ஞாயிறு, 11 மார்ச், 2018

புங்கமுத்தூர் ...துர்க்கையம்மன் துணையுடன் வரலாற்று தேடல் ...பாளையக்காரர் -புங்கமுத்தூர்

இன்று அருமையான வரலாற்று பயணம் ...உடுமலையில் காலை ஆரம்பித்த பயணம் ...பொன்னலம்மன் சோலை வழியாக சென்றபொழுது ...நாங்கள் கண்ட தேடலில் ..பாளையக்காரர்கள் யானை கட்டி போராடிய பாறைகள் கண்டது மிகவும் வியப்புக்குரியது ...ஆனால் நம் சமுதாய மக்களின் விழிப்புணர்வு இல்லாததால் ...அந்த தகவல்களை அறியாமல் இருக்கிறார்கள் ...பொன்னலம்மன் சோலை யிலிருந்து -J N பாளையம் வழியாக வரும்பொழுது  கடந்த மூன்று மாதங்களாக சென்று வருகிறோம் ...சில இடங்கள் பல மாறுதலுக்கு உட்பட்ட இடங்களாக உள்ளது ..வரும் வழியில் காட்டு பெருமாள் கோவில் கண்டோம் ...பல கோவிலுக்கு உரிய நிலங்களாக உள்ளது ...அதை மற்ற சமுதாய மக்களே சொல்கிறார்கள்..எரிசனம்பட்டி யில் ..நம் சொந்தங்களின் நிகழ்வை பார்த்துவிட்டு ...அங்கு நம் மாப்பிள்ளை பாளையக்காரர் ..மல்லிகை மல்லசீலன் அவர்களிடம் உரையாடி கொண்டுருந்தோம் ...பேச்சு வாக்கில் நமது உடுமலை வரலாற்று நடுவம்  ஆய்வாளர்  அருட்செல்வம் அவர்களை அறிமுக படித்திவைத்தேன் ..தளி எதுலப்பர் தகவல் எதாவது தெரியுமா என்று கேட்டார் ...கொஞ்சம் தெரியும் ...புங்கமுத்தூர் தோட்டம் அருகே கூட எங்கள் வம்ச வழியினர் நல்லமுத்து நாயக்கர் சமாதி கூட எங்கள் தோட்டம் அருகே உள்ளது  என்றார் ..தோட்டம் வைத்திருப்பவர் கூட என்னிடம் சொல்லி இருக்கிறார் ..என்றார் ..அங்கே போய்ப்பார்த்தால் நடுகளுடன் இருந்தது ...நல்லமுத்து நாயக்கர் தொண்டாமுத்தூர் அருகே ஆங்கிலேயரால் ..மாட்டு வண்டியில் தூக்கிலிடப்பட்டவர் ...ஆனால் எங்கு புதைத்தார்கள் என்று தெரியாமல் இருந்தது ..இன்று பார்வை யிட்ட இடம் ...நல்லமுத்து நாயக்கர் சமாதி என்று தெரிந்தது ..இது ஆவண காப்பகத்தில் எடுக்கப்பட்ட தகவலுடன் ஒப்பிடும் போது உண்ணமையென்று புலனாகிறது ..தேடலுடன் அப்படியே நம் சொந்தங்கள் வாழும் புங்கமுத்தூர் வந்து நம்ம மாப்பிளை மல்லிகை மல்லசீலன் அவர்கள் வீட்டில் தேனீர் அருந்திவிட்டு ..துர்க்கையம்மனை வழிபட்டுவிட்டு ...போனவாரம் விழா கொண்டியபோது ...எருமை ,ஆடு ,வெட்டி அம்மனுக்கு படையிலுடுவது மரபு ...பாளையக்காரர்களால் ...பிரிட்டிஷ் எதிராக போராடும் போது மாமிச உணவு வழங்கவது வாடிக்கை...போர் கருவிகளை பயன்படுத்துவதற்கு உடல் வலிமை வேண்டும் அதற்காக ...மாமிச உணவு படை வீரர்களுக்கு வழங்கவது வாடிக்கை ...தற்காலத்தில் மக்களுக்கு அம்மன் நேன்பு என்று கொண்டாடடுவது வழக்கமாகவிட்டது ...கோவிலின் பின்புறம் அமைந்துள்ள சமாதிகளை பற்றி கேட்ட பொழுது ..செல்லாண்டி நாயக்கரின் சமாதி என்றும் அதை ஒட்டிய பகுதியில் அவர்களின் மனைவிமார்கள்  சமாதியும் ஒட்டிய இருக்கிறது ..இதுவும் ஆவண காப்பகத்தில் எடுக்கப்பட்ட தகவலுடன் சரியாக வருகிறது ..புங்கமுத்தூர் ..சின்னபொம்மன் சாலை ...கம்பளப்பட்டி ,மஞ்ச நாயக்கனூர் ...உப்பிலியனூர் ...மரச்சநாயக்கன் பாளையம் ..வழியாக கேரள முடிய எதுலப்ப மன்னன் எல்லை விரிவடைகிறது ...புங்கமுத்தூர் தேடலை முடித்துக்கொண்டு ...நமது சொந்தம் மதிப்புக்குரிய பெரியவர் .உடுக்கம்பாளையம் ரங்கசாமி நாயக்கரை சந்தித்தோம் ..அவர் கூறிய தகவல் ..திருமூர்த்தி மலை கருட கம்பம் ...கார்த்திகை திருவிழா அன்று உடுக்கம்பாளையத்தில் இருந்து விளக்குக்கு எண்ணெய் எடுத்து கொண்டு ஊர் நாயக்கர் முறைப்படி விளக்கு ஏற்றுவது மரபு ...இதுவும் நம் வரலாற்று தேடலில் களப்பணியில் கடந்த மூன்று வருடங்களாக கூறிய தகவல் சரியாக வருகிறது ...இன்று வரலாற்று தேடலில் இன்னும் தகவல் கிடைத்துக்கொண்டே உள்ளது ...இன்னும்எதுலப்ப மன்னரின் புத்தக விழா மற்றும் தேவராட்ட விழாவிற்கு ஒரு மாதம்  இருக்கும் நிலையில் வேகம் கூடியுள்ளது ...இது எல்லாம் தனிப்பட்ட தேடல் அல்ல நமது சமுதாய சொந்தங்களின் முழு ஓத்துழைப்பு இல்லாமல் நடைபெறாது ..நம் வழிகாட்டிய யாக உள்ள நம் சமுதாய தலைவர்கள் .இளைய சொந்தங்களின் ஆர்வம் ,நம் சமுதாயம் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல நல்ல மனம் படைத்தவர்கள் ..எதிர்கால நம் தலைமுறை நன்றாக இருக்கவேண்டும் வேண்டும் முழு மனதுடன் ,ஒத்துழைப்புடன் பணியாற்றி ...தகவல்களை திரட்டி கொடுத்து கொண்டுருக்கும் நம் சமுதாய சொந்தங்களுக்கும் ...வாழ்த்துக்களை தெரிவித்து  கொள்கிறேன் ...அன்புடன் ..சிவக்குமார் ...9944066681...வாட்ஸாப்ப் எண் ...







சனி, 10 மார்ச், 2018


என் அன்புக்கினிய குழந்தைகளின் சிறுவர் கதைகள் எழுதும் சென்னை நண்பர் - விழியன் Umanath Selvan...அவர்களின் அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தபோது ..ஷ்யாமின் மழலைப்பள்ளியில் பயிலும்போது ஆண்டுவிழா பற்றி சொல்லிக்கொண்டு இருந்தேன் அதை மலரும்மலரும் நினைவுகளாகவே பதிந்துவிட்டார் ..மழலையர் கதைகளில் அழகாக புத்தக வடிவில் கொண்டுவந்துவிட்டார் ...நன்றி ... 

மழலைப்பள்ளி ஆண்டுவிழா கொண்டாட்டம் என்பது...
திரை விலகியதும் ப்பே என்று மழலையின் கதறல்.. மேடையின் கீழிருந்து ஆசிரியர் அழாதே அழாதே என்று சமாதானம் செய்தும் வேலைக்கு ஆகவில்லை. இசை ஒலித்ததும் இடுப்பில் கைவைத்து நடமானத்துவங்கிவிட்டான் .
கைத்தட்டிக்கொண்டே தன்னத்தானே சுற்றிக்கொள்ள வேண்டும். சுற்றியவன் தன் பின்னால் இருந்த ஆண்டுவிழா பேனரைப் பார்த்து அப்படியே நின்றுவிடுகின்றான். இசை ஒலித்தபடியே இருக்கு அவன் பேனரில் தனக்கு தெரிந்த எழுத்துக்களை படித்துக்கொண்டே இருக்கின்றான்.
அரைவட்டத்தில் இருக்கும் குழந்தைகள் ஒவ்வொருவராக முன்னே வந்து தங்கள் நிறைத்தை காட்ட வேண்டும் வானவில் பாட்டிற்கு. ஒரு குழந்தை வெளியே வந்து வட்டத்தில் நிற்கவில்லை. இன்னொருந்தி வந்து போ போ லைனில் நில்லு என தள்ளி விடுகின்றான் ..
ஒரே ஒரு குழந்தை மேடையில் அழத்துவங்கியதும் தானும் அழவேண்டுமோ என்று மற்ற குழந்தைகளும் கண்ணில் நீர் கொண்டுவர முயற்சி செய்கின்றனர்.
திரைவிலகியதும் தன் பெற்றோர் எங்கே என தேடியது குழந்தை. கண்டுபிடித்து கை காட்டியபடியே நின்றது குழந்தை. ஆனந்த நீர்மல்க அமர்ந்திருந்தார் அம்மா .
பாடல் ஒலிக்க ஆரம்பித்ததில் இருந்து உடல் அசையவே இல்லை. முடியும் தருவாயில் ‘jump' என்ற வார்த்தை கேட்டதில் இருந்து குதிக்க ஆரம்பித்தவன் பாடல் நின்றும் jumpக்கிட்டே இருந்தான்...
மழலைகளின் உற்சாகம் எளிதில் பற்றிக்கொள்ளும்.. பற்றிக்கொள்ளச்சொல்லும்...
திரும்ப திரும்ப.. திரும்ப திரும்ப... சொல்லிக்கொண்டே இருக்கலாம்..
மழலையில் தப்புகளில் இருக்கு அழகியலோ அழகியல்.



வெள்ளி, 9 மார்ச், 2018


கம்பளத்தார் பற்றி எழுதுன வரலாற பூரா படிச்சாச்சு.
சுமார் 8 வருடம் மேல் கடும் உழைப்பு இந்த சமூகத்தை பற்றிய தேடல் எனக்கு இருந்தது.
இந்த சமூகத்தின் பிளஸ், மைனஸ். இவர்களை பற்றிய நல்ல வரலாறு, நல்ல விமர்சனம். கெட்ட வரலாறு கெட்ட விமர்சனம் அனைத்தையும் படித்து இருக்கேன்.
ஜீபி கணக்கில் பல நூல்கள் எனது கம்யூட்டர் ல இருக்கு. யார் கேட்டாலும் தர தயார்.
மதுரை, விஜயநகர என பல அரசுகள் கம்பளத்தார் மரபினருடையது என்பதை தமிழக கம்பளத்தார்கள் அறிய காரணங்களில் ஒருவன்.
நாயக்கர் என்ற பட்டம் கொண்டவர்களில் ஆதிக்க பிரிவினர் கம்மவார்கள். அதே பட்டம் கொண்டவர்களில் சற்று எளக்காரமாக பிற சமூகத்தால் ஏழைகளாக பார்க்க படுபவர்கள் கம்பளத்தார்கள். இந்த சமூகத்தை ஆதிக்கத்துக்கு எதிராக பேச வைத்து தற்போது ஆதிக்க உணர்வு கொண்டவர்களே முற்காலத்தில் இருந்ததை போல அல்லாமல் தற்போது அனைத்து விசயத்திலும் கம்பளத்தார் இல்லாது செய்வது இல்லை என்ற நிலையை உருவாக்குவதில் தற்போது இணையதள இளைஞர்கள் என்றால் மிகையல்ல.
முதல் மோதல். இளம் வயது விதவைகள் மறுமணத்தை பற்றியதை தொடங்கி. இந்த சமூகத்தில் இதுவரை உள்ளுக்குள்ளேயே பேசி அடங்கிய கருத்தை பொது கருத்தாக மாற்றி விவாதம் செய்து பல பல இளைஞர்கள் இதெல்லாம் தவறு, நாம் பெண்களுக்கு எதிராக மட்டுமே செய்கிறோம் என்பதை புரிய தொடங்கி உள்ளனர்.
அதே போல மேலாடை அணியாமல் இருப்பது, பழைய பழக்கம் என்று சொல்லி மூட பழக்கங்களாக இருப்பது போன்ற பல கருத்துகளை விவாதம் செய்து வந்துள்ளேன்.
ஒரு காலத்தில் சாதி வெறி இருந்தது (சண்டைகள் இணையத்தில் நாரும்), பிறகு சாதியை விழிப்புணர்வு செய்ய நேரடியாக பேச தொடங்கினோம்.
தற்போது பல ஆயிரம் இளைஞர்கள் வந்து விட்டார்கள் அவர்கள் வரலாறு, விழிப்புணர்வு செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தற்போது சாதி வெறியை நீக்கி சமூக பற்றாக மாறியுள்ளேன்.
எல்லாம் புத்தகங்கள் செய்த தாக்கம் அதனால் வந்த மாற்றம்.
இதில் தவறு என்று ஏளனம் செய்பவர்கள் செய்யலாம் ஆனால் முன் இருந்ததை விட ஒடுக்கப்பட்ட கம்பளத்தார் மக்களை போன்ற சமூகத்துக்கு உதவி செய்யவே மனம் ஓடுகிறது.
புத்தகங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எனது வாழ்நாளில் நான் அனுபவித்து விட்டேன்.
பெண் ஏன் அடிமையானாள்
எங்கே போகிறது இந்து மதம்
பெரியாரிய சிந்தனை, பெரியார் எழுதிய குடியரசு நூல்
லிங்காயத்து சமூகமும், பசவண்ணரும்
கள்ளர் களின் வாழ்வியல் நெறிகள்
காவல் கோட்டம்
மனுதர்மம்
களப்பிரர் காலம்
ராணி மங்கம்மா என்ற புரட்சி பெண்
அம்பேத்கர் எழுதிய இந்துவாக சாக மாட்டேன்
குரான் முழுவதும் படித்து விட்டேன்
தற்போது அய்யா வைகுண்டரின் சாதி மறுப்பு நெறி யை படித்து கொண்டு வருகிறேன்.
புத்தகமே நண்பனாக உள்ளது.
ஆர்வம் ...இனப்பற்று ...பிரதிபலன் பாராத உழைப்பு ...களப்பணியில் ஈடுபடும் உற்சாகம் ...இவை எல்லாம் வேண்டும் ...

நமது அறக்கட்டளை குழு ..மாதாந்திர கூட்டம் தவறாமல் நடக்கிறது ...அறக்கட்டளைக்கு வருமானம் சீட்டு தொகை மூலம் வருகிறது ...தற்பொழுது நம் சொந்தங்களின் திருமண நிகழ்வுகளில் கலந்துகொண்டு..புதிய உறுப்பினர்கள் ,சேர்ந்து கொண்டு உள்ளார்கள் ..அதுவும் ..கார்த்தி SR ..திருப்பதி தேவராஜன் ,தமிழ் ...கார்த்தி திருப்பூர் ...ஆனந்த கொடுங்கியம் ..செந்தில் கொடுங்கியம் ...செந்தில் தினமலர் மாப்பிள ...வழக்கறிஞர் சிவரஞ்சனி ஆகியோர் தவறாமல் கலந்து கொள்கின்றனர்  அறக்கட்டளையை பெயரை கம்பள விழுதுகள் ,கிளைகள் ..பரப்பி கொண்டுதான் உள்ளனர் ...தொய்வு எங்கே ...

கவலை பட வேண்டியது இல்லை ...அவரு இருக்கிறது ...மும்பை பக்கம் ...அவரால் வீட்டுக்கு வருவதே ...3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை வரலாம் ...அவரை சிரம படத்தவேண்டாம் ..செய்த பணிகள் ,அவரிடம் தெரிய படுத்தினால் போதும் ...பக்கத்தில் இருக்கிற ஊரில் இருந்து வந்து ...நம் அறக்கட்டளை பணியை செவ்வனே செய்தால் இன்னும் வளர முடியும் ..அறக்கட்டளை பணி என்பது சமுதாய சேவை ..இதில் பொது நலன் கருதி ..மற்றவர்களுக்கு உதவ முடியும் ..திட்டங்கள் ஏட்டு அளவில் உள்ளது ..முதலில் அவர்களின் ஜீவாதாரண பணிக்கு அப்பாற்பட்டு வேலையை செய்யவேண்டும் ...நான் நன்றாக இருந்தால் தான் ...அறக்கட்டளைக்கு ஆத்ம,மனதளவில் பணியாற்ற முடியும் ...
ஜஸ்ட் ரிலாக்ஸ் பிளீஸ்: 2 விதமான மக்கள்.!
1. வாழ்க்கையில ரொம்ப நல்ல நிலை வர்ற வரைக்கும், ஆடம்பரம் என்பது தேவையில்லாத ஒண்ணுதான். ஆனா, அதுக்காக ரொம்ப அல்பத்தனமாகவும் போக கூடாது.! கடன் வாங்கி, லோன் வாங்கி கார் வாங்க வேண்டியதில்லை தான்.! அது நமக்கு அவசியமில்லாமல், பகட்டுக்காக இருக்கும் பட்சத்திலும், நமது ப்ரொபஷனல் இமேஜ் ( ப்ரேக் ஈவன் எல்லாம் தாண்டிய பிறகு), மற்றும் பணி & வியாபாரத்துக்கு அது முக்கியம் எனில்,தவறு இல்லை என்பது விஷயம் தெரிந்தவர்களின் கருத்து.!
2. சில விஷயங்களும் & நேரங்களும் மிக தரமானதை நமக்கு, சொந்தமாக்கும் போது மனது அதீத உற்சாகம் அடைகிறது.!2000 ரூபாய்க்கி ஷர்ட் வாங்கி போடுறது, திடீர்னு எப்போவாவது பர்ஸ்ட் கிளாஸ் ஏ.சி.ல ட்ராவல் பண்றது (அதுக்கு ப்ளேன்லயே பயணம் செய்யலாம்.!). வருஷத்துக்கு ஒரு தடவை நல்ல 5 ஸ்டார் ஹோட்டல்ல, ரெண்டு நாள் தங்கிட்டு வர்றது , இந்த மாதிரி விஷயங்கள்...யோசிச்சுப் பார்த்தா..."அட்டர் பணம் வேஸ்ட்" என்று தான் தோன்றும். ஆனால், மனதளவில் ரொம்ப புத்துணர்ச்சியாக உணர முடியும்.! காரணம்...அருமை நண்பர் ஒருவர், பணியின் காரணமாக இவை இலவசமாக கிடைத்த போதும், சொந்தமா காசை செலவு பண்ணியும், இதே மாதிரி செய்யக் கூடியவர். என்ன காரணம் என்று கேட்டேன். "மாமூ , உலகத்துல "தி பெஸ்ட்" என்று சொல்லப்படும், நல்ல விஷயங்களை நம மட்டும் அனுபவிச்சா போதுமா.? குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் செலவிடவேண்டும்.! நாம இப்போ இருக்கிற நிலைமைக்கு, நமக்கு 60 வயசுக்கு மேல‌ தான் ஓய்வுவும், மனசும் வரும்.! ஆனா, அனுபவிக்க தெம்பு கிடைக்காது.. சம்பாதிக்கிறதுல,ஒரு பகுதிய நமக்கும், குடும்பத்துக்கும் மட்டுமே செலவழிக்கிறேன்...என்றார். யோசிச்சு பார்த்தா சரித்தான்.!
3. இன்னொருத்தர், 100 ரூபாய் பீரை...1800 ரூபாய் கொடுத்து,அங்கே போய் குடிக்கிறேயேடா....இது கொஞ்சம் ஓவர் இல்லையா.!
கஜல் பாட்டு கச்சேரி கேட்டுக்கிட்டு அங்கே வர்ற ஆளுங்களை பாத்துக்கிட்டு குடிக்கிறது ஒரு தனி சுகம். காலைல பப்பேட் பிரேக் பாஸ்ட்,உலகத்துலேயே பெஸ்ட் சாப்பாடு எல்லாம் கிடைக்கும். இப்படி வருஷத்துல ஒரு தடவை, தனியா போய் வருகிறார்.! என்னப்பா, நீயா இப்படி..! "நாளைக்கு நாம பெரிய ஆளு ஆயிட்டா, நமக்கு வர்ற கெஸ்ட்டுக்கு இந்த மாதிரி செலவழிக்கும்போது மலைப்பா இருக்காது பாரு" ங்கிறார். இதுவும் சரித்தான்.!
4. மேல சொன்ன லிஸ்ட் மாதிரி ஆளுங்க எல்லாம் நல்லாத் தான் இருக்கிறாங்க. படிப்பு, வேலை, சம்பளம் ( வருமானம்)...இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்.!நம்ம கோவை அவினாசி ரோட்டிலோ,அழகான வடவள்ளி ,தொண்டாமுத்தூரோலோ ...இல்லனா பசுமை மாற பொள்ளாச்சி ..அதுவும் இல்லனா ..நம்ம உடுமலைப்பேட்டையிலோ  நிலம் வாங்கி வீடு கட்டி இருக்காங்க.!. நமக்கு.! ஹௌசிங் லோன் அப்ரூவ் பண்ணவே, நூறு தரம் பேங்க் யோசிக்குது.! கேட்டால், வேணாம்.!
நம்பிக்கை இருந்தால்,நாமளும் இந்த மாதிரி முன்னேறி அனுபவிக்கலாம் என்று வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒருத்தர் சொல்றாரு.! பார்க்கலாம்.ம்ம்ம்.
5. இன்று பேஸ்புக் கர்டெய்ன் ரெய்சர் கிடையாது.! ஒரே ஒரு சங்கதி மட்டும். ப்ரெண்ட்ஷிப் ரிக்வெஸ்ட் வரும்போது, ம்யூச்சுவல் பெரெண்ட் லிஸ்ட்டில், நம்ம பேரு முத 10 ஆளுக்குள்ள இருந்தா, கன்பர்ம் பண்ணுவதற்கு முன் ஒரு முறை, மெசேஜ் அனுப்பியோ அல்லது போன் செய்தோ கேட்டுக் கொள்ளுங்கள். குறிப்பாக மகளிர். நிறைய போலி அய்.டி. மற்றும் இம்சை அரசர்கள், நம்மளையே வெறுப்பு ஏத்துறாய்ங்க. அப்புறம் உங்க இஷ்ட்டம். அடுத்த வெள்ளிக்கிழைமை இதே மாதிரி வேற ஒரு புலம்பலில் சந்திப்போம்.

அன்புடன் சிவகுமார் ...அழகான கனவு இல்லத்துக்கு   9944066681....
நினைவலைகள் ...2010...

Much awaited Palakkad - Trichur Highway Tunnel..To be opened soon..

பாலக்காடு -திரிச்சூர் ...குகை பாதை ..
நினைவலைகள் ...2010...
நானும் ஷ்யாமும்  காரில் ..யார்ன் வேஸ்ட் தொழில் முறை பயணமாக கோவையில் இருந்து பாலக்காடு ..திரிச்சூர் ...கோட்டயம் ..திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி முடிய ..இந்த திரிச்சூர் ஒட்டிய மலை வழியாக பயணம் செய்வோம் ..மலைப்பாதை ஒட்டி செல்லும் போது ..கார் பயணம் கொஞ்சம் கடினமாக இருக்கும் ...எதிர் வரும் கனரக வாகனங்கள் ,மெதுவாகவும் ,பஸ் ,சிறிய ரக வாகனங்கள் வேகமாகவும் செல்லும் ..கொஞ்சம் கவனமாக காரை ஓட்டவேண்டும் ..அதுவும் ஷியாம் சிறிய 3 வயது குழந்தை ...என் மடியில் இரண்டு கைகளுக்கு இடையில் அமர்ந்து கொண்டு காரை ஓட்டுவது கொஞ்சம் சிரமமான காரியம் ..ஷ்யாமை முன்சீட்டில் உட்காரு என்றாலும் அமரமாட்டார் ...கொஞ்சம் வேடிக்கை ஏன் என்றால் வேடிக்கை பார்க்க அவருடைய உயரம் என் மடியில் உட்காருவதால் கூட இருப்பதால் ...அவரின் சந்தோசதற்கு அளவு இருக்காது ...அப்படி ஒரு நெருக்கம் ...வசதி .....இப்பொழுது இந்த குகைப்பாதை வேலை முடிந்து திறப்பு விழா ..மக்கள் பயன்பாட்டுக்கு வருவது மகிழ்ச்சி ...இந்த செய்தி ..புகைப்படம் பார்த்தவுடன் என் நினைவலைகள் மறுபடியும் திரும்பியது ...விரைவில் இந்த குகை பாதையில் பயணத்திற்கு காத்துகொண்டு இருக்கிறேன் ...

அன்புடன் சிவக்குமார் ....
மகளிர் தினம் -மார்ச்-8-2018...
கம்பள சமுதாயத்தில் பெண்கள் -கல்வி -வேலைவாய்ப்பு

நம் சமுதாயத்தில் பெண்கல்வி க்கு தற்பொழுது கால கட்டங்களில் பெருமதிப்பும் வாழ்க்கையில் வளர்வதற்கான பெண்கள் கல்வி மிக அவசியம் என்று உணர்நது நம் பெற்றேர்கள் கல்வியை அளித்திருக்கிறார்கள் ..
அப்படி நமது கம்பள சமுதாயத்தில் ஒரு மைல் கல்லாக உன்னத உறவுகள் என்று வாட்ஸாப்ப்ஸ் குழு அருமையாக வடிவமைத்து ...முன்னேற்ற கருத்துக்கள் ,கல்வி,வேலைவாய்ப்பு ,நம் கோவில் திருவிழாக்கள்,திருமண நிகழ்வுகள் ,கலந்துரையாடல் நிகழ்வுகள்  என்று தினம் ஒரு செய்தி ..அழகா ,அற்புதமாக கம்பள சமுதாய சொந்தங்கள் கூடி மகிழும் குழு "உன்னத உறவுகள் "..இதை மிக அற்புதமாக வழிநடத்திக்கொண்டு இருப்பவர் ..நமது அண்ணன் -திரு .பெருமாள்சாமி அவர்கள் -தமிழக மின்வாரிய துறையில் உயர் பதவியில் இருப்பவர் ..(மொபைல்  எண்-( 98422-93780)...இவரை மொபைலில் தொடர்பு கொள்ளும்போது ..பேசும் போது ...பணிக்கு இடையூறு இல்லாமல் நம் சொந்தங்கள் பேசுமாறு கேட்டுக்கொள்கிறேன் ...அரசு பணி கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் குழு ..அதிகம்  உடுமலைப்பேட்டை சுற்றி இருக்கும் நம் சொந்தங்கள் ,தேனீ சொந்தங்கள் அதிகம் உள்ளனர் ..பெண்கல்வியில் அதிகம் எங்கு இருக்கிறதோ அங்கு ..நம் சொந்தங்களின் வளர்ச்சி ,முன்னேற்றம் ஆகியவற்றிக்கு பஞ்சம் இருக்காது ...
இவரின் குழுக்களில் அதிகம் கல்வியில் ,வேலைவாய்ப்பில் உள்ளர்வர்களே அதிகம் ...இது நம் கம்பளசமுதாயதற்கு ஒரு முன்னோடி ,வழிகாட்டியாக உள்ளது ...அதுவும் நம் பெண்கள் எந்த அளவிற்கு முன்னேறியுள்ளார்கள் என்பதையே காட்டுகிறது ...

1.பத்மா பெருமாள்சாமி-Msc Nursing - Lecturer kmch- கோயமுத்தூர்

2.மல்லிகா பாலகிருஷ்ணன் B.sc., B.Ed அரசு பள்ளி ஆசிரியை -உடுமலை

3.சத்தியவாணிமுத்து ராமசாமி- DEEE- JE TNEB- உடுமலை

4. அஞ்சனாதேவி சிவா -M.sc., Nursing - சென்னை

5.ஜெயந்தி செந்தில்குமார் B.sc Nursing - GH - உடுமலை

6.இராதாமணி திருமலைசாமி- M. E .
CIVIL - Lecturer-  கோவை

7.ரேவதி கிருஷ்ணன்   DECE- karpagam university- கோவை

8.கலைச்செல்வி ராஜேந்திரன் B.sc., B.Ed ஆசிரியை-உடுமலை

 9. பிரபா ஜெயராஜ்(SI Police)அரசு பள்ளி  ஆசிரியை
10.ஹரிணி ஜெயராஜ்  B.E.. student - கோவை

11. சுபலட்சுமி சிவசக்தி- B.E.., சென்னை

12. முருகன் மல்லையா அவர்கள் பெண்   MBBS - தேனி

13.கலையரசி பாண்டி   M.Sc B.Ed. அரசுபள்ளி ஆசிரியை- ஒட்டன்சத்திரம்

14. கலைச்செல்வி ரங்கசாமி M.sc - தஞ்சாவூர்

15. ஓவியா வசந்தன் B.E.,  தென் கொரியா

 16.  பேபிராணி கண்ணன்- அங்கன்வாடி பணி- கோபால்பட்டி' திண்டுக்கல்

17. சுமதி வேல்சாமி- B.A.- சீர்காழி
18. சீபால் கனகராஜ் - DTT- உடுமலை
19. ராஜவேணி கனகராஜ் - B.A - துங்காவி
20. பாரதிபிரியா கௌதம் B.E. IT field - bangaluru..

நமது உன்னத உறவுகள் குழுவிற்கு என் மனமார்ந்த மகளிர் தினவாழ்த்துகள் மற்றும் திறம்பட குழுவை நிர்வகித்து வரும் அண்ணன் திரு .பெருமாள்சாமி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் ...





புதன், 7 மார்ச், 2018

மகளிர் தினம்....மார்ச் 8...2018...

மகளிர் தினம்
அதிகாலை எழுந்து
வீட்டு வேலைகளை முடித்து
பிள்ளைகளையும் கணவரையும்
கவனித்து அனுப்பி
மாமியாருக்கும் மாமனாருக்கும்
சமைத்து வைத்து
அலுவலகம் சென்று
நாள் முழுவதும்
உழைத்து களைத்து
வீடு திரும்பியதும்
மாமியாரின் குத்தல் பேச்சுகளுக்கு
மறுமொழி கூறாமல் மௌனித்து
மாமனாரின் அதிகாரங்களுக்கு
அடிபணிந்து அடங்கி
கணவரிடம் வேண்டி கெஞ்சி
அனுமதி பெற்று
சமைத்து முடித்து கிளம்பி போகிறாள்
மகளிர் தின பட்டிமன்றத்தில்
மேடை ஏறி பெண் விடுதலை
பற்றி முழக்கமிட .........

நம் கம்பள சமுதாயத்தில் பெண்கள் ...

செல்வி .சிவரஞ்சனி -வழக்கறிஞர் -கோவை 

கல்வியில் முதுகலை மற்றும் வழக்கறிஞர் படிப்பு ..நம் சமுதாயத்தின் வளரும் வழக்கறிஞர் ..இவரிடம் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி வளர்ந்து வருபவர் ..தன் தந்தையின் கனவை நிறைவேற்றியவர் ..கனவு நிறைவேறும்போது ..அருகில் தந்தை இல்லை ..அவரின் ஆத்ம ,ஆசியும் எப்பொழுதும் உண்டு ..கம்பள விருட்சத்தின் முதல் உறுப்பினர் ...செயல் துணைத்தலைவர் ..பொறுப்பாக தன பணியை செவ்வனே செய்து வருபவர் .இவரின் அரசியல் குரு ..வைகோ அவர்கள் ..ம தி மு கா ..கோவை வழக்கறிஞர் பெண்கள் அணியில் முக்கிய பொறுப்பில் உள்ளது எங்களுக்கு பெருமையே.. 

திருமதி .சுமதி மோகன் -கடவூர் இளவரசி 
கல்வியில் ..முதுகலை பட்டம் பெற்றவர் ..நமது சமுதாயத்தின் கலாச்சாரம் ,பண்பாடு ,கல்வி ,தொழில் முன்னேற்ற கருத்துக்கள் ..வாழக்கையில் வளர்வதற்கான சிந்தனைகள் ,ஆலோசனைகள் ,வழங்கி நம் சமுதாய மக்களுக்கு வழிகாட்டியாக உள்ளார் ...கம்பள விருட்சம் அறக்கட்டளையில் உறுப்பினர் ,கௌரவ ஆலோசகராக உள்ளார் . ..இவரின் இன்னும் வரலாற்று சிறப்பு மிக்க தகவல்களுடன் சில தினங்களில் பகிர்கிறேன் .

திருமதி .நீலவேணி ரமேஷ் -பேராசிரியர் -உடுமலை 
கல்வியில் முதுகலை பட்டம் பெற்றவர் ..இவர் GVG பெண்கள் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார் ..இவர் கம்பள சமுதாய  தளத்தில் அதிகம் வருவதில்லை..கல்லூரி சேருவதற்கு செல்லும்பொழுது அங்கு சேருவதற்கான தன்னாலான உதவிகள் செய்து தருவார் ..கல்வி சம்பந்தமான மேற்படிப்பு தகவல்களை தந்து நம் சமுதாய மக்களுக்கு உதவிகள் செய்து தருவார் ..
திருமதி .சத்யா ஷியாம் சுதிர் ...-தனியார் துறை -கோவை 
கல்வியில் ..முதுகலை பட்டம் பெற்றவர் ..நல்ல திறமைசாலியான ,தைரியம் மிக்க பெண்மணி ...கடந்தகாலங்களில் திருமணத்திற்கு பின் ...பெண் தொழில்முனைவோராக இருந்தவர் ..இமயமலை அளவுக்கு வாழ்க்கையில் உயர்நதவர் .. தனியார் நிறுவனத்தில் தற்பொழுது பணிபுரிந்து வருகிறார் ..இவரிடம் தையரியத்தையும் ,விடாமுயற்சியும் கற்று கொள்ளலாம் .

திருமதி .காயத்திரி செந்தில்குமார் -விவசாயம் -அடிவள்ளி 

கல்வியில் முதுகலை பட்டம் பெற்றவர் ..பட்டப்படிப்பு பெற்றதும் பணிக்கு செல்லாமல் ..விவசாயம் என் உயிர் மூச்சு ..என்று தற்பொழுது புது புது விவசாய தொழில்நுணுக்கங்களை கற்று ..விவசாயத்தில் பசுமை புரட்சியை செய்துகொண்டுள்ளார் ...தற்காலத்தில் விவசாயத்தை மறக்கும் சூழ்நிலையில் தன் கடுமையான உழைப்பின் மூலம் வளர்ந்து வருவது எங்களுக்கு பெருமை ..இவரும் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் புது உறுப்பினர் ..

திருமதி .செல்வி விஜயகுமார் -தொழிலதிபர் -உடுமலை 

கல்வியில் இளநிலை பட்டம் பெற்றவர் ..இவர் சமையல் எரிவாயு நிறுவன முகவர்  உடுமலைப் பகுதியில் சமையல் எரிவாயு வினியாகஸ்தர் ..தன் கடுமையான உழைப்பின் மூலம் தன் கணவருடன் சேர்ந்து வளர்ந்து வரும் பெண்தொழில்முனைவோர் ..இவரிடம் சுறுசுறுப்பும் ,விடாமுயற்சியையும் கற்று கொள்ளலாம் ..

தங்கபெண்மணி திருமதி .செல்வராணி செந்தில்குமார் -Cluster facilitater   (தொகுப்பு வழி நடத்துனர் )-உடுமலை ஜிலேபி நாயக்கன் பாளையம் ..
தேனீ என்றவுடன் நம் நினைவுக்கு வருவது சுறுசுறுப்பு ...வீரம் விளைந்த மண் ...வீரம் மிகுந்து ஊரின் அருகில் இருக்கும் தம்மநாயக்கன்பட்டி யில் இருந்து ..ஜில்லேப்பா நாயக்கன்பாளையம் ஊருக்கு மருமகளாக வந்து நம் கம்பளசமுதாயத்தில் எரிசனம்பட்டியில் சொந்தமாக தையல் கூடம் அமைத்து ..பயற்சி அளித்துக்கொண்டு சிறந்த சிறு பெண் தொழில் முனைவோராகம் ,அரசு ஊரக வளர்ச்சி துரையின் கீழ் இயங்கும்குழுவில்  நம் ராஜகம்பள சமுதாயத்தில் ஒரு தங்கபெண்மணி திருமதி .செல்வராணி செந்தில்குமார் - Cluster facilitater   (தொகுப்பு வழி நடத்துனர் ) அவர்களை சந்தித்தேன் ..நம்ம மாப்பிளை கார்த்தி SR அறிமுகம்  செய்துவைத்தார் ..நம் சமுதாயத்தில் ஆரவாரம் இன்றி  அமைதியாக .இத்துறையில் எரிசனம்பட்டியில் சுற்றி இருக்கும் பொது மக்களுக்கு  இத்துறையை கொண்டு சேவை செய்து வருகிறார்..கம்பள விருட்சத்தின் உறுப்பினர் ..நம் சமுதாய சொந்தங்களுக்கு தொழில் முனைவு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார் .. 

திருமதி .கார்த்திகேயனி முருகராஜ் -தொழில்முனைவோர் -பொம்மு xerox .வழக்கறிஞர் அலுவுலகம் -திருப்பூர்

தன் குழந்தைகளுக்கு ஒரு முன்னேற ஒரு முன்னோடியாக வழிகாட்டியாக இருப்பது ..இப்போது இருக்கும் காலகட்டத்தில் ...சமுதாயத்தில் ..பெரியவர்களை மதிப்பதும் ..நண்பர்களின் சிறந்த நட்புகளை பெறுவதும் ..வாழ்வியலுக்கு சரியான புரிதல்கள் இருக்கும் ..அதனால் தான் ..தன் குழந்தைச்செல்வங்கள் ..கார்த்திகேயனி முருகராஜ் அவர்கள்  ,தன் ..அலுவுலகம் ..வீட்டுப்பொறுப்புகள் கவனித்து கொள்கிறார்  ,ஒரு மகள் பல் மருத்துவர் ,இரண்டாவது மகள் பள்ளிப்படிப்பு முடித்து தன் தொழில் வாரிசாக வழக்கறிஞர் தொழில் படிப்பு ,தன தங்கையின் மகள் .என்ஜினீயர் ..கல்வி தகுதியின் மூலம் ..நம் கம்பள சமுதாயத்தில் ஒரு முன்னோடியாக வலம் வரமுடிகிறது ...நம் பெற்றோர்கள் ,முப்பாட்டன்கள் எல்லோரும் கூலி வேலை செய்து ..கல்வி என்ற சொத்தை கற்றுக்கொடுத்து ,தான் சேர்க்கும் சொத்து கூட ஒரு கட்டத்தில் அழிந்து போகலாம் ..கல்வி எந்த சூழ்நிலையிலும் தான் இருக்கும் வரை அழிக்க முடியாது .. ..வாழ்க்கையை கற்றுக்கொடுக்கிறார்கள் .. இந்த புகைப்படத்தை பார்க்கும் போது ..நம் சமுதாயத்தில் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது ..கம்பள விருட்சத்தின் புது உறுப்பினர் ..

ஜெகதீஸ்வரி ஜோதிமுத்து அவர்கள் சிறு அறிமுகம்
Lic Agent &  Central Bank Villege Service Centre Incharge at மைவாடி(Myvaadi )


நம் கம்பள சமுதாயத்தில் ஜெகதீஸ்வரி அவர்கள் 1993 ஆண்டின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 446/500 மதிப்பெண் பெற்ற மாணவி...  அதிகபட்சமானது அப்பொழுது.   இவர் கல்வியினால் இப்பொழுதும் ...தன் சுற்றியிருக்கும் கிராம மக்களுக்கு பொதுநலப்பணிகளையும் ...நம் சொந்தங்களுக்கும் ...தற்பொழுது கம்பள விருட்சத்தின் ஆலோசனை குழுவில் வழிகாட்டியாக உள்ளார் என்பது கூடுதல் செய்தி ...

திருமதி கோமதி மணி -முன்னாள்  கிராம பஞ்சாயத்து ஆலோசகர்-உடுமலைப்பேட்டை -பெரியகோட்டை
இவர் பள்ளி படிப்பு ..பெரியகோட்டை கிராம பஞ்சாயத்து வார்டு ஆலசோகராக பணிபுரிந்து உள்ளார் ..இவரின் பணிகள் நல்ல திட்டங்கள் மூலம் அந்த கிராமங்களுக்கு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளார் .

திருமதி ஆண்டாள் சந்திரன் -பஞ்சாயத்து போர்டு தலைவர் -ஜிலேபி நாயக்கன்பாளையம் -

கல்வி பள்ளிப்படிப்பு ...இவரின் பணிகள் நம் சமுதாயம் அதிகம் உள்ள மக்கள் கொண்ட jn பாளையத்தில் ..வளர்ச்சிக்கு உறுதுணையாக பணியாற்றி உள்ளார் ..
திருமதி .சுசிலா -முன்னாள்  கிராம பஞ்சாயத்து ஆலோசகர்-உடுமலைப்பேட்டை -பெரியகோட்டை
கல்வி பள்ளிப்படிப்பு ..இவர் பெரியகோட்டை கிராம மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளார் ..இவர் தனியார் பஞ்சாலை நிறுவனத்தில் பணி செய்துகொண்டு ..தங்கள் ஊரில் இருக்கும் பொது மக்களுக்கும் ,நம் சொந்தங்களுக்கும் தனியார் வங்கிகளில் சுய உதவி குழுக்கள் நிதியை பெற்று இன்றைய காலகட்டத்துக்கு பொருளாதார நிதி  உதவி செய்துகொண்டுள்ளார்.இவர் கம்பள சமுதாயத்தில் வரன் தேடுபவர்களுக்கு .வர பிரசாதமாக நல்ல படித்த ,படிக்காத இளைய சொந்தங்களுக்கு திருமண ஜாதகம் பெற்று பரிமாறி கொண்டு இன்று முடிய நல்ல நிலையில் வாழ்க்கையை அமைத்து கொடுத்துள்ளார். இவரின் கம்பள சமுதாய பணி ஈடுஇல்லாதது ....

செல்வி .பிரேமலதா -தனியார் துறை -உடுமலை பாப்பனுத்து

கல்வியில் இளநிலை  பட்டம் பெற்றவர் ..இவர் நமது கீர்த்திவீரர் வீரர் எதுலப்பர் வாட்ஸாப்ப் குழு ஆரம்பித்து நம் சமுதாய சொந்தங்களை ஒருங்கிணைக்க மதிப்பு மிக்க பகிரளி மூலம் உலகம் முழுவதும் உள்ள கம்பள சொந்தங்களை இணைத்து இன்று பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கும் குழுவிற்கு இவரின் சரியான படைப்பாற்றல் ,யோசனை வெகு அருமை ..யாரும் சிந்திக்காத சிந்தனையை உருவாக்கி கம்பள செய்திகளை பரிமாறி கொண்டிருப்பதற்கு இவரின் மதிப்புமிக்க யோசனை என்றும் மறவாது ..

செல்வி .மகாலக்ஷ்மி -தனியார் துறை -உடுமலைப்பேட்டை -கரப்பாடி
கல்வியில் இளநிலை பட்டம் பெற்றவர் ..தற்பொழுது தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் ..நம் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் முதல் உறுப்பினர் ...ஆரம்பித்தது முதல் இன்று வரை நம் அறக்கட்டளையின் செயல்களுக்கு பக்க பலமாக இருந்து பணிபுரிந்து வருகிறார்

நம் கம்பள சமுதாய பெண் தெய்வங்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்

நாளையும் தொடரும் ...உங்களின் சிவக்குமார் ...உடுமலைப்பேட்டையிலிருந்து ....9944066681...வாட்ஸாப்ப் எண் ...


.

ஞாயிறு, 4 மார்ச், 2018

உடுமலைப்பேட்டை கொடிங்கியம் - கடவூர் காமாநாயக்கனூர் ..-திருமண விழாக்கள்

நேற்று மாலை முதல் கொடிங்கியம் கிராமத்தில்  தொடங்கிய நம் கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் சார்பாக நம்ம மாப்பிளைகள் ,தம்பிகளுடன் தொடங்கிய பயணம் நம் சொந்தங்களை பார்த்து பேசி ,வெகு அமர்க்களமாக மகிழ்ச்சியுடன் அமைந்தது ..நம்ம புது மாப்பிள பெருமாள்சாமி -வசந்தப்ரியா திருமண வரவேற்பு நிகழிச்சியில் ..நம் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் ,செயல்தலைவர்கள் கலந்துகொண்டு இனிப்புடன் குழந்தைச்செல்வங்களுடன் பகிர்ந்து வாழ்த்துக்களை சொல்லிவிட்டு வந்தது அருமை ..பெருமாள்சாமி மாப்பிள ..கோவையில் பொறியியல் துறை நிறுவனத்தில் பணிபுரிந்து வாழ்க்கையில் படி படியாக முன்னேற்றமடைந்து வளந்துவருவது திறமையுக்கு எடுத்துக்காட்டு ..மாப்பிள மின்னணு பொறியியல் துறையில் 10 வருடங்களுக்கு மேல் கடுமையான உழைப்பின் மூலம் நம் சமுதாய மக்களுக்கு வழிகாட்டியாக உள்ளார் ..மேலும் வாழ்க்கையில் வளம்பெற வாழ்த்துக்கள் .

இன்று காலை நேரப்பயணம் -மாப்பிள கண்ணன் -அனிதா அவர்களின் திருமண நிகழ்வு .....உடுமலையிலிருந்து கிழக்கே உதிக்கும் தங்கநிறமான சூரிய ஒளிவரும் திசைநோக்கி நம்ம மாப்பிள கார்த்தி SR ..நம்ம திருப்பதி தேவராஜன் மாப்பிள்ளையுடன் மற்றும் நம் கம்பள வரலாற்றை வெளிக்கொண்டு வரும் உடுமலை வரலாற்று நடுவம் திரு .அருட்செல்வம் அவர்களுடன் பயணம் அதுவும் சுற்றிலும் மலை சூழந்த பசுமை போர்த்திய விளைநிலங்கள் பயணம் வெகு அருமை ..கண்ணன் மாப்பிளை முகநூலில் தான் கடந்த 5 வருடங்களுக்கு மேல் நட்பு வட்டத்தில் இருந்தவர் ..நேரில் பார்த்தது கூட கிடையாது...மாப்பிள்ளை நிதியில் மற்றும் விவசாய துறையில் தன் கடுமையான உழைப்பின் மூலமும் வாழ்க்கையில் உன்னத நிலைக்கு வந்தவர் ..கண்ணன் மாப்பிள அன்பான கம்பள சொந்தத்தின் மூலம் தான் நேரில் வந்து அழைப்பதில் கொடுத்து சென்றார் ...இதற்கும் நான் உடுமலை வந்தபொழுது உடுமலையில் இல்லை ..என் பாசத்துக்குரிய தம்பி ..நம் சொந்தங்கள் அறிந்த டிஜிட்டல் ராஜேந்திரன் அவர்களிடம் அளித்து விட்டு மறவாமல் வந்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றார் ..இது தான் ரத்த பந்தம் முகம் அறியா முதல் சொந்தம் ..தற்பொழுது பிறந்தமுதல் தெரிந்த சொந்தங்களே மறந்துகொண்டருக்கும் வேளையில் ...இவரின் திருமண நிகழ்வு எனக்கும் ,கம்பளவிருட்சம் அறக்கட்டளைக்கு பெருமைக்குரிய நிகழ்வு

இன்று திருமண விழா  காணும் இரண்டு சொந்தங்களுக்கும்  கம்பள விருட்சம்   அறக்கட்டளை  சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

சிறுகுறிப்பு :இரண்டு திருமண நிகழ்வுகளை முடித்து கொண்டு கடவூர் இருந்து வேடசந்தூர் வழியாக வரும் பொழுது ..உடுமலைப்பேட்டை முதல் தளமான கோட்டமங்கலம்  வல்ல கொண்டம்மன் அருளால தற்பொழுது மாரம்பாடி திருக்கோவிலை பார்த்து வணங்கி தரிசித்தது மனதிற்கு மகிழ்ச்சி ..மாரம்பாடி கோவிலில் இருந்து கிளம்பி கேதைஎறும்பு பிரிவை தாண்டியதும்  அடுத்த ஊரு காளாஞ்சிப்பட்டி தான் நமக்கு நினைவு வந்தது ..நம்ம மாப்பிள்ளைகளுடன் காரில் வரும்பொழுது அப்பொழுது தான்  அட நம்ம கடந்தவாரம் திருமணமான புது மாப்பிள விஜய் பற்றி பேசிக்கொண்டு வந்தோம் ..வழியில் காருக்கு பெட்ரோல் அடிப்பதாகக காரை பெட்ரோல் பங்கில் நிறுத்தும் பொழுது எதிரில் நம்ம புது மாப்பிளை விஜய் நிற்கிறார் ..இது தான் மாரம்பாடி கோவிலின் அருமை ...பழகிய சொந்தங்கள் மறக்கலாம் நாம் வணங்கும் தெய்வங்கள் மறப்பதில்லை ...மாப்பிளைக்கு திருமண வாழ்த்துக்களை சொல்லிவிட்டு அழகா காக ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு காளாஞ்சி பட்டியில் நம் சொந்தங்களின் விவசாய தோட்டங்களில் அந்திசாயும் வேளையில் வீடு திரும்பி கொண்டிருந்த  ஆட்டுக்குட்டி ,மாடுகள் ,டிராக்டர் பார்த்துவிட்டு நானும் ஷ்யாமும் விளையாடிய இடங்களை மறந்த நினைவுகளோடு பழனி எம்பெருமான் முருக கடவுள் அருளை வாங்கிக்கொண்டு உடுமலையை  வந்தடைந்தோம் .

நாளை ....வரலாற்று சிறப்பு மிக்க அரணமனை சொந்தங்களுடன் சந்தித்த நிகழ்வுகளுடன் ,அழகான பகிர்தலுடன் ...உடுமலைப்பேட்டைலிருந்து சிவக்குமார்




வெள்ளி, 2 மார்ச், 2018

சிலம்பம் பயிற்சியாளர் ...நெல்லை மணிகண்டன் ...9841917739


2004ல்  அண்ணன் ..நெல்லை மணிகண்டன் அவர்களால் தேவராட்டம் பயிற்சி கொடுத்து...நம் தேவராட்ட கலையை பிரேசில் நாட்டில் இருக்கும் திருமதி .இரானி - Irani Cippiciani அவர்களுக்கு கற்றுக்கொடுத்தது  பாராட்ட படவேண்டிய நிகழ்வு ...திருமதி இரானி  அவர்கள் தங்கள் நாட்டு குழந்தை செல்வங்களுக்கு சொல்லிக்கொடுப்பது ...ஒரு கலையை எப்படி உயிருக்கு உயிராக நேசிக்கிறார்கள் ..என்பது புரிகிறது ...பிரேசில் நாட்டு கலைஞர் ...பரதநாட்டிய கலைஞர் ஆவார்
நெல்லை மணிகண்டன் ...9841917739

Irani Cippiciani‎ to Nellai Manikandan
·
Dear master, a little bit of Devarattam in Brazil. I hope you like to see our improvisation.

Irani Cippiciani Thanks, master. All because your teachings and generosity. I wish to ser you soon in India.


சிறுகுறிப்பு :..நம் தேவராட்டம் ஆடும் நம் இளைய சொந்தங்களை ..நம் சொந்தங்களே தாழ்மை படுத்தி பேசுவது கொஞ்சம் வேதனை ...மற்றென்று ..வேட்டைக்கு போகும் நம் குழந்தை செல்வங்களை தங்கள் பெற்றோர்களே ..எங்க வேட்டைக்கு போய் ..நீ முன்னேறுவ என்று கடிந்துகொள்வது கொஞ்சம் வேதனையானது ...வேட்டைக்கு போகும்போது உடல் பயிற்சி ,சிந்திக்கும் திறமை ,குழந்தைக்கு வளரும் ..அவன் ஒன்றும் வேறு கெட்ட செயல்களில் ஈடுபடாமல் ...இருப்பதேமிக பெரிய விஷயம் .. இப்போது இருக்கும் காலசூழ்நிலை வேறு விதமாக இருக்கிறது ..நாம் அன்றாடம் காண்கிறோம் ..அல்லவா ...


இப்படி தான் சொல்லி சொல்லியே ..நம் கம்பள சமுதாயம் வளராமல் ...ஆண்டா பரம்பரை ...என்று குடிக்க கஞ்சி தண்ணி சாகா கிடக்கறோம் ......எங்கள் பகுதியை ஆண்ட பாளையக்காரர்
தளி எதுலப்ப நாயக்கரின் வரலாற்றை ...குழி தோண்டி புதைத்துவிட்டனர் ...நாங்கள் எங்களுக்கு இன்னும் சுதந்திரம் பெற்று விடியவே இல்லை ...ஒரு கலையை எங்கு பொது தளத்தில் கொண்டு வந்து ஆவணப்படத்தாவிட்டால் ...கம்பள சாதி என்ற இனம் இல்லாமல் உருக்கு உலைந்துபோய்விடும்

நம்மளை கலை கூத்தாடிகள் என்று சொல்லவேண்டாம் ...கொங்கு பகுதியில் நம் தேவராட்டத்தை ...அப்படியே ஆடி அவர்கள் கலையாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் ..இதற்கு ஒரே வழி பொது தளத்தில் கொண்டுவரவேண்டியது நம் கடமை ...தேவர்கள் தற்பொழுது அவர்கள் கலையாக கொண்டு போக பார்ப்பார்கள் ...இப்போது மாஸ் மீடியா வின் மூலம் எதையும் சாதிக்கும் திறன் உள்ளது ...நாமளே இப்படி காசுக்காக ..இப்படி சொல்வது தவறு ..எதையும் விலை வைக்காமல் கற்றுக்கொடுப்பது முட்டாள்தனம் ..ஏன் இத்தனை வருடங்கள் நம் கம்பள சமுதாயம் மற்றும் எதிலும் முன்னேறவில்லை ...நமக்கு நாமே எதிரிகள் தான் ......கற்று கொடுப்பவர்களை ஊக்கப்படுத்துங்கள் ...இல்லையென்றால் விட்டுவிடுங்கள் ...எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இன்னும் பத்து வருடங்களில் நம் இளைய தலைமுறை யாரும் இந்த கலையை ஆடமாட்டார்கள் ...ஏன் என்றால் இப்பொழுது படித்த ,படித்திக்கொண்டிருக்கும் இளையதலைமுறை தேவராட்டத்தை விரும்புவது இல்லை ....

மாப்பிள உங்கள் ஆரோக்கிய மான கருத்தைத்தான் சொல்லி இருக்கிறீர்கள் ..வெளிப்படையாக ..இதில் மன்னிப்பு  என்கிற வார்தை வேண்டாம் ...இப்படி கருத்து பரிமாற்றங்கள் இருந்தால் தான் ...நல்லது மாப்பிள ...வாழ்த்துக்கள் ...


2004 நாளில் திருமணம் ஆனபொழுதில் மலரும் நினைவுகள் ..

கணவனுக்கோ காதலுனுக்கோ தங்கள் மெயில் பாஸ்வேர்டை, ஃபேஸ்புக் பாஸ்வேர்டை கொடுப்பதன் மூலம் தங்கள் அன்பை, தங்கள் நம்பகத்தன்மையை நிருபிக்க முடியும் என்று பெண்கள் நம்புவது மிகக் கொடுமையான விஷயம்.
முதன்முதலில் எனக்கு ஏ.டி.எம் கார்டு வந்த போது, அது பற்றி சரிவர தெரியாமல் வீட்டில் ”அதை நீயா வைத்துக் கொள்ளப் போகிறாய்” என்றார்கள்.
அதற்கு நான்” ஆமா நா வெச்சிப்பேன்.சம்பளத்துல வீட்டுக்கு எவ்வளவு தேவையோ அத நான்தான் எடுத்துத் தருவேன்” என்றேன்.
இது கொஞ்சம் அதிகப்பிரசங்கிதனமாக இருந்தாலும் எனக்கான வெளியை தெளிவாக சொல்லும் ஒரு வரியாக எனக்குப் பட்டது.
இப்படியாக தன்னம்பிக்கையுடன் வெளியை எடுத்துக் கொள்ளும் போது உங்களின் பார்டனர் மிக அதிகமாக பதட்டமாகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதுபற்றியெல்லாம் கவலைப்படக் கூடாது.
பத்து வருடம் முன் என் சீனியர் ஒருவர் எனக்கு அடிக்கடி அட்வைஸ் செய்து கொண்டே இருப்பார்.
ஒவ்வொருமுறை அட்வைஸ் செய்யும் போதும் என் வெளியில் கொஞ்சம் எடுத்துவிட்டிருப்பார்.
ரொம்ப நாள் கழித்து இதை கவனித்தேன். ஒருநாள் அவரிடம் நேரடியாக “அக்கறையில் அட்வைஸ் பண்றது வேற. டாமினேட் பண்றதுக்காக அட்வைஸ் பண்றது வேற” என்றேன்.
அதிகமாக வேதனையடைந்தார்
“உனக்கு எவ்வளவு கெட்டப் புத்திடா” என்றார். இருக்கட்டும் ஒருவேளை அவரை வேதனைப்படுத்தியாதாகவே இருக்கட்டும். அப்படி செய்யாவிட்டால் நான் தினம் தினம் வேதனைப்பட வேண்டியதாக இருக்கும்.
டீன் ஏஜ் முடியில் நான் அப்பரண்டீஸ் வேலை பார்த்து சம்பாதித்த காசில் “மோகமுள்” நாவல் வாங்க எங்கள் வீட்டில் சிறு எதிர்ப்பு வந்தது. அதை வேண்டுமென்றே பூதாகரமாக்கி பயங்கரமாக சண்டை போட்டேன்.
நாவல் வாங்குகிறேன் வாங்கவில்லை என்பது இரண்டாவது பிரச்சனை. ஆனால் சுதந்திரத்துக்குப் பிரச்சனை வருகிறது.அதுதான் முதல் விஷயம்.
குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை முக்கியமான வேலை என்பதாக லீவு போடுவது போல எனக்கென்று ஒருநாள் லீவு அவ்வப்போது எடுத்துக் கொள்வேன்.
நான் மட்டும் தனியே லைப்ரரி செல்வேன். முடிந்த பிறகு ஒரு சினிமா பார்ப்பேன். நல்ல ஹோட்டலில் போய் சாப்பிடுவேன். எதாவது ஒவியக் கண்காட்சி போவேன். சும்மானாலும் எதாவது பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு வேடிக்கை பார்ப்பேன்.
இந்த ஸ்பேஸ் கிடைக்காவிட்டால் என்னால் மற்றவர்களிடமும் அன்பாக இருக்க முடியாது.
திருமணமான புதிதில்.கோவையிலிருந்து .சென்னை  சென்றிருந்த போது அங்கே பக்கத்து வீட்டில் ஃபர்னிச்சர்களை விற்கப்போவதாக சொன்னார்கள்.
மனைவி அந்தத் தகவலை இன்னொரு தமிழ் குடும்பத்துக்கு சொல்லப் போவதாய் சொன்னார்.
“ஒருவேளை அவுங்களுக்கு எதாவது சாமான் வேணுன்னா வாங்குவாங்க இல்ல”
எனக்குக் கடுப்பு.
“ம்ம்ம். நீ ஏன் இதுல தலையிடுற. அவுங்க வாங்குவாங்க. ஏதாவது உடைஞ்சிருக்கும். அப்புறம் குறை சொல்லுவாங்க”
“அப்படி ஏன் நாம நினைக்கனும்” இது மனைவி.
“தேவையில்லாத டென்சன இழுக்கறதே உன் பொழப்பு” என்ற ரீதியில் திட்ட ஆரம்பிக்கவும் மனைவி குறுக்கிட்டார்.
”ஏனக்கு சொல்லனுன்னு தோனிச்சி. சொல்லுவேன். இது ஒரு சாதரண விஷயம். இதுக்குள்ள இப்படியெல்லாம் உங்கள மாதிரி யோசிக்க தெரியாது. யோசிக்கவும் மாட்டேன். அது என் இஷ்டம். நீங்க ஏன் என்ன ஃபாலோ பண்றீங்க. என்னவும் செய்துட்டு போறேன். அதுல பிரச்சனை வந்துச்சுன்னா எனக்கு ஹெல்ப் பண்ண முடிஞ்சுதுன்னா பண்ணுங்க. அதுக்காக இப்படி இரு அப்படி இருன்னு சொல்லாதீங்க” என்று பதிலுக்கு கடித்துவிட்டார்.
நான் கோபத்தில் சட்டை எடுத்துப் போட்டு வெளியே கிளம்பிவிட்டேன்.
போய் ஒரு கரும்புச்சாறு குடித்து கொஞ்சம் சமாதானமாய் யோசித்த பிறகு அவர் சொன்னது உண்மை என்று தெரிந்து கொண்டேன்.
ஒரு சேரில் ரிலாக்ஸாக அமர்ந்தால்தான் அடுத்தவர் நலம் பற்றி யோசிக்க மூளை வேலை செய்யும்.
உட்காரும் போதே வெள்ளிக்கிழமை அன்ரிசர்வ்டு ரயில் கம்பார்ட்மெண்டில் அமர்வது போல நெருக்கடியாக உட்கார்ந்தால் அடுத்தவன் மேல் கோபம்தான் வரும்.
தசாவதாரம் கமல் ஒம் நமோ நாராயணன்னு சொன்னது மத அபிமானமா இல்லவே இல்ல. அது அவரு ஸ்பேஸ அடுத்தவன் எடுக்கிறதுக்கான எதிர்ப்பு குரல் கொடுக்கும் விஷயம்.
உங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்கள எல்லாம் விட்ருங்க.
அவுங்க ஸ்பேஸுக்குள்ள போகாதீங்க.
அப்படியே ஜஸ்ட் லைக் தட் விட்டுருங்க.
அது மாதிரி உங்க ஸ்பேஸ யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதீங்க.
ஒரே மிதியா மிதிச்சி வெளிய அனுப்பிருங்க..  
கம்பளத்தார் தேவராட்டம் ...

தற்பொழுது ...நம் சொந்தங்கள் இருக்கும் கிராமங்கள் ,ஆடும் நம் தேவராட்ட நிகழ்வுகளை ..வீடியோ எடுத்து ..youtube upload செய்து .. ..zaminkodangipatti ,அனுப்பன்குளம் ,தேனீ பகுதி ,கரூர் பகுதி .சேலம் பகுதி ..கோவை ,திருப்பூர் மாவட்டம் பகுதிகளில் இருக்கும் நம் சொந்தங்கள் மூலம் தேவராட்ட கலையை பகிர்வோம் ...கொஞ்சம் விழுப்புணர்வு செய்தியாகவும் ,கலையை வளர்க்காக இன்னும் ஆவணப்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும் ..கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக ...நம் சமுதாய தேவராட்ட கலைஞர்களுக்கும் ,உறுமி கலைஞர்களுக்கு ,கும்மி கலைஞர்களுக்கு ,நாடக கலைஞர்களுக்கும்  ,தமிழ்நாடு அரசு வழங்கும் இயல் இசை துறை மூலம் சான்றிதழ் வாங்கி அவர்களுக்கு வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்  ..இதன் மூலம் அவர்களுக்கு ..தன் இறுதி காலங்களில் அரசு வழங்கும் உதவி தொகை பெற்று பயனடையலாம் ..தற்பொழுது கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக  அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டுள்ளது..வாழ்த்துக்கள் ..

எங்கே போகும் இந்த பாதை ....யார் அறிவோரோ ...

நன்றி ...சேலம் விஜய் மாப்பிள ...youtube இல் பதிவேற்றம் செய்து பகிருங்கள் ..அதிலிருந்து முகநூலிலும் ,வாட்ஸாப்ப் ..லும் பகிருங்கள் ...நம் கம்பளத்தார் கலையை ...

குறிப்பு :.நம் தேவராட்ட கலைஞர்கள் ,உறுமி கலைஞர்கள் ..தகவல்களை சேகரித்து வையுங்கள் ...அரசுத்துறை முறை மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்திசெய்து ..துறைக்கு அனுப்பி அதற்கான உதவி தொகை வாங்க ஏற்பாடு செய்து கொடுக்கலாம் ..

வியாழன், 1 மார்ச், 2018

Raja Pandian is with G RRaja Kambalathan ErraGollavarkal and 6 others.

நமது கம்பளத்தார்கள் அடக்காமாயிருப்பர்.
அவர்களின் நிலையை,
சோம்பேறிகளின் நிலை என்று
எண்ணுவது தவறு.
ஞானிகளின் அறிவு அரசுக்கு
பயன்படும் காலத்தில் தான்
உண்மையான அரசாக
ஆட்சியை வகுக்கும்.
☼ இனி கம்பளத்தார்களே அரசுக்கு
தேவை. அதே சமயத்தில்
நன்மைக்குப் புறம்பானவற்றை
ஒழிப்பததில் கம்பளமக்கள்
ஆட்சியாளர்கள் பெற்றிருக்க
வேண்டும்.
☼ தமிழகத்தில் அரசியல்வாதிகள்
எல்லோரும் அரசியல்
தலைவர்களாக இல்லை.
அரசியல் வியாபாரிகளாக
மாறிவிட்டார்கள்.
☼ தக்க தலைவர்கள்
இல்லையென்றால்
மக்களிடையே எழுச்சி
உண்டாக்க முடியாது.
☼ உண்மையான தலைவன்
மாலையையும், தூக்குமேடைக்
கயிற்றையும் சமமாக மதித்து
ஏற்றுக் கொள்வான். அப்படி ஏற்றுக்கொண்டவர் தான்,என் முப்பாட்டன் வீரபாண்டிய கட்டபொம்மன் நமது கம்பள இனத்தில் ஒருவரை மட்டுமெ குறிபிட முடியாது தளி எத்திலப்பநாயக்கர், பூசாரிநாயக்கர், விருப்பாச்சிகோபல்நாயக்கர் இப்படி சொல்லிகொண்டே போகலாம் இனி கம்பளத்து பெண்களும் நமது கம்பளத்து இராணிமங்கமாள் மாதிரி நாமும் பல கம்பள அரசியல் அமைப்புகளுக்கு தோள் கொடுப்போம் .இராணிமங்கள் பெயரில் மகளிர் சங்கங்கள் தொடங்குவோம் வாழ்கா கம்பளம் வளர்கா கம்பளகாப்புகள்