விளக்கெண்ணெயை......வெயில் காலம் ...
அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்தபொழுது ...ஏங்க இன்னைக்கு வரும்பொழுது விளக்கெண்ணெய் வாங்கிட்டு வாங்க என்றார்கள் ...வீட்டுலதான் சாமிக்கு விளக்கே வெக்கறதில்லை அப்பறம் எதுக்கு என்றேன் நான் ...லக லக ...என்ற பார்வைதான் ..ஓகே ஓகே ..வாங்கிட்டு வரேன் என்றேன் ..எதுக்கு விளக்கெண்ணெய் ..ஆயிரம் எண்ணஓட்டங்கள் மனதில் ..
மாலை வந்தவுடன் இந்தம்மா நீ கேட்ட விளக்கெண்ணெய் ...கொடுத்துவிட்டு ..சிறு புன்னகையுடன் ..எதுக்கும்மா ..என்றேன் ..சொன்னால் தெரிந்துகொள்வேன் ...
வெயில் காலமா ...கண் எரிச்சல் ..இல்லாமல் இருப்பதற்கு ..என்று விளக்கு விளக்கம் தந்தார்கள் ..வீட்டு HOME மினிஸ்டர் ..புருவத்தில் விளக்கெண்ணெயை தடவி வந்தால் பெண்களின் கண்கள் பேசும்போதே தானாகவே புருவங்களும் பேசும். அது அழகிலும் அழகாக இருக்கும். ஆனால் அதே புருவம் முகத்திற்கு தேவையான அளவு அடர்த்தி இல்லாமல் மிகவும் குறைவாக இருக்கும் அது அவர்களின் அழகை சற்றே குறைத்திருக்கும். அதுபோன்ற அடர்த்தி குறைவாக உள்ளவர்கள் தினமும் சிறிதளவு விளக்கெண்ணெயை புருவத்தில் தடவி வந்தால் புருவ ரோமங்கள் அடர்த்தியாக வளரும். வட்டமான முகமுடையவர்கள் வளைவாக திரெட்டிங் செய்யக்கூடாது. புருவத்தின் நுனியில் வளைக்க வேண்டும். இதனால் மேலும் முகம் வட்டமாகத் தெரியாமல் அழகாகக் காட்சி அளிக்கும். என்றார்கள் ..நீங்களும் டெய்லி வெயிலில் சுற்றி கொண்டிருக்கிறீர்கள் ..நீங்கள் உங்கள் கண்களுக்கும் தேய்த்துக்கொள்ளுங்கள் ..கண்களுக்கு பாதுகாப்பு ...சிறு டிப்ஸ் நமக்கு ...அட டா ..இந்த விளக்கெண்ணெய் இத்தனை நாளா தெரியாம போயிருச்சே ...நமட்டு சிறப்புடன் நகரவேண்டியதாக போய்விட்டது ....
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681....
தம்பி ...சொந்தக்கதை தான் ...இன்னும் நிறைய டிப்ஸ் ...இருக்கு ..மாதம் பியூட்டி பார்லர்க்கே ...தனி பட்ஜெட் ஒதுக்க வேண்டும் தம்பி ...மளிகை பொருள் இருக்கு இல்லையோ ..இதற்கு தனிச்செலவு தான் ..இல்லையென்றால் ..லக லக தான் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக