கேள்வி : எப்பொழுதும் படித்து கொண்டிப்பவரை பார்த்து உங்களுக்கு எப்போதாவது நம்மால் இப்படி படிக்க முடியவில்லையே என்று தோன்றியிருக்கிறதா சார் ?
என் பதில் :
நாம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது முக்கியமில்லை, நாம் சாப்பிட்ட உணவு, எவ்வளவு நம்ம உடலில் சேருகிறது என்பது தான் முக்கியம்.
நாம் எவ்வளவு படிக்கிறோம் என்பது முக்கியம் இல்லை, படித்தது எவ்வளவு வாழ்க்கையில் எடுத்துக்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்!
ஒரு புத்தகத்தை கையில் கொடுத்து விட்டு, அந்தப் புத்தகத்தைப் படித்து, அதைப்பற்றி நீ உனது வார்த்தைகளால் எழுது என்று அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அந்தப் புத்தகத்தில் உள்ளதை அப்படியே, திரும்பச் சொல்லக்கூடாது, என்று கண்டிஷன் போட வேண்டும். அது ஒழுங்கான கல்வி!
ஆனால் இப்போது இருக்கும் கல்வித் திட்டம், புத்தகத்தில் படித்தது அப்படியே வார்த்தை மாறாமல் திரும்ப சொல்ல வேண்டும், எழுத வேண்டும் ஒரு வட்ட தாண்டி வெளியே சிந்திக்க கூடாது என்றல்லவா கற்றுக் கொடுக்கிறது?
அடுத்தவனை பார்த்து காப்பி அடி, என்று நம் கல்வித் திட்டம் மறைமுகமாக சொல்லிக் கொடுக்கிறது.
விளைவு, படித்த கலெக்டர் மருத்துவர் தொடங்கி, படிக்காத சினிமா டைரக்டர் வரை எல்லோரும் காப்பி அடிக்கிறார்கள்!
இந்தியானா ஜோனஸ், Indiana jones, Lost Crusade என்ற திரைப்படத்தில், ஒரு காட்சியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹீரோ லைப்ரரிக்குள், நுழைந்து விடுவார்.
படித்துக் கொண்டிருக்கும் ஒரு மாணவன் கேட்பான், " ஐயா நான் உங்களை போல் ஒரு புகழ்பெற்ற, ஆராய்ச்சியாளராக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? "
முதலில் லைப்ரரி விட்டு வெளியே வா! இந்த உலகமே ஒரு மிகப்பெரிய லைப்ரரி. வெளியே படிப்பதற்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. இயற்கையை படி, மனிதர்கள் படி, நூல்களை விட்டு வெளியே வா!", என்று சொல்லுவார்!
நான் புத்தகத்தை படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. படித்தவுடன் கிழித்து விடவேண்டாம். பத்திரமாக எடுத்து வையுங்கள். நீங்கள் படித்ததை முதலில் பொருத்திப் பாருங்கள்.
நம்மூரில் படிப்பவர்கள் யாரும், படித்தது எதையுமே வாழ்க்கையில் செய்வதில்லை. நியூட்டனின் விதியை படித்துவிட்டு, பேங்கில் குமாஸ்தா வேலை செய்கிறார்கள்.
இன்ஜினியரிங் புத்தகங்களைப் படித்துவிட்டு, கால் சென்டர், Swiggy Zomato என்று சாப்பாடு எடுத்துக்கொண்டு போதும் வேலை செய்கிறார்கள்.
தோசை கடை வைத்தவர், பெருமையாக சொல்லுகிறார், நான் BE படித்த பொறியாளர் என்று! நீ வாழ்க்கையில் தோசை கடை தான் வைக்க வேண்டும் என்றால், நீ அது சம்பந்தமாக, catering படி!
ஆனால் கேட்டரிங், நர்சிங் போன்ற படிப்புகளைப் படிக்க மாட்டார்கள். டாக்டர் இன்ஜினியர் படித்துவிட்டு சமையல் வேலை பார்த்தாலும் நம் ஆட்களுக்கு கௌரவம்!
டாக்டர் இன்ஜினியர் படித்தவர்களுக்கு தான் பெண் கொடுப்பார்கள். அதுதான் காரணம்.
மாப்பிள்ளை BE படிச்சிட்டு, பிச்சை எடுக்கறதுக்கு ஒரு APP டெவலப் செஞ்சிருக்காரு! Online பிச்சை எடுப்பது, போடுவது என்று இன்று உலகம் முழுக்க பிச்சை எடுக்க AI என்னும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகிறார். சுந்தர் பிச்சை போல ஆக போகிறார்! என்று சொல்லி, அமெரிக்காவிற்கு பெண்ணை கல்யாணம் செய்துகொடுத்து, பெருமைப்படும் அப்பாக்கள் உண்டு!
நீங்கள் படித்த படிப்புக்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தமே இல்லை என்றால், அந்தப் படிப்பைப் படித்து என்ன பயன்?
சதாசர்வகாலமும் படிப்பது முக்கியமில்லை. வாழ்க்கையில் எப்படி அதை உபயோகப் படுத்துகிறார்கள் என்பதுதான் முக்கியம். பெரும்பாலும், நல்ல மார்க் வாங்கி, நல்ல வேலை வாங்குவதற்கு மட்டும் தான் படிப்பை பயன்படுத்துகிறார்கள். பணத்துக்காக படிப்பு என்று ஆனபின்பு, நீங்கள் எவ்வளவு படித்தாலும் அந்த படிப்பு வீணே!
அதுபோல் விழுந்து விழுந்து படிக்கும் பெண்களை பார்த்தால், பரிதாபமாக இருக்கும். இதுபோன்ற படிப்பாளிகளால் நாட்டுக்கு எந்த பயனும் இல்லை!
, நீரஜ் சோப்ரா. ஈட்டி எறிதலில் நம் நாட்டுக்கு தங்கம் வென்றுள்ளார் நாட்டுக்கு எப்படி பெருமை தேடித் தந்துள்ளார் பாருங்கள்! அவரைப்போல் விளையாட்டில் ஜெயிக்க வேண்டும் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பெற்றோர்கள், படி படி என்று பிள்ளைகளை நச்சரித்து, இன்று பாலத்துக்கு அடியில் படுத்து கிடப்பவர்கள் எல்லாம் இன்ஜினியர்கள்!
தமிழ்நாட்டில் யார் மேலாவது தடுக்கி விழுந்தால், ஒரு இன்ஜினியர் மேல் தான் விழ வேண்டும். நம் நாட்டில் படித்தவர்கள் எல்லோரும், " படித்தவுடன் கிழித்து விடவும்" என்று ரீதியில் படிக்கிறார்கள்! இதில் எனக்கு உடன்பாடு இல்லை!
வாழ்த்துக்கள் தங்கமான தங்கம் நீரஜ் சோப்ரா. ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக