கேள்வி : 22 வயதான ஒரு தம்பி தன்னுடைய நேரத்தை எதில் முதலீடு செய்தால் என் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூற முடியுமா சார் ?
என் பதில் :
வாழ்க்கையின் வெற்றிக்கான சிறந்த ராஜதந்திரம் என்பது…உற்று நோக்கல். கூர்ந்து கவனித்தல். என்பதே ஆகும்.
சக மனிதர்களில்_ திறமையானவர்கள், உழைப்பவர்கள், அறிவாளிகள், முன்னேறிச் செல் பவர்கள், என்று ஒவ்வொருவரையும் பிரித்தெடுத்து…அவர்களின் கையாளும் முறைகள்; நேர்த்தி_என்பது போன்ற அவர்களின் மேனரிசம் போன்றவைகளை அப்படியே காப்பி அடித்தல். அல்லது இப்படி செய்வதை விட, அப்படி செய்யலாமே.. என்று சிந்தித்தல்.
சில நேரம் நமது சந்தேகத்திற்கான.. வினா எழுப்பி. விடைபெறுதல். இதனால் உங்களின் எண்ண ஓட்டமும், மனநிலையும், மேம்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. உதாரணமாக..
காரில் பயணம் செய்கின்றபோது.. டிரைவர் வண்டியை இயக்கிக் கொண்டிருப்பதை கவனிப்பதால்.. அதனால்.. ஓட்டுனரின் திறமை. கவனம். அதில் அவரின் ஈடுபாடு. வண்டி இயங்கும் விதம். போன்றவைகள் மேக்ஸிமம் ஓரளவுக்கு நம்மால் ஊகிக்க முடிகிறது அல்லவா? அது எனக்கு சம்பந்தமில்லாத விஷயம்.அதை தெரிந்து எனக்கு என்ன பயன்? என்று இருக்கக்கூடாது.
ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை இருக்கிறது. நல்ல விஷயம் இருக்கிறது. அவைகளை அறிந்து தெரிந்து, தெளிந்து கொள்வது_உங்கள் வயதிற்கு மிக நல்லது. அற்ப விஷயங்கள் என்று எதுவுமே இல்லை. ஒருவர் கையாளுகிற விதத்தில் அற்புதங்கள் இருக்கலாம். அதை உற்றுநோக்கல், கவனித்தல், தப்பே இல்லை!
நமது அறிவிற்கு தினம் தினம் நல்ல விஷயங்கள், கருத்துக்கள், (நல்லது, கெட்டது) அனைத்தும் பதிவாகிக் கொண்டு இருக்கிற போது_என்றாவது ஒரு நாளில் பட்ட அனுபவம் போல நமக்கு நல்ல பலனைத் தரும்!
எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. ஜெராக்ஸ் காப்பி எடுக்க சென்றால் . அந்த மிஷினின் பெயர் என்ன? எந்த கம்பெனி தயாரிப்பு? என்ன விலை? எப்போது வாங்கினீர்கள்? இதை எப்படி பழுது பார்க்கிறார்கள்? எப்படி இயங்குகிறது? இதன் பயன் என்ன? இதனால் லாபம் என்ன? இன்னும்.. ஏகப்பட்ட சந்தேக கேள்வி கேட்டு கடைக்காரரை தொனதொனப்பேன். பிறகு கோவிச்சுக்காதீங்க சார். சும்மா ஒருநாலேஜ்க்காகதான் என்பேன். இது போன்று நான் சென்று தினம் தோறும் பார்க்கும் செல்லும் வாடிக்கையாளர்களை அவர்களின் புதிய தொழில்கள் ,வேலைபார்க்கும் இடம் போன்று என் அறிவை வளர்த்துக்கொள்ள இது போன்று தகவல் சேகரித்து கொள்வேன் .
கட்டையில போற வயசுல இதை தெரிஞ்சு உனக்கு என்ன ஆகப்போகுது..? என்று ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். அதோடு விஷயத்தை விடுவனா? வீட்டுக்கு வந்ததும் பிள்ளைகளை அதுபற்றி கூகுளில் ரிசர்ச் பண்ண சொல்லி.. அதை வாங்கி படிப்பேன்! இதனால் எனக்கு என்ன பயன் வந்தது என்கிறீர்களா?
ஆமாம் பயன் வந்தது. எனது மகன் இவருக்கு இருக்கின்ற இந்த ஆர்வம் நமக்கு இல்லையே என்று தன்னை திருத்திக் கொள்கிறார்கள். இது போதாதா…?
உங்கள் நேரத்தை பயனுள்ளதாக்க.. நிறைய கற்றுக் கொள்ளுங்கள். நிறைய தெரிந்து கொள்ளுங்கள். தொடர்ந்து காரியமாற்றுங்கள்.
வாழ்க்கையில் முன்னேறுங்கள். வாழ்த்துக்கள். நன்றி.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக