புதன், 6 நவம்பர், 2019


நிம்மதியான வாழ்க்கையில் எவையெல்லாம் கட்டாயம் இருக்க வேண்டும்?

புரிந்து கொண்டு நடந்து கொள்ளும், தனிமை மற்றும் வேதனைகள் தராத வாழ்க்கை துணை - 50 சதவிகிதம் நிம்மதி கிடைத்து விடும் ! ஆங்கிலத்தில் பெட்டெர் பாதி ( better half) என்பர். இது இப்படி அமையவில்லை என்றால் பிட்டர் பாதி (bitter half) ஆகி விடும்

மிகவும் பண்பான, புத்திசாலியான, அடக்கமான குழந்தைகள் - 25 சதவிகிதம் ! இது அடுத்த கட்டம் - இதில் பிரச்சனைகளை சமாளிக்க , அது தான் நம் சேமிப்பு இருக்குமே பணத்திலிருந்து , பொறுமையிலிருந்து, புண்ணியத்திலிருந்து - அதை கரைக்க மனதால் முடிவு பண்ணிக்கொள்ள வேண்டும்

மீதம் - 20 சதவிகிதம் மற்ற குடும்ப உறுப்பினர்கள், நம் உடல், மன ஆரோக்கியம், வேலை, சேமிப்பு, பெயர், புகழ் இப்படி பல விஷயங்கள் அடக்கம்

5 சதவிகிதம் - இறை சிந்தனை உண்மைக்கான தேடல் ! மேற்கூறிய இடங்களில் பிரச்சனை வர வர பல விதமான சங்கடங்கள் வர வர இந்த 5, 50 என்பதை தாண்டி 90 சதவிகிதம் போனாலும் வியப்பதற்கு இல்லை


நீண்ட கால இவ்வுலக / இல்லற வாழ்வுக்குப் பிறகு உங்களுக்கு என்ன புரிந்தது?

ஆணுக்கு , இல்லற வாழ்வு என்பது முற்றிலும் மனைவி அமைவதைப் பொறுத்தே இருக்கும். நீங்கள் : 1 (ஒன்று) , மனைவி 0 (பூஜ்யம்) என்று வைத்துக் கொண்டால் , மனைவி உங்களுக்குப் பின்னால் இருந்து ஆதரவளிக்கும் போது நீங்கள் 10 மடங்கு பலம் பெற்று உயர்வடைவீர்கள். ஆனால் மனைவி உங்களுக்கு முன்னால் இருக்க முனைந்தால் 01 என்ற நிலைக்கு நீங்கள் தள்ளப் பட்டு பத்து மடங்கு பலம் குறைந்து துன்பமே துணை என வாழ நேரும் .


மனைவி ஜீரோவாக இல்லாமல் 1 , 2 அல்லது அதற்கு மேல் மதிக்கத் தக்கவளாக அமைந்தால் ஆண் பல மடங்கு பலம் பெற்று உயரலாமே என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது . உண்மை தான் அதை மறுக்க முடியாது .ஆனால் இம்மாதிரி நிலைகள் விதி விலக்கானவை . அத்தகையவர்கள்மிகக் குறைந்த அளவில் மட்டுமே இருப்பார்கள் .



( பின் குறிப்பு ) : பெண்கள் எல்லாருமே தங்களை விதி விலக்கானவர்கள் என்று எண்ணிக் கொண்டு என்னிடம் சண்டைக்கு வராமல் இருந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் எழுதிய பதில் )

செவ்வாய், 5 நவம்பர், 2019

உண்மையான மகிழ்ச்சி எது? அதை நீங்கள் எவ்வாறு பெறுவீர்கள்?

நான் நானாகவே இருப்பதை எனக்கு உண்மையான மகிழ்ச்சியை அளிக்கிறது. எனக்கு பிடித்தவற்றை நான் செய்யும் போது அதை நான் பெற்று கொள்வதாக உணர்கிறேன்.

நான் ஒரு விற்பனை  துறையில்  வேலை செய்கிறேன்.கோவை , சேலம் ,சென்னை  போன்ற பெரும் நகரங்ளில் வசித்த போது அலுவலக நண்பர்களுடன் தியேட்டர்,மால் என சுற்றும் போது பெரியதாக மகிழ்ச்சி ஏற்படவில்லை. ஏனெனில் அதில் முழு ஈடுபாடு எனக்கு இல்லை. என் நண்பர்கள்  அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த போதிலும் நான் அதில் பெரும் மகிழ்ச்சியடையவில்லை. ஏனென்றால் நான் அங்கு எனக்கு பிடித்த உடை அணியவில்லை(தியேட்டர், மால் என செல்லும் போது அதற்கான உடை எ.கா:ஜீன்ஸ் அணிய நான் உந்த பட்டேன்) உணவிலும் பெரிதாக எனக்கு பிடித்ததை சாப்பிட முடியவில்லை.(மேற்கத்திய உணவுகள் சாப்பிட வேண்டிய கட்டாயத்திற்குள்ளானேன்).

என்று நான் எனக்கு பிடித்தவற்றை செய்து,எனக்கு பிடித்தவற்றை சாப்பிட ஆரம்பித்தேனோ அன்று முதல் உண்மையான மகிழ்ச்சியை உணருகிறேன்.

காதலித்து தோல்வியுற்ற ஒரு பெண்ணை திருமணம் செய்ய எந்த ஆணாவது முன் வருவாரா?

நான்  ஆக இருந்தால், இந்த விஷயத்திற்கு இப்படி தான் யோசிப்பேன்

அந்த பெண் தன் கடந்த காலத்தை பற்றி சொல்வதே பெரிய விஷயம். எவ்வளவு பேர் சொல்வார்கள்? இது அவர்கள் நம்பத்தகுந்தவர் "genuine" என்பதை காட்டுகிறது

எந்த காரணத்துக்காக தோல்வி பெற்றாலும் அதனை கடந்து சென்று இப்பொழுது வந்திருப்பது பாராட்டுக்குரியது

அவர்கள் நல்ல முறையில் பொறுப்புகளை ஏற்பவராக இருப்பின்
சிறந்த முறையில் பழகி, சந்தோஷமாக உற்சாகமாக ஒவ்வொரு நாளை மிகவும் உபயோகமாக செலவழிப்பவர் ஆயின்

பிடித்தமான சில அழகு, அரவணைப்பு, அறிவு, குணநலன்கள் உடையவராயின்

எந்த பிரச்னையிலும் பிறரை மட்டும் தப்பு சொல்லி கொண்டோ, உணர்வு ரீதியான கஷ்டங்கள் கொடுத்துக்கொண்டோ இல்லாமல் தன்னால் இயன்றவரை சகிப்பு தன்மையோடும், தன் செயல்களில் தீர்க்கமாகவும் இருப்பவராயின்

ஓரளவு படிப்பு / வேலை / சுயதொழில் / பொழுதுபோக்கு தன்னை தான் சந்தோஷமாக வைத்து கொள்ள செய்பவராயின்

அந்த பெண்ணிடம் எந்த பிரச்சனையும் இல்லை. இப்படி பட்ட பெண்ணை அவர்கள் ஒத்துக்கொண்டால் திருமணம் செய்து கொள்வேன்.

கடந்த கால காதல் கண்டிப்பாக கடந்த காலம். அதற்கும் நிகழ் காலத்துக்கும் பெரிய தொடர்பு ஒன்றும் இல்லை.

என் நிகழ் மற்றும் எதிர் காலத்தில் அவர்களை இன்னும் அசத்தி அப்படி ஒரு நிகழ்வை அவர்கள் மறக்க அடிக்க கூட செய்துவிடுவேன்....

நீங்கள் உங்கள் பலவீனத்தை உணரத் தெரிந்து இருக்க வேண்டும்..... 

காரணம் உங்கள் மகன், மகள், பேரன், பேத்தி போன்றவர்கள் முழுமையான தொழில் நுட்ப உலகில் தான் வாழப் போகின்றார்கள். அவர்களுடன் உங்களுக்கு நல்ல உறவு இருக்க வேண்டும் என்றால், அவர்கள் உங்களுடன் பேச ஆர்வமாக உங்களை நோக்கி வர வேண்டும் என்றால் உங்களின் பழமைவாத சிந்தனைகள் மாற வேண்டும். உங்களை நீங்களே மாற்றிக் கொள்ள வேண்டும்.  உங்களைச் சுற்றிலும் என்ன நடக்கின்றது? என்ன மாற்றங்கள்? என்ன மாறுதல்கள் என்பதனை உணர்ந்து கொள்ளத் தெரிந்து இருக்க வேண்டும்.

இவையெல்லாம் தெரியாவிட்டால் குடி முழுகிப் போய்விடுமா? என்று உங்களிடம் ஒரு கேள்வி வரும். உண்மை தான். ஒன்றும் ஆகிவிடாது. 

என் உறவினர் ஒருவர் இன்னமும் வானொலி தான் கேட்டுக் கொண்டு இருக்கின்றார். இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி அப்படியே உடைக்காமல் இருக்கின்றது.  ஆனால் அவரின் மகன் பொறியியல் படித்து முடித்து விட்டு மெடிக்கல் வேலையில் சேர்ந்து 5000 ரூபாய் வாங்கிக் கொண்டு உள்ளூரில் இருக்கின்றார்.

எனக்குப் பட்டன் தொலைப்பேசி போதும் என்ற நண்பர் ஒருவர் இருக்கின்றார்.  

அவர் செய்வது எல்ஐசி ஏஜெண்ட் தொழில். இப்போது எல்ஜசி ஆன் லைன் மூலமாக முக்கால்வாசி நிர்வாகத்தை மாற்றிவிட்டது. அவரும் பிடிவாதமாக அந்த தொலைப்பேசி என்னை உளவு பார்க்கும் என்று புது வியாக்கியானம் சொல்லிக் கொண்டிருந்தார்.  அவருக்குப் பின்னால் வந்தவர்கள் மாதம் ஒரு லட்சம் சம்பாரிக்கின்றார்கள். இவர் கடந்த ஐந்து வருடமாக அதே 50 000 யைத் கடந்து வராமல் அப்படியே இருக்கின்றார். 

நான் திட்டி புரியவைத்தேன்.  இப்போது வாங்கி விட்டார். 

இப்போது வருத்தப்படுகின்றார்.

இதை எழுதுவதற்குக் காரணம் உங்கள் எழுத்துப் பயணம் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும். வேறு வாகனத்தில் பயணிக்க வேண்டும். அதற்கு உங்களுக்கு மனமாற்றம் தேவை. 

ஓசைப்படாமல் வெகுளி போல இருந்து கொண்டு இங்கே இணையத்தில் மாதம் பெருந்தொகை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ஏராளமான பேர்கள் இங்கே இருக்கின்றார்கள்.  அவர்கள் யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை.  

நீங்கள் மாங்கு மாங்கென்று எழுதிய நான்கு விமர்சனம் வந்து விடுமா? என்ற மொகஞ்சதாரோ ஹரப்பா காலத்தில் இருக்காதீர்கள்.

மின்னூல் பக்கம் வாங்க. 

அமேசான் பக்கம் வாங்க. 

உங்கள் வாகனத்தை மாற்றுங்கள்.

கிண்டில் என்பது ஒரு கருவி.  7000 முதல் 20 000 வரை வசதிகள் பொறுத்து உள்ளது.  ஆயிரக்கணக்கான புத்தகங்களை உள்ளே அடக்க முடியும். உங்கள் வீடு புத்தமாக நிறைந்து இருக்க வாய்ப்பில்லாமல் பயணத்தின் போது கையில் தூக்கிச் சென்று உங்களின் வாசிப்பின் ருசியை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

அவ்வளவு பணம் இல்லைங்கோ?

பரவாயில்லை. வீட்டில் லேப்டாப், டெக்ஸ்டாப் உள்ளதா?  அதில் கிண்டில் ஆப் தரவிறக்கம் செய்யுங்கள்.  அதில் உங்கள் பயனர் அக்கவுண்ட் திறந்து கொள்ளுங்கள்.  தினமும் ஏராளமான இலவச புத்தகங்கள் அமேசான் முதலாளி தந்து கொண்டே இருக்கின்றார்.  

ஒவ்வொரு நாளும் தருகின்றார்.  

பெரியவர்கள் சொல்வது போல படி. படி. படி. என்று சொல்லிக் கொண்டேயிருக்கின்றார்.

வீட்டில் இதுவும் இல்லைங்கோ?

பரவாயில்லை. கடன் வாங்கியாவது நீங்கள் உங்கள் மகனுக்கு மகளுக்கு நவீன ரக அலைபேசியை வாங்கிக் கொடுத்து அவனைப் படிக்க விடாமல் செய்யும் மோசக்கார பெற்றோர்களின் வரிசையில் நீங்களும் கட்டாயம் இருக்கத்தான் செய்வீர்கள்.  அல்லது உங்களின் தேவையின் பொருட்டு நீங்களே அதனை வாங்கியும் வைத்திருக்கக்கூடும்.

அதில் அமேசான் கிண்டில் ஆப் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அதன் மூலமாகவும் படிக்க முடியும்.

இல்லைங்க எனக்குப் படிக்கத் தொடங்கினால் ஐந்து நிமிடத்தில் தூக்கம் வந்து என்று சொல்லக்கூடியவரா? 

பரவாயில்லை.  யூ டியுப் பக்கம் வாங்க. அதில் எப்படி சம்பாரிக்கின்றார்கள்? யார் சம்பாரிக்கின்றார்கள்? எதைச் சொல்லி சம்பாரிக்கின்றார்கள்? என்பதனை ஒரு மாதம் ஒவ்வொன்றாகப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்.

ஏதாவது ஒரு வழியில் இணையத்தைத் தெளிவாகப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள்.

குலப்பெருமை, இனப்பெருமை, மொழிப் பெருமை எல்லாம் விரைவில் அழிந்து விடும். ஆனால் உங்கள் பணப் பெருமை உங்களை, உங்களின் தலைமுறையை வாழ வைக்கும் என்பதனை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.



நிர்வாகவியல், வணிகவியல், தத்துவ இயல், தொழிலாளர் நலம், முதலாளி நலம், பொருளாதார பலம், மாறும் சூழல், மாறாத மனிதர்கள், பலவீனம் உள்ள மனிதர்கள் அடையும் துன்பங்கள், சந்திக்கும் பிரச்சனைகள் என்று ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்துச் செதுக்கி உள்ளேன்.



தினமும் மதியம் மூன்று மணிக்கு அமேசான் எந்தப் புத்தகங்களை இலவசமாகத் தருகின்றார்கள் என்பதனை அறிவதற்கு  சென்று அறிந்து கொள்ளுங்கள்.

ராசா நான் பொழுது போவதற்கு இங்கு வந்து எதையாவது எழுதி என் நேரத்தைப் போக்கிக் கொள்ள விரும்புகிறேன். என்னை ஏன் தொந்தரவு செய்கின்றாய் என்று கேட்பவரா?

பரவாயில்லை.

உங்கள் தலைமுறை உங்களுக்குப் பாடம் கற்றுக் கொடுப்பார்கள். உங்களின் மனோதிடம் உங்களை அப்போது காப்பாற்ற வேண்டும். இதையெல்லாம் படித்த சுயநலத்தோடு இருக்கும் மேன்மக்கள் சொல்லி தரமாற்றார்கள் ...எனக்கு தெரிந்ததை உடனே எந்த பிரதிபலன் பாராமல் செய்திகளாக ..பதிவுகளாக ..பகிர்ந்துவிடுவேன் ...நம்மால் நாலு பேருக்கு உபயோகமாக இருக்கவேண்டும் ..போகும்பொழுது எதையும் எடுத்துக்கொண்டு போவதில்லை ...நம் பகிர்ந்த செய்திகள் ..ஆவணங்கள் ..தான் மலரும் நினைவுகளாக இருக்கும் ....நன்றி 

நல்வாழ்த்துகள்.

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 
9944066681...

















திங்கள், 4 நவம்பர், 2019

உங்கள் வாழ்க்கையில் இருந்து நீங்கள் கற்றுக்கொண்ட 10 விஷயங்கள் யாவை?


1.பணம் ரொம்பவே முக்கியம் .ஆனால் அதை மதித்தல் ஆகாது.


2.என்னத்தான் மற்றவர்கள் நம்மை ஊக்கப்படுத்தினாலும்,அது சில மணித்துளிகள் மட்டுமே நீடிக்கும்.உண்மையில் மாற்றம் நமக்குள் இருந்தே வர வேண்டும்.திடீரென்றுநமக்குள் எழும் ஊக்கம் கூட மறைந்து போகும்.ஆனால் நாம் தான் நம்மை நகர்த்தி செல்ல வேண்டும்.


3.மதிப்பெண்கள் முக்கியம் இல்லை.எப்போதெனில்,வேலை கிடைத்து விட்டது என்றால்.ஆனால் வேலை கிடைப்பதற்கு ஒரு நுழைவுச் சீட்டைப் போன்றது மதிப்பெண்கள்.ஆதலால் மதிப்பெண்கள் முக்கியம்.

4.நண்பர்கள்,உறவுகள் எல்லாம் சில காலத்திற்கு தான்.வெகு சிலர் தான் அனைத்தையும் தாண்டி நம்முடன் நிற்பர்.அது அபூர்வம்.

5.நமக்கு பிடித்ததை நாம் செய்ய வேண்டும்.அதற்கு மற்றவர்களுக்கு பிடிக்குமா என்று ஆராய கூடாது.

6.வாழ்க்கையில் சிலர் மட்டுமே நம்பத் தகுந்தவர்கள்.நமக்காக நேரம் ஒதுக்கும் அந்த நபர்களுக்கு நாம் பல ஜென்மங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருப்போம்.

7.உடல் ஆரோக்கியத்தைக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்தது ஏதும் இல்லை .

8.வாழ்க்கையில் சில விஷயங்கள் மறைவாகத் தான் இருக்க வேண்டும் .அவைகளில் ஒன்று "நம்முடைய அடுத்த இலக்கு".

9.தோற்றம் மிக முக்கியம்.கருப்போ,சிவப்போ நம்மை நாம் எவ்வாறு காண்பிக்கிறோம் என்பது மிக முக்கியம்.சிறப்பாக உடை அணிதல் சிறப்பு.சிறப்பாக உடை அணிந்து,மன உறுதி இல்லாமல் செல்வோமாயின் எல்லாமே வீண் தான்.ஆக,இரண்டும் கலந்த கலவையாக இருக்க வேண்டும்.

10.வாழ்க்கையில் நமக்கு நாமே உதவி செய்ய வேண்டும்.நாம் ஒரு அடி எடுத்து வைத்தால்,தெய்வம் இரண்டு,மூன்று அடிகள் சேர்த்து நம்முடன் எடுத்து வைக்கும்.

Extra:இந்த அகன்ற,விரிந்த பேரண்டமானது,மன உறுதியுடன் இருக்கும் திடமான இதயத்தின் மீதே காதல் வயப்படும் .
-Paulo Coelho.
நன்றி !!!
பசுமை மலரும் நினைவுகளாக ... நீங்கள் எதற்காக சிரித்தீர்கள்?

அன்று அலுவலகத்தில் அதிக வேலை, மிகவும் சோர்வுடன் வீட்டை அடைந்தேன், உடைகளை கழற்றிவிட்டு கைலிக்கு மாறினேன். கை, கால், முகத்தினை கழுவிய பின்பு என் அறைக்கு சென்றேன். என் மனைவி முன்கூட்டியே ஏசியை ஆன் செய்து வைத்து இருந்ததால் ஹாயாக கட்டிலில் சாய்ந்தேன்.

சற்று நேரத்தில் யாரோ கதவை திறக்கும் சத்தம் கேட்டு என் பார்வையை கதவின் பக்கம் செலுத்தினேன். அங்கே என் ஐந்து  வயது ஷியாம்  கையில் சிற்றுண்டியுடன் என்னை பார்த்து சிரித்தான் .

அம்மா கொடுக்க சொன்னங்க! என்று கூறினான் என்  ஷியாம் .

நீ சாப்பிட்டியா? என்றேன் நான்.

ம். என்றான் அவன்.

பிறகு அவன் கதவை மூடாமல் என் அறையை விட்டு வெளியே சென்றான்.

டேய் கதவ சாத்து… ஏசி வெளிய போகுது இல்ல! என்று சத்தமாக கத்தினேன் நான்.

உடனே அவன் அறைக்குள் வந்து திறந்து இருந்த கதவை தன் கைகளால் பிடித்துகொண்டு தலையை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு.

ஏய் ஏசி உள்ள வா…ஏய் ஏசி உள்ள வா…ஏய் ஏசி உள்ள வா… அப்பா சொல்றாரு இல்ல! என்றானே பார்க்கலாம்.

நான் சாப்பிட்ட சிற்றுண்டி புரை ஏற விழுந்து விழுந்து சிரித்தேன்.

புரிஞ்சா நீங்களும் சிரிங்க.


உங்கள் குழந்தை கேட்ட கடினமான கேள்வி என்ன?


என்னோட நான்கு வயது ஷியாம்  கேட்ட கேள்விகள்.

1.ஏன் அப்பா ..மனுசங்க  இறந்து போறாங்க?

2.இறந்தவங்க எங்க இருப்பாங்க?

3.இறந்தவங்க சாப்பிடுவார்களா? அவங்களுக்கு நீங்கள் ஏன் சாப்பாடு போட்டு வைக்குறீங்க? சாப்பாடு அவங்க சாப்பிடல அப்புறம் ஏன் அடுத்த நாளும் போட்டு வைக்குறீங்க?

4.twenty nine அடுத்து twenty ten தான வரணும் ஏன் thirty சொல்றாங்க.

5.எனக்கு அப்புறம் ..ஏன் ..தம்பியே ..தங்கைச்சி பாப்பா ஏன் வரல ..?

6.வயிற்றுக்குள் இருக்கும் போது வெளிச்சம் இருக்குமா?

7.உங்க கல்யாணத்துக்கு என்ன ஏன் கூட்டிட்டு போகல?

8.மரம் வளர சாப்பாடு வேணாமா? தண்ணீர் மட்டும் போதுமா? சாப்பாடு குடுத்தால் நிறைய பழம் கிடைக்காதா?

9.ரோஜா பூ, மல்லிகை பூ ஏன் வேற வேற மணம் இருக்குது?

10.கடல் தண்ணீர் ஏன் உப்பா இருக்கு?

இன்னும் நிறைய கேள்விகள்…
வரவிருக்கும் ஆண்டில் ஒரு பெரிய தொகையைப் பெறுவதற்காக ஒவ்வொரு மாதமும் 1500 முதலீடு செய்ய சிறந்த வழி எது?

உங்களுடைய கேள்வியிலிருந்து, உங்களுக்கு வரவிருக்கும் ஆண்டில், பணத்தினை தேவை உள்ளது. அதற்காக நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூபாய். 1500 முதலீடு செய்ய தயாராக உள்ளீர்கள் என்று தெரிகிறது.

குறுகிய காலத்தில் பங்கு சந்தையோ, கடன் பத்திரங்களோ வேண்டாம்;

ஒரு ஆண்டு என்பது மிகவும் குறுகிய காலம். இத்தகைய குறுகிய காலத்தில், பங்குகளில் நேரடியாகவோ அல்லது பங்கு சந்தை சார்ந்த, கடன் பத்திரங்கள் சார்ந்த பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதென்பது, மிகவும் அபாயகரமானது. பணத்தை இழக்கும் வாய்ப்பு அதிகம்.

குறுகிய காலத்தில் வங்கியை மட்டுமே நம்பவும்;

எனவே, உங்களுடைய கால வரையறையில், வங்கியின் தொடர் வைப்பு நிதிதான் உங்களுடைய பணத்தினை முதலீடு செய்ய சிறந்த இடம். பணத்தை இழக்கும் வாய்ப்பு இல்லை. மேலும், கூட்டு வட்டியின் மூலம், குறைந்த காலத்தில், நல்ல ஒரு பணப் பெருக்கத்தினைப் பெற முடியும்.

எந்த வங்கியை தேர்ந்தெடுப்பது;

பல்வேறு வங்கிகளின் கூட்டு வட்டி கணக்கிடும் காலவரையறை (Compounding Frequency), கூட்டு வட்டி விகிதம் (Interest Rate) போன்றவற்றை கருத்தில் கொண்டு, நல்லதொரு தொடர் வைப்பு நிதியைத்(Recurring Deposit) தேர்ந்தெடுங்கள்.

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
நிதி ஆலோசகர் -9944066681

சனி, 2 நவம்பர், 2019

இந்திய பொருளாதாரம் -வங்கி -வட்டிவிகிதம் ..

பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் என்ற மத்திய அரசின் திட்டங்களால் வரலாறு காணாத அளவுக்கு சரிந்து கிடக்கும் நாட்டின் பொருளாதாரட்தை மீட்டெடுக்கும் பொறுப்பு யாரிடம் உள்ளது?

நிச்சயம் அது மத்திய அரசின் கையில்தான் உள்ளது என்று சமீபத்தில் கைவிரித்துவிட்டது மத்திய ரிசர்வ் வங்கி. எங்களால் வங்கிகளுக்கு நாங்கள் அளிக்கும் கடனுக்கு வசூலிக்கப்படும் ரிப்போ (Repo) வட்டி விகிதத்தை மட்டும்தான் குறைக்க முடியும்  ஆனால் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் வங்கிகளிடம் தான் உள்ளது என்கிறார் மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர். 

ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு ரிப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட போதும் அதை பயன்படுத்தி ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் பெற வங்கிகள் யாரும் முன் வரவில்லை. 

ஏன்?

ஏனெனில் வங்கிகளிடம் உள்ள முதலீட்டையே அவர்களால் முழுவதுமாக பயன்படுத்த வாய்ப்பில்லாத சூழல். இதன் காரணமாக  தங்களிடம் உபரியாக உள்ள தொகையை வங்கிகளுக்கிடையிலான கடன் வழங்கும்  ஓவர்நைட் எனப்படும் ஒரு நாள் வட்டிக்கு கடனாக வழங்கிவருகின்றனர். இதில் அவர்களுக்கு கிடைக்கும் ஆறு விழுக்காடு வட்டி வாடிக்கையாளர்களுடைய  குறைந்த பட்ச வைப்பு நிதிக்கான வட்டியை விடவும் குறைவு. அதாவது ஆறு முதல் ஏழரை விழுக்காட்டிற்கு வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட தொகையை ஆறு அல்லது அதற்கும் குறைவாக பிற வங்கிகளுக்கு  நாள் வட்டிக்கு வழங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்கிற உண்மை நாட்டிலுள்ள எத்தனை பாமரனுக்கு தெரியும்.

ஏன் இந்த அவல நிலை?

வங்கிகளிலிருந்து பெருமளவு கடன் பெறுவது பெரும் தொழில் நிறுவனங்கள்தான். அல்லது பெரும் வர்த்தக நிறுவனங்கள். இவை அனைத்துமே முடங்கிப் போயுள்ள சூழலில் யார் கடன் வாங்கி முதலீடு செய்ய முன்வருவார்கள்?

மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி நாட்டிலுள்ள மொத்த உற்பத்தித் திறனில் (Installed Capacity) 67 முதல் 70 விழுக்காடு வரை மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறதாம். அதாவது நாட்டிலுள்ள நிறுவனங்கள் மொத்தமாக ஒரு லட்சம் கோடி மதிப்பிற்கு உற்பத்தி செய்ய முடியும் என்கின்ற சூழலில் அறுபதாயிரம் முதல் எழுபதாயிரம் கோடி வரை மட்டுமே உ/ற்பத்தி செய்யப்படுகின்றனவாம். அதையே சந்தையில் வாங்க ஆளில்லாதபோது மேற்கொண்டு கடன் வாங்கி உற்பத்தியை கூட்டுவதற்கு எந்த தொழிலதிபர் முன்வருவார்?

இதுதான் இன்றைய யதார்த்த நிலை..

இந்த சூழலில்  தான் தொழிலதிபர்களின் வரி விகிதத்தை பெருமளவுக்கு குறைக்க முன்வந்தது மத்திய அரசு. இந்த வரிக்குறைப்பு தொழிலதிபர்களின் மனநிலையை பெரிதளவுக்கு மாற்றுவதாக தெரியவில்லை. உண்மையில் மத்திய அரசுக்கு இதனால் ஏற்படவிருக்கும் ஒரு லட்சம் கோடி வருவாய் இழப்பு  வெறும் விழலுக்கு இறைத்த நீராகத்தான் போய்விட்டது எனலாம். 

இந்த சூழலில் ஒரு நாட்டின் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்று நான் இந்த பதிவின் துவக்கத்தில் கூறியுள்ள  ஆங்கிலேய பொருளாதார மேதை கெய்ன்ஸ் அன்றே கூறியுள்ளார். 

அவர் கூறியுள்ளது இதுதான்.

நாட்டின் பொருளாதாரம் எதனால் மந்த நிலையை அடைந்துள்ளது என்பதை அந்த நாட்டின் அரசு முதலில் ஆராய வேண்டும். ஒரு நாட்டின் உற்பத்தித் திறன் முழுமையாக பயன்படுத்தப்படாத சூழலில் அதை மேம்படுத்த முயற்சிகள் செய்ய வேண்டும். அதாவது அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைகளில் முழுவதுமாக விற்க நுகர்வோர் தேவையை அதிகரிக்க வேண்டும். அதாவது அவர்களுடைய வாங்கும் திறனை அதிகரிக்க வேண்டும். 

எப்படி... ?

நாட்டிலுள்ள தனிநபர் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். 

இதை நாட்டிலுள்ள தனியார் தொழில் நிறுவனங்களால் செய்ய முடியாமல்போகும் சூழலில் (இதுதான் இன்றைய நிலை) மத்திய அரசே தன்னுடைய பொது செலவினங்களை (Public Expenditure) அதிகரிக்க வேண்டும் என்கிறார் கெய்ன்ஸ்.

அதாவது மத்திய, மாநில அரசுகள் தங்களுடைய முதலீட்டை அதிகரிக்க வேண்டும். பெரிய அளவிலான கட்டுமான திட்டங்கள் அதாவது ஸ்மார்ட் சிட்டி போன்ற பெரு நகரங்களை உருவாக்கும் திட்டம், நாட்டிலுள்ள அனைத்து மாநில நகரங்களில் உலகதரம் வாய்ந்த விமான நிலையங்களை உருவாக்கும் திட்டங்கள், சாலை வசதிகளை மேம்படுத்துதல் என அரசுகள் மக்களிடத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும். இதற்கு தேவைப்படும் நிதியை கடனாக பெற வேண்டி வந்தாலும் அதை  செயல்படுத்த ஆட்சியாளர்கள் துணிந்து  முன் வரவேண்டும். ஆங்கிலத்தில் இதை calculated risk என்பார்கள். 

ஆனால் நடப்பது என்ன? மத்திய அரசு நலத் திட்டங்களை செயல்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை. தொழில் நிறுவனங்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் நியாயமாக வழங்க வேண்டிய தொகைகளையே நிதிப்பற்றாக் குறையை (fiscal deficit) காரணம் காட்டி சுமார் ஒரு லட்சம் கோடி அளவுக்கு முடக்கி வைத்திருப்பதை என்னவென்று சொல்வது?

அதாவது ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள ஒரு தொழில் அல்லது வர்த்தக நிறுவனம் தங்களுடைய மூலப் பொருள் கொள்முதலுக்கு செலுத்திய ஜிஎஸ்டி  மற்றும் எக்சைஸ் வரியை அவர்கள் ஏற்றுமதி செய்தவுடன் அரசு சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு திருப்பி வழங்குவது வாடிக்கை.... அதே போல் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் ஒப்பந்ததாரர்களுக்கு அவர்கள் பணியை முடித்த உடனே ஒப்பந்த தொகையை வழங்கிட வேண்டும்.... மக்களிடமிருந்து வசூலித்த கூடுதல் வருமான வரி போன்ற தொகைகளையும் குறைந்த காலக் கெடுவிற்குள் திருப்பி வழங்கிட வேண்டும். ஆனால் இத்தகைய தொகைகளை தங்களுடைய நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி நிறுத்தி வைப்பது எந்த விதத்தில் நியாயம்? பெரு நிறுவனங்களுக்கு அரசு வழங்க வேண்டிய தொகைகளை நிறுத்தி வைப்பதாலோ அல்லது காலங்கடந்து வழங்குவதாலோ அத்தகைய பெரு நிறுவனங்கள் தங்களுக்கு மூலப் பொருட்களை வழங்கும் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய தொகையையும் நிறுத்தவோ தள்ளிப்போடவோத்தானே செய்ய நேரிடும்...? மத்திய மாநில அரசுகளின் இத்தகைய பொறுப்பற்ற செயல்களால் நாட்டில் பணப்புழக்கம் மேலும் மேலும் நலிவடையத்தானே செய்யும்?

இதை ஆங்கிலத்தில் vicious cycle என்பார்கள்... இதை உடனே தடுத்து நிறுத்த மத்திய அரசு தாராள பொருளாதார கொள்கையை கடைபிடிக்க துணிந்து முன் வரவேண்டும்.... நாட்டின் ஒட்டுமொத்த கடன் அளவு சிறிது உயர்ந்தாலும் அதனால் ஏற்படும் பொருளாதார முன்னேற்றம்.... அதன் விளைவாக அரசுகளுக்கு கிடைக்கும் வருவாய் அதிகரிப்பு என நாளடைவில் அரசின் ஒட்டுமொத்த வருவாயும் உயர்ந்து வாங்கிய கடனை அடைக்க ஏதுவாக அமையும்.

RISK என்கிற ஆங்கில வார்த்தைக்கு Rare Instinct to Seek the unKnown என்று கூறுவார்கள். Rare Instinct என்றால் அபூர்வ உள்ளுணர்வு... unknown என்றால் நமக்குத் தெரியாதவை. அதை நோக்கிப் பயணிப்பது தான் RISK. அது வெகு சிலருக்கே சாத்தியப்படும். அதாவது என்ன நடக்கும் என்பது தெரியாமலே இலக்கைத் தேடிச் செல்லும் துணிவு... இலக்கை அடைந்தால் மகிழ்ச்சி... தோல்வியடைந்தால் தொடர்ந்து முயல்வேன் என்கிற பிடிவாதம்....

இது ஒரு காலத்தில் சாதாரண சாக்கு பை விற்றுக் கொண்டிருந்த அம்பானிக்கு இருந்தது. இன்று அவருடைய மகன் முகேஷ் ஆசியாவிலேயே பெரும் தொழிலதிபர்கள் பட்டியலில்... இப்படி அசாத்திய துணிவுடன் சாதித்தவர்கள் நம்முடைய நாட்டில் ஏராளம் பேர் உள்ளனர். ஆட்சியாளர்களில் சொல்ல வேண்டுமென்றால் காலம் சென்ற நரசிம்மராவை சொல்லலாம். நேரு குடும்பத்தைச் சாராத முதல் பிரதமர் என்றாலும் அவர் அன்று நடைமுறைப்படுத்திய தாராள பொருளாதார கொள்கைகள் அப்போது நாடு இருந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வர உதவியது.

இதுதான் இன்றைய ஆட்சியாளர்களுக்கு தேவைப்படும் குணாதிசயம். 

துரதிர்ஷ்டவசமாக அது இப்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை. 

நிறைவு.

வெள்ளி, 1 நவம்பர், 2019

வாழ்ந்தால் இவரைப் போல தான் வாழ வேண்டும் என்றால் நீங்கள் யாரைச் சொல்வீர்கள்?

எலோன் மஸ்க்

தாய், தந்தையரின் பிரிவு கடினமான குழந்தை பருவத்தை தந்தது.
சிறு வயது முதலே 10 மணி நேரம் வாசிக்கும் பழக்கம் கொண்டவர். ஒரு சமயத்தில் இவர் படிப்பதற்கு இவர் ஊரில் உள்ள நூலகத்தில் புத்தகம் இல்லாத அளவிற்கு அனைத்து புத்தகங்களையும் படித்து விட்டிருந்தார்.
தானாகவே குறியீடும்(coding) கற்றுக்கொண்டு தனது 12-ஆம் வயதில் ஒரு கணினி விளையாட்டை எழுதி 500 டாலர்-க்கு விற்றார்.
இன்று நாம் உபயோகிக்கும் பேபால்(paypal) இவர் நிறுவி பின்பு இ-பே(e-bay)விடம் விற்றுவிட்டார்.
பேபால்-ஐ விற்றதன் மூலம் வந்த 250 மில்லியன் டாலர்களை டெஸ்லா(Tesla) எனும் எலக்ட்ரிக் கார் கம்பெனியும், ஸ்பேஸ்-எக்ஸ்(Space-x) ராக்கெட் உருவாக்கும் கம்பெனியும் நிறுவினார்.
முதல் மூன்று முறையும் ராக்கெட் ஏவுதலில் ஏமாற்றம். நான்காம் முறை தான் வெற்றியை சுவைத்தார்.
உலகிலேயே முதன்முதலாக திரும்ப உபயோகிக்க கூடிய ராக்கெட்டை கண்டுபிடித்தவர் மஸ்க்.
சோலார் சிட்டி எனும் கம்பெனியில் பெரும் முதலீட்டை செய்தார். இதன் மூலம் தன் கம்பெனியில் இருந்து கார் வாங்குபவர்களுக்கு இலவசமாக சார்ஜ் செய்ய வழிவகை செய்தார்.
ஹைப்பர் லூப் எனப்படும் அதி வேக ரயில் திட்டத்தை தீட்டி அதை அமல்படுத்தவும் செய்தார்.
மக்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப இப்போது மும்மரமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்.
உலகம் முழுவதற்கும் இலவச வை-பை வசதியை ஏற்படுத்த திட்டம் உள்ளதாகவும் தகவல் பரவி உள்ளன.
தன் வெற்றிக்கு காரணம் தான் படித்த புத்தகங்கள் தான் என்று பல முறை மஸ்க் கூறியதுண்டு. உண்மையாக மனித சமூகத்திற்காக உழைக்கும் உன்னத மனிதர் இவர். ஒரு நாளைக்கு 5மணி நேரம் தூக்கம் மட்டுமே. விழித்திருக்கும் அனைத்து நேரங்களும் உழைத்துக்கொண்டிருக்கும் ஒரு கடின உழைப்பாளி.

கடினமான சூழலின் போதும் விட்டுக்குக்கொடுக்காதவர். இல்லை என்றால் என்னவென்று தெரியாத மனிதர். பல தடைகளை தகர்த்தெறிந்தவர்.

நீங்கள் விட்டுக்கொடுக்காதபோது ஒரு மாயாஜாலம் ஒன்று நடக்கிறது. அது எப்படியோ தெரியவில்லை பிடிவாதமாக இருக்கும் ஒரு மனிதர் மீது இந்த பிரபஞ்சம் காதல் கொண்டுவிடுகிறது.......
வாழ்க்கையில் இப்படியும் சில மனிதர்கள் உள்ளார்கள் என நினைத்ததுண்டா?

கோவையில் எங்கள் வீட்டில் வேலை செய்யும்   அக்கா பழைய செய்தி தாள்களை கிழித்துக் கொண்டிருந்தார். நமக்கும் வேற அந்த நேரம் வேலை இல்லை. சரி அக்கா கூட உட்கார்ந்து நியூஸ் பேப்பர் கிழிச்சி குடுப்போம்னு போனா எனக்கு ஒரு விசயம் சற்று வித்தியாசமாக பட்டது.

ஒவ்வொரு தாளாக முன்னும் பின்னும் பார்த்து கிழித்து கொண்டிருந்தார் அக்கா.

கெக்க புக்கனு சிரிச்சிட்டேன். அட அக்கா குடுங்க நான் கிழிச்சி குடுக்குறேன் பாருங்க. சர் சர்னு கிழிக்கிறது விட்டுட்டு அழகு பார்த்து கிழிச்சிட்டு இருக்கீங்க அய்யோ அய்யோ. ஒரு நிமிடத்தில் முடிக்க வேண்டிய வேலைக்கு ஒரு மணி நேரம் ஆக்குறீங்க. இப்ப பாருங்க எபன் எப்படி கிழிக்கிறானு என்று சொல்லிக் கொண்டே அந்த பேப்பரை எடுத்தேன்.

அக்கா சட்டுனு கையில இருந்து புடுங்கிட்டாங்க. எனக்கு ஒன்னும் புரியல.

ஏன்க்கா என்னாச்சு என்று கேட்கவும்,

விடு இது என் வேலை நான் தான் பண்ணுவேன் போ போய் உன் வேலைய பாரு என்றார்.

ஷாக் ஆகிட்டேன். இது நம்ம அக்காவானு.

நீ போ என்று என்னை விரட்டி விடுவதிலே குறியாக இருந்தார்.

சரி அந்த சீக்ரெட் மட்டும் என்னனு சொல்லுங்க. ஏன் ஒவ்வொரு பக்கமா பார்த்து பார்த்து கிழிக்கிறீங்க? சொல்லுங்க என்ன மர்மம் இருக்கு? சொல்லுங்க  சொல்லுங்க என்று வற்புறுத்தி கேட்கவும் அவர் சொன்ன ஒரு விசயம் ரொம்ப மனசை தொட்டுவிட்டது.

என்ன தெரியுமா சொன்னாங்க. இதை வாசித்த பிறகு நீங்களே வியப்படைவீர்கள் இப்படியும் டெடிகேட்டடா வொர்க் பண்ணுறவங்க இருக்காங்களா என்று.

இது ரெஸ்ட் ரூம்ல யூஸ் பண்ணுற பேப்பர்மா (நாப்கின் ரேப் செய்ய பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டும் செய்தி தாள்) அதுக்கு சாமி படம் போட்ட பேப்பர் எல்லாம் வைக்க வேண்டாம் தாயி. நமக்கு இல்லனாலும் நம்புறவங்களுக்கு அது சாமிதானத்தா. அதான் சாமி படம் இருக்குறத எல்லாம் பார்த்து கிழிச்சி சாமி படம் இல்லாத பேப்பரா வச்சிட்டு இருக்கேன். (சாமி படம் போட்ட பேப்பர் வைக்க கூடாது என்று எந்த கட்டுபாடும் இல்லை. இது அவராகவே எடுத்த முடிவு)

இது என் வேலை இதுக்கு சம்பளம் நான் தான் வாங்குறேன் அதுனால நீ செய்ய கூடாது கண்ணு. போ நீ போய் புள்ளைங்களுக்கு பாடம் சொல்லிக் குடு என்று அனுப்பிவிட்டார்.

அவ்வளவு அடிதட்டு மக்கள். ஆனால் என்ன ஒரு உயர்ந்த எண்ணம் பாருங்களேன். சொற்ப சம்பளம் தான் அவர்களுக்கு எல்லாம் ஆனாலும் அவங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியில் எத்தனை உண்மை.

Royal salute to you அக்கா.

கடைசியாக ஒரு சின்ன விசயம் மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 1000 குழந்தைகள் பயன்படுத்தியும், குழந்தைகள் எந்த தொற்றும் இல்லாமல் ஆரோக்கியமாக வீட்டிற்கு திரும்பி வருகிறார்கள் என்றால் அதற்கு காரணம் ஆசிரியகளாகிய நாங்கள் இல்லை. தங்கள் பணியை திறம்பட செய்யும் ஆயாம்மாக்களும், அக்காக்களும் தான். அதனால் இனி, பிறந்த நாள் இனிப்பை ஆயாம்மாக்களுக்கும் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று உங்கள் குழந்தைகளிடம் சொல்லி அனுப்புங்கள்.

நிறைய குழந்தைகள் எனக்கு இனிப்பு கொடுத்துவிட்டு அருகில் இருக்கும் அக்காவிற்கு கொடுக்காமல் செல்வது மிக வருத்தமாக இருக்கிறது.

பெற்றோர் ஆசிரியர் கூடுகைக்கு பள்ளிக்கு சென்றால் ஒரு முறையேனும் உங்கள் குழந்தைகள் ஆரோக்கியத்தில் பங்கு கொள்ளும் அவர்களுக்கு உங்கள் நன்றிகளை தெரிவியுங்கள்.

நாங்கள் கற்று மட்டும் கொடுக்கிறோம். அவர்கள் தான் ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் அளிக்கிறார்கள்.

கேள்வி : வாழ்க்கையில் இப்படியும் சில மனிதர்கள் உள்ளார்கள் என நினைத்ததுண்டா?

இதுக்கு மேல என்ன வேணும்?

நன்றி

அத்தனை அக்காக்களுக்கும்
உங்கள் பணத்தை சேமிக்க நீங்கள் பயன்படுத்திய வழி என்ன?

பணத்தினை எந்த ஒரு விஷயத்திலும், சேமிக்க அந்த விஷயத்தில் பணத்தை குறைவாக செலவழிக்க என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்று சிந்திக்க வேண்டும். அலசி ஆராய வேண்டும்.

உதாரணமாக உங்களுக்கு குலாப்ஜாமூன் சாப்பிட வேண்டும் என்ற ஆசை வருகிறது. ஒரு கிலோ குலாப் ஜாமூனை வீட்டில் குளிர்பதன பெட்டியில் வைத்து தினமும் உண்ண எண்ணுகிறீர்கள்.

அதனை சாப்பிட உங்களுக்கு என்னென்ன விதமான வாய்ப்புகள் உள்ளன என்று சிந்திப்போம்.

கடைக்கு சென்று ஒரு கிலோ குலாப் ஜாமுன் வாங்குவது — செலவு ரூபாய் 800
கடைக்கு சென்று குலாப் ஜாமூன் மிக்ஸ் வாங்குவதன் மூலம் வீட்டிலேயே குலாப் ஜாமுன் செய்வது — ஒரு கிலோ குலாப் ஜாமுன் , குலாப் ஜாமுன் மிக்ஸ் மூலம், வீட்டிலேயே செய்வது — ரூபாய் 200
குலாப் ஜாமுன் வீட்டில் உள்ள மைதா மாவு கொண்டு அடிப்படையிலிருந்து தயாராக செய்வது — ரூபாய் 50
எனவே ஒரு குலாப் ஜாமூன் தயார் செய்ய பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. ஒவ்வொரு வாய்ப்பிலும் அதற்கேற்றவாறு செலவு வேறுபடுகிறது. சேமிப்பும் வேறுபடுகிறது. வீட்டிலேயே குலாப்ஜாமூன் செய்வதன்மூலம் கிட்டத்தட்ட 750 ரூபாய் நம்மால் சேமிக்க முடியும்.

இவ்வாறு ஒவ்வொரு செலவிலும்,பணத்தை குறைவாக செலவழிக்க என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்று அலசி ஆராய்ந்து குறைந்த பணத்தை செலவழித்து அதிக பணத்தை சேமிக்க முடியும்......

ஏன்  குலாப் ஜாமூனை சொல்கிறேன் என்றால் ..எங்கள் வீட்டில் ஆ ஆ வூன ....அடிக்கடி குலாப் ஜாமூன்யை சாப்பிட்டு திகட்டிவிட்டது ..