நூற்றாண்டு பழமை வாய்ந்த மரத்தினால் வடிவமைக்கப்பட்ட கோபுரம் - தளி ஜல்லிபட்டியில்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
நமது உடுமலைப்பேட்டைக்கு அருகில் தளி பாளையப்பட்டின் அருகில் உள்ள கிராமம் ஜல்லிபட்டி இது ராஜகோபால் எனும் சட்டமன்ற உறுப்பினர் பிறந்த ஊர் . மேலும் கல்விக் கண் திறந்த காமராசர் வருகை தந்த கிராமம் மற்றும் உடுமலையிலிருந்து முதன் முதலில் பேருந்து சென்ற கிராமம் என்ற அரிய பெரிய பெருமைகளைக் கொண்ட கிராமம். இந்த கிராமத்தில் தான் கலெக்டர் மாரிஸ்துரை என்பவர் வெள்ளைக்குதிரையில் வந்து கயிறு இழுக்கும் போட்டி நடத்தியதாக அய்யா மரபுக்கவிஞர் தி.குமாரராசா அவர்கள் நினைவுகளைப் பகிர்ந்தார். இப்போதும் அங்கிருக்கும் நியாயவிலை அங்காடிக் கல்லாலான கட்டிடம் 1933 ல் கட்டப்பட்டது இப்பொழுதும் கம்பீரமாய் நிற்கிறது.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
மேலும் சுதந்திர இந்தியாவில் முதன் சட்டமன்றத் தேர்தலில் (1952 ல் சட்டமன்றத் தேர்தலில்) உடுமலைப்பேட்டையின் முதல் சட்டமன்ற உறுப்பினரை பெற்ற கிராமம் தளி ஜல்லிபட்டி . . . உடுமலைபேட்டைக்கும் திருமூர்த்தி மலைக்கும் இடையே பழம்பெருமைப் பேசக்கூடிய முக்கியமான கிராமங்களில் தளி ஜல்லிபட்டியும் முன்னிலை வகிக்கிறது.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
ஜல்லிபட்டிக்கு அருகில் உள்ள சந்தனக்கருப்பனூர், நல்லவநாயக்கன்ஓடை, புலிக்குத்திக்கல், வீரஜக்கம்மா கோயில் , லிங்கம்மாவூர், கொங்குரார் குட்டை, ஓனாக்கல்லூர், கரட்டுப்பெருமாள் கோயில் வரலாற்றுச்சிறப்பு மிக்க பகுதிகளைக் கொண்ட ஊர்தான் தளி ஜல்லிபட்டி. ஜல்லிபட்டிக்குப்பின்புறம் மலைப்பகுதியில் ஆண்டுக்கொரு முறை மலைமேல் உள்ள போடி தாத்தையன் கோயில் வழிபாடு மிகவும் சிறப்புப்பெற்றது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக