வெள்ளி, 17 மே, 2019

இன்றய கல்வி நிலை ....

என் அலுவலகத்தின் பக்கத்தில் இருக்கும் நிறுவன ஊழியர்களை ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டில் இணைக்க அருகில் உள்ள பேங்கிற்கு என்னை அனுப்பினார்கள் ..எனக்கு ஏற்கனவே அக்கவுண்ட் இருக்கிறது .. இல்லாதவர்கள் ஐந்து பேருக்கு உதவ என்னை கூட அனுப்பி வைத்தார்கள்.
நானும் கூட சென்றேன் எங்கள் ஏரியா என்பதால்...கூட வந்தவர்கள் அனைவரும் டிகிரி படித்தவர்கள்.. ஏற்கெனவே சிறு சிறு கம்பெனிகளில் வேலை அனுபவமும் உண்டு..இருவர் பி.காம் வேறு...உடுமலையில்  ஏழெட்டு வருடங்களாக வசிப்பவர்கள் தான்..
ஏற்கனவே கம்பெனி ஏஜெண்ட் மூலம் அகவுண்ட் ஓபன் செய்தாகி விட்டது.. ஒரு நூறு ரூபாய் அகவுண்டில் செலுத்தி ஒரு ஸ்டேட்மெண்ட் எடுத்து வரவேண்டும் அவ்வளவு தான்..
பணம் செலுத்த செலான் கொடுத்தால் யாருக்குமே அதை பூர்த்தி செய்ய தெரியவில்லை...தப்பும் தவறுமாக அடித்து அடித்து எதையோ நிரப்பி தந்தார்கள் ....அதை கரெக்ட் செய்து பணம் செலுத்தியாகிவிட்டது...
ஸ்டேட்மெண்ட் எடுக்க ஒரு ஃபார்ம் கொடுத்தார்கள்..பெயர் , அகவுண்ட் நம்பர் , தேதி, கையெழுத்து அவ்வளவு தான்..அதை கூட சற்றும் நிரப்ப தெரியவில்லை..நான் ஒரு ஃபார்ம் பூர்த்தி செய்து மற்றவர்களை பார்த்து எழுத சொல்லியும், மேலும் கீழும் நிரப்பி வைத்திருந்தார்கள் ...
கையெழுத்து எங்கே போட வேண்டும் என்று குழந்தைத்தனமான கேட்டார்கள்..எனக்கு மிகுந்த ஆச்சரியம்..
பூர்த்தி செய்த படிவத்தை அலுவலக பணியாளரிடம் தந்தால் அதில் பல கரெக்ஷன் ..நானே செய்து கொடுத்து கையெழுத்து மட்டுமே வாங்கி ஸ்டேட்மெண்ட் எடுத்து கையில் திணித்தேன்...இதில் பணியாளருக்கு தமிழ் தெரியவில்லை.. இவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை.... ஏனெனில் அது பிரைவேட் பேங்க்...
அதில் இருவருக்கு கடைசி நேரத்தில் பிரிண்டர் வேலை செய்யாததால் மெயில் அனுப்பட்டுமா ? எடுத்து கொள்கிறீர்களா? என கேட்டார்..
திரு திரு என முழிக்கிறார்கள்... ஆன்லைன் பேங்கிங் தெரியாதாம்.. மெயிலிலிருந்து பென்டிரைவில் காப்பி பண்ண தெரியாதாம்....சரி எப்படியோ எடுத்து கொடுத்தாயிற்று..
டிகிரி வரை நம் கல்விமுறை என்ன தான் சொல்லி கொடுக்கிறது என்று எனக்கு புரியவில்லை... பிராக்டிகல் நாலட்ஜ் தராத கல்வி முறையின் தவறா??அல்லது இவர்கள் சற்று தெளிவில்லாமல் இருக்கிறார்களா என்று எனக்கு புரியவில்லை!!!!!
நான் இவர்களை கிண்டல் செய்யவில்லை...பரிதாப படுகிறேன்!!!
இதில் எங்கும் நான் மிகைபடுத்தி சொல்லவேயில்லை...அனைத்தும் உண்மையே!!! எனக்கே இதை நம்ம முடியவில்லை!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக