ஞாயிறு, 28 மார்ச், 2021

 கேள்வி :  வெவ்வேறு உயரங்களில் வீடு கட்டுவதால் ஏற்படும் நன்மை தீமைகள் என்னென்ன? 


அதாவது, ஒரு சிலர் 8 அடி உயரத்தில் கட்டுகின்றனர். ஒரு சிலர் 10, ஒரு சிலர் 12 அடி உயரத்திலும் கட்டுகின்றனர். இதில் எந்த உயரம் சிறந்தது? ஏன்?



என் பதில் : 


பொதுவாக வீடுகள் கட்டும்போது உயரம் 10 அடி வைத்து கட்டுவார்கள்.


வாசல் கதவு உயரம் உள்கூடு 6 அடி, எனவே வாசல்படி உயரம் மொத்தம் 7அடி. அதற்கு மேல் மூன்றடி சேர்த்து 10 அடி. அந்த மூன்று அடியில் இரண்டு அடி பொருள்கள் வைப்பதற்கு இடம்.


மேலும் மின்விசிறி தளத்தில் இருந்து 1 1/2அடியாவது இருந்தால் தான் காற்று நன்றாக வரும். மேலும் ஆறு அடி உயரம் இருப்பவர்கள் கூட கையை உயர்த்தினாலும் மின்விசிறி இடிக்காமல் இருக்க வேண்டும்.


தளத்தின் உயரம் உள் கூடு 10 அடி இருந்தால் தான் இது எல்லாம் சாத்தியம்.


மொத்தத்தில் வீடு கட்ட உள் உயரம் 10 அடியே சரியானது.


Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms

siva19732001@gmail.com

வெள்ளி, 26 மார்ச், 2021

 வேடசந்தூர் தொகுதி வரலாறு ..


தமிழகத்தில் எந்த ஒரு சட்டசபை தொகுதியிலும் இல்லாத ஒரு களநிலவரம் வேடசந்தூரில் நிலவுகிறது. ஆளும் அதிமுக வேட்பாளர், எதிர்க்கட்சி திமுக வேட்பாளர் இருவரில் யார் வெல்வார்கள்? என்பதுதான் இந்த தொகுதியில் திரும்பிய திசையெங்குமான விவாதம்.


வேடசந்தூர் சட்டசபை தொகுதியில் சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ. டாக்டர் வி.பி.பி. பரமசிவம் போட்டியிடுகிறார். திமுக வேட்பாளராக முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன் போட்டியிடுகிறார்.


வி.பி.பி. பரமசிவத்தின் தந்தை மறைந்த முன்னாள் துணை சபாநாயகர் வி.பி. பாலசுப்பிரமணியனுடன் தேர்தல் களத்தை எதிர்கொண்டவர் காந்திராஜன். இப்போது வி.பி. பாலசுபிரமணியனின் மகனையும் சட்டசபை தேர்தலில் எதிர்கொள்கிறார் காந்திராஜன்.

அதிமுக-வி.பி. பாலசுப்பிரமணியன்

இந்த தொகுதியில் விசித்திரமான ஒரு அரசியல் சூழல் உள்ளது. எம்.ஜிஆர். காலத்தில் துணை சபாநாயகராக இருந்து, பின்னர் ஜானகி அணிக்குப் போய் கடைசியில் ஜெயலலிதா தலைமையிலான ஒருங்கிணைந்த அதிமுகவில் இருந்தவர் வி.பி. பாலசுப்பிரமணியன். ஆனால் ஆர்.எம்.வீரப்பனை கட்சியில் இருந்து நீக்கியபோது சீனியரான வி.பி. பாலசுப்பிரமணியனையும் கட்டம் கட்டினார் ஜெயலலிதா. அத்துடன் வி.பி. பாலசுப்பிரமணியனுக்கும் அதிமுகவுக்குமான உறவு முறிந்து போனது.

மாஜி துணை சபாநாயகர் காந்திராஜன்

வி.பி. பாலசுப்பிரமணியனுக்கு எதிராக ஜெயலலிதாவால் அரசியல் களத்துக்கு கொண்டுவரப்பட்டு துணை சபாநாயகராகவும் ஆக்கப்பட்டவர் காந்திராஜன். பின்னர் அதிமுகவில் இருந்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார் காந்திராஜன்.

அதிமுக வேட்பாளர் வி.பி.பி. பரமசிவம்

காலம் மாற.. களமும் மாற.. இப்போது ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட வி.பி.பாலசுப்பிரமணியனின் மகன் 2-வது முறையாக அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். காந்திராஜன் மீண்டும் சட்டசபை தேர்தலில் திமுக வேட்பாளராக களம் காணுகிறார். இதற்கு அப்பால் இருவரும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள். அதிமுக எம்.எல்.ஏ. டாக்டர் பரமசிவத்துக்கு ஜாதிய அடிப்படையில் சித்தப்பா உறவு முறைதான் காந்திராஜன்.


வாக்க்காளர்களிடம் குழப்பம்

இந்த தொகுதியில் டாக்டர் பரமசிவம், காந்திராஜன் இருவரும் சார்ந்த ஒக்கலிகா ஜாதியினரே பெரும்பான்மையினராக உள்ளனர். இருவருக்கும் நெருக்கமான உறவினர்கள்தான் பெரும்பாலானவர்கள். அதனால் இந்த முறை யாருக்கு வாக்களிப்பது என்பதில் கணிசமான அளவுக்கு குழப்பமும் இருவரது உறவினர்களிடத்தில் இருக்கிறது.

அதிமுக-பாஜக கூட்டணி எதிர்ப்பு மனநிலை 

தொகுதியில் நல்லது கெட்டது என அத்தனைக்கும் பரமசிவமும் காந்திராஜனும் ஆஜராகிவிடுவர். தொகுதியில் நாள்தோறும் பயணம் செய்து பல்வேறு நலத்திட்டப் பணிகளை ஒவ்வொரு கிராமத்துக்கும் செய்து கொடுத்தவர் பரமசிவம். அவரது செயல்பாடுகளின் அடிப்படையில் அவருக்குதான் வாக்களிக்க வேண்டும் என்கிற மனநிலையும் இருக்கிறது. இன்னொருபக்கம் பாஜகவுடன் வலம் வரும் அதிமுக என்பதால் வேறுவழியே இல்லாமல் காந்திராஜனை ஆதரிப்போம் என்கிற போக்கும் இருக்கிறது. அதாவது அதிமுக- பாஜக கூட்டணியின் விளைவாக இந்த நிலையை எடுக்கலாம் என நினைப்போரும் உண்டு.

காந்திராஜன் மீது அனுதாபம் 

இன்னொரு பக்கம் கடந்த 2014 லோக்சபா தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் காந்திராஜன் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அப்போது எளிதாக வெல்ல வேண்டிய காந்திராஜன் பண பலம் இல்லாத நிலையில் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்... இம்முறை அவருக்கு நிச்சயம் வாய்ப்பு கொடுத்தே தீர வேண்டும் என்ற அனுதாபத்துடன் கணிசமான உறவினர்கள் களப் பணியில் இருக்கின்றனர்.


தமுமுக,,மனிதநேய மக்கள் கட்சி,புதிய நீதிக் கட்சி,விடுதலைச் சிறுத்தைகள்,புதிய தமிழகம்,பகுஜன் சமாஜ் கட்சி,மக்கள் நீதி மய்யம்,மனிதநேய ஜனநாயகக் கட்சி,கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி,எஸ்டிபிஐ,சமத்துவ மக்கள் கட்சி,நாம் தமிழர் கட்சி,பாமக,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,மதிமுக,அதிமுக,திமுக,காங்கிரஸ்,பாஜக,தமாகா,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,ஆம் ஆத்மி,

இந்த கட்சிகளையெல்லாம் தாண்டி களத்தில் நிற்பதே ..மிகப்பெரிய மனோ திடம் வேண்டும் ...களம் காண்போம் ..வெற்றிக்காக ....இன்று வேடசந்தூரை நோக்கி ..பயணம் ....

கோவை ,திருப்பூர் மாவட்ட தென்கொங்கு மண்டல பகுதியில் இருந்து தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக பொறுப்பாளர்கள் பயணம் .... சந்திப்போம் நமது வேடசந்தூர் மோதிரம் வேட்பாளர் காட்டுராஜா என்கிற பொ. பழனிச்சாமி அவர்களுக்கு அதிர்ஷ்ட சின்னமான மோதிரம் சின்னத்தில் வாக்களிக்கக்கோரி கடுமையான களப்பணிக்காக .....📚📚✍️✍️✍️🌳🌳🌳🌳


வியாழன், 25 மார்ச், 2021

 இன்று என் முப்பாட்டன் பிறந்தவாழ்ந்த ..எரிசனம்பட்டி

 பில்லவநாயக்கண்சாலையூர் ..கோவில் திருவிழா ..இன்று மாலை தரிசனம் 🥰🙏


இன்று மாலை நேரம் அலுவுலக நேரம் முடிந்து ...என் முப்பாட்டன் பிறந்த வாழந்த ஊர் ..எரிசனம்பட்டி ..பில்லவநாயக்கன்சாலையூர் ...கருவுலூர் மாரியம்மன் கோவில் திருவிழா ..சிறிய ஊர் ...எனக்கு விவரம் தெரிந்து 15 குடும்பங்கள் வாழந்த ஊர் ..எனது தந்தையும் சிறுவயதில் உடுமலையில் புலம்பெயர்ந்து 70 வருடங்கள் ஆகிறது ..


இன்னும் ஊர் சிறிய அளவில் உள்ளதும் ,ஊரின் வலதுபக்கம் நிலங்கள் வீட்டு நிலங்களாக பிரிக்க பட்டு வளர்ச்சி ஆனா அறிகுறியாக தெரிந்தது .என் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் மேய்ச்சலை முடித்து பெரியவர் ஒருவர் தன் ஆடுகளுடன் வீடு திரும்பி கொண்டுருந்தது ..என் முப்பாட்டன் நினைவுகளும் , 6 வருடங்களுக்கு முன் என் தந்தையுடனும் ,என் செல்ல மகன் ஷியாம் உடன் சென்ற நினைவுகள் திரும்ப மனதில் ஓடியது .


அப்பாவுடன் உடன் பிறந்தவர்கள் 

1.சின்னவ நாயக்கர் -ஆண்டம்மாள் (உடுக்கம்பாளையம் ).தாத்தா -பாட்டி 

அப்பாவுடன் உடன் பிறந்தவர்கள் 

1. செல்லம்மாள்  -நண்டவநாயக்கர் (பெரியகோட்டை )

2.பொம்மக்கா -மலையாண்டிசாமி (உடுக்கம்பாளையம் )

3.நண்டவ நாயக்கர் - செல்லம்மாள் (உடுக்கம்பாளையம் )

4.ஆண்டவா நாயக்கர் -ஆண்டம்மாள் (எரிசனம்பட்டி )

5.வள்ளியம்மாள்  -நண்டவநாயக்கர்  (பெரியகோட்டை )

6..கந்தசாமி (பிட்டர் )- சின்னஅம்மிணி (உடுக்கம்பாளையம் )

7.கிருஷ்ணசாமி (உடுமலைப்பேட்டை )-கொண்டம்மாள் (தளிஜல்லிபட்டி )

உடன்பிறந்தவர்கள் இந்த ஊரில் பிறந்த வளர்ந்த ஊர் ..


தற்பொழுது புதிய சொந்தங்கள் நம் சமுதாய குடும்பங்கள்  70 குடும்பங்கள் உள்ளனர் ..எனக்கு தெரிந்து  5 சொந்தங்கள் முகம் பார்த்த பேசிய சொந்தங்கள் ..

இன்று கோவில் திருவிழாவில் ..நம்ம மாப்பிள சசி ,திருமலைசாமி அவர்களுடன் குறைந்தளவு நேரம் கலந்துரையாடியது மிக்க மகிழ்ச்சி ..என் பெரியப்பா நண்டவ நாயக்கர் அவர்களின் மகன் என் அண்ணன் நடராஜ் அவர்களுடன் பேசியதும் ..அவர்களின் பேரப்பிள்ளைகளுடன்  கலந்துரையாடியது மிக்க மகிழ்ச்சி ..அண்ணன் வீட்டின் திண்ணையில் உட்கார்ந்து மலரும் நினைவுகளை என் தந்தையின் சிறுவயது நிகழ்வுகளை பற்றி பேசியதும் ,அவர்களின் வீட்டு திண்ணையில் ..திருவிழாக்காலம் ,திருமணங்கள் ..நடைபெற்றதையும் ..திண்ணையின் பெருமைகளை பேசியது மனதிற்கு இதமான காப்பி சுவையுடன் கேட்டு மகிழந்தது மகிழ்ச்சி . 


என் தந்தையின் நண்பர் ,சொந்தம் எர்ரண்ணன் அவர்களின் புதல்வர்கள் இரண்டுபேரிடம் சந்தித்ததும் ,தம்பி சிவராஜ் (கந்தசாமி -salestax ) நலம் விசாரித்து பேசியது மலரும் நினைவுகள் ...கருவலூர் மாரியம்மன் -சப்பரம் கொண்டுவருதல் நிகழ்வுகளை கண்டும் ,தரிசனம் செய்து உடுமலை திரும்பியது அருமையான ஆன்மீக பயணமாக அமைந்தது ....

குறிப்பு :வருடங்கள் கடந்தாலும் ..தாத்தா, பாட்டி ,அப்பாவுடன் உடன் பிறந்தவர்கள்  ஊரை மறப்பது அவ்வளவு சுலபமில்லை ...வரும் தலைமுறைக்கு மனதில் பதியசெய்வோம் ..தற்பொழுது உள்ள புதல்வர்கள் ,பேரப்பிள்ளைகளுக்கு தெலுங்கு மொழி யாருமே கற்று கொடுக்கவில்லை என்பது என் மனதில் ரணமாக உள்ளது ...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

9944066681...




புதன், 24 மார்ச், 2021

 கேள்வி :  1. வீடு கட்டும்போது சுவற்றிற்கு செங்கற்களை பயன்படுத்தாமல் சிமெண்ட் கலவையை ஏன் பயன்படுத்தக் கூடாது? ஏதேனும் தீமைகள் உள்ளதா?




கேள்வி : 2. வீடு காட்டும் பொழுது சுவற்றிற்கு செங்கற்களை பயன் படுத்தாமல் concrete ஐ ஏன் பயன் படுத்தக் கூடாது? ஏதேனும் disadvantage உள்ளதா?





என் பதில் : 📚📚✍️✍️👍👍👍🏠🏠🏠


கான்க்ரீட் பிரிக்ஸ்ஸைக் குறிப்பிடுகிறீர்களா அல்லது கான்க்ரீட் சுவர் எழுப்பலாமா என்கிறீர்களா?




concrete பயங்கர அதிக செலவு. ஃபவுண்டேஷன் ரொம்ப ஆழமாக தடிமனாகப் போட வேண்டும். ரூஃப் அதைவிட அதிகம் செலவாகும். கதவு ஜன்னல் வைக்க அதைவிட அதிகம் செலவு. சுவர்கள் மேற்பரப்பில் சமமாக இருக்காது. அப்படி ஸ்மூத் ஆக்குவதற்கு மேலும் செலவு. மொத்தத்தில் 2 வீடுகளுக்கான செலவில் ஒரு கான்க்ரீட் வீடு கட்டலாம்.



நன்மைகள்: போர் வந்து குண்டு போட்டால் இடிந்து விழாது. வீட்டுக்கு உள்ளேயே தீபாவளி பட்டாசு பாம் எல்லாம் வெடிக்கலாம். தண்ணி லாரி வந்து இடிச்சாலும் விழாது. ஏசி வைக்க ஓட்டை போடுவது மிகவும் கடினம, செலவு.சுவரில் ஆணி அடிக்க முடியாது. மாமி திட்டறது அடுத்த ரூமில் கூட கேட்காது.




கான்க்ரீட் ப்ரிக்ஸில் இப்போதெல்லாம் வீடு கட்டுகிறார்கள். நேரம் மற்றும் செலவு குறைவு. ஃபவுண்டேஷன், ரூஃப் செலவும் குறையும். பலம் குறைவு. ஆணி அடித்தால் பெரிய பெரிய துளைகள் ஏற்படும். சரியான ரூஃப் இல்லை என்றால் மழை நீர் சுவருக்குள் இறங்கும்.




நன்றி ...


சிவக்குமார் V .K 

வீட்டுக்கடன் மற்றும் இடம் வாங்க (DTCP only )

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms

siva19732001@gmail.com👍🏠🏠🏠

திங்கள், 22 மார்ச், 2021

 கேள்வி : வீட்டுமனை வாங்குவதற்கு வங்கிக்கடன் கிடைக்குமா? எவ்வளவு வட்டி?


என் பதில் : 



வீட்டு மனை வாங்குவதற்கு வங்கி கடன் கிடைக்கும். அதில் சில பல அம்சங்கள் உள்ளன.


அது வீட்டு மனையாக இருக்க வேண்டும்.

விவசாய நிலமாக இருக்க கூடாது.

ஏதேனும் நகராட்சி, மாநகராட்சி போன்றவற்றின் கட்டுக்குள் வர வேண்டும்.

பொதுவாக, மனையின் மதிப்பில், 70% வரை மட்டுமே கடன் வழங்கப்படும்.

அரசாங்கத்தின் வரி விலக்கு கிடைக்காது.

இந்தியாவின் குடிமகனாக இருக்க வேண்டும்.

வெளிநாட்டு வாழ் இந்தியருக்கு இது கிடையாது.

வீட்டுக் கடன் போல், நீண்ட காலம் காலவரையறை வழங்கப்படாது. அதிகபட்சமாக 15 வருடங்கள் வரை இருக்கலாம். இதற்கு மாறாக, வீட்டுக்கடன் 30 ஆண்டுகள் வரை கூட இருக்கலாம்.

வீட்டு மனையுடன் வீடு கட்டுவதற்கான கடன் வாங்கும் போது, குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள்,உதாரணமாக 2 வருடங்கள், வீடு கட்டி முடித்திருக்க வேண்டும். அவ்வாறு கட்டி முடிக்காவிடில், அது வீட்டுக் கடனாக கருதப்படாமல், வட்டி விகிதம் அதிகரிக்கப்படும்.

வீட்டு மனைக் கடனுக்கு காலவரையறை குறைவாகையால், மாதாந்திர தவணை அதிகமாக இருக்கும்.

வீட்டுக் கடனை விட, வீட்டு மனைக் கடனுக்கு வட்டி விகிதம் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.


குறிப்பு : இடத்தின் மதிப்பு என்றும் இறங்காது ...அதன் மதிப்பு நீண்டகாலங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் ..உடனே பணமாக மாற்றமுடியாது ..


நன்றி ..

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com



சனி, 20 மார்ச், 2021

 அப்பாவிற்கு என் கடைசி முத்தம்

 வீட்டில்  படுக்கையில் என் அப்பாவின் இறுதி மூச்சு., இறுதிமூச்சு இரவு 10.45.-க்கு., பிரிந்தது. இறக்கும் தருவாயில் அலுவுலக மீட்டிங் கோவையில் இருந்து வந்தவுடன் அவரது நெற்றியில் நான் முத்தமிட்டேன்.

அவர் இறந்த சில வினாடிகளில் எனக்கு தோன்றிய முதல் எண்ணம் "எனது சிறுவயதிற்கு பின்னர் என் தந்தைக்கு முத்தம் கொடுத்தது இதுதானே முதல் முறை" …

வியாழன், 18 மார்ச், 2021

 2021-2030 ஆண்டுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் புதிய தொழில்கள்


     ஒரு 10 வருசத்துக்கும் முன்னாடி இருந்த கேமராக்களில் பிளிம் ரோல் போட்டு தான் போட்டோ எடுக்க முடியும். அப்பெல்லாம் இந்த பிளிம் ரோல்கள் விற்பனை படுஜோராக நடந்துட்டு இருந்தது. ஆன, டிஜிட்டல் கேமராக்கள், மொபைல் போன்களின் புதிய அறிமுகத்தால் அத்தகைய பிளிம்ரோல் கேமராக்கள் ஓரம்கட்டப்பட்டு இன்று அவைகளே இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. வேகமாக மாறிவரும் டிஜிட்டல் பரினாம வளர்ச்சியால் உலகில் பல்வேறு தொழில்கள் அழிந்தும் புதிய தொழில்வாய்ப்புகள் அனைத்து துறைகளிலும் உருவாகிக்கொண்டே வருகிறது. கால ஓட்டத்திற்கு தகுந்தாற்போல தங்களை தகவமைத்துக்கொண்ட நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சியை தக்க வைத்துக்கொண்டது. புதிய மாற்றங்களை பற்றி கண்டுகொள்ளாத நிறுவனங்கள் தரை தட்டி முன்னேறாமல் துருப்பிடித்து அழிந்து ஒழிந்தது. 


    இப்படியாக, இனி அடுத்த பத்து பதினைந்து வருடங்களில் ஒரு சில தொழில் வாய்ப்புகள் நிச்சயமாக புதிய புதிய சிந்தனைகளோடு வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்க போகின்றது. அத்தகைய தொழில்கள் பற்றி காண்போம்.


1.ஹோம் டெக்கரேசன்

    இதுவரை இல்லாத அளவில் இந்த துறை அசூர வளர்ச்சி அடைய போகிறது என்பதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை எனலாம். ரியல் எஸ்டேட், அப்பார்மென்ட் துறைகளை ஒட்டி இன்று ஓவ்வொருவரும் தங்கள் வீட்டை அலங்கரிப்பதை பெருமையாகவும், ரசனைக்குரியதாகவும் பார்க்கின்றார்கள். அந்த வகையில் பெயிண்டிங்க், வால்பேப்பர், வால் ஹேங்கிங், இன்டீரியர் டெக்கரேசன், சோஃபா, பெட்ரூம் டிசைன்ஸ், கிச்சன் வேலட்ஸ், கார்டனிங், பெட்ஸ் வளர்ப்பு, ஹோம் கிளினிங் சர்வீஸ் என இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகும். அதில் புதிய புதிய வடிவமைப்புகள், அடிக்கடி மாற்றக்கூடிய வகையில் விலை குறைந்த அதே சமயம் ஆம்பரமான அழகுபொருட்கள், கிப்ட் ஐட்டங்கள் என இந்த துறை நிச்சயமாக புதிய  பல தொழில்வாய்ப்புகளை உருவாக்கும். 


   நல்ல கிரியேட்டிவ் வேலைகளுக்கு மவுசு குறையாமல் இருக்கும். கன்ஸ்ட்ரக்சன் துறையை காட்டிலும் இன்டீரியர் டெக்ரேசன் துறை அதிக லாபத்தை தருவதாகவும், அதிக போட்டியாளர்களையும் கொண்டிருக்கும்.

2.கேட்ஜெட் இன்னவேசன்ஸ்


   நாம் அன்றாடம் பயன்படுத்த கூடிய பொருட்களின் உபயோகத்தை உயர்த்தி தரும் அல்லது எளிதாக்கி தரும் எலக்ட்ரானிக் அல்லது நான் எலக்ட்ரானிக் கேட்ஜெட்டுகள்  புதிது புதிதாக உருவாகிக்கொண்டே இருக்கும். காரில் பயன்படுத்தக்கூடிய சின்ன சின்ன கேட்ஜெட்கள், கிச்சன் கேட்ஜெட்கள், டாய்ஸ், ஆபிஸ் மற்றும் ஹோட்டல்களுக்கு உபயோகப்படும் வகையான பெரிய கேட்ஜெட்கள் அதிக அளவில் தயாரிக்கப்படும். அவைகள் ஒரு பொருளாகவோ அல்லது தரவுகளாகவோ எப்படியும் ஓவ்வொரு வாடிக்கையாளர்களிடமும் ஏதாவது ஒரு வகையில் ஒட்டிக்கொண்டு இருக்கும். உதரணமாக,  தண்ணீர் குறைவாக செலவழிக்கும் காரை சுத்தம் செய்யும் வாட்டர் கன், ஸ்மார்ட் வாட்ச் போன்றவைகளை குறிப்பிடலாம். ஒரு சாதராண டேபில் வெயிட்டர் கூட இவ்வகையான கேட்ஜெட்களே. 


     அன்றாட வாழ்வில் உபயோகிக்க கூடிய வகையில் ஒரு துணை பொருளாக இந்த கேட்ஜெட் இன்னோவேசன் எப்பொழுதும் வளர்ந்துகொண்டே இருக்கும் துறையாகும்.


3. 3டி பிரிண்டிங் & டெக்னாலஜி


    முப்பரிமாண பிரிண்டிங் துறை மிக வேகமாக இப்பொழுதே வளர்ந்து வந்துகொண்டிருக்கும் ஒரு முக்கியமான துறை. கணினி வழியில் வடிவமைக்கப்பட்டு அச்சு அசலாக மிக வேகமாக ஒரு பொருள், ஸ்பேர் பார்ட்ஸ் அச்சுக்கள், கலைபொருட்கள், இராணுவ தளவாடங்கள் என பல்லேறு வடிவங்களையும் உடனடியாக செய்ய இந்த 3டி பிரிண்டிங் டெக்னாலஜி உதவி செய்யும். இதன் அடுத்த உருமாற்றமாக மருத்துவ துறையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவும் வகையில் புதிய மைல்கல் எட்டும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.  எனவே முப்பரிமாண வரைகலை நிபுணர்கள், மூலபொருட்கள் தயாரிப்பாளர்கள், டிஸ்டிரிபியூட்டர்கள் என இந்த துறையின் அடுக்கடுக்கான வேலை வாய்ப்புகளை வாரி வழங்கும்.


4. ட்ரோன்கள்


      2020 ஆண்டுகளின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு ட்ரோன்களே. ட்ரோன்கள் வெறும் கண்காணிப்பு கேமராக்கள் என்றோடு நிற்காமல் தனது அடுத்தடுத்த தலைமுறைகளை உருவாக்கிக்கொண்டே போகின்றது.  ஆன்லைன் டெலிவரி செய்யும் டிரோகள், விவசாயத்திற்கு பயன்படும் மருந்து தெளிக்கும், நீர் பாய்ச்சும் டிரோன்கள், ஏன் ஆடு மாடுகளை மேய்க்க கண்காணிக்க கூட ட்ரோன்கள் வேலை செய்ய பணியமர்த்தப்படும்.  இராணுவ தாக்குதல்கள், கண்காணிப்புகளை தாண்டி, பெரிய கப்பல்கள், விமானங்கள், மாளிகைகளை கவனிக்க மற்றும் தூய்மைபடுத்த, விளைநிலங்கள், காட்டு விலங்குகளை கணக்கிட, விபத்துகாலங்களில் உதவி செய்ய, பெரிய தொழிற்கூடங்களில், கட்டுமான பணி இடங்களில் என ஒரு அணில் போல இது அனைத்து துறைகளிலும் சத்தம் இல்லாமல் நுழைந்து தனது தொழில்நுட்பத்தை விஸ்தரித்திருக்கும். டிரோன் ஆப்பரேட்டர்கள், டெக்னீசியன்ஸ், சேல்ஸ், ரெண்டல் டிரோன்கள் என இதில் எக்கச்சக்க துறைகளும் உடன் ஒளிந்திருக்கும்.


5. எலெக்ட்ரிக் எனர்ஜி

     மிக வேகமாக குறைந்து வரும் எரிபொருட்களின் மிகச்சிறந்த மாற்று வழியாக எலெக்ட்ரிக் எனர்ஜி எனப்படும் மின்சார பயன்பாடு இருக்கிறது. பெரும்பாலான போக்குவரத்து வாகனங்கள் சோதனை முயற்சியாக மின்சார வாகனமாக மாற்றப்பட்டு வருகிறது. ஆக, இந்த துறை எதிர்காலத்தில் இன்னும் பல அதியசயங்களை நிகழ்த்தும் வாய்ப்பு இருக்கிறது.  வெறும் எலெக்ட்ரிக் ரீபிள் ஸ்டேசன்கள் என்றில்லாமல் வெவ்வேறு வகையில் அதாவது சோலார் மின்சாரம், கடலலை மின்சாரம், காற்றாலை மின்சாரம் தயாரிப்பு என்று பல தனியார் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்கள் தோன்றக்கூடும். அவைகள் நேரடியாக தொழிற்சாலைகளுக்கு கான்ட்ராக்ட் அடிப்படியில் மின்சார தேவைகளை பூர்த்தி செய்யவும் வழிகளை உருவாக்குவார்கள். மேலும் மின்சார தேவைகள் மட்டும் என்றில்லாமல் பயோகேஸ் டெக்லானலஜியும் கூடவே வளர்ந்து வரும். எப்படியும் மாற்று எரிசக்தி தேவை இருந்துகொண்டே இருக்கும் என்பதால் இந்த துறையில் லாபம் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.


6. ரோபோடிக் என்ஜினியரிங்


     ஒருபக்கம் ரோபோடிக் தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்புகள் பறிபோகும் என்ற தவறான கண்ணோட்டம் இருந்தாலும் இந்த துறையின் தேவை என்பது நிச்சயமாக வேண்டியது ஒன்றாகும்.  அனைத்து தொழிற்சலைகளிலும் சிறிய பெரிய தானியங்கி இயந்திரங்களை பயன்படுத்தி துல்லியமான உற்பத்தியை அதிவேகமான உற்பத்தியை செய்ய இந்த துறை பெரும்பணியாற்றும். துறைமுகங்கள், விமானநிலையங்கள் என பப்ளிக் செக்டார்களிலும் இந்த தொழில்நுட்பம் பல வேலைகளை சுலபமானதாக மாற்றி தரும் என்பதால் இதி ல் நிபுணத்துவம் பெறும் படிப்புகளை தேர்ந்தெடுப்பது நல்லது.  அதே சமயம் பெரு முதலாளிகள் வேகமாக தங்கள் தயாரிப்புகளை தானியங்கிகள் மூலம் தயாரித்து சந்தைக்கு கொண்டு வந்துவிடுவார்கள் என்பதால் மிகச்சிறிய அளிவில் தயாரிப்புகளினை செய்யும் தொழில்முனைவோர்கள் தங்களுக்கென்ற ஒரு பிராண்ட் வேல்யூவை உருவாக்கி கொள்வது எதிர்காலத்திற்கு நல்லது. நீங்கள் நாள் முழுவதும் வேலை செய்து உருவாக்கும் ஒரு பொருளை அவர்கள் ஒருசில நொடிகளில் உற்பத்தி செய்ய முடியும் என்பதால் பெரும் விலை வித்தியாசத்தை சந்திக்க நேரிடும். அத்தகைய சமையத்தில் உங்களுக்கென்ற தனி அடையாளம், தரம் என்ன என்பதை கொண்டே வாடிக்கையாளர்கள் உங்களிடம் வருவார்கள். அதை வேறெரு பதிவில் காண்போம்.


7. சாயில் லெஸ் அக்ரிகல்ச்சர்

     மண்ணில்லா விவசாயம் மரபுமாற்றபட்ட விவசாயம் என இந்த துறையில் பல புதிய தொழில்நுட்பங்களினை சோதனை முயற்சியாக செய்து வருகிறார்கள். நம்மூரில் மாடிதோட்டம் வேகமாக பெருகிவருவதை போல வெர்டிகல் கார்டனிங் & அக்ரிகல்சர்,  பாலைவனத்தில் விவசாயம், கடல்நீரை பயன்படுத்தி விவசாயம் என பல்வேறு முயற்சிகளை அரசும், தனியார் நிறுவனங்களும் செய்து வருகின்றன. விதையில்லா காய்கறிகள் என்னும் ஆபத்தான ஒரு சந்தை வியாபாரத்தை புகுத்தவும்  பன்னாட்டு கம்பெனிகள் முனையும். விதைகளை பிரேண்ட் ஆக மாற்றி விளைபொருட்களை தயாரிக்கும் குத்தகை முறை பண்ணைகள் அதிக அளவில் மாற்றப்படும். அதேசமயம் ஆடு, மாடு, கோழிகள் வளர்ப்பில் புதிய தொழில்நுட்பங்களை மிக விரைவாக நமது பகுதிகளில் காணக்கூடும். மிக வேகமாக கறிகள் வளர நானோ திசுக்கள் வளர்ப்பு என்ற உயிர் இல்லாத இறைச்சிகளை விற்பனை செய்யும் தொழில்நுட்பமும் விரைவில் சாத்தியமாக கூடும்.


8. விர்ச்சுவல் மீட்டிங் சேவைகள் 

     ஆன்லைன் வீடியோகால் போன்ற ஒரு சாதரண விசயம் தான். ஆனால் தொழில்நுட்பம் என்னும் ராட்சசனின் உதவியால் இது அசூர வளர்ச்சியடையும். நேரடியாக ஒரு அரங்கில் இருந்து நிகழ்வில் கலந்துகொள்வது போன்ற உணர்வை உருவாக்கும் வகையில் 8டி ஹோலோகிராம் டெக்னாலஜி வளரும். இதனால் உலகின் எந்த மூலையில் இருந்தும் அதிஅற்புதமான விசயங்களை பார்த்தும், கேட்டும் தெரிந்துகொள்ள முடியும். வழக்கம் போல ஆபிஸ், கம்பெனி மீட்டிங்குகள் என்றில்லாமல். அவசர அறுவை சிகிச்சை, கல்விக்கூடங்கள், திருமண நிகழ்வுகள் என பல்வேறு வடிவங்களில் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்த இந்த விர்ச்சுவல் மீட்டிங் சேவைகள் உதவும். இதற்கான உபகரணங்கள், ரெண்டல் மீட்டிங் ஹால், பங்சன் ஆர்கனைசர் வேலைகள் என எக்கசக்கமான தொழில் வாய்ப்புகளை வாரி வழங்கும் இந்த துறை.


9. பேப்பர்லெஸ் இன்வெஸ்ட்மென்ட்கள்


      வழக்கமான மியூச்சுவல் பண்ட், கோல்ட், பிட்காயின், பாண்ட் பேப்பர், ரியல் எஸ்டேட்  இன்வெஸ்ட்மென்களை போன்றே எதிர்காலத்தில் தான் சேமித்த பணத்தை எதிலாவது முதலீடு செய்து அதிலும் இலாபம் பார்க்க வேண்டும் என்ற தேவையுள்ளோர் அதிக அளவில் இருப்பார்கள். இவர்களை குறிவைத்தும், சரியும் பொருளாதரத்தை தாங்கி பிடிக்கவும் பல புதிய முதலீட்டு பத்திரங்களை உலக நாடுகளும் தனியார் பெருநிறுவனங்களும் உருவாக்க கூடும். அதனால் இந்த துறையை சார்ந்தவர்கள் தவறாமல் அடுத்தடுத்த மாற்றங்களை கூர்ந்து கவனித்து வருவது சாலச்சிறந்தது. என்றைக்கும் முதலீடு சார்ந்த இந்த துறை இருந்துகொண்டுதான் இருக்கும். 


10. டேட்டிங் நிறுவனங்கள்


    டூர்ஸ், டிராவல்ஸ், மேட்ரிமோனியல் வெப்சைட், வெட்டிங் பிளானர்ஸ் போன்றே டேட்டிங்கிற்கென்றே பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவ்வகையான சேவை நிறுவனங்களில் பிடித்தமான நண்பரை தேர்வு செய்வது மட்டுமின்றி டேட்டிங் செல்வதற்கான செல்ப் டிரைவிங் பைக்குகள், சொகுசு கார்கள், ரெஸ்ட்டாரென்ட் மற்றும் உணவு வகைகளை கூட புக்கிங் செய்துகொள்ளலாம். மேலான டேட்டிங் அனுபவங்களை இந்த நிறுவனங்கள் அளிக்கும்.  அதேபோல செக்ஸ் டாய்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனைகள் கனிசமான அளவில் அதிகரிக்கும்.  பிரைட் & க்ரூமிங் பிட்னெஸ் கன்சல்டன்ட், அழகுசாதனம் பொருட்கள், கன்சல்டிங் அன்ட் கவுன்சிலிங் நிறுவனங்கள், செக்யூரிட்டி பாயோமேட்ரிக் பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் முக்கியமாக அவுட்சோர்சிங் கால்சென்டர்ஸ், டேட்டா மேனேஜ்மென்ட் சென்டர்கள், பிரிலான்சிங் வேலைகள், ஆபிஸ் ஹோம் ஸ்பேஸ் சேரிங்  என சில இதர துறைகளும் இதனோடு சேர்ந்து தங்களது புதிய பரிமாண வளர்ச்சியை சந்திக்கும்.

நன்றி ...

சிவக்குமார் .வீ .கே .

நிதி ஆலோசகர் 

9944066681

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

புதன், 17 மார்ச், 2021

 உயர்திரு  B. காட்டுராஜா @ பழனிசாமி நாயக்கர்  அவர்கள் 

 நாளை வேட்புமனு தாக்கல் 18.03.2021 வியாழன் 12 மணிக்கு மேல் தேர்தல் அதிகாரியிடம் வழங்குகிறார்கள்...

நமது உறவுகள் அனைவரும் வருகை தந்து மேலான ஆதரவு ஆசிவழங்கி வாக்குமிக்க நாம் இந்த தேர்தலில் நமது சமுதாய உணர்வுகொண்டு நம்மவர் சொந்தத்திற்க்கு வாக்கு /ஓட்டு அளித்து வெற்றிபெறசெய்ய அன்புடன் வேண்டுகிறோம்.....


கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம் 

கீர்த்திவீரர் எத்தலப்பர் வாட்ஸாப்ப் குழு 


சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள் ..

உடுமலைப்பேட்டை ......

செவ்வாய், 16 மார்ச், 2021

 கேள்வி :  ஏன் எல்லா அம்மாகளும் அவர்களின் ஆண் மகன்களை எப்போதும் முக சவரம் செய்ய சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்?


என் பதில் : 


இது ஒரு பதினாலு வயதிலேயே ஆரம்பித்து விடும்.


"டேய் தலைமுடி கண்ணை மறைக்குதுடா, அப்பா சலூன் போகும் போதும் நீயும் போய்ட்டு வந்துடு"


"இல்லமா, நான் இன்னொரு நாள் தனியா போய்க்கிறேன்"


அடுத்த வாரம்… "தலைல குருவி கூடு கட்டப் போறது. ஹேர்கட் பண்ணிட்டு வா"……. முறைப்புதான் பதிலாக வரும்.


மூன்றாம் முறை வாயைத் திறக்கு முன்பே,.." எனக்கு இஷ்டப்பட்ட போதுதான் சலூன் போவேன், நீ சொல்லத் தேவையில்லை"


"ஏற்கனவே லட்சணம், எப்படியாவது ஒழி " இது அம்மா. ஆயிற்றா? (பள்ளியிலிருந்து புகார் வருவது தனி)


இரண்டு வருடம் இது தொடரும். பிறகு ஒருநாள் அம்மா ஆச்சரியத்துடன் , "கண்ணா, உனக்கு தாடி மீசையெல்லாம் வர ஆரம்பிச்சுட்டதடா " என்று முகம் வருட வரும்போது தட்டி விடப்படும்.


பிறகு இதுவும் சேர்ந்துவிடும் பாடலில். "அங்கங்கே திட்டுதிட்டா முடி முளைச்சி நல்லாவே இல்லடா, இதுல முகப்பரு வேற, சகிக்கல, ஷேவ் பண்ணுப்பா ப்ளீஸ்"


"எல்லாம் எனக்குத் தெரியும், நீ போ"


இப்படி ஆரம்பிக்கும் சலூன் சண்டைகள் 21–22 வயது வரை தொடரும். அப்பாவிடம் புகார் போனாலும் பயனில்லை. "அவனிஷ்படியே விட்டுடு" என்றுதான் பதில் வரும். (அவரும் அந்த வயசுல அப்படித்தானே..!)


அதற்குப் பிறகு 22 வயதில் ஒரு transmission ஏற்படும் பாருங்கள்… அது வேற லெவல். பளிச்சென்று ஷேவ் செய்துகொள்வது, தாடி-மீசை ஷேப் செய்து கொள்வது என்று அழகாக ஆரம்பித்து விடும். மாதாமாதம் முகம் மெருகேறும், வருடாவருடம் வசீகரம் கூடும். அம்மாவிடம் அபிப்பிராயம் கேட்கப்படும். இத்தனைக்கும் எந்த அழகு /தோல் பராமரிப்பும் இருக்காது. கண்ணாடி முன் வெகு நேரம் நிற்கவும் மாட்டார்கள். மேக்கப் என்ற பெயரில் ஒரு இஞ்ச் பூசிக்கொள்ளவும் மாட்டார்கள்.


ஆண் குழந்தைகளுக்கு 25 வயதில் படிப்பின் காரணமாகவோ, வேலையின் காரணமாகவோ ஏற்படும் தன்னம்பிக்கை ஒரு கம்பீர அழகு.


ஆகவே அம்மாக்களே, ஒரு எட்டு வருடம் அவர்களை விட்டுவிடுங்கள். மீண்டும் அம்மாக்களிடம்  வருவார்கள்.


நன்றி ...

 கேள்வி : வீட்டில் தளத்திற்கு டைல்ஸ், கிரானைட், மார்பிள் இவற்றில் எது சிறந்தது. ?

இவற்றை பயன்படுத்துவதால் மூட்டு வலி ஏற்படுவதாக கூறுவது உண்மையா? இவற்றிற்கு மாற்று வழி என்ன?


என் பதில் : 


மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது இரண்டு 

1. வீட்டில் முதியவர்கள் இருக்கிறார்களா? 

2 தங்களது பொருளாதாரம் முதலில் வீட்டில் பெரியவரகள் இருந்தால் வழுக்கும் தன்மை உள்ள டைல்கள் கூடாது .

டைல்கள் சிக்கனமானவை அமைக்கும் தொழில் நுடபமும் எளிது பராமரிப்பும் எளிது பலதரப்பட்ட அளவுகளில் பல மாடல்களில் பலபல டிசைன்களுடன் கிடைக்கிறது .

வெள்ளை மற்றும் லைட் வண்ணங்களில் உள்ள டைல்களில் எண்ணை தண்ணீர் சிந்திவிட்டால் கண்டுபிடிப்பது கடினம் 


வயதானவர்வகள் எச்சரிக்கை ரெட் ஆக்சைட் தளம் அமைப்பதும் டைல்கள் அமைப்பதும் விரைவில் முடியும் .

ரெட் ஆக்சைடு தளம் அமைப்பதற்கு திறமையான பொறுமையான ஆள் தேவை பராமரிப்பு எளிதானாலும் நாள்படபட தளத்தின் வண்ணம் மங்கலாம் கிரானைட் தளமும் மார்பிள் தளமும் இயற்கையிலேயே கிடைப்பவை விலை அதிகம்.


 தளம் அமைப்பதுக்கு தொழில் நுட்பம்அறிந்த ஆட்கள் தேவை அதற்குக் கூடுதல் செலவாகும் ஆணால் கம்பீரமாகவும் கவர்ச்சியாகவும் பல்லாண்டுகள் உழைக்கும் ஆற்றலையும் பெற்றிருக்கும் நமது அந்தஸ்து அதிகமாகும்.


 ரெட்ஆக்சைடு தளம் கிரானைட் தளம் மற்றும் மாரபிள தளங்கள்பளபளப்பு குறைந்தாலும் மீண்டும் புதிப்பித்துக்கொள்ளலாம் ஆனால் டைலதளின் பளபளப்பு போனால் டைலகள மாற்றித்தான் ஆக வேண்டும் 


எல்லா தளங்களிலும். வயதானவர்களுக்கு மூட்டு வலி வருகிறது எனக்கேளவிப்படுகிறேன் எனக்குத் தெரிந்தவரையில் இது மனப்பிரமையாக இருக்கலாம் விரிவான ஆராய்ச்சி தேவை .


மாற்று வழி சிமெண்டு தளம் அமைப்பதே அதிலும் குப்பை கூட்டுவது கடினம், கழுவது கடினம், அந்தஸ்து குறைவு, என நினைப்பு வரும்..


நன்றி ..

சிவக்குமார் .V .K 

வீட்டுக்கடன் ,இடம் வாங்க (DTCP only )

அழைப்பு எண் ..9944066681...

உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோவை 

சனி, 13 மார்ச், 2021

 கேள்வி : ஒருவர் பக்குவமடைந்து விட்டார் என்று அறிந்து கொள்வது எப்படி?


என் பதில் : 


குறைகளை சுட்டிக்காட்டாத தன்னடக்கம்.


தன் செயல்களுக்கு விளக்கமளிக்கத் தேவையில்லை என்ற நிலை.


‘செமயா இருக்கணும்’ போய், ‘நிறைவா இருக்கணும்’ என்ற புதிய குறிக்கோள்.


குறைந்து கொண்டிருக்கும் ஆக்ரோஷம்.


பொருளால் வரும் ஆசையின் குறைவு.


மற்றவர் செயல்களுக்கு தனக்குப் புரியாத காரணங்கள் இருக்கலாம் என்ற எண்ணம்.


பத்து வருடங்களுக்கு முன்னர் தான் செய்த சில பல செயல்கள் சரியல்ல என்ற புதிய ஒப்புதல் பார்வை.


ஆச்சர்யங்கள் குறைந்து போய் விட்ட ஒரு அமைதி.


‘அரசியல்ல இதெல்லா சகஜமப்பா’ என்று நினைத்து ஒரு புன்முறுவல்.


Like க்காக புளுகாமல், தோன்றியதைப் பகிரும் வெளிப்படைத்தன்மை.

இன்னும் இருக்கு ரொம்ப பதிவுகளை அதிகப்படுத்தினால் போர் அடித்துவிடும் என்பதால் ...இதுவே அதிகம் ..



நன்றி ...


 கேள்வி : வீடு கட்டும் போது எந்தெந்த இடங்களில் செலவை குறைக்கலாம்?


என் பதில் :


முடிந்த அளவு வீடு கட்டும் பொருட்களை வாங்க ஒரு 5 இடத்தில் விசாரியுங்கள் .பொருளின் விலை குறைவாகவும் ,பொருள் தரமாகவும் இருக்கும் இடத்தில் வாங்குங்கள்.


தேவையற்ற பொருட்களை வாங்காதீர்கள்.


என்னென்ன பொருட்கள் தேவை மற்றும் எவ்வளவு தேவை என்பதை தெரிந்து வாங்குங்கள்.செலவு குறையும்.


நன்றி 


சிவக்குமார் V .K 

வீட்டுக்கடன் மற்றும் ரியல் எஸ்டேட் 

9944066681


வெள்ளி, 12 மார்ச், 2021

 கேள்வி : எந்த ஒரு முதலீடும் இல்லாமல் தன் மூளையை மூலதனமாக மாற்றி இந்த 2021-ல் நாங்கள் முன்னேற சிறந்த தொழில்கள் பற்றி உங்களுக்கு தெரிந்ததை சொல்ல முடியுமா?


என் பதில் :..


முதல்ல உங்க கைய குடுங்க சார். நீங்க தெரிஞ்சு கேட்டீங்களா அல்லது தெரியாம கேட்டீங்களா எனக்கு தெரியாது. ஆனா நீங்க கேட்டிருக்கற இந்த விஷயம் இன்னைக்கு இண்டஸ்ட்ரியில் ரொம்ப ஹாட். பணம் போடாமல் மூளையை மூலதனமாக்கி தொழில் செய்ய நிச்சயம் முடியும்.


பொதுவாக பிசினஸ் என்றாலே ஒரு பொருளை விலை குறைவான ஒரு இடத்திலிருந்து வாங்கி வேறு இடத்தில் விற்பனை செய்து லாபம் ஈட்டுவது என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை. காய்கறி கடை, கடை, துணிக்கடை, பாத்திரக்கடை போன்ற வழக்கமான தொழில்கள் இந்த வகையில் வரும்.


சம்பந்தப்பட்ட தொழிலுக்கு ஏற்ற மாதிரி முதலீடு தேவைப்படும். மேலும் கடை அமைந்திருக்கும் இடம், மக்கள் புழக்கம், எந்த வகையான வாடிக்கையாளரை கவர விரும்புகிறீர்கள் என்பதற்கேற்ப உள் அலங்காரம் போன்ற காரணிகள் இருக்கும்.


இது போல இல்லாமல், எந்த ஒரு பொருளையும் வாங்கி விற்காமல் ஒரு சேவையை இன்னொருவருக்கு வழங்கி அதன் மூலம் பணம் சம்பாதிப்பது மற்றொரு வகை பிசினஸ் மாடல். இன்சூரன்ஸ் முகவர், ரியல் எஸ்டேட் தரகர், திருமண புரோக்கர், டியூசன் சென்டர், கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம், இன்டர்நெட் வழங்கும் நிறுவனம், இ-காமர்ஸ் நிறுவனங்கள் போன்றவை இந்த வகையைச் சார்ந்தவை.


இந்த வகை விற்பனை மாடலுக்கு பொதுவாக பெரிய முதலீடு தேவையில்லை. மக்கள் கூடும் இடங்களில் பெரிய இடங்களில் கடை, கண்ணை கவரும் விளம்பரப் பதாகைகள், சீருடை அணிந்த பணியாளர்கள் தேவை இல்லை. ஆனால் மற்ற தொழில்கள் தருகிற அதே அளவு லாபத்தை முதலீடு இல்லாமல் அடையமுடியும். மற்றவர்களுக்கு முன்பாக எதையும் புரிந்து கொள்ளும் திறமை, கட்டாயம் இது உங்களுக்கு தேவைப்படக்கூடிய ஒன்று என்ற வகையில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் உத்தி, கொஞ்சம் தொழில்நுட்பத் திறமை, விடாமுயற்சி இவை இதற்கு தேவையானவை.


உங்கள் வீட்டிற்கு தினமும் கொண்டுவந்து பால் பாக்கெட் போட்டு விட்டு அதற்கு ஒரு ரூபாய் கமிஷன் வாங்கும் அடிப்படை சேவை ஆகட்டும், நீங்கள் விரும்பும் உணவை உங்கள் வாசலில் கொண்டுவந்து கொடுத்துவிட்டு செல்லும் ஃபுட் டெலிவரி சேவை ஆகட்டும், இது எல்லாமே இந்த selling the service என்ற இந்த வகையில் தான் வரும்.


இன்றைக்கு ஸ்டார்ட் அப் என்று சொல்லப்படுகிற தொடக்கநிலை தொழில்கள் பெரும்பாலும் இதை சார்ந்தவைதான். மூளையை மட்டுமே மூலதனமாக வைத்து பெரிய அளவில் சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள்.


ஒரு சின்ன உதாரணம் மூலம் பார்க்கலாம். இன்று சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் ஒரு பஸ் பிரயாண புக்கிங் செய்யக்கூடிய ஒரு தளம். இவர்கள் செய்தது எல்லாம் ஒரு வெப்சைட். விளம்பரம் செய்து அந்த வெப்சைட்டின் பெயரை மக்கள் மனதில் பதிய வைத்தது. இது மட்டும்தான் அவர்கள் செய்தது. பஸ் கம்பெனி வைத்து நடத்துபவர்கள் இந்த வெப்சைட்டில் உறுப்பினர்களாக ஆகிக் கொள்ள வேண்டும். பின்னர் அவர்களாகவே அந்த வெப்சைட்டுக்குள் போய், அவர்களுக்கென கொடுக்கப்பட்டுள்ள பயனாளர் கடவு சொல்லை பயன்படுத்தி இந்த ஊரில் இருந்து இந்த ஊருக்கு இத்தனை மணிக்கு பஸ், டிக்கெட் விலை இவ்வளவு, அந்த பேருந்து வசதிகள் குறித்த தகவல்கள் ஆகியவற்றை பதிவு செய்து விட வேண்டும். டிக்கெட் புக் செய்ய வருபவர்கள் தேடும்பொழுது இந்த தகவல்களை அவர்களுக்கு அந்த வலைதளம் காண்பிக்கும். இந்த தளத்தின் வழியாக ஒருவர் டிக்கெட் முன்பதிவு செய்து விட்டால் அந்தப் பணம் நேரடியாக பஸ் கம்பெனிக்கு போகாது. அதற்கு பதிலாக டிக்கெட் புக் செய்யும் தளத்தின் கணக்கிற்கு இந்த கட்டணம் வரவு வைக்கப்பட்டு விடும். அந்தப் பயணம் முடிவு பெற்றபின் அடுத்த வாரத்தில் 12.5 சதவீதம் கமிஷன் எடுத்துக் கொண்டது போக மீதி பணம் பஸ் கம்பெனி அக்கவுண்டிற்கு அனுப்பப்படும்.


இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அட்வான்ஸ் புக்கிங் அது போதுமே பல நாட்களுக்கு முன்னதாக ஏன் பல மாதங்களுக்கு முன்னதாக கூட நடக்கும். கட்டணமாக செலுத்தப்பட்ட அத்தனை பணமும் பஸ் கம்பெனி அக்கவுண்டுக்கு போகாது பயணம் முடியும் வரை அந்த தளத்தின் அக்கவுண்ட்ல தான் இருக்கும் இது அவர்களுக்கு ஒரு பெரிய கையிருப்புத் தொகை. நாள் வட்டிக்கெல்லாம் கடன் வாங்கி பிசினஸ் செய்யும் இந்த காலத்தில் இத்தனை லட்சம் ரூபாய் எந்த முதலீடும் இல்லாமல் ஒருவருடைய அக்கவுண்டில் இருப்பது, அந்த தளம் நடத்துபவர்களுக்கு எவ்வளவு லாபகரமானது என்பதை யோசிக்க வேண்டும். திருப்பி கொடுக்கும்வரை அதை அவர்கள் எப்படி வேண்டுமானாலும் பயன் படுத்தி கொள்ள முடியும்..


புக் செய்த டிக்கெட்டை கேன்சல் செய்யும்பொழுது அதற்கு கேன்சல் கட்டணம் என்று ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படும். இதுவும் பஸ் கம்பெனிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. இந்த வகையிலும் நல்ல லாபம்.


ஃபீட்பேக் என்பது பேருந்தில் பயணம் செய்தவர்கள் பயணம் முடித்தவர்கள் கொடுக்கும் தகவல்கள். புக் செய்யும் பொழுது இவைகளும் காட்டப்படும் என்பதால் இந்த தகவல்கள் நல்லவதமாக இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். எனவே பஸ் முதலாளிகள் இந்தத்தளம் நிர்வாகிகளிடம் எதையும் பேச முடியாது. ரேட்டிங் குறைத்து விட்டால் புக்கிங் அடிவாங்கும். ஒரே தேதியில் ஒரே வழித்தடத்தில் போகும் பஸ்களில் எது முதலில் காட்டப்பட வேண்டும் என்பதற்குக் கூட உள் அரசியல் இருக்கிறது.


ஒரு பஸ் வாங்கி இன்சூரன்ஸ் கட்டி, ரூட் பர்மிஷன் வாங்கி, பராமரிப்பு செலவு பார்த்து, இரண்டு டிரைவர்களை அமர்த்தி அவர்களுக்கு சம்பளம் கொடுத்து, அலுவலகம் அமைத்து அதற்கு பணியாளர்களை வைத்து அவர்களுக்கு சம்பளம் கொடுத்து, சாதாரண நாட்களில் ஏற்படும் கட்டணம் குறைவு போன்ற இழப்புகளை சமாளித்து, அடிக்கடி உயரும் எரிபொருள் விலையை சமாளித்து, இதற்கெல்லாம் மேலாக அதே வழித்தடத்தில் இயங்கும் மற்றவர்களின் போட்டியை சமாளித்து ஒரு ஆம்னி பஸ் முதலாளி சம்பாதிப்பதை விட ஒரே ஒரு தளத்தை நிர்வாகித்து அதன்மூலம் அவர்கள் பெரும் லாபம் மிக மிக அதிகம். அதுமட்டுமில்லாமல் 0% ரிஸ்க். ஏதோ காரணத்தினால் அந்த தேதியில் பஸ் இயக்க முடியவில்லை என்றால் இந்த தளம் கவலைப்பட வேண்டியது இல்லை ஏனெனில் கட்டண பணம் அவர்களிடம் தான் இருக்கிறது. உடனே திருப்பிக் கொடுத்து பிரச்சினையை சரி செய்து கொள்ள முடியும்.


இதுதான் சேவையை விற்பது என்பது. யாரோ ஒருவர் ஒரு வழித்தடத்தில் பஸ் இயக்குகிறார். யாரோ ஒருவர் பயணிக்கிறார். இருவரையும் இணைக்கும் சேவையை மட்டுமே இந்த தளம் செய்கிறது. இந்த தளம் ஒரு குண்டூசியை கூட வாங்குவதும் இல்லை விற்பதும் இல்லை. ஆனால் மூளை விற்பனை மூலம் பணம் சம்பாதிக்கிறது. இதே போன்றதுதான் ஈகாமர்ஸ் தளங்களும். வலை தளத்தை நிர்வகிப்பதும், தொடர் விளம்பரம் மூலம் மக்கள் மனதில் தங்கள் தளத்தின் பெயரை நிற்க செய்வது மட்டுமே அவர்களின் வேலை.


இதில் இன்னொரு மிகப்பெரிய சாதகமான விசயம் என்னவென்றால் சரியாக போனியாக வில்லையென்றால் பெரிய நட்டமில்லை. நீங்கள் பெரிய முதலீடு எதுவும் போடாததால் இதை தூக்கி போட்டுவிட்டு வேறு வேலையை பார்க்கலாம்.

நன்றி ..என்றும் அன்புடன் உடுமலை சிவகுமார் ..

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com..
பொதிகை ப்ரோமொடேர்ஸ் 
ரியல் எஸ்டேட் அண்ட் வீட்டுக்கடன் 


வியாழன், 11 மார்ச், 2021

 


கொண்டறிங்கி கீரனூர் சிவன்  கோவில் பயணம் ..

இரவு 10 மணியளவில் மலைஅடிவாரத்திற்கு சென்றபொழுது பக்தர்கள் கூட்டம் அளவாக தான் இருந்தது ..முதல் முறை செல்வதால்  மலை ஏறுவதற்கு முன் தண்ணீர் குவளை யுடன்  ஏறத்துவங்கினேன் ..மலைப்பாதை போக போக செங்குத்தாக  செல்லும் பொழுதே கொஞ்சம் மனதில் ஒரு வித பயஉணர்வு இருந்தது ..போக போக பயஉணர்வு நீங்கியது .இரவு .நடப்பதற்கு ஏதுவாக மலைப்பாதையில் கைப்பிடி இருந்தது பாதுகாப்பாகவும் இருந்தது ..


திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அமைந்துள்ளது கொண்டரங்கி மலை. இந்த மலை மீது பாண்டவர்கள் தியானம் செய்ததாக நம்பப்படுகிறது . இதில் இருந்து கொண்டரங்கி மலை வரலாறு மிகவும் தொன்மையானது என்பதை நம்மால் உணர முடிகிறது. லிங்க வடிவில் அமைந்துள்ள இந்த மலை அடிவாரத்தில் கெட்டிமல்லீஸ்வரர் என்னும் சிவன் கோவில் உள்ளது. 


இந்த மலையில் எவர் ஒருவர் தவம் செய்தாலும் அவரின் வாழ்க்கை நிலையே மாறும் என்று கூறப்படுகிறது. உங்களுக்கும் நேரம் கிடைக்கும்பொழுது சென்று வாருங்கள் ..அருமையான மலைக்கோவில் ..கொண்டறங்கி கீரனூர் மல்லிகார்ஜுனர் சுவாமி மலை கோவில் .


Lord Malligarjuna Swamy Temple also referred as Kondarangi Hills which is situated in Kondarangi Keeranur, which has a bolt upright setup and resembles in the form of conical shape and it is about 1165.86 meters (3825 Feet) high. An astonishing Rock cut Temple is situated on the top where we can get a pure divine sanction and blessings from Lord Shiva in the name of Malligarjuneswarar.


என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681🥰🥰📚📚✍️✍️🙏🙏

புதன், 10 மார்ச், 2021

திரு சிவகுமார் V. K. அவர்களுக்கு...

 திரு சிவகுமார் V. K. 

அவர்களுக்கு... 


🌹🌹🌹 உங்களது எழுத்துக்களை வைத்து

உங்களது எண்ணங்களை

யோசித்து பார்த்தேன்..

இது போல தொடர்நதுஎழுத வேண்டுமென யாசிக்க சொல்லியது என் மனம்... 🌹🌹🌹


♦️ உங்களது நூலக அறிவு புயல் காற்றாய்.._♦️

♦️ சமூக பார்வை தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிற

கடல்அலைகளின் ஆவேசம்போல ♦️

 ♦️ சுஜாதாவின்  எந்திரவியல் _எழுத்து வன்மை கலப்பு♦️ 

♦️ மாலனின் அரசியல்  நெடிவாசம் இதமாய்..♦️   

♦️ கி.ராஜநாரயணனின்

கரிசலங்காட்டு நடை தென்றலாய்..♦️

♦️ பாலகுமாரனின் முழுமையான நெடும் வீச்சு ♦️

♦️ மறைமலை அடிகளாரைப்போல

 நீண்ட விளக்கங்கள்♦️

♦️ பெண் எழுத்தாளர்களின் மனதாய்மாறி பெண்ணியத்தை போற்றும் புரிதலுடனான பதிவுகள் பூவாடை காற்றாய்..♦️


♦️ பற்பல விஷயங்களுக்கு..

இனம்புரியா 

ஒரு இளம் வெறித்தனம் இழையோடுகிறது கூதலாய்...♦️


♦️  தீராத காதலாய்

உருவமில்லாததை உணர்வது போல... வெற்றிபெற்ற உணர்வின்பால் வருகிற அமைதி ஆங்காங்கே ...

அது தேவைப்படுகிற இடங்களில் நளின வார்த்தைகள்...♦️


♦️ வாழ்வியலை அப்படியே வார்த்து தந்துவிட வேண்டுமென்கிற வேட்கை...♦️


♦️ முழுமையாக எழுதிவிடுவது என்னால் முடியாது உறவே..♦️


♦️ என்னை போன்றோரின் உள்ளன்பு உம்மை மென்மேலும் எழுததூண்டட்டும்.. .♦️


உடுமலையோடு சேர்த்து

கம்பளத்தையும் கொஞ்சம் இன்னும் விரிவாக விதைக்க வேண்டுமாய்...


என்றென்றும் அன்புடன்


கே .என் .நாகராஜன் .vpk 



🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

💐💐💐🌷🌷🌷🌹🌹🙏🏻🙏🏻

திங்கள், 8 மார்ச், 2021

திருமூர்த்தி மண்ணு

 இன்று மாலை ...முன்னாள் துணைவேந்தர் .பி .கே .பொன்னுசாமி ..அவர் எழுதிய திருமூர்த்தி மண்ணு ..சென்னையில் புத்தக திருவிழாவில் வாங்கிய முதல் நூலை ..உடுமலைபேட்டையில் அவரின் இல்லத்தில் அவரிடம் காண்பித்து அவரின் கரங்களில் பெற்ற பொழுது ..மகிழ்ச்சி  ..நூலில் அவர் எழுதிய வட்டார சொல்லுடன் படித்த பொழுது ..60 வருடங்களுக்கு பின் சென்ற காலங்கள் ..அற்புதமானவை இருந்தது ..இன்னும் படித்துக்கொண்டு உள்ளேன் ...படித்து முடித்துவிட்டு நூலை பற்றி ..பின்னூட்டம் எழுதவேண்டும் ...வாசிப்பில் தற்பொழுது திருமூர்த்தி மண்ணு ..🥰🥰🥰📚📚✍️✍️✍️


வெள்ளி, 5 மார்ச், 2021

 கேள்வி : செயலற்ற வருமானம் (Passive income) என்றால் என்ன? எப்படி நாம் அதனை அடையலாம்?


என் பதில் :


வயது முதிர்ந்து, வருமானம் இன்றி தடுமாறும்போது, பல நாடுகளில் அரசின் சார்பில் 'சமூக பாதுகாப்பு' (social security) ஆதரவு உண்டு. இந்தியாவில் இல்லை.


வருமானத்தில் இரண்டு வகைகள்.


வணிகம் அல்லது வேலை மூலம் வரும் செயல் வருமானம் (Active Income). வேலையை நிறுத்தி விட்டால் செயல் வருமானம் நின்று விடும்.

வேலை செய்கிறாமோ, இல்லையோ, ஓய்வில் இருந்தாலும் தானாக வரும் வருமானம் செயலற்ற வருமானம் (Passive income).

சரியான முதலீட்டை ஒரு தடவை செய்தாலே போதும்; கவுன்சிலர் வரும்படி போல, மாதம்தோறும் வந்து கொண்டே இருக்கும்.


சில உதாரணங்கள்:


நல்ல ஷேர் முதலீட்டில் தவறாமல் கிடைக்கும் டிவிடெண்ட்.

கடனுக்கு கிடைக்கும் வட்டி

வங்கி டெபாசிட் வட்டி

பணி ஓய்வு பென்ஷன்

LIC போன்ற நல்ல நிறுவனங்களில் மேற்கொள்ளும் annuity பென்ஷன் திட்டங்கள்.

வீடு, வணிக வளாகங்கள் கட்டி விட்டு அதில் கிடைக்கும் வாடகை.


செயலற்ற வருமானத்துக்கு சில விதிகள் உண்டு. முதல் விதி..


## மாதந்தோறும் வர வேண்டும்.


நாம் செய்யும் ஒரு முதலீடு பிற்காலத்தில் பன்மடங்காகலாம். (உம்: ரியல் எஸ்டேட்)

ஆனால் அது செயலற்ற வருமானத்துக்கு உதாரணம் அல்ல !

மாதம்தோறும் நமக்கு வருமானம் வேண்டும்!

## விலை வீக்கத்துக்கு (Inflation) ஏற்ப மாற வேண்டும்.


உங்களுக்கு வயது 60. குடும்பத்தில் இரண்டு பேர். 2020ல், உங்கள் குடும்பத்துக்கு 20,000 ரூபாய் போதுமானதாக இருக்கலாம்.

இதுவே இருபது வருடங்கள் கழித்து, உங்களது 80வது வயதில் அதே இரண்டு பேருக்கு 20,000 ரூபாய் போதுமா?.

## ஆண்டுதோறும் அதிகமாக வேண்டும்.


பொதுவாக ஆக்டிவ் வருமானம் ஆண்டுதோறும் கூடிக்கொண்டே வரும். (உம் : உங்கள் சம்பளம்.)

செயலற்ற வருமானமும் அதுபோல கூடவேண்டும்.

இருப்பதில் வாடகை வருமானம்தான் செயலற்ற வருமானத்தில் முதல் தரம். விலைவாசி கூடினால் வாடகையும் கூடும்.

மாறாக வங்கி டெபொசிட்டுக்கு வரும் வட்டி அப்படியே இருக்கும். சமயத்தில் குறைந்தும் விடும்.

மிக முக்கியமாக மக்களுக்கு செயல் வருமானம் குறையும் வருடங்களில், செயலற்ற வருமானமான டெபாசிட் வட்டியும் குறையும். இந்த வருடத்தையே ஒப்பிட்டுப் பாருங்களேன்.


பண வீக்கம் குறைந்தால், விலைவாசி குறையும்,

## இப்பொது செயலற்ற வருமானத்தை சேமிக்க வேண்டும் !


சம்பளதாரர்களுக்கு ஆக்டிவ் வருமானம் 60 வயதில் நின்றுவிடலாம். IT வேலைகளில் அதற்கும் முன்னாலேயே.

இப்பொழுது 65 வயதில் இருக்கும் இந்தியர்களில் மிக பெரும்பான்மையோர் 85 வயதை பார்த்துவிடுவார்கள் என்பது ஒரு மருத்துவ கணிப்பு.

பணி ஓய்விற்குப்பிறகு இப்படி இருபது, முப்பது வருடங்கள் வரை வாழ வேண்டி வரும்.

தேவையில்லாமல் கடனில் வாகனம். வீடு என்று வாங்காதீர்கள்.

வரிச்சலுகை, கம்பெனி தரும் பெட்ரோல் சலுகை போன்றவை இல்லையென்றால் வாடகை வாகனங்களை பயன்படுத்துங்கள்.


## செலவை கட்டுப்படுத்துங்கள்


அளவுக்கு அதிகமாக காப்பீடு எடுத்துக்கொள்ளாதீர்கள்.

சம்பாதிக்கும் ஒருவர் மரணம் அடைந்தால், அவர் குடும்பம் திணறக்கூடாது என்பதற்கே காப்பீடு.

சம்பாதிப்பவர் உயிருக்கு மட்டுமே காப்பீடு செய்ய வேண்டும்.

## இன்சூரன்ஸ் ஒரு சேமிப்பு அல்ல.


40000 ரூபாய் சம்பாதித்தால் மாதம் 10000 ரூபாய் நிப்டி பண்டில் போடுங்கள். ஓய்வில் இரண்டு கோடிக்கும் மேல் கிடைக்கும்.

25 வயதில் வேலை செய்ய ஆரம்பித்திருப்பீர்கள். அந்த வருடம் 100% உங்களுக்கு செயல் வருமானம்தான். அதில் சிறிது சேமிக்க வேண்டும்.

## வருமானத்தில் 30% சேமியுங்கள்


இப்படி சில வருடங்கள் சேர்த்தால் அந்த சேமிப்பிலிருந்து மாதம் தோறும் செயலற்ற வருமானம் வரும். அதையும் சேமிக்க வேண்டும்.

50 வயதில் நின்று பாருங்கள்.

இப்போது உங்கள் செயல் வருமானத்தில் 25 சதவீதமாவது, உங்களது செயலற்ற வருமானம் வர வேண்டும்.

அப்பொழுதுதான், 60 வயதில் அது 50 சதவீதம் என உயரும்.

கவனம் : இறுதி மாத சம்பளம் ஒரு லட்சம் என்றால் அடுத்த மாத பென்ஷன் 40,000 தான்!

சிலர் சரியாக திட்டமிட்டு, இந்த செயலற்ற வருமானம் (பென்ஷன் உட்பட) இறுதி மாத சம்பளத்துக்கு ஈடாக ஒரு லட்சம் உறுதி செய்கிறார்கள்!

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms

siva19732001@gmail.com

கேள்வி :  இளம் வயதில் பழகும் எந்தெந்த பழக்கங்கள் என்னை பெரிய பணக்காரர் ஆக்கும்?


என் பதில் :..எனக்கு தெரிந்த அண்ணன் ஜெபசிங், வயது 55...அளித்த பதில் 

எனக்கு தங்க தட்டுல சாப்டனும்னு எல்லாம் துளியும் ஆசை இல்லை.


நம்மள நம்பி கடன் கேட்குறவங்களுக்கு இல்லனு சொல்லாத அளவுக்கு,குடுத்த பணத்தை அவங்க திரும்ப தரணும்னு எதிர்பார்க்காத அளவுக்கு ஒரு அளவு பணம் இருந்தால் போதும் அதை சம்பாதிக்க வழி சொல்லுங்கள் என்று கேட்பவர்களுக்கான பதிவு இது.


இந்த பதில்  எலான் மஸ்க் பற்றியது இல்லை. எனக்கு தெரிந்த சீரியல் செட், ஒலியும் ஒளியும் மற்றும் பந்தல், சேர் வாடகை தொழில் செய்யும் ஒரு அண்ணாவைப் பற்றியது.


வயது 55 தான். கல்வி அறிவி 5ம் வகுப்பு. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்த குடும்பம். இப்பொழுது மாத வருமானம் பல லட்சங்கள், பொருட்கள் கையிருப்பு சில பல லட்சங்கள் (குறைந்த பட்சம் 50 லட்சம் தேறும்). 10 நபர்களுக்கு தினம் 1200 ரூபாய் சம்பளம் வழங்கும் முதலாளி.


ண்ணே எப்படிண்ணே இவ்வளவு பெரிய ஆளாகுனீங்க?


இந்த தொழில் உங்கள் குடும்ப தொழிலும் இல்லை. உங்களுக்கு சப்போர்ட்டும் இல்லை உங்க அப்பா பண உதவியும் செய்யல. அப்புறம் எப்படிண்ணே பணக்காரனாகுனீங்க என்று கேட்கையில் அந்த அண்ணா இந்த பதிலை தான் சொன்னார்.


பள்ளிக்கூடத்துக்கு போகவே எனக்கு பிடிக்காதுமா. அம்மா முகத்தை கூட பார்த்தது இல்லை அக்கா தான் வளர்த்தாள். பள்ளிக்கூடத்துக்கு போகலனா அடி அடினு அடிப்பா. நான் குளத்துக்குள்ள போய் உட்கார்ந்துடுவேன். 15 வயசு இருக்கும்மா பொள்ளாச்சிக்கு ஒரு மளிகை கடைக்கு வேலைக்குப் போனேன். கூட்டுட்டு போன அண்ணா உன் சாதிய சொல்லாதல வேலை குடுக்க மாட்டானுவ, வேற சாதினு சொல்லிக்கனு சொல்லியே கூட்டுட்டி போனாரு. ஏழு எட்டு வருசம் வீடு கடைனு வாழ்ந்துட்டேன்.


ஊருக்கு வந்ததும் பந்தல் போடுறவங்க கூட கம்பு நட தான்மா போனேன். ஆனால் எனக்கும் நாலு பேருக்கு சம்பளம் குடுக்கனும்னு ஆசையா இருந்துச்சு. எல்லாரும் எட்டு மணி நேரம் வேலை செய்தால் நான் நாள் பூரா ஓனர் கூடவே சுத்துவேன் தொழில் கத்துக்கிட்டேன் சின்னதா நாலு பெஞ்ச் 30 டியூப் லைட் மட்டும் வாங்கி தொழிலைதொழிலை துடங்கினேன்.


எல்லாரும் ஏழாயிரம் ரூபாய்க்கு ரெண்டு நாள் ராத்திரி மட்டும் லைட் எரிய விட்டானுங்கனா நான் அதே ஏழாயிரம் ரூபாய்க்கு 5 நாள் லைட் எறிய விடுவேன். இப்படி தான் வாடிக்கையாளர்கள் கிடைத்தார்கள்.


சூப்பர்ண்ணே. ஜாதியை காண்பித்து உங்கள யாரும் துரத்தலையா?


அட நீ வேறம்மா. கோயில்களில் ஆர்டர் தாரேனு கூப்டுவாங்க, அப்புறம் ஜாதியை தெரிஞ்சிகிட்டு போயிட்டு வாங்க தம்பினு அனுப்பி விட்ருவாங்க. தூத்துக்குடியை பொறுத்தவரைக்கும் ஆலயத்தில் சீரீயல் எறியனும்னாலே ஜாதி வேணும்மா.


அப்புறம் எப்படிண்ணே இப்படி வந்தீங்க?


அசன ஆர்டர் எல்லாம் பெரிய பெரிய ஆர்டர் அதை எனக்கு தர மாட்டாங்க. இந்த லெந்து நாட்களில் வீட்டு ஜெபம் நடத்துவாங்க ஒரு 200 சேர் போட சொல்லுவாங்க. அந்த சின்ன சின்ன ஆர்டரை நல்லா செஞ்சி குடுப்பேன்மா. அப்படியே இப்ப கொஞ்சம் கொஞ்சமா அவங்க வீட்டு விசேசங்களுக்கும் ஆர்டர் குடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.


ம்ம்ம்ம்ம் மனிதர்கள் இப்படித்தான்ல?


எப்படிண்ணே பைசா எல்லாம் கலெக்‌ஷன் ஆகிடுமா?


இழுத்தடிப்பாங்க இந்தா தாரேன் அந்தா தாரேனு.


டென்சன் ஆகாதாண்ணே?


தொழில்னு வந்தால் வளைந்து நெளிந்து தான்ம்மா போகனும். இந்தா போன வாரம் மேலத் தெருவுல அந்த சார் வீட்ல ஜெபக் கூட்டம்னு 300 சேர், 22 லைட் கட்டுனேன் இன்னும் துட்டு தரல இனியும் தர மாட்டாரு. அதுக்காக அவரை பகைத்துக் கொள்ளக் கூடாது. இன்னைக்கு இதை விட்டு பிடிச்சா தான் நாளைக்கு சர்ச்ல கன்வென்ஷன் வந்தால் நமக்கு ஆர்டர் தருவாரு. இந்த 300 சேர் வாடகைக்கும் சேர்த்து கன்வென்ஷன்ல கலெக்சன் பண்ணிக்க வேண்டியது தான் என்றார்.


இன்று பணக்காரராக உலா வரும் இந்த அண்ணனிடம் கற்றுக் கொண்டது இது தான்.


தொழிலாளியாக இருக்கும் வரைக்கும் நம்மால் பணக்காரனாக முடியாது. பணக்காரனாக விரும்பினால் தொழில் தான் சிறந்தது. தொழில் ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள்.

ரெண்டாவது உழைப்பு. இராப்பகல் பார்க்காமல், கடிகாரத்தை பார்க்காமல் உழைக்க வேண்டும்.

மூன்றாவது எவரையும் பகைத்துக் கொள்ளாமல் வளைந்து நெளிந்து செல்லும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொழில் தொடங்கிட்டு முரண்டு பிடித்தால் தொழிலை இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான்.

இளம் வயதில் ஏழ்மையில் இருந்து பணக்காரனாகிய அந்த ஒரு அண்ணனை தான் எனக்குத் தெரியும். அண்ணாவிடம் கேட்டதை எல்லாம் எழுதிவிட்டேன்.


முயற்சி செய்து பாருங்கள். நம்மிடம் கடன் என்று கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாத அளவிற்கு வாழ்ந்துட்டோம்னாலே அந்த வாழ்க்கை சந்தோசமா தானே இருக்கும்?