வியாழன், 19 மார்ச், 2020

Whats App/Telegram/Tik Tok/Instagram/LinkedIn செயலிகள் குறித்து?

தொழில் சமூகத்திற்கு மிகப் பெரிய வரப்பிரசாதம். உலகத்தின் மறுமுனையுடன் பேச, பரிமாற, தொழில் வளர்க்க முழுமையாக உதவுகின்றது. குறைவான உரையாடலில் நிறைவான லாபத்தைத் தந்து கொண்டிருக்கிறது. தமிழர்களுக்குப் போலிச் செய்திகளைப் பரப்ப உதவுகின்றது. வாசிக்கவே தேவையில்லை என்ற புதிய கலாச்சாரத்தையும் அறிமுகம் செய்துள்ளது.

Telegram அற்புதமான பாதுகாப்பான செயலி.  மேற்படிப்பு படிப்பவர்கள், யூபிஎஸ்சி தேர்வு எழுதுபவர்கள், இலவசமாக மின் புத்தகங்கள் தேவைப்படுபவர்களுக்கு உதவக்கூடிய செயலி. திரைப்படங்களை இலவசமாக இதில் பார்க்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது.

Tik Tok எனக்கு இதில் கணக்கு இல்லை. விருப்பம் இல்லை. மகனுடன்  படிக்கும் சக தோழர்கள் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கணக்கு வைத்துள்ளார்கள். ஆண்களை விட நடுத்தரக் குடும்பத்து இளைஞிகள் இதில் காட்டும் ஆர்வமும் அவர்களின் திறமையும் என்னை வியக்க வைக்கின்றது.

Instagram தொடக்கத்தில் இதனைப் பயன்படுத்தினேன். கணக்கு உள்ளது. ஆனால் விருப்பமில்லை.  தன்னை, தன் பொருட்களை விளம்பரப்படுத்திக் கொள்ள விரும்புகின்றவர்களுக்கு பிடித்தமான தளம்.

Linkedin கணக்கு உள்ளது. விருப்பத்துடன் செயல்பட்டேன்.  பெரிய நிறுவனங்கள் தங்களின் கௌரவமாகக் கருதுகின்றார்கள். அதிர்ஷ்டம் கட்டாயம் தேவை. நபர்கள் அறிமுகமாக, வாய்ப்புகள் நம்மிடம் தேடிவரப் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.  தொழில்நுட்ப அறிவு நன்றாகத் தெரிந்து இருந்தால் இது முக்கியமான தளம். தொடர்புகளை உருவாக்க முடியும்.


பள்ளி, கல்லூரி இளைய சமுதாயம் எவ்விதச் செயலிகளை விரும்புகின்றார்கள்.

Share chart/Hello App/Instagram

நீங்கள் பயப்படுவது யாரைப் பார்த்து?

பார்வோர்டு செய்திகளைச் சலிக்காமல் படிக்காமல் அனுப்பிக் கொண்டிருக்கும் நபர்களைப் பார்த்து தினமும் பயந்து சாகின்றேன். மெல்லவும் முடியவில்லை. ஒரு ஆடிட்டர் பதவியில் இருந்தவரிடம் இப்படிச் செய்யக்கூடாது என்று மெதுவாக மென்மையாக அழைத்துச் சொன்ன போது காச் மூச் என்று கத்தி தீர்த்துவிட்டார்.  "நான் எந்த அளவுக்கு உங்களுக்குச் சேவை செய்கின்றேன். உங்களுக்குப் புரியவில்லை" என்று அரைமணி நேரம் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார்.

தொலைக்காட்சி குறித்து உங்கள் கருத்தென்ன?

என் அம்மாவின் வயது 73.... அவரை இன்னமும் ஆரோக்கியமாக வைத்திருப்பது தொலைக்காட்சியில் வரும் நெடுந்தொடர்கள்,,நான் பார்க்கும் செய்திகள் நாட்டு நடப்புகள் மோடி முதல் ஸ்டாலின் ..எடப்பாடி ..கொரென முடிய தெரிந்து வைத்து இருக்கிறார்கள் ... தம்பி மகன், "ஏன்டா அப்பத்தாவிடம் பேச மாட்டுறீங்க?" என்று கேட்ட போது "அவங்க பேசுறது புரியவில்லை" என்றார்கள்.  சிந்தனைகள் முன்னும் பின்னும் மாறி பேச்சுக்கள் குளறி குழந்தைத்தன்மையாக மாறியுள்ளதை உணர்ந்து கொண்டேன். ஆனாலும் தொலைக்காட்சி அவரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

"நீங்கள் எல்லாம் அடிமுட்டாள்கள்". "எங்கள் அடிமைகள்". "உங்கள் நேரத்தை, பணத்தை எங்களால் தைரியமாகத் திருட முடியும்" என்று இன்றைய வாழ்க்கையில் நம்மிடம் மறைமுகமாக, நேரிடையாகவே சொல்பவர்கள் தொலைக்காட்சி சேனல்களை நடத்துபவர்கள், நிகழ்ச்சி தயாரிப்பவர்கள். 



















ஏன் எழுதுகிறேன்?

கணினி முன்னால் அமர்ந்திருக்க வேண்டிய பணியின் காரணமாகவும், தமிழ் தட்டெழுத்து நல்ல பயிற்சி இருப்பதாலும். 

எழுதும் காரணம்?

சமூக வலைதளங்களில், அன்றாடம் வாசிக்கும் செய்தித்தாளில், வார இதழ்களில் கிடைக்கும் செய்திகள் மூலம் ஏதோவொன்று உத்வேகத்தை உருவாக்கும்.  ஒரு வார்த்தை அல்லது வாசகம் கிடைக்கும். எண்ணங்கள் சிந்தனையில் தத்தளிக்கும். முழுமையாக எழுதி விட முடிகின்றது..

எழுதாமல் இருந்தால்?

ஒன்றும் ஆகாது. பொழுது வெட்டியாய் நகரும். வாசித்த, பார்த்த விசயங்கள் எனக்குள்ளே இருக்கும். மன உளைச்சல் உருவாகும். எழுதுவதால் இரவில் படுத்த சில நிமிடங்களில் தூங்கிவிட முடிகின்றது





எழுதுவதால் என்ன பலன்?


ஆங்கிலத்தில் Passion என்ற வார்த்தைக்கு வேட்கை, ஆர்வம், உள்ளார்ந்த ஈடுபாடு, கட்டுக்கடங்கா உணர்ச்சி என்று எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும். குடும்பம், தொழில் இவை இரண்டு நம் வாழ்வின் ஆதாரம் என்றாலும் நமக்கு விருப்பமானது எது? என்றே தெரியாமல் இந்தியாவில் 90 சதவிகிதம் வாழ்ந்து மறைந்து விடுகின்றார்கள். கூடவே இதன் மூலம் உனக்குப் பணம் கிடைக்குமா? என்பதனையும் தவறாமல் கேட்கின்றார்கள். உங்கள் நரம்புகள் மூளையோடு பின்னிப் பிணைக்கப்பட்டது. மூளை மனதோடு ஒன்றிணைக்கப்பட்டது.

இவையெல்லாம் உங்கள் விருப்பங்களோடு தொடர்புடையது. மகள் மகன் விருப்பம், மனைவி விருப்பம், சொந்தங்கள் விருப்பங்கள் எதுவும் உங்கள் ஆழ்மனம் வரைக்கும் செல்லாது. கடமை என்கிற ரீதியில் உங்களை இயங்க வைக்கும். விருப்பம் இருந்தும் ஈடுபட முடியாமல் ஏக்கமாக இருக்கும் ஒவ்வொரு ஆர்வமும் உங்களின் கடைசிக்காலத்தில் கழிவிரக்கமாக மாறும். ஆரோக்கியத்தைப் பாதிப்படையச் செய்யும். மற்றவர்கள் மேல் பொறாமை கொள்ளச் செய்யும்.  பொம்மை செய்வது கூட ஒரு ஆர்வம் தான்.

உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் "பணம் தேடும் பறவையாக" இருப்பது தவறில்லை. "கடமைகளைக் காக்கும் கண்ணியவானாக" வாழ்வதும் குற்றமில்லை. உங்களுக்கான ஆழ்மன விருப்பங்களையும் அவ்வப்போது நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.  Passion பணத்தோடு தொடர்புடையது அல்ல. மனத்தோடு தொடர்புடையது. இப்போது "பகவான் கொரானா" வேறு அருள் புரிந்து கொண்டிருக்கின்றார். நாளை என்ன நடக்கும்? என்று தெரியாது அல்லவா?


"லைக் அரசியல்" என்றால் என்ன?

தமிழகத்தில் தனி மனித துதி முன்னெடுத்த கட்சி உருவாக்கிய பாணி இன்று ஃபேஸ்புக் வந்து வரைக்கும் நிற்கின்றது. ட்விட்டரில் உச்சமாய் நிற்கிறது. இணையம் வேறு. எதார்த்தக் களம் வேறு. உணர்ந்து கொண்டவர்கள் மனச் சோர்வு அடைய மாட்டார்கள். எதிர்மறைகளை மட்டுமே வைத்து வளர்ந்தவர்கள் இன்று வரையிலும் அதனைக் கொள்கையாகவே கடைப்பிடித்து வருவது வியப்பல்ல. கொடூரமானவர்களின் கொள்கைகளை உள்வாங்கிக் கொண்டு உழுது மனதிற்குள் புதைத்து மூடிவிட்டு முன்னேற வேண்டும். எழுதுபவர்களின் பெயர், அவர் ஆதரிக்கும் கொள்கை பொறுத்து இங்கு ஒவ்வொன்றும் விருப்பக்குறியீடு (லைக்) ஆக மாறுகின்றது. இதில் பலரும் சோர்ந்து விடுகின்றார்கள். வலைபதிவில் விமர்சனங்கள் வருவதில்லை என்று எழுதுவதை நிறுத்துவதைப் போல. வாழ்க்கையில் மட்டுமல்ல. எதிர்ப்புகளை, ஏளனங்களை, அவமானங்களை  அடித்து நொறுக்கி முன்னேற கற்றுக் கொண்டால் மட்டுமே நீங்கள்  விரும்பும் பயணத்தின் எல்லையைத் தொட முடியும்.

ஃபேஸ்புக் குறித்து உங்கள் கருத்தென்ன?

90 சதவிகிதம் அலைபேசியில் தான் வாசிக்கின்றார்கள். பார்க்கின்றார்கள். அலைபேசி வாசிக்க உகந்த கருவி அல்ல. ஆழமான விசயங்களைப் பொறுமையாக வாசித்து உள்வாங்கவும் முடியாது. எண்ணம் மாறும். வேறுபக்கம் நம்மை நகர்த்திவிடும். முழுமையாக வாசிக்கக்கூடியவர்கள் குறைவாகவே இருக்கின்றார்கள். தடவிக் கொண்டே செல்பவர்கள் அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர். அடுத்தவர்களைக் கவனிப்பவர்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர். "டோலி உங்கள் பதிவு சூப்பர்" என்று ஜொள்ளு விட்டு நூல் விடக் காத்திருப்பவர்கள் மிக மிக அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர். "டோலர் நாம் சமூகத்தைப் புரட்டிப் போட்டே ஆக வேண்டும்" இணையத்தில் கொள்கை பேசும் கூட்டமும் அதிகமாகவே உள்ளது. இவன் எப்போது சிக்குவான்? என்று எண்ணம் கொண்டவர்கள் மிக மிக மிக அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர். இவன் நம் கட்சிக்கு எதிரானவன் என்று கட்டம் கட்டும் உளுத்துப் போன பருப்புகளும் அதிகமாக ஆதிக்கம் செலுத்துகின்றனர்


எழுதியவற்றைச் சந்தைப்படுத்துவது எப்படி?

வலையில் எழுதியவற்றை இலவச மின்னூல்கள் வழங்கும் தளங்களின் வாயிலாக, அமேசான் மூலம், பிடிஎப் கோப்பாக மாற்றி Telegram App மூலம் இலவசச் சேவை செய்து கொண்டிருக்கும் தன்னலமற்ற தொண்டர்கள் மூலமாக என்று பலவகையில் எழுத்து பலருக்கும் சென்று சேர்ந்து விடுகின்றது. எழுதிய 75 சதவிகிதம் கோப்பாக மாற்றப்பட்டுள்ளது.

எழுதுவதன் மூலம் வருமானம் உண்டா?

அமேசான் மூலம் 100 நாளைக்கு ஒரு முறை ரூபாய் 300 வருகின்றது. அது சேமிப்பு வங்கிக் கணக்குக்கு "குறைந்தபட்ச கையிருப்பு" என்ற மத்திய அரசின் புனிதக் கொள்கைக்கு என்னைப் பலியாகாமல் தடுத்து வைத்துள்ளது. அண்டார்ட்டிகா கண்டம் தவிர்த்து உலகம் முழுக்க வாழும் தமிழர்கள் எனக்களிக்கும் 300 கோடி போலவே எனக்குத் தெரிகின்றது



ஞாயிறு, 15 மார்ச், 2020

இன்றைய ஞாயிறு ....


இன்றைய ஞாயிறு  உடுமலையில் அருமையான சந்திப்பு ...பொய்கைப்பட்டி அரண்மனை மாப்பிள குமாரராஜா -பாக்கியலட்சுமி ...சொந்தங்களை சந்தித்தது  .அதுவும் உப்பிலியனூர் சொந்தங்களுடன் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி .நமது கம்பள விருட்சம் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் ..உடுமலையில் நம்ம கார்த்தி மாப்பிள்ளையுடன் ..அறக்கட்டளையின் வளர்ச்சிக்கும் ..தனது பங்களிப்புகளை பகிர்ந்து கொண்டுள்ளார்கள் ....வரப்போகும் வரலாற்று தகவல்களுடன் கலந்துரையாடியது மிக்க மகிழ்ச்சி ..பயணங்கள் தொடரும் ..

கம்பள விருட்சம் அறக்கட்டளை குழுமம் கொற்கை

உடுமலைப்பேட்டை ...
9944066681...



சனி, 14 மார்ச், 2020

எல்லா நேரமும் சந்தர்ப்பங்கள் அழகிய பூங்கொத்தாக நம் முன் நிற்காது. அப்படி எதிர் பார்த்திருக்கும் போது ஒரு பூந்தோட்டமே உங்கள் முன் இருந்தாலும் உங்களால் இனங்காண முடியாமல் நல்ல சந்தர்ப்பங்கள் பிடிபடாமல் உங்கள் கண் முன்னாலே உங்கள் கை நழுவி சென்று விடக் கூடும்.

இந்த படிப்பு தான் வேண்டும், இந்த வேலை தான் வேண்டும் என தன் இலக்கில் உறுதியாக இருத்தல் தவறில்லை தான். ஆனால் எந்த வேலையும் ஒரு தொடக்கம் தானே தவிர அதுவே முடிவல்ல. நெருகலான ஒரு குறுக்கு சந்தும் பிரதான சாலைக்கான சுலபமான வழியாக இருக்கலாம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள். சின்ன வேலையும் பெரிய சாதனைக்கான குறுக்கு சந்தாக பல நேரம் அமையும்.

இந்த வேலை தான் வேண்டும் என வந்த வேலைகளையெல்லாம விட்டு விட்டு வெறுமனே காத்திட்டிருக்கிற நிமிடங்கள் உங்களை பின்னோக்கி மட்டுமல்ல இந்த உலகமே உங்களை விட்டு விட்டு முன்னோக்கி ஓடிக் கொண்டிருப்பதான ஒரு தாழ்வு உணர்வை, மன அழுத்தத்தை அது உங்களுக்கு ஏற்படுத்தி விடும். அதே நேரம் உங்கள் இலக்கில் பார்வையை வைத்துக் கொண்டு கிடைக்கின்ற வேலையை, நீங்கள் தவிர்க்காமல் இருந்தால் அது உங்களுக்கு ஒரு ‘வார்மிங்-அப்’ பாக, நீங்கள் விரும்பும் வேலைக்கான பயிற்சிக் களமாக, பல அனுபவங்களையும் பக்குவத்தையும் தரக் கூடியதாக அமையும்.

விளையாட்டு வீர்ர்களை பார்த்திருக்கிறீர்களா..? செஸ் விளையாடுபவர்கள் வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவார்கள். கிரிக்கெட் வீர்ர்கள் கராத்தே, ஓட்டம் என தங்கள் துறைக்கு சம்பந்தம் இல்லாத மற்ற பயிற்சிகளை செய்து கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு துறையில் உள்ளவர்களும் அவர்கள் துறை சார்ந்த பயிற்சிகளைத் தாண்டி மற்ற பயிற்சிகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். அது அவர்களுக்கு மாற்று சிந்தனைகளையும், அவர்கள் களத்தில் நின்று ஆடக் கூடிய மனபலத்தையும், உடல் திடத்தையும் கொடுக்கும்.

உடலையும் மனதையும் ஆக்டிவாக வைத்திருக்க கூடிய எந்த முயற்சியும் வீண் போகாது. தான் சாதிக்க வேண்டும், வெற்றி பெற வேண்டும் என துடிப்போடு இயங்குபவனுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் தனக்கான களம் புலப்படும்.

நீங்கள் உண்மையில் ஏதாவது செய்ய நினைத்தால், அதற்கான வழியைக் கண்டு பிடிப்பீர்கள். இல்லையென்றால் எதுவும் செய்யாமல் இருப்பதற்கான காரணங்களைக் கண்டு பிடிப்பீர்கள் .

வெள்ளி, 13 மார்ச், 2020


ஷியாம் சுதிர் சிவகுமார் ....சிகை அலங்காரம்....!(கோவை -வடவள்ளி )
8 வருடங்களுக்கு முன்பு என் மகன்  5 வது வயதில்  என் வீட்டு அருகே (வடவள்ளி ) சிகை அலங்கார நிலையத்திற்கு அழைத்துச் சென்றேன். மகன் தன் வயதையொத்தவர்கள் முடி வைத்திருக்கும் நவீன அமைப்பில் வைக்காமல் சாதாரணமாகவே வைத்திருந்தான்.
சிகை அலங்கார நிலையத்திற்குச் சென்றவுடன், அதன் உரிமையாளர் ஒரு புத்தகத்தைக் கொண்டு வந்து என் கையில் கொடுத்து தாங்கள் விரும்பிய அலங்காரத்தைத் தேர்ந்தெடுத்துச் சொல்லுங்கள் என்றார். என் மகனோ ஏற்கனவே முடி திருத்தும் நாற்காலியில் அமர்ந்து உள்ளான்.  நான் அவனிடம், “நீ பேசாமல் இரு.. நான் அவரிடம் என்ன வடிவில் வெட்ட வேண்டும் என்று சொல்கிறேன்” என்றேன். அவனும் ஆமோதிக்கவே முடி வெட்டுபவரிடம் ஒரு புதிய சிகை அலங்காரத்தைக் காண்பித்து அப்படியே வெட்டச் சொன்னேன்.
என் மகனுக்கு நான் என்ன சொன்னேன் என்றே தெரியாது. சிறிது நேரத்தில் கத்தரிக்குப் பதிலாக முடி வெட்டும் இயந்திரத்தைக் கொண்டு சர் சர் என்று முடியைச் செதுக்கினார்…! என் மகன் என்னைப் பார்த்து…. “அப்பா எப்படிப்பா வெட்டச் சொன்னீர்கள்… என் தலையில் இருந்த முடி எல்லாம் தரைக்கு வந்து விட்டதே” என்று பரிதாபமாகச் சொன்னான். எனக்கோ சிரிப்பை அடக்க இயலவில்லை…!
சிறிது நேரத்தில் அந்த நவீன முடி வெட்டமைப்பில் என் மகன் வெளியே வந்தான். வெளியே வந்தவுடன் என்னிடம்…. “என்னப்பா இந்த மாதிரி ஒரு வடிவில் எனக்கு முடி வெட்ட வைத்து விட்டீர்கள்” என்று கோபமாகவே கேட்டான்…! நான் சொன்னேன்…. “ஏப்பா… நீ எப்பொழுதும் நீ விரும்பிய மாதிரியேதான் முடி அலங்காரம் செய்து கொள்கிறாய்… இந்த முறை மட்டும் அப்பாவிற்குப் பிடித்தது போல வெட்டிக் கொள்ளக் கூடாதா” என்றேன்… உடனே அவன்… “போங்கப்பா… என்னுடைய நண்பன் ஊரில் இது போல முடி வெட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்தவுடன் நண்பனுடைய அப்பா அவனை அடித்து வீட்டிற்குள்ளேயே வராதே என்று விரட்டி விட்டார்.. ஆனால்… ஒரு அப்பாவே இந்த மாதிரி முடி வெட்ட வைத்துக் கூட்டி வருவதை உங்கள் மூலமாகத்தான் பார்க்கிறேன்” என்றான்…!
நான் சொன்னேன்… “எல்லாத் தந்தையும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள்… நான் ஒரு வித்தியாசமான தந்தை” என்றேன்…! வீட்டிற்குள் வந்ததுதான் தாமதம்… உடனே அவன் அலைபேசியில் மூலம் அவனுடைய அம்மாவைவீட்டுக்கு  தொடர்பு கொண்டு….. “அம்மா…. என் தலை முடியை அப்பா அலங்கோலம் செய்து விட்டார்கள்” என்று கூறினான்….! எனக்கோ மகனின் சிகை அலங்காரத்தைப் பார்த்து எல்லையில்லா மகிழ்ச்சி….!
(நமக்குத்தான் சிகை அலங்காரம் செய்ய வழி இல்லாமல் போய் விட்டது… மகனை வைத்தாவது மகிழ்ச்சி அடைவோமே எனும் நப்பாசையும் கூடத்தான்…! அதற்கு அடுத்த முறை முடி வெட்டச் செல்ல என் மகன் என்னை அழைக்கவே இல்லை…! சுதாரித்து விட்டான்…!)

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 
9944066681

வியாழன், 12 மார்ச், 2020

நீங்கள் படித்த சிறந்த தமிழ் புத்தகத்தை பற்றி இங்கு மதிப்புரை அளிக்க முடியுமா?

Sivakumar Kumar....

ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஆஹ் சொல்றேன்

தமிழ் புத்தகம் மட்டும் சொல்லிட்டீங்க அதான் குழப்பமா இருந்துச்சு (example :தமிழ் புத்தகம் நெறைய இருக்கு நாவல் ,வரலாறு , சுய சரிதம் ,மொழிபெயர்பு …)

நான் இப்போ recent ah படிச்ச எல்லாம் மொழி பெயர்ப்பு நூல்கள்

1.ஒற்றை வைகோல் புரட்சி -மசானபு (இயற்கை முறையில் விவசாயம் பண்ண விரும்புகிறவர் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல் ) இயற்கையை மாற்றாமல் சமநிலையோடுயோடு விவசாயம் செய்வதை மிக நேர்த்தியாக கூறி உள்ளார்

2. கண்ணதாசன் -வன வாசம் (மனித வாழ்க்கை இவ்வளவு தான் என உணர வைக்கும் )

3.பணக்கார தந்தை ஏழை தந்தை -ராபர்ட்கியோஸ்கி முன்னேற விரும்பும் அனைவரும் படிக்கலாம் )

4.ரகசியம் -rhonda byrne( இந்த புக் படிச்சா ஒரு விதமாக positive எனர்ஜி இருக்கும் )

5அகிலனின் சித்திரப்பாவை( அழகான நாவல் )

நான் இப்போது படித்த சில புத்தகங்கள் பற்றி மட்டுமே கூறி உள்ளேன் .. எனக்கு சிறந்த புத்தகம் என்று எதுவுமே இல்லை எல்லாமே சிறந்தது தான் துண்டு பேப்பர்ல கூட முக்கியமான அண்ட் சிறந்த விஷயம் இருக்கும் ..இது than என் பார்வையில் நண்பரே !!!

சில ஆங்கில புத்தகங்கள் :

1.Goals by brian tracy

2. study smarter not harder by kevin paul

3.The magic of thinking big by david schwartz



தற்பொழுது  என் வாசிப்பில் ...நாய்க்கர் தெரு ...கடமலைக்குண்டு..
  இரா .தங்கபாண்டியன்  அவர்களின்  ..
1.கதையுதிர் காலம் ...
2.நீயின்றி கடக்கும் நிழல் ...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681..
உடுமலையில் காதணி விழா மகிழ்ச்சியான தினம் ..

இன்று லிங்கமாவூர் பாப்புசாமி -பர்மிளா  குழந்தைச்செல்வம்" சர்மதா  " காதணி விழா மகிழ்ச்சியான தினம் ..


விழாவில் சந்தித்த சொந்தங்கள் நீண்ட வருடங்கள் நேரில் சந்திக்க வேண்டும் என்ற சொந்தம் தேவதானா பட்டி ..முருகன் மல்லயா மாமா அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி ..இவரை என் மாப்பிள பழைய காளாஞ்சிப்பட்டி அக்ரி விஜய் (பொறியாளர் ) மூலம் முதலில் அறிமுகம் ...அடிக்கடி முகநூலில் பார்த்து உரையாடி கொள்வது வழக்கம் .இன்று நேரில் அதுவும் மூன்று பேரும் இந்த நிகழ்வில் சந்தித்துக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி ..இனி மாமாவை தென்கொங்கு பக்கம் குடும்ப நிகழ்வுகளில் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிட்டும் ..நன்றி விஜய் மாப்பிள .

புது காளாஞ்சி பட்டி ..அண்ணன் செல்வராஜ் இன்று சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ..4 வருடங்களுக்கு முன் திருமூர்த்தி மலையில் ..எத்தலப்ப மகாஜன சங்கம் நடத்திய தேவராட்ட போட்டி யில் நடுவராக வந்தபொழுது சந்தித்தது ...இன்று விழாவில் சந்தித்தது மகிழ்ச்சி ..

அண்ணன் பெருமாள்சாமி (-பொறியாளர் தமிழ்நாடு மின்சாரவாரியம்) பேராசிரியர் பத்மா பெருமாள்சாமி  அவர்களையும் சந்தித்து குறைந்த நேரத்தில் உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி ..பணி நாளாக  இருந்ததால் வருட கணக்கு முடியும் வருடம் கடமை வேறு .....மற்ற சொந்தங்களையும் பார்த்து பேசமுடியாத நேரமின்மை ...பிரியா விடைபெற்று வந்தேன் ...மீண்டும் சந்திப்போம் ..அருமையான நிகழ்வில் ..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681


புதன், 11 மார்ச், 2020


காடுகளை வெட்டி ...
நிலவர்களை ஒடுக்கி
முல்லை நிலங்களை
எழில் கொஞ்சும்
மருத நிலங்களாக மாற்றி
நீர் மேலாண்மையில் சிறந்து
கொற்றம் புரிந்து
செங்கோலோச்சிய
எம் முன்னோர்கள்
நற்பயனை
நாங்கள் ..
இன்று ...
அறுவடை செய்கிறோம் ....
விருச்சத்தின் விதைகளாக ....
காணிக்கையாக கரும்பு நல்கிய
நிலவேந்தர் அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி ...!
இடம்:- பெரிய குளம் பாசனப் பகுதி
உடுமலைப்பேட்டை

தேசிய பாா்வையற்றோா் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கல்லூரி மாணவருக்குப் பாராட்டு விருதுநகர் தேசிய பாா்வையற்றோா் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கல்லூரி மாணவருக்குப் பாராட்டு


 பாா்வையற்றோருக்கான தேசிய அளவிலான ஓட்டப்பந்தயத்தில் பதக்கங்களை வென்ற விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கா் கலைக்கல்லூரியைச் சோ்ந்த மாணவா் கே.தினேஷை கல்லூரி பேராசிரியா்கள் பாராட்டினா்.இந்திய கண் பாா்வையற்றோா் கழகம் சாா்பாக தேசிய அளவிலான பாா்வையற்றோருக்கான தடகளப்போட்டிகள் கடந்த சில நாள்களுக்கு முன்னா் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளில் பங்கேற்ற அருப்புக்கோட்டை தேவாங்கா் கலைக்கல்லூரியைச் சோ்ந்த வரலாற்றுத்துறை பாா்வையற்ற மாணவா் கே.தினேஷ், 400 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றாா். மேலும் 200 மீ. மற்றும் 100 மீ. ஓட்டப் பந்தயங்களிலும் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளாா்.


 மாணவா் கே.தினேஷை, கல்லூரி முதல்வா் இசக்கித்துரை, துணை முதல்வா் பாண்டியராஜன், வரலாற்றுத்துறைத் தலைவா் மற்றும் கல்லூரிப் பேராசிரியா்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.



செவ்வாய், 10 மார்ச், 2020


உங்களின் வயது அதிகமாகிவிட்டது என்று அடிக்கடி உங்களுக்கு ஞாபகப்படுத்தும் விஷயங்கள் எவை?

 சிவக்குமார்  குமார் ....

வாழ்க்கை ஓட்டத்தில் நீங்கள் வேகமாக ஓடிக்கொண்டு இருக்கும் போது உங்கள் வயது என்ன என்பது தெரியாது.

என் வாழ்க்கை ஓட்டமும் அப்படித்தான்.

1995 ஆம் ஆண்டு கல்லூரி படிப்பு முடித்தவுடன் உடனே வேளையில் சேர்ந்தேன். அன்று தொடங்கிய இந்த ஓட்டம் 22 ஆண்டுகளாக தொடர்கிறது. இன்று கண்ணாடி முன் நின்று சுய பரிசோதனை செய்தால் நிறய மாற்றங்கள். இப்பொழுது 46 வயது ஆகிறது.

வாருங்கள் எந்த விடயங்கள் என் வயதை காட்டுகிறது என்ன உங்களிடம் பகிர்கிறேன்.

1. கண் கண்ணாடி/ மூக்கு கண்ணாடி

இன்று இந்த கண்ணாடி இல்லாமல் சிறிது நேரம் கூட இருக்க முடியாது.

வயது ஆகிறது என்பதை எனக்கு முதலில் உணர்த்துவது என் கண் பார்வை.


2.தலை முடி உதிர்தல்

நிறய முடி கொட்டி விட்டது. முன் நெற்றி முடி கொட்டி சொட்டை ஆகி விட்டது, என் மனைவி என் மகன்  தான் அதிகம் நகைக்கிரார்கள்.எனக்கு வயது ஆகிறதை சொல்லும் அடுத்த விடயம் என் தலை முடி.

3.நரை முடி

முடி கொட்டுவது ஒரு பக்கம் இருக்கட்டும் . நரை முடி என்ன செய்வது. இதில் எனக்கும் என் மனைவிக்கும் போட்டா போட்டி

நான் கட்டாயம் தலைக்கு கருஞ்சாயம் பூசுவது என்று. இன்று வரை அந்த கொள்கையில் பிடிவாதமாக உள்ளேன்.

தல அஜீத் புண்ணியத்தால் இன்று நரையும் அழகாக மாறி விட்டது.


நரை இறைவன் நம் எந்த கட்டத்தில் இருக்கிறோம் என்பதை நமக்கு உணர்த்தும் வகை என்று எண்ணிக் கொள்கிறேன்.

சரிதானே!!!!!

4. நரை மீசை

தலை முடி நரை பரவாயில்லை , தேங்காய் எண்ணெய் போட்டு வழித்து சீவினால் ஒன்றும் தெரிவதில்லை. ஆனால் இந்த ஆசை ஆசையாய் வைத்த மீசை ஒன்று இரண்டு மூன்று என வெள்ளையன் வர அதை வெட்டி வீழ்த்த இன்று வெள்ளயன் முழுமையாக ஆட்சி செய்கிறான். பல வருடங்கள் கழித்து ஆசையாய் மீசை வைத்தால் மனைவியும் மகனு ம் மற்றும் நண்பர்களும் ரொம்ப வயதானவர் போல் தெரிகிறது என்று சொல்ல மறுபடியும் மீசையை இழக்க வேண்டி இருக்கிறது.

5. பற்கள்

பல் போனால் சொல் போச்சு என்பார்கள் . நல்ல வேலை எந்த பல்லையும் இழக்கவில்லை ..ஒரு கடவாய் பல்லைத்தவிர ..எனது பல் மருத்துவர் நண்பர் வெங்கடேஷ் ம் கூட சொன்னார்கள் ..பல்ல எடுக்கவேண்டாம் ..நன்றக உள்ளது என்று ..ஒரு சிறு சொத்தை மட்டும் தான் ..அடைத்த விடலாம் என்று ..ஒரு பல்லவிட்டால் பரவி விடும் என்று எடுக்க சொல்லவிட்டேன் ..இப்பொழுதும் என்னை திட்டுவார் நண்பர் .

6. மறதி

வயதானால் மறதி வரும் என்பது அறிந்த விடயம் தான் என் மறதி சற்று நகைப்புக்கு உரியது.

தொலைக்காட்சி ரிமோட் பெட்டியில் வைத்து விட்டு அறை முழுதும் தேடுவது.

வலது கையில் அலைபேசி வைத்து கொண்டு தேடுவது.

எடுத்த பொருள் எங்கே வைக்கிறோம் என்று தெரிவதில்லை.

கட்டாயம் இந்த மறதி வயது ஆவதை தெரிவிக்கிறது.

இதில் கணக்கு என்றால் ரொம்ப பயம்.

7. பசியின்மை

முந்தியெல்லாம் பந்தி கட்டி சாப்பாடில் விளையாடிய காலம்.வீட்டு தோசை கறி குழம்பு என்றால் 5 ..6.. தோசை சாப்பிட்டு படிப்படியாக குறைந்து இன்று காலை ரெண்டு தோசை சாப்பிட்டால் மதியம் பசி எடுக்க மறுக்கிறது.

அதுவும் சாப்பாடு  என்றால் ஜீரணம் குறைவு.

இன்று உணவு கட்டுப்பாட்டில் உள்ளேன்.

காலை மற்றும் இரவு உணவு மட்டும் தான் மதியம் உணவு  அல்லது பழங்கள் மட்டுமே.

அப்பறம் இரவு உணவு கட்டாயம் எண்ணை உணவு தவிர்த்து .

8. சிரிக்க மறப்பது

முன்பெல்லாம் நாளெல்லாம் சிரித்து கொண்டிருந்த நான் இன்று அந்த சிரிப்பு குறைந்து விட்டது போல் தெரிகிறது..ஒரே டாம் அந்து ஜெர்ரி கார்ட்டூன் பார்த்து சிரித்த இந்த மனது பல வடிவேல், விவேக் சந்தானம் நகைச்சுவைக்கு சிரிக்க மறுக்கிறது.

இதுவும் வயதின் மூப்பு சொல்லும் காரணம்.

குழப்பம்

முன்பெல்லாம் மனது தெளிந்த நீரோடை போல் தெளிந்து புள்ளிமான் போல் ஓடும் , 2500₹ சம்பளம் வாங்கிய போது இருந்த தெளிவும் குழப்பம் இன்மை இப்பொழுது 25000  சம்பளம் வாங்கினாலும் குழப்பம் அதிகமாகி தெளிவு குறைந்து விட்டது.

கவலை அல்லது நாளை பற்றிய சிந்தனை.

23 ஆண்டுகள் கடுமையாக உழைத்து விட்டேன். அன்பான மனைவி , பாசம் நிறைந்த அன்பு மகன்  இன்று பள்ளி படிப்பு ல்  உள்ளார். இறைவன் அருளால் இந்த இந்து வருடா வன வாசம் பலனாக ஓரளவு சேமிப்பும் உள்ளது. ஆனாலும் நாளை எண்ணி மனம் கவலை அடைகிறது.

மனைவிக்கு ஒரு சொந்த வீடு வாங்கும் ஆசை.

அன்பு மகனை  நன்கு ஒரு பொறியியல்அல்லது அவருக்கு பிடித்த  படிப்பை துறை  பெற வைப்பது,

அக்கா ..தம்பிக்கு முடிந்த அளவு  பொருளுதவி செய்வது, அம்மாவை  கவனித்து கொள்வது,

நிரந்தர வருமானம் பெறுவது.

ஓடிக்கொண்டு இருக்கும் இந்த 23 வருட ஓட்டப் பந்தயம் கொஞ்சம் நிறுத்துவது என குழப்பங்கள் ஏராளம். ஆனால் கடவுள் அருள் மற்றும் என் தாயின் பாதுகாப்பு என்றும் எனை கை விடுவதில்லை.

கோபம் மற்றும் வெறுப்பு

இப்பொழுது கோபம் அதிகம் வருகிறது . முன்பெல்லாம் எவ்வளவு அடி வாங்கினாலும் வலிக்காது இப்பல்லாம் சிறு தவறு என்றாலும கோபம் வருகிறது. உயர் அதிகாரிகள்  சிறிது கோபம் பட்டாலும் வேலை விட்டு ஓடி விட தோன்றுகிறது.

வயதாக வயதாக இப்படி தோன்றுமா

தூக்கமின்மை

முன்பெல்லாம் ஏப்ப படுத்தாலும் உறக்கம் உடனே வரும் இன்று 12மணி இரவு ஆனாலும உறக்கம் வர மறுக்கிறது.

இப்பொழுதெல்லாம் தூக்கம் வருகிறது இல்லையோ கண்ணை மூடினால் திறப்பத

திறப்பது இல்லை. தூக்கம் குறைந்துவிட்டது.

இது புலம்பல் இல்லை உண்மை நாளை நீங்கள் 40 கடக்கும் போது இதுபோலl இல்லாமல் நீங்கள் சுகமாக இருக்க அந்த இறைவனிடம் வேண்டுகிறேன்.

நன்றி வாசித்ததர்க்கு.!!!!!

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

திங்கள், 9 மார்ச், 2020

சிறப்பான நிதி திட்டமிடலுக்கு தேவையான 10 டிப்ஸ் உங்களுக்காக.


மாதம் முழுவதும் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிப்பது பெரிய விஷயமில்லை. சம்பாதித்த பணத்தை பாதுக்காப்பான முறையில் திட்டமிட்டு முதலீடு செய்து வருமானத்தை பெருக்குவதே முக்கியம். இப்பணியில் நிதி திட்டமிடலுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. நிதியை திட்டமிடுவதில் பணத்தை கையாளும் முறை பெரும் பங்கு வகிக்கிறது. இக்காலத்தில் மக்கள் பாதுகாப்பான நிதியை எதிர்காலத்திற்கு திட்டமிடுவது இல்லை.

சிறப்பான நிதி திட்டமிடலுக்கு தேவையான 10 டிப்ஸ் உங்களுக்காக.

முதல் ஸ்டெப்:
நிதி இலக்குகளை அடைய ஒருவரின் தேவையை அறிய வேண்டும், அதன்பின் புத்திசாலித்தனமான நிதி, செலவு மற்றும் முதலீட்டுத் திட்டத்தைத் தீட்ட வேண்டும். முதலீட்டு துறையில் சில காரணிகள் உள்ளன அதை நம்மால் கையாள முடியாது, இருப்பினும் அதை கட்டுப்படுத்தும் வழிகளை கண்டறிய இயலும்.

நிதி இலக்கு:
நாம் எதை நோக்கிச் செல்கிறோம் என்று தெரியாமல் இருந்தால் இலக்கை அடைவது எப்படி, வாழ்க்கை எந்த பாதை இட்டுச் செல்லவிருக்கிறது? ஒரு குறிப்பிட்ட நிதி இலக்கை அமைப்பது முதல் படியாகும்.

சிறப்பான நிதித் திட்டம்:
நிதித் திட்டத்தை வரையறுப்பது செலவுகளையும் முதலீடுகளும் கட்டுபடுத்த வழிவகுக்கும். தொகுத்திருக்கும் இலக்கு சாத்தியமானதாகவும் அடையத்தக்கதாக்வும் இருத்தல் வேண்டும். முதலில் நிதியியல் ரீதியாக இலக்கை நிர்ணயிக்கவும், முன்னுரிமைகளை வரிசைப்படுத்தவும்.

காலம் பொன் போன்றது:
பொதுவாக நிதி இலக்குகள் மற்றும் அதனை அடையும் வழிகளை வகுக்கவே பல வருடங்கள் எடுத்துக் கொள்கிறோம். விரைவாக இப்பணியை ஆரம்பிப்பது பெரும் நன்மையைத் தரும். முதலீடுகள் நீண்ட காலமிருப்பின் அதற்கான அதிகமான பலனை அனுபவிக்கலாம்.

பொறுமை அவசியம்:
சந்தை என்றும் நிலையானதல்ல, வேகமாக மாறக்கூடியது. முதலீடுகள் ஆபத்தில் இருப்பதாக தெரியலாம். ஆனால் முதலீட்டில் பொறுமை காத்தலே வெற்றிகரமான முதலீட்டாளர்களின் தாரக மந்திரம்.. நீண்ட கால முதலீட்டில் சந்தை ஊசலின் தாக்கம் குறைவே.

புத்திசாலித்தனமான முதலீடு:
ஒற்றை திட்டத்தில் பணம் முழுவதையும் அர்ப்பணிப்பது பெரிய ஆபத்து. இத்தகைய முதலீட்டில் பணத்தை இலக்கும் ஆபத்து அதிகம். பல்வேறு விதமான பங்குகளில் முதலீடு செய்வது நன்று.

மற்றவர்களை பின்பற்ற வேண்டாம்:
மற்றவர்ளை பின்பற்றும் பழக்கத்தை கைவிடுவது சற்று கடினமே. ஆனால் இப்பழக்கத்தை கைவிடாவிடில் நிதித்திட்டத்தில் வெற்றிக் காண்பது பகல் கனவே. ஒரு திட்டம் நண்பருக்கு வெற்றியை கொடுத்தால் அது நமக்கும் வெற்றி அளிக்கும் என்று பொருள் இல்லை. மற்றவர்கள் செய்வதை பின்பற்றுவதை கைவிடுங்கள். முதலீட்டு உலகத்தில் அறிவார்ந்த அணுகுமுறையை கொள்ளுங்கள்.

விடாமுயற்சி:
நம் கனவை நினைவாக்க பொறுமை எவ்வளவு அவசியமோ, விடாமுயற்சியும் அவ்வளவு அவசியமே. முதலீடுகளில் ஈடுபாட்டுடன் இருப்பது மட்டுமே நிதியை அதிகாரிக்காது. பேராசை மற்றும் ஆபத்து காரணமாக முதலீட்டாளர்கள் வெளியேறி விடுவர். முதலீட்டை சுற்றுகளில் பல்லாண்டுகளுக்கு பெருக வைக்க வேண்டும்.

எதிர்பாரா தருணங்கள்:
துரதிர்ஷ்டம் ஒருவரிடமே தங்கியிருப்பதில்லை, எதிர்பாராத சரிவு எந்த வித முன்னறிவிப்பும் இன்றி இறக்கி விடும். எனவே, இந்த அவசரத் தேவைகளுக்காக குறிப்பிட்ட அளவு பணத்தை வைத்திருப்பது பாதுகாப்பானது மற்றும் புத்திசாலித் தனமானது. அவசரத் தேவைகளுக்காக பணத்தை எப்போதும் எளிதாக எடுக்கத் தகுந்தவாறு பிரித்து வைக்கவும்.

வரிச் சலுகைகள்:
வரிச் சலுகைகளை உங்கள் நிதித் திட்டத்தில் அடக்கிக் கொள்ளுங்கள். வரிக் கொள்கைகளை பொறுத்து மாற்றங்கள் செய்து கொள்ளுங்கள். சிறந்த முறையை கண்டறிந்து அதில் முதலீடுசெய்து அதிகபட்ச வரி நன்மைகளை அடையுங்கள், வரிப் பணத்தை சேமியுங்கள். பல்வேறு காப்பீட்டு திட்டங்கள் அதிக வரி நன்மைகளை கொடுக்க வல்லவை.

ஓய்வூதிய திட்டமிடல்:
ஓய்வூதிய திட்டமிடுதலில் முக்கியமானது வசதியான வாழ்க்கை மற்றும் அதை அடைவதற்கு இன்றைய வாழ்கை முறையில் பணத்தின் தேவை அதிகம். நிதித் திட்டமிடுதலில் ஓய்வூதிய திட்டமிடல் ஒரு முக்கியமான அம்சம் ஆகும் . ஓய்வூதியம் திட்டமிடுதலின் மூலம் குடும்பத்தின் எதிர்காலத்தை புத்திசாலித்தனமாக பாதுகாக்க முடியும். நாம் நீண்ட நாள் வாழ்வது போல நம் பணமும் நீண்ட நாள் வாழ வேண்டும்.

காப்பீட்டுத் திட்டம்:
காப்பீட்டுத் திட்டம் நிதித் திட்டம் மட்டும் அல்லாமல் நம் வாழ்கைக்கு மிகவும் முக்கியமானது. இக்காலகட்டத்தில் எல்லாவற்றிற்கும் காப்பீடு கிடைக்கின்றது. குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது முக்கியமானது. அவ்வாறான முதலீடுகள் அவசர காலத்தில் உதவும்.

Sivakumar.V.K
(Home Loans  ,Home loans NRIs )
Coimbatore,Polalchi,Udamalpet..
Mobile-9944066681..Whatsapp..9944066681

ஞாயிறு, 8 மார்ச், 2020



தாரணி அகில் .....
காலை 9 மணிக்கே உறவினர் இல்ல விழாவுக்கு திருமண மண்டபம் சென்றாகிவிட்டது. திருமண நிகழ்வுகள், சக உறவினர்களுடன் அரட்டை, இடையிடையே சாப்பிட, அருந்த பானங்கள் என ஒரு குறைச்சலும் இல்லை. மதியம் உணவருந்தி விட்டு நிற்கும் வேளையில் கவனித்தேன். விறகு அடுப்பு வைத்து கொஞ்சம் மறைவாக நான்கைந்து வயதான பெண்கள் மண்பானைகளில் ஏதோ கிளறிக் கொண்டிருந்தார்கள். அது ராகி களி என்று தெரிய வந்தது. காலம் காலமாக ராகி களி உருண்டை எனப்து மிகவும் பிரபலம் இங்கே கொங்கு மண்ணில். ஆனால் அதை செய்ய தனியாக ஒரு பி ஹெச் டி படிப்பு படிக்கவேண்டும். நமது பாட்டிகளை இந்த விஷயத்தில் யாரும் அடித்துக் கொள்ளவே முடியாது. அதன் பின் வாழ்ந்து வரும் தலைமுறையினருக்கு இது பற்றித் தெரியுமா என்று கூட தெரியவில்லை..ஆர்வம் மேலிட, நான் அவர்களிடம் சென்று கற்றுக் கொள்ள முற்பட்டேன். ஆனால் அவர்கள் அருகே கூட என்னால் நெருங்க முடியவில்லை. திருமணத்திற்கு வந்த அனைவரும் அந்த களி உருண்டையை விரும்பி உண்டார்கள் என்பது கண்கூடான உண்மை.
சமுதாயத்தில் பிரபலமாக உள்ள பெண்கள் அனைவரும் இன்று மகளிர் தினம் என்று போற்றப்படுகிறார்கள். ஆனால் தள்ளாத வயதிலும் போஷாக்கு நிறைந்த ராகி உருண்டை குணம் மணம் மாறாது தயாரித்து அனைவர் வயிற்றுக்கும் ஆரோக்கியம் சேர்த்த இந்தப் பெண்களுக்கு இது "உலக பெண்கள் தினம்" என்றால் புரியுமா?
பெண்ணை எப்போதும் மகளாக, தாயாக, சகோதரியாக, மனைவியாக மட்டும் பார்த்து அவளுக்கு வாழ்த்து சொல்லும் உலகம் பெண் ஒரு தனிப்பட்ட மனுஷி என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறது. மனிதம் நேசிப்பதால் இது மனித தினம் என்று நான்
முடிவு செய்து, அவர்களிடம் எனக்கு தெரியாத ஒன்றைக் கற்றுக் கொண்டு, சந்தோசமாக அவர்களிடம் இது உங்கள் தினம் என்று மனதளவில் கூறிக் கொண்டு நகர்ந்தேன். வாழ்க இந்த மாமனுஷிகள்!
புனிதம், பெருமை என்ற வார்த்தைகள்

 ஒவ்வொரு காலகட்டத்திலும் சூழலுக்கு ஏற்ப மாறுபடும். தனி மனிதர்களுக்குப் பிரச்சனையில்லை. இணையம் வந்த பிறகு அரசியல்வாதிகளுக்குத் தான் பிரச்சனையாக உள்ளது.

ஒரு பக்கம் தலைவர் என்பவர்களை மறுபக்கம் தறுதலை என்கிறார்கள். எது உண்மை? எது பொய்? என்பதற்கு அப்பாற்பட்டு முழுமையாக மாலையாக கோர்த்து தொங்கவிட்டு அஞ்சலி செலுத்துகின்றார்கள். எழுத்தை வாசிக்கும் போதே நாறுகின்றது.


முகநூல் ..வாட்ஸாப்ப் ..ட்விட்டரில் முகமில்லாமல் 90 சதவிகித போராளிக்கூட்டம் செயல்பட்டுக் கொண்டிருப்பதால் ஆதி மொழி தான் அங்கே தொகுக்கவே முடியாத தமிழ் அகராதியாக உள்ளது.



நாம் இறப்பதற்கு முன் இணையத்தை விட்டுக் குறைந்த பட்சம் ஐந்து வருடம் ஒதுங்கியிருக்க வேண்டும். அதுவரையிலும் நம்மோடு பழகிக் கவனித்துக் கண்காணித்துக் கொண்டிருந்தவர்கள் உள்ளே வைத்திருந்தவற்றைத் துப்புவதை நமக்குப் பின்னால் நம் மகன் மகள் பார்க்கும் துணிச்சலை அவர்களுக்கு கற்றுக் கொடுத்து மறைய வேண்டும்.