வியாழன், 5 ஆகஸ்ட், 2021

 கேள்வி : ஒரு வழக்கறிஞரை திருமணம் செய்து கொண்டால், வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கூறமுடியுமா சார் ...?



என் பதில் : 



அருமையான கேள்விங்க ....வாழ்க்கை ரொம்ப கொண்டாட்டமா இருக்கும்ஙக..


ஆமா.உண்மையா தான் சொல்றேன் ..


ஏங்க.டெய்லி கோர்ட்டுக்கு போயி வாதாடி, வாதாடி. வீட்டுக்கு வந்து பேசுறதுக்கு கூட சத்து இல்லாமல் டயர்டா போயிடுவாங்க ..அப்புறம் எங்கே..😀


இன்னொன்னு இந்த வாக்குவாதங்கள் அப்படிங்கிறது குடும்பத்திற்கு, குடும்ப உறவுகளுக்கு ஒத்துவராத ஒன்றுன்னு நல்லா தெரிஞ்சவங்க…நாம வக்கீலாக தான் கோர்ட்டில் போயி நிற்கணும்.. கட்சிக்காரனா, கேஸ் போட்டவரா அல்லது எதிர்தரப்பா நிற்க கூடாதுன்னு தெளிவா தெரிஞ்சுகிட்டவங்க!


விதிவிலக்கு இருக்கலாம்!


இந்த வாக்குவாதம் என்றவுடன், ஐயா சுகிசிவம் அவர்கள் பேச்சில நான் கேட்ட ஒரு சம்பவத்தை சொல்கிறேன் .


ஒரு மீனவன் மீன்பிடிக்க போனபோது அங்கு ஒரு பணக்காரர் தண்ணிக்குள்ள விழுந்து இறந்து இருப்பதை பார்த்து, அவருடைய உடலை வெளியில எடுத்துட்டு வர்றாங்க .அப்போ அந்த பணக்காரர் தரப்பு சொந்தக்காரர்களுக்கு தகவல் சொல்றாங்க அவங்களும் வந்து இந்த உடலை எடுக்க போனபோது, நான் இவ்ளோ கஷ்டப்பட்டு உடலை தூக்கிட்டு வந்து இருக்கேன். ஏதாவது பணம் கொடுங்க அப்படின்னு கேட்கிறார் மீனவர். ஆனா அவங்களுக்கு எதுவும் கொடுக்க விருப்பமில்லை. .போயிடுறாங்க


அப்போ என்ன பண்றதுன்னு தெரியாம, அந்த உடலை வச்சிருக்கணுமா, என்ன செய்யறதுன்னு மீனவருக்கு தெரியலை. எதுவும் பிரச்சினை வந்துருமோன்னு ஒரு வக்கீலை போய் பார்க்க போறார்


பீஸ் வாங்கிக்கிட்டு, அந்த வக்கீல் சொல்றாரு.." எந்த காரணத்தை கொண்டும் நீ அந்த உடலை கொடுக்காதே..அவங்க உடலை டிஸ்போஸ் பண்ணிடாத அவங்க எப்படியும் நீ என்ன பணம் கேட்கிறாயோ, அதை உன் கிட்ட கொண்டு வந்து கொடுத்து தான், அந்த உடலை மீட்டு எடுக்க முடியும்ம்.அவங்க அதுக்கான ஈமக்கிரியைகள் செய்தாதான் அந்த சொத்துகளின் உரிமை அவங்களுக்கு கிடைக்கும். அதனால நீ எத்தனை நாள் ஆனாலும் அதை சரியாக பராமரித்து வா"ன்கிறார் .


பணக்காரர் சொந்தக்காரங்க 2,3 நாளில் மீனவன் உடலை வச்சிருக்க முடியாம தூக்கி போட்டுருவான்னு பார்த்தா, அவன் அதை நல்லா பராமரித்து வர்றான் இப்ப என்ன பண்றதுன்னு தெரியல. எப்படி அவன் கிட்ட இருந்து அந்த உடலை வாங்குவது எப்படி என்று தெரியலனு ஒரு வக்கீலிடம் எதுக்கும் கேட்டு கேட்போம் , அவரது உடலை இல்லாமலே அந்த சொத்துக்களை அடைய முடியுமா அப்படினு ஒரு வக்கீலை பார்த்து கேட்கலாம்னு வராங்க யாரு கிட்டே?


அதே வக்கீல் கிட்டே..!


ஊரிலே வேற வக்கீலா இல்லே?!☺️ 

அவரும் அவங்க சொல்றதை கேட்டுட்டு முதலே பீஸ் எடுத்து வைங்கன்னு வாங்கிக்கிட்டு சொல்றாரு


" நீங்க பணமே கொடுக்காதீங்க இன்னைக்கு இல்லனாலும் ரெண்டு நாள் கழிச்சு அது அந்த உடலை அவனால ரொம்ப நாள் எல்லாம் பராமரிக்க முடியாது. எடுத்து வெளியில் தான் வைக்கணும் .அப்ப நீங்க போய் எடுத்துக்கலாம்" என்று அட்வைஸ் பண்ராறு.


இந்த பிரச்சனைக்கு ஏதாவது தீர்வு உண்டா? ☺️


கிடையவே கிடையாது !


அது மாதிரி சில விஷயங்கள்ல வாக்குவாதம் நடந்தால், அதற்கு முடிவே இல்லாமல் நீண்டு கொண்டே போகும்.


குடும்ப உறவுகளில், வாக்குவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டியது.அதுவும் கோர்ட்ல எத்தனையோ கேஸ்களில், குடும்ப உறவுகளில் ஏற்படும் உரசல்கள் பத்தி நல்லா தெரிஞ்சுக்கிட்ட வக்கீல்கள் யாருமே, அதை வீட்ல எதிரொலிக்க விரும்ப மாட்டாங்க !!


அன்பை எதிர் தரப்பில் அதிகப்படுத்தி அவள்/அவருடைய கையை இறுகப் பற்றிக் கொண்டால், அங்கே வாக்குவாதங்களை தோன்றாது என்பதை தெளிவாக உணர்ந்தவங்க !!


வெளியிலே சிங்கம் போல இருப்பாங்க!


வீட்டுக்கு போனா தான் தெரியும்…


அந்த சிங்கத்தின் மீது உட்கார்ந்திருப்பது.


துர்க்கைன்னு!


அந்த துர்க்கையும் வக்கீல் என்றால்….😀


நன்றி ...வணக்கம் ..நமஸ்காரம் ......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக