வெள்ளி, 4 மே, 2018

உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம்  நடத்தும்

இருபெரும் வரலாற்று திருவிழா ..

பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயண கவியின்
பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்தும் ,

1801 ஏப்ரல் 23 ல் ஆண்ட்ரோ  கேதீசு  எனும் ஆங்கிலேயரைத் தூக்கிலிட்ட தமிழ் மன்னன் தளி எத்தலப்பருக்கு மணி மண்டபம் அமைக்க கோரியும்  19 /05/2018 தேதி சனிக்கிழமை  அன்று உடுமலை குட்டை திடலில் ,மாலை .3.30 மணி அளவில் நடைபெறும்

தலைமை :
மாண்புமிகு .உடுமலை .கே .ராதாகிருஷ்ணன் .பி .காம்
கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர்

சிறப்பு விருந்தினர் :
மாண்புமிகு .கடம்பூர் .ராஜு அவர்கள்
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்

மதிப்பு மிகு சி.மகேந்திரன் .எம் .ஏ
பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்

மதிப்பு மிகு .இரா .ஜெயராமகிருஷ்ணன் .பி .எஸ் .சி .பி .எல்
மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர்

மதிப்பு மிகு .நீதி அரசர் .வி .தங்கராஜ் .எம் .ஏ .,எம் .எல்

மதிப்பு மிகு .கே கே .எம் .மோகன் குமார் .
கடவூர் .ஜமீன்தார்

ஆகியோர் பங்கேற்க ..உடுமலை வரலாற்றில் முதன் முறையாக ஓராயிரம் கலைஞர்கள் ஒருங்கிணைந்து ஓரணியாய் நின்று எத்தலப்பர் புகழ் பாடும் போர் பரணி ..மாபெரும் தேவராட்ட பெருவிழா


நாள் :மே 19 ,சனிக்கிழமை அன்று .மாலை 3.30 மணி முதல்

அமைச்சர் பெருமக்கள் ,அரசு அதிகாரிகள் ,சட்டமன்ற,பாராளுமன்ற உறுப்பினர்கள் ,கலந்துகொண்டு சிறப்பிக்கும் இந்த நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம் ..

உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம்
271,தளி சாலை ,உடுமலைப்பேட்டை
பேசி .9842091244,9944066681,9698082028,9171801212,9150056970.

வியாழன், 3 மே, 2018

45 வயதினிலே .....

"சார் நாலைந்து நாட்களாக நெஞ்சு பக்கத்தில் ஒரு பக்கமாக வலிக்கிறது. கொஞ்சம் பயமாயிருக்கு" என்று சொன்ன நண்பரைப் பார்த்த போது எனக்குள் சிரிப்பு வந்தது. 

வெளிப்படையாகச் சிரித்தால் அது விபரீதமாகப் பார்க்கப்படும் என்பதால் "மருத்துவரை போய்ப் பாருங்கள்" என்றேன். 

நான் மனதிற்குள் சிரித்ததற்குக் காரணம் அலுவலகம் முடிந்தவுடன் தினந்தோறும் மது அருந்தாமல் அவர் வீட்டுக்குச் செல்வதில்லை. ஒரு முறை அவர் வயதைச் சுட்டிக்காட்டி "கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்களேன்" என்ற போது நாய் போலக் குறைத்து நக்கல் செய்தவருக்கு இப்போது ஆரோக்கியம் குறித்துக் கவலை வந்துள்ளது. 

இவர் மட்டுமல்ல. வேறெந்த பழக்கமும் இல்லாதவர்களுக்கும் ஆரோக்கியம் குறித்து அதிக ஆர்வம் வந்துள்ளது. அது பயமாகவும் மாறியுள்ளது. இயற்கை உணவுகள் குறித்த அக்கறை அதிகமாகவே உள்ளது. நாம் வாழும் சூழ்நிலை பாதகமாக இருந்தாலும் சாதகமாக மாற்ற முடியுமா? என்று அவசரம் எல்லோருக்கும் உருவாகியுள்ளது. எது உடனடி நிவாரணம்? என்பதில் தொடங்குகின்றது. ஒவ்வொன்றாக முயற்சித்துக் கடைசியில் யோகா, தியான வகுப்புகள் வரைக்கும் பணம் இருப்பவர்களால் கூட்டம் நிரம்பி வழிகின்றது. 

காலம் விசித்திரமானது. இயற்கையை அழித்து நாம் அடைந்த வளர்ச்சி இப்போது தலைகீழ் மாற்றங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. இனி நம்மால் செயற்கையை விட்டு வெளியே வர முடியாது. 

மனிதர்களின் கோணல் புத்தி வித்தியாசமானது மட்டுமல்ல. ஆச்சரியமானதும் கூட. எங்கள் வீட்டுக்கு வெளியே இருந்த வேப்பமரத்தை வெட்டிய வீட்டுக்காரம்மா சொன்ன காரணம் "தினமும் கூட்டி முடிப்பதற்குள் இடுப்பு கழன்று விடுதுப்பா?" என்றார். 

மனிதர்களின் நிறை குறைகளை மீறி இயற்கை ஒவ்வொரு காலகட்டத்திலும் சமநிலையை உருவாக்கி விடுகின்றது. ஐம்பது ஆண்டுகளுக்க முன்னால் உருவான நோய்கள் மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொண்டு போய்ச் சேர்த்தது. இப்போது சற்று வித்தியாசம். எல்லாவற்றையும் கையாள அறிவியல் கற்றுக் கொடுத்து விட்டது. 

இப்போது நோய்கள் மரணத்தைத் தருவதில்லை. ஆயுளை நீட்டித்து ஒவ்வொருவரையும் நுகர்வோராக மாற்றியுள்ளது. உயிருடன் இருக்கும் வரைக்கும் மருந்து தேவை. செத்து செத்து பிழைத்திரு. இது தான் நவீன வளர்ச்சி தந்த பரிசு. 

மற்றொரு வியாபாரம் சமீப காலமாகச் சக்கைப்போடு போட்டுக் கொண்டு இருக்கின்றது. அதற்குப் பெயர் இயற்கைப் பொருட்கள். 

"இயற்கை முறையிலானது", "ஹெர்பல்" என்ற இந்த இரண்டு வார்த்தைகளும் இன்றைய வியாபார உலகில் கோடிகளைக் கொட்டும் மந்திர வார்த்தைகள். 

இயற்கைக்கு மாறிவிட்டால் ஆயுள் கூடும் என்று நம்பிக்கை வைத்து வாழ்பவர்கள் இந்தக் காலம். ஆனால் நடைமுறை எதார்த்தம் எப்படியுள்ளது? 

காலையில் எழுந்து வாயில் வைக்கும் பற்பசை முதல் இரவு படுக்கச் செல்லும் போது பயன்படுத்தும் மெத்தை வரைக்கும் ஒரு நாளில் ஒருவர் பயன்படுத்தும் பொருட்களில் என்பது சதவிகிதமென்பது செயற்கை தான். இது தான் இப்போதைய வாழ்க்கை. 

இங்கே மாற்றம் என்பதை நாம் வாழும் சமூகச் சூழல் தான் தீர்மானிக்கின்றது. 

முன்பு உங்களுக்கு என்ன தேவை? என்பதனை உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தீர்மானித்தார்கள். இப்போது விளம்பரங்கள் அதனைத் தீர்மானிக்கின்றது. முன்பு உடலுக்கான தளர்ச்சி என்பது வயோதிகத்தின் தொடர்ச்சியாக இருந்தது. இப்போது கருவில் தொடங்குகின்றது. வாலிப பருவத்தில் தொடர்கின்றது. வாழத் தொடங்கும் வயதில் செயல்படாத நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்துகின்றது. இதற்குள் நம்மை நிலைநிறுத்திக் கொள்வது தான் முக்கியம். 

நன்றாகக் கவனித்துப் பாருங்கள். ஆரோக்கியம் குறித்துக் கவலைப்படுபவர்கள் அனைவரும் நாற்பது வயதைக் கடந்தவர்களாக இருக்கின்றார்கள். ஐம்பது வயதில் உள்ளவர்கள் அலறத் தொடங்குகின்றார்கள். அறுபது வயதென்றால் விட்டேற்றி மனப்பான்மை வந்து விடுகின்றது. இனி இருந்து என்ன ஆகப் போகுது என்ற தத்துவம் கூடவே வந்து விடும். 

சர்க்கரை நோய் என்பது அது நோயா? இல்லை உடல் இயக்கத்தில் தோன்றும் குறைபாடா? யாருக்கும் தெரியாது? இன்று ஒவ்வொருவரும் மருத்துவராக மாறிப் பல காரணங்கள் சொல்கின்றனர். ஆனால் இன்று சர்க்கரை நோய்க்குப் பின்னால் இருப்பது பல நூறு மில்லியன் டாலர் வர்த்தகம். நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேயிருக்கின்றது. 

சமீபகாலமாக முப்பது வயதில் இருப்பவர்களுக்குச் சர்க்கரை என்பதனைக் கேள்விப்படும் போது அது இனிப்பாக இல்லை. மாத்திரை, மேலும் மாத்திரை என்று சுழலுக்குள் சிக்கித் தவிப்பவர்கள் கோடான கோடி பேர்கள். நிரந்தரத் தீர்வு இல்லை என்று தெரிந்தும் இந்த மாயச் சுழல் நம்மைச் சுழல வைத்துக் கொண்டேயிருக்கின்றது. 

அவரவர் பணிபுரியும் வேலைக்கான சூழல் என்பது முற்றிலும் மாறிப் போனதால் 24 மணி நேரமென்பது முழுமையாக உழைப்பதற்கான நேரமாக மாறியுள்ளது. இந்த மாற்றத்தைச் சுருங்கிய உலகின் வளர்ச்சி என்கிறார்கள். ஆனால் வயோதிகத்தில் சுருக்கமடையும் நம் உறுப்புகள் வெகு விரைவில் அதன் தரத்தை இழப்பதால் தகுதியான ஆரோக்கியத்தைத் தடம் மாறித்தான் நாம் பெற வேண்டியதாக உள்ளது. 

நான் வாங்கும் சம்பளம் லட்சம் என்று சொல்பவர்களின் வாழ்க்கை ஆயுளும் நாற்பதுக்குள் முடிந்து விடுகின்றது. அதிகபட்சம் ஐம்பதைத் தொடும் போதே இரத்தம் அழுத்தம், ஆஞ்சியோகிராம், பை பாஸ் சர்ஜரி, சிறுநீரகக் கோளாறு, முட்டு வலி, முதுகு வலி, தீராத ஒற்றைத்தலைவலி என்று நீண்ட பட்டியலிட்டு காட்ட வேண்டிய நோய்கள் பயமுறுத்துகின்றது. 

நாம் வாழ்க்கையைத் தொடங்கும் போது நமக்கு என்ன தேவை என்பதனை நம் மனம் தீர்மானிக்கின்றது. காலத்தின் பிற்பகுதியில் உனக்கு இது தான் தேவை என்பதனை உடல் ஆரோக்கியம் அப்பட்டமாக உணர்த்துகின்றது. 

இந்த வயதில் உள்ளவர்களுடன் உரையாடத் தொடங்கும் போதே இப்படித்தான் தொடங்கும். 

"என்னப்பா ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் இருக்கா?" கடைசியில் இப்படி முடியும்? "லிக்யூட் கேஸ் எவ்வளவு வைத்திருக்கின்றாய்? "

இந்த இரண்டுக்குள் அடக்கப்படும் வார்த்தைகளுக்குள் சொல்லப்படும் பதில் மூலம் உங்களுக்கான பாதி மரியாதை தீர்மானிக்கப்படுகின்றது. 

மீதி மரியாதையும் வேண்டு மென்றால் "சொந்த வீடு தானே?" என்பதில் முடிந்து விடும். 

வரும் வருமானத்திற்குண்டான வாழ்க்கை என்பது குறித்து இங்கே யாருக்கும் அக்கறையில்லை. இவற்றையெல்லாம் அடைந்து விட்டாயா? என்பதில் தான் மொத்த வாழ்க்கையின் வெற்றியும் தோல்வியும் மற்றவர்களால் இங்கே தீர்மானிக்கப்படுகின்றது. ஒவ்வொருவரும் இதைப் பற்றியே பேசிப்பேசி உங்களை மாற்றி மனரீதியான உளைச்சலை உருவாக்கும் போது உங்களை இழந்து விட்டால் அதற்குப் பிறகு உருவாவது தான் நரகம். 

ஒப்பீடு தொடங்கும். உள்ளம் தடுமாறும். நாம் தோற்று விட்டோமோ? என்று எண்ணத் தோன்றும். ஏன் நம்மால் முடியவில்லை? என்று நடு ராத்திரியில் தூக்கமில்லாமல் தவிக்கத் தோன்றும். அடுத்த வருடமாவது அதிர்ஷ்டம் நம் வீட்டை எட்டிப் பார்க்குமா? என்று நிஜத்தை உணர மறுக்கும். 

இதுவொரு தொடர் சங்கிலி. யாரோ ஒருவர் ஒரு முனையில் பற்ற வைத்துப் போய் விடுவார். அது ஒவ்வொரு கண்ணியாக வெடித்துச் சிதறி உங்கள் உள்ளத்தையும் அதன் மூலம் ஆரோக்கியத்தையும் காவு வாங்கி விடும். 

விரும்பியதை அடையாத போது உள்ளம் தவிக்கும் தவிப்பென்பது உங்களின் அன்றாட வாழ்க்கையின் மகிழ்ச்சியைக் கெடுக்கும். நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாமலும் நிச்சயமாய் இது கிடைக்குமா? என்ற ஏக்கத்தைத் தொலைக்க முடியாமலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் ஆரோக்கியம் எப்படி நிலையாக இருக்கும்? 

இப்படி வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் பெரும்பான்மையினர் இன்று பெரிய மருத்துவமனைகளின் நிரந்தர வாடிக்கையாளராக இருக்கின்றனர். பலரையும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன். 

அனைவரும் நம்மை இயக்கும் அளவிற்கு வாழ்க்கை வாழ்ந்தால் அதற்குப் பெயர் வாழ்க்கை அல்ல. அடுத்தவர்களின் அறிவுரை என்பது காற்று போலானது. தூசிகளையும், துர்நாற்றங்களையும் காற்று சுமந்து வரும் போது நாம் நாசியைப் பொத்திக் கொண்டால் தவறில்லை. மற்றவர்களின் புலம்பல் மொழிகளைப் பொருட்படுத்த தேவையில்லை. துணிச்சல் என்பது தேவை. செயல்பாட்டில் மட்டுமல்ல தேர்ந்தெடுப்பதிலும். 

இங்குத் தான் நம் மனம் விழித்துக் கொள்ள வேண்டும். 

நமக்கான பக்குவம் செயல்பட வேண்டும் நம் பக்குவம் என்பது வயதோடு சம்மந்தப்பட்டது என்றே அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எதையும் துச்சமாக மதிக்கும் இருபது வயது. மோதித்தான் பார்த்து விடுவோம் என்ற முப்பது வயது. நம்மால் முடியுமா? என்று யோசிக்க வைக்கும் நாற்பது வயதைத்தாண்டி ஐம்பது அருகே வந்து நிற்கும் போது பலருக்கும் மூச்சு வாங்கத் தொடங்குகின்றது. நாம் இதைச் செய்யத்தான் வேண்டுமா? என்று யோசிக்க வைக்கின்றது. காரணம் குடும்பம். குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளுக்கும் ஆடம்பரத் தேவைகளின் வித்தியாசங்களை உணர்ந்து கொள்ளாதவர்களின் வாழ்க்கையென்பது வாழும் போதே நரகத்தின் பாதையில் பயணிக்கின்றார்கள் என்று அர்த்தம். 

தற்போதைய நடுத்தரவர்க்கத்தின் முக்கியக் கவலையும் மிகப் பெரிய சுமையும் குழந்தைகளின் கல்வி சார்ந்த செலவுகள். இது முன்பு இருந்ததில்லை. கல்லூரி வரைக்கும் எந்தக் குடும்பமும் குதியாட்டம் போட்டதில்லை. சென்றார்கள். வந்தார்கள் என்று தான் இருந்தது. தனியார் முன்னுக்கு வர அரசாங்கம் பின்னுக்குச் செல்ல இங்கு ஐம்பது வயதைக் கடக்கும் ஒவ்வொருவரும் ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டு குழந்தைகளின் கல்விக்குச் செலவளிக்கத் தனியாகச் சம்பாரிக்க வேண்டியதாக உள்ளது. 

இத்துடன் மாதம் தோறும் செலவளிக்க வேண்டிய மருத்துவச் செலவு என்று பட்டியலில் இருந்தால் அந்தக் குடும்பத்தில் என்ன மிஞ்சும்? 

முன்பு வானொலியுடன் மின்விசிறியும் அதிகபட்சமாக இருந்த வீடுகளின் முகம் இப்போது மாறிவிட்டது. வசதிகள் தான் வாழ்க்கை என்று ஒவ்வொரு நவீன கருவிகளும் வீட்டுக்குள் வந்து விட்டது. இவையெல்லாம் வாங்க எவ்வளவு சம்பாரித்தாலும் போதவில்லை என்கிற நிலைக்கு நம்மைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. ஆசைகள் தவறில்லை. 

நம் விருப்பங்கள் முக்கியம். ஆனால் நம் தேவைக்கு மீறிய ஆசைகளும், விருப்பங்களும் நம் வயதுக்கு மீறிய வயோதிகத்தை, ஆரோக்கிய இழப்பை நம் முகத்தில் கொண்டு வந்து நிறுத்துகின்றது என்பது உணர்ந்து இருப்போமா? 

நம்முடன் கவலைகள் இருக்கட்டும். அதை ஒரு கலையாக வைத்திருங்கள். ரசனையுடன் கவனித்துப் பாருங்கள். கணக்கீடு ரீதியாகப் பார்த்தீர்கள் என்றால் வாழ்ந்து கொண்டிருக்கின்ற வாழ்க்கையை வாழ விடாமல் செய்யும் மோகினி போல உங்களுடன் உறவாடத் தொடங்கும். 

வாழ்ந்த வாழ்க்கைக்குரிய அங்கீகாரம் தேவை. அதை அனுபவிக்கவும் வேண்டும் என்றால் எது வேண்டுமோ அதை மட்டும் கவலையாக எடுத்துக் கொள்ளாதீர்கள். தீர்மானமாக மாற்றிக் கொள்ளுங்கள். 

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 
9944066681......

புதன், 2 மே, 2018

அப்பாக்களின் நினைவுகள் ...

சில நாட்களுக்கு முன் அப்பாவின் மரப்பெட்டியில் தங்க புதையலாக அப்பாவின் புகைப்படமும் .கிடைத்தது ....இந்த புகைப்படம் ..உடுமலை ஜோஸ் ஸ்டுடியோவில் எடுத்தது என்று சொன்னது நினைவில் .. தன் சிறுவயதில் பார்த்த சினிமா பாடல்களின் புத்தகங்களை  பார்த்த பொழுது ...மனது லேசாக வலிக்கா தான் செய்தது ..
ஆமாம்,,, என் சிறு வயதில்,என்னை தூங்கவைப்பதற்கு ..இந்த பாடல்களை பாடிதான் ,, தூங்கவைத்தார் ..என்னை பாதித்த மிக மிக அற்புதமான பாடல் இது . ஒரு பதினைந்து வயதிலேயே என்னை மிகவும் பாதித்த பாடல். இந்த பாடலில் வரும் வார்த்தைகள் அவ்வளவு சிறப்பானவை. ஆம் எனக்கு காதல், மோகம்,,, எதிர்பாலின ஆசை, எதுவும் தோன்றாத வயதில், என்னை இந்த பாடலுக்குள் மூழ்கடித்த கண்ணியமான பாடல், இந்த பாடலில்,,, தாய்மை, அன்பு, பாசம், அக்கறை, அதனையும் விட, ஆங்கிலத்தில் சொல்வது போல ஹாஸ்பிலாட்டி அனைத்தும் நிறைத்து இருக்கும். நான் சற்றே வளர்ந்த பிறகு பார்க்கும்போது இன்னும் மெருகேரி,,, முற்றிலும் என்னை சூவிகரித்துக்கொண்ட பாடல் இது. பாடல் கேட்ட பல இரவுகளை தூங்க விடாமல் செய்த பாடல் இது. இந்த பாடலின் காட்சி அமைப்பு அப்படி,,, பாடிய டி.ம்.ஸ் & சுசீலா குரல்கலைப்பற்றி நான் சொல்லவே வேண்டியதில்லை. இசையமைத்த எம்.எஸ் வி.. எழுதிய கண்ணதாசன்,,, ம்,,, இவர்களின் கலவைதான் இது. கருப்பு வெள்ளை படம்தான். ஒரு பூங்காவில் பாடல் முழுதும் படமாக்கப்பட்டிருக்கும். பலமுறை இந்த பாடலை கேட்டு ,,,, ம்,,,ம்ம்,,,, கண்ணீர் சும்மா வருபதுதானே! வாழ்க்கையை இழந்து, உடன் இருப்பவர்களின் உதவியுடன் வாழ்வது ,,,, அதிலும் உடன் இருப்பவர் நான் முன்பு கூறியது போல அத்தனை உணர்வுகளுடன் உடன் இருந்தால் இந்த பாடலைப்போல அனைத்தும் சாத்தியம்தான். இன்னும் நிறைய,,, நிறைய வாழ்வின் இறுதிக்காலத்தில் வருவது மிகவும் முன்னே வந்தால் ,,, விடுங்க,,, இந்த அனுபவம் யாருக்கும் வேண்டாமே ! 
பொன்னை விரும்பும் பூமியிலே,,,,,, 
என்னை விரும்பும் ஓர் உயிரே ,,,,,,, 
புதையல் தேடி,,,,,, அலையும் உலகில்,,,,,,,, 
இதயம் தேடும் என்னுயிரே ,,,,,,
45....வயதினிலே ...

இங்குக் காலாவதி என்ற வார்த்தையுண்டு. அது பொருட்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும். நாம் வைத்துள்ள கருத்துக்கள், கொள்கைகள் என்பதெல்லாம் குறிப்பிட்ட காலம் வரைக்கும் தான் பேசக்கூடியதாக இருக்கும். வயது, பதவி, பணம், அதிகாரம் போன்ற முக்கியக் காரணிகள் இருந்தாலும் காலாவதி என்ற சொல் நிச்சயம் தன் வலிமையைக் காட்டவே செய்யும். எல்லையைக் கடக்கும் போது இங்கு எல்லாமே விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும் என்பதனை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

மோடி வளர அத்வானி தான் காரணம். இது உங்களுக்கும் எனக்கும் தெரியும். ஆனால் காலம் அவரை இன்று எங்கே நிறுத்தியுள்ளது. மேயர், அமைச்சர், துணை முதலமைச்சர் என்று பல பதவிகள் பார்த்து அனுபவம் இருந்தாலும் எடப்பாடிக்குக் காலம் வழங்கிய வாய்ப்பு ஸ்டாலினுக்கு வழங்கவில்லையே?

சமூகத்தையே மாற்றக்கூடியவர்களுக்கே இந்தக் கதியென்றால் தனி மனிதன் வாழ்க்கை எம்மாத்திரம்? அதிர்ஷ்டம், சூட்சமம், விதி, எல்லையின் முடிவு என்ற ஏதோவொரு வார்த்தையும், அந்த வார்த்தைக்குள் அடங்கிய தத்துவத்தை அவரவர் வாழ்க்கை அனுபவத்தைக் கொண்டு எடுத்துக் கொள்ள முடியும்.

சிலவற்றுக்கு காரணங்களை கண்டு கொள்ள முடியாது. காரணங்களை சொல்லவும் தெரியாது. அது அப்படித்தான் என்று ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

நீங்கள் வாசித்த, சந்தித்த பிரபல்யங்களின் ஒவ்வொரு கால கட்ட வாரிசுகளின் வாழ்க்கையைப் பாருங்கள். ஓராயிரம் ஆச்சரியங்களையும் கேள்விகளும் உங்களுக்குள் தோன்றக்கூடும். நமக்குக் கிடைக்காத அனைத்தும் இவர்களுக்குக் கிடைக்கும். எதையும் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. எல்லாமே கைக்கெட்டும் தூரம் தான். ஆனாலும் எத்தனை பேர்களால் அவரவர் தந்தை, தாய்ப் பெற்றிருந்த புகழின் எல்லையைத் தாண்டிச் செல்ல முடிந்துள்ளது? சமூகம் பாராட்டும் வெற்றியாளர்களாக வர முடிகின்றது?

நாடே கொண்டாடிய நடிகர் திலகத்தின் மகனுக்கு விளம்பரப்படங்களில் நடித்து வயிறு வளர்க்க வேண்டும் என்று வாழ்க்கை அமைந்துள்ளது. மொழியை வைத்தே வளர்ந்த கலைஞரின் மகனுக்கு வாழ்வின் இறுதி வரைக்கும் வார்த்தைகளே வசப்படவில்லையே?.

எதிர்மறை நியாயங்கள் தான் இங்கே நேர்மறை எண்ணங்களுக்கு ஆதாரம். ஏன் இப்படி? என்று உங்கள் எண்ணத்தில் உள்ளவர்களின் வாழ்க்கையைப் பற்றி யோசித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையென்பது இனிதான வாழ்க்கை என்பதனை உணர முடியும்? நம் பார்வை முக்கியம்? பார்வையில் உணர்தல் அதைவிட முக்கியம்.

மேடு என்பது ஒரு வழிப்பாதை. சிலர் மட்டுமே செல்லக்கூடியதாக இருக்கும். சென்றவர்கள் அருகில் மற்றவர்கள் நிற்க முடியாத அளவிற்குக் குறுகலாக இருக்கும். ஆனால் பள்ளம் என்பது பாதையின் தொடக்கமாக இருக்கும். நாம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். பள்ளம் என்பது குழி அல்ல. அதுவொரு வழி. இதுபோன்ற சமயங்களில் உங்கள் மனம் ஆசானாக இருக்க வேண்டும்.

ஆசான் என்பவர் அறிவுரை சொல்பவர் அல்ல. வழிகாட்டியாக இருப்பவர். இந்தச் சமயங்களில் தான் காலாவதி என்ற வார்த்தையை உணர்ந்திருக்க வேண்டும். காரணம் நாம் காலாவதியாகி விட்டோம் என்பதனை குறிப்பிட்ட சில சம்பவங்கள் நமக்கு உணர்த்தும்.

திருமண வாழ்க்கை தொடங்கி வைக்கும். குழந்தைகள் வளரும் போது புரிய வைக்கும். மகள்கள் மகன்களாக மாறி கல்லூரிக்கு நுழையும் போது காலமும் வயதும் நீ காலாவதியாகக்கூடிய காலகட்டத்திற்குள் நுழைந்துள்ளாய் என்பதனை அறிவுறுத்தும்.

புரிந்து கொண்டவர்கள் எப்படித் தங்களை மாற்றிக் கொள்கின்றார்கள்?

விவாதத்தைத் தவிர்த்து விடு. விதண்டாவாதம் என்பது எப்போதும் கூடாது. ஆக்ரோஷம் அறவே கூடாது. மன உளைச்சல் உருவாக்கும் காட்சிகளை உள்வாங்க முடியாத போது உனக்கு நீயே திரையிட்டுக் கொள். இனியும் சூரத்தனம் தேவையில்லை. மொக்கைத்தனம் தவறில்லை. அமைதிப்படுத்த ஆன்மீகத்தை நாடு. அது தேவையில்லை எனில் உன்னை உனக்கே உணர்த்தும் வாசிப்பை அதிகப்படுத்து. உரையாடலைக் குறைத்து விடு.

உள்ளர்த்தம் தரும் வார்த்தைகளில் கவனம் செலுத்து. மொத்தத்தில் உன் ஆரோக்கியத்தை அடுத்தவர் அழிக்க அனுமதிக்காதே. நீயே உருவாக்கிக் கொள்ளாதே. ஒரு நாளில் ஒரு நேரம் பட்டினி கிடப்பது தவறல்ல. ஆனால் நாள் முழுக்கப் பட்டினியால் மட்டுமே வந்த நோயைப் போக்க முடியும் என்ற நிலையில் வாழ்க்கை அமைவது கொடுமை என்பதனை உணரும் வயது நிச்சயம் ஐம்பதுக்கு அருகே வந்தவர்களால் புரிந்து கொள்ள முடியும்.

மனைவியின் விருப்பங்கள் ஒரு பக்கம். வளரும் குழந்தைகளின் தேவைகள் மறுபக்கம் என்று காலம் நடத்துப் பாடங்களில் ஒவ்வொரு மாதமும் மர்மக்கதை போலவே இருக்கும். பக்கங்கள் நகர நகரப் படபடப்பு மாறி பயம் உருவாகத் தொடங்கும். காலம் வாசிக்கச் சொல்லும் கதையின் தலைப்புப் பணம்.

எந்த அறிவுரைக்குள்ளும் அடக்க முடியாததும் எவ்விதக் கொள்கைக்குள் அடங்காததும் பணம் என்ற மூன்றெழுத்து. எப்படிச் சேர்ந்தது? என்று சேர்ந்தவர்களுக்கும் விவரிக்கத் தெரியாது. ஏன் இழந்தோம்? என்பதனை இழந்த பின்பு கூட விவரிக்கத் தெரியாதவர்களால் சூழ்ந்த உலகத்திற்குள் நாமும் இருக்கின்றோம். ஆனால் இந்த பணத்தைத் தேடி தான் நாமும் நம்மை இழந்து கொண்டிருக்கின்றோம்.

ஐம்பது வயதில் நம்மை அதிகம் தாக்கும் பிரச்சனைகள் இரண்டு. ஒன்று பாதுகாப்பின்மை. மற்றொன்று பயம். இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடைய தோழர்கள். நம் குடும்பத்துக்கு யார் பாதுகாப்பு? நாம் இல்லாது போனால் என்னவாகும்? என்ற கேள்விகளை அதிகம் எதிர்கொள்வது இந்த வயதில் தான். இப்போது தான் பயம் என்ற பூதம் நம் முன்னால் பிரமாண்டாக நிற்கின்றது.

பயமென்பது எளிதில் பரவக்கூடியது. அனுமதிப்பது என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. கவலையே ஆறுதல் என்று கருதிக் கொள்பவர்களால் சுற்றியுள்ள உலகத்தைப் பார்க்க முடியாது. நம்மையறியாமல் நம்முள் பரவசமாய்ப் பரவும் கவலைகள் தான் ஆரோக்கியத்தை விலையாகக் கேட்கின்றது.

தேவையானது தேவையற்றது என்று பாரபட்சம் பார்க்காமல் கவலைப்படுவது என்பது சிந்திக்க வைப்பது என்று நம்மவர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
கவலைகள் என்பது காலாவதியாகிப் போன காசோலை. அதனை வைத்து இருப்பவர்களுக்கும் பிரயோஜனமில்லை. கொடுத்துச் சென்றவர்களும் அதனைக் கண்டு கொள்வதுமில்லை.

அதுவொரு காகிதம். நாளாகச் செல்லரித்துப் போய்விடும். உண்மை தான். நம் உள்ளுறுப்புகள் செல்லரிக்க வைப்பதில் முக்கியப் பங்காற்றுவதே இந்தக் கவலைகள் தான். அப்போது தான் நம் உள்ளம் குறித்து, உள்ளத்திற்குள் உள்ள நேர்மையைக் குறித்து யோசிக்கத் தொடங்குகின்றோம்.

நம்மிடம் உள்ள நேர்மையைப் பற்றி அப்போது கவலைப்படுபவர்கள் நம் முன்னால் யாரும் இருக்கப் போவதில்லை.

அதுவரையிலும் சொந்த வாழ்க்கையில் கடைபிடித்த நேர்மை என்ற வார்த்தையே காலாவதியாகி விடும். நம் வாழ்க்கையின் நீள அகலத்தையும் சந்திக்கின்ற ஒவ்வொருவரும் ஆராய்ச்சி பொருளாக எடுத்துக் கொள்ளத் தொடங்குகின்றார்கள். சிலர் அறிவுரையை அள்ளிக் கொடுத்து விட்டு அகன்று விடுவர். பலர் வீழ்ந்த பள்ளத்தை எட்டிப் பார்த்து மனதிற்குள் கணக்கீடு செய்து கொள்வர்.

தனி மனித வாழ்வின் வளர்ச்சி என்பதற்கும் சமூகத்தின் வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கற்ற கல்விக்குரிய மரியாதை அதன் மூலம் கிடைக்கும் வேலை மூலம் தான் ஒவ்வொருவருக்கும் இங்கே அங்கீகாரம் கிடைக்கின்றது. ஆனால் மக்கள் தொகைப் பெருக பெருக எல்லாவற்றின் மதிப்பு மாறிக் கொண்டேயிருக்க ஒவ்வொன்றின் கொள்கையும் மாறிவிடுகின்றது.

எவையெல்லாம் நீதிக்குப் புறம்பானதாகச் சொல்லப்பட்டதோ அவையெல்லாம் இங்கே அவரவர் வளர்ச்சிக்கு உதவக்கூடியதாக இருக்கின்றது. ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றம் பெறுகின்றனர். ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

அப்போது தான் வயது காரணமாகக் காட்டப்படுகின்றது. திறமையில் உள்ள நம்பிக்கையின்மை குறித்துப் பேசப்படுகின்றது. இனியாவது அடங்கிப் போய்விடு என்று அறிவுரை அடுத்தடுத்துத் தாக்குகின்றது. மொத்தத்தில் உள்ளார்ந்த கருத்துக்களை உள்ளே வைத்துக் கொள். பெரும்பான்மையினர் சொல்லும் பாதையில் நடக்கப் பழகிக் கொள் என்பதான வாழ்க்கை தத்துவம் உருவாகின்றது.

தன்னை மாற்றிக் கொள்ள முடியாதவர்களின் அன்றாட வாழ்க்கை என்பது திண்டாட்டமாகப் போய்விடுகின்றது. குடும்ப வாழ்க்கையில் தனி மனிதனின் மனதுக்கும் உடலுக்கும் உண்மையான போராட்டமே இங்கிருந்து தான் தொடங்குகின்றது. பிறகெப்படி பக்குவத்தைப் பற்றிப் பேச முடியும்?

கடன் கழுத்தை நெறிக்கின்றது. சேமிப்பு அறவே இல்லை. பணிபுரியும் வேலையோ உத்தரவாதம் இல்லை. அடுத்த மாதம் வேலை இருந்தால் மட்டுமே குடும்பத்தில் மகிழ்ச்சி. இல்லையேல் உருவாகும் பிரச்சனைகள் ஏராளம். அடிப்படைத் தேவைகளுக்கே இங்கே அல்லாட வேண்டியுள்ளது. இதையும் மீறி பக்குவநிலையை எட்ட முடியுமா?

இந்தியாவில் வாழும் மக்கள் தொகையில் முக்கால்வாசி பேர்கள் நிரந்தரமற்று தான் வாழ்கின்றார்கள். சொந்த வீடு இல்லாமல், நிரந்த வேலையில்லாமல், படித்த கல்விக்குத் தொடர்பில்லாத ஏதோவொரு வேலையில், வாழ்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் தான் வாழ்கின்றார்கள். அப்படியென்றால் இப்போது இங்கே நாம் பார்க்கும் வளர்ச்சியென்பது?

வளர்ச்சி என்பதனை நாம் தவறாகவே புரிந்து வைத்துள்ளோம். தொழில் நகர வளர்ச்சி என்பது வளரும் ஜனத்தொகை கொண்ட நாட்டுக்கும் அவசியம் தேவை என்பதனை ஒரு பக்கம் எடுத்துக் கொண்டாலும் இங்கு நடக்கும் வளர்ச்சி என்பது வேறு விதமாக உள்ளது. ஒரு தொழிற்சாலை பத்தாயிரம் பேர்களுக்கு நேரிடையாக மறைமுகமாக வேலை அளித்து அவர்கள் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளித்தாலும் சுற்றிலும் உள்ள ஒரு லட்சம் மக்களின் ஆரோக்கியத்தை விலை பேசும் காரியத்தைக் கண ஜோராகச் செய்கின்றது.

மேற்கித்திய சமூகத்தில் நடக்கும் தொழிற் புரட்சி என்பது வேறு. இங்கே லஞ்சம் உழலில் திளைத்து குறிப்பிட்ட அதிகார வர்க்கம் மட்டும் சுகமாக வாழ உருவாக்கப்படும் செயல்பாடுகள் என்பது வேறு. நாம் தான் உணர்ந்து கொள்வதே இல்லை. அன்றாட வாழ்க்கைக்கே ஆளாய் பறக்கும் மனிதனுக்குத் தன் ஆரோக்கியத்தை விலை வைத்துத் தான் வாழ வேண்டும் என்ற சூழ்நிலை வரும் போது அவன் எந்தப் பக்குவத்தைக் கடைப்பிடிக்க முடியும் என்று நம்புகிறீர்கள்?

இதனால் தான் இனி இங்கே வாழ முடியாது. நன்றாகப் படி. தேர்வில் முந்து. வெளிநாட்டுக்கு ஓடி விடு என்ற இடைவிடாத சூட்சம பாடத்தைப் பள்ளிக்கூடத்தில் இருந்தே போதிக்கப்படுகின்றது. போக முடியாதவர்களுக்குப் போக்கிடம் எங்கே? இங்கே தான் தொடங்க வேண்டும்? இங்கே தான் தொடர வேண்டும்.

வாழவே முடியாத நாடல்ல. தேவைக்கும் விருப்பத்திற்கும் உண்டான இடைவெளியை உணர்ந்து கொண்டாலே போதுமானது. அடிப்படைத் தேவைகளை மீறி ஆடம்பரத் தேவைகளை எதிர்பார்த்து வாழும் ஒவ்வொருவருக்கும் இந்த நாடல்ல, எந்த நாடும் மகிழ்ச்சியைத் தந்து விடாது.

கடல் கடந்து, தனிமையை உறவாக்கி, உள்ளம் வேறு. உடம்பு வேறாகப் பிழைப்பதற்காக மட்டுமே வாழும் வெளிநாட்டு வாசிகளிடம் கேட்டுப் பாருங்கள்? பணம் இருந்தும் அடைய முடியாத அனைத்தையும் பக்கம் பக்கமாகப் பட்டியலிட்டு காட்டுவார்கள்.

ஆரோக்கியத்தை விலையாகக் கொடுத்து அடுத்தத் தலைமுறைக்கு ஏணியாக இருந்தவர்களின் வாழ்க்கைப் பக்கங்கள் முழுவதும் உங்களாலும் என்னாலும் உணரப்படாத கண்ணீர் கறை படிந்தே இருக்கும். அது அவர்களின் சொந்த நாட்டை விட்டுப் பிரித்து வைத்திருக்கும் கடலில் உள்ள உப்பை விட அதிகமாகவே இருக்கும்.

நம் தேவைகள் அதிகமாக நாம் தொலைக்க வேண்டியதும் அதிகமாகவே இருக்கும் என்பதனை உங்களால் உங்கள் குடும்பத்துக்கே புரிய வைக்க முடியாது? பிறகெப்படி நீங்கள் வாழும் சமூகத்திற்குப் புரிய வைக்க முடியும்?

புரிந்தவர்கள் இரண்டு விதங்களில் வாழ்கின்றார்கள்.

மற்றவர்களைப் பொருட்படுத்துவதே இல்லை. அதனால் கடைசி வரையிலும் புழுங்குவதே இல்லை. இந்தப் பக்குவத்தை அடைய முடிந்தவர்கள் வாழும் போதே சொர்க்கத்தைக் கண்டவர்கள்.

45....வயதினிலே ...
என்றும் அன்புடன் உடுமலைசிவக்குமார் 
தொடர்பு எண் ....9944066681..வாட்ஸாப்ப் 

சனி, 28 ஏப்ரல், 2018



கம்பளத்து மஞ்சள் துண்டு 


மஞ்சள் மகிமை ....(மஞ்சள் நிற ஆடையும் ,மஞ்சள் நிற தலைப்பாகையும்)
மஞ்சள் நிறத்தின் மகிமை அல்லது மஞ்சள் துண்டின் மாட்சினம் .
நிறங்களில் சிறப்பும் மன அமைதியும் கொண்டது .அனைத்து சுபகாரியங்களுக்கும் மஞ்சள் பயன்படும் .திருமணப் பத்திரிகை ,மாங்கல்யதிக்கும் உபயோகம் செய்வர் .மஞ்சள் நிறப் பூக்கள் மருத்துவத்தில் குறிப்பாக சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது.
ஆவாரயின் மஞ்சள் நிற பூ நீரிலுவு நோயிணை நீக்கும் தன்மையுடையது .தங்கத்தின் நிறம் மஞ்சள்,மஞ்சள் நிறம் மாட்சிமை உடையது .
யோகத்தில் சிறந்தது ராஜயோகம் நிறங்களில் சிறந்தது மஞ்சள் நிறம் உயர்ந்த உலோகம் தங்கத்தின் பசும்பொன்னின்நிறம் மஞ்சள் ,அதனால்தான் பெரியோர்கள் சுப நிகழ்சிகளில் மஞ்சள் நிற ஆடைகள் அணிந்து சிறபடைந்தனர்.மஞ்சள் நிறம் மன மாசுகளை படி படி யாக நீக்கும் .
ராஜகம்பளதார் முதல் சுதந்திர போர் துவக்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் அணிந்தது மஞ்சள் நிற ஆடைகள் .
ஆன்மிக மேலோர்கள் அணிந்து சிறப்படைந்த மஞ்சள் நிற ஆடையும் ,மஞ்சள் நிற தலைப்பாகையுமாகும் .இன்றய வீரபாண்டிய கட்டபொம்மன் இன இளைஞர்கள் சுதந்திரமாக என்றும் இருக்க
இந்தியா என்றும் சுதந்திர நாடக இருக்க சேவை செய்வதும்,தேவராட்டம் ,கும்மியாட்டம் ,ஒயிலாட்டம் ,ஆடுவது மஞ்சள் நிற உடையணிந்துதான் .
மஞ்சள் நிற துண்டும் மாட்சிமை நிறைந்தது தன் மனதை ஆட்சி செயயவும்,நாடு நலம் பெறவும் ,இன புகழ் பெற்று சேவை செயவும் கம்பளத்து இளைஞர்கள் அணிந்து தேச சேவை செய்வதும் மஞ்சள் துண்டு என்று சொன்னால் மிகையாகது .மனம் ஒரு நிலைப்பட்டு சேவை செய்திட உதவவுதும் ,மஞ்சள் நிற துண்டுதான் என்பது அன்று முதல் இன்று வரை சீரும் சிறப்புமாகும் என்பது அனுபவம் ....
என்றும் அன்புடன் ஷியாம் சுதிர் சிவக்குமார் ..
9944066681....

வெள்ளி, 27 ஏப்ரல், 2018

வழக்கறிஞர் .ச .முருகராஜ் அவர்கள் (9894202111)....கம்பள விருட்சம் அறக்கட்டளையின் ...கௌரவ தலைவர் ..ஆலோசகர் ...அறக்கட்டளையின் செயல்பாடுகளை செம்மை படுத்தி ,சட்ட நுணுக்கங்களை  நமது சமுதாய வளர்ச்சிக்கும் ,முன்னேற்றத்திற்கும் ,நமது சொந்தங்களுக்கு தனிப்பட்ட முறையிலும் ,செயல் குழு உறுப்பினர்களுக்கு தெளிவு படுத்தி அதை நடைமுறைப்படுத்தி ..எங்களுக்கு வழிகாட்டிவரும் முருகராஜ் அவர்களுக்கு  எங்களின் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...
அம்மா .....
வாழ்கையில் எந்த கஷ்டம் வந்தாலும் அம்மாவின் தன்னம்பிக்கை வார்த்தைகள் ஒவ்வொரு நிமிடமும் உயிர்ப்புடன் இருக்கசெய்யும்....என் அப்பாவின் ..இறுதி உயிர்மூச்சு என் அம்மாவின் மடியில் தலைவைத்து உயிர்பிரிந்தது ...அப்பொழுது அம்மாவின் தன்னம்பிக்கை ,தைரியம் ..நான் தெரிந்துகொண்டேன் ..ஏன் என்றால் ..என் அம்மாவின் அம்மா ...அப்பா ...இறந்தபொழுதும் ..என் தாயின் மடியில் உயிர் பிரிந்தது நினைவு கூர்ந்தார் ...இறப்பு பற்றி பய உணர்வு பற்றி எனக்கு வாழ்க்கையில் தெளிவு படுத்தியது ...வரம் ...தாய் என்பவள் தன்னம்பிக்கை மனுசி ...நான் வாழ்க்கையில் கற்று கொண்ட பாடம் ...

எனது உலகம்.......என் அகவை 45... பிறந்த நாள் பதிவு ..


ஒவ்வொரு நாளும் படுக்கையில் படுத்தவுடன் பத்து நிமிடங்களில் தூக்கத்தில் அமிழ்ந்து விட முடிகின்றதா? உயிர் ஆத்மா அந்தரத்தில் சென்றுவிட உடல் மட்டும் வெளியுலகத் தொடர்பின்றி உணர்வின்றி உள்ளும் புறமும் ஒன்றும் அறியாது ஓய்வெடுக்க முடிகின்றதா? ஆழ்ந்த உறக்கத்தின் முடிவில் அதிகாலையில் இயல்பாகவே குறிப்பிட்ட நேரத்தில் எழ முடிகின்றதா? உங்களின் உண்மையான ஆரோக்கியத்தை உடல் கழிவுகள் சிக்கலின்றி நகர்வதை வைத்து கண்டு கொள்ள முடிகின்றதா?.

அதிகாலை வேளையில் ஆள் ஆரவமில்லா சாலையில் சிங்கம் போலக் கம்பீரமாக நடக்க முடிகின்றதா? கை வீசி நடக்கும் போது உடல் பாகங்கள் வலியில்லாமல் இருக்கின்றதா? நடக்கும் போது உங்களால் சுற்றியுள்ளதை ரசிக்க முடிந்துள்ளதா? இரை தேடிச் செல்லும் பறவைகளைப் பார்த்து உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைத்துள்ளதா? சாலையோர மரங்களில் கூட்டமாக வசிக்கும் பறவைகளின் இரைச்சலை ரசனையுடன் நின்று கவனித்ததுண்டா? பார்க்கும் ஒவ்வொன்றையும் விலகி நின்று பார்க்கும் பழக்கம் உருவாகியுள்ளதா? சாலையில் பார்க்கும் வீடுகள், வாகனங்கள் என் ஒவ்வொன்றும் உங்களுக்குள் உணர்த்தும் ஏற்றத்தாழ்வுகளை இயல்பாக எடுத்துக் கொள்ளும் எண்ணம் உருவாகியுள்ளதா?

பார்வையில் படுகின்ற ஒவ்வொன்றும் எந்தப் பாதிப்பையும் உங்களுக்குள் உருவாக்காமல் இருக்கும் அளவிற்கு உங்கள் வாழ்க்கையின் நிலை குறித்த உண்மையான புரிதலை மனம் பெற்றுள்ளதா? நாள் தோறும் உழைக்கும் உழைப்பிற்கும் கிடைக்காத பலனுக்கும் உண்டான சமூக விதிகள் சொல்லும் பாடத்தைக் கற்றுக் கொள்ளும் பக்குவத்தை அடைந்துள்ளீர்களா?

தொழில் உலகத்திற்குத் தேவைப்படாத நேர்மையைக் கட்டிக் கொண்டு வாழும் போது உருவாகும், உருவாக்கப்படும் அரசியலை அங்குலம் அங்குலமாகப் பிரித்துப் பார்க்கும் அளவுக்கு உங்களுக்கு நீங்களே குருவாக மாறியிருக்கின்றீர்களா?

நடைபயிற்சி முடிந்து வீட்டுக்குள் உள்ளே நுழையும் போது நேரம் மறந்து தூங்கும் மனைவி, குழந்தைகளை அவர்கள் நிலையில் நின்று ரசிக்க முடிந்துள்ளதா? முதல் நாள் இரவு குழந்தைகள் படித்த புத்தகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிதறிக் கிடக்க அதைத் தாண்டிச் சென்று கோபப்படாமல் சிதறிக்கிடக்கும் மற்றவற்றையும் குறிப்பிட்ட இடங்களில் அமைதியாய் அடுக்கி வைத்து விட்டு வாய் விட்டுச் சிரிக்க முடிந்துள்ளதா?

அலுவலகத்திற்குச் செல்லும் அவசரத்தில் மனைவி சொல்லும் முதல் நாள் பிரச்சனைகளைத் தொடரும் போட்டுத் தொடங்கும் சமயத்தில் அதனை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு ரசனைத் தலைவனையாய் வாழ்ந்ததுண்டா? அலுவலக அரசியலை அங்கேயே விட்டு விட்டுப் பிடித்த பாடலை உரக்கச் சொல்லிக் கொண்டே உலகம் பிறந்தது எனக்காக? என்று வீட்டுக்கு வரும் பழக்கம் உண்டா? அன்றாடம் உருவாகும் அழுத்தங்கள் அனைத்தையும் பிரித்து வைத்து மழுங்காத சிந்தனையைப் பெற்றதுண்டா?

வாழ்க்கையில் வாசிப்பைத் தொலைக்காமல் இருந்ததுண்டா? வாசிக்கும் ஒவ்வொன்றிலும் எழுதியவரின் பெயரைத் தாண்டி எழுதிய விதத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு உள்ளே ஆராய்ந்து பார்த்ததுண்டா? போக்குவரத்து நெரிசலில் நசுங்கிச் சென்றாலும் அமைதியான காட்டில் இருக்கும் அமைதியை மனம் பெற்று அவசர மனிதர்களை ஆச்சரியமாகப் பார்க்கும் மனோநிலையைப் பெற்றதுண்டா? சுற்றியுள்ள அனைவரும் மோசம். இதுவொரு குப்பை வாழ்க்கை என்ற உணர்தலை விட்டு வெளியே வந்ததுண்டா?

இவையெல்லாம் உங்களின் அன்றாட வாழ்க்கையில் நடந்து கொண்டிருந்தால் நிச்சயம் பக்குவம் என்ற நிலையை எட்டியிருப்பீர்கள். பணம் தேவை என்பதற்கும் பணம் மட்டும் தான் தேவை என்பதற்கும் உண்டான வித்தியாசத்தை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை உங்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளது என்று அர்த்தம். உங்கள் ஆரோக்கியத்திற்கு வெளியே உள்ள எந்த மருந்துகளும் தேவையில்லை. நீங்களே மருத்துவராக இருக்கக்கூடிய வாய்ப்புள்ளவராக இருப்பீர்கள்.

நிச்சயம் உங்கள் குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும். பணத்தைத்தாண்டி உங்களுக்கான உலகத்தில் நீங்கள் உண்மையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் என்று அர்த்தம். கடவுள் என்ற வார்த்தையைத் தூர வைத்து உங்கள் உள்ளத்தையே கோவிலாக மாற்றியுள்ளீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் வயது ஐம்பதாக இருக்கலாம். இதனையும் தாண்டி கடந்து வந்து கொண்டு இருப்பவராக இருக்கலாம். ஆன்மீக எண்ணங்கள் என்னை வழி நடத்துகின்றது என்ற நம்பிக்கையுள்ளவராக இருக்கலாம். இல்லை அதையும் மீறி நான் வளர்த்துக் கொண்டுள்ள எண்ணங்களின் வலிமையே என்னை வழிகாட்டும் குருவாக உள்ளது என்று யோசிக்கத் தெரிந்தவராகவும் இருக்கலாம். இங்கு எல்லாமே முக்கியம். ஆனால் எல்லாவற்றையும் விட எண்ணங்கள் முக்கியம். நம் எண்ணங்கள் தான் நம் வாழ்க்கை என்று உணர்வது மிக முக்கியம்.

எண்ணங்களுக்குத் தனிக்குணம் உண்டு. எந்நாளும் நடித்துக் கொண்டேயிருக்க முடியாது. நடித்தாலும் ஏதோவொரு சமயத்தில் காட்டிக் கொடுத்து விடும். எதன் அடிப்படையில் நம்மைக் கவனிக்கின்றார்கள் என்பதனை அவர்களை அறியாமல் காட்டிக் கொடுத்து விடும். நம்மிடம் அளவு கடந்த பணம் இருக்கின்றது என்பதைக் கௌரவமாக எடுத்துக் கொண்டு வாழ்பவர்களும் தங்களைத் தனித்தீவாக மாற்றிக் கொள்கின்றார்கள். தாம் சேர்க்க முடியாத பணத்தை நினைத்துக் கொண்டே பலரிடமிருந்து ஒதுங்கி வாழ நினைப்பவர்களும் தீவு போலத்தான் தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்கின்றார்கள். இரண்டு பேர்களும் தங்களுக்கான வாழ்க்கையைக் கடைசி வரைக்கும் வாழ முடியாதவர்கள்.

மற்ற அனைத்தையும் விடப் பணம் அளவு கடந்த தன்னம்பிக்கையைத் தரவல்லது. அந்த நம்பிக்கை செலுத்தும் பாதை தான் கேள்விக்குரியது. பணத்தை மட்டுமே தகுதியாக நினைத்துக் கொள்பவர்களின் மனவலிமை என்பது ஏதோவொரு சமயத்தில் இறக்கப் பாதையில் இறக்கி விடும். அது பணம் சார்ந்ததாக இருக்கலாம் அல்லது அவர்களின் ஆரோக்கியம் சார்ந்ததாக இருக்கக்கூடும். இதனை உணர்பவர்கள் குறைவு. இவற்றை உணர்ந்தவர்களுக்கு இங்கே எல்லாமே வேடிக்கையாக மாறிவிடும். வேடிக்கையாளனாக வாழத் தெரிந்தவனுக்கு வெயில், மழைக் காலம் என்பது எல்லாமே ஒன்று தான்.

எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளப் பழகியிருப்பின் நிச்சயம் எந்தக் கதவும் முடியிருக்காது. ஏதோவொரு வகையில் திறந்தே தான் தீரும். சூழ்நிலையும் மாறலாம். பொறுத்திருக்க வேண்டிய நிலை உருவாகலாம். அதுவரையிலும் வாங்கிய கடனும், இனி வாங்க வேண்டிய கடனும் பாடங்கள் நடத்தலாம்.

அடுத்த மாதம் வேலையில்லையே? மாத சம்பளம் இல்லாவிட்டால் எப்படிச் சமாளிக்கப் போகின்றோம் என்ற அழுத்தம் உங்கள் அசைத்துப் பார்த்தாலும் இவைகள் எதுவும் உங்கள் உள்ளுறுப்புகளைப் பாதிக்காது என்று நிச்சயம் சொல்ல முடியும். கவலைகள் என்பது கற்றுக் கொடுக்கும். தெளிவான பாதையை அடையாளம் காட்டும். ஆனால் அதுவே உங்களை உடல் ரீதியாகப் பாதிப்படையச் செய்தால் அதற்குப் பெயர் உங்கள் திறமையை இதுநாள் வரைக்கும் உணராமல் வாழ்ந்து இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

இருபது வயது வரைக்கும் உண்டான வளர்ச்சியென்பது வேறு. நாற்பது வயதுக்கு மேலே நாம் காணும் வளர்ச்சியென்பது வேறுவிதமானது. முதலில் உடல் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இதற்குப் பின்னால் வருவதெல்லாம் உள்ளம் சார்ந்ததாகவே இருக்கும். அதுவே இறக்கும் வரையிலும் தொடர்கின்றது.

உள்ளத்தை அடக்கத் தெரிந்தவனின் உடல் உறுப்புகள் பாதிப்படைவதில்லை. ஆரோக்கியம் உள்ளவனுக்குக் காலம் வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்த கூடியதாகவே இருக்கும். அது எழுபது வயதாக இருந்த போதிலும். இதைப் பற்றிச் சொன்னாலே கண் கெட்ட பிறகு சூரிய வணக்கமா? என்று நம்மவர்கள் நம் எண்ணத்தை அசைத்துப் பார்க்கக்கூடும்?

ஐம்பதுக்கு முன்னால் அனுபவிக்கக்கூடிய வசதிகள் அனைத்தும் உடலை சுகப்படுத்துவதாக இருக்கும். ஆனால் நாம் வாழும் வாழ்க்கையின் பாதிக்கு மேல் வரும் வசதிகளும் வாய்ப்புகளும் உண்டான குணம் வேறு விதமானது. நாம் இறக்கும் வரையிலும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கும். நம்மைச் சார்ந்துள்ள மனைவி, குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் அவர்களின் அடுத்த கட்ட அமைதியான வாழ்க்கைக்கும் உதவக்கூடியதாக இருக்கும்.

இளமையில் வறுமை என்பதனை விட முதுமையில் வறுமை என்பது தான் கொடூரமாக இருக்கும். உதவி செய்ய ஆட்கள் இல்லாத போது நம்மிடம் இருக்கும் செல்வம் உதவி செய்ய ஆட்களைக் கொண்டு வந்து நிறுத்தும். ஆனால் பக்குவம் இல்லாத நிலையில் வந்து சேர்ந்த செல்வம் நம்மைச் செல்லாக்காசாகத்தான் மாற்றுகின்றது என்பதனை உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையில் இருந்து புரிந்து கொள்ள முடியுமே?

புரிந்தவர்கள் புத்திசாலிகள். ஆனால் இந்தப் புத்திசாலிகளுக்குத் தற்காலச் சமூகம் வைத்திருக்கும் பெயர் பிழைக்கத் தெரியாதவன். அதனால் என்ன? பிழைப்புவாதிகள் உருவாக்கிய சமூகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் அளவுக்கு மீறிய போட்டி, பொறாமை, வன்முறையைத்தான் நாம் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். உருவாக்கிய ஒவ்வொருவரும் கடைசியில் ஏதோவொரு பெரிய மருத்துவமனையில் அடைக்கலம் புகுந்து இந்த உடலில் இருந்து என் உயிரைப் பிரித்து விடு இறைவா? என்று கெஞ்சுவதையும் பத்திரிக்கையில் படிக்கத்தானே செய்கின்றோம்.

நம் வாழ்க்கையின் தீர்மானங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். தொழிலில் வெற்றி, வசதியுடன் கூடிய வாழ்கையில் அனுபவித்தே தீர வேண்டிய வீடு, வாகனங்கள், செல்வாக்கு, அந்தஸ்து, அதிகாரம். ஆனால் நாம் எப்போதும் ஒன்றை நினைவில் வைத்திருக்க வேண்டும். எல்லாமே இருந்தாலும் இவற்றைக் கடைசி வரைக்கும் அனுபவிக்க நம் ஆரோக்கியம் மற்ற எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது.

இல்லாவிட்டால் எல்லாமே இருக்கும். ஆனால் அவையனைத்தும் நம் அருகே இருப்பவர்கள் அனுபவிக்க நாம் வேடிக்கை பார்ப்பவர்களாகக் காலம் மாற்றும். அப்போது உருவாகும் மன அழுத்தம் வேறொரு பாடத்தை நடத்தத் தொடங்கும்.

"நீ வாழ்ந்த வாழ்க்கையென்பது உனக்காக வாழவில்லை. உன்னைச் சார்ந்து இருந்தவர்களுக்காகவே வாழ்ந்து இருக்கின்றாய்?" என்று கண் எதிரே நடக்கும் வித்தியாசமான வாழ்க்கையின் அலோங்கலங்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் உருவாகும் மன அழுத்தமென்பது மரணப் பாதையை விரைவு படுத்தும். வெற்றி ராஜ்யத்தை உருவாக்கிய அனைவரும் இந்த இடத்தில் தான் பூஜ்யமாக மாறத் தொடங்குகின்றார்கள்.

பணத்தை மனதோடு சேர்த்து யோசிப்போம். மனம் தான் உடலை இயக்குகின்றது. இயக்குநர் சரியான நபராக இல்லாவிடின் நடிகரின் நடிப்பு நன்றாக இருக்குமா?


தொடர்வோம்.......

வியாழன், 26 ஏப்ரல், 2018

கையிக் எட்டிய தூரம் தான்....கடந்த வருடம் இதே நாள் ஷ்யாமின் நடைபயணம் மேற்கொண்டிருந்[போது ...இந்த முறை நடைபயணம் மேற்கொண்டிருந்தால் ...தன் ஆசை ஸ்கூல் தாத்தாவின் புன்னகை மலர்ந்த முகத்தை இறுதி ஊர்வலத்தை பார்த்து இருக்கலாம் .....எப்பொழுதும் ஷ்யாமின் நினைவுகள் தாத்தாவிற்கு இருந்துகொண்டே இருந்தது ..ஷ்யாமிற்கு தாத்தாவின் ஆசிர்வாதம் இருந்தெகொண்டே இருக்கும் வாழ்நாள்முடிய ....ஷியாம் தன் தாத்தாவின் இறுதி ஊர்வலத்தை பார்க்கமுடியாது ..மனதில் கொஞ்சம் வருத்தம் தான் ...விவரம் தெரியும் வயதாக இருந்தால் தன் தாத்தாவை இறுதி மூச்சு அடங்குவதற்கு முன் காண வந்திருப்பான் ..வாழக்கை சக்கரம் எப்பொழுதும் போல் இருப்பதில்லை ...

நாடி ....

எனது உயிர் மூச்சு தந்தையின் இறப்பு ...திங்களன்று இரவு 11.00 மணி ...நான் காலையில் பணியின் காரணமாக கோவைக்கு கிளம்பும் போது எப்பொழுதும் அப்பா போய்ட்டுவந்துருவேன் என்று முகத்தை பார்த்து செல்வேன் ..ஏனோ தெரியவில்லை ..அப்பாவின் கைபிடித்து பக்கத்தில் உட்கார்ந்து அப்பாவின் தலையை தடவி ..கைபிடித்து ..சீக்கரம் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு கோவை கிளம்பினேன் ...மதியம் 3 மணியளவில் வீடு வந்து அப்பாவின் முகத்தை பார்க்கும்பொழுது தன் இறுதிப்பயணத்திற்கு தயாராகவிட்டார் என்று தோன்றியது ..உடனே நம் தினமலர் செந்தில் மாப்பிளையை தான் முதலில் அழைத்தேன் ..மாப்பிள ..டாக்டர் யாரவது இருக்கிறார்களா என்று விசாரத்திவிட்டு ..வழக்கறிஞர் முருகராஜ் அவர்களை தொடர்பு கொண்டேன் ..நாடி பாருங்கள் என்று சொன்னார் ...தம்பி போட்டோ ராஜேந்திரன் அவர்கள் என்னிடம் தொடர்பு கொண்டு அப்பாவிற்கு என்ன ஆச்சு என்று கேட்டு நமது சொந்தம் பழனிசாமி மருத்துவரிடம் பணிபுரிகிறார் ..அவரை அழைக்கலாம் என்று அவரை அழைத்து வந்து ..அப்பாவின் நாடி பார்த்த பொழுது ..நாடி துடிப்பு ..விட்டு விட்டு துடிக்கிறது என்றார் ....6 மணியளவில் எங்கள் குடும்ப டாக்டர் நிலைமையை சொன்னேன் ..அவரும் இனி மருந்துகள் தரவேண்டாம் ...தண்ணீர் மட்டும் கொஞ்சம் கொடுங்கள் ...அம்மாவிடம் சொல்லிவிட்டேன் ...மூன்று அல்லது நான்கு நாள் தான் அப்பாவின் இறுதி மூச்சு ...நாடி துடுப்பு அப்படி தான் இருந்தது ...அம்மா உங்களிடம் சொல்லவில்லையா என்று கேட்டார் ..என்னிடம் சொன்னால் மகன் அழுது விடுவான் ..என்று அம்மா என்னிடம் சொல்லிக்கொண்டு தான் வந்தார்கள் என்றார் ..அம்மாவின் மனதைரியம் ...எப்படி இருந்துருக்கும் ..இரவு 8 மணி ..எங்கள் பக்கத்து வீட்டு ராணி அக்கா ..20 செவிலியர் ..அவரும் ஓடுஓடி வந்து அப்பாவின் நாடி பிடித்து பார்த்தார்கள் ..அவரும் இன்னும் ஒருமணிநேரம் தான் ..இப்பொழுது இருப்பது மூளை மட்டும் இயங்குகிறது ..என்றார் ....நானும் ,வழக்கறிஞர் ,எனது தம்பி ..எனது நண்பர் ஜேபி என்று அழைக்கும் மருத்துவரிடம் சென்றோம் ..அப்பா இப்பொழுது இந்த நிலையில் உள்ளார் ..மறுபடியும் திரும்ப கொண்டு வந்துவிடலாமா ..கேட்டுக்கொண்டிருக்கும் போதே ...தம்பியின் செல் ..முருகராஜ் அவர்களின் செல் ..அப்பாவின் வாழ்க்கை பயணம் முடிந்தது என்று சொன்னவுடன் ...எனது கண்கள் கொஞ்சம் சில மணித்துளிகள் இருண்டு திரும்பியது ....


அப்பாவிற்கு என் நினைவுகள் அதிகம் இருந்தது ...அப்பா சிறு வயதிலேயே ..தாய் ,தந்தை இழந்து ..தன் தன்னம்பிக்கையில் சொந்தங்கள் துணையின்றி விட முயற்சியில் வளர்ந்தவர் .....என் அம்மாவிடம் ..பையனை ...என்னை மாதிரி ..அனாதையாக விட்டு வந்துவிடாதே என்று சொல்லிக்கொண்டே இருப்பார் ...









வியாழன், 19 ஏப்ரல், 2018

தேவராட்ட பெருவிழா ..உடுமலைப்பேட்டை ..
தேதி .29 ..ஞாயிறு ...மாலை .3.30 அளவில் 
உடுமலை குட்டை திடல் ...
இங்கே வந்து எட்டிப்பார்க்கக்கூட நேரமில்லாமல் எந்நேரமும் ஓடிக்கொண்டிருக்கவேண்டி உள்ளது.
தேவராட்ட பெருவிழா ..விழாவிற்கான ஏற்பாடுகள் ஏறத்தாழ தயார் நிலையில்.
பொதுவாக வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார் என்பார்கள். ஆனால் அதைவிட மிகவும் சிரமமான பணி எதுவென்றால் ஒரு பொது விழாவினை நடத்த எடுத்துக்கொள்ளும் சிரமங்கள். ஊர்கூடி தேர் இழுக்கவேண்டும். ஆனால் ஓரிருவர் மட்டுமே அந்த தேரை இழுக்க முயற்சி செய்து அது சாத்தியம் என்றால் அதற்கு எவ்வளவு சிரமப்பட வேண்டுமோ அந்த நிலை தான் தற்போது இங்கே எங்களுக்கு. நானும் எனது நண்பர்களும் ..நமது மாப்பிள்ளைகளும் ..தம்பிகளும் ...நான் வணங்கும் ..எனக்கு வழிகாட்டும்  பேராசிரியர்கள் ,தலைவர்கள்...கூட்டு முயற்சி ...
.சொந்த வீடு என்பது ஒரு கனவு.......

ஒருவருடைய வீட்டுக் கடன் தகுதி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

நம்மில் பலருக்கும் சொந்த வீடு என்பது ஒரு கனவு. நம்முடைய கனவை நனவாக்க தற்பொழுது ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. அதில் மிக முக்கியமனது வீட்டுக்கடன். தற்பொழுது வங்கிகள் வீட்டுக்கடன் நடைமுறைகளை மிகவும் எளிமைப்படுத்தி விட்டன. எனினும் நாம் சில விதிமுறைகளை நிறைவேற்றத் தவறினால், வங்கிகளால் நம்முடைய வீட்டு கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் வாய்ப்புகளும் உள்ளன. இந்நிலையில் வங்கிளில் வீட்டு கடன் பெறுவதற்கான தகுதிகளை பற்றி தெரிந்துக் கொண்டு சரியான முறையில் விண்ணப்பம் சமர்பித்து உங்கள் கனவு வீட்டை கட்டுங்கள்.

அங்கிகாரம் :
முதலில் வங்கிகள் உங்களுடைய கடன் திரும்பச் செலுத்தும் திறன், உங்களுடைய நிகர வருமானம், மற்றும் நீங்கள் எதிர்பார்க்கும் மொத்த கடன் தொகை ஆகிவற்றை பொருத்தே வங்கிகள் உங்களது கடன் விண்ணப்பத்தை அங்கிகரிக்கும்.

அடிப்படை தகுதிகள் :
வீட்டு கடன் பெற வங்கிகள் மிக முக்கியமாக 5 தகுதிகளை நிர்ணயித்துள்ளன.
1. ஒரு மாதத்தின் நிகர வருமானத்தை போன்று 60 மடங்கு வரை கடன் பெற உங்களுக்கு தகுதி உள்ளது.
2. வங்கிகள் உங்களுகடைய பிற கடன்கள், மற்றும் உங்களுடைய மாதந்திர தவணைகள் போன்றவற்றை கழித்து விட்டே உங்களுடைய நிகர வருமானத்தை கணக்கிடும்.
3. உங்களுடைய மோசமான கடன் (சிபில் ) மதிப்பெண் அல்லது நீங்கள் சில முறை கடன் தவணைகளை கட்டத் தவறியிருத்தல் போன்றவை உங்களுடைய கடன் பெரும் முயற்ச்சியை சிரமப்படுத்தும்.
4. நீங்கள் நீண்ட கால கடன் திருப்பிச் செலுத்தும் காலத்ததை தேர்ந்தேடுத்தால், அது உங்களுடைய கடன் தகுதியை அதிகரிக்கும்.
5. கடன் தகுதி என்பது ஊதியம் பெறுபவர்களுக்கும்கும் இடையே வேறுபடுகின்றன.

வீட்டுக் கடன் தகுதி:

வீட்டுக் கடன் தகுதி = ஒரு லட்சத்திற்கான மாதாந்திர சேமிப்பு அல்லது மாதாந்திர தவணை (இஎம்ஐ) X 1 லட்சம் உதாரணமாக ஒருவர் 10 சதவீதம் வட்டி விகிதத்தில் சுமார் 20 ஆண்டுகள் தவணையில் ரூ ஒரு லட்சம் கடன் வாங்குகின்றார் எனில் அவருடைய மாதத்தவணை என்பது ரூ 965 ஆக இருக்கும். மேலே கூறிய உதரணத்திற்கு, நம்முடைய சூத்திரம் பயன்படுத்தப்படுத்தினால் அவாருடைய மொத்த வீட்டுக் தகுதியானது ( 15,000 / 965 X ரூ 1 லட்சம் = ரூ 15.54 லட்சம்) ரூ 15.54 லட்சமாக இருக்கும்.

இதர கட்டணங்கள் :

வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன் அந்த வங்கியினுடைய செயலாக்க கட்டணம், வட்டி விகிதங்கள், கடனை அனுமதிக்கும் கால அளவு போன்ற விஷயங்களை சரிபார்த்துக் கொள்வது மிகவும் சிறந்தது. இவைகளெல்லாம் வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு இடையே வேறுபடுகின்றன என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளவும்.

ஈஎம்ஐ:
மாதாந்திர தவணை கட்டத் தவறினால் அது அதிக வட்டி விகிதத்திற்கு வழி வகுக்கும். அது வருடத்திற்கு மிக அதிகமாக 24 சதவீதமாகக் கூட இருக்கலாம்.

முக்கிய ஆவணங்கள்:

மாத ஊதியம் பெறும் தனிநபர்கள் வீட்டுக் கடனுக்கு செலுத்த வேண்டிய மிக முக்கிய ஆவணங்கள்:

1) விண்ணப்பித்தவர்கள் அனைவரும் கையெழுத்திட்ட புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம்.
2) கடந்த மூன்று மாதங்களுக்கான சம்பள அறிக்கை. இதுவங்கிகளுக்கு இடையே வேறுபடலாம். சில வங்கிகள் ஆறு மாத சம்பள அறிக்கையை கேட்கலாம்.
3. படிவம் 16 அல்லது வருமான வரி தாக்கல் செய்த அறிக்கை. இது கடன் கொடுக்கும் வங்கிகளுக்கு மிகவும் தேவையான ஒன்றாகும். 4. வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் உங்களுடைய கடந்த ஆறு மாதங்களுக்கான வங்கி நிதி நிலை அறிக்கையை கேட்கும்.
5. உங்களுடைய அடையாள, வயது மற்றும் குடியிருப்பு சான்று. 6. நடைமுறைப்படுத்துவதற்காண கட்டணம் அல்லது காசோலை.

ஏன் வீட்டுக் கடன்..?

நீங்கள் வீட்டு கடன் முலமாக மிகப்பெரிய வருமான வரி சேமிப்பு நன்மைகளைப் பெற முடியும். வருமான வரியில் வீட்டுக் கடனுக்கான அசல் தொகையின் மீது ரூ 1.2 லட்சம் வரை சேமிக்க முடியும். இது தவிர, பணம் வீட்டுக் கடன் வட்டியின் மீது ரூ 2 லட்சம் வரை சேமிக்க முடியும். எனவே, வீட்டுக் கடன் என்பது ஒரு பெரிய வருமான வரி சேமிப்பு வழி.

முடிவு:

நீங்கள் வருமான வரி செலுத்துபவராக இருந்ததால் வீட்டுக் கடன் என்பது உங்களுக்கு நன்மையே தரும். மேலும், தற்பொழுது குறைந்து வரும் வட்டி விகிதங்கள், வீட்டுக் கடன்களை சாதகமானதாக மாற்றி இருக்கின்றன. முன்பு கூறியது போல, நீங்கள் இந்தியாவில் ஒரு வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்கும் பொழுது உங்களுடைய தகுதியை சரிபார்க்க வேண்டும்.

சொந்த வீட்டு கனவை நிறைவேற்றிட ......உங்களின் கனவு இல்லத்திற்கு ..உங்களின் பொன்னான நேரத்தை கொஞ்சம் ஒதுக்கலாமே ...

V.K.சிவக்குமார்
(வீட்டு கடன் பிரிவு )
கோயம்புத்தூர் ,பொள்ளாச்சி ,உடுமலைபேட்டை ..
செல் ;9944066681

புதன், 18 ஏப்ரல், 2018

என் ...வாழ்வியலை .சங்கரவேலு அய்யா ...வீ .எஸ் .ராஜா அய்யா ...முருகவேல் அய்யா .இவர்களின் வழிகாட்டல்கள் மூலம் ...என் செம்மைப்படுத்திக்கொண்டுள்ளேன் ...சங்காரவேல் அய்யாவின் வரலாற்றை கண்டிப்பாக எழுதலாம் ...எதுலப்ப மன்னருக்கு அடுத்தது ..நம் கடவூர் மக்களின் மன்னர் ...வரலாற்றை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம்  மூலம் எழுதுவதற்கு ...சுமதி மோகன் முத்தையா அவர்களின் அனுமதி அளித்து விட்டார்கள் ...அதற்கான பணிகள் 20% முடிந்துவிட்டது ....உங்களின் பார்வைக்கு ..இதை பதிவிடுகிறேன் ..நன்றி ..


செவ்வாய், 17 ஏப்ரல், 2018

உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம்  நடத்தும்
இருபெரும் வரலாற்று திருவிழா ..
பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயண கவியின்
பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்தும் ,
1801 ஏப்ரல் 23 ல் ஆண்ட்ரோ  கேதீசு  எனும் ஆங்கிலேயரைத் தூக்கிலிட்ட தமிழ் மன்னன் தளி எத்தலப்பருக்கு மணி மண்டபம் அமைக்க கோரியும் ஏப்ரல் 29 ஞாயிறு அன்று உடுமலை குட்டை திடலில் ,

தலைமை :
மாண்புமிகு .உடுமலை .கே .ராதாகிருஷ்ணன் .பி .காம்
கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர்

சிறப்பு விருந்தினர் :
மாண்புமிகு .கடம்பூர் .ராஜு அவர்கள்
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்

மதிப்பு மிகு சி.மகேந்திரன் .எம் .ஏ
பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்

மதிப்பு மிகு .இரா .ஜெயராமகிருஷ்ணன் .பி .எஸ் .சி .பி .எல்
மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர்

மதிப்பு மிகு .நீதி அரசர் .வி .தங்கராஜ் .எம் .ஏ .,எம் .எல்

மதிப்பு மிகு .கே கே .எம் .மோகன் குமார் .
கடவூர் .ஜமீன்தார்

ஆகியோர் பங்கேற்க ..உடுமலை வரலாற்றில் முதன் முறையாக ஓராயிரம் கலைஞர்கள் ஒருங்கிணைந்து ஓரணியாய் நின்று எத்தலப்பர் புகழ் பாடும் போர் பரணி ..மாபெரும் தேவராட்ட பெருவிழா



நாள் :ஏப்ரல் 29 ,ஞாயிற்றுக்கிழமை ..மாலை 3.30 மணி முதல்


அமைச்சர் பெருமக்கள் ,அரசு அதிகாரிகள் ,சட்டமன்ற,பாராளுமன்ற உறுப்பினர்கள் ,கலந்துகொண்டு சிறப்பிக்கும் இந்த நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம் ..

உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம்
271,தளி சாலை ,உடுமலைப்பேட்டை
பேசி .9842091244,9944066681,9698082028,9171801212,9150056970.