இன்று என் முப்பாட்டன் பிறந்தவாழ்ந்த ..எரிசனம்பட்டி
பில்லவநாயக்கண்சாலையூர் ..கோவில் திருவிழா ..இன்று மாலை தரிசனம் 🥰🙏
இன்று மாலை நேரம் அலுவுலக நேரம் முடிந்து ...என் முப்பாட்டன் பிறந்த வாழந்த ஊர் ..எரிசனம்பட்டி ..பில்லவநாயக்கன்சாலையூர் ...கருவுலூர் மாரியம்மன் கோவில் திருவிழா ..சிறிய ஊர் ...எனக்கு விவரம் தெரிந்து 15 குடும்பங்கள் வாழந்த ஊர் ..எனது தந்தையும் சிறுவயதில் உடுமலையில் புலம்பெயர்ந்து 70 வருடங்கள் ஆகிறது ..
இன்னும் ஊர் சிறிய அளவில் உள்ளதும் ,ஊரின் வலதுபக்கம் நிலங்கள் வீட்டு நிலங்களாக பிரிக்க பட்டு வளர்ச்சி ஆனா அறிகுறியாக தெரிந்தது .என் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் மேய்ச்சலை முடித்து பெரியவர் ஒருவர் தன் ஆடுகளுடன் வீடு திரும்பி கொண்டுருந்தது ..என் முப்பாட்டன் நினைவுகளும் , 6 வருடங்களுக்கு முன் என் தந்தையுடனும் ,என் செல்ல மகன் ஷியாம் உடன் சென்ற நினைவுகள் திரும்ப மனதில் ஓடியது .
அப்பாவுடன் உடன் பிறந்தவர்கள்
1.சின்னவ நாயக்கர் -ஆண்டம்மாள் (உடுக்கம்பாளையம் ).தாத்தா -பாட்டி
அப்பாவுடன் உடன் பிறந்தவர்கள்
1. செல்லம்மாள் -நண்டவநாயக்கர் (பெரியகோட்டை )
2.பொம்மக்கா -மலையாண்டிசாமி (உடுக்கம்பாளையம் )
3.நண்டவ நாயக்கர் - செல்லம்மாள் (உடுக்கம்பாளையம் )
4.ஆண்டவா நாயக்கர் -ஆண்டம்மாள் (எரிசனம்பட்டி )
5.வள்ளியம்மாள் -நண்டவநாயக்கர் (பெரியகோட்டை )
6..கந்தசாமி (பிட்டர் )- சின்னஅம்மிணி (உடுக்கம்பாளையம் )
7.கிருஷ்ணசாமி (உடுமலைப்பேட்டை )-கொண்டம்மாள் (தளிஜல்லிபட்டி )
உடன்பிறந்தவர்கள் இந்த ஊரில் பிறந்த வளர்ந்த ஊர் ..
தற்பொழுது புதிய சொந்தங்கள் நம் சமுதாய குடும்பங்கள் 70 குடும்பங்கள் உள்ளனர் ..எனக்கு தெரிந்து 5 சொந்தங்கள் முகம் பார்த்த பேசிய சொந்தங்கள் ..
இன்று கோவில் திருவிழாவில் ..நம்ம மாப்பிள சசி ,திருமலைசாமி அவர்களுடன் குறைந்தளவு நேரம் கலந்துரையாடியது மிக்க மகிழ்ச்சி ..என் பெரியப்பா நண்டவ நாயக்கர் அவர்களின் மகன் என் அண்ணன் நடராஜ் அவர்களுடன் பேசியதும் ..அவர்களின் பேரப்பிள்ளைகளுடன் கலந்துரையாடியது மிக்க மகிழ்ச்சி ..அண்ணன் வீட்டின் திண்ணையில் உட்கார்ந்து மலரும் நினைவுகளை என் தந்தையின் சிறுவயது நிகழ்வுகளை பற்றி பேசியதும் ,அவர்களின் வீட்டு திண்ணையில் ..திருவிழாக்காலம் ,திருமணங்கள் ..நடைபெற்றதையும் ..திண்ணையின் பெருமைகளை பேசியது மனதிற்கு இதமான காப்பி சுவையுடன் கேட்டு மகிழந்தது மகிழ்ச்சி .
என் தந்தையின் நண்பர் ,சொந்தம் எர்ரண்ணன் அவர்களின் புதல்வர்கள் இரண்டுபேரிடம் சந்தித்ததும் ,தம்பி சிவராஜ் (கந்தசாமி -salestax ) நலம் விசாரித்து பேசியது மலரும் நினைவுகள் ...கருவலூர் மாரியம்மன் -சப்பரம் கொண்டுவருதல் நிகழ்வுகளை கண்டும் ,தரிசனம் செய்து உடுமலை திரும்பியது அருமையான ஆன்மீக பயணமாக அமைந்தது ....
குறிப்பு :வருடங்கள் கடந்தாலும் ..தாத்தா, பாட்டி ,அப்பாவுடன் உடன் பிறந்தவர்கள் ஊரை மறப்பது அவ்வளவு சுலபமில்லை ...வரும் தலைமுறைக்கு மனதில் பதியசெய்வோம் ..தற்பொழுது உள்ள புதல்வர்கள் ,பேரப்பிள்ளைகளுக்கு தெலுங்கு மொழி யாருமே கற்று கொடுக்கவில்லை என்பது என் மனதில் ரணமாக உள்ளது ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக