மண்ணிலே கலைவண்ணம் ........
செவ்வாய், 29 ஏப்ரல், 2025
மண்ணிலே கலைவண்ணம் ........ சாலையூர் ,விளாமரத்துப்பட்டி கிராமம் ...உடுமலைப்பேட்டை ....
மண்ணிலே கலைவண்ணம் ........
ஞாயிறு, 27 ஏப்ரல், 2025
வள்ளல் பெருமக்களை வரலாற்றுச்சின்னங்களை வட்டார தெய்வங்களாக வழிபடும் மக்கள்
வள்ளல் பெருமக்களை வரலாற்றுச்சின்னங்களை வட்டார தெய்வங்களாக வழிபடும் மக்கள்
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கொழுமம் பகுதியில் வள்ளல் பெருமகன் குமணன் வாழ்ந்தமைக்கான சான்றுகளை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு வகையில் அந்தக்காலத்து மக்கள் வாழ்ந்த நீர்நிலைகளையும், மக்களின் வாழ்க்கை முறைகளையும் தொடர்ந்து ஆவணப்படுத்தி வரும் அவர்கள் தொடர்ச்சியான ஆய்வுகளில் குமணன் மகராசாவாகவும், தற்போது நாட்டுப்புற மக்கள் வழக்காறுகளில் நடுகல் தெய்வமாகவும் வைத்து வழிபட்டு வருவதை கொழுமம், ஆத்தூர், மடத்தூர் பகுதி மக்கள் உறுதிப்படுத்துகின்றனர்.
ஓவ்வொரு மாதமும் வெள்ளுவா, எனும் பௌர்ணமி நாளிலும் காருவா எனும் அமாவாசை நாட்களிலும் பொதுமக்கள் தம் விரும்பி உண்ணும் இயற்கை உணவுகளைப் படையலாக வைத்து வழிபாடு செய்கின்றனர். இன்னும் சிலர் அசைவ உணவுகளாக கோழி, ஆடு இவைகளை பலியிட்டும் வழிபாடு செய்து வருகின்றனர்.
கொழுமத்திற்கு அருகில் இருக்கும் வலசு கருப்பணசாமி கோயிலில் அமாவாசை நாளில் கடந்த காலங்களில் ஆடு ,கோழி பலி கொடுத்து வழிபாடுசெய்த மக்கள் வனச்சரகக் கட்டுப்பாட்டின் காரணமாக தற்போது வனத்திற்குள் சென்று வழிபாடு செய்ய முடிவதில்லை. எனவே, வனத்திற்குள் செல்லாமல் வனத்தின் முன்பகுதியில் நடுகல் வைத்து வழிபாடு செய்து வருவதையும் காணமுடிகிறது.
சங்க இலக்கியப்பாடல்களில் குமணனைக் காணவரும் பெருஞ்சித்திரனார் எனும் புலவர் கண்ணாடிப்புத்தூர், கொழுமம் வழியாக குமணனைக் காணச் சென்றதும், அவர் செல்லும் வழியில் சந்தன மரம், கமுகு மரம் இருந்ததையும், மான்கள், பசு மாடுகள் இருந்தையும் பாடல்களில் குறிப்பிடுகின்றார்.
அதுபோன்று தற்போதும் சந்தன மரங்களும், கமுகு மரங்களும் நீர் நிலைகளும் இருப்பதையும் உறுதிப்படுத்த முடிகின்றது.
அமாவாசை நாட்களில் பெரும்பாலான மக்கள் இந்த வலசு கருப்பணசாமி கோயிலுக்கு வந்து வழிபாடு செய்து விட்டு போகின்றனர். ஒரு குறிப்பிட்ட சாதி மக்க்ள என்றில்லாமல் இங்கு அனைத்து சாதி பொதுமக்களும் வருகின்றனர். குறிப்பாக மண்ணுடையார் சமூகத்தினர் பெரும்பாலும் இங்கு பூசை செய்து வருகின்றனர்.
வட்டார வழிபாடுகளில் இன்னமும் பழங்காலத்து பழக்கவழக்கங்கள் இருப்பதும், நடுகல் வழிபாடுகளில் கொழுமம், ஆத்தூர், மடத்தூர், சங்கராமநல்லூர் பகுதி மக்கள் காலையிலேயே தம் குடும்பத்துடன் மாட்டு வண்டிகளில் வந்து தங்கியிருந்து சமையல் செய்து விருந்து படைத்து வழிபாடு செய்து செல்கின்றனர்.
இவர்கள் இந்த வழிபாடு குறித்து சொல்லும் தம் மூதாதையர்கள் காலங்காலமாக வழிபட்டு வருவதைத் தொடந்து தாங்களும் வழிபட்டு வருவதாகவும், தம் வீட்டில் எந்த நல்லது கெட்டது நிகழ்வு நடந்தாலும் இங்கு வந்து படையலிட்டு வழிபாடு செய்து விட்டு செல்வதாகவும் கூறுகின்றனர்.
புதன், 23 ஏப்ரல், 2025
உலகப் புத்தக நாளில் உடுமலை வரலாறு வெளியிட்ட புத்தகங்களைப் பார்ப்போம்.
ஏப்ரல் 23 உலகப்புத்தக நாள்
உலகப் புத்தக நாளில் உடுமலை வரலாறு வெளியிட்ட புத்தகங்களைப் பார்ப்போம்.
இதுவரைக்கும் எட்டு புத்தகங்கள்.
எட்டு புத்தகங்களும் எட்டாத வரலாற்றைச் சொல்லுவது.
ஒன்று நமது மண்ணுக்கு மணி மண்டபத்தை (சமூக அரங்கையும்) தளி எத்தலப்பர் சிலையும் கொண்டு வந்தது.
தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர்.
இன்று கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்விற்குத் தேர்வு செய்யப்பட்டு கல்வி நிதி உதவியோடு நடைபெற்று வருகிறது. குறித்த காலகட்டத்தைப் பதிவு செய்யும் வரலாற்று நூல்
உடுமலை வரலாறு
முகம் தெரிந்த முன்னூறு ஆண்டு கால மண்ணில் இதுவரைக்கும் யாரும் எழுதிடத் துணிந்திடாது ஒரு வரலாற்று நூல் , உடுமலையின் அடையாளம். , சமூக வரலாற்று நூல்
தென்கொங்கின் தொன்மங்கள்
நமது பகுதியில் இருக்கும் புராண, ஆயிரம் ஆண்டுகாலத்திற்கும் முற்பட்ட கற்றளிக் கோயில்களில் உள்ள கல்வெட்டுகளை ஆவணப்படுத்தி வெளியிடப்பட்ட தொல்லியல் சார்ந்த நூல்
கரைவழிநாடும் நாகரிகமும்
சங்க இலக்கியப்பாடல்களிலும் சரி, கல்வெட்டுகளிலும் சரி கரை வளி என்று சொன்னால் அது அமராவதி கரைவளிதான். அந்த வகையில் கரைவழி நாடுகள் என்று கொங்கு நாட்டு ஆவணங்களில் கூறப்படும் நாடு கரைவளி நாடு.
அந்த கரைவளி நாட்டின் நாகரிகத்தை, வளத்தை தனித்தனியாக கல்வெட்டுகள் தனியாகவும், இரண்டு பகுதிகளாக ஆவணப்படுத்தப்பட்ட நூலே கரைவளி நாடும் நாகரிகம். இதில் வேளாண்மை தனியாகவும், கல்வெட்டுகள் தனியாகவும் என இரண்டு நூல்களாக எழுதப்பட்டுள்ளது.
கடைசியாக இந்த ஆண்டில் அயிரை எனும் ஐவர் மலை , மேற்குத்தொடர்ச்சி மலையில் சாரல் சின்னங்கள்.
இதில் அயிரை எனும் ஐவர் மலையின் ஈராயிரம் ஆண்டு கால வரலாறு, குமணனுக்கான கல்வெட்டு, சேரன் செங்குட்டுவன் அயிரை தெய்வத்தை வழிபட்ட பதிற்றுப்பத்து பாடல்கள், சமணர்கள் தங்கியிருந்து மருத்துவம் , கல்வி ஆகியவற்றை மக்களுக்குப் போதித்தது ஆகியனவற்றை சுருக்கமாகக் கூறும் நூல்.
மேற்குத்தொடர்ச்சி மலை சாரல் சின்னங்கள், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கடந்த இருபது ஆண்டுகளாக களப்பணியில் கிடைத்த தரவுகளை, மக்கள் எளிதில் அறியும் வண்ணம் ஒரு கையடக்க நூலாக, வரலாற்றுச் சின்னங்கள், தொல்லியல் சின்னங்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்கள் என நமது பகுதியில் அனைத்து சின்னங்களையும் கையேடாக மிகச்சிறிய அளவில் தயாரிக்கப்பட்டது.
செவ்வாய், 22 ஏப்ரல், 2025
உடுமலை மண்ணுக்காகவும்,
உடுமலை மண்ணுக்காகவும்,
உலகப் புத்தக நாள்
உலகப் புத்தக நாள்
ஞாயிறு, 20 ஏப்ரல், 2025
திருமணமே செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து விடலாம் என்று இந்த தலைமுறையினர் பலர் எண்ணுவதற்கு என்ன காரணம்?
விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை குறைந்து விட்டது அல்லது மாறிவிட்டது
திருமணம் என்றால் நிறைய விட்டுக் கொடுக்க வேண்டும் ஒருவருக்கொருவர் அனுசரிக்க வேண்டும் அதெல்லாம் முடியாமல் போனதற்கு காரணம் என்னவென்றால் குழந்தைகள் ஒருவராக அல்லது அதிகம் போனால் இருவராக மட்டும் வாழ்வதுதான்.
நிறைய குழந்தைகள் ஒரு வீட்டில் இருந்தால் அவர்கள் கண்டிப்பாக ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தே வளர்ந்திருப்பார்கள்.
அடிக்கடி சண்டை போட்டு சமாதானம் ஆகி இருப்பார்கள். சகோதர உறவுகள் மிகப் பெரிய மிக நீண்ட தொடர்கதை.
பிறந்ததிலிருந்து இறப்பு வரை அவர்களுடைய தொடர்பு இருக்கும்.
மற்ற உறவுகள் அப்படி இல்லை. அதனால் இந்த நிலைமை வந்திருக்கலாம்.
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதும் அனுசரித்துப் போவதும் இல்லாமல் போய்விட்டதால் இன்றைய குழந்தைகளுக்கு நான் ஏன் ஒருவருக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் நான் ஏன் ஒருவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று சற்றே சுயநலம் கலந்த பிடிவாதம் கூடி விட்டதால் இந்த நிலைமை என்று தான் கூற முடியும்.
அதற்காக எல்லோரையும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறவா முடியும்? காலத்தின் கட்டாயம். இனி கல்யாணம் என்பது ஒருவருடைய விருப்பத்தேர்வாக தான் இருக்கும்.
தவறு ஏதும் இல்லை என்று முற்போக்கு சிந்தனையாளர்கள் மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள். கல்யாணம் செய்து கொள் என்று வற்புறுத்த மாட்டார்கள்.
Non- emotional sex மட்டும் போதும் என்று நினைக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். 40லிருந்து 50 55 வயதில் உள்ளவர்களும் அவ்வாறே நினைக்கிறார்கள்.
இது நான் அண்மையில் தெரிந்து கொண்ட சற்று அதிர்ச்சி தரக்கூடிய தகவலாகவே இருக்கிறது. ஏனென்றால் நானும் நூறு விழுக்காடு முற்போக்கு சிந்தனை கொண்ட நபர் என்று கூறிக் கொள்ள முடியாது.
ஆனால் அவர்களுடைய நிலைமையில் இருந்து பார்க்கும்போது தவறு ஏதுமில்லை ஏனென்றால் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். நன்றாக சிந்திக்கிறார்கள் பாதுகாப்பான பாலியல் உறவுகள் பற்றி அறிந்திருக்கிறார்கள்..
இதற்கு மேல் நாம் என்ன சொல்வதற்கு இருக்கிறது?
சனி, 12 ஏப்ரல், 2025
குலதெய்வம் அறிவியல் உண்மை
குலதெய்வம் அறிவியல் உண்மை
வியாழன், 10 ஏப்ரல், 2025
கேள்வி : வீடு கட்டுபவர்கள் பொதுவாக செய்யும் தவறுகள் என்ன?
பதில் :
வீடு கட்டும் போது பலரும் செய்யும் சில தவறுகள் என்னுடைய அனுபவத்தில்:
1. திட்டமிடாமல் தொடங்குவது
பலரும் சிறந்த ஒரு திட்டம் இல்லாமல் நேரடியாக வேலைக்கு இறங்கிவிடுகிறார்கள். வீட்டு வடிவமைப்பு, பட்ஜெட், மற்றும் தேவையான அனுமதிகள் போன்றவை தெளிவாக இருந்தால்தான் வேலை விரைவாகவும், பொருளாதார ரீதியாகவும் செழிக்க முடியும்.
2. கணக்கற்ற செலவு செய்யுதல்
ஆரம்ப கட்டத்தில் சரியாக கணக்கிடாமல் பிறகு செலவுகள் அதிகரிக்க ஆரம்பிக்கும். உபயோகப்படும் பொருட்கள், வேலைக்காரர்கள், மற்றும் கூடுதல் வசதிகள் ஆகியவற்றை சரியாக திட்டமிட வேண்டும்.
3. தகுதியற்ற தொழிலாளர்களை நம்புவது
சிறந்த வேலைப்பாடும், நிலைத்தன்மையும் தரும் தொழிலாளர்களை தேர்வு செய்யாமல், குறைந்த செலவுக்காக அனுபவம் குறைவானவர்களை தேர்வு செய்வதால் பின்னர் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
4. கட்டுமான தரத்தை அலட்சியமாக பார்க்குதல்
சிலர் நல்ல தரமான கான்கிரீட், மண், சிமெண்ட் போன்றவற்றைப் பயன்படுத்தாமல், குறைந்த தரத்திலான பொருட்களை வாங்குகிறார்கள். இது வீட்டின் ஆயுளை குறைக்கும்.
5. மழைநீர் வடிகால், அடித்தளத் திட்டங்களை ஏளனமாக பார்ப்பது
அடித்தளத்தில் சரியான தண்ணீர் வடிகால் ஏற்பாடுகள் இல்லாவிட்டால், நீர் கசியல் பிரச்சனை மற்றும் தரை நனைவு ஏற்படும்.
6. சட்ட மற்றும் அனுமதிகளை புறக்கணித்தல்
அரசின் கட்டுமான விதிமுறைகளை பின்பற்றாமல் வீடு கட்டினால், பின்னர் சட்டப்பிரச்சனைகள் வரலாம்.
7. நல்ல வடிவமைப்பை பின்பற்றாதது
சரியான உள்ளமைப்பு, வெளிச்சம், காற்றோட்டம் போன்றவற்றை கணக்கில் கொள்ளாமல் வீடு கட்டினால், வசதியாக இருக்காது.
இவை எல்லாம் அனுபவத்தில் பார்த்த தவறுகள். சரியான திட்டமிடல், தரமான வேலை, மற்றும் அறிவார்ந்த செலவினம் மூலம் சிறப்பான வீடு கட்டலாம்!
V K சிவக்குமார்
வீட்டுக்கடன் நிதி ஆலோசகர்
9944066681






































