என் அன்பு நண்பர் ...பிரகாஷ் ராமசாமி ...வடவள்ளி கோவைக்காரர் ....
இந்த முறை இந்தியாவிலிருந்து திரும்பி வந்த போது, கொஞ்சம் தெளிவாகத்தான் இருந்தேன். குழந்தை முன்னால் எமோஷன் காட்டக்கூடாது என்று.. உபர் வருவதற்குள், வெப் செக் செய்து..டாக்குமெண்ட்ஸ் மொபைல், இந்த ஊர் ரெஸிடண்ட் ஐடெண்டிடி, சிம், பாஸ்போர்ட் இத்யாதிகளை அடுக்கி வைத்துவிட்டு.. கிளம்ப ஆயத்தமானபோது.. எங்கிருந்தோ வெளியிலிருந்து வந்து.. 'என்னோட அப்பா' என்று கட்டி பிடித்து ஒரு முத்தம் கொடுத்த மகனை.. அப்படியே அணைத்துக்கொண்டேன்.
இருவரும் ஒரு மெல்லிய உணர்வால் புரிந்து கொண்டோம்.. இது தாற்காலிக பிரிவு என்று. கன்னத்தில் முத்தமிட்டபோது.. கீழே..காடி ஆகயா என்று அனிருத்தின் நண்பன் சொல்ல.. பை என்று எல்லோரிடம் சொல்லிவிட்டு கீழே லிப்டில் போக..
காரில் லக்கேஜை வைத்துவிட்டு.. கதவை பிடித்து மேல் நோக்கி பார்த்தேன்.. அவளின் கை மட்டும் தெரிந்தது. கையசைத்துவிட்டு, திரும்பி லேசாய் கண்ணை துடைத்துக்கொண்டு ஏறும்போது.. டாட்.. ப்பா.. என்று கீழே படியில் வந்ததால் ஏற்பட்ட மூச்சு வாங்கலோடு மீண்டும் அணைத்துக்கொண்டான். அழாதப்பா.. லவ் யூ என்ற போது.. அவனின் அழகிய முகம் எனக்கு கலங்கலாய் தெரிந்தது.
கட்டிக்கொண்டு பை சொன்ன கையை முத்தமிட்டு.. கைகாட்டியபின்.. கார் சரேலென திரும்பியதில் மறைந்தும்போனான். கர்ச்சீபால் கண்ணை துடைத்துக்கொண்ட போது.. அந்த இக்பால் என்ற உபர் ட்ரைவர்..'ஏக்கி பேட்டா ஹை க்யா..' என்றான்.
அன்போடு வாழ்தல் வரம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக