ஊர்தியில் நடைபெற்ற சமூக மாற்றத்திற்கான உரையாடல்
ஆம் . . .
அறச்சலூர் முதல் புகழுர் எனும் வேலாயுதம்பாளையம் சென்றடைவதற்கு சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மன அயற்சியும், சோர்வும், சங்கடமும் ஏற்படுத்தியது எனில் , அதே பயணத்தை மீண்டும் திரும்ப வரும்போது புகழுர் தொடங்கிய ஊர்தி ஈரோடு வந்ததும் தெரியாமல் ஈரோடு வந்துவிட்டது, பேருந்து நிலையத்திற்கு அருகில் வண்டி சென்று கொண்டிருக்கிறது என்று பேராசிரியர் கண்டிமுத்து சொன்னபிறகும் தொடர்ந்த ஊர்தியினூடே நடைபெற்ற உரையாடல் மன உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும், பயணக் களைப்பையும் மீறி பேச வைத்தது எனில் மிகையாகாது.
சமூகத்தின் அனைத்துத் தளங்களையும் தமக்கான இடமாகவும் தமக்கான பங்கினைச் செலுத்தக் கூடிய ஆற்றலாளர்களாக எழுத்தாளர்கள் சமூகப் பற்றாளர்கள் இருப்பார்கள் என்பதை எள் முனையளவு கூட மாறாமல் மிகச் சரியாகவும் பொருத்தமாகவும் பயணத்தைப் பயன்படுத்திய ஆளுமை முனைவர் சமணபௌத்த ஆய்வாளர் அய்யா மகாத்மா செல்வபாண்டியனையே சாரும்.
இந்து மதத்தின் இன்றைய கட்டமைப்பை ஏன் எப்படி எவ்வாறு இவ்வாறு கட்டமைக்கப்பட்டது என்பதற்கான பண்பாட்டுத்தளத்தின் ஆதி அடிநாதமாக விளங்கக்கூடிய உரையாடலை முனைவர் மணிமேகலை அவர்களும், அய்யா செல்வபாண்டியன் பேசியதும் எவ்வளவு ஆழமான செய்தி என்பது சமூகச் செயற்பாட்டாளர்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய தெரியக்கூடிய செய்தியாகும்.
சுமணர்களின் சமயப்பற்றும், பௌத்தர்களின் சமயப்பற்றும், தமிழர்களிடையே எவ்வாறு ஊடுருவியது என்பதும் இது திராவிடத்தால் உள்வாங்கப்பட்டது குறித்தும், திராவிட மரபில் மெய்யியல் மரபு, பண்பாட்டு மரபைத் தவிர்த்து வெறுமனே இறை மறுப்பு என்பதையே தற்போதைய தமிழ்த்தேசியவாதிகள் திராவிடத்தால் வீ;ழ்ந்தோம் என்று பேசி வருவது எவ்வளவு பொருத்தமான செய்தி என்பதே முனைவர்களின் ஆழமான உரையாடலிலிருந்து அறிய முடிந்தது.
திராவிட இன மரபில் இந்துத்துவத்தின் ஊடுருவலும், இதில் சமண பௌத்தத்தின் வீழ்ச்சியும் நாம் இந்த மக்களுக்குச் சொல்லியாகவேண்டிய நிலையில் உள்ளோம்.
இதையேதான் முனைவர்கள் தமது உரையாடல்களில் மிகவும் அழகாகவும், கருத்தாழம் மிக்க உரையாடல்களாக பேசி வந்தனர். அதற்குள் ஈரோடு வந்துவிட்டதே என்ற மனநிலைகூட வந்துவிட்டது. இந்த உரையாடலை முனைவர் செல்வபாண்டியன் கூறியது போல் காலையிலே தொடங்கியிருந்தால் இன்னமும் சிறப்பாகவும் பங்கேற்பாளர்களின் பயண அனுபவமாகவும் இருக்கும் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.
எது எப்படியோ . . . சமூகத்தேடலில் ஒரு பகுதியினை நாம் தொட்டுவிட்டால் கட்டாயம் அடுத்தபகுதி நமக்குக் கிடைத்துவிடும். அந்த வகையில் முனைவர்களின் உரையாடல் தொடர வேண்டும் . .
இதே போல் பயணத்தில் வந்த அனைத்து நண்பர்களிடமும் இதே போல் ஒரு உரையாடலை கட்செவி (வாட்சாப்) வழியாக தொடங்க வேண்டும்.
திராவிட இனத்திற்கு ஒரு பண்பாட்டுத் தளத்தை முனைவர்கள் உருவாக்க வேண்டும். அது அனைத்துத் தளங்களிலும் பேசப்பட வேண்டும். இந்த நல்ல செயலை நமது தமிழ்ப்பேராசிரியர்கள், வரலாற்றுப் பேராசிரியர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் முன்னெடுக்க வேண்டும். (உரையாடல் தொடங்கவேண்டும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக