புதன், 4 ஆகஸ்ட், 2021

கேள்வி : புத்தகம் வாசித்தல் மூளையில் எதுபோன்ற மாற்றங்களைக் கொண்டுவரும்?

கேள்வி : புத்தகம் வாசித்தல் மூளையில் எதுபோன்ற மாற்றங்களைக் கொண்டுவரும்?


என் பதில் : 


வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களை எளிதாக கடக்க, புதிய விஷயங்களை அறிந்து கொள்ள, நம்மை மேம்படுத்தி கொள்ள என புத்தகங்கள் நம் வாழ்கையில் இன்றியமையாத ஒன்று.

ஒருவரின் பேசும், பழகும் திறனை பெரும் அளவில் புத்தகங்கள் நிர்ணயம் செய்கின்றன.

நம் கற்பனா சக்தி அதிகரிக்கும் - புத்தகத்தில் உள்ள இடம், பொருள், மனிதர்களுடன் நாம் ஐக்கியமாகிவிட்டால், நாமும் ஒரு கதாபாத்திரமாக மாறி அவர்களுடன் பயணம் செய்யும் ஒரு ஃபீல். நம்மை வேறு உலகுக்கு அழைத்து செல்லும் ஆற்றல் விஷுவல் மீடியாவை விட புத்தகங்களுக்கு அதிகம்.


கூனர்ந்து கவனிக்கும் திறன் - கவன சிதறல்கள் குறைந்து எந்த ஒரு விஷயத்தையும் நம்மை அறியாமல் கூர்ந்து கவனிக்க தொடங்குவோம்.
எழுத்தாற்றல் மேம்படும் - எது போன்ற வார்த்தைகளை எங்கே பயன்படுத்த வேண்டும், வாக்கியங்களை எப்படி உருவாக்க வேண்டும், பல புதிய சொற்கள், எழுத்து பிழையை சரி செய்தல், புது விதமான எழுத்து திறமையை வளர்த்து கொள்ளுதல் என்று அடுக்கி கொண்டே போகலாம்.

தனிமை உணர்வு மற்றும் மனசோர்வு - புத்தகங்கள் மனிதனின் best தோழன் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. மனம் வாடும் நேரம், ஒரு light hearted புத்தகம் வாசி ப்பது, ஒரு தோழன்/தோழியிடம் மனம் விட்டு பேசுவது போன்றது. நிறைய மனம் விட்டு அழவேண்டும் என்றால், அழுகாச்சி நூல்கள்! (இது எனக்கும் பயன் பட்டிருக்கிறது பல முறை) 😄


Critical and cognitive thinking (விமர்சன சிந்தனை மற்றும் அறிவாற்றல்) - பிறர் சொல்வதையே பின்பற்றி கொண்டு இராமல், நாம் சுயமாக பல கோணத்தில் ஒரு விஷயத்தை ஆராய முற்படுவோம். சுய சிந்தனைகள் நம்மை அடையாளப்படுத்த பெரும் உதவி புரிபவை.

தன்னலம் தாண்டி யோசித்தல் - நிஜ வாழ்கை வரலாறுகள், துயரங்கள், சுயசரிதைகள் பிறரின் பிரச்சினைகளை நம் கண் முன்னே நிறுத்தி -- " உன் துயரம் போலவே அல்லது அதையும் தாண்டி பிறருக்கும் துயரங்கள் உள்ளது" என எடுத்து கூறி நம் உள்ளே மனித நேயம், பச்சாதாபம் போன்ற உணர்வுகளை விதைக்க உதவுகிறது.

பன்னாட்டு கருத்தரங்கங்கள் ,விழாக்களில் ,பேச மிகவும் உதவி புரிகிறது ..

தன்னம்பிக்கை அதிகரித்தல் - நிரம்ப படித்து பலதை கற்பது சுய மதிப்பீட்டை அதிகரித்து, பல படித்த அறிவாளிகளுடன் கலந்துரையாடல், நட்பு பாராட்டல், என்று நம் சமூக வட்டத்தை அறிவு வட்டமாக உருமாற்றலாம்.


நித்திரையை தூண்டும் - உறங்க செல்வதற்கு முன் ஓரிரண்டு பக்கங்களை படித்து விட்டு படுத்தால், நிம்மதியான தூக்கம் உறுதி (என் அளவில்).


அதற்காக கொலை, கொள்ளை, அமானுஷ்யம், இரத்த காட்டேரி, பேய், பிசாசு, Annabelle, conjuring போன்றவற்றை படித்து விட்டு உறங்க சென்றால், தூக்கம் இல்லை, கெட்ட கனவுகள் தான் வரும் 😂

நன்றி ..வாசிப்பை ..நேசிப்போம் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக