இன்றைய கணவன்- மனைவிக்கு பொருளாதாரத் தேவைகள் அதிகரித்து விட்டதால், எந்நேரமும் பணத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி எல்லாமே அவர்களுக்குள் நம்பிக்கை துரோகத்துக்கான விதைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ தூவிச் செல்கின்றன.
நம்பிக்கைத் துரோகத்தை ‘அமைதியான தொற்றுநோய்’ என்று சொல்லலாம். அது எல்லாக் காலங்களிலும் நம்மிடையே இருக்கும். மலேரியாவுக்கும் எபோலாவுக்கும் வித்தியாசம் உண்டல்லவா? மலேரியா எப்போதும்தான் இருக்கிறது. திடீரென தலைதூக்கிய எபோலா அளவுக்கு மலேரியா கண்டுகொள்ளப்படவில்லைதானே... அது போலத்தான் நம்பிக்கை துரோகமும்! பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும்தான் அதன் அவஸ்தை தெரியும். ஒருவர் எத்தனை கல்யாணம் செய்கிறார் என்பதை சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம். ஒருவருக்கு எத்தனை கள்ளத் தொடர்புகள் இருக்கிறது என்பதைக் கணிக்கவே முடியாது. நம் வாழ்க்கையில் அப்படி ஏதேனும் இருக்கிறதா, நம் துணைவருக்கோ, உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ அத்தகைய உறவு இருக்கிறதா என்பதைக் கூடக் கண்டுபிடிக்க முடியாது.
நம்மூர் திருமணங்களில் தம்பதிக்குள் நம்பகத்தன்மை என்பது குறைவு. காதலில் கடமை உணர்வும் காமமும் இருப்பதைப் போலவே நம்பிக்கையும் இருக்கும். அதனால்தான் ஒருவரை ஒருவர் நம்பி, உறவுகளை உதறிவிட்டு, துணிந்து வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். திருமண உறவில் பொறுப்பும், கடமை உணர்வும், காமமும் இருக்குமே தவிர, நம்பிக்கை இருக்காது. துணையிடம் எல்லா தகவல்களையும் பகிர்ந்து கொள்ள விரும்ப மாட்டார்கள். இருவரும் வேறு வேறு சூழல்களில் வளர்ந்து, திடீரென வாழ்க்கையில் இணைந்திருப்பார்கள். நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கிற ரகசியங்களைக்கூட துணையிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். காரணம், நம்பிக்கையின்மை. காதல் திருமணங்களிலும் பின்னாளில் அந்த நம்பிக்கை உடைந்து, தம்பதிக்குள் பிரச்னைகள் வருவது வேறு விஷயம். திருமணம் தாண்டிய உறவுகளுக்கான அடிப்படை நம்பிக்கையின்மையே. எந்த மதத் திருமணங்கள் ஆனாலும், ‘உன்னை நான் கைவிட மாட்டேன்’ என உறுதிமொழி எடுத்துக் கொள்கிற சடங்கு இருக்கிறது. ஆனால், திருமண பந்தங்களில் உடைக்கப்படுகிற முதல் உறுதிமொழியும் அதுவாகவே இருக்கிறது.
துணையைத் தாண்டிய இந்த தகாத உறவு என்பது வேலையிடங்களில் மேலதிகாரிக்கும் அவரின் கீழ் வேலை பார்க்கிறவருக்கும் இடையிலும், அக்கம்பக்கத்து வீட்டாருக்கும், குடும்ப நண்பர்களாக நம்பப்படுகிறவர்களிடமும் அதிகம் இருப்பதைப் பார்க்கலாம். திருமண உறவுகளில் கோபம், வெறுப்பு என எதையும் துணையின் மீது காட்டத் தயங்குவதில்லை யாரும். துணை அல்லாத நபரிடமோ தனது நெகட்டிவ் பக்கத்தைக் காட்ட விரும்புவதில்லை. தன்னை நல்லவராகக் காட்டிக் கொள்கிற முனைப்பு அங்கே தொடர்கிறது. துணையல்லாத ஒரு நபரிடம் ஏற்படுகிற இந்த ஈர்ப்புக்கு மூளையிலிருந்து சுரக்கும் ஆக்சிடோசின், புரோலாக்டின் உள்ளிட்ட ஹார்மோன்கள் வேகமாக சுரந்து, எதிர்பாலினத்தாரிடம் நெருக்கத்தை தூண்டுகிறது.
பெரும்பாலான தகாத உறவுகள், அப்பாவித்தனமாகத்தான் ஆரம்பிக்கின்றன. தொடக்கத்தில் அந்த உறவில் செக்ஸ் என்பது நோக்கமாக இருக்காது. யதேச்சையாக தன் வீட்டுப் பிரச்னை களை எதிர்பாலினத்தாரிடம் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வார்கள். பிறகு அது அடிக்கடி தொடரும். இருவரும் வெளியில் சந்தித்து அலுவலக வேலைகளைப் பற்றிப் பேசுவார்கள். அதனிடையே சிறிது அந்தரங்கப் பேச்சும் இருக்கும். ஒரு கட்டத்தில் வெளிச் சந்திப்புகளில் வெறும் அந்தரங்கம் மட்டுமே பேசப்படும். இன்னும் சில நாட்களில் அது மேலும் கொஞ்சம் எல்லை மீறும். அந்த நபரை அடிக்கடி சந்திப்பதற்கான ஏக்கம் கூடும். அது உடல் ஈர்ப்பிலும் கொண்டு விடும்.
இப்படியொரு உறவில் சிக்கியிருப்பதாக சந்தேகப்படுகிறவர்கள், தம்மைத் தாமே சில கேள்விகளைக் கேட்டுக் கொள்ளலாம்.
* எனக்கோ, என் துணைக்கோ திருமண வாழ்க்கையில் ஏதேனும் பிரச்னைகள் இருக்கின்றனவா? அவற்றைப் பற்றி நானோ, என் துணையோ மூன்றாம் நபரிடம் அதிகத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறோமா?
* மூன்றாம் நபரிடம் தகவல்களை அதிகம் பகிர்வது என்பது எனக்கு குற்ற உணர்வைத் தருகிறதா?
* நான் என் அந்தரங்கத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிற அந்த மூன்றாம் நபர், என் சிந்தனையை அதிகம் ஆக்கிரமித்திருக்கிறாரா?
* அவரை மறுபடி சந்திக்க சூழல்களை ஏற்படுத்த என் மனம் விழைகிறதா?
இவற்றில் ஒரு கேள்விக்கு உங்கள் பதில் ஆமாம் என்று இருந்தாலும், நீங்கள் உணர்வு ரீதியாக தகாத உறவுக்குள் சிக்கியிருப்பதாக அர்த்தம். அடுத்தது பொருளாதாரப் பின்னணி. பணம் பத்தும் செய்யும் என்பது இங்கே பொருந்தும். திருமணத்துக்கு முன்பான ஒருவரின் பொருளாதாரப் பின்னணி, வருமானம், செலவு, சேமிப்பு, முதலீடு போன்றவற்றை துணையிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது, கட்டுப்பாடின்றி செலவழிக்கும் பழக்கம், சூதாட்டப் பழக்கம், பார்ட்டிக்கு அதிகம் செலவழிப்பது போன்றவற்றை துணையிடமிருந்து ரகசியம் காக்கும் போது, அது அவர்கள் இருவருக்குமான உறவின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைத்து விடும். துணையைத் தவிர்த்து வேறொருவருடனான ஈர்ப்புக்கு அடிகோலும்.
தகாத உறவுகளின் எண்ணிக்கை பெருகியதில் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் பங்கு மிகப் பெரியது. துணைக்குத் தெரியாமல் தகவல் தொடர்புச் சாதனங்களை அதீதமாகப் பயன்படுத்துவது, செல்போன் உரையாடல், இமெயில் போன்றவற்றை துணைக்குத் தெரியாமல் கையாள்வது, இப்படித் தகாத உறவுப் பாதைக்குள் கொண்டு விடுவதும் அதிகம் நடக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக