வெள்ளி, 5 மார்ச், 2021

 கேள்வி : செயலற்ற வருமானம் (Passive income) என்றால் என்ன? எப்படி நாம் அதனை அடையலாம்?


என் பதில் :


வயது முதிர்ந்து, வருமானம் இன்றி தடுமாறும்போது, பல நாடுகளில் அரசின் சார்பில் 'சமூக பாதுகாப்பு' (social security) ஆதரவு உண்டு. இந்தியாவில் இல்லை.


வருமானத்தில் இரண்டு வகைகள்.


வணிகம் அல்லது வேலை மூலம் வரும் செயல் வருமானம் (Active Income). வேலையை நிறுத்தி விட்டால் செயல் வருமானம் நின்று விடும்.

வேலை செய்கிறாமோ, இல்லையோ, ஓய்வில் இருந்தாலும் தானாக வரும் வருமானம் செயலற்ற வருமானம் (Passive income).

சரியான முதலீட்டை ஒரு தடவை செய்தாலே போதும்; கவுன்சிலர் வரும்படி போல, மாதம்தோறும் வந்து கொண்டே இருக்கும்.


சில உதாரணங்கள்:


நல்ல ஷேர் முதலீட்டில் தவறாமல் கிடைக்கும் டிவிடெண்ட்.

கடனுக்கு கிடைக்கும் வட்டி

வங்கி டெபாசிட் வட்டி

பணி ஓய்வு பென்ஷன்

LIC போன்ற நல்ல நிறுவனங்களில் மேற்கொள்ளும் annuity பென்ஷன் திட்டங்கள்.

வீடு, வணிக வளாகங்கள் கட்டி விட்டு அதில் கிடைக்கும் வாடகை.


செயலற்ற வருமானத்துக்கு சில விதிகள் உண்டு. முதல் விதி..


## மாதந்தோறும் வர வேண்டும்.


நாம் செய்யும் ஒரு முதலீடு பிற்காலத்தில் பன்மடங்காகலாம். (உம்: ரியல் எஸ்டேட்)

ஆனால் அது செயலற்ற வருமானத்துக்கு உதாரணம் அல்ல !

மாதம்தோறும் நமக்கு வருமானம் வேண்டும்!

## விலை வீக்கத்துக்கு (Inflation) ஏற்ப மாற வேண்டும்.


உங்களுக்கு வயது 60. குடும்பத்தில் இரண்டு பேர். 2020ல், உங்கள் குடும்பத்துக்கு 20,000 ரூபாய் போதுமானதாக இருக்கலாம்.

இதுவே இருபது வருடங்கள் கழித்து, உங்களது 80வது வயதில் அதே இரண்டு பேருக்கு 20,000 ரூபாய் போதுமா?.

## ஆண்டுதோறும் அதிகமாக வேண்டும்.


பொதுவாக ஆக்டிவ் வருமானம் ஆண்டுதோறும் கூடிக்கொண்டே வரும். (உம் : உங்கள் சம்பளம்.)

செயலற்ற வருமானமும் அதுபோல கூடவேண்டும்.

இருப்பதில் வாடகை வருமானம்தான் செயலற்ற வருமானத்தில் முதல் தரம். விலைவாசி கூடினால் வாடகையும் கூடும்.

மாறாக வங்கி டெபொசிட்டுக்கு வரும் வட்டி அப்படியே இருக்கும். சமயத்தில் குறைந்தும் விடும்.

மிக முக்கியமாக மக்களுக்கு செயல் வருமானம் குறையும் வருடங்களில், செயலற்ற வருமானமான டெபாசிட் வட்டியும் குறையும். இந்த வருடத்தையே ஒப்பிட்டுப் பாருங்களேன்.


பண வீக்கம் குறைந்தால், விலைவாசி குறையும்,

## இப்பொது செயலற்ற வருமானத்தை சேமிக்க வேண்டும் !


சம்பளதாரர்களுக்கு ஆக்டிவ் வருமானம் 60 வயதில் நின்றுவிடலாம். IT வேலைகளில் அதற்கும் முன்னாலேயே.

இப்பொழுது 65 வயதில் இருக்கும் இந்தியர்களில் மிக பெரும்பான்மையோர் 85 வயதை பார்த்துவிடுவார்கள் என்பது ஒரு மருத்துவ கணிப்பு.

பணி ஓய்விற்குப்பிறகு இப்படி இருபது, முப்பது வருடங்கள் வரை வாழ வேண்டி வரும்.

தேவையில்லாமல் கடனில் வாகனம். வீடு என்று வாங்காதீர்கள்.

வரிச்சலுகை, கம்பெனி தரும் பெட்ரோல் சலுகை போன்றவை இல்லையென்றால் வாடகை வாகனங்களை பயன்படுத்துங்கள்.


## செலவை கட்டுப்படுத்துங்கள்


அளவுக்கு அதிகமாக காப்பீடு எடுத்துக்கொள்ளாதீர்கள்.

சம்பாதிக்கும் ஒருவர் மரணம் அடைந்தால், அவர் குடும்பம் திணறக்கூடாது என்பதற்கே காப்பீடு.

சம்பாதிப்பவர் உயிருக்கு மட்டுமே காப்பீடு செய்ய வேண்டும்.

## இன்சூரன்ஸ் ஒரு சேமிப்பு அல்ல.


40000 ரூபாய் சம்பாதித்தால் மாதம் 10000 ரூபாய் நிப்டி பண்டில் போடுங்கள். ஓய்வில் இரண்டு கோடிக்கும் மேல் கிடைக்கும்.

25 வயதில் வேலை செய்ய ஆரம்பித்திருப்பீர்கள். அந்த வருடம் 100% உங்களுக்கு செயல் வருமானம்தான். அதில் சிறிது சேமிக்க வேண்டும்.

## வருமானத்தில் 30% சேமியுங்கள்


இப்படி சில வருடங்கள் சேர்த்தால் அந்த சேமிப்பிலிருந்து மாதம் தோறும் செயலற்ற வருமானம் வரும். அதையும் சேமிக்க வேண்டும்.

50 வயதில் நின்று பாருங்கள்.

இப்போது உங்கள் செயல் வருமானத்தில் 25 சதவீதமாவது, உங்களது செயலற்ற வருமானம் வர வேண்டும்.

அப்பொழுதுதான், 60 வயதில் அது 50 சதவீதம் என உயரும்.

கவனம் : இறுதி மாத சம்பளம் ஒரு லட்சம் என்றால் அடுத்த மாத பென்ஷன் 40,000 தான்!

சிலர் சரியாக திட்டமிட்டு, இந்த செயலற்ற வருமானம் (பென்ஷன் உட்பட) இறுதி மாத சம்பளத்துக்கு ஈடாக ஒரு லட்சம் உறுதி செய்கிறார்கள்!

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms

siva19732001@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக