர் என எல்லோருக்குள்ளும் ஒரு நெகடிவிட்டியை பரப்பி விடும்.

அதற்குப் பதிலாக, ஒருவரைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அவர்களுடய நல்ல கோணத்தைத் தெரிந்து கொள்ளச் செய்யலாமே. அது பேசப் பட்டவர்களின் நல்ல செயலை மேலும் தூண்டும். தங்களைப் பற்றி இருக்கும் இமேஜை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். தங்களுக்கு கிடைத்த அங்கீகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவலை அவர்களுக்குள் எழுப்பும். சொன்னவரைப் பற்றியும் நல்ல அபிப்ராயத்தைத் தரும். பிறருடனான உறவுகள் வலுப் பெறும்.

நீங்கள் ஒருவரைப் பற்றி நீங்கள் என்ன பேசுகிறீர்களோ அது முதலில் நீங்கள் யார் என்பதையே பிரதிபலிக்கும். தவிர அது அவருக்கு என்ன விளைவை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அந்த விளைவு உங்களிடம் இருந்தே ஆரம்பம் ஆகும். மற்றவர்களை மகிழ்ச்சி படுத்துவது அவர்களுக்கு தரும் மறுமலர்ச்சி அல்ல அது உங்களுக்கே மகிச்சி தரக் கூடியது. இதைப் புரிந்து கொண்டால் மகிழ்ச்சி மனதில் நிறையும்.

வாழ்க்கை வாழ்வதற்கு ...
என்றும் அன்புடன் சிவக்குமார்
9944066681...

கேள்வி :...வரும் நிதி ஆண்டில் கொரோன வைரஸின் காரணமாக ஏற்படும் திடீர் மாற்றங்களால் 1-2 மாதத்திற்கு மிக அதிக மாற்றம் காணக்கூடிய பங்குகள் என்ன (எந்த துறை)?

பதில் .....


நல்ல கேள்வி, எரிகிற வீட்ல சிகரெட் பத்த வச்சதுபோல! ஓரிரு மாதங்களுக்கு பங்குகளைப் பொறுத்தவரை நமது பாதை 'விழித்திரு, விலகியிரு' தான்.

வரும் நிதி ஆண்டில் கொரோன பாதிப்பு காரணமாக அதிக மாற்றம் காணக்கூடிய துறைகள் என்ன? முதலில் பாஸிட்டிவா ஆரம்பிப்போம்.

1. வளர்ச்சி பெறக்கூடியவை: (இந்த சமயத்தில் நீங்கள் உபயோகப்படுத்துவது, வாங்கிக் குவிப்பது இவற்றை தரும் துறைகள் )

விரைவில் விற்கும் பொருள் உற்பத்தித்துறை (FMCG Sector)
குறிப்பிட்ட மருந்து உற்பத்தி நிறுவனங்கள்,
சுகாதாரம் சம்மந்தப்பட்ட பொருட்கள்.
கந்து வட்டித்துறை (இப்ப தருகிறார்களா என்ன?)
பழைய திரைப்பட விநியோகத்துறை
தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்கள் துறை
தொலை தொடர்பு துறை
முகமூடித்துறை (!)
இணைய வணிகத்துறை
இணையக்குற்றவாளிகள் (syndicated cyber crime)
தகவல் பாதுகாப்புத்துறை (சும்மா போட்டு வைப்போம்)
ரிலையன்ஸ் குழுமத்தின் பல நிறுவனங்கள்
2. தளர்ச்சி பெறக்கூடியவை: (இந்த சமயத்தில் நீங்கள் வாங்க மறுப்பவை, கூட்டம் தடை செய்ய பட்ட இடங்கள்.)

சுற்றுலா துறை
பயண தொழில் சார்ந்தவை
ஹோட்டல், விருந்தோம்பல்
அரசியல் (பல்லாயிரம் கோடி நட்டம்)
பக்தி, ஆலயம் சார்ந்தவை (சிரிக்காதீர்கள்)
மீன், கடல், உயிர் பொருட்கள் சந்தை
வங்கித்துறை (வராக்கடன் )
சீன மூலப்பொருட்களை கொண்டு தயாரிப்பில் ஈடுபட்ட அனைத்துத்துறைகள்
3. வீழ்ச்சி பெறக்கூடியவை: (அடுத்து சில பல மாதங்களுக்கு நீங்கள் நிராகரிக்கப்போவது, தள்ளிபோடப்போவது)

வீடு விற்பனை துறை
கட்டிடத்தொழில்
உலகின் முதல் தொழில்
துணி உற்பத்தி, ஆயுத்த ஆடை உற்பத்தி துறை (35% ஏற்றுமதி செய்யும் இந்த துறை, இந்தியா அதிகளவில் கொரோன பாதிப்புகுள்ளானால் கடுமையாக பாதிக்கப்படும்.
உர உற்பத்தி (சீன இறக்குமதி சார்ந்தது)
தோல் பொருள் உற்பத்தி (மக்கள் பயம்)
4. விரைவில் மீண்டெழக்கூடியவை (உங்களின் இதயத்துடிப்பு)

விவசாயத்துறை - மூன்று மாதத்தில்
அதிக தொழிலார்களுக்கு வேலை தருபவை (அரசாங்கம் காப்பாற்றும்)
டாஸ்மாக் சார்ந்தவை - ஒரு மணிநேரத்தில்!
சீனா தயாரிப்புகளுக்கு மாற்று தயாரிப்புதுறை
தகவல் தொழிநுட்பத்துறை (இப்ப சந்தோஷம்தானா)
டிவி, பிரிட்ஜ் போன்ற நீடித்த நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு துறை (இதிலும் இதுவரை சீனாதான் டாப்)
மின்பொருட்கள் (சீன இறக்குமதிக்கு மாற்று )
முறைசாரா துறை (Unorganised sector இதுதான் இந்தியாவின் பெரிய துறை. இந்தமாதிரி பேரிடர்களில் இந்த துறை முழுமையாக அழிந்ததுபோல் ஆகிவிடும், பேரிடர் முடிந்ததும் எழுந்து விடும்.)
டாடா குழுமத்தின் பல நிறுவனங்கள்
5. ஒரேயடியாக நொடித்து போகக்கூடியவை (இப்பொழுது உங்கள் நினைவில் இல்லாதவை)

விமான போக்குவரத்து துறை
சீன மருத்துவம் (சரிதான்)
உலக சுகாதார அமைப்பு (Who?)
ஒலிம்பிக்ஸ் ஏற்பாடுகளை முடித்த துறைகள்
(விரைவில் மேம்படுத்துகிறேன்)

என்றும் அன்புடன் சிவக்குமார் .9944066681.
வெல்த் மேனேஜ்மென்ட் ...

சனி, 4 ஏப்ரல், 2020

கடைநிலை ஊழியர் -கல்யாணி ...


இன்று, அலுவலக வேலையின் கடைசி நாள். பழைய நினைவுகளில் உழன்ற மனதை, கடிவாளம் போட்டாள், கல்யாணி.
கண் இமைக்கும் நேரத்தில், காலம் ஓடி விட்டதை நினைத்து, பெருமூச்சு வந்தது.
''வா, கல்யாணி... இன்னைக்கு தான் கடைசி நாளா... எதுக்கும் கவலைப்படாத, இங்கே இருந்து போயிட்டமே, எந்த உதவியும் கிடைக்காதேன்னு நினைச்சிடாதே... உனக்கு எந்த உதவி வேணும்னாலும் வந்து கேளு... நம் எம்.டி., செய்வாரு,'' என, ஆறுதலாக சொன்னார், கலியமூர்த்தி.
நிஜம் தான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. அவள், இந்த அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக பணியில் சேர்ந்து, 22 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.
இந்தியா முழுக்க கிளைகளை கொண்ட கட்டுமான நிறுவனம், அது. அதில், பியூனாக இருந்தான், அழகேசன். ஒரு விபத்தில் அவன் உயிரிழக்க, கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் நின்றாள், கல்யாணி.
இனம் புரியாத வயதில், மூன்று குழந்தைகள். அவர்கள் வளரும் வரை, வருமானமும், பாதுகாப்பும் தேவை. அதற்கு வழியற்று நின்றாள், கல்யாணி.
அவள் நிலை கேள்விப்பட்டு, அதே நிறுவனத்தில், கடைநிலை ஊழியராக வேலை தந்தனர். இன்று, பெண்கள் எல்லா வேலைகளும் செய்வது ஒன்றும் பெரிய விஷயமில்லை.
அவளும், வேலையில் எந்த குறையும் வைக்கவில்லை. ஒரு மகளை படிக்க வைத்து, நல்ல இடத்தில் திருமணம் முடித்து கொடுத்தாள். இரண்டு மகன்களில் ஒருவன் தவறி போக, இன்னொருவனை, படிக்க வைத்து, வேலையிலும் அமர்த்தி விட்டாள்.
இதோ, இன்றோடு பணி நிறைவு; மாலையில், பிரிவு உபசார விழா; சின்னதாய் தேநீர் விருந்தும், நினைவு பரிசும் தருவதாக ஏற்பாடு.
கல்யாணியின் அதிர்ஷ்டம், இன்று, வேறொரு நிகழ்ச்சிக்கு வரும்,
எம்.டி., மாலையில், இந்த விழாவில் கலந்து கொள்வதாய் ஒப்புக்கொண்டிருந்தார். அதனால், இந்த விழா மேலும் கவனம் பெற்றது என்றே சொல்லலாம்.
''நிஜத்துல நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி தான், கல்யாணி. இல்லைன்னா, உன் பிரிவுபசார விழாவுக்கு வலிய வந்து, கலந்துக்கிறார்,
எம்.டி., இந்த சந்தர்ப்பத்தை தவற விடாம, என்ன வேணும்ன்னு கேளு... முதலாளி ரொம்ப இளகின மனசு படைச்சவர்.
''கம்பெனி, உனக்காக ஒதுக்கி வச்சிருக்கிற பணத்தை விட, நிறைய தர சொல்வார். ஆனா, நீ பேசுறது, மனச தொடறா மாதிரி இருக்கணும். அதை மட்டும் மறந்துடாத. அப்பதான் உனக்கு நன்மை,'' என்றார், கலியமூர்த்தி.
கல்யாணிக்கு எதுவும் தோணவில்லை. அவளுக்கான தேவைகள் அதிகமில்லை. எப்போதும் பணத்தை மட்டுமே சிந்திக்கவும், அவள் பழகவில்லை. கேட்க வேண்டும் என்றால், நிறைய இருக்கிறது.

மாலை -
கல்யாணிக்கு பிரிவு உபசாரம் என்பதை விட, அந்த விழாவுக்கு,
எம்.டி., வருகிறார் என்பதே, பெரும் பேச்சாக இருந்தது.
'எதுக்கும் அதிர்ஷ்டம் வேணும், கல்யாணி. போன மாசம், அசிஸ்டென்ட் மேனேஜர், சதாசிவம் ஓய்வுப்பெற்று போனாரு; அதுக்கு கூட, எம்.டி., வரல. ஆனா, உனக்கு வர்றாரு. வேற வேலையா தான் அவர் இங்கே வர்றாருன்னாலும், உனக்காக, இந்த விழாவுல தலை காட்டிட்டு போறதை, இந்த ஆபீசே பொறாமையா தான் பாக்குது...' என, ஆளாளுக்கு குமைந்தனர்.
எம்.டி., - மேனேஜர் வரிசையில், கல்யாணிக்கும் நாற்காலி போடப்பட்டது. அவர்களுக்கு சமமாக அமர கூச்சமாகத்தான் இருந்தது.
''கிட்டத்தட்ட, 22 ஆண்டுகளுக்கும் மேலாக, நம் அலுவலகத்தில் கடைநிலை ஊழியரா, ஒரு பொண்ணா நின்னு கல்யாணி ஜெயிச்சிருக்காங்கன்னு தான் சொல்லணும். அவங்க, பணியில எந்த குறையும் சொல்ல முடியாது.
''ஒரு ஆண், தன் வேலையில் எவ்வளவு வேகமும், ஆற்றலும் காட்ட முடியுமோ, அதைவிட அதிகமா செய்ய முடியும்ன்னு நிரூபிச்சிருக்காங்க. அதுக்கு நாம, அவங்களுக்கு மரியாதை செய்யணும்,'' என, மேனேஜர் பேசியதும், கரவொலி எழுந்தது.
கண்களில் நீர் திரையிட, எழுந்து, கை கூப்பினாள்.
'யாரும், எதையும் கத்துக்கிட்டு வேலைக்கு வர்றதில்லை; இவங்களும் அப்படித்தான். ஆனா, கத்துக்கிடணும்கிற இவங்களோட வைராக்கியம், இப்போ இருக்கிற இளைஞர்களுக்கு வரணும். இவங்களை நம்பி ஒரு பொறுப்பை தந்ததில், எந்த குறையும் இல்லாம நிறைவேத்தி இருக்காங்க...' என, பலவிதமான பாராட்டுகள்.
நிச்சயம் இதற்கு எல்லாம் தகுதியானவள் தான் கல்யாணி. அவளின் உண்மையான, நேர்மையான உழைப்பிற்கு, இந்த பாராட்டு தகும்.
கல்யாணியை, சில வார்த்தைகள் பேச அழைத்தனர். இருக்கையில் இருந்து ஜாடை செய்தார், கலியமூர்த்தி.
விரும்பியதை முதலாளியிடம் சொன்னால் மறுக்க மாட்டார் என்பதால், ஒரு நொடி கண்களை மூடி ஆசுவாசப்படுத்தியபடியே, ''எல்லாருக்கும் வணக்கம். என்னை பேசச் சொன்னால், எனக்கு என்ன தெரியும்... ஆனா, உங்க எல்லார் மத்தியிலும் பேச, கடைசியா கிடைச்ச வாய்ப்பு இது. இதை நான் தவற விடக்கூடாது.
''களிமண்ணை அழகான பொம்மையா வார்க்கிற, பெருமையான இடம் மாதிரி, என்னை இந்த இடம் உருவாக்குச்சு. ரொம்ப நன்றி கடன் பட்டிருக்கேன். என் புள்ளைங்களை படிக்க வச்சு, கல்யாணம் பண்ணி கொடுத்து, வேலைக்கும் அனுப்பிட்டேன்.
''என் கடமையை சரியா செய்ய, இதைவிட பக்க துணையா, என் தாய் - தகப்பன் கூட, உதவி இருக்க முடியாது. இதோ, இன்னைக்கு, முதலாளி இங்கே வந்து, என் இத்தனை வருஷ உழைப்புக்கு ஒரு அங்கீகாரத்தை தந்துட்டாரு. எனக்கு இங்கே எந்த குறையும் இல்லை,'' என்ற கல்யாணியின் கண்களில் நிறைந்திருந்த நீர், ஆனந்தமாய் அவள் கன்னங்களில் கோடிட்டது.
''இதப் பாருங்கம்மா... உங்க உழைப்பிற்கான ஓய்வுத் தொகையும், ஓய்வூதியமும் கம்பெனி தரத்தான் போகுது. அதை மீறி, உங்க மேல இருக்கிற நல்ல அபிப்ராயத்தால கேட்குறேன். உங்களுக்கு இன்னும் ஏதாவது வேணுமா?'' அன்போடு கேட்டார், எம்.டி.,
''வேணாங்கய்யா... நிறைவா தோணும்போதே போதும்ன்னு நிறுத்திடணும்... தக்க இடத்துல நிறுத்த தவறின வண்டி, சரியான இலக்கை போய் சேராதுன்னு, எங்கய்யா சொல்லுவாக,'' என்றாள்.
''வாவ்...'' தன்னை மறந்து சத்தமிட்டார், எம்.டி.,
''ஆனா, எனக்கு ஒரு விண்ணப்பம். நிர்வாகத்துக்கு மட்டுமில்லீங்க, இங்கே இருக்கிற எல்லாருக்கும் தான். பியூன் கல்யாணி, இந்த இடத்துல பட்ட அவமானம் இல்ல; கல்யாணிங்கிற சக மனுஷி பட்ட வலிங்க,'' என்று, மெல்ல பேசியவளை, அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர்.
அப்படியென்ன கேட்க போகிறாள் என்ற வியப்பு.
''ஐயா, 22 ஆண்டுகளாக இங்கே வேலையில இருக்கேன். கல்யாணிங்கிற பியூன் செய்த வேலைகளை அங்கீகரிச்சுருக்காங்க... ஆனா, கடைநிலை ஊழியரா, கல்யாணியை யாரும் அங்கீகரிக்கல...
''ஆமாங்க, என்னை மாதிரி வேலை பாக்குற எத்தனையோ கடைநிலை ஊழியம் பண்ற மனுஷங்களோட வலி இது... வீட்டுலயோ, இல்ல வேலையிலயோ ஏதாவது, 'டென்ஷன்' இருந்தா, எங்க மேலதான் எரிஞ்சு விழுவாங்க... ஏன்னா, நாங்க, பதிலுக்கு யாரையும் அலட்சியம் பண்ண முடியாதுங்கறதால...
''அந்த மாதிரி நாள்ல எல்லாம், ஜாதி கொடுமையை விட, பணிக் கொடுமை பெருசுன்னு, என்னை கலங்க வச்சிருக்கு. இனிமே, இந்த இடத்துக்கு யார் வந்தாலும், அவங்ககிட்ட உங்க கோபத்தை காட்டாதீங்கய்யா...
''முன்னொரு சமயம், எச்.ஆர்., சார் வீட்டு கிரஹப்பிரவேசத்துக்கு போயிருந்தேன். விசேஷம் முடிஞ்சு கிளம்பும்போது, 'வீட்டை சுத்தம் பண்ணிட்டு போங்க கல்யாணி'ன்னு சொன்னாரு. அப்போ தான் தெரிஞ்சது, அந்த இடத்திலயும் என்னை, பியூன் கல்யாணியா தான் பார்த்திருக்காரு, விருந்தாளியா பார்க்கலைன்னு...
''இன்னொரு முறை, அசிஸ்டென்ட் மேனேஜர் வீட்டு கல்யாணத்துக்கு போயிருந்தேன். எல்லாரையும் போல நானும் மொய் வெச்சேன். ஆனா அவரு, என்னை கூப்பிட்டு, கவரை கையில தந்து, 'நீங்களே பாவம், கல்யாணி... மொய்யெல்லாம் வேணாம்... முடிஞ்சா கூடமாட இருந்து உதவி பண்ணிட்டு, போகும்போது, நிறைய சாப்பாடு, பலகாரம் மீதமாகி இருக்கு, எடுத்துட்டு போங்க'ன்னாரு.
''மத்தவங்கட்ட, இதை நான் சொன்னப்போ, எல்லாரும் அவரின் குணத்தை பாராட்டுனாங்க. நான் மட்டும் தான், வலியோட வேதனையை அனுபவிச்சேன். அவருக்கு, 60 ஆயிரம் சம்பளம்ன்னா, எனக்கு, 10 ஆயிரம். ஆனா, அந்த சம்பளத்துல வாழ்றதாலயே நான், கை ஏந்திட்டு தான் இருக்கணும்ன்னு, ஏன் அவர் யோசிச்சார்...
''எனக்கும் நாலு இடத்துக்கு போகணும், கவுரவமா மொய் செய்யணும்ன்னு ஆசை இருக்க கூடாதா... அலுவலகத்துல இருந்து வந்தவங்களை விட, நான் தந்த கவர்ல வேணா காசு குறைவா இருந்திருக்கலாம். அதுக்காக என்னோட அன்பும், கவுரதையும் குறைவா இருக்கும்ன்னு எப்படி முடிவு செய்யலாம்...
''நமக்கு மேல வேலை பார்க்கிறவங்ககிட்ட இருந்து பணமும், கீழே இருக்கிறவங்ககிட்ட இருந்து உடல் உழைப்பும் மட்டும் தான் வேணும்ன்னு, சொல்றது என்ன நியாயம்,'' எனக் கூறி முடிக்க, சம்மட்டியை எடுத்து தலையைப் பிளந்தது போல் இருந்தது,
எச்.ஆர்., உட்பட அனைவருக்கும்.
''அது மட்டுமில்லீங்க, சில ஆண்டுக்கு முன், என் மூத்த புள்ளை தவறிட்டான். உடனே, நம் ஆபிஸ்ல இருந்து நிறைய பண உதவியும், விடுப்பும் குடுத்தாங்க. அதை நான் மறக்கவே மாட்டேன். ஆனா, அந்த நேரம், என் வீட்டுக்கு, கடைநிலை ஊழியர்கள் ரெண்டொருத்தரை தவிர, யாரும் வரல.
''அதுக்கு பிறகு, நான் ஆபிஸ் வந்தப்ப, யாரும் என்னை விசாரிக்கல; நான் அவங்க டேபிளுக்கு வேலையா போனப்ப தான், என்னாச்சுன்னு கேட்டாங்க... அதேநேரம், இதே ஆபிஸ்ல வேலை செய்ற ஒருத்தரோட அம்மா இறந்தப்போ, அத்தனை பேரும் அங்கே போனாங்க.
''இதெல்லாம் மனசுல வச்சுகிட்டு, கிளம்பிப் போகும் போது எல்லாரையும் நான் குத்திக் காட்டறேன்னு நினைக்க வேண்டாம். இதெல்லாம் நான் மாலையா கோர்த்து வச்சது, யார் கழுத்துலயும் போட்டுட்டு போகவும் இல்லீங்க. இந்த கூடத்துல மாட்டி வச்சுட்டு போகத்தான் ஆசைப்படறேன்...
''ஏன் தெரியுமா, நாளைக்கு இந்த இடத்துக்கு வர்ற கடைநிலை ஊழியரோட தன்மானத்தை, யாரும் மறுபடி கீறிப் பார்க்க கூடாது இல்லையா... படிச்சவங்க, படிக்காதவங்க எல்லாரும் தான் வேலை செய்றோம். படிப்புல வேணா வேறுபாடு இருக்கலாம். ஆனா, தன்மானம்கிறது எல்லாருக்கும் பொதுதானேங்க...
''அலுவலகத்தை தவிர மத்த இடங்கள்லயும், எங்களை கடைநிலை ஊழியராவே நடத்தாதீங்க... எங்களை மாதிரி கடைநிலை ஊழியர்களுக்கு மரியாதை கொடுங்கன்னு, நான் கேட்க மாட்டேன். ஆனா, எங்களையும் சக மனுஷங்களா மதிப்பு கொடுங்க... இதுதான்க என்னோட விண்ணப்பம்,'' என, கை எடுத்து கும்பிட்டாள்.
சில வினாடி, அங்கே அமைதி நிலவியது. பிறகு அனைவரும் எழுந்து நின்று கை தட்டினர்.

அது, அவளின் பேச்சுக்கு கிடைத்த பாராட்டல்ல, கருத்து வலிமைக்கும், அதில் இருந்த உண்மைக்கும் என்பது, கல்யாணிக்கும் புரிந்தது.

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

கேள்வி :......தற்போது ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சீர்திருத்தங்களின் அடிப்படையில் வங்கிகளில் கடன் மற்றும் வைப்பு நிதி ஆகியவற்றின் வட்டி விகிதங்கள் எவ்வாறு மாறக்கூடும்?

எனது பதில் :.....


கொரோனா பாதிப்பிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை காப்பதற்கென்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சில சீர்திருத்தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல சந்தேகங்களை எழுப்புகின்றன

முக்கியமாக கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு இது சம்பந்தமான சந்தேகங்கள் அதிகமாக இருக்கின்றன:

முதலில் அது சம்பந்தமான ஒரு கேள்வி-பதில்

1. வங்கிகளில் நான் வாங்கிய கடன்களுக்கான வட்டி விகிதம் குறையுமா?

ஆமாம். வங்கிகளில் உங்கள் கடன்களுக்கான வட்டி விகிதம் 0.50% முதல் 0.75%. வரை குறையும். ஏற்கனவே பல வங்கிகள் 0.75% வரை வட்டியை குறைத்து விட்டன.

2. எனது மூன்று மாதத்தவணைகள் தள்ளுபடி ஆகியுள்ளதா?

இல்லை, மூன்று மாதங்களுக்கு மாதத் தவணை நிறுத்திவைப்பு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது; தள்ளுபடியெல்லாம் இல்லை.

3. எனது வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே பணம் இந்த மாதம் எடுக்கப்படுமா?

ஆமாம். வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே மாதத்தவணையை பிடித்துக்கொள்ள நீங்கள் முன்னேற்பாடு செய்திருந்தால் இந்த மாதத்தவணை எடுக்கப்பட்டுவிடும்.

இது ஒரு நுடபமான விசயம். இந்திய சட்டப்படி எந்த வங்கியும் தானாகவே மாதத்தவணை நிறுத்தி வைக்க உரிமை இல்லை. கடன்தாரர் யாராவது மூன்று மாதங்கள் தவணை, வட்டியை கட்டவில்லை என்றால், வங்கிகள் உங்கள் கணக்கை வராக்கடன் (NPA) என அறிவித்து, அந்த கடன்பணம் முழுவதையும் வசூலிக்க வேண்டும் - இது நடைமுறையில் உள்ள வராக்கடன் (NPA) சட்டம். (எல்லாருக்கும் ஒரே சட்டமா என்று கேட்காதீர்கள்)

தற்போது ரிசர்வ் வங்கி, இந்த சட்டத்தின் செயல்பாட்டை மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைக்க மட்டுமே வங்கிகளுக்கு அனுமதி தந்துள்ளது. தவிர ரிசர்வ்வங்கி அறிவிப்பு இந்த விஷயத்தில் வங்கிகள் தாங்களாகவே முடிவு எடுத்துக் கொள்ளவும் அனுமதி தந்துள்ளது. அவை இந்த ஏற்பாட்டை ஏற்றால் அவற்றை ரிசர்வ்வங்கி கேள்விகேட்காது.

4. அப்படி என்றால் எனது மாதத்தவணையை நிறுத்தி வைக்க நான் என்ன செய்ய வேண்டும்?

சில வங்கிகள் கோரிக்கை இல்லாமல் தாங்களாகவே நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன. பிற வங்கிகளுக்கு எழுத்து மூலமாக அல்லது வாய்மொழியாகவோ கோரிக்கை வைக்க வேண்டும். இது அந்தந்த வங்கிகள் எடுக்கும் முடிவு. இப்பொழுதுதான் அறிவிப்பு வந்ததினால் வங்கிகள் முடிவெடுக்க சில நாட்கள் எடுக்கும். எதற்கும் நீங்கள் உங்கள் வங்கியை தொடர்புகொண்டு பேசுங்கள்.

5. மூன்று மாதம் கழித்து நான் மொத்தமாக பணம் செலுத்த வேண்டுமா?

இது நீங்கள் வைக்கும் கோரிக்கைகளை பொறுத்தே.

நீங்கள் இந்த மூன்று மாதங்களும் கட்டாமல் இருந்து ஜூன் மாதம் மொத்தமாக மூன்று தவணை களையும் செலுத்தலாம். அல்லது
இந்த மூன்று தவணைகளை கடைசியாக கட்டலாம். அதாவது எத்தனை மாதங்கள் தவணை பாக்கி உள்ளதோ அத்தனை மாதங்கள் கடன் முடிவது தள்ளிப் போகும். அல்லது
எப்போதும் போல் மாதாமாதம் தவணைகளை கட்டிக்கொண்டே இருக்கலாம் (மாறாக நீங்கள் இந்த சலுகையை ஏற்றுகொள்ளுவது நல்லது)
6. மூன்று மாதம் கட்டவில்லை என்றால் அபராதம் விதிப்பார்களா?

மாட்டார்கள். அபராதமோ அல்லது அபராத வட்டியோ மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு வங்கிகள் பிடிக்கக்கூடாது. ஜூன் 1தேதி அனைத்து பாக்கிகளையும் கட்ட வேண்டியிருக்கும்.

7. இந்த மூன்று மாதங்களுக்கு வட்டி உண்டா?

உண்டு, வட்டி அசலுடன் சேர்ந்து கொள்ளும்.

8. மார்ச் மாதத்திற்கான வங்கி தவணை செலுத்திவிட்டேன். எனக்கு மூன்று மாதங்கள் கழித்து அடுத்த தவணை கட்டலாமா

முடியாது. நீங்கள் 2 மாதம் மட்டுமே நிறுத்தி வைக்க முடியும். ஜூன் மாதம் தவணை கட்ட வேண்டும்.

9. இப்போது நான் வங்கிக்கு கூறினால், வரும் ஏப்ரல் மாதத்திற்கு உண்டான ECS நிறுத்தி வைப்பார்களா?

ECS -யை நிறுத்துவோ புதிதாக பிடிக்கவோ 20 நாட்களுக்கு முன்னரே செயல்படுத்தி வைக்கப்படும். 16ஆம் தேதி வரை உள்ள ECS கண்டிப்பாக பிடிக்கப்படும். ஒருவேளை தங்களது வங்கியில் பணம் இல்லை என்றால் அதற்கான அபராதம், அபராத வட்டி எடுக்கப்படாது. (உடன் செயல்படுங்கள்)

10. நான் பிப்ரவரி மாதம் மாதத் தவணை கட்டவில்லை எனக்கு மூன்று மாதங்கள் தவணை நிறுத்திவைப்பு உண்டா?

இது மார்ச், ஏப்ரல், மே, மாத தவணை களுக்கு மட்டுமே.

அதற்கு முந்தைய தவணைகள் கட்டவில்லை என்றால் கண்டிப்பாக கட்ட வேண்டும். அதற்கு வட்டி மற்றும் அபராதம் உண்டு.

11. நான் பழைய மூன்று மாதத் தவணைகள் செலுத்தவில்லை என்று வங்கி கடிதம், SMS அனுப்பி உள்ளது. இதை நிறுத்தி வைப்பார்களா?

மாட்டார்கள். மார்ச் ஒன்றாம் தேதிக்கு முன்பு மூன்று தவணைகள் பாக்கி இருந்தால் உங்களுக்கு இது பொருந்தாது.

மூன்று தவணைகள் மார்ச் 1 க்கு முன்பே பாக்கி இருந்தால் வங்கிகள் உங்கள் கணக்கை வராக்கடன் (NPA) என அறிவித்து, சட்டநடவடிக்கை மூலம் தங்கள் சொத்துக்களை பறிமுதல் செய்யவோ விற்கவோ உரிமை உண்டு.

அதற்கும் இந்த தவணைகளை நிறுத்தி வைக்கும் அறிவிப்புக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

12. வங்கி கிரெடிட் கார்ட் வாங்கியுள்ளேன் இந்த மூன்று மாதங்கள் தவணை நிறுத்தி வைப்பார்களா?

ஆமாம். இந்த சலுகை கிரெடிட் கார்டு தவணைகளுக்கும் பொருந்தும்.

13. இந்த மூன்று மாதங்கள் நான் கட்டவில்லை என்றால் எனது சிபில் (CIBIL) ஸ்கோர் பாதிக்கப்படுமா?

இல்லை. இந்த மூன்று மாதங்களுக்கு சிபிலில் CIBIL) எந்த வங்கியும் எந்தக் கடனையும் பற்றி அறிவிக்காது.

14. எனது சொத்துக்களை ஏலம் விடப் போவதாக ஏற்கெனவே வங்கி அறிவிப்பு செய்திருந்தனர். இன்றைய அறிவிப்பினால் எனக்கு ஏதேனும் சலுகைகள் உண்டா?

இல்லை. மார்ச் ஒன்றாம் தேதிக்கு முன்பு மூன்று தவணைகள் பாக்கி இருந்தாலோ அல்லது செயல்படாத கணக்காக (NPA) தங்கள் கணக்கை மாற்றி இருந்தாலோ அது அப்படியே தொடரும்.

இந்த அறிவிப்பினால், உங்களுக்கு எந்தவித சலுகையும் காட்டப்பட மாட்டாது. இது மார்ச், ஏப்ரல், மே மாத தவணைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

15. இந்த சலுகை மூன்று மாதங்களுக்கு மேலும் நீடிக்கப்படுமா?

தெரியாது. அது ஜூன் 1ஆம் தேதியில் தீர்மானிக்கப்படும். அந்த சமயத்தில், கொரோனா நம்மை விட்டு விலகிவிட்டதா, அதன் பாதிப்பிலிருந்து பொருளாதாரம் மீண்டுவிட்டதா, சலுகைகளை நீடித்துக்கொண்டே போனால் வங்கிகள் சமாளிக்குமா என்றெல்லாம் யோசித்து ரிசர்வ் வங்கி அறிவிக்கும்.

16. இந்த வட்டிக்குறைப்பு அனைத்து கடன் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்துமா?

இல்லை, இந்த வட்டி குறைப்பு சலுகை, நீங்கள் ரெபோ விகிதத்தை அடிப்படையாக கொண்ட வட்டி விகித அடிப்படையில் (RRLR - Repo Rate Linked Lending Rate) கடன் பெற்று இருந்தால் மட்டுமே உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

ஒரு வேலை நீங்கள் எதாவது ஒரு வட்டி விகித அடிப்படையில் கடன் பெற்று இருந்து, இந்த RRLR வட்டி விகிததிற்கு மாறாமல் இருந்தால் உங்களுக்கு இந்த வட்டிக்குறைப்பு மட்டுமல்ல, சில வருடங்களாக வங்கிகள் குறைத்து அறிவித்து வரும் வட்டி சலுகைகளையெல்லாம் இழந்திருப்பீர்கள்.

முக்கியமாக ஒரு 4,5 வருடங்களுக்கு முன்னால் உள்ள எதாவது வட்டி விகித அடிப்படையில் நீண்ட கால கடன்கள், வீடு கடன்கள் பெற்றிருந்தால், மற்றவர்களை விட நீங்கள் இப்போது 3% அதிகம் வட்டி கட்டிக்கொண்டிருப்பீர்கள். உடனே உங்கள் வங்கியை அணுகி RRLR வட்டி விகித அடிப்படைக்கு மாறுங்கள். இதை சரி பார்க்க வேண்டியது மிகவும் முக்கியம்.

17. இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

மேற்சொன்னதிலிருந்து, கடன் பெற்ற வாடிக்கையாளர்கள்,

தாங்கள் எந்த வட்டி விகித அடிப்படையில் கடன் பெற்றுள்ளோம்?,
தங்கள் கணக்குகள் சம்பந்தமாக வங்கிகளுக்கு தெரிவிக்க வேண்டியது என்ன?
ECS ஆணைகளை நிறுத்தி வைக்க வேண்டியுள்ளதா?
RRLR வட்டி விகித அடிப்படைக்கு மாறிவிட்டோமா என சரிப்பார்க்க வேண்டியது
போன்ற நடவடிக்கைளை உடனே எடுக்க வேண்டியிருப்பதை உணர்ந்திருப்பீர்கள். ( உங்களால் தவணை செலுத்த முடியும் என்று தோன்றினால்கூட, இந்த சலுகையை மறுக்க வேண்டாம்)

உடனே செயல்படுங்கள். தெரிந்தவர்களுக்கும் பகிருங்கள்.

ரிசர்வ் வங்கி பணமதிப்பு நடவடிக்கை (demonitsation) சமயத்தில் மாதிரியே மணிக்கொருதரம் மாற்றி மாற்றி அறிவிப்புகளை விடுகிறது. (பணமதிப்பு நடவடிக்கையை மத்திய அரசின் சார்பில் வெற்றிகரமாக செயல்படுத்திய அதே திரு.சசி காந்த தாஸ் தான், இப்பொழுது ரிசர்வ் வங்கியின் கவர்னர்)

அதனால் மேலே உள்ளவை மாறுதலுக்குட்பட்டவை!

சரி, வங்கிகளி்ன் வைப்பு நிதி வட்டி விகிதங்கள் எவ்வாறு மாறக்கூடும்?

சிறுசேமிப்பு (SB) கணக்குகள் முதற்கொண்டு, அனைத்து வைப்பு நிதி வட்டி விகிதங்களும் கண்டிப்பாக குறையும். சில வங்கிகள் குறைத்து வருகின்றன.

இப்பொழுதுதான் அறிவிப்பு வந்ததினால் பல வங்கிகள் வைப்பு நிதி வட்டி விகிதங்கள் குறித்து முடிவெடுக்க சில நாட்கள் ஆகும்.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள ரெப்போ வட்டிவீத வழிமுறை (REPO Rate Mecahnism) என்றால் என்ன, அதற்கும் மற்ற வங்கிகளின் வட்டி நிர்ணயத்திற்கும் என்ன தொடர்பு? விரைவில் பார்க்கலாம்.

தலைக்கீழ் ரெப்போ வட்டிவீதம் (Reverse Repo Rate) என்று கூட ஒன்று இருக்கிறது!

விரைவில் பதில் தருகின்றேன்

என்றும் அன்புடன் சிவக்குமார் ..

WHATSAPP  NO .....9944066681....



கேள்வி :.ஒருபோதும் மனம் தளரக்கூடாது என்று உங்களுக்கு நீங்களே நினைவுபடுத்திக் கொள்ள பயன்படுத்தும் ஒரு சொல் என்ன?


பதில் ...
எனது கல்லூரி தோழன்  என்னுடைய SLAM book ல் எழுதிய வரிகள்

"Try again and again until u get.. "

உனக்கு கிடைக்கும் வரை திரும்ப திரும்ப முயற்சி செய்.

அவனை இப்பவும் திட்டுவேன்..எந்த நேரத்தில் சொன்னாலோ அதில் இருந்து

Try stage ல மட்டும் தான் இருக்கு. GET stage கு போகவே இல்லை. (பணமா இருந்தாலும் சரி, மனைவியை தேடும் ஆணாக   இருந்தாலும் சரி


வியாழன், 2 ஏப்ரல், 2020

கேள்வி :....தற்போது வீடு கட்டும் போது 'balcony' இல் 'toughened glass railings' போடுகிறார்களே. அது எவ்வளவு காலம் உழைக்கும்? அது விரைவில் உடைந்து விடாதா? அந்த கிளாஸ் என்ன விலை இருக்கும்?

பதில் ......

கடினமாக்கப்பட்ட கண்ணாடி என்பது சாதாரண கண்ணாடி சில வேதியியல் மற்றும் வெப்பம் சார்ந்த செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு கடினமாக்கப்படுவதே. இது உடையாதா எனக்கேட்டால் உடையும் . ஆனால் உடையும் முறையில் வேறுபடும். படத்தில் கண்டு புரிந்துகொள்வீர்கள்

இதன் விலை சாதாரண கண்ணாடியை போல் 1 மடங்கு அதிகம். வாகனங்களின் கண்ணாடிகள் (wind shield) கடின கண்ணாடிகள்தாம்.

கடின கண்ணாடிகள் சரியான முறையில் தயாரிக்கப்படும்போது அதன் உறுதித்தன்மை நாம் கற்பனை செய்வதைவிட அதிகமாக இருக்கும்.தரை அமைப்பதற்கே உபயோகப்படுத்தலாம்.

ஆனால் நடக்கும்போது கம்பீரமாக மேலே பார்த்துக்கொண்டு நடக்கவும்.

தரைக்கே உபயோகப்படுத்தும்போது கைப்பிடி சுவராக ( handrail) ஏன் உபயோகப்படுத்தக்கூடாது? சிறப்பாக உபயோகப்படுத்தலாம். கண்ணாடி உறுதியுடன் அதனை பிடித்திருக்கும் உலோகத்தின்( பெரும்பாலும் stainless steel எனப்படும் எஃகு) உறுதியினையும் கண்டு உபயோகிக்கவும்.

கண்ணாடி வாங்கும் அ்அல்லது செய்யுமிடத்தின் நம்பகத்தன்மை. ( branded is the best)
ஓரங்கள்நன்றாக மழுங்கடிக்கப்பட்டிருக்க வேண்டும்(polishing)
இன்ன அளவுக்கு இன்ன தடிமன் உபயோகப்படுத்தலாம் என்ற கணக்குண்டு( thickness for the size
உபயோகப்படுத்தப்படும் எஃகு குழாய்களின் தடிமன், எடை, விட்ட அளவு ( grade of ss, dia of the pipe) போன்றவை முக்கியம். கை வைத்து ஊன்றும்போது உறுதியாக இருக்க வேண்டும். ( no wobbling at all). அடிப்படையில் இவை சரியாக இருந்தாலே போதும் பயப்படத்தேவை இல்லை.

விலை என்று வரும்போது காசுக்கேற்ற தோசைதான் 500ரூ (சதுர அடி) முதல்1500 ரூ ( அதற்கு மேலும்) உண்டு. 1200 ரூ அளவு செலவு செய்தால் நல்ல தரமான வேலையை பார்க்கலாம்.
நீங்கள் கல் விட்டு அடிக்காத மட்டும் நன்றாகவே இருக்கும்.😊நன்றி.

Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com


கேள்வி :...பெண்கள் ஆண்களிடம் கூறக் கூடாது என நீங்கள் எண்ணுவது என்னென்ன?


பதில் ...

ஆண்கள் இயல்பாகவே மனைவி மீது மிகுந்த பொசெசிவ். தன் முன்னாள் காதலன் பற்றி சொல்ல கூடாது அல்லது காதல் வாழ்க்கை பற்றி சொல்ல கூடாது. ஆணுக்கு ஆண் இது வேறு படும்....அப்படி தெரிந்து கூட ரொம்ப மெடூரெட்(Matured) மன சாந்தி மனோ உன்னதம் உள்ள ஆண்கள் அதை சரியான வழியில் எடுத்து கொள்வார்கள். ஆனால்...என்றாவது நினைவில் இருக்கும் ......10 வருஷம் ஆனாலும் ஒரு நாள் சொல்லலாம். ஆகையால் கணவனாக போகும் ஆண்களிடம் மறைத்து விடு, என்றும் சொல்லவில்லை நான் ஏனனில் நடுத்தர வர்க்கத்தில் வளர்ந்த நாம் எப்போதும் சுய கட்டுப்பாடு, அப்பாவின் மானம் மரியாதையோடு தான் மட்டுமே வளர்த்து இருப்போம் ஆகையால் இதை மிக பெரிய விஷயமா வீட்டுக்காரரிடம் சொல்ல தேவை இல்லை.

அவருடைய நண்பர் அல்லது உறவினர் இவரை விட அதிக சம்பளம் வாங்குகிறார்....இப்படி சொல்லவே வேண்டாம். ஆணின் ஹார்மோன் என்னிக்குமே போட்டி சுபாவம் தான் எப்போதும் ...இது அவர்களுக்கு கொடிய வலி, கோபம், விரக்தி கொடுக்கும். அவர்கள் எப்படி நினைப்பார்கள் என்றால் தன் இனம் ஒரு சிங்கம் எல்லை வைத்து இருக்கும். அதன் இணை குழந்தைகள் தன்னை பெரியதாக நினைக்க எதிர் பார்க்கும்....ஆனால் தன் பெண் சிங்கம் அடுத்த எல்லையை பார்த்துவிட்டால் எவ்வளவு அசிங்கம் ?

உங்களுக்கு எவ்வளவு மூளை, அறிவு அதிகம் இருந்தாலும் பெண்களே....கணவனிடம் கொஞ்சமாவது மக்காக நடியுங்கள். அடக்கி வாசியுங்கள். இது மிக மிக முக்கியம். ஆண் தன்னைவிட மிக தீவிர அறிவு உடைய பெண்களை தலைவியாக பார்ப்பார்கள்....மனைவியாக கொஞ்சம் ..கஷ்டமே. அடிப்படை போட்டி ஹோர்மோன் ....மற்றும் இதுவும் ரொம்ப மெடூரெட் மன உணர்வு நிலையில் நல்ல முதிர்ச்சி பெற்ற ஆண் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு

பிறந்த வீட்டிலிருந்து வரும் அழைப்புகள், பிரச்சனைகளை முடிந்த வரையில் கணவன் காதுக்கு எடுத்து செல்ல தேவையே இல்லை! இது அவர்களுக்கு "ஆரம்பிச்சுட்டாங்க பா மியூசிக் ....பிறந்த இடம் பெருமையா ? இன்னும் என்ன வேண்டி இருக்கு....." இது தோன்ற வாய்ப்புகள் மிக அதிகம்....

நம் அப்பா நம்மை தானம் அல்லது தாரை வார்த்து கொடுத்து விட்டார்கள்....அதாவது....தானம் சென்ற மாடு, முதல் வேலை எஜமானை தான் பார்க்கணும்.....இது கஷ்டம் தான்! ஆனால் இந்த ஒண்ணு புரிந்தால் பல பல பிரச்சனை வராது..

ஆண்கள் 5 வயதில் அம்மாவை இழந்திருந்தால் கூட...இல்லை 70 வயது வரை அம்மா கூட இருந்தாலும்....எந்த நிலையிலும் அவர்கள் அம்மா மீது தீவிர அன்பு, பக்தி, தியானம் எல்லாம் உள்ளவர்கள். உங்களுக்காக அம்மா பத்தி தப்பு சொன்னால் கூட கொஞ்சம் கேட்டுக்கலாம்...."சரி பாவம் புதுசு பழகட்டும் / இல்லை விதி / இல்லை எதுக்கு சண்டை " ஆனால் மிக பெரிய உண்மைகளில் ஒன்று அவர்கள் அம்மாவே அவர்களுக்கு முதல் தெய்வம்! இந்த பந்தத்தை மட்டும் புரிந்து கொண்டால்...."நான் பெருசா அம்மா பெருசா? டவுட் வரவே வராது பெண்களுக்கு....!!"

நமக்கு நம் அப்பா பிடிக்குது இல்ல? பிராய்டு ஜுங் எல்லா உளவியல் மேதை சொன்னதையும் ஓட்டி பாப்போம்....ஆண்களுக்கு தாய் மிக முக்கியம்...

ஓர் ஆண் வீட்டுக்கு வந்த உடனும் அல்லது வெளியில் செல்வதுக்கு முன், உங்கள் குற்றம் குறையை கம்பிளைன்ட் இதனை அந்த அரை மணி நேரம் தயவு செய்து அடுக்காதீங்க....

"ஏன் டா வரோம் ...இந்த எண்ணமே....அவர்களுக்கு இன்னொருத்தியை தேட தூண்டும்!!!"

அளவுக்கு மீறின கோபம் / பொறாமை / எரிச்சல் / தனதாக்கி கொண்டு உரிமை (போஸ்சஸிவ்) இப்படி கசக்காதீங்கள் அது காதலனோ கணவனோ....கொஞ்சம் வருஷம் வேணா உண்மையா இருப்பாரு....ஆனால் தொடர்ந்தால் அவர்கள் இன்னொருத்தி அல்லது பிரிவினைக்கு போய்டுவாங்க இல்லையா? மது ...போன்ற அனைத்து அடிக்ஷன் தேடி போக வாய்ப்பு மிக மிக அதிகம். பெண் அதாவது மனைவி அல்லது காதலி தான் அவங்க உலகம் என்று இல்லை....அவர்கள் உலகத்தில் நிச்சயம் பெரிய இடம் உண்டு ஆனால் அவர்கள் உலகமும் மிக பெரிது....அந்த space கொடுக்க வேண்டும்

பொதுவாக ஆண் கோபமாக இருக்கும் நேரத்தில் "ஏங்க ஏன் கோபம் ..." இதுவா ? அதுவா? இதுவா?இப்படியே நச்சரித்தால் கோபம் 108 டிகிரியை தாண்டும்!" பொளிச்சுனு அரை விடுவாங்க....இல்லேன்னா தன்னையே காயப்படுத்திப்பாங்க.....கோபமாக மூட் அவுட் இருந்தால்.....தானாக சொல்லும் வரை நச்சரிக்க வேண்டாம்....இது மிக பெரிய ஆண்கள் பற்றிய உளவியல் விஷயம்.....அல்லது சொல்லவே இல்லையா? விட்டு விடுங்கள்....


கேள்வி :..மனைவிக்கும் வாழ்க்கைத்துணைக்கும் என்ன வித்தியாசம்?


பதில் ......

மனைவிக்கும் வாழ்க்கைத்துணைக்கும் என்ன வித்தியாசம்?

சும்மா இருந்த என்னை சுண்டி வம்புக்கு இழுத்துவிட்டீர்களே ….!


ஒரு சிறிய வாழ்க்கை அனுபவம்….

2004 என்று நினைக்கிறேன்…என் அலுவலகத்தில் ஒரு நிர்வாக பெண் இருந்தார்..Safia Nur என்று பெயர்.

மலையாள  இனத்தவராக இருந்தாலும் , நாகரீகத்தின் பிரதிபலிப்பு அவர்..

இளமையின் துடிப்பு, அழகு, கசிந்தோடும் பெண்மை , உடை செய்யும் நேர்த்தி , பணிகள் செய்வதில் உள்ள திறமை..

அவள் வேலையை ராஜினாமா பண்ணிவிட்டதாக அலுவலக வம்பிகள் செய்தி சொன்னன .

ஒரு நாள் பேச்சுவாக்கில் தனக்கு ஒரு பஞ்சாபில்  ஆண் நண்பன் இருப்பதாகவும் , அவனுடன் இணைந்து வாழ எண்ணம் கொண்டுள்ளதாகவும் சொன்னார்.

நான்: " அவர் propose செய்துவிட்டாரா ..?

Safia :இல்லை..அதை பற்றி நான் கவலைப்படுவதில்லை..

நான் :அதெப்படி..நீ இளமையான அழகான பெண் ..உன்னுடன் சில காலம் வாழ்ந்துவிட்டு பின்னர் சென்றுவிட்டால் ..?

Safia :திருமணம் ஆனாலும் ஒரு ஆண் விட்டுவிட்டு போக முடியும் ..தெரியாதா..?

Safia :அன்பு என்பது பறவையை கூட்டுக்குள் அடைப்பது அல்ல …சுதந்திரமாக பறந்து போக விடவேண்டும்..உண்மையென்றால் அது எப்போதும் திரும்பி வரும்..

நான்: வராவிட்டால்..?

Safia : ஒரு சுவையான வாழ்க்கை அனுபவமாக எடுத்துக்கொள்வேன்…!

அந்த உரையாடலுக்கு அப்புறம் நான் கவலையில் மூழ்கிவிட்டேன் ..

Safia : என் அப்பா கூட இப்படி யோசிக்கவில்லை..

சிரித்துக்கொண்டே சென்றுவிட்டாள்…அன்றுதான் அவளது கடைசி நாள்..

என்னை யாரோ சாட்டையால் அடித்ததுமாதிரி ஒரு வேதனை…

எப்படி இந்த சிறிய வயதில் இவ்வளவு புரிதல் சாத்தியமாகிறது..?

நான் இத்தனை வருடங்கள் ஊர் எங்கும் (அலுவுலக பணி)  சுற்றியது வீணா ..? அன்பை பற்றியும், உறவுகளை பற்றியும் ஒன்றுமே தெரிந்துகொள்ளாமல் கட்டிடங்களை பார்த்துவிட்டு வெறும் ஜடமாக சுற்றிவந்தேனா ..?

நாம் அன்பென்பதை புரிந்துகொள்ளாமல் , சடங்குகளையும், தாலி சரடையும் , அச்சடித்த சான்றிதழ்களையும் நிலைத்த ஆதாரம் என்று நம்பிக்கொண்டிருக்கிறோமே..

எப்படி மற்ற உயிரினங்கள் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் ஆழமான பந்தத்தில் பிணைந்துள்ளன ..?

பெண் என்பவள் முதலில் ஒரு சிறந்த வாழ்க்கை துணையாக அல்லவா இருக்கவேண்டும்..இந்த புரிதலும், வாழ்தலும் அல்லவோ அவளுக்கு அந்த உயர்ந்த பந்தத்தையும் , மனைவி என்ற அந்தஸ்தையும் கொடுக்கிறது..?



ஆனால் என் உடலின் ஒவ்வொரு அணுவும் என் மனைவியின் பெயரைத்தான் எப்பொழுதும் சொல்லிக்கொண்டிருக்கின்றன …

நான் பேச நினைப்பதெல்லாம் அவள் இன்றும் பேசிக்கொண்டிருக்கின்றாள் …

மனைவிக்கும் , வாழ்க்கை துணைக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை..இரண்டும் பிரிக்கமுடியாமல் ஒன்றில் ஒன்றானவை …

நன்றியுடன்....

கேள்வி :..வீட்டிலிருந்து பணி செய்வதால் ஏற்படும் சிரமங்கள் என்னென்ன?

பதில் ...

ஆஃபீஸ் இருந்து வேலை செய்வது என்றால் ஒரே ஒரு பாஸ்….ஏகப்பட்ட வேலை பார்ப்பவர்களுக்கு.

வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கு(ம்) ஒரே ஒரு பாஸ் தான்…..ஆனாலும் நீங்கள் ஒருவர் தான் ஏகப்பட்ட வேலைகளை (சத்தியமா நான் ஆஃபீஸ் வேலையை சொல்லவே இல்லை) பார்க்க வேண்டும்.

ஆஃபீஸ் இல் வேலை புரியவில்லை என்றால் மேலிடத்தில் கேட்கலாம்.

வீட்டில் அப்படி எல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது.

ஆஃபீஸ் இல் வேளா வேளைக்கு தேநீர், காஃபி, மதிய உணவு….யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

வீட்டில் அப்படியே நேர் மாறாகத் தான்….அதிகாரப்பூர்வமாக எல்லாம் கேட்டுப் பெற முடியாது.

ஆஃபீஸ் இல் வண்ணமயமான பேர்களுக்கு நடுவில் ஆனந்தமாக வேலை பார்க்கலாம்.

வீட்டில் பழங்கால தொலைக்காட்சி தான் (கறுப்பு/வெள்ளை🤣😂🤣).

ஆஃபீஸ் இல் வேலை பார்க்கும்போது, வீட்டில் இருந்து கொண்டு வந்த சாப்பாடு பிடிக்கவில்லை என்றால் எக்ஸ்சேன்ஜ் ஆஃபர் அல்லது வெளி சாப்பாடு…ஆல் ஓன் முடிவு 😊.

வீட்டில் கப்சிப் கபர்தார் தான்….எப்படி இருந்தாலும், "ஆஹா,ஓஹோ" ன்னு புகழ்ந்து ஆக வேண்டிய கட்டாயம்……இல்லாவிட்டால், மூன்றாவது உலகப்போருக்கு நீங்கள் தயாராக வேண்டியதிருக்கும்.

இப்படி எவ்வளவோ +/- சொல்லிக்கொண்டே போகலாம்….முடிவே இருக்காது.

வாழ்க வளமுடன் 🙏😊👍.

பின் குறிப்பு: என் மேல் அளவில்லாமல் பாசத்துடன் இருக்கும் சொந்தங்களே ,நண்பர்களே …..வாய் விட்டு சிரித்தால், நோய் விட்டு போகும் அப்படின்னு கேள்விப்பட்ட அனுபவத்துல ஏதோ கொஞ்சம் அதிகமாக சொல்லி டேன் நினைக்கிறேன்…..தயவு செய்து எங்கள் வீட்டுக்காரம்மா காதுல போட்டுடாதீங்க…..உங்கள் பாதங்களைத் தொட்டு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 🙏😊👍

புதன், 1 ஏப்ரல், 2020

இப்போது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது...

பெற்றோர்கள், கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள், ஆட்சியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது...

குழந்தைகள் வளர்ப்பில் நாம் தான் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் இருக்கிறது...

முதலில், பிள்ளைகளுக்கு நல்ல சிந்தனைகளை ஏற்படுத்துங்கள்!...

ஒரு குழந்தையைவிட நாம் உயர்ந்தவர் என்று நினைக்காதீர்கள்….

01. பிள்ளைகள் எதாவது செய்தால் எப்போதும் குறை கூறுதல், அவர்கள் பாராட்டும்படி செய்தாலும் கண்டு கொள்ளாதிருத்தல் போன்ற செயல்களை பலர் செய்கிறார்கள் இதனால் பிள்ளைகளின் மன வளர்ச்சி குன்றும்.

02. எந்தக் குழந்தையும் பின்னால் எப்படி ஆகுமென எவருமே கூற முடியாது. மூடன், அறிவாளியாகலாம்... பைத்தியம், தெளிந்த சித்தமுடையவனாகலாம்... ஆகவே பிள்ளைகளை ஒருகாலமும் தப்பாக மட்டும்கட்டி அலட்சியம் செய்யக் கூடாது.

03. தாமஸ் ஆல்வா எடிசனை மரமண்டை என்று பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டவர் பின்னாளில் ஆயிரம் கண்டு பிடிப்புக்களுக்கு அவரே அதிபதி.

04. லூயி பாஸ்டியர் சராசரி மாணவனாக பாடசாலையில் இருந்தவர் பின்னாளில் நோபல் பரிசு வாங்கினார்.

05. ஆல்பிரட் ஐன்ஸ்டைனை, அவர் ஆசிரியர், "இவனை போன்ற மூளை அழுகிய மாணவனை நான் பார்த்ததே இல்லை" என்றார் அவர் ஆசிரியர் ஆனால் அவரே 20 ம் நூற்றாண்டின் அதி சிறந்த விஞ்ஞானியானார்.

06. குழந்தைகளுடன் ஒரு நாளில் சிறிது நேரமாவது பேசுங்கள், நல்லதைப் பேசுங்கள் கனிவுடன் பேசுங்கள். அவர்கள் குறைகளைப் பற்றி அதிக நேரம் பேசாதீர்கள் நிறைகளை பற்றிப் பேசுங்கள்.

07. பிள்ளைகளுடன் யாரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள், அவன் அவனே.. நீங்கள் நீங்களே.. நீங்களே முன்னுதாரணமாக இருங்கள். உங்களைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

08. வாழ்வில் வெற்றிபெற்றவரைப்பற்றி பேசுங்கள், ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களைப்பற்றி பேசுங்கள்.

09. எப்படி இருக்கக் கூடாது என்று ஒப்பிட்டு பேசுவதைவிட எப்படி இருக்க வேண்டுமென ஒரு முன்னுதாரண மனிதரைப்பற்றிப் பேசுங்கள்.

10. பிள்ளைகளுக்கு வீட்டுக்குள் விலங்கிடாதீர்கள் வீடு ஒரு சிறைச்சாலைக் கூடமல்ல மனிதர்களை தோற்றுவிக்கும் கோயில்.

11. நல்ல மேற்கோள்களை கொடுங்கள், சுதந்திரம் கொடுத்து, கட்டாயப்படுத்தி வழிக்குக் கொண்டு வாருங்கள்.

12. மலர் தூவியுள்ள பாதையைப்பற்றி பிள்ளைகளுக்கு சொன்னால் அவர்கள் முள் நிறைந்த பாதையை புரிந்து கொள்வார்கள்.

13. உழைப்பைப்பற்றி சொல்லிக் கொடுங்கள் அவர்கள் உழைப்பில்லாத கேடுகளை புரிந்துகொள்வார்கள்.

14. வெற்றி பெற்றவர்களை சொல்லும்போது தோல்வியின் காரணங்களை அவன் அறிந்து கொள்வான்.

15. சுறு சுறுப்பை சொல்லிக் கொடுத்தால் அவன் சோம்பலை அடையாளம் காண்பான், விதியை வென்றவர்களை சொல்லும்போது அவன் வேதனையில் நொந்து அழிந்தவர்களை கண்டு கொள்வான் – இது போதும்...

முதலில் நாம் மாற வேண்டும்.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு...

மாற்றம் ஒன்றே மாறாதது...

நல்ல மாற்றம் தான் வளர்ச்சியை தரும்.👍🌱🌳🌳✍️✍️✍️
போராட்ட குணம் .....

ஒரு சில பெண்களை பார்க்கும்போது எப்படி இவர்களால் அசாத்திய தைரியத்துடனும்,துணிச்சலுடனும் செயல்படமுடிகிறது என்று  மிகவும் ஆச்சர்யமாக இருக்கும்..

இவர்களைப்போன்று நம்மால் ஏன் துணிச்சலான முடிவினை எடுக்கமுடியவில்லை..

சிறு சிறு ஏமாற்றங்களைக் கூட ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்...இவர்களுக்கு இருக்கும் தைரியமும் துணிச்சலும் நமக்கு ஏன் ஏற்படுவதில்லை என சிந்திக்க தூண்டுகிறது அவர்களின் செயல்கள். அவர்களுடன் நெருங்கிப்பழகுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்போது தான் உண்மை நிலையினை அறிய முடிகிறது...


”உண்மையில் அவர்களின் இந்த தைரியத்திற்கும், துணிச்சலிற்கும் காரணம் அவர்களின் ஏமாற்றமே.....ஏமாற்றங்களையும், துரோகங்களையும் சந்தித்து, சந்தித்து அழுது,புலம்பி அதன் பிறகே “எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை அடைகிறார்கள்..”எதையும் தாங்கும் இதயமாக அவர்களை வலுப்படுத்திக் கொள்கிறார்கள்

போராட்டக்குணமுடைய  பெண்களுக்கு  மட்டுமல்ல

அன்றாடவாழ்வில் பலபெண்கள் இவ்வாறுதான் இருக்கிறார்கள்

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681...