புதன், 9 ஆகஸ்ட், 2017

நம்மவூரு நண்பர் ஷாஜஹான் சார் கிட்ட ...டெல்லியில் உள்ள உங்க வீட்டு பூனை குட்டிகள் எப்படி இருக்கு சார் ..னு கேட்டேன் ..ஒரு பதிவே பூனை பற்றி பதிவிட்டுள்ளார் ....நன்றி

சர்வதேச பூனைகள் தினம்

இன்று உலக பூனைகள் தினம். உங்கள் வீட்டுப் பூனைகள் எப்படி இருக்கின்றன என்று இன்பாக்சில் கேட்டார் நண்பர் ஒருவர். என் பதிவுகளை அவர் படிக்கவில்லை போலிருக்கிறது. மனதுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அப்புறம், “பாவம் இவனொரு பூனைகுட்டிக்காரன்” இன்னும் முடிக்காமலே வைத்திருக்கிறேன் என்ற நினைவு வந்தது. நூலாக வெளியிடாவிட்டாலும் ஈ-புக் ஆக வெளியிடலாமா என்ற யோசனை பிறந்திருக்கிறது. பார்ப்போம்.

புத்தகத்தில் நான் வளர்த்த பூனைகளைப் பற்றி மட்டுமின்றி பூனைகளைப் பற்றிய தகவல்களையும் நிறைய சேர்த்திருக்கிறேன். சில மட்டும் கீழே.

• பூனையின் மோப்ப சக்தி அபாரமானது. பூனையின் மோப்ப சவ்வு சுமார் 6 சதுர செ.மீ. அளவு இருக்கும் - மனிதருக்கு உள்ளதைவிட இரண்டு மடங்கு பெரியது. மனிதர்களின் மோப்பத் திறனைவிட 14 மடங்கு அதிகம்.
• பூனைகளுக்கு செவித்திறனும் அபாரமானது. எலிகள் போன்ற சிறிய உயிரினங்கள் எழுப்பும் மென்மையான ஒலியையும்கூட உணரக்கூடிய திறன் கொண்டது பூனை. அல்டிராசவுண்ட் ஒலிகளைக்கூட பூனைகளால் கேட்க முடியும் என்பதால்தான் அவற்றால் வேட்டையாட முடிகிறது. பாலூட்டும் விலங்குகளிலேயே மிகுந்த செவித்திறன் உடையது பூனை. அசையக்கூடிய காது மடல்கள், ஒலிகளை பெரிதுபடுத்தி உள்ளே அனுப்பவும், எந்தத் திசையிலிருந்து ஒலி வருகிறது என்று உணரவும் உதவுகின்றன.
• பூனையின் மீசை போன்ற மயிர்கள், தொடுகை மூலமாகவும், காற்றின் வேகத்தின் மூலமாகவும் ஒரு பொருள் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதை இருட்டிலும்கூட உணர்த்தக்கூடியவை. பூனைக்கு மீசை இருப்பது, நானும் நீங்களும் படம் வரையும்போது சுலபமாக கோடு இழுப்பதற்காக மட்டுமல்ல என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
• பூனையின் பார்வைத்திறனும் அபாரமானது. மனிதனுக்குத் தேவைப்படும் ஒளியில் ஆறில் ஒரு பங்கு ஒளி இருந்தாலும் போதும், இரவிலும்கூட அதனால் பார்க்க முடியும். நிறங்களைப் பிரித்தறியும் திறன் பூனைக்குக் குறைவு. பழுப்பு, மஞ்சள், நீலம் ஆகியவை தெரியும்; சிவப்புக்கும் பச்சைக்கும் வித்தியாசம் தெரியாது.
• பூனையின் கண்களுக்கு உள்ளேயும் மூடித் திறக்கும் இமை உண்டு. அது மட்டுமல்ல, மனிதர்களின் கண்களில் கருமணிக்கு நடுவே இருக்கும் பாவை (pupil) வட்டமாக இருக்கும். பூனைக்கு நெடுக்கை வசத்தில் நீளமாக இருக்கும். (சில பாம்புகள், முதலைகள், பறவைகளுக்கும்கூட நீளவாக்கில் இருக்கும்.) பாவை நெடுக்கை, நீள்வட்டம், வட்டம் என வெவ்வேறு வடிவங்களில் இருப்பது குறித்து 2015இல் வெளியான ஓர் ஆய்வறிக்கை இவ்வாறு கூறுகிறது : நெடுக்கைவசத்தில் நீளமாக இருந்தால் வேட்டையாடும் விலங்குகள், இரவிலும் பகலிலும் இயங்குபவை. படுக்கைவசமாக நீளவாக்கில் இருந்தால் இரையாகும் உயிரினங்கள். நெடுக்கைவசமான பாவை இருக்கும் உயிர்களுக்கு பார்வைத் தெளிவு இருக்கும், படுக்கைவசமான பாவை இருந்தால் குறிப்பிட்ட தொலைவில் இருக்கும் பொருட்கள் மங்கலாகத் தெரியும். அதன் காரணமாகவே வேட்டையும் எளிதாகிறது, இரையாவதும் எளிதாகிறது!
*
பண்டைய மதங்களில் பூனைகளைப் பற்றி பலவிதமான நம்பிக்கைகள் உலவுகின்றன. ஜப்பானில் ஆசிவழங்கும் பூனை பொம்மையை வைத்திருப்பது அதிர்ஷடம் என கருதப்படுகிறது. பூனை குறுக்கே போனால் அபசகுனம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. பல நாடுகளில், பூனைக்கு 9 ஜென்மங்கள் உண்டு என்று நம்புகிறார்கள். ஜெர்மனி, பிரேசில், கிரீஸ் போன்ற நாடுகளில் 7 ஜென்மங்கள் என்று நம்புகிறார்கள். இதன் அடிப்படை என்னவென்றால், பூனை அபாயகரமான சூழல்களிலும் உயிர் தப்பிவிடுவதுதான். உதாரணமாக, உயரத்திலிருந்து விழும் பூனை பிழைக்காது என்று நாம் நினைத்திருக்க, அது தன் உடலை லாகவமாகத் திருப்பி, கால்கள் தரையில் படும்படி அடிபடாமல் இறங்கியிருக்கும். 32 மாடியிலிருந்து விழுந்தாலும் உயிர் பிழைத்து விடும் என்று ஒரு செய்தியைப் பார்த்தேன். இதுவும்கூட அளவுக்கு மீறிய மூட நம்பிக்கைதான். பல சமயங்களில் கீழே விழுந்து அடிபடுவதும் உயிரிழப்பதும் உண்டு.
*
ஆய்வு செய்வதற்காக விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகளில் ஆரம்பத்தில் மனிதனை அனுப்ப மிகவும் அஞ்சினார்கள். குரங்கு, நாய், எலி, முயல் போன்ற விலங்குகளை அனுப்பினார்கள். சில விலங்குகள் வெற்றிகரமாகத் திரும்பி வந்தன. சில விலங்குகள் சில மணி நேரத்தில் இறந்து போனதும் உண்டு, இன்னும் சில விலங்குகள் சில நாட்களுக்குப் பிறகு இறந்ததும் உண்டு. பல விலங்குகள் ராக்கெட்டுகளோடு எரிந்து போனதும் உண்டு. 1963 அக்டோபர் 18ஆம் தேதி பிரெஞ்சு விண்வெளி ஆய்வாளர்கள் ஃபெலிசெட் Felicette என்ற பூனையை அனுப்பினார்கள். அது வெற்றிகரமாகத் திரும்பியும் வந்தது. அதற்கு அடுத்து பிரான்ஸ் மற்றொரு பூனையை அனுப்பியது, ஆனால் உயிரிழந்தே திரும்பி வந்தது. ஆக, விண்வெளிக்கு வெற்றிகரமாகச் சென்று திரும்பிய ஒரே பூனை ஃபெலிசெட் மட்டுமே. இதிலும் இன்னொரு சுவையான கதை உண்டு. உண்மையில் அவர்கள் அனுப்ப இருந்தது ஃபெலிக்ஸ் என்ற பூனை. அதற்குப் பயிற்சி கொடுத்திருந்தார்கள். ஆனால், ராக்கெட் ஏவப்படுவதற்கு சில நாட்கள் முன் அது தப்பியோடி விட்டது. பிறகு தெருவில் திரிந்து கொண்டிருந்த ஒரு பூனையைப் பிடித்து வந்து அனுப்பினார்கள். அதுதான் ஃபெலிசெட்

இதுபோல இன்னும் பல சுவையான செய்திகளைத் தாங்கி வெளிவர இருக்கிறது — பாவம் இவனொரு பூனைகுட்டிக்காரன். முகப்புப்படம் - சலீம்
*
எங்கள் வீட்டிலிருந்து சுரேஷ் பரதன், வனிதா எடுத்துச் சென்ற பூனை எப்படி “வாழ்கிறது” என்பதை முதல் கமென்ட்டில் இருக்கும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்க்கலாம்.

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

சிஞ்சுவாடி அரண்மனையார் ரங்கசாமி நாயக்கர் அவர்களின் மனைவி சரோஜினி அம்மாள் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் ...ஆழந்த இரங்கல்கள் .

குறிப்பு :
நமது வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக மாநில கொள்கை பரப்பு செயலாளர் ..தீபம் தண்டபாணி அவர்களின் பெரியம்மா ஆவார்கள் ..
நன்றி .விஷ்ணு சார் ....மலை பயணத்தில் சென்று எடுத்த புகைப்படங்கள் அருமை ..எதுலப்ப மன்னரின் அரசாட்சி ...பல சமுதாய மக்களை ஒன்றிணைத்து ...போர் கொத்தளங்கலங்களுடன் .பிரிட்டிஷாரை எதிர்த்து மக்களை காப்பாற்றி இருக்கிறார் ..தளஞ்சி பகுதியும் போர் பயிற்சிக்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்துள்ளார் ...நமது அமராவதி ராணுவப்பள்ளி கூட இதை மையமாக வைத்துதான் ஆரம்பித்தது ...இதை வரலாற்று நிகழ்வகளாக எப்படி வெளியிடுவது என்று தெரியவில்லை ..உங்களைப்போன்ற அரசு துறைசார்ந்த நபர்கள் சொன்னால் தான் உண்டு ..இதை செய்தித்தாளிகளில் வந்தால்தான் வெளிகொண்டுவரமுடியும் ...

சனி, 5 ஆகஸ்ட், 2017

கிராமத்து திண்ணை பேச்சு .......(Old Facebook)


இப்போது நமது கிராமத்து உறவுகளெல்லாம் ஃபேஸ்புக்,வாட்ஸஅப்ப்  வாயிலாக; திண்ணைப் பேச்சின் புதிய வடிவம். ஆனால், இது ஒரு போதை தரும் திண்ணை. அதன் வலையில் விழுந்தவர்களுக்கு அதன் முகத்தில் விழித்தால்தான் அன்றைய தினம் நகரும். அது ஒரு இலவச சாளரம்.........

முன்பு வீட்டில் பெரியவர்கள் இருப்பார்கள் இழுத்து வைத்துப் பேச. அவர்களும் காணாமல் போனார்கள். அவர்கள் இல்லாமல் போனதில் கதைசொல்ல இப்போது எவருமில்லை......இன்றில்லாவிட்டாலும் ஒருநாள் பேச்சுக்காக ஏங்கப்போகிறோம் நாம்.
திண்ணைகள் சொல்லும் ஆயிரம் நிஜ கதைகள் ...இனி திரும்ப வரா  நினைவுகள் — in தளி ஜல்லிபட்டி ...Udumalaippettai.

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

நம் கம்பள விருட்சத்தின் ஒரு மைல் கல் ...

நமது பாளையபட்டுகளில் பழமையானதும் பாரம்பரியத்தை தற்போதும் பாதுகாக்கும் கடவூர் ஜமீன் குடும்பத்தில் ...திருமதி .சுமதி மோகன் முத்தையா அவர்கள்  நமது விருட்சத்தின் அறக்கட்டளைக்கு நன்கொடையாக ரூபாய் .2000/- அளித்து உள்ளார் ..உங்கள் அறக்கட்டளைக்கு எதாவது உதவி என்றால் கேளுங்கள் என்று கூறியிருக்கிறார் .அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் ...அவரை வரவேற்போம் 🌿💐💐💐💐💐🙏🙏🙏🙏




வியாழன், 3 ஆகஸ்ட், 2017


என் சொந்தங்கள் ,என் ஷ்யாமை தவிர ..

என்னுடைய  மேல் அதிகாரிகள் ,உடன்பணிபுரிந்த பணியாளர்கள் ,நண்பர்கள் ,மனைவி இப்படித்தான் என்னை தினம் தினம் வாசித்து படித்தி எடுத்துவிட்டார்கள் ...இவ்வளவு காலம் வாசித்தார்கள் ....இனி நானே எனக்கு பிடித்த பாடல்கள் ,ராகங்களோடு வாசித்து பழகலாமே என்று முடிவெடுத்துவிட்டேன்

புதன், 2 ஆகஸ்ட், 2017

 ஆடி-18...... (உடுமலை-ஜல்லிப்பட்டி- தளி )ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.....
ஊஞ்சல்........ குழந்தைகளின் குதூகலம்....... !!!!!!! (தளி ஜல்லிபட்டி )







என் சிறுவயதில் ஆடி 18 யை தூரி நோன்பு  என்றுதான் அழைப்போம் ..ஒரு நாள் முன்பே ஜல்லிபட்டி கிராமத்திற்கு சென்றுவிடுவோம் .எப்பொழுத்தான் சீக்கிரம் விடியோமோ என்று எங்கள் பாட்டி வீட்டில் பெரிய நீளமான வீட்டின் முன்புறம் உள்ள குழந்தைச்செல்வங்களுடன் கதைகள் பேசி தூங்குவதற்கே இரண்டு மணி ஆகிவிடும் ...காலையில் பொம்மையன் கோவில் முன்பு ..பெரிய நடு மரங்கள் நட்டு ...பெரிய அகல மர பலகையிலான உட்காருவதற்கு வசதியாக அமைப்பார்கள் ...அதற்கு சந்தனம் குங்குமம் ,மாவில்லை கட்டி ,மஞ்சள் துணியில் நவதானயங்கள் உள்ளேவைத்து அந்த ஊஞ்சலுக்கு ..கோவிலில் பூஜை செய்து ...குழந்தைச்செல்வங்களுடன் முதன் முறையாக ஆடும்போது ... ரோல் கோஸ்டர் ,ஜயண்ட்வீல் எல்லாம் கொஞ்சம் தள்ளி நிற்கவேண்டும் ...கிராமத்து பெரியவர்கள் தோட்டத்து வேளைக்கு சென்று வந்த பின்னர் இரவில் ..ஊஞ்சல் ஆடி பாட்டு பாடி தங்களின் களைப்பை போக்கிக்கொள்வார்கள் .. ஊஞ்சல் அல்லது ஊசல் (swing) என்பது ஒரு உல்லாசப் பொழுதுபோக்கு விளையாட்டு ஆகும். இது சங்க காலம் தொட்டே ஆடப்படும் விளையாட்டுகளில் ஒன்று. உடுமலை கிராம பகுதிகளில் இதனைத் தூலி என்றும் தூரி என்றும் வழங்குகின்றனர். சிறுவர்கள் விழுதுகளைப் பிடித்துக்கொண்டு ஊஞ்சலாடுவர். மரக் கிளைகளில் கட்டப்பட்ட ஊஞ்சலில் அமர்ந்து சிறுவரும் சிறுமியரும் ஊஞ்சலாடுவர். தாமே காலால் உந்தி ஆட்டிவிட்டுக்கொண்டும், பிறர் ஆட்டிவிட்டும் ஆடுவர்.குழந்தை ஊஞ்சலில் ஆடும்போது இன்பம் கண்டு தூங்குகிறது. பெரியவர்கள் தாமே ஊஞ்சலாடி மகிழ்கின்றனர்....

முப்பது  வருடங்களுக்கு முன்பாகக் கூட ஆடி பதினெட்டு தினத்துக்காக மரத்தில் ஊஞ்சல் கட்டி தூரி ஆடியதுண்டு.

ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீடடில் இருக்கும் உபகரணங்களிலே அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.
முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி ஆனந்தமாக ஆடினார்கள்.
பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.
இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.
அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள்.
இப்பொழுதும் பசுமையாக எண்ணங்களில் வாழ்க்கை சக்கரத்தை நகர்த்திகொண்டுஇருக்கிறோம் ...நம் தலைமுறை குழந்தைகளுக்கு இதை மறவாமல் கொண்டுபோகவேண்டியது நம் கடமை ..பண்பாடு ..கலாச்சாரம் இதில் தான் உள்ளது ...இதை நம் குழந்தைச்செல்வங்களுக்கு கற்றுக்கொடுப்போமா ...??????????

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

ஊஞ்சல்

அட நம்ம மாப்ள ராக்ஸ் ....மகனை பிரிந்து வாழும் அப்பாவுக்கு தெரியும் இந்த வலிகள் ....ஊஞ்சல் 

திங்கள், 31 ஜூலை, 2017

 மகிழ்ச்சி ...


இன்று மாதக்கடைசி கடுமையான பணிசூழலிலும் ...நம் பண்பாட்டு கழக சொந்தங்களோடு சென்று மடத்துக்குளம் திரு .ஜெயராம கிருஷ்ணன் அவர்களை ...தளி எதுலப்ப மன்னரின் மணிமண்டபம் கட்டுவதற்காக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது .அதற்கு அவர் தக்க ஆவணங்கள் ,வரலாற்று ஆவணங்கள் கொண்டு வந்து தாருங்கள் ..இதை சட்டசபையில் பேசி கோரிக்கைவைத்து அதற்கான முயற்ச்சியை எடுக்கிறேன் என்று கூறியிருக்கிறார் ...

பண்பாட்டு கழக மாநில அமைப்பு செயலர் -திரு .அம்போதி அவர்களுக்கு புதிதாக பிறந்த ஆண் குழந்தை செல்வத்தை ..நிர்மலா பாலகுமார் மருத்துவமனையில் பார்த்தது பெருமகிழ்ச்சி ....

நம் பண்பாட்டு கழக இளைஞர் அணி தலைவர் .திரு .கருணாநிதி அவர்களை ...சிறு விபத்தால் சிறு காயங்களுடன் மயிரிழையில் தப்பித்தவரை பார்த்து ஆறுதல் அளித்து வந்தோம் ..

நம் கம்பள விருட்சம் உறுப்பினர் ..நம் சொந்தம் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று பயிற்சி ஈடுபட்டிருக்கும் ..காவல்துறையில் பணியில் சேரவிருக்கும் திரு .நந்தகோபால் அவர்களை நம் மடத்துக்குளம் mla திரு .ஜெயராம கிருஷ்ணன் அவர்களுடன் உரையாடவைத்தது பெரு மகிழ்ச்சி ...

ஞாயிறு, 30 ஜூலை, 2017



கம்பள விருட்சம் குழுமம் ....ஒருவருடம் முடிந்து ஆலமரமாக தன் கிளைகளை பரப்பிக்கொண்டுஇருக்கிறது ....பீனிக்ஸ் பறவையாக தன் இறகுகளை விரித்து ....இன்னும்  வேகம் கூடும் நம் இளையதலைமுறை வளர்ச்சி...ஆக்கபூர்வமான செயல்பாடுகளோடு ..... நன்றி B V B நந்தாகோபால் மாப்பிள்ளைக்கு

சனி, 29 ஜூலை, 2017

....
வேம்பு சதுக்கம் ....(உடுமலை -அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி )..தற்போது பழமையும் ,புதுமையும் சுமந்த கட்டிடங்களாக காட்சியளித்து வருகின்றது ,ஆனால் மிகவும் பழமையான வேம்பு சதுக்கம் என்று அழைக்கப்படுகின்ற மேடை அமைப்பு தற்போதும் இருந்து வருகிறது.அதில் தான் பல ஆண்டுகளாக காலையில் பள்ளி ஆரம்பிக்கும்போது அனைத்து மாணவர்களும் ஆசிரியர் பெருமக்களும் கலந்து கொண்டு வழிபாட்டு கூட்டம் நடைபெற்று வந்தன...வகுப்பு அறையில் இருந்து வரிசையாக வேம்பு சதுக்கத்திற்கு வருவோம் ..வந்து நின்றவுடன் கொஞ்சம் சல சலப்பு பேச்சு வந்துகொண்டுஇருக்கும் ...நம்ம  ஆசிரியர் யாரவது சும்மா மொத்து மொத்து முதுகில் அடி விழும் சத்தம் கேட்டு பின்விழும் சத்தம் கேட்காமல் இருக்கும் அப்படியொரு  அமைதிநிலவும் ... வேம்பு சதுக்கத்தில் நடைபெற்ற பல நிகழ்வுகள் எண்ணி என் கண்களை கண்ணீர் மறைகின்றது .வேம்பு சதுக்கத்தில் உரையாற்றிய வர்கள் நீதியரசர் திரு .மோகன் ,ச.ராமலிங்கம் ,முன்னால் சட்டத்துறை அமைச்சர் .திரு சாதிக் பாஷா ,திரு.கே.எ .மதியழகன்..திரு.கிருபானந்த வாரியார் ..ஆகியோர் ஆவார்கள். பெருமைக்குரிய தலைமை ஆசிரியர் மரியாதைக்குரிய மறைந்த மேதை ர.கிருஷ்ணசாமி கவுண்டர் பள்ளியை நடத்தி வந்த சிறப்பு எல்லாம் என் மனதில் நிழலாடுகிறது...
என் அன்பு நண்பரின் வா .மணிகண்டன் அவர்களின் பதிவு ..நமது சமுதாய கம்பள விருட்சம் அறக்கட்டளையை ...இப்படித்தான் கொண்டுபோகவேண்டும் ....என்ற ஆவலுடன் ...நம் சொந்தங்களின் ஒத்துழைப்போடு கொண்டுபோகவேண்டும் ...வாழ்வது ஒருமுறை ...நம் எதிர்கால நம் குழந்தைகளின் நலனுக்காக ...

சூப்பர் 16

சூப்பர் 30 ஆனந்த் குமார் மீது எப்பொழுதுமே மிகுந்த மரியாதை உண்டு. பீஹார்காரர். கணிதத்தில் கெட்டிக்காரர். பட்டப்படிப்பு முடித்தவுடன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்கும் இடம் கிடைக்கிறது. ஆனால் அப்பா இறந்துவிட பொருளாதாரச் சூழலின் காரணமாக சேர முடியாமல் போகிறது. பீஹாரிலேயே தனிப்பயிற்சி வகுப்பு நடத்தத் தொடங்கியவர் ஆரம்பித்ததுதான் சூப்பர் 30. அவரது பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு உண்டு. சமூகத்தின் கடைநிலையில் இருக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறார். அவர்கள் முப்பது பேருக்கும் ஒரு வருடத்திற்கு தங்குமிடம் உணவு என எல்லாமும் இலவசம். ஆனந்தின் அம்மாதான் சமையல் செய்கிறார். இப்படி ஒவ்வொரு வருடம் தேர்ந்தெடுக்கப்படும் முப்பது மாணவர்களுக்கும் இந்தியாவில் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஐஐடி-ஜேஈஈ தேர்வுக்கு பயிற்சியளிக்கிறார். இதுவரை நானூற்றைம்பது மாணவர்களுக்கு பயிற்சியளித்து முந்நூற்று தொண்ணூறு பேர்களை ஐஐடிக்குள் அனுப்பியிருக்கிறார். இந்த வருடம் முப்பது பேருமே ஐஐடியில் சேர்ந்திருக்கிறார்கள்.

லேசுப்பட்ட காரியமில்லை. அத்தனையும் ஆனந்த்குமாரின் சொந்தச் செலவு. அவரை ரோல்மாடலாக வைத்துக் கொண்டு ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என வெகு நாளாக ஆசை. செய்யப் போகிற காரியத்துக்கான வடிவம் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் இருந்தது. எத்தகைய மாணவர்களைத் தேர்ந்தெடுப்பது, எந்தவிதமான பயிற்சியளிப்பது என்பது மாதிரியான தெளிவின்மை இருந்தது. இப்பொழுது நேரம் கனிந்திருக்கிறது. மாணவர்களைத் தங்க வைத்து உணவளித்துப் பயிற்சியளிப்பது சாத்தியமில்லை. ஆனால் மாணவர்களை செதுக்க முடியும். கால்நடை மருத்துவம், மீன்வளத்துறையியல், பொறியியல், பி.ஏ தமிழ், டிப்ளமோ, ஐடிஐ என பல்வேறு பாடங்களைப் படிக்கும் மாணவர்கள் இருக்கிறார்கள். படிப்பிலோ அல்லது விளையாட்டிலோ சூரக்குட்டிகள் இவர்கள். நிசப்தம் மூலமாக படித்துக் கொண்டிருப்பவர்கள். பெற்றோர் வாய்க்கப்படாதவர்கள், கூலி வேலைக்குச் செல்கிறவர்கள், நாடோடிகளின் பிள்ளைகள் எனக் கலந்த கூட்டம். அவர்களிலிருந்து பதினாறு பேர்கள். 
சூப்பர் 16. பதினாறு என்ற எண்ணிக்கையில் ஒன்றிரண்டு மாணவர்கள் கூடலாம் குறையலாம். இவர்களுக்கு வருடம் முழுமையும் தொடர்ந்து பயிற்சியளிக்கப்படும். ஆங்கிலம், தன்னம்பிக்கை, உலகை எதிர்கொள்ளல் என்று பல்வேறு வகையான பயிற்சிகள். ஒவ்வொரு மாதத்திலும் ஒரு நாள். தொடர்ந்து பயிற்சியாளர்கள் வருவார்கள். ஐ.ஏ.எஸ், ஐ.ஆர்.எஸ், பத்திரிக்கையாளர்கள் என்று கலவையானவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். தம்முடைய தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாக வருகிறவர்கள். ஒவ்வொருவரிடமும் வருடத்தில் அவர்களின் ஒரேயொரு நாளைக் கேட்டு வாங்கிக் கொள்வதாகத் திட்டம். ஒரு மாதம் வெளியிலிருந்து வருகிறவர்கள் பயிற்சியளிப்பார்கள். அடுத்த மாதம் நான் பயிற்சியளிப்பதாகத் வடிவமைத்து வைத்திருக்கிறோம். 
பயிற்சியாளர்களின் செயல்திட்டங்களை மாணவர்கள் செயல்படுத்துகிறார்களா என்ற கண்காணிப்பும் உண்டு.
ஏன் இந்தப் பணியைச் செய்கிறோம்? எதற்காக இவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்? வெற்றி பெற்ற பிறகு சமூகத்திற்கு இவர்கள் செய்ய வேண்டிய பங்களிப்பு என்ன என்பது பற்றியெல்லாம் பேச வேண்டியிருக்கிறது. மாணவர்களுக்கும் நமக்குமிடையில் ஒருவிதமான புரிதலும் நட்பும் உறவும் உருவாவதற்காகத்தான் ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் நான் அவர்களோடு பேச விரும்புகிறேன். இப்பொழுதே வாரத்தில் ஒரு முறையாவது ஒவ்வொருவருடனுடம் பேசாமல் இல்லை என்றாலும் இன்னமும் நெருங்க வேண்டியிருக்கிறது.
ஒரு வகையில் நெகிழ்த்தி வடிவமைத்தல்தான். 
ஒவ்வொரு மாணவரிடமும் தனித்தனியாகப் பேசியதிலிருந்து இந்த பதினாறு பேருக்குமே ஏதாவதொரு பிரச்சினை இருக்கிறது. வெளியிடங்களில் பேச முடிவதில்லை, மொழிப்பிரச்சினை, தன்னம்பிக்கைக் குறைவு என்று எதையாவது சொல்கிறார்கள். ஆனால் வெளிப்படையாகச் சொல்கிறவர்கள். அப்படி வெளிப்படையாகச் சொல்வதுதான் அவர்களின் பலமே. அதைச் சரி செய்து தருவதுதான் இத்தகைய தொடர்ச்சியான பயிற்சிகளின் நோக்கமும் கூட. இவர்களில் பலருக்கும் தெளிவான இலக்கு இருக்கிறது. அப்படி இல்லாதவர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும். இலக்குக் ஏற்ப சிலருக்கு ஏற்கனவே வழிகாட்டிகள் இருக்கிறார்கள். மீதமிருப்பவர்களுக்கான வழிகாட்டிகளைப் படிப்படியாக ஒதுக்க வேண்டியிருக்கிறது. இவ்வளவு தீவிரமாகச் செய்யும் போது வழிகாட்டிகளும் அதே அளவு தீவிரத்தன்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் இல்லை. எல்லாம் சரியாக அமையும். 
இத்திட்டம் குறித்து இனி தொடர்ந்து அவ்வப்பொழுது எழுதிக் கொண்டேயிருக்கிறேன். நிசப்தம் செயல்பாட்டில் இது அடுத்த கட்டம்.
பதினாறு மாணவர்கள் என்பது முதல் வருடத்திற்கு அதிக எண்ணிக்கைதான். தொடக்கத்தில் தடுமாற்றம் இருக்கும். ஆனால் பெருமளவு வெற்றியடைந்துவிட முடியும் என்கிற நம்பிக்கையிருக்கிறது. தெளிவான திட்டம் இருக்கிறது. செயல்படுத்திவிட முடியும். ஒவ்வொரு வருடமும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ‘ஐஐடி’ என்பது மாதிரியான ஒற்றை நோக்கமில்லை. வெறுமனே வேலைக்குச் செல்லுதல் என்பது மாதிரியான தட்டையான இலக்கும் இல்லை. ஒவ்வொருவருக்கும் துல்லியமான இலக்குகள்- நிர்ணயித்து அதை அடைந்து காட்டுகிறோம்.

வியாழன், 27 ஜூலை, 2017

விமான விபத்து -சில உண்மைகள்!
திடீரென விமானங்கள் நடுவானில் காணமல் போய் விபத்துக்குளாகும் காரணத்திற்கான உண்மைகள்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸி'ல் 23 ஆண்டுகள் PILOT டாக பணியாற்றி இப்போது சொந்த தொழில் செய்து வரும் நண்பர் ஒருவர் தெரிவித்த தகவல்களை இங்கு தொகுத்து தந்துள்ளேன்.
விமானங்களுக்கும் கப்பலுக்கும் வானத்திலும் கடலிலும் ஒவ்வொரு மார்க்கத்திற்கும் வாகனங்களுக்கான சாலை மார்க்க தடம் போல் நிரந்தர ஆகாய பாதை விமானத்திற்கும், நிரந்தர கடல் வழி கப்பலுக்கும் உண்டு. சர்வதேச விமான கட்டுபாட்டு துறையும் கப்பல் கட்டுபாட்டு துறையும் வகுத்துள்ள நிறந்தர வழிகளில் மட்டுமே விமானத்தையும் கப்பலையும் செலுத்த வேண்டும்.
பறந்து விரிந்த ஆகாயம் தானே என விமானத்தையும், விரிந்து கிடக்கும் கடல் தானே என கப்பலையும் விருப்பம் போல் ஓட்ட முடியாது.
உலகில் 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட பகுதியில் நடுக்கடல் பகுதியில் புவி ஈர்ப்பு விசை (கோஸ்ட் பிளேஸ்) அதிகமாக உள்ள இடங்கள் என கண்டறிய பட்டுள்ளது.
அந்த இடங்களில் மட்டும் சுமார் 60அயிரம் அடிவரை இந்த புவி ஈர்ப்பு விசை இருக்கும் . இதன் மேல் எந்த பொருள் பூமிக்கு மேல் சென்றலும் அதை கீழே இழுத்து விடும் சக்தி கொண்டது. அத்தகைய இடங்களில் விமானமும் கப்பலும் செல்ல தடை உள்ளது.
முக்கியமாக இந்தோனேசியா கடல் பகுதியிலும், வங்காள விரிகுடா அந்தமான் பகுதியிலும், வடக்கு கனடா, பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் அதிக இடங்களில் இந்த கோஸ்ட் place என கூறப்படும் பகுதிகள் உள்ளது. இது பற்றி அந்ந்தந்த விமான வழி தடங்களில் செயல்படும் விமானிகளுக்கு பயிற்சி கொடுக்க பட்டிருக்கும்.
வானில் 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டு இருக்கும் போது அந்த விமானம் வானவெளியில் பறக்க குறைந்த பட்ச காற்று அழுத்தம் தேவை. அப்போது தான் வானவெளி அந்தரத்தில் எஞ்சின் கட்டுப்பாட்டில் அதை சீராக கீழே இறங்காமல் நேரே விமானத்தை முன்னோக்கி கொண்டு செல்லும்.
சில சமயங்களில் மழை புயல் காலங்களில் விமானம் பறக்கும் தடத்தில் VACCUM pocket எனப்படும் நெகடிவ் பிளேஸ் வெற்றிடம் 200 முதல் 500 கிலோமீட்டர் வரை இருக்கும். அதை முன்பே விமானகட்டுபாட்டு அரை கண்டு கொண்டு விமானத்தை வெற்றிடம் இல்லாத தடத்தில் இயக்க விமானிகளுக்கு அறிவுரை வழங்கப்படும். சில சமயங்களில் கட்டுபாட்டு அறை ராடாரில் சிறிய அளவிலான வெற்றிடம் தெரியாது.
இது போன்ற சிறிய அளவிலான வெற்றிடங்களுக்கு அருகில் விமானம் வரும் போது தான் விமானத்தின் ராடார் சாதனத்தில் மட்டும் இது தென்படும். அப்போது நீங்கள் விமானத்தில் இருக்கும் போது விமானி நீங்கள் சீட் பெல்ட் அணிந்திராவிடில் உங்களை சீட் பெல்ட் அணிய சொல்லி அதற்கான உங்கள் தலைக்கு மேல் உள்ள எச்சரிக்கை சின்ன விளக்கை எரியவிடுவார்.
அடுத்த ஓரிரு நிமிடங்களில் விமானம் குண்டும் குழியும் இருக்கும் சாலையில் பயணிப்பது போல் ஒரு உணர்வு நமக்கு தெரியும். பொதுவாக விமானம் ஆகாயத்தில் பறக்கும் போது ஒரு எஞ்சின் மட்டும்தான் இயங்கும். மற்றொரு எஞ்சின் spare ரக எமெர்ஜென்சி'க்கு பயன்படுத்த இருக்கும்.
வெற்றிடத்தில் விமானம் நுழையும் போது இரு விமான எஞ்சின்களும் அதிகபட்ச RPM ல் மானுவலாக விமானி இயக்குவார். இது 20 முதல் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு வெற்றிடம் இருந்தால் மட்டும் விமானத்தை பாதுகாப்பாக செலுத்தி வெற்றிடத்தை தாண்டுவது சாத்தியம்.
மலேசியன் விமான விபத்து கூட இந்த பாணியில் நடந்திருக்கும் என மற்றொரு விமானி நண்பர் கூறுகிறார். முக்கியமாக ஒவொரு விமானத்திலும் இரண்டு விமானிகள் இருப்பார்.
நீண்ட தூரம் செல்லும் விமானத்தில் 2 மணி நேரத்திற்கு ஒருவர் என விமானத்தை ஒரு விமானி கட்டுப்பாட்டில் வைத்து விமானத்தை இயக்குவார்கள்.
அப்போது ஒரு விமானி ஓய்வு எடுப்பார். சில சமயங்களில் விமானம் மேலே பறக்க துவங்கியவுடன் கட்டுப்பாட்டு அறையிலிருந்து அந்த விமான தடத்திற்கான நிலை குறித்து தகவல் வரும். வந்திருக்கும் weather ரிப்போர்ட் normal'லாக இருந்தால் பல விமானங்களில் இரு விமானிகளும் AUTO BELT எனப்படும் தானியங்கி விமான இயக்க mode'டை ஓட செய்து விட்டு கண்ணை மூடி தூங்கி விடுவார்கள்.
விமான தடத்தில் திடீரென சிறிய வெற்றிடம் வரும் போது திடீரென விமானம் கட்டுபாட்டை இழந்து சில நொடிகளில் கடலிலோ நிலத்திலோ விழும். இது போல் விபத்துக்கள் பெரும்பாலும் நள்ளிரவுக்குப் பின் பறக்கும் விமானங்களில் நடக்கும்.
2008ம் ஆண்டு அதிகாலை நேரத்தில் 280 பயணிகளுடன் சென்னையிலிருந்து சிங்கப்பூர் வந்த இந்தியன் airline விமானமும் வங்காள விரிகுடாவில் பறந்து கொண்டு இருக்கும் போது இதுபோல் ஒரு காற்று இல்லா வெற்றிடத்தில் சிக்கி திடீரென விமானம் இருபத்து ஐந்தாயிரம் அடிக்கு கீழே செங்குத்தாக கீழே இறங்க கடலை தொடும் தருவாயில் விமானியின் சமயோசித தனத்தால் திரும்பவும் விமானத்தை கட்டுபாட்டுக்கு கொண்டு வந்து விபத்தை தவிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.