எனது கல்வி வளர்ச்சி ...
கலர் பென்சில் ஸ்கெட்ச் டப்பாவுடன் ஆங்கில புத்தகத்திலிருந்த பகவத் சிங் வீரபாண்டிய கட்டபொம்மன் என படம் வரைந்து திரிந்த நான் எட்டாம் வகுப்பு படிக்கையில் குடும்பமலர் புத்தக கவிதை ஒன்றினை ஆல்டர் பண்ணி என் தெருவில் வசிக்கும் ஒரு அக்காவிடன் காட்டினேன் அதுவே எனது முதல் ஊக்கம் அவளுக்கு நன்றி ( வரைவது அன்றோடு நின்றுவிட்டது)
அந்த ஊக்கத்தில் காதல் கவிதைகளாய் என நோட்டில் தாள்கள் கிழித்து எழுதி வந்த என்னை அறிந்த அறிவியல் டீச்சர் இந்த வயசுலயே உனக்கு காதல் கவிதை கேட்குதானு ம்ரத்தடியில் வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது அனைவரின் முன்னமும் அத்தனை கவிதைகளையும் கிழித்தெரிந்த அந்த வீனா போனவளுக்கு கண்டனங்கள்
அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாய் நீண்ட என் கிறுக்கல்கள் அறிந்து 12ஆம் வகுப்பு முடிவில் என்னை நட்பு கவிதை எழுத வைத்து மேடையேற்றிய கணக்குப்பதிவியல் ஆசிரியருக்கு நன்றி ( முதலும் கடைசி மேடையும் அது தான்)
கல்லூரியில் எனது எழுத்துக்களை மறந்திருந்த நான், அடிக்கடி எழுதிக்கொண்டிருந்தேன் BBM முடித்து ..படிப்பு முடிந்து வேலையில்லா மூன்று மாதத்தில் எதிர்பாராத ஒரு விபத்து என் முதல் வலைப்பூ
அதன் பிறகு தான் ஆர்குட்டில் அக்கவுண்ட் ஆரம்பித்து அதில் கவிதை எழுத துவங்கிய காலமது
நான் தூரத்திலிருந்தே வேடிக்கை பார்த்தபடியும் பொறாமையுடனும் போட்டியோடும் எழுதத்துவங்கிய என்னை அடிக்கடி ஊக்குவித்து என்னை வேறு பாதையில் கூட்டிச் சென்ற தேனு தேனப்பன் உதயகுமார் அண்ணனுக்கும் காலாசுரன் ரசிகனுக்கும் இன்றும் தூரத்திலிருந்து நான் ரசிக்கும் இளங்கோ அண்ணனுக்கும் எனது நன்றிகள்
நான் தூரத்திலிருந்தே வேடிக்கை பார்த்தபடியும் பொறாமையுடனும் போட்டியோடும் எழுதத்துவங்கிய என்னை அடிக்கடி ஊக்குவித்து என்னை வேறு பாதையில் கூட்டிச் சென்ற தேனு தேனப்பன் உதயகுமார் அண்ணனுக்கும் காலாசுரன் ரசிகனுக்கும் இன்றும் தூரத்திலிருந்து நான் ரசிக்கும் இளங்கோ அண்ணனுக்கும் எனது நன்றிகள்
என்னை ஆர்குட்டிலிருந்து பேஸ்புக்கில் எழுத வைத்த உதயா அண்ணனும் பின்னதாய் நடந்த ஒரு சண்டையில் காதல் காமம் தாண்டி நான் எழுதுவேன்
சீரான எனது பாதையில் புத்தக வாசிப்பு உள்டப்பி ஊக்கம் எனக்கு நான்கு வைர கீரிடம் அளித்த வெங்கடேஷ் அண்ணாவுக்கும் தூரத்திலிருந்தே கவனித்து சரியாக ஒரு கவிதையில் என் கவன சிதறலை மெத்தன போக்கை கண்டித்து என் பார்வையில் தான் இருக்கிறாய் என்று எழுத்தால் நிருபித்த இளங்கோ அண்ணனுக்கும் எனது நன்றி
எனது கவிதைகள் அனைத்தும் முதலில் வாசித்து எஸ் எம் எஸ் ல் பதில் சொல்லி இன்றுவரை தட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கும் ரசிகனுக்கு நன்றி
எனது தமிழ் பிழைகளை திருத்தி அடிக்கடி சிலாகிக்கும் ஹேமா அக்காவிற்கு நன்றி
தனக்கென ஒரு பாதையில் பயணித்து எழுத்து பாடல் என வசீகரிட்த்து இன்னமும் எழுத தூண்டிய நவின் கண்ணனுக்கு நன்றி
எல்லா நிலையில் என் கவிதைகளை கொண்டாடி என்னை ஊக்குவிக்கும் ஜெயந்தி ரமணி அவர்களுக்கும் எனது நன்றி
ஒரு முறை கூட பேசவில்லையெனினும் அவர் எழுத்தின் பால் கொண்ட ஈர்ப்பில் என்னை போட்டி போட வைத்த ஆறுமுகம் முருகேசன் அண்ணனுக்கும் ஷம்மி முத்துவேல் அவர்களுக்கும் நன்றி
எட்டு மாத காலமாக என் பிழை திருத்தி அறை நண்பனாக தம்பியாக இருந்த கிட்டுவுக்கு நன்றி..கவிதை ,நூல்களை விட .தற்பொழுது உள்ள பொருளாதாரம் சார்ந்த வழிகாட்டி நூல்களை எழுதுவது சிறப்பானதாக இருக்கும் ..
பள்ளி வாழ்க்கையில் என்னையும் யாரையும் மதிப்பாய் நடத்தவில்லை ,வழிகாட்டவில்லை என்னையும் மதிக்கவில்லை. ,கொஞ்சம் கொஞ்சமாக ..முகநூல் ,தற்பொழுது வாட்ஸாப்ப் தகவல் தொழில்நுட்பம் மூலம் பதிவுவிடுவது மகிழ்ச்சி ...இனி வரும் காலங்களில் ..என் துறை சார்ந்த சிறு சிறு நூலக வெளியிடலாம் என்று இருக்கிறேன் ...அதற்கான நேரம் தற்பொழுது வந்துள்ளது ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக