கேள்வி : தமிழ் கலாச்சாரத்திற்கும் நுகர்வு கலாச்சாரத்திற்கும் உள்ள வேறுபாடு உதாரணம் கொண்டு விளக்க முடியுமா சார் ?
என் பதில் :
தஞ்சாவூர் கோவில், பாரதியார் கவிதைகள், இளையராஜா இசை போன்ற நிலைப்புத்தன்மை தமிழ் கலாச்சாரம். நிறைய வருமானம் கொடுக்கும் நிலையாமை என்பது நுகர்வுக் கலாச்சாரம்.
நீங்கள் பயன்படுத்தும், விண்டோஸ் மற்றும் கம்ப்யூட்டர், இன்று பல மாற்றங்கள் பார்த்துவிட்டது. ஒவ்வொரு மாற்றத்தையும், Upgrade என்று நாமகரணம் சூட்டி, பல கோடி ரூபாய்களை பில்கேட்ஸ் அள்ளினார்.
அவ்வளவு பணம் சம்பாதித்த பில்கேட்ஸ், திருமணம் நிலைக்கவில்லை. இந்தியாவில், ஒரு கூலித் தொழிலாளி தன்னுடைய வருமானத்தை வைத்து, ஒரு குடும்பம் ஏற்படுத்துவான் . மனைவியும், கிடைக்கும் பணத்தில் குடும்பத்தை நடத்துவாள், என் கணவன் கூலிக்காரன், படிப்பு இல்லை வருமானம் இல்லை அவனுக்கு புரிதல் இல்லை என்று, குற்றப்பத்திரிக்கை படித்து, விவாகரத்து கேட்டு கோர்ட் படியேற மாட்டாள்!
காரணம், அவளுடைய படிப்பு கம்மி அல்ல. அவள் வாழ்க்கையை நன்கு படித்து உள்ளாள், கிடைக்கும் வருமானத்தில், சந்தோஷமாக வாழ்வது, சிறுகக் கட்டிப் பெருக வாழ் என்று அவ்வையார் சொன்னது, தமிழ் கலாச்சாரம்.
பல்லாயிரம் வருடம் ஆனாலும், தஞ்சாவூர் வீணை அதேதான். அன்று இருந்த தஞ்சாவூர் வீணை, இன்று இருக்கும் தஞ்சாவூர் வீணை ஒன்றாகவே இருக்கும்.
நான் உபயோகப்படுத்திய கம்ப்யூட்டர், 20 ஆண்டுகளில் முற்றிலும் மாறிவிட்டது. ஆனால் இந்த மாற்றத்திற்கு, இந்தியா பல கோடி ரூபாய் விலை கொடுத்து உள்ளது.
கம்ப்யூட்டர் ஃபோன் என்றெல்லாம் எலக்ட்ரானிக் சாதனங்கள், ஒரே நோக்கத்தில் செயல்படுகிறது. மனிதன் மனதிற்கு சந்தோஷம், கொடுப்பதுதான் அதன் இலக்கு. Dopomine என்ற ரசாயனம் நம் உடலில் சுரக்க, பல கோடி ரூபாய் செலவு செய்கிறோம். தமிழ் கலாச்சாரம், பத்து பைசா செலவில்லாமல், உடம்பில் Dopomine சுரக்கவைக்கும்.
கம்பனின் பாடல்களைக் கேட்டுப் பாருங்கள், பாரதியார் கவிதைகளை எழுதிப் பாருங்கள், இளையராஜா இசையை கேட்டு பாருங்கள், உங்கள் உடலில் டோப்போமின் மட்டுமல்ல, Endorphin, Seratonin, நிம்மதியான தூக்கம் கொடுக்கும் Melatonin போன்ற ஹார்மோன்கள் சுரக்கும்.
நுகர்வு கலாச்சாரம் கொண்டு நாம் வாங்கிய ஸ்மார்ட்போன், இரவு நேரத்தில் LED வெளிச்சத்தை நம்மீது காட்டுகிறது. அந்த வெளிச்சம் படும்வரை, Melotonin சுரக்காது. தூக்கம் வராது. Insomania என்று பெருமையாக கூறிக் கொள்ளும் கலாச்சாரம், நுகர்வு கலாச்சாரம்.
இளையராஜாவின் தாலாட்டு பாடல்கள், தமிழ் கலாச்சாரம். இந்திய திருமணங்கள் கூட, தமிழ் கலாச்சாரம். நிலையானது. தஞ்சாவூர் கோவில் போல் நிலையானது.
இளையராஜா ஒரு பாட்டில் சொல்லுவார், எங்க ஊரு காதல பத்தி நீ என்ன நினைக்கிற? ஆஷா போஸ்லே கேட்க, அது எங்க ஊரு காதல் போல ஆழம் இல்லயே!
திருமணம் செய்து கொள்வது, தமிழ்நாட்டில் அவ்வளவு லேசில் சாத்தியம் இல்லை. திருமணம் செய்து கொள்வது நுகர்வு கலாச்சாரத்தில் மிக எளிது. பெண்ணுடைய அப்பாவின் சம்மதம் வேண்டாம், Dating Site அல்லது Tinder போன்ற வலைதளம் போதும்.
ஆனால் பெற்றோர்கள், செய்து வைக்கும் திருமணம் கொஞ்சம் நிலைப்புத்தன்மை வாய்ந்தது. ஒரு பிரச்சினை என்றால் எல்லோரும் பதில் சொல்ல வேண்டும்.
நுகர்வுக் கலாச்சார திருமணம், அதாவது இன்றைய ரிஜிஸ்டர் ஆபீஸ் நடத்திவைக்கும் திருமணம் , அதே அரசாங்க கோர்ட் நீதிபதி முன்பு, வெற்றிகரமாக விவாகரத்து என்ற பெயரில் முடித்து வைக்கப்படும்.
மந்திரம் சொல்லி செய்யப்பட்ட திருமணம், எப்படி முடித்து வைக்க முடியும்?
அது முடியவே முடியாது. தஞ்சாவூர் கோவில் மாதிரி.
தமிழ் கலாச்சாரத்தில் ஒரு இட்லி செய்ய வேண்டும் என்றால், அரிசி உளுந்து வாங்கி, அதை அரைத்து, பக்குவமாக செய்ய, நேரம் உழைப்பு காலம் தேவை.
அதேபோல்தான் இந்திய திருமணம். இட்லி நிலைத்திருக்கும். நூடுல்ஸ், பாஸ்ட் புட் என்று சொல்லுவது தான் நுகர்வு கலாச்சாரம்.
தரையில் அமர்ந்து கொண்டு சாப்பிடுவது, தமிழ் கலாச்சாரம். நின்றுகொண்டே, நூடுல்ஸ் சாப்பிடுவது, நுகர்வு கலாச்சாரம். தமிழ் கலாச்சாரம் அம்மா உணவகம், விலை ஒரு ரூபாய்.
நுகர்வு கலாச்சாரம், ஒரு பாக்கெட் பாப்கார்ன் விலை 100 ரூபாய்.
இன்ஸ்டன்ட் சமையல் போல், இன்றைய இசையும், இன்ஸ்டன்ட் ஆகிவிட்டது.
ஒருவரை ஒருவர் பார்க்காமல், காதல் செய்கிறார்கள், அதுபோல் டைரக்டரும் இசையமைப்பாளரும் சந்திக்காமலே பாடல்கள் இசையமைக்கிறார்கள்.
உங்களிடம் 100 கம்ப்யூட்டர், வெளிநாட்டில் இருந்து வாங்கிய, Musical Library Notes இருந்தால், பத்து நிமிடத்தில் ஒரு பாடல் இசை அமைக்கலாம். ஆனால் இப்போதிருக்கும் இசையமைப்பாளர்கள், வெளிநாடு சென்று ஒரு மாதம் தங்கியிருந்து இசையமைக்கிறார்கள்.
எந்த வசதியும் இல்லாமல் இளையராஜா பத்து நிமிடத்தில் இசையமைத்தார். 10 ஆண்டுகாலம் மேலாக அந்த பாடல் நிலைத்து உள்ளது. இப்போது இருக்கும் இசை, பத்து நிமிடத்தில் விவாகரத்து கேட்கிறது நம் மனது இடம் இருந்தது!!!
இளையராஜா இசை தமிழ் கலாச்சாரம் தஞ்சாவூர் வீணை போல, இப்போதிருக்கும் திரையிசை, பில்கேட்ஸின் விண்டோஸ், நிறைய பணம் கொடுக்க வேண்டும், ஆனால் திருப்தி இருக்காது, மாற்றங்கள் மட்டும் இருக்கும்.
இளையராஜா இசை கேட்டால் நீங்கள் உங்கள் மனைவியை விவகாரத்து செய்ய மாட்டீர்கள். அது தமிழ் கலாச்சாரம்.
அவருக்குப் பின்னே வந்த இசையமைப்பாளர்கள், போட்ட இசையை கேட்டால், உடனடியாக எல்லா பெண்களையும் சந்தேகப்பட்டு, ஒன்று நீங்கள் விவாகரத்து செய்வீர்கள், அல்லது திருமணமே செய்து கொள்ளாமல், தனியாக உங்கள் ஸ்மார்ட் போனுடன் வாழ்க்கை நடத்துவீர்கள். இதுதான் நுகர்வுக் கலாச்சாரம்!
தமிழ் கலாச்சாரம் தஞ்சாவூர் கோவில் மாதிரி, நுழைவுக் கட்டணம் இல்லை. நுகர்வு கலாச்சாரம், Multiplex Mall போல் கட்டணம் செலுத்த வேண்டும்.
இலவசமாக நல்ல திரைப்படங்கள், நல்ல பாடல்கள், அம்மா உணவகம் என்பது தமிழ் கலாச்சாரம். சித்த மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம், தமிழ் கலாச்சாரம்.
காசு கொடுத்து மோசமான விஷயங்களை வாங்குவது நுகர்வு கலாச்சாரம். காசு கொடுத்து வாங்கிய பொருளால் உடம்பையும் மனதையும் கெடுத்துக் கொண்டு, அதை சரிப்படுத்த மீண்டும், காசு கொடுத்து ஆங்கில மருத்துவம் தேடுவது நுகர்வுக் கலாச்சாரம். நிலையான இன்பம் என்பது தமிழ் கலாச்சாரம். காசு கொடுத்து வாங்கும் துன்பம், நுகர்வு கலாச்சாரம்!
வாழ்க்கை பயணம் என்றும் சுகமான ,அன்பு ..சுமையானது .....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக