வெள்ளி, 13 செப்டம்பர், 2019

பொன்னேரி ஜெயக்குமார் தம்பிக்கு திருமணநாள்வாழ்த்துக்கள் ...

கணவன் மனைவி உறவு என்பது மனித வாழ்க்கையின் மற்றெல்லா உறவுகளையும் விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். திருமணத்திற்குப் பிறகு திடீரென்று இணைந்த இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல், பிரியம், நெருக்கம், தாம்பத்யம், கருணை, கனிவு, பரிவு, விட்டுக் கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை. அதற்கான காரணம் என்ன என்றும் நாம் அறிய முற்படுவதில்லை. இதை ஒவ்வொரு திருமணநாளிலும் நினைத்துப் பார்த்து மகிழவேண்டும்

ஆண்களுக்கு மனைவி அமைவது எப்படி இறைவன் கொடுத்த வரமோ அதேபோல பெண்களுக்கும் கணவன் அமைவது இறைவன் கொடுத்த வரம்தான். எனவே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்பவர்களாக அமைந்துவிட்டால் அதைவிட சிறந்த வாழ்க்கை வேறு எதுவும் இல்லை.

அரும்பாடு பட்டுக்கட்டிய அந்த இல்லறக் கூட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைத்திருக்க வேண்டும் எனில் கணவன் மனைவி இருவரது கூட்டுப் பங்களிப்பு மிக மிக அவசியம். திருமண பந்தம் என்ற மரம் தழைத்தோங்கி வளர வேண்டுமென்றால், செடியை ஊன்றி விட்டால் மட்டும் போதாது, அந்த மரம் வளர வேண்டிய மண்ணுக்கு உரமிட்டு, நீரிட்டு பராமாரித்து, பாதுகாக்கப் பட்டால் தான் முடியும்.

தம்பதியர் இருவரும் ஆடையைப் போல இருக்கவேண்டும் என்பார்கள். அதாவது ஆடைகள்தான் மனிதனின் மானத்துக்கும், உடலுக்கும், பாதுகாப்பை அளிக்கின்றன.மரியாதையையும், மாண்பையும் தருகின்றன. கணவனின் மரியாதையைக் காப்பதில் மனைவிக்கு பங்குண்டு. அதேபோல் மனைவியின் மரியாதையை காப்பதில் கணவருக்கும் பங்குண்டு. இதை அனைத்து தருணங்களிலும் தம்பதியர் உணர்ந்து கொள்ளவேண்டும்.

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681

சூப்பர் மார்க்கெட்டில் உணவுப் பொருட்கள் வாங்கும்போது அதன் லேபிளில் பெஸ்ட் பை டேட், யூஸ் பை டேட், ஓப்பன் டேட் என்றெல்லாம் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொருவிதமாய் அச்சிட்டிருப்பதைப் பார்த்திருப்போம். இந்த ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம்னு தெரிந்து வைத்துக் கொள்வது நல்லதுதானே?

Use by date
யூஸ் பை என்று குறித்திருந்தால் அந்த உணவுப் பொருட்களை அதில் குறிப்பிட்டிருக்கும் தேதிக்கு முன்பாகவே பயன்படுத்த வேண்டும். அதைக் கடந்து பயன்படுத்தினால், ஃபுட் பாய்சன் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். அதேபோல யூஸ் பை என்று குறிப்பிட்டிருக்கும் பொருட்களை அதில் குறிப்பிட்டுள்ளபடி பாதுகாப்பான வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டியதும் அவசியம். பால், நெய் போன்ற உணவுப் பொருட்கள் இந்தப் பிரிவில் அடங்கும். அதுபோலவே சில உணவுப் பொருட்களின் குறித்த தேதிக்கு முன்பாக என்றும் அச்சிட்டிருப்பார்கள்.
Open dating
ஒரு பொருள் எப்போது இருந்து சந்தையில் வைக்கப்பட்டிருக்கிறது என்பதை வாடிக்கையாளர் அறிந்துகொள்வதற்காக இந்த ஓப்பன் டேட் முறை அச்சிடப்படுகிறது. நீங்கள் பார்க்கும் போது ஒரு  பொருளின் ஓப்பன் டேட் இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தால் கடந்த இருமாதங்களாக அது விற்பனைக்கு தயாராக இருக்கிறது என்று பொருள். இதற்கும் யூஸ் பை தேதிக்கும் தொடர்பு இருக்காது. ஒருவேளை தொடர்பு இருந்தால் அதுவும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
Best before or Best by date
உறைபனிநிலையில் குளிரூட்டப்பட்ட பொருட்கள், உலர்ந்த பொருட்கள், டின் பொருட்கள் போன்றவற்றில் இப்படி அச்சிட்டிருப்பார்கள். இந்தப் பொருட்களை இதில் குறிப்பிட்டிருக்கும் காலத்துக்குள் பயன்படுத்தினால் இதன் தரம் சிறப்பாக இருக்கும் என்பதே இதன் பொருள். இந்தத் தேதிக்குப் பிறகு பயன்படுத்தினால் பிரச்னை ஏதும் இருக்காது. உலர்ந்த பொருட்கள் என்றால் நமத்துப்போயிருக்கக்கூடும்; டின் பானங்கள் என்றால் சுவை குறைந்துப் போயிருக்கக்கூடும். சில சமயங்களில் கோழி முட்டை அட்டையில் இந்த வாசகத்தை அச்சடித்திருப்பார்கள். கோழி முட்டைகளில் சால்மோனெல்லா எனும் உடலுக்கு தீங்கு செய்யும் பாக்டீரியா பரவக்கூடும் என்பதால் அதை மட்டும் குறித்த தேதிக்கு முன்பாகவே பயன்படுத்த வேண்டும்.
Sell by (or) Display until
சூப்பர் மார்க்கெட்களில் முதலில் எக்ஸ்பயரி ஆகும் பொருட்கள் முன் வரிசையிலும் புதிதாகத் தயாரிக்கப்பட்ட பொருட்கள் அதன் பின்புறமும் அடுக்கப்பட்டிருக்கும். புதிதாக உற்பத்தியாகி கடைக்கு வந்த பொருட்களை முன் வரிசையில் அடுக்கினால் பின் வரிசையில் உள்ள பொருட்கள் காலாவதியாகி வீணாகிவிடும் என்பதற்காக இப்படி அடுக்குவார்கள். செல் பை அல்லது டிஸ்ப்ளே அண்ட்டில் அச்சிடப்படுவது விற்பனையாளர்களின் வசதிக்காகத்தான். சரக்குகளை தேதிவாரியாகப் பயன்படுத்தவே இவை அச்சிடப்படுகின்றன. செல் பை தேதிக்குப் பிறகும் ஒரு பொருளில் யூஸ் பை தேதி இருந்தால் குழம்ப வேண்டாம். தாராளமாக அந்தப் பொருளைப் பயன்படுத்தலாம். ஆனால், நடைமுறையில் பெரிய சூப்பர் மார்க்கெட்களில் செல் பை முடிந்த பொருட்களை வைத்திருக்கமாட்டார்கள்.

வியாழன், 12 செப்டம்பர், 2019


மதிப்புக்கூட்டல் மாயாஜாலம்... தேங்காய் ஒன்றுக்கு 40 ரூபாய்!
ஜி.பழனிச்சாமி -(Pasumai Vikadan)

“ஒரு தேங்காயின் அதிகபட்ச விலை 15 ரூபாய். இதுதான் இதுவரை தென்னை விவசாயிகளுக்குக் கிடைத்துவந்தது. ஆனா, அதை மாற்ற முடியும். தேங்காய் ஒன்றிலிருந்து 40 ரூபாய் வரை லாபம் பார்க்க முடியும்” என்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுநரும் ஏற்றுமதியாளருமான ராஜரத்தினம்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்துள்ள துங்காவி கிராமத்தில் உள்ள தென்னைநார்க் கட்டித் தொழிற்சாலையில் அவரைச் சந்தித்தோம். “எனக்குப் பூர்வீகம் உடுமலைப்பேட்டை. பொறியியல் படிப்பு முடித்துக் கோயம்புத்தூரில் உள்ள கம்பெனியில் வேலைபார்த்தேன். ஒரு கட்டத்துல விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு, தென்னைசார் தொழில் இயந்திரம் மற்றும் மதிப்புக்கூட்டல் தொழிலில் இறங்கி நடத்திவருகிறேன். பொள்ளாச்சிப் பகுதியில் முற்றிய தேங்காய்களை உடைத்துக் களத்தில் காயவைத்து, கொப்பரைகளை எண்ணெய் ஆலைகளுக்கு அனுப்பும் தொழில் பல ஆண்டுகளாக நடக்கிறது. 1996-ம் ஆண்டுக்குப் பிறகு தென்னைநார் உற்பத்தித் தொழில் பரவலாகத் தொடங்கப்பட்டது.
தேங்காய்நார்க் கட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில்..
முற்றிய தேங்காய்களை உரிக்கும்போது கிடைக்கும் மட்டைகளை அரைத்து மஞ்சியாக மாற்றி, பேரல்களாகக் கட்டுவார்கள். அதைக் கயிறு, மெத்தை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மூலப்பொருளாக அனுப்புவார்கள். தென்னைநார் உற்பத்தி செய்யப்படும்போது மரத்தூள் போன்று காட்சி தரும் கழிவுத் துகள் வெளியாகும். எதற்கும் பயனில்லாத அதைப் புறம்போக்கு நிலங்களில் மலைபோல் குவித்து வைத்துத் தீமூட்டிச் சாம்பலாக்கி அழிப்பார்கள். தேவையில்லை என்று சாலையோரம் கொட்டி, எரிக்கப்பட்ட அந்தக் கழிவுகள்தான் இன்றைக்குத் தென்னைநார்க் கட்டிகளாக உலகமெங்கும் பயணிக்கிறது.
அப்போது நான் கோயம்புத்தூரில் நூற்பாலை இயந்திரங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் பொறியாளர் வேலையிலிருந்தேன். அந்த நேரத்தில், வேறு வேலையாக எங்கள் கம்பெனிக்கு வெளிநாட்டுக்காரர் ஒருவர் வந்தார். அவர் கையில் தென்னைநார்க் கட்டி (காயர் பித்) ஒன்றையும் கொண்டுவந்தார். எங்க கம்பெனிக்குச் சம்பந்தமில்லாத பொருள் அது. அதனால, அவரிடம் அதுகுறித்துக் கேட்டேன்.

அவர், ‘எங்க நாட்ல விவசாயம் செய்யப் போதிய மண்வளம் இல்லை. அதனால, இதுபோன்ற தென்னைநார்க் கட்டிகளைப் பயன்படுத்திச் செடிகள் வளர்க்கிறோம்’ என்று பதில் சொன்னார். மேலும், ‘தென்னை மரங்கள் அதிகம் உள்ள தமிழ்நாட்டில் தென்னை நார்க்கட்டி எங்கு கிடைக்கும் எனத் தேடி வருகிறேன். அதற்கான சாம்பிள் காட்டவே இதைக் கொண்டுவந்துள்ளேன். அதற்கான தேவை வெளிநாடுகளில் அதிகம் இருக்கிறது’ என்றார்.

அந்தக் காலகட்டத்தில் தென்னைநார்க்கட்டித் தொழிலில் வெகுசிலரே ஈடுபட்டுவந்தனர். ஏதாவது தொழில் ஒன்றைச் சொந்தமாக ஆரம்பிக்க வேண்டும் என்கிற எண்ணத்திலிருந்த எனக்கு, தென்னை நார்க்கட்டித் தயாரிப்பு சிறப்பாக இருக்கும் எனத் தோன்றியது. ஒரு கட்டத்தில் வேலையை விட்டுவிட்டு, தொழிற்சாலை தொடங்கினேன். ஆனா, தென்னைநார்க் கட்டிகள் தயாரிப்பு இயந்திரங்கள் கிடைப்பது சிரமமாக இருந்தது. அடிப்படையில் நான் பொறியாளர் என்பதால் நானே இயந்திரங்களை வடிவமைத்துச் சொந்தமாகத் தயாரிக்க முடிவு செஞ்சேன். வங்கியில் கடன் பெற்று, கோயம்புத்தூரில் இயந்திரத் தயாரிப்புத் தொழிற்சாலை அமைச்சேன். ஆறு மாசத்துல இயந்திரத்தைத் தயாரிச்சு, தென்னை நார்க்கட்டி உற்பத்தியைத் தொடங்கினேன். இலங்கை, தாய்லாந்து, வியட்நாம்னு தென்னை அதிகம் விளையும் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தேன். அங்கு ஆய்வு செஞ்சதுல, அந்த நாடுகள்ல தென்னை நார்க்கட்டித் தயாரிப்பு இயந்திரங்களோட தேவை அதிகம் இருப்பதைத் தெரிஞ்சுகிட்டேன். அங்குள்ள தொழில்முனைவோர் சிலரை இங்கு வரவழைச்சு, இயந்திரங்களோட செயல்பாடுகளை விளக்கினேன்.

தேங்காய் நீருக்கான தேவை வெளிநாடுகளில் அதிகம் உள்ளது. தேங்காய் விலை சில சமயங்களில் வீழ்ச்சி அடைகிறது. தேங்காய் ஒன்றின் அதிகப்பட்ச விலையே 15 ரூபாய்தான்.
அதுல திருப்தி அடைஞ்ச வெளிநாட்டினர் பலரும் இயந்திரங்கள் கேட்டார்கள். புதிய புதிய இயந்திரங்களைத் தயாரித்துத் தேவையுள்ள நாடுகளுக்கு அனுப்பினேன். தொடர்ந்து தயாரித்தும் வருகிறேன். நான் இதுவரை 600 இயந்திரங்களை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் விற்பனை செய்துள்ளேன். இந்தத் தொழில் ஒருபுறம் நடந்தாலும், நடுத்தர மற்றும் சிறு விவசாயிகளையும் தென்னை சார் தொழில் முனைவோராக மாற்ற வேண்டும் என நினைத்தேன்.

தினசரி 1,000 முதல் 10,000 தேங்காய் வரை மதிப்புக்கூட்டல் செய்யும் விதமாகச் சிறிய இயந்திரங்களைத் தயாரித்துவருகிறேன். ‘தென்னைசார் தொழில்கள் ஆராய்ச்சிக் குழு’ ஒன்றை எங்கள் நிறுவனம் மூலம் உருவாக்கி அதன் வாயிலாகத் தென்னை விவசாயிகளைச் சந்தித்து, மதிப்புக்கூட்டல் குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டும் கூட்டங்களை நடத்தி வருகிறோம். அதேநேரம், எங்கள் தொழிற்சாலையில் தென்னைநார்க் கட்டிகளை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துவருகிறோம்’’ என்றவர் தொடர்ந்து தென்னை விவசாயிகளுக்கான சில ஆலோசனைகளையும் கூறினார்.

தேங்காய் நீர்

‘‘புட்டியில் அடைக்கப்பட்ட தேங்காய் நீருக்கான தேவை வெளிநாடுகளில் அதிகம் உள்ளது. பொள்ளாச்சி, உடுமலை, காங்கேயம் பகுதிகளில் மட்டும் சிறிதும் பெரிதுமாக ஐந்நூறுக்கும் மேற்பட்ட கொப்பரை உற்பத்திக் களங்கள் உள்ளன. நாள் ஒன்றுக்குச் சராசரியாக 30 லட்சம் முற்றிய தேங்காய்கள், அந்தக் களங்களில் உடைக்கப்படுகின்றன. முற்றிய தேங்காய் ஒன்றிலிருந்து 100 முதல் 150 மில்லி நீர் கிடைக்கும். 30 லட்சம் தேங்காய் மூலம் குறைந்தபட்சமாக 3 லட்சம் லிட்டர் தேங்காய் நீர் கிடைக்கும். இப்போதுவரை அந்தத் தண்ணீர் எந்தப் பயனும் இல்லாமல் வீணாக்கப்பட்டு வருகிறது.

‘‘வீணாகப்போகும் முற்றிய தேங்காய் நீருக்கு விலை கொடுத்தால் களம் வைத்திருப்பவர்களும் ஆர்வத்துடன் சேகரித்து வைப்பார்கள்.’’
ஆனா, அதையே நாம் ஒரு தொழிலாக மாற்ற முடியும். முற்றிய தேங்காய் நீரில் படிந்திருக்கும் எண்ணெய்த் தன்மை காரணமாக அதன் சுவை மாறியிருக்கும். அதற்கான இயந்திரம்மூலம் அதைச் சுத்திகரிப்புச் செய்து பதப்படுத்திப் புட்டியில் அடைத்து ஏற்றுமதி செய்யலாம். நாள்தோறும் களங்களுக்குச் சென்று அங்கு கிடைக்கும் தேங்காய்நீரைச் சேகரித்துக்கொள்ளலாம். வீணாகிப்போகும் நீருக்கு விலை கொடுத்தால் களம் வைத்திருப்பவர்களும் ஆர்வத்துடன் சேகரித்து வைப்பார்கள்.

தேங்காய்ப்பால், வெர்ஜின் ஆயில், தேங்காய்த் துருவல், ரெடிமேடு சட்னின்னு மதிப்புக்கூட்டல் பொருள்களைத் தேங்காயிலிருந்து தயாரிக்க முடியும். அதற்கான சிறிய இயந்திரங்களையும் அதில் தயாரிக்கப்பட்ட தென்னை சார் பொருள்களையும், கோயம்புத்தூர் அடுத்த வேடபட்டியில் இயங்கிவரும் எங்கள் நிறுவனத்தில பார்வைக்கு வைத்துள்ளோம். எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும், அங்கு வந்து பார்வையிடலாம், ஆலோசனை பெறலாம்’’ என்றவர் நிறைவாக,
‘‘மா, கொய்யா, எலுமிச்சை போன்ற பழவகைகள் ஆண்டு முழுவதும் கிடைக்காது. பருவகாலத்தில மட்டும்தான் கிடைக்கும். ஆனா, தேங்காய் ஆண்டு முழுவதும் கிடைக்கும். தென்னைசார் தொழில்கள் செய்பவர்களுக்கு மூலப்பொருளான தேங்காய் உள்ளூரிலேயே கிடைக்கும்.

குறிப்பாகத் தேங்காய் விலை சிலசமயம் வீழ்ச்சி அடைந்துவிடுகிறது. தேங்காய் ஒன்றின் அதிகப்பட்ச விலையே 15 ரூபாய்தான். அதே நேரம், தேங்காய் நீர், வெர்ஜின் ஆயில், தேங்காய்ப் பால், துருவல் என்று மதிப்புக்கூட்டல் செய்து விற்பனை செய்தால், தேங்காய் ஒன்றுக்கு 40 ரூபாய் கிடைக்கும்’’ என்றபடி மகிழ்ச்சி பொங்க விடை கொடுத்தார் ராஜரத்தினம்.

சராசரி வியாபார வியூகங்கள்........

நண்பர் கணேஷ் , அவருடைய புது வியாபாரத்தை பற்றி விளக்கி, ஆலோசனை பெற அழைத்து இருந்தார்..
அவருடைய அந்த retail வியாபாரத்தின் முக்கிய இலக்கு ,அவரின் சுத்து வட்டாரம் அஞ்சு கிலோ மீட்டர் மக்கள் அவருடைய கடையை சார்ந்தே இருக்க வேண்டும் என்பது..அதில் பல்வேறு யுத்திகளை விவாதித்தாலும், consumer attraction ல் முக்கியமான விதி, 'குறைந்த விலை' என்பதில்தான் சுற்றி வளைத்து நின்றது. நிறைய விவாதங்களுக்கு அப்புறமா கடைசியில், முதல் வருடம் வாடிக்கையாளர் சேர்ப்பில் ( customer acquisition) மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்யபட்டது.
அதற்கு ,அவர் கொடுக்க முன் வந்த விலை,முதல் வருடம் லாபமில்லாமல் விற்று வாடிக்கையாளர்களை ஈர்த்து , தக்க வைத்து கொள்ளவேண்டும் என்பது..
ஆனால் , அதிலும் எனக்கு இருந்த ஒரு சிறு கேள்வியை முன்வைத்து சிந்திக்க சொல்லி வந்தேன் . அவ்வளவு அலசி ஆராய்ந்து வாங்க வரும் வாடிக்கையாளர் இதே போல ஒரு வருடம் கழித்து நீங்கள் விலையேற்றினால், உங்களுக்கு loyal customer ஆக இருக்க வேண்டிய அவசியம் customersக்கு என்ன என்பதை !! அவரும் யோசிக்க ஆரம்பித்தார்..
இதே போன்ற நிலையை பெரும் கார்பரேட் நிறுவனங்கள் வேறு விதங்களில் கையாளும்..,
இரண்டு உதாரணங்கள், முதல் ஒன்று OLA , JIO போன்ற நிறுவனங்கள் தங்கள் அதீத விலை குறைப்பில் போட்டியாளர்களை நிலை குலைய வைக்கும்.பின்னர் அதை முடிந்த அளவிற்கு நீட்டித்து ,தனக்கு எந்த போட்டி நிறுவனமும் இல்லாத படி செய்து பின்னர் ஆழமாக வேறூன்றி , அதன் மூலம் மார்க்கெட்டை தன் கைக்குள் monopoly யாக கைபற்றி எக்கசக்க விலை ஏற்றி இழந்த நட்டத்தை மீட்டி, அதீத லாபத்தை எட்டுவது ..
மற்றொரு உதாரணம் , Zomotto , swiggy போன்றவர்கள் consumer behavior யே மாற்ற வல்லவர்கள்.. கிட்ட தட்ட 30~50% discount offer கொடுத்து , even வெளியே உலாத்தும் மக்களை கூட, வீட்டுலேயே சோம்பேறிகளாக உக்கார வைப்பது ,அவர்களின் முக்கியமான முதல் வியாபார இலக்கு. அது எங்கே போய் முடியும் தெரியுமா ? ஒரு கட்டத்தில் ஓட்டல்களின் வியாபாரத்தில் பெரும் சதவீதத்தை இவர்கள் கைபற்றி இருப்பார்கள் . மட்டுமல்ல , மக்கள் எதை சாப்பிடவேண்டும் என்பதை கூட தங்கள்APP கள் மூலம் கட்டுபடுத்தி consumer behaviorயை கூட மாற்றி அமைப்பார்கள் ..
மேற்கூறிய உதாரணங்களில் மட்டுமே பாருங்க , நாம எங்க சிக்கபோகிறோம் என புரியும்.. சோம்பேறிகளாய் ஆன்லைனில் பொருட்கள் வாங்க கம்பெனிகள், அதற்காக தடையற்ற internet data plan களை கம்பெனிகள், வெளியே கால் பதித்தால் உங்களை கடத்தி செல்ல online வாடகை வாகனங்கள் ஏற்படுத்தி கொடுக்கக்கூடிய கம்பெனி.. நீங்கள் இனி எதுவும் உங்களுக்காக decide பண்ண இயலாது , அவர்கள் உங்கள் தேவைகளை , அதற்கான தீர்வுகளை தீர்மானிப்பார்கள்..
அட டே!! உணர்ச்சி வசபட்டு எங்கெங்கயோ சிக்கிட்டேன் .. நம்ப கணேஷ் இப்போது நான் கேட்ட கேள்வியில் தூங்கி இருப்பாரா தெரியவில்லை .ஒன்று அவர் தொழில் மிகசிறிய அளவில் quality யை முன்னிறுத்தி trail basis ல் இறங்க வேண்டும்..அல்லது அந்த கார்பரேட்கள் போல , பெரும் முதலீட்டில் அந்த சுத்துவட்டார அஞ்சு கிலோமீட்டர் ,சக வியாபாரிகள் சிதறி ஓடிகிற மாதிரி மெகா ப்ளானுடன் இறங்கவேண்டும் ..
சராசரி வியாபார வியூகங்கள் வழக்கொழிந்து விட்டது போல தோன்றுகிறது.

செவ்வாய், 10 செப்டம்பர், 2019

அறிவியல் ரீதியாக .....(உளவியல் )
ஆண்களின் தேவை,
 பெண்களுக்கு தேவை.
  1. பிரச்சனையை கையாள்வதில் வித்தியாசமான போக்கு. வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு என்று நடந்து கொள்வது, ஒரு விஷயத்தை உணர்வு ரீதியாக பார்க்காமல் காரண காரியம் யோசிப்பார்கள்.
  2. வேற்றுமை உணர்ச்சி பெண்கள் அளவிற்கு இல்லாத காரணத்தால், உதவியை எதிர்பார்க்கலாம்.
  3. எவ்வளவு மோசமான பெயரோ , பிரச்சனையோ, இழப்போ நேர்ந்தாலும், அடுத்தது என்ன என்று யோசித்து செயல்படுபவர்கள் ஆண்கள்.
  4. நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர்கள்.
  5. பொதுவாக வீட்டு பெண்களால் குடும்பம் பிரியும் ஆண்டிகள் முதல் அம்பானிகள் வரை . ஆகையால் ஆண்கள் விட்டு கொடுத்து செல்பவர்கள்
  6. ஒரு விஷயத்தை கூர்ந்து கவனிக்கும் சுபாவம் உள்ளவர்கள் . பேச்சு கம்மி என்பதால்
  7. மோசமான கோபம் உள்ளவர்களோ , தன்னை பற்றியே யோசிக்கும் சுயநல பெண்களோ , தான், தான் தான் உசத்தி என்கிற பெண்களோ, நல்ல கணவன் அமைந்து விட்டால் அவன் எப்பாடுபட்டும் அரண் போல் அவளை காக்கிறான் . அவன் அறிவு ஆன்ம ரீதியாக செயல்படுவதால்.
  8. பாவம் மன்னிப்போம் என்கிற சுபாவம் ஆண்களுக்கு அதிகம்
  9. பொறுப்பு ஏற்று கொண்டால் தலையே போனாலும் காப்பாற்றுவார்கள். உணர்வை கடந்தவர்கள்
  10. பெண்ணால் கூட ஆண் இல்லாமல் மாத கணக்கில் இருக்க முடியும், அவர்களால் சில நாட்களுக்கு கூட இருக்க முடியாது கஷ்டம் . இதனாலேயே எல்லா விதத்திலும் உதவுவர்
  11. ராமாயண காலம் முதல், அன்னை அவர்களை பிரிந்து ஒரு மாதம் இருப்பேன் என்று சொன்னாலும், தன்னால் ஒரு க்ஷணம் கூட முடியாது என்று ராமன் தேம்பி அழுததும் இதற்கு சான்று
  12. சில்லறை காரணங்களுக்கு குழப்பி கொள்ள மாட்டார்கள்
  13. அவர்கள் பெண்ணை பார்க்கும் விதமும், பெண்கள் பெண்களை பார்க்கும் விதமும் மிகவும் வித்தியாசம் . பெண்கள் தான் இன்னொரு பெண்ணை மிகவும் எடை போடுவர். இவர்களுக்கு அது எதுவும் தெரியாது
  14. பெண்களை சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்துவர்
  15. பெண்களை விட பல மடங்கு எளிமையானவர்கள் ஆண்கள்.
கடன் இல்லாதவராக இருப்பது உண்மையில் எவ்வளவு புத்திசாலித்தனமானது?

வீட்டுக் கடன், படிப்பிற்கான கடன் போன்றவை விதி விலக்குகள்.


பின்வரும் காரணங்களால், கடன் இல்லாமல் இருப்பது என்பது மிகவும் புத்திசாலித்தனமான விஷயம்.

பணத்தின் வரவு அதிகரிக்கும்;

உங்களுக்கு மாதா மாதம் பண வரவு அதிகமாக இருக்கும்; இதனை ஆங்கிலத்தில் Cash Flow என்று சொல்வார்கள். கடன் இருக்கும் போது, உங்களுடைய சம்பளத்தின் பெரும் பகுதி, கடன்களை அடைப்பதற்கே சென்று விடும். கடன்களை அடைத்தப்பின்பு, உங்களுக்கு மாதா மாதம் பணவரவு அதிகரிக்கும். அதிகரிக்கும் பணவரவின் காரணமாக, நீங்கள் அதிகமாக சேமிக்க முடியும். அதிகமாக முதலீடு செய்ய முடியும். சீக்கிரமாக முதலீடு தொடங்கும் பட்சத்தில், நீண்ட காலத்தில், நல்ல ஒரு பெருக்கத்தினை அடைய முடியும்.

கடன் என்ற அடிமைத்தனம் இருக்காது.

கவிசக்கரவர்த்தி கம்பர் சொன்னது போல், கடன்பட்டார் நெஞ்சம் போல், கலங்கினான் இலங்கை வேந்தன், கடன் பட்டவரின் மனநிலையானது அடிமைபட்டவரின் மனநிலையைப் போன்றதே. கடனைத் திரும்பித்தரும் வரை, கடன் பட்டவரை விட, கடனைக் கொடுத்தவருக்கே, கடனுக்கு அடகு வைத்த பொருளின் மேல் அதிக உரிமை உள்ளது. உதாரணமாக, ஒருவர் 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, 14 லட்சம் 90 ஆயிரம் கொடுத்துவிட்டு, மிச்சம் ரூபாய் 10 ஆயிரம் கட்ட முடியாமல் போனால் கூட, வங்கியினால் வீட்டினை ஜப்தி செய்து கடனுக்கான பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.

கடன் பட்ட பொருளுக்கு இரண்டு சொந்தக்காரர்கள் உள்ளனர். உதாரணமாக, கடனில் வாங்கிய வாகனம் அல்லது வீடு. பதிவு செய்யப்பட்ட சொந்தக்காரர்(Registered owner) மற்றும் சட்டப்படி சொந்தக்காரர்(Legal owner). சட்டப்படி சொந்தக்காரருக்கே அதில் அதிக உரிமை. கடன் கட்டாத சமயத்தில், சட்டப்படியான சொந்தக்காரர், கடன் பட்ட பொருளை பறிமுதல் செய்ய உரிமை உண்டு.
எனவே, கடன் கட்டும் வரை, கடன்பட்டவர், கடன் கொடுத்தவருக்கு அடிமையாகவே உள்ளார்.

மனதின் நிம்மதி அதிகரிக்கும்

கடன் முன்பு சொன்னதைப் போல், கடன் கட்டும் வரை, மனதிற்கு உளைச்சலைக் கொடுக்கும். நீங்கள் செய்யும் வேலை உங்களுக்கு பிடிக்காவிட்டால் கூட, கடன் தவணை கட்ட வேண்டுமே என்பதற்காக, வேண்டா வெறுப்பாக செய்ய வைக்கும். உங்களுடைய மேலதிகாரியிடம் வேலை இழக்க கூடாது என்பதற்காக, எல்லாவற்றுக்கும் தலை ஆட்டி, தன்மானத்தை குலைக்க வைக்கும் மன உளைச்சலை கொடுக்கும். கடன் இல்லாத பட்சத்தில், உங்களுடைய சுதந்திரம், உங்களுக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்கும். வாழ்க்கையை எதிர்கொள்ளும் தைரியத்தைக் கொடுக்கும். நிம்மதியாக உறங்க முடியும். உடல் நலம், மன நலம் மேம்படும்.

கடனின் அசல் மற்றும் வட்டியின் மூலம் அதிகமான பணத்தை இழக்க வேண்டாம்.

கடன் படும் அசல் மட்டுமன்றி, வட்டி உட்பட கட்டும் போது, கடன் பட்டதை விட அதிகமாக பணம் உங்களை விட்டு நீங்குகிறது. அந்தப் பணத்தை நீங்கள் முதலீடு செய்யும் பட்சத்தில், அதிக லாபம் ஈட்டி, உங்களுடைய பணத்தின் மதிப்பு கூடும். கடன் வாங்கும்போது, நீங்கள் முதலீட்டினை எதிர்பதமாக செய்கிறீர்கள். அதுவும் கூட்டு வட்டி போன்ற கடன் அட்டை கடன்களில் மாட்டிக் கொண்டால், நீங்கள் குழி பறித்துக் கொண்டு, படி ஏறி மேல வர முயற்சிப்பதைப் போல், கூட்டி வட்டி கடன் உங்களை தினம் தோறும் , மேலும் மேலும் கடனாளி ஆக்கும்.

பல்வேறு முதலீட்டுக்கான தங்கமான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

உங்களிடம் அதிகமான பணம் இருக்கும்போது, எந்த ஒரு முதலீடு செய்வதற்கும், எந்த ஒரு தங்க வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும் உங்களிடம் பணம் இருக்கும். உதாரணமாக, ஒரு பங்கு மிக குறைந்த விலையில் வரும்போது, அதனை வாங்குவதற்கு கையிருப்பு பணத்தை உபயோகிக்கலாம். அந்த பங்கு பின்னர் பன்மடங்கு பெருகி உங்களுக்கு உதவும். அந்த பங்கு பெருகாவிட்டாலும் கூட, நீங்கள் உங்கள் சொந்த பணத்தை போட்டதனால், கவலைப்பட வேண்டாம். நீங்களே கடனில் மாட்டியிருக்கும் போது, இந்த மாதிரி முதலீடுகளில் துணிந்தி இறங்க முடியாது. பல்வேறு வாய்ப்புகளை நழுவ விட வேண்டிவரும்.
தேவையான பொருட்களை மட்டும் வாங்குவீர்கள். அதிகமான பொருட்களை வாங்கி குவிக்க மாட்டீர்கள்.

உங்களிடம் பணம் இருந்தால், ஒரு பொருளை வாங்குவீர்கள். இல்லையென்றால் பணத்தினை சேர்த்து வைத்து வாங்குவீர்கள். கடன் வாங்கி, அவசியமில்லாத பொருளையும் சேர்த்து, பணக்கார மாயையை உண்டாக்கி கொள்ள மாட்டீர்கள். குழந்தைகளும் வீட்டின் நிதி நிலையை அறிந்து நடந்துக் கொள்வார்கள். கடன் வாங்கி எந்த பொருளும் வாங்கிக் கொள்ளலாம் என்ற மனநிலைமையைக் கொள்ளமாட்டார்கள்.

சில விதிவிலக்குகள்

வீட்டுக் கடன், படிப்பிற்கான கடன் போன்றவை விதி விலக்குகள். இவை பிற்காலத்தில் பல மடங்கு நமக்கு உதவும். வீட்டிற்கு வரிசலுகை அரசாங்கமே கொடுக்கிறது. அது அத்தியாவசிய தேவை. அந்தக் கடன்களை கூட சீக்கிரமே அடைத்து நிம்மதியை அடைவோம். மற்ற எல்லாவற்றுக்கும் பணம் சேர்த்து பின்னரே வாங்க வேண்டும். கடன் எந்த ரூபத்திலும் வேண்டாம்.

சிவக்குமார் -9944066681
நிதி ஆலோசகர்


திங்கள், 9 செப்டம்பர், 2019

மனைவி என்றொரு பூவுலக ஸ்வர்க்கம்
-----------------------------------------------------------------------
காலை ஐந்தரைக்கு மனைவியின் அலாரம் ஒலித்தது..உள்ளறையிலிருந்து எழுந்து ஓடி அந்த அலாரத்தை ஆஃப் செய்தேன்.
எழ முயன்ற மனைவியின் செவிகளில் ஒரு தென்றல் மோதுவதைப் போல மெல்லச் சொன்னேன். “ தூங்கு பெண்ணே...உனக்கான இனிய நித்திரை இன்னும் மிச்சமுள்ளது”
ஒரு நிலவு தனது இருப்பிடத்திற்கு திரும்புதல் போல எனது இல்லாள் சுகமான உறக்கத்திற்குள் மிதந்து சென்றார்...
கதவை நிதானமாய்த் திறந்தேன்...அதன் கீச் சப்தம் எனது மனைவியை தொல்லை செய்து விடக் கூடாதே....அந்தப் பூவின் நித்திரை கலைந்து விடக் கூடாதே...
வாசலில் ஒரு வசந்த காலம் இறைந்து கிடப்பது போல தினமலர் பரவிக் கிடந்தது....பிறந்த குழந்தையை பெண் மருத்துவர் ஆசையாய் தூக்குதல் போல செய்தித்தாளை எடுத்து வீட்டிற்குள் நுழைந்து ப.சிதம்பரம் சிறையில் கஞ்சி குடித்து கட்டிலில் தூக்கம் வராமல் புரண்டு படுத்து வெஸ்டர்ன் கழிப்பறையில் அமர்ந்து தேம்பியழுத செய்தியை வாசிக்கையில் “பாலு ! வாங்கிக்கங்கம்மா ! பாலு” என்ற தண்ணீரில் பால் கலக்கும் தயாள பால்காரரின் ஓசை...
கிச்சன் நுழைந்து பாத்திரத்தை எடுத்து வாசல் தாண்டி “ அரை லிட்டர்“ என்றேன்...ஒரு கார்காலம் பூமி மீது மழைத் துளிகளை ஊற்றி விடுவது போல பாலை ஊற்றுகிறார்...அவரை நன்றியுடன் நோக்குகிறேன்.. எல்லையில் காவல் செய்யும் கார்கில் வீரனுக் கொப்பானது இவர் தியாகம்....எந்த மழையிலும் பனியிலும் புயலிலும் பால் தரும் ஈர மனசுக்காரர்.
சமையலறை எனக்கான திகைப்புகளால் நிறைந்து கிடந்தது....பாலை சிறிது மிச்சம் வைத்து விட்டு மற்றுமொரு கிண்ணத்தில் நிரப்பினேன்...தேயிலைத் துகளைத் தேடினேன்....தொலைந்த குழந்தையை நெரிசலான பூங்காவில் தேடியலையும் தாயாக அந்த தேயிலையைத் தேடுகிறேன்...ஆங்கோர் நெகிழி போத்தலில் அது அடைபட்டிருக்கக் கண்டேன்.
எடுத்து அணைத்துக் கொண்டேன். கேஸ் ஸ்டவ்விற்குள் பதுங்கியிருந்த அக்கினி ஜுவாலைகளுக்கு விடுதலை தந்து எரிய விட்டென்..அதன் மேல் பால் கிண்ணம்..
இஞ்சியைத் தேடி குளிர்சாதனப் பெட்டிக்குள் நுழைந்து மீண்டேன்...சிறு துண்டு காணக் கிடைத்தது. எனது மனைவி தயாரிக்கிற தேநீருக்கு தனிச்சுவை தரும் இந்த இஞ்சித் துண்டுகள்..
ஒரு பூரிக்கட்டையை எடுத்து அதன் நுனிப்பகுதியால் இஞ்சியைத் தட்டி துகள்கள் ஆக்குகிறேன்...இடிந்த கட்டிடத்திற்குள்ளே சிதைந்த கிடக்கும் மனித உருவங்களாக இஞ்சி இறந்து கிடந்தது..
பால் கொதிக்கிறது...தேயிலையை உத்தேசமாய் கொட்டுகிறேன்...எனது மனைவியின் மேல் வைத்திருக்கிற காதலுக்கு எத்தனை கரண்டி தேயிலைத் துகள் கொட்டினால் அவருக்குப் பிடிக்கும் என்கிற சூட்சமம் தெரிந்தே உள்ளது....
தேயிலை பாலுடன் கலக்கிறது..தமிழிசை கவர்னர் ஆனதும் அவரது அப்பா குமரி ஆனந்தன் சிரித்தது போல அந்தப் பாத்திரத்துப் பால் தேயிலையுடன் இணைந்து சிரிப்பின் விநோத சந்தங்களை எழுப்பிக் கொண்டிருந்தது....கர்நாடகாவிற்கு மூன்று துணை முதல்வர்களைத் தெரிவு செய்து அனுப்பிய அண்ணன் அமித்ஷா போல் தேயிலை பால் கூட்டணிக்குள் இஞ்சியைத் திணிக்கிறேன்.....வட்ட பௌர்ணமியின் வடிவம் மிச்ச நாட்களில் மாறி விடுவது போல தேநீரின் வர்ணம் மாறி விடுவதை எனது விழிகள் விரியக் கவனித்தேன்.
கைக்கெட்டிய தூரத்து முதல்வர் பதவி கடைசி வரை கிடைக்காமல் போகுமோ எனக் கொதிக்கிற மு.க.ஸ்டாலின் இதயம் போல அந்த தேநீர் கொதிக்கிறது...நுரை பொங்கி மேலே வருகிறது..பாத்திரம் தாண்டி வரப்பார்க்கும் அந்த திரவத்தை ஹாங்காங் போராட்டக்காரர்களை தடி கொண்டு அடித்து அடக்க நினைத்த சீன போலிஸார் போல அடக்க முயல்கிறேன்.நெருப்பைக் குறைக்கிறேன்...எழும்பிய தேநீர் வேகம் குறைந்து உள்ளே போகிறது....அடங்கி விடுகிறது...
திருமண வைபவத்தின் தாலி கட்டும் காட்சியில் பூக்களை வீசும் பார்வையாளன் போல இறுதியாக சிறிது ஜீனியை தூவி விடுகிறேன்....வறண்ட வாழ்க்கைக்கு வர்ணம் பூசும் காலம் கடந்து கிடக்கிற கவன்மென்ட் வேலையாய் அந்த வெள்ளை சீனி தேநீருடன் கலந்து சங்கமம்.
நாம் போட்ட டீ எப்படி இருக்கிறதோ என்று தான் முதன்முதலில் எடுத்த புகைப்படத்தை பிரிண்ட் செய்து பார்க்கிற போட்டோ கிராபர் போல தேநீரை சுவைக்கிறேன்..அந்தத் துளிகள் உலகின் மொத்த ருசியையும் தனக்குள் ஒளித்து வைத்திருப்பதை அறிந்து பயங்கர வியப்பு எனக்குள் படர்கிறது..
நாமா இத்தனை சுவையான தேநீர் செய்தோம் என்று எனக்குள் எழுந்த கர்வத்தை அடே ! உன் மனைவி மீது நீ கொண்ட நேசமே இந்த தேநீருக்கான சுவையாய் பரிணமித்துள்ளது என்று சொல்லி அடக்குகிறது ஞானம்.....
ஒரு சிறு டம்ளருக்குள் அந்த தேநீரின் சுவையைப் பதுக்கி வைத்து எடுத்துச் செல்கிறேன்....ஒரு மாபெரும் பாலத்தை இரண்டு கடல்களுக்கு நடுவே கட்டிய பொறியாளனின் ஆனந்தம் எனக்குள்...
மனைவி இன்னும் தூக்கத்தின் பிடியில் கைதியாய் இருக்க அவரது சிறையிருப்பை திருப்புகிறேன்.....“என்னங்க”
“இந்தா டீ...உனக்காக நான் எனது அத்தனை திறமைகளையும் கொட்டி உருவாக்கிய டீ”
மெல்லப் பருகுகிறார்...அவரது விழிகள் வானத்தை விடவும் அகலமாய் திறக்கின்றன...
“நீங்க போட்டதா ! சூப்பர்”
நான் பிறந்ததன் பயனை அக்கணத்தில் அடைந்ததாய் உணர்ந்து நின்றேன்....
மனைவியை நேசிப்பவர்கள் உலகின் உச்ச பட்ச சந்தோஷக்காரர்கள் என்பதை அறிந்து கிறங்கிப் போய் சுவர் மேல் சாய்ந்தேன்.
வீட்டுக்கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய 10 முக்கிய அம்சம்.....
இன்றைக்குச் சொத்து வாங் குபவர்களில் பெரும்பாலா னோர், வீட்டுக்கடன் மூலமா கவே வாங்குகிறார்கள். வீட்டு க்கடனுக் குச் செல்லும்போது பல விஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும்.  வீட்டுக்கடன் வாங்கும் போது கவனிக்க வேண்டிய
10 முக்கிய அம்சம் .
1. மார்ஜின் மணி!
தனி வீடோ அல்லது அடுக் குமாடிக் குடியிருப்போ, எ தை வாங்குவதாக இருந் தாலும் மொத்த தொகைக் கும் கடன் தர மாட்டார்கள். சுமார் 20% தொகையை வீ டு வாங்குபவர் தன் கையி ல் இருந்துதான் போடவே ண்டி இருக்கும். சிலர் இந்த மார்ஜின் தொகைக்கு பெர்சனல் லோன் வாங்குகிறார்கள். இதனால், வீட்டுக்கடனுக்கான இ எம்ஐ, பெர்சனல் லோன் இ எம் ஐ என அதிகத் தொகை சம்ப ளத்தி லிருந்து போகும். அந்த வகையி ல் பணச் சிக்கலில் மாட்டிக்கொ ள்ளும் வாய்ப்பு இருக்கிறது.
இதைத் தவிர்க்க இந்த மார்ஜின் தொகையை முன்னரே ஏற் பாடு செய்துகொள்ள வேண்டும் அல்ல து கடன் தொகையை க் குறைத்து சிறிய வீட்டை வாங்கலாம். ம னை வாங்கி வீடு கட்டினால் இப் போது சிறியவீடாகக் கட்டிக்கொண்டு, பிற்பாடு அந்தவீட்டை விரிவாக்கம் செய்யலாம். வீ ட்டுக்கடன் மாத தவணைகை க்குக் கிடைக்கும் சம்பளத்தி ல் 40% – 45%தைத் தாண்டாத வாறு இருத்தல் அவசியம்.
2. கடன் வாங்கும் வங்கி / நிறுவனம் தேர்வு!
இன்றைக்குப் பொதுத்துறை வங்கிகள், பழைய தலைமுறை தனியார் வங்கிகள், புதி ய தலைமுறை தனியா ர் வங்கிகள், தனியார் வீ ட்டு வசதி நிறுவனங்க ள், பொதுத்துறை வீட்டு வசதி நிறுவனங்கள் எ னப் பல வங்கிகள் வீட்டு க் கடன்வழங்குகிறது .
அரசு சார்ந்த நிறுவனங்களில் கடன் வாங்க, நீங்கள் அவர்க ளைத் தேடி போகவேண்டி இருக்கும். தனியார் என்றா ல் உங்களின் வீடுதேடி வந் து கடனுக்கான எல்லா ஏற் பாடுகளையும் செய்து கொ டுத்து விடுவார்கள். பொது வாக, தனியார் வங்கிக ள் / தனியார் வீட்டு வசதி நிறு வனங்களை விடப் பொதுத் துறை வங்கிகள் / பொதுத் துறை வீட்டுவசதி நிறுவனங்களில் கடனுக்கான வட்டி சுமார் 1% குறைவாக இருக்கும்.
வீட்டுக் கடன் என்பது ஒரு மு றை செய்யப்படும் விஷயம் என்பதால் வங்கி அமைந்திரு க்கும் இடத்துக்கான தொ லைவை பார்க்க வேண்டிய தில்லை. வங்கி சேமிப்புக் க ணக்கு வைத்திருக்கும் வங்கிதான் நம் வீடு அல்லது அலுவ லகத்தின் அருகில் இருக்க வேண்டும். வீட்டுக் கடனுக்கு இது தேவை இல்லை.இ.சி.எஸ், முன்தேதியிட் ட காசோலைக ளைத் தருவதன்மூலம் தூரம் ஒரு சுமையாக இருக்காது. வச தி மற்றும் வட்டி விகிதத்தைக் கவனித்துத் தூ ரமாக இருக்கும் வங்கி / நிறுவனத்தையும் தேர்வு செய்து வீட்டுக் கடன் வாங் கலாம்.
3. வீட்டுக் கடனுக்கான ஒப்புதல்!
வீட்டுக் கடனுக்கு ஒப்புதல் அளிப்பது வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்தின் கிளை யா அல்லது அதன் மத்திய ப ரிசீலனை மையமா (சென்ட்ர லைஸ்டு பிராசஸிங் சென்ட ர்) என்பதைக் கவனிப்பது முக் கியம். கிளை அலுவலகமே க டன் வழ ங்கிவிடும் என்றால் விரைவாகக் கடன் கிடைத்து விடும். வங் கிகளின் மத்திய பரிசீலனை மையத்தில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்தவ ர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அந்தக் கூட்டத் தில் உங்களுக் குக் கடன் கிடை க்க அதிக நாள் ஆகக்கூடும். எ ன வே, வங்கிக் கிளைகளே கட னுக்கு ஒப்புதல் வழங்கும் விதமாக இருப்பதைத் தேர்ந்தெடுத்து கடன் வாங் குவது நல்லது.
4. கட்டணங்கள் முக்கியம் !
வீட்டுக்கடன் வாங்கும் போ து பரிசீலனைக் கட்டணம், ஆவ ணக் கட்டணம் என வங்கிகள்/வீட்டு வசதி நிறு வனங்கள் குறிப்பிட்ட சத விகிதக் கட்டணத்தை வசூ லிக்கும். இவை தவிர, பில்டிங் வேல்யூவேஷன், லீகல் ஒப்பீ னியன் எனத் தனியாகக் கட் டணம் வாங்கும் வங்கிகளு ம் இருக்கின்றன. சில வங்கி களில், முதலில் வாங்கப்படு ம் பரிசீலனைக் கட்டணத்தி லே இந்த வேலையும் அடங் கி விடும். அந்த வகையில், மொத்தமாகக் கட்டணங்கள் எல்லாவற்றையும் கூட்டி, எந்த வங்கியில் குறைவாக இருக் கிறதோ, அதில் கடன் வாங்கும் முயற்சியை மேற்கொள்ள லாம்.
5. கான்ட்ராக்டரின் தரம்!
நீங்கள் வீடு வாங்கப்போகும் புர மோட்டர்/ பிளான்/ கான்ட்ராக்டரி ன் தரம் மற்றும் நம்பகத்தன்மை யை அறிந்து அதன்பிறகு தேர்வு செய்வது நல்லது. இல்லை எனில் சொன்ன நேரத்தில் உங்களுக்கு வீட்டை முடித்துச் சாவியைத் தருவதில் சிக்கல் ஏற்பட வாய் ப்புள்ளது. எனவே, நீங்கள் வீடு வாங்கப் போகும் புரமோட்டர் அல் லது உங்களுக்கு வீடு கட்டித் தரப் போகிற பில்டரை பற்றி நன்றாக விசாரித்து அதன் பிறகு முடிவு செய்யுங்கள்.
6. கடனுக்கான காசோலை!
மிக முக்கியமாகக் கவனிக்க வே ண்டியது, வீட்டுக் கடனுக்கான கடன் காசோலை யை புரமோட் டர்/பில்டர்/கான்ட்ராக்டருக்கு வ ங்கி அல்லது வீட்டுவசதி நிறுவ னம் தரும்போது உங்களு க்குத் தகவல் தெரிவித்து விட்டுதான் தர வேண்டும் என்பதை ஆரம்பத்தி லே தெரிவித்து விட வேண்டும். இல்லையெனில் பில்டரோ/ கான்ட்ராக்டரோ வீட்டு வேலை யைச் சரிவர முடிக்காமல் உங் களுக்குத் தெரியாமலேயே ப ணத்தை வாங்கிச் சென்று விடு வார். எனவே, ஜாக்கிரதை!
7. வட்டி விகிதம்!
வீட்டுக் கடனை பொறுத்தவரை யில், நிலையான (ஃபிக்ஸட்) வட்டி, மாறுபடும் (ஃப்ளோட்) வட்டி என இருவிதமாக வட்டி விகிதம் இருக்கின்றது. நிலை யான வட்டி என்பது முதலில் வரும் 3 – 5 வருடங் களுக்கு மட்டும்தான். அதன்பிறகு அப் போதுள்ள நிலையான வட்டி அ ல்லது ஃப்ளோட்டிங் வட்டியை த் தேர்வு செய்துகொள்ளலாம்.
ஃப்ளோட்டிங் வட்டி விகிதம் என்பது கடன் சந்தை வட்டி விகி த மாற்றத்துக்கு ஏற்ப ஏறும், இறங்கும். நிலையான மற்றும் மாறுப டும் வட்டி விகிதத்துக்கு இடையே சு மார் 1.52% வித்தியாசம் இருப்பதால் தற் போதைய சூழ்நிலையில் ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தைத் தேர்வு செய்வது லா பகரமாக இருக்கும். பொதுவாக, கடனு க்கான வட்டி விகிதம் குறையும் சூழ்நி லை நிலவினால், ஃப்ளோ ட்டிங் வட்டியைத் தேர்வு செய்வது புத்திசாலித்தனம்.
மேலும், நீங்கள் மு ன்னணி நிறுவனத் தில் வேலை பார்ப்ப வராக இருந்தால், சிபில் ரேட்டிங்கில் அதிக ஸ்கோர்கள் இருந்தால் வட்டியி ல் பேரம் பேசி குறைக்க முடியும். வட்டியை கவனிக்கும் அ தே நேரத்தில், 1 லட்சம் ரூபாய்க்கு எவ்வளவு இஎம்ஐ என்ப தையும் கவனியுங்கள். கடனுக்கான வட்டியை, கடன் தொகை குறையக் குறையக் கணக்கிடும் முறை, ஆண்டுக்கு ஒ ருமுறை வட்டி கணக்கிடும் முறை என இரண்டு முறை இ ருக்கின்றன. கடன் தொகை குறையக் குறையக் கணக்கிடு ம் முறையில் வட்டிக்குச் செல் லும் தொகை குறைவாக இருக் கும். அந்த வகையில் எந்த வங் கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்தில் இஎம்ஐ குறைவாக இருக்கிறதோ, அதைத் தேர்வு செய்யுங்கள்.
8. கடனைத் திரும்பக் கட்டும் காலம்!
வாங்கிய கடனை குறைந்த ஆண்டுகளில் 5-10 ஆண்டுக ளில் கட்டினால், மாத தவ ணை அதிகமாக இருக்கும். இ துவே அதிக ஆண்டுகளில் 15-20 ஆண்டுகளில் கட்டினால் மா த தவணை குறைவாக இருக்கும். அதேநேரத்தில், குறைந்த ஆண்டுகளில் கட்டினால் வட்டிக்குச்செல்லும் தொ கை குறைவாக இருக்கு ம். ஆண்டுகள் அதிகரிக்க அதிகரிக்க, வட்டிக்கு போகும் தொகை அதிக மாக இருக்கும். இவற் றை அலசி ஆராய் ந்து உங்களால் கட்டக்கூடிய தொகையை இஎம்ஐ-ஆகக்கேட்டுப் பெறுங்கள். பிற்பாடு சம் பளம் உயர்ந்தபிறகு அதிகத் தொகையைக் கட்டுவதன் மூல ம் வட்டியை மிச்சப்படுத்தலாம்.
9.கடன்தொகை வழங்கும் நிலை..
வீடு கட்டுவது என்றால் அஸ் திவாரம், பிளிந்த், நிலை, ரூப் எனப் பலவாறாகப் பிரித்து வீட் டைக் கட்ட கடன் தொகையை வழங்கும். சில வங்கிகளில் வங்கி மேலாளர்களே வீட்டைப் பார்த்து கடன் தொகையை வழங்கிவிடுவார்கள். இது போன் ற நிலையில் வீட்டு வேலை தடைபடாது.சில வங்கிகளில் இன்ஜினீயர்க ள் வந்து பார்த்து சர்ட்டிஃ பிகேட் தந்தால் தான் அடுத் தநிலைக் கடனைத் தருவா ர்கள். அப்போது காலதா மதம் ஏற்படக்கூடும். இது போன்ற வங்கிகளைத் தவிர்ப்பது நல்லது. இந்த விஷயத்தை வங்கி மேலாளரிடம் ஆரம்பத்திலேயே கேட்டுத் தெளிவு படுத் திக்கொள்வது நல்லது.
10. மாரடோரியம் பீரியடு!
வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டு வது எனில் கட்டுமானம் முடி ய எப்படியும் 18 மாதம் ஆகிவிடும். இந்தக் காலகட்டத்தில் மொத்த வீட்டுக் கடன், 3 அல்லது 4 பிரி வாகப் பிரித்து வழ ங்கப்பட்டிரு க்கும். இந்தக் காலத்தில் வீட்டுக் கடனுக்கான வட்டி சேர்ந்திருக் கும். இதனை ‘ப்ரீ இஎம்ஐ’ என் பார்கள். இந்த வட்டியை மாதா மாதம் கட்டி வருவது நல்லது. இல் லையெனில் இந்த வட் டியையும் வீட்டுக் கடனாக மாற்றி விடுவார்கள். நீங்க ள் கூடுதல் இஎம்ஐ கட்ட வேண்டிவரும்”.
சிவக்குமார் .....9944066681......(.கோயம்புத்தூர் ..பொள்ளாச்சி ...உடுமலைபேட்டை )....

ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

இன்று உடுமலையில் .....

உடுமலை சுற்றுசூழல் இயக்கம் ,ரோட்டரி கிளப் தேஜாஸ் ..கலிலியோ அறிவியல் கழகம் ...இணைந்து விக்ரம் சாராபாய் 100 -வது பிறந்தநாளை கொண்டாடியது ...

இன்று நடைபெற்ற விழாவில் அறிவியல் விஞ்ஞானி B .A .சுப்பிரமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தது உடுமலையின் இளம் தளிர் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்துவத்துக்காக நிகழ்வு அமைந்தது ...


விக்ரம் சாராபாய் 100 -வது பிறந்த நாள் ....

இன்றைய இந்தியா விண்வெளியில் எவ்வளவோ சாதிக்கின்றது, வல்லரசு நாடுகளுக்கு இணையாக அதனால் வான்வெளியில் பாயமுடிகின்றது, செயற்கைகோளை நிறுத்துதல் ஏவுகனை மூலம் அதை தகர்த்தல் இன்னும் கிரகம் விட்டு கிரகம் பாய்தல் என எந்த நாட்டுக்கும் இந்நாடு போட்டியாய் நிற்கின்றது
இதற்கெல்லாம் அடித்தளமிட்டவன் அந்த இயற்பியல் மனிதன், அந்ந மாபெரும் விஞ்ஞானியின் 100ம் பிறந்த நாள் இன்று
டாக்டர் விக்ரம் சாராபாய், இந்திய அறிவியலின் தந்தை
அகமதாபாத்தின் பிறப்பு அவர், அவர் குடும்பம் செல்வந்தமாயும் அதே நேரம் நாட்டுபற்று உள்ளதாகவும் திகழ்ந்தது. காந்தி முதல் பல தலைவர்கள் அடிக்கடி வந்து சென்ற வீடு அது
அந்த பணக்கார குடும்பத்தில் பிறந்தார் விக்ரம், தன் ஆலைகளை நிர்வகிக்க லண்டன் சென்று படித்தும் வந்தார், ஆனால் மனம் அறிவியல் பால் திரும்பிற்று
அந்நேரம் சர்சிவி ராமன் புகழ்பெற்ற விஞ்ஞானியாயிருந்தார் காஸ்மிக் கதிர்களை ஆய்வு செய்ய அவருடன் பணியாற்றினார். இமயமலை முதல் பல இடங்களில் ஆய்வுகளை அன்றே செய்தார்
இயற்பியலுக்காக மறுபடியும் லண்டன் சென்று பட்டம் பெற்றார் மறுபடியும் அதே ஆய்வு, அகமதாபத்தில் அவரால் திறக்கபட்டது "இயற்பியல் மையம்"
அந்த மையம் பின்னர் சுதந்திரம் அடைந்தபின் காஷ்மீர், கொடைக்கானல், திருவனந்தபுரம் என பல இடங்களில் திறக்கபட்டது
பின்னாளில் அது ராக்கெட் மையங்களாக மாறின, தும்பா முதலானவை அப்படித்தான்
முதலில் சாராபாய் தன் இயற்பியலை நூற்பாலை வகைக்கும் காஸ்மிக் கதி போன்ற வகைக்கும் இன்னும் சிலவற்றுக்கும் செய்து கொண்டிருந்தார், முதலில் வான்வெளி பக்கம் வரவில்லை
விண்வெளி புரட்சி 1957ல் நடந்தது ரஷ்யாவின் ஸ்புட்னிக் உலகின் முதல் விண்வெளி ராக்கெட்டாக பறந்தது, அதன் தாக்கம் உலகெல்லாம் எதிரொலித்தது
இந்தியா விண்வெளி யுகத்துக்கு வந்தது, அமைதிபுறாவானே நேரு 1962 யுத்தத்துக்கு பின்பு ராணுவபக்கம் திரும்பினார், அவருக்கு பின்பு இந்திரா யுகம் வந்தது
இந்திரா விண்வெளி திட்டங்களை முதலில் ஹோமி ஜஹாங்கீர் பாபா என்பவரிடம் ஒப்படைத்திருந்தார். பாபா அடிப்படையில் ஒரு அணுவிஞ்ஞானி ஆனால் ISRO என்ற அமைப்பின் தலைவராக அவர்தான் இருந்தார்
பாபா திடீரென இறந்தார், அந்த மர்மம் இன்றுவரை தீரவில்லை. இந்தியாவின் அணுசக்தி தந்தையும் மிக பெரும் விஞ்ஞானியானுமான அவரின் திடீர் இறப்பு அறிவியல் ரீதியாக பெரும் பின்னடைவு
அந்த இடத்தை நிரப்ப பணிக்கபட்டார் சாராபாய், பாபாவின் இடத்தை மிக நுட்பமாக நிரப்பினார் அவர்
ஆரியபட்டா எனும் இந்தியாவின் முதல் செயற்கைகோள் அவராலே வெற்றிகரமாக ஏவபட்டது, அந்நாளில் அது பெரும் சாதனை
வெறும் சாமியார் தேசம், பாம்பாட்டி நாடு என கருதபட்ட தேசம் தன் செயற்கை கோளை அனுப்பியபொழுது உலகம் திரும்பி பார்க்கத்தான் செய்தது
மாபெரும் அத்தியாயத்தை தொடக்கி வைத்தார் சாரபாய், நடக்கவே நடக்காது என்ற விஷயங்கள் அவராலே சாத்தியமாயின‌
இவரின் சீட கோடிகள்தான் சதீஷ் தவானும், அப்துல் கலாமும்
நல்ல விஞ்ஞானி அற்புதமான தேசபக்தியும் அறிவும் தரமும் நிறைந்த் விஞ்ஞானிகளை உருவாக்கமுடியும் என்பதற்கு அவர்தான்
எடுத்துகாட்டு
இன்று அந்த மாமனிதனின் 100ம் பிறந்த நாள்
இந்தியாவில் ஏகபட்ட பல்கலைகழகமும் கல்வி நிலையங்களும் அவரால் உருவாயின, இந்திய மேலாண்மை கழகம் அவரால் உருவாக்கபட்டது
ஏகபட்ட கிராமங்களில் பெரும் கல்விபுரட்சி அவரால் உருவானது
அவர்வழி வந்த கலாமும் அவர்வழியிலே கல்வி போதித்தார், போதித்துகொண்டே இறந்தார்
இந்தியாவினை அறிவியலில் உயர செய்து, அந்த தேசத்தை விண்வெளிக்கும் அழைத்து சென்ற அந்த மாமனிதனின் 100ம் பிறந்தநாளில் தேசம் அவருக்கு ஒன்றுபட்ட மனதுடன் அஞ்சலி செலுத்துகின்றது
அம்மனிதன் தொடங்கிவைத்த யுகமே இன்று வான்வெளி முழுக்க இந்திய கோள்களும், ராணுவம் முழுக்க பலமான ஏவுகனைகளுமாய் நிற்கின்றது
சந்திராயனும் நிலாவினை நெருங்கி கொண்டிருக்கின்றது, சந்திரனின் ஒரு பகுதிக்கு ஏற்கனவே உலக நாடுகளால் விக்ரம் சாராபாயின் பெயர் சூட்டபட்டிருக்கின்றது
அந்த பகுதியினை நோக்கி செல்கின்றது சந்திராயன் 2
விக்ரம் சாராபாய்க்கு அஞ்சலி செலுத்தியபடியே அடுத்த தலைமுறைக்கான வான்வெளி ஆய்வில் களமிறங்கி இருகின்றது இந்தியா
சாராபாய், சதீஷ் தவான், கலாம் வரிசையில் பலர் வந்தார்கள் இன்னும் வருவார்கள் தேசம் அவர்களால் நலமும் வளமும் பெறும்.
இன்றைய மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேணடிய பெரும் விஞ்ஞானி சாராபாய், இம்மாதிரி பெரும் விஞ்ஞானிகளும் தேசாபிமானிகளும் மாணவர்களுக்கு வழிகாட்டியாய் இருத்தல் வேண்டும், அவர்களை மாணவ சமூகம் படித்தல் வேண்டும்
வெற்று அரசியல் கும்பலும், வெறுப்பு அரசியலும், சினிமாவும் இதர டிவி குப்பைகளும் மாணவ சமூகத்துக்கு ஒருநாளும் நல்ல விளைவுகளை கொடுக்காது, அதனால் தேசத்துக்கும் நல்ல முத்துக்கள் கிடைக்காது
விருதுகளும் கௌரவங்களும்
இவர் மரணமடைந்து ஒரு வருடம் ஆகிய நிலையில் 1972ம் ஆண்டு, இந்திய தபால் துறை இவருடைய புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் தலையை வெளியிட்டு சிறப்பித்தது. அந்த அஞ்சல் தலையில் தும்பா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட ரோகினி ஏவுகணையின் புகைப்படத்துடன் கூடிய சாராபாயின் படம் இடம் பெற்றிருந்தது.

விக்ரம் சாரபாயின் 100ம் பிறந்த நாளை ஒவ்வொரு பள்ளியும் கல்லூரியும் பல நாட்கள் கொண்டாடி , அப்பெருமகனை மாணவர் மனதில் பதிய செய்தல் வேண்டும்
கல்வி கூடங்களும் பொறுப்பான ஆசிரியர்களும் அந்த பெருமகனை தேசபற்றோடு மாணவர்கள் மத்தியில் பதியசெய்தலே அவருக்கான உண்மையான அஞ்சலி....

இன்று நடந்த நிகழ்வுகள் ..

காலையில் ..உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் ...கடந்தகால வரலாறை நோக்கி ...
மாலையில் ...உடுமலை 
கலிலியோ அறிவியல் கழகம் ...அறிவியல் நோக்கி ...

தேடல்கள் வாழ்க்கையில் அவசியம் ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 
9944066681



வியாழன், 5 செப்டம்பர், 2019

இன்று கோவையில் நடந்த மு .கண்ணப்பன் அவர்களின் "வாழ்வும் பணியும் " நூல் வெளியிட்டு விழாவில் ..தளபதி அவர்கள் கலந்துகொண்ட விழாவில் ...நூல் ஆசிரியர் வழக்கறிஞர் சுந்தரம் அவர்களுடன் ...கோவையில் சந்தித்தது பொழுது .

மாப்பிள ..இந்த நூல் முன்னோட்டம் எல்லாம் ..அடுத்த வரப்போகும் நமது வரலாற்று நூலுக்கான ...முன்னோட்டம் ...பதிவுகளை குறைத்துக்கொள்ள முயற்சிக்கிறேன் சார் ..

ஆசிரியர் தினத்தில் ஒரு வேண்டுகோள்.
பொதுவாக வாசிப்புச் சூழல் குறைந்து வருவதாக அனைவரும் குறைபட்டுக்கொள்ளும் காலம் இது. அதற்குப் பல காரணங்களை நாம் சொல்லலாம். எதைக்காட்டிலும் முக்கியமான காரணம் ஒன்று உண்டு. இன்றைய ஆசிரியர்கள் படிப்பதில்லை என்பதுதான் அது. அல்லது, படித்ததை மாணவர்களைக் கவரும் வகையில் எடுத்தியம்புவதில்லை. நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்குபோது ஒரு ஆசிரியர் 'தாய்' நாவலைப் பற்றி மிகவும் சிலாகித்துப் பேசினார். உலகின் மிகச்சிறந்த10 நாவல்களில் ஒன்று என்றார். அதைப் படிக்காத ஒருவனின் வாழ்வு முழுமையடையாது என்றார். இதை அவர் சொல்லி 5 ஆண்டுகள் கழித்து, நடைபாதைக் கடைகளில் தேடிப்பிடித்து வாங்கியது தாய் நாவல்தான். ரஷியாவின், மாஸ்கோ வெளியீடான அது இப்பொழுதும் என் சேமிப்பிலுண்டு. இதை ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், ஆசிரியர்கள் வகுப்புகளுக்கிடையில் ஒரு தகவலாக, மாணவர்களுக்கு நல்ல நூல்களையும் அறிமுகம் செய்துவிட்டால், அது அவர்களின் மனதில் நல் விதையாகப் பதியும். அவர்களின் பிற்காலங்களில் நூல்களைத் தேடி வாங்கிப் படிக்கும் பழக்கத்திற்கு வழிவகுக்கும்.
20 ஆண்டுகளுக்கும் முந்தைய காலங்களோடு ஒப்பிடும்போது, இப்போது ஆசிரியராக உள்ள இளம்வயதுடையவர்கள் மற்றும் கல்லூரி படிக்கும் இளைஞர்கள் அனைவரும் ஆங்கில வழிக் கல்வியையே முதன்மையாகப் படித்து முடித்தவர்கள். அவர்களுக்கு தமிழார்வம் இருந்தாலும் அதில் புலமையோ, வகுப்புகளில் அதிகம் பயன்படுத்தும் மொழியாகவோ தமிழ் இல்லை. இவர்களின் அடுத்த தலைமுறைக் குழந்தைகள் முழுமையாக தமிழைவிட்டு விலகிவிடும் அபாயகரமான காலகட்டம் இது. இந்தச் சூழலை, ஓர் அரசே ஊக்குவிப்பதும், கண்டுகொள்ளாமல் இருப்பதும் திட்டமிட்டு நடக்கும் பெரும் மொழித் துரோகம்.
அனைத்தையும் கடந்து நாம் அன்றாடம் சந்திக்கும் பல நம்பிக்கைக்குரிய நல் ஆசிரியர்கள் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் அதன் விகிதாச்சாரம் மிகவும் குறைவாக உள்ளது என்பதுதான் நமது கவலை.
மாணவர்களின் எதிர்காலம், ஆரோக்யமான சமூகத்துக்கான எதிர்காலம், தமிழின் எதிர்காலம், தமிழர்களின் எதிர்காலம் என அனைத்தும் நம் கையில்தான் உள்ளது எனும் உண்மையைப் புரிந்து இன்றைய ஆசிரியர்கள் தங்களின் பணியைத் தொடர வேண்டும் என்று இந்த ஆசிரியர் தினத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

naveen

கோவையில் நடந்த மு .கண்ணப்பன் அவர்களின் "வாழ்வும் பணியும் " நூல் வெளியிட்டு விழாவில் ..தளபதி அவர்கள் கலந்துகொண்ட விழாவில் ...நம் சொந்தம் கழக கண்மணி நவீன் தம்பி யை  ...முதன் முதலில் கோவையில் சந்தித்தது பொழுது .சொந்தம் தொடர்கிறது ... வங்கி அதிகாரி ஆனைமலை நவீன் நாகராஜ் தம்பிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🥰🍫🍬

செவ்வாய், 3 செப்டம்பர், 2019


கரப்பாடி எழில் கொஞ்சம் பசுமை மாற மழை சாரலுடன் ...

இன்றைய மாலை ...கரப்பாடி எழில் கொஞ்சம் பசுமை மாற மழை சாரலுடன்
அருமை மாப்பிள  ..P .கார்த்திக் -K.M.காளீஸ்வரி .- திருமண நிகழ்வுக்கு சென்று வந்ததில் பெரும் மகிழ்ச்சி ..மாப்பிள சொந்தங்களை விட பொண்ணு வீட்டு சொந்தங்கள் அதிகம் ..என் அம்மா வழியில் வந்த சொந்தங்களே கரப்பாடிகோவிலில் நிறைந்து இருந்தனர் ..புது சொந்தங்களுடன் பேசியது மற்றட்ட மகிழ்ச்சி ..

கம்பள விருட்சம் அறக்கட்டளை குழுமம் சார்பாக மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்கள் ....

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681..

திங்கள், 2 செப்டம்பர், 2019



இவ்ளோ நாளா இந்த விஷயம் தெரியாம போச்சே......🤔🤔😍

ஜேசிபி இயந்திரம் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கு காரணம் இதுதான்!

ஜேசிபி இயந்திரம் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கு காரணம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

  ஜேசிபி இயந்திரங்களை பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. ஜேசிபி இயந்திரங்கள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக உள்ளன. அதிலும் இந்திய சாலைகளை எடுத்து கொண்டால், உங்களால் ஜேசிபி இயந்திரங்களை சர்வ சாதாரணமாக காண முடியும். கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகளுக்கு ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு இடத்தில் ஜேசிபி இயந்திரம் வேலை செய்து கொண்டிருக்கிறது என்றால், அதனை வேடிக்கை பார்க்க இன்றளவும் இந்தியாவில் பெரும் கூட்டமே இருக்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு #JCBKiKhudayi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. #JCBKiKhudayi என்பதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? ஜேசிபி இயந்திரம் தோண்டி கொண்டிருக்கிறது என்பதுதான் இதற்கு பொருள். ஜேசிபி இயந்திரத்தின் மீது மக்கள் கொண்டுள்ள அன்பால், இந்தியாவில் #JCBKiKhudayi ஹேஷ்டேக் பயங்கரமாக டிரெண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

சரி, ஜேசிபி இயந்திரம் ஏன் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது என நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா? ஆரம்பத்தில் ஜேசிபி இயந்திரங்கள் வெள்ளை மற்றும் சிகப்பு நிறத்தில்தான் இருந்தன.

ஆனால் பின் நாட்களில் அவர்கள் மஞ்சள் நிறத்திற்கு மாறி விட்டனர். இந்த நிறம் காரணமாக பகல் அல்லது இரவு என எந்நேரம் என்றாலும் ஜேசிபி இயந்திரம் பார்வைக்கு எளிதாக புலப்படும். இதுவே இந்த நிறத்திற்கான காரணம். இதன் மூலமாக கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதை ஒருவரால் எளிதாக அறிந்து கொள்ள முடியும். சரி, இனி ஜேசிபி இயந்திரம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

ஜே.சி. பாம்ஃபோர்டு எக்ஸ்காவேட்டர்ஸ் லிமிடெட் (J.C. Bamford Excavators Limited) என்ற நிறுவனம்தான் சர்வதேச அளவில் சுருக்கமாக ஜேசிபி என அறியப்படுகிறது. இது இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் ஆகும்.

கட்டுமானம், விவசாயம் மற்றும் கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளுக்கு தேவையான இயந்திரங்களை ஜேசிபி நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. எக்ஸ்காவேட்டர்கள், டிராக்டர்கள் மற்றும் டீசல் இன்ஜின்கள் உள்பட சுமார் 300 வகையான இயந்திரங்களை ஜேசிபி நிறுவனம் தயாரித்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேசிபி நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியா உள்பட 150க்கும் அதிகமான நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா என உலகின் 4 கண்டங்களில், இந்நிறுவனத்தின் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

 இந்த 4 கண்டங்களில் இந்நிறுவனத்திற்கு சொந்தமாக 22 தொழிற்சாலைகள் உள்ளனஉலகில் இதுபோன்ற முதல் இயந்திரம் ஜேசிபிதான். பெயர் எதுவும் சூட்டப்படாமல், கடந்த 1945ம் ஆண்டு இது அறிமுகம் செய்யப்பட்டது. இதன் நிறுவனர் நீண்ட காலமாக இதற்கு பெயரை யோசித்து கொண்டே இருந்தார். ஆனால் எதுவும் பிடிபடவில்லை. இறுதியாக இந்நிறுவனத்தின் நிறுவனரின் பெயரே சூட்டப்பட்டது. அவரது பெயர் ஜோசப் சிரில் பாம்ஃபோர்டு (Joseph Cyril Bamford).

இந்தியாவில் தொழிற்சாலையை அமைத்த முதல் தனியார் பிரிட்டீஷ் கம்பெனி ஜேசிபிதான். கடந்த 1945ம் ஆண்டில், ஜோசப் சிரில் பாம்ஃபோர்டு முதல் இயந்திரத்தை வடிவமைத்தார். டிப்பிங் டிரெய்லரான (லக்கேஜ் டிரெய்லர்) இது, போர் உபரி பாகங்களில் இருந்து கட்டமைக்கப்பட்டது.

இது அந்த சமயத்தில் மார்க்கெட்டில் 45 பவுண்ட்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது தற்போதைய நிலையில் பார்த்தால் 4 ஆயிரம் ரூபாய். உலகின் முதல் மற்றும் வேகமான ஸ்பீடு டிராக்டரான பாஸ்ட்ரேக்கை (Fastrac), கடந்த 1991ம் ஆண்டு ஜேசிபி நிறுவனம்தான் உருவாக்கியது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 65 கிலோ மீட்டர்கள். ஜேசிபி நிறுவனத்தை பற்றிய இந்த விஷயமும் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.

 கடந்த 1948ம் ஆண்டில், ஜேசிபி நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களின் எண்ணிக்கை வெறும் ஆறுதான். ஆனால் இன்று அந்நிறுவனத்தில் உலகம் முழுவதும் 11 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

👍👍புது....JCB வாங்கணும்னா ....மறக்காம என்னை கூப்புடுங்க ...சார் ..

சிவக்குமார் -9944066681👍👍

.உடுமலைப்பேட்டை 👍