புதன், 22 ஏப்ரல், 2020

Sivakumar Kumar is in Udumalaippettai.

அழிந்து வரும் கம்பள கலைகள் ...(பொறியாளர் .திருப்பதி தேவராஜன் -கோவை )
கலைகள் அழிந்து வரும் இப்போதையை நிலை : ஆரம்ப கால கட்டம் முதல்
கம்பளத்தார்களுக்கும் கலைகளுக்கும் ஆதிக்கமானது அதிகமாகவே இருந்தன ...நம்மவர்கள் கலைகளில் வல்லவர்களாக திகழ்ந்தார்கள் இதில் முக்கிய பங்கு நாடக கலைக்கு உண்டு
நாடாக கலை .....
இதில் அதிகமாக நமது கம்பளத்தார்கள் ராஜபார்ட்டாக நடிப்பது அந்த வேடத்தில் அவரை போல் நடிப்பை வெளிப்படுத்துவது .. மிக அருமையாக இருக்கும் அதில் வேடமிடுபவர் தூய தமிழில் பேசி நம்மையும் தூய தமிழில் பேச தூண்டும் அளவிற்க்கு திறமை படைத்தவர்களை கொண்டவை எம்மவர்கள் படிப்பு அறிவு அற்றவர்களாக இருந்தால் நடிப்பில் உண்மையில் படைத்தோரை முறியடித்து விடுவார்கள் ..
இது போல தான் கம்பளத்தாரின் கலைகள் நிறைய உள்ளன
தேவராட்டம், வில்லாட்டம் கும்மியாட்டம், சேர்வையாட்டம்,பொய் கால் குதிரையாட்டம்,குறவன் குறத்தி, போன்றவை பிரசித்தி பெற்றவை கலைகளில்
தேவாரட்டமானது தேவ துந்திமி ஒழிக்க அதற்கு ஏற்றார் போல் ஆடவுகள் எடுத்து ஆடும் போது நம்மை அந்த தேவ துந்திமி ஆனது மூழ்க அடித்து விடும் அதன் ஓசையினை கேட்டு ஆடவுகள் ஆட பெரும் அருகில் உள்ளவர்களையும் ஆட தூண்டும் அளவிற்கு தேவ துந்திமிற்கு சக்தி உண்டு ..அங்கு ஒலிக்கும் தேவ துந்திமி ஓசையில் நம்மில் உள்ள மன அழுத்தங்களை, முற்றிலும் குறைத்து நம்மையும் நம் உடலின் ரத்த நாளங்களில் கிளர்ச்சியூட்டம் செய்து நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்த தேவ துந்திமியால் முடியும்..இன்றும் என்றும் அழிய கலை இதுவும் ஒன்றாகும் ..
கும்மியானது நமது பாரம்பரிய பண்பாட்டினை இதன் பாடல் மூலம் நமக்கு அறிமுக படுத்தியதில் இதற்கும் பங்கு உண்டு என்று தான் சொல்ல வேண்டும் பல நூறு பாடலால் நம்மையும் பாடாகராக்கும் அளவிற்கு இதன் பாடல்கள் அமைந்து உள்ளன நமது பாடால்கள் தெலுங்கில் அதிகம் பாட படும் ஒன்றாகும் ..
வில்லாட்டனது ..
தேவாரட்டம் போல தான் இருக்கும்
செர்வையாட்டம் ...
இந்த கலை அழிந்து வரும் கலையில் ஒன்றாகும் அதிகம் நமது வரலாற்றுகளை நம்க்கு உணர்த்தும் பாடல்கள் ஆதிகமாக இடம் பெறும்...
இது போல தான் கம்பளத்தார்கள் ஆர்வம் மிக்கவர்களாக இருந்தபோது அதிகம் கலைகள் வளர்க்க பட்டன ...
இப்போதைய சூழ்நிலையில் அனைவரும் இளைய சமுதாயத்தில் யாரும் விரும்புவது கிடையாது தேவரட்டத்தை தவிற மற்ற கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை .. இதன் மூலமே நமது கலைகள் அழியும் நிலைக்கு தள்ள பட்டு உள்ளது படித்தவர்கள் யாரும் இது போன்ற கும்மி பாடல்கள், சேர்வையாட்டம் போன்றவற்றில் .. ஈடுபாடுடன் இருப்பது இல்லை நமது கும்மி பாடாலானது
ஏராளம் இருந்தாலும் அனைத்தும் கற்று கொள்ள விட்டாலும் அவர்க்கு ஏற்ப அளவு கற்று கொண்டு நம் கலைநயங்ளை அழியாமல் காப்பதில் நமக்கு முக்கிய பங்கு உள்ளது ...ஆனால் நமது இளைய சமுதாயம் எதற்கு எதற்கோ நேரங்களை வீனாக்கும் நாம் ஏன் நம் பாடல்களை கற்று கொள்ள முன் வரக்கூடாது ..இப்படியே போனால் இனி வரும் தலை முறைக்கு இந்த கலைகள் எண்ண வென்றே தெரியாமல் போய்விடலாம் முடிந்த மட்டும் நாமும் நம் கலைகளை காப்பதில் வளர்ப்பதில் நம் முயற்சிகளை செய்வதில் தவற விட கூடாது ... இது போன்ற கலைகளை நம் முன்னோர்கள் பொழுது போக்காக எண்ணாமல் பாரம்பரியத்தை மதித்து கட்டி காத்ததில் எப்பொழுதும் தவறியது கிடையாது ... இளைய சமுதாயம் இன்றைய சூழ் நிலையில் இது சாத்தியமற்றவை என்று நினைத்தால் நிச்சயமாக நம் கலைகள் அழிவிற்கு நாம் துணை போய் கொண்டு உள்ளோம் என்று தான் அர்த்தம் .....
முடிந்த மட்டும் நாமும் நம் அனைத்து கலைகளையும் கட்டி காக்க பாடுபடல் வேண்டும்.....
இப்பொழுதே இந்த கலைகளுக்கு வரவேற்ப்பை குறைத்து கொண்டால் இனி வரும் சந்ததியினர் எப்படி நமது கலைகளுக்கு முக்கியத்துவம் குடுப்பார்கள் என்று தெரியவில்லை ....
நமக்கு சுய மரியாதை எவ்வளவு முக்கியமோ அது போல கம்பளத்தார்களுக்கு
கலைகளும் முக்கியதத்துவம் வாய்ந்தவையாகும் இவை அனைத்தும் நமது வரலாற்றுகளை பறை சாற்றும் விததில் ஒன்றாகும்.
ஆகவே முடிந்த மட்டில் நாமும் நம் கலைகளை வளர்க்க முற்படுவோமே ...
நம்முள் ஒளிந்து இருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவோமே ...
கம்பளத்தார்கள் பாடல்கள் மூலம் அனைவரும் பாடகர்களாக உருவெடுக்கலாமே...
முயற்சி செய்யும் எக்காரியமும் வெற்றி இல்லாம்ல் போவது கிடையாது
நமக்கு தேவையானதை நாம் தான் உருவாக்கி கொள்ள வேண்டும்
அந்த கால சூழ்நிலைக்கு தான் தள்ள பட்டு உள்ளோம் இப்பொழுது ...
முடிந்த மட்டில் நாமும் முயற்சியினை மேற்கொள்வோம் ... கம்பளத்தானுக்கு அவனது மொழியும் கலையும் தானே அடையாளம்
அது தானே அவன் உயிர்மூச்சு ......
இனி வரும் காலங்களில் கம்பளத்தாரின் அனைத்து கலைகளும் வளர வேண்டும் .... என்பதே ... நம் பெரியோர்களின் விருப்பமாக உள்ளது ... நாமும் முயற்சி செய்வோம் கலைகளை காக்க ...

நன்றி :பொறியாளர் திருப்பதி தேவராஜன் ..-கோவை 

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

நேரம் கிடைக்கும் பொழுது பதிவிடுகிறேன் ..சொந்தமே

நான் வகிக்கும் சில பதவிகள்


1.கம்பள விருட்சம் அறக்கட்டளை -தலைவர்
2.உடுமலை வரலாற்று நடுவ அறக்கட்டளை -செயலாளர்
3 உடுமலை .கிளைநூலகம் -வாசகர் வட்ட துணை தலைவர்
4.கோவை பில்டர் அஸோஸியேஷன் -உறுப்பினர்
5.அனைத்து இந்திய மனித உரிமை கழகம் -உறுப்பினர்
6.உடுமலை ரயில்வே நுகர்வோர் சங்கம் - உறுப்பினர்
7.உடுமலை வியாபாரிகள் சங்கம் - சிறப்பு உறுப்பினர்
8.உடுமலை விளையாட்டு சங்கம் -உறுப்பினர்
9.உடுமலை கலி லியோ அறிவியல் கழகம் -சிறப்பு உறுப்பினர்

இதில் ஏதாவது பணி கள் இருந்துகொண்டே இருக்கும் ..முக்கியமாக எனது அலுவுலகப்பணி முடிந்து இதையெல்லாம் கவனித்து பங்கேற்று வருகிறேன் ..

இவர் “நிகழ்கால அதிசயம்-நாளைய சரித்திரம்” – சென்னை.திரு.செந்தில் அப்பையன்

திரு.செந்தில் அப்பையன்.B.Tech., அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகேயுள்ள ஜமீன் கோடாங்கிபட்டியைச் சேர்ந்த தெய்வத்திரு.இராம அமிர்த  பெத்து மற்றும் தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள பேரிலோவன்பட்டிச் சேர்ந்த திருமதி மஞ்சம்மாள் ஆகியோருக்கு மகனாக சென்னையில் பிறந்தார். இவருக்கு உடன்பிறந்த சகோதர் மற்றும் சகோதரி இருக்கிறார்கள். இவருக்கு திருமணமாகி திருமதி.அனுராதா என்ற மனைவியும் மகள்கள் அக்ஷரா, அம்ரிதா என்ற இரட்டையர்கள் உள்ளனர்.
திரு.செந்தில் அப்பையன் அவர்களின் தந்தையார் தெய்வத்திரு. இராம அமிர்த பெத்து அவர்கள் சென்னை, இந்தியன் வங்கியில் அலுவலராக சுமார் 26 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். தந்தையாரின் வழிகாட்டுதலில், குடும்பத்தலைவியான தாயாரின் நேரடிப்பார்வையிலும், அரவணைப்பிலும் வளர்ந்தவர்கள் இந்த சகோதர, சகோதரிகள். குழந்தைகள் அனைவரும் சென்னையில் பிறந்தவர்கள் என்றபோதிலும் மேட்டுக்குடித்தனமான போலி வாழ்க்கைக்கு ஆட்படுத்தாமல், நமது சமுதாய வாழ்க்கையையொட்டி, நடுத்தரக்குடும்பம் சந்திக்கும் ஏற்ற – இரக்கங்கள், சுக-துக்கங்களை எதிர்கொள்ளும் வகையிலும், சென்னை போன்ற பெருநகரங்களில் வாழ்வதற்கு கல்வி என்ற ஒன்றைத் தவிர மாற்று ஒன்று கிடையாது என்ற புரிதலைக் குழந்தைகு ஊட்டி வளர்த்தனர் பெற்றோர்கள். இதனால் கல்வியின் முக்கியத்துவத்தை மூவரும் அறிந்திருந்தனர். இது பின்னாட்களில் சமுதாயத்திற்கு எந்த அளவிற்கு உதவப்போகிறது என்பதை பெற்றோர்களும்,குழந்தைகளும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
நடுத்தரக்குடும்ப வாழ்வியலைக் கொண்டு வளர்ந்திருந்தாலும், சாதி, அதன் உட்பிரிவுகள், சமுதாய மக்களின் வாழ்க்கைமுறை பற்றிய எந்தச்சுவடுகளும் இவர்களின் 25 ஆண்டுகால வாழ்க்கையில் அறிந்தவர்கள் அல்ல. மூன்று குழந்தைகளும் பெற்றோர்களுக்கு நல்ல பிள்ளைகளாக, பாரே போற்றும் வண்ணம் மெத்தப் படித்து பெருமை சேர்த்தனர். அந்தவகையில் திரு. செந்தில் அப்பையனின் மூத்த சகோதரி திருமதி.அனுராதா அவர்கள் வேதியல் துறையில் M.Phil பட்டம் பெற்றவர் என்பதைத்தாண்டி, சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை வேதியல் பிரிவில் தங்கம் வென்ற “தங்க மங்கை” என்பது குறிப்பிடத்தக்கது. இளைய சகோதரர் திரு. சகாதேவன் அவர்கள் சென்னை, அண்ணா பல்கலைக் கழகத்தில் ஒருங்கிணைந்த கணினி அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று “ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாண்ட்” எனும் பன்னாட்டு வங்கியில் பணியாற்றி வருகிறார். படிப்பில் இவர்களுக்கு சற்றும் சளைத்தவரல்ல திரு .செந்தில் அப்பையன் அவர்கள், இவரும் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழக இரசாயன/வேதிப் (Chemical Engineering) பொறியியல் துறையில் (B.Tech) இளநிலைப் பட்டம் பெற்றவர், பன்னாட்டு நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.
சென்னை, அண்ணா பல்கலைக்கழக வாழ்க்கையில் வெறும் ஏட்டறிவை மட்டுமே வளர்த்துக் கொண்டவரல்ல திரு.செந்தில் அப்பையன் அவர்கள். தென்னாட்டு பெர்னாட்ஷா அன்று அழைக்கப்படும் பேரறிஞர் அண்ணாவின் பெயர் தாங்கிய கல்லூரி அல்லவா! அடித்தட்டு மக்கள் மீதான சுரண்டலை அகிலமெல்லாம் கொண்டு சென்றவரல்லவா? அதுவரை சாதியின் வாடையின்றி நகர வாழ்க்கையில் வளர்ந்தவர், தன் பிறப்பின் அடைப்படையில் தான் கல்லூரியில் இடம் பெற்றதை உணர்ந்தார். தனக்குப்பின்னால் ஒருசாதிய அடையாளம் இருப்பதையும், அது மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியாக (MBC) இருப்பதையும் தெரிந்துகொண்டார். அப்போதைக்கு மாணவராக கல்லூரியில் நுழைந்திருந்த நிலையில், படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தியவர், அதை மனதில் ஒரு ஓரத்தில் நிறுத்திக்கொண்டார். அதற்குமேல் சிந்திக்க வங்கியில் வாங்கியிருந்த கடன் வாய்ப்பு வழங்கவில்லை. ஆனாலும் திரு.செந்தில் அப்பையன்  புறச்சூழலையும், சக மனிதன் வாழ்வியலையும் உள்வாங்கியபடியே படிப்பைத் தொடர்ந்தார். கல்லூரி இறுதியாண்டு இன்னும் சிலபடிப்பிணைகளைத் தந்தது. கல்லூரி வாழ்வில் கடைசிப் பருவத்தில் INDUSTRIAL TRAINING என்பது மிக முக்கியமான ஒன்று. இதில் சகமாணவர்களின் செல்வாக்கை பறைசாற்றும் விதமாக இருக்கும். அவரவர் தங்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் பொருளாதார அல்லது சமுதாய செல்வாக்கிற்கேற்ப நகரத்திற்கு மிக அருகிலுள்ள ஏதாவது ஒரு தொழிற்சாலையில் நுழைந்து விடும் போக்கும், அது ஏதுமற்றவர்கள் பயிற்சிக்கு செல்லமுடியாமல் அள்ளாடுவதும் வருடம்தோறும் நிகழ்வதுண்டு. அப்படிப்பட்ட அனுபவம் தனக்கும் வாய்த்தபொழுது, ஏற்கனவே நான்காண்டுகளுக்கு முன் மனதின் ஓரத்தில் வைத்திருந்த நினைவுகள் முட்டித்தள்ளியது. அப்பொழுதுதான் தன் சமுதாயத்தில் அப்படியெல்லாம் ஆகப்பெரும் தொழிலதிபர்கள் யாருமில்லை என்பதை உணர்ந்துகொண்டார்.
தனது கல்லூரிப்படிப்பை முடித்த நிலையில் “கேம்பஸ் தேர்வில்” தேர்வானவர், உடனடியாக பணியில் அமர்ந்து விடாலும், தனது சமுதாயம் பற்றிய உறுத்தல் இல்லாமல் இல்லை. அந்த நினவுகளுடன் தன் வாழ்க்கையையும் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டியகட்டாயத்தில் இருந்தவர், சரியான வாய்ப்புகளுக்காக காத்துக்கொண்டிருந்தார். சமுதாயத்தினர் சென்னைக்கு மிகத்தொலைவில் இருப்பதால் அவர்களின் நேரடிதொடர்புகளை உடனடியாக ஏற்படுத்திக்கொள்ள முடியாவிட்டாலும், சென்னையில் பிழைப்புத்தேடி வந்து நிலைநிறுத்திக்கொண்டவர்கள் மூலமாக தன் சமுதாயம் பற்றிய தேடுதலைத் தொடங்கினார்.
இப்படியான சூழலில் நீண்டநாட்களாக நகர்ந்து கொண்டிருந்தவரின் தேடுதல் தன் சொந்த திருமணத்தின் மூலம் நிறைவேறியது திரு.செந்தில் அப்பையன் அவர்களுக்கு. பெருநகர வாழ்க்கைக்கு பழகியவருக்கு தெற்குச்சீமை கிராமத்துப்பெண் மணப்பெண்ணாக அமைந்ததின் மூலம், அடிக்கடி சென்று வரும் வாய்ப்பு இயல்பிலேயே அமைந்ததால் தன் வேர்களைத் தேடும் பணி முடிவுக்கு வந்தாலும், அதிர்ச்சியை ஏற்படுத்தாமல் இல்லை. தன்னுடைய ராஜகம்பள சமுதாயத்தில் பலருக்கு தரமான கல்வி என்பதே எட்டாக்கனியாக இருப்பதும், கல்வியின் முக்கியத்துவம் பற்றிய புரிதல் சமுதாய பெரியோர்களுக்கு இல்லாமல் இருப்பதையும் நிஜத்தில் பார்த்தார். அக்கிராம நடுத்தர குடும்பத்தின் வருமானம் என்பது நகர்ப்புற நடுத்தரக் குடும்ப வருமானத்தில் 10-இல் 1 பங்குக்கும் கீழாக இருப்பதைக் கண்கூடாக பார்த்தார். அண்ணா பல்கலைக்கழக மாணவரல்லவா, அதனால் அவர்களின் வருமானத்தை மட்டும் பார்க்கவில்லை, அவர்களின் வாழ்வியலையும் பார்த்தார். அவர்களின் பழக்க வழக்கங்கள் கட்டுப்பாடுகள், சட்ட திட்டங்கள், சம்பிரதாயங்கள் என அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டார். அதற்கு ஏற்றாற்போல் திட்டங்களை வகுத்து, தன்னுடைய சமுதாயப்பணியை தொடங்க ஆலோசித்திக் கொண்டிருந்தவருக்கு, இயற்கை ஒரு சகவயதுள்ள  சக சமுதாய இளைஞனை அறிமுகம் செய்து வைத்தது.
அந்த இளைஞன் உண்மையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தன்னுடன் படித்திருக்க வேண்டியவன், கிராமத்து சூழலில் பயின்று +2 தேர்வில் 89% மதிப்பெண்களைப் பெற்றிருந்தும் ரூபாய் 500 கொடுத்து விண்ணப்பப் படிவம் வாங்கமுடியாத குடும்ப பொருளாதாரத்தாலும், வழிகாட்டி உதவியிருக்க வேண்டிய சமுதாயக் குருடர்களாலும், சென்னை பலசரக்குக் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருப்பது திரு.செந்தில் அப்பையன் நெஞ்சில் முள்ளாய்த் தெய்த்தது. முடிந்து போனது விதியாகவே இருக்கட்டும் என்று முடிவுக்கு வந்தவர், விதிகளை மாற்றும் விதிகளைக் கண்டறியத் துணிந்தார். ஆம் தன் சமுதாய சேவைக்கான விதிகளை வகுத்துக்கொண்டார். இரண்டடி திருக்குறளைப்போல் இரண்டு யோசனைகளை முன்வைத்து செயல்படத்தீர்மானித்தார். அதன்படி இனி இந்த இராஜகம்பள சமுதாயத்தில் இப்படியொரு திறமைமிக்க இளைஞர்களை வெறும் பொருளாதாரத்தடையால் சமுதாயம் இழந்துவிடக்கூடாது என்பது,  மற்றொன்று, சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள், கட்டுப்பாடுகள் என்று கட்டுண்டு கிடக்கும் பிற்போக்குவாதிகளிடம் விவாதம் செய்து காலவிரயம் செய்யப்போவதில்லை என்ற இரு தீர்க்கமான முடிவுகளுடன் சமுதாயப்பணியில் அடியெடுத்து வைத்தார்.
தன்னுடைய 15 ஆண்டுகால பணி அனுபவம், திரு.செந்தில் அப்பையன் அவர்களுக்கு மற்ற சமுதாயத்தினரின் வாழ்வியலும், பழக்க வழக்கங்களும் மற்றொரு பாடத்தையும் கற்றுக்கொடுத்தது. அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சி, நம் சமுதாயத்தில் பெரிய அளவிலான ஏற்றத்தாழ்வுகளையும், முரண்பாடுகளையும் களையவதின் மூலமே சமுதாயம் வளர்ச்சியைக் காணமுடியும் என்று நம்பினார். அந்த வகையில் பிறசமுதாயத்தினர், அவரவர் பணிபுரியும் இடங்களானாலும், தொழில் செய்யும் இடங்களானாலும், கிடைக்கும் வாய்ப்புகளை தங்கள் சமுதாயத்தினருக்கே கிடைக்கச்செய்வதற்கு கடும் சிரத்தையெடுக்கின்றனர். இதற்கு நேர்மாறான மனநிலையில்  கம்பளத்தார்கள் இருப்பதைத் தாண்டி, தன் இனத்தானை உயர்த்திவிட வேண்டும் என்ற எண்ணமற்றவர்களாக படித்தவர் முதல் பாமரன் வரை நினைப்பது ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதை சமுதாயத்தில் காண்கிறார். நமது சமுதாய மக்களிடம் எங்கும், எவரிடத்திலும் நீக்கமற நிறந்திருக்கும் இந்த இழிகுணம் ஒவ்வொருவர் மனதிலிருந்தும் களையப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வருகிறார்.
தனது எண்ணங்களுக்கும், திட்டங்களுக்கும் வண்ணம் தீட்டி செயல்பட தீர்மானித்தவர், ஒத்த கருத்தும், ஒரே சிந்தனையும் கொண்டவர்களை ஒருங்கிணைத்து செயலில் இறங்கி தீவிரமாக பணியாற்றி வருகிறார். அதில் முதற்கட்டமாக, இராஜகம்பள மக்களை அடையாள படுத்தும் வகையில் “RAJAKAMBALA ELITE EDUCATIONAL TRUST-இராஜகம்பள மேன்மக்கள் கல்வி அறக்கட்டளை” (REG NO: 173/2018) என்ற பெயரில் ஒரு முறையான அறக்கட்டளையை 2018 பதிவு செய்து தங்களது பணியைத் துவக்கியுள்ளனர்.
அறக்கட்டளை ஏற்படுத்திய இந்த குறுகிய காலத்திற்குள் இரண்டு ஆண்டுகளில் சுமார் 50 ஏழை-எளிய மாணவ மாணவிகளுக்கு சுமார் 3 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகையாக வழங்கியுள்ளனர்.நமது இன மக்கள் பணிபுரியும் அலுவலங்கள் , கட்டுமான துறை, பொறியியல் நிறுவனங்கள் , உற்பத்தித்துறை , மென்பொருள் துறை என பல துறைகளில் உள்ளவர்கள் மூலம் சுமார் நாற்பது மேற்பட்ட இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பினைப் பெற்றுத்தந்துள்ளார்கள். மேலும், அரசாங்க போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ-மாணவியருக்கு உதவும் வகையில் குழு அமைத்தும் , பாடத்திட்டங்கள் மற்றும் பயிற்சி வினாக்கள் மூலம் உதவியும் வருகின்றனர்.
சென்னையிலிருந்து மட்டுமே தங்கள் சேவையைத் தொடராமல், மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாவட்ட வாரியாக, நமது மக்கள் வாழும் கிராமங்களை தேடி சென்று , சமுதாயத்திலுள்ள பல்துறை அறிஞர்கள் மூலம் சமுதாய விழிப்புணர்வு மற்றும் கல்வியின் முக்கியத்துவம் , சமுதாய பயணிக்க வேண்டிய பாதை பற்றியும் சிந்தனை விதைகளை தூவிக் கொண்டு வருகிறார்கள். இது போன்ற கூட்டங்கள் , தேனி மாவட்டத்தில் உள்ள அவாடிபட்டியிலும் , திண்டுக்கல் மாவட்டம் காளாஞ்சிப்பட்டியிலும் , தூத்துக்குடி மாவட்டம் ஜமீன் கோடாங்கிபட்டியிலும், கரூர் மாவட்டத்தில் கம்பிளி நாயக்கனூர் கிராமத்திலும் கடந்த ஒன்றரை வருடங்களில் நடத்தி முடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற உதவிகள் மிக நீண்டகாலத்தேவை என்பதை உணர்ந்துள்ளவர்கள் , அதற்கான நிதி ஆதாரத்தை திரட்டும் பொருட்டு, முறையான வங்கி கணக்கு துவங்கி, நன்கொடையாளர்களிடம் இருந்து பெறும் நிதியை வங்கி கணக்கில் மட்டுமே பெற்று வருகிறார்கள். நமது ராஜகம்பள மக்களுக்கு என பிரத்யோகமாக ஒரு கல்விக் கூடம் கட்ட வேண்டும் என்பது தான் இந்த அறக்கட்டளையின் எதிர்கால லட்சியக்கொண்டு செயல்பட்டு வருவதுடன், அதற்கு தேவையான நிதி மற்றும் ஆவண பணிகளையும் மெல்ல மெல்ல செய்து வருகிறது.
மேலும்,அறக்கட்டளையின் செயல்பாடுகள் என்ன என்ன என்பதை அவ்வப்போது FACEBOOK மற்றும் WHATSAPP செயலி மூலம் தமிழகம் முழுதும் உள்ள சமுதாய மக்களுக்கு தெரிவித்து ஆதரவை திரட்டி வருகிறது. புள்ளியில் தகவலாக நமது இனத்தில் இதுவரை எத்துனை மக்கள் அரசாங்க பணியிலும், ராணுவத்திலும் , காவல்துறையிலும் , பள்ளி ஆசிரியர்களாகவும்,  கல்லூரி பேராசிரியர்களாகவும் உள்ளனர் என்ற தகவலையும் திரட்டுவதுடன், அதை நமது இன மக்களுக்கு தெரியப்படுத்தி, கம்பளத்தார் என்று ஒருவர் எங்கு இருந்தாலும் அவர்மூலம் இந்த சமுதாயத்திற்கு என்ன நற்செயல்கள் செய்ய முடியும் என்பதை பரிசோதனை செய்வதையும் சமுதாய சேவைப்பணியில் ஒரு வழக்கமாகவும் வைத்து இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இதைத்தாண்டியும் தன்னால் இந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்யத்துடிக்கும் திரு.செந்தில் அப்பையன் அவர்கள் , அறக்கட்டளையின் செயல்பாடுகள் பற்றிய  தகவல் மற்றும் உதவி வேண்டுவோர் தொடர்பு கொள்ளும் வகையில் தன்னுடைய தொலைபேசி எண் : 9962010410  மற்றும் appaian84 @yahoo .co .in என்ற மு மின்னஞ்சல் முகவரியையும் சமுதாயத்தினர் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றார்.
திரு.செந்தில் அப்பையன் வாழ்க்கையிலிருந்து சமுதாயத்திற்கு ஏராளமான செய்தி கொட்டிக்கிடக்கிறதை காண்கிறோம். இதை சமுதாயத்துடன் ஒன்றிவாழ்பவர்கள் எளிதில் உள்வாங்கிக்கொள்ள முடியும். அதில் முதலாவதாக நாம் பார்ப்பது “வாழ்வியல் எதார்த்தம்”. முற்றிலும் மிகபின்தங்கிய கிராமப்புரத்திலிருந்து பெருநகரத்தில் குடியேறிய குடும்பம், நகர்ப்புறத்திலேயே பிறந்து வளர்ந்த குழந்தைகள் சிறப்பாக படித்தார்கள் என்பதைத்தாண்டி, குடும்ப்பண்பாட்டையும் பேணிக்காத்து பெற்றோர்களுக்கும், சமுதாயத்திற்கும் பெருமைசேர்த்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும். இன்று கிராமப்புறத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நன்றாக படிக்கவைப்பதில் காட்டும் அக்கரையை, வழிநடத்துவதில் காட்டுவதில்லை என்ற எதார்த்ததை உணரவேண்டும். இதனால் பெண்குழந்தைகளை தாரை வார்க்கும் பெற்றோர்கள் அவமானம் தாங்கள் துடிப்பதையும், சமூகம் பரிகாசிப்பதையும், சமுதாயமும் புலம்புவதும், அதிகம் காண்கிறோம். மற்றொன்று நகர்புறத்தில் வாழும் பெற்றோர்கள் கிராமப்புற இளைஞர்களுக்கு பெண்ணைத் திருமணம் செய்துவைக்கத் தயங்குவது. அவர்களுக்கெல்லாம் திரு.இராம அமிர்த பெத்து தம்பதியினர் வழிகாட்டியாக உள்ளனர் என்று சொன்னால் மிகையல்ல. சென்னை பல்கலைக் கழகத்தில் தங்க பட்டயம் வென்ற முதுகலைப் பட்டதாரி தங்க மகள்.அனுராதாவை, சென்னையிலிருந்து 500 கிமீ அப்பாலுள்ள ஒரு கிராமத்தில் இளங்கலைப்பட்டதாரி என்றபோதிலும்   குணத்திலும், பண்பிலும் உயர்ந்தவரான துரு.சேதுராமனுக்கு மணம்முடித்துள்ளது சமகாலம் வரை நடைபெறாத ஒன்றாக உள்ளது. அந்தவகையில் பெற்றோரின் விருப்பத்தை மதித்து, தன்னால் எங்கும் வாழமுடியும் என நிரூபித்து செயல்பட்ட திருமதி.அனுராத சேதுராமன் போற்றுதலுக்குறியவர்.
மற்றொரு முக்கியமான விசயத்தையும் சமுதாயம் கவனித்தாக வேண்டும். அதாவது, படித்து பட்டம் பெற்று வேலையில் இருப்பவர்கள்,மேல்தட்டு மக்கள், நர்புறத்திற்கு குடிபெயர்ந்தவர்களுக்கு, சமுதாய ஈடுபாடு முற்றிலுமாக அறுந்து போவதைக் காணமுடிகிறது. சமுதாயத்தின் மீதான அவர்களின் பார்வையே, தங்களுக்கு குழந்தைகளுக்கு திருமணம் செய்ய வேண்டி வரும் சூழலில் தற்காலிகமாக வந்து செல்வதை இன்று கண்கூடாக பார்த்து வருகிறோம். படித்த மாப்பிள்ளை, அரசாங்க மாப்பிள்ளை, நல்லவேலையில் இருக்கின்ற மாப்பிளை என வகைவகையாக கோரிக்கை வைப்பவர்கள், அவர்களை உருவாக்க ஒரு சிறுதுறும்பைக்கூட கிள்ளிப்போட்டவர்களல்ல என்பது அவரவர் மனசாட்சிக்கே தெரியும். இப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தில், நகர்ப்புறத்தில் பிறந்து, வளர்ந்து, அண்ணா பலகலைக்கழகத்தில்  பட்டம் பெற்று, பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுறியும் இளைஞன் தன் சமுதாய நிலைகண்டு, அவர்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்கத் துணிகிறார் என்றால் அவரை என்ன சொல்லிப்போற்றுவது. சுயநலவாதிகள் தங்கள் அந்திமக்காலத்திற்குள்ளாகவே அஸ்தமணிதுப்போவதும், திரு,செந்தில் அப்பையன் போன்றவர்களில் புகழ் காலம்கடந்து நிலைத்து நிற்பதும் இந்த தன்னலமற்ற பரந்த மனப்பான்மையால் தானோ? இந்தப் பெருமை, புகழ் அனைத்தையும் திரு.செந்தில் அப்பையன் பெற்றோர்களின் பாதங்களில் சமர்ப்பிக்கின்றது சமுதாயம்.
தோண்டத் தோண்ட அற்புதங்களாலும், அதிசியங்களாலும் நிறைந்துள்ளது திரு.செந்தில் அப்பையன் வாழ்க்கை. ஆம், மெத்தப்படித்த இந்த சகோதர சகோதரிகள் கூட்டுக்குடும்பமாக வாழ்கின்றார்கள். இது  இன்று கிராமத்தில் கூட செத்துப்போன பழக்கமன்றோ! சென்னை போன்ற பெருநகரத்தில் பிறந்து வழந்தவர்களுக்கு எப்படி சாத்தியமானது இந்த வாழ்க்கை. எத்தனை பாடங்களும், படிப்பினைகளையும் இந்த சமுதாயத்திற்கு கொடுக்கிறது இந்த சாதாரண ஒற்றைக் குடும்பம். எதைப்பாராட்டுவது? யாரைப்பாராட்டுவது? பெற்றோர்களையா? பிள்ளைகளையா? மருமகள்களையா? மருமகனையா? குடும்பம் ஒரு கோயில் என்பதற்கு இதைவிட என்ன பெருமை வேண்டும். திரு.செந்தில் அப்பையன் அவர்களே, நீங்கள் வளர வளர சமுதாயம் வளரும்… நீங்கள் வாழ வாழ சமுதாயம் வாழும்… என்பதில் எந்த சந்தேகமுமில்லை. உங்களுடன் சமகாலத்தில் பயணிப்பதில் பெருமை கொள்கிறோம். நீங்கள் நீடூடி வாழ சக்கதேவி அருள்புரிவாளாக.

திங்கள், 20 ஏப்ரல், 2020


கேள்வி :....எதன் அடிப்படையில் குறைந்த பட்ச மாத இருப்பு தொகை (AMB) என்பதை வங்கிகள் நிர்ணயம் செய்கின்றன? இது பற்றி ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் என்ன?

பதில் :.....

கொரோனா வருடம் | 20.04.2020 | வினா விடை அமர்வு |

2017-18 ஆம் ஆண்டில், அனைத்து பொதுத்துறை வங்கிகளும் சில முக்கிய தனியார் துறை வங்கிகளும் சேர்ந்து, குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக (minimum balance requirement) தங்கள் வாடிக்கையாளர்களிடம் கிட்டத்தட்ட ரூ 5,000 கோடியை அபராதமாக வசூலித்துள்ளன!

ஒரு விஷயம்!

வாடிக்கையாளர் வைத்திருக்க வேண்டிய, குறைந்த பட்ச மாத இருப்புத்தொகை எவ்வளவு (Average Monthly Balance - AMB),
அதை பராமரிக்காத போது செலுத்த வேண்டிய அபராதத்தொகை (Penal Charges) எவ்வளவு - இந்த இரண்டையும் நிர்ணயம் பண்ணுவது, ரிசர்வ் வங்கி அல்ல!
இது பற்றி ரிசர்வ் வங்கி சொல்லுவதென்ன?

சேவைக் கட்டணங்களையும், அபராதங்களையும் நிர்ணயிக்கும் முடிவை அந்தந்த வங்கிகளே தீர்மானித்து கொள்ளலாம்.
வங்கிகள் தங்கள் இயக்குநர்கள் குழுவின் முன் ஒப்புதலுடன் கட்டணங்களை நிர்ணயம் செய்ய வேண்டும்.
நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி செய்வது உங்களுக்கு பிடிக்க வில்லையென்றால் கணக்கை முடிக்க வேண்டியது தான்!

ரிசர்வ் வங்கி, 2015-ல் வங்கி சேவைகளுக்கு என்று ஒரு மாஸ்டர் சுற்றறிக்கை (Master Circular on Customer Service in Banks) வெளியிட்டிருக்கிறது. இந்த சுற்றறிக்கையில் (1) சேவைக் கட்டணங்களை பற்றி சொல்லியிருக்கிறது

தவிர மற்றொரு சுற்றறிக்கையில் (2) குறைந்தபட்ச இருப்புத் தொகையை நீங்கள் பராமரிக்கா விட்டால், வங்கி அபராதம் வசூலிப்பதற்கான வழிகாட்டுதல்களை கீழ் கண்டவாறு கொடுத்திருக்கிறது:

குறைந்த பட்ச இருப்புத் தொகையை வைத்துக்கொள்ள தவறிவிட்டால் வங்கி என்ன செய்ய வேண்டும்?
வங்கி எஸ்எம்எஸ் / மின்னஞ்சல் / கடிதம் என்று ஏதாவது வழியில் வாடிக்கையாளரை நினைவு படுத்த வேண்டும்.
அதாவது இந்த நினைவூட்டல் கடிதம் கண்டு ஒரு மாதத்துக்குள், வாடிக்கையாளர் இந்த ஒப்பந்த குறைபாட்டை சரி செய்ய விட்டால், அபராதக் கட்டணங்கள் வசூலிக்கப் படும்.
ஒரு வேளை அந்த ஒரு மாத காலத்துக்குள் வாடிக்கையாளர் வங்கியின் மனக்குறையை சரி செய்து விட்டால்?
வங்கி அபராதம் வசூலிக்க கூடாது.
இயக்குநர்கள் குழுதான் கட்டணங்களை நிர்ணயம் செய்ய ஒப்புதல் அளிக்க வேண்டும்.
ஒரு மாதத்தில் எந்த அளவுக்கு AMB பற்றாக்குறையோ, அந்த அளவுக்குத்தான் அபராதம் வசூலிக்க வேண்டும்.
வேண்டுமானால் எதாவது ஒரு ஸ்லாப் முறை அமைத்துக்கொண்டு அது படி வேண்டுமானால் வசூலிக்கலாம்.
முக்கியமான ஒன்று. இப்படி அபராதம் பிடிக்கிறேன் பேர்வழி என்று உங்கள் கணக்கை எதிர்மறை இருப்புக்கு (negative balance) தள்ளி விட கூடாது.
அபராதக் கட்டணங்கள் நியாயமானதாக இருக்க வேண்டும்.
சமீபத்தில் இந்தியாவின் பெரிய வங்கி ஒன்று பெரும் பணமுதலைகளுக்கு கொடுத்த கடன்கள் முங்கி போய்விட்டது. அதனால் வந்த நஷடத்தை சரி கட்ட , அந்த வங்கி இந்த அபராத கட்டணத்தை அதிகமாக வசூலித்து தப்பித்து கொண்டது. அதன் இயக்குனர் குழுவில் இருப்பவர்கள் அனைவரும் அரசு பதவியில் உள்ளவர்கள் !

ரிசர்வ் வங்கி, நடப்பு கணக்குக்கென்று தனியாக எதுவும் சொல்லவில்லை. ஆனால் அனைவருக்கும் ஒரு கணக்கு என்ற திட்டத்தின் கீழ் "அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு" (Basic Savings Bank Deposit Account Scheme) என்று ஒரு வகை சேமிப்பு கணக்கை எல்லா வங்கிகளும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று சொல்லுகிறது.

அந்த கணக்கு தொடங்குபவர்களுக்கு, AMB கட்டணம், ATM கட்டணம் உட்பட, எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது.
இந்த கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தேவை (minimum balance requirement) என்று எதையும் வலியுறுத்த கூடாது
ஆனால், அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு' வைத்திருப்பவர்கள், அந்த வங்கியில் வேறு எந்த வகை சேமிப்பு கணக்கையும் தொடங்க முடியாது.
தவிர செயலற்ற கணக்கில் (inoperative accounts) குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்காததற்காக (minimum balance requirement) அபராதம் வசூலிக்க வங்கிகளுக்கு அனுமதி இல்லையென்று தனி சுற்றறிக்கையில் (3) சொல்லியுள்ளது.

உங்கள் வங்கியில் வசூலிப்பது பகல் கொள்ளை என்று நீங்கள் நினைத்தால், அது தவறு.

இப்போதெல்லாம் வங்கிகளின் டேட்டா சென்டர்களில் (Data Centers) மற்ற வேலைகளையெல்லாம் முடித்து விட்டு, நடு இரவுக்கு பின்னர்தான் இந்த மாதிரி வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறார்கள்..

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020


வாசிப்பு மனநிலை!

- எஸ். இராமகிருஷ்ணன்

ஒருவரை மலையேற வைப்பது கூட எளிதானதுதான். அதை விடவும் கடினமானது புத்தகம் படிக்க வைப்பது. மக்கள் ஏன் புத்தகங்களை வெறுக் கிறார்கள் எனப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எதற்குப் படிக்க வேண் டும்? புத்தகம் படித்து என்ன ஆகப் போகிறது? வெறும் காலவிரயம்தான் என படித்த தலைமுறைகூட ஆழமாக நம்புகிறது என்பதுதான் காலக் கொடுமை!

எனது நண்பர் உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு, தானே 100 புத்தகங்களை வாங்கிக் கொண்டு வீடு வீடாகப் போய் இலவசமாக புத்தகம் கொடுத்து படிக்க வைக்க முயன்றார்.

அவருக்கு என்ன நடந்தது தெரியுமா?

அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீட்டுக்குப் போய் அவர் அழைப்பு மணியை அழுத்தியிருக்கிறார். கதவை திறந்த ஆள், ‘யார் என்ன..’ என எதையுமே கவனிக்காமல் ‘வேண்டாம் போ’ எனச் சொல்லி கதவை மூடிவிட் டார். அடுத்த வீட்டில், ‘இதை வெச்சிட்டு என்ன செய்றது? யாரும் படிக்க மாட்டாங்க; வேற ஏதாவது கிஃப்ட் இருந்தா குடுங்க…’ என ஒரு பெண் கேட்டிருக்கிறார்.

இன்னொருவர் வீட்டில், ‘புக்ஸ் எல்லாம் வேஸ்ட் சார். நாங்க நியூஸ் பேப்பர் கூட வாங்குறதில்லை…’ எனச் சொல்லி துரத்தியிருக்கிறார்கள். இப்படியாக 5 மணி நேரம் பல்வேறு குடியிருப்புகளில் ஏறி, இறங்கியும் அவரால் 10 புத்தகங்களைக் கூட இலவசமாக கொடுக்க முடியவில்லை.

ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து வெளியே வரும்போது அதன் காவலாளி அவரை அழைத்து, தனது பேத்தி படிக்க ஒரு புத்தகம் வேண்டும் எனக் கேட்டு வாங்கியிருக்கிறார். அவர் ஒருவரைத் தவிர வேறு யாரும் புத்தகத்தைக் கேட்டு வாங்கவே இல்லை.

நண்பர் விரக்தியோடு சொன்னார்: ‘‘அப்பா அம்மா புக்ஸ் படிச்சாதான் பிள்ளைகள் படிப்பாங்கன்னு நினைச் சேன். பெரியவங்களைப் படிக்க வைக் கிறது ரொம்ப கஷ்டம். எதையும் படிச்சிரக்கூடாதுன்னு பிடிவாதமா இருக்காங்க. அப்படியே பிள்ளை களையும் வளர்க்குறாங்க, இப்படி இருந்தா இந்த நாடு உருப்படவே உருப்படாது!”

இதுதான் நிதர்சனம். புத்தகம் படிக்க வைக்க நாடு தழுவிய ஓர் இயக்கம் இன்று அவசியமான தேவையாக உள்ளது.

மழலையர் பள்ளி ஒன்றின் ஆண்டு விழாவுக்குப் போயிருந்தேன். நிறையப் பெற்றோர்கள் வந்திருந்தார்கள். அதில் ஒருவர் கூட எந்த எழுத்தாளரையும் பற்றி அறிந்திருக்கவில்லை. எதைப் படிப்பது? எப்படி புத்தகங்களை தேர்வு செய்வது என்பதைப் பற்றியதாக அன்றைய கலந்துரையாடல் நடை பெற்றது.

அந்த நிகழ்வில் ‘மார்டிமர் ஜே அட்லர்’ எழுதிய ’ஹவ் டு ரீட் எ புக்’ (How to Read a Book) என்ற ஆங்கிலப் புத்தகம் குறித்துப் பேசினேன். 1940-ம் ஆண்டு வெளியான புத்தகம் அது.

‘புத்தகம் படிப்பது எப்படி?’ என்பது குறித்து விரிவாக எழுதப்பட்டது அந்தப் புத்தகம். நாம் ஏன் படிக்க வேண்டும்? எப்படி படிக்க வேண்டும்? புரிந்துகொள்வதில் உள்ள சிரமங்கள் எவை? அதை எப்படி அகற்ற முடியும் என்பதற்கான கையேடு போல இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.

மேலோட்டமாக வாசிப்பது, ஆழ்ந்து வாசிப்பது என இரண்டுவிதமான வாசிப்பு முறைகள் உள்ளன. பொதுவாக செய்தி களை, தகவல்களை மேலோட்டமாக வாசிக்கிறோம். தீவிரமான கட்டுரைகள், கவிதைகள், நாவல்கள், அறிவியல் சிந்தனைகளை ஆழ்ந்து வாசிக்கிறோம்.

பொழுது போவதற்காக வாசிப் பது ஒருவிதம். அறிவையும், அனுப வத்தையும், ஆளுமையையும் வளர்த் துக்கொள்ள வாசிப்பது இன்னொரு விதம். வாசிப்பின் குறிக்கோள்தான் எதை வாசிக்கிறோம் என்பதை தீர்மானிக்கிறது.

எந்த ஒன்றையும் கற்றுக்கொள் வதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று, ஆசான் வழியாக கற்றுக்கொள்வது. மற்றது, நாமாக கற்றுக் கொள்வது. இந்த இரண் டும் சிலவேளைகளில் இணைந்து செயல்பட வேண்டியிருக்கும். நாமாக ஒன்றைக் கற்றுக்கொள்வதுதான் வாசிப்பின் முதல் செயல். புத்தகம் ஓர் அரூப ஆசிரியன். அதில், குரல் மட்டுமே ஒலிக்கும்; ஆளைக் காண முடியாது.

ஆரம்ப நிலை வாசிப்பு, தேர்ந்த வாசிப்பு, பகுத்தாயும் வாசிப்பு, முழுமையான ஆழ்ந்த வாசிப்பு என வாசிப்பில் நான்கு நிலைகள் இருக்கின்றன.

அறிவியல் புத்தகங்களை எப்படி படிப்பது? தத்துவப் புத்தகங்களைப் பயில்வது எப்படி? புனைக் கதைகள், நாவல்கள் மட்டும் ஏன் விரும்பிப் படிக்கப்படுகின்றன? கவிதைகள் ஏன் எளிதில் புரிவதில்லை? வரலாற்று நூல்களை வாசிக்க ஏன் சிரமமாக உள்ளது… என்பதை குறித்து, தனித் தனி கட்டுரைகளாக விரிவாக எழுதி யிருக்கிறார் மார்டிமர்.

எந்தப் புத்தகம் குறித்தும் முன்முடிவு கள் தேவையற்றவை. புத்தகத்தைத் தேர்வு செய்வதற்கு அது குறித்த அறிமுகமும் பரிந்துரைகளும் மிகவும் அவசியம். ஆரம்ப நிலை வாசகர்கள் 50 பக்கங்களுக்குள் உள்ள புத்தகம் ஒன்றை தேர்வு செய்து படிக்கப் பழகி னால், அதை முழுதும் படித்து முடித்து விடுவார்கள். அதை விடுத்து 1,000 பக்க புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தால், அதை முடிக்க முடியாததோடு புத்தகம் படிப்பதன் மேலேயே வெறுப்பு ஏற்பட்டுவிடும்.

ஜப்பானியர்கள் எதையும் படக் கதை வடிவில் படிக்கிறார்கள். இதனால் படிப்பது எளிமையாவதோடு வேகமாக வும் படிக்க முடிகிறது. கோட்பாடுகள் சார்ந்தப் புத்தகங்களைப் படிக்கும் முன்பு கோட்பாடுகள் யாரால், எப்படி, எதற்காக உருவாக்கப்பட்டன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். வரலாற்று நூலை வாசிக்கும் முன்பாக வரைபடங் களைத் துணைக்குக் கொள்ள வேண்டும். அறிவியல் சிந்தனை களைப் புரிந்துகொள்ள ஆதார விஷயங்கள் தெரிந்திருக்க வேண் டும். கவிதையை ரசிக்க கற்பனை வேண்டும்... என படிப்பதற்கு நம்மை எவ்வாறு தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும் மார்டிமர் வலியுறுத்துகிறார்

ஒரு புத்தகத்தை எப்படி படித்தால் நினைவில் நிற்கும்? படித்த விஷயங் களை எப்படி குறிப்பு எடுத்து வைத்துக் கொள்வது என்பதற்கும் உதவிக் குறிப்புகள் கொடுக்கிறார் இவர்.

மகாபாரதம், ராமாயணம், ஒடிஸி போன்ற இதிகாசங்களை வாசிப்பது என்பது ஒரு தனி அனுபவம். ஒரு நாவல் அல்லது கவிதைப் புத்தகம் வாசிப்பதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட மகிழ்ச்சியும் பல்வேறுபட்ட உணர்வெழுச்சிகளும் தரக் கூடியது.

இதிகாசங்களை வாசிப்பது எளிதான தில்லை. ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்டது. ஆகவே பொறுமையும், ஆழ்ந்த வாசிப்பும் மிக அவசியம். இதி காசத்தின் கட்டமைப்பு மிக முக்கிய மானது. அதன் ஒவ்வொரு பகுதியும் தன்னளவில் முழுமையானது. அதே நேரம் ஒன்று சேரும்போது விரிந்த அனு பவம் தரக் கூடியது. ஆகவே, அந்தக் கட்டமைப்பின் ஆதாரப் புள்ளியை அறிந்துகொள்வது அவசியமானது.

இதிகாசம் ஒரு பிரம்மாண்டமான பேராலயம் போன்ற தோற்றம் கொண் டது. அதற்கு நிறைய உள்அடுக்குகளும், குறியீட்டு தளங்களும், உபகதைகளும், தத்துவ விசாரங்களும் இருக்கின்றன. அதைப் புரிந்துகொண்டு படிக்கும்போது தான் முழுமையான வாசிப்பு சாத்தியப்படும்

வாரம் ஒரு புத்தகம். மாதம் நான்கு புத்தகம்… என்ற இலக்கோடு தொடங் குங்கள். நிச்சயம் அது வளர்ச்சியடையும் என்கிறார் மார்டிமர். எனது சிபாரிசும் அதுவே!

- எஸ். இராமகிருஷ்ணன்,

எழுத்தாளர்
❣️ பரம்பரை என்றால் என்ன?❣️

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

பரம்பரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
உலக பரம்பரை தினம் ஏப்ரல் 18 அன்று கொண்டாடி வருகிறோம்.

அதைப் பற்றி சுருக்கமாக:

நாம் - முதல் தலைமுறை,
தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை,
 பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை,
 பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை,
 ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை,
 சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை,
 பரன் + பரை - ஏழாம் தலைமுறை,
பரன் + பரை - பரம்பரை.

ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால், ஏழு தலைமுறை - 480 வருடங்கள்.
 ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள் (கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்) ஆக,
 பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்கு தலைமுறையாக என்று பொருள் வரும்.

மரபு முறைமையும், உறவுமுறையும்:
மேலே கண்டவாறு பல்வேறு விதமாகவும், பல மட்டங்களிலும் உறவுகள் அமைந்தாலும், இத்தகைய உறவுகளின் முக்கியத்துவம் வேறு பல அடிப்படைகளையும் சார்ந்துள்ளது. வெவ்வேறு சமுதாயங்களில் நிலவும் பண்பாட்டுச் சூழ்நிலைகளுக்கு ஏற்பக் குறிப்பிட்ட சில உறவினருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மரபு முறைமைகள் வழக்கத்தில் உள்ளன.

 இம்மரபு முறைகள் பொதுவாக நான்கு வகைகளாக வகுக்கப்படுகின்றன.

* இருவழி மரபு முறைமை (Bilateral Descent System):- இருவழி மரபைப் பின்பற்றும் சமுதாயங்களில், தாய்வழியையும், தந்தைவழியையும் சேர்ந்த உறவினர் அனைவருக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது.



* ஒருவழி மரபு முறைமை (Unilineal Descent System):- ஒருவழி மரபுச் சமுதாயங்கள் தாய்வழியில் அல்லது தந்தைவழியில் மட்டுமே தங்களை இணைத்து இனங்காண்கிறார்கள். தாய்வழி மரபுச் சமுதாயங்கள் தாய்வழி உறவினருக்கும், தந்தைவழிச் சமுதாயங்கள் தந்தைவழி உறவினருக்கும் கூடிய சிறப்பை அளிக்கின்றன.

* ஈரியல் மரபு முறைமை (Ambilineal Descent System):- ஈரியல் மரபுச் சமுதாயங்களின் உறுப்பினர்கள் இரண்டில் ஒரு வழியில் தங்களை இனங்கண்டுகொள்வர்.

* இணை மரபு முறைமை (Parallel Descent System):- இணை மரபு முறையைக் கைக்கொள்ளும் சமுதாயத்தவர்களில் ஆண்கள் தங்கள் குடிவழித் தொடர்புகளைத் தந்தைவழியிலும், பெண்கள் தாய்வழியிலும் இனங்காண்பர்.

வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை. நாம் உலக வரலாறு தெரிந்து கொள்வதும் முக்கியம்.

 அதேபோல் நம்முடைய வரலாறும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். நம் முன்னோர்கள் அதாவது தமிழர்கள் உலகம் எங்கும் நிறைந்து காணப்படுகிறார்கள். எப்படி? அதன் பின் நடந்தது என்ன? என்று நாம் வரலாற்றை புரட்டிப் பார்க்க வேண்டும்.❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
கேள்வி :....வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் வங்கி சேவைகளுக்கு பாதுகாப்பான கடவுச் சொற்களை (passwords) தேர்ந்தெடுப்பது எப்படி?


என் பதில் :...

1985. வங்கித் துறையில் கணினிகள் அறிமுகமாக ஆரம்பித்த புதிது.

நண்பன் அருண் , அவனுக்கு புதிதாக தரப்பட்ட கணினிக்கு வைத்துக் கொண்ட கடவுச் சொல் (Password) 1234.

நிறுவனம், தகவல் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும், அனைவரும் கடவுச்சொல்லின் நீளத்தை ஆறு இலக்கமாக மாற்ற வேண்டும் என்று ஆணையிட்ட போது அருண்  நீட்டி வைத்தது 123456

கவலை கொள்ளற்க. பின்னாட்களில் நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். அருண்  இப்போது ஒரு பெரிய கணினி நிபுணர். ப்ரொஜெக்ட்களுக்காக, பல நாடுகளுக்கு போய் வந்து கொண்டிருக்கிறார்.

இன்று மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பெருமளவில் முன்னெடுக்கும் டிஜிட்டல் வர்த்தக முன்னேறத்தின் பெரிய சவாலே சைபர் பாதுகாப்பு தான். ரிசர்வ் வங்கியும், அரசும், மற்ற வங்கிகளும் பாதுகாப்பை அதிகரிப்பது எப்படி என்று மூளையை கசக்கிக் கொண்டிருக்கும் போது, நீங்கள் கடவுச்சொல் விஷயத்தில் அலட்சியமாக இருந்து விட்டு, ஆபத்தை விலைக்கு வாங்க வேண்டாம்.

கடவுச் சொல்லில் (Password) கவனம் தேவை. இணைய சேவைகளுக்கு நீங்கள் தெரிவு செய்யும் கடவு சொற்கள், உங்களுக்கும், உங்கள் வங்கி பணத்திற்கும் நடுவில் உள்ள ஒரு தாழ்ப்பாள்.

இது ஒரு சிரமமான விஷயம். இப்போதெல்லாம் அதிகமாக இணைய வழி வங்கிசேவைகளை பயன் படுத்துகிறோம். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே கடவுச்சொற்களை பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

வங்கிசேவைகளில்,வங்கியின் கிளைக்கு வெளியே வாடிக்கையாளர்கள் அதிகம் பயன்படுத்துவது :

ஏடிஎம் - தானியங்கி பணம் கொடுக்கும் இயந்திரங்கள்.

இணைய வங்கி சேவை (Internet Banking)

மொபைல் வங்கி சேவை (Mobile Banking)

ஒருங்கிணைந்த பணபரிமாற்ற பயன்பாட்டு சேவை (UPI-Unified Payments Interface - BHIM, Google Pay, PhonePe, Paytm etc)

இன்னும் சில இருக்கின்றன. அதிகம் பயன்
பாட்டில் இருப்பது இவைதான்.


சில கடவுச்சொல் நடைமுறை தவறுகள்:

கடவுச்சொல்லை மிகவும் குறுகியதாகவும் எளிமையாகவும் வைப்பது தவறு.
தவறான உதாரணம்: பைக் நம்பர், 123456, ராகுல் !
வலிமையான கடவுச் சொல் வேண்டும்.

எல்லா கணக்குகளுக்கும் ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்துவது
சைபர் குற்றவாளிகள் பெரும்பாலும் கடவுச்சொற்களை, அதற்கான சந்தையில் (Darkweb) அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள்.

நீங்கள் உலவும் பல தளங்களில் அவர்கள் அவற்றை முயற்சி செய்வார்கள். கொடுத்தவிலைக்கு அதிகபட்ச பயன்பாடு என்பது தான் தொழில் தர்மம்!
கடவுச்சொற்களை பாதுகாப்பற்ற இடத்தில் வைத்தல்
கடவுச் சொற்களை உங்கள் தொலைபேசியிலோ, மின்னஞ்சலிலோ, நோட்புக்கிலோ சேமிப்பது ஆபத்து.
கடவுச் சொற்களைப் பகிர்வது
ரகசியத்தன்மைதான் (Confidentiality) கடவுச்சொற்களின் கடவுள்.
யாரும் ‘போட்டு வாங்கினால்’ (Social Engineering) உளறி விடக்கூடாது

எப்படி ‘வலுவான’ கடவுச்சொல்லை தேர்ந்தெடுப்பது

நீண்ட கடவுச் சொற்கள் மிகவும் பாதுகாப்பானவை

நமது சைபர் ‘நண்பர்கள்’, ஒரு ஏழு எழுத்து கடவுச் சொல்லை சில மில்லி விநாடிகளில் உடைத்தெறிகிறார்கள். வலுவான கடவுச் சொல் குறைந்தபட்சம் 10 எழுத்துக்கள் நீளமாக இருக்க வேண்டும்.

21 எழுத்துக்களைக் கொண்ட கடவுச் சொற்களை தற்போதைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கிராக் செய்வது கடினம்.
நீண்ட கடவுச்சொல் வலுவானதுதான். ஆனால் மறந்துவிட்டால்?
அருண்  மாதிரி என்னிடம் சொல்லி வைக்கலாம். அதைவிட நல்ல வழி, "வத்தல குண்டு நேற்று வரையும் வெற்றிலை குன்று" போன்ற எளிய, ஆனால் மற்றவர்களுக்கு புரியாத சொற்களை கொண்டு (இடைவெளியில்லாமல்) கடவுச்சொல் உருவாக்கலாம்.
மேலே கொடுத்த உதாரணத்தின் எழுத்துக்களை எண்ணிப் பார்த்தவர்கள் பின்னுட்டத்தில் அணுகவும்!

“நான் சின்னங்களை பயன் படுத்துகிறேன் (PWIS!$%?&*") எனவே என் கடவு சொல் வலிமையானது.”

சின்னங்களை, RK நகர் தொகுதி மக்களே பொருட்படுத்த வில்லை. ஹேக்கர்களுக்கும் பணம்தான் குறி. உங்கள் கடவுச்சொல்லில் உள்ள சிறப்பு சின்னங்கள், உட்பொருளையெல்லாம் பொருட்படுத்தாமல், அதை 'கிராக்' செய்து விடுவார்கள்.

இது தவறான நம்பிக்கை. சிறப்பு எழுத்துக்களைப் பயன்படுத்துவது பெரிய அளவில் ஒன்றும் கடவுச்சொல்லின் வலிமையை அதிகரிக்காது. அடிப்படையில் ஒரு நீண்ட சொற்றொடர் சிறந்தது.

எனக்கு அதிக எண்ணிக்கையில் ஆன்லைன் கணக்குகள் இருக்கிறது. என் செய்வது?

வெகு விரைவில் ஒரு சராசரி இணைய பயனருக்கு 100 ஆன்லைன் கணக்குகள் இருக்கும் (வங்கி சேவைகள் உடபட) என்று மதிப்பிடுகிறார்கள்.
எனவே ஒவ்வொரு கணக்கிற்கும் தனித்தனியே, நீண்ட கடவுச் சொற்களை உருவாக்கி, அவற்றை நினைவில் கொள்வது கிட்டத்தட்ட சாத்தியமில்லை.
ஒரு கடவுச் சொல் நிர்வாகியைப் (password manager) பயன்படுத்துவது, இந்த மாதிரி இணைய சித்தர்களுக்கு நல்லது
இந்த பாஸ்வர்ட் மேனேஜருக்கு ஒரு பத்திரமான குரு (Master) கடவுச்சொல் வைக்க வேண்டும். 1234 என்று வைக்க வேண்டாம்.

மற்றும் சில எச்சரிக்கைகள்

உங்கள் வங்கியின் எச்சரிக்கை SMS களை அலட்சியப் படுத்த வேண்டாம்.
வங்கிகளிடம் இருந்து வரும் போன் அழைப்புகளை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளுங்கள் அல்லது நிராகரித்து விடுங்கள். (நான் எஸ்டேட் பண்க்ளே இருந்துட்டு பேசுறேன் சார், எஸ்டேட் பண்க்!)
எந்த ஒரு வங்கி சேவையை பயன்படுத்தினாலும், அந்த வேலை முடிந்தவுடன் லாக் ஆப் செய்து, முற்றிலும் வெளியே வந்து விடுங்கள்.
இமெயில், எஸ்எம்எஸ் மூலமாக, உங்களுடைய வங்கிக் கணக்கை பயன்படுத்தாதீர்கள்.

உங்கள் கைபேசியை வேறு யாரிடமாவது தரப்போகிறீர்களா?அல்லது பழுது நீக்கத் தரப்போகிறீர்களா? முதலில் ப்ரவுசிங் ஹிஸ்டரி, முக்கிய ஆப்களை அழித்து விடுங்கள். (இதை சொல்லாமலே செய்வோம் என்கிறீர்களா)
இணையத்தில் தேடி, எந்த ஒரு போன் எண்ணையும் தெரிவு செய்து யாரையும் தொடர்பு கொள்ள வேண்டாம். முக்கியமாக (Help Desk) உதவி எண்கள்.
ஏ.டி.எம், கிரெட், டெபிட் கார்டு எண்கள், பின் நம்பர், CVV எண்கள் ஆகியவற்றை ஒருநாளும் உங்கள் மொபைலில் சேமிக்காதீர்கள்.

உங்களது மொபைலில் ஆன்டி-வைரஸ் செயலியை புதுப்பித்திருப்பது இருப்பது அவசியம்.

எங்கெல்லாம் முடிகிறதோ, அங்கெல்லாம் பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் (biometric authentication) பயன்படுத்துங்கள்.

ஏடிஎம், டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு பின்னால் கடவு எண்களை எழுதி வைக்க வேண்டாம்.

UPI சேவை / மொபைல் வங்கி சேவை (Mobile Banking) எச்சரிக்கைகள்


மொபைலின் MPIN (Mobile-Personal Identification Number) என்ற எண்ணை, போன் மூலம் வங்கி சேவையை பயன்படுத்த விரும்புவோருக்கு, தனிபட்ட முறையில் வங்கி தந்திருக்கும். இதை பத்திரப்படுத்தி வைக்கவேண்டும்.
ஒருங்கிணைந்த பணபரிமாற்ற பயன்பாட்டு (UPI) சேவையில் கண்ணைமூடி கடவு எண்களை குத்த வேண்டாம்.

UPI-யில் நீங்கள் பணம் அனுப்புவதற்கு இருப்பது மாதிரியே, மற்றவர் பணம் கேட்டு அழைப்பு (!) அனுப்புவதற்கும் வசதி இருக்கிறது. கடவு எண்களை எதற்கு குத்துகிறோம் என்று கவனமாக பார்க்கவும்.

கைபேசியோ , சிம்கார்டோ தொலைத்தால் செல்போன் வங்கி சேவையை ரத்துசெய்யுங்கள்.

உங்கள் மொபைல் போனை, உங்களுடைய அனுமதியின்றி யாரும் பயன்படுத்தாதவாறு அதை இரகசிய பாஸ்வேர்ட் மூலம் லாக் செய்து வையுங்கள்.

அதிகாரப்பூர்வமான ஆப் ஸ்டோர்களில் இருந்து மட்டுமே ஆப்ஸ் தரவிறக்கம் செய்ய வேண்டும்.

இலவசம், பரிசு என்று வரும் அழைப்புகளை "டக்" என்று வைத்து விடுங்கள்.
பல வருடங்கள் சைபர் குற்றங்களை பின் தொடர்ந்ததில், எனக்கு இரண்டு விஷயங்கள் தெளிவாக தெரிய வந்துள்ளன:-

பணம் இழந்தவர் செய்த தவறு ஒன்றேனும் இல்லாமல், பல குற்றங்கள் நடந்திருக்கவே முடியாது.

மறந்தும் கூட யாரும் தங்கள் மனைவி பெயரை கடவுச் சொல்லாக வைத்து கொள்வதில்லை.
கேள்வி :...அமெரிக்காவின் ஹெல்த் சிஸ்டத்துக்கும் நம் நாட்டு ஹெல்த் சிஸ்டத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

என் பதில் :....

USA(அமெரிக்கா ) என்பது கிட்டத்தட்ட ஒரு முழுமையான முதலாளித்துவ நாடு. ஆனால் இந்தியா ஒரு அரைகுறை சோசலிஸ்ட் , அரைகுறை முதலாளித்துவ ( மற்றும் ஒரு "வளரும் நாடு" ) நாடு. அமெரிக்காவின் மருத்துவ வசதி மற்றும் கட்டணங்களை இந்தியாவுடன் ஒப்பிடுவது என்பது சற்று வித்தியாசமானது தான். ஏனெனில் இந்தியாவில் இலவச மருத்துவமும் உண்டு, விலை உயர்ந்த சாதாரண மக்களால் எண்ணிப்பார்க்கமுடியாத மருத்துவமும் உண்டு. என்னால் முடிந்தவரை எளிமை படுத்துகிறேன் .

1. நோயை கண்டறிதல்

இந்தியாவில் பெரும்பாலும் அறிகுறிகளை (மருத்துவரின் அனுபவத்தையும் பொறுத்து) வைத்து உடனடியாக இந்த நோயாக இருக்குமோ என கருதி , மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால் அமெரிக்காவில் முழுவதுமாக பரிசோதனைகள் செய்து பரிசோதனை முடிவுகள் என்ன நோய் என தீர்வு சொல்கின்றனவோ அதை வைத்து மருந்து/சிகிச்சை முடிவுசெய்ய படுகின்றது. இந்தியாவிலும் சில பெரிய மருத்துவமனைகள் இம்முறையை பின்பற்றுகின்றன

2. சுய மருத்துவம்

சுக்கு காபியில் ஆரம்பித்து , ஆண்டி-பையோட்டிக் எனக்கூறப்படும் மருந்துகள் வரை நமக்கு நாமே எடுத்துக்கொள்ளும் இயல்பு இந்தியாவில் உள்ளது. ஆனால் அமெரிக்காவில் மருந்துக்கடைகளில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து தரமாட்டார்கள், ஏனெனில் DEA எனும் மருந்து மற்றும் போதை பொருட்களை கண்காணிக்கும் அரசு நிறுவனம் வெகு சிறப்பாக செயல்பட்டு இதுபோன்ற செயல்களை கட்டுப்பாட்டில் வைத்து மீறுவோர் மீது கடும் நடவடிக்கையெடுக்கும் . எனவே அங்கு சுயமருத்துவம் குறைவு தான்.

3. கட்டமைப்பு

இந்தியாவில் மாவட்டத்திற்கு ஒரு பெரிய மருத்துவமனை கூட இருப்பதில்லை(வட நாட்டையும் சேர்த்து சொல்கிறேன்), அவ்வாறு இருப்பினும் அவைகளில் அவசர காலங்களில் உயிரை காப்பாற்ற உதவும் வெண்டிலேட்டர் போன்ற கருவிகள் மிகக்குறைந்த அளவே உள்ளன. ஆனால் அமெரிக்க-மருத்துவமனைகளில் இதுபோன்ற கட்டமைப்பு பிரச்சனைகள் இருப்பதில்லை , ஏனெனில் அவர்களின் சட்டம் கடுமையானது. யாரேனும் பாதிக்கப்பட்டுவிட்டால் நீதிமன்றத்துக்கு இழுத்து பெரிய தொகை ஒன்றை நஷ்ட ஈடாக கேட்பார்கள், எனவே மருத்துவமனைகள் எப்போதும் போதிய வசதிகளுடன் தான் இருக்கும்.

4. மருந்துகள்

காப்புரிமை பெற்ற மருந்துகள் முதலில் அமெரிக்காவிலேயே வெளியிடப்படுகின்றன.பொதுவாக இம்மருந்துகள் விலை மிக அதிகமாக இருக்கும்(சில லட்சம் இந்திய ரூபாய்கள் வரை) . இவை இந்தியாவில் கிடைக்க வெகுகாலமெடுக்கும் ஏனெனில் இந்தியாவில் மருந்துகளின் விலைகள் National Pharmaceutical Pricing Authority (NPPA) எனும் மத்திய அரசு மையம் மூலமாக தீர்மானிக்கப்பட்டு கட்டுப்பாட்டில் வைக்கப்படும். இதுமட்டுமின்றி வந்து சில வருடங்களுக்குள் இம்மருந்துகளுக்கான நிகரான ஜெனிரிக்-மருந்துகள் தயாரிக்க ஏனைய நிறுவனங்களுக்கு உரிமையளிக்கப்பட்டுவிடும். உதாரணமாக Pomalidomide எனும் புற்று நோய் மருந்து இந்தியாவிற்கு வர 5வருடங்கள் ஆகியது, மேலும் இதுபோன்ற சில மருந்துகள் இந்தியாவிற்கு இன்னும் வரவில்லை.

ஆனால் சாதாரண மருந்துகள் இந்தியாவில் மிகமலிவாகவும் , அமெரிக்காவில் ஜெனிரிக்-மருந்துகள் இருந்தாலுமே விலை அதிகமாகவுமே காணப்படும்.

5. கட்டணம்

அமெரிக்காவில் ஓரளவு அனைவரும் மருத்துவக்காப்பீடு மூலமாக மருத்துவம் பெறுவர். சொந்தச்செலவில் மருத்துவம் பார்த்தால் அங்கே கோடிக்கணக்கில் காசு செலவாகும் (இந்தியமதிப்பில் ). இதனால் பலர் காப்பீடு இல்லையெனில் நோய் வந்தாலும் மருத்துவமனைக்கு செல்லாமலிருப்பதாக சில செய்திகளும் உண்டு. இதற்கு மாற்றுவழியாக சில அமெரிக்கர்கள் இந்தியாவிற்கு(மருத்துவ சுற்றுலா) வந்து இங்குள்ள பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று செல்வது இப்போது வழக்கமாகி உள்ளது. இவ்வாறு செய்தால் மருத்துவ செலவு அமெரிக்காவில் ஆவதைவிட பத்தில் ஒரு பங்கை விட குறைவாகவே ஆகும்.

இந்தியாவில் ஏழைகளுக்கு அரசு மருத்துவமனைகளும் , சிறிய தனியார்மருத்துவமனைகளும் பல சிகிச்சைகள் அளித்து உயிரை காக்கின்றன. அதுமட்டுமின்றி பெரிய மருத்துவமனைகளை அணுக முதலமைச்சர்/பிரதமர் காப்பீடுகளும் உள்ளன. இந்தியாவை பொறுத்தவரை குறைந்த செலவில் மருத்துவம் கிடைப்பது சற்று எளிதாகவே பெரும்பாலும் உள்ளது. ஆனால் கிராமங்களிலும் இவ்வசதிகள் வரவேண்டும் என்பது என் கருத்து..

குறிப்பு :.நானும் என் நண்பர்களிடம் .சொந்தங்களிடமும் ..ஒரு மருத்துவ காப்பீடு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் ..பார்க்கும்பொழுது சொல்வேன் ..அதற்கான விழிப்புணர்வு வரவில்லை ..மருத்துமனைகளில் கையில் இருக்கும் தொகையெல்லாம் செலவழித்து ..காப்பீடு அருமை தெரியவரும்போது ...சொந்தங்களை இழந்து இருப்பார்கள் ..காப்பீட்டின் அருமை தெரிவதில்லை ...



கேள்வி :...ஒருவர் நம்மை அவமதிக்கும் போது யாருக்கும் பாதிப்பு இல்லாமல் அதை எப்படி கடந்து செல்லலாம்?

என் பதில் :...

ஒருவர் நம்மை அவமதிக்கும் போது யாருக்கும் பாதிப்பு இல்லாமல் அதை எப்படி கடந்து செல்வது என்பது எனது பாணியில் ஒரு திரைப்பட காட்சியின் மூலம் விளக்குகிறேன்.

2007 -ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த "குரு" படத்தின் ஒரு காட்சியில் வரும் வசனமிது.

நாயகன் இன்னொருவரால் அவமதிக்க பட அதற்கு நாயகனின் நண்பன் எதிர்வினை ஆற்ற, இந்த செயலால் கோபப்படும் நாயகன் கோவத்தோடு நண்பனிடம் பேசும் அந்த காட்சியில் உள்ள வசனத்தை சிறிது மாற்றி இந்த கேள்விக்கு பதிலாக எழுதியுள்ளேன்.

நண்பன்: அவனுங்க உன்ன அவமானப்படுத்திட்டே இருக்காங்கப்பா.

நாயகன்: அதனால?(கோவமாக )

நண்பன்: சும்மா பயமுறுத்தினேன்.அவ்வளவுதான்.அவுங்களுக்கு பாடம் கத்து குடுக்க வேண்டாமா?

நாயகன்: நீ செஞ்ச காரியத்துக்கு உன்ன தொலைச்சு கட்டியிருப்பேன்.

நண்பன்: யாரவது நம்மள பார்த்து கல் வீசுனா ஒன்னும் பேசிடவும் கூடாது ஒன்னும் செஞ்சிடவும் கூடாது .பேசாம சும்மா இருக்கணும் அப்படி தான?

நாயகன்:சும்மா இருக்க வேணாம் முன்னேறி போ.

அப்படி நம்மள அவமானப்படுத்துறவன் படுத்தட்டும்,திட்டுறவன் திட்டட்டும்,கல் எரியுறவன் கல் எரியட்டும்.

நேத்து நடந்ததை பேசிகிட்டு இருப்பானுக.நம்ம நாளைய காரியத்தை நோக்கி முன்னேறி போய்கிட்டே இருப்போம்.

பிறந்ததில் இருந்து நம்ம பார்க்காத தடையா?

ஒருத்தன் நம்மள அவமதிப்பதால் நம்ம வாழ்க்கை அதோட நின்னு போயிடாது...

இந்த மாதிரி வர தடைகளை கடந்து புறந்தள்ளி போய்ட்டேயிருக்கணும்.
கேள்வி :.....TLTRO எனப்படும் நீண்ட கால ரெப்போ செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி எவ்வாறு கையாளுகிறது?

பதில் :....T L T R O ?

 ரிசர்வ் வங்கி அடுத்தமுறை TLTRO ஏலம் விடும்போது, அவருக்கு தள்ளுபடி விலையில் ஒரு 1000 கோடி ஒதுக்கீடு கிடைக்கட்டும். ததாஸ்து.

TLTRO ஒரு பல்லு கூசும் சப்ஜெக்ட். மேலோட்டமாக தெரிந்துகொண்டால் நமக்கு போதும். புரியாத இடங்களை, விட்டுவிட்டு, புரிந்ததை படியுங்கள். ப்ராக்கெட்டில் சொன்ன விஷயங்களை சாய்சில் விட்டுவிடலாம்.

முதல் விஷயம். ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு பணம் தரவேண்டியிருக்கிறது. அது அதன் கடமை. அதனால்தான் அது வங்கிகளின் தானைத் தலைவன் (Banker to Bankers).

இந்த பணம் தரும் 'முறைசீருக்கு' ரிசர்வ் வங்கி பல ஆயுதங்களை வைத்திருக்கிறது. அது தனது ஆயுதக்கிடங்கில் புதிதாக சேர்த்த ரபேல் தான் TLTRO.

ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகள் சீர் கேட்டால், (சீர் கெட்டால் அல்ல), இது போல் ரெப்போ (repo), திறந்த சந்தை செயல்பாடுகள் (open market operations) என்று பல வழிகளில் பணம் கொடுக்கும்.



இப்போது TLTRO !

TLTRO என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் LTRO (long-term repo operations) என்றால் என்று தெரிந்து கொண்டால் போதும். சின்ன மேட்டர் தான், வாருங்கள் பார்த்து விடலாம்.

LTRO ?

LTRO-வின் கீழ் ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு, ஒரு ஆண்டு முதல் மூன்று ஆண்டு வரை (ரெப்போ விகிதத்தில்) பணம் வழங்குகிறது. இதற்கு ஈடாக வங்கிகள் அரசாங்கப் பத்திரங்களை (Goverment Securities) பிணையமாக தர வேண்டும்.

வங்கிகள் இந்த பணத்தை வாங்கி என்ன செய்யும்? நனறாக கேட்டீர்கள், போங்கள்.

கொரோனா இந்தியாவை தாக்கினால், நாமெல்லாம் வங்கியில் வாங்கிய பைக் கடனுக்கு, 3 மாசம் கழித்து EMI பணம் கட்டினால் போதும் என்று சந்தோசப்பட்டோம் அல்லவா?

இது போல, மற்ற பல சமயங்களில் வங்கிகளுக்கு பண தட்டுப்பாடு, நெருக்கடி ஏற்படும். அப்போதெல்லாம் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து பணம் புரட்டி சமாளிக்கின்றன.

அப்படியென்றால் TLTRO?

TLTRO (targeted long-term repo operations) என்பது முன்பே சொன்னது போல குறி வைத்து தாக்கும் ரபேல். இந்த முறையில் வங்கிகள் வாங்கும் பணத்தை குறிப்பிட்ட சில விஷயங்களில் தான் முதலீடு செய்ய முடியும்.

கொரோனா சமயத்தில் (வங்கிகள் மட்டுமில்லாமல்) பல வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் (NBFC) பாதிப்புள்ளாகிவிட்டன. ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட், பஜாஜ் பைனான்ஸ், முத்தூட் போன்றவை. இவற்றையும் காப்பாற்ற வேண்டும்.

இப்படி காலத்தில் உதவி செய்யாததால், டிஹெச்எப் எல் DHFL), ஐஎல்எப்எஸ் (IL&FS), ரிலையன்ஸ் கேப்பிடல் (Reliance Capital) போன்ற நிதி நிறுவனங்கள் கடையை சாத்திவிட்டன.

இப்படியாகப்பட்ட வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை காப்பாறும் நோக்கில், குறி வைத்து கொடுக்கப்பட்ட நீண்ட கால சீர் வரிசைதான் TLTRO - Targeted Long-Term Repo Operations!

இந்த சீரை வாங்கி, மற்ற வங்கிகள் NBFC க்கள் வெளியிடும் பல பத்திரங்களில் முதலீடு செய்கின்றன (Commercial Paper and Non-Convertible Debentures). அந்த NBFC -களும் பணத்தை பெற்று கொஞ்சம் ஆசுவாசம் வாங்கிக்கொள்ளும்.

இவ்வளவுதான் விஷயம்.

நாமெல்லாம் பாத்திரத்தை அடகு வைத்து, பணம் புரட்டினால், வங்கிகள் பத்திரங்களை அடகு வைத்து பணம் புரட்டிக்கொள்கின்றன.

அடகுக் கடைக்காரருக்கு பத்து ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர் என்றால், ரிசர்வ் வங்கிக்கு TLTRO !

RBI-யிடம் அடகு வைத்து, வங்கிகள் பணம் புரட்டுகின்றன.
வங்கிகளிடம் அடகு வைத்து, முத்தூட்காரர்கள் பணம் புரட்டுகிறார்கள்.
அவர்களிடம் அடகு வைத்து மக்கள் பணம் புரட்டுகிறார்கள்.
மொத்தத்தில் உலகமே ஏதாவது ஒரு அடகுக்கடையில் தான் இருக்கிறது.

போன மாசம் கடைசி வெள்ளியன்று (27.03.2020) ரிசர்வ் வங்கி, TLTRO முறையை அறிமுகப்படுத்த போவதாகவும், இந்த திட்டத்தின் கீழ் இந்திய வங்கிகள் மூலமாக இந்திய பொருளாதாரத்துக்குள், ஆக்ஸிஜன் பாய்ச்சப் போவதாகவும் சொன்னது.

இந்த பதிவை எழுதிக்கொண்டு இருக்கும்போதே டிவியில் பரபரப்பு! ரிசர்வ் வங்கி கவர்னர் திரு. சக்தி காந்த தாஸ் சில முக்கிய அறிவிப்புகளை செய்துகொண்டு இருக்கிறார். அதில் ஒன்று TLTRO பற்றியது.

கவனியுங்கள்: அறிவிப்பின் போது போகிற போக்கில் “ TLTRO மூலம் வங்கிகள் திரட்டும் பணத்தில் 50% நிதியை சிறிய NBFC க்கள், MFI - க்கள் வழங்கிய பத்திரங்களில்தான் வங்கிகள் முதலீடு வேண்டும் என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

நுண் நிதி நிறுவனங்கள்தான் (Micro Finance institutions) இந்திய முறை சாரா தொழில் துறைக்கு ஆணிவேர். வருடம் 4.3 கோடி பேர்களுக்கு கடன் வழங்குகின்றன.

நம்ம தெருக்கோடியில் டீக்கடை வைத்திருக்கும் ரகுபதி, இந்த MFI -யில்தான் கடன் வாங்கியிருப்பார்.

ஊரடங்கில் கடையை மூட சொல்லிவிட்டோம். கடன் கட்டமுடியாமல் கலங்கி போய் நிலை குலைந்திருப்பார்.

நேற்றைய இந்த ஒரு அறிவிப்பால் இந்த துறைக்கு ரூ. 12,500 கோடி மூச்சு காற்று கிடைக்கும்.

நேற்று தாஸ் தூக்கிவிட்ட கை இந்த ரகுபதியுடையது !

“பொர்ர்றுருமையா பல்லை கடிச்சிட்டு இரு கண்ணு. சீக்கிரம் கடைய திறக்கிறோம். டீய ஆத்துறோம். கடனை அடைக்கிறோம்.

சரியப்பு,  கேட்ட கேள்விக்கு பதில் என்ன?

TLTRO செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி எவ்வாறு கையாளுகிறது?

ஏல முறையில்!

சரி, ரிசர்வ் வங்கி ஏன் இந்த சீர்வரிசையை ஏலங்கள் மூலம் வங்கிகளிடம் தருகிறது?

இது ஒரு சுவாரசியமான விஷயம். இந்த மாதிரி ஏலத்திற்கென்று ரிசர்வ் வங்கியிடம் ஒரு விண்ணப்பப் முறை இருக்கிறது.

வங்கிகள் தங்களுக்கு இத்தனை கோடி ஒதுக்கீடு செய்யுங்கள் என்று விண்ணப்பிக்க வேண்டும். ஏல தேதி அன்று, ரிசர்வ் வங்கி விண்ணப்பங்களை எண்ணி, மொத்த விண்ணப்ப தொகைக்கு ப்ரோரேட்டா (Prorata) முறையில் ஒதுக்கீடு செய்யும்.

போன மாதக் கடைசியில் போட்ட முதல் TLTRO ஏலத்தில், ரிசர்வ் வங்கி தன் மேஜை மேல் வைத்த தொகை 25000 கோடி. வங்கிகள் போட்டி போட்டு விண்ணப்பித்த தொகை 60,500 கோடி.

ரிசர்வ் வங்கி வரு்கிற 23.04.2020 அன்று, மேலும் ஒரு 25000 கோடிக்கு ஏலம் நடத்தப் போகிறது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.


அது சரி. எல்லா நாடுகளின் மத்திய ரிசர்வ் வங்கிகள் நடத்தும் இந்த மாதிரி ஏலத்தில் யாரும் கலந்து கொள்ளாமல் போய் விட்டால்? உன் சீர்வரிசை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் என்றால் என்ன அர்த்தம்?

கேள்வி வந்தது மதுரையிலிருந்து. பதிலையும் ஒரு மதுரைக்கார பெரியவரிடமே கேட்கலாம். இது நம்ம சாலமன் பாப்பையாவின் 'குரல்'

எதையும் சாதிக்க எண்ணுவோர் முதலில் பணத்தைச் சம்பாதியுங்கள்; பகைவரின் அகங்காரத்தை அறுக்கும் கூரிய ஆயுதம், பணத்தைவிட வேறு இல்லை - குறள் 759


ஒரு நாட்டின் பொருளாதாரம் பலமாக இருந்தால், அதற்கு எந்த ஆயுதமும் தேவையில்லை - ரபேல் உட்பட.

ஏனுங்க ..இது போதுமாங்கா  தகவல் ....

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

கேள்வி :....மனஅழுத்தத்தில் உள்ள ஒரு நபரை சில நேரத்திற்கு நன்றாக உணர வைக்கும் அளவுக்கு ஒன்றை உங்களால் எழுத முடியுமா?


என் பதில் :...


நான் ஒரு கதை சொல்லட்டுமா…

கதை என்றால், கற்பனைக் கதை அல்ல. இது ஓர் உண்மைக் கதை…

இதைக் கதைக்குச் சொந்தக்காரரே கூறுவது போல் எழுதினால் நன்றாக இருக்கும் என்பதால் அவ்வாறே எழுதுகிறேன்.

நான் ஒரு பெண்மணி. என் 18 ஆம் வயதில் எனக்குத் திருமணம் நடந்தது. ஆனால் அது மகிழ்ச்சியான திருமணமாக எனக்கு அமையவில்லை.

திருமணமான இரண்டாம் ஆண்டில் நான் ஒரு கார் விபத்தில் சிக்கிக் கொண்டேன். என் கணவர் வெளியே இருந்த பள்ளத்தில் குதித்து ஒரு சில அடிகளோடு உயிர் பிழைத்துக் கொண்டார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஆனால் நான் காருக்குள்ளேயே சிக்கிக் கொண்டேன். உடம்பு முழுவதும் ஏராளமான காயங்களைப் பெற்றிருந்தேன்.

என் காயங்களின் பட்டியல் மிகவும் நீண்டது. கூறுகிறேன், பயந்து விடாதீர்.ஏனென்றால் இப்போது நான் நலமாகவே இருக்கிறேன்.

என் முன் கையில் எலும்புகள் எல்லாம் முறிந்து போயிருந்தன, மணிக்கட்டு எலும்புகளும் முறிந்து விட்டன, தோள்பட்டை எலும்புகளும், விலா எலும்புகளும் நொறுங்கிக் கிடந்தன. நுரையீரல் மற்றும் கல்லீரல் மோசமாக உள்ளே காயமடைந்து இருந்தன, என்னால் மூச்சு விட முடியவில்லை. சிறுநீரக குடல் கட்டுப்பாட்டை இழந்தேன்…

மேலும் முதுகுத் தண்டுவட எலும்புகள் எல்லாம் உடைந்து செயலற்று முடங்கிப் போயிருந்தேன்.

இந்த விபத்து நடந்த இடம் , மருத்துவமனை, ஆம்புலன்ஸ் வசதி என எதுவும் கிடைக்கப் பெறாத தனிமையான பகுதி.ஆனாலும் சில மனிதர்கள் காப்பாற்ற வந்தார்கள். அவர்கள் என்னைக் காரிலிருந்து வெளியே இழுக்கும் போது தான் தண்டுவடம் பாதிக்கப்பட்டதை உணரவே முடிந்தது.

என்னை ஒரு ஜீப்பின் பின்புறம் ஏற்றி அடுத்த 3 மணி நேர தொலைவில் இருந்த மருத்துவ மனையில் சேர்த்தனர். என் உடம்பில் ஒரு பாதி நொறுங்கியும் மறு பாதி செயலற்றும் இருந்ததை உறுதி செய்தனர்.

மருத்துவமனையில் இரண்டரை மாதங்கள் தீவிர சிகிச்சையில் இருந்தேன். உடம்பு முழுவதும் நிறைய அறுவை சிகிச்சைகளை செய்திருந்தனர். என் கைகளிலும், முதுகிலும் நிறைய டைட்டானியம் இரும்புகளை பொருத்தி இருந்தனர்.அந்த இரண்டரை மாதங்கள் மிகவும் கொடூரமானவை.

ஒருநாள் மருத்துவர் வந்து ஒரு விஷயத்தை என்னிடம் கூறினார்:" நீங்கள் ஓவியராக விரும்புவதைக் கேள்விப்பட்டோம். ஆனால் மன்னிக்கவும், இனிமேல் உங்களால் வரையவே முடியாது. காரணம் உங்களது கை , மணிக்கட்டு எலும்புகள் எல்லாம் நொறுங்கி விட்டன."..அமைதியாக இருந்தேன்.

அடுத்த நாள் வந்து கூறினார் :" உங்கள் தண்டுவடம் பாதிக்கப்பட்டு இருப்பதால் உங்களால் மீண்டும் எழுந்து நடக்க இயலாது". சரி என்று கூறினேன்.

அடுத்த நாளும் வந்து ஒரு விஷயத்தைக் கூறினார்: "உங்களால் ஒரு குழந்தைக்கு அம்மாவாக முடியாது." அந்த கணம் மிகுந்த வலியை உணர்ந்தேன்.

அம்மாவிடம் அழுதேன். "ஏன் எனக்கு இப்படி எல்லாம் நடக்குது…எல்லாம் இழந்த பின் நான் ஏன் உயிரோடு வாழவேண்டும்??" என்று புலம்பினேன்.

அப்போது தான் அம்மா கூறிய வார்த்தைகள் எனக்கு ஆறுதலாக இருந்ததை உணர்ந்தேன். அந்த வார்த்தைகள் இதோ: " இதுவும் கடந்து போகும், கடவுள் உனக்கான மிகப் பெரும் வேறொரு திட்டத்தை வைத்திருப்பார். அமைதியாய் இரு. அழாதே" என்று…

என்னால் இந்த மரணப்படுக்கையில் இருக்க முடியவில்லை. நான் ஏதாவது செய்யவேண்டும். என் வாழ்க்கையில் எனக்கு வண்ணங்கள் வேண்டும்.நான் வரைய விரும்புகிறேன் என்று கூறி கஷ்டப்பட்டு என் முதல் ஓவியத்தை தீட்ட ஆரம்பித்தேன். அது என் மரணப்படுக்கையில் தான் ஆரம்பித்தது.

இரண்டரை மாதங்களுக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பப்பட்டேன். வீட்டிலும் படுக்கை மட்டுமே…இந்தப் படுக்கை நீடித்த நாட்கள் 6 மாதமோ ஒரு வருடமோ இல்லை. இரண்டு ஆண்டுகள் படுக்கையில் மட்டுமே நேரத்தை கழிக்க வேண்டியிருந்தது. அப்போது ஜன்னலின் வாயிலாக குருவிகளின் சத்தத்தையும் மனிதர்கள் நடமாட்டத்தையும் உணர்ந்துள்ளேன். அப்போது தான் புரிந்தது அந்த மனிதர்கள் எல்லாம் எவ்வளவு கொடுப்பினையோடு வாழ்கிறார்கள் என்று..

ஆனால் அந்தக் கொடுப்பினையைப் புரிந்துகொள்ள தான் மக்களால் முடியவில்லை என்று உணர்ந்தேன்.

இரண்டு ஆண்டுகள், இரண்டரை மாத படுக்கைக்கு ஒரு விடிவுகாலம் கிடைத்தது. ஆம் படுக்கையில் இருந்து சக்கர நற்காலிக்கு மாற்றல் ஆனேன். என்னைக் கண்ணாடியில் பார்த்தேன். எனக்குள்ளேயே பேசிக் கொண்டேன். என் வாழ்வில் தானாகவே அதிசயம் நிகழுமென்று காத்திருக்க முடியாது, அறையின் மூலையில் அமர்ந்து அழுதோ, பரிதாபத்துக்கு ஏங்கியோ வாழமுடியாது. அதனால் என்னை நானே முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

கண்ணாடியில் என்னைப் பார்த்து முதன் முதலில் உதட்டுக்கு லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டேன். ஆனால் உடனே அழித்து விட்டு எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். சக்கர நாற்காலியில் அமர்ந்துள்ள ஒரு பெண் இப்படி எல்லாம் செய்தால் மக்கள் என்ன நினைப்பார்களோ என்று..ஆனால், அந்த கணம் எனக்குள் நானே கேட்டுக்கொண்டேன்.. நான் ஏன் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நினைக்க வேண்டும்.எனக்குள் நான் மகிழ்ச்சியை உணரவேண்டும் என்று மீண்டும் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டேன். அப்போது நான் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். அந்த நாள் முடிவெடுத்தேன் நான் எனக்காக வாழ வேண்டுமென்று.

நம் எல்லாருக்குமே இழப்புகளை குறித்த பயம் இருக்கிறது. அதை நினைத்து எப்போதும் பயந்துகொண்டே இருக்கிறோம். அதனால் நான் என் பயங்களை எல்லாம் விட்டுவிட முடிவு செய்தேன். எனக்குள் இருந்த பயங்களை எல்லாம் பட்டியல் இட்டேன்.

என் மிகப் பெரிய பயம்- என் விவாக ரத்து. இதை என்னால் முதலில் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.ஆனாலும் ஏற்றுக்கொண்டேன். அவருடைய இரண்டாம் திருமணம் நடக்கும் செய்தியைக் கேள்விப்பட்டு அவருக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினேன். "உன் திருமணம் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. வாழ்த்துக்கள்" என்று. அப்போதே அந்த பயமெல்லாம் என்னை விட்டுப் போய்விட்டது.

என் 2வது பயம்-என்னால் அம்மாவாக முடியாத நிலை. இந்த பயத்தைப் போக்க , அன்புக்காக ஏங்கும் ஆதரவற்ற குழந்தை யாரையாவது தத்தெடுக்க விரும்பினேன். சில இடங்களில் விண்ணப்பித்து இருந்தேன். இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு ஆண் குழந்தை இருப்பதாக எனக்கு அழைப்பு விடுத்தனர். நேரில் சென்று குழந்தையைப் பெற்றுக்கொண்டேன். அன்று அக்குழந்தைக்கு இரண்டு வயது. இன்று அவன் பெரியவனாக வளர்ந்துவிட்டான். மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

என் 3வது பயம்- மக்களை சந்திப்பது.

ஆம், என் இயலாமையாலும் தாழ்வு மனப்பான்மையாலும் மக்கள் யாரையும் சந்திக்கவில்லை. ஆனால் அந்த பயத்தை நீக்கி இன்று பேச்சாளராக உங்கள் முன்பு மேடையில் பேசிக்கொண்டிருக்கிறேன்.

தற்போது, பாகிஸ்தானின் முதல் சக்கர நாற்காலி ஓவியர் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளேன், மாடலிங் துறையிலும் பணியாற்றுகிறேன், பாகிஸ்தானின் தேசிய தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராகவும் இருக்கிறேன்,சமூக நலத் தூதரகவும் தேர்வாகி பாகிஸ்தானின் இரும்புப் பெண்மணி என்ற பட்டத்தையும் பெற்றுள்ளேன்.

அதனால், எப்போது நீங்கள் உங்களை ஏற்றுக்கொள்ள பழகுகிறீர்களோ அப்போது இந்த உலகமும் உங்களை ஏற்றுக்கொள்ளும். இது நம் மனதை திண்மையோடு வைத்துக்கொண்டால் மட்டுமே சாத்தியம் ஆகும்.

நம் வெற்றிக்குப் பின் எப்போதும் யாராவது இருப்பார்கள். எனக்கு என் அம்மா ஆறுதலாக இருந்தது போல் கண்டிப்பாக உங்களுக்கும் யாராவது துணையாக இருப்பார்கள். அவர்களை மட்டும் நிராகரித்து விடாதீர்.

'இதுவும் கடந்து போகும்' என்ற என் அம்மாவின் சொற்களே என் சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றியது. நீங்களும் உங்களுக்கு பிரச்சனை வரும்போது 'இதுவும் கடந்து போகும்' என்று நினைத்துக்கொண்டு பயங்களை நீக்கி வாழ்க்கையை நன்றியுணர்வோடு வாழுங்கள்.

கதை முடிந்தது. அந்தப் பெண் வேறு யாருமில்லை. பாகிஸ்தானின் சிறந்த ஓவியர் மற்றும் பேச்சாளர் - முனிபா மசாரி அவர்கள்.

எனக்கும் என் வாழ்வில் சில இழப்புகள் ஏற்பட்டு மனஅழுத்தத்தில் இருந்தேன். அப்போது முனிபா மசாரி அவர்களின் இந்தப் பேச்சு தான் என் மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர உதவியது.

வார்த்தைகளுக்கு சக்தி இருப்பதை அப்போது தான் நான் உணர்ந்தேன். இன்று நான் மன அழுத்தம் ஏதுமின்றி மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்.

அந்தப் பெண்மணியின் துயரங்களோடு உங்கள் துயரங்களை ஒப்பிடுப் பாருங்கள். அப்போது புரியும் நீங்கள் எவ்வளவு ஆசீர்வதிக்கப் பட்ட வாழ்க்கையை வாழ்கிறீர் என்று.

வாழ்க்கையில் உங்களுக்கு கிடைக்காத எதையும் நினைத்து கவலைப்படாமல், இந்த அளவுக்காவது நலமாக இருக்கிறோமே என்று இயற்கை அன்னைக்கு உங்கள் நன்றியைத் தெரிவியுங்கள்.

The real happiness doesn't lie in success, money or fame.

It lies within…

The real happiness lies in gratitude.
கேள்வி :.....மருத்துவரின் வாழ்க்கை எப்படி இருக்கும்?


பதில் :...என் மருத்துவ நண்பர்களும் இருக்கிறார்கள் ..அவர்களுடன் பேசிய பொழுது ...நான் மருத்துவ பரிசோதனைக்கு போகும் பொழுது கொஞ்சம் சுற்றுப்புறமும் கவனிப்பது உண்டு ..மருத்துவர் பாணியிலே ..பகிர்ந்து தான் ..

கொஞ்சம் சுவாரிஸ்யம் ..அவர்களின் கஷ்டங்கள் புரியும் ..என்பதால் ..படியுங்கள் ...


அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு:

70 நோயாளிகள் நின்று கொண்டிருக்கும் வரிசை…

ஒரு பெண்மணி: பிரஷர் மாத்திரை வேணும்.

நான்: இந்தாங்க.

பெண்மணி: பிரஷர் சரியா இருக்குதுங்களா?

நான்: சரியா இருக்குங்க.

பெண்மணி: அப்போ நான் ஏன் மாத்திரை சாப்பிடணும்.

நான்: மறுபடியும் ஏறாம இருக்க!

பெண்மணி: முதுகு வலி ஆயின்ட்மெண்ட் வேணுங்க.

நான்: இந்தாங்க.

பெண்மணி: அப்படியே கண்ணு சொட்டு மருந்து..

நான்:இந்தாங்க.

பெண்மணி: திரும்பி இரண்டு அடி வைத்துவிட்டு திரும்பி…ஊசி எழுதிட்டீங்களா???

நான்: பிரஷருக்கு எல்லாம் ஊசி இல்லம்மா.

பெண்மணி: மாசாமாசம் வாங்குற சத்து ஊசி வேணும்.

நான்: ஸ்ஸ்ஸ்…இந்தாங்க.

பெண்மணி: எங்க வீட்டுக்காரருக்கு ஒரு வலி ஆயின்ட்மெண்ட், பக்கத்து வீட்டுக்கார அம்மாவுக்கு எலப்பு மாத்திர!

நான்(சலிப்புடன்): இந்தாங்க! வேற அரிசி, பருப்பு கீது வேணுங்களா???

பெண்மணி: அதெல்லாம் வேணாமுங்க.

நான்: சந்தோசம், போய்ட்டு வாங்க!

அவசர சிகிச்சை பிரிவு:

நான்: அவசரம் இல்ல, ஆனாலும் கைல அடி கொஞ்சம் பெரிசா தெரியுதுங்க.. எலும்பு டாக்டர் பாத்துட்டா நல்லது. அதுக்கு பெரிய ஆஸ்பத்திரிக்கு போகணும்.

நோயாளியின் உறவினர்: 108 ஆம்புலன்ஸ் வேணும்.

நான்: நடக்க முடிஞ்சு, சௌகரியமா உக்கார்ந்து இருக்கிறவங்களுக்கு 108 கிடையாதுங்க. இதுக்கெல்லாம் கூப்பிட்டா அப்புறம் பிரசவம், நெஞ்சு வலி இருக்கரவங்களுக்கு 108 கிடைக்காது.

உறவினர்: நான் கௌன்சிலர் தான். அதெல்லாம் கூப்பிடலாம், கூப்பிடுங்க.

வேறு வழி???

புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகளை பார்த்துக்கொண்டிருந்த போது அவசர அழைப்பு. எறும்புக் கொல்லி மருந்து உட்கொண்ட ஒருவரை அழைத்து வந்துள்ளதாக…

நான்: ஐயா, சொல்லுங்க என்ன ஆச்சு?

அவர்: எறும்பு மருந்து சாப்பிட்டேன்.

நான்: சாக் பீஸா இல்ல பவுடரா?

அவர்: பவுடர்.

நற்உடற் காரணிகளை(vitals) பரிசோதனை செய்து பார்த்து விட்டு எல்லாம் நன்றாய் இருப்பதை உறுதி செய்து விட்டு,

நான்: தெரியாம எடுத்து குடிச்சிடீங்களா?

அவர்: தெரிஞ்சேதான் எடுத்து குடிச்சேன்.

நான்: ஏங்க! கொரோனா பயத்துல அவனவன் வீட்டுல முடங்கி கெடக்குறான். நீங்க மருந்து குடிச்சிட்டேன்னு சாதாரணமா சொல்றீங்க?

அவர்: அது, எம்பொண்டாட்டிக்கும் எனக்கும் சண்டையா, அவ எங்கோட 3 நாள் பேசலையா, அவள பயமுறுத்துறதுக்காக குடிச்சிட்டேன்…(முகத்தில் ஒரு நமட்டுசிரிப்பு)

நான்: (கடுப்பை மறைத்துக்கொண்டு) உங்களுக்கு இதெல்லாம் விளையாட்டா இருக்கா? இது நரம்பை பாதிக்கும் தெரியுமா? சரி, மூக்குல டூப் போட்டு வயிறு சுத்தம் பண்ணனும், பெட்டுல ரெண்டு நாள் இருந்து பாக்கணும்.

குறைவான அளவு என்றாலும் விஷம் சிலருக்கு சில பல நேரங்கள் கழித்து இம்சை தரலாம். ஆகவே ஒரு observation க்காக சொன்னேன்.

அவர்: அதெல்லாம் வேணாம். ஒரு குளுக்கோஸ் போடுங்க, இடுப்புல ரெண்டு ஊசி போடுங்க, மாத்திர கொடுங்க, அது போதும்.

நான்: பேசாம நீங்க போய் பேஷண்ட் பாருங்க, நான் குளுக்கோஸ் போட்டுக்கிறேன்.

எனது கிளினிக்கில் ஒரு கல்லூரி இளைஞி,

நான்: வாங்க, உக்காருங்க. சொல்லுங்க என்ன பிரோப்ளேம்?

அவர்: காதுல எறும்பு பூந்துரிச்சு.

நான்: அப்படீங்களா, எத்தன நாளாச்சுங்க?

அவர்: டூ டேஸ்.

நான்: வலி ஏதாச்சும் இருக்குங்களா?

அவர்: ஆமா.

காதுக்கு வெளியில் வெளிச்சம் அடித்து பார்த்து விட்டு

நான்: வெளியிலிருந்து பாக்குறப்போ ஒன்னும் தெரியலிங்க, சின்ன சுள்ளெறும்பா இருந்தா உள்ள லைட் விட்டு பாக்கணுங்க.

அவர்: அதெல்லாம் வேணாம். வெளிய இருந்து பாத்து சொன்னா போதும்.

நான்: நான் சோடா புட்டிங்க! என்னால உள்ள லைட் விட்டு பாத்து தான் இருக்கா இல்ல சொல்ல முடியும்.

அவர்: தேவையில்ல. நான் பாத்துக்கிறேன்.

நான் பார்த்த வரையில், நாம் எவ்வளவு மரியாதையாக பேசினாலும் நவநாகரீக இளைஞ இளைஞிகள் சிலர் மட்டும் தவறியும் கூட "டாக்டர்" என்ற மரியாதை வார்த்தையையும் "ங்க" என்ற இங்கித வார்த்தையையும் உபயோகப்படுத்துவதில்லை. அப்படி பேசினால் குறைந்து போய் விடுவார்களோ என்னவோ!

இன்னொரு முறை கிளினிக்கில்,

நான்: செக் அப் செஞ்சு பாத்ததுல உங்களுக்கு அல்லர்ஜி இருக்கும்மா.

பெண்மணி: அது எதுனால வருது டாக்டர்?

நான்:காத்துல இருக்கும் தூசுங்க! சில பேருக்கு உணவுனாலையும்.

பெண்மணி: தூசா? எங்க வீட்டுல எப்பவுமே டஸ்டே இருக்காது, எப்பவுமே நீட்டா தான் இருக்கும். பின்ன எப்படி எனக்கு தூசு அல்லர்ஜின்னு சொல்றீங்க?

நான்: ஓ…அப்போ உங்க வீட்ட பெருக்கவே மாட்டீங்களா?

பெண்மணி: பெருக்குவோம்.

நான்: பெருக்கும்போது ஒண்ணு பறக்குமே, அதுக்கு பேர் என்னங்க?

பெண்மணி: (புரிந்து கொண்டவராய்) தூசு தாங்க…ஹி..ஹி..

காது வலியுடன் வந்த இளைஞர் ஒருவர்,

நான்: வாங்க, உக்காருங்க.

அவர் சிரித்துக்கொண்டே உட்கார எத்தனிக்கிறார்…

முக கவசம் அணிவதற்காக மறுபக்கம் திரும்பி எடுத்து அணிந்து கொண்டிருக்கிறேன்…டர்..ர்..ர்..என்று ஒரு சத்தம். விடுக்கேன முகத்தை திரும்பினால், என் முகத்துக்கு மிக அருகில் அவர் முகம் இப்படி,

கூடவே நாற்காலியை என் பக்கத்தில் தீவிரமாக இழுத்ததில் floor mat உரிந்து வந்திருந்தது.

முக்கியமான விஷயத்தை பேச போகிறாராம்!

நான்: முத்தம் கித்தம் கொடுக்க போறீங்களா?

(களுக்கென்று சிரித்து விட்டு)அவர்: சாரி டாக்டர்.

நான்: நோய்க்குள்ளயே இருக்கறவன் நான். பக்கத்துல வந்து ஒட்டிக்காதீங்க.

நன்றி .டாக்டர் நண்பர்களுக்கு ....



வியாழன், 16 ஏப்ரல், 2020

கேள்வி :..அடுத்தவர் நல்லவர் என்று சொல்வதை விட நான் நல்லவன் என்று இருப்பதில் உள்ள உண்மை என்ன? அதனால் நீங்கள் சந்தித்த அனுபவம் என்ன?

பதில் :....

என் வாழ்க்கையில் நான் நல்லவனாக இருந்ததால் கிடைத்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

வாழ்ந்து கெட்டவர்கள்.

சிலர் குடும்ப சூழ்நிலை காரணமாக வாழ்ந்து வரும் வீட்டை விற்க வேண்டிய நிலை வரும்.

நானும் அப்படியே சொந்த வீட்டை விற்று விட்டோம்.

அந்த வழியே செல்லும் போதெல்லாம் தலை குனிந்து சென்றுவிடுவேன்.அந்த வருத்தம் நன்றாக உணர்ந்தவன்.அந்த உணர்வை ஒரு நாவலில் படித்தேன் மிக உணர்ப்பூர்வமாக எழுதியிருப்பார்

(பார்த்துப்பார்த்து கட்டிய வீட்டை ஏதேனும் ஒரு முக்கிய காரணத்தினால் விற்க நேரும்போதோ அல்லது நிரந்தரமாக பிரிய நேரும்போதோ ஒரு சிலர் திரும்பிக்கூட பார்க்காமல் மன பாரத்துடன் வேகமாக அந்த இடத்தை விட்டு சென்று விடுவதை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன். அப்புறம் அந்த திசையில் கூட செல்வதில்லை. செல்ல மனம் வருவதில்லை. மனதின் ஆழத்தில் அந்த இழப்பின் வலி எங்கேயோ ஒளிந்து கொன்டு இம்சிப்பதன் வெளிப்பாடு அது. இன்னும் சிலர் பல வருடங்கள் கழித்து சென்று பார்ப்பதுண்டு. அப்படி பார்க்கையில் கடந்து சென்ற அந்த வீட்டின் நினைவுகளில் நிமிடங்களில் ஒரு சில கணங்கள் வாழ்ந்து திரும்புவதுண்டு.

இந்த சிறுகதையின் நாயகரும் அப்படிப்பட்ட ஒரு பெரியவர் தான்! இடையில் பல கைகள் மாறிப்போன தன் விட்டை முதலில் வெளியே சற்று தூரத்தில் நின்று அடிக்கடி பார்த்துக்கொண்டிருப்பதை கவ‌னித்த உரிமையாளர் அவரிடம் விசாரிக்க, இவர் தான் எட்டு வருடங்க‌ளுக்கு முன் விற்ற வீடு அது என்று சொல்கிறார். வீட்டுக்காரர் உள்ளே அழைத்ததும் உள்ளே நுழைகிறார். உள்ளே காலடி எடுத்து வைக்கும் முன் வாசற்படியைத்தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்கிறார். ஏதோ கோவிலுக்குள் நுழைவது போன்ற பரவசம் அவர் விழிகளில் தெரிகிறது.

உள்ளே வந்தவரின் விழிகள் மூலை முடுக்கு விடாமல் சுற்றி சுற்றி பார்க்கிற‌து. கரங்கள் சில்லிட்ட சுவர்களைத் தடவித் தடவி பார்க்கின்றன.

மனதில் பொங்கிய உணர்வுகள் அவரிடமிருந்து அப்படியே வெளி வந்து விழுகின்றன.)

எங்கள் ஊரை சேர்ந்த நண்பர் படித்து வெளிநாடு சென்று மிக நல்ல நிலைமையில் உள்ளார்.

நீண்ட வருடங்கள் முன் அவர்களது வீட்டை அவரது தந்தையார் விற்றுவிட்டார்.சமீபத்தில் அந்த வீடு விற்பனைக்கு வந்தது அதனை கேள்விப்பட்ட நான் நண்பரின் கைபேசி எண்ணை அவர்களது உறவினரிடம் பெற்று தொடர்பு கொண்டு விபரம் கூறினேன் .அவர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்

உடனே எங்கள் வீடு எனக்கு கண்டிப்பாக வேண்டும் உடனே விலைபேசி முடியுங்கள் என்று என் பெயருக்கு பணமும் அனுப்பி என் பெயரில் வீடு பத்திரம் முடிக்க உரிமை பத்திரம் (power) அனுப்பினர்.

நானும் மிக குறைந்த விலையில் யாருக்கும் வெளியே தெரியாமல் பேசி முன்பணம் கொடுத்து முடித்தேன் .

இதற்கிடையில் வெளியூரில் வசிக்கும் அவரது சகோதர் இந்த விபரம் அறிந்து என்னை வந்து நேரில் பார்த்து உனக்கு கூடுதலாக பணம் தருகிறேன் எனக்கு வீட்டை வாங்கி தர வேண்டும் என்றார்.

நண்பரும் அவரது சகோதரரும் பேசிக்கொள்ள மாட்டார்கள் .அவர்களுக்குள் குடும்ப தகராறு.

ஆனால் நான் முதலில் அவரிடம் (வாக்கு )பேசி பணம் வாங்கி முன்பணம் கொடுத்து விட்டேன். ஆகவே நான் பணத்திற்கு ஆசைப்பட்டு வாக்கு தவற மாட்டேன் என்று கூறி மறுத்துவிட்டேன்.

நண்பரும் மீதி பணத்தை அனுப்பி விட்டார் நானும் வீடு பத்திரம் முடித்து அனுப்பிவிட்டேன்.

அப்போது அவர் நீ செய்த உதவியை மறக்க மாட்டேன்.

(அவரது சகோதரர் கேட்ட விபரம் அறிந்து கொண்டார்)உனக்கு என்ன உதவி வேண்டும் என கேட்டார். நான் கேட்டது எனது மகனின் மேல் படிப்பிற்கும், எங்கள் ஊர் சிவன் கோயில் தலபுராணம் 70 ஆண்டுகள் முன் வெளிடப்பட்டது. அதைப்புதுப்பித்து வெளியிட உதவுமாறு கேட்டேன் .சரி விடுமுறையில் வரும் போது செய்து விடலாம் என்றார்.

ஆனால் சிறிது காலம் கழித்து வந்தவர் அவரது வேலைகள் முடிந்ததும். என்னிடம் பேசுவதை தவிர்த்து விட்டார். நானும் விலகி விட்டேன்

நினைத்து இருந்தால் அதிக விலை சொல்லி இருக்கலாம்,அவரது சகோதரரிடம் கூடுதல் பணம் வாங்கி மாற்றி விட்டிருக்கலாம்.ஆனால் என்னை என் தாய்,தந்தையர் அப்படி வளர்க்கவில்லை .எவ்வளவோ கஷ்டத்திலும் நேர்மையாக உழைத்து வாழ்ந்து வருகிறன்.

என்றாவது ஒருநாள் அவர் உணர்வார்.

இல்லை என்றாலும் பரவாயில்லை

எனக்கு உதவிடவில்லை என்பதை விட கோயில் தலபுராணம் புதுப்பித்து தருவேன் என்பதையும் மறந்து விட்டார் என்பது மிக வருத்தம் தந்தது.

சமீபத்தில் ஊருக்கு வந்த நண்பர் என்னைப் பார்த்ததும் தலையை குனிந்து கொண்டார்.

நான் மனசாட்சிபடி நேர்மையான நல்லவனாக நடந்து கொண்டேன் என தலை நிமிர்ந்து நடந்தேன்.

இப்போது எனது மகனும் படித்து முடித்து நல்ல நிலைமைக்கு வந்து கொண்டு இருக்கிறான்.

இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத

#அனுபவம்

(இடையில் உள்ள கதையின் தலைப்பையும், ஆசிரியரின் பெயரையும் குறிப்பெடுக்க மறந்துவிட்டேன் )

அவருக்கு நன்றி.