புதன், 15 மே, 2019

வீட்டுக் கடன்… ஃபிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது?

மாறுபடும் வட்டி விகிதக் கடன் என்பது, நிலையான வட்டி விகிதக் கடனைக் காட்டிலும் உத்தேசமாக 1 முதல் 2.5% குறைவாக இருக்கும். மாறுபடும் வட்டி
விகிதத்தைத் தேர்வுசெய்வதால், வட்டி விகித சுழற்சியின் ஏற்றத்தாழ்வைப் பொறுத்து, கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தைக் குறைக்க முடியும். அதேசமயம், இந்தத் திட்டத்தில் உள்ள பாதகமான அம்சம் என்னவென்றால், கடன் காலத்துக்கான நிதித் திட்டமிடலைச் செய்வது சற்று கடினமானதாக இருக்கும். நீங்கள் செலுத்தவேண்டிய மாதாந்தர கடன் தொகை எவ்வளவு இருக்கும் என்பதைத் தீர்மானிப்பது சவாலாகவே இருக்கும்.
எதிர்காலத்தில் வட்டி விகிதம் குறையும் என நீங்கள் எதிர்பார்த்தாலோ அல்லது வட்டி விகித சுழற்சியின் ஏற்றத்தாழ்வு எப்படியிருக்கும் என்பதை நிபுணர்களே கணிக்க முடியாத நிலையில், சந்தை நிலவரத்துக்கேற்ப வட்டி விகிதம் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பினாலோ, மாறுபடும் வட்டி விகித முறையை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
கடன் வாங்குவது நிலையான வட்டி விகிதத்திலா அல்லது மாறுபடும் வட்டி விகிதத்திலா என்பதை முடிவுசெய்வது, ஒருவருடைய தனிப்பட்ட விஷயம் மற்றும் உங்களது ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்தது. இரண்டு விதமான வட்டி விகிதங்களிலுமே சாதக பாதகங்கள் இருக்கும்நிலையில், உங்களுடைய தேவைக்கு எது சிறந்ததாக இருக்கிறதோ, அதை நீங்கள் தேர்வுசெய்ய வேண்டும். 

நிலையான வட்டி விகிதம், பாதுகாப்பை உறுதி செய்வதுடன், நிச்சயம் உங்கள் மனதுக்கும் நிம்மதியை ஏற்படுத்தும். அதேசமயம், மாறுபடும் வட்டி விகித முறை, உங்களுக்கு எதிர்பாராத பண ஆதாயம் கிடைக்கவும் உதவும்.
இதுதொடர்பாக இறுதி முடிவெடுக்கும்முன், நிதி நிறுவனங்களிடம் இருக்கும் பல்வேறு வகையான வட்டி விகிதத் திட்டங்களை நீங்கள் கவனத்தில்கொள்ள வேண்டும்.  சொந்தமாகத் தொழில் செய்யும் மற்றும் சம்பளம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு என கவர்ச்சிகரமான வட்டி விகிதத்துடன் கூடிய வீட்டுக் கடன் தீர்வுகளை, சுந்தரம்  BNP பரிபாஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் போன்ற நிறுவனங்கள் அளிக்கின்றன. 

உங்களால், உங்களுக்கு ஏற்ற வட்டி விகித முறையைத் தேர்வு செய்ய முடியவில்லையெனில், நிலையான வட்டி விகிதத்தி லிருந்து மாறுபடும் வட்டி விகித முறைக்கு எந்த நேரத்திலும் மாறிக்கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. இந்த வசதியை அளிக்க, உங்களுக்குக் கடன் வழங்கும் நிறுவனம் அதற்கென கணிசமான கட்டணத்தை விதிக்கும். எனவே, உங்களது வட்டி விகித தேர்வு முறை, நீங்கள் வாங்கும் சொத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும்கூட, கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தில் உங்களது தேவைக்கேற்ப வட்டி விகித முறையை மாற்றிக்கொள்ளும் வசதி உங்களுக்கு உள்ளது என்பதை மறக்காதீர்கள்!
வீ .கே .சிவக்குமார் --(வீட்டுக்கடன் பிரிவு )
Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 ...Whatsapp's 
siva19732001@gmail.com...






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக