புதன், 29 மே, 2019

Karthic KVT:
இதுதாங்ங எங்ங ஊரு :-
கொடிங்கியம் பஞ்சாயத்துக்கு கட்டுப்பட்ட வல்லக்குண்டாபுரம், வளையபாளையம் கிராமம் தாங்ங எங்ங ஊரு ..!!
எங்ங ஊரு காவல் தெய்வம்
உச்சிமாகாளியம்மன் ..!
சுத்துப்பட்டு வட்டாரத்துல இல்லாத அளவுக்கு
நித்தப்பூசை நடக்குற உச்சி மாகாளியம்மன் திருக்கோயில் னா
அது எங்ங ஊர் காளியம்மன் கோவில சொல்லாங்க.!!
எப்பவோ ஒரு காலத்துல கோயில் சாமிகும்பட்ட பிரச்சனையில கருத்துவேறுபாடு வந்து
பிரிஞ்சு வந்த வல்லவநாயக்கரால கள்ளிய வெட்டி கல்லெத்து வெச்சு காளியம்மன் னு கும்பிட ஆரம்பிச்சதா எங்க ஊர் பெரியவங்ங சொல்வாங்க ..!!
மொதல்ல சின்னதா இருந்த தெய்வம் படிப்படியா வளந்து இன்னைக்கி இவ்வளவு பெரிசா நிக்குதும்னு சொல்வாங்ங ..!!

காளியம்மனுக்கும், வளையபட்டியம்மனுக்கும், திருக்கல்யாணம்
ரெட்டப் பொங்கல்
ரெட்ட மாவிளக்கு
ரெட்டக் கெடாய் " செலுத்தலாமுங்கனு
உருமை மகாலிங்கம் ஊரெல்லாம் சாட்டி முடிச்சுட்டுவரவே மணி ரெண்டாயிரும் ..!!
சாட்டிமுடிச்ச கையோட மொத தீர்த்தமா டெம்போவ புடிச்சு தெய்வகொளம் காளியம்மன் கோவிலுக்கு போய் தீர்த்தம் எடுத்துட்டு வருவாங்க ...!!
நோம்பு சாட்டுனதுல இருந்து கறி புளி சேத்தாம
கடுகு தாளிக்காம, எண்ணெய் ஆட்டம, மொளகுபிடியிடிக்காம
வெளியூர்ல போய் தங்கலிருக்காம
சம்பிரதாயம் கடைபிடிக்கிறது வழக்கம் ...!!
கொலுவிருக்குற சாமி நம்ம வீட்டுக்கும் வந்து பாத்துட்டு போகுங்கிறது எங்ங ஐதீகம் .. !!
நித்தமொரு கோயிலு
நெதமொரு தீர்த்தம் னு
ஆத்தாள குளிர்விச்சாலும்
அத்தனையும் விட கொஞ்சம் அதீக
எதிர்பார்ப்பும் எண்ணிக்கையுமா
கலந்துக்கிறது என்னமோ மாவடாப்பு வயிரப்பாட்டன் கோயில் தீர்த்தம்தாங்க ..!
முறைப்படி வனத்துறைகிட்ட அனுமதிவாங்கி அவங்களோட அறிவுறுத்தலோட போய் வர்ரது எல்லாம் இந்தக்காலம்
( மொதல்ல எங்ங பகுதி புலிகளின் சரணாலயமா அறிவிக்காததுக்கு முந்தி வனத்துறையிலும் கொஞ்சம் கட்டுப்பாடு கெடுபிடிகள் தளர்வா இருந்திச்சு அப்பெல்லாம் ராத்திரி கோவிலுக்கு போறோம்னு போய்
அங்க இருக்கீற யானைமுடிக்கி
தெறிச்சு ஓடி முட்டி மொழங்கால பேத்து பத்தாம்நெம்பர் பீடி காயத்த வச்சு பத்துபோட்டுட்டு வந்ததெல்லாம் தனிக்கதைங்க)
கும்பம் தாளிக்கிற அன்னைக்கி சாயங்காலம் 4 மணில இருந்து
சாமிசெலைய கொண்டாந்து கோயில்வீட்டுல வச்சுட்டு
ஊர்நாயக்கர் ஊர்கவுண்டர்
சின்ன ஊர்கவுண்டர் னு அவங்கவுங்கவுங்களுக்கு ஊர்சார்பா செய்ய வேண்டிய மரியாதை செஞ்சு
மொறைப்படி செஞ்சு கோவிலுக்கு கூட்டீட்டு போயி அடுத்த கட்ட வேளைகள பாப்பாங்க ..!!
ஊருக்காரங்க ஒறவுக்காரங்க
நோம்பிக்கு வந்த ஒறமனைக்காரங்க என, கூட வேளை செய்யுற தோழமைகனு வூட்டுக்கு வந்த அத்தனைபேரையும் வரவழைச்சு
பேசிமுடிச்சு சாப்டுட்டு கோயில் போகறதுக்கும்
கும்பம் தாளிக்குற வேலைகள் ஆரம்பிக்கவும் சரியா இருக்குமுங்ங....!!
கலசம் எடுத்துட்டு வந்து அலங்கார பந்தல்ல வெச்சு அலங்காரம் முடிக்கிற வரைக்கும் எங்க ஊருல
இளவட்ட பொடிசுகள்ல இருந்து
பெரிசுகள் வரைக்கும் அத்தனைபேருக்கும் ஒரு பொழுதுபோக்கு
தேவராட்டம் தாங்ங
பத்து பதினைஞ்சுனு இல்லாம
நூறு எறநூறுபேர் சேந்து ஆடுறதும் அன்னைக்கி தாங்ங! !
அலங்காரம் முடிச்சு சக்தியழைக்க ஆரம்பிக்கற நேரத்துல எள்ளுபோட்டா கீழ விழாதளவுல கூட்டம் நெறைஞ்சிருக்குங்ங ....!
கல்திருத்தி மணற்பரப்பி
தென்னம்பாளை விரித்துணர்த்தி னு ஆரம்பிச்சு
ஒவ்வொரு திசையில இருந்து ஒவ்வொரு சாமிய அழைச்சா
அந்த பம்பை அடிக்கும்
உரம மொழக்குத்தும்
அப்படியொரு கொண்டாட்டமா இருக்கும் பாருங்ங ...!!
சுத்தி ஒக்காந்திருக்கிற ஆட்களுக்கு ஒருத்தர் மாத்தி ஒருத்தருக்கு சாமி வர்றதும் அதுக்காக ஓடி ஓடீ தீர்த்தம் அடிக்கிறதுக்குக்கும்னே ஒரு குருப் தீவிரமா வேளைசெய்யனும்னா பாத்துகோங்க ...!!
சக்தியழைச்சு சாமி கலசமெடுத்து
பூசாரி தலைல வச்சு விநாயகங் கோவில சுத்தி காளியம்மன் கோவிலுக்கு போறதுக்குள்ளையே
மணி நாலு நாலரைய தொட்டுருமுங்க! !
பிரம்ம மூகூர்த்த நேரத்துல திருக்கல்யாணம் முடிஞ்சு
தீபாராதனை பாத்தகையோட
மாவிளக்கும் எடுத்து முடிப்பாங்ங ..!!
ஒவ்வொரு குருப்பா மாவெளக்கு வந்து சேர மணி பதினொன்ன தொட்டுருங்க..!!
அடுத்து
வேறென்ன னு கேட்கறீகளா? ?
கறி விருந்து தாங்ங ..!!
பதினைஞ்சு நாள கறி புளி சேத்தாம இருந்தவாயி கம்முனா இருக்கும்..!!?
அந்த நாளே அல்லோலப்பட்டு போகுங்ங ..!
எல்லா கறிகடையிலையும் முன்னாடியே சொல்லிவச்சுருவாங்ங..!!
வேண்டுதல் ஏதாவது இருந்தா
கெடாவெட்டும் வச்சிருவாங்ங ..!!
ராத்திரி தூக்கம் முழிச்சதுக்கும்
அடுத்தநாள் கறிவிருந்துக்கும் சேத்தி
புதங்கெழமை நைட்டு ரெஸ்ட் எடுத்திட்டு
வியாழக்கிழமை வந்துசேர்வோங்க..!!
அன்னைக்கி தாங்ங ஆத்த திருக்கலியாணம் முடிஞ்ச கையோட ஊருக்குள்ள பவனி வர்ற நாளு
சப்பாரம் எடுக்கவே வச்சிருக்கிற மரமெடுத்து வேட்டி சுத்தி சிங்கவாகனம் சாமிசிலை எல்லாம் வச்சுகட்டி ஊருக்குள்ள இருக்கிற எல்லா வீதிக்கும் போயிட்டு வர்றதுக்கும் பொழுதுசாயிரக்கும்
நேரம் சரியாயிருக்குங்ங!!!
அன்னைக்கும் அதுக்கடுத்த நாளைக்கும் எங்ங ஊர்ல மஞ்சள் நீராட்டு தாங்க ..!
வியாழக்கிழமை ராத்திரி எதாவது கலைநிகழ்ச்சிகள் போடுவாங்க ..!!
வெள்ளிக்கிழமை காலைல காளிம்மன் சப்பாரம் தெக்கவந்து வலையபட்டி ஆத்தாள போயிட்டு
வடக்க போன கையோட அவிசேக பூஜைய முடிச்சு திருவிழா நிறைவூ செய்யுறது எங்ங ஊர்வழக்கம் ..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக