வியாழன், 13 ஜூலை, 2017

Karthic SR கம்பள விருட்சக் குழுமம்:
தீதும் நன்றும் பயன் தூக்கிப்பார்க்கும் கல்வி
கல்வியின்பால் மேம்பட்ட பொருளாதாரம்
பொருளாதாரம் மேம்படும்போதும் தடுமாறாத கட்டுக்கோப்பான பண்பாடு
 இவற்றை தாரக மந்திரங்களாக கொண்டு தமிழ்நாடு முழுதும் ஆங்காங்கே வளர்ந்து வரும் நம் கம்பளத்து இளைய சக்திகளை ஒருங்கினைத்து
முறைப்படி பதிவுபெற்ற அறக்கட்டளையான
கம்பளவிருட்சம் அறக்கட்டளை - தொழில்சார் கல்வி மேம்பாட்டுக்குழுமத்தின்
 நோக்கங்களும் விதிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
  சமுதாயஒருங்கினைப்பில் ஆர்வமும் இனவளர்ச்சியில் ஈடுபாடும் கொண்ட கம்பளத்துசொந்தங்கள் அறக்கட்டளையில் தன்னை இனைத்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 
அறக்கட்டளையின் நோக்கங்கள்:-

1. தமிழ்நாடு முழுதும் வாழும் இந்து - தொட்டியநாயக்கர் ராஜகம்பள இன மக்களின் நலனுக்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்கு தேவையான கல்விக்கூடங்கள்,  சமுதாய நலக்கூடங்கள், மருத்துவ மனைகள், விவசாயம் சார்ந்த
தொழில்கள், பண்ணைகள், தொழிற்கூடங்கள்,  நிதி நிறுவனம் போன்றவை அமைத்து பராமரித்து வர பாடுபடுதல்

2.நமது சமுதாய மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் திருமண தகவல் மையம் அமைத்து நமது இன ஆண்   பெண் நபர்களுக்கு நல்லதொரு மணமகள் , மணமகன் அமையவும்  அவர்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கும் உதவுதல்

3.நமது இன மக்களுக்கு படித்த மற்றும் படிக்காத நபர்களுக்கு அவரவர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பை அமைத்துக்கொடுத்தல் அதற்காக தனி பிரிவு அமைத்து வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் தொழிற்பயிற்ச்சி வகுப்புகள் நடத்துதல்

4.நாயக்கர் கால மன்னர்கள் மற்றும் ஜமீன்கள் அமைத்த பழம்பெரும் கோவில்களை புணரமைத்து பாதுகாத்தல் மற்றும் அதற்கான வரலாற்று புத்தகங்கள் வெளியிட்டு இனமக்களிடமும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

5. அறக்கட்டளையின் நிதி ஆதாரங்களை பெருக்க தேவையான நன்கொடைகள் பெறுதல், சந்தா வசூலித்தல் ,மற்றும் இதர வழிகளில் பொதுமக்கள் மற்றும் அறங்காவலர்களிடமிருந்து நிதிகளை பெறுதல்.

6. அறக்கட்டளைக்கு தேவையான அசையும்  அசையா சொத்துக்களை வாங்கவும், விற்கவும், குத்தகைக்கு மற்றும் வாடைகைக்கு விடுதல் அடமானம் வைத்து கடன் பெறுதல் மற்றும் அறக்கட்டளைக்கு தேவையான இதர காரியங்களை செய்தல்

7. கல்வி ஸ்தாபனங்களை ஏற்படுத்தும்,  ஏற்கனவே உள்ள கல்வி ஸ்தாபனங்களை ஏற்று நடத்துவது அவற்றை அபிவிருத்தி செய்வது போன்ற கல்விப்பணியை செய்வது

8.சிறந்த மாணவ மாணவியற்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குதல் அவர்களின் மேற்படிப்பிற்கு வட்டியில்லா கடன் வழங்குதல் போன்ற கல்விப்பணியை செய்வது

9.ஏழை எளிய மக்களுக்கு தேவைப்படும் மருத்துவ வசதிகளையோ அல்லது அதற்கான பண வசதிகளையோ செய்து கொடுப்பது

10.மேற்கண்ட நோக்கங்களுக்காக நிர்வாக குழு கூட்டம் கூட்டி அதற்கான ஆயத்த முடிவுகளை எடுப்பது

அறக்கட்டளை உறுப்பினர்கள்:-

அறக்கட்டளைக்கு மூலதன நன்கொடையாக 1000(ஆயிரம் ரூபாய் மட்டும்) செலுத்தும் இந்து- தொட்டிய நாயக்கர் ராஜகம்பள இனத்தை சார்ந்த பதினெட்டு வயது பூர்த்தியடைந்த ஆண் பெண் அனைவரும் உறுப்பினராகும் தகுதியை பெறுவர்
அவ்வாறு மூலதன நன்கொடை செலுத்தும் நபர்களை அறக்கட்டளை நிர்வாக குழு பரிசீலனை செய்து தீர்மானம் இயற்றி உறுப்பினராக சேர்த்துக்கொள்ளலாம்
நிர்வாககுழுவிற்கு எந்த ஒரு நபரையும் காரணம் தெரிவிக்காமல் உறுப்பினராக ஏற்றுக்கொள்ள மறுக்கும் முழு அதிகாரம் உண்டு.  நிராகரிக்கப்படும் நபர் நிர்வாக குழுவின் முடிவை எதிர்த்து வழக்கு தொடுக்கவோ நீதிமன்றம் செல்லவே முடியாது
நிர்வாக குழுவின் தீர்ப்பே இறுதியானது

2. இந்த அறக்கட்டளையின் எந்த ஒரு உறுப்பினரும்

(*) இந்து தொட்டியநாயக்கர் ராஜகம்பள இனத்தை சேர்ந்தவராக இல்லாத பட்சத்திலோ

(*) நெறிகேடான குற்றங்களுக்கு தண்டிக்கப்பட்டவராகவோ

(*) சமூக குற்றம் , தேசவிரோத குற்றங்களில் ஈடுபட்டாலோ

(*) புத்தி சுவாதீனமில்லாதவராக காணப்பட்டாலோ

(*) உறுப்பினர்களுக்கு அறக்கட்டளை நிர்ணயம் செய்யும் தொகையை செலுத்தாமல் இருந்தாலோ

(*) அறக்கட்டளையின் நலனுக்கு எதிராக செயல்பட்டாலோ

 நிர்வாக குழுவின் பெரும்பாண்மையான நபர்களின் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றி அந்த உறுப்பினர் நீக்கப்படுவார்
அவ்வாறு நீக்கப்படும் நபர் நிர்வாககுழுவின் முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்லமுடியாது
நிர்வாககுழுவின் முடிவே இறுதியானது :

3. ஸ்தாபகர் அல்லது ஆரம்ப உறுப்பினர்கள் காலமாகிவிட்டாலோ அல்லது அறக்கட்டளையில் இருந்து விலகுவதாக இருந்தாலோ விலகும் நபர் பரிந்துரை செய்யும் நபரை ( ஆண்/ பெண்) அறக்கட்டளையில் சேர்த்துக்கொள்ளலாம் அவர் பரிந்துரை செய்யாதபட்சத்தில் நிர்வாககுழுவே மாற்று நபரை தேர்ந்தெடுக்கும் இதிலும் நிர்வாக குழுவின் முடிவே இறுதியானது.....🌿💐💐💐👍👍👍👍

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக