....
#Government_Boys_Higher_Se condary_School
#Udumalaipettai
வேம்பு
சதுக்கம் ....(உடுமலை -அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி )..தற்போது பழமையும்
,புதுமையும் சுமந்த கட்டிடங்களாக காட்சியளித்து வருகின்றது ,ஆனால் மிகவும்
பழமையான வேம்பு சதுக்கம் என்று அழைக்கப்படுகின்ற மேடை அமைப்பு தற்போதும்
இருந்து வருகிறது.அதில் தான் பல ஆண்டுகளாக காலையில் பள்ளி
ஆரம்பிக்கும்போது அனைத்து மாணவர்களும் ஆசிரியர் பெருமக்களும் கலந்து
கொண்டு வழிபாட்டு கூட்டம் நடைபெற்று வந்தன...வகுப்பு அறையில் இருந்து வரிசையாக வேம்பு சதுக்கத்திற்கு வருவோம் ..வந்து நின்றவுடன் கொஞ்சம் சல சலப்பு பேச்சு வந்துகொண்டுஇருக்கும் ...நம்ம ஆசிரியர் யாரவது சும்மா மொத்து மொத்து முதுகில் அடி விழும் சத்தம் கேட்டு பின்விழும் சத்தம் கேட்காமல் இருக்கும் அப்படியொரு அமைதிநிலவும் ... வேம்பு சதுக்கத்தில் நடைபெற்ற
பல நிகழ்வுகள் எண்ணி என் கண்களை கண்ணீர் மறைகின்றது .வேம்பு சதுக்கத்தில்
உரையாற்றிய வர்கள் நீதியரசர் திரு .மோகன் ,ச.ராமலிங்கம் ,முன்னால்
சட்டத்துறை அமைச்சர் .திரு சாதிக் பாஷா ,திரு.கே.எ
.மதியழகன்..திரு.கிருபானந்த வாரியார் ..ஆகியோர் ஆவார்கள். பெருமைக்குரிய
தலைமை ஆசிரியர் மரியாதைக்குரிய மறைந்த மேதை ர.கிருஷ்ணசாமி கவுண்டர் பள்ளியை
நடத்தி வந்த சிறப்பு எல்லாம் என் மனதில் நிழலாடுகிறது...
Sivakumar Kumar shared Udumalaipettai - உடுமலைப்பேட்டை's photo — in Udumalaippettai.
#Udumalaipettai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக